சிகிச்சை குறிப்புகள் :-
NATURE OF CHRONIC DISEASE -97 CASE STUDY.
Dr.சாமுவெல் ஹானிமேன் அவர் கூறுவதாவது:-
என்னிடம் வந்த நோயாளின் சிகிச்சை குறிப்புகள் :-

1). எனக்கு நீண்ட நாட்களாக சரும நோய் இருந்தது என்று கூறிக்கொண்டே சுமார் 30 வயதிலிருந்து 40 வயது மதிக்கதக்க ஒரு மனிதர் இந்த அரிப்பு நோயால் தாக்கப்பட்டு களிம்பு வகைகளை பூசி குணப்படுத்தப்பட்ட வரலாறு உள்ளவராகவும், இப்போதும் களிம்பை பூசிக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறினார். இதன் விளைவாக அவருக்கு என்ன வந்தது என்றால் இந்த சரும நோய் உட்புறமாக (ஸோரா) சென்று நுரையீரலை தாக்கி பின்பு கடுமையான ஆஸ்துமா நோயாளியாகி விட்டார். அவருடைய சுவாசகோசமானது மிக சிறிதளவு வேலை செய்தாலும் சிறிதளவு அசைந்தாலும் கூட வேக, வேகமாக மேல் மூச்சு இழுத்து, இழுத்து விடுவார். அவருக்கு மிக சிறிதளவு மேல் மூச்சு வாங்கினாலும் குமட்டுவது போலவும், முறை வைத்து குறிப்பிட்ட நேரத்தில் இஸ், இஸ் மூச்சு சத்தமும் கேட்கும். ஆனாலும் சிறிய குத் இருமலும் வரும். அப்போது எல்லாம் மூன்று அரிசி (2 மி.லி. கிராம்) எடையுள்ள இங்கிலிஸ் மருந்தை ஊசி மூலம் செலுத்தினால் சரியாகிவிடும். ஆனால் அடுத்து, அடுத்து ஊசி போட வேண்டி வரும். அதாவது, இப்படி ஊசி போட, போட என்ன ஆனது என்றால் ஒவ்வாமையும், குமட்டலும், (அ) உணவு எது களிப்பும் தோன்றும். இப்போது என்ன செய்தது என்றால் ஊசி மருந்துகள் முன்பு கூறப்பட்ட குமட்டல் ஒவ்வாமையை சரிபடுத்தி விட்டது. பிறகு அந்த ஸோரா வெளிப்புறமாக வந்து கையில் பிப்பு ஏற்பட்டது. காலில் அரிப்பு ஏற்பட்டு விட்டது. உடல் முழுக்க பொருக்க முடியாத அரிப்பு வந்து விட்டது. இப்பொழுது ஆஸ்துமா வியாதி விலகி விட்டது. ஆனால் குணம் ஆகிவிட்டது என்று அர்த்தம் அல்ல. அந்த ஊசி மருந்தின் காரத்தினாலும், விளைவாலும், சரும அரிப்பு வந்து விட்டது என்றும், இப்போது ஆஸ்துமாவை தூண்டிய ஸோரா வெளியே வந்து அரிப்பை ஏற்படுத்துகிறது என்பது தான் அதன் பொருள்.

2). இரண்டாவது கேஸை பார்ப்போம். அதாவது ஒரு மிக பயங்கரமான ஆஸ்துமா நோயாளிக்கு நுரையீரல் வீக்கம் ஏற்பட்டு சரும நோயும் இரண்டும் கலப்பு நோயாக மாறி காய்ச்சலில் போய் முடிந்தது.

3). ஒரு முப்பத்திரண்டு வயது மதிக்க தக்க ஒரு மனிதருக்கு கடுமையான அரிப்பு ஏற்பட்டது. அதற்கு கந்தகத்தில் செய்யப்பட்ட களிம்பை தொடர்ந்து பூசினார். ஆனாலும் அது அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. அவருக்கு பதினொரு மாதங்களுக்கு பிறகு அந்த அரிப்பு நோய் உள்ளே அடக்கப்பட்டது. ஆனால் அது வரை உள்ளே இருந்த ஆஸ்துமா நோய் பயங்கரமாக எழுச்சி பெற்றது. இப்போது அதை தணிக்க பச்சையிலை மூலிகை இரசத்தைக் கொடுக்கப்பட்டது. உடனே ஆஸ்துமா உள்ளே மறைக்கபட்டது. 23 நாட்களுக்கு பிறகு முன்பை விட கடுமையான தலைவலியோடு சரும புறப்பாடுகள் ஏற்பட்டது.

4. ஒரு மாணவன் அரிப்பு நோயால் சிக்கிக் கொண்டிருந்தான். அவன் நடனமாடிக் கொண்டு இருந்ததில் அவனுக்குள்ளே இருந்த ஆஸ்துமா வெளியேறியது. அவன் நடனம் ஆடுபவன். அவன் செய்த (நடனம் ஆடிய) பயிற்சியின் காரணமாக ஆஸ்துமா வெளியேறியது. அவன் சரும நோய்க்காக இப்போது கந்தகத்தில் செய்யப்பட்ட களிம்பை போட்டான். அதற்கு பிறகு என்ன நேர்ந்தது என்றால், திரும்பவும் சரும ஸோரா அரிப்பு நுரையீரலுக்கே சென்று விட்டது. இப்போது பல வகை ஆஸ்துமாவாக தோன்றி நடனம் ஆடிய அவன் இப்போது நடக்கவும் முடியாமல், பின்புறம் தலையை சாய்க்கவும் முடியாமல், சுவாசிக்கவும் முடியாமல் போய் மூச்சு திணறல் ஏற்பட்டது. அதனால் மிக, மிக விரைவாகவே மரணக்கட்டத்திற்கே போய் விட்டான். மிக கடுமையாக அவன் இரண்டு வருடங்களாக மிகவும் கஷ்டப்பட்டான். இந்த வியாதினால், ஒரு நாளைக்கு பத்து தடவைக் கூட மூச்சு திணறல் ஏற்பட்டு விடும். அப்படி ஏற்பட்ட போது ஒரு நல்ல ஹோமியோபதி மருத்துவரால் சிகிச்சை செய்து அந்த நோயிலிருந்து அவன் விடுவிக்கப்பட்டான்.

5. ஒரு 13 வயது பையன் குழந்தை தனம் மிக்கவன். அவன் தாயை பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன் பிறகு அவனுக்கு ஸோராவின் காரணமாக எட்டு பத்து நாட்களில் அவனிடம் ஏற்கனவே இருந்த ஆஸ்துமாவை அடக்கப்பட்டது. அடங்கிய பின்பு அவன் இடுப்பு, மூட்டு, முதுகு, முட்டிக்கால் போன்றவற்றில் கடுமையான வலிகள் தோன்றிவிட்டன. அதற்கு ஏதேதோ சிகிச்சைகள் செய்தும் பயன் அளிக்கவில்லை. இப்போது சிறுவன் என்பதால் கடுமையான அரிப்பு தோன்றி ஆங்காங்கே உடல் முழுக்க பிளவுகள் ஏற்பட்டது. பிறகு இப்போது தானாகவே வலிகள் எல்லாம் போய்விட்டது. ஒரு மாதத்தில் அது குணம் செய்யப்பட்டது. (ஹோமியோபதி மருந்தில்.)

6. ஒரு இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட வலிகளின் காரணமாக வலிகளை அடக்கும் மருந்துகள் தரப்பட்டது. அது நெஞ்சில் போய் சளி, கட்டி கடுமையான இருமல் தோன்றி இரும்பி, இரும்பி களைப்பு ஏற்பட்டு விட்டது. அதற்கு அடிக்கடி இரும்பலுக்கு என்று கொடுக்கப்பட்ட மருந்து இப்போது பலன் அளிக்கவில்லை. மருந்தை நிறுத்தப்பட்டு விட்டது. இப்போது அவளுக்கு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி ஏற்பட்டவுடன் அவள் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தாள். அதன் விளைவாக சருமத்தில் அடை, அடையாக படையும், பிளவும் ஏற்பட்டது. அவளை விசாரித்து பார்த்ததில் அவளுக்கு முதன், முதலில் படையும், பிளவும் இருந்த வரலாறு இருந்தது. படையும், பிளவும் வெளியேறியதும் இரும்பல் தானாகவே குணமாகி விட்டது. இயற்கையே குணம் செய்தது.

குறிப்பு:-

இதை தான் காட்டில் இயற்கையின் சக்தியை கண்டு வியந்தார்.

7. ஒரு சிறுவன் ஐந்து வருடமாக அரிப்பு நோயால் துன்பப்பட்டு கொண்டு இருந்தான். அவன் அந்த அரிப்பு நோயிக்கு, சொறிந்துக் கொண்டே அரிப்பை நிறுத்தும் மருந்தை நடு, நடுவே, தடவிக்கொண்டே வந்தான். அவன் இடது புறம் முழுவதும் துன்பபடும் படி ஆனது. அதன் பிறகு அவனுக்கு கடுமையான இருமல் தோன்றி, அவனுக்கு அரை பைத்தியமே பிடித்து விட்டது. இருமல் தோன்றுவதற்கு காரணம் அரிப்பு தான் என்று தெரியவந்தது.

8). ஒருவருக்கு உடல் முழுக்க அடை, அடையாக பரவி இருந்த சரும நோய் அதை சொறியாமல் தேய்த்து விட்டு கொண்டும், மேலே எண்ணெய் தடவி வைத்துக் கொண்டும் அதை தணித்து கொண்டே இருந்தார். அதன் பிறகு அது அதிகப்படியான களைப்பை தோள்பட்டையில் ஏற்படுத்தியது. அதன் பிறகு ஒரு பக்க தலைவலியும், பசி இல்லாமலும் போய், சளி நிறைய நுரையீரலில் உற்பத்தியாகி அது ஆஸ்துமா நோயாக மாறி நுரையீரலில் சளி அடைத்துக் கொண்டது. இப்போது மூச்சு திணறலும், இரவு நேரத்தில் பல வித சத்தங்களையும் வெளியேற்றியது. அதாவது கிலு கிலு சத்தம் மாதிரியும், விசில் மாதிரியும் சத்தம் தோன்றும். அது மார்பில் வலிப்பை ஏற்படுத்தி, தோள்பட்டைகளை தூக்கி, தூக்கி போட்டு இழுப்பு கடுமையான ஆஸ்துமாவாக மாறி இரத்த கசிவு ஏற்பட்டு மரணத்தில் முடிந்து விட்டது. இப்போது இவருக்கு உள்ளே பதுங்கியிருந்த சரும நோயான செதில், படை போன்ற பிளவுகளை அடக்கப்பட்டதின் காரணமே ஆகும். அடக்கப்பட்ட சரும நோயானது நுரையீரலை தாக்கி விட்டது. இது சரும நோயாக வெளியே வந்தோ (அ) மருந்து கொடுத்து சரி செய்து வெளியேற்றி இருந்தாலோ இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.

8 – A. ஒரு இளம் பெண் மூன்று வருடமாக சொறி நோயில் தாக்கப்பட்டு இருந்தார். சில வாரங்களாக சொறிந்து கொண்டும், களிம்புகளை தடவியும் வந்தாள். இது அவளுக்கு சிறையிலிட்டு சித்ரவதை செய்வது போல் இருந்தது. இப்படி களிம்பு போட்டு தணிந்தவுடன், மறுநாளே அவளுக்கு நுரையீரலில் சளி அடைத்துக் கொண்டது. அதனால் மூச்சு திணறலும், குறட்டையும் தோன்றி விட்டது. அதன் பிறகு சருமம் முழுவதும் ஜீல்லுன்னு ஐஸ் போல் ஆகி அவளுக்கு இப்போது அரிப்பு நோய் வெளியே வந்தவுடன் இந்த நுரையீரல் சளி குணமாகி விட்டது.

