ஆர்கனான் சுலோகம்

1 முதல் 100 வரை
(1,2) The Soul Mission of the Physician is to Cure Rapidly, Gently, Permanently.

நோய் நொடி நீக்கலே வைத்தியரின் கடமை;-

(1) ஒரு உண்மையான ஹோமியோபதி மருத்துவரின் கடமையாதெனில் நோயில் துன்பப்படுகின்ற உயிர் யாராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் எதையும் எதிர்பாராமல் தியாகத்தோடு அணுகி அவரது நோயை விரைவாகவும், மிருதுவாகவும் முற்றிலும் குணப்படுத்த வேண்டும்.

உண்மை சிகிச்சையின் சிறப்புத்தன்மை :

(2). நோயற்ற நிலை விரைவில் ஏற்பட வேண்டும். நோயாளிக்கு எவ்வகையான துன்பம் சிறிதும் நேரக் கூடாது. நோய் மீண்டும் திரும்பி வராமல் வேருடன் வீழ்த்தப்பட வேண்டும். முற்றிலும் நம்பத் தகுந்த எள்ளளவும் தீங்கையும் உண்டாக்காத எளிதிலே புரிந்து கொள்ளக்கூடிய வழிமுறைகளுக்கு உட்பட்டதாய் அது இருக்க வேண்டும்.

முற்றும் அறிந்தவர் உண்மை வைத்தியர்.

(3). ஒவ்வொரு நோயிலும் என்னென்ன கோளாறுகளுக்குச் சிகிச்சை செய்ய வேண்டும் ஒவ்வொரு மருந்திலும் என்னென்ன கோளாறுகளை நீக்கும் சக்தி இருக்கிறது நோயாளியின் உடலிலுள்ள சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட கோளாறுகளையும் போக்கி நோயற்ற நிலையை மீண்டும் ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை தெளிவான கோட்பாடுகளை ஆதாரமாய் வைத்துத் தேர்தெடுப்பது எவ்விதம்ட அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துகளில் சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நோயைப் போக்க எது மிகச் சரியானது அம் மருந்தை எப்படித் தயாரிப்பது எந்த அளவில், எவ்வளவு வேளைகள், எந்தெந்த நேரங்களில் கொடுப்பது, ஒவ்வொரு நோயிலும் குணம் ஏற்படுவதைத் தடைசெய்யக் கூடியவை எவை? அத்தடைகளை நீக்கி நிரந்தர குணம் ஏற்படும்படி செய்வது எப்படி? ஆகிய எல்லா விஷயங்களையும் அறிந்தவரே உண்மையான வைத்தியர் ஆவார். (பட்டம், பதிவு, பதவி வகிப்பவர் மட்டுமே தான் மருத்துவர் என்பது அல்ல.)

வருமுன் காப்பதே வைத்தியரின் கடமை.

(4). ஆரோக்கியத்தைக் குலைத்து நோயை உண்டாக்கும் காரணங்களையும் அக்காரணங்களை நீக்கும் வகையையும் வைத்தியர் முன்பே அறிந்திருக்க வேண்டும்.

தூண்டும் காரணம் என்ன? அதன் அடிப்படை காரணம் என்ன?

(5). திடீர் நோயில் (Acuite Diseases)அதைத் தூண்டியதாகக் கருதக்கூடிய காரணத்தின் விவரங்களும் நீடித்திருக்கும் (Chronic-Diseases) நோயில் அதன் அடிப்படைக் காரணத்தை மிக தெளிவாக எடுத்துக் காட்டும் முக்கியமான குறிகளும் (அடிப்படைக் காரணம் பெரும்பாலும் மூவகை நசசுத் தன்மைகளில் ஒன்றாய் இருக்கலாம்.) நோய் தீர்க்கும் பணியில் வைத்தியருக்கு உதவியளிக்கின்றன. இவ்வாராய்ச்சிகளை நடத்தும் போது நோயாளியின் உடல் அமைப்பு, நடத்தை, அறிவு, தொழில், வாழும் விதம், வயது, ஆண:-பெண் உறவு ஆகிய விவரங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

சோரா, சிபிலிஸ், சைக்கோஸிஸ் ஆகிய மூன்று வகையான நாள்பட்ட (chronic) வியாதிகளை சுருக்கமாக காண்போம்.

1. சோராவின் குணம்:

பலவகையான வலிகள், உறுப்புகள் அழுகுதல், புத்தி பேதலித்தல், மற்ற விஷயங்களுக்கும் இதுவே தாய். (ரியாக்ஷன்)வியாதிக்கு பின்பு மறுகுறி பாய்தல் அதன் பின்பு கள்ள சதை அதாவது முண்டு முடிச்சிகள் சருமத்தில் தோன்றுதல்? பஞ்சேந்திரியங்களின் உதவியோடு இதை உணர முடியாது.அது தான் சோரா என்பதாகும். இதுதான் மாற்றி மாயை செய்கிறது.மனதை குளறுபடி செய்வது இதுவே பின்பு உடல், உறுப்பை தாக்கி விடும் மற்றும் பலவகையான மன திருப்தியின்மையும் சோராவே, சரும அரிப்பும் சோராவே.Lation Psora (மறைந்திருந்து தாக்கும் சோரா.
குறிப்பு:-
இன்றைய ஆங்கில மருத்துவ கருவிகளில் சோதனை செய்து பார்த்து விட்டு ஏதும் நோய் இல்லை என்று கூறுகிறார்களே (கருவிகளுக்கு எப்போதும் தெரியாது) அது தான் சோரா. இது அவர் அவர் செய்த பாவத்தின் பின்பு பெற்ற சாபமே தான். பெற்றோர், முன்னோர்கள் செய்த பாவமும் கருமையத்தில் பதிந்து வெளியேறி உடலை தாக்குகிறது. உடலை மட்டும் பார்த்தால் தெரியாது அல்லவா? கருமையத்தையும் தூய்மை செய்ய வேண்டும். இந்த கருமையத்தைதான் ஹோமியோபதி பார்க்கிறது.

இன்று காணப்படும் சர்க்கரை வியாதி-சோரா தான்:

சாம்பல் சாப்பிட ஆசைப்படுவது சோராவே, கற்பனையாக தெரிவதெல்லாம் சோராவின் விசமே, விருப்பமும், வெறுப்பும் சோராவே பெண்ணை விரும்புதல் சோரா, வழுக்கை, தலையில் அரிப்பு, நரை விழுதல், கண் எரிச்சல், காது இரைச்சல், மூக்கினுள் கொண கொணப்பு, எதையும் தாங்க முடியாத மனம், பலசுவை வாயில் தெரிதல் (அ) சாப்பிடும் பொருள் சுவை மாறி தெரிதல், காய்ச்சல் விடும் போது வாய் கசப்பு சோரா, வயிறு நிரம்பாத மனம், தீனி தின்பது, சித்திரவதை செய்யும் இரும்பல், நுரையீரல் தொல்லை, ஆஸதுமா, இதயத்தில் பலவகை சப்தம் ஏற்படுதல் சோராவே. இது மன அதிருப்தியின் பயனால் ஏற்படுகிறது நல்ல உருவத்தை விகாரப்படுத்துவம் சோராவே கல்லீரலையும் மற்ற உள் உறுப்புகளை கெட்டிபடுத்துவதும், வீங்க வைப்பதும் சேராவே, புற்று நோயுக்கு பெரும்பங்கு வகிப்பது சோரவே, வேகமாக பேசுவான், எழுதுவான், பலவகையான பயம், உடலில் தோன்றும் பக்கவாதம், எரிச்சல், குளிர்ச்சி, பேதி மலச்சிக்கல் சோராவே, பைத்தியம் சோரா, கள்ளச்சதை வளர்ச்சிக்கு உதவி செய்வதும் சோரா, சிபிலிஸ் உதவியின்றி வளரமுடியாது.எல்லா இடமும் பரவியிருப்பது சோராவே. நாள்பட்ட நோய்க்கு இதுவே தாய் என்று கூறப்படுகிறது.

2.சைகோஸிஸ்:

மனதில் கிரகித்து பிறகு தேகத்தில் காட்டும். இவர் மனம் பெரிய திட்டம் போடுதல், வேகம், இரகசியம் காப்பார்,தைரியசாலி, யாரையும் நம்பமாட்டார், கொலைகாரர், திருடர், பயங்கரமான மிருக புத்தி, வெட்கமில்லாதவர், எந்த நிலையிலும் பதவியிலும் இப்படி இருப்பார். நோயுற்ற உறுப்பு நிறமாற்றத்துடனும், முட்டைகோஸ் போலவும், வறண்ட வளர்ச்சியும், நாற்றமுள்ள நீர் வெளியேறும், தொள தொளப்பு சதை, ஆசனம், யோனி மானியில் கள்ள சதை வளர்ச்சி இதுவே இதன் முக்கிய குறி. இடி, புயல் மழைக்கு முன்பு எரிச்சல் அடைவார். அடிக்கடி சிறுநீர் கழிப்பார். மழை வரும் முன்பு சிறுநீர் தொல்லையும் முன்பே அதை அறிவிக்கும் கருவி எனலாம். கத்தி பேசுவான், மெதுவாக பேசுவான், மானித்தோலும், கொட்டையிலும் வீக்கங்கள், வலிகள் கருப்பை கட்டிகள், வலிகள், தொல்லைகள், இரத்தம் வடிதல் சிறுநீரகத்திலும் பல் முளைக்கும் போதும் தொல்லைகள் தலையில் மட்டும் புளிப்பு நாற்றம், குழந்தைக்கு ஏற்படும் முண்டு முடிச்சி எல்லா வகை கள்ளச்சதை வளர்ச்சிகள் சைகோஸிஸ்தான்.

3.சிபிலிஸ் :

கசகசா போல அமைப்பு உள்ள புண்கள் எங்கும் தோற்றுவிக்கும். அது அக்குள், ஆசனவாய், நிணநீர் கோளத்திலும், அதிகமாக ஆண், பெண் உறுப்பில் தாக்கும். மற்றும் தடித்த நாக்கும், வெள்ளைபடிவும், நாக்கில் பற்கள் பதிவு, சீழ் நாற்றமுள்ள வியர்வை, இரவு மு்ச்சு தொல்லை, படுக்கையின் சூட்டை கூட தாங்க முடியாது, தானாகவே சம்பாதித்து கொண்ட வியாதி, இது எந்த உறுப்பையும், (அதாவது எலும்பை, நரம்பை) எதை தொடுகிறதோ அதை கரைத்து அழித்து விடும், மூக்கு, கருப்பை, குடல் போன்ற உறுப்பில் புண், அல்சர், அழுகல், சொத்தை, குஷ்டம், மூக்கு நுனி, விரல், முட்டி முழங்கை பல் போன்ற பகுதிகளில் சொத்தை விழுவதும் ஆகும். இதற்கு இப்போது மேலே களிம்பு பூசி விடுவதால் சிபிலிஸின் வளர்ச்சியும் பயணம் நிற்காது. சிபிலிஸ தன்னை புண்ணாக வெளிப்படுத்துகிறது. இதை வெளிப்பூச்சு களிம்புகளினால் குணம் செய்வதுடன் இது இரண்டாம் கெட்ட நிலைமையாகி விடுகிறது. அது புண்ணுடன் தடிப்பும், கழலையும் உடன் சேர்ந்து கொள்ளும். இது திடீர் வகையில் இது தற்போது தோன்றியது அல்ல இவ்விடமூம் நாட்பட்ட விசமே. ஆங்கில மருந்துகளினால் எத்தனை தடைவை குணம் செய்து அடக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த கணக்கு தெரிந்தவர் தான் ஹோமியோபதி மருத்துவர். செகன்டரி சிபிலிஸ் என்பது ஏதோ ஒரு பகுதியில் மாற்றம் அடைகிறது என்பதை உணர்ந்த கொள்ளவும். இவர் மனதில் ஆழமாக எதுவும் பதியாத மந்த புத்தி, முட்டாள் போலவும் இருப்பார். படுக்கையில் கஷ்டம் தற்கொலை எண்ணம், எல்லாமே எதுவும் சுமையாகஇருப்பது போல எண்ணம், கழிவு அதிகம் அதாவது மலம், சிறுநீர், சீல், வாந்தி போன்றவைகள். ஓய்வு பொழுதில் தணிவும், குளிர்ச்சியில் தணிவும், சீழ் நாற்றம் வீசும் வியர்வை, கண்நோய் எல்லா வகையும் சிபிலிஸ் தான். வியாதியை குணப்படுத்த முடியாததும் இந்த சிபிலிஸ் தான். இதை கண்டுபிடிக்க வேண்டும்.

நோயே குழம்பிப்போவதும் சிபிலிஸ், சோராவின் பின் பலம் இதற்கு எவ்வளவு என்று பார்த்து கணிக்க வேண்டும். கடுமையான சிந்தனை செய்தால் அது சோராவாக வெளிவரும். பிறகு அதன் மீது சிபிலிஸ், சைகோஸிஸ் ஒட்டிக்கொள்ளும். இதில் எது முதலில் ஒட்டும் என்று சொல்ல முடியாது. ஆப்ரேசனை குழப்பி விடுவது இதுவே. மூன்று விசமும் சேர்ந்தால் சிக்கல்கள் அவர்களுக்கு மூட்டை மூட்டையாக கூட இருக்கலாம். ஒரு மூட்டை சிக்கல் தீர்ந்த உடன் மற்றொரு மூட்டை, மூட்டையாக சிக்கல்கள் வந்துகொண்டே இருக்கும். அப்படி வரும்போதுதான் அதை அளந்து உரிய மருந்து தர வேண்டும். அது அனுபவத்தின் வாயிலாக அறிவீர்கள். (நூல்கள் பல கற்பினும் உண்மை அனுபவ அறிவே அறிவு என்று திருக்குறள் சொல்லுகிறது.) ஒரு மருத்துவர் ஆவதற்கு நூல் அறிவை விட அனுபவ அறிவுதான் முக்கியம். எலும்பு நோய், நரம்பு நோய், பேதி, காய்ச்சல், காச நோய் போன்ற நோய்களில் இருக்கும் நோயை பார்க்காமல், அதனுள் இருக்கும் விஷேசமான குறி (அடையாளம்) அல்லது தனித்தன்மையை தான் கவனிக்க வேண்டும். அதுதான் ஹோமியோபதியில் தேர்வு செய்யப்படுவதாகும். சந்தர்ப்ப சூழ்நிலையின் தேர்வும், பொட்டன்சியும் அறிய வேண்டும். காரணத்தையும் மருந்து வீரியத்தையும் மருத்துவர்தான் அனுபவத்தில் கண்டுபிடித்து கொள்ள வேண்டும். இதன் விளக்கத்தை டாக்டர் சாமுவேல் ஹானிமேன் எழுதிய கிரானிக் டிஸிஸ் என்ற நூலில் அதை பார்த்து, படித்து தெரிந்து தெளிந்து கொள்ளவும்.

மூன்று விசமும் கலந்து தின்மம் பெற்று விட்டால் மனம் குழம்பி உடலுறுப்பில் கள்ள சதை தோன்றும். அது தான் புற்று என்று பெயர். சிபிலிஸ் மேலோங்கினால் எய்ட்ஸ். சோராவை பற்றி 8ம் பக்கம் பார்க்கவும்.

நோயின் உருவை உணரும் வழி :-

(6). ஒவ்வொரு நோயிலும் நோயாளியின் உடலிலும் மனதிலும் மாறுதல்கள் தோன்றுகின்றன. ஐம்புலன்களின் துணை கொண்டு வெளிப்படையாக அறியக்கூடிய இம்மாறுதல்களைத் தவிர வேறு எதையும் வைத்தியர் கவனிக்க வேண்டியதில்லை. முன்பிருந்த நோயற்ற நிலைக்கும் இப்பொழுது உள்ள நோயுற்ற நிலைக்கும் உள்ளமாறுதல்களைத்தான் வைத்தியர் கவனிக்க வேண்டும். இம்மாறுதல்களின் விவரங்களை நோயாளி, அவர் அருகில் இருப்போர் ஆகியோரின் வாக்கு மூலம் வைத்தியரின் கண்ணோட்டத்தின் மூலமும் அறியலாம். வெளிப்படையாகத் தெரியும், இக்குறிகள் எல்லாம் நோயின் முழு வடிவத்தை அதாவது உண்மையான உருவத்தை நமக்கு காட்டுகின்றன.

குறிப்பு:

வேறு விதமாக இன்றைய காலத்தில் நோய்களை கண்டுபிடிக்கப்படுவதற்காக பயன்படும் கருவிகள் ஓர் உண்மை ஹோமியோபதி மருத்துவருக்கு தேவையில்லை.

உயிர்ப்புச் சக்தியும் மொத்தக் குறிகளும் :

(7). ஒரு நோய் இருக்கிறது. அதை தூண்டிய காரணம் எதுவும் இல்லை. நீடிக்கச் செய்யும் காரணமும் இல்லை. நோய்க்குறிகளைத் தவிர வேறு எதுவுமே புலப்படவில்லை. மூவகை நச்சுத்தன்மைகளில் ஏதாவது இருக்கிறதோ என்று பார்த்தால் அதுவும் இல்லை. நோய் உண்டாக வேறு சில்லரைச் சந்தர்ப்பங்கள் ஏதாவது இருக்குமோ என்று தேடியதில் அவைகளும் இல்லை.
இந்நிலைமையில் நோயை நீக்கத் தக்க மருந்தைச் சுட்டிக்காட்டுவது நோயின் மொத்தக் குறிகளேயாகும். அக்குறிகளின் மூலமே ஏற்ற மருந்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உள்ளே இருக்கும் அதன் பண்பின் அளவை வலிகளின் மூலமாக வலிகளின் அளவுகளையும் எழுதி மொத்தக் குறிகளையும் தொகுத்து பகுத்து தக்கதொரு மருந்தை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு நோயிலும் இம்மொத்த குறிகளை அனுசரித்தே நோய் நீக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

(8). ஒவ்வொரு நோயிலும் வெளியிலே தென்பட்ட எல்லா நோய்குறிகளும் நீங்கிய பின் உடலினுள்ளே நோய் தங்கி இருக்கிறது என்றோ அல்லது நோயற்ற நிலையைத் தவிர வேறு ஏதோ ஒன்று இருக்கிறது என்று நினைக்கவும் முடியாது. யாராலும் இதை நிரூபிக்கவும் முடியாது.

மிக மிக நுட்பமான உயிர் சக்தியின் பணி என்னவென்றால் :-

(9). நமது பஞ்ச பூத உடலை இயக்குவது Spiritual Force என்று அழைக்கப்படும் ஜீவகாந்தம் ஆகும். இந்த ஜீவகாந்தமே உடலின் ஐந்து வித கருவிகளின் மூலமாக ஐந்து வித உணர்ச்சிகளாக அதாவது ஒளி, ஒலி, சுவை, மணம், ஊரு (தொடு உணர்வு) மற்றும் மனமாகவும் உடலை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. இதனை உயிர்சக்தி என்று கூறலாம். இதனையும் பாதுகாக்கும் ஒரு சக்தி உண்டு. அதனை ஆங்கிலத்தில் Vital Force என்றும் தமிழில் உயிரை பாதுகாக்கும் சக்தி என்றும் இன்றைய காலத்தில் தெளிந்த முதிர்ந்த ஆன்மீக தந்தையான வேதாத்திரி மகரிஷி அவர்கள் வான்காந்தம் என்று கூறுகின்றார். உடல், உயிர், உயிர்ப்புச்சக்தி மூன்றும் இணைந்ததே ஒரு முழு மனிதனாகி இயங்கி பிறவியின் பயனை அனுபவித்து தன் கடமையை தீர்க்கிறான்.

(10). உடலையும் அதன் எல்லாவித இயக்கங்களையும், சுரப்பிகளையும், மூளையின் கட்டுப்பாட்டையும், ஐந்து வித உணர்ச்சிகளையும் கட்டுபடுத்தி இயக்கி கொண்டு வருவதையும் பிறவி தொடராக செய்த பாவங்களையும் பெற்ற சாபங்களையும் செய்த புண்ணியங்களையும் பதிவு செய்து வைத்து கொண்டு மேலும் இந்த பிறவியில் மட்டும் இல்லாமல் இதற்கு முன்னதாக பெற்ற பலப்பல பிறவிகளின் பாவ புண்ணியங்களையும் பதிவு செய்து வைத்து இருப்பது எது என்றால் இந்த உயிர் என்ற ஜீவகாந்தம் தான். இது உடலின் மையப்பகுதியில் கருமையம் என்ற ஒன்றை அமைத்து அதில் பதிவு செய்து வைத்து இருக்கிறது. இங்கு நமக்கு ஒரு சந்தேகம் எழலாம். பிறவி தொடர் என்றால் பல கோடான கோடி பதிவுகள் இருக்குமே இந்த சின்ன உடலில் இது நடைபெறுமாறு என்றும் சந்தேகம் எழலாம். ஆனால் நிழல் விண்கள் என்றவற்றில் இவைகள் பதிகின்றன. இதில் எத்தனை கோடி கோடி பதிவுகள் வேண்டுமானாலும் பதியும். ஆனால் அது பெருக்காது. கணமும் ஆகாது. கண்ணிலும் காண முடியாது. கருவிகளுக்கும் தெரியாது. இன்னும் எத்தனை இலட்சம் ஆண்டுகள் ஆனாலும் இதை கண்டுபிடித்து யாராலும் எப்போதும் காட்ட முடியாது. மற்றும் அதற்கு கருவிகளும் செய்ய முடியாது. ஆனால் இறைநிலை உணர்ந்த உண்மையான ஞானிகளால் மட்டுமே சொல்லவும் உணர்த்தவும் முடியும். இதனையும் பாதுகாக்கும் ஒரு சக்திக்கு பெயர் தான் வான்காந்தம் என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகின்றார். இதை Vital Force என்று ஹானிமேன் கூறுகிறார். கண்களுக்கும் கருவிகளுக்கும் தெரியாத இந்த உயிர்ப்புச் சக்திதான் உடலின் இயக்கம் ஆகும். இது தடைப்பட்டால் மரணம் என்று ஹானிமேன் கூறுகிறார்.

இயற்கை மருத்துவ தந்தை Dr கூனே 400 வருடங்களுக்கு முன்பு தோன்றி அவர் கூறுவதாவது:- நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி நோயை குணப்படுத்தலாம் என்கிறார். அந்த தத்துவத்தில் உள்ள வித்தியாச கருத்துகளை கடைசி சுலோகத்தில் கூறுகிறார். பார்க்கவும். முதலடி படுவது உயிர்ப்புச் சக்தியே:-

(11). ஒருவர் நோய்வாய்பட்டால் முதலில் தாக்கப்படுவது அவரது உடலெங்கும் பரவி இயங்கும் உயிர்ப்புச் சக்தியே. உயிரைக் குடிக்கும் வல்லமையுள்ள ஏதோ ஒரு நோய்ப் பொருளால் தான் மிகநுட்பமான முறையில் இருக்கும் உயிர்ப்பு சக்தியில் கோளாறு அடைந்த உயிர்ப்புச் சக்தி வேதனையை அனுபவிக்கிறது. தான்அனுபவிக்கும் வேதனையை நோய் என்று (அதாவது) உடலில் நடைபெறும் வேலையை தாறுமாறாக்கி விடுகிறது. இப்படி தாறுமாறாக்கியபின்பு தான் நாம் அந்த மாற்றத்தை நோய் என்கிறோம். இப்படி செய்தது உயிர்ப்பு சக்திதான் என்பதை உணரவேண்டும். (அதற்கு உதாரணம்) கண்களுக்கு புலப்படாத உயிர்ப்பு சக்தியே தான் தன்னுடைய சக்தியை உடலின் மூலமே தானே காட்ட முடியும். ஆதலால், தான் அடைந்த (நோயை) எடுத்துக்காட்ட வைத்தியருக்கும் மற்றும் பார்ப்போருக்கும் எடுத்துக்காட்டும் விதத்தில் உடல் உறுப்புகளை தாக்கி அவ்வுறுப்புகளின் உணர்ச்சிகளிலும் வேலைகளிலும் மாறுதல்களை உண்டாக்குவது ஒன்றே உயிர்ப்பு சக்திக்கு உள்ள வழியாகிறது. வேறு எவ்வழியும் அதற்கு இல்லை.

குறிப்பு:

நோய் பொருளும் கண்களுக்கும் கருவிகளுக்கும் எப்போதும் தெரியாத ஒரு சக்தியே. அந்த சக்தி நுட்பமான உயிர்ப்புச் சக்தியைத் தான் தாக்கி குளறுபடி செய்கிறது. அதன் பின்புதான் உடலில் மாறுதல்கள் ஏற்படுகிறது. அந்த உடல் உறுப்பு மாற்றம் ஒரு கானல் நீர் போல் (மாயை). நோயின் மு்லம் அதுவல்ல. மறைபொருளாக இருக்கும் உயிர்சக்திதான், ஆனால் இன்றைய அலோபதி விஞ்ஞான கருவிகள் சோதனைகள் புறத்தோற்றம் தான், உடல் மாற்றம் தான் நோய் என்கிறது மேலும் அதுதான் நோயின் மூலம் என்று தப்பாக முடிவு செய்து தரும் மருந்துகளினால் குணம் முழுமையாகாமல் போவதற்கு அதுவே காரணமாகிறது.

(12). நச்சு பொருளால் பீடிக்கப்பட்ட உயிர்ப்புச்சக்தியே நோய்களாக உடலில் உண்டாக்குகிறது. அதனால் நோயாளியிடம் நம் புலன்களுக்கு தென்படும் நோய் குறிகள் உடலின் உட்புறத்தில் ஏற்பட்டுள்ள மாறுதலை, அதாவது உயிர்ப்பு சக்தியில் கோளாறுகள் உள்ளதையும் எடுத்துக்காட்டுகின்றன. உண்மை மருத்துவர் குறிகளின் மூலம் நோயின் முழு உருவத்தை அறியலாமென்று ஒரே வார்த்தையில் சொல்லலாம். ஆதலால் நாம் செய்யும் சிகிச்கையினால் நோய்குறிகளும் உடல் வேலைகளில் ஏற்பட்ட தடைகளும் மறைந்து விட்டன என்றால் உயிப்புச் சக்தி ஒழுங்கு நிலைமையை அடைந்துவிட்டது என்றும் உடல் முழுவதிலும் ஆரோக்கிய நிலையை ஏற்படுத்தி விட்டது என்றும் நிச்சயமாக நம்பலாம்.

