முன்னுரை:-


Dr. S. மாதவன் தமிழ்நாடு அரசு ஹோமியோபதி மெடிக்கல் கவுன்சில் பதிவு. D.M. - இண்டர்நேஷனல் ஹோமியோபதி மெடிக்கல் காங்கிரஸ். தலைமையகம் - ஜெனிவா, கிளை - கல்கத்தா. கருத்தரங்கம் 1989-90. சிறப்பாளர் - ஜோதிபாசு, கல்கத்தா - முதலமைச்சர்.

Dr. S. மாதவன் கூறுவதாவது,

முன்னுரை:-


அன்னைக்கு வணக்கம், தந்தைக்கு வணக்கம். ஹோமியோபதி தந்தை Dr.. சாமுவெல் ஹானிமேன் முதல் அத்தனை அறிஞர்கள், அத்துனை பேர்களுக்கும், ஆன்மீக ஞானிகளுக்கு இன்று உலகில் வாழ்வாங்கு, வாழ்ந்து வந்த, தெளிவான ஆன்மீக தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கும் வணக்கம். சர்க்கரை வியாதிக்கு சிகிச்சை என்று அற்புதமான நூலை, எழுதி தந்த Dr. கைலாஷ் நாராயணன் மத்தூர் அவர்கள் இதை ஆன்மீகம் கலந்த மருத்துவ தொண்டாகவே இதை அவரது இறுதி நாட்களில் எழுதினார். அதற்கு முன்னதாக மிகவும் பயனள்ள நூல்கள் சிலவை 1. SYSTEMATIC MATERIA MEDICA, 2. PRINCIPLE OF PRESCRIBING, போன்ற சில நூல்கள் எழுதியுள்ளார், அவர் பெற்ற பட்டம் M.B.B.S.,லக்னோ M.F. ஹோமியோபதி லண்டன் Ex, CAPT, I.M.S, I.A.M.C, Ex., R.M.O. ராயல் ஹோமியோபதி ஆஸ்பிடல் லண்டன் Ex. கோட்டம், டெல்லி போர்ட்டு தலைவர், பிரின்ஸ்பல், இப்படி பல உயர் பட்டம் வகித்தவர்.

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்து வழங்கியது H.K.S.V. கல்வி குழு, Dr.S. மாதவன் Reg. தமிழ்நாடு அரசு, மெம்பர் OF உலக ஹோமியோபதி காங்கிரஸ், கல்கத்தா. தமிழில் மொழிபெயர்த்து கூறியது Dr.S.M.அதை எழுதி தந்தது P. தேன்மொழி, மறுபடி திருத்தம் செய்து எழுதி தந்தது D.M. அருணா, உதவியவர்கள் H.K.S.V. கல்விக்குழு உறுப்பினர்கள், 31, கோவிந்தராஜீ செட்டி தெரு, அம்மாப்பேட்டை POST. சேலம் - 3. தமிழ்நாடு, இந்தியா. மருத்துவம், ஆன்மீகம் உண்மை தத்துவங்கள் ஞானத்தின் முடிவு போன்ற முழுமையான செய்திகளை, உலக மக்கள் அனைவருக்கும் வழங்கி கொண்டும், வாழ்ந்து வந்த அன்பு மற்றும் அறிவு, தொண்டு உள்ளம் படைத்த, வேதாத்திரி மகரிஷி போன்ற உயர்மட்ட ஞானிகளுக்கும், யோகிகளுக்கும், தொண்டர்களுக்கும், அவர்களது தொண்டு என்ற கடலிலே இதை காணிக்கையாக்கி கரைத்து, உலக மக்களுக்கு இது சொந்தமாக்கி விடுகிறேன்.

By. அன்புடன்
Dr. S.M. - H.K.S.V கல்விக்குழு.

CONTENTS.

SUBJECT ::- பொருள்.

PREFACE - முகவுரை (அ) முன்னுரை.

