ஹோமியோபதி சிகிச்சை செய்தல்
16. HOMOEOPATHIC TREATMENT - ஹோமியோபதி சிகிச்சை செய்தல் :-

ஹோமியோபதி சிகிச்சை என்றாலே நோயை குணப்படுத்துவது இல்லை. நோயாளியை தான் குணப்படுத்துவது ஆகும். அதனால் ஜீவதார சக்தியில் உள்ள குறைபாட்டை நீக்க வேண்டும். அதாவது உடலுக்கு கிடைக்கக்கூடிய ஆற்றலை தடுக்க கூடிய மியாசம், பாவபதிவுகளை நீக்கினாலே நோய் நீங்கும் என்று, ஹோமியோபதி மருத்துவ அறிவியல் கூறுகின்றது. இதையே தான் நோய் என்று கூறுகிறது. அப்போது நோய் உடலில் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற தன்மையை பார்க்க வேண்டும். அதே நேரத்தில் நோயில் குளறுபடி ஏற்பட்டு உறுப்புகள் கெட்டுவிட்டதா? அல்லது ஆபத்து ஏற்பட்டு விட்டதா என்றும் பார்க்க வேண்டும். அவ்வாறு கெட்டு போய் இருந்தால் விஷம் அதிகமாக அந்நேரத்தில் தேங்கி இருக்கும். இப்போது குணப்படுத்த கூடிய தன்மை மாறி போய் விடும். அப்போது அந்த வியாதியை குணப்படுத்த முடியாது. அப்போது நாட்பட்ட விஷம், அதாவது பெற்றோர்களின் மூலமாக வந்து இருக்கும். பாவபதிவுகள் (மியாசம்) தான் காரணமாக இருக்கும் என்று Dr.சாமுவெல் ஹானிமேன் அவர்கள் கூறி சிபாரிசு செய்கிறார். அதாவது அந்த விஷத்தை தான் (பாவ பதிவுகளை) நாம் எடுக்க வேண்டும். நாட்பட்ட வகை விஷத்தை போக்கினால் தான் வியாதி முற்றிலும், குணம் பெற்று அம் மனிதன், முழுமையாக குணம் செய்து இந்த சமுதாயத்திற்கு தர முடியும் என்றும் கூறுகிறார்.

ஆகவே தொடர்ந்து ஆன்மாவில் ஒட்டிக் கொண்டு வரும் மியாசத்தை தான் போக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இதை குணப்படுத்துவதற்குள் இன்சுலின் சுரப்பு நீர் குறைந்து விட்டது என்றால் நாம் இன்சுலினை கொடுத்து தான் ஆக வேண்டும். இன்சுலினை செயற்கையாக கொடுத்து சர்க்கரை வியாதியை குணப்படுத்தலாமா? என்றால் குணப்படுத்த முடியாது. இன்சுலினை கொடுத்து அப்போதைக்கு உடலின் செயல்கள் தடை ஏற்படாமல் செய்யலாம். ஆனால் அச் சர்க்கரை வியாதி முற்றிலும் குணம் பெறாது. அதனால் ஹோமியோபதிpல் உள்ள விஷேசமான மருந்தை தேர்வு செய்து கண்டுபிடித்து கொடுக்க வேண்டும். அப்போது கொடுக்கும் போது, அந்நிலை அப்போதைக்கு தணிந்து போகும். ஆனால் உள்ளுர போய் மருந்து ஒட்டிக்கொண்டு நிலைகளை மற்றும் பக்க விளைவுகள் இதனால் ஏற்படும். இருப்பினும், உடலுக்கு தேவையான சக்திகளை கொடுக்க வேண்டும். உதாரணமாக வைட்டமின் போன்ற சக்திகளை கொடுக்கும் போது தான் நோயை வெளியேற்ற முடியும். சக்தியை இழந்து தானே புதிய செல்களை அப்போது தானே உருவாக்க முடியும்.

அதாவது Dr. சாமுவெல் ஹானிமேன் அவர்கள் இந்த உலகத்திற்கு நோயை குணப்படுத்துவது எப்படி என்ற தத்துவத்தை நமக்கு கூறி விட்டார். ஆகவே மூன்று வித அடிப்படையில் இருந்து தான் மருந்துகளை தேர்வு செய்து கொடுக்க வேண்டும். அந்த மூன்று தத்துவம் என்னவென்றால்,

1. பரம்பரை விஷத்திலிருந்து மியாசத்தை பார்த்து அதிலிருந்து தேர்வு செய்து அதற்கு தக்க தொரு மருந்தை தேர்வு செய்ய வேண்டும்.
2. தேகவாகு மற்றும் எதில் தாக்கப்படுகிறார்? எதனால் தாக்கப்படுகிறார்? என்பதை பார்த்து மருந்தை தேர்வு செய்ய வேண்டும் என்கிறார்.
3. மொத்த குறிகளை எடுத்து பார்த்து அவைகளுக்கு தக்க மருந்துகளை தொகுத்து, பகுத்து பார்க்கும் போது தலையாய மருந்து ஒன்று வரும். அந்த மருந்தை எடுத்து தர வேண்டும். இதுவே ஹோமியோபதியின், விஷேசமும், நலப்படுத்துவதின் கலையும் ஆகும் என்பதை வெளிச்சம் போட்டு இந்த உலகிற்கு காட்டி விட்டார். ஹானிமேன் அவர்கள் - மியாசமேட்டிக் வகைகளை பார்க்கும் போது அதை மூன்று கூறுகளாக பிhpத்து கொள்ள வேண்டும் என்கிறார்.
v1. திடீர் என்று ஏற்பட்ட விஷத்தில் தாக்கப்பட்டவரா?
2. நாட்பட்ட வகை விஷத்தில் தாக்கப்பட்டவரா?
3. கடுமையான வியாதியில் தாக்கப்பட்டு உறுப்பு சிதைவு ஏற்பட்டு இதை குணப்படுத்த முடியாது என்ற நிலையில் இருப்பவரா?

