தத்துவம்


PHYLOSOPHY-

தத்துவம்

283. கோபப்பட்டால் இதயம் கெட்டு விடும். அதிக கவலை பட்டால் கல்லீரல் கெட்டு விடும்.
284. பண்டைய காலத்தில் கந்தகம், குவினைன் அதிகமாக சாப்பிட்டுள்ளான் அதே நோய்க்கு (இக்கால) அடிப்படையாகயுள்ளது.
285. குப்பை, கூலம், சோப்பு இப்படி எல்லாவற்றினாலும் நோய் தொற்றுகிறது.
286. தற்போது தரப்படும் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி இவையனைத்தும் சேர்ந்தது. அதாவது டிரக் மியாசம் கவலை மியாசமாக மாறுகிறது.
287. சரும நோய்க்கென மருந்து கொடுத்தால் AGGRAVATION ஆகும். TOTAL போட்டுக் கொடுத்தால் நோய் குறையும்.
288. விஷம், பூச்சு மருந்து சாப்பிட்டுவிட்டால் அதை உப்பு கரைசல் கொடுத்து வாந்தி எடுத்த பிறகு தான் மருந்து தர வேண்டும். இல்லை என்றால் குறி மாறி மாறி பொய் குறியாகவே காட்டி கேஸ்ஸை கெடுத்துவிடும்.
289. குறி தெரியாவிட்டால் SULPH முதலில் தரவேண்டும்.
290. சரியான மருந்து கொடுத்து AGGARAVATION ஏற்பட்டால் ACID-NIT தர வேண்டும்.
291. பிறந்த குழந்தைக்கு தடுப்பு மருந்து தரும் போது பெற்றோரின் மியாசம் எதுவோ அந்த வகை மியாச மருந்தை தரனும்.
292. சேகல் கூறும் தத்துவம் என்னவென்றால், நம்மிடம் வைத்தியம் செய்து கொள்ள நோயாளி வரும் போது, நோயாளியை தான் பேச விடணும். நாம் பேச கூடாது, நமக்கு புரியவில்லை என்றாலோ, நமக்கு தெரியவில்லை என்றாலோ அந்த இடத்தை நாம் கோடிட்டு காட்டணும். அது தான் நம்ம வேலை. உதாரணம் COMPUTER hpy பதிவு செய்து வைத்திருப்போம் அல்லவா. சுவிட்சை தட்டி விட்டவுடன் அது வந்து கொண்டே இருக்கும். சுவிட்சை தட்டி விடுவது தானே நமது வேலை. மற்றது எல்லாம் கம்யூட்டர் வேலை அல்லவா. அது போல் வரும் நோயாளியை நாம் என்ன செய்வது, என்பது போன்ற துவக்க வார்த்தைகளை நாம் உபயோகப்படுத்தி விடணும். தட்டி விட்டால் எல்லா விஷயத்தையும் நோயாளியே கொட்டி விடுவார். நாம் இடையில் பேசி கேஸை கெடுத்து விடக்கூடாது. அவர் சொல்லற மாதிரியே எழுதணும். உதாரணம் சாப்பிட்டு இருக்கிறேன், சாப்பிட்டு கொண்டே இருக்கிறேன் இந்த நுட்பமான வார்த்தைகளை அப்படியே பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் சேகல் ரெப்பரெட்டரியில் பொருத்தமானதை கண்டு பிடிக்க முடியும். நுட்பமாக கேஸ் எடுக்க தவறினால் எல்லாமே வீண். இந்த இடத்தில் ஹானிமேன் கூறுவதாவது, சரியாக கேஸ் எடுத்து விட்டால் பாதி வேலை முடிந்தது என்கிறார். நுணுக்கமாக எடுக்காவிட்டால், எல்லா வேலையும் வீணாக போய் விடும் என்கிறார்.

