முன்னுரை:-


CLASSICAL: MIND SINGLE SYMTOMS, DRUGS.

முன்னுரை:
-

ஆங்கில மொழி அறிஞர் பெருமக்களுக்கும், ஹோமியோபதி தந்தை டாக்டர். சாமுவெல் ஹானிமேன் அவர்களுக்கும். அவரை தொடர்ந்து வந்த அறிஞர் பெருமக்களுக்கும், ஆன்மீகத்தை ஆரம்பம் முதல் இன்று வரை மனித சமுதாயம் மேன்மை அடைய வேண்டும் என்பதற்காக பெறும் முயற்சிகள் செய்து நூல் பல எழுதி தந்த அத்தனை பெரியோர்களுக்கும், ஹோமியோபதியில் உலகில் உயர்ந்த கருத்தை கூறுகின்ற இன்றைய டாக்டர் சேகல் அவர்களுக்கும், இன்றைய நிலையில் உலகில் தெளிவான முடிவான முழுமையான ஆன்மீக கருத்தை கூறிய வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கும், அவரது கருத்தை ஏற்று கடைபிடித்து உண்மை கருத்தை பரப்பி வரும் அத்தனை ஆன்றோர்களுக்கும், சான்றோர்களுக்கும் எனது நன்றி கலந்த பணிவான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

Dr. சாமுவெல் ஹானிமேன் மற்ற ஹோமியோபதி அறிஞர்கள் பல படைப்புகள் செய்து இருந்தாலும், அதை எனக்கு பக்குவமாக காட்டிய குரு Dr. S.V.D. செல்லம் அவர்களின் மலர் பாதங்களுக்கும், இன்று ஹோமியோபதி தத்துவத்தில் உயர்ந்த இடத்தை பிடித்துள்ள Dr. சேகல் அவர்களுக்கும் அந்த தத்துவ அர்த்தங்களின் அடிப்படையின் மூல கருத்தையே சொல்லி அவரையும் மிஞ்சிய இயற்கையின் விந்தையைக் கூறிய ஆன்மீக தந்தை வேதாத்திரி மகரிஷி என்ற அன்பு மற்றும் அறிவு கடலில் எனது இந்த முயற்சியை காணிக்கையாக்கி அதில் கரைத்து விடுகிறேன்.

இப்படிக்கு,
ஹோமியோபதி தொண்டன்,
Dr. S. மாதவன் R.H.M.P (B) பதிவு
தமிழ்நாடு அரசு ஹோமியோபதி மெடிக்கல் கவுன்சில்,
31, கோவிந்தராஜ தெரு,
அம்மாப்பேட்டை சேலம் - 636 003.

குறிப்பு:-

எனக்கு அன்போடு உதவியவர்கள் S.M. வாசுதேவன், D.M. அருணா, J.M. யுவராஜ;, P. மகேஸ்வரி, பேராசிரியை, D.M. புனிதா, D.M. உஷாராணி அவர்களது உழைப்பிற்கு மகிழ்ச்சியும், நன்றியும். இது H.K.S.V. கல்விக்குழு தயாரித்த தொகுப்பு.

