பொதுவானநோய்கள்


பிளேக் நோய் ;-

இது நினநீர் கோளத்தை திடீர்னு தாக்கும் உடன் டைப்பாய்டு குறிகள் இருக்கும். 1841-ல் முதன் முதலில் கிழக்கு ஐரோப்பாவில் தோன்றியது பிறகு உலகெங்கும் (பரவியதால்) தோன்றியதால் தொற்று வியாதி என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு சுகாதார குறைவே காரணம் என்று பொதுவாக கூறப்படுகிறது. இதில் மூன்று பிhpவுகள் உள்ளன. கள்ளச்சதைகள் தொங்கி, பார்வை மங்கி, பேச்சி குளரும், தலையும் முகம் வெளுத்தும் காணப்படுவார். மிகுந்த பலஹூனம். காய்ச்சல் இருக்காது. வாந்தியும், பேதியும் போய்க் கொண்டே இருக்கும். குடிக்காரர் மாதிரி உளறிக் கொண்டே இருப்பார். பொட்டு வெச்ச மாதிரி (வட்டமாக) ஆங்காங்கே குளிரும் உள்ளே காய்ச்சல் இருக்குது என்றார். வேகமான சுவாசமும், நாடியும் இருக்கும். டைப்பாய்டுக்காரர் மாதிரி வெளுத்த உடம்புடன் படுத்து கிடப்பார். பல்லில் ஊத்தை நிறைய இருக்கும். கோரமான உதடும் அக்கில் பொறுக்க முடியாத நாற்றமும் தோன்றி அக்கில் உள்ள நினநீர் கட்டி வீங்கி பெருத்து இருக்கும். இது சுமார் கோழி முட்டை அளவுக் கூட இருக்கும். இது உடைந்தால் (வெடித்தால்) மரணமாகி விடுவார்கள். எல்லா நினநீர் கோளங்களைத்தாக்கி மரணக்கட்டத்துக்கு வந்திடும். வேற எந்த நோயிலும் இவ்வளவு பெரிய வீக்கம் இருக்காது. மிக விரைவாக கட்டிகள் பிளந்து விடும்.

1-8 நாட்களிலேயே மரணம் நிகழ்ந்து விடும். மூன்று நிலைகள் இருப்பதால் இதை கண்டு பிடிப்பதற்க்குள்ளும், நோயாளி மருந்து சாப்பிடுவதற்க்கு முன்னதாகவே பலர் இறந்து விடுகிறார்கள். பல, நிலைகளும், வேகமும் இருப்பதால் தடுப்பு மருந்து கொடுக்க முடிவதில்லை. டாக்டர் ஹெரிங்ஸ் சில முக்கிய மருந்துக்களாக LACH, ARS, CHIN, CARB-V, ARS-SILCATE, SULPH, ANTHROX, PHOS. கூறுகிறார். டாக்டர் ராய் முக்கிய மருந்துகளாக KALI-P, BELL, HEP, STRAM.. கூறுகிறார். இதை கொடுத்து ஏராளமான நபர்களை குணப்படுத்தியதாக கூறுகிறார். டாக்டர் டைரி கூறுகையில் இந்த குறிகளும் இந்த மருந்துகளும் சிறந்தது என்று கூறுகிறார். இந்த மருந்துக்களை வைத்து இவரும் ஏராளமான நோயாளிகளை குணப்படுத்தியதாக கூறுகிறார். உள்ளேயும், வெளியேயும் பெரிய கட்டியை தாக்கும் இனத்தைச் சேர்ந்ததாகும். இதை உடனடியாக நடவடிக்கை எடுத்தால் காப்பாற்றலாம் என்று கூறுகிறார். டாக்டர் ஹானிமேன் கூறுவதாவது எந்த காலத்துக்கும் மாறாத மியாச தத்துவத்தை நமக்கு கொடுத்துள்ளார். இந்த மியாசத்தை படித்து பார்த்துக் புரிந்துக் கொண்டால் போதுமானது. இந்த மியாசங்கள் தான் புதிய, புதிய நோய்களை தோற்றி விக்கிறது. இந்த நோய்ப் பற்றி நமக்கு மேலும் விளக்கம் தேவை என்றால் D -4. 1994 கேசட்டில் பார்த்து கொள்ளவும்.