9. 1,012 வருடமாக ஒரு இளம் பெண் அரிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவள் அது வரை கந்தகத்தில் செய்த களிம்பை மேலே பூசிக்கொண்டும் இருந்தார். இந்த செயல் அவரை சித்ரவதை செய்வது போல் இருந்தது. தீடீரென்று அவளுக்கு காய்ச்சலும், சளியும் ஏற்பட்டு பிறகு, சளியானது நுரையீரல், உறையை தாக்கி ப்ளுரசி காய்ச்சலாக மாறி அதற்கு ஆறு நாட்களாக சிகிச்சை எடுத்துக் கொண்டார். உள்ளுக்குள் சாப்பிட்ட மருந்தும் கந்தகத்தில் செய்யப்பட்டது ஆகும். அதன் பிறகு காய்ச்சல் தணிந்தது. இருபத்தி நான்கு நாட்களுக்கு பிறகு சரும அரிப்பு ஏற்பட்டு சொறிந்து கொண்டும், இருந்து பிறகு நெஞ்சில் இருக்கும் புளுரசி வேக்காடு ஏற்பட்டு வாந்தியில் முடிந்தது. பிறகு குணமடைந்தாள்.

10. மூச்சு திணறல் உள்ள 20 வயது மதிக்கதக்க இளைஞர் அரிப்பு நோயால் கடுமையாக சொறிந்துக் கொண்டு இருந்தார். அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, சுவாசிக்க கஷ்டம் ஏற்பட்டும் இதய துடிப்பு அதிகமாகி கடுமையானது. இதன் விளைவாக மூச்சு திணறல் ஏற்பட்டது. இதற்கு எல்லாம் காரணம் அரிப்பு நோய் தான் ஆகும்.

11. பத்தொன்பது வயது மதிக்க தக்க இளைஞர்க்கு ஏற்பட்ட ஈர சரும செதில் தோன்றி, அதை மறைப்பதற்கு பல வித சரும மருந்துகள் பூசப்பட்டது. ஆனால் அது குணமான பிறகு என்ன நிகழந்தது தெரியுமா? பருவ காலங்களில் தோன்றும் முறை வைத்து வரும் ஆஸ்துமா தோன்றியது. அதே நேரத்தில் வெய்யில் (காலத்தில்) சருமத்திற்கு என்று மேலே பூசிய மருந்துகளின் அடிப்படை காரணத்தினால் உடல் முழுக்க எரிச்சல் தோன்றி ஆடையின்றி வெறும் தரையில் படுத்துக் கொண்டார். ஆனாலும், அவருக்கு உடனே மூச்சு திணறல் ஏற்பட்டு முகம் முழுவதும் கும்; என்று வீங்கி பாதிமுகம் பவுடர் அடித்தது போல் வெள்ளையாகவும், பாதிமுகம் சிவந்தும் போய்விட்டது. நாடிதுடிப்பும் தாறுமாறாகி விட்டது.

12. அரிப்பு நோயினால் நன்கு சொறிந்து சுகம் கண்டு கொண்டிருந்த ஒருவருக்கு மூச்சு திணறலும், மூச்சடைப்பும் ஏற்பட்டு விட்டது.

13. ஐந்து வருடமாக சருமத்தின் மீது கசகசா போல் கொப்புளங்கள் தோன்றி கைகளை, சொறிந்து கொண்டே இருந்தான். இது வறண்ட சருமமாக மாறி விட்டது. பின்பு, சித்ரவதை செய்வது போல் ஒரு மூச்சு திணறல் ஏற்பட்டது. அதை அடுத்து உடனே ஆஸ்துமா நோயாக மாறி தொடர்ந்து அடி வயிற்று பகுதி வரை சுவாசம் நடைபெற்றது.

14. ஒரு ஐம்பது வருட காலமாக சருமத்தின் மீது ஆமை ஓடுகள் போல் தடித்த படையுடன் சொறி, இருந்த ஒரு விவசாயிக்கு ஏதோ ஒரு களிம்பு போட்டவுடன் மறைந்து விட்டது. உடனே அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பசியும் இல்லாமல் போய் விட்டது. பின் உடல் முழுவதும் வீக்கம் ஏற்பட்டு கொண்டே வந்தது. பின்பு மரணமடைந்தான்.

15. ஒரு இளம் பெண் வறண்ட சருமத்தோடு கூடிய அரிப்புக்கு என்று ஏதோ ஒரு வகை களிம்பை பூசி, அடக்கிய பின்பு, சருமத்தின் மீது ஈரப்பசையுடன் கூடிய படைகள் தோன்றியது. அதன் பிறகு அவளுக்கு பல வித ஆஸ்துமாவுடன் காய்ச்சல் தோன்றி சித்ரவதை செய்தது. பலம்; குறைந்து போன்ற காரணத்தினால் இரத்தம் இரண்டு முறை ஏற்றப்பட்டது. பலம் அவளுக்கு வந்தவுடன் ஆஸ்துமா கடுமையாக தோன்றி மரணம் அடைந்து விட்டார். அதற்கு காரணம் உடல் பலத்திற்கு என்று கொடுக்கப்பட்ட இரத்தம், இதயத்தை பாதுகாக்கும் மூடியில் அதிக இரத்தம் தேங்கி அசுத்த இரத்தம் நிரம்பி இரத்தம் நீல நிற தண்ணியாக மாறியது. இது சோரா மியாசத்திற்கு தடவிய களிம்பு தான் காரணம்.

16. ஒரு இளம் பெண் ஒன்பது வருடமாக சரும படை நோயால் சொறிந்துக் கொண்டே இருந்தாள். அது அவளை சித்ரவதை செய்வது போல் இருந்தது. ஒரு நாள் திடீரென்று சுவாச கோசத்தை பாதுகாக்கும் போர்வையின் மீது வேக்காடு தோன்றி நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுவிட்டது. பொதுவாக போர்வையில் வீக்கம் ஏற்பட்டு சுவாசிக்க முடியாமல் அவள் சித்ரவதை பட்டுக்கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று பழையபடி அடை போல் செதில்களை உடைய சரும நோய் தோன்றி பாலம், பாலமாக சருமம் வெடித்து கழிவு பொருட்கள், வெளியேறியதும் உடனே அவளுக்கு நுரையீரல் கஷ்டம் நீங்கியது.

17. ஒரு மனிதனுக்கு சருமத்தின் வெளிப்புறத்தில் வறட்டு சொறி ஏற்பட்டது. அதற்கு அவர் சுமார் 46வது தடவை கந்தகத்தில் செய்த களிம்பை தடவி கொண்டே இருந்தான். 46 வது தடவை களிம்பு தடவிய போது வறண்ட சருமமாக மாறியது. பிறகு நெஞ்சு பகுதியில் வேக்காடு ஏற்பட்டு மிகவும் கடுமையான பட, படப்பும் மற்றும் பல வகை துன்பங்களும் ஏற்பட்டது. இப்போது இரத்தத்தை காறி, காறி துப்பிக் கொண்டிருந்தார். வருத்தமும், பத, பதைப்பும் அதிகமாகி நெஞ்சுக்குள் அதிகமான சித்ரவதை ஏற்பட்டு மூன்றாம் நாள் மிக கடுமையாகி விட்டது. அப்போது சருமத்தில் பிளவு ஏற்பட்டு வியர்வை வழிய தொடங்கியது. மிக கடுமையான அரிப்பு, தோன்றிய இடத்தில் உள்ள பிளவுகளில் இரத்தமும், நீரும் வழிய தொடங்கியது. பிறகு வறண்ட சருமமாக தோன்றி பதிமூன்று நாட்களுக்கு பிறகு மரணம் அடைந்து விட்டார்.

18. ஒரு மெலிந்த மனிதனுக்கு ஏற்பட்ட சரும நோய்க்கு அவன் கடுமையாக சொறிந்து, சொறிந்து நெஞ்சுக்குள் வேக்காடு ஏற்பட்டு இருபது நாட்களில் மரணமும் ஏற்பட்டது.

19. ஒரு ஏழு வயது மதிக்க தக்க சிறுவனுக்கு உடல் முழுவதும் செதில், செதிலாக வறண்ட அரிப்பை ஏற்படுத்தும், படை நோய் தோன்றியது. அதன் பிறகு திடீரென்று நுரையீரல் காய்ச்சல் தோன்றியது. உடன் ஆஸ்துமா தோன்றி, சளியை காறி, காறி துப்பி, நான்காம் நாள் மரணம் ஏற்பட்டது.

20. ஒரு இளைஞர் தனக்கு தோன்றிய அhpப்பை குணப்படுத்துவதற்காக காரியத்தில் தயாரித்த களிம்பை தடவி அது முழுவதும் குணம் அடைந்து அரிப்பு, மார்பு நோயாக மாறி மரணம் ஏற்பட்டது.

21. ஒரு அரிப்பு நோயாளிக்கு உடல் முழுக்க உப்பி போய் விட்டது. அதன் பிறகு பல வகையான குளிர் தோன்றி, நுரையீரல் ஜீல்லிப்பு தட்டி மேலே வீக்கத்திற்காக தடவப்பட்ட மருந்து வகையால், மூன்றாம் நாள் இறந்து விட்டார்.

22. ஒரு இளைஞர் ஆரோக்கியமாக இருந்தவர்க்கு திடீரென்று காய்ச்சல் தோன்றி, நுரையீரல் கவசம் பாதிக்கப்பட்டு, உடன் மூச்சு திணறலும் அவருக்கு ஆறு நாட்களில் சரும அரிப்பு தோன்றி அதற்கு கந்தக களிம்பு பூசப்பட்ட வரலாறு இருந்தது. இந்த திடீர் வகை காய்சலுக்கு இந்த கந்தக களிம்பு தான் காரணம்.

23. பதிமூன்று வயது உள்ள ஒரு மாணவனுக்கு நெஞ்சை இருக்கி பிடிப்பது போல் ஓர் இரும்பலுடன் சருமம் முழுக்க அரிப்பும் இருந்தது. இப்போது திடீரென்று சரும பிளவு ஏற்பட்டு நோய் தணிந்து போனது.

23 - A. 36 வயது மதிக்க தக்க ஒருவர் அhpப்பு நோயை தணிப்பதற்கு பதினாறு மாதங்களுக்கு மேலே காரியம், பாதரச களிம்பு வகைகளை தடவிக் கொண்டே வந்தார். அது, அதுவரை தணிந்து இருந்தது. பிறகு கக்குவான், இரும்பலாக மாறி தீராத பத, பதைப்பை ஏற்படுத்தியது.

24. ஒரு இளைஞர்க்கு பதினெட்டு வருடமாக சொறி இருந்தது. கடைசியாக வறண்டு கறுத்த, தடித்த, மேலே களிம்பு அப்பிய மாதிரி ஒரு படை தோன்றியது. அது திடீரென்று குறையும் போது சித்ரவதை செய்வது போல் ஜீல்லிப்பும், வெப்பமும் ஏற்பட்டது. பிறகு இதயத்தை நசுக்கி பிடித்து கொள்வது போலவும், தலைவலி குமட்டல், தாகம், இருமல், கஷ்டமான சுவாசகோசம், இரத்தம், இரத்தமாக காறி, காறி துப்பிக்கொண்டும், பிறரை உத்தரவு போட்டு பேசிக் கொண்டும், அவமான படுத்தி திட்டியும், தணியவில்லை. அவனின் முகம் மரணகளைப்பு ஏற்பட்டு முகம் வெளுத்து, சிறுநீர் சிவப்பாகவும், எரிச்சலுடனும் ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டான்.

25. சுமார் பதினெட்டு வயது உள்ள இளைஞன் சொறிந்து, சொறிந்து மேலே பாதரஸத்தில் செய்யப்பட்ட மருந்தில் பத்து போட்டுக் கொண்டான்.

26. சரும நோய், அரிப்பு நோய் என்று மருந்தை தடவி உள்ளே அடக்கப்பட்ட பிறகு நுரையீரலில், காய்ச்சல் தோன்றி அது குணமாகி, நுரையீரல் (இடது நுரையீரலில); சீழ் நிரம்பி விட்டது. பிறது மரணம் அடைந்துவிட்டார்.

