Dr.H.C.Allen
Dr.Boenninghausen

மதிப்புரை


இந்த உலகிற்கு அன்போடு வழங்கும் ஏழாவது நூல்.

DIABETES MELITUS.

7 வது நூல் சர்க்கரை வியாதி மதிப்புரை அ.நி. மோகன்.

மனவளக்கலை மன்ற ஆசிரியர் - ஈரோடு.

எல்லா காலத்துக்கும், எல்லா இடத்துக்கும் பொதுவான அடிப்படையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய தகவல் விழிப்புணர்வு களஞ்சியம் வளர்ந்து வரும் ஹோமியோபதி மருத்துவ முறை, உலக அளவில் இரண்டாவது பெரிய மருத்துவ முறையாகும். 5.11.2007, 7.11.2007-ல் மத்திய குடும்ப நலத்துறை அமைச்சர் மக்களவையில் பேசியதாவது, ஹோமியோபதி மருத்துவ முறையின் பங்கு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான பிரச்சார இயக்கத்தை, குடும்ப நலத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. ஹோமியோபதி மருத்துவ முறை இந்திய மருத்துவ முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. H.K.S.V. கல்விக்குழு இம்மருத்துவத்தை தமிழில் கொண்டு வந்து தெளிவு படுத்துகிறது.

இந்த நூலின் மூல ஆசிரியர் K.N. மத்தூர் அவர்கள், இந்த மருத்துவத்தில் நல்ல பணியை செய்து உள்ளார். அவர் எழுதிய சர்க்கரை வியாதிக்கு சிகிச்சை என்ற அந்த அற்புதமான ஆங்கில நூலை, தமிழில் கொண்டு வந்து, உலகெங்கும் உள்ள தமிழ் அன்பர்க்கும், உலகத்திலுள்ள தமிழ் படித்த அனைவருக்கும், எதையும் எதிர்பாராமல் அன்பளிப்பாக கொடுத்துள்ளது. மகிழ்ச்சி. பிற மொழயில் உள்ள நல்ல நூல்களை தமிழில் கொண்டு வருவோம் என்றார் தேசியகவி பாரதி. அதற்கு அணி சேர்க்கும் வகையில் இந் நூல் அமைந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நாம் முதலில் ஓர் அறிவு உயிரினமாக தோன்றி பரிணாம முறையில் மனிதனாகி, உலக மக்களாக சமுதாயத்தில் இருந்து தான் வந்துள்ளோம். அதன் கடமை தீர வேண்டும், என்றால் உடலாலோ, பொருளாலோ, அறிவாலோ உதவ வேண்டுமென்று, ஆன்மீக தந்தை வேதாத்திரி மகரிஷி கூறிய கருத்துக்கு, ஒப்ப நூலாசிரீயர் Dr. S. மாதவன் அவர்கள், அறம் போற்றும், சான்றோர் என்பதை இவர் நிருபித்து விட்டார்.

நோய் நாடி, நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்.

பொய்யாமொழி புலவர், வான் புகழ் அறிஞர் திருவள்ளுவர், ஒரு நோயாளியின் நோய்க்கு மருந்து தருவதற்கு முன்பு, அந் நோயின் மூலத்தை கண்டுபிடித்து சிகிச்சை செய்வது தான் நல்ல சிகிச்சை முறை என்கிறார். தெய்வப்புலவர், இந்த விசியத்தில் ஹோமியோபதி முறை தான் முதன்மையாகயுள்ளது.

நோயை குணப்படுத்த நினைக்காதே, நோயாளியின் மனநிலையையும், மனிதனை மீட்டு தர வேண்டும் என்கிறது ஹோமியோபதியின் தத்துவம். ஆகவே நோயை அளவிட கருவிகள் வேண்டாம். நோயாளியை பார்த்தால் போதும் என்கிறது. ஹோமியோபதி தனி மனிதனுக்கு, ஒரு இலட்சிய வாழ்க்கையின் இலக்கணங்களை சொல்லுகின்ற தகவல் களஞ்சியம், இதில் கொள்ள தக்கவை, தள்ள தக்கவை எவை என்பதையும் வரையறுத்துக் கூறுகிறது. பொதுவாக ஆலோசனைகளை யாரும் மதிப்பதில்லை. விதி விலக்கு. இதிலுள்ள தகவல் களஞ்சியத்தை அனைவரும், மதிப்பார்கள். ஏன் என்றால் மனிதன் அறிந்து கொள்கின்ற உடல் ரீதியான இரகசியங்கள் இதில் அனைத்தும் உள்ளன. சின்னஞ்சிறு பெட்டிக்குள் செதுக்கப்பட்டிருக்கும். விழிப்புணர்வு வாசகங்கள் (Small is Beautiful).. என்ற வாசகங்களுக்கு இணங்க அழகோடு ஒளி வீசி தமிழ் நெஞ்சங்களை ஈர்த்து உள்ளன. வாழ்வு என்பது உயிரீன் அனுபவம், இந்த அனுபவம் எல்லோருக்கும் இனிமையாக அமைய தமிழ் நூலாசிரியர் உதவி புரிந்துள்ளார். எப்படி என்று பார்ப்போம். நவம்பர் 14-ல் சர்க்கரை நோய் பாதுகாப்பு தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலகில் வருடத்திற்கு 70 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் வருகிறது. 10 வினாடிக்குள் 2 பேருக்கு கண்டுபிடிக்கப்படுகிறது.

