ஆர்கனான் சுலோகம்

201 முதல் 291 வரை
201. மனித உடலிலுள்ள உயிர்ப்பு சக்தி (ஜீவகாந்த சக்தி )தன்னுடைய சக்தியைக்கொண்டு நீக்க முடியாத நாட்பட்ட வகை நோயொன்றால் தாக்கப்படும்போது, முக்கியமான உறுப்புகளை அழித்து உயிரைப்போக்க முற்படும் அந்நோயைச் சாந்தப்படுத்துவதற்காக,உடலின் வெளிப்புறத்திலே சருமக் கோளாறு ஒன்றை உண்டாக்கும் வழியை கையாள்கிறது. அதனால் உட்புறத்தே இருந்த நோய் வெளிப்புறம் இழுக்கப்படுகிறது. வெளிப்புறநோய் இழுப்பதினால் உட்புற நோய் குணமாவதில்லைங அதன் கடுமையும் குறையவில்லை. ஆனால் சிறிது காலத்திற்குச் சாந்தமாய் இருக்கிறது வெளிப்புறநோய் உட்புற நோயின் ஒரு பகுதியே உயிர்ப்பு சக்தியினால் உடலின் முக்கியமில்லாத ஒரு இடத்திற்கு தள்ளப்பட்ட உட்புற நோயே அது.

ஆனால் இவ்வெளிப்புற நோயினால் உட்புற நோயை சாந்தப்படுத்தவே முடிகிறது. அதைக் குணம் செய்ய முடியவில்லை வெளிப்புற நோயை சிறிதும் அலட்சியம் செய்யாமல் உட்புற நோய் படிப்படியாக அதிகமாகவே செய்கிறது. உட்புறநோய் அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்றபடி வெளிப்புற நோயை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தமான நிலைமை இயற்கைக்கு நேருகிறது அப்போதுதான் உட்புற நோயை ஓரளவிற்கு சாந்தமாய் வைத்திருக்க முடியும் கால்களில் காணப்படும் நாட்பட்ட குழிப்புண்கள் உடலின் உட்புறத்தே உள்ள சோரா விஷ நோய்க்கூறு குணமாகாத வரையில் அதிகமாகின்றன.

அதேபோல் உள்ளே இருக்கும் சிபிலிஸ், விஷ நோய்க்கூறு குணமாகும் வரை பிறப்பு உறுப்பின் பறங்கிப்புண் பெரியதாகிக்கொண்டே இருக்கிறது. உள்ளே இருக்கும் நோய் அதிகமாவதாலேயே நோய் அதிகமாகிறது.

202. நோய் முழுவதையும் குணம் செய்துவிடலாம் என்ற நம்பிக்கை கொண்டு வெளி பூச்சு மருந்துகளை உபயோகித்து நோயின் வெளிப்புற குறிகளை அலோபதி வைத்தியர் அழித்து விடுவாரேயானால்? அந்நிலைமையையச் சமாளிப்பதற்காக இயற்கை இதுவரை உறங்கிக்கிடந்த உட்புற நோயையும் மற்ற குறிகளையும் கிளப்பிவிடுகிறது. அதாவது உட்புற நோய் அதிகமாகிறது. இவ்விதம் உட்புற நோய் அதிகமாகும்போது அதை வெளிப்புற நோய் உடலின் உள்ளே தள்ளப்பட்டது அல்லது நரம்புகளின் மீது ஏவப்பட்டது என்று சொல்வது வழக்கம்.

203. உடலின் வெளிப்புறக் கோளாறுகளை நீக்குவதற்காகச் செய்யப்படும் ஒவ்வொரு வெளிப்புறச் சிகிச்சையும் உட்புறக் கோளாறை குணம் செய்யாமல் அப்படியே விட்டுவிடுகிறது சோரா விஷ நோய்க் கூறினால் உடலின் வெளிப்புறத்தில் தோன்றும் கோளாறுகளை பலவிதமான களிம்புகளை தடவி போக்கிவிடுவது சிபிலிஸ் விஷ நோய்க்கூறினால் பிறப்பு உறுப்புகளில் உண்டாகும். பறங்கிப் புண்ணை காரமருந்துகளால் சுட்டுவிடுவது சைகோஸிஸ் விஷ கூறினால் பிறப்பு உறுப்புகள் ஆசன வாய் ஆகிய இடங்களில் வளரும்) கெட்ட சதையை கத்தியால் அறுத்தெரிந்து விடுவது ஆகியவைகளை ஆதாரங்காளாகக் கூறலாம். மிகவும் கொடிய இவ்வெளிப்புறச் சிகிச்சை முறை இதுவரை எல்லோராலும் கையாளப்பட்டு வந்திருக்கிறது. மனித இனத்தை வாட்டி வதைக்கும் எண்ணிலடங்கா பற்பல நீடிக்கும் நோய்கள் இவ்bளிப்புற சிகிச்சையினால் தோன்றியுள்ளன. மனித இனத்திற்கு மருத்துவர்கள் செய்யும் மாபெரும் துரோகம் என்றும் இச்சிகிச்சையை கூறலாம். ஆயினும் வெளிப்புற நோய்களுக்கு இதுவொன்றே சிகிச்சை என்று இதுவரை வைத்திய ஆசிரியர்கள் போதித்து வந்திருக்கின்றனர் அவ்விதமே கையாளப்பட்டும் வந்திருக்கிறது, வருகிறது.

204. ஆரோக்கியக் குறைவான வழியிலே வாழ்க்கையை தொடர்ந்து பல காலம் நடத்துவது அலோபதி வைத்தியர்கள் நோய்களுக்குத் தவறாகவும் தீங்கை விளைவிக்கும் வகையிலும் பற்பல மருந்துகளை கொண்டு சிகிச்சை செய்தல் ஆகிய காரணங்களால் தோன்றும் நோய்களை நீடிக்கும் நோய்களின் பட்டியலிலிருந்து எடுத்துவிட்டால் மீதியுள்ள எல்லா நீடித்த கோளாறுகளும் நோய்களும் உடலின் உட்புறத்தே உள்ள சிபிலிஸ், சைகோஸிஸ், சோரா என்று அழைக்கப்படும். மூவகை விஷ நோய்க்கூறுகளாலேயே உண்டாகின்றன. அவ்விஷயத்தில் எவ்வித விதி விலக்கும் இல்லை சிபிலிஸ், சைகோஸிஸ் ஆகிய இரண்டையும் விட சோரா, விஷ நோய்க் கூறினால் தோன்றும் நோய்களே மிக அதிகமாக இருக்கின்றன.

வெளிப்புறக் கோளாறு தோன்றுவதற்கு முன்பாகவே அதற்கு காரணமான விஷ நோய்கூறு உடல், முழுவதையும் தன்வசமாக்கி உடலினுள்ளே எல்லா திசைகளிலும் ஊடுறுவி சென்றிருக்கிறது. (உடலினுள்ளே இருப்பது ரா விஷ நோய்க் கூறாக இருந்தால் பொருக்குகள் தோன்றும் சரும நோய்களும், சிபிலிஸ் விஷ நோய்க்கூறாக இருந்தால் பறங்கிப்புண் அல்லது அரையாப்புக்கட்டியும் சைகோஸிஸ் விஷ நோய்க் கூறாக இருந்தால் கெட்ட சதை வளர்ச்சியும் வெளிப்புறக்கோளாறுகளாய் ஏற்படுகின்றன. வெளிப்புறக்கோளாறு தோன்றியதால் உடலைப் பீடித்துள்ள விஷ நோய்க் கூற்றுக்குத் தன் சொருபத்தை வெளியிட முடியாமல் போய்விடுகிறது.

ஆகவே வெளிப்புறக் கோளாறை அழித்துவிட்டால் விஷ நோய்க்கூறு எதுவாய் இருந்தாலும் அது இயற்கையின் தூண்டுதலால் உடனேயோ அல்லது சில நாள் கழித்தோ முழு வளர்ச்சி பெற்று நம்ப முடியாத அளவில் பற்பல வகைப்பட்ட நீடிக்கும் நோய்களை உண்டாக்குகிறது. வைத்தியர்கள் ஒழுங்கான வழியில் சிகிச்சை செய்து அம்மூன்று விஷ நோய்க் கூறுகளையும் மேல்பூச்சு மருந்துகளை உபயோகிக்காமல் ஏற்ற ஹோமியோபதி மருந்துகளை உள்ளுக்கு கொடுத்து நீக்கியிருந்தால் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனித இனத்தை சுட்டெரித்து வரும் இந்நீடித்த நோய்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாய் இருக்கும்.

205. நீடிக்கும் தன்மையுள்ள விஷ நோய்கூறுகளால் முதன் முதலாக தோற்றுவிக்கப்படும் வெளிப்புறக் கோளாறுகளையோ அல்லது அவை மேலும் வளர்ச்சியடையும் போது தோன்றும் இரண்டாம் வரிசை கோளாறுகளையோ வெளிப்பூச்சு மருந்துகளைகொண்டு சிகிச்சை செய்யமாட்டார் ஹோமியோபதி வைத்தியர் உடல் வேலையைத்தூண்டும் மருந்துகளை வெளிப்புறமாய் உபயோகிக்கவோ அல்லது ஆயுதங்களை உபயோகிக்க மாட்டார். வெளிப்புறக் கோளாறாய் இருந்தாலும் சரி இரண்டாம் தரக் கோளாறாய் இருந்தாலும் சரி அவைகள் ஏற்படுத்திய விஷ நோய்க்கூறுகளை நீக்கவே சிகிச்சை செய்கிறார். அச்சிகிச்சையினால் அக்கோளாறுகள் தாமாகவே மறைந்து போகின்றன.

ஆனால் அவ்விதமான நோய்களை முதலில் சிகிச்சை செய்த அலோபதி வைத்தியர் இவ்வழியை பின்பற்றியிருக்கமாட்டார். அதனால் ஹோமியோபதி வைத்தியரிடம் அந்நோயாளிகள் சிகிச்சை பெற வரும் காலத்தில் வெளிப்புறக் கோளாறுகள் வெளிப்புற மருந்துகளால் அழிக்கப்பட்டிருக்கும் ஆதலால் இரண்டாம்தரக்குறிகளையே அதாவது விஷ நோய்க்கூறுகள் பொங்கியெழுந்து வளர்ச்சியடைவதால் தோன்றும் கோளாறுகளையே ஹோமியோபதி வைத்தியர் இப்போது காணமுடிகிறது. முக்கியமாக தோரா விஷ நோய்க் கூறினால் தோன்றும் நீடிக்கும் நோய்களை சமாளிக்கவேண்டி இருக்கும் அந்நோய்களுக்கும் எவ்வாறு உட்புற சிகிச்சை செய்யப்படவேண்டும் என்பது பற்றி பல ஆண்டுகளாய் கவணித்தும் அனுபவித்தும் நான் அறிந்த விஷயங்களை நாள்பட்ட வகை நோய்கள் என்று பெயருள்ள எனது நூலில் எழுதியிருக்கிறேன்.

(*உதாரணமாக உதடுகளிலும் முகத்திலும் தோன்றும் புற்று நோயில் (இது சோரா விஷ நோய்க் கூறு முழு வளர்ச்சியடையும் போது தோன்றும் ஒரு கோளாறு) வெள்ளைப்பாஷனத்தால் தயரிக்கப்பட்ட மருந்தை புற்றின் மேலே தடவி அதை அழிப்பதை நான் ஆதரிக்கமாட்டேன். அச்சிகிச்சை அளவு மீறிய வலியை தருகிறது. பல சமயங்களில் பயனற்றதாகி விடுகிறது என்பதற்காக மட்டும் நான் அவ்வாறு சொல்லவில்லை ஆர்சனிக் மருந்து வெளிப்புறப்புண்ணை நீக்குவதால் வெற்றி பெற்றாலும் அதன் அடிப்படை நோய் சிறிதளவும் பாதிக்கப்படாமல் அப்படியே இருப்பதால் உயிர்ப்பு சக்தி அடிப்படை நோயை உடலின் மற்றொரு பகுதியில் மாற்றிவிடுகிறது.

அவ்வாறு மாற்றப்படும் பகுதி உடலின் முக்கிய உறுப்பாக இருக்கலாம் இவ்வாறு முக்கியமற்ற இடத்திலிருந்து முக்கியமான இடத்திற்கு நோய் மாறுவதற்கு இடமளிக்கக்கூடாது என்பதற்காகவே சொல்கிறேன். கண்கள் குருடாகுதல், காது கேளாமை, பைத்தியம், அடிக்கடி மூச்சை அடைக்கும் காச நோய், நீர்ச்சுரப்பு, மு்ளையினுள் இரத்தகுழாய் வெடித்தல் முதலியவைகளை உதாரணமாக கூறலாம். சில சமயங்களில் புற்றுநோய் அதிக வளர்ச்சியடையாமல் இருந்து உயிர்ப்பு சக்தியின் வலிமையும் அதிகமாய் இருக்கலாம் அச்சமயங்களில் ஆர்சனிக்கை வெளிப்புறமாக உபயோகிப்பதனால் வெற்றிகிடைக்கலாம்.

ஆனால் உள்ளுக்கு மருந்து கொடுத்து முழு நோயையும் குணம் செய்ய அச்சமயத்தில்தான் சாத்தியமாய் இருக்கும் முகத்தில் அல்லது பெண்களின் யோனி பகுதிகளில் உண்டாகும் புற்றை கத்தியால் வெட்டியெடுத்துவிடும்போதும் நீருள்ள சதைக்கட்டிகளை கிழித்துவிடும்போதும் மேலுள்ளதைப்போன்ற விளைவே தோன்றுகிறது. அதைவிடக்கொடியதான விளைவு தோன்றலாம் எது எப்படி இருந்தாலும் வாழ்நாள் குறுகிச் சாவு நெருங்கி விடுகிறது.

இவ்வித விளைவுகள் கணக்கிட முடியாத அளவிற்கு ஏற்பட்டுள்ள போதிலும் அலோபதி வைத்தியர் ஒவ்வொரு கேசிலும் பழைய வழியையே பின்பற்றி வருகின்றனர். (*நீடித்திருக்கும் நோய் மிகக் கடுமையானதாய் குணம் செய்ய முடியாததாய் இருக்கும் சந்தர்பங்களில் கூட அது பல வருஷங்களுக்கு முன் குளிரில் அடிபட்டது (மழையில் சொட்ட சொட்ட நனைந்து விடுதல், உடம்பு வியர்த்துக் கொண்டிருக்கும்போது குளிர்ந்த தண்ணீரை குடித்தல் ஆகியவை) பயந்து கொண்டது, சுளுக்கு ஏற்பட்டது மனக் கசப்புக்கு உள்ளானது போன்ற ஏதோ ஒரு காரணத்தினால்தான் நோய் தோன்றியது என்று நோயாளியும் அவருடைய நண்பர்களும் தீர்மானமாய் கூறலாம் அவ்வளவு உறுதியாகச் சொல்கிறார்களே என்று நினைத்து நாம் ஏமாறக்கூடாது. அத்தகைய காரணங்களால் நீடிக்கும் நோய்களை ஆரோக்கியமான ஒருவர் உடலில் ஏற்படுத்தவோ, வருஷக் கணக்கில் நீடித்து வளரச் செய்யவோ முடியாது சோரா விஷ நோய்க் கூறினால் அது சாத்தியமாகும் வேண்டுமானால் நோயாளி குறிப்பிடும் காரணத்தால் உடலினுள்ளே உறங்கிக் கிடந்த விஷ நோய்க் கூறு தட்டியெழுப்பப்பட்டது என்று வைத்துக்கொள்ளலாம்.

206. நீடித்த நோயொன்றிற்கு சிகிச்சை செய்ய ஆரம்பிப்பதற்கு முன் நோயாளிக்குத் துன்மார்க்க நோய் சிபிலிஸ் அல்லது கெட்ட சதை வளர்ச்சியை உண்டாக்கும் மேக வெட்டை) ஏதாவது தொற்றியிருக்கிறதா என்று மிகக்கவனமாய் ஆராய வேண்டும். ஏனென்றால் நோயாளிக்கு சிபிலிஸ் நோயின் குறிகள் மட்டும் (அல்லது இக்காலத்தில் மிக அரிதாக் காணப்படும் கெட்ட சதையை உண்டாக்கும். மேகவெட்டை மட்டும்) காணப்பட்டால் இந் நோயை இலக்காக வைத்துச் சிகிச்சை செய்ய வேண்டும் ஆனால் இக்காலத்தில் அந்நோய்கள் பெரும்பாலும் சோரா விஷ நோய்க் கூறுடன் கலந்தே காணப்படுகின்றன. தனியாக இருப்பது அபூர்வம் நீடிக்கும் நோய்களுக்கும் சோரா விஷ நோய்க்கூறே முக்கியகாரணமாய் விளங்குகிறது.207. மேலுள்ள விவரங்களைத் தெரிந்துகொண்ட பிறகு நீடித்துள்ள அந்நோய்க்கு அதுவரை செய்யப்பட்ட அலோபதிச் சிகிச்சையின் விவரம், அடிக்கடியும் பிரதானமாகவும் கொடுக்கப்பட்ட மருந்துகளின் விவரம், அவைகளால் ஏற்பட்ட குணங்களின் விவரம் ஆகியவைகளையும் ஹோமியோபதி வைத்தியர் தெரிந்து கொள்ளவேண்டும். அப்பபோதுதான் நோயின் தண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறியமுடியும். சாத்தியமானால் முன் சிகிச்சையினால் ஏற்பட்டுள்ள கேடுகளை நீக்கலாம் அல்லது ஏற்கனவே தவறாக உபயோகப்படுத்தப்பட்ட மருந்துகளை இப்பொழுது உபயோகிக்காமல் இருக்கலாம்.

208. நோயாளியின் வயது, அவர் வாழும் விதம் உண்ணும் உணவு, செய்யும் தொழில் குடும்பத்தில் அவருக்குள்ள அந்த பிறருடன் பழகும் விதம் முதலிய விவரங்களைச் சீர்தூக்கி பார்த்து அவைகளினால் எதனாலாவது நோய் அதிகரிக்க இடம் இருக்கிறதா அல்லது சிகிச்சைக்கும் அனுகூலம் அல்லது துன்பம் ஏற்படுமா என்பதை நிர்ணயிக்கவேண்டும் இதைப்போலவே நோயாளியின் மனதையும் மனப்பாங்கையும் கவனித்து, அவைகளால் நாம் செய்யும் சிகிச்சைக்கு இடையூறுகள் ஏற்படுமா என்பதை தெரிந்துகொண்டு இடையூறு ஏற்படுமென்று தோன்றினால் ஏற்றபடி அவருடைய சுபாவத்தில் மாறுதலை உண்டாக்க வேண்டும்.

209. இது முடிந்த பிறகு வைத்தியர் நோயாளியுடன் பலதடவை பேசி நோயின் முழு உருவத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதிலிருந்து நோயின் முக்கியமான வினோதமான (விஷேசமான) குறிகளைத் தேடிப்பிடித்து அக்குறிகளுடன் மிக நெருங்கிய ஒற்றுமையுள்ள குறிகளையுடைய சோரா விஷ நோய்க்கூறை அடக்கும் மருந்தொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துச்சிகிச்சையைத் துவக்க வேண்டும்.

குறிப்பு:

(டாக்டர் போயினிங் ரூசன் என்பவர் கூறிய 7 தத்துவங்கள் அதை நீங்கள்தெரிந்து கொள்ளனும். அதிலிருந்து குறிகளையும், மற்ற விசயங்களையும் மற்றும் எல்லா உறுப்புகளிருந்து தொகுத்து தெரிந்து கொள்ள வேண்டும்) bரூரிணு;]; என்பவர் நோய்களை பற்றி சொல்லும் போது நோய் குணம் ஆகும் போது உள்ளிருந்து வெளியே மேலிருந்து கீழே முக்கியமான உறுப்பு மற்றும் முக்கியம் அற்ற உறுப்பு வழிலேயே நோய் வெளியேறனும். அதாவது மூளையிலிருந்து உடற்பகுதிகளுக்கும், உடற்பகுதியிலிருந்து சருமப்பகுதிக்கும், தலைபகுதியிலிருந்து கை, கால் போன்ற பகுதிகளுக்கும் ஆல்பா பெட்டிக் படி உள்ளிருந்து வெளியே இப்படி வெளியேற வேண்டும் என்று சொல்லுகிறார். ஆனால் இது உடற்பகுதிதானே. ஆன்மா பகுதில் அவர் எடுத்துகாட்டி இருக்கிறாரா என்றால் இருக்குது ஆனால் மறை பொருளாகவே இருக்குது. டார்வீன் ஒரு மேதை அவர் மேலை நாட்டை சேர்ந்தவர்.

