உடலுறுப்பு :-


அந்த உடம்பில் உயிர் இருந்து கொண்டு இயங்க வேண்டும் என்றால், உயிர் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். உயிர் இயக்கத்திற்கு உடம்பு சரியாக இருக்க வேண்டும். இந்த உடம்பு என்பது நிரந்தரமானது அல்ல. ஒரு நிமிடத்திற்கு 15,000 திசுக்களை தோன்றுவதும், அழிவதுமாக உள்ளது. இந்த வளர்ச்சி சிதைவுகளை செய்வது, எது? உடலை ஒரே கட்டாக வைப்பது எது? மூளை செல்கள். சரி மூளை செல்களையே இயக்குவது எது? மூளை செல்லை இயக்குவது தான் ஜீவகாந்தம். இப்பொழுது ஓர் உதாரணம் பாருங்கள். நாக்கு என்ற உறுப்பில் நாம் வாயில் போடும், உணவின் சுவையை அறிந்து கொள்ள எச்சில் நீராகவும், சுவை மொட்டுகளாகவும், 6 சுவைகளை அறிவதற்கான தன்மையை பெற்றுள்ளன. குறிப்பிட்ட மொட்டுகள் மீது உணவு பட்டால் இனிப்பு சுவை, கசப்பு, காரம், புளிப்பு, உவர்ப்பு இவைகள் மொட்டுகள் மீது படும் போது தெரியும் என்று உடல் கூறு சாஸ்திரம் சொல்கிறது. ஆனால் ஒருவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு படுத்திருக்குபோது, சரியான உப்பு போட்டு கஞ்சி நாம் அவருக்கு கொடுக்கிறோம்? ஆனால் உப்பு கசப்பாக இருக்கிறது என்கிறார். இன்னொரு நோயாளிக்கு அதையே, கொடுக்கிறோம். கொடுத்தால் உப்பே இல்லை சப்புன்னு உள்ளது என்று கூறுகிறார். மற்றொருவருக்கு காரமான மிளகாய் தருகிறோம். காரம் தெரியாமல் மிளகாயை நிறைய சாப்பிடுகிறார். மற்றொருவன் லேசான காரத்தையும், தாங்க முடியாமல் நாக்கு உளறுது என்று கூறுகிறார். ஆனால் சுவை மொட்டுகள் தான் முக்கிய காரணம் என்று உடல் கூறு சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் இந்த எதிரும், புதிரும் வித்தியாசம் எப்படி ஏற்பட்டது? எப்படி ஏற்படுகிறது என்றால் அதாவது, உடல் முழுக்க நிரம்பி உடலை இயங்கி கொண்டிருப்பது ஜீவகாந்தம் தான். உடல் நலம் குறைவான போது ஜீவகாந்தம் சற்று, மெலிந்து இருக்கும். இது எப்படி மெலிந்து இருக்கிறது என்றால், அவன் செய்த பாவத்தால் தான் (மியாசம்). அதாவது, பிறருக்கு செய்வது மட்டும் பாவம் அல்ல. தனக்கு தானே செய்வதும் பாவம். அதாவது, நேரம் கழித்து சாப்பிடுவதும், பாவம். எப்படி பாவம் என்றால் ஜீவகாந்தம், எங்கும், இருந்து செயல்படுகிறது, அதாவது சாப்பிட்டு ஜீரணம் ஆன உடன், இரைப்பை நீர் சுரந்திருக்கும். இது இரைப்பையில் சுரப்பது அல்ல. ஜீவகாந்தம் தான் சுரக்க வைக்கிறது. சாப்பிட தாமதம் ஏற்பட்டால், இப்போது சுரந்த நீரை கொட்டி விடுவதும், ஜீவகாந்தம் தான். இப்போது உடல் பகுதியில் நேருவது (அல்சர்) வயிற்றில் புண்ணாகி விடும்.

இதே போல் அடிக்கடி உணவு சாப்பிட்டால் என்ன ஆகும். உண்ட உணவை ஜீரணம் செய்யாமல் ஊசிப்போய் விடுகிறது. அப்போது இந்த ஜீவ காந்தம் திணறிக் கொண்டிருக்கும். இந்த ஜீவகாந்தம் என்ன செய்கிறது என்றால், முன்போ வேலை காரணமாக சாப்பிட தாமதப்படுத்தி இருப்பார். இப்போ ஆசையின் காரணமாக அதிகம் சாப்பிட்டதால் இப்படி நேர்கிறது. இப்போது திணரும் ஜீவகாந்தத்திற்கு, வான் காந்தம் என்ற சக்தி உதவி செய்கிறது. அதன் பயனாக காந்தம் நிரப்பப்பட்ட உடன் வாந்தியோ, பேதியோ ஏற்பட்டு சரி செய்கிறது இங்கே பாருங்கள். பட்டினி கிடந்தவனுக்கு வேலை மேல் விருப்பம், உணவு மேல் இல்லை. உணவு மீது விருப்பம் இருப்பவனுக்கு அதிகமான ஆசை. இரண்டும் ஆசை தான். இப்படி தான் நாம் பாவத்தை சம்பாதித்து கொள்கிறோம். ஆசையே அழிவுக்கு காரணம் என்று புத்தர் கூறுவது இது தான். வள்ளலார் அவர்களும், திரும்ப, திரும்ப புண்ணாக்குவது அவன் மனமே என்கிறார் (ஜீவகாந்தம்). இப்போ பாருங்கள் உடலை கெடுத்தது ஜீவகாந்தம் என்ற மனம் தான். சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் வேலை செய்வதும், அதிகமாக சாப்பிட்டு பேதி போவதும், கெட்டுப்போனதும், அவன் உடலா? இல்லை ஜீவகாந்தம் என்ற மனமா? மேலே கண்ட ஞானிகள் கூறியதும் இதை தானே? இப்படி குற்றம் செய்த ஆன்மாவை சமன்படுத்துவது தான் எது? அது வாந்தியோ, பேதியோ தான்.