அலோபதியர்களின் அறியாத் தன்மை :-

(13). இன்றைய நிலையில் ஆங்கில முறை வைத்திய வல்லுநர்கள் குறிப்பிட்ட உடல் உறுப்புக்குள் தான் நோய் புகுந்து உறுப்புக்களை பெருக்க செய்துவிட்டது, வீங்க செய்து விட்டது என்று உருப்பெருக்கியின் மூலம் உருவத்தை கண்டு கொண்டு தன் வாழ்க்கை உயர்வு, பொருள், புகழ் பெற வேண்டும் என்பதற்காக நோயுற்ற உறுப்புகளை அறுத்து எடுத்துவிடுகின்றனர். ஆனால் உயிர், உடல், உயிரை (மனம்) உயிர்ப்பிக்கும் சக்தி ஆகியவை எதனுடனும் தொடர்பு கிடையாது. நோய் என்பது உடலுக்குள்ளே ஒளிந்து கொண்டிருக்கிறது என்று அலோபதி வைத்தியர்கள் நினைக்கின்றனர். இது மிக மிகக் தவறானது. கண்ணால் கண்டதே மெய், மற்றதெல்லாம் பொய் என்று கருதும் உள்ளப்பாங்கு உள்ளவர்களாலேயே அவ்விதம் நினைக்க முடியும். அத்தகையவர்களால் தான் அலோபதி வைத்திய முறை இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பாழடிக்கப்பட்டு இன்று தீமை நிறைந்த வைத்தியமுறையாகிவிட்டது.

எல்லை இல்லாதது இறைவனின் அன்பும் கருணையும் .
வான்காந்தமும், ஜீவவகாந்தமும்

(14). குறிகளின் மூலம் தன்னைக் காண்பித்துக் கொள்ளாத நோயோ, கோளாறோ, மனித உடலில் இல்லை. அதாவது குணமாக்கப்படக் கூடிய எல்லா நோய்களும், கோளாறுகளும், குறிகளின் மூலம் கூர்ந்து கவனிக்கும் வைத்தியருக்குத் தம்மை குறிகளாக வெளிபடுத்திக் கொள்கின்றன. எல்லாம் வல்ல இறைவனின் எல்லையில்லாப் பெருங்கருணையே இதற்கு காரணம்.

குறிப்பு:

ஒருவருக்கு விதி முடிகிறது என்றால் சரியான குறியை இயற்கை காட்டாது இதுவே இயற்கையின் நியதியாகும். உயிரும் உடலும் ஒன்றே ஆகும்.

(15). உடல்; முழுக்க நிறைந்து இருப்பது ஜீவகாந்தம். அதற்கு சக்தியை கொடுப்பது வான்காந்தம்.
இந்த மிக நுட்பமான ஜீவகாந்தத்தை பிடித்துள்ளதும் கண்களுக்கும் கருவிகளுக்கும் தெரியாத ஒரு நச்சு சக்தியே ஆகும். பெற்ற சாபமும் செய்த பாவமும்தான் நச்சு (அ) பாவப்பதிவு என்றும், பிறவி தொடருக்கும் இதுவேதான் காரணம் என்று கீதையிலும் சொல்லப்படுகிறது, வேதாத்திரி மகரிஷியும் இதையேதான் தெளிவாக கூறுகிறார்.
“வான்காந்தம் ஜீவகாந்தத்தை உருவாக்கி பாதுகாக்கிறது.
ஜீவகாந்தம் பரு உடலை இயக்குகிறது.
குழப்பம் இல்லாமல் எளிதில் புரிந்து கொள்வதற்காகவே ஒவ்வொரு பொருளை இரண்டாகப் பிரிக்கிறோம்.
மிக நுட்பமாகவே நடைபெறும் வேலை.

(16). நம் உயிர்ப்புச் சக்தி நுட்பமான ஒரு பொருள். ஆதலால் உயிருக்கு தீங்கிழைக்கும் நோய்ப்பொருள்கள் நுட்பமான வழியில் தான் அதை தாக்கவோ, பிடிக்கவோ முடியும். இதைப் போலவே நோய்க்கு ஏற்றதான மருந்துகளிலுள்ள நுட்பமான சக்தியினால் தான் நோய்ப் பொருள்களை நீக்கவும் முடியும். நோயாளியின் ஆரோக்கிய நிலைமையில் ஏற்பட்டு உள்ள மாறுதல்களைக் கவனமாய் ஆராய்ந்து அதற்கேற்பக் கொடுக்கப்படும் மருந்துகளிலுள்ள நுட்பச் சக்தியை உடலெங்கும் பரவி நிற்கும் உணர்ச்சிமிக்க ஜீவகாந்தத்தின் மூலம் உயிர்ப்புச் சக்தி கிரகித்துக் கொள்கிறது. அவ்வாறு கிரகிக்கப்படும் மருந்து சக்தியினாலேயே தான் ஆரோக்கியநிலைமை திரும்ப ஏற்படக்கூடும். ஏற்படவும் செய்கிறது. சிகிக்சையின் நோக்கம் நோய்க்குறிகளை நீக்குவதேயாகும் :-

(17). ஐம்புலன்களாலும் அறியப்பட்ட எல்லா நோய்க்குறிகளும் நீங்கிக் குணம் ஏற்படும் போது அக்குறிகள் தோன்றுவதற்குக் காரணமாயிருந்த நச்சு சக்தியானது அது உண்டாக்கிய நோய்க்குறிகளால் தான் நோய் போக்கப்படுகிறது. உடலின் வெளிப்புறத்தே தென்படும் நோய்க்குறிகளை நீக்கினால் போதும், என்பது இப்பொழுது விளங்கும்.

குறிப்பு:

திருக்குறள் கூறுவதாவது

நோய்நாடி நோய் முதல் நாடி அதை தணிக்க
வாய்நாடி வாய்ப்ப செயல்.

விளக்கம்:

1. நோய் என்னவென்று தெரிந்து கொள்ளவேண்டும்.
2. நோயின் அடிப்படை காரணமும் நீடிக்க செய்கின்ற காரணமும் தெரிந்து கொள்ளவும்.
3. குணப்படுத்துவதற்காக நோயாளியின் மற்றும் மருத்துவரின் வாய்வழியாகவே செய்திகளை அறிந்து கொள்ளவும்.
4. பின்பு தக்க மருந்தும், உணவும், சாப்பிடும் அளவும், முறையும், காலமும் முறையாக்கப்பட வேண்டும் என்கிறார்.

குறிப்பு:

இன்று உலகில் அதிகம் பரவியிருக்கும் அலோபதி மருத்துவ முறை இந்த நான்கையும் கடைபிடிக்கிறதா?
வாதம், பித்தம், சிலோத்துமம் தான் அடிப்படை காரணம் என்கிறதே சித்தா அதில் மனக்குறி போகுமா?
நோய்களின் குறிகளே மருந்தை காட்டும்:-

(18). நோய்களில் அவைகளின் மொத்தக் குறிகளைத் தவிர வேறு எதையும் எவ்வழியினாலும் கண்டுபிடிக்க முடியாது என்பதை மேலுள்ள சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மை நமக்குப் போதிக்கிறது. ஆகவே ஒவ்வொரு நோய்க்கும் ஏற்ற மருந்தை தேர்தெடுக்க நமக்கு வழிகாட்டியாய் ஆதாரமாய் இருக்க வேண்டியது அதன் மொத்தக் குறிகளே என்பது மறுக்க முடியாத விஷயம் ஆகிறது. குறிப்பு ஆகவே உடலையும், உறுப்புகளையும், இரத்தம், பித்தம் போன்ற நீர் பொருட்களையும் காண உருப்பெருக்கி திரைகளும், கருவிகளும் வைத்துக் கொண்டு உறுப்புகளை மட்டுமே அறுத்து எடுத்து சரிசெய்யும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மருந்தில் உள்ள நுட்பமான சக்தி :-

(19). ஒருவரின் ஆரோக்கிய நிலைமையில் ஏற்பட்டுள்ள மாறுதல்களே நோய் என்று அழைக்கப்படுகின்றன. அம்மாறுதல்கள் நோய் குறிகளாகத் தோற்றமளிக்கின்றன. நோய்க்குறிகள் நீங்கி? ஆரோக்கிய நிலைமை மீண்டும் திரும்பினால் தான் நோய் குணமடைவது நிரந்தரமாகும். ஆகவே மருந்துகளுக்கு மனித உடலின் ஆரோக்கிய நிலைமையை மாற்றும் சக்தி இல்லாவிட்டால் அவைகளால் நோய்களை நீக்க முடியாது என்பது இதிலிருந்து தெளிவாகும். ஆரோக்கிய நிலைமையை மாற்றும் (அதாவது கெடுக்கும்) சக்தியைப் பெற்றிருக்கும் ஒரே காரணத்தினால் தான் மருந்துகளுக்கு நோய்த்தீர்க்கும் சக்தி இருக்கிறதென்றும் கூறலாம்.

(20). மனிதனின் ஆரோக்கிய நிலையை மாற்றவும் அதே சமயம் நோய்களை தீர்க்கவும் வல்லமையுள்ள சக்தி மருந்துகளினுள்ளே மறைந்து இருக்கிறது. பகுத்தறிவின் துணை கொண்டு அதை கண்டுபிடிக்க எக்காலத்திலும் முடியாது. மனிதனின் ஆரோக்கிய நிலைமையில் ஏற்படுத்தும் மாறுதல்களை அனுபவ வாயிலாகப் பார்த்தே தெளிவாக அறிய முடியும். ஆகவே மருந்தில் இருக்கும் நோய் தீர்க்கும் சக்தியை எப்போதும் யாராலும் கருவிகளை கொண்டு நிருபித்து காட்ட முடியாது.

குறிப்பு -1

வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி கடவுளை நீங்கள் காட்டமுடியுமா? இதுவரை கூறிய ஆன்மீகவாதிகள் கூறுகின்ற கருத்து குழப்பமாகவே இருக்கிறதே என்று மகரிஷியை கேட்டார்கள்.

மகரிஷியின் பதில்:

கடவுளை காண்பது மிக மிக எளிதானது. சுருக்கமாக கூறினால் கடவுளை காணபதற்கு வேறு எங்கும் போக தேவையில்லை. நமது உடலில் ஐந்து வித பௌதிகமாக இருந்து கொண்டு இயங்குகிறது அல்லவா? (மண், நீர், நெருப்பு, காற்று, விண் என்று) அதாவது

1. மண் என்ற தத்துவம் நமது உடலில் கெட்டிப் பொருளாக இருக்கிறது. அதிலிருந்து ஓர் உணர்வு தொடு உணர்வாகவும் அல்லது அழுத்தமாகவும் உணர்கிறோம் அந்த ஓர் ஆற்றல் தான் கடவுள்.
2. நீர் நமது உடலில் பித்தமாக, ரசமாக, இரத்தமாக நீர் பொருளாக இயங்குகிறது. ஒவ்வொரு வித ஆற்றலாகிறதே அது தான் கடவுள்.
3. நெருப்பு என்பது நமது உடம்பில் எப்போதும் உடல் வெப்பம் 98ு அளவாகவும் இருந்து கொண்டு உடலை இயக்குகிறது அல்லவா? அந்த ஓர் ஆற்றல் தான் கடவுள்.
4. காற்று உடலுக்கு தேவை. 10 விதமான வாயுகளாக மாறி உடலை நடத்துகிறது அல்லவா? அந்த ஓர் ஆற்றல் தான் கடவுள்.
5. விண் உடலில் மனமாகவும் அதுவே அறிவாகவும் செயல்படுகிறது, அந்த ஓர் ஆற்றல் தான் கடவுள் என்கிறார்.
மேலே கண்ட 5-வித பௌதிக பிரிவில் ஒழுங்காக இயங்கிகொண்டு இருக்கிறது. இவ்வாறு இயக்குவது தான் கடவுள். இந்த இயக்கத்தை வித்தியாசப்படுத்தி ஏற்றவும், தாழ்த்தவும் மாற்றியும் காட்டி சமன் செய்து கொள்கிறதே அதுதான் கடவுள். அதை உணரதான் முடியும். கற்சிலை, பொற்சிலை போல் காட்ட முடியாது. எல்லா உடலிலும், எல்லா பொருளிலும் தன்மைக்கு ஏற்ப இயங்கி வெளிபடுவதே அதை காந்தம் என்று சுருக்கமாக சொல்லலாம். எந்த வித கருவிகளுக்கும் கூட தெரியாத ஒரு ஆற்றல்தான் காந்தம். காந்ததத்தை தான் கடவுள் என்கிறார். அந்த காந்தத்தை இரு கூறுகளாக பிரித்து உயிருள்ள உடலில் இயங்கும் போது அதை ஜீவகாந்தம் என்றும், அதையும் பாதுகாத்து இயக்குகின்ற மற்றவற்றை வான்காந்தம் என்கிறார்.

குறிப்பு-2

ஒவ்வொரு மருந்திலும் இரண்டு குணம் உள்ளது. ஒன்று அமிர்தம். மற்றொன்று நச்சு. ஒவ்வொரு பொருளிலும் இரண்டு பண்புகள் உள்ளது. ஒன்று நன்மை செய்வது மற்றொன்று தீமை செய்வது.
உதாரணம்,
எட்டிக்காயை பச்சையாக சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்பட்டு மரணம் அடைந்து விடுவார். அதை ஹோமியோபதி முறைப்படி வீரியமாக்கி கடுமையான வயிற்று வலிக்கு தரும்போது மரணத்தை ஏற்படுத்தும் எட்டிக்காய் நச்சு இப்போது அதே வயிற்று வலிக்கு மருந்தாக பயன்படுகிறது. இதே நச்சு தான் இப்போது அமிர்தமாகிறது. இது போல எல்லா தாவரங்களிலும் இது போல் நச்சும் ஹோமியோபதி மருத்துவ முறையால்) அமிர்தமுமாகிறது. ஹோமியோபதி முறைப்படி வீரியப்படுத்தும் போது(Potency) அவைகள் அமிர்தாமகின்றன. இதேபோல் இரும்பில் செய்த கத்தி, காய்கறிகள், பழங்கள், விறகு போன்ற பலப்பல பொருட்களை வெட்ட பயன்படுகிறது. இது நன்மை. தன்னையோ பிறரையோ வெட்டப் பயன்படுத்தும் போது உயிரை போக்கும் நசசாக அதுவே மாறிவிடுகிறது.
இதே போல் ஒரு மனிதனை பிறவி தொடரும் சந்தர்ப்ப சூழ்நிலை வசதி வாய்ப்புகள் நல்லவனாகவும் (அமிர்தம்), இதே சமுதாய அமைப்பு கெட்டவனாக்கி (விஷம்) விடுகிறது. தாவரமும், மனிதனும், உலோகமும் ஒன்றுதான். ஆனால் அவற்றுள் இருவித நன்மை தீமை செய்யும் பண்புகள் உள்ளன. ஆகவே திட, திரவ, வாயு ஆகிய மூன்று பொருட்களிலும் இரண்டு இரண்டு பண்புகள் இருக்கிறது. பக்குவப்படுவதிலும், பயன்படுத்துவதிலும், சமுதாயத்தின் இன்ப துன்பத்தில் பயிற்சி பெறுவதிலுமே வித்தியாசப்படுகிறது.
இப்படி ஆயிரமாயிரம் விஷயங்களில் உள்ளதை பார்த்து தெரிந்து தெளிந்து கொள்ளுவோம். ஓரே பொருளில் உணவும், மருந்தும், அமிர்தமும், நஞ்சும், நன்மையும், தீமையும் உள்ளது. அதன் மாற்றமும் காலமும் பயன்படுத்துவதில் உள்ள மாறுதல்களை பொருத்து மாறுகிறது.

இதிகாச கதைகள் கூறுவதாவது:

அதாவது நேர்மையாக வாழ்ந்து அரச பதவியிலும் அப்படியே வாழ்ந்தால் பக்தி செய்து தியானம் செய்து ராஜசூயம் யாகம் நடத்தினால் தேவராகலாம். பின்பு தேவேந்திரன் ஆகலாம். (மேல் உலகம் தூய இடம்) தேவன்+வேந்தன் தேவருக்கே அரசன் ஆகலாம். குற்றம் பாவம் செய்யும் அதே அரசன் பாவி ஆகி நரகம்(பாதாளம்) அரக்கர்கள் வாழுகின்ற இடத்துக்கு போய்விட வேண்டும் என்று கூறுகிறது.இதே இடத்தில்

வள்ளலார் கூறுவதாவது:-

திரும்ப திரும்ப புண்ணாக்குவது அவனது மனமே (நோய்) என்று வள்ளலார் கூறுகிறார். அதே போல் மருந்தை பற்றி கூறும் போது, மருந்தோ மருந்து அருமருந்து, மனமே மருந்து, அதில் உள்ள நற்பண்புகளே மருந்து (அமிர்தம்) என்றும் கூறுகிறார். இதே இடத்தில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவது) “குற்றவாளி, பாவி என்றும் ஞானி என்றும் யாரும் இல்லை உலகிலே, குற்றத்திற்கு காரணமோ இந்த பழைய சமுதாய அமைப்பே” - என்கிறார்.

மருந்து சக்தியை மதிப்பிடும் வழி :-

(21). மருந்துகளிலுள்ள நோய் நீக்கும் சக்தி வெளிப்படையாய் தெரியவில்லை. மருந்துகளைச் சோதனை செய்யும் காலத்தில் அவைகளால் மனித உடலின் ஆரோக்கிய நிலைமையில் ஏற்படுத்தப்படும் மாறுதல்களையும், பற்பல வகைப்பட்ட நோய் குறிகளையும் தவிர அவைகள் நோய்களை தீர்க்கப் பயன்படும் என்பதற்கான அடையாளங்கள் ஒன்று கூட எவ்வளவு முயற்சி செய்தாலும் தென்படவில்லை. மருந்துகள் நோய்களை தீர்க்க உபயோகமாகின்றன என்றால் ஆரோக்கியமான நிலைமையில் மாற்றத்ததை (அதாவது) வியாதியின் குறிகளை உண்டு பன்னும் சக்தி அதற்கு இருக்கிறது என்று நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். ஆகவே மருந்துகளிலுள்ள நோய் தீர்க்கும் சக்தியை ஆரோக்கிய நிலைமையில் அது செய்யும் நோய் குறிகளை கொண்டே நாம் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. ஆகவே ஒவ்வொரு மருந்தும் எந்த எந்த நோய்களை உண்டாக்கும். அதே சமயம் நோய் தீர்க்கும் சக்தியையும் பெற்று இருக்கிறது என்பதை நாம் கவனத்தில் வைக்க வேண்டும். ஒற்றுமையும் வேற்றுமையும்.

(22). நோய்களில் நோய்களின் குறிகளைத் தவிர நீக்கப்படவேண்டிய பொருள் வேறொன்றும் தென்படவில்லை. அதே போல் ஆரோக்கியமாயுள்ள உடலில் செயற்கை நோய் குறிகளை ஏற்படுத்தவும் நோயுற்றோரின் உடலில் நோய் குறிகளை நீக்கவும் ஆன இருவகைச் சக்திகளை தவிர வேறு எதுவும் மருந்துகளில் காணப்படவில்லை. இதிலிருந்து நமக்கு இரண்டு விசயங்கள் தெரிய வருகின்றன.
முதலாவது: ஒருவிதமான செயற்கை நோயை உண்டாக்கவும் ஏற்கனவே இருந்த நோய் குறிகளை (குணம் செய்யவேண்டும் என்று நாம் நினைத்த நோயை) நீக்கவும் மருந்துகளுக்கு சக்தி இருப்பதால்தான் அவை நோய்களை நீக்குகின்றன.
இரண்டாவது: குணம் செய்யப்பட வேண்டிய நோயின் மொத்த குறிகளை நீக்க அக்குறிகளுடன் ஒற்றுமையோ அல்லது வேற்றுமையோ உள்ள செயற்கை நோய்க்குறிகளை உண்டாக்கும்சக்தியுள்ள மருந்தை தேட வேண்டும்.

குறிப்பு:

மருந்தை மனித உடலில் தந்து மருந்து நிரூபணம் செய்வதற்கு என்று உலகில் ஒரு மருந்தை தேடி எடுத்து தந்து நிரூபணம் செய்யும் போது என்ன மாதிரி குறிகள் வருமோ, அதே மாதிரி குறிகளோடு உள்ள நோயாளிக்கு தரும்போது நோய் குறி போய்விடும். பின்பு நோயும் போய்விடும். வேற்றுமை மருந்து வேதனை தரும்.

(23). வேற்றுமை மருந்துகளை கொடுத்தால் பிடிவாத குணமுள்ளஇயற்கை நோய் குணமாகி விட்டது போலச் சிறிது நேரத்துக்கு தோற்றமளித்து பிறகு முன்னை விட கடுமையான அளவில் திரும்பி வந்து விடுகிறது. சரியான முறையில் நடத்த பட்ட ஆராய்ச்சியும் தூய்மையான அனுபவமும் இது உண்மைதான் என்று உறுதி செய்கிறது. குறிப்பு: வேற்றுமை என்பது உறுப்புகளின் தடைகளை வியாதியை நீக்கும் படி செய்து வியாதியை போக்குவது. அதாவது அலோபதி முறைப்படி செய்யும் மருந்துகள் என்றும், வேறு உறுப்பை நோயை பார்த்து தருவதை குறிக்கும். ஒற்றுமை மருந்தே வேதனையை ஒழிக்கும்.

(24). வேற்றுமை மருந்துகளால் வேண்டிய பலன் விளையாது என்பது இப்பொழுது விளங்கி விட்டது. ஆகவே ஒற்றுமை குணமுடைய ஹோமியோபதி முறை மருந்துகளை தவிர உலகின் வேறு வழியில்லை. மருந்து சோதனை நடத்தப்பட்ட போது நோயற்ற உடலில் ஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு விதமான செயற்கை நோய்குறிகளை உண்டாக்குகிறது. அம்மருந்துகளில் சிகிச்சைக்கு வந்துள்ள நோயாளியின்(Totality)மொத்தக்குறிகளுடன் மிக நெருங்கிய ஒற்றுமையுள்ள செயற்கை (மருந்து) நோய் குறிகளை உண்டாக்கியது எது என்று ஆராய்ந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மருந்து தான் நோயை தீர்க்க நமக்கு இருக்கும் ஒரே வழியாகும்.

(25). அம்மருந்து தகுந்த வீரியத்தில் கொடுக்கப்பட்டால் நோயின் மொத்தக்குறிகளும் விரைவில் நீங்கி ஒழுங்காய் வேரோடு அவைகளை வீழ்தப்படுகின்றன. அதாவது நோய் முழுவதும் நீங்கி நோயற்ற நிலைக்கு உடலை மீட்கப்படுகிறது. இதை போலவே செயற்கை நோய்குறிகளை நோயற்ற உடலில் உண்டாக்கும் மருந்துகள் யாவும் ஒற்றுமையுள்ள இயற்கை நோய்களை குறிகளை மிச்சம் மீதி வைக்காமல் முழுவதையும் போக்கி விடுகிறது. இதில் விதி விலக்கு ஏதுமில்லை. இயற்கையோடு ஒட்டியது ஹோமியோபதி சட்டமே இதற்கு காரணம். அக்காரணத்தை முற்றும் உணர்நதவர் ஒருவரும் இதுவரை இல்லை. இருளில் இருந்த இயற்கையின் மருத்துவ சட்டம் இதுவே.

(26). உயிருள்ள ஒரு உடலில் சூட்சும (மறைமுகமான) உருவில் இருக்கும் ஓர் இயற்கை நோய் பொருள், அதனினும் வலிமை மிகுந்த இனத்தால் மாறுபட்டாலும் அதன் செயலிலே ஒற்றுமையுள்ள மற்றொரு சூட்சும பொருளால் நிரந்தரமாய் அழிக்கப்படுகிறது. குறிப்பு: தாவரமோ உலோகமோ ரசாயனமோ இப்படி உலகில் எதிலிருந்து மருந்து எடுத்து மனித உடலில் சோதனை செய்து பார்க்கும் போது கிடைக்கும் குறியே தான் தக்க நோயிக்கு தரும் போது நோய்குறிகளை போக்கிவிடும்.

(27). இயற்கை நோய்குறிகளுடன் ஒற்றுமையாய் இருப்பதுடன் அவைகளை விட அதிகமான வலிமையும் பெற்றிருப்பதாலேயே மருந்துகளுக்கு நோய் தீர்க்கும் சக்தி ஏற்பட்டிருக்கிறது. ஆதலால் இயற்கை நோய்க்குறிகளுடன் மிக நெருங்கிய ஒற்றுமையாய் உள்ள செயற்கை நோய்க்குறிகளை (நோயற்ற மனித உடலில்) உண்டாக்கும் இயல்பும் அவ்வியற்கை நோய்களை விட அதிக வலிமை பெற்று இருப்பதாலேயே ஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு இயற்கை நோயை நிச்சயமாகவும் ஒழுங்காகவும் விரைவிலும் வேரோடும் வீழ்த்தும் என்பதை நாம் பார்க்கிறோம்.

(28). உலகில் உண்மையாக நடத்தப்படும் சோதனைகளிலும், ஆராய்ச்சிகளிலும் இவ்வகையான நோய் தீர்க்கும் சட்டம் வெளிப்படுவதால் அதன் உண்மை நமக்கு நிருபணம் ஆகிறது. எவ்விதம் நோய் தீர்க்கப்படுகிறது என்பதை அறிவியல் மற்றும் விஞ்ஞான விளக்கங்கள் நமக்கு தேவையில்லை. அதை பற்றி நமக்கு கவலையும் இல்லை. ஆயினும் கீழேயுள்ள விளக்கம் அனேகமாக சரியாக இருக்கலாம் என்று தெரிகிறது. ஏனெனில் அது அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.

குறிப்பு:

Dr. சாமுவேல் ஹானிமேன் அவர்கள் இன்றைய மருத்துவ அறிவியலில் உள்ள உடற்கூறு- மாறுபட்ட தேக கூறு அடிப்படையில் கிருமிகள், வியாதிகள் என்று கண்டு முயல், வெள்ளெலி போன்ற பாலூட்டிகளுக்கு அலோபதி மருந்துகள் கொடுத்து நிருபணம் செய்யப்படுகிறது அல்லவா அதைத்தான் அடியோடு வெறுக்கிறார். மேலும் மனித சோதனை செய்ய மனித உடம்பில் சோதிக்கும் போது அவர்கள் கூறும் கஷ்டங்களின் வெளிப்பாட்டை தான் குறி என்கிறார். பலரிடம் ஒரு மருந்தை தந்து சோதிக்கப்பட்டு பலரிடமும் வந்த ஒரே மாதிரியான (அடையாளம்) குறியை தான் மெடீரியா மெடிகாவில் (மருந்துகளின் குணப்பாடத்தில்) த்தில் உள்ளது அதை கொடுத்தால் குறி போய்விடும். பின்பு நோயும் போய்விடும். அதை விட்டு வியாதி பெயரை கிருமி பெயரை உறுப்பு மாற்றத்தை வைத்து இன்றைக்கு செய்யப்படுகிற சிகிச்சையும், மருந்தும் செய்கின்ற மிரட்டல்களும் பிதற்றல் என்கிறார்.