மேலை நாட்டு விஞ்ஞானிகள் எல்லாம் எவிடன்ஸ், விட்னஸ் கொடுக்கனும். அதாவது ஒருசெயலுக்கு முடிவு எங்கு காண முடியும. கோர்டில் தான் காண முடியும். உதாரணம் குற்றவாளியா, குற்றவாளி இல்லையா என்று சொல்ல அங்கே என்ன கேட்கப்படுகிறது என்றால் சாட்சிகள் இருக்கிறதா, தடையங்கள் இருக்கிறதா என்பார்கள் ஒருவர் கொலையே செய்து விடுகிறார் என்றால் அந்த கொலையை யாரும் பார்க்கவில்லை என்று சாட்சிகள் சொல்கிறது. அதற்கு சாட்சிகளே இல்லை. ஆனால் அவர் கொலை செய்தாருன்னு எப்படியோ போலீஸ் அவரை பிடித்து விடுகிறார்கள். எப்படி பிடிக்கிறார்கள் என்றால்? சந்தேகத்தின் அடிப்படையில் பிடிக்கிறார்கள். சந்தேகம் என்றால் அவர்களுக்கு தெரியும். தெரியாமல் எப்படி அவர்களை மட்டும் பிடிக்க முடியும். உள் ஆன்மா அவர்களுக்கு உணர்த்துகிறது. இவங்கதான் கொலை செய்துவிட்டார்கள் என்பது. சில நேரம் தப்புகூட ஆகலாம் ஆனால் அதை நான் சொல்ல வரவில்லை. இப்பொழுது கூண்டில் கொண்டு வந்து கொலை செய்த வரை நிறுத்தியாச்சி. இப்ப வக்கீல் விசாரணை செய்து பார்க்கும் போது நீதிபதி தீர்ப்பு வழங்க போகிறார். என்ன வழங்க முடியும். இருதரப்பு வாதங்கள் வரைக்கும் சாட்சிகளே இல்லை. இதுபொய் வழக்கு என்று சொல்லி அவர் தள்ளுபடி செய்து விடுகிறார்.

அவருடைய தோற்றத்திலும், பேச்சிலும் எத்தனையோ குற்றவாளிகளை பார்த்த அனுபவம் நீதிபதிக்கும், வக்கிலுக்கும் இருக்கும். மற்றபடி தெரியாமல் ஒன்றும் இருக்காது. ஆனால் இப்ப கொலை செய்தவருக்கு என்ன தண்டனை கொடுப்பார்கள் என்றால், அதாவது குற்றவாளியே இல்லை என்று சொல்ல வேண்டியது வரும் இது தான் சட்டம் எந்த நாடாக இருந்தாலும் இப்படி தான். ஆனால் இந்த தடையங்கள் சாட்சிகள் இதன் அடிப்படையில் தான் சொல்லப்படுகிறது. தீர்ப்பு நிரபராதியை வேண்டுமானால் அந்த வக்கீலோ, நீதிபதியோ, காவல் துறையோ அவர்கள் மீது சலுகை காட்டி அவர்களை விட்டு விடலாம். அல்லது தண்டனை கொடுத்தும் விடலாம். இதே நிலை தான் மருத்துவ துறைக்கும். அதாவது அலோபதியில் தலைவலி என்று சொன்னால் அலோபதி மருந்து கொடுக்கிறார் அது அப்போதைக்கு சரியாகும். மீண்டும் வந்திடும் (சாட்சியில்) சரி மருந்தில் என்ன இருக்குது என்று லேபில் கிருமிகளை வளர்த்தி வைத்திருப்பார்கள். கிருமிகள் சாகும் மருந்து கொடுத்தால் கிருமிகள் எல்லாம் இறந்துவிடும். அதுதான் சாட்சியங்கள் இந்த அடிப்படையிலே அலோபதி மருத்துவத்தில் குறிக்கப்பட்டது. கிருமிகள் இறந்த உடனேவும், வலி குறைந்த உடனேவும் அவர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. அதுதான் மருத்துவம் என்று ஏற்று கொள்ளப்பட்டது. ஆனால் ஹோமியோபதி மருத்துவத்தில் அப்படி இல்லை. ஹோமியோபதி மருந்து உயிரில் வேலை செய்கிறது. இந்த உயிரை காட்ட முடியுமா என்றால் முடியாது. கருவிகள் இல்லை சரி அந்த உயிருக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்றால் மருந்து காட்டமுடியுமா என்றால் காட்ட முடியாது. உயிர் கண்களுக்கும், கருவிகளுக்கும் தெரியாது. இதில் எவிடன்ஸ், விட்னஸ் இல்லை. எப்படி ஏற்று கொள்ள முடியும். சட்டத்தில் ஏற்று கொள்ள முடியாது.

ஆனால் மன சாட்சியின் பெயரில் இந்த மருந்து சாப்பிட்டவர்கள் மருந்து கொடுத்து பார்ததவர்களுக்கு எல்லாம் மனசாட்சி உருத்தத்தான் செய்யும். அவர்கள் என்ன பண்ணுவார்கள் என்றால் ஒன்றும் பண்ண முடியாது. ஏதோ இலை மறைவாக, காய் மறைவாக தான் சொல்வார்கள். அதைப் போலத்தான் இந்த உண்மையை ஏற்று கொள்ள முடியும். ஆனால் மேலை நாட்டில் தோன்றிய டார்வின் என்பவர் மிக பெரிய ஒரு வேலையை சாதித்து இருக்கிறார். அவர் என்ன சொல்லுகிறார் என்றால் உயிரின பரிணாம கொள்கையை கூறுகிறார். உயிரினங்களில் ஓர் அறிவு முதல் 6 அறிவு தத்துவங்களை கூறுகிறார். ஓர் உயிரி தாவரங்கள் (ஓர் அறிவு) தொடு உணர்ச்சி மட்டுமே பெற்ற உயிரினம். 2-வது அறிவு புளு தொடுதல், சாப்பிடுதல். 3-வதுஅறிவு வண்டு தொடுதல், சாப்பிடுதல், முகர்தல். 4-வது அறிவு தொடுதல் சாப்பிடுதல் முகர்தல் பார்த்தல் 5-வது அறிவு கேட்டல், சாப்பிடுதல், பார்த்தல், முகர்தல், தொடுதல் ஐந்து அறிவு பலபல பிரிவு உயிரினங்கள் பறவை, ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன என்று பல்லாயிரக்கணக்கான இனம் இருக்கிறது. இது எப்படி தோன்றியது. அறிவை எப்படி பெற்றது அது எண்ணிய எண்ணங்கள் என்ன என்பதை எல்லாம் டார்வின் அவர்கள் மிக தெளிவாக் சொல்லியிருக்கிறார்.

ஆனால் விஞ்ஞானம் இதை ஏற்று கொள்ளவில்லை. அப்படியே தொட்டும், தொடாமலும் இன்றும் பாடதிட்டத்தில் வைத்துக்கொண்டு தான் உள்ளது. எவிடன்ஸ இல்லாததால் குற்றவாளி மாதிரிதான் இதை நினைக்கிறது. இது மிக அர்புதமானது என்று சொல்லி ஆன்மீகவாதிகள் எடுத்து கொண்டார்கள். குறிப்பாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் அவருடைய கருத்தை அப்படியே ஏற்றுக்கொண்டார். ஆனால் கோர்ட், சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் அவரை கிரகிப்பது போல அவருக்கு மரியாதை கூறும் ஒரு விசயத்தை சொல்லுகிறேன். அது என்னவென்றால் அவர் பட்டும், படாமலும், தெரிந்தும் யாரையும் நோகச் செய்யாமல் மகத்தான விசயங்களை சொல்கிறார். என்ன சொல்கிறார் என்றால் ஹோமியோபதியில் சாட்சியும், தடையமும் இல்லை. ஆனால் மருந்தை சாப்பிட்டால் குணம் ஆகிறது இது உண்மைதானே. ஆனால் கருவிகளும் தடையமும், அம்மருத்துவத்திலும், உயிரிலும் இல்லையே அது போலத்தான் டார்வின் அவர்கள் கூறும் கருத்துகளிலும் விசயம் இருக்கிறது. தடையங்கள் இல்லை என்றாலும் விசயங்கள் இருக்கிறது. அது எப்படி என்றால் ஹோமியோபதியிலும் தடையம் இல்லை. உயிரை பற்றி கொண்டு தான் குணம் ஆகிறது. இது உண்மை தானே அது போலதான் டார்வின் தத்துவமும் உண்மையாகும்.

டார்வின் தத்துவத்தையும் ஹோமியோபதி தத்துவத்தையும் இணைத்து மகரிஷி ஒருபாடல் இயற்றியுள்ளார். அது யாதெனில்

பரிணாம சரித்திரத்தில் மனிதர் எவர் என்றாலும்
பலப்பலவாம் ஐPவ இனம் தாண்டியே வந்துள்ளனர்
தெரியாமல் இருக்கும் இந்த உண்மைகளை நாமோ
நாமோ தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழி உள்ளது சொல்வேன்
அரிதான மருத்துவமாம் ஹோமியோபதியில்
அனைத்து ஜீவ குணங்களிலே ஒன்று உடலில் முளைத்தால் விரிவடையும் ஒவ்வாமையே மனிதனுக்கு நோயாம்
வேறு என்ன சான்று வேதம் பரிணாம நியதிக்கு.
-வேதாத்திரி மகரிஷி
ஏப்ரல்.1999 ஞான களஹ்சியம் என்ற நூலில் காணலாம்.
(உடம்பு என்பது இந்த உடல் மட்டும் அல்ல இதற்கு மேல் மறைப்பொருளாகவும் உள்ள உயிர் மனம், உள்ளம், கட்டமைத்த உடல் மற்றும் சுற்றுபுறச்சூழ்நிலை, உணவு, கல்வி மற்றும் அறிவு பெற்றோர்களின் வித்துக்குழம்புகளில் வந்த பகுதி இதுவரை பெற்ற பாவப்பதிவுகளின் அளவு ஆகிய அனைத்தும் சேர்ந்தது தான் இந்த உடம்பு இவை அனைத்தையுமே சரிசெய்வது ஹோமியோபதி மருத்துவம் ஆகும். ஆகவே ஜீவகாந்தத்திலும், வான்காந்தத்திலும் உள்ள குளறுபடிகளை அதே காந்தமாக இருக்கும் ஹோமியோபதி மருந்து சீர்ப்படுத்துகிறது. உலகம் காந்த தத்துவத்தைப் பற்றி தெரிந்து கொண்டால் உலக மருத்துவ முறைகளில் இதுவே விஹ்சி நிற்கும் என்கிறார். அவர் எழுதிய பல நூல்கள் அவற்றுள் ஒரு வார்த்தை கூட ஒதுக்க முடியாமல் தத்துவமாகவும், சத்தியமாகவும் உள்ளது. இதை மேலும் விவரமாகவும் தெரிந்து கொள்ள மனவளக்கலை 1, 2, 3, காந்த தத்துவம், மனம், பிரம்மஞானம், ஞானக்கலைஹ்சியம் போன்ற நூல்களையும் மற்ற நூல்களையும் பார்த்து, படித்து, தெரிந்து, தெளிந்து கொள்ளலாம்.)

210. அரைகுறை நோய்கள் என்று மேலே நான் குறிப்பிடுபவைகளில் அனேகமாக எல்லா நோய்களுமே சோரா விஷநோய்க் கூறினால்தான் தோன்றுகின்றன. அரைகுறை நோய்களில் ஒரே ஒரு குறிமட்டும் தனிப்பட்டதாய், பெரியதாய், பிரதானமாகவும் ஆகிவிடுவதால் மற்ற குறிகள் யாவும் மறைந்துபோய் விடுகின்றன. இதனால் அரைகுறை நோய்களை குணம் செய்வது கடினமாய் உள்ளது. மன நோய்கள் என்றழைக்கப்படும் நோய்களும் அரைகுறை நோய்கள் என்ற பிரிவில் அடங்கியுள்ளன. ஆனால் மன நோய்களை மற்ற நோய்களுடன் சேராத தனிப்பட்ட இனமாகக் கருதக்கூடாது. ஏனென்றால் உடலைப்பற்றிய நோய்கள் என்று கருதப்படும் நோய்கள் அனைத்திலும் நோயாளியின் மனமும் குணமும் கலந்தே இருக்கின்றன. ஆகவே நம்மிடம் சிகிச்சை பெறவரும் ஒவ்வொரு நோயின் மொத்த குறிகளுடன் நோயாளியின் குணத்தையும் நிச்சயமாகக் கவனிக்க வேண்டும். அப்பொழுததுதான் நோயின் உண்மை வடிவை அறிந்து ஏற்ற ஹோமியோபதி மருந்தை தேர்ந்தெடுத்து கொடுத்து வெற்றியடைய முடியும்.

211. ஏற்ற ஹோமியோபதி மருந்தைத்தேர்ந்தெடுக்க, நோயாளியின் மனக்குறைகள் பல சமயங்களில் முக்கியமானவையாக அமைந்துவிடுகின்றன. ஆகவே மனக்குறிகளின் சிறப்புத்தன்மை பற்றி மேலும் எழுதத் தேவையில்லை. இச்சிறப்புக்குறிகளை கூர்ந்து கவனிக்கும் வைத்தியரால் எளிதில் அறிந்துக்கொள்ளமுடியும்.

212. எல்லா வகைநோய்களிலும் மனிதனின் மனதிலும் குணத்திலும் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. அவை முக்கியமான குறிகளாகவும் இருக்கின்றன. நோய் நீக்கும் பொருள்களை படைத்த கடவுள் மனக்குறிகளையும் படைக்க மறக்கவில்லையென தெரிகிறது. ஏனெனில் எல்லா மருந்துப்பொருள்களிலும் மனிதனின் மனத்திலும் குணத்திலும் மாறுபாடுகளை உண்டாக்கக் கூடிய வல்லமை காணப்படுகின்றன. அது மட்டுமல்ல ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு விதமான மாறுபாடுகளைத் தோற்றுவிக்கிறது.

213. ஆதலால் ஒவ்வொரு நோயிலும் .அது திடீர் வகையைச் சார்ந்ததாய் இருந்தாலும் சரி அதன் மொத்தக் குறிகளுடன் நோயாளியின் மனதிலும் குணத்திலும் ஏற்பட்டுள்ள மாறுதல்களையும் கவனித்து அம் மொத்தக்குறிகளையும் மன குண மாறுபாடுகளையும் எம்மருந்து உண்டாக்கியிருக்கிறது என்று தேர்ந்தெடுக்காவிட்டால் ஹோமியோபதி முறைப்படி அந்நோயை குணம் செய்ய நிச்சயமாக முடியாது.

214. மன நோய்களைக் குணம் செய்யும் விமூயமாக நான் ஒன்றிரண்டு விஷயங்களைத்தவிர வேறெதுவும் சொல்ல வேண்டியதில்லை ஏனெனில் மற்ற நோய்களை குணம் செய்யும் போது கையாளப்படும் முறைகளே, மன நோய்களைக் குணம் செய்யும்போதும் கையாளப்படவேண்டும். அதாவது சிகிச்சைக்கு வந்துள்ள நோயாளியிடம் காணப்படும் உடல், மனக்குறிகளும் மிக நெருங்கிய ஒற்றுமையுள்ள செயற்கை நோய்க்குறிகளை எந்த மருந்து நோயற்ற ஒருவர் உடலிலும் மனதிலும் உண்டாக்கியிருகிறதோ, அம் மருந்தே அந்நோயைத்தீர்க்க வல்லமையுள்ளது. வேறு எவ்வழியாலும் நீக்க முடியாது.

215. மனதைப் பற்றியவை என்றழைக்கப்படும் எல்லா நோய்களும் உடலைப்பற்றியநோய்களே என்பதில் சந்தேகமில்லை இந்நோய்களில் மனக் குறிகள் அதிகரிக்கின்றன அதே சமயத்தில் உடல் குறிகள் (பல சமயங்களில் மிக வேகமாக) மறைய ஆரம்பிக்கின்றன. முடிவில் அரை குறை நோய்கள் என்று திட்டமாக கூறுமளவிற்கு மாறுதலை அடைந்து விடுகின்றன.

216. மேலே விவரித்துள்ளபடி உடலைப்பற்றிய நோய்கள் மனதைப்பற்றிய நோய்களாக மாறிவிடுவது அபூர்வமான நிகழ்ச்சிகளல்ல. சுவாச கோசங்களில் சீழ்பிடித்தல், உடலிலுள்ள முக்கியமான ஓர் உறுப்பு கெட்டுவிடுதல், திடீர் வகை நோய்கள், பிள்ளைப்பேறுக்காலம் முதலிய நோய்களில் சாவு தவிர்க்க முடியாது என்று தோன்றும் சந்தர்ப்பங்களில், நோயாளியிடம் ஏற்கனவே காணப்பட்ட மனக்குறிகள் மிக வேகமாக அதிகரித்து பைத்தியம், ஏக்கம் அல்லது சித்தப்பிரமையாக மாறிவிடலாம். அச்சமயத்தில் உடலைப்பற்றிய ஆபத்தான குறிகள் அடங்கி, ஒடுங்கிக் குறைந்து மறைந்து விடுகின்றன. மிகக் கூர்ந்து கவனிக்கும் இயல்புள்ள வைத்தியராலேயே மறைந்துவிட்ட உடற்குறிகளைக் கண்டு பிடிக்க முடியும் .

217. இத்தகைய நோய்களில் காணப்படும் எல்லா குறிகளையும், அதாவது உடலில் காணப்படும் குறிகளுடன் நோயாளியின் முக்கியமான மனக்குறியையும் மிகக் கவனமாகத் தெரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான், அந்நோய்களை முற்றிலும் அழிப்பதற்கு ஏற்றதான மருந்தை கண்டுபிடிக்க முடியும். அதாவது எந்த மருந்து மேலுள்ள நோய்களில் காணப்படும் உடற்குறிகளுடன், மனக்குறிகளையும் நோயற்ற ஒருவர் உடலில் உண்டாக்கியது என்று கண்டு பிடிக்க வேண்டும்.

218. உடலைபற்றியிருந்த நோய் மனதைத்தாக்கி அரைகுறை நோயாக மாறுவதற்கு முன்பு இருந்த குறிகள் கவனிக்கப்படவேண்டும். அக்குறிகளை நோயாளியின் நண்பர்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்.

219. உடலைப்பற்றிய நோயில் ஆரம்பகாலத்தில் காணப்பட்ட குறிகளைத் தற்சமயம் காணப்படும் குறிகளுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் முதலில் இருந்த குறிகள் மறைக்கப்பட்டிருந்த போதிலும் அழிக்கப்டவில்லை என்பது தெரியும். எப்போதாவது மனக்குறிகளின் வேகம் குறையுமானால் அப்போது, உடற்குறிகள் மறைந்தே இருந்தன உடலை விட்டு நீங்கவில்லை என்பது தெரியும்.

220. நோயின் ஆரம்ப காலத்திலும் தற்காலத்திலும் காணப்படும் உடற்குறிகளுடன் நோயாளியின் நண்பர்களாலும், வைத்தியராலும் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளியின் மனக்குறிகளைச் சேர்த்தால் நோயின் முழுவடிவமும் வெளிப்படும். ஹோமியோபதி முறைப்படி அந்நோயை நீக்கி குணம் செய்ய ஏற்றதொரு மருந்தை அதாவது நோயில் காணப்படும் உடற்குறிகளை மட்டும் அல்லது மனக்குறியையும் உண்டாக்கிய மருந்தைத் தேடவேண்டும். அம்மருந்து சோரா விஷ நோய்ப் பிரிவை அடக்கும் வல்லமையுள்ளதாகவும் இருக்கவேண்டும் .

221. ஆனால் பைத்தியமோ அல்லது சித்தபிரமையோ (பயம்,மனவேதனை, சாராயம் முதலிய போதையூட்டும் பானங்களை அளவிற்கு மீறி குடித்தல் இவைபோன்ற காரணங்களால் ஏற்படும்) திடீர்வகை நோய்களைப்போல் திடீரென்று தோன்றும் சமயங்களில் சோரா விமூ நோய்ப் பிரிவை அடக்கும் மருந்துகளை முதலிலேயே உபயோகிக்கக்கூடாது. குறிகளுக்குத் தக்கவாறு மற்ற வகை மருந்துகளை (அகோனைட், பெல்லடோனா, ட்ரமோனியம், முதலியவை) உபயோகிக்க வேண்டும். அப்போது சோரா, விஷ நோய்க்கூறு அதனுடைய பழைய உறக்க நிலைக்குத்திரும்பி நோயாளி முற்றிலும் குணம் அடைந்தவர் போல் காணப்படுவர்.

222. சோரா விஷ நோய்ப் பிரிவை அடக்கும் சக்தி இல்லாத மருந்துகளைக் கொடுத்து நோய் நீங்கி விட்டால் நோயாளி முற்றிலும் குணமடைந்து விட்டதாக நினைப்பது கூடாது. உண்மையை கூறவேண்டும் என்றால் ஒரு கனமும் கூட தாமதியாமல், சோரா விமூ நோய்ப்பிரிவை அடக்கும் மருந்தைக் கொண்டு பல காலம் சிகிச்சை செய்தால்தான் நீடிக்கும் குணமுள்ள சோரா விஷ நோய்க் கூறிலிருந்து நோயாளி விடுதலை பெறலாம். அவ்வாறு சிகிச்சை செய்யாவிட்டால் உறங்கச் சென்ற சோரா விஷ நோய்க்கூறு மறுபடியும் விழித்துக்கொள்ள இடமுண்டு சிகிச்சை செய்வதுடன் உணவிலும் பழக்கவழக்கங்களிலும் ஒழங்கு விதிகளை அனுசரித்து வந்தால் நோய் மீண்டும் திரும்பி வருமென்ற பயமே இல்லை.