1. INTRODUCTION - புகுத்தல் (அ) கூறுதல்.
2. DEFINITIONS - - வரையறை செய்யப்பட்ட.
3. HISTORICAL SURVEY - வரலாற்றை அளத்தல்.
4. PHENOMENA OF DIABETES MELLITUS - மறைந்து சொல்லும் சர்க்கரை வியாதி.
5. AETIOLOGY - காரணத்துடன் விவரிக்கும் சாஸ்திரம்.
6. PHYSIO - PATHOLOGY - உடற்கூறு மாறி விட்ட நிலை (அ) சிக்கலாகி விட்ட நிலை,
7. HISTO - PATHOLOGY -- உடலுறுப்பு மாறியதை பற்றிய வரலாறு.
8. SYMPTOMS - குறிகள் (அ) அடையாளங்கள்.
9. DIAGNOSIS AND DIAGNOSTIC TEST - வியாதியை நிர்ணயம் செய்ய சோதித்துப் பார்த்தல்.
10. DIFFERENTIAL DIAGNOSIS - வித்தியாசமான (மற்ற) வியாதியையும் கண்டு நிர்ணயம் செய்தல்.
11. COMPLICATIONS OF DIABETES - சிக்கலாகி விட்ட சரிபடுத்த முடியாத சர்க்கரை வியாதிகள்.
12. CLINICAL VERIETIES OF DIABETIC - சிகிச்சை செய்யும் நிலையத்தில் பல வகை சர்க்கரை வியாதிகள்.
13. MANAGEMENT OF DIABETIC - சர்க்கரை வியாதிஸ்தரை நிர்வகித்தல்.
14. DIET FOR THE DIABETES - சர்க்கரை வியாதியஸ்தரின் கட்டுப்பாடான உணவுகள்.
15. TREATMENT OF DIABETES MELLITUS - சர்க்கரை வியாதியஸ்தருக்கு சிகிச்சைகள்.
16. HOMOEOPATHIC TREATMENT - ஹோமியோபதி முறைபடி சிகிச்சை செய்தல்.
17. APPENDIX - பின்குறிப்புகள்.
மே, 1980. டெல்லி, இந்தியா. (இது ஆங்கில நூல்).
17. APPENDIX - முகவுரை.

அவர் கூறுவதாவது :-

இந்த ஹோமியோபதி மருத்துவ உலகிற்கு ஒரு சரியான நல்ல சர்க்கரை வியாதிக்கென்று ஒரு நூல் இது வரை இல்லை. நான் இதை எப்படியாவது எழுத வேண்டும். என்று எண்ணி, இந்த சர்க்கரை வியாதிக்கும், சர்க்கரை வியாதிகாரர்களுக்கும் எழுதியுள்ளேன். இது மாணவர்களுக்கும், ஆர்வம் உள்ளவர்களுக்கும் பயனள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். சர்க்கரை வியாதிக்கு என்று சொல்லி மருந்துகளை கொடுக்கும் போது அதற்கான காரணங்கள், எல்லாம் நாம் பார்க்க வேண்டும். சர்க்கரை வியாதியை முழுமையாக குணப்படுத்த முடியும் என்று ஆங்கில மருத்துவத்தில் சொல்ல முடியவில்லை. ஆனால் ஹோமியோபதி மருத்துவத்தில் அதன் அடிப்படை காரணங்களை பார்க்கலாம். மற்றும் இந்த வியாதியை சோதிக்க கூடிய மாணவர்களாகிய நீங்கள் இந்த சர்க்கரை வியாதியின் தன்மையையும், சோதனைகள் எல்லாம் செய்து கொள்ள வேண்டும். இது உடல் குறி ரீதியானது தான். ஆனால் மனக்குறி ரீதியாக அடிப்படையாக நீங்களே தான் கண்டுபிடிக்க வேண்டும். இந்த சர்க்கரை வியாதியை வைத்து கொண்டு அடிப்படை காரணத்தை கண்டு பிடிக்க வேண்டும். இந்த ஹோமியோபதி மருத்துவத்தை (PRACTICE) அதாவது தொழில் செய்து கொண்டு இருக்கின்ற மருத்துவர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால்:- இந்த சர்க்கரை வியாதி என்று மட்டும் நீங்கள் பார்த்து அலோபதி மருத்துவர்களை போன்று நின்று விடாதீர்கள்.