சருமம்:-

வாத நோய்கள்:-


வாத நோய்கள் என்றால் உடல் முழுக்க ஏற்படும் வலி என்று பொருள். நமது தேகம் மூன்று பகுதிகளாக பிhpக்கப்பட்டுள்ளது. (1) வாதம் (2) பித்தம் (3) சிலேத்துமம். ஆக உள்ளது. அது எந்த வயதில் தலைதூக்குகிறது என்று பார்ப்போம். திருவள்ளுவர் கூட, வாதம், பித்தம், சிலோத்துமம் இவை மூன்றும் மிகினும் குறைவினும் நோய் செய்யும் என்று கூறுகிறார். அதாவது இவை மூன்றும் சம சீராக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். வாதத்தில் 84 வகைகளும் பித்தத்தில் 44வகைகளும் சிலோத்துமம் 94 வகைகளும் மொத்தம் 224 வியாதி இருப்பதாக கூறப்படுகிறது. பித்தம் என்றால் ஜீரணக்கோளாறு, சிலோத்துமம் என்றால் எச்சில், சளி போன்ற நீர் ஓழுகும். மூன்று விரல்களை வைத்து நாடியை பார்க்கும் போது முதல் விரல் தூக்கினால் வாதம் என்றும்;. இரண்டாவது விரல் தூக்கினால் பித்தம் என்றும். மூன்றாவது விரல் தூக்கினால் சிலோத்துமம் என்றும். இப்படி அழுத்தத்தை வைத்து நோயை கண்டுபிடித்தார்கள். அதை கண்டுபிடிப்பது சுலபம் தான். 40 வயது வரை வாதம் ஒவ்வொரு மனிதனையும் ஆதிக்கம் செலுத்தும். 40 முதல் 60 வரை பித்ததேகம். 60 முதல் 100 வரை சிலேத்துமம் தேகம். வாதத்தின் வகைகள். (1) தமரக வாதம் (இருதயத்தைச் சார்ந்தது).

(2) பக்க வாதம் (ஒரு பகுதியை சார்ந்தது) (3) இளம்பிள்ளை வாதம் (சிறுவர்களுக்கு வருவது) (4) முடக்கு வாதம் (நடக்க முடியாமல் செய்வது) (5) பாரிச வாதம் (ஒரு பகுதியை மட்டும் நேராக தாக்கும் மேல் உறுப்பை மட்டும்) (பக்கவாதம் என்றால் உள், வெளி உறுப்பையும் சேர்த்து பாதிக்கும்) (6) நரித்தலை வாதம் (முழங்கால் வீக்கம்) என்று இத்தனை வகைகள் இருப்பினும் சித்த வைத்தியத்தில் மருந்து ஒன்று தான். ஆங்கில முறையிலும் உடனடியாக வலியை நிறுத்துகிறார்கள். அது பின் விளைவை தருகிறது. சித்த வைத்தியம் உணவே மருந்து , மருந்தே உணவு என்று கூறிவிடுகிறது. ஆயுர்வேதம், யுனானி மருந்துகள் சித்த வைத்தியத்தை ஒட்டியே வருகிறது. சிறிது வித்தியாசத்தில் தான் வருகிறது. நோன்பு, விரதம் இருக்கச் சொல்வார்கள். ஹோமியோ முறையில் பார்த்ததால் (மியாசம்) பதிவுகள், பரம்பரை, பெற்றோர்கள் செய்தவை நமது மன நிலைமைக்கு தான் ஹோமியோபதி முறையில் மருந்து தரப்படுகிறது. வாயு முத்தினால் தான் வாதம் ஏற்படும். இதனால் தான் மகரிஷி அனைத்து ஓட்டங்களும் சீராக பாய்ந்து நிரம்பட்டும் என்கிறார். ஹோமியோபதி முறையில் வாதத்திற்கு எவ்வாறு மருந்து தருவது என்பது பற்றி பார்ப்போம்.