இதே போல் தான் ஒவ்வொரு உறுப்பையும், உடலையும் இயக்கி வருவது உயிர் தான். அந்த உயிர் துன்பத்தில் மாட்டிக் கொண்டது. அதற்கு உதவி செய்ய வான்காந்தம் வருகிறது. இப்படி தான் உயிர் என்ற ஜீவகாந்தம் கோபப்பட்டு, அவசரப்பட்டு, ஆசைப்பட்டு, கவலைப்பட்டு, காமப்பட்டு, பயப்பட்டு அது அதிகமாகும் போது இது போல பல பல மனப்போராட்டமே, பல ஏற்பட்டு பின்பு உடல் உறுப்பும் பாதிக்கின்றது. இப்போது வான்காந்தம் என்ற இறை சக்தியானது, வந்து ஜீவகாந்தம் செய்த பிழைகளை நீக்குகின்றது. அந்த ஜீவகாந்தம் என்ற மனம் சிந்தித்தது பார்த்தால் சரியாகி விடும். திரும்ப, திரும்ப வள்ளலார் கூறுவது போல் குற்றம் செய்து கொண்டே இருப்பது மனம் தான். அதை தான் பாவ பதிவு என்கிறார். இப்படி உணவிலும், உறக்கத்திலும், இல்லறத்திலும், உழைப்பிலும், எண்ணத்திலும், திருட்டிலும், ஏமாற்றுவதிலும் ஒழுக்கம் (அதாவது அளவு) மீறும் போது இயல்பான நிலை தடுக்கப்படுகிறது. இயற்கையான தடை தான் வியாதி என்கிறோம். இப்படி பல முறை வான்காந்தம், ஜீவகாந்தத்திற்கு உதவி செய்து கொண்டே வரும்.

அப்போதைக்கு வாந்தி, பேதி செய்வது ACUITE DISEASE என்றும், சிறுக, சிறுக சேமித்து கொண்டே வந்தால் அதை கிரானிக் டிஸிஸ் (பாவபதிவு) என்றும், ஹானிமேன் கூறுகிறார். வான்காந்தம் இப்போது என்ன செய்யும் என்றால், கண்களை விருப்பத்தின் காரணமாகவோ, வேறு எந்த காரணத்திற்காக, அளவுக்கு அதிகமாக உபயோகப்படுத்தினால், கண்ணில் கண்ணீர் - சிவப்பு புண் பிறகு ஒரு திரையை போடுகிறது. உதாரணம், இதுவும் நாக்கை போலதான், கண்விழி, கருவிழி, வெண்விழி, கண்ரசம், பார்வை நரம்புகள். இவை உடல் கூறு ரீதியாக, இது கருவி தான். அதை ஆண்டு அனுபவித்துக் கொண்டிருப்பது எது? அது தான் ஜீவகாந்தம் என்ற மனம், அது தானே தூக்கம் கெட்டு படிக்க சொல்லியும், வேறு வேலை செய்ய சொன்னதும், மனம் தானே கண்ணா? அந்த ஜீவகாந்தத்திற்கு அதன் மன வேலையை குறைக்கும் படி வான்காந்தம் செய்த வேலையை தான் கண்ணில் திரைப் போட்டது. ஆனாலும், இந்த ஜீவகாந்தமானது, ஆசையின் காரணமாக வேலையை குறைக்கவில்லை, தவிர, தற்காலத்தில் உதவி செய்யும் படியாக திரையை அறுத்து எடுத்து விடுகிறார்கள். இப்போது, ஜீவ காந்தம் கண்ணுக்கு செலவு முன்னை விட அதிகரிக்கிறது. மற்ற உறுப்புக்கு பற்றாக்குறைவு ஏற்படுகிறது. மற்ற உறுப்பு பாதிக்கும். இப்போது வான்காந்தம் என்ன செய்யும் என்றால் பற்றாக்குறையை சரி செய்ய ஏதோ ஒரு உறுப்புக்கு, செல்லுகின்ற காந்த சக்தியை தடுத்து, அந்த உறுப்பை தடை செய்யும். இப்படி தான் ஒவ்வொரு உறுப்புக்கு செய்யும் சிகிச்சை சரியாகி, மற்ற உறுப்பிற்கு போய்விடுகிறது. கேட்டால் உறுப்பிலிருந்து வியாதியை நகர்த்தி விட்டோம் என்கிறார்கள். பணி செய்ய விடாமல் செய்த திரையை, தடையை, மூக்கு தசையை, தொண்டை சதையை அறுத்து விட்டால் நோய் போய்விடுமா? பாவம் உறுப்பு தானே போகும். இந்த சதை வளர காரணம் என்ன? ஜீவகாந்தத்தை உணர்த்துவதற்காக, வான் காந்தம் (இறைவன்) செய்த வேலை.

