தேர்வு
TEST - TAPE ::-

இம் முறையில் TEST TAPE சுருளின் நுனியில் உள்ள ¼ பாகத்தில் சிறுநீரை தடவி விட வேண்டும். அவ்வாறு தடவும் போது, அதில் ஏற்படும் நிறமாற்றத்தை வைத்து நாம் சர்க்கரையின் அளவு என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். சர்க்கரை இருக்கிறது என்பதை இந்த TAPE -ன் நிறமாற்றத்தை வைத்து கண்டுபிடித்து கொள்ளலாம்.

TESTS FOR ACETONE IN URINE :-

சிறுநீரில் உள்ள அசிட்டோனை கண்டறியும் சோதனைகள்.

A). ROTHORA’S ACETONE TEST - ROTHORA உடைய அசிட்டோன் சோதனை:-


என்பதை பற்றி பார்ப்போம். அதாவது அசிட்டோன என்பது சிறுநீரில் உள்ள ஒரு பொருள். இப்பொருள் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கும் அதிகமாகும் வாய்ப்புகள் உண்டு. இவ்வாறு அதிகமாகும் போது அதை கண்டறிய பல சோதனை முறைகள் உள்ளது. அதில் ஒரு முறைத் தான் ROTHORA’S உடைய அசிட்டோன் சோதனை முறை இம் முறையில 10 சொட்டு, சிறுநீரை எடுத்து 5 சொட்டு சோடியம் நைட்ரோ ப்ருசைடு என்ற திரவத்தை போட்டு கலக்கி கொண்டு அம்மோனியம் என்ற காரகத்தையும் சொட்டு, சொட்டாக ஊற்ற வேண்டும். இவ்வாறு மெதுவாக விட்டு கொண்டு, இருந்தால் சிறுநீரில் இருக்கும் அசிட்டோன் நீல நிற வளையங்களாக மூலையில் தோன்றும், இவ்வாறு தோன்றும் போது அதன் அளவை வைத்து அசிட்டோனின் அளவை கணக்கிடலாம்.

B). ACETEST : :-

அசிட்டோ என்பதை மாத்திரையாக செய்து வைத்துள்ளனர். சிறுநீரில் மாத்திரையை வைக்கும் போது அது கரைந்து சிறுநீரில் உள்ள அசிட்டோன் படிவுகளை காட்டுகிறது. இதன் அளவுகளை வைத்து நாம் அசிட்டோனின் அளவு என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

C). KETOSIX - TEST:-

இதுவும் குச்சி வகையை சேர்ந்தது. இக்குச்சியின் நுனியில் சிறுநீரை தடவும் போது அதன் நிறம் மாறுகிறது. அசிட்டோன், சிறுநீரில் இருந்தால் நீல நிறத்திற்கு மாறுகிறது. இதை வைத்து அசிட்டோனின் அளவை கணக்கிடலாம். இரத்த பரிசோதனைகள்

1). FASTING BLOOD SUGAR :- பட்டினியின் போது இரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரை:-

இன்று காலையில் இரத்த சர்க்கரையை பார்க்க வேண்டும், என்றால் முதல் நாள் இரவு சாப்பிட வேண்டும். காலையில் ரூ1 எதுவும் சாப்பிட கூடாது 5 CC இரத்தத்தை நரம்பின் மூலமாக எடுத்து FAST BLOOD SUGAR TEST என்ற பரிசோதனைக்கு பயன்படுத்த வேண்டும். இப்போது சர்க்கரை வியாதிகாரருக்கு இரத்த அளவு 120 mg / 100 ml இருக்கும். இளைஞர்களாக இருந்தால் 10 mg / 100 ml என்ற அவர்களுக்கு 20 % அதிகமாக இருக்கும்.

(B). RANDOM BLOOD SUGAR CONCENTRATION:-

காலையில் சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு எடுக்கப்படுகிறது. அப்போது இதன் சரியான அளவு 84 to 140 மில்லி கிராம் mg / 100 ml - ல் இருக்க வேண்டும். பிறகு சாப்பிட்டு அரை மணி நேரத்தில் இருந்து 2 ½ மணி நேரத்திற்குள் எடுக்க வேண்டும். சாப்பிட்ட பிறகு எடுத்து பார்க்கும் போது சர்க்கரை வியாதிகாரர்களுக்கு 91 to 116 mg / 100 ml என்பது சரியான அளவு, இந்த அளவு முறைகளை வைத்து அதிகமாவதையும், குறைந்து போவதையும் பற்றி நாம் அதை கணித்து கொள்ளலாம்.

(C). GLUCOSE - TOLERANCE TEST :-:-

இச் சோதனை நோயாளி சர்க்கரை வியாதி மாத்திரைகளை சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது மாத்திரைகளை ஒரு வாரத்திற்கு நிறுத்தி விட்டு இச்சோதனை செய்யப்படுகிறது. சாப்பிடாமல் தான் எடுக்க வேண்டும். 50 g மற்றும் 100 கிராம் குளுக்கோஸை 200 - 400 cc தண்ணீhpல் கலக்கி, கொடுக்க வேண்டும். சுத்தமான எலுமிச்சை பழ இரசத்தில் இதை கொடுக்கலாம் மெல்லிய அசுத்த இரத்த குழாயில் இருந்து மேலே கண்ட நீரை குடித்து ½ மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரத்திற்குள் இரத்தத்தை எடுத்து இச் சோதனை செய்ய வேண்டும். சிறுநீரிலும், இரத்தத்திலும், ஒரே நேரத்தில் எடுத்து பார்க்க வேண்டும். அதாவது 1 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரத்தில் எடுத்து பார்க்க வேண்டும்.

சரியான அளவுகள் :-

சாப்பிடும் முன் 100 mg / 100 ml.
சாப்பிட்ட 1 மணி நேரத்தில் - 160 mg / 100 ml.
சாப்பிட்ட 2 மணி நேரத்தில் - 120 mg / 100 ml.
வியாதிகாரர்களுக்கு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு பார்க்கும் போது அவர்களின் வியாதியின் தன்மைக்கு ஏற்றவாறு ஏற்றம், இறக்கம் காணப்படும்.