293. இனிப்பு சாப்பிட்டு (தவறு செய்து) தொல்லை ஏற்பட்டால் தான் மருந்து. இனிப்பு சாப்பிடுவதற்கு முன்னதாகவோ, தவறு செய்வதற்கு முன்னதாகவே மருந்து சாப்பிட்டு விட்டு இனிப்பு சாப்பிடலாம், மது, புகை, பிற குற்றங்கள் செய்யலாம் என்பதற்கு மருந்து இல்லை. தவறு செய்வதற்கு முன்பே மருந்து சாப்பிட்டு கொள்ளலாம் என்பதற்கு உலகில் மருந்து இல்லை. இரசாயனம் மாற்றம் ஏற்பட்டு நோயாக மாறிய பின்பு குறி காட்டும். குறிகளுக்கு தக்க மருந்து கொடுத்தால் குறியும், நோயும் போய்விடும் என்று ஹானிமேன் கூறுகிறார். (இன்று அலோபதி மருத்துவத்தில் குழந்தைகளுக்கு 12 வகையான தடுப்பு மருந்துகளும், கர்பிணிக்கு இரண ஜன்னி, மற்றும் பல தடுப்பு மருந்துகள் முன்னதாகவே கொடுக்கப்படுகிறது. ஹானிமேன் கருத்துப்படி, இது சரியா?)

MIND SYMPTOMS- மனக் குறிகள்

294. தன் மேலே கோபம், கோபத்துக்கு பொறுப்பு ஏற்றால் OP. 295. ஆணவம் என்றால் PLAT.
296. ஊருக்கு போகும் போது சிறுநீர் வருமோனு எதிர்பார்த்து பயந்தால் CALC-C.
297. ஓன்றையே திரும்ப, திரும்ப வெட்கமில்லாமல் பேசிக் கொண்டு, சிhpத்து கொண்டிருந்தால் HYOS.
298. தூரம் அதிகமாக இருக்குது, குறைவாக இருக்கிறது, உருவம் பூதமாட்டம் இருக்கிறது, குச்சியாட்டம் இருக்குது என்று அதன் இயல்பை மாற்றி பேசினால் OP.
299. நேரம் பணம் போய்விட்டது ஏன் தாமதம் ஆகிறது என்று மிரட்டினாலும், என்னை ஏதோ பிடிச்சிகிட்டு இருக்குது என்றாலும் OP.
300. அரிப்பினால் வாழ்க்கையே விட்டு போச்சி என்றால் PSOR.
301. சிவப்பு நிறத்தின் மீது விருப்பம், வெறுப்பு TARENT.
302. தான் செய்யாத குற்றத்திற்கு பழி போட்டு விட்டார்;களே என்றும் எல்லா நோயும் வந்திடுச்சி என்றாலும் ; LYC.
303. குழந்தை வியாதியின் போது தூக்கி வைத்து வேடிக்கை காட்ட விரும்பும் PULS.
304. வியாபாரத்தில், வாழ்க்கையில், நோயில் தேருவோமோ என்று நம்பிக்கையில்லை நல்லாகுமோனு நம்பிக்கையில்லை வாழ்க்கையில் தேருவோமா என்று நம்பிக்கையில்லை PSORINUM.
305. காப்பி குடித்தால் தலைவலி வரும் CANN-IND, CHINA, GLON, COLOY, HYOS, SIL.
306. காப்பி குடித்தால் தலைவலி விடும் ; CANN-IND, CHINA, COLOY, HYOS, ARS, SIL.
307. மிகுந்த மகிழ்ச்சிக்கு பிறகு தொல்லை என்றால் COFFEA.
308. மூடநம்பிக்கை தண்ணி தாண்டிய பிறகு தான் தொல்லை, தீட்டு சோறு ஆகாது, காலில் வண்டு கடியாட்டம் யாரோ மருந்து வெச்சிட்டாங்க என்றால் RHUS.
309. பிறருக்காக முழு பொருளையும் தியாகம் செய்வார் கஞ்சதனம் ; PULS.
310. பிறர் மீது அக்கரை எடுத்து கவனிப்பார் தியாகம்; COCCULUS.
311. இராட்டினம் போன்றவற்றில் இறங்;கும் போது மயக்கம் ; KALI-PHOS, BORAX.
312. பல் டாக்டரிடம் போக பயம் CALC-CARB, STRAM.
313. ஊசி போடுவார்களோ என்றும், டீச்சர் அடிப்பார்களோ என்றும், பிறவற்றினால் நாம் அடிபடுவோமோ என்றும் பயந்தால்; STRAM. 314. ஆபத்து வந்திடுமோனு எதிர்பார்த்து பயந்தால் CALC-C.
315. காம உணர்வு எப்போது இருக்கும், ஆனால் மயங்கி போய் ஈடுபட முடியாது PLAT.
316. எப்பொருள் மீதும், அதில் குற்றம் கண்டு, அதனால் வருந்தினால் CALC-CARB.
317. எப்பொருளையும் குற்றம் கண்டு பிறகு பொறாமை கொண்டு சாபம் வைப்பதும், சத்தியம் செய்வதும்; ANAC.
318. மார்பிலும் யோனியிலும் கைபட முடியாது ஆனால் காமம் மிகுதி PLAT.
319. மரண பயம் ACON.
320. பயமின்றி கூறினால் ARS.
321. பல்லுக்கடியில் நாக்கு சிக்கினால் HYOS.