அப்படி நின்றால் நீங்களும் ஏமாந்து தான் போவீர்கள். சர்க்கரை வியாதி என்பது கடைசியாக ஒரு கெட்டு விட்ட நிலை, சுட்டி காட்டுவது ஆகும். ஆகவே நீங்கள் ஏமாந்து, விட கூடாது. உடலில் உள்ள எல்லா பகுதிகளையும், நீங்கள் கணக்கு எடுத்து ஆராய்ந்து அனுசரித்து அதன் பிறகு அலசி பார்க்க வேண்டும். சர்க்கரை வியாதியை மட்டும் பார்த்தால் உங்களுக்கு கிடைப்பது தோல்வி தான். இப்பொழுது பார்த்தோம் என்றால், இந்தியாவில் ஆயிரக்கணக்கான பேர்க்கு சர்க்கரை வியாதி வந்து விட்டது. இந்த சர்க்கரை வியாதி வந்ததற்கு பல காரணங்கள் இருக்கின்றது. அதை பின்னாடி நாம் பார்ப்போம். ஆகவே நாம் முதலில் சர்க்கரை வியாதி அதன் அளவு, நோயாளியின் தன்மையை தெரிந்து கொள்வோம். சர்க்கரை வியாதி என்று முதலில் தீர்மானிக்கபட்டு விட்டாலே அது அவர்களுக்கு ஒரு பாவமான நிலைமை தான். அதற்கு மேல் அவர்களுக்கு வாழ்க்கை பெரும் பகுதி போய் விட்டது. ஆகவே சர்க்கரை வியாதி என்பது ஒரு தனிப்பட்ட ஒரு உறுப்பின் பாதிப்பு அல்ல. மனம் மற்றும் உடல் முழுவதும் கெட்டு விடுவது தான். ஆகவே வீட்டில் இருப்பவர்கள் அவர்களின் மீது அனுதாபம் காட்டி, குறிப்பாக கணவன் என்றால் மனைவி, மனைவி என்றால் கணவன் அவர்களிடத்தில் அன்பு காட்டி, அவர்களுக்கு ஏற்ற உணவு வகைகளை சமைத்து கொடுக்க வேண்டும். எந்த வித மருத்துவ முறை என்றாலும் சரி, இந்த சர்க்கரை வியாதிகாரர்களுக்கு உணவு கட்டுபாடு மிக, மிக முக்கியம். ஆகவே உணவு கட்டுபாடும், உணவு தயாரீப்பதையும் , முதலில் அனுசரிக்க பட வேண்டும். இதற்கு மனைவியின் அன்பும், கருணையும் தேவை இல்லை என்றால், சித்ரவதை தான். மற்றும் நோயாளி பத்தியமாகவும், பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.

அப்போது தான் சர்க்கரை வியாதியை குறைக்க முடியும். இல்லை என்றால் பாதிப்புக்கு ஆளாகி விடுவார்கள். அதே போல் சர்க்கரை வியாதி நோயாளி பொறுப்புடன் நடந்து கொள்வது மட்டுமின்றி அவர்கள் உண்மையும், கற்றாரீந்த உண்மையான பொறுப்புள்ள மருத்துவர்களை நாடிச் செல்ல வேண்டும். அந்த மருத்துவர் சொல்லக்கூடிய கட்டுபாடு, அதாவது பத்தியம் உணவுக் கட்டுபாட்டையும், அசட்டை செய்யாமல் எடுத்து கொள்ள வேண்டும். அவர்களிடத்தில் அன்பும், கருணையுமாக குடும்பத்தில் உள்ளவர்களும், நடந்து கொள்ள வேண்டும். இவர்களும், இது வரை கையாண்டு வந்த மனம், உடல் ரீதியான பழக்க வழக்கங்களை அப்படியே விட்டு, விட்டு புதிய தனது நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் சர்க்கரை வியாதி என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி கெட்டு விட்டது என்பது அல்ல. உடல் முழுவதும், கெட்டு, மனமும் கெட்டு கடைசியில் காட்டுகின்ற அடையாளம். அப்பொழுது, அலோபதி மருத்துவத்தில் அதன் நிலைக்கு தக்கவாறு நிறுத்தி வைக்கலாம். ஆனால் ஹோமியோபதி மருத்துவர்களாகிய நீங்கள் உடல் முழுக்க உள்ள 21 டிவிஸனில் உள்ள எல்லா நோயைiயும், நீக்க வேண்டும். நீக்க தெரிய வேண்டும். மனதில் உள்ளதையும் நீக்க வேண்டும். நீக்க தெரிய வேண்டும்.