(D). DESTROSTIX TEST :- :-

சமீப காலமாக சாதாரணமாக ஒரு பேப்பரை எடுத்து சுருட்டி இரத்தத்தில் வைத்தால், சர்க்கரையின் அளவை மதிப்பிட்டு காட்டி விடுகிறது. இரத்தத்தில சர்க்கரையை பார்ப்பதற்கு இம் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். பேப்பரில் பார்க்கும் போது, குளுக்கோ ஆக்ளிடஸ், க்ரோமைஜீன் போன்றவற்றில் ஆக்ஸிஜனை கண்டு பிடித்து விடுவார்கள். பிறகு இரத்தத்தை குச்சியில் எடுத்து 1 நிமிடம் வைக்க வேண்டும். அதன் பிறகு அதை குளிர்ந்த நீரில் கழுவி பார்த்தால் சாம்பல் கலராக போய் விடும். இது போல் கண்டு பிடித்து நிற மாற்றத்தின் காரணமாக மிக விரைவாக இரத்த சர்க்கரையின் அளவை கணக்கிடலாம், என்று கூறுகின்றனர். இம் முறை மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. (ஹைப்போ கிளைகோமியா) என்ற இரத்தத்தில் உள்ள சர்க்கரையை இம் முறையில் கண்டறியலாம்.

10. DIFFERENTIAL DIAGNOSIS :- வித்தியாசமான (பல தரப்பட்ட) வியாதியை நிர்ணயம் செய்தல்.

வித்தியாசமான படி நிலையில் சோதித்தல் (அ) சோதனைக்கு உட்படுதல் என்பது பொருள். பல வகையான கட்டுபாடுகள், சர்க்கரை வியாதியில் உள்ளது. கட்டுபாடு அற்ற சர்க்கரை வியாதியும் உண்டு. கட்டுபாடு அற்ற சர்க்கரை வியாதி பற்றி பார்ப்போம்.

(i). சிறுநீர் நிறைய போகும். சர்க்கரை இருக்காது.
(ii). சிறுநீரில் சர்க்கரை இருக்காது. இரத்தத்தில் சர்க்கரை இருக்கும்.
(iii) சிறுநீர் குறைவாக போகும். சர்க்கரை அதில் அதிகமாக இருக்கும்.

(A). DIABETS INNOCENS :-

(A). கட்டுபாடு அற்ற சர்க்கரை வியாதி நிலைகள் :-

இவர்களுக்கு தாக்கம் அதிகமாக இருக்காது. சாதாரணமாகவே இருப்பார்கள். அதிக பசி இருக்கும் நிறைய சாப்பிடுவார்கள். கார்பன் செல்கள் அதிகமாக உற்பத்தியாகும். சிறுநீரும் அதிகமாக போவார்கள். ஆனால் சிறுநீரிலும், இரத்தத்திலும் சர்க்கரை இருக்காது. இதனால் இவர்களுக்கு தீங்கு எதுவும் நிகழாது. இதை ஆரம்ப சர்க்கரை வியாதி என்று கூறுகிறோம்.

(B). RENAL GLYCOSURIA ::-

நிறைய சாப்பிடுவார்கள். ஆனால் அவர்கள் அதிகமாக சிறுநீர் போவார்கள். சர்க்கரை இருக்கின்றதா என்று பார்த்தால் சர்க்கரை வியாதி இவருக்கு இல்லை என்று சோதனையில் கூறி விடுகிறார். பல குடும்பங்களில் இதை பார்க்கலாம். நிறைய சாப்பிடுவது எல்லாம் சிறுநீராகவே போய்விடும். துன்புறுத்தும், சிறுநீரகத்தின் உட்புறம் புண்ணாகி விடும். . இவர்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். வேலை செய்ய மாட்டார்கள். இரத்தத்திலும், அளவாக தான் சர்க்கரை இருக்கும். ஹைப்போ கிளைக்கோயூரியா என்ற வகையில் தான் இருக்கும். ஆனாலும் இவருக்கு சர்க்கரை வியாதி தான்.

(C). சர்க்கரை தான் இல்லையே நாம் மருந்து கொடுக்க தேவையில்லை என்று ஏமாந்து விட கூடாது. ஏனென்றால் கண் பார்வை மங்குதல் மற்றும் பல்லில் சொத்தை விழுதல், சிறுநீர் போகும் இடத்தில் எரிச்சல் வலி ஏற்படும். உடலின் மேல் படை, சொறி போன்றவை ஏற்படும். இது போல் உறுப்புகளை கெடுத்து கொண்டே வரும். சிறுநீரை பார்த்தால் அளவாகவும் ஒரு சிலருக்கு போகும். ஒரு சிலருக்க அதிகமாகவும் போகும். அடுத்து தொண்டையில் உள்ள தைய்ராய்டு சுரப்பி வீங்கி போய்விடும். மிகவும் பெரிதாக வீங்கி போய்விடும். மூட்டுகளில் நீர் கோர்வை வந்து விட்டது என்று சித்த வைத்தியத்தில் கூறுவார்கள். அதே போல் நீர் கோர்வை உடலில் ஏற்பட்டு, உடல் வீங்கி போய் விட்டது என்று சொல்வார்கள். உடல் குண்டாகி பெருத்து போய்விட்டது என்றும், இது போல் தைராய்டு பெருத்து போய் விட்டது என்றும், இவ்வாறு எல்லாம் கூறுவார்கள். இதை கெடுப்பதும், இந்த சர்க்கரை படிவங்கள் ஏற்படுவதால் இவ்வாறு ஏற்படுகிறது. இவர்களின் சோதனையில் 50% சர்க்கரை இருக்கிறது என்று தான் பொருள்.

அதனால் தான் இவ்வாறு கெடுதிகளை செய்கிறது. சிறுநீர் அதிகமாக போகிறது என்று முன்பு பார்த்தோமே, அது என்ன என்றால் பிட்யூட்டரி சுரப்பி தனது கட்டுபாட்டை இழந்து, மந்தப்பட்டு போவதாலும், பசியை தூண்டி, சிறுநீர் அதிகமாக போக வைக்கிறது. இவர்களுக்கு கட்டிகள் தோன்றும். இவ்வாறு தைராய்டு, பாரா தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகளை தாக்கி, வெளியில் தெரியாத சர்க்கரை வியாதியாக காட்டுகிறது. பிட்யூட்டரியின் உள் பகுதி, குத்து படுவதால் இம் மாதிரியான சர்க்கரை வியாதி தோன்றுகிறது. (நு).

இதனால் தான் சிறுநீரை அதிகமாக உற்பத்தி செய்து வெளியில் விடுகிறது. இதுவே சர்க்கரை வியாதிக்கு அடிப்படையாக உள்ளது. சிறுநீரகத்தின் உட்பகுதி குத்துபடுவதால், அது தன்னை சரி செய்து கொள்வதற்காக, அதிக சிறுநீரை உற்பத்தி செய்து வெளியேற்றி சர்க்கரை நோயாக மாற்றி, தனது பணியினை செய்ய முயல்கிறது. இதனால் தான் சிறுநீரகத்தின் புறவழியில் கொண்டு வந்து விடுகிறது. (கு). அடி தடி காயம், குத்து காயம் போன்றவை பட்ட பிறகு அவ்வுறுப்புகள் தன்னை சரிபடுத்தி கொள்ளவும், மனநிலை சரி செய்வதற்கும், இது போல் சர்க்கரை வியாதியாக ஏற்படுகிறது. ஆனால் இது சர்க்கரை வியாதி அல்ல. இதிலும் சர்க்கரை இருக்காது. இரத்தத்தில் மட்டும் லேசான சர்க்கரை காட்டும்.