ஐஐ. தேகவாகு அடிப்படையில் மருந்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்றால், நோயாளியிடம் காணப்படுகின்ற விசேஷத் தனித்தன்மை வாய்ந்த குறிகள் என்னென்ன? மற்றும் நோயின் போது என்ன மாறுபடுகிறது என்பதையும் நல்ல நிலையில் இருக்கும் போது என்ன குறிகள் கிடைக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். அவைகளை தொகுத்து கொள்ள வேண்டும். அவ்வாறு தொகுத்து, பார்க்கும் போது அவரிடம் விஷேமான குறிகள் தோன்றி இருக்கும். மற்றும் அபூர்வமான குறியும் தோன்றி இருக்கும். அந்த அபூர்வமான குறிகளை ரெப்பரட்டரியில் வைத்து பார்க்கும் போது தக்கதொரு மருந்தை கண்டுபிடிக்க முடியும். அம்மாதிரி கிடைக்கும் மருந்தை கொடுக்க வேண்டும். அப்போது இரண்டு, மூன்று மருந்துகள் ஒரே நேர்கோட்டில் வந்து விட்டால் அவைகளை மெட்டீரியா மெடிக்காவில் படித்து பார்த்து அவைகளில் உள்ள குறிகளை நெருங்கி இரண்டொரு மருந்துகள் வந்து விட்டால் கம்பேர்டிவ், மெட்டீரியா மெடிக்கா பார்க்கும் போது தக்கதொரு மருந்து தெரியும். அதை கொடுக்கலாம். மிக, மிக முக்கியமானது ஒரு மருந்தை தேர்வு செய்வது என்பது மிக கஷ்டம் தான். ஆனால், அப்படி தேர்வு செய்து கொடுக்கும் போது அந்த நோய் மட்டும் குணமாகின்றது. மற்ற நோய்கள் குணமாவதும், வேறு நோய்களும் வராமல் தடுக்கப்படுகிறது. குணமாகின்றது என்றொரு அஸ்திரம் வேறு எந்த முறை மருத்துவத்தில் இருக்கிறது? ஆகவே அதற்கு சிரமப்பட்டால் என்ன? ஒரு ஆன்மாவிற்கு ஒரு ஆன்மா செய்யவும் உதவி இறைவனால் நமக்கு அளிக்கப்பட்ட பரிசு அல்லவா? ஆகவே அற்காக உழைத்தால் என்ன? தகுந்த ஒரு மருந்தை நாம் சிரமப்பட்டு தேர்வு செய்து கொடுத்து தான் ஆக வேண்டும். ஒரு உண்மையான ஹோமியோபதி மருத்துவரை இயற்கையே தயார்செய்கிறது. மற்றும் மிக, மிக, சுருக்கமாக சில மருந்துகளை பார்ப்போம்.

SULPH, CALC, LYC, PULS, NAT-M, LACH, PHOS, SEP, SIL, ARS-A, BRY, RHUS-T, PETR, GRAPH, HEP, CAL-S இப்படி 16 மருந்துகள் முக்கியமான மருந்துகளாக கூறகிறார். இது போல பல மருந்துகள் வருகிறது. தகுந்த மருந்தை தேர்வு செய்து கொடுக்க வேண்டும். IGN, NAT-M, NUX-V, STAPHY, AUR, LACH, LYC, PSOR இன்னும் பல மருந்துள் உள்ளது இம் மருந்துகளை கொடுத்தாலும் கூட உறுப்புகள் உடைந்த நிலையில் நம்மிடம் வந்தால் அவர்களுக்கு கூட மருந்து அல்ல, அவர்களுக்கு மரணம் தான் ஏற்படும். அந்நிலையில் வருபவர்களை அவர் போக்குக்கே விட்டு விட வேண்டும். பயங்கரமான வகையை சார்ந்தவர்க்கு VARIO, PERTO, DIPH மற்றும் நாட்பட்ட சோரா, சிபிலிஸ், சைகோஸிஸ் போன்றவற்றை எதிர்க்கும் மருந்துகளையும் பார்க்க வேண்டும். சில ஹோமியோபதி மருந்துகளின் குண பண்பை பார்ப்போம்.

A. ARG - NIT. (3.30) - நோயாளி மிகவும் பயமாகவே இருப்பார்கள். வெளியில் எங்கியாவது கோவில் சினிமாவுக்கு போவதற்கு புறப்பட்டால், இவர் முதலில் பாத்ரூமிற்கு போய் விட்டு வந்து பிறகு தான் புறப்படுவார். எதற்கு பாத்ரூம் செல்வார் என்றால் மலம் கழிவதற்கு முதலில் செல்வார். அதே போல் அவர் ஏதாவது ஒரு பொருளை வாங்குவதற்கு போக வேண்டும் என்றாலும், முதலில் பரபரப்புபடுவார். உணர்ச்சி வயப்படுவார். கவலைப்படுவார். இது போல் நரம்புகள் எல்லாம் இறுக்கமாகி சர்க்கரை சாப்பிட விருப்பமும் ஏற்படும். இதனால் வெறுப்பு ஏற்படும். மனவேலை அதிகமாக செய்தாலும், மன உழைப்பு, மன பட,படப்பு ஏற்பட்டாலும், பேதியில் தான் இது முடியும். இவர்களுக்கு வெளியில் காற்றோட்டமாக இருந்தால் நன்றாக இருக்கும். ஜீல்லுன்னு இருக்க வேண்டும். போர்த்தாமல் படுத்து இருப்பார்கள். இப்படி இருந்தாலும், இன்னும் ஜீல்லுன்னு இருந்தால் நல்லாயிருக்கும் என்பார்கள். அம்மாவை கட்டிபிடித்து கொண்டு இருப்பார்கள். மிகவும் வெப்பமாக இருக்கவும் விரும்புவார்கள். இடுப்புக்கு, கீழ், கை, கால் எல்லாம் உதறல் ஏற்படும். Arg - nit வை மருந்துக்கு, சர்க்கரை வியாதியின் போது, இது போல் குறிகள் வரலாம். இதை பார்த்து கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

(2-A) ARS - ALB:-

(6.30) குளிர்ச்சியான நோயாளி, தோற்றம் வெளுத்தும் இருப்பார்கள். ஆபத்து கட்டத்துக்கு போன நோயாளி போல் இருப்பார்கள். எhpச்சலாகவும் ஓய்வில்லாமலும். களைப்பில் விழுந்து கிடப்பார்கள். இறந்து விடுவோம் என்ற பயமும் இருக்கும். வாசனை தாங்க முடியாது. வேடிக்கை பார்க்க பிடிக்காது. உணவை பார்த்தாலே வெறுப்பு என்பார்கள். சாப்பிட முடியாது, தாகமாக இருப்பார்கள். அதனால் அடிக்கடி கொஞ்சம் தண்ணீரை கொடுத்து தொண்டை நினைத்து கொள்வார்கள். நிறைய தண்ணீரை குடிக்க மாட்டார். வயிற்றில் வாயு உப்பிசமாக இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால் பழங்களை சாப்பிட விரும்புவார்கள். ஆனால் இவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும். ஐஸ், ஐஸ்நீர், புளித்த பீர், சாராயம், இவற்றை குடிப்பார்கள். நிறைய நெய் சாப்பிடுவார்கள். அழுகி போன, கெட்டு போன காய்கறி உணவு, பொருட்களை சாப்பிட்டு அதனால் விஷமித்து இருக்கும். உடல் வேகமான இளைப்பு ஏற்படும். ஏதேனும் விஷ பூச்சிகள் கடித்து உடலில் விஷம் உள்ள வரலாறை பற்றி கூறுவார்கள். தொண்டை அதிகமாக காய்ந்து போய்விடும். நள்ளிரவு 1 மணிக்கு தொல்லை ஏற்படும். குளிர் ஏற்படும். வெது, வெதுப்பான அறையில் மற்றும் வெது, வெதுப்பான நீரையும் பூசிக் கொண்டால் நன்றாக இருக்கும். இந்த குறிகளை வைத்து சர்க்கரை வியாதியை இம் மருந்துக்கு கணித்து கொள்ளலாம். அடிக்கடி தாகம்.