s மற்றும் நோயாளியும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். அப்போது தான் இந்த, நோயாளியின் நோயை போக்க முடியும். இல்லை என்றால் முடியாது. ஆகவே இந்த அடிப்படை விசயத்தில் நான் உலகத்தில் உள்ள பல நாடுகளை சுற்றி பார்த்ததில், இங்கிலாந்திலும் , இந்தியாவிலும் அந்த மக்களில் அதிகமானோர் சர்க்கரை வியாதிக்காரர்களாக உள்ளனர் என்று கண்டறிந்து உள்ளேன். இப்போதே ஆயிரக்கணக்கில் உள்ளனர். ஆகவே அவர்களை சரிபடுத்த வேண்டும், என்ற நோக்கத்தோடு இந்த நூல்களை அலோபதி மருத்துவ முறைப்படியும், ஹோமியோபதி மருத்துவ முறைப்படியும், இணைந்து ஒரு நூல் எழுத வேண்டும், என்று ஒரு நீண்ட நாள் ஆசை எனக்கு இருந்தது. எனது கடுமையான பணியின் காரணமாக எழுத முடியவில்லை. இப்பொழுது எனது ஆசை ஜெயின் பதிப்பகத்தார், டெல்லி, அவர்கள் அச்சிட்டு எனக்கு உதவி செய்தனர். அவர்கள் பயன்படுத்திய வார்த்தை எல்லாம் ஹோமியோபதி இலக்கியத்தோடு அதை அப்படியே புரிந்து கொண்டு, நான் சொல்கின்ற கருத்தை அப்படியே, ஏற்று இந்த ஹோமியோபதி தத்துவத்திற்கும், மனித நேயத்திற்கும் ஏற்றபடி இந்த நூலை தயாரித்து கொடுத்து உள்ளனர். மற்றும் இவர்கள் இரண்டு மொழிகளில் எழுதி கொடுத்துள்ளனர். ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழியிலும் கொடுத்து உள்ளனர். அவர்களின் சிறப்பான சேவை வரலாற்று சிறப்பானது ஆகும். இந்த நூலில் உள்ள கருத்துகளை மனம் குளிர்ந்து கூறுகிறேன். மேலும் இதில் மாணவர்களுக்கு நல்ல ஒரு அனுபவத்திற்கும், தொழிலுக்கும் மக்கள் அவர்களிடம் நம்பி வருவதற்கும், சிறப்பாக இருக்கும் என்பதே என்னுடைய நம்பிக்கையும் மகிழ்ச்சியாகும். இந்த நூலை படிப்பவர்கள் பொறுமையாகவும் படித்து புரிந்து கொண்டு சேவை செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு Dr.கைலாஷ் நாராயணன் மத்தூர் அவர்கள் தன் முகவுரை தெளிவுரையில் குறிப்பிட்டு உள்ளார்.