குளிர் காய்ச்சல்

1. குளிர் முதுகிலிருந்து மேலே ஏறி எரிச்சலாக மாறி விடும் PHOS.
2. குளிர் காய்ச்சலின் போது அதிக பசி PHOS.
3. 106 டிகிரிக்கு மேல் காய்ச்சல் அதிகமாகுதல் எந்நிலையிலும் மாமூல் மலமே பிண நாற்றம் அடிக்கும் கை கால் துண்டு துண்டாக இருந்தால் BAPTISA.
4. ஓரு பக்கம் சூடு ஒரு பக்கம் குளிர்ச்சி வட்ட, வட்டமாக மருத்;து போய் விடுதல், மஞ்சள் பேதி ஒரு தடவை, ஒரு தடவை வேறு நிறம், இப்படி மாறி, மாறி 2,0 3,0 50 நாட்களுக்கு போக்கு மாறி, மாறி, தள்ளி போனால் PULS.
5. தன் மீது தான் கோபம் கொண்டு அழுவார் PULS.
6. இரவில் தாகம், புளிப்பு விருப்பம், மாலையில் காய்ச்சல் பாதம் எரிச்சல், குளிர் தரையில் பாதம் வைத்திருப்பார், பாதம் மட்டும் போர்த்த மாட்டார் SULPH.
7. வேகமான காய்ச்சல் விட்டு விட்டு வரும் வெறி ஆர்ப்பாட்டம் BELL.
8. வேகமான காய்ச்சல் ஆர்பாட்டமும் அமைதியும் மாறி மாறி வரும் STRAM.
9. குறைந்த காய்ச்சல் ஆனால் ஆர்பாட்டம் அதிகம் HYOS.
10. குளிர் காய்ச்சலின் போது மூன்று பேர் உட்கார்ந்தால் தூக்கி எரிவார் அவ்வளவு நடுக்கம் GELS.
11. குளிர் காய்ச்சலின் போது முகம் கருஞ்சிவப்பு GELS.
12. குளிர் காய்ச்சலின் வேகம், உருட்டி விடுவார் BELL.
13. வேகமான குளிர் காய்ச்சல் BELL.
14. வேகம் குறைந்த காய்ச்சல் சிவப்பு M-P.
15. சூரிய ஒளி பட்டவுடன் தலைவலி BELL, GLON.
16. காலை மடக்கி அடி வயிற்றை அழுத்தி பிடித்தால் சுகம் ; SEP.
17. காலை மடக்கி அழுத்தி பிடித்தால் வலி BELL.
18. போர்த்தினால் சுகம் ARS.
19. குளிர் காய்ச்சலின் போது குளிர் காய்ந்தால் சுகம் ; BELL, HELE, STRAM.
20. உச்ச கட்டத்தில் அவர் பார்க்கும் பொருள் கருப்பு BELL. மிதமான நேரத்தில் கருப்பு உருவம் என்றால் ARS.
21. உச்ச கட்டத்தில் அவர் பார்க்கும் பொருள் சிவப்பு HYOS. இதே இடத்தில் சிவப்பு விருப்பம் என்றால் TARENT. குளத்து தண்ணீர் எல்லாம் இரத்தமாக தெரிந்தால் RUBRUM.
22. காய்ச்சலின் போது வெளியில் தங்கி இருக்கும் போது வீட்டு ஞாபகம் எடுத்தால் ; BELL, BRY.
23. காய்ச்சல் தீடீரென வந்தால் BELL.
24. காய்ந்த மலம், பெரிய கொய்யாபழம் அளவு ஒரே உருண்டை ALUM.
25. உப்பிசமாக இருக்குது மலம் வரவில்லை என்று கூறினால் ALUM.
26. மலம் வரவில்லை உப்பிசம் இல்லை என்றால் BRY.
27. குளிர் காய்;ச்சலின் போது ஐஸ் வாட்டர், புளிப்பு விருப்பம்; PHOS.
28. புளிப்பு விருப்பம் பாதம் போர்த்த மாட்டார் இரவில் தாகம் மாலையில் காய்ச்சல் SULPH.