(3-B) BOVISTA :-

இந்த மருந்துகாரர்களுக்கு மிக விருப்பமான நிகழ்ச்சி கூட சங்கடமாகவும், கஷ்டமாகவும் இருக்கும். பலஹீனமாக இருக்கும். மூட்டுக்கு, மூட்டு பலஹீனம், களைப்பும் ஏற்பட்டு விடும். பாதமும் களைத்து போய் விடும். பேதியும் இருக்கும். பேதிக்கு முன் மாதவிலக்கு இருக்கும். சித்ரவதை செய்வது போல் இருக்கும். இறுக்கமாக ஆடைகளை போட்டு கொள்வார்கள். இடுப்பை சுற்றியும் ஆடைகளை இருக்கி கட்டி போட்டு கொள்வார்கள். நாட்பட்ட சொறி இருக்கும். அது நாளுக்கு நாள், சித்ரவதை செய்து கொண்டு இருக்கும். உடலின் அனைத்து பாகங்களிலும் பிப்பு ஏற்படும். அதிகமாக இடுப்புக்கு கீழ் முன் எலும்பு முடியும் இடத்தில் அதிகமான பிப்பு இருக்கும்.

(4-G) GRAPHITES:--

இது குண்டாக உள்ள பெண்களுக்கு பொறுந்தி வரும் மருந்து. ஜாலியாக இருக்கும் போது, இவர்களுக்கு மிகவும், தொந்தரவு அதிகமாக கொடுக்கும். தாமதாமாக மாதவிலக்கு ஏற்படும். நோயாளிக்கு அதிக கூச்சமும், இருக்கும். சந்தேகப் பேர் வழியாக இருப்பார்கள். ஒரு விசயத்தை தீர்மானிப்பது இவர்களால் எளிதில் முடியாது. சோகமானவர்களாக இருப்பார்கள். இசையை கேட்டால் இவர்களுக்கு அழுகை வந்து விடும். இவர்களுக்கு விருப்பம் இருக்காது. அதனால் இவர்கள் தவறாக சுய இன்பத்தை அனுபவித்து விடுவார்கள். திடீர் என்று இவர்களுக்கு, குளிர் தோன்றும். கை, கால்களில் வெடிப்பு இருக்கும். வண்டுகடி இருக்கும். சருமத்தில் திட்டு திட்டாக இருக்கும். அது போல் இருக்கும் இடத்தில் பிசின் போலவும், பிசு, பிசுப்பான திரவமும், வெளிவரும். காலை நேரத்தில் இது போல் ஏற்படும். ஏதேனும் உடலில் நோய் தோன்றினாலே மாதவிலக்கு தோன்றும்.

(5.H) HEPAR SULPH :-

இவர்கள் சிறிய ஒர் உணர்ச்சிக்கு கூட உடலாலும், மனதாலும் உணர்ச்சி வயப்படுவார்கள். சிறிய விஷயத்திற்கு கூட உணர்ச்சி வயப்பட்டு விடுவார்கள். காரணமே இல்லாமல், கவலைப்படுவார்கள். எதற்கெடுத்தாலும் எரிச்சல் அடைவார்கள். குளிர்காற்று பட்டால் கூட உணர்ச்சியை தாங்க முடியாது. சருமத்தின் மேல் லேசான குத்து பட்டால் கூட சீழ் கட்டிகள் தோன்றும். அதையும் தொட முடியாது. தொடவும் விட மாட்டார்கள். வெது வெதுப்பினால் இவர்களுக்கு சுகம் இருக்கும். (ARS களைப்பு). இவர்கள் தலையை மட்டும் போர்த்த மாட்டார். ஈர பருவம் பிடிக்கும். காய்ச்சலின் போதும், தலையை மட்டும் போர்த்தினாலும் சுகம். தலையை மட்டும் போர்த்தினால் காய்ச்சல் விட்டு விடும்.

(6.H) HELONIAS :--

சர்க்கரை வியாதியின் போது அதிக சிறுநீர் கழிப்பார்கள். இது பொதுக்குறியாகும். சிறுநீரில் அதிக சர்க்கரையும், இருக்கும். உதடு காய்ந்து தடித்து இருக்கும். அதிகமான தாகம் இருக்கும். ஓய்வு இல்லாமல் வேலை எப்போதும் செய்து கொண்டே இருப்பார்கள். திடீர் என்று இவர்களும் எப்போதும் உணர்ச்சி வயப்படுவார்கள். எரிச்சல் அடைவார்கள். எரிச்சலின் போது அரை பைத்திய நிலைக்கு வந்து விடுவார்கள். சர்க்கரை வியாதியுடன் மூட்டு சம்பந்தப்பட்ட வியாதியும் இவர்களுக்கு இருக்கும். சிறுநீரில் ஆல்புமின் முட்டை சக்தியும், நிறைய வரும். இவ்வாறு போவதால் இவர்கள் அதிக பலஹீத்துடன் இருப்பார்கள்.

(7.L) LYCOPODIUM :-

எதற்கெடுத்தாலும், எரிச்சல் அடைவார்கள். இருட்டு பயம், இருக்கும். திடீர் என்று ஜாமத்தில் எழுந்து உட்கார்ந்து கொள்வார்கள். கோபப்பட கூடியவர்கள் இருந்தாலும், உள்ளேயே சிடு, சிடுத்து கொண்டு இருப்பார்கள். யாரையும், எதிரியாகவே நினைத்து கொண்டு இருப்பார்கள். தனிமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சிறிது, சிறிது பயம் இருக்கும். அதிகமான வெறுப்புடன் இருப்பார்கள். காற்று கொஞ்சம், கொஞ்சமாக வெளியேறி கொண்டு இருக்கும். வாய் நிறைய நீர் குடித்தவுடன் தொண்டை இழுத்து பிடித்து கொள்ளும். பிறகு நீர் விழுங்க முடியாது. தொண்டையில் மணல் இருப்பது போல் இருக்கும். சிறுநீரில் வீழ்படிவு காணப்படும். சிற்றின்பத்தை அனுபவிக்கின்ற மாதிரி இரவில் இளைஞர்களுக்கு இந்த நினைவு இருக்கும். இதனால் பசி எடுக்கும். மாலை 4 லிருந்து 8 மணி வரை அதிக தொல்லைகள் ஏற்படும். துணிகளை அகற்றி விட்டால் , நன்றாக இருக்கிறது என்பார்கள்.

