அபூர்வமாகி செய்யும் சர்க்கரைவியாதி.


4. PHENOMENA OF DIABETES MELLITUS -அபூர்வமாகி செய்யும் சர்க்கரை வியாதி.

மறைந்து கொண்டு மற்ற உறுப்புகளில் இருந்து தாக்கப்படுகின்ற சர்க்கரை வியாதி என்பது பொருள். இது சர்க்கரை வியாதிகாரர்களுக்கு மட்டும் தாக்கப்படுவது கிடையாது. வியாதிகாரர்களுக்கு அவர்களின் குழந்தைக்கும் தாக்கப்படும் வியாதி இது. இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாக இது போல் தாக்கப்பட்டவர்கள் உள்ளனர். நாட்டின் அடிப்படையிலும், பழக்கவழக்கம், நாகரிகம், உணவு முறைகளிலும் இம் மாதிரி தோன்றிவிடுகிறது. எல்லா விதமான சிறுவர்களுக்கும், அதாவது பெற்றோர்களுக்கு இம்மாதிரி ஏற்படுவதால், சிறுவர்களுக்கே பெற்றோர்களின் மூலமே வந்து விடுகிறது என்று கண்பிடிக்கப்பட்டு உள்ளது. இது வந்த பிறகு அதிகரித்து கணையத்துக்கு போய் துன்புறுத்துகிறது என்றும், இந்த சர்க்கரை வியாதி மற்ற உறுப்புகளையும் தாக்கும். இவர்கள் வளர்ந்து திருமணம் செய்து குழந்தைகள் பிறக்கும் போது விசேஷமான தன்மை வாய்ந்த வலிமையாக சர்க்கரை வியாதி உள்ள குழந்தையை பெற்று எடுப்பார்கள். இரண்டு காரணங்களுமே இல்லாமல் தோன்றி விடும், சர்க்கரை வியாதியும் உண்டு. முக்கியமாக அதன் பண்புகள் என்னவென்றால்,

1. பெரும்பாலும் இதய வியாதிகள் தோன்றும். பணக்காரர்கள், ஏழைகள், கர்ப்பிணி பெண்களுக்கும் அதிகமாக தாக்க வாய்ப்பு உண்டு. அப்படி தான் தாக்கி கொண்டும் வருகிறது.
2. வயதானவர்கள் 45 வடி 70 வயது உள்ளவர்களை அதிகமாக தாக்குகிறது. குழந்தைகளையும், இளைஞர்களையும் தாக்கவில்லை என்று சொல்லவில்லை. அவர்களையும் தான் தாக்குகிறது.
3. யாருக்கு அதிகமாக தாக்குகிறது என்றால் தாய்மார்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. உடல் பெருத்து போன தாய்மார்களும், குச்சி போல் உள்ள தாய்மார்களையும் தாக்குகிறது.
4. அதே போல் உடலமைப்பில் உள்ள குழந்தைகளுக்கும் தாக்குகிறது.
5. அதிகப்படியான மக்களை பொதுவாகவே இவ்வியாதி தாக்குகின்றது. அதிகமாக மூளையை கசக்கி படிக்க கூடியவர்களையும் தாக்குகிறது. எல்லோருமே இதன் அடிப்படையில் தான் வருகின்றனர். இயல்பான வாழ்க்கையில் உள்ளவர்களுக்கும் அடி, தடி, காயம் சாதாரணமாக சீழ் பிடித்து விட்டது என்றாலும், இவ்வியாதி தோன்றுகிறது.
6. அடிப்படையாக பிடிப்பவர்கள் யார் என்றால் இளமையில் உள்ளவர்கள், தடித்த உடல் உள்ளவர்கள், கொழுப்பு உள்ளவர்கள், வயதானவர்களுக்கும் நோய் ஏற்படுகிறது.
7. அதிக கொழுப்பு மனிதர்களையும் பிடித்து, வியாதி அதிகரித்து கொண்டு வருகிறது. எடை குறைந்து கொண்டே வருபவர்க்கும் நோய் ஏற்படுகிறது.
8. அடிப்படையாக வேறு வியாதி அதிகம் உள்ளவர்களையும் நோய் தாக்குகிறது. நாளமில்லா சுரப்பிகளின் செயல் குறைப்பாட்டின் தன்மையிலும், பிட்யூட்டரி, தைய்ராய்டு சுரப்பிகள் தாக்கப்பட்ட பின் கணையம் தாக்கப்படுகிறது. சீழ் கட்டிகளினாலும் தோன்றுகிறது.
9. எடுத்ததற்கு எல்லாம் ஊசி மருந்துகளை போடும் போது மருந்தே உள்ளுக்குள் சென்று சர்க்கரை வியாதியை உற்பத்தி செய்து விடுகிறது. பிட்யூட்டரியும் தன் கட்டுபாட்டை இழந்து, அதன் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு பல மருந்துகள் சாப்பிட்டதால் நோய் ஏற்பட்டு விடுகிறது.
10. பொதுவான வழிகாட்டி என்னவென்றால், கணையம் வீங்கி திட்டு, திட்டான சுரப்பிகள் அடைத்து விடுவதால், இன்சுலினை உற்பத்தி செய்யும் சக்தி இழந்து கணையம் கெட்டு வியாதி ஏற்பட்டு விடுகிறது.