223. மன நோய்களில் சோரா விஷத்தை அடக்கும் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம்:- முதல் தடவையாகப் பைத்தித்தை தோற்றுவித்த காரணத்தை விட மிகவும் குறைந்த அல்லது பெரிய மற்றொரு காரணம் மிக விரைவிலேயே புதியதோர் நோயை, அதாவது கடுமையான வலிப்பை உண்டாக்கும. அவ்வலிப்பு பல காலம் நீடித்திருக்குமாதலால் அந்த இடைக்காலத்தில் சோரா,விஷம் அதன் முழு வளர்ச்சியையும் பெற்று விடுவது வழக்கம் அத்துடன் விட்டு விட்டுத் தோன்றுகின்ற அல்லது விடாமல் நீடித்திருக்கிற ஒரு மன நோயாய் உருமாறும் அச்சமயத்தில் அந்நோயை நீக்குவதே முன்பைவிட கடினமாகும்.

224. மனநோய் அவ்வளவாக வளர்ச்சியடைந்திராத நேரங்களில், அது உடலைப் பற்றியதோர் நோயினால் தோன்றியதா அல்லது சீர்கேடான கல்வி, கெட்ட பழக்க வழக்கங்கள், மனதை நல்வழியில் செலுத்தாமை, மூடநம்பிக்கை, அறியாமை முதலிய காரணங்களில் ஏதோ ஒன்றினால் தோன்றியதா என்ற சந்தேகம் எற்படுவது இயல்பு. இந்த சந்தேகத்தை நீக்கும் வழி இதுவே. நோயாளியின் மனதில் படும்படியாகவும் அன்புடனும் உபதேசித்தல், புத்திமதி கூறுதல், மனதுக்கு ஆறுதலை அளிக்கக்கூடிய வகையில் வாதம் செய்தல் ஆகியவைகளால் நோய் குறைந்த நிலைமையில் அபிவிருத்தி கண்டால் மேலே இரண்டாவதாக விவரிக்கப்பட்டுள்ளவைகளில் ஏதோ ஒன்று மனநோய்க்குக் காரணமென்று முடிவு செய்யலாம்.

ஆனால் உடல் நோயின் விளைவாய் ஏற்படும் மனநோயில் மேலுள்ள வழியைப் பின்பற்றினால் நோய் மிக விரைவில் அதிகமாகத்தான் செய்யும். அதாவது ஏக்கம் பிடித்தவருக்கு அவ்வேகம் மேலும் அதகமாகிச் சண்டை போடுதல், எவ்வளவு சொன்னாலும் ஆறுதலடையாமை, யாருடனும் அதிகப்பேச்சு வார்த்தை வைத்துக்கொள்ளமல் மௌனமாய் இருத்தல் ஆகியவை தோன்றும். பிதற்றுவதும், கோப வெறியுடன் பிறரை அடிப்பதுமாக இருக்கும் ஒரு பைத்தியத்துக்குப் பிதற்றலும் கோப வெறியும் மேலும் அதிகரிக்கும். நோய் ஓயாமலும், முட்டாள் தனமாகவும் சளசளவென்று பேசும் பைத்தியத்துக்கும் இதே போல் நோய் மும்முரமாகும்.

225. மேலே கூறிய படி உடலைப் பற்றிய நோயையே முழுக்காரணமாகக் கருதமுடியாத மனநோய்களும் சில இருக்கின்றன. இவைகளில் உடல்நோய் கடுமையாய் இருப்பதில்லை. ஓயாத கவலை, நீங்காத ஏக்கம், வெறுப்பு, அநீதிக்குள்ளாகுதல், அடிக்கடி பயம், பீதி முதலிய காரணங்களே மன நோய்களைத் தோற்றுவித்து நீடித்திருக்க உதவுகின்றன. நாளடைவில் உடல்நலமும் பெருமளவிற்க்குக் கெட்டுவிடுகிறது.

226. மனதினாலேயே தோன்றிக் காப்பாற்றப்பட்டும் வருகிற இத்தகைய மனநோய்களில்தான் நோயாளியை முற்றிலும் நம்புவதாகக் காட்டிக்கொள்ளுதல், சிறிதளவு சந்தேகப்படவும் இடம் அளிக்காமல் பொய்களைச்சோடித்தல், அன்பு கலந்த அறிவுரைகள் போன்ற மனோதத்துவ முறையை ஒட்டிய சிகிச்சை பயன்தரும். அதுவும் அந்நோய்களின் ஆரம்பக்காலத்தில் உடல் நலம் கெடுவதற்கு முன்பாக இச்சிகிச்சை கையாளப்பட வேண்டும். அத்துடன் நோயாளியின் உணவும் மற்ற பழக்க வழக்கங்களும் ஏற்ற முறையில் சீர்ப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் மனநோய் விரைவில் நீங்கி உடல்நலமும் சீர்படும்.

227. மேலே கூறப்பட்ட மனநோய்களிலும் அவைகளின் அடிப்படைக்காரணம் சோரா விஷநோய்கூறுதான். ஆனால் அது இன்னும் முழுவளர்ச்சியை பெறவில்லை. கூடிய விரைவில் பெற்றுவிடலாம். ஆதலால் முன்னெச்சரிக்கையாக, மனநோயிலிருந்து விடுபட்டது போல் தோன்றும் அந்நோயாளிகளுக்கு சோரா விஷத்தை அடக்கும் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மனநோய் மீண்டும் தோன்றலாம்.

228.உடல் நோய்களால் தோன்றும் மனநோய்களை சோரா விஷத்தை அடக்கும் மருந்துகளால் தான் குணம் செய்ய முடியும். நோயாளியின் வாழக்கைமுறையும் ஒழுங்கான வழியில் மாற்றியமைக்கப்பட வேண்டும். நோயாளியைச் சுற்றி இருப்போரும், வைத்தியரும் அவரிடம் மனோதத்துவ முறையை அனுசரித்துப் பழக வேண்டும. நோயளியின் கோபவெறியைப் பொறுமையாலும் மன உறுதியினாலும் எதிர்க்க வேண்டும். வருத்தமாகவும் புலம்பிக் கொண்டும் இருந்தால் நாம் ஊமைகளை போல் வாய் திறவாமல் நம் பார்வையினாலும் சைகைகளாலும் அனுதாபம் காட்ட வேண்டும் அர்த்தம் இல்லாத பிதற்றல், அருவருக்கத்தக்க நடத்தை, பேச்சுவார்த்தை ஆகியவைகளைக் கவனிப்பதாகவே காட்டிக்க கொள்ளக்கூடாது.

நோயாளியால் அருகிலுள்ள சாமான்களுக்குச் சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது ஒன்றே நாம் செய்ய வேண்டியது. சேதம் ஏற்பட்டால் அதற்காக நோயாளியைக் கடிந்து கொள்வதோ, அடிப்பதோ, துன்புறுத்துவதோ கூடாது இதற்கெல்லாம் அவசியம் நேராத வண்ணம் எல்லா விஷயங்களிலும் தகுந்த ஏற்பாடுகளைச் செய்வது அவசியம். மருந்து சாப்பிட மறுக்கும் போது தான் நோயாளிடம் பலவந்தத்தைக் காண்பிக்க நேரும். ஆனால் ஹோமியோபதிச் சிகிச்சையில் அதற்கும் அவசியமில்லை. ஏனெனில் மருந்துகளின் அளவு மிகச் சிறியது. நாக்கின் சுவையைக் கெடுக்கும் குணம் அவைகளுக்குக் கிடையாது. ஆதலால் நோயாளிக்குத் தெரியாமல் அவர் குடிக்கும் பானத்தில் மருந்தைக் கலந்து கொடுத்து விடலாம்.

229.நோயாயளியை மறுத்துப் பேசுதல், அவர் பேச்சில் காணப்படும். குற்றம் குறைகளை அநாகரிகமான முறையில் திருத்தல், நிந்தனை செய்தல், நம் பலவீனத்தையும் கோழைத்தனத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அவர் சொல்லுக்கு இணங்குதல், ஆகிய எதற்கும் இங்கு அவசியமில்லை. மனநோய்களில் நோயாளிக்குத் தீங்கு செய்யக்கூடிய பல சிகிச்சை முறைகளில் இதுவுமொன்று தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். காரணம் நோயாளி தன்னைப் பிறர் ஏமாற்றுவதையும் அவமதிப்பதையும் நிந்திப்பதையும் நோயாளி கண்டுபிடித்து விட்டால் அவருக்கு அளவு கடந்த ஆத்திரம் தோன்றுவதுடன் நோயும் அதிகரித்துவிடும்.

ஆதலால், அவரைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கும் நபரும் வைத்தியரும் நோயாளியின் அறிவு ஒழுங்கான நிலையிலேயே இருக்கிறதென்று தாங்கள் பூரணமாய் நம்புவதாக் காட்டிக் கொள்ள வேண்டும் நோயாளியின் புலன் உணர்ச்சிகளிலும் மனதிலும் சலனத்தை ஆசை, கோபம், வருத்தம, பயம், கவலை முதலிய உணாச்சிகளை) ஏற்படுத்தக்கூடிய எல்லாவகையான வெளிக் காரணங்களையும் கூடிய அளவு அகற்ற வேண்டும். இருள் படிந்துள்ள அவர் உள்ளத்தை மகிழ்விக்கக்கூடியது எதுவும் இல்லை. தவறினால் உடலை பற்றி நோயின் பிடிகளில் சிக்க வைத்து விடும் அல்லது வேதனைப்படும் அவருடைய மனதுக்கு ஆறுதலைத் தரக்கூடிய வகையில் நினைவை வேறு வழிகளில் திருப்பவோ, மற்றவர்களுடன் மனம் விட்டுப்பேசவோ, புத்தகங்களைப் படிக்கவோ அவரால் முடியாது. நோயை நீக்குவதொன்றை தவிர அவருக்குத் தெம்பூட்டக் கூடியது எதுவுமே இல்லை. உடல் நலம் பழைய படி சீர்ப்படும் போதுதான் அவருடைய மனதில் அமைதியும் சுகமாய் இருக்கிறோம் என்ற எண்ணமும் தோன்றும்.

230. சோரா விஷ நோய்க் கூற்றை அடக்கும் வல்லமையுள்ள பலவகைப்பட்ட மருந்துகள் ஹோமியோபதியில் ஏராளமாய் இருக்கின்றன. நோயாளியின் மனக் குறிகளே மிக முக்கியமானவை. அவை எவ்விதச் சந்தேகத்துக்கும் இடமில்லாமல் தெள்ளத் தெளிவாய் இருக்கின்றன. மருந்துச் சோதனைக் காலத்தில் எந்த மருந்தினால் இத்தகைய மனக்குறிகள் தோற்றுவிக்கப்பட்டன என்ற விவரம் நமக்குத் தெரிந்ததே. ஆதலால் மனநோய்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாய் ஆராய்ந்து, நோய்க் குறிகளைக் குற்றங் குறை இல்லாமல் கண்டுபிடித்து அக்குறிகளுக்கேற்றதாயுள்ள சோரா விஷத்தை அடக்கும் மருந்தைக் கொடுத்தால் மிக விரைவில் வியக்கத்தக்க அளவுக்கு நோய்படிந்துவிடும்.

நோயாளியின் உயிரைக் குடிக்கும் குணமுள்ள தகுதியற்ற (அலோபதி) மருந்துகளை ஏராளமாகவும் அடிக்கடியும் கொடுப்பதால் இது போல் நன்மை விளையாது. உடல் நோயின் காரணமாகவோ அல்லது உடல் நோயுடன் சேர்ந்தோ ஏற்பட்டுப் பலகாலமாய் நீடித்திருக்கும் மன நோய்களில் உலகிலுள்ள மற்ற எல்லா வைத்திய முறைகளையும் விட ஹோமியோபதி பல மடங்கு உயர்வானதென்பதை என் அனுபவத்திலிருந்து தைரியமாய்க் கூறமுடியும்.

231. விட்டு விட்டுத் தோன்றும் முறைக்குண நோய்களைப் பற்றிச் சிறிது விரிவாய் எழுதுவது நலமென்று நினைக்கிறேன். மலேரியாவைப் போல் சுரத்துடன் கூடிய முறைக் குணநோய்கள், தலைவலியைப் போல் சுரத்துடன் (காய்ச்சலுடன்) சேர்ந்திராத முறைக்குண நோய்கள் ஆகியவை விட்டு விட்டு மறைத்து வைத்துத் தான் தோன்றுகின்றன. இவைகளை மட்டும் கவனிப்பது போதாது. நோய் தோன்றும் காலம் எது என்று நிச்சயமாய் மதிப்பிட முடியாமல், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாய் மாறுபடும் நோய்க் குறிகளை தோன்றச் செய்யும் நோய்களையும் கவனிக்க வேண்டியது அவசியம்.

232. மாற்று உருவமெடுக்கும் நோய்களின் எண்ணிக்கை ஏராளமாய் இருக்கிறது. ஆயினும் அவையாவும் நீடிக்கும் வகையைச் சேர்ந்தவை, முழு வளர்ச்சி பெற்றுவிட்ட ஸோரா விஷத்தின் வெளிப்படையாய்த் தெரியும் விளைவுகள். மிக அபூர்வமாக சிபிலிஸ் விஷமும் சம்பந்தப்பட்டிருக்கலாம். எந்த விஷம் இருக்கிறதோ அவ்விஷத்தை அடக்கும் மருந்துகளை உபயோகிக்க வேண்டும். நோய்கள் இரண்டு அல்லது மூன்று உருவங்களில் மாறி மாறி தோன்றலாம். *உதாரணமாக, ஈரூருவம் (இரண்டு உருவங்கள்) எடுக்கும் நோய்களின் நோயாளியின் கண்களில் இருந்த ஒருவகை வேக்காடு மறைந்தவுடன் கால்களிலும் மற்ற இடங்களிலும் இடைவிடாத வலிகள் தோன்றும் அவ்வலிகள் மறைந்த மறு கணமே மீண்டும் கண் வேக்காடு தோன்றும்.

உடலைப் பற்றிய பலநோய்களில் அவை மறைந்தவுடன் வலிப்புகள் ஏற்படலாம். மூன்று உருவங்களைக் கொண்ட சாதாரண நோய் ஒன்றில் ஒரு சமயம் நோயாயளியின் உடலும் உள்ளமும் வழக்கத்தை விடச் சுறுசுறுப்பாய்க் காணப்படும். அச்சமயத்தில் அவர் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்துவிடுவார். சோர்வோ, சோம்பலோ இல்லாமல் வேலை செய்வார். அதிக அளவு உணவை உட்கொள்வார் இதை நோயின் இரண்டாவது உருவமென்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் சற்றும் எதிர்பாராமல் மூன்றாம் உருவம் தோன்றலாம்.

அப்போது நோயாளிக்குத் தாங்கமுடியாத ஆத்திரம், வருத்தம், சீரணக் கோளாறு, தூக்கமில்லாமை ஆகிய குறிகள் காணப்படும் மூன்றாவது உருவமும் திடீரென்று மறைந்து நோயின் முதல் உருவம் அதாவது நோயாளிக்குப் பழக்கமாகிவிட்ட அதிக உபத்திரவத்தை அளிக்காத உடல் கேடு பழையபடி ஏற்படும் புதியதோர் உருவம் வெளிவந்தவுடன் அதற்கு முன்னிருந்த உருவத்தின் சுவடு எதுவும் காணப்படுவதில்லை. அப்படியே காணப்பட்டாலும் அது மிகச் சிறியதாய் தான் இருக்கும்.

233. நோயாளி ஏறக்குறைய ஆரோக்கியமாகவே இருக்கிறார் என்று தோன்றும் சமயங்களில், நோய்க் குறிகளில் மாறுதல் இல்லாமல் குறிப்பிட்தோர் கால அளவு ஆனவுடன் தவறாமல் தோன்றி அதே போல் குறிப்பிட்ட காலம் கழிந்தவுடன் மறையும் குணமுள்ள நோய்களையே உண்மையான முறைக் குணநோய்கள் என்று கூறலாம். இம்முறைக் குணநோய்களில் சில காய்ச்சலுடன் சில காய்ச்சல் இல்லாமலலும் தோன்றுகின்றன.

234.காய்ச்சல் இல்லாமல், விட்டு விட்டுத் தோன்றுகின்ற உண்மையான முறைக் குண நோய்களின் இலட்சணம் என்ன, பெருவாரி நோய்களைப் போல் ஒரே சமயத்தில் பெரும்பாலான மக்களைத் தாக்குவதோ அல்லது அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலரை மட்டும் பீடிப்பதோ கிடையாது. ஓரு சமயத்தில் ஒரே ஒரு மனிதனிடம் மட்டுமே காணப்படும் பெரும்பாலும் சோரா விஷத்துடன் சம்பந்தப்பட்ட, நீடிக்கும் வகையைச் சேர்ந்ததாய் இருக்கும். சிபிலிஸ் விஷத் தொடர்பு இருக்காது. ஆதலால் சோரா விஷ மடக்கி மருந்துகளைக் கொண்டே சிகிச்சை செய்யலாம். ஆயினும் அவைகளின் விட்டு விட்டுத் தோன்றும் குணத்தை நீக்க இடையிடையே சிங்கோனா மரப்பட்டைலிருந்து தயாரிக்கப்படும் மருந்தை ஹோமியோபதி முறையில் வீரியப்படுத்திக் கொடுத்து வருவது நலம். அவசியமுமாகும். அவ்வாறு செய்தால் நோய்களின் முறைக்குணம் முற்றிலும் அழிந்துபோகும்.

235.அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலரை மட்டுமோ அல்லது பெருவாரியாகப் பலரையோ ஒரே சமயத்தில் தாக்குகிற முறைக் காய்ச்சலில் (சதுப்பு நிலப் பிரதேசங்களில் வாழ்வோருக்குத் தோன்றும் முறைக் காய்ச்சல்களை அதில் சேர்க்க முடியாது.) காய்ச்சல் தோன்றும் ஒவ்வொரு தடவையிலும் ஒன்றுக்கொன்று மாறுபாடான குறிகளையுடைய இரு நிலைமைகள் (முதலில் குளிர், பிறகு சூடு அல்லது முதலில் சூடு, பிறகு குளிர்) தோன்றும். பல சமயங்களில் குளிர், சூடு, வியர்வை ஆகிய மூன்று நிலைமைகள் தோன்றுகின்றன. ஆதலால் அந்நோய்களுக்குத் தேர்நதெடுக்கப்படும் மருந்துகள் கீழுள்ளபடி இருக்கவேண்டும் சோரா விஷத்தை அடக்கும் மருந்துகளின் இனத்தைச் சேர்ந்ததாக இருக்கக்கூடாது.

நோயற்ற உடலில் கொடுத்துச் சோதிக்கப்பட்ட போது சிகிச்சைக்கு வந்துள்ள இயற்கை நோயில் காணப்படும். மாற்று நிலைமைகளில் இரண்டையோ அல்லது மூன்றையுமோ உண்டாக்கியிருக்க வேண்டும். அல்லது இயற்கை நோயில் காணப்படும் மாற்று நிலைமைகளில் எது எல்லாவற்றையும் விடத் தெளிவாகவும் பலமாகவும் இருக்கிறதோ அம்மாற்று நிலைமையை நோயற்ற உடலில் தோற்றுவித்த மருந்தாய் இருக்கவேண்டும். ஆயினும் சுரம் மறைந்து போயிருக்கும் சமயங்களில் அதாவது நோயாளியின் உடல்நிலை ஆரோக்கியமாய்க் காணப்படும் போது, அவரிடம் தென்படும் குறிகளைக் கவனித்து ஏற்ற ஹோமியோபதி மருந்தைக் கொடுத்துச் சிகிச்சை செய்வதே மிகச்சிறந்தது.

(*முறைக்காய்ச்சல் என்பது ஒரே வகை நோய் தான் என்றும் அந்நோய் ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு தடவை என்று பலவிதமாய் முறை வைத்து தோன்றுகிறது என்றும் நோயக்கூறு நிபுணர்கள் இதுவரை கருதி வந்திருக்கின்றனர். ஆகவே அதற்குக் குளிர்காய்ச்சல் என்ற மறுபெயரையும் சூட்டினர். ஆனால் முறைக்காய்ச்சல் பலவகையில் காணப்படுகின்றன. குளிர்காய்ச்சல் என்று பெயரிடத் தகுதியற்று முழுக்க முழுக்க உடல் சூடு மட்டுமே ஒருவகையில் காணப்படும். குளிர் மட்டுமோ அல்லது முதலில் குளிரும் பிறகு வியர்வையும் காணப்படுவதும் மற்றொரு வகை.

இன்னும் ஒரு வகையில் நோயாளியின் உடலைத் தொட்டால் நெருப்பைப் போல்சுடும். ஆனால் அவர் தனக்குக் கடுமையான குளிர் இருப்பதாய்க் கூறுவார். அல்லது உடலின் வெளிப்புறம் பனிக்கட்டியைப் போய் சில்லிப்பாய் இருக்கும் போது தன்னுடல் தீப்பிடித்திருப்பது போல் எரிவதாய் நோயாளி ஓலமிடுவார். வேறொரு வகையில் ஒரு தடவை வெட வெடவென்ற உடல் நடுக்கமோ அல்லது லேசான சில்லிப்போ தோன்றும் நோய் மறுதடவை வரும் போது சூடு மட்டுமே இருக்கும். சூடு அடங்கிய பிறகு வியர்வை காணலாம். காணாமலும் இருக்கலாம்.