(8-M) MEDORRHINUM:-

(200 ஆ) அதிகமான பசி இருக்கும். சாப்பிட்ட உடனேயே சாப்பிடனும் என்று சொல்வார்கள். அதிக இனிப்பை சாப்பிட விரும்புவார்கள். உள்ளுக்குள் இவர்களுக்கு பயமும், நடுக்கமும் இருக்கும். தூங்கியவுடன் முழங்கால், மூட்டிலும், நெஞ்சிலும் நிலை மாறி விடும். பகல் சூரியன் மறையும், போதும் தொல்லை அதிகமாகம். கடலோரத்தில் இருக்கும் போது சுகமாக இருக்கிறது என்ற கூறுவார்கள்.

(9-M) MERCURIOUS:-

(6இ200) இவர்களுக்கு அதிக தாகம் இருக்கும். ஆனால் நாக்கில் ஈரம் இருந்து கொண்டே தான் இருக்கும். பிளவும், ஏற்படும். எச்சியும் ஒழுகும். ஆனாலும் ஏராளமான தண்ணீர் அடிக்கடி குடித்து கொண்டே இருப்பார்கள். நிறைய சிறுநீர் கழிவார்கள். சிறுநீர் கழிக்க அவசரமாக ஓடுவார்கள். அப்போது கை நடுக்கம் அதிகமாக இருக்கும். அதிகமாக வியர்வை வழியும். நிறைய நாக்கில் வெள்ளை படிவு இருக்கும். வாயை திறக்க சொல்லி பார்த்தோம் என்றால், நாக்கில் பால் படிவுகள் காணப்படும். அந்த அளவு வீங்கி காணப்படும். வியாதியின் போது சர்க்கரை அதிகமாக சாப்பிடுவார்கள். இரவு நேரத்திலும், வலது புறம் படுத்தாலும், தொல்லைகள் ஏற்படுகிறது என்று சொல்வார்கள்.

(10-P) PHOSPHORUS:-

(6-200 (OR) HIGHER) இளைஞர்களுக்கும், வேகமான வளர்ச்சி பெற்று வருபவர்களுக்கும் மிக விரைவாக சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். என்று நினைப்பவர்களுக்கும், நரம்பு மண்டலம் மிக விரைவில் பாதிப்பு ஏற்பட்டு விடும். அதிக உணர்ச்சி வயப்படுவார்கள். சத்தம், நாற்றம், எரிச்சல் வெளிச்சம் போன்றவற்றால் தொல்லை. உள்ளங்கையிலும், முதுகு தண்டின் கடைசி பகுதியிலும் எரிச்சலாக இருக்கிறது என்று சொல்வார்கள். அதிக பலஹீனம். ஒரு வாரம் ஆனாலும் கூட பலஹீனத்தால் படுத்து கொண்டு இருக்கவே விரும்புவார்கள். நெஞ்சு, வயிறு எல்லாமே அடிவயிற்றில் போய் இறங்கி கொண்டது போல் தெரியும். மிகவும் குளிர்ச்சியானதையே விரும்புவார்கள். இதனால் குளிர்ந்த நீரை வயிறு, சூடாக இருக்கிறது என்று கூறி குடிப்பார்கள். இடது பக்கமும், வலியுள்ள பாகத்திலும் திரும்பி படுத்தாலும், தொல்லைகள் ஏற்படுகிறது என்பார்கள். குளிர்காலம், இடி, மின்னல் காலத்தில் அதிக தொல்லை ஏற்படுகிறது என்பார்கள். வலது புறம் படுத்து இருந்தாலும், குளிரிலும், குளர்ச்சியான பானமும் குடித்தால் நன்றாக இருக்கிறது என்பார்கள்.

(11-P) PLUMBUM MET :-

(6-200) அதிகமாகவும், விரைவாகவும் இளைப்பு ஏற்படும். இவர்களுக்கும், பலஹீனம் ஏற்படுவதால் இவ்வாறு இருக்கும். அறிவு எல்லாம் சீக்கிரமாக மங்கி போய் விடும். மலச்சிக்கல் இருக்கும். ஆண் தன்மையை இழந்து விடுவார்கள். அதனால் இவர்கள் மந்தம், பிடித்த மாதிரி ஆகி விடுவார்கள். இழுப்பு, வலிப்பு போன்றவை ஏற்படும். பயங்கரமாக வலி இருப்பதாக கூறுவார்கள். இவர்களின் உணர்ச்சி வயிற்றின் வால்வு பகுதியில் இருக்கும். இழுக்கின்றது போல் இருக்கும். தோலில் இழுத்து கட்டியது போல் இருக்கும். இரவில் தான் இவர்களுக்கும் தொல்லை. தேய்த்து விடுதல், நன்றாக பிடித்து அழுத்தி விடுதல் போன்றவற்றால் நன்றாக இருக்கிறது என்று கூறுவார்கள்.

(12-S) SULPH :

(6-200) இரத்தம் சூடாக ஓடுகிறது என்ற கூறுவார்கள். நிறைய தாகம், எரிச்சல் ஓய்வு இல்லை என்றும் கூறுவார்கள். உள்ளங்கை, உள்ளங்கால் எரிகிறது என்று கூறுவார்கள். பசி இருக்கிறது என்பார்கள். காலையில் 11 மணிக்கு பசி ஏற்பட்டு விடும். பேதி போகும், வயிறு கெட்டியாக போய்விட்டது என்பார்கள். படுக்கையில் இருந்து திடீர்னு வெயிலில் போவார்கள். உதடு திடீர் என்று சிவந்து போய் விடும். சருமத்தில் அரிப்பு ஏற்படும். சொறிந்த கொண்டே இருப்பார்கள். மூலம் இருக்கும். மலம் கழியும் போது மிகவும் பெரியதாக மூலம் வந்து விடும். மூலத்தில் இரத்தம் போனால் வலிக்கிறது என்றும் கூறுவார்கள். அதே நேரத்தில் சொறிந்தால் நன்றாக இருக்கிறது என்றும் கூறுவார்கள். நின்ற கொண்டு இருந்தால் கஷ்டம் இருக்கிறது என்று சொல்வார்கள். வலது புறம் படுத்தால் நன்றாக இருக்கிறது என்றும் சொல்வார்கள்.