5. AETIOLOGY - காரணத்துடன் விவரிக்கும் சாஸ்திரம்.

சர்க்கரை வியாதியானது தோன்றியவுடன், உயிர் ஜீவனம் செய்யக்கூடிய சக்தி தடைபட்டு விடுகிறது. சக்திகள் என்னவென்றால், கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்பு பொருட்கள், வைட்டமீன்கள் தேவை. இவை உயிர் வாழ தேவையான பொருட்களாகும். இவற்றில் தடை ஏற்பட்டவுடன் அதன் நிலை மாறி பயன் அற்றதாகி போய்விடுகிறது. சக்திகள் இழப்பு தடுத்து விடுகின்றன. கிளைக்கோயூரியா சிறுநீhpல், சர்க்கரை போவது, ஹைப்பர்கிளைக்கோமியா (சர்க்கரை அளவுக்கு அதிகமாக போவது) அசிட்டோன், யூரீயா ஆகிறது. காரகம் சிறுநீரில் அதிகமாக உற்பத்தி செய்து வரும். அசிடோஸ் என்பது காரகம் எல்லாம் குறைந்து அதன் பிறகு கோமாநிலை ஏற்பட்டு மரணம் ஏற்பட்டு விடுகிறது. சர்க்கரை வியாதியை இரண்டு வகையாக பிரீக்கலாம். அவை

1). அடிப்படையாக தோன்றுவது, 2). பெற்றோர்கள் மூலமாக தோன்றுவது.

1). அடிப்படையாக தோன்றுவது. இம்முறையில் பெற்றோருக்கு சர்க்கரை வியாதியில் இருந்து அதன் மூலமாக குழந்தைகளுக்கும் நோய் தொற்றுவது ஆகும். பெற்றோர்க்கு நோய் இருந்தால் இவர்களுக்கு தொற்றி கொள்கிறது. 100க்கு 40% பெற்றோர்க்கு நோய் இருந்தால், குழந்தைக்கு வந்து துன்புறுத்துகிறது. இன்றைய சர்க்கரை வியாதிகாரர் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், பெற்றோர்களின் விஷத்தினால் வந்து, உடலின் கட்டமைப்பில் புகுந்து மூலக்கூறில் கலந்து இந்த செய்தியை ஜீன்களில் புகுத்தி வியாதியை உற்பத்தி செய்து விடுகிறது. முக்கியமாக நாளமில்லா சுரப்பியை தொற்றுகிறது. நாளமில்லா சுரப்பியை தொற்றியவுடன் இன்சுலின் சுரப்பது குறைந்து போய் விடுகிறது.

முதலில் பிட்யூட்டரி சுரப்பியில் உள்ள இரசம் தான் காரணம், அதன் பிறகு மூன்றாவது, இன்சுலினை சுரக்க கூடிய கணையம் மற்றும் அதன் திட்டுகளான லங்கார்ஷான் திட்டுகள் பாதிக்கப்படுகிறது. இது போல் பல காரணங்களால் பெற்றோர்களின் மூலமாக வரும் ஜீன்கள் அடிப்படையில் வரும் செல்களின் அமைப்பு இரசாயனத்தை மாற்றி விடுகிறது. இரசாயன மாற்றத்தின் எதிரொலி தான் வியாதியை பதிவு செய்து கொள்கிறது. கடைசியாக உடலமைப்பை கட்டி பாதுகாத்து உடலுக்கு தேவையான புரதச் சத்து, கரி அமில சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்பு போன்ற பொருட்களை இயல்பாக உற்பத்தி செய்து விடுகிறது. அதன் வேலை நஞ்சு தன்மை தடை செய்து விடுகிறது. தடை செய்யும் போது உற்பத்தி செய்யக்கூடியவை தாருமாறாக போய்விடுகிறது. உற்பத்தி குறைந்து விடுகிறது. குறிப்பாக தைராய்டு, பிட்யுட்டரி சுரப்பிகளின் சக்திகள் குறைவதால் பற்றாக்குறை ஏற்படுகிறது. அல்லது சுரப்பிகள் அதிகமாக சுரந்து இன்சுலின் சுரப்பதை குறைவாக செய்து விடுகிறது. தைராய்டு சுரப்பியின் சுரப்பு நீர் அதிகமாக சுரக்கும் போது, கழுத்தில் கட்டிகள் தோன்றுகிறது. பிட்யூட்டரி கரைந்து சுரக்கும் போது குள்ளத்தன்மையும், சீழ் பிடிப்பதும் ஏற்படுகிறது. இதனால் இன்சுலின் குறைவு ஏற்பட்டு உற்பத்தி செய்யக்கூடிய சக்திகள் தடை செய்யக்கூடிய வேலை எல்லாம் செய்ய முடியாமல் போய்விடுகிறது. அதனால் இன்சுலின் சுரக்ககூடிய நாளமில்லா சுரப்பிகளான தைய்ராய்டு, பிட்யூட்டரி, போன்றவை கெட்டு சீழ் பிடித்து கொள்ளும். அதனால் ஹார்மோன்கள் கெட்டு இராசாயன மாற்றம் ஏற்பட்டு விடும். இதனால் ஜீவசக்தி குறைந்து உற்பத்தி செய்யக்கூடிய நிலை மாறி போய் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு பொருட்கள் மாறி சர்க்கரை வியாதியை ஏற்படுத்தி விடுகிறது.