அன்புடன்:- Dr. S.M

பொருளடக்கம்

1. மனம்
2. சிறுவர் மனநிலை & பிரசவ குறிப்பு
3. நினைவாற்றல்
4. தலை - வலிகள், தலைவலி, ஒற்றை தலைவலி
5. கண்கள் - முன்புறம் தோன்றும் மாய தோற்றம்
6. காது - எலும்பு வளர்ச்சி (J.T.K. 285 - ல் பார்க்கவும். சத்தியம், தத்துவம்)
7. மூக்கு - போர்த்தி கொள்ளுதல் (J.T.K. 324 - ல் பார்க்கவும்)
8. பற்கள், வாய் - சொத்தை, உணவு சிக்குதல், மூடுதல் (J.T.K. 397 பார்க்கவும்)
9. தொண்டை, கழுத்து - எச்சில், சளி அப்புதல்( J.T.K. 448 பார்க்கவும்)
10. மார்பு, நுரையீரல் - சுவாச கோசம், ஆஸ்துமா, T.B. (J.T.K. 746 வடி 883 - ல் பார்க்கவும்)
11. மார்பு, இதயம் - இதய நோய்கள், அதை சார்ந்தவை (J.T.K. 884 வடி 951 - ல் பார்க்கவும்)
12. மேல் வயிறு - வலி, பசியின்மை.
13. அடி வயிறு - காமாலை, பேதி, சீதபேதி (J.T.K. 606 வடி 644)
14. ஆண் மற்றும் உறுப்புகள் - நோய்கள் (J.T.K. 693 வடி 714ல் பார்க்கவும்)
15. பெண் மற்றும் உறுப்புகள் - பிரசவகுறிப்பு, நோய்கள்J.T.K. 714 வடி 745 - ல் பார்க்கவும்)
16. கை, கால், எலும்பு, சதையும் - அடி, தடி காயம் (J.T.K.952 வடி 1233)
17. சிறுநீரகத் தொல்லைகள் - (சிறுநீர் பை 645 வடி 662 வரை, KIDNEYS 662 வடி 667 வரை, விந்து சுரபி 667 வடி 668, சிறுநீர் உட்புற வலி 669 வடி 680 வரை, சிறுநீர் 680 வடி 692 வரை J.T.K. - ல் பார்க்கவும்)
18. நரம்பு - காக்கை வலிப்பு
19. சருமம் (அ) தோல் - வறட்டு சொறி, பிளேக்கு, வாதநோய் வியர்வை நிலைகள் 1293 வடி 1332 (J.T.K. - ல் 1303 வடி 1340 வரை)
20. காய்ச்சல் - (J.T.K. 1259 வடி 1292 வரை தூக்கம், 1234 வடி 1258)
21. பொதுவானவை - (1341 வடி 1423 J.T.K. பார்க்கவும்).

மனம் கோபத்தின் போது மற்ற குணங்கள் தோன்றினால் ALU, CIC, CALC, CHAM, SIL, ZINC-P. தான் செய்த தவறை பிறர் தட்டி கேட்டால் கோபம் ARN, ARS, COLOC, N-M, NUX, PH-AC, PULS.தூங்கும் போது எழுப்பினால் கோபம் SIL, ZINC. காரணமே இல்லாமல் கோபப்பட்டால் MEZ. சளி பிடித்தால் கோபம் CALC-C. டல்லாக (சோம்பலாக) இருக்கும் போது கோபம் வந்தால் ARS. கோபமாகவே இருப்பார் NUX. கோபத்தின் போது சமாதானப்படுத்தினால் கோபம் மேலும் அதிகமாகும் ARS, CHAM, HEP, N-M, SABAD. கோபத்தின் போது முகம் சிவந்தால் BELL, BRY, CALAD, CHAM,HYD, NUX, PULS, STAPH, STRAM. கோபத்தில் மூக்கு நுனி சிவந்தால் சில மருந்துகள். கோபத்தின் போது பெண் தன் மீதே கோபப்பட்டாள் ARS, BELL, LYC, NUX, STAPH, SULPH.தடுத்தால் கோபம் ARS, BELL, NIT-AC, NUX-V, STAPH, SULPH. தன்னையே தப்பான நினைத்துக் கொண்டு தன் மீதே கோபப்பட்டால் ANAC, CHAM, HEP, MERC-C, MEZ, PHOS, NUX, STAONIC, ZINC. திடீர்னு முன் கோபம் BAR-AR.வலியின் போது யாராவது பேசினால், கோபத்தில் அடிப்பார் BAR-ACID. கோபத்தின் போது பெருமூச்சிவிட்டால் CHAM. கோபத்தின் போது மூலையில் உட்காருவார் AM-MUR, IGN, N-M, PETR, PULS, STAPH, SIL. கோபத்தில் தன்னையே அடித்து, காயப்படுத்திக் கொண்டாலும் SULPH, STAPH, TUB, COFF, COLOC.