வாத நோயாளி காலை அழுத்தி அழுத்திப் பிடிப்பார். இதற்கு BRY. வலியினால் அசைந்துக் கொண்டு, புரட்டிக் கொண்டு இருந்தால் RHUS-T. தொடமுடியாத அளவுக்கு பயங்கரமான வலி என்று கூறினால் ARN. இன்னொருவர் கூறினார் நெருப்பு எரிவது போல கப, கபனு வலி, அதனால் துணியை வைத்து அழுத்தி, நீவி எடுப்பார். இவருக்கு CAUST.கப, கபனு எரிச்சல் அதனால் அப்பகுதியை ஐஸ் தண்ணீரில் கழுவுவார் PHOS.இதே இடத்தில் சுடுநீரில் எரிச்சல் பகுதியை கழுவினால் அவருக்கு ARS. இப்படி ஹோமியோபதி முறையில் ஒரு மருந்து மட்டும் தேர்வு செய்து தருகையில் அவர்களது தொல்லைகள் அதிகமாகி பிறகு குறையும். ஆனால் நாம் அனைவரும் அவசரமாக அப்போதைக்கு மட்டும் குணம் ஆனால் போதும் என்பதால் உலகம் முழுவது ஆங்கில் (ஹலோபதி) வைத்திய முறை காணப்படுகிறது. பிறருக்கு வழி காட்டுவார் வள்ளலார் மாதிரி. மிக, மிக உணர்ச்சி மிக்கவர் ASAR. வெற்றிடத்தில் அதாவது இருட்டில் இருக்க விரும்பினால் (வேதாத்திரி மகரிஷி போல) ARG-N. தீடீர் என வலிப்பு தோன்றி உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் பரவும். அழுத்தினால் கொர்க், கொர்க் என் சப்தம் BERB-V. நரம்பு சுழன்று பந்து மாதிரி ஆனால் CUPR.கனவில் இறந்து போவது போன்ற கனவு ARS, ARN. ஏரி கரையில் ஜீல்லுனு காற்றில் இருந்தால் சுகம். கனவில் பாம்பு வருது என்றாலும் ARG-N. பிரயாணம் (டூர்) செய்யும் போது முதலில் கஸ்டம் போக, போக சரியாகி விடும் GELS, MED. பழைய காயங்களில் இருந்து தார் எண்ணெய் போல இரத்தம் வடிந்தால் KREOS. ஏல கடைக்காரர்கள், பேராசிரியர்கள், மேடைப் பேச்சாளர்கள், இது போன்று அதிகமாக பேசுபவர்களுக்கு ஏற்படும் தொண்டை பிரச்சனைக்கும், உதடு காய்ந்து தோல் உறிந்தாலும் ARUM-TRIP. புற்று நோய் வரலாறு உள்ளவர்களுக்கும், அவருக்கு பிறகு வரும் சந்ததிகளுக்கும், அவர்களுக்கும் சரியான குறி தெரியவில்லை என்றாலும் CARC. என் உடம்பை நானே கெடுத்துகிட்டேன் CHEL. பச்சை மஞ்சள் நிற நீராட்டம் சளி NAT-S.