பாரம்பரியத்தை, அதன் பண்பை சுமந்து கொண்டு வந்து பிறப்பிலேயே சர்க்கரை வியாதி வந்து விடும். தேவையான போது அதிகமாக முளைத்து கொள்ளும். அதனால் தொந்தரவு கொடுக்கிறது. அதனால் வாழக்கையே மாறி துன்பத்தை ஏற்படுத்தும், பண்பை பெற்று விடுகிறது. இது போல் நம்மிடம் நோயாளிகள் வரும் போது அவர்களின் பதிவு இப்படி இருக்கின்றதா? என்று பார்க்க வேண்டும். இதை தான் நாம் குறிகள் என்கிறோம். இந்த குறிகளை வைத்து தான் வியாதியின் பண்புகளை வேருடன் கணக்கு போடுகிறோம். மீண்டும், மீண்டும் மறைத்து கொண்டு வந்து பிறகு நோயாக மாறிவிடுகிறது. நிறைய சர்க்கரை சாப்பிடுவதால் கார்போஹைட்ரேட் செல்கள் உற்பத்தி செய்யாது. இதனால் இன்சுலின் உற்பத்தி செய்யக்கூடியது கிடையாது. சர்க்கரை சாப்பிட்டது போல் மனம் உடலின் தாக்குதலினால் இது ஏற்படுகிறது. சர்க்கரையை இது அதிகமாக உற்பத்தி செய்வதினால் தொல்லைகள் ஏற்படுகிறது. ஆகவே மற்ற உறுப்புகளின் வேலையும் குறைந்து விடுகிறது. உற்பத்தியின் காரணமாக ஹார்மோன் மற்றும் இன்சுலின் சுரப்பு நீர் குறைந்து விடுகிறது. இதனால் நமக்கு சக்கரை வியாதி என்ற முடிவு தான் கிடைக்கிறது. இதனால் கணையத்தின் வேலை குறைகிறது. இது ஏற்படும் காரணம் கவலைபடுதல், பயப்படுதல், வருத்தப்படுதல் தான். தீக்காயம் ஏற்படுதல், அடிதடி காயங்களினாலும், தொற்று வியாதிகள் ஏற்பட்டு செப்டிக் சீழ் தோன்றுவதாலும், சர்க்கரை வியாதிகள் ஏற்படுகிறது. எதற்கு எடுத்தாலும் மருந்து அதிகமாக சாப்பிடுவதாலும் ஏற்படும். சித்தா, அலோபதி, ஹோமியோபதி என்று எந்த வைத்திய முறையானாலும் மருந்து தானே. அதனால் தாக்கப்பட்டு விசேஷமாக சேர்ந்து நோய் ஏற்பட்டு விடுகிறது.

6. PHYSIO - PATHOLOGY -- உடல் கூறு மாறி விட்ட நிலை. (அ) தடை செய்யும் உறுப்பு.

பொதுவாக நாம் சாப்பிடும் சாப்பாடு, சக்தியாக மாறி உடலில் சதை, இரத்தம் போன்ற பொருட்களாக மாற்றம் பெற்று விடுகிறது. அதற்கு நமது ஜீரண மண்டலம் வேலை செய்ய வேண்டும். அதற்குரிய உணவு பொருட்களை நாம் சாப்பிடும் போது அது உடலாக மாறி விடுகிறது. நாம் சாப்பிடும் உணவு பொருட்களில் இருக்கின்ற கார்போஹைட்ரேட், நீர், கொழுப்பு பொருள் போன்ற சக்திகள் நம் இயக்கத்திற்கு தேவையாக உள்ளது. உடல் இயக்கத்திற்கு இரத்தம், பித்தம் போன்ற உட்பொருட்கள் தேவையாக உள்ளது. அதை மாற்றுவதற்கு தேவையாக உள்ளது. அதை மாற்றுவதற்கு செல்கள் என்ற சிற்றுடம்பு தேவையாக உள்ளது. ஆகவே இவைகளை வளர்ப்பதற்கு உணவு நமக்கு அடிப்படை தேவையாக உள்ளது. உணவு இருந்தால் தான் அது சக்தியாக பிரித்து செல்களை உற்பத்தி செய்த உடலை செயல்படுத்துகிறது. இந்த செல்கள் குறையும் போது இரத்த ஓட்டம் குறைந்து தானே போகும். சக்திகள் இல்லை என்றால் வளர்ச்சிதை மாற்றம் குறைந்து இரத்த ஓட்டம் மற்றும் மற்ற உடலின் இயக்கங்கள் குறைந்து போகின்றது. இதனால் மாற்றம் ஏற்பட்டு செல்கள் குறைந்து விட்டால் தான் நாம் சக்தி குறைந்து விட்டது என்று கூறுகிறோம். சக்தி குறைந்து விட்டால் எவ்வாறு உடல் இயக்க முடியும். கழிவு பொருளை வெளியேற்றவும் முடியாமல் போய்விடும்.

இதனால் தான் உடல் இயக்கங்களை இயல்பாக நடத்த முடியாமல் போய்விடுகிறது. இவ்வாறு உல் கட்டமைக்கப்பட்டு உள்ளது. இப்படி இருக்கும் போது பிராண வாயு தடை ஏற்படுத்தும், செல்களை அழிக்கப்படாமல் கழிவு செல்களை நிறுத்துவதும், வளர்ச்சியை தடை செய்வதும் ஏற்படுகிறது. புரத சக்திகள் உடலில் சேராமல் இந்த வியாதி தடுத்து விடுகிறது. இந்நிலையில் அந்த சக்தியை உற்பத்தி செய்யும் பொருட்களை அப்போதைக்கு கொடுக்கலாம் என்று கூறுகின்றனர். உணவில் இனிப்பு அதிகம் இல்லாமல் இருந்தால் தான் இயக்கத்ததுக்கு இம் முறை பொருந்தம். புதிய செல்களை இப்போது ஒவ்வொரு நிமிடமும் உற்பத்தி செய்கிறது. அதற்கு மேலே கண்ட பொருட்கள் வேண்டும். அதனால் தான் சர்க்கரை வியாதிகாரர்க்கு இனிப்பு வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறது. மருத்துவ முறைகள் எதுவாக இருந்தாலும், உணவினால் தான் உறுப்புகள் வேலை செய்யப்படுகிறது. அப்போது தான் தடை இல்லாமல் ஜீரண சக்தியும் ஏற்பட்டு நுரையீரல் வேலை செய்யும் விதம், இதயம் போன்ற உறுப்புகள் தன் வேலையில் கட்டுபாட்டுடன் உடலை இயக்குகிறது. ஆகவே சாப்பிடும் உணவு பொருட்கள் கடைசியாக நாளமில்லா சுரப்பியாக மாறுவதற்கு மென்மையான உணவு துகள்கள் ஜீரண சக்தியின் கடைசியில் கிடைப்பது அவசியமாக இருக்கிறது.