27. ஆஸ்துமா நோயாளி ஆன ஒருவருக்கு தடிப்பு, தடிப்பாக இருந்த சரும நோயை உள்ளே அடக்கப்பட்ட பின்பு, சில நாட்களுக்கு பிறகு சுவாசிப்பதில் கஷ்டம் ஏற்பட்டது. அப்போது சருமத்தில் அரிப்பு ஏற்பட்டு சொறிந்தார். அதன் பிறகு மேலே களிம்பு போடப்பட்டு சில மணி நேரத்திலே குணமாகி விட்டது. அதன் பிறகு அவருக்கு கடுமையான கவலையும், சித்ரவதை செய்வது போல் மூச்சு திணறலும் ஏற்பட்டு, நுரையீரல் முழுக்க கெட்டு அங்கிருந்து தண்ணி மாதிரி சீழ் வந்தது. பிறகு மரணம்.

28. சில வருடங்களுக்கு முன்னால், சரும படைகளில் அரிப்பு நோய் தோன்றிய பிறகு புளுரா தோல்களின் இடையே சீழ் பிடித்தல், முக்கியமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தோன்றியது.

29. ஒரு இளைஞனுக்கு பேராசிரியர் க்ராவுஸ் என்பவர் (சிறந்த ஹோமியோ மருத்துவர்) கந்தக களிம்பை இந்த அரிப்பிற்கு போடாதீர்கள் என்று தொடர்ந்து எச்சரிக்கையாக அறிவுறுத்தியும் வந்தார். ஆனால் அவன் கந்தக களிம்பையே போட்டு கொண்டு வந்தான். பின்பு அவனுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு இறந்து விட்டான். அவன் உடலை பிரேத பரிசோதனை செய்த பார்க்கும் பொழுது வயிற்றில் உள்ளுறுப்புகள் சீழ் பிடித்து கொண்டிருந்தது.

30. அதை போலவே (அ) மேற்கூறிய கேஸ் போலவே மற்றெருவருக்கு மார்பிற்கும், வயிற்றுக்கும் இடையில்உள்ள உதரவிதானம் என்னும் தசையில் சீழ் பிடித்து கொண்டது என்று தெரிந்தது. பின்பு மரணம்.

31. ஒரு இளவரசிக்கு சரும அரிப்பு ஏற்பட்டு அடை, அடையாக தோன்றி இருந்தது. அவளுடைய மண்டையோட்டின் மேல் இரத்தம் அதிகமாக படிந்து அடைப்பு ஏற்பட்டு பிறகு அவள் இறந்து விட்டாள்.

32. ஒரு பெண்ணுக்கு வந்த சரும படைக்கு வெளியே மருந்திட்டார். திரவத்தை பூசினாள். ஒரு பாதி மூளை அழுகி அவள் மனநிலை பயம் நிறைந்தாக ஆகிவிட்டாள். பைத்தியம் பிடித்து விட்டது.

33. ஒரு மனிதனுக்க கல்லீரலிருந்து பித்த நீர், சுத்தமான இரத்தம் ஆகியவற்றை உற்பத்தி செய்வது, பாதிக்கப்பட்டு கீழ்வாதம், அடிவயிறு, கால் விரல், முழங்கால் வீக்கம் மற்றும் வலிகள் ஏற்பட்டன. பிறகு வெளியுற அரிப்பை போக்க பல வித மருந்துகள் தடவவும், போட்டும் அதை தடை செய்யப்பட்டது. அதனால் இரும்பல் வயிற்றில் குழிப்புண் ஆகியவை வேகமாக தோன்றி விரைவில் அவருக்கு மரணம் ஏற்பட்டது.

34. ஒரு பையன் ஏழு வாரமாக அரிப்பிற்கு என்று கந்தக களிம்பை தடவிக் கொண்டு வந்தான். இதனால் அவனின் உடலில் வயிற்றின் மேல் பகுதியான தொப்புளில் (மாமிசத்தை தின்று விடும்) புண் ஏற்பட்டு அவன் இறந்து விட்டான். ஒரு பதினெட்டு வயதுடைய இளைஞன் ஏழு வாரமாக கந்தக களிம்பை அரிப்பு நோய்க்கு தடவி வந்தான். இதனால் அவனுக்கு சிறுகுடலின் முன் பகுதியான கணையத்தில் பித்த நீர் சுரக்காமல் நோய் தாக்கியது. அவன் வயிற்றில் புண் ஏற்பட்டு அவன் இறந்து விட்டான். இதை டாக்டர். மார்கோனி என்பவாpன் கலை II L:N என்ற புத்தகத்தில் கூறியுள்ளார்.

35. சரும படைகளைப் பற்றியும் பல வகையான கேஸ்களை பற்றியும் பல எழுத்தாளர்கள் எழுதியிருந்தாலும் நான் J.D.F. பிக் என்பவர் 1710-ல் எழுதிய சொறி, சிரங்கு பற்றிய அறிக்கையின் 6வது சுலோகத்தில் சரும படையில் ஏற்படும் அரிப்பிற்கு பாதரஸ களிம்புகளை தடவினாலும், அவைகள் அப்போதைக்கு குணப்படுத்தும். பொதுவாக வீக்கங்கள் ஏற்பட்டு மீண்டும் சரும வியாதியே வரும் என்று கூறியுள்ளார். கட்டாயம் வரும்.

குறிப்பு:-

கந்தகம் என்பது SULPHUR OILMENT தான். PAGE -23. B.N் அலோபதி மருத்துவ தந்தை ஹிப்போகிராப்டிஸ் எழுதிய பெருவாத நோய் என்ற புத்தகத்தில் ஏதென்ஸ் மக்களுக்கு பயங்கரமான சரும நோய்கள் அரிப்புடன், தோன்றி சில வழக்குகளில் சோகமான முடிவை தந்தது என்று முதலில் கூறியுள்ளார். இந்த பெருவாரி நோய்கள் அவர்களை உடல் முழுவதும் தாக்கி முக்கியமாக பாலுறுப்புகளின் ஆரம்ப இடத்திலிருந்து பரவியது. அதற்கு அவர்கள் வெந்நீரில் குளிக்க வைத்தார்கள். முடிவில் அதிக விஷத் தன்மை வாய்ந்த தசை கட்டிகள் மற்றம் வீக்கங்களாக மாறி இறந்தார்கள். என்ற குறிப்பு உள்ளது.

35. ஒரு பையனுக்கு எட்டு (அ) ஒன்பது வருடமாக இருந்த சரும படை நோய் மிக குறுகிய காலத்திற்கு முன்னதாகவே குணப்படுத்தப்பட்டது. ஆனால் கழுத்து பகுதியில் உள்ள நிணைநீர் சுரப்பிகள் வீங்கி கழுத்து பகுதி விரைப்பாக வளைந்து விட்டது.

36. பதிநான்கு வயது உடைய இளைஞனுக்கு பதினேழு முறை சரும நோய் வந்தது. அதற்கு அவன் களிம்புகளை இரண்டு மாதம் தொடர்ந்து பூசிக்கொண்டிருந்தான். அதன் பிறகு அவனுக்கு நிணநீர் கோளங்கள் கழுத்து பகுதியில் பெருத்து வீங்கி விட்டது.

37. பதிநான்கு வயதுள்ள இளைஞனுக்கு சரும நோய் 1761 ஜீன் மாதம் வந்தது. சாம்பலை மேலே அழுத்தி தேய்த்து, தேய்த்து விட்டார்கள். அதற்கு பிறகு அவனுக்கு இரண்டு காது சந்திலும், வீக்கம் வந்து விட்டது. இடது பக்க காதுக்குள்ளே வீங்கிக்கொண்டே வந்தது. வலது பக்க காது மூன்று மாதத்திற்குள் ரொம்ப பெரிதாக வீங்கி விட்டது. அவனுக்கு முதலில் (ஆகஸ்டு)- வலி வந்தது. அதன் பிறகு கழுத்து பக்கம் இருக்கிற நினைநீர் கோளம் வீங்கி முடிச்சி, முடிச்சியாக மாறிவிட்டது. அந்த முடிச்சியை தொட்டால் உணர்ச்சியே இல்லை. இருந்தாலும், உள்ளுக்குள்ளே அழுத்துகிற மாதிரி வலியும், அது குறிப்பாக இரவில் தான் இருந்தது. அந்த காலத்தில் லேசாக மூச்சு திணறல் ஏற்பட்டது. இந்த முடிச்சிகள் கல்லு மாதிரி கெட்டியாக ஆக, ஆக அசுத்த இரத்த குழாய் தடித்து கொண்டே வந்தது. நோயாளியானவர் ஒரு வருடத்திற்குள்ளே கடுமையான மூச்சு திணறல் நோயாளியாகி விட்டார். இந்த சாம்பல் தடவி அமுக்கப்பட்டது. ( உள்ளே போனதுதான் காரணம்).

38. ஒரு பதிமூன்று வயது பெண்ணுக்கு கடுமையான சித்ரவதை செய்வது போன்ற அரிப்பு ஏற்பட்டது. விஷேசமாக அவளுடைய தோள்பட்டையிலும், பிறப்பு, உறுப்பு மேட்டு பகுதியிலும், சொறிந்து, சொறிந்து, அதன் பிறகு அதை தணிக்க துத்தநாகத்திலும், கந்தகத்திலும் செய்த களிம்பு போட்டுக் கொண்டே வந்தார். இதனால் இரவில் பலஹீனம் ஆகிவிட்டாள். உடல் முழுக்க சின்ன கருப்பு தழும்புகள், கண்ணை சுற்றி கரு வளையமும் தோன்றியது. இதனால் உள் உறுப்புகள் எல்லாம் அப்படியே பெருத்து கட்டி கட்டிய மாதிரியும், கண் உருண்டு போன மாதிரியும், ஒரே நேரத்திலே உடம்பு சிறுத்து போன மாதிரியும், கண்ணுக்கு கண்ணாடி போட்ட மாதிரியும், கண்மணியானது அப்படியே சுத்துகிற மாதிரியும் ஆகிவிட்டாள்.

39. ஒரு இளம்பெண்ணிற்கு கெண்டை காலிலும், முழங்காலுக்கு பின்புறமும், கடுமையான அரிப்பு ஏற்பட்டது. அவள் சொறிந்து, சொறிந்து அந்த இடம் புண்ணாகி விட்டது. இடைப்பட்ட காலத்தில் சின்னம்மை தோன்றி மறைந்து இருந்தது. இப்போது அந்த இடம் தடித்து அடை போல் மாறி விட்டது. கண்கள் வெளுத்து போய், கண் உருண்டைக்குள் கடுமையான பிப்பு ஏற்பட்டது. அதை அடக்குவதற்கு களிம்பு போடப்பட்டது. அதன் விளைவாக அவளுக்கு பார்வை மந்தம், ஏற்பட்டு பார்க்கும் பொருளெல்லாம் கருப்பாகவும், மிதப்பது போலவும், இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இதே போல் இருந்து அதன் பிறகு மூன்று நாட்களில் போடப்பட்ட களிம்பின் காரணமாக விஷம் சேர்ந்து, அவள் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் அந்த அரிப்பு தாக்கி விட்டது. அதன் பிறகு கடுமையான வறண்ட இருமல், நெஞ்சு விரைப்பு தோன்றி, நெஞ்சே வெடித்து போவது போல் அவளுக்கு இருந்து, பிறகு தொடர்ந்து வாந்தியும், விடாத காய்ச்சல், நெஞ்சை இழுத்து பிடிப்பது போலவும், வியர்வை வராமலும் நின்று போய்விட்டது. சருமம் வறண்டு அக்கி, தோன்றி இரண்டு கெண்டை காலிலும் வெடிப்பு ஏற்பட்டு விட்டது. ஆனாலும் இது உள்ளுர ஏற்பட்ட சொறி தான். ஆனால் கண் மட்டும் ஆரோக்கியம் ஏற்பட்டு கொண்டே வந்தது.