உணர்ச்சிகள்.

1. டாக்டரின் மீதும் மருந்தின் மீதும் சந்தேகம் HYOS.
2. தலை வெடிக்கிற மாதிரி வலி பொய் உணர்ச்சி GLON.
3. மூளை கலக்கற மாதிரி உணர்வு வலிப்புக்கு முன் CIMIC.
4. குனிந்தால் நகர்ந்தால் மூளை ஆடற மாதிரி உணர்வு B-C, B-M.
5. பாதம் குளிர்ந்து பிறகு தலைக்கு வந்து, பிறகு உடம்பு தடித்து, பிறகு வலிப்பு ஏற்பட்டால் STRAM.
6. பார்க்கும் முகம் உச்சகட்டத்தில் வியாதி கருப்பாக தெரியுது என்றால் BELL.
7. சிவப்பாக தெரியுது என்றால் HYOS.
8. பார்க்கும் பொருள் இரண்டு, இரண்டாக தெரிந்தால் VERAT-VIRIDE
9. வீட்டில் இருக்கும் போது வெளியில் போய் வேடிக்கை பார்க்க விருப்பம் ; PULS.
10. நரகத்தில் இருப்பது போல உணர்ச்;சி MERC-SOL.
11. மனம் உடைஞ்சிடுச்சி, நொருங்கிடுச்சி, உடம்பு கரைஞ்சிடுச்சி, காற்றாட்டம் பொசுக்குனு இருக்குது என்றால் THUJA.
12. வயிறு பிள்ளை பெறுபவர் போல் பெரியதாக உள்ளது என்றாலும,; வயிற்றில் பாம்பு, தேள் போன்ற ஜந்துகள் உள்ளது என்றாலும் THUJA.
13. மனமோ, உடம்போ கல்லாட்டம், மரமாட்டம் ஆயிடுச்சி இப்படி கூறினால் N-M.
14. ஆசன வாயில் மிளகாய் வைத்தது போல் எந்நோயிலும் உணர்ச்சி ஏற்பட்டால் CAPSICUM
15. பேதியின் போது, மலவாயில் குறுகுறுத்த உணர்ச்சி CANTH
16. சிறுநீர் பையில் எரிச்சல் உணர்ச்சி என்றால் CANTH
17. சுவற்றில் செங்கல் தெரியும் மாய உணர்ச்சி THUJA.
18. தன்னிடத்தில் உள்ள சிறு பொருள் வைத்து திருப்தியடையாததால் SULPH.
19. நோயின் உச்சக்கட்டத்தில் பேய் முகம் தெரியுது பயமின்மை முரட்டுத்தனம் இருந்தால் BELL.
20. கடுமையான வாய் நாற்றம் உடம்பு துண்டு துண்டாக இருப்பது போல் கிடந்தால் BAP.
21. குளிர் காய்ச்சலின் உச்ச கட்டத்தில் மூளையில் எலி ஓடுது. தாடி வைத்த முகம் தெரியுது என்றால் PHOS.
22. குழந்தையோ, சிறியவரோ கடுமையான காய்ச்சல் நோயின் போது, தூக்கி வைத்து கொண்டு வேடிக்கை காட்டினால் நோய் தணிந்து போய்விடும், விருப்பமும் PULS.
23. நோயின் போது பொருள்கள் எல்லாமே மஞ்சளாக தெரிந்தால் SANTONE.
24. நடு இரவில் யாரோ கழுத்தை பிடித்து நசுக்குவது போல் உணர்ச்சி SPONG
25. தன் தவறு செய்தது போல் குற்ற உணர்வு உருத்திக்கிட்டேயிருக்குது என்றால் CHELLIDONIUM.
26. வலிப்பில் கரண்ட் சேக் அடிக்கற மாதிரி இருக்குது என்று சொல்வான் B-M.
27. வலியின் போது கரண்ட் சேக் அடிப்பது போல் தோன்றினால் PHYTOLOCA
28. அரிப்பின் போது மேலே பூச்சி ஊர்ற மாதிரியுள்ளது என்றால் BRY.
29. அரிப்பின் போது செல் அரிக்கிற (மய மயனு) மாதிரி என்றால் COCCULUS-IND.
30. இதயம் இளைச்சிகிட்டே போவதுபோல் இருக்குதுங்க (அ) சிறிதாகிக்கொண்டே போவதுபோல் இருக்குதுங்க என்றால் IOD.
31. இதயத்தை கைக்குள்ள, (அ) இரும்பு வளைக்குள்ள வைச்சி நசுக்கற மாதிரி வலி CACTUS-GRIND.
32. இதயத்தை ரெண்டு பக்கம் வைச்சி நெருக்கற மாதிரி என்றால் N-M.