முதலில் சூடு தோன்றி அது முற்றிலும் மறைந்த பிறகே குளிர் வருவது வேறொரு வகை. மற்றொரு வகையில் குளிர் அல்லது சூடு தோன்றி மறைந்தவுடன் பல மணி நேரம் சென்ற பிறகு வியர்வை உண்டாகும். சில வகைகளில் வியர்வை என்ற பேச்சே இருக்காது. நேர்மாறாக, குளிரோ சூடோ இல்லாமல் வியர்வை மட்டுமே உள்ள வகையும் இருக்கிறது. சூடுள்ள போதே வியர்வையும் தோன்றலாம். குளிர்,சூடு,வியர்வை ஆகிய நிலைமைகளைத் தவிர நோயில் காணப்படும். தலைவலி, வாயில் கெட்டசுவை, குமட்டல், வாந்தியெடுத்தல், வயிற்றுப்போக்கு, தாகம் இல்லாமை அல்லது அளவு கடந்திருத்தல், உடலிலோ, கை கால்களிலோ குடைச்சல், கடுப்பு அல்லது வலி, சரியான படி தூக்கம் வராமை, பிதற்றல், குணம் மாறுதல், வலிப்புகள் முதலிய பல துணைக் குறிகள் கூட இக்காலத்தில் மாறுபட்டுத் தோன்றலாம். அதாவது குளிர் சூடு, வியர்வை ஆகிய மூன்று நிலைமைகளில் ஏதோ ஒரு நிலைமையுடன் தொடர்பு கொண்டுள்ள துணைக்குறிகள் ஒரு சமயம் அந்நிலைமை தோன்றுவதற்கு முன்னதாகவும் மறுசமயம் அந்நிலைமை தோன்றி மறைந்த பிறகும் மற்றொரு சமயம் சேர்ந்தேயும் காணப்படும். மேலுள்ள விவரத்தை கூர்ந்து கவனித்தால் முறைகாய்ச்சல்களில் பலவகைகள் இருக்கின்றன என்பது தெளிவாகத் தெரியும்.

ஆதலால் ஒவ்வொரு வகைக்கும் வெவ்வெறு (ஹோமியோபதி) மருந்துகள் தேவைப்படுமென்று கூற வேண்டியதில்லை. எவ்வகையைச் சேர்ந்த முறைச் சுரமாய் இருந்தாலும் சிங்கோனா மரப்பட்டையாலும் அதிலிருந்து தயாரிக்கப்படும்.க்வினைன் ஸல்பேட்டும, அலோபதி முறைப்படி மாத்திரையில் நோய்க்கு ஏற்றவையாக இல்லாத சமயங்களிலும் முறைக் காய்ச்சல் பெருவாரி நோய்களைப் போல ஒரே சமயத்தில் பலரைப் பிடிக்கும் குணமுள்ளதாய் இருந்தாலும் இவ்விதச் சிகிச்சையினால் காய்ச்சல் அடக்கப்பட்டு அதைவிட கொடுமை வாய்ந்த வேறொரு நோய் தோன்றுகிறது.

236. நோய் ஒருமுறை தோன்றி மறைந்து அதன் விளைவுகளிலிருந்து நோயாளி ஒரளவு விடுதலை பெற்ற உடனேயோ அல்லது சிறிது நேரம் ஆனவுடனேயோ மருந்தைக் கொடுப்பது மிக மிகச் சிறந்தது. நோயாயளிக்கு எவ்விதத்திலும் தீங்கிழைக்காமல் ஆரோக்கிய நிலைமை பழையபடி தோன்ற உடலில் செய்யப்படவேண்டிய எல்லா மாற்றங்களையும் செய்து முடிப்பதற்குத் தேவையான அவகாசம் மருந்துக்கு அச்சமயத்தில் தான் கிடைக்கிறது. மிகவும் தகுதி வாய்ந்த மருந்தாய் இருந்தாலும் நோய் தோன்றுவதற்குச் சற்று முன்பாக அதைக் கொடுத்தால் நோயும் மருந்தும் ஒரே சமயத்தில் உடலைத் தாக்குவதால் பல சமயங்களில் உயிருக்கு உலை வைத்துவிடும். இது ஹோமியோபதி முறை.

(குளிர் நிலைமையில் ஓபியம் என்னும் மருந்தைக் கொடுத்தால் பல சமயங்களில் மரணம் நேர்ந்திருக்கிறது. அல்லது நோயாளியின் உடல் வலிமையை அறவே அழித்துவிடும் நோய் மறைந்த பிறகு மருந்தைக் கொடுத்தால் உடலிலுள்ள உயிர்புச் சக்தி எவ்விதத் துன்பமுமின்றி மருந்தை ஏற்றுக்கொண்டு நோயற்ற நிலையை மீண்டும் பெறுகிறது

237. மோசமான சில காய்ச்சல்களில் சூடு இல்லாத நேரம் மிகக்குறைவாய் இருக்கும். அல்லது சூடு நிலையாக ஏற்படும். ஏதோ ஒரு துணைக்குறி மறையாமல் தொடர்ந்திருக்கலாம். இச்சமயங்களில் வியர்வை அடங்கியபிறகு மருந்தைக் கொடுக்கவேண்டும்.அல்லது நோய்த்தணிவதை குறிக்கக்கூடிய வேறு எந்த அறிகுறி காணப்பட்டாலும் அவ்வறிகுறியின் வேகம் குறைய ஆரம்பித்தவுடன் மருந்தைக் கொடுக்கலாம்.

238. கொடுக்கப்பட்ட ஒரே ஒரு வேளை மருந்தினால் நோய் அதன் வழக்கப்படி தோன்றவேண்டியகாலங்களில் பலதடவைகள் தோன்றாமலிருந்து நோயாளியின் உடலிலும் நல்ல ஆரோக்கியம் கண்டபிறகு மீண்டும் நோய் தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்பட்டால் அப்போது தான் அம்மருந்தை இரண்டாவது வேளையாகக் கொடுக்கலாம். ஆயினும் நோயின் மொத்தக் குறிகளில் மாற்றமெதுவும் இல்லாமல் முன் போலவே இருக்கவேண்டியது மிகமிக அவசியம். அப்போதுதான் அதே மருந்து உபயோகமாகும். ஆரோக்கிய நிலைமை சிலகாலம் தொடர்ச்சியாய் இருந்து அதன் பிறகு பழைய நோயே மீண்டும் தோன்றினால் நோயை முதன் முதலில் தூண்டிய விஷப்பொருள் உடலை விட்டு நீங்கவில்லையென்பதைக் குறிக்கிறது. சதுப்பு நிலப்பிரேதேசங்களில் இது போன்ற நிகழ்ச்சிகள் சகஜமாய் நேருகின்றன. அவ்விடங்களில் குடியிருப்பதால் தோன்றும் முறைக்காய்ச்சலை நோயாளியின் குடியிருப்பை மலைப்பாங்கான இடத்துக்கு மாற்றினால் தான் நிரந்தரமாய் நீக்கமுடியும்.

239. மருந்துச் சோதனையில் ஒவ்வொரு மருந்தும் வெவ்வேறு விதமான காய்ச்சல்களை தோற்றுவித்திருக்கின்றன. மாற்று நிலைமைகளை உடைய முறைக்காய்ச்சல்களை கூட உண்டாக்கியுள்ளன. ஆதலால் இயற்கையாய் ஏற்படும் எல்லா வகை முறைக்காய்சசகளிலும் ஒவ்வொன்றுக்கும் ஏற்றதான ஹோமியோபதி மருந்தைத் தேர்ந்தெடுக்க முடியும்.

240. கொள்ளை நோயாய்ப்பரவியுள்ள ஒரு முறைக்காய்ச்சலில் தேர்ந்கெடுக்கப்பட்ட ஹோமியோபதி மருந்தினால் ஒரு சிலருக்கு மட்டும் பூரண குணம் கிடைக்கவில்லை என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்கமுடியும். ஒன்று சதுப்ப [நிலப்பிரதேசங்களில் குடியிருத்தல். மற்றொன்று சோரா விஷம் பிண்ணனியில் காணப்படுவது. இரண்டாவதே காரணமாயிருந்தால் சோரா விஷத்தை அடக்கும் மருந்துகளை நோய் முற்றிலும் நீங்கும் வரை உபயோகிக்கவேண்டும்.

241. முறைச்சுரங்கள் சதுப்பு நிலப்பிரதேசங்களில் நிலையாகக் குடிகொண்டிருக்கும் தன்மை உள்ளவை. ஆகவே மற்ற பிரதேசங்களில் பெருவாரி நோய் போல் தோன்றும் முறைக்காய்ச்சல் நீடிக்கும் வகையைச் சேர்ந்த நோய்களின் குணங்களை பெற்றருக்கின்றன. கொள்ளை நோயாய் தோன்றும் ஒரு முறைக்காய்யச்சல் தாக்கப்படும் எல்லோரிடமும் நோய்க்குறிகள் ஒன்று போல் காணப்படுகின்றன. நோயின் மொத்தக்குறிகளும் இதேபோல் எல்லோரிடமும் ஒன்று போல் இருக்கும்போது அதற்கு ஏற்ற ஒரு ஹோமியோபதி மருந்தைத் தேர்ந்தெடுப்பது எளிதாகிறது. அம்மருந்தைக் கொண்டு அம்முறைக் காய்ச்சலுள்ள எல்லோரையும் குணம் செய்யலாம். முறைக்காய்ச்சல் வருவதற்கு முன் முழு வளர்ச்சியுற்ற சோரா விஷத்தால் தாக்கப்படாமல் கூடியவரையில் ஆரோக்கியமாய் இருந்து வந்த நபர்களுக்கே இச்சிகிச்சையினால் நன்மை விளையும்.

242. கொள்ளைநோய் முறைக்காய்ச்சல் ஒன்றில் முதல் தடவையாகத் தோன்றும் போதே அதைக்குணம் செய்யாமல் விட்டுவிட்டால் அல்லது தகுதியற்ற அலோபதிச்சிகிச்சை செய்யப்பட்டு அதனால் நோயாயளிகளின் உடல்வலிமை குன்றிவிட்டால், உடலிலுள்ள சோரா விஷம் விழித்தெழுந்து முழு வளர்ச்சியைப்பெற்று முறைக்காய்ச்சலைப் போலவே வேடம் பூண்டு நோயாளிகளைத் துன்புறுத்துகிறது. நோயின் ஆரம்பக்காலத்தில் அதற்கேற்றதாய்க் காணப்பட்ட மருந்து இச்சமயத்தில் பயன்படாது. சோரா விஷத்தால் ஆக்கப்பட்ட முறைக்காய்ச்சல் தற்போது ஏற்பட்டிருந்தால் ஸல்பர் அல்லது ஹிப்பர்ஸல்பர் ஆகிய மருந்துகளில் ஏதோ ஒன்றை உயர்ந்த வீரியத்தில் ஒரேஒருவேளை கொடுத்தால் குணம் ஏற்படும். இம்மருந்துகளை இரண்டாவது வேளையாக கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்படுவது மிக அபூர்வம்.


243. சதுப்பு நிலப்பிரதேசத்தில் குடி இல்லாத ஒரு சமயத்தில் ஒரே ஒரு நபரை மட்டுமே தாக்கும் விஷத் தன்மைவாய்ந்த முறைக்காய்ச்சல்களில், தீடீர் வகையைச் சேர்ந்த நோய்களில் செய்வதைப்போலவே, குறிகளுக்கு ஏற்றபடி தேர்ந்தெடுக்கப்படும் ஹோமியோபதி மருந்து சாதாரண வகையைச் சேர்ந்தாதாக இருக்க வேண்டும். சோரா விஷ அடக்கும் மருந்துகளின் இனத்தைச் சேர்ந்ததாக இருக்கக்கூடாது. இவ்வழியினால் நோய் தணியாவிட்டால் சோரா விஷம் வளர்ச்சி பெற்றுவிட்டதென்று உறுதியாய் எண்ணலாம். அப்போது சோரா விஷத்தை அடக்கும் மருந்துகளைக் கொண்டே நிரந்தரமான குணத்தை காணமுடியும்.

244. சதுப்பு நிலப்பிரதேசங்களிலும் அடிக்கடி வெள்ளப்பெருக்கில் ஆழ்ந்துவிடும் பிரதேசங்களிலும் முறைச்(சுரங்கள்) காய்ச்சல்கள் நிலையாய்க் குடிகொண்டு விடுகின்றன. இதனால் அங்குள்ள அலோபதி வைத்தியர்களுக்கு ஏராளமான வேலை கிடைக்கிறது. ஆயினும் இளமையிலிருந்தே உணவிலும் பழக்கவழக்கங்களிலும் ஒழுங்காய் இருந்து வரும் நபர்களை அம்முறைக்காய்ச்சல் தாக்குவது அபூர்வம்தான். முதன் முதலாக அப்பிரதேசங்களில் காலடி எடுத்து வைக்கும் போது ஹோமியோபதி முறைப்படி ஒரு வேளை தாக்கலாம். அச்சமயத்தில் சிங்கோணா மரப்பட்டை மருந்தை உயர்ந்த வீரியத்தில் ஒரிரண்டு வேளைகள் கொடுத்து வாழக்கை முறையை ஒழுங்காக வகுத்துக்கொண்டால் மிக விரைவில் நோய் நீங்கிவிடுகிறது.

அப்படியும் நோய் சிலருக்கு நீங்காமல் இருக்கலாம். அச்சமயங்களில் சோரா விஷம் வளர்ச்சி பெற்று வருகிறதென்பது நிச்சயம். ஆதலால் சோரா விஷத்தை அடக்கும் மருந்துகள் இல்லாமல் குணம் செய்ய முடியாது. நோய் தோன்றியவுடன் சதுப்பு நிலப்பிரதேசங்களிலிருந்து வெளியேறி மலைப்பாங்கான இடங்களில் குடி புகுவோருக்குச் சில சமயங்களில் நோயிலிருந்து விடுதலைக்கிடைக்கும். ஆதாவது (சுரம்) காய்ச்சல் வருவது நின்றுவிடும். சோரா விஷம் அதன் முழு வளர்ச்சியைப் பெறுவதற்கு முன் அவர்கள் குடியிருப்பை மாற்றிவிட்டதால் அது பழைய படி உறங்கச்சென்று விட்டதென்று நாம் கருத வேண்டும்.

ஆனால் சோரா விஷத்தை அடக்கும் மருந்துகளை உபயோகிக்காமல் நோயிலிருந்து பூரணமாய் விடுதலைபெற முடியாதென்பது உறுதி.

245. நோய்களின் முக்கிய வகைகளையும் அவைகளுடன் தொடர்பு கொண்டுள்ள நிலைமைகளையும் ஹோமியோபதி முறைப்படி சிகிச்சை செய்யும் போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களைப்பற்றி இதுவரை பார்த்தோம். மருந்துகளை கொடுக்கும்போது அனுசரிக்கப்பட வேண்டிய பத்தியங்கள் ஆகியவைகளைப்பற்றி இனி காண்போம். நோய் திடீர் வகையைச் சேர்ந்ததாயினும் சரி, அல்லது நீடித்த வகையைச் சேர்நதாயினும் சரி, ஒரு வேளை மருந்து கொடுக்கப்பட்ட பிறகு படிப்படியாகக் குறைந்து வருவது தெளிவாய்த் தெரிந்தால் வேறு மருந்தையோ அல்லது மருந்தை இரண்டாவது வேளையாகவோ கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

முதல் வேளை மருந்து நல்லவிதமாய் வேலை செய்து வருவதால் கூடிய விரைவில் அது தன் வேலையைப்பூர்த்தி செய்து விடுவது நிச்சயம். ஆதலால் அச்சமயத்தில் முதல் மருந்தையே இரண்டாவது தடவையாகவே அல்லது வேறு மருந்தையோ கொடுத்தால் நோய் குணமாக்கும் வேலையில் ஆபத்து ஆகிவிடும்.

246. ஹோபதிச்சட்டத்தை முற்றிலும் அனுசரித்து தேர்ந்தெடுத்து மிக நுண்ணிய அளவிலே கொடுக்கப்பட்ட ஒரு வேளை மருந்தினால் (அதன் வேலைக்கு இடையூறுகள் நேராதிருந்தால்) சில சமயங்களில் நோய் மிக மெதுவாகக்குறைய ஆரம்பிக்கும். முழுநோயும்; நீங்கச்சுமார் 4,0 50 அல்லது 100 நாட்கள் கூட ஆகும். இது மிக அபூர்வமாகவே நிகழ்கிறதாயினும் இச்சமயத்தில் நோய் நீங்கும் கால அளவைக் குறைத்து விரைவில் பூரண குணத்தை ஏற்படுத்துவது வைத்தியருக்கும் நோயாளிக்கும் மிக, மிக அவசியம். பிறகு மூன்று விஷயங்களில் நாம் விழிப்புடன் இருந்தால் இக்காரியம் மிக எளிதாய்க் கை கூடும் என்பதைச் சமீபகாலத்தில் பலமுறை நான் கவனித்திருக்கிறேன்.

1. ஹோமியோபதிச்சட்டத்தை முற்றிலும் அனுசரித்து மிகக்கவனமாய் மருந்தைத் தேர்தெடுக்க வேண்டும்.

2. இயற்கை நோயை நீக்குவதற்கு எந்த அளவில் உயிர்ப்புச்சக்திக்கு ஊக்கம் தேவையோ அந்த அளவு ஊக்கத்தையே அளிக்ககூடிய வகையில் மருந்தின் அளவு மிக மிக நுண்ணியதாய் (Pடிவநnஉல) இருக்கவேண்டும். அளவில் மிகக்குறைந்திருந்த போதிலும் மருந்தின் சக்தி ஏரளாமாக இருப்பதால் அதைக் கண்மூடித்தனமாய் அடிக்கடி கொடுத்து வந்தால் உயிர்புச்சக்திக்கு அளவு மீறிய ஊக்கம் பிறந்து கெடுதலாக வேலை செய்ய ஆரம்பிக்கும். ஆதலால் அனுபவத்தைத் துணைக்கொண்டு ஒரு வேளை மருந்துக்கும், மறுவேளை மருந்துக்கும் எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயித்து அவ்வாறே தகுந்த இடைவெளி விட்டு மருந்தை உபயோகிக்க வேண்டும். மிகக்கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஹோமியோபதி மருந்தை ஒரு வேளை கொடுக்கிறோம்.

அவ்வொரு வேளை மருந்து அதன் பல வேலையையும் செய்யும்படி விட்டுவிட வேண்டும். அதே மருந்தை இரண்டாவது வேளையோ அல்லது வேறொரு மருந்தையோ கொடுக்ககூடாது. இவ்விஷயத்தை ஆர்கனானின் முந்திய பதிப்புகளில் எழுதியிருக்கிறேன். உண்மையான அனுபவத்தின் மூலமே இக்கொள்கையை நான் பின்பற்றுகிறேன். முதலில் கொடுக்கப்பட்ட மருந்தை நோய்க்கு மிகவும் ஏற்றது என்று மீண்டும் தேர்ந்தெடுத்த வேறொரு மருந்தையோ அல்லது முதல் மருந்தையே அடிக்கடி பல வேளைகளிளோ கொடுப்பதால் அதிக நன்மை விளைய இடமில்லை எல்லா இடங்களிலும் இவ்விஷயம் பொருந்துமென்றாலும் நீடிக்கும் வகை நோய்களில் மிக மிகப்பொருத்தமாகும். இதற்கு காரணம் என்ன? மாற்று மருந்தையோ அல்லது அதே மருந்தை அடிக்கடி கொடுப்பதால் உயிர்புச்சக்திக்கு தேவையான அளவுக்கு மேல் ஊக்கம் பிறந்துவிடுகிறது. அதனால் இயற்கை நோயை உதறி விட்டுச்செயற்கை (மருந்து) நோயை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக அது திட்டவட்டமான கெடுதல்களைச்செய்ய ஆரம்பிக்கிறது. ஆகவே பொதுவாக எல்லா நோய்களிலும் ஒவ்வொன்றுக்கும் ஏற்றதாய்க் கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்படும் மருந்தை மிகக்குறைந்த அளவில் ஒரே ஒரு வேளை கொடுக்க வேண்டும்.

அவ்வொரு வேளை மருந்தின் வேலை பூர்த்தியாகும் வரை இம்மருந்தையே இரண்டாம் வேளையோ அல்லது வேறு ஒரு மருந்தையோ கொடுப்பது கூடாது. [வீரியப்படுத்தப்பட்டுள்ள மருந்துகளில் தான் ஹோமியோபதி தத்துவத்தின் இரகசியமே அதனுள் அடங்கி இருக்கிறது. (வீரியப்படுத்தாமல் அப்படியே உலகில் கிடைக்கின்ற கனிமம், உப்பு, காரம், தாவரம், நஞ்சு வகைகள் போன்ற எந்த ஒரு பொருளையும் தூளாக்கி, சாறாக்கி தருவதும், சர்பத், லேகியம் பலவகை களிம்புகள் மேலே போட தருவது சித்த வைத்தியம், ஆயுர்வேதம், யுனானி, ஆங்கில மருந்துவம் ஆகும்.