(2). CONDITIONS IN WHICH HYPER GLYCAEMIA IS PRESENT:-

(A). HYPERTHYROIDISM :-

இம் முறையில் ஹைப்பர் தைராய்டிசம் என்பவற்றில் இரத்தத்தில் சர்க்கரை இருக்கும். இதில் இரத்தத்தில் ஹைப்பர், தைய்ராய்டிசம் மற்றும் ஹைப்பர் க்ளைக்கோமியா போன்றவற்றில் சாதாரணமாகவே க்ளைக்கோஸ்யூரியா அதிகமாவதால், இச்சர்க்கரை வியாதி ஏற்படுகிறது.

(B). DISEASES OF PITUITARY:

பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி ஏற்பட்டு விடும். தூக்கமின்மை மற்றும் உள் உறுப்புகள் கெட்டு விடுதல் சர்க்கரை காணப்படும். இம் மாதிரி சர்க்கரை வியாதிகாரர்கள் 50% உள்ளனர். இது போல் உள்ளவர்களுக்கு இன்சுலினை கொடுத்து தான் ஆக வேண்டும். உடலில் உள்ள முக்கிய சுரப்பியான பிட்யூட்டரியில் அடிப்படுவதால் இந்த வியாதி ஏற்படுகிறது. மன தாக்குதலின் காரணமாக இரத்த குழாய்கள் உருண்டு, சுருங்கி போவதும் உண்டு. இது போல் கட்டுபாட்டை இழந்து பிட்யூட்டரியின் உள் உறுப்பு நரம்புகள், மென்மையான நரம்புகள், சருமத்தின் மயிர்கால்கள் இப்படி தாக்கப்படுகிறது. இவ்வாறு துன்பம் ஏற்படுவதற்கு காரணம், மன வேகம், மன உளைச்சல் தான். இது பெண்களுக்கு அதிகமாக உள்ளது. அதாவது அவர்களுக்கு இயற்கையாகவே கஷ்டங்கள் ஏற்படுவதால் இம் மாதிhp ஏற்படுகிறது. பின் விளைவுகளாக மார்பு பெருத்து, மார்பு காம்புகள் பெரிதாகி, அவர்களின் உடலும் பெருத்து போய் விடும். இவ்வாறு நிகழ்ந்து உடல் குண்டு மற்றும் மார்பு சிறியது, உடல் குச்சி, மார்பு காம்பு மட்டும் பெருத்தும் காணப்படுகிறது.

இது விசேஷசமாக பார்த்தால் தெரியும். முகத்திலும் திட்டு, திட்டாக தெரியும். குடிகாரர்களுக்கு எல்லா, மன உளச்சல்களும் அடக்கப்படுவதால் இது போல் ஏற்படுகிறது. அவர்களை பார்த்தால் கை, கால் குச்சியாகவும், ஒரு சிலருக்கு பெருத்தும் , ஒவ்வொரு உடல் உறுப்பும் ஓர் ஒப்புரவான நிலையே இருக்க முடியாது. இதே போல் அவர்கள், எலும்பும் வளைவுமாக இருக்கும். இதை பார்த்தாலே கண்டு பிடித்து கொள்ளலாம். இவர்களுக்கு இரத்த கொதிப்பு அதிகமாக இருக்கும். இதயத்தின் துடிப்பு அதிகமாக இருக்கும். இவர்களுக்கு சிறுநீரிலும், இரத்தத்திலும் சர்க்கரை இருக்கும். இவ்வாறு இரத்தத்தில் சர்க்கரை படிவங்களாக காணப்படும். இவர்களின் ஈரல், மண்ணீரல் பகுதிகளை பார்த்தால் இயல்பாக தான் இருக்கும். சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இது கெட்டு தானே இருக்க வேண்டும். ஆனால் இவர்களுக்கு இயல்பாக தான் இருக்கும்.

(C). BRONZED DIABETES :-

இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் தாக்கப்படுவதால் சர்க்கரை வியாதி :- இம் மாதிரி உள்ளவர்களுக்கு தோன்றுகிறது. இவர்களுக்கு தோன்றும் குறிகளை பார்த்தால் சிறுநீர் அதிகமாக போகும். ஆனால் இரத்தத்தில் பார்த்தால் சர்க்கரை இருக்காது. சருமத்தில் இவர்களுக்கு சர்க்கரை படிவங்கள் படிய வைத்து மீதி உள்ளதை கல்லீரல், மண்ணீரல் கொண்டு போய் சேர்த்து விடும். வயிறு வீங்கி போய் விடும். இதில் சிறுநீரிலும், இரத்தத்திலும் லேசாக சர்க்கரை படிவங்கள் தெரியும். அதற்கு பதில் இவ்வாறு வீங்க வைத்து விடும். இவ்வாறு பார்த்து சர்க்கரை வியாதி என்று நாம் கனித்து கொள்ள வேண்டும். சருமத்தில் உள்ள நரம்புகள், அதாவது அசுத்த இரத்த குழாயின் நரம்பு சுருண்டு போவதாலும் இவ்வாறு ஏற்படுகிறது.

(D). CORTISONE THERAPY :-

இதயத்தின் காரணமாக வால்வுகள், அடிப்படுவதால் சிறுநீர் அதிகமாக போகும். அப்போது இரத்தத்திலும், சிறுநீரிலும், சர்க்கரை அதிகமாக இருக்கும். இவ்வாறு தாக்கும் போது இவர்கள் நிரந்தர சர்க்கரை வியாதிகாரர்களாக மாறி விடுவார்கள். இவர்களை குணப்படுத்துவது மிக கஷ்டம். உணவு, மருந்து மற்றும் உடல் கட்டுபாடு இவை மூன்றும் இவர்களுக்கு அவசியம்.

(E). ALLOXEN DIABETES :-

நிறைய மருந்துகளை சாப்பிடுவதால் நலமாக்க கூடிய செல்கள் கெட்டு போய் விடும். இவ்வாறு கெடுத்து விடுவதால் இதன் அடிப்படையில் இன்சுலினை உற்பத்தி செய்து கொடுக்கும் செல்கள் கெட்டு இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாமல் போய் விடுகிறது. இதனால் இன்சுலின் கிடைக்காததால் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. இவ்வாறு சர்க்கரை வியாதி எந்த தன்மையில் வருகிறது என்று முதலில் கணித்து, அதன் பிறகே மருந்துகளை தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.