40. ஒரு மனிதனுக்கு உடல் முழுக்க அரிப்பு தோன்றி, அவன் வரக், வரக் என்று தொடர்ந்து சொறிந்து கொண்டே இருந்தான். இவ்வாறு சொறிந்த பிறகு அவனுடைய சளி சவ்வு கெட்டு, சித்ரவதை செய்து சிறையில் இட்டது போல் ஆகிவிட்டது.

41. சரும அரிப்புக்கு என்று மேலே பூசப்பட்ட மருந்து வகைகளின் காரணமாக பித்து, பிடித்தது போல் ஆகிவிட்டது. உடன் சரும புறப்பாடுகள் தோன்றியதும் அது தணிந்து விட்டது. பித்து குணமாகி விட்டது.

42. ஒரு குடிகாரன் தனக்கு தோன்றிய அரிப்பை மறைத்து கொள்வதற்காக, ஓயாமல் மாறி, மாறி குடிக்கும் குடிகாரணாகி விட்டான். அதன் பிறகு சித்ரவதை செய்வது போல் அரிப்பு இருந்த காரணத்தினால் மதுவுக்கு அடிமையாகி குருட்டுதனமான பழக்கத்தின் காரணமாக வயதிற்கு முன்பே கிழத்தோற்றம் ஏற்பட்டது.

43. சரும அரிப்பிலேயே கவனமாகயிருந்த ஒருவருக்கு அதன் மேலேயே கவனம் இருந்ததால் அவனுக்கு பயங்கரமான தலைவலி ஏற்பட்டு விட்டது.

44. மேலே கண்ட கேஸ் போலவே ஒவ்வொரு மாதமும் ஆஸனவாயிலிருந்து முறை வைத்து இரத்தம் வந்து கொண்டே இருந்தது.

45, ஒருவருக்கு ஏற்பட்ட அரிப்பின் காரணமாக கடுமையாக சொறிந்தும், களிம்புப் போட்டு மறைத்ததினாலும், திடீரென்று ஒரு நாள் சொறிந்து கொண்டிருக்கும் போது, சில மணி நேரத்தில் 3 ½ லிட்டர் இரத்தம் வெளியேறி கடுமையான அடிவயிற்று வலியும், காய்ச்சலும் தோன்றி மற்றும் பல தொந்தரவுகளும் தோன்றின. இதுவும் சோராவின் குணம்தான்.

46. இடது புற முதுகின் கீழ் முள் எலும்பில் கடுமையான அரிப்பு தோன்றி, அது அப்படியே உள்ளே சென்று மலக்குடல் பகுதிக்கு சென்று சுவாசகோசங்களில் தொல்லையும், மலச்சிக்கலையும், உடன் கவலையும் ஏற்படுத்திவிட்டது இந்த சோரா.

47. ஒரு இளைஞன் சொறிந்து, சொறிந்து களிம்புகளை தடவியும், அது உள்ளே அடக்கபட்டது. சிறிது காலம் தான் அடக்கடப்பட்டது. பிறகு சரும நோய் சிறுநீர் கழிக்க இயலாமை, வாந்தி சிறுநீர் புறவழியில் வலியும், சிறுநீர் குழாயில் வலியும், சரும நோய் அடக்கப்பட்ட பின்பு சில சமயம் சிறுநீர் வெளியnறுவதில் தடை, கருப்பாகவும், கொஞ்சமாகவும், கடுமையான வலியுடனும் சிறுநீர் போனது. சில சமயங்களில் சிறுநீர் புற வழிகளில் அடைப்பு ஏற்பட்டது. சிறுநீர் புறவழியில் உள்ள ஓட்டைக்குள் கம்பி விட்டு பாய்ச்சி சிறுநீர் இழுக்கப்பட்டது. இந்த பழக்கம் காரணமாக சிறுநீர் உற்பத்தி ஆகாத போது கூட கம்பி போடும் படியாகியது. மற்றும் சிறுநீர் வெளியேறாத காரணத்தினால் உடல் முழுக்க வீங்கி மூத்திரக் காய்கள் செயல் இழந்து விட்டது. மெலியதாக சிறுநீர் கூட முக்கி கழிக்க வேண்டியதாகி விட்டது. அப்போது கடுமையாக மூச்சு வாங்கி இறந்து விடலாமா என்ற நிலை ஏற்பட்டது. இருபது நாட்களுக்கு பிறகு அடக்கப்பட்ட அரிப்பானது வெளியே சரும நோயாக வந்த பிறகு அரிப்பும் அதிகமாக தோன்றிது. உடனே அவருக்கு சிறுநீர் பையிலிருந்து சுமார் ஒரு லிட்டர் கருப்பான சிறுநீர் வெளியேறியது. ஆனாலும் அவனுக்கு சுகம் ஏற்படவில்லை. தொடை இடுக்குகளில் நீர் வீக்கம் ஏற்பட்டது. அந்த இடத்தில் நெருப்பு போல் எரிச்சல் தோன்றி விந்து சக்தியானது, வெள்ளை முட்டை கரு போல் வெளியே ஒழுக ஆரம்பித்து விட்டது.

48. ஒரு மனிதருக்கு ஏற்பட்ட சொறியை அவன் தேய்த்து விட்டு கொண்டே இருந்தான். அதை தணித்துக் கொள்ள பாதரஸ களிம்பை தடவி வந்ததால் அது தணிந்து இப்போது அவர் கழுத்தை சுற்றிலும், கடுமையான அக்கி நோய் தோன்றி மறுகுறி பாய்ந்து அவன், ஐந்து, ஆறு வாரத்தில் இறந்து விட்டான்.

49. ஒரு பெண்மணிக்கு பிறப்பு உறுப்பின் மேட்டு பகுதியில் தோன்றிய அரிப்பை தணிக்க பாதரஸ களிம்பை பூசிவந்தாள். அதன் காரணமாக அவள் உடல் முழுக்க சதைகளில் வெடிப்பு ஏற்பட்டு மிக கடுமையாக பொறுக்க முடியாத வலியும், அரிப்பும் தோன்றி, கீறி, கீறி சொறிந்து அந்த பகுதி சதை அழுகி, அதிலிருந்து நாற்றத்துடன், கழிவுப் பொருட்கள் வெளியேறி, வெளியேறி ஒரு சில நாட்களில், அவளால் வலி தாங்க முடியாமல் இறந்து போய் விட்டாள்.

50. ஒரு நபருக்கு மிதமான அரிப்பு சருமத்தில் அவ்வப்போது தோன்றிக் கொண்டே வந்ததது. சுமார் பதினாறு ஆண்டுகளாக வருவதும், போவதும் ஆக இருந்தது. இப்படியே பதினாறு ஆண்டு காலம் ஓடி விட்டது. இவர் எந்த ஒரு சிகிச்சையும், முயற்சியும் செய்யவில்லை. பிறகு திடீரென்று ஒரு நாள் அவரது கெண்டைக்காலில் பெரிய வட்டமான புண் தோன்றி விட்டது. பிறகு அந்த புண்ணில் பிளவு ஏற்பட்டு நீராக கசிந்தது. சில நாட்களுக்கு பிறகு குணமாகி அவனது அரிப்பு நோய் தானாகவே குணமாகி விட்டது.

51. ஒரு ஐம்பது வயது மதிக்க தக்க ஒருவருக்கு தோள்பட்டையில் ஓயாமல் பிளவு ஏற்பட்டு, அதை தணிக்க அவர் எண்ணெய் பூசி நன்கு தேய்து விட்டார். அது பொறுக்க முடியாத வலியாக மாறி அது ஐந்து வாரத்தில் தணிந்து கை விரல் சந்துக்களில் கடுமையாக வெடிப்பு உள்ள புண்கள் தோன்றி விட்டது. அதன் பிறகு தணிந்தது,

52. ஒரு மாணவன் வாயின் ஒரு பகுதியில் புண் தோன்றி அரிப்பு ஏற்பட்டு கொண்டே வந்தது. அவன் அதற்கு களிம்பு வகைளை போட்டதின் விளைவாக பெரிய, பெரிய வெடிப்புகள் தோன்றியது. வாயிலும் வெடிப்பு தோன்றியது.

53. ஒரு மாணவனுக்கு ஏற்பட்ட சொறிக்கு ஏதோ, ஒரு வகை மேல் பூச்சு களிம்பை தடவி கொண்டு வந்தான். அப்படி இருந்தும் அவனுக்கு கைகளில் வெடிப்பு ஏற்பட்டது. குறிப்பாக கை விரலில் மேட்டுபகுதியில் கெண்டை கால் பகுதியில் நெல்லிகாய் போல் குண்டாக உருண்டு வீக்கம் ஏற்பட்டது. கை விரல் சந்தில் எழந்தை பழம் போல் கட்டி ஏற்பட்டது. அதன் பிறகு வெடிப்பு ஏற்பட்டு அதிலிருந்து நீர் வடிந்து புண்கள் குணமானது. அவன் இப்போது மேலும் புண்களை ஆற்றுவதற்காக களிம்பை தடவி, தடவி மீதமுள்ள புண்கள் குணமானவுடன் மூச்சு திணறல் ஏற்பட்டு உடல் உப்பி வெளுத்து பின்பு இறந்து விட்டான்.

54. ஆரோக்கியமான ஒரு மனிதனுக்கு தோன்றிய அரிப்பு நோயை சொறியாமல் தேய்த்து விட்டு கொண்டே வந்ததும் மேலே களிம்பு வகைகளை பூசி கொண்டே வந்தான். நீண்ட நாட்களாக இவ்வாறு செய்த பிறகு திடீரென்று ஒரு நாள் மிக கருப்பாக சிறுநீர் வந்தது. அப்படி இருந்தும் அவனின் முதுகு புறத்தில் அரிப்பு சேர்ந்து விட்டது. இந்த அரிப்பின் காரணமாக காய்ச்சல் தோன்றாமல் கருப்பாக மட்டுமே சிறுநீர் போய் கொண்டே இருந்தது. அதனால் அவனது பலம் எல்லாம் போய் விட்டது. பிறகு மரணம் ஏற்பட்டது.

55. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்பட்ட சரும புறப்பாடு பல வருடங்களாக நமச்சல் ஏற்பட்டு கொண்டே இருந்தது. அதை கை விரல்களில் சொறிந்து விட்டு கொண்டே இருந்து பின்பு காய்ச்சலில் போய் முடிந்தது. அந்த நேரத்தில் திரும்பவும் சரும புறப்பாடு தோன்றி நமச்சல் வந்தவுடன், மேலும் கொஞ்சம் உடலின் சிறு பகுதிகளில் ஆங்காங்கே நமச்சல் ஏற்பட்டது. திரும்பவும் அவர்கள் எண்ணையை பூசி கொண்டே வந்தனர். (எதில் முடியும்).

56. அரிப்பு அடங்கிய பின்பு ஒருவருக்கு காய்ச்சல் தோன்றியது. காய்ச்சல் சரியான பிறகு அரிப்பு மறுபடியும் தோன்றியது.

57. ஒரு அம்மையாருக்கு சருமத்தில் படை தடிப்பு தோன்றியது. ஒன்பது வருடமாக களிம்பு வகைகளை பூசி வந்தார். அடக்கப்பட்ட சரும நோய் முழுவதும் அடங்கியவுடன் அதை தொடர்ந்து பயங்கர காய்ச்சல் தோன்றிவிட்டது.

58. ஒரு வயது முடிந்த ஒரு குழந்தைக்கு, திரும்ப, திரும்ப கன்னத்தில் தடித்த அக்கி, இரு புறமும் ஏற்பட்டது. அதற்கு போடப்பட்ட களிம்பினால் கன்னத்தில் வறட்;சி நீங்கியதும் உடல் சூடு அதிகமாகி இருமலும், வயிற்று போக்கும் ஏற்பட்டது. அதை குணப்படுத்தியவுடன் திரும்பவும் வறண்ட சரும நோய் ஆன அக்கி கன்னத்தில் இரு புறமும், சரும தடிப்பு ஏற்பட்டது.