(13-T) TARENTULA HISPANICA :-

(30இ 200) ஏராளமான சிறுநீர் போகும். சர்க்கரை அதிகமாக இருக்கும். வருத்தம், கவலை, ஓய்வின்மை, பலஹீனம், இளைப்பு, வருத்தம். கவலை, ஓய்வின்மை, பலஹீனம், இளைப்பு, பயங்கரமாகவும், களைப்பு, மனநிலை பாதிக்கப்பட்டும் இருக்கும். நோய் அதிகரித்து கொண்டே போவார்கள். செக்ஸ் விருப்பம் அதிகமாக இருக்கும். மலச்சிக்கலும், மலம் கழியும் போது இரணமாக இருக்கிறது என்றும், உடலில் முழுவதும் புண் போல் இருக்கிறது என்று கூறுவார்கள். இசையில் சுகம், தேய்த்து விட்டு கொண்டேயும், யாரிடம் பேசி கொண்டேயும் இருந்தால் நன்றாக இருக்கிறது என்று கூறுவார்கள். திடீர் என்று அழுவார்கள். பொதுவாக கென்ட் ரெப்பரட்ரியில் கென்ட் அவர்கள் சிறுநீரில், சர்க்கரை என்ற தலைப்பில் சுமார் 45 மருந்துகளை கூறுகிறார். இதில் 1,2,3 என்று தரம் பிரித்து கூறுகிறார். இம் மருந்துகள் அனைத்துமே நோயாளிகளுக்கு கொடுத்து வெற்றி கண்ட மருந்துகளாகும். நம்மிடம் வரும் நோயாளிகளுக்கு மேலே கண்ட மருந்துகளில் எது தேவைப்படுகிறது என்று பார்த்து தேர்வு செய்து எடுக்க வேண்டும். (அ) வேறு எந்த மருந்து பொருத்ததமாக தேவைபடுகிறதோ அதை தான் கொடுக்க வேண்டும்.

பக்கம் -52. Dr. வில்லியம் போரிக் அவர்கள் எழுதிய ரெபப்ரெட்டரியில் அதாவது அவர் கொடுத்து வெற்றி கண்ட மருந்துகளில் 77 மருந்துகளை கொடுத்ததை, குறிப்பிட்டு உள்ள நரம்பு அடிப்படையில் பாதிக்கப்பட்டு, சர்க்கரை வியாதி தோன்றி இருந்தால், அது கல்லீரலை தாக்கி வாயு உற்பத்தியை தடை செய்தால் அதற்கு தக்க மருந்துகளையும், கணையத்தை தாக்கி, இருந்தால் 3 மருந்தும், காசநோய் இருந்தால் 6 மருந்துகளும், விரல் மற்ற உடல் பகுதிகளில் சீழ் பிடித்து விடுதல், புரையோடி விடுதல், போன்ற நிலைமைகளுக்கு 7 மருந்துகளையும், சர்க்கரை வியாதியின் போது காய்ச்சல் பிற தொல்லைகள், தொற்றி கொண்டால் 12 மருந்துகளையும், நாளமில்லா சுரப்பிகள், அதாவது தைய்ராய்டு, பிட்யூட்டரி, அட்ரினல் போன்றவற்றை தாக்கி இருந்தால், அதையே எடுத்து மருந்தாக தர செய்தும், இந்த நோயை பற்றிய கவலையில் மூழ்கி விட்டால் 15 மருந்தும், படுக்கையில் கிடந்தால் 6 மருந்துகளையும், தற்கொலை செய்து கொள்ள, இந்நோயின் போது விருப்பம் ஏற்பட்டால் 13 மருந்துகளும், இந்த வியாதியினால் உடலும், மனமும் அமைதியில்லை என்றால் 15 மருந்துகளும், உடல் இளைப்பு ஏற்பட்டால் 25 மருந்துகளும், பிரசவத்திற்கு பிறகு இவ்வியாதியில் சீழ் பிடித்து கொண்டால் 18 மருந்துகளும், ஆண், பெண் தன்மை இழந்து விட்டால் 7 மருந்துகளும், பெண் மலட்டு தன்மை ஏற்பட்டால் 13 மருந்துகளும், குறக்களை பிடித்து கொண்டால் 8 மருந்துகளும், எழுதியிருக்கிறார். விஷேசமாக இந்த சர்க்கரை வியாதிக்கு எடுத்த எடுப்பிலேயே ஒரு 20 மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பார்த்து கொடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதை நாம் பார்த்து அனுபவத்தில் மருந்தை கண்டு பிடித்து கொடுக்கவும்.

பக்கம் - 61. (A-1) ADRENALIN 30 இந்த மருந்தை சர்க்கரை வியாதியினால் மிகவும் தாக்கப்பட்டவர்களுக்கு தரலாம்.

ARSENIC BROM M.T (2-A) :--

இதை தண்ணீரில் கரைத்து, இவ்வியாதியில் அடிபட்டவர்களுக்கும், சிக்கலாகி விட்டவர்களுக்கு தரலாம். இந்நிலையில் உள்ளவர்கள் எடை குறைந்து விட்டவர், தாகம், எரிச்சல் போன்றவை ஏற்பட்டு விட்டவர்களுக்கும், தினம் 3 வேளை கொடுக்கலாம். உடன் கறி, சூப் செய்து சாப்பிடும் படி சிபாரிசு செய்யலாம்.

ARSENIC - ALB 3x - 30 (A-3) :-

அதாவது Dr. HUGHES அவர் கூறியதாவது SYZYGIUM JAMBO - LINUM 3x கூட, அதாவது இந்த மருந்தை 3 வது வீரியத்தில் கொடுக்க கூறினார். URANIUM NITRICUM 6x. TEREBINTHINA 3x - 30.

ANTHRAXINUM 30 (A-4) :-

அடிக்கடி நகச் சுற்றி வருவது, உடலில் சொத்தை விழுதல், அழுகி போதல், ஆபத்தாக சீழ் பிடித்து கொள்ளுதல், புரையோடி போய் விட்ட இடத்தில் நெருப்பு போல் எரிச்சல் தோன்றியுள்ள வரலாறு உள்ளவர்களுக்கு இந்த A-4 மருந்தை கொடுக்க வேண்டும்.

CHAMOMILLA (C-1) :--

கடுமையான கோபக்காரர் எந்த நேரத்திலும், கோபமாக இருந்தாலும், முதலில் இதை தான் கொடுக்க வேண்டும் என்றும், Dr .சர்ப் கூறுகிறார்.