ஹோமியோபதி முறைப்படி சாறு எடுத்ததை மருந்து பொருள் பாதியும், அது கெட்டு போகாமல் பாதி மருந்து சாராயத்தில் கலக்கி வைக்கப்பட்டுள்ளது. ஏன் இப்படி செய்யப்படுகின்றது என்றால் வெளிநாடுகளில் இருந்து இவைகள் வரவழைக்கப்படுகிறது. வருவதற்குள் புளித்து கெட்டுபோகும் அல்லவா. அதனால் அப்படி கலக்கி வைக்கப்பட்டுள்ளது. அதை எடுத்து வீரியம்படுத்தும் போதுதான் ஹோமியோபதி மருந்தாகிறது.வீரியப்படுத்தாவிட்டால் முன் கூறப்பட்ட ஹாலோபதி, சித்தா, யுனானி, ஆயுர்வேதம் முறை தான் ஆகும. ஹோமியோபதி வைத்திய முறைக்கும் மற்ற வைத்திய முறைக்கும் என்ன வித்தியாசம் என்றால் கிடைக்ககூடிய மூல மருந்துகளை வீரியப்படுத்துவது ஒன்றுதான் வித்தியாசம் ஆகும். வீரியப்படுத்தப்பட்ட பின் தான் ஹோமியோபதி மருந்து ஆகிறது. இப்படி செய்து தரும் போது தான் உடலிலும், மனதிலும், பரம்பரை பாவபதிவுகளும் தணிக்க முடிகிறது. இப்படி செய்யாமல் ஹோமியோபதி பட்டமும், பதிவும் பெற்ற மருந்துவர் கூட இந்த சாராயமும், மூலமருந்தும் பாதி ஆல்கஹால் பாதி கலக்கப்பட்டு கெடாமல் வைத்திருக்கும் (இதற்கு பெயர் தாய் திரவம் எனப்படும்.) இதை அப்படியே நோயாளிகளுக்கு தருகிறார். ஓரு வேளைக்கு பல சொட்டுகள் சாப்பிடும் படியும் தருகிறார்கள்.

ஆனால் ஹோமியோபதி தத்துவம் என்பது ஒரு சொட்டு தாய் திரவத்தை உடைத்து, பிரித்து (Pடிவநnஉல) செய்து நூற்றுக்கணக்கான கூறுகளில் ஒன்றையோ பல லட்சக்கணக்கான கூறகளில் ஒன்றைதான் தரவேண்டியது வரும். ஓரு சொட்டையோ இத்தனையில் ஒரு பங்கு தர வேண்டியது வருகிறது. நோய் குணம் அடைகிறது. ஆனால் பச்சையாக அப்படியே தாய் திரவத்தை தருகின்ற மருத்துவர்கள் இது ஹோமியோபதி முறை வைத்திய மருந்தா, பிறவகை மருந்தா, தாய்திரவத்தையே தருகின்ற ஹோமியோபதி மருத்துவர்கள் அறியாமையில் செய்கிறார்களா? தெரிந்தே செய்கிறார்களா? என்ன காரணங்களுக்கு செய்கிறார்கள்? என்று தெரியவில்லை, ஆகவே நோய் திடீர் வகைகளைச்சேர்ந்ததாய் இருந்தாலும் சரி, நீடிக்கும் வகையைச்சேர்ந்ததாய் இருந்தாலும் சரி, எல்லா மருந்துகளையும் வீரியப்படுத்தியே உபயோகிக்கவேண்டும். உண்மையான ஹோமியோபதியின் விலை மதிக்க முடியாத சிறப்பு இதுவே. ஆகவே மருந்துகளின் அளவு நாளுக்கு நாள் அதிகமாக்கி கொடுத்து வரும் அலோபதிக்கும் (அலோபதி, ஹோமியோபதி ஆகிய இரண்டையும் ஒன்று கலந்து கையாளப்படும் கலப்பு வைத்திய முறை அலோபதியை விட உயர்வானதில்லை.] ஒரு வேளை மருந்தே அம்மருந்தினால் ஏற்படக்கூடிய எல்லா நன்மைகளையும் செய்துவிடுகிறது என்று சொன்னேன்.

ஆயினும் குழந்தைகளுக்கும், பலம் குறைந்த உடலும் மிக எளிதில் உணர்ச்சி வயப்படும் தன்மையுள்ள பெரியவர்களுக்கும் தோன்றும் சிறிய நோய்கள், பலகாலமாய் நீடித்த அதிக வளர்ச்சி பெற்றுவிட்ட நீடிக்கும் வகை நோய்கள், கடுமைக்குணமுள்ள தீடீர்வகை நோய்கள் ஆகியவைகளில் ஒரே ஒரு வேளை மருந்தினால் அம்மருந்தினால் ஏற்படக்கூடிய முழு நன்மையும் கிடைப்பதில்லை. ஆகவே அச்சமயங்களில் இம்மருந்தை பல வேளைகள் கொடுக்க நோpடுகிறது. அப்போதுதான் உயிர்ப்புச்சக்தி தேவையான அளவு தூண்டப்பட்டு நோய் குணமாகிறது. மேலே நான் குறிப்பிட்டிருப்பதை வைத்துக்கொண்டு ஒரே மருந்தைக் கண்மூடித்தனமாக அடிக்கடி கொடுப்பது கூடாது. அதனால் தீமையே விளையும். ஊன்றி கவனித்தால் இது தெரியவரும். முதல் நாள் கொடுத்த மருந்தை மறுநாளும் அதற்கடுத்த நாளும் மிகக்குறைந்த அளவிலேயே கொடுத்தாலும் நோய் அதிகரிப்பதை காணலாம். நோய்க்கு முற்றிலும் ஏற்றதாய், சிறிதளவு தவறும் இல்லாமல் தேர்ந்தெடுத்த மருந்தை ஒரு வேளை கொடுத்த பிறகு அதனால் ஏற்படவேண்டிய முழுப்பயனும் கிடைக்கவில்லை. மருந்தை ஒரே வேளையில் அதிகமாய் கொடுத்தால் (அதாவது ஒருமாத்திரைக்கு பதிலாக 7 அல்லது 8 மாத்திரைகளைக்கொடுத்தால் ஒரு சொட்டுக்கு பதிலாக பல சொட்டுகளை கொடுத்தால்) முழு பயனும் ஏற்படுமென்று ஹோமியோபதியர் நினைப்பது இயற்கை. ஆனால் அவ்வாறு செய்தால் நன்மை ஏற்படுவதில்லை. என்பதை தவிர தீமையும் ஏற்படுகிறது. குறைந்த வீரியத்தில் அதிக அளவில் கொடுப்பதாலும் விரும்பிய பலன் வராது. இவ்வழிகளால் உயிர்ப்புச்சக்தி திடீரென்றும் கடுமையாகவும் தாக்கப்படுவதால் கொடுக்கப்படும் மருந்தை தன் பகைவனாய் மதித்து வாந்தியெடுத்தல், வயிற்றுப்பபோக்கு, சுரம், வியர்வை முதலிய பலவழிகளால் அதை வெளியேற்றப்பாடுபடுகிறது. இயற்கை நோயை நீக்க முயற்சிப்பதில்லை.

நோயயாளியின் உடல் வலிமை மிகக்குறைந்து போய் பழையபடி மாற பலகாலம் பிடிக்கும். மேலும், அடிக்கடி பல வேளைகளில் கொடுக்கப்படும் மருந்து உடலில் ஒன்று சேர்ந்து உயிர்ப்புச்சக்தியை அடக்கி ஒடுக்கி வைத்து விடுகிறது. அதனால் உயிர்ப்புச்சக்தி தன் வேலையைச்செய்ய முடியாமல் நாளுக்கு நாள் அளவில் அதிகமாகிக்கொண்டே வரும் மருந்ததைப்பேசாமல் ஏற்றுக்கொள்ள நேருகிறது. நோயாளியின் உடலும் நீக்கமுடியாத அளவில் பாழாகிறது. தேர்ந்தெடுக்கப்படும் மருந்தைக்கொண்டு நோயாயளிக்கு தீங்கு செய்யாமல் நோயை முற்றிலும் நீக்க மேலுள்ள தவறான வழிகளை நாம் விலக்க வேண்டும். அம்மருந்தினால் ஏற்படக்கூடிய நன்மைகளை பூரணமாய்ப் பெறுவதற்கு விசேஷமான ஒருவழியை நான் சமீபத்தில் கையாண்டு வருகிறேன். ஒவ்வொரு மருந்துக்கும் உள்ள இயற்கை குணம் நோயாளியின் உடல் அமைப்பு, நோயின் தன்மை ஆகிய இம்மூன்று விஷயங்களுமே சரியான வழியைக்காட்டும் கருவிகளென்பதை நான் உணர்ந்தேன். உதாரணமாக ஸல்பர் என்னும் மருந்தை எடுத்துக் கொள்வோம் நீடிக்கும் வகைநோய்களில் (சோரா விஷக்கலப்பு உள்ளவை) உயர்ந்த வீரியத்தில் ஸல்பரை ஒரு வேளை கொடுத்தால் நல்ல உடல் வலிமை உள்ளவர்களுக்குக்கூட ஏழு நாட்கள் கழித்த பிறகு தான் மறுவேளை கொடுக்கமுடியும்.

உடல் வலிமை குறைவாய் இருப்பவர்களுக்கும் எளிதில் உணர்ச்சிவயப்படும், குணம் உள்ளவர்களுக்கும் 9, 12 அல்லது 15 நாட்கள் சென்ற பிறகே மறுவேளை மருந்து கொடுக்கமுடியும். அம்மருந்தினால் இனி நன்மை எதுவும் ஏற்படாது என்ற நிலைமை தோன்றும் வரையில் மேலுள்ள படி இடைவெளிவிட்டு அதைப்பல தடவைகள் கொடுத்துவரலாம். அவ்வாறு 6, 8 அல்லது 10 தடவைகள் கொடுத்து வந்தால் அந்நோயில் ஸல்பரால் ஏற்படக்கூடிய எல்லா நன்மைகளும் ஏற்பட்டுவிடும். ஆதாவது அந்த நோயில் ஸல்பரால் நீக்கப்படக்கூடிய எல்லா நோய்க்குறிகளும் அடியோடு அழிந்து போகும். ஆனால் ஏற்கனவே அலோபதிச்சிகிச்சை செய்து ஸல்பரை பச்சையாக கண்மூடித்தனமாய் உபயோகித்திருந்தால், இச்சிகிச்சையால் பயன் இல்லை. உடம்பு முழுவதும் பரவியுள்ள ஸ்கோபீஸ் (ளுஉயbநைள) என்று அழைக்கப்படும் ஒரு வகை அழுக்குச்சிரங்கு ஸல்பரை உயர்ந்த வீரியத்தில் வாரமொரு முறையாகக் கொடுத்து வந்தால் 10 அல்லது 12 வாரங்களில் முழுவதும் குணமாகிவிடும். உடலையும் உடைகளையும் சுத்தமாய் வைத்துக்கொள்வதைத் தவிர சிரங்கின் மேலே எந்தவித மருந்தையும் தடவ வேண்டியதில்லை.

ஸல்பருக்கு உதவியாய் இருக்கும் பொருட்டு கார்போவெஜிடோபிலியை உயர்ந்த வீரியத்தில் வாரமொரு முறையாய் சிலவேளைகள் கொடுப்பது வழக்கம். அவ்வழக்கத்துக்கும் இங்கு அவசியம் இல்லை. கடுமையான, நீடிக்கும் வகையைச் சேர்ந்த மற்ற பல நோய்களில் ஸல்பர் தேவைப்படுமென்று நாம் கருதினால் அப்போதும் ஸல்பரை உயர்ந்த வீரியத்தில் வாரமொரு முறையாக 8, 9 அல்லது 10 வேளைகள் கொடுக்கலாம். ஸல்பரை ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாய்க் கொடுப்பதை விட, இரண்டு அல்லது மூன்று தடவை அதைக்கொடுத்த பிறகு வேறொரு மருந்தை (ஸல்பருக்கு அடுத்தபடியாய் அந்நோய்க்கு ஏற்றதென்று தேர்ந்தெடுக்கப்படும் மருந்து அது அனேகமாக ஹீப்பர்ஸல்பராக இருக்கும்.)

இடையில் ஒரு வேளை கொடுத்து அதன் பிறகு 9, 10 அல்லது 12 நாட்கள் பொருத்து மீண்டும் ஸல்பரை இரண்டு மூன்று தடவைகள் கொடுக்கலாம். நீடிக்கும் வகையைச் சேர்ந்த நோய் ஒன்றில், நோயை நீக்க ஸல்பர் இன்றியமையாததாய் இருக்கிறது. அம்மருந்தை மேலே எழுதியுள்ள படி இடைவெளிவிட்டுத்தான் உபயோகிக்கிறோம். ஆயினும் அம்மருந்தை ஏற்க உயிர்ப்புச்சக்தி மறுக்கிறது. அதாவது சிகிச்சைக்காலத்தில் ஸல்பரின் குறிகள் நோயாளிடம் தோன்றுகின்றது.

இச்சமயங்களில் நக்ஸ், உயர்ந்த வீரியத்தில் ஒரு வேளை கொடுத்து எட்டு அல்லது பத்து நாட்கள் சென்ற பிறகு ஸல்பரை மீண்டும் கொடுத்தால் உயிர்ப்புச்சக்தி அதைப்பணிவுடன் ஏற்றுக்குணத்தை உண்டாக்கும். ஒரு சில நோயாளிக்கு பல்ஸடில்லாவே (உயர்ந்த வீரியத்தில் பயன்படும்.) அலோபதி முறைப்படி ஸல்பரைக் கண்மூடித்தனமாய் உபயோகிக்ப்பட்ட நோயாளிக்கு ஸல்பரை மிக உயர்ந்த வீரியத்தில் கொடுத்தாலும், அம்மருந்தினால் நனைக்கப்பட்ட ஒரே மாத்திரையை முகர்ந்தால் கூட உயிர்ப்புச்சக்தி அதிக எதிர்ப்பை வெளிப்படுத்தும். நீடிக்கும் வகை நோய்களில் அலோபதிச்சிகிச்சையினால் விளையும் இப்பரிதாப நிலைமையைப் போக்க ஏதோ ஒரு வழி இல்லாமல் இருந்தால் நோயாளிக்காக ஒரு குரல் அழுவதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும்? மேலுள்ளதை போன்ற சமயங்களில் (உயர்வீரியத்தில்) மெர்கூரிஸ் என்னும் மருந்தில் நனைக்கப்பட்ட ஒரு மாத்திரையை ஒரே ஒரு தடவை பலமாய் முகரும்படிச் செய்து அதன் பிறகு 9 நாட்கள் கழித்து ஸல்பரைக் கொடுத்தால் நன்மை ஏற்படும். விஷத்தை அடக்கும் மற்ற மருந்துகளையும் பாஸ்பரஸைத் தவிர மேல் கூறிய படி இடைவெளி விட்டுக்கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்தால் நோய்க்கு ஏற்றதென்று தேர்ந்தெடுக்கப்படும் மருந்து நன்றாக வேலை செய்யும் ஹிப்பர்ஸல்பர், ஸேபியா, ஸைலீஷியா ஆகியவைகளை 14 அல்லது 15 நாட்களுக்கொரு முறை தான் உபபோகிக்கலாம்.

இரண்டாவது வேளையாக ஒரு மருந்தைக் கொடுப்பதற்கு முன் அம்மருந்து ஹோமியோபதி சட்டபடி நோய்க்கு முற்றிலும் ஏற்றது தான் என்பதை வைத்தியர் உறுதி செய்து கொள்ள வேண்டும். திடீர் நோய்களில், நாம் சிசிச்சை செய்யும் நோயின் வளர்ச்சி வேகத்தை அனுசரித்தே எவ்வளவு நேரத்துக்கு ஒரு முறை மருந்தைக்கொடுக்கலாம் என்று தீர்மானிக்க முடியும். கொடுக்கப்படும் மருந்தினால் நோயாளியின் நிலைமையில் தங்கு தடையின்றி அபிவிருத்தி ஏற்பட்டு கொண்டு இருந்தாலும் (புதிய நோய்க்குறிகள் தோன்றாமல்) அபிவிருத்தி நோயின் வேகத்துக்கு ஏற்றபடி இல்லாத சமயங்களில் 24, 16, 12, 8, 4 அல்லது 2 மணிக்கு ஒரு முறையாகவும் மருந்தைக்கொடுக்கலாம். மிகவிரைவில், மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில் விஷபேதி, வாந்திபேதி (ஊhடிடநசய-காலரா) முதன்மையாய் இருந்து வருகிறது. இந்நோயின் ஆரம்பத்தில் கம்போராவை (குறைந்த வீரியத்தில்) வேளைக்கு ஒன்றிரண்டு சொட்டுகள் வீதம் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு வேளையாகக்கொடுத்து வந்தால் மிக விரைவில் நோயின் கொடுமை குறைந்து விடும். நோய் சிறிது முன்னேறிவிட்டால் குப்ரம், வெரட்ரம், பாஸ்பரஸ், ஆர்ஸனிக், கார்போவெஜி ஆகியவைகளையும் உயர்ந்த வீரியத்தில் இரண்டு அல்லது மூன்று மணிக்கொரு தடவையாக கொடுத்து வரலாம். கொள்ளை காய்ச்சலும் விடாமல் அடிக்கும் சுரங்களிலும் ஏற்ற மருந்தை இவ்விதமே கொடுத்து வரலாம். எய்ட்ஸ் போன்ற நோய் மட்டுமே உள்ள நோயாளிக்கு மெர்கூரியஸ்சொல்(ஆநுசுஊ-ளுடீடு)என்னும் மருந்தை உயர் வீரியத்தில் ஒரே ஒரு வேளை கொடுத்தால் போதுமென்பதை நான் கண்டிருக்கிறேன். சோரா விஷமும் சேர்ந்திருப்பதாகத் தோன்றும் போது அல்லது சந்தேகத்துக்கு இடமிருக்கும் போது இரண்டு அல்லது மூன்று வேளைகள் ஆறு அல்லது எட்டு நாட்கள் இடைவெளிவிட்டு உபபோயகிக்கலாம்.

ஏதோ ஒரு மருந்து மிக அவசரமாக நோயாளிக்குக்கொடுக்க வேண்டி இருக்கிறது. ஆனால் அவர் மிகவும் பலவீனமாகவும் படபடப்புடனும் இருப்பதால் இம்மருந்தை உட்கொள்ளமுடியாது. இச்சமயத்தில் கொடுக்கப்பட வேண்டிய மருந்தில் நனைத்து காய்ந்து விட்ட ஒரு மாத்திரையை நோயாளியின் மூக்கினருகே கொண்டுபோய் அதை ஒரே தடவை மூச்சை உள்ளிழுத்து முகர்ந்தால் போதும் இதனால் வாய் மூலம் அம்மருந்தை உட்கொண்டால் விளையக்கூடிய நன்மை ஏற்படுவதில் ஐயம் இல்லை.

247. ஆதலால் நோய்க்கு மிகவும் ஏற்றதென்று தேர்ந்தெடுக்கப்படும் ஹோமியோபதி மருந்தை மிக நுண்ணிய அளவில் கீழ் உள்ளபடி உபயோகிக்க வேண்டும். நீடிக்கும் வகை நோய்களில் 7, 8, 1,0 12 அல்லது 2 நாட்களுக்கு ஒரு வேளை வீதமும் திடீர்வகை நோய்களில் 5 நிமிடங்களுக்கு ஒரு வேளை வீதமும் அம்மருந்தைக் கொடுக்கலாம். நோயின் வேகத்தையும் மருந்தினால் தோன்றும் குணத்தையும் அனுசரித்தே இவ்விஷயம் முடிவு செய்யப்பட வேண்டும்.

248. ஒரு மருந்தினால் நோய் முழுவதும் நீங்கிவிட்டாலும் அல்லது ஓரளவிற்க்கே குணம் ஏற்பட்டுப்பிறகு நன்மை ஏற்படவில்லை என்று தெரியும் போதும் அம்மருந்தை நிறுத்தி விட வேண்டும். முழு நோயும் நீங்காமல் இருந்தால் அப்போது நோயிடம் காணப்படும் மொத்தக்குறிகளை கவனித்து ஏற்ற வேறு மருந்தைத் தேடி கொடுக்க வேண்டும்.

249,250. நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்து அவருடைய நோயுடன் சம்பந்தமில்லாத புதிய தொல்லைகளை தருகின்ற நோய் குறிகளை உண்டாக்கினால் அம்மருந்து ஹோமியோபதிச்சட்டத்தை முற்றிலும் அனுசரித்து தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் அதனால் உண்மையான குணம் ஏற்படாது என்றும் சொல்லாம். ஹோமியோபதி மருந்துகளில் அளவு எவ்வளவு குறைந்தாலும் அவைகளின் நோய் தீர்க்கும் சக்கதியை அகற்ற முடியாது. அதனால் நோயில் இறக்கம் காணவில்லை. புதிய நோய் குறிகள் தோன்றுகின்றன என்றால் கொடுக்கப்பட்ட மருந்து நோய்க்கு ஏற்றதல்ல என்று முடிவு செய்ய வேண்டும். அளவு குறைந்ததினால் தான் இப்படி நேருகிறதுதென்று நினைத்து அம்மருந்தையே மீண்டும் அதிக அளவில் கொடுப்பது அறியாமையை விளம்பரம் செய்கிறது நோயாளிக்கு துன்பத்தையும் விளைவிக்கிறது. இவ்விதம் சரியான படி தேர்ந்தெடுக்கப்படாத ஒரு மருந்தினால் தோன்றும் நோய்க்குறிகள் கடுமையாய் இருந்தால் அம்மருந்தை முறிக்கக்கூடிய மருந்தை கொடுத்து அதன்பிறகு நோயில் காணப்படும் மொத்தக்குறிகளுக்கு ஏற்ற வேறொரு மருந்தை உபயோகிக்க வேண்டும். கடுமையாய் இல்லாவிட்டால் முறிவு மருந்து தேவை இல்லை.)