காய்ச்சல்:-

திடீர் என காய்ச்சல் ஏற்பட்டு மரணபயம் உடன் சொம்பு, சொம்பாக தண்ணீர் சாப்பிடுவார் வாய் கசப்பு[ ACON. காய்ச்சலில் அடித்து போட்ட மாதிரி வலி, படுக்கை உருத்துது என்பார். புண் மாதிரி வலி ஆழந்த மயக்கத்தில் இருப்பார் ARN. மழையில் நனைந்த பிறகு தாங்ககாய்ச்சல், மற்ற தொல்லைகள் என்றாலும், காய்ச்சலின் போது அமைதி இன்மை, மிகுந்த களைப்பு, உணவின் மீது வெறுப்பு என்றால் ARS. சிறு அசைவு என்றாலும் குனிந்து நிமிர்ந்த பிறகு காயச்சல் என்றாலும், உடல் சூடு, சூடான தோசைக்கல், போன்று இருக்கும். அந்த சூடு கண் இமைக்கும் நேரத்தில் போய்விடும். உடல் பகுதியில் சிவந்து காணப்படும் BELL. காய்ச்சலின் போது வறட்சி, அதனால் சொம்பு, சொம்பாக தண்ணீர் சாப்பிடுவார். வலி உள்ள பாகத்ததை அழுத்தி பிடிப்பார். வேலை பற்றியே பினாத்துவார். ஊசியில் குத்துவது போன்று வலி BRY. டைப்பாய்டு, மலேரியா, அம்மை மறுகுறி பாய்ந்து சீழ் பிடித்தப் பிறகு, பிரசவத்திற்கு பிறகு இப்படி விசமிக்க காய்ச்சல், அரை மயக்கத்துடன், இருப்பார். காய்ச்சலில் கழிவுப்பொருள்கள், பிண நாற்றம் அடிக்கும். காய்ச்சலில், உடலையும், ஆன்மாவையும் தனிமை படுத்திப் பேசுவார். கோமாவில் பேசுவது போல உளறுவார்கள் BAPTISIA.இதே இடத்தில் தெளிவாக பேசுவார். உடன் கோமாவில் பாதியில் தூங்குவார் ARN.

குளிரின் போது பச்ச தண்ணி சாப்பிடுவார். குளிரின் போது அவதி படுகிறேன் என்பார். வியர்வை இருந்தாலும், போர்த்திக் கொண்டிருப்பார். குளிருக்கு முன், பின், குமட்டல் பசி, தாகம் ஏற்படும். உதடும், முகமும் சிவந்து இருக்கும் CHINA. காய்ச்சலின் போது உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரே பிடிப்பு. எல்லா எலும்புகளும் அடிச்சு போட்ட மாதிரி வலி கழண்டு போற மாதிரி வலி. சருமம், மஞ்சள் நிறமாகவும், பள, பளப்பாகவும் இருக்கும் EUP-PER.. காய்ச்சலின் போது உடம்பு கணம், அதனால் சோம்பலாக படுத்தே கிடப்பார். முதுகு தண்டில் ஐஸ் வெச்ச மாதிரி ஜீல்லுனு இருக்கும். அவர் மீது மூன்று பேர் உட்கார்ந்தாலும், தூக்கி எரியும் அளவு பலம் இருக்கும் GELS. இரவு 1 மணிக்கு வறண்ட, பயங்கர அனல் வீசுவது; போன்ற காய்ச்சல், இருந்து கொண்டே இருக்கும். முகம், கன்னம், சிவப்பு குளிர் பட்டால் கஸ்டம் மெதுவாக நடந்தால் சுகம். இதன் விசேச குறி இரவு 1 மணிக்கு அனல் வீசுவது போன்ற காய்ச்சல், பாதம், ஜீல்லிப்பாகவும், முகம் எரியுது என்றும் கூறுவார்கள். சிவப்பு நிறத்தையும், தண்ணீரையும் பார்த்தால் பயம். மயக்கத்தில் தெளிவான பதில் கூறுவார். காய்ச்சலின் போது, பல்லுக்கு கீழே, கருப்பு படிவம்.