ஹார்மோன்களின் ஆற்றலும் அடிப்படையாக உள்ளது. EXOCRINE GLANDS என்று இவற்றை கூறுகிறோம். முக்கியமாக இதில் பிட்யூட்டரி என்பது அதற்கு தக்க இரசத்தை உற்பத்தி செய்கிறது. இன்சுலின் உற்பத்தி செய்வது கணையம் என்ற உறுப்பு. தைராய்டு என்ற சுரப்பி தைராக்சினை உற்பத்தி செய்கிறது. பிறகு அட்ரினலின் சுரப்பில் உள்ள லாங்கார் ஹான் திட்டுகள் அதற்கு தக்க சுரப்பு நீரை சுரக்கிறது. உணவில் உள்ள அடுத்த படியான சகத்திகள், விட்டமின்கள் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. நரம்பு மண்டல வளர்ச்சிக்கு கார்போஹைட்ரேட் போன்ற சக்திகள், குளுக்கோஸ், ப்ரக்டோஸ், க்ளைக்டோஸ் போன்ற சக்திகள், தேவைப்பட்டு பிறகு இரத்தமாக மாறுகிறது. இந்த குளுக்கோஸ் சக்தி, ப்ரக்டோஸ் சக்தி மற்றும் க்ளைக்டோஸ் சக்தி அதிகமாவதால் அது தசைகளில் சென்று முடிந்த வரை சேருகிறது. சேர்ந்த பிறகு, அதிகமாக உள்ள இந்த சர்க்கரை சக்திகள், கல்லிரலிலும், சேர்க்கப்பட்டு செயல்பாட்டை உடலில் காட்டி, சர்க்கரை வியாதியை அதிகப்படுத்ததும் தன்மையை காட்டுகிறது. அவசியப்படும் போது இக்கல்லீரலில் உள்ள சக்தியை எடுத்து கொள்ளும். இப்படி 97% அதில் உள்ள சக்கரையை வைத்தே சரி செய்கிறது. முடியாத நேரத்தில் தான் செயற்கையாக இன்சுலின் தேவைப்படுகிறது. பற்றாக்குறையை நீக்குவதற்கு கூழ் சக்தியை கொடுக்கின்றனர். கார்போ ஹைட்ரேட் வளர்ச்சிதை மாற்றம் உடலில் உள்ள கணையத்தில் இரண்டு வித மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அவையாவன:- 1). GLYCOGENESIS, 2. GLYCOLYSIS.

1). GLYCOGENESIS - இவ்வகை செல்கள் குளுக்கோஸை இரத்தத்தில் கிளைகோஜென்களாக மாற்றி அவற்றை கல்லீரல் மற்றும் உடலின் தசைகளிலும் சேமித்து வைக்கின்றன.
2). GLYCOLYSIS - இவற்றை நல்ல சக்திகளாக மாற்றுவதற்கு தான் மிருகங்களின் கூழ் பொருள்களான கிளைக்கோஜென்களை எடுத்து வைத்துள்ளோம். அதை நாம் கொடுத்து தான் ஆக வேண்டும். நாம் பார்க்கும் போது சிறுநீரில் உள்ள சர்க்கரை குறைந்து போய்விடுகிறது. நாம் கொடுக்க கூடிய மருந்துகளினால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து காணப்படும். அப்போது அந்த சர்க்கரை இரத்தத்தில் அதிகமாக காணப்படும். அதனால் தான் நாம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை பார்க்கிறோம். இரத்தத்தை பார்ததால் நமக்கு தெரிந்து விடும். நாம் பார்க்கும் போது சிறுநீரையும், இரத்தத்தையும் பார்க்க வேண்டும். இவை இரண்டிலும், சரியாக இருக்க வேண்டும். இரத்தத்தில் சரியாக இருக்க வேண்டிய சர்க்கரை 80 to 120 mg per 100 CC தான் என்று கணக்கு போட வேண்டும். இந்த கணக்கு அதிகரித்து கொண்டு போனால் அதாவது 180 mg per 100 CC க்கு இரத்தத்தில் சென்று சர்க்கரை வியாதியாக மாறி விடும். சாப்பிடும் உணவில் ஒரு பகுதி கொழுப்பாக மாறுகிறது. இது ஜீரணத்திற்கு பிறகு வளர்ச்சிதை மாற்றத்தை ஏற்படுத்தி Lipolytic Enzymes என்று காரகத்தை உற்பத்தி செய்கிறது. இக் காரகம் கொழுப்பில் உள்ள குளுக்கோஸ் சக்தியை எளிமையாக்குகின்றது. இந்த சக்திகள் எல்லாம் நாளங்கள் வழியாக வெளியேறுகிறது. இச்சக்தி இரத்த ஓட்டதின் வறட்சியை தடுக்கின்றது. கொழுப்பு உடலுக்கு தேவையான அளவு வேண்டும். அது அதிகமாகி போனால் கல்லீரலில் தேக்கப்பட முடியாமல் போகிறது. அதனால் இன்சுலின் அவசியமாகிறது. கொழுப்பு பொருளின் உற்பத்தியில் தடை ஏற்பட்டால் அல்லது குறைவாக போய்விட்டால் செல்களை உற்பத்தி செய்யக்கூடிய இந்த அசிட்டிக் என்ற காரக உற்பத்தியில் குறைவு ஏற்படும். அது அளவாக சுரக்க வில்லை என்றால், இன்சுலின் நன்மை நமக்கு கிடைக்காமல் போய்விடும். உடலில் சுமந்து கொண்டு வரும்.