1. INTRODUCTION - புகுத்தல் (அ) கூறுதல்.

அடுத்து அவர் கூறுவதாவது :-


துவக்கம் என்பதை பற்றி பார்போம். அதாவது இந்த மனித உடல் பல கோடிக்கணக்கான செல்களால் ஆனது. இந்த செல்கள் எல்லாம் சேர்ந்து ஒவ்வொரு செல்லும் வியக்கத்தக்க முறையில் இயக்கங்களை உருவாக்குகின்றது. இயக்கங்களை தெரியாத இயக்கமாக உருவாக்குகின்றது. இதை கண்டறிய முடியாமல் மர்மமாக உள்ளது. இந்த செல்கள் எப்படி வியாதியை தோற்றுவிக்கிறது என்றால் செல்களே, திடீர் என்று ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உடலை படைக்கிறது. இந்த மாற்றங்களை எப்படி ஏற்படுத்துகிறது என்றால் பிரபஞ்சத்தில் இருந்து அதற்கு ஆற்றல் கிடைக்கிறது. கிரகங்கள் இயற்கையாக சுற்றுவது போலவே இந்த உடலும் தன்னை தானே சரிபடுத்தி கொள்கின்றது. நோய்களும், உறுப்புகளும், மறைபொருளாகவே இருக்கின்றது. இதை மறைந்த சட்டம் என்று தான் நாம் சொல்ல வேண்டும். அந்த மாறுதலை ஏற்படுத்தி கொடுப்பதும் இது தான். இந்த பிரபஞ்சத்தில் இருக்கின்ற ஆற்றலை வைத்து தான் தனித்தன்மையாகவும், விசேஷத்தன்மையாகவும் இந்த சக்தி தான் செயல்படுகிறது என்று தெரிகிறது. மற்றும் கலவையாகவும், கலப்பாகவும், கலந்து கொண்டு தான் இந்த உடலை உறுப்பாகவும், மனமாகவும் செயல்படுத்துகின்றது என்பது தெரிகிறது. ஒரு மனிதனுடைய சக்திக்கு மூலமாக இருப்பது பிரபஞ்ச சக்தி தான் என்றும் தெரிகிறது.

ஆகவே மனிதனுக்கு கிடைக்க வேண்டிய சக்தி தெளிவாக இருக்க வேண்டும், என்றால் இந்த பிரபஞ்சத்தில் அவருக்கு கிடைக்க வேண்டிய சக்தி சரியாக இருக்க வேண்டும். இல்லை என்றால் பல தொல்லைகள் ஏற்படுகிறது. பிரபஞ்ச அறிவை நுட்பமாக அறிந்த ஞானிகள,; குருமார்கள் கூறுவதாவது ஒரு மனிதனை வழி நடத்தி செல்வது அந்த மனிதனுடைய திசு. அந்த திசு பின்பு உடல் உறுப்பையும் எது உருவாக்குகின்றது என்று பார்த்தால், இந்த பிரபஞ்சம் என்பது முடிவான காரணமாக உள்ளது. ஒரு மனிதனை ஆரோக்கியமாக மாற்றவும், அவனை வியாதியஸ்தனாக மாற்றுவதும், அதன் பிறகு அவனுக்கு வலிமை கொடுக்கவும், தெளிவை கொடுக்கவும், இந்த இயற்கை மறைபொருளாக செய்கின்ற வேலை தான். ஆகவே எல்லாவற்றிலும் ஒரு சக்தி தான் ஆட்டிப்படைப்பதாக தெரிகிறது. மேலும் தடை செய்து விடுதலும் மற்ற செயல்களுக்கும் இதுவேதான் காரணமாக உள்ளது. அதன் அடிப்படை காரணம் தான் வியாதியை தோற்றுவிக்கிறது. ஆகவே வாழ வைப்பதும், மரணத்தை கொடுப்பதும் இந்த பிரபஞ்ச ஆற்றல் தான். அதனுடைய தேவைகளையும், விருப்பு, வெறுப்புகளையும் அதை வழி நடத்தி செல்வதும் இது தான். நமக்கு எல்லாம் இதை புரிய வைக்கும் அற்புதமான, ஆற்றல் என்ன என்றால் இந்த பிரபஞ்ச ஆற்றல் தான். இந்த அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்.