எறும்பு, பூச்சியை கொள்ளுவார். நாக்கை நீட்டி, நீட்டி பயம்; முறுத்தும் பைத்தியங்கள், வெட்கம் இல்லாதவர்கள், சந்தேகப் பேர்வழி போன்று இவைகள் அதிகமாகும் போது, காய்ச்சல் ஏற்பட்டால் HYOS. ஒரு நாள் விட்டு, ஒரு நாள் முறை வைத்து வரும், காய்ச்சல், காய்ச்சல் அதிகம் ஆனால் குளிர் குறைவு, பித்த வாந்தி எடுப்பார். உடனே நாக்கு சுத்தம், ஓயாமல் குமட்டிக் கொண்டே இருப்பார். வாந்தியின் இடையில் சாப்பிடுவார் IPECA. காலையில் 10 மணிக்கு காய்ச்சல், துவங்கும் கை, காலில் காய்ச்சல் துவங்கி உடல் முழுக்க பரவும், நெருப்பு போல் சுட்டெரிக்குது என்பார்கள். இசையை கேட்டால் தாங்க மாட்டார். 100 சுத்திகளை வைத்து தலையில் தட்டுவது போல் இருக்கும். எலும்பு முறிவது போல் வலி, கை, காலை முறுக்குவார் N-M. காய்ச்சலில் ஜீல்லுனு சாப்பிட விரும்புவார். போர்த்திக் கொள்ளுவார் அதை எடுக்கவே மாட்டார். குளிர் முதுகின் மேலே ஏறி அப்படியே எரிச்சலாக மாறும். பிறகு போர்வை எடுப்பார். உதடு வெடித்து காய்ந்து வறட்சியாக இருக்கும். தாடி வைத்த மனிதன் வறான், போறான் என்றும் மூலையில் ஏதோ, எலி ஓடுவது போல் (DELUSION)மாய எண்ணம் காய்ச்சலில் , புளிப்பு சாப்பிட விருப்பம் PHOS. காச நோயாளிக்கு கடைசி கட்டத்தில் செப்டிக் ஆன பிறகு ஏற்படும் காய்ச்சலுக்கு BAPT யாவுக்கு அடுத்த கட்டத்தில் நல்ல மருந்து. செப்டிக் காய்ச்சல் மலேரியாவில் சீழ் பிடித்தப் பிறகு, அறுவை சிகிச்சைக்கு பிறகு, பிரசவத்திற்க்கு பிறகு ஏற்படும். விசமிக்க மற்றும் பயங்கரமான காய்சலுக்கு, சீக்கில் அடிப்பட்ட பிறகு ஏற்படும் காய்ச்சலுக்கு பெரிய மருந்து PYROGIN.. குறிப்பிட்ட இடத்தில் மற்றும் வட்ட வட்டமாக Nடு காணப்படும் வறட்சி இருக்கும் அதனால் தண்ணீர் சாப்பிட மாட்டார். ஒரு பக்கம் சூடு, ஒரு பக்கம் ஜீல்லிப்பு ஒரு பக்கம் குளிர், ஒரு பக்கம் வியர்வை இப்படி அடுத்து அடுத்து மாறும், மற்றவர் தன்னை வெறுக்கும் அளவுக்கு கோபப்படுவார். தன் மீதே கோபம் தன்னை வெறுப்பார். எதிரியின் மீது மிருகத்தனமான கோபம் பசி தாகமே இருக்காது PULS.. நான் அதிகமாக வேலை செய்கிறேன் என்று பினாத்துவார். அதனால் ஒய்வில் கஸ்டம். உடலை புரட்டிக் கொண்டிருப்பார். வேலை மீது இருந்தால் சுகம் மூட நம்பிக்கை உள்ளவர்கள். காய்ச்சலின் போது காரணமே இல்லாமல் அழுவார்.