(அ) சேமித்து வைத்திருக்கும் எhpப்பொருளாகவும், ஒழுங்கமைப்பாகவும், இந்த கொழுப்பு பொருள் தேவைப்படுகிறது. இது மாறுவதால் இன்சுலின் பற்றாக்குறைத்தன்மையும் ஏற்படுகிறது. இதனால் கொழுப்பு சக்தியும் அவசியமாக உள்ளது. இந்த நிலையில் இருந்தால், இப்போது உடல் எப்படி இயல்பான தன்மைக்கு வரும், வளர்சிதை மாற்றம், உடலின் தன்மைகள் எல்லாமே கெட்டு போய் விடும் அல்லவா? உடலில் உள்ள பசை எல்லாம் வெளியில் வந்து விட்டால் உடலுக்கு எப்படி பலம் கிடைக்கும். அந்த பசையை சக்தியாக செய்வது இன்சுலின் தானே? இன்சுலின் உற்பத்தி ஆகவில்லை என்றால் சக்தி எல்லாம் வீணாக தான் போகும். ஆகவே தான் சக்தியை வெளியில் இருந்து பெற்று கொடுப்பதாக உள்ளது. அந்த சக்தியானது பசையை எரித்து சக்தியாக மாற்றி, உடலுக்கு தருகிறது. இப்படி தரும் போது தான் இரத்தத்தின் சக்தியும் உடல் வளர்ச்சிதை மாற்றமும் நிழ்கிறது. பிறகு கொழுப்பை சமன்படுத்துகிறது. அதை உடலின் மென்மையான பகுதிகளுக்கு எடுத்து சென்று உறுப்பை இயக்குவதற்கு உறுதுணையாக இருக்கினறது. உடலில் உற்பத்தியாகின்ற சர்க்கரை, சிறுநீரில் வெளியே போய்விட்டால் கொழுப்பை எரிக்க முடியாமலும், குறிப்பிட்ட உறுப்புக்கு எடுத்து செல்ல முடியாமலும் போய் விடுவதால் ஒரே இடத்தில் கொழுப்பு தேங்க ஆரம்பித்து தீமை செய்யும் அல்லவா? அதனால் இரசாயன மாற்றமே தடைப்பட்டு விடும். இவ்வாறு கொழுப்பு பகுதிகள் தேய்மானத்திற்கு பதிலாக தேவையற்ற இடத்தில் தங்கி, உடல் பகுதியை கெடுப்பது மட்டுமில்லாமல் உடலை குண்டாக்கி விட்டு விடும். ஆனாலும், மூளைக்கு செல்ல வேண்டிய பசை குறைந்து விடுவதாலும், உடல் குண்டாகி விடுவதாலும் மயக்கம் ஏற்படுகிறது. அது நீடித்த மயக்கமாகி கோமா நிலை ஏற்பட்டு பிறகு மரணம் ஏற்பட்டு விடும்.

இப்போது புரதத்தை பற்றி பார்ப்போம்:-

இப்போது உடல் வளர்ச்சிக்கு புரதம் முக்கியமானது ஆகும். இதை உணவில் இருந்து தான் பெறப்படுகிறது. இதற்கும் சர்க்கரை சக்தி அவசியமாகிறது. புரதசக்தி உடலுக்குள் சென்றவுடன் கூழ் போல் கிரகிக்கின்றது. இதை தான் புரோட்டா பிளாசம், பசை சக்தி என்று கூறுவார்கள். இதற்கு அமினோகாரம் என்ற திரவம் தேவைப்படுகிறது. அமினோ காரகத்தை வைத்து தான் கூழ் பொருளை புரதமாக மாற்றுகிறது. அதன் பிறகு உடல் வளர்ச்சிதை மாற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அல்லவா? காரம் உற்பத்தி ஆவதற்கு சர்க்கரை சக்தி தேவைப்படுகிறது. புரத சக்தியின் பயன் உடல் வளர்ச்சிதை மாற்றம் மட்டுமில்லாமல், உடலின் தேவையற்ற கழிவு பொருட்களையும் நீக்குவது புரத சக்தியாகும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை சக்தியை எhpக்க செயற்கையாக இன்சுலினை தர வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. நாம் பெரும்பாலான சர்க்கரை நோயாளியை பார்த்தோமேயானால் அமினோ அமிலம் குறைபாடு ஏற்பட்டுள்ளதை நாம் பார்க்கலாம். புரத சக்தியை இன்சுலின் எhpப்பதற்கு முன்னதாக அமினோஅமிலம் தேவைப்படுகிறது. அவ்வாறு எhpக்கப்படாத காரணத்தினால் புரதத்தின் சக்தியான கோழி முட்டையின் வெள்ளை கரு (அ) ஆல்புமின் போல் உள்ளது. இச் சக்தி தான் சிறுநீரில் வந்து விடுகிறது. புரதச் சத்து உடல் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய அங்கம் வகிக்கின்றது.

சிறுநீரில் இவ்வாறு வந்து விட்டால் ஆபத்து ஏற்படும். அல்லவா? ஆகவே புரத சக்தியை எரிக்க வல்ல அமினோ அமிலம் உற்பத்தி செய்வதற்கே இன்சுலின் கலந்து சக்தியை எரிக்கப்பட்ட நல்ல இரத்தம் தேவை, இவ்வாறு செய்யாத காரணத்தினால் தான் சிறுநீரில் வந்து விடுகிறது. பிறகு உடல் வளர்ச்சியின்றி தேய்ந்து விடுகிறது. மூளையும் தேய்ந்து சக்தியை இழந்து மரணத்தை எற்படுத்துகிறது. சிலருக்கு படிப்படியாக உடலின் உள் மாற்றமும், வெளி பகுதிகள் இளைத்து பலமிழந்து போய் விடுவார்கள். ஆகவே தான் கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட் போன்ற சக்தி பொருள்கள் எரிக்கபடாமல் எரிப்பதற்கு தேவையான இன்சுலின் பற்றாக்குறையினால் கல்லீரல் தனது வேலையான அமினோ அமிலத்தை உற்பத்தி செய்ய முடியவில்லை. எரிக்கப்படாத சர்க்கரை சக்தி சிறுநீரில் போவதும் சிறுநீர் அதிகம் போவதும், இரத்தத்தில் சர்க்கரை சேர்வதும், இன்சுலின் பற்றாக்குறையே காரணமாகிறது. சர்க்கரை வியாதி என்பது இது தான்.