251. மருந்துச்சோதனையில் இக்னேஷியா, ப்ரயோனியா, ரஸ்டாக்ஷ், பெல்லடோன்னா சில மருந்துகள் நோயற்ற உடலில் ஒன்றுக்கொன்று நேர் விரோதமான இருவகைக் குறிகளையே (மாற்றுவேலை) பெரும்பாலும் உண்டாக்கியுள்ளன. இம்மருந்துகளில் ஒன்றை தேர்தெடுத்து கொடுக்கும் போது சில சமயங்களில் அம்மருந்தினால் நோயில் இறக்கம் ஏற்படுவதில்லை. அச்சமயங்களில் அம்மருந்தை முன் கொடுத்த குறைந்த அளவிலே (நோய் தீடீர் வகையைச் சேர்ந்ததது என்றால்) ஒரு சில மணிநேரம் கழித்தவுடனேயே மீண்டுமொரு முறைக்கொடுக்கலாம்.

252. மாற்றுக்குறிகளை ஏற்படுத்தாத மற்ற மருந்துகளில் (சோர விஷயத்தையடக்கும் குணமுள்ள) ஒன்றை நீடிக்கும் வகையைச்சேர்ந்த (சோரா விஷமுள்ள) ஒரு நோயில் ஹோமியோபதிச்சட்டப்படி முற்றிலும் ஏற்றதென்று கருதி உபயோகித்து நோயில் இறக்கம் காணாவிட்டால், நோயை வளர்த்து வருகிற ஏதோ ஒரு காரணம் இருக்கிறதென்று நிச்சியமாய் கூறலாம். அத்துடன் நோயாளியின் வாழ்க்கை முறையிலோ அல்லது அவர் நிலைமையிலோ விலக்கப்படவேண்டிய ஏதோ ஒன்று இருக்கிறது அதை விலக்கினால் நோய் முற்றிலும் நீங்கும் என்பது உறுதி.

253. எல்லா நோய்களிலும் முக்கியமாக திடீர் வகையைச்சேர்ந்த நோய்களில், நோயின் ஏற்ற இறக்கங்களை அவை எவ்வளவு கொஞ்சமாய் இருந்தாலும், நோயாளியின் மனம், முகத்தோற்றம், நடையுடை, பாவணை ஆகியவை நிச்சயமாய் நமக்கு அறிவிக்கின்றன. நோய் இறக்கம் கண்டால், அது சிறிதளவே ஆயினும் நோயாளியின் முன்னை விட அமைதியாய் உற்சாகமாய் இருப்பார். நோயில் சிறிதளவு ஏற்றம் ஏற்பட்டாலும் இதற்கு மாறான குறிகள் தோன்றும்.

254. நோயாளியின் மனம் நடை, உடை,பாவனை ஆகிய எல்லாம் “நோய் என்னை இப்படி நெருங்குகிறதே, செய்வதொன்றும் புரியவில்லையே, இப்படியா எனக்கு வர வேண்டும்” என்று கேட்பதைப் போலத் தோன்றும், இவைகளை வெறும் வார்த்தைகளால் வருணிப்பது கடினம்.கூர்ந்து கவனித்தால் தான் அறிய முடியும்.(குறைந்த அளவில் மருந்தை கொடுத்தால் தான், நோயளாளியின் மனதிலும் குணத்திலும் ஏற்படக்கூடிய முன்னேற்றக் குறிகளை நாம் உடனடியாகக் காணமுடியும்.அளவு அதிகமாய் இருந்தால் முதன் முதலில் நோயாளியின் மனமும் குணமும் பாதிக்கப்படும். ஆகையால் அவைகளில் ஏற்படக்கூடிய முன்னேற்றக்குறிகளை உடனடியாகக் காணமுடியாமல் போகிறது.

ஹோமியோபதியில் அனுபவம் இல்லாத கற்றுக்குட்டிகளும் அலோபதியிலிருந்து ஹோமியோபதிக்குத் தாவியவர்களும் அவசியமான இந்த ஹோமியோபதிச்சட்டத்தை மீறுகின்றனர். பழைய மூடநம்பிக்கை காரணமாக இந்த அலோபதி ஹோமியோபதி வைத்தியருக்கு குறைந்த அளவு மருந்துகளில் வெறுப்புத் தோன்றி அதனால் ஏற்படும் நன்மைகளை அடைய முடியாமல் போய் விடுகிறது. ஹோமியோபதியர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ள இவர்களுக்கு உரிமை யில்லை.)

255. நோயில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை எடுத்துச் சொல்ல சிலருக்குத் தெரியாது. சிலருக்கு விருப்பம் இருக்காது.ஆயினும் புதிய குறிகளின் ஏற்றம் அல்லது புதிய குறிகள் எதுவும் தோன்றாமல் பழைய குறிகளில் இறக்கம் ஆகியவைகளிலிருந்து நோயின் ஏற்ற இறக்கங்களைப் பற்றி ஏற்படும் எல்லாச் சந்தேகங்களையும் வைத்தியர் கூர்ந்து கவனித்தால் சந்தேகத்தை நீக்கிக் கொள்ளலாம்.

256. மேல் குறிப்பிட்ட இருவகை நோயாளிகள் விஷயத்தில் நோயின் ஏற்ற இறக்கங்களை திட்டமாய்த் தெரிந்து கொள்ள நாம் செய்ய வேண்டியது இதுதான். நோயாளியின் குறிகளைப் பற்றி நாம் எழுதி வைத்திருக்கும் பட்டியலை எடுத்து வைத்துக்கொண்டு அதில் கண்டுள்ள ஒவ்வொரு குறியும் தற்சமயம் எப்படி இருக்கிறதென்று கவனிக்க வேண்டும். புதுக்குறிகள் எதுவும் தோன்றாமலும் பழைய குறிகளில் ஏற்றம் இல்லாமலும் இருந்தால் நோயில் இறக்கம் கண்டிருக்கிறதென்று முடிவு செய்யலாம். இவ்விதம் இருந்தால், அத்துடன் நோயாளியின் மனதிலும் நடையுடை பாவனைகளிலும் முன்னமேயே அபிவிருத்தி ஏற்பட்டிருந்தால், கொடுக்கப்பட்ட மருந்து நோயை நிச்சயமாய்க் குறைத்திருக்கிறதென்று மதிக்கலாம்.

கொடுக்கப்பட்ட மருந்து நோய்க்கு முற்றிலும் ஏற்றதாய் இருந்த போதிலும் நோயில் இறக்கம் தோன்றவில்லை என்றால் ஒன்று நோயாளி ஏதாவது தவறு செய்திருப்பார் அல்லது மருந்தின் அளவு சற்று அதிகமாய்ப் போய் விட்டதால் அதன் நோயை அதிகரிக்கும் சக்தி அதிக நேரம் நீடித்திருக்கிறது. இவ்விரண்டைத் தவிர வேறு காரணம் எதுவும் இருக்க முடியாது.

257. தேர்ந்தெடுத்த மருந்து நோய்க்கு முற்றிலும் ஏற்றதல்ல என்பதைக் காட்டும் வகையில் நோயாளிகள் தமக்கு ஏற்பட்டுள்ள புதிய குறிகளை எடுத்துரைப்பார்கள். நல்ல பண்பு காரணமாகத் தங்கள் நோய் சௌகரியமாய் இருக்கிறதென்று அவர்கள் கூறினாலும் அதை நாம் நம்பக்கூடாது. நோயில் ஏற்ற கண்டிருக்கிறதென்றே கருத வேண்டும். தம் கருத்து உண்மையென்று விரைவிலேயே தெரிய வரும்.

258. பல சமயங்களில் பயன்பட்டிருக்கிறது நல்ல விதமாய் வேலை செய்திருக்கிறது என்ற காரணத்தை முன்னிட்டு சில மருந்துகளை மட்டும் போற்றிப் புகழும் பழக்கத்தை உண்மை வைத்தியர் விட்டு விட வேண்டும். அப்பழக்கத்தால் அம்மருந்துகளை விடச் சிறப்பாய்ப் பயன்படும் மற்ற மருந்துகளை உபயோகிக் முடியாமல் போய்விடும்.

259. ஒழுங்காகத் தேர்ந்தெடுக்கப்படாத காரணத்தால் சில மருந்துகள் ஒவ்வொரு சமயத்தில் நோய்களை நீக்குவதில் பயன் இல்லாமல் போய் இருக்கும். இது வைத்தியரின் குற்றமேயாதலால் அம்மருந்துகளின் மீதில் நம்பிக்கை இழந்து அவைகளைக் கொடுக்காமல் இருப்பது உண்மையான வைத்தியருக்கு அழகல்ல. ஒவ்வொரு நோயிலும் அதன் மொத்தக் குறிகளுக்கு முற்றிலும் ஏற்றதாய் உள்ள மருந்தே அந்நோய்க்கு சஞ்சீவி ஆதலால் மருந்துகளைத் தேர்ந்தெடுக்கும் பெரிய விஷயத்தில் எவ்விதமான அபிப்பிராயங்களுக்கும் இடமில்லை.

பின்குறிப்பு:-

பத்தியம்

260. ஹோமியோபதிச் சிகிச்சையில் மருந்துகளின் அளவு மிகக் குறைவாய் இருப்பது அவசியமாகிறது. இதனால் இம்மருந்தை கெடுக்கக்கூடிய வேற்று மருந்துப்பொருள்கள் எதுவும் நோயாளியின் உணவிலும் பானங்களிலும் இருக்க கூடாது. குறிப்பாக மதுபான வகைகள், வாத்து முட்டை, இலவங்கம், பட்டை, வாசனை உள்ள பொருள்கள், மசாலா வகைகள், அதிக காரம், உப்பு, புளிப்பு, கற்பூரம், டீ, காபி, அபினி, போன்ற அன்னிய பொருள்கள், வாசனை பொருள்கள், சென்ட், பூ வாசனை, பெயிண்ட் வாசனை, மூட்டை பூச்சி மருந்து வாடை, பெனாயில் வாடை, வாசனை சோப்பு, மிகவும் மூக்கை துளைக்கும் படியான, வயிற்றை, மனதை கெடுக்கும் படியான எந்த ஒரு பொருளும் நாம் குறிக்கு தரும் தக்கதொரு ஹோமியோபதி மருந்தை தடைசெய்ய வாய்ப்புள்ளது.

ஆகவே நாம் கொடுத்துள்ள மருந்தை மேலே கண்ட பொருள்கள் எது முறிக்கும் என்று பார்த்து அதை தவிர்த்தால் போதும். இது தான் பத்தியம். உதாரணம்:- ஹோமியோபதி மருந்து சாப்பிடும் காலத்தில் மேலே கண்ட எல்லா பொருள்களையும் நிறுத்தி வைக்கும் படி சொல்லக்கூடாது. அதையும் நாம் மனதில் நிறுத்திக்கொள்வது மிக மிக அவசியம். உடற்பயிற்சி, அதிக உழைப்பு, அதிக உணவு, சோம்பல் போன்றவைகளும் அளவாக தேவை என்கிறார்.

வள்ளலார் அவர்கள் இந்த உணவு விசயத்தை சொல்லும் போது, பிஞ்சி கத்தரிக்காய், கரிசலாங்கண்ணிகீரை முதல் கொண்டு, அரிசி முதல் அனைத்து மளிகை சாமான்களையும், பயிரிட்டு அதை எப்படி பறிப்பது, சமைப்பது, அதை எப்படி, எவ்வளவு சாப்பிட வேண்டும், சன்மார்க்கத்தின் நோக்கம் என்ன கூழ், கஞ்சி வயதானவர்களுக்கும், நோயாளிகளுக்கும் சிறந்த ஆகாரமாகிறது. அதையும் கூட அரை வயிறு சாப்பிட்டு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக விட வேண்டும் என்கிறார். மற்றும் இது உடல் உறுப்பு இழந்தவர்கள், வயதானவர்கள், அனாதைகள், நோயாளிகள் இப்படி சாப்பிட்டு விட்டு, அமைதியாக இறைவனை சிந்தித்து கொண்டிருக்கும் படி கூறுகிறார்.

வேதாத்திரி மகரிஷி இந்த இடத்தில் கூறும் போது, உனது உடலுக்கு ஒத்துக்கொள்ளும் உணவு வகைகளை சாப்பிடு, நேரம் தவறாமலும் அளவோடு சாப்பிடு, இதை ஒழுக்கம் என்கிறார். இது போல 5 ஒழுக்கங்கள் உள்ளன அதை கடைபிடித்தால் எச்சரிக்கையாக நம் உடலை பாதுகாத்து கொள்ளலாம் என்கிறார். உணவை ஜீரணிக்க உடற்பயிற்சியையும், மற்ற ஓட்டங்களை சீர்படுத்தி மனதை அமைதி படுத்திக் கொள்ள காயகல்பத்தையும், தியானத்தையும் கூறுகிறார்.

261. நோய் குணமாவதைத் தடை செய்யக் கூடிய மேலே குறிப்பிட்ட காரணங்களை கவனமாய் ஆராய்ந்து விலக்க வேண்டும் நீடிக்கும் வகை நோய்களில் இது மிகவும் முக்கியம் உணவிலும் பானங்களிலும் காணப்படும். நச்சுப்பொருள்களாலும் பிழைகளாலும் நோய் பல சமயங்களில் அதிகமாகிறது. (*; காப்பி, தேயிலைப்பானம், நோயாளியின் நிலைக்கு ஏற்றதல்லாத தாவரப் பொருள்களைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் புளிப்புச்சாராயம், வாசனையுள்ள மருந்து சரக்குகளால் தயாரிக்கப்படும் சாராயம் ஷர்பத்து எனப்படும் பானங்கள், வாசனையுள்ள சாக்லேட்டு, வாசனையுள்ள அத்தர், செண்டு முதலியவை அதிக மணமுள்ள பூக்கள், வாசனைப் பற்பொடி, ஏலம், கிராம்பு, மிளகு முதலிய வாசனைப் பொருள்களைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் உணவு, பானம், தரம் குன்றிய வெண்ணெய், பாலாடைக் கட்டி, மாமிசம் மருந்தின் குணங்களைப் பெற்றுள்ள (பன்றி, பெண்வாத்து, நீர்வாத்து ஆகிய பிராணிகளின்) மாமிசங்கள், இளங்கன்றின் மாமிசம், புளித்துப்போன உணவு, மருந்துச்செடி, கொடி, மரங்களின் காய், கனி, கிழங்கு, வேர் ஆகியவைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகள் இவைகளை நோயாயளின் அருகில் கூட கொண்டுவரக்கூடாது. உணவு, சர்க்கரை, உப்பு ஆகியவைகளை மிதமாய் உபயோகிக்க வேண்டும்.

போதை தரும் பானங்களைக் குடிப்பதும் வெப்பம் வீசும் அறைகளில் இருப்பதும் உள்சட்டை இல்லாமல் உடம்பின் மேலே நேராகப்படும் படியாகக் கம்பளி உடைகளை அணிவதும் கூடாது. அறையை மூடிவிட்டு சோம்பேறி தனமாய் உட்கார்ந்து கொண்டே இருத்தல், சவாரி செய்தல், வண்டி ஓட்டுதல், ஊஞ்சலாடுதல் முதலிய உடலுக்கு சிறிதளவே வேலை கொடுக்கும் காரியங்களில் அடிக்கடி ஈடுபடுதல், இடைவிடாமல் குழந்தைக்கு முலைப்பாலைக் கொடுத்தல் அல்லது குழந்தை முலைப்பாலைக் குடித்தல், படுக்கையில் சாய்மானமாய் படுத்து நீண்டநேரம் தூங்குவது போல் இருத்தல் சுத்தமாய் இல்லாமை அளவு கடந்த கெட்ட பழக்கங்கள், காமத்தை தூண்டும் நூல்களைப் படித்து உடல் பலவீனம் ஆகுதல், கோபம், வருத்தம், நொந்து கொள்ளுதல், விளையாட்டிலேயே எப்பொழுதும் குறியா இருத்தல், உடல், மனம் இரண்டையும் அறிவு மீறி உபயோகித்தல், சதுப்பு நிலப்பிரதேசங்களிலும் குடியிருத்தல், ஈர கசிவுள்ள அறைகள் வறுமையான வாழ்வு ஆகிய மேலுள்ள பல்வேறு காரணங்களை கூடிய வரை விலக்கினால் போதும். எல்லாவற்றையுமே விலக்கி நோயாளிக்கு சிறிதளவும் தொந்தரவுகளை அளிப்பது கூடாது.

262. நீடிக்கும் வகை நோய்களில் மருந்து கொடுத்து வரும் போது குணமேற்படுவதை தடை செய்யக்கூடிய காரணங்களை விலக்குவதும் தேவையானால் நல்லொழுக்கத்தையும் அறிவையும் வளர்க்கக் கூடிய வேலைகளில் ஈடுபடுதல், எல்லாப்பருவநிலைகளிலும் (தினந்தோறும் சிறிது தூரம் நடத்தல், உடல் உழைப்பு முதலியவை) திறந்த வெளியில் சரியான உடல் பயிற்சி செய்தல், உடலுக்குகேற்ற ஊட்டத்தை அளிக்கக் கூடிய உணவு ஆகியவைகளைப் பின்பற்றுவதும் நோய்க்கு மிகவும் ஏற்றதான் பத்தியமாகும்.

263.திடீர்வகை நோய்களில் (பைத்தியம் நீங்கலாக) மருந்தினால் விழித்துக்கொண்ட உயிர்ப்பு சக்தி தெளிவாகவும் தவறு இல்லாமலும் உடலுக்குத் தேவையானதை நோயாளிக்கு அறிவித்து விடுகிறது. ஆதலால் அவர் மிகுந்த அவசரத்துடன் வேண்டுமென்று கேட்கும் உணவுப்பொருள்களைத் தடை செய்யாமல் கொடுக்கவும். உடலுக்குத் தீங்கை விளைவிக்கக் கூடியவைகளைப் பலவந்தப்படுத்திக் கொடுக்காமலும் இருக்கும் படி நோயாளியைக் கவனிப்போருக்கும், நண்பர்களுக்கும் வைத்தியர் ஆலோசனை கூற வேண்டும்.

264. திடீர் வகை நோயினால் தாக்கப்படும் ஒரு நோயாளி தனது துன்பங்களை சிறிது நேரம் (தற்காலச் சாந்தி) அடக்கி வைக்கக் கூடிய உணவையும் பானத்தையுமே விரும்புவார் என்பதில் சந்தேகமில்லை. ஆதனால் அப்பொருள்களை மருந்துக்குணம் கொண்டவை என்று சொல்ல முடியாது. உடலின் ஏதோ ஒரு வகைத் தேவையை அவை பூர்த்தி செய்கின்றன. நோயாளியின் இவ்விருப்பதை நாம் நிறைவேற்றினால் நோய் குணமாவதில் தடை ஏற்படுமென்று நினைக்க வேண்டாம். ஹோமியோபதிச்சட்டத்துக்கு முற்றிலும் இணங்கத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கப்பட்ட மருந்து, அம்மருந்தினால் இயற்கை நோயிலிருந்து விடுதலை பெற்றுள்ள உயிர்ப்புச் சக்தி, விருப்பத்தை நிறைவேற்றியதால் நோயாளிக்கு ஏற்படும் மனத்திருப்தி ஆகிய இம்மூன்றும் சேர்ந்து தடைகளைத் தகர்த்துவிடும்.

இதைப்போலவே, திடீர் வகைநோய்களில் படுத்திருக்கும் அறையின் தட்ப வெப்ப நிலை, படுக்கை விரிப்புக்ள கதகதப்பாக அல்லது குளிர்ச்சியாக இருந்தல் ஆகிய விஷயங்களிலும் நோயாளியின் விருப்பப்படியே நடக்க வேண்டும். நோயாளி தன் மனதை அளவு மீறி அலைபாய விடக்கூடாது, உணர்ச்சிகளைக்கட்டுபடுத்தி வைத்திருக்க வேண்டும்.

தூய்மையான மருந்துகள்;

265. அப்பழுக்கற்ற, சக்தி குறையாத மருந்துகளை வைத்திருக்க வேண்டும். அவைகளின் நோய் தீர்க்கும் சக்தியில் முழு நம்பிக்கையும் வைக்கக்கூடியதாய் இருக்க வேண்டும் மருந்துகளின் தரம் உயர்ந்ததா? இல்லையா? என்பதைக் தானாகவே கண்டுபிடிக்கும் திறமை இருக்க வேண்டும். அப்பபோது தான் அவர் உண்மையான வைத்தியராவார்.