இந்த ஆற்றல்களே கதிர்களாக மாறி பிரபஞ்ச ஆற்றல் மனித தேகத்தில் மனதில் புகுந்து, செயல் படுகிறது. ஆகவே இதில் உள்ள உண்மையையும், அர்த்தத்தையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் தடையை ஏற்படுத்துவது திடீர்வகை வியாதியா? நீடிக்கும் வகை வியாதியா? அப்போதைய தடையா? என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உடல்வாக்கில் என்ன நிகழ்கிறது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதை தான் நாம் ஆய்வு செய்து பார்க்க வேண்டும் என்று கூறுகிறேன். அதன் தனித்தன்மையை நமது மருத்துவ முறைப்படி பார்க்க வேண்டும் என்று கூறுகிறேன். அதற்குள் அதாவது சர்க்கரை வியாதிக்குள் என்ன மறைபொருள் இருக்கின்றது. என்று பார்த்து அது தானே வியாதி? அதை தான் கண்டறிய வேண்டும். சர்க்கரை வியாதி என்று பார்க்கும் போது நம் உடலின் உள்ளே மறைத்து வைத்து இருக்கிறது. எதை என்றால் ஒரு பெரிய மூட்டையை தான். அந்த மூட்டை தான் சர்க்கரை வியாதி என்ற பெயரில் இருக்கின்றது. நாம் அதற்குள் எந்த வகை மூட்டையாக மறைந்து இருக்கின்றது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதை பதிவு செய்து பார்க்கும் போது நமக்கு தெரியும். மருத்துவ சட்டத்தின படி நுணுக்கமாக கண்டுபிடிக்க வேண்டும். மற்றும் அவர் வாழ்க்கையில் எப்படி பழகுகின்றனர்? அவர்கள் திருமணம் செய்தவர? அதன் மையத்தில் கடந்த நிகழ்ச்சிகள் என்ன? எப்படி வியாதி திடீர் என்று தோன்றியது? காரணம் என்ன? அவர்கள் அளவில் எதை அதிகமாக சுமந்து இருக்கின்றார்கள். அதிக சுமை எப்படி வந்தது? அவரது மனித ஆற்றலை எப்படி கெடுத்து கொண்டார்கள் ? என்று பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால் அவர்களுக்கு எப்படி சர்க்கரை வியாதி வந்தது என்றும் தெரிந்து கொள்ளலாம். அதாவது சர்க்கரை வியாதி 1 பங்கு என்றால் 99 பங்கு மனதிலும், உடலும் பாதிக்கப்பட்டு தான் சர்க்கரை வியாதியாக காட்டுகிறது.

ஆகவே நாம் இந்த சர்க்கரை வியாதியில் நிற்காமல் உள்ளுக்குள் புகுந்து பார்த்து அதற்குரிய நிலையை கண்டறிய வேண்டும். ஹெhpங்ஸ் விதி படி பார்த்தால், இன்னும் நல்ல முறையில் விரைவாக பதிந்து கொள்ள வசதியாக இரக்கம். இந்த முறைப்படி பார்த்தால் பிறகு வர போகின்ற நிலையை தடுத்து விட முடியும். இப்படி சர்க்கரை வியாதியின் பண்பை ஒட்டு மொத்தமாக தொகுத்து கொள்ள வேண்டும். இது மனிதருக்கு, மனிதர் மாறுபடும். ஆகவே ஒவ்வொருவரின் தனித்தன்மையை இவ்வாறு தொகுத்து பதிவு செய்து வைத்து கொள்ள வேண்டும். சர்க்கரை வியாதி என்பது ஒருவருக்கு போலவே மற்றொருவருக்கும் இருக்காது. ஒரு மூட்டைக்குள் இருக்கும் பொருள், மற்றொரு மூட்டைக்குள் இருக்காது அல்லவா? ஆனால் மூட்டைகள் என்பது தான் சர்க்கரை வியாதி ஆகும். ஒவ்வொருவருக்கும், ஒரு மூட்டை இருக்கும். அந்த மூட்டைக்குள் கவலை, பயம், வருத்தம், பதற்றம், ஏமாற்றம், சோர்வு, வெறுப்பு, கோபம் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு மூட்டை இருக்கும். மூட்டையை மட்டும் வைத்து மருந்து கொடுத்தால் தோல்வி தான். அது அலோபதி மருத்துவத்தில் வேண்டுமானால் அப்போதைக்கு தணித்து கொள்ள உதவலாம். ஆனால் குணப்படுத்த முடியுமா? என்றால் முடியாது தானே* உணவுக் கட்டுபாடு, மற்றவைகள் எல்லாம், இதற்கு முக்கியம்.