கோபத்தின் போது நடுங்குதல் STAPH, TUB. கோபத்தின் போது பயப்படுதல் THUJ. கோபத்தின் போது பிறர் மனம் நோகும் படி பேசுவார் ; CHAM. தான் நினைத்தது நடக்காவிட்டால் கோபம் THUJ. சத்தம் கேட்டால் கோபம் HEP, IP.தூங்கும் போது சப்தம் கேட்டு கோபம் வந்தால் CALAD. கோபத்திற்கு பிறகு அசந்து உட்கார்ந்து விடுதல் CALC-P, CIST. பேச ஆரம்பித்தாலே எதிரே உள்ளவர்க்கு கோபம் வந்திடும் CHAM, HEP, VALER. கோபத்தில் தன் தலையை, உடலை கையால் அடித்து கொள்வார் BELL, CAPS, NUX, HYOS, STAPH. இவரை தொட்டாலே கோபப்படுவார் AUR - M. தன்னுடைய செயல் செய்தது தப்பா போய்டுச்சினு கோபப்பட்டால் AUR- M. மாத விடாய் காலத்தில் அவதிப்படுதல் GRAPH, PLAT. கோபமாக பேசிய பின்பு அவதிப்படுதல் PLAT. அவதியில் படுத்துக் கொண்டால் சுகம் MAG-C. வலியினால் அவதிப்படுதல் ACON, ARN, ARS, BELL, CARB-V, DIG, SPONG. இருக்கமான ஆடையை கட்டிக் கொண்டிருப்பதால் அவஸ்தை ARG-N. எல்லாமே இருக்கமாக இருக்குது என்று எண்ணி அவஸ்தை படுதல் ARS. சாப்பிடும் போது வெறுப்புடன் அவஸ்தை SEP. சாப்பிட்ட பிறகு அவஸ்தை ASAF, SEP. வெளி சூட்டின் போது அவஸ்தை ARN, CALC, K-C. பயங்கரமான செய்தி, விசயங்களைக் கேட்டல் அவஸ்தை CALC. வேதனையினால் புலம்பி அவஸ்தைபட்டால் TARENT. வேதனையினால் அவதிபட்டு படுத்துக் கொள்வார், ACID-P, HAMM, MEZ.

நண்பனை இழந்த பிறகு அவதிபடுதல் ACID - NIT.மாதவிலக்கு முன்பு அவதி GRAPH, MURAX. மாதவிலக்கின் போது அவதி BELL, CALC, COPAIVA, IGN, PLAT, NIT-AC, STANN. குமட்டலின் போது அவதி ARS, DIG.. அழுத்தர மாதிரி, இறுக்கி பிடிக்கர மாதிரீ இருப்பதால் அவதி CANN-I, OP, VERAT. அழுத்தினால் அவஸ்தை அதனால் உட்காhந்து கொள்வார் VERAT. வேதனையின் போது மூச்சு தடுப்பால் அவஸ்தை ARS. கூட்டத்தினாலும், வெளிச்சத்தினாலும், உடலில் ஏற்படும் காயங்களாலும் அவதிபடுதல் OP, MERC-S. மலம் கழியும் முன் அவதி ACON, VERT. மலம் கழியும் போது அவதி MERC-C, VERAT. அவஸ்தையினால் தற்கொலை செய்து கொள்ள முயற்சிபார் HEP. அவஸ்தையினால் துள்ளுதல் துடித்தல், இங்கும், அங்கும் ஓடுவார் ACON, ARS, CHAM, COFF. அவஸ்தையினால் நடுக்கல், அசைந்தால் சுகம் PULS. சிறுநீhpல் இரத்தம் கலந்திருப்பதால் அவஸ்தை HYD. வாந்தியின் போது அவதி ASAF, ARS, PETR. காலையில் எழுந்த உடன் அவஸ்தைபட்டால் DIG, NAT-SUL, NUX. வெளியே காற்றில் போனால் அவஸ்தை ARS, BEZ-AC, ARG-N, CANTH, CINA, MAG-C, PLAT.

பரிட்சைக்கு முன்பு பயம் AETH, ANAC, GELS, SIL. நோய் மெதுவாக குணம் ஆகட்டு என்றால் PULS. நோய் சீக்கிரம் குணம் ஆகனும்னு சொன்னால் ARS. BELL, RHUS-T, VERAT.