266. நோயாளிக்கு ஒவ்வொரு தடவையும் சரியான மருந்தையே கொடுக்கிறோமென்று தன் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் வைத்தியருக்கு உறுதி ஏற்பட வேண்டும்.

267. தாவர வர்க்கத்திலிருந்தும், பிராணி வர்க்கத்திலிருந்தும் கிடைக்க கூடிய பொருள்களில் அவை பச்சையாய் (சமைக்கப்படாமல், பக்குவப்படுத்தப்படாமல்) இருக்கும் போது மருந்துத்தன்மை காணப்படுகிறது. அதில் சந்தேகம் எதுவும் இல்லை.

268. பசுமை மாறாத நிலைமையில் கிடைக்கக்கூடிய தாவரங்களிலிருந்து அவைகளிலுள்ள மருந்துச் சக்தி அனைத்தையும் குன்றாமல் குறையாமல் நாம் பெறலாம்.அத்தாவரங்களை நசுக்கிச் சாறு பிழிந்தெடுத்து மருந்துச்சாற்றுடன் சம அளவில் மதுசாரத்தைக் கூட்டி அச்சேர்க்கையை மூடி உள்ள ஒரு கண்ணாடிப் பாட்டிலில் ஊற்றி 24மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். தாவரச்சாற்றிலிருந்த நார்கள் குழ குழப்புப்பொருள்கள் ஆகியவை பாட்டிலின் அடியில் தேங்கி விடும். தெளிந்து நிற்கும் திரவத்தை வடிகட்டி வேறு பாட்டிலில் வைத்துக்கொள்ளலாம். மதுசாரம் சோந்திருப்பதால் மருந்துச்சாறு புளித்துப் போகாமல் என்றென்றும் காப்பாற்றப்படுகிறது.

ஆகவே மதுசாரம் சேர்ந்த இம்மருந்துச்சாறு சூரியனின் ஒளிக்கதிர்கள் படாமல் நன்றாய் மூடியுள்ள பாட்டில்களில் வைக்கப்பட்டால் அவைகளிலுள்ள மருந்துச்சக்தி என்றென்றும் கெடாமல் இருக்கும்.

269. வெளிநாடுகளிலுள்ள தாவரங்களைப் பசுமை மாறாத நிலையில் பெறுவது கடினமாதலால் அவைகளின் பட்டை, விதை, வேர் ஆகியவை தூளாகக் கிடைக்கலாம். நம்பிக்கையின் பேரில் அவைகளை ஏற்றுக் கொள்வதோ அவைகளின் தூயதன்மையைப் பற்றிய சந்தேகம் தீருவதற்கு முன்பாக நோய் தீர்க்க உபயோகிப்பதோ கூடாது.

270. ஹோமியோபதி வைத்திய முறையில், அதற்கே உரியதான இதுவரை கையாளப்படாத ஒரு வழியில் பக்குவப்படாத மருந்துகளிலிருந்து மிக நுட்பமான சக்தியொன்று உருவாக்கப்படுகிறது. அதனால் மருந்துகளின் நோய் தீர்க்கும் சக்தி அதிகமாகிவிட்டது. மருந்துப்பொருள் சிறிது கூட இல்லையென்று கருதப்பட்ட பல பொருள்கள் இவ்வழியினால் நோய் தீர்க்கும் சிறந்த கருவிகளாய் மாறிவிட்டன.

மருந்து தயாரிக்கும் முறை.


271. மருந்துச் சாற்றையும் மதுசாரத்தையும் சம அளவில் சேர்ததுத்தயாரிக்கப்பட்ட கூட்டுத் திரவத்திலிருந்து இரண்டு சொட்டுகள் எடுத்துஅதை 98 சொட்டு மதுசாரத்துடன் கலந்து பாட்டிலை மேலும் கீழுமாய் இரண்டு தடவை குலக்கினால் மருந்தின் முதல் வீரியம் தயாராகும். இதே போல் மேலும் 29 பாட்டிலில் தயாராக்கப்பட்டிருக்கும் வீரியப்படுத்திய மருந்து ஒரு சொட்டும் சேர்த்துக் குலுக்கி வந்தால் 29வது பாட்டிலில் உள்ள மருந்தின் வீரியம் 30 ஆகும். முப்பதாவது வீரியத்திலேயே அனேகமாய் எல்லா மருந்துகளும் உபயோகப் படுத்தப்படுகின்றன.

272. உலோகங்கள், கனிமப்பொருட்கள், பெட்ரோலியம், பாஸ்பரஸ், உலர்ந்த நிலையிலேயே கிடைக்கும் செடி, கொடி, மரங்கள் முதலிய மற்ற எல்லாப் பொருள்களையும் மூன்றாவது வீரியத்தை(பால், சர்க்கரை, மாவுடன்) சேர்த்து மூன்று மணிநேரம் அறைக்க வேண்டும். பிறகு மூன்றாவது வீரியத்திலுள்ள மருந்திலருந்து ஒரு குண்டு மணி அளவு எடுத்து அதை 99பங்கு மது சாரத்துடன் சேர்த்துக்குலுக்கினால் 4வது வீரியம் தாயாராகிறது. மேலும் 26 பாட்டில்கள் எடுத்து தாவரச்சாற்றை வீரியப்படுத்தியதைப் போல் செய்தல் 26வது பாட்டிலில் 30வது வீரியம் இருக்கும்.

273,274. எந்த சமயத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளைக் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஒரு நோய்க்கு ஒரு சமயத்தில் நன்கு தெரிந்த ஒரே ஒரு மருந்தை கொடுப்பதே இயற்கையுடன் ஒட்டிய விவேகமானது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் வேலை செய்யும் பல மருந்துகள் சேர்ந்த கூட்டு மருந்தல்ல இவ்விஷயத்தில் சிறிதளவு குழப்பத்துக்கும் இடமில்லை.

275. செயற்கை நோய்களை உண்டாக்கும் குணமுள்ள பொருள்கள் (மருந்துகள்)அவைகளிலுள்ள ஹோமியோபதி சக்தியினால் இயற்கை நோய்களை வென்று, கொன்று அடியோடு அழித்து விடுகின்றன. தனியாய், வேறு மருந்துகளுடன் சேர்க்கப்படாமல் இருக்கும் ஒரு மருந்தினால் எதிர்பார்த்த அளவில் பயன் கிடைக்கும் போது பல மருந்துகளைச் சேர்த்துக்கொடுக்க வேண்டுமென்று உண்மையான வைத்தியர் எவரும் கருத மாட்டார். நோயற்ற உடலில் ஒவ்வொரு மருந்தும் தமக்கே உரியதான நோய்க்குறிகளைத்தோற்றுவிக்கின்றன என்பது உண்மையே. ஆயினும் அவைகளை ஒன்று சேர்த்துக் கொடுத்தால் ஒன்று மற்றொன்றின் வேலையை மாற்றாது அல்லது தடை செய்யாது என்று எப்படிச்சொல்ல முடியும்?

நோயின் மொத்தக் குறிகளையும் தவறில்லாமல் தெரிந்து கொண்டு ஹோமியோபதி சட்டப்படி முற்றிலும் ஏற்றதொரு மருந்தைக் கொடுத்தால் அத்தனியொரு மருந்தால் முழுநோயும் நீங்கிக்குணம் எற்படுகிறது. கொடுக்கப்பட்ட மருந்து நோய்க்கு முற்றிலும் ஏற்றதாக இல்லையென்று வைத்துக்கொண்டால் அதனால் நோயாளிக்கு எவ்வித நன்மையும் ஏற்படாது என்பது உண்மையே. ஆனால் அம்மருந்தினால் நோயாளியின் உடலில் தோன்றும் புதுக்குறிகளை கொண்டு மருந்து சோதனைக் காலத்தில் இம்மருந்தினால் நோயற்ற உடலில் அதைப்போன்ற குறிகள் ஏற்பட்டனவா என்பதைச் சரி பார்க்கலாம்.

கூட்டு மருந்துகளை கொடுக்கும் போது இந்த உண்மை நமக்கு கிடைப்பதில்லை.

மருந்தின் அளவு :-


276. தேர்தெடுக்கப்படும் ஒரு மருந்து ஹோமியோபதிச் சட்டத்துக்கு முற்றிலும் உட்பட்டது என்பதனால் மட்டும் நோய்க்குத்தகுந்தது என்று அதைக்கருத முடியாது. அம்மருந்தை கொடுக்க வேண்டிய அளவும் தகுந்ததாய் இருப்பது அவசியம். அதாவது குறைந்த அளவில் இருக்க வேண்டும். அளவு அதிகமாய் இருந்தால் நோய்க்கு உண்மையில் ஏற்றதாய் இருக்கும். மருந்துகூட உயிர்ப்புச்சக்தியை தேவைக்கு அதிகமாய் தாக்கி அதன் மூலம் இயற்கை நோயினால் வேதனைப்படும் உடலுறுப்புகளை மேலும் வேதனைக்கு உள்ளாக்குகிறது.

277. மேலுள்ள காரணத்தினால், மருந்துநோய்க்கு ஏற்றதாய் இருந்தாலும் அதிக அளவிலே கொடுக்கப்பட்டால் கெடுதலையே விளைவிக்கிறது. அளவு அதிகரிக்க அதிகரிக்க அக்கெடுதலின் அளவும் அதிகரிக்கும். ஹோமியோபதி சட்டத்துக்கு இணங்க மருந்துக்குள்ள தகுதி, வீரிய உயர்வு ஆகியவைகளை அனுசரித்துக் கெடுதல்கள் தோன்றும் நோய்க்கு எவ்விதத்திலும் பொருத்தமில்லாத அலோபதி மருந்தொன்றைக்கொடுத்தால் எவ்வளவு தீமை தோன்றுமோ அதைவிடக் கடுமையான தீமை தகுதி வாய்ந்த ஹோமியோபதி மருந்தை அதிக அளவில் கொடுப்பதால் தோன்றும் அதிக அளவு மருந்தினால் எல்லை மீறித்தூண்டப்பட்ட உயிர்ப்புச்சக்தி இயற்கை நோயினால் மிகுந்த துன்பத்தை அனுபவித்த உடல் உறுப்புகளையே மிகக் கடுமையாகத் தாக்கி விடுகிறது.

நோயாளி தற்சமயம் இய்றகை நோயிலிருந்து விடுபட்டு அளவு மீறிய மருந்தினால் தோன்றிய செயற்கை நோயின் பிடியில் சிக்கி இருக்கிறார். மருந்தின் அளவு ஏற்றதாய் இருந்திருப்பின் இத்தீமை நேரிட்டிராது.

278. தேர்தெடுக்கப்படும் மருந்து ஹோமியோபதி சட்டத்தை அனுசரித்திருக்கும் அளவை ஒட்டி அதனால் தோன்றும் நன்மைகளும் அமைகின்றன. அதேபோல அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்தை ஏற்றபடி குறைந்த அளவில் கொடுத்தால் மிருதுவாக நோயை நீக்கிக் குணம் செய்யும்.

279. நிச்சயமாகவும், மிருதுவாகவும் நோயை தாக்கிக் குணம் செய்ய மருந்தின் குறைந்த அளவு எது என்ற கேள்வி இப்பொழுது பிறக்கிறது. அதாவது ஹோமியோபதி சட்டத்துக்கு இணங்கத் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மருந்தும் எந்த குறைந்த அளவில் உபயோகப்படவேண்டும்மென்பது தெரிய வேண்டும். வெறும் கற்பனை, ஊகம் ஆகியவைகளாலோ, பகட்டான பேச்சுக்களாலோ இக்கேள்விக்கு விடை காணமுடியாது. உண்மையான பரிசோதனை கூர்ந்து கவனித்தால், சரியான அனுபவம் ஆகியவைகளை கொண்டே விடையைத் தீர்மானிக்க முடியும். ஹோமியோபதிச் சட்டப்படி நோய் நீக்க மருந்து எவ்வளவு குறைவாய் இருக்க வேண்டும்.

என்பதை உண்மையான அனுபவம் நமக்கு அறிவிக்கிறது. அலோபதி முறையில் தகுதியற்ற மருந்துகளை ஏராளமாய்க்கொடுப்பது இதற்கு நேர் விரோதமான உதாரணம் என்று நினைக்கலாம்.ஆனால் அது தவறு அலோபதி மருந்து உடலின் நோயுற்ற பகுதிகளைத் தொடுவது கிடையாது. நோயற்ற பகுதிகளையே அது தாக்குகிறது.

280. நோயினால் உடலின் முக்கிய உறுப்புகளில் அழிவு ஏற்படாமல் இருக்கும் சமயங்களிலும் (நீடிக்கும் வகை நோயாய் இருந்தாலும் சரி மிகச்சிக்கல் வாய்ந்த நோயாய் இருந்தாலும் சரி) சிகிச்சைக்காலத்தில் அன்னிய மருந்துகளை உபயோகிக்காமல் இருக்கும் போது ஏற்றதொரு ஹோமியோபதி மருந்து எவ்வளவு குறைவாய் உபயோகித்தாலும் இது இயற்கை நோயை விடப் பலம் குறைந்ததாய் மாறுவதில்லை. ஆதனால் இயற்கை நோயை வென்று கொன்று விடுகிறது. மருந்து உடலினுள் புகுந்தவுடனேயே தன் குறிகளுடன் ஒற்றுமை வாய்ந்த இயற்கை நோயின் குறிகளை அதிகரிக்கிறது. அதாவது இயற்கை நோய்க குறிகளை வெளிப்படுத்துகிறது.

இயற்கை,செயற்கை இவ்விருவகை நோய்க்குறிகளும் ஒன்றுபோல் இருப்பதால் இயற்கை நோய்க்குறிகள் அதிகரித்துவிட்டது போல் தோன்றும். இதற்கு “ஹோமியோபதி நோயேற்றம்”(Homoeopathie Aggravation) நலப்படுகிது என்பதை காட்டவே இயற்கை உள்ளிருக்கும் நோயை அதிகப்படுத்தி காட்டுகிறது.

281. மறுக்க முடியாத, அனுபவத்தின் மூலம் வகுக்கப்பட்ட இந்தத் திட்டமான அளவுப்படியே ஹோமியோபதி மருந்துகளின் அளவுகளும் வரையறுக்கப்படுகின்றன. விதிவிலக்கு என்ற சொல்லுக்கு இங்கு இடமில்லை. மருந்தைஉட்கொண்டபிறகு ஹோமியோபதி நோயேற்றம் சிறிது கூடத்தோன்ற முடியாத அளவுக்கு மருந்து குறைவாக இருக்க வேண்டும். மருந்தின் அமிர்தம் பொருள் (நோய் நீக்கும் சக்தி) எவ்வளவுக்கெவ்வளவு குறைவாய் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நல்லதாகையால் அதில் நம்பிக்கையற்றவர்களின் அபிப்பிராயங்களுக்கு நாம் செவி சாய்க்க வேண்டியதில்லை.

282. இயற்கை நோய்களுடன் ஒற்றுமைகொண்டுள்ள மருந்துகளின் ஆட்சிக்கு உட்படாத நோயாளி ஒருவர் கூட இல்லை.அதிலும் நோயின் தாக்குதலுக்கு இலக்காகி விட்ட உடலுறுப்பு நிச்சயமாய் மருந்தின் ஆட்சிக்கு பணிகிறது. ஒருவர் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும் சரி ஏற்றதொரு ஹோமியோபதி மருந்தை மிக மிக நுண்ணிய அளவில் கொடுத்தாலும் நோயுற்ற உறுப்பிலே விரும்பிய மாற்றம் விரைவிலே ஏற்படத்தான் செய்கிறது. பிறந்து 24 மணி நேரமே ஆகிய ஒரு பிறந்த குழந்தை உடலில் அம்மருந்தினால் தோன்றக்கூடிய நோய்க்குறிகள் எல்லார் உடலிலும் தோன்றத் தவறுவதில்லை. பிழையற்ற, மாறாத இந்த அத்தாட்சிக்கு எதிராய்க் கூறப்படும் கற்பனையான சந்தேகங்களைக் கண்டு நாம் நகைக்கத் தான் வேண்டும்.

283. மருந்து மிக மிகக் குறைந்த அளவில் இருந்தால் அதனால் தோன்றும் ஹோமியோபதியில் நோயேற்றம் அல்பமாய் இருக்க முடியும். அளவில் குறைவாய் இருந்த போதிலும் இயற்கை நோய்க்குறிகளை பெரும்பாலும் ஒத்துள்ள செயற்கை நோய்க்குறிகளை உண்டாக்கும் வல்லமை மருந்துக்கு இருக்கிறது. இயற்கை நோயினால் ஏற்கனவே தாக்கப்பட்டுள்ள வேதனைக்கு உள்ளாக்கியுள்ள உடலுறுப்புக்களையே மருந்தும் தாக்குகிறது. அதனால் அவ்வுறுப்புக்களை ஆண்டு வரும் உயிர்ப்புச்சக்தியும் முன்பிருந்த இயற்கை நோயைவிடப் பலம் பொருந்திய செயற்கை நோயினால் மாற்றப்படுகிறது. இதனால் உடலில் முதலிலிருந்த இயற்கை நோய் அகன்று புதிய செயற்கை நோய் முளைக்கிறது.

கொடுக்கப்படும் மருந்தின் அளவு மிகக் குறைவாய் இருப்பதால் நோயற்ற இயற்கை நிலையை அடையப் பாடுபடும் உயிர்ப்புச்சக்தியினால் அது மிக விரைவில் அழிக்கப்படுகிறது. ஆகவே (நோய் தீடீர் வகையைச் சேர்ந்ததாக இருந்தால்) மிக விரைவில் நோய் நீங்கிப் பூரண ஆரோக்கியம் தோன்றுகிறது.

284. ஏற்றதெனத் தேர்ந்தெடுத்த மருந்தை தன்னிடம் சிகிச்சைக்கு வந்துள்ள இயற்கை நோயை அழிப்பதற்கு வேண்டிய மட்டும் குறைந்த வீரிய அளவில் கொடுப்பதின் மூலமாக ஒருவேளை அம்மருந்து நோய்க்கு ஏற்றதாய் இல்லாவிட்டால், அப்போது அதன் அளவு குறைவாய் இருந்தால் ஏற்படக்கூடிய கேடுகள் கடுமையாக இருக்காது. அவைகளை உடலின் தற்காப்புச் சக்திகள் அழித்து விடும் நாமும் தகுதி வாய்ந்த வேறு மருந்தைத் தேடிக்கொடுத்து அவைகளை நீக்கலாம் இம்மருந்தின் அளவும் குறைவாய்த்தான் இருக்க வேண்டுமென்று கூற வேண்டுமா.

285. ஹோமியோபதியில் மருந்துகளுடன் தண்ணீர் அல்லது மதுசாரம் சேர்த்து வீரியம் பெருக்கப்படுகிறது. இவ்வாறான ஒரு சேர்க்கையில் காணப்படும். மருந்தின் அமிர்தம் அளவுக்குத் தக்கப்படி அதன் வேலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவது கிடையாது. உதாரணம் கூறினால் இது நன்கு விளங்கும். ஒரு மருந்தை இரண்டு சொட்டுகள் கொடுத்தால் எவ்வளவு பயன் ஏற்படுமோ அதைவிட இரண்டு மடங்குப் பயனை எட்டு சொட்டு மருந்தால் ஏற்படும், நான்கு மடங்கல்ல உதாரணமும் சொல்கிறேன. ஒரு சொட்டு மருந்தைப் பத்து சொட்டுத்தண்ணீருடன் கலக்கிறோம். முதல் கலவையை விடப் பத்து மடங்கு பலம் வாய்ந்தது என்று கணக்குப் போட்டுப் பார்த்தால் சரியாய் இருக்கும் ஆனால் உண்மையில் இது இரண்டு மடங்கே வலிமை உள்ளதாக இருக்கும்.

ஆகவே மருந்தின் அளவை எவ்வளவு குறைந்தாலும் அதன் வலிமை அடியோடு அழிவதில்லை.

286. மருந்தின் விகிதத்தைக் குறைப்பதினால் மருந்தின் அளவைக் குறைக்க முடியும். ஒரு வேளைக்கு ஒரு சொட்டு வீதம் மருந்தைக் கொடுப்பதற்கு பதிலாக ஒரு சொட்டு மருந்தை பலவாகப்பிரித்து கொடுக்கப்படும். இப்படி பிரித்து கொடுப்பதால் மருந்தின் சக்தி உடலிலுள்ள பெரும்பாலான நரம்புகளினுள் நுழைந்து உடல் முழுவதும் பரவுகிறது.

287. மருந்து சேர்ந்துள்ள திரவப் பொருளின் (தண்ணீர் அல்லது மது சாரம்)அளவு அதிகம் ஆக ஆக அதிலுள்ள மருந்தின் அளவில் மாறுதல் ஏற்படாத போதிலும் அதனால் ஏற்படக்கூடிய நல்விளைவுகள் அதிகமாகின்றன. ஏனென்றால் அச்சமயத்தில் மருந்து ஏராளமானஉணர்ச்சி நரம்புகளினுள்ளே நுழைய முடிகிறது. அந்நரம்புகள் மருந்தை உடனடியாக ஏற்றுக்கொள்கின்றன. ஏராளமான திரவத்துடன் மருந்தைக் கலந்தால் அதன் அமிர்த அளவு குறைகிறது. ஆதனால் அதன் நன்மையும் குறையும் என்று அறியாதோர் கருதுகின்றனர். இக்கருத்து மிகத்தவறானது உண்மைக்கு நேர் எதிராக உள்ளது. ஹோமியோபதி முறைப்படி மருந்துகளை கொடுக்கும் விஷயத்திலாவது இக்கருத்து முற்றிலும் பிழைவாய்ந்தது.