CHINONTHUS M.T. (C-2) : :-

கல்லீரல் கெட்டு தாருமாறாகி விட்ட சர்க்கரை வியாதிகாரர்களுக்கு, இதை கொடுக்க வேண்டும். என்று Dr. ஜார் ராயல் கூறுகிறார். 62 பக்கம்:- மஞ்சள் நிறமான சிறுநீரை சில சமயம் பச்சை நிறமாக சிறுநீரில் போகும், கூடவே காமாலையும், கல்லீரல் பகுதியில் வலி என்று கூறினாலும், வாய் வறட்சியாக இருக்கும். ஆனாலும், வாயின் இரு ஓரங்களிலும், எச்சில் ஒழுகும். எச்சியை விழுங்க முடியாத அளவுக்க பலஹீனம், உடல் வீங்கி போயும் இருக்கும். இது போல் உள்ள வியாதிகாரர்களுக்கு C-2 மருந்தை தர வேண்டும் என்று கூறுகிறார்.

CUPPRUM ARS 3 (C-3) :- :-

சிறுநீர் நிறைய போகும், திடீர் என்று சிறுநீர் கழியும் குணம், ஏற்பட்டு அப்படியே பலஹீனத்தினால் மயக்கத்தில் படுத்து கொண்டு, படுக்கை புண் ஏற்பட்டு அழுகலும், ஏற்படும். உடனே குறக்களையும் ஏற்படும். என்று Dr. ரோலா கூறுகிறார்.

CURARE 4x (C-4) :-

ஏராளமான சிறுநீர் போய் மோட்டார் நரம்பு பாதிக்கப்பட்டு, பக்க வாதம், ஏற்பட்டு. வரும். சர்க்கரை வியாதிகாரர்களுக்கு C-4 மருந்தை கொடுக்க வேண்டும் என்று Dr. போரிக் கூறுகிறார். இதனால் இவருக்கு மூச்சு திணறல் ஏற்படும். விரல் தானாகவே நடுங்கும். அதனால் அபார்சன் ஏற்படும்.

GLYCERINE 30 (G-1):--

ஏராளாமான சிறுநீர் அடிக்கடி நிறைய போகும். சிறுநீரில் நிறைய சர்க்கரையும் போகும். அதே நேரத்தில் சர்க்கரை சாப்பிட ஆவல் ஏற்படும். மனமும், உடலும் இளைத்து போய்விடும். மூக்கில் காரமாகவும், பச்சை தண்ணீர் போலவும் சளி ஒழுகும். என்று Dr போரிக் அன்சட் கூறுகிறார்.

LACTIC ACID 3-30 (L-1) :--

வாத குறிகளுடன், நாக்கில் திட்டு, திட்டான தடிப்பும், கண்ட நேரத்தில் பசியும், குமட்டி கொண்டே இருப்பதும், அப்போதே சாப்பிட்டு கொண்டு இருப்பதும், வாதவலியானது மூட்டிலும், தோள்பட்டையிலும், மணி கட்டிலும், முழங்கால் மூட்டிலும் வலியும், பலஹீனமும் என்று போரிக் கூறுகிறார்.

LECITHIN 3x (L-2):-

இவருடைய சிறுநீரில் ஆல்புமின் முட்டை சக்தி, வெள்ளைமாவு சக்தி. சர்க்கரை சக்தி மூன்று நிறைய ஏறி இருக்கும். இதனால் சுத்தமாக ஞாபகமே போய் விடும், சரியாக சுவாசிக்க முடியாது. மூளை மந்தமும் ஏற்பட்டு தூக்கமும் வராது என்று Dr. போரிக் கூறுகிறார், பக்கம் - 63.

PANCREATIN 3x (P-1):-:-

ஓயாமல் மலம் கழிவார்கள். சிறுநீரில் லேசாக சர்க்கரை போகும். இவருக்கு இதை கொடுக்க வேண்டும் என்று Dr. ஜோஸ்ட் கூறுகிறார்.

IRIS (I-1):-

பித்தம் ஏராளமாக இருந்து அவருக்கு சர்க்கரை வியாதி தோன்றினால் ஐ-1 கொடுக்க வேண்டும் என்று Dr. ஹாஸ்ஜஸ் கூறுகிறார்.

PHLORIDZIN (2-C) (P-2) :-

சிறுநீர் கழியும் இடத்தில் நிறைய வலியுடன் சிறுநீர் கழிந்தால் P-2 வை கொடுக்க வேண்டும் என்று Dr. பிளட் கூறுகிறார்.

NATRUM SULPH 6x - 12x (N-1) :-

சர்க்கரை வியாதினால் இறந்து விடலாம் என்ற நினைவு இருக்கும். ஆனால் வேறு பொருப்பு இருக்கிறது என்று சொல்லி கொண்டு இருப்பார்கள். இவ்வாறு உள்ள சாக்கரை வியாதிகாரர்களுக்கு M.P, K.P, கொடுக்க வேண்டும் என்று Dr. மித்ரா கூறுகிறார்.

PHOSPHORIC - ACID M.T. 10-15 (P-3):-

10-15 (P-3):- அதிகமாக நரம்பு பலஹீனம் ஆண், குறி தளர்ந்து தொங்கி போய்விடும். சிறுநீர் வெண்மையாக மாவு கரைத்தது போல் இருக்கும். எடை விரைவாக குறைந்து விடும். நோயாளிக்கு சிறுநீரில் சர்க்கரை இருக்காது. ஆனாலும் இது போல் உள்ளவர்களுக்கு சர்க்கரை மாவு போல் போய்விடும் என்று Dr. ராயட் கூறுகிறார்.

PLUMBUM - MET 3-30 (P-4):

சிறுநீரில் சர்க்கரை போகும். அதை விட அதிகமாக இரத்தத்தில் சர்க்கரை இருக்கும். இரத்த அழுத்தமும் இருக்கும். சிறுநீரில் குறைவாக ஆல்புமின் முட்டை சக்தி இருக்கும். அதிக தாகம். எடை குறைதல். மூத்திரகாயில் புண் ஏற்படும். கடுமையான ஞாபக மறதி, வேக்காடு ஏற்படும். என்று Dr. ஹெhpஸ் கூறுகிறார். பக்கம் - 64 SENNA 3-6 (S-1):- நிறைய சர்க்கரை இருக்கும். அசிட்டோன் காரகம், ஆக்ஸாலிக் அமிலம், பாஸ்பேட் உப்பு, காரகமும், வெள்ளை படிவு இருக்கும். இதனால் இவர்களுக்கு கிரு, கிருப்பு ஏற்பட்டு விடும். எழுந்தவுடன் இது போல் இருக்கும். மலச்சிக்கல் இருக்கும். மலக்காற்று பிரியும் போது வலியும் இருக்கும். கல்லீரல் வீங்கி போய் இருக்கும். அப்படியே படுத்து கிடப்பார்கள்.