இதை தான் புராணங்களில் இறைவன் கொடுத்த (வேதனை) தண்டனை. இதனை எப்படி போக்கி கொள்வது என்பது, தற்சோதனை செய், மனதை அமைதிப்படுத்து என்கிறது. அதாவது ஜீவகாந்தம் பட்ட ஆசை சரிதானா என்று யோசித்து (யோசிப்பது தான் பிரார்த்தனை) சரி செய்து விடு என்று இறுதியாக இன்று வேதாத்திரியம் சொல்கிறது. ஹானிமேன் சொல்கிறார். வான் காந்தத்தின் தெய்வத்தின் தடை தான் தொண்டை சதை, மூக்கு சதை, இதய சதை, மானி சதை. விதை சதை. வளர்த்தது, வான்காந்தம் தான். கட்டியாக, கொப்பளமாக, புற்றாக, எய்ட்ஸ் ஆக வளர்த்தியது எது? எது என்றால் இந்த வான்காந்தம் தான். இதை தான் நம் முன்னோர்கள் தெய்வ குற்றம் என்று சொல்லுவார். ஆக இந்த ஜீவகாந்தம் என்ற மனம் 7 திரைகளால், மறைக்கப்படுகிறது. இந்த உண்மையை மறைத்திருக்கிறது என்று வள்ளலாரும், அந்த திரையை கிழித்து (நீக்கி) பார். உண்மை தெரியும் என்கிறார். உன் மனதிலே ஆறு வழிகளில் தான் குற்றம் செய்து கொண்டிருக்கிறாய், அந்த ஆறு குணங்களை அகத்தாய்வு செய்து சமன்படுத்தி விடு என்று வேதாத்திரி மகரிஷி சொல்கிறார். நீ அதிகமாக குற்றம் செய்து விட்டாய், அளவு மீறி விட்டாய் என்பதை காட்ட தான் உறுப்பு உருமாற்றத்தை ஏற்படுத்தி காட்டுகிறது. இப்போது நாம் உறுப்பையே பார்த்துக் கொண்டு, இருந்தால் என்ன செய்வோம். உப்பிய உறுப்பையும், தேய்ந்த உறுப்பையும், PATHALOGY யை பார்த்துக் கொண்டு, கத்தியை வைத்து தொண்டை சதையை, அறுப்பது, மண்டை சதையை கிழிப்பதும், இருதயத்திலும், பிறப்புறுப்பிலும், நுரையீரலிலும், அங்கு வளரும் சதையை அறுத்து எடுப்பது சரியாகுமா? இப்போது பாதிக்கப்பட்டிருப்பது ஜீவகாந்தம் தானே, அதற்கு உதவி செய்து கொண்டிருப்பது வான்காந்தம். உடல் உறுப்பு என்பது ஜீவகாந்தத்தின் மறு படிவம். இதை அல்லவா? முதலில் சரி செய்ய வேண்டும். வில்லு இருக்க அம்பை மட்டும் நொந்து என்ன பயன்? அப்படி தான் இருக்கிறது, உடலும். ஜீவகாந்தம், ஆகவே ஜீவகாந்தத்தில் தானே குற்றம் நடைபெறுகிறது. இதன் இயக்கம் தான் தடையானது. ஆகவே மனதிலிருக்கும் முரண்பாடுகளை கத்தியை வைத்து அறுக்க முடியுமா? ஆகவே தான் ஹானிமேன் அவர்கள் அறுவை சிகிச்சை கூடாது என்று வன்மையாக கண்டிக்கிறார். தயவு செய்து நான் கூறியதாக நினைக்க வேண்டாம். ஹானிமென் அவர்கள் ஆர்கனான் ஆப் மெடிசன் என்ற ஆங்கில நூலில் அவரது, முன்னுரையில் இது போல் செய்திகளை வெளிப்படையாக கூறுகிறார். அறிஞர்கள் அதை பார்த்து கொள்ளவும்.

மற்றும் இரண்டாம் நூலான ஆர்கனான் ஆப் மெடிசன் H.K.S.V.கல்விக்குழு வெளியிட்ட நூலை பார்த்து, படித்து தெரிந்து கொள்ளவும். அல்லது இப்போது ஆன்மீகம் என்ற ஆத்ம சக்தியையும், மகா ஆத்மா செயலையும், உடல் கூறு ரீதியில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொண்டோம். இதை தான் ஒரு சித்தர், உடம்பை காயமே இது பொய்யடா என்றார். திருமூலரும், இதை பாசம் என்கிறார். அதாவது நீரிலோ, மற்ற இடத்திலோ படிகின்ற படிவம் மாதிரி, ஜீவகாந்தத்தின் படிவம் தான் இந்த உடம்பு என்கிறார். வேதாத்திரி மகரிஷி அவர்களும், கல்லார், கற்றார், (படித்தவன், படிக்காதவன்) ஆக எல்லோருக்கும், அவன் செய்த பாவ புண்ணிய செயலுக்கு தக்க படி விளைவு அப்போதோ, (அ) காலம் தாழ்த்தியோ, ஆனால் கட்டாயம் வந்தே தீரும் என்கிறார். இறைவனுக்குள் நீ, உனக்குள் இறைவன் இருக்கிறான் என்று கூறிவிட்டார். அதற்கு உதாரணம் இது தான். ஆகவே அறிஞர் பெருமக்கள் விஞ்ஞானத்தையும், மெய்ஞானத்தையும், மருத்துவத்தையும் இணைக்க வேண்டும் என்று வேதாத்திரி மகரிஷி கூறினார். ஆகவே அவரது விருப்பத்தை நாங்கள் ஏற்று, இந்த பணியில் எங்கள் சிற்றரிவுக்கு, எட்டிய அளவுக்கு கடுகளவாவது, கூறி இருக்கிறோம் என்று எண்ணி மகிழ்கிறோம். மேலும், அதிகம் படித்தவர்களும், பட்டதாரிகளும், அறிஞர்களும், ஞானிகளும், சமுதாய சீர்திருத்தவாதிகளும், தொண்டு உள்ளம் படைத்தவர்களும், இதில் மலை அளவுக்கு விசயம் இருக்கின்றன. அதை அறிந்து, அளந்து, தெரிந்து மலையளவு கூறிக் கொண்டு இருப்பவர்களும் நாட்டில் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். இனியும் இருப்பார்கள் என்று நாங்கள் நம்பி அவர்களுக்கு கீழ் இதை படைக்கிறோம் என்று பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.