பொதுவானவை

1. கடுமையான உழைப்புக்கு பிறகு அரிப்பு N-M. 2. குளிர் காலத்தில் அரிப்பு என்றால் N-M.
3. புழு, பூச்சி ஊறுவது போல் அரிப்பு COCULUS, BRY, SULPH.
4. பழுக்காத காய்க்கு TARENTULA.
5. முடி வெட்டிய பிறகு தலை வலி BELL.(சிறு அதிர்ச்சி)
6. விரதத்தினால் தலைவலி LYC.
7. பசியினால் தலைவலி LYC. SANICULLA.
8. அதிகம் சாப்பிட்டதால் தலைவலி COFF. NUX. SULPH.
9. சாப்பிட்டால் தலைவலி தணிந்தால் ANAC. PULS. KALMIA
10. வேலைக்கு போக வெறுப்பு அதனால் தலைவலி RHOD, SEP.
11. சிற்றின்பத்தின் மகிழ்ச்சியின் போது தலைவலி COFFEA வெறுப்பு என்றால் SEP. மயக்கம் என்றால் PLAT.
12. விசக் கடிக்கு BRY, THUJ.
13. உடம்பு முழுக்க சூட்டினால் நடுங்கினால் GELS.
14. தலை மட்டும் நடுங்கினால் LYC. PULS. SULPH. GLON.
15. கரு நிறப் போக்கு எங்கு ஏற்பட்டாலும் AM-C.
16. பாதம் மீது காற்று பட விட்டால் SULPH.
17. பாதம் மீது போர்த்தினால் ARS.
18. பாதிக்கப்பட்ட இடம் போர்த்தினால் ARS.
19. குளிர் காய்ச்சலின் போது குளிருக்காக தலையை விட்டு போர்த்துவார் ARS.
20. தலையையும் சேர்த்து போர்த்துவார் RHUS. உடல் முழுக்க போர்த்திக் கொண்டால் NUX. வெயிலின் போது உடல் முழுக்க போர்த்திக் கொண்டால் SULPH.

காக்கை வலிப்பு

1. காமவெறி அதிகம். அதன் பிறகு காக்கை வலிப்பு B-M.
2. அமாவாசைக்கு வரும் வலிப்புக்கு CAUST.
3. பௌணர்மிக்கு வரும் வலிப்பு CALC.
4. பூப்பின் போது வலிப்பும், பேதியும் ஏற்பட்டால் B-M.
5. வலிப்பின் போது மூளையே கரைக்குது CIMICIFUGA.
6. பயங்கரமான கூச்சல் பின்புறம் சாய்ந்தால் CIC
7. வில் போல் வளைந்து முன்புறம் சாய்ந்தால்; CUPUR-MET
8. கையை கரகரவென சுழற்றினால் STRAM
9. பாதம் ஐஸ் மாதிரியாகி தலை, உடம்பு தடித்து விடும் STRAM
10. வலிப்பின் போது முன்னும், பின்னும் வளைந்தால் BELL, CICUT, CUPR.
11. பயங்கரமான விக்கல், கூச்சம் CICUTA.
12. தாடை மட்டும் ஆடும் வலிப்புக்கு STRAM
13. மரணக்கட்டத்தின் போது சளி தொண்டையில் கவ்விக் கொண்டால் (சேத்துமாம்) - ANTI-TART.