7. HISTO - PATHOLOGY -- உடலுறுப்பு மாறியதை பற்றிய வரலாறு.

HISTO PATHOLOGY என்றால் உடல் வியாதியினால் மாற்றப்பட்டு விட்டது என்பது பொருள். உறுப்புகள் மாறி விட்டது என்பதை பற்றி கூறும் வரலாறு ஆகும். சர்க்கரை வியாதிகாரர்களுக்கு என்ன நடக்கும் என்றால் திசு மாற்றம் ஏற்பட்டு உடல் சிதைந்து உருமாறி போய் விடுகிறது. இதே போல் இன்சுலினை உற்பத்தி செய்ய கூடிய கணையமும் உருமாறி போய்விடுகிறது. அது அடிப்பட்டு காயம் ஏற்பட்டு புண்ணாகி சீழ்பிடித்து வுpடுகிறது. இப்பொழுது எப்படி இன்சுலினை உற்பத்தி செய்யும்? எப்படி உறுப்புகளுக்கு கொடுக்க முடியும்? இது நாளமில்லா சுரப்பி அல்லவா? ஆகவே மற்ற நாளமில்லா சுரப்பியும் பாதிக்கப்பட்டு இதுவும் பாதிக்கப்பட்டு அதன் செயலில் இடையூறு ஏற்படுவதால் உடலுக்க இன்சுலினை உற்பத்தி செய்து தர முடியவில்லை. கணையத்தைப் பார்த்தால் பொட்டு கடலை போல் மொட்டுகளாக திட்டுகள் காணப்படும். அந்த திட்டுகளில் தான் இன்சுலின் சுரக்கம். இதனை லாங்கர் ஹர்ன்ஸ் திட்டுகள் என்று கூறுவார்கள். தமிழில் திட்டு சுரப்பி என்ற பொருள்படும். சுரப்பியின் அளவுகள் கறைந்த விடுவதால் திட்டு சுரப்பியின் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்பட்டு இன்சுலின் உற்பத்தி ஆகாது அல்லவா? அதனால் இரத்தத்தில் தேவையான அளவு இன்சுலின் சேராது. இதனால் இவர்களின் சிறுநீரை எடுத்து பார்த்தால் சாக்கரை இருப்பதும் தெரியும்.

இதனுள் உள்ள திட்டு சுரப்பியின் மொத்த எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கு வேலை செய்யவில்லை என்றால் ஒரு ரூ என்றும், பாதி வேலை செய்யவில்லை என்றால் இரண்டு ரூ ரூ என்றும், மூன்று பாகம் வேலை செய்யவில்லை என்றால் மூன்று ரூ ரூ ரூ என்றும், நான்காவது பாகம் வேலை செய்யவில்லை என்றால் நான்கு ரூ ரூ ரூ ரூ என்றும், அதற்கு மேலும் நிறமாற்றம் ஏற்பட்டால் ஆபத்து கட்டத்திற்கு வந்து விட்டார்கள் என்று பொருள்படும். உண்ணும் உணவு கடைசியாக குளுக்கோஸாக மாற்றி விடுகிறது. அதை எரித்து சக்தியாக மாற்றுவது இன்சுலின் தான். எரிக்கப்படாத குளுக்கோஸ் என்ன ஆகும் என்றால் சிறுநீரகத்தில் உள்ள சல்லடைகளின் மூலம் வெளியேற்றப்படுகிறது. இன்சுலின் பட்டு குளுக்கோஸ் எரிக்கப்பட்டால் குழம்பான திரவமாகி, சல்லடையில் இறங்காமல் பசை இரத்ததில் போய்விடுகிறது. உதாரணம் அரிசி கலந்த தண்ணீர் கழிவுநீராகவும், அதே நீர் வெந்த பிறகு கஞ்சியாகவும் மாறுவது போல் இன்சுலின் பட்ட குளுக்கோஸ் வெந்து கஞ்சு போல் ஆகிவிடுகிறது. (அ) கழிவுநீர் போல் சல்லடையில் வெளியேறி சிறுநீரில் வந்து விடுகிறது. அதனால் இதுவரை சாப்பிட்ட உணவு வளர்ச்சிதை மாற்றத்திற்கு பிறகு குளுக்கோஸாக மாறி கணையத்தில் சுரக்கும் இன்சுலினும் குளுக்கோசும் சேராததால் அப்படியே வெளியே வந்து விடுகிறது. அவ்வாறு வந்து விட்டால் ஆபத்து தானே. குளுக்கோஸை, உற்பத்தி செய்வதற்கும், உற்பத்தி செய்த குளுக்கோஸை எரிப்பதற்கும், நாளமில்லா சுரப்பி தான் காரணமாக உள்ளது. ஆகவே அவைகள் பழுதுபட்ட பிறகு ஆபத்து தானே ஏற்படும். நாளமில்லா சுரப்பிகள் தான் இந்த சீரழிவுக்கு காரணமாகிறது என்பது தெரிகிறது. பொதுவாக நாம் சர்க்கரை வியாதியை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும், என்றால் நாளமில்லா சுரப்பிகளின், சக்திக்கு முன் உடலை பாதுகாக்கும் சக்தி உள்ளது.