59. நாற்பத்தி மூன்று வயது மதிக்கதக்க ஒரு பெண்மணி வறண்ட சொறியின் காரணமாக பாதிக்கப்பட்டு மூக்கின் மேல் இருந்த சொறிக்கு கந்தக, பாதரஸ களிம்புகளை பூசி வந்தாள். அதன் பின் விளைவாக வறட்சி நீங்கியது. நீங்கிய உடனேயே அவளது வலதுபுற விலா எலும்பில் கடுமையான வலி தோன்றி பின்பு களைப்பில் முடிந்தது. அதன் பிறகு உடல் முழுக்க சூடு பரவி காய்ச்சல் வந்த மாதிரியே உறுத்தல் ஏற்பட்டது. அதன் பிறகு எல்லாவற்றிலும்; சேர்த்த ஒரு கூட்டு கலப்பு மருந்தை உபயோகப்படுத்தியவுடன் ஆறு நாட்களில் காய்ச்சல் தணிந்தது. தணிந்தவுடன் உடல் முழுக்க கசகசா போல் கொப்புளங்கள் தோன்றி கடுமையான அரிப்பினால் சொறிந்து, சொறிந்து அங்கு வெடிப்பு ஏற்பட்டது. குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இருந்த சொறியானது களிம்பை தடவி அது தணிந்தவுடன் இப்போது உடல் முழுக்க பரவி விட்டது.

60. இரண்டு இளைஞர்கள் இருவரும் அண்ணன், தம்பி, இவர்களுக்கு அரிப்பு ஏற்பட்டு இருவரும் ஒரே வகையான மருந்தை தடவினார்கள். பிறகு அரிப்பு வரலாறு மறைந்து அவர்களுக்ககு மெய் மறந்து விடுதல், மற்றும் வறண்ட இருமல் வந்து பிறகு பயங்கரமான பாதிப்பை ஏற்படுத்தும் காய்ச்சலும் ஏற்பட்டு உடலை இளைக்கச் செய்து தோல் மிருகத்தின் தோல் போல் குரூரமான தோற்றத்திற்கு மாறி, அதன் பிறகு இலேசான தூக்கமே வந்தது. இருந்தும் சருமத்தின் மேல் உணர்ச்சியின்மையும், கூடவே ஏற்பட்டது. சாகுமளவு சென்ற அவனுக்கு அதிஷ்டவசமாக மறுபடியும் சரும புறப்பாடு நோய் ஏற்பட்டு அவன் மேற்கூறிய நோய்களிலிருந்து விடுப்பட்டான்.

61. ஒரு மூன்று வயதுடைய குழந்தைக்கு சருமத்தில் அடை, அடையாக சரும நோய் ஏற்பட்டு அதில் பிளவுகள் ஏற்பட்டது. அதை மறைக்க களிம்புகள் தடவினார்கள். அதன் பிறகு கூடவே பயங்கரமான காய்ச்சல், மார்பு சளி ஏற்பட்டு களைப்பு ஏற்படும் அளவு இருமல் தோன்றி, இவை தலைக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி முடிவில் மரணம் ஏற்பட்டது.

62. தையல் வேலையில் பல அழகான வடிவில் பணப்பை தைத்து பிரயாணம் செய்யும் மனிதர்களிடத்தில் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவருக்கு, சரும புறப்பாடு ஏற்பட்டு அதற்கு மேற்பூச்சு களிம்பை தடவினார். அவருக்கு முடிவில் அரிப்பு ஏற்பட்டு சருமம் வறண்டு போய் அடிக்கடி குளிர் ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டு இரும்பும் போது கிலு, கிலுவென சத்தம் கேட்கும் படியாக இரும்புவார். முடிவில் நான்காம் நாள் இறந்து விட்டார்.

63. 30 வயதுடைய ஒருவர் சுறு, சுறுப்புடன் உடல் வலிமையுடனும், இருந்த அவருக்கு சரும புறப்பாடு நோய் வந்தது. அவர் அதை களிம்புகளை தடவி அடக்கி கொண்டே வந்தார். பிறகு அவருக்கு சில நாட்களிலேயே சளி சவ்வில் வேக்காடு ஏற்பட்டு காய்ச்சல் தோன்றி கட்டுபடுத்த முடியாத அளவு, வியர்வையும் ஏற்பட்டது. அவருக்கு எப்போதும் வராத அளவு காய்ச்சல் வந்ததால் அவருக்கு கவலை ஏற்பட்டு, கடுமையான தலைவலியும், சூடு அதிகமாக உடல் முழுக்க ஏற்பட்டது. விரைவாக துடிக்கும் நாடி துடிப்பும் ஏற்பட்டது. காலை நேரத்தில் அதிகமாகவும் வியர்த்தது. இவை அனைத்து நோய்களும் உடலின் வலிமையை மிக விரைவாக குறைத்து, உளறிய பேச்சும் நோய்களை பற்றிய கவலையும், ஏற்பட்டு அவர் தேம்பி, தேம்பி அழுதார். இந்த அழுகை எவ்வித மருந்து கொடுத்தும் நிற்கவில்லை. பிறகு இந்த வகை நோயினால் அவர் மூச்சு திணறி இறந்து விட்டார்.

64. ஒரு சிறுவனுக்கு அரிப்பு நோய் தோன்றியது. இவனும் களிம்பை தடவி குணப்படுத்திய பிறகு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டது. அரிப்பு மிக கடுமையான காய்ச்சலும் மாறி, மாறி ஏற்பட்டது. பிறகு இவனது உடல் மிகவும் ஒல்லியாக ஆகிவிட்டது. தோல் வறண்டு, தொடர்ந்து பேதி ஏறப்பட்டு, வலிப்பு வந்து பிறகு இறந்து விட்டான்.

65. சரும அரிப்பு இருந்த ஒருவர் அதற்கு களிம்பு பூசி, அது மறைந்த பிறகு அவருக்கு கடுமையான காய்ச்சலும் இருமலும் தோன்றியது. பிறகு இரும்பலை போக்க தகுந்த இரும்பல் மருந்து கொடுத்து இரும்பலும் நின்றவுடன் அதையும் அடக்கினார். அதன் பிறகு சீழ் போல் கோழைகள் வெளியாகி அவர் இறந்து விட்டார். அவரை பிரேத பரிசோதனை செய்யும் போது நுரையீரல் இரண்டும் சீழ் பிடித்து ஓட்டையாகி இறந்தது தெரிய வந்தது.

66. ஒரு முப்பது வயதுடைய பெண்மணிக்கு சரும அரிப்பு தோன்றுவதற்கு முன்பு கை, கால் போன்ற உடல் உறுப்புக்கள் அனைத்திலும் மிக நீண்ட நேரமாக வலியிருந்தது. பிறகு கடுமையான சரும அரிப்பு ஏற்பட்டு பிளவுகளும் தோன்றியது. அதற்கு களிம்புகளை தடவி அடக்கினார்கள். பயங்கர காய்ச்சலுடன், வெறிதனம், அதிகம்பிடிப்பது போன்ற தலைவலியும் அவரின் குரல் உளறிய பேச்சு, சரியாக வராமலும் ஒழுங்கில்லாத மூச்சு திணறலும் ஏற்பட்டது. பிறகு உடல் முழுவதும் வீங்கி கடுமையான அடிவயிறு வலி ஏற்பட்டது. பிறகு ஆறு நாள் கழித்து காய்ச்சல் திரும்பவும் ஏற்பட்டு அவள் இறந்து விட்டாள். பிறகு சோதனை செய்யும் போது அடிவயிற்றில் காற்று நிரம்பி இரைப்பையில் உள்ள செல்கள் கெட்டு அடிவயிறும் கெட்டு போய் இருந்தது என்பது தெரிந்தது.

67. ஒரு மனிதருக்கு சருமத்தில் அடை, அடையாக தோன்றி அதில் பிளவுகள் ஏற்பட்டது. அதை அவர் குளிர்ந்த களிம்பு வகைகளை கொண்டு அடக்கினார். அடக்கிய எட்டு நாட்களில் விஷக்காய்ச்சல் தோன்றி தொடந்து வாந்தியும், நுரையீரல் வீக்கமும் ஏற்பட்டு வறட்சியான விக்கல் தோன்றி ஒன்பதாம் நாள் இறந்து விட்டார். B.N. மார்கோனி என்பவர் எழுதிய நூலின் எந்த ஒரு மனிதருக்கு உடற்பாகங்களில், எந்த இடத்திலும் அரிப்பு நோய் தோன்றினாலும், அவர்கள் சல்பர் களிம்புகளை தடவினால் அவர்களுக்கு இழுக்கும் படியான வலிகள், சீழ்பிடித்தல், காய்ச்சல், இரவில் தொல்லைகள், பகலில் மன ஓய்வின்மை, தலைவலி, நாக்கு மற்றும் மலக்குடலை தாக்கி, இது போன்ற தொல்லைகள் தான், வரும் என்றும் சரும புறப்பாடுகள் உடல் வலிமையை தான் அது பாதிக்க செய்யும் என்றும் கூறியுள்ளார்.

68. கடுமையான அரிப்பு ஏற்பட்டு கொண்டிருந்த ஒருவருக்கு அதை தணித்துக் கொள்ளுவதற்காக வேம்பு, எட்டிஇலை போன்ற விஷ மூலிகைகளை சாப்பிட்டுக் கொண்டே வந்தார். அரிப்பு குறையும் சமயத்தில் ஒரு பயங்கரமான காய்ச்சல் தோன்றி அது தணிந்தவுடன், கடுமையான வலிப்பு நோய் தோன்றி உடல் முன்புறம் வில் போல் வளைந்து போகும் அளவுக்கு வலிப்பு நோயாளி ஆகி விட்டான்.

69. ஒரு கடைக்கார இளைஞருக்கு ஏற்பட்ட அரிப்புக்கு களிம்பு தடவி அடக்கி வைத்து வந்தார். பிறகு உடனே அவருக்கு, கம்மலான குரலும் ஏற்பட்டு பேசும் வார்த்தைகள் புரீயாதபடி ஆகி, தொடர்ந்து வறண்ட ஆஸ்துமா, உணவு வெறுப்பு, தொடர்ந்து இருமல், இரவில் தூக்கமின்மை, மேலும் அதிக பாதிப்புகளுக்கு ஆளாகி இரவில் அதிக வியர்த்தலும் ஏற்பட்டது. அனைத்து வித மருத்துவ சிகிச்சையும், மேற்கொண்டு பயனின்றி முடிவில் மரணம் ஏற்பட்டது.

70. ஒரு அறுபது வயது முதிர்ந்தவருக்கு கிருமி தொற்றுகள் அதிகம் உள்ளதால், ஸோரா விழித்தெழுந்தது. அவருக்கு இரவில் சொல்லக் கூட முடியாத அளவு தொல்லைகள் ஏற்பட்டது. அவர் உபயோகப்படுத்திய மருந்துகள் அவரின் நரம்புகள் மற்றும் பெரிய உறுப்புகளை இந்த மருந்து பாதித்தது. அவர் உபயோகப்படுத்திய மருந்து எண்ணெய் கலந்த மற்றொரு வகை களிம்பு, மலர்களும் கந்தகமும் கலந்த, ஒரு வகை களிம்பு இவை இரண்டையும் இறைச்சி (சதை) அதிகம் உள்ள, நமச்சல் அதிகமுள்ள இடங்களில் தேய்க்கும் போது மிகவும் விரைவில் அரிப்பு நீங்கியது. சில தடவைகள் உபயோகப்படுத்திய போது நோய் அடக்கப்பட்டு விட்டது. அhpப்பு அடக்கப்பட்ட உடனேயே மற்ற நோய்கள் தோன்றியது. அவை தேவையான மூச்சு காற்று இழுக்க முடியாத ஆஸ்துமா நோய், தூக்கமின்மை, பயங்கரமான நடுக்கல், உடலில் எல்லா பாகங்களிலும் சக்தி குறைந்து நான்காம் நாள் இறந்து விட்டார்.