11. COMPLICATIONS OF DIABETES :- சிக்கலாகி விட்ட சர்க்கரை வியாதிகள்.


சிக்கலாகி விட்ட பிறகு நடக்கும் விஷயங்கள்.

(i) சோதனையே கெடுத்து விடும்.
(ii) வழிகாட்டுவதை தடுத்து விடும்.
(iii). இந் நிலை ஏற்பட்ட பின் நோயாளிகள் என்ன சிகிச்சை செய்வது என்பதே தெரியாது.
இதில் இரண்டு பிரிவுகள் உள்ளது.
(i). திடீர் வகை சிக்கல்.
(ii). நீடித்த வகை சிக்கல்.

(i). ACUTE COMPLICATIONS - திடீர்வகை சிக்கலை பற்றி பார்ப்போம்.

இது விரைவாக சிக்கல் செய்து மரணத்தில் கொண்டு போய் விட்டு விடும். திடீரென்று சிகிச்சை நோயாளிக்கு செய்ய வேண்டும். அது விரைவாகவும், கவனமாகவும், செய்ய வேண்டும். திடீர் என்று செய்வதால் ஆபத்து கூட ஏற்பட்டு விடலாம். மந்தப்பட்டு மாற்றமும் ஏற்பட்டு விடலாம். இதை மிகவும் கவனமாக பார்த்து சிக்கல் ஏற்படாமல் கையாள வேண்டும். இவர்களுக்கு அப்படி என்ன ஏற்படும் என்றால்:-

(A). சர்க்கரையினால் கிரு, கிருப்பு (அ) இரத்தத்தில் சர்க்கரை குறைவதாலும் கிரு, கிருப்பு தட்டி மயக்கம் அதிகமாக ஏற்படும்.
(B). இன்சுலின் போடுவதால் மயக்கம் (அ) இரத்த சர்க்கரையின் அளவு, அதிகமாவதாலும் மயக்க நிலை அதிகமாக ஏற்படும்.
(ஊ). இதயத்தின் உள் அமைப்பு தாக்கப்படும்.
(னு). சுற்றியுள்ள இரத்த குழாய் தாக்கப்பட்டு சர்க்கரை அதிகமாகி இயங்க முடியாமல் போய்விடும்.
(நு). முகுளத்தில் இதனால் இரத்தம் கட்டியாக கட்டி கொள்ளும்.
(கு). கேனம் பிடித்து விடும்.

THE MILD TYPE OF COMPLICATIONS ARE :-

சாதாரணமாக சிக்கலாகி விட்ட வியாதிகள் பற்றி பார்ப்போம்.

(A). குரக்களை பிடித்து கொள்ளும்.
(B). நரம்புகள் இழுக்கும். இதனால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.
(ஊ). தொற்று வியாதி ஏற்படும். மூக்கில் சளி சவ்வு, சரும அரிப்பினால் தடித்து கொள்ளுதல், உணவு சேர வில்லை என்றால் இவ்வாறு ஏற்படும்.
(னு). நுரையீரல் குழாய் தாக்கப்பட்டு அவர்களுக்கு சளி, நிமோனியா, கொப்பளம், சீழ் பிடித்து கொள்ளுதல், T.B. நிலையும், இரும்பல், தொடாந்து இரும்பல், கடுமையான அரிப்புக்கு பிறகு சருமத்தில் பொட்டு கடலை போல் கொப்பளமும், மற்றும் திடீர் வகை நோயில் ஏற்படுவதால் மரணமும் கூட ஏற்பட்டு விடும். இதைப் பற்றி பரிசோதனை கூடத்தில் கூட கண்டு பிடிக்க முடியாமல் போய் மரணமும் ஏற்படும்.

(ii). CHRONIC COMPLICATIONS - நாட்பட்ட வகை சர்க்கரை வியாதி பற்றி பார்ப்போம்.

(A). நாட்பட்ட வகை சர்க்கரை வியாதியில் நரம்புகள் தாக்கி நரம்பு நடுங்கும். தொடையில் உள்ள பெரிய நரம்பையும், தாக்கி நரம்பில் முறுக், முறுக் என்று சத்தம் தோன்றி தொடை எலும்பு மற்றும் இடுப்பு எலும்பு தாக்கப்படும். தொடை சதைகள், எல்லாம் தன்னை அறியாமலேயே நடுங்கும்.
(B). கண்களை தாக்கி, பார்க்ககூடிய பார்வையை மந்தமாகப்பட்டும், மென்மையான நரம்புகள் தாக்கப்படுவதால், மந்தமாக்கப்பட்டு பிறகு திரை, வளர ஆரம்பிக்கும். கண் மணிகள், சுருங்கி விhpயும், தன்மை இழந்து கோளாறு ஏற்பட்டு குருடாகி போய்விடும்.
(ஊ). இதயத்தின் இரத்த குழாய்கள் தாக்கப்பட்டு இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு கெட்டு, இரத்த குழாயின் உட்புற சுவர்கள் முருடு தட்டி போய்விடும். இதனால் பார்வை மந்தம் ஏற்படுகிறது. சீழ் பிடிப்பும் ஏற்படலாம்.
(னு). சர்க்கரையின் காரணமாக சிறுநீரகம் பழுதடைந்து சிறுநீரை சலிக்கும் சல்லடை, வேலை செய்ய முடியாமல் வீக்கம் ஏற்படும்.
(நு). மென் நரம்புகள் பாதிக்கப்பட்டு ஆண்களுக்கு, ஆண் தன்மையில் குறையும், பெண்களுக்கு மாத விலக்கிலும், அவர்களின் கருப்பை தாக்கப்பட்டு கரு கலைவு ஏற்பட்டு கருப்பையின் வேலைத் தன்மை குறைந்து, குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுக்கக்கூடிய தன்மையும் ஏற்படும்.