(29). நம் உயிர்ப்பு சக்தியின் உணர்ச்சிகளிலும் வேலைகளிலும் ஏற்படும் மாறுதல்களே நோயின் அடிப்படையாகின்றன. இயற்கை நோய் ஒன்றால் உயிர்ப்பு சக்தி பீடிக்கப்பட்டிருக்கும் போது அந்நோயின் குறிகளுடன் மிகவும் ஒற்றுமையுள்ள ஒரு மருந்தை தேர்வு செய்து கொடுத்தால் அச்சமயத்தில் என்ன நடக்கிறது, முதலில் பலவீனமான இயற்கை நோயை துரத்திவிட்டு அதற்கு பதிலாக அதை விட வலிமையுள்ள செயற்கை நோய் பொருள் (மருந்தில் உள்ள சூட்சும சக்தி) உயிர்ப்பு சக்தியை பீடிக்க ஆரம்பிக்கிறது.அதனால் உயிர்பு சக்தி துள்ளி எழுந்து தன் முழு வலிமையும் உபயோகித்து வேலை செய்யும் அவசியம் அதற்கு ஏற்படுகிறது. அதனாலும் மருந்தின் சூட்சும சக்தி சிறிது நேரமே தங்கி இருக்க முடியுமாதலாலும், முதலில் இயற்கை நோயின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட உயிர்பு சக்தி அடுத்த படியாகச் செயற்கை நோயிலிருந்து விடுபட்டு உடலின் வேலைகளை முன்புபோலவே ஒழுங்காக நடத்த ஆரம்பிக்கிறது. இதை விடச்சரியானது வேறில்லை என்று கூறத்தக்க இவ்விளக்கம் கீழுள்ளஉண்மைகளை ஆதாரமாய் கொண்டிருக்கிறது.

குறிப்பு:

ஒரு நோய் ஏற்பட்டு அதன் (இயற்கை) பலத்தால் உடல் துன்பப்படும்போது அதைவிட அதிக பலத்துடன் (செயற்கை) மருந்தை நாம் தரும் போது அது இயற்கையின் பலத்தை (நோயை) வென்றுவிடுகிறது. மருந்தின் பலம் அதிகம் என்பதால் (இயற்கை) நோயின் பலத்தைவிட அதிக பலமாக உடலை தாக்குகிறது. மருந்து செயற்கை, ஆனால் பலம் அதிகம். சிறிது நேரம் மட்டுமே உடலில் இருக்கும். அதை மருந்தின் வேகம் (AGG.,). பின்பு அது பூமி ஓடுகிற வேகத்தில் பலம் குறைந்து அது அழிந்துவிடும். பின்பு உடம்பு தூய்மையாகி விடும்.
அக்குபிரஸர்:
அக்குபங்சர் நரம்பு தடையை நீக்கும் முறை மெஸ்மெரிஸம், ஹிப்னாடிசம் போன்ற பல துறை மருத்துவம் உள்ளது. குறிப்பாக அக்குபிரஸர் வர்ம கலை உள்ளது. அதில் குறிப்பிட்ட பாயிண்டில் பிரஸர் கொடுப்பதால் உடனே வலிகளோ, பிற தொல்லைகளோ மாயமாய் மறைந்து விடுகிறது. காரணம் மருத்துவரின் உயிர் ஆற்றலும் வான்காந்த தொடர்பும் சேர்ந்து நோயாளி உடலில் உள்ள உயிர்பு சக்தி Vital Force தூண்டப்பட்டு சிறிது நேரம் மட்டும் பலன் அளிக்கிறது பிறகு அது நிரந்தரமா? ஹோமியோபதியில் ஆன்மா, உயிரில் தங்கி உள்ள (மியாசமே) குறியாக காட்டுகிறது. அந்த குறியை வேறொரு வெட்டத்தக்க ஹோமியோபதி மருந்து தரும்போது என்ன நடக்கிறது.

உதாரணம்

ஒரு முரடன் தீங்கு செய்கிறான். அதை விட பலம் வாய்ந்தவர் போலிஸ் அவர் முரடனை சுட்டு வீழ்த்துகிறார். பின்பு அமைதி. இதே இடத்தில் நமக்கு சந்தேகம் வரலாம் நோய் போகலையே என்று. ஆனால் முன்பு வந்த குறி இப்போது இல்லை. இது வேறு அதை தக்க மருந்து தந்து போக்கி கொண்டே வர வேண்டும். எவ்வளவு நாள் ஆகும் என்று நோயாளி கேட்கலாம். உண்மை என்னவென்றால் மியாசத்தின் கணம் இருக்கும் வரை தக்க குறிகளாக வரிசையாக அது வெளியே வரும். அப்போது குறிக்கு தக்க மருந்தை தரம். எவ்வளவு நாள் ஆகும் என்று கணக்கிட முடியாது. காரணம் ஒரு மனிதருக்கு மனிதர் பல ஆயிரம் மடங்கு வித்தியாசமாக இருக்கிறார்கள்.

இதே இடத்தில்
வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் போது மனிதன் இந்த பிறவியில் மட்டும் அல்ல தாய், தந்தை, தாத்தா, பாட்டி என்று பல நூறு முன் தலைமுறையினர் செய்த பாவமும் அவனுக்குள் இருக்கிறது என்கிறார். பாவப்பதிவு என்று மகரிஷி கூறுவதும், மியாசம் என்று ஹானிமேன் கூறுவதும் ஒரே பொருள் தான் சிந்தித்து முடிவு செய்யவும்.

(30). இயற்கை நோய்களை விட மருந்துகளே மனித உடலின்ஆரோக்கியத்தை கெடுக்கிறது என்று மருந்து நிரூபணத்தின் போது தெரிகிறது. ஏனெனில் இயற்கை நோய்கள் மருந்துகளால் குணம் செய்யப்படுகிறது. மற்றும் மருந்துகளின் அளவை கூட்டுவதும் குறைப்பதும் நம் கையில் இருப்பது இதற்கு ஒரு முக்கிய காரணம். பரவாயில்லை. அதனால் நாம் தப்பித்தோம். நோயின் தாக்குதல் சூழ்நிலையை பொருத்தே.

(31). மனதையும் உடலையும் தாக்கக்கூடிய நோய்ப்பொருட்கள் என்று அழைக்கப்படும் தீயசக்திக்ள் எப்பொழுதும் நம்மைச் சூழ்ந்து கொண்டே இருக்கின்றன. மேலும் இந்த பிரபஞசம் முழுவதும் சூழ்ந்திருக்கின்றன. ஆயினும் தகுந்த சூழ்நிலை இல்லாமல் (காரணங்கள்) அவை தாக்கி உடலின் ஆரோக்கியத்தை கெடுப்பதில்லை. நமது உடலின் வலிமை குறைந்து பலஹினம் ஏற்படும் போதும், தீயச்சக்தியை (மியாசம்) ஏற்றுக் கொள்ளும் உடல்வாகும் மனமும் உள்ள போதும் தான் நோய்பொருள்கள் உடலை அடைந்து ஆரோக்கியத்தை கெடுக்கின்றன. இதுவே இயற்கையின் நியதியாகும். வரையறையில்லாத மருந்தின் தாக்குதல்.

(32). மருந்துகள் என்று நாம் அழைப்பவை எது என்றால்? அதாவது செயற்கையாக நோய் குறிகளை உண்டாக்கும் தன்மையைதான் மருந்து என்கிறோம். உண்மையான மருந்துகள் ஒவ்வொன்றும் எல்லா சமயங்களிலும் எல்லா சூழ்நிலைகளிலும் உயிருள்ள எல்லா மனிதர்களிடமும் தவறாமல் வேலை செய்து மனித உடலில் தனக்கே உரியதான செயற்கை நோய்குறிகளைத் தோற்றுவிக்கிறது. மருந்தின் அளவு அதிகமாய் இருந்தால் நோய்குறிகளும் அதற்கு ஏற்ப அதிகத் தெளிவான முறையில் காட்சி அளிக்கும் இயற்கை நோய்களுக்கு இத்தகைய இயல்பு இல்லை. இதுவே இறைவனின் எல்லையற்ற கருணை தானே. (மருந்து நிரூபணம்).

குறிப்பு:

வேதாத்திரி மகரிஷி
“இன்ப ஊற்றாய் விளங்கும் இறைவா
எங்கும் எதிலும் அன்பு ஊற்றாய் விளங்கும் இறைவா” என்கிறார்.

வள்ளலாரும் “அருட்பெருஞ்ஜோதி உன் கருணைக்கு உதாரணம் காட்ட முடியாது” என்று உள்ளம் உருகி அருட்பாவில் பல பாடல்களை பாடியிருக்கிறார்.

(33). மேலேயுள்ள உண்மைக்கு இணங்க உயிருள்ள மனித உடல் இயற்கை நோய்ப்பொருள்களை விட மருந்து பொருள்களால் தான் அதிகமான அளவிலும் மிக எளிதிலும் தாக்கப்படுகிறது, என்பதை எல்லா அனுபவங்களும் மறுக்க முடியாத முறையில் மெய்ப்பிக்கின்றன. வேறு விதமாக சொல்ல வேண்டுமானால் இயற்கை நோய் பொருட்கள் ஏதோ ஒருவித கட்டுபாட்டுக்கு அடங்கியே நடந்து கொண்டு உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. மருந்து பொருள்களோ எவ்வித கட்டுபாடும் இல்லாமல் எல்லா சமயங்களிலும் சூழ்நிலைகளிலும் உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கக்கூடிய அளவிட முடியாத வல்லமையுடையதாய் இருக்கின்றன.

குறிப்பு:

ஆகவே நோய் குறிகளை நீக்கும் போது (பொடன்சி) வீரியம் பொருத்தமானதாக தேர்வு செய்ய வேண்டும் அதிக வீரியம் அதிக நேரம் உடலை நாசம் செய்து விடும் (Agg.,) நோய்களை விட மருந்து செய்யும் தீமை அதிகமாகி விடும். ஒற்றுமை இல்லையேல் ஒன்றும் பயன் இல்லை.

(34). அதிக பலம் வாய்ந்த செயற்கை நோய்களை உண்டாக்கும் வல்லமை பெற்றுள்ளன என்ற ஒரே காரணத்தால் தான், மருந்துகள் இயற்கையான நோயை நீக்குகிறது என்று எண்ண கூடாது. அத்துடன் இயற்கை நோய் குறிகளுடன் மிக நெருங்கிய நோய் குறிகளை உண்டாக்கும் வல்லமையும் மருந்துகளுக்கு இருக்கவேண்டும். அப்பொழுது தான் இயற்கை நோயினால் உயிர்பு சக்தியில் ஏற்படுத்தப்படும் எல்லாப்பிடிப்புகளையும், தொடர்புகளையும் அறுத்தெறிந்து குணம் செய்ய அவைகளால் முடியும். முதலில் தோன்றிய ஓர் இயற்கை நோயை, அதற்கடுத்ததாக வரும் மற்றொரு இயற்கை நோயினால், இரண்டாவது நோய், முதல் நோயை விட எவ்வளவு பலம் வாய்ந்ததாக இருந்தாலும், ஒற்றுமை இல்லாது போனால் நீக்க முடியாது என்பதை நாம் காண்கிறோம். அதைப்போலவே இயற்கை நோய் குறிகளுடன் ஒற்றுமை உள்ள செயற்கை நோய்குறிகளை உண்டாக்க முடியாத மருந்து எவ்வளவு பலம் பொருந்தியிருந்தாலும் இயற்கையான நோயை நீக்குவது இல்லை என்பதை அனுபவ வாயிலான உண்மையே.

குறிப்பு:

ஆகவே குறிக்கு தக்க மருந்துதான் முக்கியம். குறி மாறினால் மருந்து வேலை செய்யாது.

(35). முதலாவதாக வேற்றுமைக் குறிகளிலுள்ள இரு இயற்கை நோய்கள் ஒருவர் உடலில் சந்திக்கும் போதும், இயற்கை நோய்க்குறிகளுடன் ஒற்றுமையில்லாத அலோபதி மருந்துகளை கொடுத்து சிகிச்சை செய்யும் போதும் என்ன நேருகிறது என்பதை கவனிப்போம்.

(36). சந்திக்கும் நோய்கள் இரண்டும் சம பலம் உள்ளவைகளாய், அல்லது புதிய நோயை விடப் பழைய நோய் அதிக வலிமை வாய்ந்ததாய் இருந்தால் பழைய நோய் புதிய நோயை உடலிலே தங்க இடம் கொடுக்காமல் விரட்டி விடுகிறது. கடுமையான நீடிக்கும் நோயுள்ள ஒருவருக்கு இலையுதிர் காலங்களில் தோன்றும் வயிற்றுக் கடுப்போ அல்லது பெரிவாரியாக தோன்றும் இயல்புள்ள மற்ற நோய்களோ ஏற்படுவது கிடையாது. ஸ்கர்வி(Scurvy) உள்ளவர்களை பிளேக்கு(Plauge) தாக்குவதில்லை என்று லாரி (Dr.Larry) என்பவர் கூறுகிறார். அதே போல கரப்பான் படை உள்ளவர்களையும் பிளேக் தொற்றுவதுக் கிடையாது. ராகிடிஸ் (Rahitis) (நாய்கடி விமூம்) உள்ளவர்களின் உடலில் பெரியம்மை தடுப்பு மருந்தைக் குத்திச் செலுத்தினால் அம்மருந்து வேலை செய்வதில்லை என்று Dr..ஜென்னனர் கண்டுபிடித்திருக்கிறார். நுரையீரல் காச நோய் (T.B.) உள்ளவர்களை பெருவாரிச் ஜுரங்கள் (அவை அதிக கடுமையானதாக இல்லாவிட்டால்) தாக்குவது இல்லை என்று வானஹில்டன்ப்ரான்ட்(Van Hilden Brand) எழுதியுள்ளார். குறிப்பு: அளவிலும், தரத்திலும் குறைவாக உள்ள உணவை உட்கொள்வதால் உடலின் மேற்புறத்தில் திட்டு திட்டாக இரத்தம் குழம்பி நிற்கும் நிலைக்கு பெயர் தான் “ஸ்கர்வி”. குழந்தைப் பருவத்தில் தோன்றும் கோளாறான, எலும்பு வளர்ச்சியின்மை, கல்லீரல், மண்ணீரல் ஆகிய உறுப்புகள் சரியாக வேலை செய்யாமல் இருப்பதுமான நோய். உயிரூட்டி D (Vitamin –D) குறைவினால் தோன்றுவதாகக் கருதப்படுகிறது. ரிக்கட்ஸ் (Rickets) என்ற மற்றொரு பெயரும் உண்டு.

(37). பிடிவாத குணமும், பல வருடங்களாய் நீடித்துள்ள ஓர் இயற்கை நோய்க்கு அலோபதி முறையில் சிகிச்சை செய்தால், அதாவது அந்நோயுடன் ஒற்றுமை இல்லாத மருந்துகளை கொடுத்தால், எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் நோய் நீங்காது. இவ்விசயத்தை ஒவ்வொரு நாளும் நம் தொழிலில் கண்கூடாக காண்கிறோம்.ஆதலால் வேறு உதாரணங்கள் கூற தேவையில்லை.

(38). இரண்டாவதாக பழைய இயற்கை நோயை விட புதியதாக வரும் ஒற்றுமையில்லாத இயற்கை நோய் அதிக பலம் பொருந்தியதாக இருந்தால் என்ன நேரும் என்பதை பார்ப்போம். பழைய நோய் பலஹீனமாய் இருப்பதால் புதிய நோய் ஏற்பட்டவுடன் அது பின்னுக்கு தள்ளப்பட்டு அது செயலற்றதாக்கிவிடுகிறது. புதிய நோய் குணமான உடன் அல்லது அதன் ஆட்டம் அடங்கியவுடன் பழைய நோய் தலையை தூக்குகிறது. இதை விளக்கப் சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. கை, கால் வலிப்புள்ள இரு குழந்தைகளுக்கு தலையில் கரப்பான் படை வந்தவுடன் வலிப்பு வருவது நின்று விட்டது. ஆனால் கரப்பான் படை குணம் ஆனவுடன் பழைய படி வலிப்புகள்வர ஆரம்பித்துவிட்டன. சொறி சிரங்குகள் இருந்தவர்க்கு எலும்புறுக்கி (ஸ்கர்வி) என்னும் நோய் ஏற்பட்டு இது குணமானவுடன் மீண்டும் சருமத்தொல்லைகள் தோன்றின. மூச்சு மண்டல காச நோய் இருந்த ஒருவருக்குக் கடுமையான பெருவாரிச் ஜூரம(காய்ச்சல்) தோன்றிது. அந்த ஜூரம் இருந்த வரையில் காசநோய் கட்டி போடப்பட்டது போல் அடங்கியிருந்து. பிறகு அது சிறிது சிறிதாக வளர ஆரம்பித்தது. காசம் (அ) T.B. நோய் உள்ளவர்க்கு பைத்தியம் பிடித்தால், பைத்தியம் சரியாகும் வரை T.B. உள்ளே மறைந்திருந்து பின் மறுபடியும் தோன்றி மிகக் கடுமையாகி இறுதியில் மரணத்தில்கூட முடியும். சின்னம்மை பெரியம்மையும் சேர்ந்தாற் போல் தோன்றும் காலங்களில், ஒரு குழந்தைக்கு முதலில் சின்னம்மையும் பிறகு பெரியம்மையும் கண்டால் சின்னம்மை அடங்கி போய் பெரியம்மை குணமான பிறகே வெளிவருகிறது. பெரியம்மை தடுப்பு மருந்தை ஒருவர் உடலில் குத்திய பிறகு ஒருவருக்கு சின்னம்மை தோன்றினால் மருந்து குத்தப்பட்ட இடம் வீக்கம், வேக்காடு ஆகிய குறிகள் ஏற்பட்டிருந்தாலும், அவை அப்படியே அமுக்கப்படுகின்றன அல்லது அதிகமாகாமல் அப்படியே நிற்கின்றன. சின்னம்மை முற்றிலும் குணமடைந்து தோலுறிய ஆரம்பித்தவுடன் மருந்து குத்தப்பட்ட இடத்தில் பூரிப்பு ஏற்படும். தாடை வீக்கம் (தாளம்மை Mumps) இருந்த ஒருவருக்கு பெரியம்மைத் தடுப்பு மருந்து உடலில் குத்தி, அது பூரிக்க ஆரம்பித்தவுடன் தாடை வீக்கம் மறைந்து விட்டது. அம்மை குத்தப்பட்ட இடம் தழும்பிட்டு ஆறிய பிறகே தாடை வீக்கம் தோன்றி அதன் கெடுவுக்காலமாகிய ஏழு நாட்களுக்கு நீடித்திருந்து குணமடைந்தது. வேற்றுமை குறிகளிலுள்ள நோய்கள் அனைத்திலும் நடப்பது இதுவே. அதாவது பலமுள்ள நோய் பலமற்றதை அடக்கத்தான் செய்கிறது. குணம் செய்வது கிடையாது. தீடீர் வகை (Acute) இரு நோய்கள் சந்திக்கும் போது பல சமயங்களில் ஒன்றோடு ஒன்று கலந்து கொண்டு சிக்கலான நிலைமையை உண்டு பண்ணும் நிலைமையும் ஏற்படுவதுண்டு.

குறிப்பு:

(அலோபதி மருந்துகள் தக்க வியாதிக்கு கொடுத்தால் அடக்கத்தான் செய்யும். பின்பு அதே நோய் அல்லது வேறு பெரிய நோயாக வரும். கேட்டால் பக்க விளைவு வரும் என்பார்கள். (பக்க விளைவு என்பது அடக்கியதால் ஏற்படுவது.)

(39). இவ்விசயங்கள் அனைத்தையும் அலோபதியர்கள் அநேக நூற்றாண்டுகளாகப் பார்த்து இருக்கின்றனர். (ஏற்கனவே உடலின் உள்ள ஓர் இயற்கை நோயை ஒற்றுமையில்லாத மற்றோர் இயற்கை நோய் (இந்த புதிய நோய்) எவ்வளவு பலம் பொருந்தியதாய் இருந்தாலும் நீக்க முடியாது.) என்பதையும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள் இருந்த போதிலும் நீடித்த வகை நோய்களுக்கு அலோபதி மருந்துகளை கொண்டே சிகிச்சை செய்து வருகின்றனர். அம்மருந்துகள் எவ்வித செயற்கை நோய்களை உண்டாக்கும் என்று ஆண்டவனுக்கு தான் தெரியும். ஆயினும் ஒன்று மட்டும் நிச்சயம். அதாவது அம்மருந்துகள் இயற்கை நோயுடன் முற்றிலும் வேற்றுமையாகவேயிருக்கும். இயற்கையாக நடைபெறும் காரியங்களை கூர்ந்து கவனிக்க முடியாமல் போனாலும், செய்த சிகிச்சையால் நேரிட்ட கேடுகளைப் பார்த்த பிறகாவது தாம் சென்ற வழி தவறானது என்று அலோபதி வைத்தியர்கள் பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். (ஆங்கில டாக்டர்கள் ஏன் கற்றுக் கொள்ளவில்லை?)

குறிப்பு:

அப்படி கற்றுக்கொண்டாலும் பதவியை, பொருளை, கவுரவத்தை இழக்க வேண்டும் என்பதாலா? நீடித்த நோய் ஒன்றைக் கொடூரமான மருந்தைக் கொண்டு சிகிச்சை செய்தால், அவ்வியற்கை நோயுடன் வேற்றுமையுள்ள செயற்கை நோயொன்று உற்பத்தி செய்யப்படுகிறது என்பதையும், அம்மருந்து கொடுக்கப்பட்டு வரும் காலங்களில் இயற்கை நோய் அடக்கப்பட்டே இருக்கிறது என்பதையும், மருந்தின் கொடுமையினால் நோயாளியின் உடல் வலிமை குறைந்து, இனி மருந்து கொடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டு, அதை நிறுத்திய பின்பு அடக்கி வைக்கப்பட்ட இயற்கை நோய் திரும்பி வருகிறது (Side Affect).என்பதையும் அலோபதி வைத்தியர்களால் அறிய முடியவில்லையா? அரிப்புடன் கூடிய சரும நோய்களுக்கு கடுமையான பேதி மருந்துகளை அடிக்கடி கொடுத்து வந்தால் மிக விரைவில் சரும நோய் மறைந்து விடுகின்றன. ஆனால் செயற்கையான (நோயுடன் ஒற்றுமை இல்லாத) குடல்களின் நோயை (கடுமையான பேதியை) இனி தாங்க முடியாது என்ற நிலையில் இனி பேதி மருந்துகளை உட்கொள்ளமுடியாது என்னும் போது நோயாளியிடம் முன்பு தோன்றிய சரும நோய் தற்போது ஏற்படும். அல்லது உள்ளே இருக்கும் சோரா விஷம் ஒரு கெடுதலான குறியைத் தோற்றுவிக்கும். அதனால் தலைவலியும் திருகு வலியும் சேர்ந்து கொண்டு கடுகளவும் குறையாத பழைய நோயுடன் ஜீரணக் கோளாறும் உடல்வலிமைக் குறைவும் சேர்ந்து கொள்ளும். நீடித்த நோயை நீக்கும் நோக்கத்துடன் அலோபதி வைத்தியர்கள் நோயாளி உடலின் வெளிப்புறத்தில் (சருமத்தில்) செயற்கை புண்களை உண்டாக்கி அப்புண்களை ஆற விடாமல் செய்து வருகின்றனர். அப்படி செய்வதால் ஒரு நீடித்த வகை நோயை நீக்க முடியாது.

எப்படி என்றால் உள்ளே உள்ள நோயின் குறிகளுடன் இது வேற்றுமை குணம் கொண்டது, மாறானதும் கூட புண்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும் போது அவைகளினால் வேதனையும் அதிகரித்து விடுகிறது. வேதனை இயற்கை நோயை விட வலிமை பொருந்தியதாகவும் வேறுபட்டும் இருப்பதால் இயற்கை நோய் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் வரை அடக்கப்படலாம். அவ்வாறு நோய் அடக்கப்பட்டு இருக்கும் போது நோயாளியின் உடல் வலிமை படிப்படியாக குறைந்து விடுகிறது. சருமத்தில் செயற்கை புண்களை உண்டாக்கி ஆறவிடாமல் செய்து வந்தால், கை கால் வலிப்பு வருடக்கணக்கில் அடங்கிதான் இருக்கும். ஆனால் புண்களை ஆறும்படி விட்டவுடன் மீண்டும் கை கால் வலிப்பு தோன்றும் மற்றும் தற்போது முன்பைவிட கடுமையாகவும் தோன்றும். சொறி சிரங்குகளை அடக்க பேதி மருந்துகளை உபயோகிப்பது கை கால் வலிப்பை அடக்க சருமத்தில் செயற்கை புண்களை ஏற்படுத்தி அவைகளை ஆறவிடாமல் செய்வது ஆகிய காரியங்கள் இயற்கைக்கு மாறுபட்டவை. நோயாளியின் உடல் வலிமையை உறிஞ்சி குடிப்பவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அலோபதி முறையில் பற்பல வகைப்பட்ட நோய்களை நீக்குவதற்கு என்று தற்போது கண்ட கண்ட மருந்துகளை கலந்து கொடுக்கும் (சிரப் (அ) டானிக்) வழக்கம். மேலுள்ள இரண்டையும் விட மிக மிகக் கொடியது நோயாளியின் உடல் வலிமையை முழுதும் உறிஞ்சிவிடுகிறது. ஒரு சில நாட்களுக்கு நோயை அடக்கி வைப்பதை தவிர அவைகளால் எச்சமயத்திலும் நோய் தீர்க்கப்படுவதில்லை. அது தவிர அம்மருந்துகளை நீடித்து கொடுப்பதால் பழைய இயற்கை நோயுடன் புதிய செயற்கை நோயும் சேர்ந்து கலந்து விடுகிறது.