71. மேற்கூறிய நோயாளி போலவே மற்றொருவருக்கும், அதே நோய்களும் தோன்றி கூடவே பயங்கர விஷக் காய்ச்சல் தோன்றி சித்த பிரமை பிடித்து இரண்டாம் நாள் மரணம் அடைந்தார்.

72. சரும நமச்சல் உள்ள ஒருவருக்கு மருந்து தடவி அடக்கிய பிறகு அடிக்கடி திடீரென்று காய்ச்சல் தோன்றி உடல் நிலை மிகவும் மோசமாகி உடல் பலம் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. இந்த நோயாளிக்கு தொடர்ந்து ஏழாம் நாள் பயங்கர காய்ச்சல் தோன்றியது. மறுபடியும் இந்த சரும அரிப்பு தோன்றிய பிறகு காய்ச்சல் நின்று விட்டது. உடல் திரும்பவும் பலம் பெற்றது.

73. பதினைந்து வயதுடைய ஒரு சிறிய இளைஞனுக்கு சருமத்தில் அடை, அடையாக தோன்றி, பிளவுகள் ஏற்பட்டது. அதை களிம்புகள் தடவி அடக்கிய பிறகு, ஏற்பட்ட வைட்டமின் - B குறைவினால் சருமம், ஜீரணம், நரம்புகள் ஆகியவைகளில் கோளாறுகள் ஏற்பட்டு மலம் கழிக்க முடியாமல் அதற்காக பேதி மருந்து கொடுத்து அதை குணப்படுத்தினார்கள். பிறகு முதுகு வலி ஏற்பட்டது. வெட்டும் வலிகள் தோன்றி மூத்திரம் தானானகவே கழிந்தான். பிறகு இதை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை தோன்றும் முறை காய்ச்சலில் போய் முடிந்தது.

74. வயதான ஒருவருக்கு சருமத்தில் வறண்ட சொறி இருந்தது. அதற்கு அவர் மேற்பூச்சு களிம்புகளை தடவி அடக்கி வைத்தார். பிறகு அவருக்கு நான்கு நாட்களுக்கு ஒரு முறை வரும் முறை சுரம் வந்தது. பிறகு நரம்பு பலஹீனம் அடைந்தது. மறுபடியும் சரும அரிப்பு ஏற்பட்டவுடன் சுரம் வந்தவுடனேயே நரம்பு பலஹீனமும் குறைந்து விட்டது.

75. ஐம்பத்தி ஏழு வயதுடைய ஒருவருக்கு மூன்று வருடமாக வறண்ட சொறி இருந்தது. இரண்டு வருடமாக அவர் களிம்பு தடவி கொண்டே வந்ததில், அவர் உடல் நிலை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தது. பிறகு களிம்புகள் தடவி அதனை அடக்கியதன் விளைவாக கொஞ்ச நாளிலேயே இரண்டு முறை மயக்கம் ஏற்பட்டு, அதனால் மிகவும் பாதிக்கப்பட்டார். பிறகு மயக்கம் நீடித்து பிறகு தோலில் பிளவு ஏற்பட்டு அதில் தடித்த உரோமம் முளைத்து விகாரமாக ஆகியது. அவர் பிறகு அதை அடக்க முயற்சித்து, முறையற்ற வியர்வை, கால் கை, நடுக்கம், அனைத்து பகுதிகளும் சக்தியை இழந்து அடிக்கடி வாந்தி புளிப்பாக நுரைத்து கொண்டு எடுக்க ஆரம்பித்துவிட்டார். பிறகு பித்து பிடித்து ஒன்றும் தெரியாத நிலை ஏற்பட்டு பாரமாகவும் குடிகாரர் போலவும், உணர்ச்சியற்று போனார். பிறகு திரும்பி கூட படுக்க இயலாத அளவு களைப்பு ஏற்பட்டு மிகுந்த வேதனை ஏற்பட்டு துன்பத்தோடு அவர் இறந்து விட்டார்.

76. முப்பத்தி ஆறு வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணிக்கு தோலில் நமச்சலுடைய சொறி இருந்தது. அவர் அதை கடுமையாக சொறிந்து கொண்டே இருந்தார். சில வருடங்களுக்கு முன்பு, பாதரஸத்தில் செய்த களிம்பை உபயோகப்படுத்தி இருக்கிறேன் என்றாள். அதற்கு முன்பு என்ன நடந்தது என்று விசாரித்து பார்த்ததில் அவர் கூறினார், எனக்கு இடையில் மாதவிலக்கு பதினைந்து நாளுக்கு ஒரு முறையும், பத்து வாரத்துக்கு ஒரு முறையும், பதினைந்து வாரத்துக்கு ஒரு முறையும் போகும். இந்த மாதிரி முன்ன, பின்ன தாறுமாறாக நான்கு வருடங்களாக போனது. அச்சமயத்தில் மலச்சிக்கல் கடுமையாக இருந்தது என்றார். அதற்கு முன்னதாக நான்கு வருடங்களுக்கு முன்பு அவள் கர்பிணியாக இருந்தாள். அவள் சிறையில் சில நாட்கள் இருக்க வேண்டியதாயிற்று. அப்போது கவலை, பயத்தின் காரணமாக நடந்து கொண்டிருக்கும் போதும், நின்று கொண்டு இருக்கும் போதும் திடீரென்று கீழே சடார் என்று சாய்ந்து விடுவாள். உடனே அவள் எழுந்து சரியாக நினைவு திரும்புவதற்கு முன்னதாகவே அரை மயக்கத்திலேயே ஏதோ, ஏதோ பேசுவதும், சாப்பிடுவதும், குடிக்கவும் செய்வாள். அவளை நன்கு விசாரித்து பார்த்த பொழுது முதன் முதலில இது எப்படி வந்தது என்றால் அவள் கூறினாள் என் இடது பாதத்தின்மேல் என்னமோ ஒரு புழு ஊறிக்கிட்டு போகிற மாதிரி உணர்வு இருந்தது. நான் உடனே பயங்கரமாக கால்களை உதறினேன். ஆனால் புழு மாதிரி எதுவும் இல்லை, அப்போது என் புத்தியே தடுமாறி போய்விட்டது. அது தாங்க முதல் என்று கூறினாள். அப்புறம் எங்கியாவது பிரயாணம் செய்யும் போதெல்லாம் இந்த ஊறல் வந்து விடும். மீண்டும் ஈரக்காற்று அடிக்கும் பருவத்தில் எல்லாம் வந்து விடும். அதன் பிறகு பேசவும் முடியாது. உடம்பை திருப்பவும் முடியாது. அப்படி ஒரு நிலையும் ஏற்பட்டது. கை கட்டை விரல் உட்புறமாக மடங்கி விட்டது.

அதற்கு நீவி விடுதல், தேய்த்து விடுதல்; போன்ற சிகிச்சைகள் செய்யப்பட்டது. அது உடனே தணிந்து விட்டது. அப்படி தணிந்தவுடன் காக்கை (கை, கால்) வலிப்பு தோன்றியது. அந்த காக்கா வலிப்பை நிறத்துவதற்காக ஐந்து விதமான மருந்துகளை சக்தி வாய்ந்த மருந்துகளை கலக்கி அவளுக்கு கொடுக்கப்பட்டது. இம் மருந்து கொடுத்த பிறகு காக்கை வலிப்பு நின்று விட்டது. இப்போது அவளுக்கு என்ன நேர்ந்தது என்றால் முன்பு இடது காலில் புழு ஊறிய உணர்ச்சி திரும்பவும் வந்து விட்டது. உடன் இப்போது அவளுடைய இதயத்தோற்றம் மாறி ரோஜா பூ மாதிரி தோற்றம் வந்து விட்டது. இப்போது பயங்கரமான கவலையும், பயமும் சேர்ந்து விட்டது. உடன் முன்பு வந்த மயக்கமும் வந்து விட்டது. இதனால் என்ன வரலாறு என்றால் முதலில் தோன்றி பாதத்தின் மீது புழு ஊறுகிற மாதிரி தோன்றியதே அதே தான் எல்லா இடங்களுக்கும் பிரயாணம் செய்து பல கஷ்டங்களை சம்பாதித்து கொண்டு பழைய இடத்திற்கே வந்து விட்டது. இப்போது வருகின்ற மயக்கமானது கொஞ்சம் கூட நினைவே இல்லாமல் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் சடார்னு கீழே சாய்ந்து விடுவாள். இப்போது நினைவும் இல்லை. பேச்சும் இல்லை. ஆனால் இரண்டு தோள்பட்டையும் வலிப்பினால் தூக்கி, தூக்கி இழுக்கும். தொப்புள் குழியில் என்னுமோ கொதிக்கிற மாதிரி ஒரு வலி இருந்தது. இப்போது பாருங்க முதன் முதலில் பாதத்தில் தோன்றிய ஊறல் தான் அனைத்து தொல்லையும் உற்பத்தி செய்து எரிச்சலும், தலையில் கொதிக்கிற மாதிரி வலிகள் தோன்றி மூளை சூடுயேறி முழு நினைவும் இழந்து விட்டாள்.

77. ஒரு அம்மையாருக்கு சருமத்தில் தோன்றிய அரிப்பை தணித்து கொள்ளுவதற்காக மிகவும் வலிமையுள்ள களிம்பை பூசினார். இப்படி சொறியவும், களிம்புகளை பூசவும், அவளுக்கு சுகமாக இருந்தது. இப்படி பூச, பூச மருந்தின் சக்திகள் சருமத்தின் அடியில் போய் தங்கி கொண்டது. மேலும், மேலும் கடுமையான அரிப்பும், அதற்கு அடிக்கடி களிம்பு பூச வேண்டிய அவசர அவசியமும் ஏற்பட்டது. இப்போது டக்குன்னு ஒரு சில மணி நேரத்திலேயே அரிப்புகள், இரணங்கள் எல்லாம் மறைந்து விட்டது. உடனே மிக கடுமையான கட்டுபடுத்தவே முடியாத வலிப்பு தோன்றி மரணத்தில் முடிந்தது.

78. ஒரு பதினேழு வயது உள்ள பெண்மணிக்கு மிக கடுமையான தலைவலி தோன்றியது. திடீர், திடீர் என்று இந்த தலைவலி தோன்றும், அவளுக்கு பல தடைவ இது போல் தோன்றி திக்குன்னு திகில் ஏற்பட்டு மயங்கி விடுவாள். பிறகு கண் விழித்து, பார்க்கும் போது அவளுடைய கை, கால் எல்லாம் அப்படியே அசையாமல் கிடக்கும். அவைகளை கட்டி போட்ட மாதிரி அவளுக்கு உணர்வு இருக்கும். அப்போது தொப்புள் உள்ளே இழுக்கப்பட்டு இரு மார்புகளும் மேலே மிதக்கிற மாதிரி உணர்வு இருக்கும். அப்போது கைகளை கொண்டு அவைகளை தொட முடியாத ஒரு நிலை. இருப்பினும் கைகளும் நடுங்கும் (உதறும்). இப்போது கடுமையாக முணகி, தேம்பி கொண்டும் இருந்தாள். அதனால் உடல் முழுக்க உதறல் ஆரம்பமாகி விட்டது. இதற்கு அடிப்படை காரணம் என்ன தெரியுமா? முதன் முதலில் அவளின் சருமத்தின் மீது தோன்றி தடித்த அடை மாதிரி தோன்றிய சரும நோயில் சொறிந்து, சொறிந்து அதிலிருந்து மீன் செதில்கள் மாதிரி கொட்டி கொண்டிருந்தது. அதை குணப்படுத்துவதற்காக மேலே களிம்பை பூசி மறைக்கப்பட்டது தான் இவ்வளவுக்கும் காரணம்.