நான் தான் பெரியவன் என்றால் PLAT. கனவில் திருடன் வந்தால், திருடன் வீட்டுக்குள் இருக்கிறானா என்று சந்தேகத்துடன் தேடி பார்த்தால் N-M. தன்னை யாரோ (வேவு) பின் தொடர்ந்து வர மாதிரி இருந்தால் LACH. நான் வேலை செய்வதையே பார்க்கறாங்க ARS, B-C, HYOS, RHUS-T. எங்க போனாலும் தடை, தடங்கல் வருது என்றால் CHIN. தூரத்தில் திருடன் தெரிந்தாலும், கனவில் துரத்தரான் என்றாலும் PHOS. தனியான தீவில் இருக்கிற மாதிரி இருந்தால் PHOS. எந்த நோயிலும், மரண பயம் என்றால் ACON. நோயிக்கு பிறகு களைப்பு, எரிச்சல் சூட்டினால் தணிந்தால் ARS. நிறைய சாப்பிடுவார், உடன் சாபம் வைக்கும் குணம் ANAC. எந்த உறுப்பிலிருந்தாவது கருப்பு நிற இரத்தம் வடிந்தால் AM-C. எதிர்காலத்தில் துன்பமோ, நோயோ வந்திடுமோனு பயந்தால் CALC. பெரியவர்களை கடவுளைக்கூட திட்டுவான். காம மிகுதி CANTH. யாரையும், எதற்காகவும் நம்ப மாட்டார் HYOS. ஆணவத்தோடு யாரையும் மதிக்க மாட்டார் PLAT ஏமாற்றி பணம் பறிக்கும் தாசி PLAT மிரட்டி பணம் பறிக்கும் தாசி HEP. கோபத்தினால் யாரையும் நம்பவும் தாங்கவும் மாட்டார் CHAM. ஆணவத்தில் யாரையும் நம்ப மாட்டார் PLAT. தனக்கு கீழ் உள்ளவர்கள் தவறு செய்தால் மன்னிக்க மாட்டார் NUX, ACID-NIT.தவறு செய்தால் மன்னிப்பவன் ARS. தண்ணி தாண்டிய பிறகு தான் கால் வலிங்க, இப்படி கூறும் மூடநம்பிக்கை என்றால் RHUS-T. கூர்மையான ஆயுதம் கண்டால் பயம், இருதய வியாதியின் போது சிறிது தண்ணீர் குடிப்பார். பல்லில் நாக்கு சிக்கிகிச்சு என்பார். SPIG. மற்ற நேரங்களில் இப்படி கொஞ்சம், கொஞ்சமாக சுடு தண்ணீர் சாப்பிட்டால் ARS. மற்ற நேரங்களில் பல்லில் நாக்கு சிக்கிச்சு என்றாலும், நாக்கை சுழற்றி, சுழற்றி காமிப்பார் HYOS. இருட்டினால் பாம்பு, பூரான், தேள் இருக்குமோனு பயப்பட்டால் HYOS. கூச்சம் மிகுதியால் முகத்தை மூடி விரல் சந்தில் பார்ப்பார். முகத்தை மூடி விரல் சந்தில் பார்ப்பார் B-C. ஓடி ஒழிந்து கொண்டாலும். பொருளை மறைத்து வைத்தாலும் BELL. திருடினால் ALUM. மின்னல், இடி தாக்கி பயந்தால் PHOS.