இந்தியாவில் 6% பேருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. 10 வினாடிக்கு ஒருவர் இந்த நோயால் இறக்கும் நிலையுள்ளது. 60 வயது கடந்தவர்களில் 6% முதல் 12% வரை பாதிக்கப்படுகிறார்கள். உலகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 200 குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுகின்றது. ஆசிரியர் முதன்மையாக மிகவும் அழுத்தமாக கூறுவது உணவு கட்டுபாடு அவசியமென்று வலியுறுத்தி கூறுகின்றனர். சரியான உணவு சரியான நேரத்தில் உண்டால் உணவை ஜீரணிக்கும். முறையற்ற உணவு முறையில்லாத நேரத்தில், உண்டால் உடலை உணவு ஜீரணித்து விடும். ஆகவே உணவே தான் உடலாக வந்துள்ளது. சர்க்கரை வியாதி என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி கெட்டு விட்டது என்பதல்ல. உடல் முழுவதும் கெட்டு, மனமும் கெட்டு, கடைசியில் காட்டுகின்ற அடையாளம், முக்கியமாக உடல் நோயையும் நீக்க வேண்டும். முக்கியமாக உடல் முழுக்க உள்ள 21 டிவிசனிலுள்ள எல்லா நோயையும், நீக்க வேண்டும். முக்கியமாக நோயாளியும், அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

அப்பொழுது தான் இந்த சர்க்கரை நோயை முழுமையாக போக்க முடியும். சர்க்கரை நோய்க்கு என்று ஒரு டிவிஷனில் மட்டும் மருந்து கொடுத்து கட்டுபடுத்தி வைத்தாலும் கூட குறிப்பிட்ட காலக் கெடுக்கு பிறகு, இதயம், கிட்னி போன்ற மற்ற உறுப்பையும் கெடுத்து, சர்க்கரை நோயும், முன்பை விட சிக்கலாகி விபரிதத்தில் கொண்டு போய் விட்டு விடுகிறது என்று நாம் செய்திதாள்களில் பார்க்கிறோம். ஆனால் ஹோமியோபதியில் எல்லா நோயுக்கும், மொத்தமாக மருந்து தருவதால், படிப்படியாக, வரிசையாக எல்லா உறுப்பின் நோயும், தீர்ந்து விடுகிறது. பிறகு சர்க்கரையும் குணமாகி விடுகிறது. துவக்கம் முதல் செல்களால் ஆரம்பித்து வியாதி, எப்படி தோற்றுவிக்கிறது? முதலில் எப்படி சரிபடsssssுத்துவது என்பது வரை ஹோமியோபதி இலக்கியத்தோடும், தத்துவத்திற்கும், மனித நேயத்திற்கும், தகுந்த படி தமிழ் நூலாசிhpயர் (Dr. S. மாதவன்) குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக நாம் உண்ணும் உணவு கடைசியாக குளுக்கோஸாக மாற்றி விடுகிறது. அதை எரித்து சக்தியாக மாற்றுவது இன்சுலின் தான். இவையெல்லாம் நடைமுறையில் சரியாக இருந்தால் தான் உடல் நிலை சீராக இருக்கும்.

ஆனால் உடல் நிலை, மனநிலை, முரண்படும் பொழுதும், இயற்கையை மீறும் பொழுது வாழ்க்கை தடம் மாற்றி விடுகிறது. உடல் நிலையிலுள்ள அத்தனை பாகங்களை கெடுத்து விடுகின்றது. பொதுவாக பாவ பதிவுகளை நீக்கினால் நோய் நீங்குகின்றது என்று ஆன்மீக ரீதியாகவும், கூறுகின்றார். மற்ற மருத்துவத்தில் வாழ் நாள் முழுவதும் மருத்துவம் பார்க்க வேண்டி வரும். சர்க்கரை வியாதியை பற்றி, பயப்பட தேவையில்லை. இதை முறையாக அறிந்தால் கடைபிடிக்க எளிதாகவும், பாதுகாப்பாகவும், சிறப்பாக செயல்பட கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற சிகிச்சை முறைகளில் பலனில்லை என்றால் மட்டுமே ஹோமியோபதி சிகிச்சை முறைக்கு வருகின்றனர் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஹோமியோ சிகிச்சை முறை குறித்து Dr.முகேஷ் பத்ரா கூறுகையில் ஆண்டுக்கு 20% முதல் 25% வரை வளர்ச்சியடைந்து வருகிறது. 2017 ம் ஆண்டில் சர்வதேச அளவில் 52 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலும், இந்திய அளவில் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலும், வர்த்தகம் நடைபெறும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது என்று கூறுகிறார். தமிழில் மொழி பெயர்த்து வழங்கிய H.K.S.V. கல்விக்குழுவுக்கும் மனித நேயமிக்க(Dr. S. மாதவன் ஐயா அவர்களுக்கும், அவருக்கு உதவி செய்த சகோதரி P.M. தேன்மொழி, D.M. அருணா அவர்களுக்கும், அனைவருக்கும், நீண்ட ஆயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற எல்லாம் வல்ல இறையருளை மனங்குளிர வேண்டுகிறேன்.

வாழ்க வையகம்

வாழ்க வளமுடன்

இப்படிக்கு,
அன்புடன்,
M. முத்து மோகன்.
ஆசிரியர்.
மனவளக்கலை மன்றம் - ஈரோடு.
____________________________________________________