குறிப்பு:

தற்காலத்தில் மனதிலும், உடலிலும் இப்படி குழப்பம் ஏற்பட்ட பிறகு உடலில் எங்கு வேண்டுமானாலும் (ஜீவகாந்த சக்தி) கட்டிகளை ஏற்படுத்துகிறது. இதை தான் புற்றுநோய் என்கிறார்கள். (அதற்கு) கட்டிக்கு மருந்தும் தருகிறார்கள். சரியாகாததால், ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கிறேன் என்று கூறிக் கொண்டிருப்பதை இப்போதும் காணலாம்.

குறிப்பு:

வலிப்புக்கும் மூலநோய்க்கும் உடலில் புண்களை உண்டாக்குவது பாபிலோன் வை(பை)த்தியம். சரும நோயை மறைக்கும் பேதிமருந்தை தருவது சித்த மருத்துவமாகும்.

(40). மூன்றாவதாகப் பல காலமாய் உடலில் வேலை செய்த பிறகு புதிய நோய் (அலோபதி மருந்தால்) வேற்றுமை குணமுள்ள பழைய நோயுடன் சேர்ந்து கலப்பு நோய் ஒன்றை ஏற்படுத்துகிறது. அதன் விளைவாகப் பழைய புதிய நோய்கள் இரண்டும் நோயாளியின் உடலில் தத்தம் தகுதிக்கேற்ப உறுப்புகளை அடைந்து தனித்தனியே இருந்து வருகிறது. சிபிலிஸ் (மேககிராந்தி) நோயுள்ளவரை சோரா விஷம் தாக்குவதையும், அதே போல் சோரா விஷம் உள்ளவரை சிபிலிஸ் நோய் தாக்குவதையும் இதற்கு உதாரணங்களாய் கூறலாம். அவ்விரண்டும் ஒன்றுக்கொன்று வேற்றுமையுள்ளவை. ஆதலால் ஒன்றை மற்றொன்று நீக்காது குணமும் செய்யாது இதைச் சற்று விளக்கமாய்க் கீழே எழுதுவோம். மேகக் கிராந்தி உள்ள ஒருவர் உடலில் சோரா விஷம் அதிகரித்தவுடன், மேகக்கிராந்தி குறிகள் அடக்கப்பட்டு சோரா விஷத்தின் கூறுகளாகிய சருமக் கோளாறுகள் வெளிப்படும். ஆனால் சிறிது காலம் கழிந்தவுடன் இரு விஷங்களும் ஏறக்குறைய சம பலம் உள்ளவையாதலால் கலப்பு நோயாய் மாறிவிடும். அதாவது ஒவ்வொன்றும் தனக்கு வசதியான இடத்தை பிடித்துக் கொண்டு தனித்தனியே உடலில் குடியிருந்து கொண்டு வருகிறது. அதனால் இப்போது நோயின் அளவு அதிகமாகி குணம் செய்வது சிரமம் ஆகிவிடுகிறது.

குறிப்பு:

இதைத்தான் எய்ட்ஸ் என்கிறது அலோபதி மருத்துவ உலகம். வேற்றுமை குணமுள்ள இரு திடீர் தொற்று நோய்கள் உதாரணமாகப் பெரியம்மையும், சின்னம்மையும் ஒருவர் உடலில் சந்திக்கும் போது ஒன்றை மற்றொன்று அடக்கி செயலற்றதாகச் செய்துவிடுகிறது என்று முன்பே சொல்லியிருக்கிறேன். ஆயினும், அவை கடுமையாகவும் பெருவாரியாகவும் தோன்றும் காலங்களில் ஒன்றை மற்றொன்று அடக்குவது போய் இரண்டும் ஒரே சமயத்தில் ஒரே உடலில் கலப்பு நோயாக தோற்றமளிக்கிறது. இந்நிகழ்சிகள் மிக அபூர்மாகவே ஏற்படுவது வழக்கம். (இதைத்தான் இன்று புற்று நோய் என்று அழைக்கப்படுகிறது.)

குறிப்பு:

இவ்வாறு நோயை அப்போதைக்கு சரி செய்கிறோம் என்று அலோபதி மருந்து ஆண்டிபயாடிக் தரப்படுகிறது. அப்போதைக்கு மறைகிறது. அதனால் நாளை என்னவாகும் பாருங்கள் விபரிதம் அல்லவா ஏற்படும். ஏற்கெனவே பிறவித்தொடராக செய்த பாவம் தான் கருமையத்தில் பதிந்து வரிசையாக உடலின் பகுதியில் துன்பமாக காட்டுகிறது. இப்படி முன்பு கூறப்பட்டபடி வைத்தியம் செய்வதால் ஆன்மாவில் (கருமையத்தில்) நோயின் சுமை மேலும் அல்லவா சுமத்தப்படுகிறது.
இதே இடத்தில் மகரிஷி கூறுவதாவது.
தன் உடம்புக்கு கேடு செய்யாதே (மேலே கண்ட மருந்துகள் என்ன செய்கிறது பாருங்கள்). பிறர் உடம்புக்கு கேடு செய்யாதே (அலோபதி டாக்டர்கள் என்ன செய்யகிறார்கள் பாருங்கள்) செய்கிற பரிகாரமும் பிற்காலத்தில் பக்க விளைவாக வந்து விடுகிறது. (உடலுக்கும் உயிருக்கும் தீமை செய்யாதே. உடல் உறுப்பை அறுத்துவிடாதே. தூக்க மருந்து, வலி மருந்து தந்து உணர்ச்சியை மழுங்க செய்து உயிருக்கு கேடு செய்யாதே என்கிறார் ஹானிமேன்.)

அதாவது பாடல்:

தனக்கும், பிறருக்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும், உடலுக்கும், உயிருக்கும் தீமை செய்யாதே என்று கூறுகிறார். நன்கு இந்த இடத்தில் சிந்தித்து பாருங்கள் சிந்திக்க தெரிந்தவர்களுக்கெல்லாம் இதுவும் அதுவும் புரியும்.

(41). அலோபதி முறையில் மருந்துகளைக் கொடுத்துச் சிகிச்சை செய்வதினால் ஏற்படும் கலப்பு நோய்களைக் கணக்கிட முடியாது. இடைவிடாமல் (அலோபதி) தகுதியற்ற மருந்துகளை கொடுப்பதால் அம்மருந்துகளின் தன்மைக்கு இணங்க பழைய இயற்கை நோயுடன் மிகக் கொடிய, புதிய செயற்கை நோய் ஒன்று இப்போது சேர்க்கப்படுகிறது. அவ்வியற்கை, செயற்கை நோய்கள் ஒன்று கூடி ஒரு கலப்பு நோயாக இப்போது மாறுகிறது. ஒன்றுக்கு இரண்டாகவும் சிக்கலாகியதால் தற்போது நிலைமை மோசமாகி குணமாவது மிக மிக கடினமாகி விடும். பறங்கி புண் உள்ள மேக்கிராந்தி நோயுடன் சோரா விஷ ஆதிக்கமோ அல்லது கெட்ட சதை வளர்ச்சி செய்யும் மேக வெட்டையோ சேரும் போது அந்நிலைமைக்கு தகுதியற்ற அலோபதியில் பாதரசம் கலந்த மருந்துகளை அதிக நாட்களுக்கு, நீடித்து கொடுத்து சிகிச்சை செய்தால் நோய் குணமாவது இல்லை என்பது ஒருபுறம் இருக்க, பாதரச விஷத்தனால் தோன்றும் புதிய செயற்கை நோயும், பறங்கி புண்ணுக்கு பதிலாக வேறு ஏதோ ஒரு பயங்கரமான நோயும் ஒன்று சேர்ந்து உடலை நாசம் செய்துவிடுகின்றன. இப்போது மிக மிக சிரமப்பட்டுதான் நோயாளியின் ஆரோக்கிய நிலைமையை மீட்க முடியும்.

(42). சிற்சில சமயங்களில் ஒருவர் உடலில் இரண்டு அல்லது மூன்று இயற்கை நோய்களை ஒரே நேரத்தில் தோன்ற இயற்கையே அனுமதிப்பதை மேலே பார்த்தோம். ஆனால் வேற்றுமை குணமுள்ள நோய்கள் தான் அவ்வாறு தோன்றுகின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும் ஆதலால் அவை ஒன்றை ஒன்று நீக்கவோ, குணம் செய்யவோ முடியாது. ஆகவே அவை ஒவ்வொன்றும் தனக்கு வசதியான இடத்தை பிடித்து கொண்டு நோய் செய்து உயிரை போக்கும் என்பதை உணர்ந்து கொள்ளவும்.

(43). இயற்கை கற்பிக்கும் இணையற்ற கல்வி. ஒற்றுமை குணமுள்ள இரு நோய்கள் ஒருவர் உடலில் சந்திக்கும் போது அதாவது பழைய நோயை விட வலிமை வாய்ந்த புதிய நோயொன்று தோன்றும் போது ஏற்படும் விளைவு முற்றிலும் மாறானது அத்தகைய சந்தர்ப்பங்களில் இயற்கை எவ்வாறு நோயை குணம் செய்கிறது என்பதை பார்ப்பதுடன் நோய் எவ்வழியில் நீக்கப்பட வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்பு:

வான்காந்தத்தைதான் ஹானிமேன் இயற்கை என்கிறார். (இதன் விளக்கத்தை சுலோகம் 20ன் பின்குறிப்பில் பார்த்துக் கொள்ளவும்.)

(44). ஒற்றுமை குணமுள்ள இரு இயற்கை நோய் ஓர் உடலில் சந்திக்கும் போது ஒன்று மற்றொன்றை விரட்டுவது கிடையாது. புதிய நோயின் ஆட்டம் அடங்கியவுடன் பழைய நோய் தலை தூக்குகிறது. இந்த நிகழ்ச்சிக்கு காரணமான அடக்குமுறையும் இப்போது ஏற்படுவது இல்லை. தத்தம் தேவைக்கு ஏற்றபடி வெவ்வேறு உடல் உறுப்புகளைப் பீடித்து தனித்தனியாக இயங்குவதோ அல்லது ஒன்று சேர்ந்து கலப்பு நோயாக காட்சியளிப்பதோ கிடையாது.

45). சந்திக்கும் நோய்கள் இரண்டும் தன்மையிலே மாறுபட்டிருந்தாலும் தனித்தனியே உடலில் தோற்றுவிக்கும் நோய் குறிகளில் ஒற்றுமையுள்ளவைகளாயின், தவறாமல் ஒன்றை மற்றொன்று அழித்து விடுகிறது. அதாவது அவ்விரண்டில் அதிக வலிமையுள்ள புதிய நோய் வலிமை குறைவாயுள்ள பழைய நோயை அழித்துவிடுகிறது. இதற்கு காரணம் கூறுவது மிக எளிது. வலிமை குறைந்த பழைய நோயுடன் ஒற்றுமையாக இருக்கும் காரணத்தால் அந்நோய் உடலில் எந்த பகுதியில் உறுப்பில் புகுந்து வேலை செய்துவருகிறதோ அந்தந்த உறுப்புகளிலும் பகுதிகளிலும் புதிய நோயும் புகுந்து விடுகிறது. அதனால் பழைய நோய் தங்குவதற்கு இடம் இல்லாமல் உடலை விட்டு போய் விடுகிறது.

(46). ஒற்றுமையாக இருந்த காரணத்தால் ஏற்கனவே உடலில் இருந்த நோய்களைப் புதியதாகத் தோன்றிய நோய்கள் ஹோமியோபதி முறைப்படி குணம் செய்திருக்கும் இந்த விஷமாக பல உதாரணங்கள் இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் எடுத்து கூறுவது இங்கு அவசியமில்லை. ஏனெனில் மற்றவர்கள் மறுக்கவோ சந்தேகப்பட முடியாத விசயங்களை மட்டும் நாம் கவனிப்போம். விஷக்காற்றின் மூலம் பரவும் அம்மை நோயை மட்டும் குறிப்பாக எடுத்து பார்ப்போம். அம்மை நோய்களில் பெரியம்மை அதன் பெயருக்கு ஏற்றபடி பெரியதாகவே இருக்கின்றன. முதன்மையாகவும் இருக்கிறது. அந்நோயில் ஏராளமான அபாயகுறிகள் தோன்றுவதால் அதை கண்டு மக்கள் நடுங்குகின்றனர். அதற்கு முன்னதாக உடலில் இருந்த பல நோய்களை அவை ஒற்றுமை குறிகளை கொண்டிருந்தமையால் குணம் செய்திருக்கிறது. (பெரியம்மை நோயே குணம் செய்திருக்கிறது). கண்களில் கடுமையான வேக்காட்டை உண்டாக்கிப் பல சமயங்களில் குருடாக்கவும் செய்யும்.

பெரியம்மை என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் நீடித்த கண்வேக்காடு இருந்த ஒருவரின் உடலில் பெரியம்மை விஷத்தை குத்திச் செலுத்தியவுடன் அந்நோய் இருந்த இடம் தெரியாமல் குணமடைந்தது. தலையில் இருந்த பொருக்குகளை போக்குவதற்காக ஏதோ ஒரு மருந்தைத் தடவிக் கொண்டதால் ஒருவக்குக் கண் பார்வை மறைந்துவிட்டது. இரண்டு வருடம் கழித்து அவருக்குப் பெரியம்மை விமூத்தை உடலில் குத்திச் செலுத்தியவுடன் மறைந்திருந்த பார்வை திரும்பி வந்துவிட்டது. பெரியம்மையில் காது செவிடாவதும் மூச்சுத்திணறலும் அடிக்கடி காணப்படும் கோளாறுகளாகும். நீடித்த செவிட்டுத் தன்மையோ மூச்சுத் திணறலோ இருந்தவர்களுக்குப் பெரியம்மை தோன்றி அதன் உச்ச நிலைமையில் இருக்கும் போது அந்நோய்கள் நீங்கி விட்டன. விதை வீக்கம் பெரியம்மையில் பல சமயங்களில் உண்டாகும் கோளாறுகளில் ஒன்று. மிகக் கடுமையாகவும் ஏற்படக்கூடும். அடிப்பட்டு இடது விதையில் கல் போன்ற கடினமான வீக்கம் இருந்த ஒருவருக்குப் பெரியம்மை ஏற்பட்டவுடன் குணம் தோன்றியது. பெரியம்மையில் நோயாளிக்கு துன்பம் தரும் கோளாறுகளில் வயிற்றுக் கடுப்பும் ஒன்று.

வயிற்றுக் கடுப்பு நோய் இருந்த ஒருவருக்குப் பெரியம்மை ஏற்பட்டவுடன் வயிற்றுக் கடுப்பு நீங்கியது. பெரியம்மையும், பெரியம்மை தடுப்பு மருந்தும் ஒற்றுமைக் குறி உள்ளவை. ஆனால் பெரியம்மைத் தடுப்பு மருந்தை விட பெரியம்மை வலிமை வாய்ந்தது. ஆதலால் பெரியம்மைத் தடுப்பு மருந்தைக் குத்தியவுடன் ஒருவருக்குப் பெரியம்மை தோன்றினால் தடுப்பு மருந்தை அது பயனற்றதாகச் செய்துவிடும். மருந்து குத்தப்பட்ட இடத்தில் பூரிப்பு ஏற்படும் சமயத்தில் பெரியம்மை தோன்றுமானால் அதன் கடுமையைத் தடுப்பு மருந்து பெருமளவு குறைத்துவிடும். பெரியம்மைத் தடுப்பு மருந்தில் பெரியம்மையைத் தடை செய்யும் வல்லமையுடன் வேறொரு வகையான சரும நோயை உண்டாக்கும் தன்மையும் இருக்கிறது. தடுப்பு மருந்து குத்தப்பட்ட இடத்தில் பூரிப்பு ஏற்படும் காலத்தில் உடம்பு முழுவதும் கடுமையான அரிப்புடன் வட்டமான, சிவந்த சிறு புள்ளிகள் தோன்றும்.

இவ்விதமான சரும நோய், பெரியம்மை தடுப்பு மருந்து உடலில் குத்தப்பட்டவுடன் குணமடைந்து விடுகிறது. பெரியம்மைத் தடுப்பு மருந்து குத்தப்பட்ட இடத்தில் பூரிப்பு ஏற்படும் சமயத்தில் ஜுரம் ஏற்படுகிறது. முறைச் ஜூரம் இருந்த இரண்டு பேர்களுக்கு பெரியம்மைத் தடுப்பு மருந்தைக் குத்தியவுடன் ஜூரம் குணமடைந்து விட்டது. ஜூரங்கள் ஒற்றுமையுள்ள நோய்களானதால் ஒரே உடலில் இரு ஜூரங்கள் சேர்ந்திருக்க முடியாது. கக்குவான் இருமலில் காணப்படும் ஜூரமும் இருமலும் சின்னம்மையிலும் காணப்படுவதால் அவ்விரு நோய்களும் ஓரளவு ஒற்றுமையுள்ளவை. அதனால் ஒரே சமயத்தில் இரு நோய்களும் பெருவாரியாகப் பரவியிருந்தபோது சின்னம்மையினால் தாக்கப்பட்டிருந்த குழந்தைகளை கக்குவான் இருமல் அச்சமயம் தாக்கவில்லை. கக்குவான் இருமல் சின்னம்மையுடன் முழுவதும் ஒற்றுமையுள்ளதல்ல. அதாவது சின்னம்மையில் காணப்படும் சருமக் கோளாருகள் கக்குவான் இரும்பலில் ஏற்படுவதில்லை. கக்குவான் இருமலுக்கும் சின்னம்மை போன்ற சருமக்கோளாறுகளை உண்டாக்கும் சக்தி இருந்தால் சின்னம்மையினால் தாக்கப்பட்டவர்களுக்கு என்றென்றும் கக்குவான் இருமல் ஏற்படாது. சின்னம்மையின் சருமக் கோளாறைப் போன்றதொரு சருமக் கோளாறு இருந்த ஒருவருக்குச் சின்னம்மை தோன்றியவுடன் அச்சருமக் கோளாறு குணமாகி விட்டது.

(47). நோயை விரைவிலும் நிரந்தரமாகவும் நிச்சயமாகவும் நீக்க எத்தகைய செயற்கை நோய்ப் பொருளை (மருந்தை)த் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைத் தெளிவாகவும் சந்தேகத்துக்கு இடமில்லாமலும் வைத்தியருக்குக் கற்றுக் கொடுக்க மேலே காட்டிய இயற்கையின் வழியை விடச் சிறந்தது வேறொன்றுமே இல்லை.

(48). உடலிலுள்ள நோயை வைத்தியரின் திறமையாலோ அல்லது அதனுடன் வேற்றுமை கொண்ட மற்றொரு நோய்ப்பொருளாலோ (அது எவ்வளவு பலம் வாய்ந்ததாக இருந்தாலும் சரி) எந்த ஒரு சமயத்திலும் நீக்க முடியாது. ஒற்றுமையும் சிறிது அதிக வலிமையும் உள்ள நோய்ப் பொருளால்தான் நீக்க முடியும் என்பதை மேலுள்ள இயற்கையில் ஏற்படும் உதாரணங்களிலிருந்து தெரிந்து கொண்டோம். அழிவற்ற, மாற்ற முடியாத, இதுவரைகண்டுபிடிக்கப்படாத இயற்கைச் சட்டப்படியே இவை நிகழுகின்றன.

குறிப்பு:

கருமையம் என்ற ஒரு அமைப்பை கண்டுபிடித்து வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்குகிறார். ஒற்றுமை குணமுள்ள இயற்கை நோய்ப்பொருள் அதிகம் இல்லை, அது அதிக தொல்லையும் தந்திடும்.

49,50). ஒற்றுமைக் குணமுள்ள இயற்கை நோய்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அதனாலும், ஒற்றுமைக்குணத்தினால் ஹோமியோபதிச் சட்டப்படி நோய்கள் இயற்கையாய்க் குணமாகும் விஷயமாய் வைத்தியர்கள் அதிக கவனம் செலுத்தாததாலும் மேலே உள்ளதை விட அதிகமான உதாரணங்களை நாம் காணமுடியவில்லை. ஆயினும் என்ன! ஹோமியோபதிச் சட்டத்துக்கு இணங்க, நோய்களைக் குணம் செய்யும் வல்லமையுள்ள இயற்கை நோய்கள், பெரியம்மை, சின்னம்மை, சொறி, சிரங்கு ஆகிய இம்மூன்றே ஒன்றுதான்.

இந்நோய்ப் பொருள்களை, மருந்துகளாக உபயோகிக்க முடியாது. ஏனெனில் அவை உயிருக்கு அபாயத்தை விளைவிக்கக் கூடியவை. குணமாக்கப்பட வேண்டிய நோயைவிடப் பயங்கரமானவை. அப்பொருள்களை உபயோகித்தால் முதலிலிருந்த நோய் நீங்குமென்றாலும், அவைகளால் ஏற்படும் புதிய நோய்க்கு மறுபடி சிகிச்சை செய்ய நேரும். மேலும் அம்மூன்று நோய்களுடன் ஒற்றுமையுள்ள நோய்களும் அதிமாக இல்லை. மருந்துகளின் அளவை நாம் தேவைக்குத் தகுந்தபடி குறைக்கவும் அதிகமாக்கவும் செய்யலாம். நோய் பொருள்களின் அளவை அவ்வாறு செய்ய முடியாது. ஆகவே அபாயத்தை விளைவிக்கக்கூடிய நோய்ப் பொருள்களைக் கொண்டு சிகிச்சை செய்வது மிகவும் ஆபத்தானது. நீடித்த நோயொன்றைக் குணம் செய்வதற்காக, நோயாளிகளைப் பெரியம்மை போன்ற அபாயமான துன்பங்கள் நிறைந்த நோய்களுக்கு உட்படுத்துவது முறையல்ல. ஆயினும் இயற்கையில் நடைபெறும் இவ்விமூயத்தை, அதாவது ஒற்றுமைக்குணமுள்ள இரு இயற்கை நோய்கள் ஒருவர் உடலில் சந்திக்கும் போது, பழைய நோய் குணமாவதை நாம் காண்கிறோம்.

மறுக்க முடியாத இவ்வுதாரணங்கள் “ஒற்றுமையான குறிகளால் நோயை நீக்க முடியும்”. என்ற மாபெரும் உண்மையான மாற்று இல்லாத இயற்கை நோய் தீர்க்கும் சட்டத்தை உறுதி செய்கின்றன. ஒற்றுமையுள்ள செயற்கை நோய்ப்பொருள் உலகில் ஆயிரம் ஆயிரம் இருக்கிறது.

(51). உலகமெங்கும் பலவித செயற்கை நோய்களை உண்டாக்கவல்ல மருந்துப் பொருள்கள் ஆயிரமாயிரமாகப் பரவிக்கிடக்கின்றன. இயற்கையில் ஏற்படும் ஒவ்வொரு நோயையும் நீக்கும் வல்லமையுள்ளது. அதிக அளவில் உட்கொண்டால் ஒற்றுமைக் குறிகளையுடைய செயற்கை நோயை உண்டாக்கக்கூடிய மருந்துச்சரக்குகளின் துணை கொண்டு ஹோமியோபதி முறைப்படியும் மருந்தை செய்து அதனைக் கொண்டு சிகிச்சை செய்யலாம். நோய்குணமானவுடன் இம் மருந்துகளிலுள்ள சக்திஉயிர்ப்புச் சக்தியினால் அது அக்கணமே மறைந்து விடுகிறது. அதனால் மருந்தின் சக்தியை நீக்குவதற்காக இரண்டாவது சிகிச்சை செய்யவேண்டிய அவசியமில்லை. செயற்கை நோய்களை உண்டாக்கும் இப்பொருள்களின் சக்தியை (மருந்துகளின் அளவை) தன் விருப்பப்படி கூட்டவோ குறைக்கவோ வைத்தியரால் முடியும். நீக்கப்பட வேண்டிய ஒற்றுமைக் குணமுள்ள இயற்கை நோயைக் காட்டிலும் சற்றே கூடுதலான சக்தி (வீரியம்) இருக்கும் அளவுக்கு மருந்தின் சக்தியைக் கூட்டலாம்.

(உதாரணத்தோடு கூறும் இச் சிகிச்சைமுறையினால் உடலுக்குத் தீங்கு ஏற்படாமல் நாட்பட்ட தீராத நோய்களையும் தீர்க்கலாம். மிருதுவாகவும் அடக்கமாகவும் ஆனால் மிக விரைவில் நோய் நிரந்தரமாய் நீக்கப்படுகிறது. வேற்றுமையுள்ள இயற்கை நோயை போல் வேற்றுமையுள்ள மருந்துகள் யாவும் சற்றும் பயனில்லை. நிச்சயமாக அந்த மருந்துகள் எல்லாம் உபயோகமற்றவை மற்றும் மரணத்தில் தான் முடியும்.

(52). இது குன்றின் மேலிட்ட விளக்குப் போல் எளிதிலே புலனாகும். இவ்வுதாரணங்களைக் கண்ட பிறகு, நல்ல நோக்கம் உள்ள எந்த வைத்தியரும் தான், இதுவரை கையாண்டு வந்த, பழைய வைத்திய (அலோபதி) முறையைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டார். ஏனெனில் அலோபதி மருந்துகளும் செயற்கை புண்களை உண்டாக்குவது போன்ற முறைகளும் நீக்கப்பட வேண்டிய இயற்கை நோயுடன் நேரிடையான தொடர்பு இல்லாமையே காரணம் ஆகும். அதனால் அவை நோய் இல்லாத உடல் பகுதிகளையே தாக்குகின்றன. இயற்கை நோயுடன் ஒற்றுமையற்ற செயற்கை நோயொன்று தோன்ற ஊக்கமளித்து நோயாளியின் உடல் வலிமையைச் சூறையாடுகின்றன. உடலிலுள்ள பழைய நோயுடன், அதனுடன் ஒற்றுமை இல்லாத புதிய நோய் ஒன்று சேரும் போது, நோயின் அளவு அதிகரிப்பதைத்தவிர வேறு நன்மை எதுவும் விளைவதில்லை. அதைப்போலவே மருத்துவர் மனதில் பட்ட மருந்துகளை ஏராளமான அளவில் கொடுத்து வந்தால் நோயாளியின் உடல் நாசப்படுத்தப்படுகிறது. வேற்றுமையுள்ள புதிய நோய் பழைய நோயை விட வலிமை குறைந்ததாய் இருந்தால், பழைய நோய் புதிய நோயை விரட்டி விடுவதைப் போல, கடுமையில்லாத அலோபதி மருந்துகளை எவ்வளவு நீண்ட காலம் கொடுத்து வந்தாலும், நோய் குணமாகாமல் அப்படியே இருந்து வருகிறது.