இந்த உலகிலேயே, இந்த உலகமும், பிற கிரகங்களும், பஞ்ச பூதங்களால் ஆனது அல்லவா? ஒரு பொருளுக்குள்ளே இருக்கும் சிறிய பொருள் என்ன? அது அணு என்று சொல்கிறோம். அந்த அணுக்குள்ளே இருக்கும், பல விசியங்களை நியூட்டன் என்ற விஞ்ஞானி, அணுவை கண்டுபிடித்தார். அவரைப் பற்றிக் கூறுவதாவது, ஒரு அணுவில் உட்கரு என்ற நீயூட்டன் இருக்கிறது. அதனை சுற்றி வருவது, எலக்ட்ரான் என்ற ஒரு பகுதி. இன்றைய காலக்கட்டத்தில், பெரிது, பெரிதுபடுத்தி பார்க்கும் கருவிகள், நிறைய வந்துள்ளது. இப்போது வந்துள்ள விஞ்ஞானிகள் ஐன்ஸ்டின், யூதர்போர்டு போன்றவர்கள் எல்லாம் வந்து, நீயூக்கிளியர், ஹெரிடேர்ட், குரோமோசோம், ஜீன்ஸ் என்று எல்லாம் கூறுகிறார்கள். ஆனால் இது மிகவும் சுருக்கம் தான். ஆனால் எல்லோருக்கும், எளிமையாக புரியும் படியாக விஞ்ஞானத்தையும், ஆன்மீகத்தையும் ஒப்பிட்டு பார்ப்போம். ஆன்மீகம் கூறுவதாவது, பஞ்சபூதம் தான் எல்லாவுமாக இருக்கிறது. இந்த பூமியில் மட்டுமின்றி விண்ணில், நமது கண்ணுக்கு தெரிகிற எல்லாமே, பஞ்ச பூதங்கள் என்று கூறுகிறது. ஆகவே பஞ்ச பூதம் என்று ஆன்மீகம் கூறுகிறது. ஆகவே எல்லாப் பொருளும், ஐந்தின் விகிதாச்சாரம் தான். கெட்டிப்பொருள், நீர்ப்பொருள், காற்றுப் பொருள் மற்றும் விண் ஆகும்.

ஆகவே அணு என்பதும், மிகச்சிறிய பொருள், நம் உடல் முழுவதும், அணுக்களால் நிரம்பியுள்ளது. ஒரு அணுவை எடுத்து, ஒரு பெரிய பூதக் கண்ணாடியில் பார்த்தால், அதில் என்ன இருக்கும், என்றால் வட்டமான அமைப்பு நடுவிலே உட்கரு என்ற நியூட்டன் இருக்கிறது. அந்த அணு முழுக்க, குறுக்கும், நெடுக்குமாக போவதும், வருவதும் எலக்ட்ரான் என்ற ஒரு பொருள், மேலும், அங்கு இருப்பது என்ன? VACANT என்ற வெற்றிடம் தான். விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்றால், நீயூட்டன், எலக்ட்ரான் கருவிக்கு தெரிகிறது. ஆனால் அதில் இருக்கும், வெற்றிடத்தை VACANT என்று சொல்லி நழுவி விட்டது ஆனால் அதில் இருக்கும், வெற்றிடத்தை தான் விஞ்ஞானம், ஒதுக்கி விட்ட வெற்றிடத்தை, தான் ஆன்மீகம் பரமாணு என்றும், சிவம் என்றும், கிருஸ்துவம் - கருப்பொருள் என்றும், எங்கும் நிறைந்திருப்பவனே - அல்லா என்றும் நபிகள் கூறுகிறார்கள். இதே மாதிரி வட்டமாக வலது புறமாக சுற்றுவது ஒரு அணு. இதே போல் எண்ணிலடங்காத அணுக்கள் சேர்ந்தது தான் இந்த பூமி. இதே போல் சூரியனும், அதை சுற்றியுள்ள கோள்களை எல்லாம் சேர்த்து, ஒரு அண்டம் என்று சொல்கிறோம். இதே போல் கோடிக்கணக்கான அண்டத்தை பால்வழிப்பாதை என்றும் சொல்கிறோம்.

இப்படி கோடிக்கணக்கான பால் வழிப்பாதையை சக்திகளம் அல்லது பேரண்டம் என்று சொல்கிறோம். இவைகள் எல்லாமே அணுக்களால் ஆனது. வலதுபுறமாக சுழல்கிறது என்று விஞ்ஞானமும், இவைகள் அனைத்தும், பஞ்ச பூதங்களால் ஆனது என்று ஆன்மீகம் சொல்கிறது. இவைகளை சுருக்கமாக இப்போது பார்ப்போம். (விளக்கமாக அல்ல).