அது பாதிக்கப்பட்டு, ஆல்பா அலை என்ற சுத்தவெளி அலையானது பலஹீனப்படுத்தப்படுகிறது. அதை பலஹீனப்படுத்துவது எது என்றால் மியாசம் என்ற பாவ பதிவுகள் தான் மற்றும் ஆல்பா சக்தி நம் உடல் மீது பாய தடுப்பது மியாசம் தான். அதன் பிறகு உடலை வீங்க வைத்து கெடுத்து விடுகிறது. இவ்வாறு சுருங்கும் தன்மையை உறுப்புகள் இழப்பதால் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. கணையம் உடைந்து போவதும் அது புண்ணாகி விடுவதும், இவ்வாறு நிகழ்வதால் தான். இதயத்தின் மென்மையான இரத்த குழாயை தாக்கி, இதய பகுதிகளையும் தாக்கி சர்க்கரை வியாதிiயும் ஏற்படுத்தி விடுகிறது. இதயம் அடிப்பட்டு புண்ணாகி அசுத்த இரத்த குழாயும், சுத்த இரத்த குழாயும் சீரழிவு ஏற்பட்டு விடுகிறது. சர்க்கரை இதயத்தின் உள் பகுதியில் படிந்து மென்மையான உறுப்புகளை முருடு தட்டிவிடுவதாக மாற்றி விடும். இதயம் பெருத்து அதனை பாதுகாக்கும் சக்தியும் கெட்டுவிடுகிறது. இவ்வாறு இதயம் கெடுவதற்கு சர்க்கரை படிவே காரணமாகிறது. அடுத்து காதுக்குள் இருக்கும், ஒலி நரம்பில் சர்க்கரை படிந்து காது கேட்க முடியாத நிலை ஏற்படுகிறது. சிறுநீரகத்திலும், சர்க்கரை படிந்து அந்த படிவங்களை பதிந்து கொள்வதால் அதன் வேலையிலும் தடைபாடு ஏற்படுகிறது. இப்போது என்ன செய்யும் என்றால், மூட்டுகளிலும் சர்க்கரையை கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. இதனால் மூட்டுகளில் வலியும், வீக்கமும் ஏற்படுகிறது. மூட்டில் கடுமையான அhpப்பு ஏற்படுகிறது. இதயத்தில் உள்ள பாதிப்புகளும் மூட்டில் சேர்வதால் மனத் தவிப்பு ஏற்படுகிறது. மனபாதிப்பு ஏற்பட்டு இதய படபடப்பு ஏற்பட்டும், சக்தி மூட்டில் சேர்வதால் மூட்டு வீங்க ஆரம்பித்து விடுகிறது. பின்பு அங்கு பசை தேய்ந்து சீழ்பிடித்து இரணமாகி விடுகிறது. முடக்குவாதமும் ஏற்படலாம். அங்குள்ள உப்பு அதிகமாகி சர்க்கரையாக மாற்றப்பட்டு விடும்.

பிறகு உப்பும் அதிகமாகி விடுகிறது. இப்போது சிறுநீரில் உப்பு சத்து அதிகமாக காணப்படும். அங்கு சர்க்கரை மிருது தன்மை நிலையை மாற்றி, அதனை இயல்பாக இயங்கவிடாமல் செய்வதும், இந்த சர்க்கரையே இடுப்பில் உள்ள பந்து கிண்ண மூட்டில் சர்க்கரை படிவங்கள் ஏற்பட்டு பசை தன்மையை கால்சியமாக மாற்றி விடும். இதனால் சர்க்கரை வியாதிகாரர்களின் இடுப்பு செயல் புரியாமல் போகும். நடக்க கஷ்டபடுவதும் ஏற்படுகிறது. சர்க்கரை வியாதி தோன்றி ஒரு வருடத்தில் கூட இது போன்ற நிலை ஏற்பட்டு விடலாம். கணைத்தில் ஏற்படும் பாதிப்பால், அனைத்து பாகங்களுக்கும், பாதிப்பு ஏற்படும். இவ்வாறு இளைஞர்களை கூட இந்த பாதிப்புகள் எல்லாம் பாதிக்கும். மூட்டு பகுதிகளும், இரத்த குழாயின் உள் பகுதிகளும், பாதிக்கபட்டு, இதயத்தின் மென்மையான பகுதிகளை தாக்கி அங்கு பதிவுகள் ஏற்பட்டு வீக்கமாக மாறி விடுகிறது. இதனால் இதயம் செய்யும் வேலையும் பாதிக்கப்படுகிறது. அதன் பிறகு மேலும், சர்க்கரை படிவுகள் அதிகமாகி இதயம் அதிகமாக பாதிக்கப்பட்டு மரணத்தை தந்து விடும். அதே போல் முகுளத்தின் உள்ள முக்கியமான பகுதிகளின் நரம்புகளும் பாதிக்கப்பட்டு அங்குள்ள நரம்புகளிலும் படிவுகள் அதிகமாக ஏற்பட்டு, அதன் வேலையும், பாதிக்கப்படுவதால், ஜீல்லிப்பு தன்மை ஏற்படுகிறது. அதுவும், அடிப்பட்டு காயம் ஏற்படுவதால் இது போல் மாறி விடுகிறது. கீழ் மூட்டுகளில் உள்ள மென்மையான பசைகள், மூட்டுகளை இயங்க வைக்கின்றது. அங்குள்ள பசைகளை எதிர்த்து அங்கும், இந்த சர்க்கரை படிவுகள் ஏற்பட்டு மூட்டுகளை இயங்கவிடாமல் செய்கிறது. இதனால் இரத்தம் தன் கட்டுபாட்டை இழந்து பல இடங்களுக்கு பரவ முடியாமல் எல்லா இடங்களின் வேலை செய்யாமல் அதன் தன்மையும் கெட்டு போய் விடுகிறது.