ஆயினும் நோயாளியின் உடல் வலிமை குறைந்து கொண்டே வருகிறது. வேற்றுமையுள்ள புதிய நோய் பழைய நோயை விடப் பலம் வாய்ந்ததாக இருந்தால், புதிய நோய் குணமாகும் வரை அல்லது அதன் ஆட்டபாட்டங்கள் குறையும் வரை பழைய நோய் உள்ளே பதுங்கி இருந்து பிறகு வெளியே வருகிறது. அதைப்போலவே கொடுமைக் குணம் நிறைந்த அலோபதி மருந்துகளைக் கொடுத்தால், நோய் சிறிது காலத்துக்கு அடங்கி இருந்து பிறகு முன்போலவே வெளியே வரும். சம பலமுள்ள இரு வேற்றுமை நோய்கள் ஒருவர் உடலில் பல காலமாய் நீடித்து இருந்தால், ஒவ்வொன்றும் தனக்கேற்ற உடலுறுப்புகளை மட்டும் தனித்தனியே பிடித்துக் கொண்டு கலப்புநோயாய்க் காட்சி அளிக்கின்றன. அதைப்போலவே இயற்கைநோயுடன் ஒற்றுமையற்ற அலோபதி மருந்துகளை ஏராளமான அளவிலும், நீண்ட காலமாகவும் கொடுத்து வந்தால், இயற்கை நோய் குணமாகாமல் இருப்பதுடன் புதிய செயற்கை நோய்களும் உண்டாகின்றன. அதனால் நோயைக் குணம் செய்யும் வேலை முன்னைவிடக் சிக்கலாகி கடுமையாகிறது.

(53). ஹோமியோபதி முறைப்படியே நோய்கள் நிச்சயமாகவும் மிருதுவாகவும் நீங்குவதை நாம் பார்க்கிறோம், அனுபவம், யூகம் ஆகியவைகளின் துணைக்கொண்டு, மறைமுகமாய் முன் பக்கங்களில் நாம் எடுத்துக் காட்டிய படி, நோய்களை நிச்சயமாகவும், விரைவிலும் நிரந்தரமாகவும் அழியக்கூடிய ஒரே வழி ஹோயோபதியே. ஏனெனில் இச்சிகிச்சை முறை அழிவற்றதும், குற்றமற்றதுமான இயற்கைச் சட்டத்தை ஆதாரமாய்க் கொண்டிருக்கிறது. மூவகையான சிகிச்சை முறைகளில் முதன்மையானது ஹோமியோபதியே.

(54). நோய்களில் மருந்துகளை ஹோமியோபதி, அலோபதி, ஆண்ட்டிபதி என்று வழஙகப்படும் மூன்று வகையான வழிகளில் உபயோகிக்க இடம் இருக்கிறது. இம்மூன்றினுள் நோயாளிக்கு எவ்விதத்திலும் தீஙகு செய்யாமல், அவர் உடல் வலிமையைக் குறைக்காமல் நோயை மிருதுவாகவும் நிச்சயமாகவும் நிரந்தரமாகவும் குணம் செய்வதற்கு ஏற்ற ஒரே ஒரு வழி ஹோமியோபதிதான். அம்முறை ஒன்றே ஏற்றதும் நேர்மையானதுமாகும். மனிதனின் வல்லமையினால் அடையக் கூடியது ஆகும். ஆகவே அதை முதல் வழி என்று வைப்போம்.

(55). இரண்டாவது வழியாகிய அலோபதியில் உடலிலுள்ள நோயுடன் எவ்விதத்திலும் தொடர்பு இல்லாத உடல் பகுதிகளையே தாக்கும் இயல்புள்ள மருந்துகளைக் கொண்டு சிகிச்சை செய்யப்படுகிறது. நோயற்ற அப் பகுதிகளின் வழியாய் நோயை இழுத்துவெளியேற்றி விடலாம் என்று அறியமையினால் தவறு செய்பவர்கள் அலோபதியர்கள். இம்முறை உபயோகமற்றது, கேடுகள் நிறைந்தது என்பதை முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். ஆதலால் அதை பற்றி மீண்டும் எழுத விரும்பவில்லை.

(56). மூன்றாவதும் கடைசியுமான வழி ஆண்டிபதி இம்முறையில் நோயினால் உண்டாகும் (கிருமிகளை கொல்லும் மருந்துகளை) வேதனைகளைச் சிறிது காலம் மறைத்து வைக்கும் குணமுள்ள மருந்துகளைக் கொடுத்துச் சிகிச்சை செய்யப்படுகிறது. வேதனை மறைந்தவுடன் தன் நோய் குணமடைந்து விட்டதாக எண்ணி வைத்தியரின் மேல் நோயாளிக்கு நம்பிக்கை ஏற்படவே இம்முறை கையாளப்படுகிறது. மிக வேகமாய் வளரும் குணமில்லாத நோய்களில் இம்முறையினால் எள்ளளவும் பயன் இல்லை. மிக மிகக் கெடுதலானது. அலோபதியர்கள் நோய்களைச் சிகிச்சை செய்யப் பல்வேறு வழிகளைக் கடைப்பிடிக்கின்றனர். அவைகளில் இயற்கை நோய்க் குறிகளுடன் ஓரளவு உறவு ஆண்டிபதி முறைக்கே இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அது எத்தகைய உறவு தெரியுமா? உண்மைக்கு நேரெதிரானது. மொத்தக் குறிகளை மதியாமல் ஒற்றைக் குறியை அடக்குவதால் துன்பம்தான் ஏற்படும். (57இ 58, 59, 60, 61, 62)

(57). ஆண்ட்டிபதி முறையை அலோபதியர்களால் எப்படிக்கையாளப்படுகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு நோயிலும் பற்ப்பல நோய்க் குறிகள் இருக்கின்றன. அவைகளில் மற்ற எல்லாவற்றையும் அலட்சியம் செய்து விட்டு அதிக வேதனையை அளிக்கும் ஒரேயொரு குறியை மட்டும் இலக்காக வைத்து, அதற்கு நேர் எதிரான செயற்கை நோய்க்குறியை உண்டாக்கும் குணமுள்ள மருந்தைக்கொடுக்கின்றனர். இருபத்திரண்டு நூற்றாண்டுகளாக வாழையடி வாழையென வந்துவிட்ட இப்பழங்கால அலோபதி சிகிச்சையினால் வேதனைக்குறி விரைவினில் நீங்குமென்று அவர் எதிர்பார்க்கலாம். உடல் உணர்ச்சிகளைச் சீக்கிரமாய் மழுங்கச் செய்யும் சக்தி ஓபியத்துக்கு (தூக்க மருந்துக்கு) இருப்பதைக் கொண்டு அவர் எல்லா வித வலிகளுக்கும் அம்மருந்தை அதிக அளவுகளில் கொடுக்கிறார். குடலின் இயற்கையான முன்னோக்கித் தள்ளும் சக்தியை மிக விரைவிலே போக்கடித்து அதன் உணர்ச்சியை அடக்கும் குணம் அம்மருந்துக்கு இருப்பதுதான் காரணம். தூக்கமில்லாதவர்களுக்கும் ஓபியம் கொடுக்கப்படுகிறது.

ஏனெனில் அம்மருந்தைக் கொடுத்த சிறிது நேரத்திற்கெல்லாம் நோயாளிக்கு மயக்கம் கலந்த தூக்கம் உண்டாகிறது. பல நாட்களாக மலச்சிக்கலினால் அவதியுறுவோருக்குப் பேதி மருந்துகளை உபயோகிக்கிறார்கள். நெருப்புச் சூடுபட்ட கையைக் குளிர்ந்த தண்ணீரில் வைக்கச்சொல்கிறார். தணணீரின் சூடு குறைவாய் இருப்பதால் கையை அதில் வைத்த உடனே மயாஜாலம் போல் எரிச்சல் நீங்குகிறது. உடலில் சிலு சிலுவென்ற குளிரும் உணர்ச்சியுள்ளவர்களைச் சூடான தண்ணீரில் குளிக்கச் செய்கிறார். அதனால் நோயாளிகளுக்கு உடனேயே உடலில் சூடு உண்டாகின்றது. நீண்ட நாட்களாய் உடல் பலவீனமாய் இருந்து வரும் நோயாளியை ஒயின் (ஒருவகைச் சாராயம்) கலந்த டானிக்குகள் உட்கொள்ளச் செய்கிறார். ஒயினைக் குடித்தவுடனே நோயாளிக்கு புத்துயிரும், புத்துணர்ச்சியும் ஏற்படுகின்றன. இன்னும் இவைகளைப் போன்ற இயற்கை நோய்க்குறிக்கு நேர் எதிரான செயற்கை நோய்க்குறியை உண்டாக்கும் மருந்துகளை உபயோகிக்கிறார். ஆனால் அவ்வாறு உபயோகிக்கக் கூடிய மருந்துகள் மிக சிலவே.

(58). நோயின் குறிகளில் ஒன்றை மட்டும், அதாவது ஒரு சிறு பகுதியை மட்டும், கவனிப்பதினால், நோயாளியின் விருப்பம் போல், முழு நோயும் நீங்குமென்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே இம்முறை மிக மிகத் தவறானது. (அலோபதி மருத்துவர்களில் (Specialist) உறுப்பு நிபுணர்கள் தான் இப்படி செய்கின்றனர்.) போனால் போகட்டுமென்று இத்தவறை பொருட்படுத்தாமல் விட்டு விடுவோம். ஆயினும் நாட்பட்ட அல்லது பிடிவாத குணமுள்ள நோய்களில், ஆண்டிபதி முறைப்படி மருந்தை உபயோகித்ததினால் சிறிது காலம் மறைந்து பிறகு முன்னிருந்ததை விடக் கடுமையாகி விடும்.
ஆண்ட்டிபதிச் சிகிச்சையினால், எல்லாச்சமயங்களிலும் விதிவிலக்கு என்ற சொல்லுக்கு இடமில்லாமலும், நோய்கள் யாவும் சிறிது காலம் மறைந்திருந்து பிறகு அதிகரிக்கவே செய்கின்றன. என்பதைக் கூர்ந்து கவனிப்போர் யாவரும் ஒப்புக்கொள்வர். தன் நோய் அதிகரித்து விடக் காரணம் என்னவென்று கேட்கும் நோயாளியிடம் அலோபதி வைத்தியர் சொல்லும் சமாதானம், “முன்பு இருந்த நோய் மிகவும் விஷத்தன்மை பொருந்தியது, இப்பொழுது தான் அது தன் சுய உருவத்தைக் காட்டுகிறது அல்லது இது முற்றிலும் புதிய தொருநோய்” என்று சொல்லி அலோபதி வைத்தியர்கள் ஏமாற்றுகின்றனர். காரணம் அவர்களுக்கு உயிரைப் பற்றித் தெரியாது. (59).

தற்கால சாந்தியை (Sudden Relief) அளிக்கும் விரோதமான மருந்துகளைக் கொண்டு சிகிச்சை செய்யும் சமயங்களில், பிடிவாத குணமுள்ள நோய்களின் முக்கிய குறிகள் திரும்பி வராமல் இருப்பது கிடையவே கிடையாது. அது மட்டுமல்ல சில மணி நேரம் கழித்து வெளிப்படையாகத் தெரியுமளவுக்கு நோய் அதிகரிக்கவும் செய்கிறது. நீண்ட காலமாய்ப் பகலில் தூக்கக் கலக்கமாய் இருந்து வந்த ஒருவருக்கு வைத்தியர் காப்பியை உபயோகித்தார். காப்பியின் முதல் வேலை சுறு சுறுப்பை உண்டாக்குவது அதன் முதல் வேலை முடிந்தவுடன் பகல் தூக்கம் முன்பிருந்ததைவிட அதிகமாகி விட்டது. இரவில் அடிக்கடி விழிப்பு ஏற்பட்டு நல்ல தூக்கம் இல்லாதிருந்த ஒருவருக்கு நோயின் மற்ற குறிகளைக் கவனிக்காமல், இரவு வேளையில் (8 மணிக்கே) தூக்க மருந்தை மருத்துவர் கொடுத்தார். அன்றிரவு மயக்கம் கலந்த தூக்கம் வந்தது.

ஆனால் அதற்கு மறுநாளிலிருந்து இரவு நேரங்களில் முன்பு வந்த அளவு கூடத் தூக்கம் வரவில்லை. அதனால்தான் தூக்க மாத்திரைகளை நாளுக்கு நாள் அதிகமாய் தரவேண்டியதாய் உள்ளது. நாட்பட்ட வயிற்றுப்போக்குக்கு நோயின் மற்றக்குறிகளைக் கவனிக்காமல் ஓபியத்தைக் கொடுத்தார். குடல்களை இறுக்குவது அம்மருந்தின் முதல் வேலைகளில் ஒன்று. அதனால் வயிற்றுப் போக்கு சிறிது நேரம் அடங்கியிருந்து பிறகு முன்னை விடஅதிகரித்தது. கடுமையாகவும் அடிக்கடி வந்து கொண்டும் இருக்கிற எல்லாவித வலிகளையும் ஓபியத்தின் (தூக்க மருந்து) துணைகொண்டு சில காலம் அடக்கி வைக்கலாம். ஆனால் அவை தவறாமல் பல சமயங்களில் முன்னை விடக்கடுமையாகவும் திரும்பி வரத்தான் செய்யும். அல்லது அவ்வலிகளை விட மோசமான புதியதொரு கோளாறு தோன்றுவதும் உண்டு. பல காலமாய் இரவு நேரங்களில் ஏற்படும் இருமலுக்கு ஓபியத்தைக் தவிர வேறு மருந்து கொடுக்க அலோபதி வைத்தியருக்குத் தெரியாது ஓபியத்தின் முதல் வேலை எல்லாவகை வேதனைகளையும் அடக்குவதேயாகும். ஆதலால் முதல் இரவில் இருமல் நின்று விட்டுப் பிறகு மறு நாளிலிருந்து இரவு நேரங்களில் முன்னை விடக் கடுமையாய் ஏற்படலாம்.

இச்சமயத்தில் ஓபியத்ததை மேன் மேலும் அதிக அளவுகளில் கொடுத்து இருமலை அடக்கி வந்தால், ஜூரம், இரவில் வியர்வை உண்டாகுதல் ஆகிய குறிகளும் சேர்ந்து கொள்ளும். மூத்திரப்பையின் பலவீனம் காரணமாக மூத்திரம் அடக்கப்பட்டிருந்தால் காந்தாரி, எனப்படும் மருந்தின் உதவி கொண்டு அக்கோளாறை நீக்க அலோபதி வைத்தியர் முற்படுகிறார்கள். அதனால் அடங்கிருந்த மூத்திரம் வெளியாகத்தான் செய்கிறது. ஆனால் பிறகு மூத்திரப்பையின் இயற்கையான சுருங்கும் சக்தி மேலும் குறைந்து பாரிசவாத நிலையை நெருங்குகிறது. பல நாட்களாய் நீடித்திருக்கும் மலச் சிக்கலை நீக்க குடல்களைத் தூண்டி அடிக்கடி மலத்தை வெளியேற்றும் சக்தியுள்ள பேதி மருந்துகளையும், மலம் இளக்கி உப்புகளையும் உபயோகிக்கிறார். அவைகளின் முதல் வேலை காரணமாக மலச்சிக்கல் அச்சமயம் நீங்குகின்றது. ஆயினும் இரண்டாம் வேலை ஆரம்பித்தவுடன் மலச்சிக்கல் முன்னை விடக் கடுமையாகிறது. பல காலமாய் உடல் பலவீனம் இருந்த ஒரு நோயாளிக்கு ஒயின் (Wine-B2) எனப்படும் பானத்தைக் கொடுக்கிறார்.

ஒயினின் முதல் வேலை சிறிது நேரம் உடலுக்கு ஊக்கம் தருவதாகும். ஆனால் அதன் இரண்டாம் வேலை ஆரம்பித்தவுடன் பலவீனம் மேலும் அதிகமாகிறது. நீண்டகாலமாய் ஜீரண சக்தியை இழந்து வயிற்றில் ஜில்லிப்பு உணர்ச்சி இருந்த ஒருவருக்கு கசப்புப் பொருள்களையும் சூட்டை உண்டாக்கும் (மிளகு போன்ற) காரப்பொருட்களையும், கொடுத்து வயிற்றைப் பலப்படுத்தவும் சூடு ஏற்படவும் செய்கிறார். அப்பொருள்களின் முதல் வேலை நடைபெறும் வரை விரும்பிய பலன் ஏற்படுகிறது. ஆனால் இரண்டாம் வேலை துவங்கியவுடன் வயிற்றின் ஜீரணச்சக்தி குறைந்து விடுகிறது. உடலின் இயற்கையாய் இருக்க வேண்டிய சூட்டின் அளவு குறைந்து பல காலமாய் உடம்பில் ஜில்லிப்பு உணர்ச்சியுள்ளவருக்குச் சுடு தண்ணீரில் குளிக்கச் செய்தால் ஜில்லிப்பு உணர்ச்சி மறைந்துவிடுவது உண்மைதான்.

ஆனால் சிறிது நேரமானவுடன் நோயாளிக்கு முன்னை விடப் பலம் குறைந்து உடலில் அதிகமாக குளிரும் ஏற்படும். கடுமையாக நெருப்புச் சுட்டுவிட்ட உடல் பகுதிகளில் குளிர்ந்த தண்ணீரை ஊற்றிக்கொண்டால் எரிச்சல் அக்கனமே மறைந்துவிடுகிறது. ஆனால் சிறிது நேரம் சென்றவுடன் எரிச்சலும் வலியும் தாங்க முடியாத அளவு அதிகமாகி அதேபோல் வேக்காடும் கடுமையாய் ஏற்படும். ஜலதோஷத்தினால் பல நாட்களாக இருந்துவரும் மூக்கடைப்பைத் தும்மலை உண்டாக்கும் குணமுள்ள மருந்துகளைக் கொடுத்துச் சளியை உண்டாக்கி குணம் செய்து விடலாம் என்று அலோபதி வைத்தியர் என்கிறார். இவ்விதமான எதிர்க்குணமுள்ள மருந்துகளால் அவைகளின் இரண்டாம் வேலையில் நோய் அதிகரிப்பதை அவர் கவனிக்காமல் விட்டுவிடுகிறார். முதல் வேலையில் மூக்கடைப்பு நீங்கினாலும் இரண்டாம் வேலையில் அடைப்பு முன்னைவிட அதிகமாகவே செய்கிறது.

மின்சாரத்தின் முதல் வேலை தசைகளுக்கு ஊக்கம் அளிப்பதாகும். நீண்டகாலமாய்ப் பலவீனத்தாலும் பாரிசவாதத்தாலும் (பக்கவாதம்) தாக்கப்பட்டு கை கால் முடங்கி விட்டவர்களுக்கு மின்சாரச் சிகிச்சை செய்தவுடனே முடங்கியிருந்த கை கால்களை மடக்கவும் நீட்டவும் முடிகிறது. ஆனால் இரண்டாம் வேலையில் கை கால்கள் முன்னைவிட அதிகமாய் முடங்கிச் செயலற்றுப்போய் விடுகின்றன. அடிக்கடி தலையில் அதிகளவு இரத்தம் சேருவகை நீக்க அங்குள்ள அசுத்த இரத்தக்குழாயை ஊசியால் குத்தி இரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அங்கு சேரும் இரத்தத்தின் அளவு மேன்மேலும் அதிகமாகத்தான் செய்யும். பல வகையான பெருவாரிக் காய்ச்சலால் உடலிலும் மனதிலும் ஏற்படும் கடுமையான வேதனைகளை அடக்க வலேரியானா (Valerina) என்ற மருந்தை ஏராளமான அளவில் கொடுப்பது, என்பது ஒன்றைத்தவிர வேறு எதுவும் அலோபதி வைத்தியருக்குத் தெரியாது.

உடலுக்கு ஊக்கம் தரும் மிகச் சக்தி வாய்ந்த மருந்துகளில் வலேரியானாவும் ஒன்று. உடலுக்கு ஊக்கம் தருவது வலேரியானாவின் முதல் வேலைதான் என்பது அவர்களுக்குத் தெரியும். அதன் முதல் வேலை முடிந்து இரண்டாம் வேலை துவங்கியவுடன் உடல் மன வேதனைகள் முன்னை விட அதிகமாகி உடல் உறுப்புகளும் மூளையும் செயலற்றுப்போய் மரணமும் நேரலாம்.

59. வலேரியானா அந்நோய்களுடன் ஒற்றுமையுள்ளதல்ல. எதிராகவே வேலை செய்கிறது. ஏராளமான அளவில் கொடுத்ததின் விளைவாக வலேரியானாவிலுள்ள விசமே நோயாக மாறி மரணத்தை ஏற்படுத்துகிறது ஆகிய விசயங்களை அவர்கள் அறிந்துக்கொள்ளவில்லை. நோய் காரணமாக உடல் இளைத்து மெலிந்துவிட்டவர்களுக்கு நாடித் துடிப்பின் எண்ணிக்கை அதிகமாய் இருக்கும். டிஜிடாலிஸ் (பிர];]ர் மாத்திரை) என்னும் மருந்தைக் கொடுத்து முதல்வேளை மருந்திலேயே நாடித்துடிப்பின் வேகத்தைச் சிலமணி நேரங்களுக்குக் கட்டுப்படுத்தி வைக்கத் தன்னால் முடிந்ததைப்பற்றி அலோபதியர்கள் ஆனந்தமடைவார் (அம்மருந்தின் முதல் வேலை நாடித் துடிப்பின் வேகத்தைக்குறைப்பதாகும்). ஆனால் மிகச் சீக்கிரத்தில் நாடித் துடிப்பின் வேகம் பழையபடிஅதிகமாகும், அதனால் முதல் தடவையை விட இரண்டாவது தடவையில் மருந்தின் அளவை அதிகரிக்க நேரும்.

இவ்விதம் படிப்படியாக மருந்தின் அளவை அதிகரித்துக்கொண்டே போய் முடிவில் எவ்வளவு மருந்தைக் கொடுத்தாலும் பலன் ஏற்படாத நிலைமை தோன்றும். பிறகு மருந்தின் இரண்டாம் வேலை துவங்கும் அச்சமயத்தில் கணக்கிடவே முடியாமல் நாடி மிக வேகமாய்த்துடிக்கும்,தூக்கம்,பசி,உடல் வலிமை ஆகிய யாவும் பறந்தோடிப் போகும். தவறாமல் மிக விரைவில் மரணம் எற்படுவது நிச்சயமாகும். அல்லது நோயாளிக்குப் பைத்தியம் பிடித்துவிடுகிறது. வேற்றுமை குணமுள்ள மருந்துகளால் நோய் அதிகரிக்கின்றன. அல்லது மிகக்கடுமையான புதிய நோய்கள் தோன்றுகின்றன என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம் ஆயினும் பொய்யான கோட்பாடுகளைக் கற்றுள்ள அலோபதி வைத்தியர்கள் இவ் உண்மையை உணரவில்லை.

60. வேற்றுமை குணமுள்ள மருந்துகளால் இத்தகைய கேடுகள் விளைவது இயற்கை. நோய் அதிகரிக்கும்போது மருந்தின் அளவை அதிகரிப்பதின் மூலம் நிலைமையைச்சமாளித்து வெற்றிபெறலாம் என்று அலோபதியர் நினைக்கிறார். அப்படி அதிகளவில் மருந்தை கொடுப்பதால் நோய் சிறிது நேரத்திற்கு அடக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு தடவையும் மருந்தின் அளவு அதிகமாக்கப்படுவதால் முடிவில் முதல் நோயைவிடப் பயங்கரமான புதியதொரு நோய் தோன்றும் அல்லது உயிருக்கே ஆபத்து வரலாம் மரணமும் நேரலாம்,ஆனால் ஒருக்காலும் நோய்கள் நீங்குவதில்லை.

61. வேற்றுமைக் குணமுள்ள மருந்துகளை உபயோகிப்பதால் உண்டாகும் வருந்தத்தக்க விளைவுகளைப் பற்றிச் சிந்தித்துப்பார்க்கும் திறமை அலோபதியருக்கு இல்லை. அத்திறமை மட்டும் இருந்திருந்தால் கீழுள்ள மாபெரும் உண்மையைப் பல காலத்திற்கு முன்பாகவே அவர்கள் கண்டுபிடுத்திருப்பார்கள் அதாவது உண்மையான சிகிச்சை முறை அவர்கள் செய்து வரும் முறைக்கு நேர் எதிரானது என்பது. அது மட்டுமல்ல நோய்க் குறிகளுடன் வேற்றுமையுள்ள மருந்துகளை உபயோகிப்பதால் நோய் சிறிது நேரம் அடங்கியிருக்கும், மருந்தின் முதல்வேளை முடிந்தவுடனே நோய் அதிகரிக்கவே செய்யும்,ஆதலால் ஹோமியோபதி முறைப்படி, நோய்க்குறிகளுடன் ஒற்றுமையுள்ள மருந்துகள், மிகக் குறைவான அளவுகளில் கொடுக்கப்பட்டால், நோயை நிரந்தரமாகவும் முற்றிலும் நீக்கும் என்ற உண்மை அவர்களுக்குப் புலப்பட்டிருக்கும். வேற்றுமை மருந்துகளைக் கொடுத்துச் சிகிச்சை செய்ததினால் நோய்கள் அதிகரிப்பதைக் காண்கின்றனர். நாட்பட்ட வியாதிகள் ஒன்றாவது அச்சிகிச்சையால் குணமடையவில்லை என்பதையும் அறிந்துள்ளனர். பழைய நோய்கள் ஒற்றுமைக் குணமுள்ள புதிய நோய்களால் குணமாக்கப்பட்ட இயற்கை நிகழ்ச்சியையும் பார்த்துள்ளனர். ஆயினும் அவர்கள் உண்மையை அறியத் தவறிவிட்டனர்.