இப்போது, விஞ்ஞானத்தையும், ஆன்மீகத்தையும் ஒப்பிட்டு பார்ப்போம். ஒரு அணுக்குள் நியூட்டன், எலக்ட்ரான் என்றும், அந்த நீயூட்டன் முதிர்ச்சி பெற்றவுடன், இரண்டாக பிரிந்துக் கொள்ளும். இந்த நிகழ்ச்சி எப்போதும் நடந்துக் கொண்டேயிருக்கும். இப்போது அணுவின் அளவையும், உருவத்தையும், உட்பொருளையும் மனக்கண்ணில் பார்ப்போம். அதாவது, ஒரு அணு என்பது சிறிய பொருள். அது எவ்வளவு பெரிது இருக்கும் என்றால், ஒரு குண்டூசியின் தலை அளவுக்கு உள்ள பரப்பளவுக்குள், முப்பதாயிரம் அணுக்கள் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் அளவுக்குள். எவ்வளவு அளவு ஒரு அணுவுக்கும், இடம் தேவைப்பட்டிருக்கும் என்று மனக் கண்ணில் பாருங்கள். இதை கண்ணில் காண முடியாது அல்லவா? கருவியில் மட்டும் தான் காண முடியும். இப்போது ஒரு அணுவை எடுத்து, மிக, மிக பெரிது படுத்தும் பூதக் கண்ணாடியில் எடுத்து பார்ப்போம். அதாவது ஒரு அணுவை பத்தாயிரம் மடங்கு எடுத்து, பரப்பிக் காட்டும் பூதக் கண்ணாடியில் ஓர் அணுவைப் பார்ப்போம். ஓர் அணுவுக்குள் மையத்தில் இருக்கும், பொருள் நியூட்டன், அது ஒரு பங்குதான், மையப்பொருள். அதனை ஒரு பங்கு சுற்றிக் கொண்டு வருவது எலக்ட்ரான். இதனைப் பற்றி விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்றும், ஆன்மீகம் என்ன சொல்கிறது என்றும் பார்ப்போம்.

அந்த நியூட்டனுக்குள் ஆன்மீகம் என்ன சொல்கிறது. அதில் 3 பொருள் உள்ளது என்று சொல்கிறது. அதாவது 1. மண் என்ற கெட்டிப்பொருள், 2. நீர், 3. காற்று இந்த மூன்றும் சேர்ந்த பொருள் தான் நீயூட்டன் என்ற பொருள், மற்றொரு நெருப்பு என்ற பூதம் பொருள், அதை சுற்றிக் கொண்டிருக்கும் பொருள் எலக்ட்ரான் என்ற பொருள் ஆகும். இதனை அடுத்து மற்ற குரோமோசோம், ஜீன்ஸ் என்ற பொருள் 2 பங்கு என்றும், மொத்தம், நான்கு பங்கு என்று எடுத்துக் கொண்டாலும்கூட பத்தாயிரத்தில் நான்கு பங்கு என்ற பரப்பளவு தான் உள்ளது. மீதி 996 பங்கு விண் என்ற தூய வெளி, சுத்த வெளி, அருட்பெருஞ்ஜோதி என்று ஆன்மீகம் சொல்கிறது. ஆகவே விஞ்ஞானம் ஒதுக்கியதை, ஆன்மீகம் சுத்தவெளி தெய்வம் என்று ஏற்றுக்கொள்கிறது. இப்போது பாருங்க, நமது உடம்பை எடுத்துப் பார்ப்போம். கெட்டிப்பொருள், நீர்பொருள், காற்று, இம்மூன்றும் சேர்ந்தது தானே, நீயூட்டன். நெருப்பு பொருளுக்குள் கணம் இல்லை. ஆக இப்போது, ஒரு கணக்கு போட்டு பாருங்கள். பத்தாயிரத்தில் ஒரு பங்கு தான் மேலே கண்ட மூன்று பஞ்ச பூதங்களும் ஆகும். நமது உடம்பு பத்தாயிரத்தில் ஒரு பங்கு என்ற வைத்துக்கொண்டால் நமது உடம்பு, 100 கிலோ எடையுள்ள பரப்பு என்றால், பத்து கிராம் நிறை பரப்பு தான் நமது உடம்பு பரப்பு என்றும், அப்போது 999 பங்கு வெற்றிடப் பரப்பு என்று நம்மால் கணக்கிட முடிகிறது. இதைக் கம்யூட்டரிலும், மனக்கணக்கிலும், போட்டுப் பார்க்க முடியும். நமது பூமியானது 6 லட்சம் கோடி டன் எடைக்கொண்டது. 1 மணிக்கு, சுமார் 1000 மைல் வேகத்தில் தன்னைத்தானே சுற்றுகிறது. இதற்கு சமமான, இதை விட வேகமாக சுற்றும் வாகனம் உலகில் உண்டா? உண்டு என்றும் கூறலாம். ஆனால் சூரியனை பூமி 1 மணிக்கு 65,000 மைல் வேகத்தில் சுற்றுகிறது.