மலம்

1. காலையில் எழுந்தவுடன் மலம் கழிய ஓடுதல்; SULPH
2. காலையில் எழுந்தவுடன் மலம் ஒழுதுடுமோனு பயத்தில் ஓடினால் ALOS. காற்று பிரியும் போது மலம் தெரியாமல் ஒழுது விட்டாலும் ALOS மலம் கழிய உட்காரும் போதே பீச்சியடித்தால் CROTON-TIG. உட்கார்ந்து முக்கிய பிறகு பீச்சியடித்தால் GAMBOGINA
3. மலக்காற்றுடன் தெரியாமல் மலம் போனால் ALOSE
4. தெரிந்து வந்தால் SULPH
5. திராட்சை பழம் போல் மலம் மேலே மூக்கு சளி தடவியது போல் GRAPH.
6. ஒரே மாதிரி பெரிய பிசு, பிசுப்பான மலம் வரும் ALUM. 7. வாரம் ஒரு முறை மலம் போகும் MURAX
8. 4 நாளைக்கு ஒரு தடவை, கஷ்டமில்லை என்றால் BRY.
9. பழுப்பு நிற பேதி ARS.
10. குட்டையானவர்களுக்கு முரடு தட்டி பேதி ஏற்பட்டால் B-C.
11. மலம், பேதி, சீதகட்டு பிறகு மிளகாய் காரம் மாதிரி எரிச்சல் CAP.
12. பேதியுடன் சிறுநீர் எரிச்சல் CANTH
13. மல வாயில் எப்போதும் குறு, குறுத்த உணர்வு CARBO-VEG.
14. மலம் கழிய முக்கும் போது குமட்டல் IP
15. நீர் கடு, கடுப்பு, சீதக் கடுப்பு ஒரே நேரத்தில் CANTH.
16. மலம் கழிந்தால் சுகம் NUX
17. மலம் கழிந்தால் கஷ்டம் MERC-SOL. உடன் இரத்தம் வந்தால் MERC-COR.
18. பேதியின் போது இரத்தம் வந்தால் MERC-SOL
19. கழிந்த பிறகு இரத்தம் வடிந்தால் MERC-COR.
20. தூங்கும் போது பேதி, அப்போது மனம் மந்தம் RHUS.
21. மலம் கழியும் போது வேலை பற்றி ஞாபகம், வேலை கெடுது என்றால் BRY.
22. பயத்தில் வேகமான பேதி கொட்டும் ACON.
23. மலம் கழிந்த பிறகு ஐஸ் மாதிரி ஆகி விட்டது. பிறகு மரணகட்டம் போனால் CAMPH.
24. மலம் கழிந்த பிறகு ஐஸ் மாதிரியாகி ஏராளமான வியர்வை வெளி வந்தால் VERAT.
25. மலம் கழிந்த பிறகு, கையை கொண்டே காற்றுக்காக விசிறி கொண்டால் CARB-VEG
. 26. மலம் கழிந்து ஐஸ் மாதிரி ஆகி குரக்களை பிடித்தால் CUPPURAM.
. 27. பேதியின் போது பச்ச தண்ணீரில் முகத்தை கழிவினால் ALOS.
28. பேதியின் போது முகத்தை சுடுநீரில் கழிவினால் ARS
29. பூப்பின் போது பேதி, வலிப்பின் போது பேதி RHEUM.