62. ஒரு நோயில் அதிகமான துன்பத்தை தரும் ஒரே ஒரு குறியை மட்டும் அடக்கும் நோக்கத்துடன் மருந்தை உபயோகித்தால் தீமை விளைகிறது. அதற்கு மாறாக ஹோமியோபதி முறைப்படி மருந்தை உபயோகித்தால் நன்மை விளைகிறது. இதன் காரணங்களைப் பற்பல ஆராய்ச்சிகளின் மூலம் நான் கண்டு பிடித்துக் கீழே தருகிறேன். இவ்விமூயம் எல்லோருக்கும் எளிதில் விளங்கக் கூடியது. நோய் தீர்க்கும் பணிக்கு இன்றியமையாதது. ஆயினும் எனக்கு முன் ஒருவரும் இதைக் கவனிக்கவில்லை. உயிர்ப்புச் சக்தியைத் தாக்கிய பின் உடலின் நலனை உருக்குலைத்து நோய்க் குறிகளைத் தோற்றுவிக்கும் மருந்தின் வேலை முதலாம் வேலை. அம் முதல் வேலையை அழித்துவிட உயிர்ப்புச் சக்தி குதித்தெழுந்து தோற்றுவிக்கும் மாற்றுக் குறிகள் இரண்டாம் வேலை எனப்படும்.

63. ஒவ்வொரு மருந்தும் உடலிலுள்ள உயிர்ப்புச் சக்தியைக் கூடுதலாகவோ குறைவாகவோ தாக்கி, உடலின் ஆரோக்கிய நிலைமையில் சில நாட்களுக்கோ பல நாட்களுக்கோ மாறுதலை உண்டாக்குகிறது. இது முதல் வேலை( Primary Action) எனப்படும். மருந்து, உயிர்ப்புச் சக்தி ஆகிய இரண்டிலுமுள்ள இருவகைச் சக்திகளும் ஒன்று கலந்ததாலேயே இம் முதல் வேலை தோன்ற முக்கிய காரணம் மருந்தின் சக்தியேயாகும். இம்முதல் வேலையை உயிர்ப்புச் சக்தி எதிர்த்து போராடுகிறது. அவ்வாறு எதிர்க்கும் குணம் உயிர்ப்புச்சக்திக்கு இயற்கையாய் அமைந்துள்ள ஒரு சாதனம் இதைதான் இரண்டாம் வேலை (ளுநஉடினேயசல யஉவiடிn) என்று அழைக்கிறோம்.

64. நோயற்ற உடலில் செயற்கை நோயை உண்டாக்கும் விஷச் சக்தியின் (அதாவது மருந்தின்) முதல் வேலை நடைபெறும் போது ஆரம்பத்தில் உயிர்ப்புச் சக்தி அதற்குப் பணிந்து போவது போல (நோயைத் தடை இல்லாமல் உடலிலே எற்றுக் கொள்ளும் பாவனை) காணப்படுகிறது. இருந்தாலும் சிறிது நேரத்துக்கெல்லாம் உயிப்ப்புச் சக்தி நிமிர்ந்தெழுந்து தன்னைத் தாக்கியுள்ள செயற்கை நோய்ச்சக்தி (மருந்தை) யின் முதல் வேலைக்கு எதிரான வேலையைச் சற்று அதிகமான அளவிலும் செய்யத்துவங்குகிறது அல்லது மருந்தினால் ஏற்பட்ட மாறுதல்களை நீக்கக் கூடிய அதிகச் சக்தியை உண்டாக்கி பாதுகாக்கிறது.

65. மேற்கண்ட விஷயமாக எல்லோருக்கும் தெரிந்த சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கொதிக்கும் தண்ணீரில் ஒரு கையை வைத்திருந்தால் அது மற்ற கையை விடச்சூடாகிறது. (முதல் வேலை) ஆனால் தண்ணீரிலிருந்து எடுத்து நன்றாகத் துடைத்துவுடன் சிறிது நேரத்திற்கெல்லாம் மற்ற கையை விடச் சில்லென்று குளிர்ந்துவிடுகிறது. (இரண்டாம் வேலை) கடுமையான உடல் உழைப்பினால் முதலில் உடம்பில் சூடு உண்டாகிறது (முதல் வேலை) பிறகு சில்லிப்பும்,நடுக்கலும் தோன்றுகின்றன (இரண்டாம் வேலை) மிகவும் சில்லிப்பாக இருக்கும் குளிர்ந்த தண்ணீரில் நெடு நேரம் கையை வேத்திருந்தால் அது முதலில் மற்ற கையை விட வெளுத்தும் சில்லென்றும் இருக்கும் (முதல் வேலை) தண்ணீரிலிருந்து எடுத்துத் துடைத்த பிறகு சூடு உண்டாக்க கை சிவந்து வேக்காடும் ஏற்படலாம் (இரண்டாம் வேலை).

முதல் நாள் அதிகச் சாராயம் குடித்து உடம்பில் சூடு உண்டானவர்களுக்கு (முதல் வேலை) மறு நாள் மூச்சுக் காற்றுகூடச் சில்லென்று ஆகும் (இரண்டாம் வேலை). தண்ணீர் கலப்பு அதிகமாய் இல்லாமல் கெட்டியாகவுள்ள காப்பி கஷாயத்தைக் குடித்தால் முதலில் மன உற்சாகமும் (முதல் வேலை) பிறகு வெகு நேரத்திற்கு சோம்பேறித்தனமும் (இரண்டாம் வேலை) ஏற்படுகின்றன. அபினியை உட்கொண்டால் முதலில் மயக்கமும் (முதல் வேலை) பிறகு அதிகத் தூக்கமின்மையும் (இரண்டாம் வேலை) ஏற்படுகின்றன. அபினியினால் முதலில் மலச்சிக்கலும் (முதல் வேலை) பிறகு வயிற்றுப் போக்கும் (இது இரண்டாம் வேலை) உண்டாகும். குடலில் அருவருப்பை உண்டுபண்ணி வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் (முதல் வேலை) மருந்தை உபயோகித்த பிறகு பல நாட்களுக்கு மலச்சிக்கல் தோன்றுகிறது (இது இரண்டாம் வேலை) இதே போல் அதிக அளவிலே உட்கொள்ளப்பட்டதால் ஆரோக்கிய உடலிலே மருந்துகளால் ஏற்படுத்தப்படும் மாறுதல்கள் (முதல் வேலை) நேர் எதிரான ஒரு மாறுதலை (இரண்டாம் வேலை) யும் உண்டாக்க நம் உயிர்ப்புச் சக்திக்கு சக்தி இருக்கிறது என்பது நமக்கு தெளிவாக இப்போது விளங்கும்.

66. ஹோமியோபதி வைத்திய முறைப்படி நுண்ணிய அளவிலே மருந்தை உட்கொள்ளும் போது மேலே கூறிய முதல் வேலை (Agg) ஏற்படத்தான் செய்கிறது. அதில் சந்தேகமே இல்லை. ஆனால் அது மிகவும் கொஞ்சமாய் ஏற்படுவதால் கூர்ந்து கவனித்தால்தான் கண்டு பிடிக்க முடியும் . இது போலவே உயிர்ப்புச் சக்தியின் இரண்டாம் வேலை(Amel) யும் குறைவாய் இருப்பதால் எளிதில் அறிய முடியாது.

67. ஹோமியோபதி வைத்திய முறைப்படி சிகிச்சை செய்வதால் ஏற்படும் நன்மைகளை மேலே காட்டிய மறுக்க முடியாத உண்மைகள் நமக்கு எடுத்துக் காட்டுவதுடன் மற்ற முறைகளின் படிச் செய்யப்படும் சிகிச்சைகள் பயன் அற்றவை என்பதையும் வெளிப்படுத்துகின்றன அல்லவா!

68. ஹோமியோபதி வைத்திய முறைப்படி இயற்கை நோய்களை நீக்க அவைகளை ஒத்த குறிகளை உண்டாக்கும் வல்லமையுள்ள மருந்துகள் மிகக் குறைந்த அளவில் கொடுக்கப்படுகின்றன. இதனால் இயற்கை நோய் நீங்கி மருந்தின் செயற்கை நோய்ச் சக்தி உடலில் தங்குவது உண்மையேயாயினும் அச்சக்தி மிகவும் குறைவானதால் தானாகவே உடலைவிட்டுப்போய் விடுகிறது. பூமியின் சுழல் வேகத்தின் காரணமாக அம்மருந்து (மிச்சம் மீதி இல்லாமல்) வெளியேறிவிடுகிறது.

69. ஆண்டிபதி (ஆன்டிபயாடிக்) சிகிச்சை முறையில் மேலுள்ளதற்கு நேர் எதிரான செயல் நடைபெறுகிறது. நோய்க் குறியை எதிர்ப்பதற்காக வைத்தியர் உபயோகிக்கும் மருந்தின் குறி (உதாரணமாக ஓபியத்தின் முதல் வேலையில் தோன்றும் உணர்ச்சியிழத்தல் மயக்கம் ஆகிய குறிகளைக் கொண்டு கடுமையான வலியை எதிர்ப்பது) ஓபியத்தை பச்சையாக கொடுக்கும் போது நோய்க் குறிக்கு பொருத்தமானது அல்ல. இரண்டுக்கும் தெளிவான தொடர்பு இருக்கிறது. ஆனால் அத்தொடர்பு நியாயமாய் இருக்க வேண்டியதற்கு எதிரானது எதிர் குணமுள்ள மருந்துக்குறியை உபயோகித்து நோய்க் குறியை நீக்கலாமென்று கருதப்படுகிறது. ஆனால் அது சாத்தியமானதல்ல. இயற்கை நோய்க்குறிகளை ஒத்த செயற்கை நோய்க்குறிகளை உண்டாக்கும் வல்லமை பொருந்தியது என்ற காரணத்தினால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு ஹோமியோபதி மருந்து, உடலில் எந்தெந்தப் பகுதிகளைத் தொடுகிறதோ, அந்தந்தப் பகுதிகளையே ஆண்டிபதி முறைப்படித் தேர்ந்தெடுக்கப்படும் மருந்தும் தொடுகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் அது (ஆண்டிபதி மருந்து) நோய்க் குறிக்கு எதிராக வேலை செய்து அந்த (நோய்க்குறியை) சிறிது நேரம் மறைத்து வைக்கிறது. மருந்தின் முதல் வேலை நடைபெறும் காலத்தில் நோய்க் குறியும் மருந்தின் குறியும் ஒன்றையொன்று அடக்கிவிட்டது போல் தோன்றுவதால் உயிர்ப்புச்சக்தி விடுதலை பெற்று விட்டது போல் காணப்படுகிறது. ஓபியத்திலுள்ள (மாய) மயக்கச்சக்தி நோயில் ஏற்படும் வலியை அடக்குவதை இதற்கு உதாரணமாய்க் கூறலாம். முதல் சில நிமிஷங்களுக்கு உயிர்ப்புச் சக்தி ஆரோக்கிய நிலைக்குத் திரும்பி வந்துவிட்டது போல தோன்றும்.

ஓபியத்தின் மயக்கச் சக்தியையோ, நோயினால் எற்படும் வலியையோ, அது உணருவதில்லை. ஆனால் எதிர்க்குணமுள்ள மருந்துக்கு ஹோமியோபதி மருந்தைப் போல இயற்கை நோயை விரட்டி விட்டு உயிர்ப்புச் சக்தியைத் தாக்கும் குணம் அதற்கு இல்லை. முதலில் நோய்க் குறியை அடக்குவது போல் வேலை செய்து முடிவில் அதை நீக்க முடியாமல் ஆண்டிபதி மருந்து உடலைவிட்டு வெளியேற்றப்படுகிறது. நீக்கவேண்டிய நோய் நீக்கும் மருந்தை மொத்தக் குறிகளினால் நிச்சயமாய் அது காட்டும். மற்ற ஆன்டிபதியர்களின் விளக்கம் கனவேயாகும். வேற்றுமையான அலோபதி மருந்தை அளவில் அதிகம் கொடுத்தாலும் வேற்றுமையான நோயைப் போல முன்னுள்ள நோயை நீக்காது.

மொத்தக் குறிகளை மதியாமல் ஒற்றைக்குறியை நீக்க வேண்டும் என்று வேற்றுமைக்குணமுள்ள மருந்திட்டால் சற்றே மறைந்து திரும்பிடும். (சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு, அல்சர் போன்றவைகளுக்கு அதை மட்டும் பார்த்து மருந்து தருவதை தான் ஒற்றை குறி என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அதாவது சர்க்கரை வியாதிகாரர்களுக்கு ஒவ்வொருவருக்கும் பலவிதமான குறிகள் இருக்கும். ஒவ்வொருரையும் அவர்களுடைய எல்லா குறிகளையும் கேட்டு தொகுத்து, மொத்த குறிகளுக்கு தக்கதொரு மருந்து தர வேண்டும் என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.) மொத்தக் குறிகளை மதிப்பிட்டு ஒற்றுமைக் குறியுள்ள மருந்திட்டால் சற்றும் மிச்சம் இல்லாமல் நோய் முற்றிலும் நீங்கும்.

70. நோய்களிலே வைத்தியர் கண்டுபிடிக்கக் கூடிய உண்மையானதும் நீக்கப்பட வேண்டியதுமான ஒவ்வொரு நோய்களும். நோயாளி படும் துன்பங்கள், அவனுடைய ஆரோக்கிய நிலைமையில் ஏற்படும் தெளிவான மாறுதல்கள் ஆகிய இரண்டிலும் (சுருக்கமாக நோயின் மொத்த குறிகளில்) தான் அடங்கியிருக்கிறது. இம்மொத்தக்குறிகளின் மூலமே ஒவ்வொரு நோயும் தன்னை நீக்கக் கூடிய மருந்தைச் சுட்டிக்காட்டுகிறது. ஆதலால் நோயின் காரணம் என்று கற்பனை செய்யப்படும் மற்ற எல்லா விஷயங்களும் முற்றிலும் பயனற்றதுதான். ஆரோக்கிய நிலைமையில் ஏற்பட்டுள்ள இம்மாற்றங்களையே நாம் நோய் என்று பெயரிட்டு அழைக்கிறோம் அம் மாற்றங்கள் மறைந்து ஆரோக்கிய நிலைமை மீண்டும் தோன்ற வேண்டுமானால், மருந்துகளின் துணைகொண்டு, உடல் நிலைமையில் மற்றொரு மாறுதலை ஏற்படுத்த வேண்டும்.

நமக்குள்ள ஒரே வழி அதுதான். மனிதனின் ஆரோக்கிய நிலைமையை மாற்றக் கூடிய அதாவது அவன் உடலில் நோய்க் குறிகளைத் தோற்றுவிக்கும் வல்லமை மருந்துகளுக்கு இருப்பதினால்தான் அவை நோய் தீர்க்கும் சக்தியைப் பெற்றிருக்கவேண்டும். மருந்துகளை நோயற்ற உடலில் கொடுத்துச் சோதனை செய்து இவ்விஷயத்தை நாம் மிகத் தெளிவாகவும் தூய்மையான முறையிலும் தெரிந்து கொள்ளலாம். நோயற்ற ஒருவர் உடலில் நீக்கப்படவேண்டிய (இயற்கை) நோயின் குறிகளுக்கு மாறான (செயற்கை) நோய்க் குறிகளை உண்டாக்கும் வல்லமையுள்ள (அலோபதி முறை) மருந்துகளால், அவ்வியற்கை நோயைக் குணம் செய்ய முடியாது. இரண்டாவதாகத் தரப்படும் ஹோமியோபதி மருந்து எவ்வளவு பலம் பொருந்தியதாய் இருந்தாலும் முதலாவதாகத் தோன்றிய நோயுடன் (குறிகளில்) ஒற்றுமையுள்ளதாக இல்லா விட்டால், அதனால் முதல் நோயை நீக்கவோ அழிக்கவோ குணம் செய்யவோ ஹோமியோபதி மருந்தினால் முடியாது என்பதை இயற்கையில் நாம் காண்கிறோம்.

நீக்கப்படவேண்டிய நோயின் குறிகளில் ஏதோ ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு, அக்குறிக்கு நேர் எதிரானதொரு செயற்கை நோய்க் குறியை நோயற்ற உடலிலே தோற்றுவிக்கும் மருந்துகளை அலோபதி முறைப்படி உபயோகித்து, நீடித்துள்ள நோயை எக்காலத்திலும் குணம் செய்ய முடியவே முடியாது. நோய் சிறிது காலம் தான் அடங்கி இருக்கும். பிறகு தவறாமல் கடுமையான அளவில் திரும்பிவரவே செய்யும் நீடித்துள்ள கடுமையான நோய்களிலே, தற்காலத்தில் தற்சாந்தியை அளிக்கும் விதத்தில் செய்யப்படும் சிகிச்சைகளால் எந்த பயனும் விளையாது. அலோபதி ஆண்டிபதி ஆகிய இருமுறைகளாலும் விரும்பிய பயன் விளையாது என்பதைப்பர்த்தோம். இப்பொழுது மூன்றாவதும் கடைசியுமான ஹோமியோபதி முறைதான் இருக்கிறது.

இம்முறையில் இயற்கை நோயில் காணப்படும் மொத்தக்குறிகளை அனுசரித்து மருந்து கொடுக்கப்படுகிறது. அப்படிக் கொடுக்ப்படும் மருந்து நோயற்ற உடலிலே இயற்கை நோயின் மொத்தக் குறிகளுடன் பெரும்பாலும் ஒற்றுமையுள்ள செயற்கை நோய்க் குறிகளை உண்டாக்கும் வல்லமை உள்ளதாய் இருக்கிறது. அம்மருந்தைத் தகுந்த அளவில் கொடுப்பதே மிகச் சிறந்த வழி உயிப்ப்புச் சக்தியை நோய்கள் மறைமுகமான முறையில்தான் தாக்குகின்றன. அதனால் நோய்ப் பொருள் மருந்தினால் வீழ்த்தப்பட்டு எளிதிலும் முற்றிலும் நிரந்தரமாகவும் நீக்கப்படுகிறது. முதலில் தோன்றிய ஒரு நோயுடன் ஒற்றுமையான குறிகளை உடைய மற்றொரு நோய் இரண்டாவதாகத் தோன்றியவுடன் முதல் நோய் விரைவிலும் நிரந்தரமாகவும் நீக்கப்படுவது இயற்கையாகக் காணப்படுகிறது. இவ்வியற்கை நிகழ்ச்சிகளைவிடச்சிறந்த உதாரணம் நமக்கு தேவை இல்லை.

71. மனித சமூகத்தைப் பீடிக்கும் நோய்கள் ஒவ்வொன்றும் ஒரு சில குறிகளின் சேர்க்கைதான் என்பதும் மருந்துப் பொருள்களால் நோய்களை அழிக்கவும் நோயற்ற நிலைமையை மீட்கவும் முடியும் என்பதும், இனி சந்தேகத்துக்கு இடமில்லாத விஷயங்கள் ஆகும். ஆனால் மருந்துகளுக்குச் செயற்கை நோய்க் குறிகளை ஏற்படுத்தும் வல்லமை இருக்க வேண்டும். ஆதலால் தான் நோய் தீர்க்கும் வேலை சம்மந்தமான கீழுள்ள மூன்று தகவல்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அவையாவன:

1. நோயை நீக்குவதற்காக என்னென்ன விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதை வைத்தியர் தீர்மானிப்பது எப்படி? (சுலோகம் 72-104)
2. இயற்கை நோய்களை நீக்க ஏற்றதான பொருள்கள், மருந்துகளிலுள்ள நோயுண்டாக்கும் சக்தி, ஆகியவைகளைப் பற்றிய அறிவைப் பெறுவது எவ்விதம்? (சுலோகம் 105-145)
? 3. செயற்கை நோய்களை உண்டாக்கும் இப்பொருள்களை (மருந்துகள்) இயற்கை நோயை நீக்கவதற்காக கொடுப்பதற்கு மிகச் சிறந்த வழி எது? (சுலோகம் 146-245) இனி இம் மூன்று வினாக்களுக்கும் விடைகளை காண்போம்.

முதல் வினாவுக்கு விடை:

72. மனிதனுக்கு ஏற்படக் கூடிய நோய்களைத் திடீர்வகை, நீடிக்கும் வகை என இரு வகைகளாய் பிரிக்கலாம். திடீர் வகையைச் சேர்ந்த நோய்களில் உயிர்ப்புச் சக்தி மிகக்கடுமையாகத் தாக்கப்படுவதால் நோய்க் குறிகள் மிக வேகமாய்த் தோன்றி ஒரு சில நாட்களில் மறைந்து விடுகின்றன. நீடிக்கும் வகையைச்சேர்ந்த நோய்களின் ஆரம்பம் லேசாகவும் பல சமயங்களில் சிறிது கூட வெளியில் தெரியாமலும் இருக்கும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உயிர்ப்புச் சக்தியைச் மறைமுகமான முறையில் தாக்கி,அதன் ஆரோக்கிய நிலைமையில் படிப்படியாய் மாறுதல்கள் தோன்றும்படிச் செய்கிறது. அதனால் உடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ள உயிர்ப்புச் சக்தி நோயின் ஆரம்பம் அது முன்னேறும் காலம் ஆகிய இரு சமயங்களிலும் நோயை ஒழுங்காகவோ, தகுந்த அளவிலோ எதிர்க்காமல் இருந்துவிடுகிறது. ஆகவே நோயைப் போக்கச் சக்தியற்று, மேலும் மேலும் நோயின் பிடியில் சிக்கி, முடிவிலே உடல் அழிந்து விடுகிறது. நீடிக்கும் வகை நோய்கள் மூவகையான விஷநோய் கூறுகலாலேயே உண்டாக்கப்படுகின்றன.

73. திடீர் வகை நோய்கள் பல வகைப்படும். ஒரு வகையில் அளவு மீறிய உணவை உட்கொள்ளுதல் போதிய அளவு உணவு உட்கொள்ளாமை, கடுமையான உடல் வேதனைகள், குளிரில் அடிபடுதல், அதிகச் சூடுள்ள இடங்களில் அல்லது வெய்யிலில் வேலை செய்தல் அளவு மீறிய கள்குடித்தல், சிற்றின்பத்தில் ஈடுபாடு, கடுமையான உடல் உழைப்பு, வருத்தம், கவலை, பயம், கோபம் முதலிய மன உணர்ச்சிகளின் அதிகரிப்பு முதலியன நோயைத்தூண்டும் பல காரணங்களால் திடீர் வகை நோய்கள் அக்காரணங்களுக்கு இலக்கானவர்களுக்கு மட்டும் தோன்றும். மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் நோயைத் தூண்டிய காரணம் மேலுள்ளவைகளில் ஏதோ ஒன்றாகத் தெரிந்தாலும் உண்மையில் உடலின் உடபுறத்தே உறங்கிக்கிடக்கும் சோரா எனப்படும் விஷ நோய்க்கூறு விழித்துக்கொண்டதுதான் மூல காரணமாகும். திடீர் வகை நோய் மிகக் கடுமையானதாய் இல்லாவிட்டால் அல்லது விரைவிலே அடக்கப்பட்டாலோ அல்லது தானாகவே கூட சோரா விஷ நோய்க்கூறு பழையபடி உறங்க ஆரம்பித்துவிடும்.

மற்றொரு வகையில் வெப்ப தட்ப நிலைமைகளில் ஏற்படும் மாறுதல்கள், உடலுக்குத் தீங்கிழைக்கும் கிருமிகள் ஆகியவைகளால் அங்கும், இங்குமாகப் பல இடங்களிலுள்ள பல மனிதர்கள் ஒரே சமயத்தில் நோய்களால் தாக்கபடுதல். அந்த நோய்களை ஏற்றுக்கொள்ளும் உடல்வாகு உள்ளவர்கள் மிகச்சிலராகவே இருப்பார்கள். ஒரே சமயத்தில் பலரைத் தாக்கி எல்லோரிடமும் ஒரே விதமான நோய்க் குறிகளை உண்டாக்கும் குணமுள்ள கொள்ளை நோய்களும் இவ்வினத்தைச் சேர்ந்தவைகளே. இக் கொள்ளை நோய்கள் மக்கள் நெருக்கமாய் வாழும் பகுதிகளிலே தோன்றினால் அநேகமாகத் தொற்றும் குணமுள்ளவைகளாக ஆகின்றன. பிறகு சுரங்கள் (காய்ச்சல்) தோன்றுகின்றன. ஒவ்வொரு சுரமும் தனிப்பட்ட குணமுள்ளதாக இருப்பதால் அச்சுரத்தால் தாக்கப்படும் எல்லோருக்கும் ஒரே விதமான நோய்க்குறிகள் உண்டாகின்றன.

அச்சுரத்துக்கு மருந்து கொடுத்துச் சிகிச்சை செய்யாமல் அதன் போக்கிலேயே செல்லும்படி விட்டுவிட்டாலும்கூட விரைவில் அது தானாகவே மறைந்துபோகும். அல்லது நோயாளியை கொன்றுவிடும் யுத்தங்களாலும், வெள்ளப்பெருக்கு, பஞ்சம் போன்ற இயற்கையின் பயங்கர செயல்களாலும் ஏற்படும் குழப்பங்கள் பல சமயங்களில் கொல்லை நோய்களுக்கு காரணங்களாகின்றன. சில சமயங்களில் அவை திடீர் வகையைச் சேர்ந்த விஷங்களால் தோன்றுவது உண்டு. பெரியம்மை, சின்னம்மை, கக்குவான், இருமல், தாடையம்மை, காலரா, கடற்கரைப் பிரதேசங்களில் உண்டாகும் மஞ்சள் சுரம் முதலிய நோய்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. முதலில் கூறப்பட்ட நான்கு நோய்கள் ஒருவருக்கு அவர் வாழ் நாளில் ஒரு தடவைக்கு மேல் ஏற்படுவதில்லை. மற்ற இரண்டும் எத்தனை தடவைகள் வேண்டுமாயினும் ஏற்படும் ஆனால் ஒவ்வொரு தடவையிலும் நோய்க்குறிகள் ஒன்று போலவே இருக்கும்.

74. இயற்கையில் உண்டாகும் நீடிக்கும் வகை நோய்களுடன் அலோபதிச் சிகிச்கையினால் செயற்கையாகத் தோன்றும் நீடிக்கும் வகை நோய்களையும் சேர்த்துக் கணக்கிட வேண்டியிருக்கிறது. தீங்கு விளைவிக்கும் பல மருந்துகளை ஏராளமான அளவில் கொடுப்பது மேல் பூச்சுகளிம்புகளைத் தடவுதல் பேதியுண்டாக்கும் மருந்துகளை உபயோகித்தல், அசுத்த இரத்தக் குழாயைக் கிழித்து இரத்தத்தை வெளியே எடுத்தல், அட்டைப் புழுக்களை உடலின் மீது விட்டு நீரை உறிஞ்சச் செய்தல், செயற்கைப் புண்களைச் சருமத்தின் மேல் உண்டாக்குதல் முதலிய முரட்டுத்தனமான சிகிச்சை முறைகளால் சில சமயங்களில் உயிர்ப்புச் சக்தியின் வலிமை அடியோடு அழிந்து மரணமும் நேரலாம். மரணம் நேராவிட்டாலும் கூட, நோயின் கொடிய தாக்குதல்களிலிருந்து உயிரைக் காப்பற்றுவதற்காக உடலில் மற்றொரு மாறுதலை ஏற்படுத்தும் பொறுப்பு உயிர்ப்புச் சக்தியின் மேல் விழுகிறது. அப்பொறுப்பை நியைவேற்ற அது தன்னுடைய தன்மையை படிப்படியாக மாற்றிக் கொள்கிறது. எவ்விதம் மாற்றிக் கொள்ளும் என்பது நோயின் தன்மையைப் பொறுத்தது.