வெறி, வேகம், முகம் சிவந்தால் BELL. மரண பயத்தோடு வேகம் என்றால் ACON. 1 ரூபாய் சம்பாதித்தாலும் நான் தான் ராஜா SULPH. பிரசவம் நல்ல முறையில ஆகுமா, ஆகாதா என்று பயந்தால் CALC. வறுமை வந்திடுமோ பயந்து, உடன் தாகம் இருந்தால் BRY. நெருப்பு சுட்டு விட்டாலும், காமவெறி பிடித்து விட்டாலும் இது ஆணுக்கு CANTH. மிக, மிக கடுமையான கோபம் பார்த்தாலே உறுமும், நாக்கில் தடித்த பாலாடை மாதிரி ஆடை,. காலாணி ANT-C. எதையும் கற்றுக் கொள்ள முடியாது B-C. காம மிகுதினால் வெறிப்பிடித்து அலைபவர்கள், குறிப்பாக பெண்களுக்கு, பித்து, பேய் பிடித்து விடும் BAR-M. மேலிருந்து கீழே பார்க்கவோ, இறங்கவோ பயம் BOR. அளவு மீறிய வியர்வை, உடல் ஜீல்லிட்டு மரணக்கட்டம் வந்தால் VERAT. கடந்த கால மகிழ்ச்சி மற்றும் சுகத்தை பற்றி பேசினால் COFF. கடந்தகால துன்பம், கஷ்டம் பற்றி பேசினால் N-M. இப்ப நர வேதனையில் இருக்கிறேன் என்றால் MARC-S. சொர்க்கத்தில் இருப்பது போல இருக்குது என்றால் COFF. X-nu மற்ற பரிசோதனை செய்ய வெறுப்பு CON. இரத்தம் மற்ற பரிசோதனை செய்து கொள்ள விருப்பம் BELL. வயிற்று வலி தாள முடியாமல் தற்கொலை செய்து கொள்ள விருப்பம் COLOC. மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்றால் ARG-N. ஒரு சின்ன வார்த்தை கூட தாங்க மாட்டான், சீல் புண்ணில் கையோ, காற்றோ பட விட மாட்டான், பிடிக்காத வரை கொலையே செய்வான் HEP. தொண்டையில் சிதாம்பு குத்திய உணர்வோடு உள்ள கோபக்காரன் ACID-NIT.. தன் குற்றம் தெரியாது, மற்றவர் குற்றத்தை கண்டுபிடிப்பான், இவன் வேலை செய்ய மாட்டான், இவன் மற்றவரிடம் வேலை வாங்குவான் NUX. பெரிய இளப்பினால் அப்படியே ஸ்தம்பித்து போய்விடுதல் IGN. இதே இடத்தில் எனக்கு காளியாயி பிடிச்சியிருக்கு, துஷ்ட தேவதை பிடிச்சிருக்கு என்றால் KAL-BRO.

என் நாத்தனார், கொளுந்தியா அவர்கள் மீது சந்தேகம் இப்படி நபரை கூறி சந்தேகப்பட்டு, சூனியம் வைத்தார் என்று பழி போட்டால் LACH. எனக்கு எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் ரசம் வைத்து குடித்தால் சரியாகி விடும் BELL. நான் எந்த வேலைக்கு போனாலும் நஸ்டம் ஆகிவிடும் என்று வீட்டிலேயே இருந்தால் PSOR. கப்பல், விமானம் போன்றவற்றில் வெடி வைப்பவன் CAUST. சிறுநீர் பாதையில் மட்டும் கடு, கடுப்பு நெருப்பு தண்ணீர் மாதிரி வந்தாலும், இரத்தம் வந்தாலும் CANTH.நான் தான் கடவுள், பகவான் என்று கூறுபவன் CANN-IND. ஒரு மைல் ஒரு பர்ளாங்கு மாதிரியும், ஒரு மணி, ஒரு நிமிசம் மாதிரி சீக்கிரமாக போனால் ARG-NIT. ஒரு மணி, ஒரு நாள் மாதிரியும் ஒரு பர்ளாங்கு, ஒரு மைல் மாதிரி நீண்டு இருந்தால் CANN-IND.னு. சிறுநீர் வலியிலோ, வேறு எந்த உள் உறுப்பிலோ நீர் சொட்டு உருள்வது போல இருந்தால் CANN-SAT, LYSS, STRAM. சீக்கில் அடிப்பட்ட பிறகு அந்த உறுப்பின் மீது துணி கூட பட முடியாது என்றால் CANN-SAT. அடிபட்ட பிறகு துணி பட முடியாது என்றால் CANN-SAT. அடிபட்ட பிறகு துணி பட முடியாது என்றால் ARN. 15 நாளாக கண் முழிச்சி பிறருக்காக தொண்டு செய்தேன் அதன் பிறகு தான் கஸ்டம் COLC. இதயம் நின்று போகுமோ என்று பயந்தால் LOBI. பெண் கூறுவாள் புகை பிடித்தால் தான் சுறு,சுறுப்பு வரும் என்பாள், ஆணவம் PLAT. ஜனங்கள் மீது சந்தேகம், பயம், வெறுப்பு KALI - BICH. வலியோ, நோயோ விடவே மாட்டீங்குது, சித்ரவதை செய்யுது KALI-BICH. என்னை கடவுள் தண்டிச்சிட்டார். KALI-BROM.ஏக்கத்துக்கு பெரிய மருந்து KALI-BROM. கொலை வெறி பிடித்தவர்களுக்கு KALI-IOD. HEP.கோபத்தின் போது மலமானது மாவு கரைச்ச மாதிரியும், தண்ணி மாதிரியும் இப்படி கழிவுப் பொருட்கள் மாறி, மாறி போகும் K-S. வெறி பிடிச்ச மாதிரி கத்தியைப் பார்த்தால் கோபம் LYSS.