இதை விடவும் வேகமாக செல்லும் ஒரு சக்தி இருக்கிறது. அதனை விஞ்ஞானம் ஒளி வேகம் என்கிறது. அதன் வேகமானது 1 மணிக்கு அல்ல, 1 வினாடிக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் மையில் வேகம் செல்லக்கூடியது. கற்பனைக்யே செய்ய முடியாத தூரம் அல்லவா? ஆகவே ஹோமியோபதி மருந்தின் ஆற்றல்களை கண்களுக்கும், கருவிகளுக்கும் தெரியாது என்று பார்த்தோம். அதன் வேக சக்தியையும், இந்த சுத்த வெளியின் அளவை ஒப்பிட்டு காட்ட வேண்டுமென்றால் இந்த சுத்த வெளியை விட பல மடங்கு விசியம் உள்ளது. அதை மிக, மிக நுட்பமாக, சொல்ல வேண்டி வருகிறது. இந்த விளக்கத்தை நாம் பார்க்க போகின்ற எட்டாவது நூலின் பின் குறிப்பில் இதையை பார்ப்போம்.

அதாவது இந்நூல்களை படிப்பவர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். எழுதப்பட்ட எட்டு நூல்களையும், நன்கு படித்து புரீந்துக் கொண்ட பிறகு தான் மருந்தை கையாள வேண்டும். அதாவது, முதல் முறை படித்த உடன் நமக்கு அந்த நூலில் இருப்பதைப் போலவே இருக்கிறது. அந்த மருந்தின் குணம்போல் உறவினருக்கு இருக்கிறது. ஆகவே இந்த மருந்து பொருந்தும் என்று கடைகளில் போய் மருந்தை வாங்கி கையாளக்கூடாது. எட்டு நூல்களை படித்து, புரிந்து கொண்ட பிறகு தான் கையாள வேண்டும். சுமார் ஐந்து முறையாவது படித்துப்புரிந்துகொண்ட பிறகுதான் நீங்கள் உட்கொள்ளவேண்டும் அப்படி படிக்காமல் ஒரு, நூலையோ, இரண்டு நூலையோ படித்து விட்டு மருந்துகளை கையாள ஆரம்பித்து விட்டால், குற்றங்கள் நிகழ்ந்து விடும். இந்த குற்றத்திற்கு, நீங்களும், இதை எழுதிய நானும், பங்காளி ஆகிவிடுவோம். இதை நான் எழுதி கொடுத்ததற்கு என்ன கேட்கிறேன் என்றால், எட்டு நூல்களையும், படித்து புரிந்து கொண்டு, மருத்துவ தத்துவங்களை கையாண்டால் உயர் புகழும், புண்ணியமும், தானாக கிடைக்கும். தவறினால் குற்றம் நேர்ந்து விடும் என்று, அன்போடும், பணிவோடும் எச்சரிக்கிறேன்.

இந்த இடத்தில் ஒரு கதாபாத்திரத்தை பார்ப்போம். நமது நாட்டில் தோன்றிய ஞானிகளும், யோகிகளும், மனித சமுதாயத்திற்கு இதிகாசம், புராணம் என்ற பெயரில், நமக்கு அரிய பெரிய, பொக்கிஷங்களை உருவாக்கி வைத்துள்ளார்கள். அதில் ஒன்றை பார்ப்போம். அதில் ஒரு நூல் மஹாபாரதம் எனப்படும். இதை வியாசர் மகரிஷி என்ற அதி அற்புதமான ஞானியால் எழுதப்பட்டு, இது கற்பனையான கதை என்பது, உண்மைதான். ஆனால் அதில் உள்ள பாத்திரங்களும், தத்துவங்களும், பகவத் கீதை என்ற மிக அற்புதமான படைப்பு, அது கூறும் வாழ்வியல் ஒழுக்கங்கள், வாழ்வின் உயர் நெறிமுறையும், எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி நமக்கு அற்புதமாக போதிக்கின்றது. இந்த அhpய பொக்கிஷம், நமது மருத்துவத்துக்கு தேவையானதை பற்றிப் இப்போது பார்ப்போம். அதில் அர்ஜீனன் என்ற பாத்திரம் இருக்கிறது. அவன் தன் மனைவியுடன், ஒரு நாள் முன் இரவு, மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது சுபத்திரை என்ற அவர் மனைவி அவரிடம் கேட்கிறார். போர் செய்யும் மரபுகளில் நீங்கள், வல்லவர், அதில் சக்கராயுதம் என்ற போர் அமைப்பும் உண்டு. முக்கியமான நேரத்தில் அதை அமைத்து போர் செய்வார்கள், என்று கேள்வி பட்டிருக்கிறேன். அதை பற்றி எனக்கு கூறுங்கள் என்று கேட்கிறார்.