தலைமீது நீர் ஊற்றினால் எப்படி இருக்குமோ அதே போல் குளிரும். காய்ச்சலும் கீழ் நோக்கி இறங்கும். மூட நம்பிக்கையான வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவார் RHUS-T. மாலையில் காய்ச்சல் பாதத்தில் எரிச்சல் அதனால் நீர் மற்றும் சந்தனத்தை தடவுவார். என் மூச்சி காற்று அனல் மாதிரி ஆவி மாதிரி வருதுங்க அதனால் உடம்பு கரையுது என்பார். இரவில் புளிப்பு சாப்பிட விருப்பம், பின் மண்டையில் வியர்வை SULPH. வெறித்தனமான, வேகமான காய்ச்சல் துணியை கூட கிழிப்பார்கள். இப்படி ஆர்பாட்டமாக இருப்பார். உடனே மந்தம், மறதி STRAM.நினைத்தவுடன் காய்ச்சல் வரும் போகும் BELL. சற்று தாமதமாக வந்தால் STRAM. BELL -க்கு ஆர்ப்பாட்டம் குறைவு வேகம் அதிகம் STRAM- த்துக்கு ஆர்ப்பாட்டம் மிக அதிகம் வேகம் குறைவு. காய்ச்சல் நாட்பட்டதாக HYOS வேகம் குறைவு ஆர்ப்பாட்டம் அதிகம் STRAM--தை விட பெரிய மருந்து HYOS. HYOS- க்கு சந்தேகம்; மற்றும் இருட்டில் விருப்பம் STRAM-த்துக்கு வெளிச்சம் விருப்பம். வெயிலில் நின்றால் குளிர் மேலும் அதிகமானாலும் உடன் குமட்டிக் கொண்டே இருப்பார் IPECA.. குளிhpன் போது வெயிலில் நின்றால் தணிவு ARS. குளிர் காய்ச்சலில் கஞ்சுக்கு பதிலாக ரொட்டி, கறி, முட்டை சாப்பிட்டால் IGN.குளிர் காய்ச்சலின் போது தெரிந்தே பச்ச தண்ணீர் குடித்தால் CHINA. (செப்டிக் காய்ச்சலில்) விசமிக்க காய்ச்சலில் கை, கால்கள் துண்டு துண்டாக கிடப்பது போல் இருந்தால் PYROGIN. காய்ச்சலில் தண்ணீர் குடிக்க மாட்டார் IGN.வேகமான காலராவின் போது உடம்பு ஜீல்லித்தால் CAMBH. குளிர் காய்ச்சலின் போது கையை சுருட்டி போர்வைக்குள் வைத்துக் கொண்டால் NUX-V. குளிரின் போது மூக்கை மட்டும் வெளியே விட்டு மற்ற எல்லாப் பகுதியையும் போர்த்திக் கொண்டால் HEP.. வாய்யை மட்டும் விட்டுட்டு போர்த்திக் கொண்டால் RHUEM. நெற்றியை விட்டுட்டு மற்ற பகுதி போர்த்திக் கொண்டால் ARS. கெண்ட் 1259 ரெப்ரட்டரியில் 1292 வரை குளிர் மற்றும் காய்ச்சல் எல்லா விசியங்களைப் பார்த்துக் கொள்ளவும்.

குறிப்பு :-

1234 வடி 1258 வரை தூக்கம் அதன் விவரங்களை கெண்ட் புத்தகத்தில் பார்த்துக் கொள்ளவும்.