12. CLINICAL VERIETIES OF DIABETES - சிகிச்சை செய்யும் நிலையத்தில் பலவகை சர்க்கரை வியாதிகள்.

சிகிச்சைகள் வகை, வகையாக செய்தலின் காரணமாக சர்க்கரை வியாதி தோன்றிவிடும். அதை பற்றி பார்ப்போம். நாட்பட்ட வகை வியாதியில் இந்த சர்க்கரை வியாதியும் வருகிறது. சர்க்கரை வியாதி பல கோணங்களில் நம்மை தாக்கி சிறுநீர் அதிகமாக போவது, இதனால் மருந்துகள் அதிகமாக அலோபதி முறையில் சாப்பிடுவதால் இதை குணப்படுத்த முடியாமல் போய் விடுகிறது. இவ்வாறு குணப்படுத்த முடியாமல் போவதால் தொடர்ந்து வலி நிறுத்துவதற்கு மருந்துகளை சாப்பிடுவதால் இவ்வாறு நிகழ்கிறது. இவ்வாறு சிக்கலான குறிகளை தோற்றுவித்து. அவர்களின் வாழ்க்கை முழுவதும் மருந்துகளை சாப்பிட வேண்டியதாய் போய், அதன் அடிப்படையில் மற்ற நாட்பட்ட வியாதியுடன் சேர்ந்து சர்க்கரை வியாதி தோன்றி விடும். அதில் இரண்டு வகை உண்டு.

(i). தீர்க்கப்பட முடியாத நிலை.
(ii). மருந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் நிலை.
1). சர்க்கரை வியாதியானது எவ்வாறு உருவம் அமைத்து கொள்கிறது என்றால், எல்லா வயதுகாரர்களிடமும் ஏற்பட்டு, குழந்தைகளிடமும் வந்து பெரியவர்களுக்கும் தோன்றி விடுகிறது. நமக்கெல்லாம் இவையே தோன்றுவதற்கு காரணமாக உள்ளது. நாம் இந்த வைத்தியம் பார்ப்பதற்கு தனி தனியாக பிhpத்து கொள்ள வேண்டும். இப்போது பல வகையான தரத்தை கொடுக்ககூடிய நிலை பார்க்கும் போது பெற்றோர்களின் மியாசத்தின் மூலமாக வந்து விடுகிறது. பெற்றோர்களுக்கு எவ்வாறு தோன்றுகிறது, ஏன் என்றால் பெருத்த உடல் மற்றும் சிக்கல் செய்து குணப்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தி, பல வகையான இந்த சர்க்கரை வியாதியை பார்க்கும போது தொடர்ந்து இந்த குறிகளை அடையாளமாக வைத்து கொண்டு வரும். அவை.

(A). நோயாளிக்கு இரத்தத்திலும், சிறுநீரிலும் சர்க்கரை அதிகமாக உள்ளது.
(B). புரத சக்தி அதிகமாக உள்ளது. அதனால் முட்டைச்சத்து குறைந்து சர்க்கரை அதிகப்படுத்துகிறது.
(ஊ). உடலின் எடையை குறைக்க வைக்கிறது.
(னு). நாளமில்லா சுரப்பிகளை கெடுத்து, இதன் பிறகு புண் ஏற்பட்டு அழுகலும், ஏற்பட்டு சீழ்பிடித்து சொத்தை விழுந்து விடும். ஓட்டை விழுதல், புரை வைத்தல் போன்ற நிலைகளில் உறுப்புகளை வெட்டி எடுத்து விட வேண்டியதாகி விடுகிறது. இதனால் இரத்த குழாய்கள் பலஹீனப்படுத்தப்பட்டு விடும். அழுகிற இடத்தில் இரத்தங்கள் செல்வதால், T.B டைபாய்டு கிருமிகள் ஏற்பட்டு தொற்று வியாதிகள் ஏற்படும். நுரையீரல், இதய சம்பந்தப்பட்ட வியாதிகளும், இரத்த குழாய்கள் கட்டி பெருத்தும், உருண்டு போய் நரம்புக்குள்ளும் சொத்தை விழுந்து இந்த மாதிhp எத்தனையோ வகையான கஷ்டம் ஏற்படும்.
(நு). சிறுநீரகத்தின் உட்புற குழாயில் புண்ணை ஏற்படுத்துகிறது. முகுளத்திற்கு செல்லக்கூடிய அசுத்த இரத்த குழாய்கள், அடிப்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது. இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாததால் நாம் கொடுக்கும் இன்சுலினாலும் கூட பற்றாக்குறை ஏற்பட்டு விடலாம்.
(கு). சர்க்கரை வியாதியால் அதிகமான சர்க்கரை இரத்தத்தில் தோன்றுவதால் இன்சுலின் தேவைப்பட்டு இரத்தத்தில், படிவுகள் ஏற்பட்டு இன்சுலின் சக்தி மேலும் அதிகமாக தேவைப்படுகிறது.
(ழு). சிறுவர்களுக்கு இம்மாதிரியான சர்க்கரை வியாதி ஏற்பட்டு சிறுநீரில் அதிக சர்க்கரையுடன் சென்று கணையம் உடைபட்டு போய்விடுகிறது.

2). மிதமான சர்க்கரை வியாதி பற்றி பார்ப்போம்.

இவ்வகையான சர்க்கரை வியாதி சிறுவர்களை தாக்கி குண்டாகி, சளி சவ்வு பாதிக்கப்பட்டு சளி தொந்தரவு ஏற்படும். பெரியவர்களுக்கு இவ்வாறு ஏற்பட்டு சளி சவ்வு பாதிப்பால் குண்டாகி விடுவதும், உண்டு இதனால் அவர்களுக்கு சர்க்கரை வியாதி தோன்றியது, போலவே தெரியாது. ஆனால் இவர்கள், குண்டாகவும், குச்சி போலவும் ஆகிவிடுவார்கள். பெரியவர்களுக்கும், இம் மாதிரி ஏற்பட்டு குண்டாக மாறியும், மீடியமான நிலை மாறியும் இவர்களின் உடல் நிலைகள் பின்வருமாறு மாறி விடுகிறது. இதன் குறிகளாவன.

(A). இரத்தத்திலும், சிறுநீரிலும் சர்க்கரையின் அளவு அதிகரித்து கொண்டு போகும். இது திடீர் என்று நிற்கும் பிறகு வரும். அளவு கடந்த சிறுநீர் உற்பத்தி ஆகிவிடும். உடல் இளைக்காது.
(B). சர்க்கரை அதிகமாக இருக்கும். அளவுக்கு அதிகமான சர்க்கரை இவர்களின் உடல் உறுப்பு பகுதியில் சேர்ந்து விடும்.
(ஊ). சிறுநீரில் அசிட்டோன் காரம் இருக்காது.
(நு). இதனால் அளவான உடல் இருக்காது. உடலின் உறுப்புகள் தாருமாறாக இருக்கும்.
(கு). இவர்களுக்கு சரியான ஹோமியோபதி மருந்தை கொடுத்து காப்பாற்ற வேண்டும்.
(ழு). சிக்கல் இல்லாத, தெளிவாகவும் பார்த்து, சர்க்கரை படிவங்கள் படிந்துள்ள இடத்தை பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு எந்த வகையை சேர்ந்த வியாதி என்று பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

13. MANAGEMENT OF DIABETIC - சர்க்கரை வியாதியஸ்தரை நிர்வகித்தல்.

நோயாளியானவர் மிகவும் ஒரு கட்டுபாடான நிலையில் இருக்க வேண்டும். கட்டுபாடும், எச்சரிக்கையாக உள்ள அமைப்பும் வேண்டும். நோயாளியானவர், இவ்வாறு மிகுந்த கட்டபாட்டுடன் இருக்கும் போது அதனாலும் கூட சிக்கல் ஏற்பட்டு விடும்.