காமாலை

1. கல்லீரலின் மேல் மோதக் கூடாது ARN
2. கல்லீரலில் அடைக்குது என்றால் GRATUS - OXI.
3. சளி, வலிப்பு உடன் காமாலை AGAR.
4. சித்த, ஆங்கில மருந்து சாப்பிட்ட பிறகு காமாலை NUX.
5. பேதிக்கு பிறகு காமாலை AUR.
6. அதிக தீட்டு, பால் கொடுத்த பிறகு விந்து இழந்த பிறகு காமாலை CHINA.
7. பல தடவை குளிர் காய்ச்சல் வந்து வந்து போன பிறகு காமாலை CHINA.
8. விலா எலும்பு கீழ், நேர் முன்னும், பின்னும் வலி என்றால் CHELIDONIUM சூடாக சாப்பிட விரும்பினால் ARS.. ஆனால் பாத்திரத்தை துணியை பிடித்துக் கொண்டு கொதிக்கும் திரவத்தை குடித்தால் CHELIDONIUM. பச்ச தண்ணீரை பயந்து கொண்டு சொம்பு, சொம்பாக குடித்தால் ACON. எப்போதும் வேலையை பற்றி நினைத்துக் கொண்டும், பேசிக்கொண்டும் குடித்தால் BRY. ஒரு முழுங்கு மட்டும் குடித்து தொண்டையை நினைத்தால் ARS.. பச்ச தண்ணி குடிக்க நினைத்தால் SULPH. ஐஸ் தண்ணி, ஐஸ் குடிக்க விரும்பினால் PHOS.

சருமம்

1. ஆடையை கழற்றியவுடன், வெளிக்காற்று பட்டவுடன், அரிப்பு RUMEX.
2. ஆசன வாயில் பூச்சி ஊர்ற மாதிரியே உள்ளது அரிப்பு ALUM.
3. யோனியில் பூச்சி ஊறுவது போல் அரிப்பு COCUL.
4. அம்மை, சரும நோய் அடக்கிய பிறகு அரிப்பு ARS
5. படுக்கை சூட்டினால், அரிப்பு அதிகம் MERC.
6. வியர்வையினால் அரிப்பு MERC.
7. தலைச்சுழியில், சூடு சீழ் மண்டையில் புழு வைத்தால் MERC. மண்டை தோலுக்கு அடியில் புழு வைத்தால் MEZ.
8. குளிர் காலத்தில் அரிப்பு RHUS.
9. இடுப்பு கீழ் அரிப்பு RHOD. விதையில் அரிப்பும், வீக்கமும் RHOD.. அதுவே தேங்காய் அளவு பெரியதாக வீங்கி போனால் SPONGIA.
10. சீழ் கொப்பளம், சூடு, குளிர்ச்சி, இரண்டிலும் தொல்லை MERC.
11. சீழ் கொப்பளம் உணர்ச்சி அதிகம் தொட முடியாது HEP-SULPH
12. சீழ் கொப்பளம் தொட முடிந்தால் SILICA.
13. மாட்டுக்கோ, மனிதருக்கோ பாதத்தில் கடுமையான நாற்றமுள்ள சீழ் புண்கள் ANTHRAX.மாட்டுக்கு ஏற்படும் கால் குழம்பு நோய்க்கு ஏற்படும் விஷமித்த, அழுகிய சீழ் புண்ணுக்கு PHYROGINAM, ANTHRAX.

தலைவலி

1. தலைவலியின் போது மரண பயம் வேகம் ACON. உடன் ; STRAM, HYOS.
2. தலைவலியில் சிவப்பு BELL.
3. தலைவலியில் அழுத்தி பிடித்தால் சுகம் ; BRY.
4. தலைவலியின் போது புரட்ட விருப்பம் RHUST.. தலைவலியில் பைத்தியம் மாதிரி உருட்டினால் ; HELLI-BROS.
5. தலைவலியின் போது ஜீல்லிப்பை கொண்டு ஒத்தடம் கொடுத்தால் CALC.
6. தலை வெடிக்கிற மாதிரி வலி GLON.
7. வெயிலில் போனால் தலைவலி உடன் சிவப்பு [ BELL. N-C.
8. பூவாசம், சிறு சப்தம் கேட்டால் தலைவலி NUX.
9. டி.வி, வெல்டிங் பார்த்த பிறகு தலைவலி NUX.
10. தலைவலியின் போது பார்க்கும் பொருள், நபர் இரண்டாக தெரிந்தால் GELS
11. தலைவலியின் போது பாதி இருட்டு, பாதி வெளிச்சம் GLON.
12. கண் விழிக்கும் போதே தலைவலி, காலையில் எழுந்தவுடன் தலைவலி N-M.
13. பார்க்கும் பொருளின் கீழ் பகுதி இருட்டாகவும், மேல் பகுதி வெளிச்சமாகவும் தெரிந்தால் VERAT-VIRIDE.