கத்தியைப் பார்த்தால் கோபம் LYSS. கத்தியை பார்த்தால் வெட்டிக் கொள்ள வெறி (தன்னையே) ALU. திண்பண்டம் மட்டும் திருடும் திருடன் M-C. பணம், பொருள் திருடினால் AUR. கல்லீரல், குழை நடுங்கும் அளவு பயம் M-M. கல்லீரல் நடுங்கும் அளவு பயமும் அந்த பயத்துக்கு காரணம் தெரியாது, அதனால் தூக்கம் வராது M-S. எல்லோரும் நமக்கு எதிரி என்று சொல்வார்கள் MERC-SOL. நம்மையே கொலை செய்திடுவார்களோ என்ற எண்ணம் MERC-SOL. அழுகையின் போது சமாதானப்படுத்தினால் அதிகமாகும் N-M. சமாதானம் அடைந்தால் PULS. சமாதானம் சொல்பவர்களையே திட்டினால் STAP. சமாதானம் சொல்பவர் மீது கோபப்பட்டால் CHAM. சமாதானம் சொல்பவரை பார்த்து உருமினால் ANT-C. பொருள் இருக்க வேண்டிய இடம் மாறியிருந்தால் எட்டி உதைப்பார் NUX. அதை ஒழுங்காக வைப்பார் ARS. அன்பு காட்டினால் திருப்பி செலுத்துவார் PHOS. அன்பு காட்டினால் திருப்பி அன்பு செலுத்த மாட்டார், சிறு பொருளை வெச்சி, தன்னுடையது தான் பெரியது என்று நினைத்து, பிறர் இழிவு படுத்துவார், உடன் தான் உயர்வு என்பான் PLAT. எந்த ஒரு நிகழ்ச்சிக்கு பிறகு அழுகை ஏற்பட்டாலும், சிறு பொருளை வைத்துக் கொண்டு சிக்கனமாகவும், மகிழ்ச்சியாக இருந்தால் PULS. பல் முளைக்கு போது கோபப்பட்டால் CHAM. பல் முளைக்கும் போது முரட்டு தனம் ஏற்பட்டால் RHEUM. காலையில் எழுந்ததும், வேலைக்கு போகும் எண்ணமும், சுறுசுறுப்பும் இல்லை RHODD. அடிபட்டு விடுவோமோ, தாக்கப்பட்டு விடுவோமோ என்ற பயம் STRAM. அக்கம், பக்கம் உள்ளவர்கள் எதிரி என்று வீட்டை மாற்றினால் MERC-C. இதே மாதிரி சண்டை போட்டுக் கொண்டு மாற்றினால் HEP. புது, புது வீட்டுக்கு போக விரும்பினால் TUB. தெய்வ ஒளியை விரும்பினாலும், கரப்பான் பூச்சியை பார்த்து பயந்தாலும், ஐஸ் வாட்டர் விரும்பினால் PHOS.