அதாவது உடலின் ஏதோ ஒரு பகுதியில் உள்ள வேதனையையும் உணர்ச்சியையும் அழித்து விடலாம் அல்லது கடுமையாய் அதிகரிக்கச் செய்யலாம். ஓர் உறுப்பைத் தளரச் செய்யலாம் மற்றோர் உறுப்பைச் சுருங்க வைக்கலாம் அல்லது உடலின் ஏதோ ஒரு பகுதியினை முற்றிலும் அழிக்கவும் செய்யலாம். உடலின் உட்புறத்திலோ, அல்லது வெளிப்புறத்திலோ உள்ள ஏதோ ஓர் உறுப்பை அதன் வேலையைச் செய்ய விடாமல் தடுக்கலாம் சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் அழிவை ஏற்படுத்தும் குணமுள்ள நோய்களின் தாக்குதல்களால் உடல் முழுவதும் ஒரே சமயத்தில் அழிந்து விடாதபடி ஏதோ சில உறுப்புகளை மட்டும் அவ்வப்போது நோய்களுக்கு இரையாக்கி உயிரைக் காப்பாற்றுகிறது உயிப்ப்புச்சக்தி.

75. நீடிக்கும் வகை நோய்களிலே, பயனற்ற அலோபதிச் சிகிச்சையினால் ஏற்படும் நோய்கள் மிகவும் கொடியவை அனேகமாக நீக்க முடியாதவை. ஓர் அளவுக்கு மேல் முற்றி விட்டால் அந்நோய்களை நீக்கக்கூடிய மருந்துகளைக் கண்டு பிடிப்பது முடியாது என்பதையும் வருத்தத்துடன் குறிப்பிட வேண்டி இருக்கிறது.

76. நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்காகக் கருணையே உருவான கடவுள் நமக்கு அருளியுள்ள மருந்துகள் இயற்கையில் ஏற்படும் நோய்களையே நீக்க முடியும். அலோபதி மருந்துகளாலும் சிகிச்சையினாலும் உடலின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் பல ஆண்டுகளாய் ஏற்படும் அழிவுகளும் ஊனங்களும் உயிர்ப்புச்சக்தியினால்தான் நீக்கபடவேண்டும். அவ்வழிவுகளுடனும், ஊனங்களுடனும் நீடிக்கும் குணமுள்ள விஷ நோய்க் கூறுகள் பின்னனியில் காணப்படுமானால் அவ்விஷ நோய்க்கூறுகளை அடக்குவதற்காகத் தகுந்த உதவிகளை நாம் செய்யலாம். உயிர்ப்புச் சக்தியின் வலிமை மேற்படி அலோபதிச் சிகிச்சையினால் மிகவும் குறைந்து போய் இருந்தால் எதுவும் செய்யவே முடியாது. ஆகவே உயிர்ப்பு சக்தியின் வலிமை குறைந்து விட்டால் நோயை நீக்க முடியாது. அவ்வித நிலைமையை நீக்கத்தக்க மருந்துகள் மனிதர்களால் கண்டு பிடிக்கப்பட்ட எந்த வைத்தியத்திலும் தீர்க்கவே முடியாது. இருக்கவும் முடியாது. உயிர்ப்புச் சக்தியின் வலிமை குறைந்து விட்டால், நோயை நீக்க முடியாது.

77. கெடுதலை உண்டாக்கும் மது பானங்களை உட்கொள்ளும் பழக்கம் அளவு மீறியச் சிற்றின்பத்தில் ஈடுபடுதல், உயிர் வாழ்வதற்கு மிகத்தேவையான பொருள்களை நீண்ட நாட்களுக்கு உட்கொள்ளாமல் இருத்தல்,ஆரோக்கியக் குறைவான பிரதேசங்களிலும் (முக்கியமாகச் சதுப்பு நிலங்களில்) காற்றோட்டமில்லாத வீடுகளிலும் குடி இருத்தல், போதிய அளவு உடல் பயிற்சி இல்லாமை, நல்ல காற்றைச் சுவாசிக்காமை,அளவு மீறிய உடல் உழைப்பாலும் மன உளைச்சலாலும் தேக ஆரோக்கியம் பாழாகுதல், ஓயாத கவலை முதலிய காரணங்களால் தோன்றும் நோய்கள், இதனை திடீர் வகை என்று அழைக்கலாம். மனிதர்களால் தாமாகவே தேடிக்கொள்ளப்படும் இத்தகைய நோய்கள், அந்நோயாளிகள் ஒழுங்கான முறையில் வாழத்தொடங்கினால், உடலின் உட்புறத்தில் நீடிக்கும் குணமுள்ள விஷ நோய்க்கூறும் இல்லாவிட்டால் தாமாகவே நீங்கிவிடுகின்றன. ஆகவே இத்தகைய நோய்களை நீடிக்கும் நோய்கள் என்று சொல்லக்கூடாது.

78. நீடிக்கும் குணமுள்ள விஷ நோய் கூறுகளின் ஏதோ ஒன்றினால்தான் உண்மையான இயற்கையான நீடிக்கும் வகை நோய்கள் தோன்றுகின்றன. விஷ நோய்க் கூறுகளை முறியடிக்கத்தக்க மருந்துகளை உபயோகிக்காமல் அவைகளின் போக்குப்படிபோக அனுமதித்தால் நாளுக்கு நாள் அவை (நோய்கள்) கடுமையாகவும் அதிகரிக்கவும்தான் செய்யும். உடலையும் உள்ளத்தையும் எவ்வளவு நல்ல முறையில் வைத்திருந்தாலும் நோயாளியின் ஆயுள் முடியும் வரை அந்நோய்கள் ஒவ்வாரு நாளும் அதிகமாகிக் கொண்டு அவரைத் துன்புறுத்தவே செய்யும். இவ்வித நோய்களே உலகில் அதிக அளவிலும் மனித இனத்தின் மாபெரும் எதிரிகளாகவும் இருந்துவருகின்றன. குறிப்பு: கட்டு விடாத உடல் அமைப்பு, தூய வாழ்க்கை, உயிர்ப்புச் சக்தியின் முழு வலிமை ஆகிய எதனாலும் மேலே கூறப்பட்ட விஷ நோய்க்கூறகளால் தோற்றுவிக்கப்பட்ட நோய்களை நீக்க முடியாது. நல்ல உணவும் உறைவிடமும் பலனளிக்காது.

79. சிபிலிஸ் (மேகக்கிரந்தி நோய்) ஒன்றுதான் நீடிக்கும் குணமுள்ள விஷத்தன்மையுள்ள நோய் என்று ஓரளவு கருதப்பட்டது. தக்கப்படி மருந்துகளைக் கொடுத்துச்சிகிச்சை செய்யாவிட்டால் இந்நோய் சாகும் வரை உடலைவிட்டு நீங்காது தகுந்த மருந்துகளின் துணையில்லாமல் உயிர்ப்புச்சக்தியினால் தன்னந்தனியாக நீக்கமுடியாத நோய்களில் சைக்கோஸிஸ் (கெட்ட சதை வளரும் தன்மையுள்ள (மேகவெட்டை)) என்பது ஒன்று. நீடிக்கும் குணமுள்ள விஷப்பொருள்களில் இதுவும் ஒன்றென்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஆனால் இதுவரை அவ்வாறு கருதப்படவில்லை. ஏனென்றால் உடலின் வெளிப்புறத்தில் தோன்றும் கெட்ட சதைகளை வெட்டியெறிந்து விட்டால் நோயைக்குணம் செய்து விட்டதாக அலோபதியர்கள் நினைத்தனர். மீண்டும் மீண்டும் கெட்ட சதை தோன்றுவதை அவர்கள் கவனிக்கவில்லை.

80.மேலே குறிப்பிட்ட சிபிலிஸ் சைக்கோஸிஸ் ஆகிய இரு விஷப் பொருள்களை விட எல்லா வகையிலும் பெரியது சோரா என்று அழைக்கப்படும் விஷப் பொருளாம். (அதாவது யோனிமானியில் புண் ஏற்பட்டால் சிபிலிஸ் அந்த இடத்தில் கெட்டசதை வளர்ந்தால் சைக்கோஸிஸ் சொறி சிரங்கு ஏற்பட்டால் சோரா.) சிபிலிஸ் விஷம் யோனியில் அல்லது மானியில் புண்ணை ஏற்படுத்துவதன் மூலமும் சைக்கோஸிஸ் விஷம் கெட்ட சதை வளர்ச்சிகளின் மூலமும் உடலினுட்புறத்திலுள்ள தங்களுடைய விஷத்தன்மைகளை வெளிபடுத்துகின்றன? இவைகளைப்போலவே சோரா விஷமும் உடலின் உட்புறம் முழுவதிலும் தன் விஷத்தைப் பரப்பிய பிறகு உடலின் வெளிப்புறத்திலே அதாவது சருமத்தின் மேல் சொறி சிறங்குகளை உண்டாக்கி தான் உள்ளே இருப்பதை அறிவிக்கிறது. சில சமயங்களில் ஒரு சில சிரங்குக்கொப்பளங்கள் மட்டும் இருக்கும் தாங்கமுடியாத அரிப்பை உண்டாக்கும். இந்நோய் ஒன்றுதான் சோராவினால் எற்படுவதாக நினைக்க வேண்டாம். கணக்கிட்டுச் சொல்லமுடியாத பலப்பலநோய்களுக்கு மூல காரணம் சோராதான்.

நரம்புத் தளர்ச்சி, சங்காதோஷம் (பித்து பிடித்ததுபோல்) இருப்பவர்கள் காரணமில்லாத மன ஏக்கம், பைத்தியம், அறிவு மங்குதல், காக்கை வலிப்பு, மற்ற பல விதமான வலிப்புகள், எலும்புகள் உறுதிகுறைதல், புற்று சதைக்கட்டி, வாதநோய், மூலம் மஞ்சள் காமாலை, உடல் நீல நிறமடைதல், நீர் சுரப்பு, மாதவிடாய் வெளியாகாமை, வயிறு, மூக்கு, சுவாசகோசங்கள், மூத்திரப்பை, கருப்பை ஆகிய உறுப்பிகளிலிருந்து இரத்தம் பெருக்கெடுத்து வெளியேறுதல், காசம்,சுவாச கோசங்களில் வேக்காடு,ஆண் தன்மைக் குறைவு,பெண்களின் மலட்டுத் தன்மை,ஒற்றைத் தலைவலி,காது கேளாமை, கண்படலம், கண்பார்வை மங்குதல்,குருடாகுதல், மூத்திரக் கற்கள், பாரிச வாயு, புலன் உணர்ச்சிகளில் கோளாறு,பல வகைப்பட்ட வலிகள் என்று தனித்தனி நோய்களாய் வைத்திய நூல்களிலே பிரித்துக் கூறப்படும் எல்லாக் கோளாறுகளையும் உண்டாக்குவது இந்த சோரா விஷ நோய்க்கூறே ஆகும்.

81. மிகப் பழைமையான தொற்றும் குணமுள்ள இவ்விஷ நோய்க்கூறு நூற்றுக்கணக்கான தலைமுறைகளில் கோடிக் கணக்கான மனித உடல்களில் தோன்றி நம்பமுடியாத அளவுக்கு வளர்ந்துவிட்டது. மாபெரும் மனித சமுதாயத்தில் கணக்கிட முடியாத நோய்களாக உருவங்கொள்ள இவ்விஷ நோய்க் கூற்றுக்கு எவ்விதம் சாத்தியமாகியிருக்கிறது என்பதைக் கீழ் உள்ள காரணங்களால் நாம் ஓரளவு ஊகிக்கலாம். பல்வேறு சந்தர்ப்பங்கள் பல வகையான இம்மாதிரியான நீடிக்கும் வகை நோய்களை சோராவின் இரண்டாவது வகைக்குறிகள் தோன்ற உதவி புரிந்துள்ளன. அதைத் தவிர மனிதர்களின் உடல் அமைப்பும் விவரிக்க முடியாத அளவுக்கு வித்தியாசமாய் இருக்கிறது. ஆகவே உள்ளிருந்தும் வெளியேயிருந்தும் சில சமயங்களில் தொடர்ந்தும் தாக்கும் பலவகைப்பட்ட விஷ நோய்ப் பொருள்கள் எண்ண முடியாத பலவகைக் கோளாறுகளையும் கஷ்டங்களையும் உண்டாக்கியிருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. பண்டைக்கால வைத்திய நூல்களிலே ஒவ்வொரு கோளாறையும் தனித்தனியாய்ப் பெயரிட்டு தனிப்பட்ட நோயாக விளக்கப்பட்டிருப்பதற்கு அறியாமையே தான் காரணம். (அவர்கள் சோரா என்ற மூலத்தை அறியவே இல்லை )

82. நீடிக்கும் வகை நோய்களின் பிறப்பிடம் தான் என்று கண்டு பிடிக்கப்பட்டது? சோரா விஷ நோய்களை நீக்கவல்ல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது ஆகிய இரண்டினாலும் பெரும்பாலான நோய்களின் தன்மையை அறியும் விஷயமாக வைத்திய சாஸ்திரம் சிறிது முன்னேற்றமடைந்து விட்டது. ஆயினும் அக்கண்டுபிடிப்புகளுக்கு முன்நோயின் குறிகளையும் விசேஷக் குணங்களையும் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியமாக இருந்ததுபோல் இப்பொழுதும் ஹோமியோபதி வைத்தியர் தன்னிடம் சிகிச்சை பெறவரும் நீடிக்கும் வகை சோரா தொடர்புள்ள) நோய்கள் ஒவ்வொன்றுக்கும், ஏற்ற மருந்தைத் தேர்ந்தெடுக்க நோயின் குறிகளையும் விசேஷ குணங்களையும் கவனிக்க வேண்டியது அவசியம்தான். ஒவ்வொருநோய்க்கும் ஏற்றபடிச் சிகிச்சை செய்தால் ஒழிய உண்மையான குணம் ஏற்படுவதில்லை என்பதே அதற்குக் காரணம். நோயின் விவரங்களை ஆராய்வதில் திடீர் வகையை சேர்ந்த மிகவேகமாக வளரும் குணமுள்ள நோய்கள் நீடிக்கும் வகையைச் சேர்ந்த நோய்கள் ஆகிய இரண்டுக்கும் சிறிது வேற்றுமை உண்டு. திடீர்வகை நோய்களின் முக்கிய குறிகள் தெளிவாய்த் தெரிகின்றன. எளிதில் நம் புலன்களுக்குத் தென்படுகின்றன. நோயின் பெரும்பான்மையான விவரங்கள் வெளிப்படையாய் இருப்பதால் அதிகக் கேள்விகள் கேட்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. பல ஆண்டுகள் படிப்படியாய் வளர்ச்சியடைந்து நீடிக்கும் வகை நோய்களில் அவைகளின் விவரங்களைத் தெரிந்துகொள்வது மிகவும் கஷடமாய் இருக்கிறது. நோயின் வகையும் தோன்றிய காரணமும்:-

குறிப்பு:

டாக்டர் சாமுவேல் ஹானிமேன் அவர்கள் இரண்டு வகை வியாதிகள் தான் என்கிறார்.
1. தற்பொழுது தோன்றுவது (Acuite) என்றும், மற்றொன்று நாட்பட்டது (Chronic) என்றும், பரம்பரை விஷம். இதை மியாசம் (ஆயைளயஅ) இதன் அர்த்தம் பரம்பரை பரம்பரையாக ஆன்மாவில் ஒட்டிக் கொண்டு வரும் விஷம் என்கிறார். இந்த விஷம் எப்பொழுதும் கண்களுக்கும் எவ்வகை கருவிகளுக்கும் எப்பொழுதும் தெரியாது என்கிறார். இது எல்லா மனிதருக்கும் உண்டு என்கிறார். இதில் 3 வகை உண்டு சந்தர்ப்ப சூழ்நிலையினால் ஆன்மாவிலிருந்து விழித்து எழும்போது உடல் உறுப்புகளை தாக்கி குளருபடி செய்யும் போது அந்த குளறுபடியைத்தான் அக்கியூட் என்கிறார். மறறொன்றை நாட்பட்ட (க்ரானிக்) வியாதி என்கிறார். க்ரானிக்கின் விழிப்புதான் அக்கியூட் ஆகும். இரண்டு தான் வியாதிகள் இந்த மண் உலகில் தோன்றுகின்ற அனைத்து உயிர்களுக்கும் இவை பொருந்தும் என்கிறார். (சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவத்தில் சொல்லுகின்ற கிரக மாற்றம் தட்ப, வெப்பம் உணவு வகைகளில் வித்தியாசம் உடலில் ஏற்படுகின்ற இரசாயன மாற்றத்தை, அறிந்து கொள்ள நாடி (ஜாதகம்) போன்றவைகளை வியாதி என்றும் அதை தணிக்க பத்தியம், நம்பிக்கை, ஏற்ற உணவு, இரசாயனத்தை மாற்றதக்க மருந்து, விரதம், நோன்பு, பக்தி, பஜனை போன்றவைகளின் மூலமாக தணிக்கப்படுகிறது.)

அலோபதி மருத்துவத்தில் உடலின் மாற்றத்தை உறுப்புகளை கண்டு, உறுப்பின் தோற்றத்தை, மாற்றத்தை கண்டு அதன் சிற்றுடம்புகளின் (அனுக்களின); தோற்றத்தையும் அதன் சிதைவுகளுக்கு பின்பு ஏற்படும் தீமைகளின் வகைகளையும், மாற்றத்துக்கு ஏற்ப நோய் என்றும், நூற்றுக்கணக்கான இடப்பெயராக கிருமிகளின் பெயர்களை இப்படி பல நூற்றுகணக்கான வியாதி பெயர்களாக சொல்கிறார்கள். Dr.ஹானிமேன் எழுதிய க்ரானிக் டிசிஸ் என்ற நூலில் மூன்று விஷயங்களைப் பற்றி கூறுகிறார். பார்த்துக் கொள்ளவும். ஆனால் இன்று 17 மியாசம் வரை வந்து விட்டது. அவைகளையும் தக்க நூல்களில் பார்த்து தெரிந்து கொள்ளவும். தற்காலத்தில் வாழ்வாங்கு வாழந்து வரும் பெரியார் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வியாதிகளைப் பற்றி கூறும் போது ஹானிமேன் கூறிய வியாதிகளின் கருத்தை விட விஹ்சியதாகவும் அகன்ற ஆராய்ச்சியின் அதி நுட்பமாகவும் மிக சுருக்கமாகவும் வடிவமைத்து கூறுகிறார்.

அதாவது நமக்கு முன்னதாக தோன்றிய தலைமுறையில் சென்று கொண்டிருந்தால் ஓர் அறிவு உயிரினத்திலிருந்து தான் நாம் வந்திருப்போம் என்று தெரியும். அது முதல் இன்று வரை பிறருக்கு செய்த பாவங்கள் பெற்ற சாபங்களாக மாறி நமது உடல் மையப்பகுதியில் கண்களுக்கும் கருவிகளுக்கும் தெரியாத பெட்டகத்தில் பதிவாகி உள்ளது. அது அவ்வவ்போது வியாதிகளாக வெளிவரும். ஒவ்வாமை தான் வியாதி என்றும் கூறுகிறார். ஹானிமேன் சொல்லிய க்ரானிக் டிசிசை சஹ்சித கர்மம் என்கிறார். அக்கியுட்டை பிரார்த்த கர்மம் என்கிறார். மியாசத்தின் வகையை சொல்லி, மருந்தை சொன்னவர் ஹானிமேன் அவரையும் விஹ்சிய கருத்தாக மகரிஷி இந்த இடத்தில் கூறியது என்னவென்றால் மியாசம் தோன்றியதையும் விதத்தையும் கூறி அதை தடுத்து கொள்ளுகின்ற வழியையும் கூறுகிறார். ஆகவே ஹானிமெனை மகரிஷி அவர்கள் இன்று விஹ்சிவிட்டார் என்பது தெரிகிறது அல்லவா?

83. ஒவ்வொரு நோயையும் தனிப்பட்ட முறையில் பரிசோதனை செய்யும் விஷயமாக நான் இங்கு பொதுவான வழிமுறைகளை தருகின்றேன். ஆதலால் தன்னிடம் வரும் பல கேசுகளில் ஒவ்வொன்றுக்கும் ஏற்ற வழிமுறைகளை வைத்தியர் வகுத்துக் கொள்ள வேண்டும். நோயைப் பற்றி முன்கூட்டியே ஒரு முடிவு கொள்வதை தவிர்த்து பகுத்தறிவைத் தீட்டிக்கூர்மையாக்கி நோயின் விவரங்களை அறிவதில் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே செலுத்தி அதன் உருவை அமைப்பதில் ஆழ்ந்த பற்றுக் கொள்ள வேண்டும். அவர் கடமையாதெனில் மிக நுணுக்கமாக நோயை பற்றி கேட்க வேண்டும்.

84. நோயினால் தான் படும் துன்பங்களின் வரலாற்றை நோயாளி விவரிக்கிறார். அவர் அருகே இருப்பவர்கள் நோயாளி தன் துன்பங்களைப் பற்றிக் கூறியது,அவன் நடந்து கொண்ட விதம், அவனிடம் கண்ட விஷயங்கள் ஆகியவைகளை உரைக்கின்றனர். வைத்தியர் நோயாளியைப் பார்க்கிறார். எல்லோரும் உரைத்த விவரங்களைக் கேட்கிறார் நோயாளியிடம் என்னென்ன மாறுதல்களும் வழக்கத்துக்கு மாறான விஷயங்களும் காணப்படுகின்றன என்பதைத் தன் மற்ற புலன்களால் மதிப்பிடுகிறார். நோயாளியும் அவருடைய நண்பர்களும் அவரிடம் கூறிய எல்லா விஷயங்களும் அவர்கள் கூறிய வண்ணமே ஓர் எழுத்தைக் கூட மாற்றாமல் சரியாக எழுதிக்கொள்கிறார். தான் மௌனமாய் இருந்து கொண்டு அவர்கள் சொல்லக்கூடிய எல்லா விஷயங்களையும் சொல்ல அனுமதிக்கிறார். சம்பந்தமில்லாத விஷயங்களுக்குத் தாவினாலொழிய அவர்கள் பேச்சில் குறுக்கிடமாட்டார். அவர்கள் சொல்லும் விவரங்களில் முக்கியப் பகுதிகளைக் குறித்துக் கொள்ள வசதியாய் இருக்க சோதனையின் துவக்கத்திலேயே மெதுவாக பேசும்படி அவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

*உதாரணமாக, இடைமறித்துக் குறுக்குக் கேள்விகளை கேட்டால் அவர்கள் சொல்ல வந்த விசயங்களை மறந்து விடுவார்கள் அவ்வாறு மறந்துப்போன விசயங்களை பிறகு எவ்வளவு முயற்சித்தாலும் ஞாபகத்துக்குத் கொண்டு வர முடியாமல் போகலாம்.

85. நோயாளி அல்லது அவருடைய நண்பர்கள் குறிப்பிடும் ஒவ்வொரு புதிய சந்தர்ப்பத்தையும் (நோய்க்குறி) தனித்தனி வரிகளில் ஒன்றன் கீழ் ஒன்றாகப்பிரித்து இடையில் தாராளமாய் இடம் விட்டு எழுதி வரவேண்டும். அவ்வாறு செய்தால் முதலில் தெளிவற்ற முறையில் கூறப்பட்ட ஒரு விஷயம் பிறகு தெளிவாகச் சொல்லப்பட்டால் அதை உடனே ஏற்ற இடத்தில் குறித்துக் கொள்ள வசதியாய் இருக்கும்.

86. தாமாகவே சொல்லக் கூடிய (நோயின்) எல்லா விவரங்களையும் நோயாளியும் அவருடைய நண்பர்களும் கூறி முடித்த பின் வைத்தியர் அவர்கள் கூற்றிலிருந்து வெளிப்பட்ட முக்கியமான குறிகள் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு ஒவ்வொன்றையும் பற்றிய திட்டமான விவரங்களைத் தெரிந்து கொள்ளப் பின் வரும் முறையைக் கையாள்கிறார். தன்னிடம் கூறப்பட்ட எல்லாக் குறிகளையும் ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துக்கொண்டு அவைகளைப் பற்றி மேலும் சில தகவல்களை விசாரிக்கிறார்.

உதாரணமாக, எந்தச் சமயத்தில் இந்தக்குறி தோன்றியது? இதுவரை அவர் உட்கொண்டு வந்துள்ள மருந்தைச் சாப்பிட ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தோன்றியதா? அல்லது தற்போது மருந்தை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதுதான் தோன்றியதா? அல்லது மருந்து சாப்பிடுவதை நிறுத்திய சில நாட்களுக்குப் பிறகுதான் ஏற்பட்டதா? எந்த இடத்தில் ஏற்பட்டது அந்த வலியின் தன்மை என்ன? எவ்விதமான (உணர்ச்சி) வலி அல்லது வலி (உணர்ச்சி) குறிப்பாக எந்த இடத்தில் இருந்தது? வலி விட்டு விட்டும் தானாகவும் பல்வேறு சமயங்களிலும் தோன்றியதா? அல்லது இடைவெளிவிடாமல் தொடர்ச்சியாய் நீடித்திருந்ததா? எவ்வளவு காலம் அது நீடித்திருந்தது? இரவிலா? பகலிலா? எந்நேரத்தில் உடலை எவ்விதம் வைத்துக்கொண்டிருந்தால் வலி மிகக் கடுமையாய் இருந்தது, அல்லது முற்றிலும் மறைந்திருந்தது, ஒவ்வொரு குறியையும் அதன் திட்டமான தன்மையைக் குறித்து தெள்ளத் தெளிவாய்த் தெரிந்து கொள்ளவேண்டும்.