நோயாளிக்கு கற்பிக்க வேண்டிய விதிமுறைகள் :-

இந்த நோயாளிக்கு நிர்வாகம் அதிகமாக செய்வதால் அவருக்கு சர்க்கரை வியாதி தோன்றி விடும். அவை.

1). சர்க்கரை வியாதியானது நாட்பட்ட நோயாகவும், நாட்பட்ட தன்மையும் தோன்றி உள்ளவர்களாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் உடல் நிலையை பராமரிக்க வேண்டும்.
2). பரம்பரையாக வந்து நோயாளிக்கு நோய் தோன்றி இறக்கக்கூடும். அவர்களுக்கு சர்க்கரையும், கொழுப்பும், புரதசத்தும் இருக்கும். இவை இருந்தாலும் கூட நோயை கட்டுபாட்டுடன் வைத்து இருப்பார்கள். கட்டுபாட்டுடன் வைத்து கொண்டே சர்க்கரை, முட்டை சக்தியான ஆல்புமின் கொழுப்பு பொருட்கள், எல்லாவற்றிலும் இருக்கக்கூடிய ஜீவ சக்தி உடலை விட்டு வெளியே சிக்கலை செய்து விடும்.
3). இந்நோயாளிக்கு கட்டுபாடு அவசியம். அதாவது இந் நோயாளிக்கு சரியான நேரத்தில் உணவு தேவையானவற்றை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் இவர்களுக்கு எதிர்காலத்தில் பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடும்.
4). நோயாளியானவர்களின் பொதுவான உடல் ஆரோக்கியம் இழந்து பல் சொத்தை, கால், கைகள் பலமிழந்து மற்றும் உடலின் அமைப்பே ஒரு சரியான நிலையில் இல்லாமல் உடலின் நிலையில் பாதிப்பு ஏற்படும். தோலின் அமைப்பும் மாறி அதிலும் மாற்றம் ஏற்படும். இந்த நோயாளியை எவ்வாறு பரிசோதித்து தெரிந்த கொள்ள வேண்டும். என்பதற்காக அவரை கவனிப்பது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.

1. நோயாளியின் சிறுநீரை எவ்வாறு சோதிக்க வேண்டும்.
2. நோயாளியின் உடல் நலம் ஒரு வருடத்திற்கு ஒரு வருடம் எவ்வாறு மாற்றம் பெறுகிறது என்பதை கணக்கு எடுக்க வேண்டும்.
3. இந்த நோயாளியானவர்களுக்கு தேவையான சக்தியை தரக்கூடிய உணவு வகைகள் எது? எவ்வளவு? என்பதையும், அவ்வுணவு வகைகளில் சர்க்கரை இல்லாத உணவினை தேர்வு செய்து அவருக்கு ஒர் உணவுப்பட்டியலை அமைத்து கொடுக்க வேண்டும்.
4. அவருக்கு எவ்வளவு இன்சுலின் தேவை? எப்போது கொடுக்க வேண்டும்? இன்சுலினின் அளவு எவ்வளவு? எவ்வளவு அளவு இன்சுலின் கொடுக்கும் போது அவரின் தேவை சமன்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த நோயாளியை கண்காணிக்க வேண்டும். இவ்வாறாக எல்லாவற்றையும் நிர்வகித்து கட்டமைத்து மிக முக்கியமாக அவரை கவனித்து செய்கின்ற போது தான் அவரின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டு வெற்றியை கொடுக்கும். இது மருத்துவரின் கடமையாகும். நோயாளி பதிவு ஏட்டில் இந்த அமைப்புகளை ஒழுங்குபடுத்தி வைத்து கொள்ள வேண்டும். அதை அப்படியே அவரிடம் உபதேசித்து அதை அவர் பின்பற்றும் படியாக செய்ய வேண்டும். அதே போல் அவரின் சர்க்கரை வியாதியினால் அவரின் வேலையின் உள்ள சுமைகளை குறைந்தோ, அல்லது மாற்றியோ வைக்க வேண்டும். அவரின் சக்திக்கு தகுந்த வேலையை தான் நாம் செய்ய சொல்லி ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும். இவை எல்லாம் மிக முக்கியம். உணவு கட்டுபாடும் இருக்க வேண்டும். என்பதையும் பார்த்து, உணவு கட்டுபாட்டை மிகவும் அனுசரிக்கப்பட வேண்டும்.

இந்த சர்க்கரை வியாதிகாரர்களுக்கு சிறுநீர், இரத்தம் பரிசோதனைகளும் செய்து சிறுநீர் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பொருத்து மற்ற பரிசோதனைகளையும் செய்து, இவர்களின் முன்னேற்றத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருந்தால் இவர்களுக்கு மற்ற வியாதி, இவர்களுக்கு இருந்தது என்பதை பார்த்து குறித்த வைத்து கொள்ள வேண்டும். அவர்களும் பருவ நிலை மாற்றத்தினால் என்ன தொந்தரவுகள், ஏற்படுகிறது என்பதை பார்த்து குறித்து வைத்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு பருவ நிலை மாற்றத்தினால் என்ன தொந்தரவுகள் ஏற்படுகிறது என்பதை பார்த்து குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பட்டியல் போட்டு அதில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவு, மற்றும் அவரின் உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களையும் உடலின் எடையில் ஏற்படும் ஏற்றதாழ்வுகளையும் அதில் குறித்து கொள்ள வேண்டும். அவர்களின் இரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகிறது என்தையும் குறித்து, அதில் கிடைக்கும் விஷேசமான குறியை வைத்து மருந்து கொடுக்க வேண்டும். இவ்வாறு மருத்துவருக்கு நோயாளியை பட்டியல் போட்டு அதன் மூலம், நோயாளிக்கு மருத்துவம் செய்யும் அளவுக்கு அறிவும் படிப்பும் பெற்று இருக்க வேண்டும். அதற்கு அவருக்கு பொறுமையும், இவ்வாறு அவருக்கு அறிவும் இருக்க வேண்டும். அவர் எந்த வகையான சர்க்கரை வியாதிகாரர் என்பதையும் பார்த்து அவர் புத்திசாலியா? முட்டாளா? அவர் நம்பிக்கையுள்ளவரா? சந்தேக பேர் வழியா? என்பதையும் பார்த்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவரின் பண்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அல்லது வேறு நோய்காக தண்டுவடத்தில் ஊசி போடப்பட்டு உள்ள வரலாறு உள்ளவரா? என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம், கொஞ்சமாக நோய் தோன்றியதா? அந்நோயின் குணங்கள் என்ன? உடலில் என்ன விஷேசமான தன்மைகள் உள்ளது என்பதையும் பார்த்து கொள்ள வேண்டும். சர்க்கரை வியாதி தொடர்ந்து இருக்க கூடியவரா? என்பதையும் அவர் நோய் ஏன் அதிகமாக ஏறிக் கொண்டே போகிறது என்பதையும் பார்த்து குறித்து அதற்கு தக்க மாதிரி குறித்து கொள்ள வேண்டும். அல்லது திடீரென்று நோய் இறங்கிய பிறகு, ஏறிக் கொள்கிறதா என்பதையும் பார்த்து, அதற்கு தகுந்தாற் போல் நாம் நோயாளியின் பட்டியலை மாற்றி அமைத்து கொள்ள வேண்டும். மருந்துகளை எவ்வாறு கொடுக்க வேண்டும். அதற்கு தகுந்தாற் போல் இன்சுலினின் அளவையும் சரிபடுத்தி வைத்து கொள்ள வேண்டும்.