கற்பனையாக முட்டை பூச்சிகளை தேடிக் கொண்டிருந்தால் DUL. கணவன் மீது வெறுப்பு SEP. மனைவி மீது வெறுப்பு ACID - FLOUR. குழந்தை மீது வெறுப்பு ABSIN. குறிப்பிட்டவர் மீது வெறுப்பு N-C. இரக்கமின்றி கொலை செய்வான் ABSIN. காதலை மறக்க முடியாத ஏக்கம் (தோல்வி) ACID-PHOS. திடீர்ன்னு கொடுர எண்ணம் CAMPH. கோபத்தில் என்கிட்ட யாரும் நெருங்க கூட முடியாது என்று குழந்தைகள் கோபத்தில் கூறினாள் CINA. நான் இராணுவ அதிகாரி, சர்வதிகாரி என்று கட்டளை இடுபவர் ARN, LYC, PHOS. மாலையில் மட்டும் பயம் CED. படுக்கையில் பயம் ARS, AGAR, CALC.மாலையில் இரணிய நேரத்தில் பயம் CIMIC, OP,SABA. தனிமையில் பயம் ARS. மாதவிலக்கிற்கு பின் பயம் OP. பூனையை பற்றிய பயம் HYOS. கெட்ட செய்தி வருமோனு பயந்தால் CALC, CALC-PHOS, N-P. பலர் முன்பு தோன்ற பயம் CALC, LYC, SIL. பின்னாடி யாராவது வருவாங்களோனு பயந்தால் ANAC, BROM, LACH, MED. பிறருக்கு பாரமாக இருக்கிறோமோ என்ற பயம், பக்கவாதம் வந்திடுமோனு பயம் CALC-FLOR, CALEND, SABA. பயத்துக்கு காரணமே இல்லாமல் பயந்தால் CALC-FLOR, CALEND, SABA. இவர் ஒரு டாக்டருன்னு நிருபிச்சு காட்டுவாரா NUX. குழந்தைகள் மீது பயம் B-C, CALC, BORX, CALC-PHOS. கண்ணை மூடினால் பயம் CARB-AN. குளிர்ச்சிக்காக பயந்தால் N-C, LYC. சளி பிடிக்குமோனு என்று பயந்தால் CALC, PULS.கூட்டத்தைப் பார்த்து தனக்கு அபாயம் வந்துடுமோனு பயந்தால் CALC. இருட்டில், தனிமையில் மரணபயம் ARG-N, ARS.. இரண்டு மருந்துக்கும் கூட்டத்தில் இருக்கும் போது பயமில்லை. தூங்க போகும் போது மூச்சு அடைச்சுக்குமோனு பயம் LACH, LED. வெப்பத்தினால் இறந்திடுவோமோ என்று பயம் ARS, ARN.. பிரசவத்தில் வலியினால் பயம் COFF. சீக்கிரமாக நேரம் போகுதேனு பயம் ARG-NIT.

பயத்தில் சீக்கிரம் இறந்து போயிடுவோம்னு பயம் APIS. திடீர்னு இறந்துடுவேன் என்று சொன்னால் ACON, ARS. பயத்தில் வாந்தி ARS, MERC-C. பயத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் CALC. ஏதோ நமக்கு அழிவு வரப்போகுதுன்னு பயந்தால் CED. மூச்சு திணறி இறந்திடுவேன் என்று பயந்தாலும், உட்காhந்திருக்கும் போது இதயம் நின்ற விடுமோனு பயந்தாலும், உயரத்திலிருந்து சாக விருப்பம், தண்ணீரில் விழுந்து சாக விருப்பம் ARG-N. நான் எங்க போனாலும் காரியம் கெட்டு போகுதேனு பயம் என்றால் CHI. பயத்தில் தாயை கட்டி பிடித்தால் STRAM.. தும்பினால் கூட பயந்து கொள்ளும் குழந்தை BORX. பயத்தில் துள்ளி விழுந்து நடுங்கும் குழந்தை GELS. பிரசவம் ஆக தாமதப்பட்டால் CHAM