அதாவது, போர்களத்தில் சக்கரம் போல் சுற்றிலும், போர் வீரர்கள் வட்டமாக நிற்பார்கள். அந்த வட்டத்திற்கு என்று ஒரு தலைவர் உண்டு. அதற்குள்ளே ஒரு வட்டம் இருக்கும். அதற்கென்று ஒரு தலைவர் இருப்பார். இப்படியே வட்ட, வட்டமாக போய் சிறு வட்டம் இருக்கும். அதனுள் முக்கிய எதிரி இருப்பார். அவனை தாக்க வருபவர்கள் இத்தனை வட்டங்களுக்குள் செல்ல வேண்டும். சென்று எதிரியை வீழ்த்தி விட்டு பிறகு திரும்ப வேண்டும். உள்ளே செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அப்படியே முதல் வட்டத்தில் இருக்கும் வீரர்களை தப்பித்து உள்ளே சென்றாலும், இரண்டாவது வட்டத்தில் இருக்கும் வீரர்களிடம் தப்பிப்பது கஷ்டம். இப்படியே கடைசி வட்டதிற்குள் செல்லும் போது, அந்த வீரர்கள் மிகவும் கெட்டிக் காரர்களாக இருப்பார்கள். இதை தான் தன் மனைவியிடம் உள்ளே எப்படி செல்வது என்று, உள்ளே செல்லும் வரை கூறிக்கொண்டே இருந்தார். கர்ப்பினி என்பதால் படுத்துக்கொண்டே கேட்கிறார். இப்போது மனைவி முகத்தை பார்கிறார். நன்கு தூங்கி கொண்டிருக்கிறார். ஆனால் ஹீம், ஹீம் என்ற சப்தம் வருகிறது. அது கருவில் இருக்கும் குழந்தை தான் கேட்டு கொண்டு வந்தது, என்பதை கண்டு சிரித்து விட்டு எழுந்து போய் விடுகிறார்.

பின்பு, குழந்தை பிறந்து போர், பயிற்சி பெற்று, வாலிபன் ஆகி திருமணம் நடந்து விடுகிறது. இப்போது மகாபாரத போர் வந்து விடுகிறது. அப்போது அர்சுனன் வெளியே போய் விடுகிறார். ஆனால் போர்களத்தில் சக்ராயுதம், வீயூகம் அமைக்கப்பட்டது. தனது எதிரிகள் உள்ளே இருக்கிறார்கள், வெல்ல வேண்டும் என்பதால், அர்சுனன் மகனாகிய அபிமன்யு போருக்கு சென்று சக்கரா வீயூகத்தை, உடைத்து எதிரியிடம் உள்ளே சென்று, எதிரியை வீழ்த்துகிறார். ஆனால் வெளியே வர தெரியவில்லை. காரணம் என்ன? கருவில் கேட்ட இவர், வெளியில் வருவதை பற்றி தெரிந்து கொள்ளவில்லை. வாலிபனாகியும் வெளிவரும் வீயூகத்தை பற்றி கேட்கவில்லை. காரணம் அதை கண்டு கொள்ளவில்லை. இப்போது வாய்ப்பு வந்து விட்டது. ஆர்வத்தின் காரணமாக உள்ளே சென்ற, அபிமன்யுக்கு, வர தெரியாமல் மரணம் அடைந்து விடுகிறான். ஆகவே இக்கதை எதைக் காட்டுகிறது? ஆர்வம் அதிகம் ஆனால் தொழில் முழுமையாக தெரியலை, அபிமன்யு என்பதை காட்டியது. இக்கதையை நாம் எதற்கு சிந்திக்கின்றோம், என்றால் ஆர்வத்தின் காரணமாக அசைட்டையின் காரணமாகவும், முதல் நூல் மெட்டீரியா, மெடிக்காவை மட்டும் படித்து விட்டு பலர், அரைகுரையாக மருந்தை கையாள்கிறார்கள். மற்றும் படித்தவர்கள் கூட சோம்பேறி தனம், வெறும் வறட்டு கௌரவத்தின் காரணமாக, ஆர்கனான் ஆப் மெடிஸனை நன்கு படிக்கலாம். (2வது நூல்) அதை புரிந்து கொள்ளாமல் மருந்து தருகிறார்கள். மற்றும் 5 வது 6 வது நூலில் உடற்கூறு உறுப்புகளின், அட்டவணையில் மருந்துகளை சொல்லப்பட்டுள்ளது.

காரணம் அதை எழுதியவர், பெரும்பாலும், M.D. அலோபதி டாக்டர்கள். ஆகவே அந்த ஆல்பாபடிகளில் கூறியுள்ளார்கள். ஆனால் தத்துவம், ஜீவகாந்தம், மனம் அதன் குறிகளை தான் பார்க்கனும். ஆனால் அதை பார்க்காமல், உறுப்பையே வைத்து மருந்து எடுத்து விடுகிறார்கள். அரைகுறையாக புரிந்தது. அது போல் தப்பாக தானே போகும். மற்றும் சிலர் வேகம், ஆர்வம் காரணமாக தான் இப்படி செய்கிறார்கள். ஆனால் அது பாவம் என்று ஆன்மீகமும், குற்றம் என்று சட்டமும் சொல்கிறது. மேலும், சிலர் ஹோமியோபதியின் தத்துவம் தெரிந்து கொள்ளாமல் படித்து பட்டம் பெற்ற, அரசு பதிவும் பெற்றவர்கள் கூட, அலோபதி மருத்துவத்தையும், பிற மருத்துவத்தையும் நாடுகிறார்கள். அதற்கு காரணம், அவர்க்கு வாய்ப்பு கிடைக்கும் போது அதை அசட்டை செய்து விடுவதும், பொருளாதாரம் வேண்டும், குடும்பம் நடத்த வேண்டுமே என்பதற்காகவும், அப்படி தெரிந்தோ, தெரியாமலோ செய்ய வேண்டிய கட்டாயம் சிலருக்கு ஆகிறது. மற்றும் மருத்துவம் செய்ய போதிய ஆங்கிலம், தெரியாமையும், காரணமாகிறது. ஆகவே ஆங்கிலம் தெரிந்து கொள்வது சுலபம் தான். ஹேhமியோ தத்துவம் தெரிந்து கொள்வதும், சுலபம் தான். பிறகு படித்தவர் மருந்து கொடுத்தால், பணம் கிடைப்பதும் கூட சுலபம் தான். மற்றும் எல்லோருக்கும் வைத்தியம் செய்யும் அளவுக்கு, ஹோமியோபதி டாக்டர்கள் (உண்மையான) குறைவு. காரணம், சோம்பேறி, படிக்க அசட்டை ஆகவே இதை நன்கு படிக்கனும். 8 நூல்களையும், திரும்ப, திரும்ப படித்து நன்கு புரிந்து கொண்ட பின்பு, தான் செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்துவதற்கு காரணம், ஆர்வத்தின் காரணமாக, அன்பின் காரணமாக, அவசியத்தின் காரணமாக. நம்மை குற்றத்துக்கு நழுவ செய்கிறது. ஆகவே புதிதாக கற்பவர்கள், தினம் 2 மணி நேரம் சுமார், ஆறு மாதங்கள், இந்நூல்களை திரும்ப, திரும்ப படிக்கவும். ஆங்கிலத்தை சற்று தெளிவு படுத்திக் கொள்ளவும். படித்தவர்கள், உலகில் வாழ்வியல் காரணமாக மறந்திருக்கலாம். அவர்களும் இதை படித்து ஸ்டடி செய்து கொள்ளவும். மேலும், சம்பந்தப்பட்ட ஆங்கில நூல்களை, போய் விரிவாகவும், விளக்கமாக படித்து புரிந்து கொள்ளலாம். அதனால் ஒன்றும் தாழ்வில்லை. குற்றமில்லை. ஹானிமேன் கூட 80 வயதில் பிரெஞ்சு மொழி படித்தார். திருமணம் அப்போது செய்து கொண்டார். அதை சோம்பல் காரணமாக இப்படி பல காரணங்களில் செய்வது தான், சரியில்லை. என்பதை மாற்ற வேண்டும்.