அந்த அளவு முறை நிலைக்க தகுந்தாற் போல் நோயாளியின், இன்சுலின் அளவை மாற்றி அதை கொடுக்கும் படி அவரிடம் கூற வேண்டும். அவர்களுக்கு முக்கியமாக கொடுக்க கூடிய முன் எச்சரிக்கைகளை நாம் அவ்வவ்வப்போது கொடுக்க வேண்டும். மற்றும் இளைஞரா? முதியவரா? நடுத்தர வயதினாரா? அல்லது சிறு குழந்தையா? சிறுவர்களா? என்பதையும் பார்த்து அதற்கு தக்கவாறும் நாம் சரிபடுத்தி முறைகளை அனுசரிக்க பட வேண்டும். எந்த வகையில் அவர்களுக்கு நோய் அதிகமாகிறது என்பதையும், அவர்களுக்கு பரிசோதனையில் காட்டும் அளவுகளையும், வேறு வியாதிகளும் சேர்ந்து தாக்குகிறது என்பதையும், எவ்வாறு நோய் மிக விரைவாக வளர்கிறது என்பதையும், எந்த நேரத்தில் எம்மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதையும் பார்த்து, உணவில் நீக்க வேண்டியவையும் கூறி, மற்ற உணவை சேர்க்கும் போது அதற்கு, தகுந்த கலோரிகள் உடலுக்கு சேரும் படி வருகின்றதா என்பதையும் பார்த்து, பிறகு இதய துடிப்புகள், இதய வால்வுகளின் பலம், இரத்த குழாய்களின் பலம் இம்மாதிரி பலவற்றையும், பார்த்து எம் மாதிhpயான நேரத்தில் அவருக்கு நோயில் மாற்றம் ஏற்படுகிறது என்பதையும் மருத்துவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

சிறுநீரில் எம்மாதிhpயான காரத்தன்மைகள், அமிலத் தன்மைகள் மற்றும் சக்கரையின் நிலையில் எவ்வாறு எந்த தன்மைக்கு தகுந்தாற் போல் மாறுகிறது, என்பதையும் கவனிக்க வேண்டும். அவரின் உடலின் நிலையில் எப்போது ஆபத்து கட்டத்துக்கு சென்று அதனால் கிடைக்கும் குறிகளும், அதனால் அவர் கூறும் பிரச்சனைகளiயும், பார்த்து அதற்கு தக்க மருந்தை நாம் அம் மாதிரி ஏற்படும். நிலைமைகளில் கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்யும் நோயாளியா? அவர் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் அவரை பயிற்சி எடுத்து கொள்ள சொல்ல வேண்டும். அவர்களின் உடல் நிலைக்கு தக்க பயிற்சிகளை மட்டும் செய்யும் படி கூற வேண்டும். அவருக்கு தோற்றத்திலும், இரத்த சுழற்சிகள், இதய வியாதியின் தன்மைகள், கை காலில் ஏற்படும், வலிகளுக்கு தக்க மாதிhpயும், அவருக்கு பயிற்சி அளித்தலை பற்றி ஓர் உண்மையான ஹோமியோபதி மருத்துவர் இத்தனை விசயங்களை தெரிந்து வைத்து இருக்க வேண்டும். கர்ப காலத்தில், அதாவது சர்க்கரை உள்ள நோயாளி கர்ப்பமாக இருந்தால், அவரின் உடல்நிலையில் மிகுந்த அதிகமான கவனத்தை காட்ட வேண்டும்.

ஒவ்வொரு நிலையையும், கண்காணிக்க வேண்டும். வயிற்றில் உள்ள குழந்தையின் தன்மையையும் பார்த்துக் கொள்ள வேண்டும். இம் மாதிரி நிலையில் ஒவ்வொரு சுழற்சியையும் பார்க்க வேண்டும். அப்போது அடிக்கடி இரத்த பரிசோதனைகளை பார்த்து சாக்கரையின் அளவை குறித்து மிக கவனமாக அவற்றை தொகுத்து அவர்களுக்கு கொடுக்கம் ஓய்வு, மற்றம் சிசுவை பாதுகாத்தல் பற்றியும், அவர் சாப்பிடும் உணவில் கட்டுபாட்டு முறைகளையும், அதே போல் அந்நேரத்தில் அவருக்கு கிடைக்க வேண்டிய கலோரிகள் சக்தி சரியாக கிடைக்கின்றதா என்பதையும் பார்க்க வேண்டும். இவற்றில் சிக்கல்கள் எந்த நேரத்தில் ஏற்படுகிறது என்பதையும், இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை நிலை போன்றவற்றை வாரமொரு முறை கண்காணித்து கொள்ள வேண்டும். அவ்வவ்போது அவர் எடுத்து கொள்ளும் அக்கறைகளை எடுத்து கொள்கிறாரா? என்பதையும் பார்த்து உணவு முறைகளினால், குழந்தை பெருத்து விடுகிறதா என்பதையும், குழந்தையின் உடல் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறதா, குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டி வருமா? இல்லை முதல் குழந்தை தாய்க்கு அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டு உள்ள தாய்மார்களா? என்பதை பார்க்க வேண்டும்.