79. முழு வளர்ச்சி பெற்ற ஒரு மனிதன் பல தடைவ கை விரல் சந்தில் ஏற்பட்ட தடித்த வறண்ட யானை தோல் போல் உள்ள படைக்கு, அவன் மேற்பூச்சு பூசி சருமத்தை மிருதுவாக்கி கொண்டான். அதன் பிறகு உடல் முழுக்க சிவந்த நிறமுள்ள படைகள் தோன்றி படை முழுவதும் பிளந்து கொண்டது. இப்போதும் இதற்கு என்று சிகிச்சைகள் செய்து கொண்ட பின்பு, முன்பு போலவே விரல் சந்தில் தடித்த படை தோன்றிவிட்டது. இப்போது உடல் உள்ளே ஏதோ உதறுவது போல குலுக்கல் ஏற்பட்டு கை, கால்களில் உதறல் எற்பட்டு வலிப்பும், ஏற்பட்டு முன்பு உடலில் ஏற்பட்ட வெடிப்புக்கு ஏதோ தடவி சரிபடுத்திய காரணத்தால் மூக்கில் இரத்தம் வடிய ஆரம்பித்தது. காது மடல்களில் கடுமையான அரீப்பு தோன்றி பிளவு ஏற்பட்டது. அதற்கு களிம்பு தடவி குணமானவுடன் காதிலிருந்து இரத்தம் வடிய ஆரம்பித்து விட்டது. அதை நிறுத்துவதற்கு மருந்து கொடுத்து குணமானவுடன் இரும்பி, இரும்பி இரத்தமாக துப்பினான். முதலில் சருமத்தில் தடவி, சரி செய்ததின் விளைவாக இரத்தமாக இரும்பி, இரும்பி எழுபத்து மூன்றாவது நாள் மரணம் அடைந்து விட்டான்.

80. ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட சரும நோய்க்கு என்று மேற்பூச்சு களிம்புகளை தடவி அது ஆறியவுடன் காக்கை வலிப்பு தோன்றி விட்;டது. திடீரென்று எதிர் பாராத விதமாக சருமம் முழுக்க ஏற்பட்ட வெளிப்பாடுகள் முன்பை விட அதிகமாக தோன்றியவுடன் வலிப்பு நின்று விட்டது.

81. ஒரு இளம்பெண் பதினெட்டு வயது மதிக்க தக்கவளுக்கு அரிப்பு ஏற்பட்டு சொறிந்து, சொறிந்து அதை தணிப்பதற்கு என்று பாதரஸத்தில் செய்யப்பட்ட களிம்பை மேலே பூசி புண் ஆற்றப்பட்டது. அதன் பிறகு உடனே வலிப்பு தோன்றி இது அவளை சிறையிலிட்டு சித்ரவதை செய்வது போல் இருந்தது. இந்த வலிப்பானது கை, கால்களில் மட்டுமின்றி உடல் முழுக்க எற்பட்டது. இப்போது அவளுக்கு இதன் விளைவாக இரு மார்பகங்களும் கழுத்து வரை இழுப்பது போன்ற கடுமையான வலி தோன்றியது. கை கால்கள் ஜீல்லிப்பு தட்டி மரண களைப்பு ஏற்பட்டது. இதன் பிறகு நான்காம் நாள் காக்கை வலிப்பு அவளுக்கு தோன்றி வாயில் நுரை, நுரையாக வந்து அப்படியே நிலைத்து அது பயங்கரமான காக்கை வலிப்பாக மாறி சரும நோயும் இப்போது முன் போலவே தோன்றி விட்டது.

82. ஒரு சிறுவன் அவனுக்கு ஏற்பட்ட சரும படையை சொறியாமல் தேய்த்து விட்டு கொண்டே இருந்தான். உடன் வலிமை வாய்ந்த ஒரு எண்ணெயை போட்டு நீவி கொண்டே இருந்தான்.

83. இதே போல் எண்ணை போட்டு படைக்கு நீவி விட்டு கொண்டுள்ள குழந்தைக்கு என்ன ஆகிவிட்டது என்றால் சீழ் பிடித்து மூச்சு திணறலில் முடிந்தது.

84. ஒரு வேலைக்கார பெண்ணிற்கு ஏற்பட்ட தடித்த படை நோய்க்கு எண்ணெய் போட்டு தேய்த்து கொண்டே இருந்தாள். பிறகு காக்கை வலிப்பு தோன்றி விட்டது.

85. ஒரு இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட சொறி நோய்க்கு பாதரஸ மருந்தை பச்சையாக உள்ளுக்கு தரப்பட்டது. அதன் பிறகு ஒரு சில வாரங்களில் காக்கை வலிப்பு தோன்றி சித்ரவதை செய்தது. அதன் பிறகு ஒரு மாதம் கழித்து அமாவாசை, அமாவாசைக்கு முறை வைத்து வரும் காக்கை வலிப்பு நோயாளி ஆகி விட்டாள்.

86. ஒரு ஏழு மாத குழந்தை காக்கை வலிப்பில் சித்ரவதை பட்டு கொண்டிருந்தது. அவனின் அப்பா, அம்மாவை விசாரித்து பார்த்தில் இருவருக்கும் சொறி நோய்; இருந்தது என்றும் தெரியவந்தது. ஒரு வழியாக ஹோமியோபதி மருத்துவரிடம் சென்று பார்த்து, அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் அதை விசாரித்து பார்த்து இதை கண்டு பிடித்தார். குறிப்பாக அம்மாவுக்கு இந்த நோய் இருந்தது, என்றும் அது அவ்வளவு வேதனை தரவில்லை என்றும், அப்பா சிறுவயதாக இருக்கும் போது உடல் முழுக்க மணல் மாதிரி கொப்புளங்கள் தோன்றி காரியத்தில் செய்த களிம்பு பூசி குணம் ஆனது என்ற வரலாறு இருந்தது. அவளை மேலும் விசாரித்து பார்த்ததில் எனது வாழ்க்கையில் அரிப்பு அடிக்கடி வந்தது என்றும், மருந்து எதுவும் போட்டு கொள்ளவில்லை என்றும் கூறினாள். மருத்துவரானவர் கூறுவது:- நான் பல மணி நேரம் சிந்தித்து இருவரின் வரலாறை துல்லியமாக ஆராய்ந்து பார்த்ததில் பெற்றோரின் சொறி நோய் தான் அடிப்படை காரணம் என்று கூறினார்.

87. இரு சிறுவர்களுக்கு தோன்றிய காக்கை வலிப்புக்கு ஒரே மாதிரியான மருந்துகளை தந்த போது ஒரு குழந்தைக்கு அடை மாதிரி சரும நோய் தோன்றி வலிப்பு தணிந்தது. மற்றொரு குழந்தைக்கு சரும நோய் தோன்றாத காரணத்தினால் வலிப்பு அப்படியே நின்று விட்டது.

88. ஐந்து வருட காலமாக சொறி நோய் ஏற்பட்டு இறந்த ஒருவருக்கு மேலே களிம்பு பூசி தணிந்தவுடன் பல வருடங்களுக்கு பிறகு காக்கை வலிப்பு தோன்றி விட்டது. விசாரித்து பார்த்ததில், இந்த சொறி நோய் நீண்ட நாட்களுக்கு முன்பு இருந்தது என்பது தெரிய வந்தது.

89. ஒரு இருபது வயது இளைஞருக்கு இந்த அரிப்பு நோயை தணிக்க பேதி மருந்தை கொடுத்து, கொடுத்து அடக்கியதால் அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு பல நாட்கள் இது போலவே இருந்தது. இரண்டு வருடம் கழித்து பயங்கரமாக வலிப்பு நோய் தோன்றி அவர் உணவு சாப்பிட முடியாமல் பழரச வகைகளையே சாப்பிடும்படி ஆகியது. பிறகு மறுபடியும் அவனுக்கு முதுகு புறத்தில் அரிப்பு நோய் தோன்றி நல்ல நிலைக்கு வந்தான்.

90. ஒரு பதினெழு வயது மதிக்க தக்க இளைஞன் நல்ல சுறு, சுறுப்பாகவும், புத்தி கூர்மை உள்ளவனாகவும் இருந்தான். திடீரென்று அவனுக்கு அரிப்பு தோன்றியது. அதை சொறிந்து, சொறிந்து இரத்தம் கசியும் அளவுக்கு சொறிய வேண்டியாதாயிற்று. அதற்கு மருந்து தடவி குணமானவுடன் காக்கை வலிப்பு தோன்றி விட்டது. அவனுடைய வரலாறை விசாரித்து பார்த்ததில் மூன்று வருடங்களுக்கு முன்பு அவனுக்கு இரத்த சோகை நோய் ஏற்பட்டு இரத்தத்தை உற்பத்தி செய்யும் மருந்து வகைகளை அவனுக்கு அளிக்கப்பட்டது. அதனால் அவன் தொடர்ந்து சுறு, சுறுப்பாகவும், புத்திசாலியாகவும் இருந்தான். திடீரென்று அவனுக்கு நொடிப்பு தோன்றி விட்டது. முன்பு அளிக்கப்பட்ட சத்து, இரத்தத்தை உற்பத்தி செய்யும் சத்து மருந்துகள் கொடுத்தும் பலன் அழிக்கவில்லை. அதன் பிறகு அவனுக்கு நரம்பு மண்டலத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவுடன் இரத்தம் ஏற்றப்பட்டது. அதன் பிறகு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை நொடிப்பு தோன்றியது. இப்போது அவனுக்கு பல வகையான மருந்துகளை கலந்து கொடுக்கப்பட்டது. நான்கு வாரங்கள் வரை காக்கை வலிப்பு வரவில்லை. பிறகு இடுப்புக்கு மேல் பகுதியில் காக்கை வலிப்பு தோன்றியது. இரவு நேரத்தில் நோயாளியின் பின் பக்கம் கழுத்தை இழுப்பதை போல, இரவு நேரத்தில் மூன்று முறை வலிப்பு தோன்றியது.

இப்போது அவருக்கு ஏராளமான சளியும், இரும்பலும், மூச்சு திணறலும் தோன்றி விட்டது. குறிப்பாக இது இரவு நேரத்தில் காறி, காறி துப்புவார். துப்பும் சளியானது மிகவும் சீழ் நாற்றதத்துடன் துப்புவார். படுக்கையில் இருந்து எழுந்து போக முடியாத அளவுக்கு இருப்பார். அதனால் ஒரு பாத்திரம் வைத்து துப்புவார். இந்த இக்கட்டான நிலையில் நல்ல முறையில் கண்காணித்து சிகிச்சை செய்யப்பட்டது. பல விதமான நல்ல மருந்துகளை கொடுத்து இரும்பலையும், சளியையும் குணப்படுத்தப்பட்டது. அப்படி குணப்படுத்தியவுடனேயே பகல் நேரத்தில் பத்து முறையும், இரவு நேரத்தில் எட்டு முறையும் நொடிப்பு வர ஆரம்பித்து விட்டது. இப்போது சராசரி மனிதனை விட ஞாபக சக்தி மிகவும் குறைந்து விட்டது. அதன் பிறகு சாப்பிடும் நேரம் எல்லம் வலிப்பு தோன்றி சாப்பாட்டை, சாப்பிட முடியாத அளவுக்கு வலிப்பு தோன்றும் இழுக்கும். நன்கு தூங்கும் போது இந்த வலிப்பு எழுப்பி விட்டு விடும். மூக்கை வைத்து தேய்க்கும் போது வலிப்பு வரும் என்று எச்சரிக்கை செய்யும், நடந்து கொண்டு இருக்கும் போது இடது கால் பாதத்தில் ஏதோ ஒன்று ஏறுகிற மாதிரி ஒரு உணர்வு ஏற்பட்டு சடார்ன்னு சாய்ந்த விடுவார்.

91. ஒரு பெண்மணிக்கு சரும அரிப்புக்கு களிம்புகளை தடவி, தடவி நோயை அடக்கிய பிறகு ஒரு பக்கவாதம் தோன்றி கால் போய்விட்டது. பிறகு உறுப்புகளும் செயல் இழந்து விட்டது.