URANIUM NIT 3x (U-1) :-

அதிக தாகம், வறட்சி, சளி சவ்வு பாதிக்கப்பட்டு இருக்கும். சருமமும் பாதிக்கப்பட்டு இருக்கும். உடல் பெருத்த மாதிரியும் இருக்கும். உடல் இளைப்பும் இருக்கும் அதிகமாக சக்தி இழப்பு ஏற்பட்டு சதை சுருங்கி மிக விரைவிலே இளைத்து போவார்கள்.

SYZYGIUM JAMBOLINUM (S-2):--

அதிகமான மயக்கம், கிரு, கிருப்பு பலஹீனம் இது போல் இருக்கும். வறட்சியாக வாய், நாக்கு இருக்கும். சருமமும் வறட்சியாக இருக்கும். சர்க்கரையின் அளவு சிறுநீhpல் அதிகமாக இருக்கும். அதிகமாக சிறுநீர் போவார்கள். உடலின் மேல் பிப்பு எடுக்கும். புறப்பாடுகள் ஏற்படும். தோலின் மீது கொப்பளங்கள் ஏற்படும். உடலின் மேல் பகுதியில் சர்க்கரை வியாதி தோன்றியதற்கு புண்கள் ஏற்பட்டு அடையாளங்கள் அது காட்டும்.

(A-1) ABROMA AUGUSTA :-

(1x, 3x) இம் மருந்து விசேஷமாக தாவரங்களுக்கு பயன்படுகிறது. இம் மருந்தை Dr. D.N. RAY & Dr. S.C. GHOSH அவர்கள் கூறுகிறார். இம் மருந்துகுரியவர்களுக்கு அதிகமான சர்க்கரை சிறுநீரில் போகும். முட்டை சக்தியான அல்புமின் சிறுநீரில் காணப்படும். அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்று நினைப்பு இருந்து கொண்டே இருக்கும். வாய் வறட்சியாக இருக்கிறது என்பார்கள். அதனால் உள்ளுக்குள் தாகம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். தாகம் எரிச்சல் போலவும் இருக்கும். எரிச்சல் ஏற்படுவதால் தண்ணீர் குடித்து கொண்டே இருப்பார்கள். தண்ணீர் குடித்தவுடன் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். பசியின் நேரத்திற்கு பசி எடுக்காது. அதனால் சாப்பாடு சாப்பிட மாட்டார்கள். இரவு நேரத்தில் பசி எடுக்கும். காலை, மதியம், மாலை, இரவு நேரத்தில் பசி எடுக்காது. அதனால் சாப்பாடு வெறுப்பு ஏற்படும். சாப்பாடு எவ்வளவு போட்டு கொண்டு இருந்தாலும், சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். ஆனால் பசி இருக்காது. சாப்பிட்டு கை கழுவிய உடனேயே பசி எடுக்கும். மலக்காற்று போய் கொண்டே இருக்கும். செக்ஸ் உறுப்புகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அப்படியே தளர்ந்து போய் விடும். மாதவிலக்கின் போது அதிக தொல்லை ஏற்படும். எரிச்சல், தாழ்வு மனப்பான்மை, அதிகபடியான நிகழ்ச்சிகளை தாங்க முடியாது. ஞாபக மறதியும் பேசி கொண்டு இருக்கும் போது ஞாபகம் வராது. பேசுவதை பாதியில் நிறுத்தி கொள்வார்கள். கட்டிகள் நிறைய வரும். கட்டி வந்த இடத்தில் எல்லாம் கருப்பு, கருப்பாக மாறிபோய் விடும். சருமத்தில் அதிகமான பிப்பு ஏற்படும். பக்கம் - 65.

(C-1) CEPHALANDRA INDICA :-

Dr. S.C. GHOSH என்பவர் இம் மருந்தை பற்றி கூறுகிறார். கசப்பு சம்பந்தப்பட்ட ஒரு பொருள் என்றும், அதிலிருந்து செய்யப்பட்டது என்றும், மருந்தை 3x என்ற வீரியத்தில் எடுத்து 1 அல்லது 2 35 ml சுத்தமான நீரை எடுத்து கலக்கி தினமும் மூன்று வேலை கொடுக்கலாம். சிறுநீரில் சர்க்கரை இருக்கும். எடை விரைவாக குறைந்து போய்விடுவார்கள். அதிக தாகம் இருக்கும். வாய் வறட்சியாக இருக்கம். எப்போதும், வருத்தமாகவே இருப்பார்கள். எந்த வேலையும் முழுமையாக செய்ய மாட்டார். தள்ளி, தள்ளி போட்டு கொண்டே இருப்பார்கள். சோகத்தில் உட்கார்ந்து கொண்டே இருப்பார்கள்.

GURNAR (or) GYMNEMA SYLVESTRE (G-1) :

இம் மருந்தை பச்சையாக உபயோகப்படுத்தியாக கூறியுள்ளார். இம் மருந்தை Dr. கோவிந்தராம் சர்மா என்பவர் ஆராய்ச்சி செய்து கூறியுள்ளார். சர்க்கரை வியாதிக்கு கட்டிகள் முக்கியமான இடங்களிலும், செல் பகுதிகளிலும் சிறு, சிறு கட்டிகள் தோன்றும். அந்த கட்டிகள் எரியும். உடல் பூராவும் இந்த கட்டிகள் தோன்றி விட கூடும். (ஒரு சில நோயாளிகளுக்கு) பலஹீனமாகவும் இருக்கும். அவர்களின் சதை எல்லாம் பலஹீனத்தால் தொங்கி போய்விடும். மனதும், நம்பிக்கை இழந்து விடும். வெறி தன்மையுடன் விசேஷமாக வரும். சிறுநீர் கழிக்க வெறிதனத்துடன் ஓடுவதும், வருவதும், போவதுமாகவே இருப்பார்கள். ஒரு நிலையில் இல்லாமல் வெறிபிடித்தது போலவே இருப்பார்கள். செக்ஸ் விருப்பம் மிகவும் அதிகமாக இருக்கும். இல்லறத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே இருக்கும். ஆசையும் அதிகரித்து கொண்டே இருக்கும். ஆசையில் ஓடினால், சிறுநீர் கொட்டும். இது போல் உள்ள நோயாளிகளுக்கு இம் மருந்தை பச்சையாக கொடுக்கலாம் என்று Dr.கோவிந்ராம் சர்மா அவர்கள் கூறுகிறார்.

Dr. போரிக் அவர்கள் சர்க்கரை வியாதிக்கென்று 28 மருந்துகளை கூறுகிறார்;.