பொதுவானவை:-

மேடையில் பேசும் போதும் நடுக்கம் GELS. தூக்கத்தில் இறந்திடுவோமோ என்று நினைத்தால் NUX-V. கனவில் திருடன் வர மாதிரி இருந்தால் VERAT. உலகில் நான் வாழ இயலாதவன் (லக்கி இல்லாதவன்) என்றால் AUR-M. எந்த வேலையும் செய்ய இயலாதவன் என்றால் AUR-M. எந்த வேலையும் செய்ய இயலாதவன் என்றால் MAGPATS. சுரப்பி பச்சை நிற வீக்கம் ஏற்ப்பட்டால் CARB-AN. உடம்பு கணத்தால் படுக்கிறேன் என்றால் GELS. நிமிர்ந்து படுத்தால் சுகம் என்றால் PSOR.. வேலைக்கு போனால் சுகம் என்றாலும், விருப்பம் என்றாலும், அதைப் பற்றியே பேசினாலும் BRY. கடமைக்காக வேலை செய்கிறேன் என்றால் CALC-C.வேலை மீது சலிப்பு என்றால் SULPH. வேலை செய்ய வெறுப்பு SEP. வேலைக்கு போனால் வேலை கெட்டு விடும் என்று கூறினால் PSOR. அடிப்பட்டு வீக்கம் ஏற்ப்பட்டால் அந்த வீக்கத்தில் மட்டும் வலி இருக்காது IGN. அடிப்பட்ட இடத்திலும், வீக்கத்திலும் வலி இல்லை என்றால் OP.உடம்பு கரையான் மாதிரீ அரீக்குது, கரையுது என்றால் MERC-SOL. மின்னல், மின் அதிர்ச்சி, கரண்ட் ஷேக் அடித்த மாதிரி இருந்தாலும், அடித்து இருந்தாலும் PHOS. உடம்பு பொசுக்குனு ஆயிடிச்சிங்க, கரைஞ்சிடுச்சிங்க, காற்றாட்டம் ஆயிடுச்சிங்க, தக்கையாட்டம் ஆயிடுச்சிங்க இப்படி ஆயிடிச்சிங்க என்று கடந்த காலத்தில் கூறினால் THUJ. நிகழ்காலத்தில் ஆவது போல கூறினால் SULPH. தன்னை மறைத்தால் B-C, BELL, AUR, BAPTISIA. தூக்கம் கெட்ட பிறகு கடமைக்காக தூக்கம் கெட்டதால் தாங்க தொல்லை என்றால் COCC. சர்க்கரையை அள்ளி அள்ளி சாப்பிடுவதும் இனிப்பு சாப்பிட விருப்பமும், தொல்லை என்றால் ARG-N. குண்டில் அடிப்பட்டவர்களுக்கு CALC. இந்த மருந்து குண்டின் மீது (ஒரு சக்தியை ஏற்ப்படுத்தி) வளையம் போல போட்டு சாகும் வரை பாதுகாக்கும். மிளகாய் காரம் மாதிரி எரிச்சல் CAPS. சுண்ணாம்பு வேகர மாதிரி எரிச்சல் CAUST.

சுரபியில் பச்சை நிற வீக்கம் என்றாலும், கலலைப் புற்றில் நீல நிற இருந்தாலும் CARB-AN. எரிந்து, எரிந்து திட்டுவார்கள் காமம் மிகுதி CANTH. நிமிடம் தவறாமல் நோய் தாக்கினால் CEDRO. காப்பி விருப்பத்தை தவிர்க்கவும் காப்பியின் விசத்தை முறிக்கவும் COFF.விருப்பத்திற்கு டீயின் விசத்தை முறிப்பதற்கும் THEA. கம்பியை பிடித்தால் அப்படியே கை பிடிச்சிக்கிச்சி என்றாலும், குறக்களை என்றாலும் CUPR.பஸ் குலுங்கி குமட்டல் ARS. யாராவது கூப்பிட்டு திடீர்னு திரும்பினால் மயக்கம் வந்தால் CON. கடுமையான வலி அதை தாங்கி, தாங்கி புற்று நோய் ஆகிடும் EUPHARBIUM. காய்ச்சலின் போது நெருப்பாட்டம் சூடு உடல் இரத்த கலர் FERR-P. காய்ச்சல் மெதுவாக வருவதும், இறங்குவதும் FERR-P. திடீர் என வருவதும், இறங்குவதும் BELL. சொறிந்த பின்பு பிசின் மாதிரி முத்தாட்டம் நீர் வந்தால் GRAPH.படுத்துக் கொண்டிருக்கும் போது தலையை மாறி, மாறி உருட்டிக் கொண்டிருந்தால் ; HELL.. சளி, கோழை பிசின் மாதிரி வாய்க்கும், தரைக்கும் நூல் போல அறுபடாமல் இருந்தால் KALI-BI. சூடுக்காக குளிர் காய்ந்தால் BELL, N-M. உடனே சரியாகற மாதிரி மருந்து தாங்க என்பான் HEP விட தாங்க முடியாதவன் CANTH. இவருக்கு சிறுநீர் போக முடியாத அளவுக்கு உடம்பு கணத்தினால் சோம்பல் ஆனால் சிறுநீர் விட்டால் தொல்லைகள் எல்லாம் சரியாகிவிடும் GELS. உடம்பு மரமாட்டம் இருக்குது அதானால் படுக்கிறேன் என்றால் N-M. வலி உள்ள பாகத்தை அழுத்திப் (பிடிப்பார்) படுப்பார் BRY.