இது போலவும் சர்க்கரை தோன்றுகிறது. இது போலவே கண்களை தாக்கும் அளவுக்கும் சர்க்கரை வியாதி உள்ளது. கண்களில் உள்ள மென்மையான நரம்புகளை தாக்கி காயம் ஏற்பட்டு, புண்ணாக செய்து விடும். இவ்வாறு ஏற்பட்டு விழியின் மென்மையான இரத்த குழாய்களிலும், பாதிப்பு ஏற்பட்டு புண் செய்வதால் பார்வை நரம்புகள் வேலை செய்ய முடியாமல் போவதால் கண்ணின் மேல் உள்ள திரை வளராமலேயே கண் பார்வை மங்கி போய் விடும். ஏன் என்றால் கண்ணுக்கு தேவையான சக்திகள் வந்து சேர்;வதற்கு பதிலாக சர்க்கரை படிவுகள் வந்து சேர்வதால் இம் மாதிரி ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படுவதால் மிக விரைவில் கண் பார்வை மங்கும் வாய்ப்புகள் அதிகமாக ஏற்படுகிறது. இவ்வாறு மங்குவதற்கு மேல் உள்ள திரை வளர்ந்து தான் மங்க வேண்டும் என்பது இல்லை. திரை வளராமலேயே பார்வை மங்கி போய்விடும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. சிலருக்கு இவ்வியாதியினால் பாதிக்கபட்டு இரு கண்களுமே தெரியாமல் போய்விடும் வாய்ப்புகள் உண்டு. அடுத்ததாக சிறுநீரகம் தாக்கப்பட்டு அதில் உள்ள சல்லடைகள், தேவையற்ற கழிவு பொருட்களை அரித்து எடுக்க முடியாமல் போய்விடும். இங்கும் சர்க்கரை படிவுகள், சிறுநீரகத்தின் மெல்லிய குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால் பாதிப்பு ஏற்பட்டு உடல் வீங்க ஆரம்பித்து விடுகிறது. சர்க்கரை படிவங்கள் இது போல் படிந்து, உடல் வீங்க ஆரம்பித்து விட்டால் சிறுநீரகம் தனது பணியினை செய்ய முடியாமல், அதன் வேலையும் தடைபட்டு சிறுநீரகம் கெட்டு போய்விடும். பெரும்பாலும் இங்கு சர்க்கரை தான் இருக்கும். இதனால் மயக்கம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுவதால் மரணமே ஏற்பட்டு விடும்.

நரம்புகளை தாக்கக்கூடிய சர்க்கரை வியாதியும் உண்டு. அது நரம்புகளில் உள்ள மென் தசைகளில் சர்க்கரை படிவங்கள், ஏற்பட்டு அதன் பசை தன்மையையும் நீக்கி நரம்புகளை கெடுத்து விடுகிறது. அதனால் நரம்புகள் கடினமாகி, நரம்புகள் சுருங்கி விhpயும் தன்மை குறைந்து விடுகிறது. அப்போது தோன்றும் அடையாளங்கள், உணர்ச்சி வயப்படுதல் அதிகமாகி கீழ் மூட்டுகளில் எல்லாம் எhpச்சல் ஏற்பட்டு விடும். இதனால் கால்பாகம், உள்ளங்கை எல்லாம் எரிச்சல், அதிகமாக ஏற்படுவதால் காலின் பாதம் மற்றும் உள்ளங்கைகளில் மருத்து போய்விட்டது என்று இந்த நிலை ஏற்படுவதால் தான் கூறுகின்றனர். பாதத்தில் லேசாக உரசல் ஏற்பட்டால் கூட மோத முடியவில்லை, எரிச்சல் அதிகமாக உள்ளது என்பதெல்லாம் இந்த காரணத்தினால் தான். இது போல் ஏற்படுவதால் அவர்களால் நடக்க முடியாது. அப்படியே மீறி நடந்தாலும் ஏதோ தலை முடியின் மேல் நடப்பது போன்ற உணர்வு இருக்கும். அல்லது சாணியின் மேல் நடப்பது போல் இருக்கும். நரம்பின் சுருங்கி விரியும் தன்மை மாறி போவதால் எரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்பட்டு நடுக்கம் ஏற்பட்டு விடும். தானாகவே கை, கால்கள் நடுக்கம் ஏற்பட்டு விடும். தொடையில் உள்ள நரம்புகள் எல்லாம் பிடித்து கொள்ளும்.

இது போல் ஏற்படுவதால் சுத்தமாகவே நோயாளி நடக்க முடியாமல் போய் விடுவார். இந்நிலையில் சயாடிக்கா நரம்பு பாதிக்கப்பட்டு விட்டது என்றும், இதனால் அவ்விடங்கள் மர்க், மர்க் என்ற சப்தம் கேட்கிறது என்று கூறுவார்கள். அடுத்ததாக தோலில் உள்ள பசையும், பாதிக்கப்ட்டு இரத்தத்தில் சர்க்கரை படிவுகள் ஏற்படுவதால் சருமம் திட்டு, திட்டாக மாறி மஞ்சள் நிறமான படிவுகளுடன் தோன்றும். உதடுகள் தாக்கப்பட்டால் அதன் மினு, மினுப்பு தன்மை மாறி சுர சுரப்பாகவே மாறி விடும். இது போல் தாக்குவதால் பல வித வடிவங்களாக மாறி உதடுகளையே தாக்கி சீர்கேடு ஏற்பட்டு விடும். அங்கும், இரத்த ஓட்டம் தடைபட்டு பிறகு கொழுப்பு சத்தை அதிகமாக சேர்த்துவடுகிறது. அதனால் உதடு வெளுத்த தோற்றத்தில் காணப்படும்.