288. அதிக அளவு தண்ணீர் அல்லது மது சாரத்துடன் கலக்க மருந்தின் சக்தி, அது கலக்கப்படும் விகித்தை அனுசரித்து மிகவும் மாறுபடும். சாதாரணமாய் செய்யப்படும். கலவையைவிட தண்ணீர் அல்லது மதுசாரத்தின் எல்லா அணுக்களிலும் மருந்தின் சக்தி ஊடுருவிச்செல்லும் படியாய் செய்யப்படும். வீரியம் விஷோக்கலவை அதிகச் சக்தியைப் பெறுகிறது. மருந்தை சேர்த்தவுடன் ஒவ்வொரு தடவையும் பாட்டிலை சில தடவை மேலும் கீழுமாய்க்குலக்கினால் தண்ணீர் அல்லது மது சாரத்துடன் அம்மருந்து நெருக்கமாய்ச்சேர்ந்து விடுகிறது.அதையே விஷோக்கலவை என்கிறேன். (Potency).

289. திரவ உருவிலுள்ள மருந்து உயிருள்ள மனித உடலிலுள் ஊடுருவிச்செல்கிறது. உணர்ச்சியை கிரகிக்கும் நரம்புகளின் மீது மருந்து பட்டவுடன் நினைக்க முடியாத அளவு வேகத்தில் உடலுறுப்புகள் எல்லாவற்றிலும் பரவிவிடுகிறது. மருந்தின் இவ்வேலையைச் நுட்பமான சக்தி என்றே மதிக்க வேண்டும். இதை யாரும் எப்போதும் கருவிகள் செய்து அதை கருவிகள் மூலம் நிருபித்து காட்ட முடியாது. தொடு உணர்ச்சியுள்ள ஒவ்வொரு உடலுறுப்புக்கும் மருந்தை ஏற்றுக்கொண்டு அதன் சக்தியை மற்ற உறுப்புக்களுக்கு பரவச் செய்யும் வல்லமை உண்டு. வயிற்றுடன் (உணவுப்பை) நாக்கு, வாய் ஆகிய உறுப்புக்கள் மருந்தின் சக்தியை மிக விரைவில் ஏற்றுக்கொள்கின்றன. இவைகளைப்போலவே மூக்கின் உட்புறம், மலப்பை, பிறப்பு உறுப்புக்கள் ஆகியவைகளும் உணர்ச்சியுள்ள மற்ற எல்லா உடல் பகுதிகளும் மருந்தின் சக்தியை விரைவில் எடுத்து செல்கின்றது. புலன் உணர்ச்சிகளை இழந்துவிட்ட உறுப்புக்களை கூட உதாரணமாக சுவையறியும் சக்தியை இழந்த நாக்கு முகரும் சக்தியை இழந்த மூக்கு மருந்தின் சக்தி முதலில் அவ்வுறுப்புக்களை தொடுமானால் உடலின் மற்ற எந்த உறுப்புக்கும் தாழ்ந்து விடாமல் மருந்தின் சக்தியை உடல் முழுவதும் பரவச் செய்கின்றன. உடலின் வெளிப்புறம் இருவகைத்தோல்களால் மூடப்பட்டுள்ளது. ஆயினும் மருந்தின் சக்திக்கு (விசேஷமாகத் திரவ உருவிலுள்ள மருந்து) அதுவும் உட்படத்தான் செய்கிறது. வெளிப்புறத்தில் அதிக உணர்ச்சியுள்ள பகுதிகள் அதிகமாகவும் உணர்ச்சி குறைவாயுள்ளவை குறைவாகவும் மருந்தின் சக்திக்கு உட்படுகின்றன.

மனோவசியக்கலை :-290. உயிர்களை வசியம் செய்யும் கலைக்கு மெஸ்மரிஸம் என்று பெயர். (மெஸ்மர் என்பவர் முதன் முதலில் இக்கலையைக் கண்டுபிடித்தார். ஆகவே அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் இதை மெஸ்மெரிஸம் என்றும் அழைக்கலாம்.) மற்ற எல்லா வைத்திய முறைகளுக்கும் சிகிச்சை செய்யும் விஷயத்தில் அதிக வேறுபாடுகள் இருக்கின்றன. நல்லெண்ணமுள்ள ஒருவர் தன் மனோசக்தியை ஒன்று திரட்டும் போது அவரை நெருங்கி நிற்கும் நோயாளியின் மீது அவருடைய மனோசக்தி பரவி நோய் நீங்குகிறது. மனோசக்தி எவ்வாறு வேலை செய்கிறது என்ற கேள்வியை கேட்டு விடையும் கூறுகிறேன். ஹோமியோபதியில் உள்ளது போல நீக்கப்படவேண்டிய இயற்கை நோய்க்குறிகளை ஒத்த செயற்கை நோய்க்குறிகளை ஏற்படுத்தும் வல்லமை மனோசக்திக்கு இருக்கிறது.

உள்ளங்கைளை கீழ்புறமாகத் திருப்பி நோயாளியின் உச்சந்தலையிலிருந்து கால் கட்டை விரல்கள் வரை ஒரே ஒரு தடவை மட்டும் மெதுவாய்க் கொண்டு செல்ல வேண்டும். மனோசக்தியை அதிகமாய்த் திரட்டக்கூடாது. ஐ. கருப்பையிலிருந்து இரத்த பெருக்கு ஏற்படும் போதும் சாவு நெருங்கிவிட்டதென்று தோன்றும் சமயங்களிலும் இம்முறை பயனளிக்கும்.

ஐஐ. தலைப்பகுதியில் இரத்தம் அதிகமாய்க்கூடுதல், தூக்கம் வராமை, கவலையுடன் நிலை கொள்ளாமல் இருத்தல் முதலிய பல கோளாறுகளில் உயிர்ப்புச் சக்தி உடலெங்கும் ஒரே விதமாய்ப் பரவி நில்லாமல் ஒரு பகுதியில் கூடுதலாகவும் மற்றொரு பகுதியில் குறைவாகவும் இருக்கும் போது மனோசக்தியை உபயோகித்தால் உயிர்ப்புச் சக்தி உடல் முழுவதும் ஒரே சீராய் ஆகும். இச்சமயத்தில் கைகளைச்சற்று வேகமாய்க் கொண்டு செல்ல வேண்டும். ஒரே ஒரு முறைதான். ஏற்கனவே கொடுக்கப்பட்ட மருந்தின் வேலையில் தலையிடாமல் இது போன்ற காரியங்களை செய்வதற்கு மெஸ்மெரிசத்தைத் தவிர வேறு எந்த மருந்தாலும் முடியாது உடலில் குறிப்பிட்ட ஓர் இடத்தில் உயிர்ப்புச்சக்தியைச் கொண்டு போக வேண்டுமானால் மனோசக்தியைப் பலமாய் ஒன்று திரட்டி, நம் கைகளை அல்லது விரல் நுனிகளை பலவீனமான உடல் பகுதியில் வைத்திருக்க வேண்டும். உடலினுட்புறத்தே உள்ள நோய் வெளிப்புறத்தே தோற்றுவிக்கும் குறிகள் உள்ள இடமே (உதாரணமாக நாட்பட்ட ஆறாத இரணங்கள், கை கால்களில் பாரிசவாதம், குருட்டுத்தன்மை முதலியவற்றைக் கூறலாம்.) பலவீனமான பகுதியாகும். மெஸ்மெரிஸத்தின் துணை கொண்டு நோய்களைக் குணம் செய்த வரலாறுகள் எல்லாக் காலங்களிலும் நிகழ்ந்திருக்கின்றன.

இறந்தவர்களைப்போல் கிடந்தவர்களை அனுதாபமும் நல்லெண்ணமும் வீரியம் மிகுந்த உயிர்ப்புச் சக்தியும் உள்ளவர்கள் தங்கள் மனிதச்சக்தியை நோயாளிகளின் உடலில் ஊடுருவச்செய்து உயிருட்டி இருக்கின்றனர். இதுபோன்ற பல உண்மையான சம்பவங்கள் நடந்ததைச் சரித்திர வாயிலாய் அறிகிறோம். மெஸ்மெரிஸத்தைக் கையாளும் விஷயம் மேலே விவரிக்கப்பட்டுள்ள வழிகளால் நோயாளியின் உடலினுள்ளே உயிர்பபுச்சக்தி பெருகிறது.

ஆதலால் இதைப் பாஸிடிவ் (வசியம்) மெஸ்மெரிஸம்(Positive Mesmerism))என்று அழைக்கின்றனர். நெகடிவ் மெஸ்மெரிஸம் (Negativ Mesmerism)என்ற மற்றொரு வகை மெஸ்மெரிசமும் இருக்கிறது. தூங்கிக்கொண்டே நடக்கும். நோயுள்ளவர்களை அத்தூக்கத்திலிருந்து விடுபடச் செய்ய உதவும். அசைவுகளும் உடல் அசைவுகளும் இவ்வகையில் சேர்ந்தவை நல்ல உடல் வலிமை வாய்ந்தவர்களுக்கு உடலில் ஒரு சில இடங்களில் அதிக அளவில் சேர்ந்துவிட்ட உயிர்ப்புச் சக்தியை நெகடிவ் மெஸ்மெரிஸத்தின் மூலம் உடல் முழுவதும் ஒழுங்காய்ப் பரவும் படிச் செய்யலாம். விரல்களை நீட்டி கையை விரித்து நோயாளியின் உடலைத்தொடாமல் உடலுக்கும் கைக்கும் ஒரு அங்குல இடைவெளி இருக்கும் படிச்செய்து அவருடைய உச்சந்தலையிலிருந்து கால் கட்டை விரல்கள் வரை வேகமாய்க் கை கொண்டு போக வேண்டும். எவ்வளவு வேகமாய்க் கை கொண்டு போகப்படுகிறதோ அந்த அளவுக்கு உயிர்ப்புச் சக்தி பயன் தரும் வகையில் பரவும். உதாரணமாக ஒரு வித நோயும் இல்லாதிருந்த ஒரு பெண்மணிக்கு கடுமையான மன அதிர்ச்சியின் விளைவாய் மாதவிடாய்ப் போக்கு தடைப்பட்டு விட்டது. இறந்தவர் போலவே காணப்பட்டார். உயிர்ப்புச்சக்தி முழுவதும் இருதயப் பகுதியில் ஒன்று திரண்டு இருந்திருக்கலாம்.

வேகமாய்ச் செய்யப்படும் நெகடிவ் கை அசைவுகளால் உயிர்ப்பு சக்தியை உடலெங்கும் பரவச் செய்யலாம். அதன் மறுகணமே நோயாளி பிழைத்தெழுந்து விடுவார். பாஸிடிவ் கை அசைவுகளை பலமாகச்செய்ததால் சிலருக்கு சில சமயங்களில் மன ஏக்கத்துடன் தூக்கமில்லாமை, அமைதியில்லாமை முதலிய கோளாறுகள் உண்டாகலாம். அச்சமயங்களில் நெகடிவ் கை அசைவுகளை மிருதுவாகவும் மெதுவாகவும் செய்தால் அக்கோளாறுகள் குறைந்து குணம் உண்டாகும்.

குறிப்பு:-

மனோசக்தி என்ற ஒரு அற்புதமான நூல், நூலகங்களில் உள்ளது. அதில் எந்த காலத்தில் யார் யாருக்கெல்லாம், உயிர்ப்பு சக்தியை எப்படி எப்படி எல்லாம், பாய்ச்சி நோயை குணப்படுத்தினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள், அதில் 400 க்கும் மேற்பட்ட உலக ஆராய்ச்சியாளர்களது அனுபவங்கள் இடம் சுட்டி விளக்கப்பட்டுள்ளது. அதன் தொகுப்பை தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், 1. தொட்டும் (தீட்சை), 2. பார்த்தும் (கனிவான பார்வை பார்த்தும்) 3. கைகளை உயர்த்தி மற்றும் மனதார நினைந்தும், ஆற்றலை பாய்ச்சினார். ஆகவே நாம் மனோசக்தி 400 பேர்களுடைய குறிப்புகளையும், காந்த சிகிச்சை என்ற மகரிஷி அவர்களுடைய காந்த தத்துவ நூலை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

நீர்மருத்துவம்;-

291. தூய்மையான நீரில் நோயாளிகளை குளிக்க வைப்பதினால் நோயின் அடிப்படை காரணம் நீங்காவிட்டாலும் அதன் வேதனையை தணிக்க உதவும் என் நிருபிக்கப்பட்டுள்ளது.

தீடீர்வகை (Acute) நோய்களிலும், நாட்பட்ட (Chronic) நோய்களிலும் குணமடைந்து உடல்நிலை தேறி பழைய நிலைக்கு வரும் போது அவர்களுடைய உடல்நிலை, உடல் வெப்ப நிலை ஆகியவை எவ்வளவு நேரம் நீடிக்கிறது என்பதை பொறுத்து அவர்களை எத்தனை முறை குளிக்க சொல்லலாம், என்பதில் கவனம் செலுத்தினால் ஓரளவுக்கு ஹோமியோபதி முறையில் நன்மை கிடைக்கும். ஆனால் அவைகள் உண்மையில் மருந்துகள் அல்லாததால், (மிக நன்றாக செயல் பட்டதாலும்) அவைகள் உடலில் நன்மைக்குரிய மாறுதல்களையே ஏற்படுத்தும், குளிரில் உறைந்து போனவர்கள், நீரில் மூழ்கியவர்கள், மூச்சுத்திணறலினால் பாதிக்கப்பட்டவர்களின், தசைநார்கள், நரம்பு மண்டல உணர்வுகள், மருத்துப்போய் அநேகமாக இறந்தது போன்ற நிலையில் இருந்தவர்களின் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்புவது, வெது வெதுப்பான (24 டிகிரி முதல் 27 டிகிரி வரையுள்ள) வெந்நீரில் குளிக்க வைத்தால் நல்ல பலனைத் தரும். இதில் ஓரளவு மட்டுமே தணிந்தாலும், முக்கியமாக காபி குடிக்க வைத்தல், கைகளால் உடலை தேய்த்து விடுதல் போன்ற செயல்களைக் கூடவே செய்தால் போதுமான அளவு சக்தி கொடுக்கும் என நிருபிக்கப்பட்டுள்ளது.

ஹிஸ்டிரியா (மன ஏக்கத்தினால் ஏற்படும்) வலிப்பு குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய வலிப்பிகளில் எரிச்சலுறும் தன்மை மிக அதிகமாக உடலெங்கும் பரவி, சில உறுப்புகளில் அதிகமாக குவிந்திருந்தால் மேலே கூறிய(வழிகளில்)து போல செய்தால் ஹோமியோபதி முறையில் நல்ல பலன் கிடைக்கும். இந்த முறையில் நாட்பட்ட நோய்க்கு மருத்துவ சிகிச்சைப் பெற்று குணமானவர்களுக்கு உயிர் வாழத் தேவையான அளவு இருக்கக்கூடிய (உயிர் சூடு) உடல் வெப்பம் குறைந்திருந்தால் ஹோமியோபதி முறையில் சரி செய்ய 6 டிகிரி முதல் 10 டிகிரி வரையுள்ள குளிர்ந்த நீரில் குளிக்க வைப்பதால் நல்ல பலனைத் தரும்.

ஊடனடியாக (ஒரு நிமிடக் கணக்கில்) திரும்ப திரும்ப (இவ்வாறு) குளிக்க வைப்பதால் சோற்வுற்றிருந்த தசை நார்கள் நரம்புகளுக்கெல்லாம் சக்தி ஊட்டம் (முறுக்கு) ஏற்பட்டு ஓரளவு பழைய நிலைக்கு வருவார்கள். இதுப்போல நோயாளிகளின் உடல் சூடு அது எவ்வளவு நேரம் இருக்கிறது போன்றவற்றை அறிந்து கொண்டு சூட்டுடன கூடிய நீரைப் படிப்படியாக குறைத்தால் அவை நோயைத் தணிக்கும் தன்மையைத் தரும். சக்தியூட்டப்பட்ட மருந்துகளினால் தான் (உடல் சம்மந்தப்பட்ட) நோய்கள் குறையும். மேலே கூறியது போல் குளிக்க வைப்பதினால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்று பிறகு அச்சம் கொள்ளத் தேவையில்லை.நீர் மருத்துவம் பற்றி மொழி பெயர்ப்பாளர் கருத்து :-

அதாவது நீர் மருத்துவம் எத்தனை டிகிரியில் குளிக்க வேண்டும் என்று கூறுகிறார். அவை நமது உடலும், மனமும் ஏற்றுக்கொள்ளும் மிதமான சுடு நீர் அல்லது சாதா நீரை இந்த சுலோகத்தில் Dr.சாமுவேல் ஹானிமேன் அவர்கள் கூறகிறார்கள். ஆனால் இதே நூலில் உயிர்ப்பு சக்தியை அளவுக்கு அதிகமாக தூண்டும் சில மருத்துவ முறைகளை கூறி அது தவறு என்கிறார். அதாவது அதிகம் குளிரில் அடிப்பட்டவனுக்கு உயிர்ப்பு சக்தியை பலவந்தமாக தூண்ட பாதத்தில் ஒரு கோப்பையில் உள்ள வெண்ணீரில் பாதம் சூடு ஏறும் வரை உட்கார வைத்தல், மிகுந்த களைப்பு மனதாலோ, உடலாலோ அடைந்தவனுக்கு டீ, காப்பி, போதை புகையிலை, புகைப்பிடிக்க செய்வதும்.

மதுவகைகளை தந்து ஊக்கப்படுத்துவதும், மலம் சரியாக வராதவருக்கு அடிக்கடி பேதி மருந்துகளை தருதல், ஊக்கபடுத்துவதற்கு அபினி, புகையிலை குச்சி, சோப்பு, எனிமா போன்றவைகளை ஆஸன வாயில் வைத்தல், சூடு அதிகமுள்ள போது குளிர்ந்த நீர், ஐஸ்கட்டியை தலையில் வைப்பது, உடல் முழுக்க வெப்பமானவர்களுக்கு குளிர்ந்த நீரை தெளிப்பான் மூலம் தெளிப்பதும், (ளுகூசுநுAஆ BAகூழ றுஐகூழ ஊடீடுனு டீசு றுAசுஆ) அதே போல குளிர்ந்து போனவர்களை வெந்நீர் தெளிப்பான் மூலம் தெளிப்பதும், தண்ணீர் தொட்டியில், வெந்நீரிலோ, குளிர் நீரிலோ, தொட்டியில் படுக்க வைப்பதும், மற்றும் காய்ச்சல் மற்றும் உடம்பு சூடு ஏற்பட்டு விட்டால் அடிவயிற்றில் சேற்றை பூசுவதும், (மண் பற்று போடுதல்) போன்றவை தவறு என்று ஹானிமேன் அவர்கள் கூறுகிறார். காரணம் இது உயிர்ப்பு சக்தியை அதிகமாக தூண்டிவிடுவதால் உயிர் மற்றும் உடலுக்கு அது செய்ய வேண்டிய பணியில் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறுகிறார். இது போன்று இன்னும் சிலவற்றை பலவந்தமாக செய்வதால், உடலுறுப்பு பாதிப்பின் காரணமாக உயிர்ப்பு சக்தி சற்று அமைதியுடன் இருக்கிறது. இப்படி எதிர்முறை சிகிச்சைகளை செய்தால் உயிர்ப்பு சக்தி அளவுக்கு அதிகமாக தூண்டபட்டு சற்று நேரம் அமைதியாய் இருந்து முன்பைவிட பலமாக தாக்கும். (உதாரணம் உடல் குளிரும் போது, வெப்பம் செய்து விட்டால் மீண்டும் முன்பை விட உடல் குளிர்ந்து போகும் என்று கூறுகிறார்.) ஆனால் இப்போது இவரும் ஏன் நீர்குளியல் பற்றி உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அதாவது அளவாக, இதமாக நீண்ட நேரம் இல்லாமல் செய்யும் போது அமைதியுடன் இருக்கும் உயிர்ப்பு சக்தி துள்ளி எழுவதில்லை. இதமாக செய்யும் போது மனம் மகிழ்ச்சி தரும் போது, மனோ சக்தியே மருந்தாகிறது. உயிர்ப்பு சக்திக்கு அதிக வேலையில்லை.

ஆகவே இதமாக அளவாக அதே வேலையை செய்ய வேண்டும் என்று தெரிகிறது. மற்றும் இதை செய்பவர்களுக்கு உயிர்ப்பு சக்தி பாய்கிறது. இதை நல்ல மனம் கொண்டு குணம் அடைய வேண்டும் என்று கருணை மனம் கொண்டவராக இருக்க வேண்டும் என்றே மெஸ்மர் கூறுவதை அப்படியே Dr.ஹானிமேன் அவர்களும் அவர் கருத்தை ஏற்று சுருக்கமாக அடுத்த சுலோகத்தில் பாஸா தரும் முறையில் விளக்குகிறார்.