இரவில் சட்டையை கழற்றினால் அரிப்பு KALI-AR. எப்போதும் சட்டையை கழற்றினால் அரிப்பு RUMEX. பச்சையாக, கொச்சையாக திட்டும் பைத்தியங்களுக்கு HYOS. மாலை 4வடி8 வலது பக்கம் தொல்லை என்றால் LYC. குடும்பத்தோடு கூடி வாழதவர் KALI-IOD. கொலை வெறி பிடித்தவர்களுக்கு மூட்டு அசைந்தால் தொல்லை அதிகம் KALI-IOD, HEP. மூட்டு அசைந்து கொண்டிருந்தால் சுகம் RHUS-T வெளியே வேடிக்கை பார்க்க போனால் சுகம் PULS. வெளியே வேடிக்கை பார்க்க போனால் தொல்லை KALI-AR. நாய் கடிக்கு அதற்கு பிறகு ஏற்படும் தொல்லைகளும் LYSS. எவ்வளவு கறி, தீணி, டானிக் சாப்பிட்டலும் தேறாத உடம்புக்கு MAG-C. கறி திங்க விருப்பம் என்றால் TUB. உடலில் ஏற்படும் எல்லா விதமான வலிகளுக்கும் MAG-PH .எல்லாவற்றை விட பெரிய ஞாபக மறதிக்கும் தலை வலி வரவில்லை என்று நினைத்தால் வந்து விடும். கழிவு பொருள்கள் மீன் கவிச்சை அடிக்கும் MED. டான்சில், கோளத்தில், கரண்ட் ஷேக் அடிப்பது போல வலி PHYT. அடிக்கடி மலம் வர மாதிரி அதிக உணர்ச்சி, போதை மயக்கத்தை தெளிய வைக்க, ஏதாவது பார்த்து பயம் ஏற்ப்பட்டு, அந்த நினைப்பு மட்டும் போகாமல் இருந்தாலும், ஹோமியோ மருந்து வேலை செய்ய வில்லை என்றாலும், வயதானவர்களுக்கு ஜூவசக்தி குறைந்து இருந்தாலும் இவை அனைத்திற்க்கும் ஒரே மருந்து OP. நான் பச்சையாக சொல்லறேன், வெளிப்படையாக சொல்லறேன், உண்மையை அப்படியே சொல்கிறேன், என்று இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினால் PHOS. வாத வலி என்றால் BRY. எத்தனை முறைக் குளித்தாலும் உடல் நாற்றம் போகாது PSOR. நோயின் போது புளித்த நாற்றம் அடித்தால் RHEUM. ஊரை சுற்றி ஊர் பணத்தை சாப்பிடுபவர் TUB. எதை ஒன்றையும் விடாப்பிடியாக பிடித்திருப்பவர் STRAM. அம்மா மீது வெறுப்பு THUJ. இரும்பலுக்கு ஒரே மருந்து TUB. இரவில் தாங்க அதிக பேதி அதனால் தொல்லை, கடுமையான ஞாபக மறதி, தன் பெயரே மறந்திடும் SYPH. மழை வருவது இவருக்கு முன் கூட்டியே தெரியும் RHOD. உறவு கொள்வது (அதாவது காமம் ) தவறு என்று கூறி ஆன்மாவை பாதுகாக்கிறேன் என்பார் PULS. சண்டை போட்டால் எதிரிகள் என்றும், சிரீத்து பேசினால் நண்பர்கள் என்றும் கற்பனை செய்தாலும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கு பிறகும் கற்பனைக்கு பிறகும் கிறு, கிறுப்பில் முடிந்தால் ASAF. கால்நடைக்கு ஏற்படும் இராஜப் பிளவை, சீழ் புண்கள் என்றாலும், மனிதர்களுக்கு இது போல எரிச்சல் இருந்தாலும் (தாங்க முடியாத அளவு) எரிச்சல் ஏற்பட்டால் ANTH. கெண்ட் ரெப்ரட்டரியில் 1341 லிருந்து 1423 வரை பொதுவானவைகளையும் பார்த்துக் கொள்ளவும்.