இப்போதும் அறுவை சிகிச்சை தேவைப்படுமா? இல்லை அறுவை சிகிச்சை செய்யாமலேயே குழந்தையை எடுக்கலாமா? என்பதையும் பார்க்க வேண்டும். தொற்று வியாதிகள் ஏதேனும் பிரசவ காலத்தில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். தொற்று வியாதிகள் ஏதேனும் பிரசவ காலத்தில் தொற்றி, எதிர் கால பிரசவத்தின் போது தொல்லை ஏற்படுமா? தாய்க்கு ஏற்கனவே சர்க்கரை இருந்ததா? இல்லை பிரசவத்தின் போது சர்க்கரை தோன்றியதா? என்பதையும் பார்க்க வேண்டும். பக்கம் - 37.

சர்க்கரை வியாதிகாரர்களின் வேகம் நோய் எவ்வளவு வேகமாக பரவுகிறது. மருத்துவ முறைகளில் மருத்துவம் செய்ததர்க்கு பயன்படுத்திய விதி முறைகள் மற்றும பதிவு முறைகள் என்னென்ன? அவருக்கு கூறிய தத்துவங்கள் என்னனென்ன? இவருக்கு பதிவிலிருந்து எடுத்து செய்யக்கூடிய வைத்திய முறைகள் என்னென்ன? என்ன உணவு முறைகள் கொடுக்கிறோம்? நாம் சொல்லும், உணவு முறைகளை பற்றி அவர் எவ்வாறு அவற்றை எடுத்து கொள்கிறார்? உபயோகமானவற்றை குறித்து வைத்து இருக்கும் போது மயக்க நிலை ஆழ்ந்த மயக்கம் நிலை ஏற்படும் போது, அவருக்கு எப்படி மருந்து கொடுக்க வேண்டும், என்பதை இக்குறிப்புகளின் மூலமாக தெரிந்து கொண்டு மருந்துகளை கொடுக்க இக்குறிப்புகள் நமக்கு உபயோகமாக இருக்கும். இக் குறிப்புகள் மிகவும் அவசியம் இரத்தத்திலும், சிறுநீரிலும், சர்க்கரை அதிகமாக சேர்ந்து விட்டதா என்பதையும் பார்த்து, அவருக்கு அந்நிலையின் போது மூச்சு திணறல் ஏற்படுகிறதா? மூச்சு திணறலுக்கு காரணம் என்னென்ன? ஹைப்பர் கிளைக்கோமியா காரணமா? என்றும் பார்த்து, எது நோயாளிக்கு நோய் செய்கிறது? நோயாளி நோயில் எப்படி தாக்கப்படுகிறார்? அதை எப்படி நோயாளி எடுத்து கொள்கிறார். அவர் எடுத்து கொள்ளும் தன்மைக்கு ஏற்றவாறு நாம் பார்த்து அவர் நோயின் போது எந்த ஆபத்து கட்டத்தில் இருக்கின்றார்.

நோயாளிக்கு எப்படி நாம் உதவ வேண்டும்? நோயாளிக்கு இரத்த சர்க்கரையா? இரத்த கொதிப்பா? இரத்த அழுத்தமா? எந்த வகையை சேர்ந்தது? நோயாளிக்கு மேலோங்கி நிற்கும் குறி என்ன? அதற்கு தக்க மருந்தை நாம் எப்படி தேர்வு செய்ய வேண்டும். அடுத்தடுத்த குறிகளை நாம் எப்படி பார்க்க வேண்டும். நோயாளிக்கு எப்படி நோயினால் துன்பம் ஏற்படுகிறது. அவர் எவ்வாறு உணவை விரும்புகிறார்? அதனால் அவருக்கு ஏற்படும் நன்மை தீமைகளை நாம் எப்படி அவருக்கு புரிய வைக்க வேண்டும், என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். நோயாளியின் உடலின் நிலைகளில் ஏற்படும், அதாவது உடலின் எடை, உயரம் போன்றவற்றில் ஏற்படும் தன்மைகளைப் பற்றி பார்ப்போம். நோயாளிக்கு ஏற்படும், நோய் தன்மைகளை எப்படி பார்க்க வேண்டும்? என்றால் அவரின் உடலின் எடை எவ்வளவு வேகமாக குறைகிறது.

அல்லது எடை அதிகமாக ஏறுகின்றதா? என்பதையும் பார்க்க வேண்டும். அந்நிலையின் போது உணவு உடற்பயிற்சி மற்றும் மருந்துகளையும், அடிப்படையாகவும், அவரின் உடலின் எடைக்கு தகுந்தாற் போலும், இவற்றை கொடுக்க வேண்டும், என்பதையும் பார்க்க வேண்டும். யோகா பயிற்சிகளும் சர்க்கரை வியாதிகாரர்களுக்கு அவசியமாகவும் தேவைப்படுகிறது. அவரின் சுவாசகோச அமைப்பு, இதயத்தின் வால்வுகள் மற்றும், நரம்பு மண்டலம் போன்றவை நன்றாகவும், இயல்பாகவும், இருக்கின்றதா எனவும், அவரின் மன நிலைகள் எவ்வாறு உள்ளது என்பதையும் பார்க்க வேண்டும். சர்க்கரை வியாதி நோயாளிக்கு உடல் உழைப்பு, மன உழைப்பு, அறிவும் அதிகமாக பயன்படுத்த கூடாது. மனதினாலும், நரம்புகளாலும் பாதிக்கப்பட்டு, அதனால் உள்ளுர அவருக்கு கோபம், கூச்சம், அவமானம், பயம் போன்றவை ஏற்படுகிறதா? சுற்றுபுறம் மற்றும் அதனால் சுவாச கோச அமைப்புகள் மாறுபடுகின்றதா எனவும் மற்றும் மற்ற காரணங்களால் நோயாளி எவ்வித வியாதிகள் தோன்றுகிறது என்பதையும் பார்க்க வேண்டும். இதனால் நோயாளிக்கு சர்க்கரை நீடிக்கின்றதா? அவர் 15 (அ) 20 நிமிடத்திறகு ஒரு முறை விட்டு, விட்டு மூச்சு பயிற்சிகளை செய்து, அதனால் அவருக்கு மாற்றம் ஏற்படுகிறது, எனவும் அதனால் நோயாளிக்கு மேலே கண்ட நிலைகள் ஏற்படுகின்றதா எனவும் பார்த்து அவரின் உடலின் எடைகளை சரிபடுத்தி அவரை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும். உடற்பயிற்சியினால் அவருக்கு கிடைக்கும் நன்மை, தீமைகளையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.