92. ஐம்பத்தி மூன்று வயதுடைய ஒரு மனிதனுக்கு சரும அரிப்பு நோய் ஏற்பட்டு அதற்கு சல்பர் களிம்பு தடவி அடக்கிய பிறகு ஒரு பக்க பாரிச வாயு அல்லது பக்கவாத நோயால் தாக்கப்பட்டார்.

93. ஒரு மந்திரிக்கு நீண்ட நாட்களாக நரம்பு நோய்க்கு, உள்ளுக்கு மருந்து சாப்பிட்டு கொண்டு இருந்த அவருக்கு முடிவாக தோலில் அரிப்பு நோய் ஏற்பட்டு, அதற்கும் களிம்புகள் தடவி பிறகு கை, கால் போன்றவற்றில் வலிப்பு தோன்றி கடுமையான பக்கவாத நோயால் தாக்கப்பட்டு, தோல் கடினமாகி அதில் படைகள் தோன்றி பிறகு இரத்தம் கெட்டு போயிற்று. விரல் சந்தில் சொறிந்து, சொறிந்து இரத்தம் கசியும் அளவு சொறிந்தார். இதே போல் ஒரு பெண்மணிக்கும்; ஏற்பட்டு விரல் சந்துகளிலும், அhpப்பு ஏற்பட்டு அவளும் நீண்ட நாட்களாக சரியாகாமல் மூச்சு திணறலில் முடிந்து விட்டது.

94. ஒருவனுக்கு சரும நோய் அடக்கிய பிறகு பித்து பிடித்தது. பித்து பிடித்தது தணிந்தவுடன் சரும நோய் மறுபடியும் வந்தது. இப்போது அடக்கப்பட்ட அரிப்பானது அதிலிருந்து வெடித்து நீர் கசிந்தவுடன் மனம் தெளிவாகி விட்டது.

95. ஒரு இருபது வயது உள்ள மாணவனுக்கு கையில் சொறி இருந்தது. அதை மறைத்துக் கொள்ளுவதற்காக முழுக்கை சர்ட் போட்டிருந்தான். அப்போது வேலை கடுமையாக இருந்ததால் அதை மறைத்துக் கொண்டே இருந்தான். வேலை கடுமையாக இருந்ததால் அப்படி மறைத்தான். அதன் பிறகும் அரிப்பு தாங்க முடியாமல் நன்கு சொறிந்து விட்டு கந்தக களிம்பை மேலே பூசிக்கொண்டிருந்தான். இப்படி பூசியதால் தணிந்து கொண்டு வந்த அரிப்பு நோய் உள்ளே சென்று விட்டது பின்பு இப்போது உடல் நலம் பாதிக்க ஆரம்பித்து விட்டது. அரிப்புக் கென்று பூசிய களிம்பு சிறிது காலம் மட்டும் தான் சுகம் அளித்தது. அதன் பிறகு மனநிலை லேசாக பாதிக்கப்பட்டு பாட்டு பாடுவதும், சிரிப்பதும் அதன் மூலம் தணித்து கொண்டு வந்தான். ஆனாலும் அதன் பிறகு மிகுந்த உற்சாகத்துக்கு சென்ற விட்டான். இப்படி ஒரு நாளைக்கு ஒரு நாள் உற்சாகம் அதிகமாகி ஆன்மா, பாதிக்கப்பட்டு பின்பு உடலும், பாதிக்கப்பட்டு விட்டது. இப்போது உடலிலுள்ள உறுப்பில் உள்ள விந்து சுரப்பியில் புண் ஏற்பட்டு விந்து உற்பத்தி செய்யக்கூடிய கருமுட்டையும், கூழ் பொருளும் முழுமையாக பாதிக்கப்பட்டு உடலை இயக்க வல்ல விந்து சக்தி முழுவதும் அழிந்து விட்டாதால் உடலை சீர்படுத்தி கொள்ள முடியாமல் போய்விட்டது.

96. இப்போது மேலே சொல்லப்பட்ட கதை போலவே மற்றொரு கேஸ்சும் நடந்தது.

97. சுமார் ஐம்பது வயது மதிக்கதக்க ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட சொறி நோயை அடக்குவதற்காக, மேலே பூசப்பட்ட களிம்பு வகைகளினால் அது மறைந்து மறுபடியும்,அரிப்பு நோய் தோன்றி விட்டது. இப்போது அது வறண்ட சருமமாக மாறி விட்டது. அந்த வறட்சியை தணிப்பதற்காக தற்போதும் தக்க களிம்பு பூசப்பட்டது. மறுபடியும் தலை, கழுத்து போன்ற பகுதிகளில் கடுமையான அரிப்பு தோன்றியது. இப்போது அதற்கென்று களிம்பு வகைகளை பூசிய பின்பு அந்த பகுதி வீங்கி மூச்சு திணறலில் போய் முடிந்தது. குருட்டுதனமாக மேலே கண்ட களிம்பு வகைகளினாலும், பூசப்பட்டதினாலும் முழுமையாக மேலும் குணமாகிவிட்டது. அதன் பிறகு என்ன நடந்தது என்றால், சிறுநீர் சரியாக போகவில்லை. சிறுநீரகத்திலுள்ள சல்லடைகள் உறுத்தல் ஏற்பட்டு அதற்கென்று இப்போது சிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று. அதன் பிறகு உடல் வீக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு அதை தணிப்பதற்ககாக, கடுமையான மருந்து வகைகளை தரப்பட்டது. அது குணமான பிறகு மீண்டும் அரிப்பு தோன்றி சரும புறப்பாடுகள் அதிகமாக தோன்றி உடல் முழுக்க பரவி உடல் விபத்து நடந்தது போல் ஆகிவிட்டது.

உண்மையான ஹோமியோபதி மருத்துவரின் பண்பு யாதெனில்:-

மேலும் இந்த பழமையாகிவிட்ட அலோபதி மருத்துவம் என்று சொல்லக் கூடிய இந்த மருத்துவ முறைப்படி இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்டட காரணத்தினால் என்னுடைய உழைப்பு அனுபவம், அத்தனையும் வீணாகி விட்டது. இந்த நாள்பட்ட வகை நோயான அதன் தன்மையை அறிய முடியாமல் போய்விட்டது. எப்படி சொல்லுகிறேன் என்றால், சிபிலிஸ் (அ) சைகோஸிஸ் உண்மையான உருவத்திற்கு கொண்டு போய் விட்டு விட்டது. இதற்கு அடிப்படை காரணம் சோரா என்ற இந்த சொறி தான். இந்த கேஸ்களின் மூலமாக நான் அனுபவித்து தெரிந்து கொண்டது இது தான். இப்போது இது போன்ற உதாரணங்கள் எனக்கு கிடைத்தது. ஆஹா, என்ன ஆச்சரியம் எனக்கு ஹலோபதி வைத்தியத்தையும், ஹோமியோபதி வைத்திய முறையும், அதாவது இரண்டு மருத்துவத்தையும் இணைத்து பார்க்கிற ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு கிடைத்த இந்த சிறு அனுபவத்தை வைத்தே நான் இதை எழுதுகிறேன். மேலும் எனக்கு போதுமான விபரங்கள் கிடைத்தால் மேலும் நான் நிரூபித்து பார்க்க விரும்பினேன். நான் என்ன சொல்கிறேன் என்றால் இது எனது சொந்த அனுபவம் என்று எண்ண வேண்டாம். பொது நல நோக்கத்தோடு தான் இதை நான் ஆராய்ந்து வெளியிடுகிறேன். இதற்கு என்ன அடிப்படை லாபம் என்றால் ஆச்சரியமான நிகழ்ச்சிகளை நான் கண்டது தான்.

ஹலோபதி மருத்துவர்களால் இந்த செய்திகள் பயனற்றது என்று ஒதுக்கி விட்டது தான். இந்த ஹோமியோபதி துறையில் முக்கியமானதும், முழுமையானதும் ஆகிறது. ஆகவே தான் ஒரு உண்மையான ஹோமியோபதி மருத்துவரை மிக மேன்மையானவராக ஆக்கி விடுகிறது. இந்த மருத்துவர் என்ன செய்யவார் என்றால் அவர் நோயாளிகளை பார்ப்பார். அவரது கஷ்ட, நஷ்ட அடையாளங்களை பார்ப்பார். அதை விட்டு வந்த நோயாளிகளை தொட்டு பார்ப்பதும், உறுப்புகளை உற்று பார்ப்பதும், இந்த நோய், அந்த நோய் என்று சொல்லி பரிசோதனை கூடங்களில் பரிசோதித்து பார்ப்பதும், நோயின் பெயர்களை எழுதி தருகின்ற கடிதங்களை வாங்கி படித்தும் பார்க்க விரும்ப மாட்டார். அவரே உண்மையான ஹோமியோபதி மருத்துவராவார். தனியாக ஒரு நோயாளி அவரிடம் வந்து விட்டாலும், கூட உனக்கு இந்த நோய், அந்த நோய் என்று சொல்லி நோயின் பெயரை சொல்ல மாட்டார். இந்த நிலைக்கு என்ன காரணம் என்பதையே பார்க்க விரும்புவார். ஆகவே தேவையற்ற மேலே கண்ட எந்த விஷயத்தையும் அவர் பார்க்க தேவையில்லை. நோயாளிகளை குணப்படுத்துவதிலேயே நேரத்தை செலவிடுவார்.

ஆனால் மற்ற வகை மருத்துவர்கள் தேவையற்ற, மேன்மையற்ற மேலே கண்ட விஷயங்களை விட்டு, விட்டு அதில் கவனமும், அனுபவத்தையும் பெறுகின்றனர்.

மொழிபெயர்ப்பாளர் டாக்டர் S.M. அவர்களின் குறிப்பு:-

இதுவரை 97 வகை இயற்கையாக மனிதனிடம் தோன்றிய சரும நோயை 12 மொழிகளிலிருந்துப் பெற்ற அனுபவத்தை சரும நோய்கள் பற்றியே ஆராய்ச்சி செய்து எடுத்து, பகுத்து, தொகுத்து, ஹானிமேன் அவர்கள் கூறியுள்ளார். இந்த சரும நோய்க்கு அடிப்படைக் காரணம் சோரா என்ற விஷம் தான். சோரா என்பது பாவ பதிவு என்று வேதாத்திரி மகரிஷி கூறுகிறார். அதற்கு இவர் மருந்துகளை கண்டுபிடித்துக் கூறிவிட்டார். பலருடைய சோராவை அடக்க அலோபதி மருந்தை கொடுக்கப்பட்டதினால் என்ன தீய விளைவு, மரணம் என்பதை பற்றி அப்படியே உள்ளது உள்ளவாறு கூறிவிட்டார். ஆகவே வன்மையாக ஆங்கில மருத்துவத்தை, முதுமை தட்டி விட்ட மருத்துவம் என்று வன்மையாக திட்டுகிறார்.

ஆகவே தொண்டுள்ளம் படைத்தவர்கள் என சிந்தித்துப் பார்த்து பொருளுக்காகவும், ஐம்புலன் இன்பத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும், புகழுக்காகவும் இப்படி செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். ஜீவன்களின் மீது கருணைக் காட்ட வேண்டும் என்று பணிவன்போடு H.K.S.V. கல்விக்குழு கேட்டுக்கொள்கிறது. பசி, பிணி நீக்கு அப்படி நீக்கினால் மோட்சம் (அமைதி) கிடைக்கும் எனக் கூறுகிறார் வள்ளலார். மனிதனின் முழுமைப் பேறு என்றும், தொண்டாற்றி இன்பம் காண்போம் என்றும் முடிவாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறிவிட்டார். ஆகவே மேலே கண்டவர்களின் கருத்துக்களை ஏற்று இந்த மனித சமுதாயத்திற்கு பிணியில் வாடும் உயிரினங்களுக்கு எங்களால் முடிந்த இச்சிறு தொண்டை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உலக சமுதாயத்திற்கு அன்போடு H.K.S.V. கல்விக்குழு படைக்கிறது