Acetic -ac, Alfal, Arg-m, Ars-a, Aur-mur, Bell, Can-ind, Eqist, Eup-purp, Fer-mur, Gels, Glycer, Helleb, Helon, Ign, Lac-ac, Lith-c, Lyco, Nat-m, Nit-ac, phos, Rhus-ar, Samb, Scilla, Sulph, Thyr, Uran-n, Ph-ac. Dr. CLARKE அவர்கள் இவ்வியாதிக்கு தனிப்பட்ட 5 மருந்துகளையும் கூறுகிறார். பக்கம் -66.
Dr.BANERJEE N.K. அவர்கள் 7 மருந்துகளை GATCHILL என்பவர் ஒரு 3 மருந்துகளை கூறுகிறார். வீhpயம் என்ன என்பதையும் கூடவே கூறுகிறார்.

BELL 6, 30 (B-1) :--

மருந்தின் குறி :- அதிகமாக சிறுநீர் போகும் முக்கியமாக சிறுவர்களுக்கு இம் மருந்து பயன்படும் என்றும் கூறுகிறார். குழந்தைகள் அதிகமாக உணர்ச்சி வயப்படும் போது அதிகமாக கத்தி கொண்டே இருப்பார்கள். பயப்படுவார்கள். வெளிச்சத்தை, சத்தத்தை பார்த்தால் அதிகமாக கட்டி பிடிப்பார்கள். இரத்தம் தலையில் சேர்ந்து விடுதல் மிகவும் கஷ்டப்படுவது. குளிர்ச்சியை அதிகமாக விரும்புவது, சூட்டினால் குளிர்ந்த நீரை அள்ளி, மேலே தெளித்து கொள்வது. இது மாதிரி நிலைகள் இம்மருந்துக்கு வரும். சோக நிலையும் இருக்கும்.

SCILLA 2C (S-1) :-

அமைதியாக இருக்கும் சர்க்கரை வியாதிகாரர்களுக்கு இம் மருந்து பொருந்தும்.

PHOS ACID - 1x, 2x (P-1) :--

சிறுநீர் கழியும் போது பாஸ்பேட் உப்பு அதிகமாக கலந்து வெள்ளையாக சிறுநீர் போகும். இதனால். ஜீவசக்திகளை இழந்து விடுவார்கள். குழந்தைகள் சிறுநீர் கழிந்த இடம் காய்ந்த பிறகு பார்த்தால் வெள்ளையாக இருக்கும். பலஹீனமாகவும், குழந்தைகள் இருப்பார்கள். மிக விரைவில் களைப்பு ஏற்பட்டு விடும். மனவேலை சிறிது செய்தாலும் களைத்து போய்விடும். வீட்டை பற்றியே ஞாபகமாக இருப்பார்கள். முகத்தை பார்த்தால் வெளுத்து போய் நோயாளி மாதிரி எப்போதும் இருப்பார்கள். ஏக்கம் பிடித்த சிறுவர்களுக்கு இது பொருந்தும்.

URAN NITRICUM 1x, 2x (U-1):-

வேகமாக இளைத்து போய்விடுவார்கள். நோய் சம்பந்தப்பட்ட இயல்பை பெற்று இருப்பார்கள். தாகம், வெறி இருக்கும். நிறைய உணவு உட்கொள்வார்கள். ஒரு நாளுக்கு 7, 10 முறைகள் கூட சாப்பிடுவார்கள். நிறைய மலக்காற்று கனமாக விட்டு கொண்டே இருப்பார்கள். நிறைய மலக்காற்று கனமாக விட்டு கொண்டே இருப்பார்கள். அடிக்கடி மூத்திரகாயில் அடைப்பு ஏற்படும். சிறுநீர் போய் கொண்டே இருக்கும். திடீர் என்று நின்று விடும். இதனால் சிறுநீர் பாதையில் சில நோயாளிகள் அடிக்கடி கம்பி போடும் சிகிச்சையை மேற்கொள்வார்கள். நிறைய சிறுநீர் கழிவார்கள். விடிவதற்குள் 10 தடவை, 15 தடவை போனேன் என்று கூறுவார்கள். அவர்களுக்கு இதை கொடுத்தால் சரியாய் போய் விடும்.

MUREX - 3,30 (M-1) :-:-

மலச்சிக்கல் இருக்கும். அடிக்கடி சிறுநீர் போய் கொண்டே இருப்பார்கள். இரவில் அதிகம் போவார். அதிகமாக வாடை வரும். பெரியம்மையின் கொப்பளத்தில் வரும் நாற்றம் போல் இருக்கும். எப்போதும் சிறுநீர் கழிக்கும் விருப்பத்திலேயே இருப்பார்கள். அவசரமாகவும் ஓடுவார்கள்.

CAUSTICUM 30,200 (C-1) :-

குழந்தைகள் பலஹீனமாக இருப்பார்கள். உயிர்சக்தி தாக்கப்பட்டு சோகை பிடித்தது போல் கிடப்பார்கள். சிறுநீர் பை பலஹீனப்பட்டு இரவில் தூங்கும் போது சொட்டு, சொட்டாக சிறுநீர் கழிந்து கொண்டே இருப்பார்கள். அடி வயிறு தசையை அழுத்தினால் கூட சிறுநீர் வந்துவிடும். அவ்வளவு பலஹீனம் ஏற்படும்.

STROPHANTHUS M.T. 1x (S-1):-

இவர்களின் சிறுநீரீல் முட்டை சக்தி, சர்க்கரை சக்தி, பாலியூரியா போன்ற அனைத்து சக்திகளும் போய்விடும். அதனால் பலஹீனமாக இருப்பார். சிறுநீர் பை கெட்டியாக தான் இருக்கும். சிறுநீரில், ஆனாலும் அதிகமாக போய் கொண்டே இருக்கும். முட்டை சக்தியும் அதிகமாக போய்விடும்.

LYCOPODIUM 30, 200 (L-1):-

அதிகமாகவும், பலவகையாக சர்க்கரை வியாதியில் அடிப்பட்டவர்களுக்கும் காம கிளர்ச்சி, சிறுநீர் போவதில் கிளர்ச்சி ஏற்பட்டவர்களுக்கு இம் மருந்து திடீர் என்று இளைத்து, காய்ந்து, சருகுபோல் போய் அதிக சிறுநீர் போய் கொண்டே இருக்க தூண்டி கொண்டே இருக்கும். தாகமும் இருக்கும். சிறுநீரில் ஆனாலும் அதிகமாக போய்கொண்டே இருக்கும். அதில் முட்டை சக்தியும் அதிகமாக போய்விடும். சிறுநீரில் வெள்ளையாக போவார்கள். ஒரு நாளுக்கு அதாவது 24 மணி நேரத்தில 2500 கூட சிறுநீர் கழிவார்கள்.