இதயம்

1. அசைந்தால் இதயம் நின்றிடுமோனு பயம் LOBILIA.
2. 3வது 5வது 7வது துடிப்புகளில் நின்று, நின்று துடித்தால் ; GELS.
3. இதய நோயில் அசைந்தால் சுகம் ; GELS. அசையாமலிருந்தால் DIGITALIES (அசைந்தால் கஷ்டம்)
4. இதய நோய் வருமோனு எதிர்பார்த்து பயம் CALC.
5. தலை மட்டும் ஆட்டினால் LYC. PULS. GELS.
6. உடல் முழுவதும் ஆட்டினால் GELS.
7. இருதயத்தை ஒரு கைக்குள் உருட்டி (பந்து வைச்சு) நசுக்கற மாதிரி இருந்தால் CACTUS-G. இரும்பு வலைக்குள் வைச்சு அழுத்தற மாதிரி இருந்தால் CACTUS-G.
8. இருதயத்தை இருபுறமும் கட்டையில் வைச்சி நசுக்கற மாதிரி இருந்தால் N-M
9. நள்ளிரவில் மூச்சு திணறி துள்ளி எழுந்தால் SPONGIA.
10. யாராவது கழுத்தை பிடிச்சி நசுக்கற மாதிரி இருக்குதுங்க என்றாலும் SPONGIA.
11. தூக்கத்தில் இருந்து துள்ளி எழுந்து ஓடினால் LOBILIA.

அடிதடி காயம்

1. அடிபட்ட பிறகு மரணபயம் ACON. காய்ச்சல் ஏற்பட்டாலும் இது தான்.
2. அடிபட்ட சீழ் புண் காற்று பட்ட முடியாமல் மூடி வைத்து பின் நாற்றம், வீசுதல். சுடுநீரில் ஒத்தடம் தருவது ARS..
3. பெண்ணின் மார்பில் ஆழமா வெட்டி விட்டால் ; CONIUM. BELLIS-PER. மற்ற இடங்களில் எங்கும் ஆழமா வெட்டி விட்டாலோ, கருப்பை, டான்சில், குடல் போன்ற இடங்களில் ஆழமாக வெட்டிய பிறகோ, அறுத்த பிறகோ BELLIS-BER. லேசாக வெட்டு பட்டால் CALENDULA. பழுக்காத கல் போல் உள்ள கட்டியை உடைக்க MYRISTICA. இதை ஹோமியோபதியில் கத்தி எனப்படும்.
4. அடிபட்ட பிறகு மன அதிர்ச்சி, இரத்தக் கட்டு, ஊமை காயம் தொட முடியாது ARN.
5. மார்பில், முகத்தில் ஓங்கி குத்தினாலும், ஊசியில் குத்தினாலும், ஆனியில் குத்தினாலும், ஈட்டியில் குத்தினாலும், வலிக்குது என்று மேலே ஏறினாலும் LED.
6. நரம்பு வெட்டு HYPERICUM.
7. கருப்பை எடுத்த பிறகு, எடுத்த பகுதியில் நரம்பு வலி HYPER.
8. எலும்பு பிழந்து விட்டால் SYMPH.
9. நரம்பு சுளுக்கி விட்டால் RHUS-TOX.
10. தேள் கடித்தால் ஒரு சிலர் தண்ணீhpல் கை வைத்து, கொண்டு இருப்பார் APIS - MEL. இதே இடத்தில் சுடுநீரில் கை வைத்து இருந்தால் ARS.மேலே விறு, விறுனு ஏறினால் LED. சிதாம்பு குத்துவது போலிருந்தால் LED. ஆஸனவாயிலும், யோனியிலும் சிதாம்பு குத்துவது போலிருந்தால் ACID-NIT. கொசு, எறும்பு கடிக்கு LED. நெறி ஏறாவிட்டால் APIS.சீழ் பிடித்து விட்டால் SILICA. தொட முடியவில்லை என்றால் HEPER-SULPH.
11. காலை உணவு சாப்பிட்ட பிறகு மந்தம் (அ) கிறு, கிறுப்பு ஏற்பட்டால் ; BAPT.
12. பார்க்கும் பொருள் பச்சை கலரில் இருந்தால் SANTONIUM.
13. குளத்து நீர் இரத்த கலரில் இருந்தால் SOLINIUM.