நாமும், நல்லாயிருக்கனும், நம்மை நம்பி மருந்து சாப்பிடுபவர்களும், நன்றாக இருக்கனும். ஒரு குடும்பத்துக்கு ஒருவர் படித்து அக்குடும்பத்தை, ஆரோக்கியமாக வைக்கவும். மகிழ்ச்சி அடைய உதவி புரிய வேண்டும். தனி மனிதன், ஆரோக்கியமே, நாட்டின், உலகின் ஆரோக்கியம். ஆகவே ஆரோக்கியம் அடைந்தால் தீவிரவாதம், சுயநலம் ஏது? உலகில் நம்மில் பலர் அபிமன்யூவை போல அறிவாளியாகவும், அன்புள்ளம் கொண்டவர்களாகவும், அசட்டை செய்பவர்களாகவும், அவசரப்படுவோர்களாகவும், ஆற்றல் மிக்கவர்களாகவும், அள்ளல் படுவோர்களாகவும், இருக்கிறோம். மேலும், உண்மையை உலகம் பின்பற்றும் போது, உலகமே ஹோமியோபதி மருத்துவத்தை ஏற்றுக் கொள்ளும் என்கிறார். ஆதாரம் ஞானக்களஞ்சியம் நூல். அவரது எதிர்பார்ப்பு பாடல் ஒன்று.

ஓர் உலக ஆட்சி, உயர் ஒழுக்கத்தோடு,
உலகினிலே குழந்தைகளை வளர்க்கும்
திட்டம். பார் முழுவதும் பொருள் துறையில்,
சம நேர், நீதி, பல நாடும், ஒருங்கிணைந்த,
பொருளாதாரம், சீர்திருத்த சிக்கனமாம்,
சிறந்த வாழ்வு, தெய்வ நிலை அகத்தே
உணர்த்தும், இறைவணக்கம், நேர் வழியில்,
விஞ்ஞானம், பயனாய் கொள்ளும் நெறி முறைகள்,
இவையிணைந்த வாழ்வு காண்போம். என்கிறார்.

கவிஞர் பட்டுக்கோட்டை,
தனி உடமை மற்றும் உரிமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா என்றார்.

தமிழன் என்றொரு இனமுண்டு,
தனியே அவர்கொரு, குணமுண்டு.
அமுதம் அவனது மொழியாகும்,
அன்பே அவனது வழியாகும்.

இந்த பாடல்களுக்கு பலம் சேர்க்க எங்கள் H.K.S.V.கல்விக்குழு எதையும், எதிர்பார்க்காமல் தொண்டு செய்கிறது. ஆகவே இங்கு தரப்படும், எட்டு நூல்களை படித்து, பொருள் புரிந்து, அதற்கு ஒத்த ஆங்கில நூல்களை மேலும், விளக்கம் பெற, குறிப்பிட்ட ஆங்கில நூல்களை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள வேண்டும். அவைகளில் எல்லாம் இன்பம் இருக்கிறது. இப்படி பழகி கொண்ட பிறகு அபிமன்யூவை போல் நாமும், அறிவும், அன்பும், அக்கறையும், ஆற்றலும், அமைதியும், மகிழ்ச்சியும் பெறலாம்.

வேதாத்திரி மகரிஷி கூறுகிறார். தனி மனித அமைதி தான், உலகின் அமைதி, பிறகு சமாதானம், தாமாகவே கிடைக்கும் என்கிறார். அவரது கொள்கைக்கு துணையாக, தனி ஒவ்வொரு மனிதனுக்கு ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் குழுவின் நோக்கம்.