87. இவ்விதம் நோயின் ஒவ்வொரு குறியையும் பற்றிய திட்டமான விவரங்களை வைத்தியர் சேகரிக்கிறார். ஆனால் நோயாளி உண்டு அல்லது இல்லை என்பதுபோன்ற ஒரே வார்த்தையில் அவர் விடை தரக்கூடிய கேள்விகளை எச் சமயத்திலும் நீங்கள் கேட்க கூடாது (*உதாரணமாக இந்த அல்லது அந்த நோய்க்குறி இருந்ததா? என்று வைத்தியர் கேட்பது கூடாது. நோயாளி உண்மைக்கு மாறான விடையையும் தன் குறிகளைப்பற்றிய பொய்யான விளக்கத்தையும் தருவதற்கு இடம் அளித்தார் வைத்தியர் என்ற பழிச் சொல்லுக்கு ஒருபொழுதும் நீங்கள் ஆளாகக்கூடாது.) இல்லாவிட்டால் சோம்பல் காரணமாகவோ அல்லது வைத்தியரைத் திருப்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தாலோ உண்மைக்குச் சற்று மாறான அல்லது உண்மைக்கலப்பே இல்லாதவண்ணம் உண்டு அல்லது இல்லை என்று பதில் அளித்துவிடுவார். அதிலிருந்து நோயின் உண்மை உருவை உணர முடியாமலும் ஏற்ற சிகிச்சை முறையைக் கடைப்பிடிக்க முடியாமலும் போய்விடும்.

88. நோயாளியும் அவருடைய நண்பர்களும் சுயமாகவே கூறும் இவ்விவரங்களை உடலின் பல பகுதிகள், வேலைகள், மனக்குறிகள் ஆகியவைகளைப் பற்றி யாதொன்றும் குறிப்பிடப்படாமல் இருந்தால் வைத்தியர் அவ்விஷயமாக என்னென்ன விவரங்கள் இருக்கின்றன என்று கேட்கவேண்டும். அப்படிக் கேட்கப்படும் கேள்விகள் பொதுப்படையாகத்தான் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அவைகளைப் பற்றிய முழு விவரங்களையும் அவர்கள் குறிப்பிடுவார்கள். உதாரணமாக, மலத்தின் தன்மை என்ன? எப்படி அவர் மூத்திரத்தைக் கழிக்கிறார்? பகலிலும் இரவிலும் தூக்கம் எப்படி இருக்கிறது? அவருடைய சுபாவம் கலகலவென்று பேசுதல்? ஞாபக சக்தி ஆகியவை எப்படி இருக்கிறது? தாகம் இருக்கிறதா? வாயின் சுவை எப்படி இருக்கிறது, எவ்வகையான உணவையும் பானங்களையும் அவர் மிக விரும்புகிறார். அவருக்கு எதன்மேல் வெறுப்பு இருக்கிறது.ஒவ்வொரு பொருளும் அதற்கு உரியதான சுவையுடன் இருப்பதாகத் தோன்றுகிறதா அல்லது மாறான சுவையுள்ளதாகத் தெரிகிறதா? உணவு அல்லது பானங்களை உட்கொண்ட பிறகு அவருக்கு ஏற்படும். உணர்ச்சிகள் என்னென்ன? தலை, கை கால்கள், அடிவயிறு ஆகியவைகளைப் பற்றிச் சொல்வதற்கு ஏதாவது விவரங்கள் இருக்கின்றனவா?

89. நோயாளிக்கு நோயினால் ஏற்படும் உணர்ச்சிகளின் விவரங்களை அறிய அவர் கூறவதையே நாம் நம்பவேண்டி இருக்கிறது. ஆதலால் சுயமாகவும் கேட்ட கேள்விகளுக்கு விடை அளித்ததின் மூலமும் தேவையான விவரங்களைத் தெரிவித்து நோயின் உருவை ஏறக்குறைய நல்ல முறையில் வெளியிட்ட பிறகு மேலும் சில விவரங்களை வேண்டுமென்று வைத்தியர் நினைத்தால் அவர் விசேஷமான கேள்விகளைத் தாராளமாய்க்கேட்கலாம்.

உதாரணமாக, எவ்வளவு தடவைகள் மலம்கழிகிறது மலத்தின் தன்மை என்ன? மலம் வெண்மை நிறமாய் இருந்திருந்தால் அது வெறும் சளிப்பொருளாய் இருந்ததா? அல்லது மலமாகவே இருந்ததா? மலம் கழிந்த போது வலி இருந்ததா? அல்லது இல்லையா? வலிகளின் தன்மை என்ன? எந்த இடத்தில் ஏற்பட்டன? நோயாளி வாந்தி செய்த பொருள் எது? வாயிலுள்ள கெட்ட சுவை? அழுகியது போல் இருக்கிறதா? புளிப்பாய் இருக்கிறதா? கசப்பாய் இருக்கிறதா? அல்லது வேறு எப்படி இருக்கிறது? கெட்ட சுவை எப்போது ஏற்படுகிறது? சாப்பிட்ட பிறகா? சாப்பிடும்போதா? சாப்பிடுவதற்கு முன்பா? பகலில் எந்த நேரத்தில் அது அதிகமாய் இருக்கிறது? வாயிலிருந்து மேல்நோக்கி ஏப்பம், நெஞ்சுகரிப்பு முதலியவை வந்தால் அவைகளின் சுவை என்ன? மூத்திரம் கழிக்கும் சமயத்திலே கலங்கி இருக்கிறதா அல்லது வெளியாகிச் சிறிது நேரம் சென்றபிறகு கலங்கலாய் மாறுகிறதா? வெளியேறும் சமயத்தில் அதன் நிறம் என்ன? மூத்திரத்தைப் பிடித்து வைத்திருந்தால் அடியில் தேங்கும் வண்டலின் நிறமென்ன? தூங்கும்போது நோயாளி எவ்விதம் நடந்து கொள்கிறார்? நோயின் துன்பத்தை தன்னால் பொறுக்க முடியவில்லையே என்ற பாவனையில் அழுகிறாரா பேசுகிறாரா? அல்லது வீறிட்டுக் கதறுகிறாரா, தூங்கும்போது திடுக்கிட்டு எழுந்து கொள்கிறாரா? அவர் குறட்டை விட்டால், காற்றை உள்ளிழுக்கும் நேரத்திலாவது வெளியே விடும் நேரத்திலாவது? மல்லாந்துதான் படுத்துக்கொள்கிறாரா? அல்லது வேறு எவ்விதம் படுத்துக்கொள்கிறார்? தன் உடல் முழுவதையும் நன்றாக மூடிப் போத்திக்கொள்கிறாரா? அல்லது மேலே துணிபடுவதை அவரால் பொறுக்கமுடியவில்லையா? தூக்கத்திலிருந்து சுலபமாக விழித்துக் கொள்கிறாரா அல்லது மிக ஆழ்ந்த தூக்கம் உண்டாகிறதா?ஓவ்வொரு நோய்க் குறியும் எவ்வளவு நேரத்துக்கொரு முறை தோன்றுகிறது.

ஒவ்வொரு குறியும் மறுபடி தோன்றுவதற்குக் காரணமாய் அமைவது எது? உட்கார்ந்து கொண்டிருப்பது, படுத்துக்கொண்டிருப்பது, நின்று கொண்டிருப்பது, நடமாடிக்கொண்டிருப்பது முதலிய செயல்களில் எதைச் செய்து கொண்டிருக்கும்போது அது தோன்றுகிறது. அது வழக்கமாய் எச்சமயத்தில் தோன்றுகிறது பட்டினி கிடக்கும் போதா? காலையிலா? மாலையிலா? உணவு உட்கொண்ட பிறகா? உடம்பில் குளிர் எப்பொழுது வர ஆரம்பித்தது லேசான சிலுசிலுவென்ற உணர்ச்சி மாத்திரம் இருந்ததா? அல்லது நல்ல குளிர் இருந்ததா? அப்படியானால் எந்தெந்த இடங்களில் குளிர் இருந்தது? குளிரும் உணர்ச்சி உள்ளூர இருந்தபோதிலும் தொட்டுப் பார்க்கும் போது உடம்பு சூடாய் இருந்ததா? உடலில் உதரல் இல்லாமல் வெறும் குளிர் உணர்ச்சி மட்டும் இருந்ததா? முகத்தில் சிவப்பு இல்லாமல் சூடான உணர்ச்சி மட்டும் இருந்ததா? தொடும்போது எந்தெந்த பகுதிகள் சூடாக இருந்தது தொடும் போது உடலில் சூடு எதுவும் தெரியாமல் உள்ளூரச் சுடும் உணர்ச்சி இருந்ததா? குளிர் எவ்வளவு நேரம் இருந்தது? சூடு எவ்வளவு நேரம் இருந்தது? தாகம் எப்பொழுது தோன்றியது-குளிர் இருந்த சமயத்திலா? அல்லது சூடு இருந்த சமயத்திலா? அல்லது அவைகளுக்கு முன்னதாகவா அல்லது பிறகா? தாகம் எவ்வளவு கடுமையாய் இருந்தது.

குடிப்பதற்கு எவ்வித பானம் வேண்டுமென்று நோயாளி கேட்டார்? வியர்வை எப்பொழுது ஏற்பட்டது-சூடு மறைந்தவுடனா அல்லது ஆரம்பத்திலா? அல்லது சூடு மறைந்து எவ்வளவு நேரம் கழித்து ஏற்பட்டது? தூங்கும் போதா அல்லது எவ்வளவு நேரம் கழித்து ஏற்பட்டதுடூ தூங்கும் போதா அல்லது விழித்துக் கொண்டிருக்கும் போதா? வியர்வையின் அளவு என்ன? வியர்வை சூடாய் இருந்ததா? அல்லது ஜில்லிப்பாய் இருந்ததா? எந்தப் பாகங்களில் வியர்வை ஏற்பட்டது? அதன் வாசனை என்ன? குளிரின் போது அல்லது குளிர் வருவதற்கு முன் நோயாளிக்கு ஏற்பட்ட துன்பங்கள் என்னென்ன சூடு ஏற்பட்ட போது இருந்த துன்பங்கள் என்னென்ன? அதற்கு பிறகு என்ன ஏற்பட்டது? வியர்வை நிலையிலும் அதற்குப் பிறகும் என்ன ஏற்பட்டது? முதலிய விவரங்களைக் கேட்டறிய வேண்டும்.

90. இவ்விதம் விவரங்களை எழுதி முடித்தவுடனே நோயாளியிடம் தானாகவே கவனித்து அறிந்தவைகளையும் * வைத்தியர் குறித்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு கவனித்து அறியப்பட்ட விவரங்களில் எவை எவை நோய் வருவதற்கு முன்னதாக இருந்தன என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

* உதாரணமாக நோயாளியைப் பார்க்கச் சென்றபோது அவர் எவ்விதம் நடந்துகொண்டார். கலகலவென்று? பேசாமல் ஏக்கம் பிடித்திருத்தல்?சண்டை பிடிக்கும் குணம்? மிக அவசரமாகப் பேசுதல்? வேலை செய்தல்? கண்ணீர் விட்டு அழுதல் ? கவலைப்படுதல்? நம்பிக்கை இழத்தல்? வருத்தமாய் இருத்தல்? நம்பிக்கையுடன் இருத்தல் ? அமைதியாய் இருத்தல் ஆகிய பல தன்மைகளில் நோயாளியிடம் காணப்பட்டது எது? மயக்கமாய் இருந்தாரா அல்லது சொல்வதைப் புரிந்துகொள்ளமுடியாத அளவு மந்தமாய் இருந்தாரா? பேசும் போது அவர் குரல் எப்படி இருந்தது? கட்டை குரலாய் இருந்ததா அல்லது கம்மிய குரலாய் இருந்ததா அல்லது புரிந்து கொள்ள முடியாத படி இருந்ததா? அவருடைய முகம்? கண்கள் சருமம் எப்படி இருந்தது? நிறம் எப்படி இருந்தது? அவருடைய முகத்தோற்றம்? கண்கள் ஆகியவை எந்த அளவுக்குக் கலையாக இருந்தன. அவருடைய நாக்கு? சுவாசம்? வாயின் நாற்றம்?செவிப்புலன் ஆகியவைகளின் நிலைமை எப்படி இருந்தது? கண்ணின் கருமணிகள் விரிந்திருந்தனவா? சுருங்கி இருந்தனவா? இருட்டிலும் வெளிச்சத்திலும் பார்வையின் மாற்றம் எவ்வளவு வேகமாகவும் எந்த அளவிலும் ஏற்பட்டது? நாடியின் தன்மை என்ன? அடி வயிறு எப்படி இருந்தது? தொட்டுப்பார்க்கும்போது அவர் உடலின் ஒவ்வொருபகுதியும் எப்படி எப்படி இருந்தது. அதாவது கசகசவென்று வியர்வையுடன் இருந்ததாடூ அல்லது சூடாய் இருந்ததா? எப்படிப் படுத்திருந்தார்.

அதாவது தலையைப் பின் பக்கம் வளைத்துக்கொண்டா? பாதி அல்லது முழுவதும் வாயைத் திறந்துகொண்டா? கைகளைத் தலைமேல் வைத்துக்கொண்டா? மல்லாந்து கொண்டா? அல்லது வேறு எப்படி? படுக்கையை விட்டுத் தானாகவே எழுந்திருக்க என்ன முயற்சி செய்தார். இன்னும் இவை போன்ற குறிப்பிடத் தகுந்த பல விவரங்களையும் வைத்தியர் கவனித்தறிய வேண்டும்.

91. இதற்கு முன் மருந்தைச் சாப்பிட்டுக்கொண்டிருந்த சமயத்தில், நோயாளியிடம் காணப்பட்ட குறிகள் நோயின் உண்மையான உருவத்தை காட்டுவதில்லை. மருந்து சாப்பிடுவதற்கு முன்னதாகவும் மருந்து சாப்பிடுவதை நிறுத்திச் சில நாட்கள் கழிந்த பிறகும் காணப்படும் நோய்க் குறிகளும் கோளாறுகளுமே நோயின் உண்மையான உருவத்தைத் தெரிந்து கொள்ள உதவி செய்கின்றன. ஆகவே அவைகளை வைத்தியர்கள் விசேஷமாக அறிந்துகொள்ளவேண்டும். நோய் நீடிக்கும் வகையைச் சேர்ந்ததாய் இருந்து அது வைத்தியரிடம் வரும் வரை நோயாளி ஏதோ ஒரு மருந்தை சாப்பிட்டுக்கொண்டிருந்தார் என்றால், அந்த மருந்தை சாப்பிடுவதை நிறுத்திச் சில நாட்களான பிறகு வரும்படிச்சொல்லவேண்டும். அல்லது (நோயாளியைத் திருப்தி செய்வதற்காக) மருந்து சேராத ஒரு பொருளை (மாத்திரைகள் அல்லது தண்ணீர்) உட்கொள்ளும் படிக் கொடுத்து விட்டுச் சில நாட்கள் சென்றவுடன் நோய்க் குறிகளை விரிவாய்ச்சோதித்தறியவேண்டும் அப்பொழுதுதான் நோயின் இயற்கை வடிவைத் தெளிவாய் அறியமுடியும்.

92. ஆனால் நோய் மிக வேகமாக வளர்ச்சியடையும் குணமுள்ளதாய் இருக்கிறது. அதன் ஆபத்தான குறிகள் சிறிதளவும் தாமதத்துக்கும் இடம் தரவில்லை. மருந்து சாப்பிடுவதற்கு முன் இருந்த நோய்க்குறிகளைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவ்விதமான ஒரு நிலைமையில் நோயாளியிடம் தென்படும் நோய்க்குறிகளை (அவை மருந்துகளால் மாற்றப்பட்டிருந்தாலும்) உள்ளதை உள்ளபடி கவனிப்பதுடன் வைத்தியர் திருப்தியடைய வேண்டும். அப்பொழுதுதான் மருந்துகளாலும் முதலில் வந்த நோயினாலும் உண்டாக்கப்பட்டுள்ள கூட்டு நோயின் முழு உருவையும் தன்மையையும் அறிந்து கொள்ளலாம். உண்மையான நோயை விடத் தகுதியற்ற மருந்துகளால் விளையும் கேடுகள் ஆபத்தானவை. ஆகவே விரைவில் தகுந்த ஹோமியோபதி மருந்தைக் கொடுத்தும் சிகிச்சை செய்ய வேண்டும். விஷத்தன்மையுள்ள மருந்துகளால் நோயாளியின் உயிர் பறிக்கப்படுவதை முதலில் தடுக்கவேண்டும்.

93. நோய் தோன்றுவதற்குக் காரணமான விஷத்தை நோயாளியை அல்லது அவருடைய நண்பர்களைத் தனியே அழைத்துக் கேட்டால் அவர்கள் தாமாகவே சொல்லிவிடுவார்கள். அல்லது சாமார்த்தியமாகக் குறுக்குக் கேள்விகளைக் கேட்டும் அறியலாம்.

* உதாரணமாக விஷம் அருந்துதல் அல்லது தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தல் இயற்கைக்கு மாறான முறைகளில் சிற்றின்பம் பெறுதல் அளவு மீறி சிற்றின்பத்தில் ஈடுபடுதல். அளவுக்கு அதிகமான சாராயம், காப்பிப்பானம்,உணவு வகைகள் ஆகியவைகளை உட்கொள்ளுதல், துன்மார்க்க நோய்களைச் சம்பாதித்துக் கொண்டிருத்தல், நிறை வேறாத காதல், பொறாமை, குடும்பத்தொல்லைகள், கவலை, குடும்பத்தில் நேர்ந்த நஷ்டத்தினால், வருத்தம், கௌரவமாக நடத்தப்படாமை, மதிப்பை இழத்தல், வஞ்சம் தீர்க்க முடியாமல் போகுதல், பன விஷயத்தில் சங்கடமான நிலைமை மூட நம்பிக்கை காரணமாய் ஏற்படும் பயம், பசி, பிறப்பு உறுப்புகள் சரிவர அமைந்திராமை, ஏதோ ஓர் உறுப்பு பிதுங்கி இருத்தல், இடம் நழுவி இருத்தல் முதலிய பல அந்தரங்கமான விவரங்களை நோயாளியோ அல்லது அவருடைய நண்பர்களோ தாமாகச் சொல்லத் தயங்கும்போது வைத்தியர் சாமார்த்தியமாய்க் கேள்விகள் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும்.

94. நீடிக்கும் வகையைச் சேர்ந்த நோய்களைப்பற்றி ஆராயும்போது, நோயாளி செய்து வரும் தொழில், வாழும் விதம்,உண்ணும் உணவு குடும்பச் சூழ்நிலை முதலிய பல விஷயங்களையும் நன்றாகச் சீர் தூக்கிப்பார்க்க வேண்டும். அவ்வாறு பார்த்தால் அவ்விஷயங்களில் எவை எவை நோயை உண்டாக்குகின்றன அல்லது நீடிக்கச் செய்கின்றன என்பதை நிர்ணயித்து அவைகளை விலக்கினால் விரைவில் குணம் காண வழி செய்யலாம் .

*பெண்களுக்கு ஏற்படும் நீடிக்கும் வகை நோய்களில் கருவுற்றிருத்தல், மலட்டுத்தன்மை, சிற்றின்ப ஆசை, பிள்ளைபேறு, கருச்சிதைவு, குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தல், மாதவிடாய் போக்கின் தன்மை, ஆகிய விவரங்களை முக்கியமாகத் தெரிந்து கொள்ளவேண்டும் கடைசியாகக் கூறப்பட்ட விவரத்தைப் பற்றி இன்னும் விரிவாய்த் தெரிந்துகொள்ளத் தவறக் கூடாது. போக்கு உரிய காலத்துக்கு முன்னதாக அடிக்கடி ஏற்படுகிறதா? அல்லது தாமதமாய் ஏற்படுகிறதா? அதன் பொதுவான அளவு என்ன? எவ்வளவு கறுப்பு நிறமாய் இருக்கிறது. போக்கு தோன்றுவதற்கு முன்போ அல்லது நின்ற பிறகோ வெள்ளை நீர்க்கழிவு வெளியாகிறதா? போக்கு உள்ள போதோ, முன்னோ,பிறகோ ஏற்படக்கூடிய உடல் மனக் கோளாறுகள், உணர்ச்சிகள், வலி ஆகியவைகளின் விவரம் வெள்ளை நீர்க்கழிவு இருந்தால் அதன் தன்மை அது வெளியாகும் போது காணப்படும் உணர்ச்சிகள், கழிவு நீரின் அளவு, எவ்வித நிலைமைகளில், சமயங்களில் அது தோன்றுகிறது ஆகியவைகளையும் கேட்டறிய வேண்டும்.

95. நீடிக்கும் வகை நோய்களில் மேலே குறிப்பிட்ட நோய்க் குறிகளையும் மற்ற விவரங்கள் அனைத்தையும் மிகுந்த கவனமாய்க் கேட்டறியவேண்டும். அத்துடன் மிக அற்பமானவை என்று கருதக் கூடிய சில்லறைக் குறிகளைக்கூட விட்டுவிடக்கூடாது. இதற்குக் காரணம் இரு வகைப்படும்
முதலாவது:
நீடிக்கும் வகை நோய்களில் சில்லறைக் குறிகள் மிகுந்த விசேஷத்தன்மை பெற்றவைகைளாய் இருக்கின்றன. திடீர் வகை நோய்களில் அவ்விதம் இல்லை. ஆதலால் நீடிக்கும் வகை நோய்களைக் குணம் செய்ய வேண்டுமானால் விசேஷத் தன்மை பொருந்திய சில்லரைக் குறிகளைக் கவனிக்காமல் இருக்க முடியாது.
இரண்டாவது:
நோயினால் ஏற்படும் வேதனைகளை நீண்ட காலமாய் அனுபவித்துப்பழக்கப்பட்டு விட்டதால் சில்லறைக்குறிகளை நோயாளிகள் அவ்வளவாக கூறாமல் அலட்சியமும் செய்யலாம். தம் உடம்புடனேயே பிறந்தது என்றும் நினைக்கலாம். பதினைந்து அல்லது இருபது ஆண்டுகாலமாய் நோயின் வேதனைகளுக்குப் பழக்கப்பட்டுவிட்ட அவர்கள் அச் சில்லறைக் குறிகள் நோயினால் ஏற்பட்டவை, ஆரோக்கிய நிலைமைக்கு மாறுபட்டவை என்று நாம் கூறினால் எளிதில் நம்பமாட்டார்கள். ஆனால், சில்லறைக் குறிகள் விசேஷத்தன்மை வாய்ந்தவை ஏற்ற மருந்தைத் தேர்ந்தெடுப்பதில் பல சமயங்களில் உதவியாய் இருப்பவை என்பதை வைத்தியர் மறக்கக் கூடாது.

96. நோயாளிகளின் குண விசேஷங்கள் பலவிதமாய் மாறுபட்டு இருக்கின்றன. உண்மையான காரணம் எதுவும் இல்லாமல் தமக்கு ஏதோ ஒரு நோய் வந்து விட்டதாக எண்ணி வீணாக கவலைப் படுகிறவர்கள், நோயின் வேதனைகளைத் தாங்க முடியாத உடல் அமைப்பு உள்ளவர்கள் ஆகியோர் வேதனையிலிருந்து விரைவில் விடுபட வேண்டும் என்ற துடிப்பினால் வேகமாக தம் நோய்க் குறிகளை மிகைப்படுத்திக் கூறுவார்கள்.

97. மற்றும் சிலர் சோம்பல் போலி வெட்கம் அடக்கமான சுபாவம் அல்லது மனோ பலவீனம் ஆகியவைகளால் தம் நோய்க்குறிகளில் பலவற்றைச் சொல்லாமல் இருந்துவிடுவார்கள் சொல்லப்படும் குறிகளும் தெளிவாய் இருக்காது. அக்குறிகளில் சில உபயோகமற்றவை என்று அவர்கள் கூறலாம்.

98. நோயாளியின் நண்பர்களும் அவரைக் கவனிப்போரும் சொல்லக்கூடிய நோய்க் குறிகளில் சில உண்மைக்கு மாறாகவும் தவறாகவும் இருப்பது இயல்பு ஆதலால் தன் நோயைப் பற்றி வைத்தியர் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடன் நோயாளி கூறும் விவரங்களையே நாம் பெரிதும் மதிக்க வேண்டும். அதே போல எல்லா நோய்களிலும் குறிப்பாக நீடிக்கும் வகை நோய்களில் அவைகளின் உண்மையான, முழு உருவங்கள் விசேஷக் குறிகள் ஆகியவைகளை விசாரிக்கும் பொழுது மனித சுபாவத்தை அறிந்து, பகுத்தறிவை உபயோகித்துப் பொறுமையைக் கடைப் பிடித்து நடக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

99. மொத்தத்தில் திடீர் வகை நோய்களையும் தோன்றிச் சில நாட்களே ஆன நோய்களையும் விசாரிப்பது வைத்தியருக்கு மிக மிகச் சுலபமாய் இருக்கிறது. ஆரோக்கிய நிலைமையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் நோய்க்குறிகளும் தோன்றிச்சில நாட்களே ஆவதால் அவை நோயாளி அவர் நண்பர்கள் ஆகியோர்களின் நினைவில் பசுமையாய் இருக்கின்றன. அது போன்ற சமயங்களிலும் நோயின் விவரங்கள் அனைத்தையும் வைத்தியர் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்தான் என்றாலும் அவர் விசாரனை செய்ய வேண்டியது மிகக் குறைவாய் இருக்கும், நோயாளியும் அவருடைய நண்பர்களும் தாமாகவே பெரும் பகுதியான விவரங்களைக் கூறிவிடுவார்கள்.

100. கொள்ளை நோயாகவோ அல்லது இங்கொன்றும் அங்கொன்றுமாகவோ தோன்றும் நோய்களின் மொத்தக் குறிகளைப் பற்றி விசாரணை செய்கையிலே, அவைகளைப் போன்ற ஒரு நோய், அதே பெயரிலோ அல்லது வேறு பெயரிலோ, உலகத்தில் எப்பொழுதாவது தோன்றியிருக்கிறதா இல்லையா என்று ஆராயவேண்டிய அவசியம் இல்லை. அவ்வகையான ஒரு நோயில் தென்படும் புதுமையாகவோ அல்லது வினோதமாகவோ அந்நோயைச் சோதிப்பதிலோ சிகிச்சை செய்வதிலோ மாறுதல் ஏற்பட முடியாது. ஏனெனில் உலகில் தோன்றும் ஒவ்வொரு நோயையும் புத்தம் புதியதாகவே மதித்து அதை முற்றிலும் விசாரித்தறிய வேண்டும். உண்மையைப் புறக்கணித்துக் கற்பனையை செய்வது எச்சமயத்திலும் கூடாது. தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளியின் நோய் முழுவதுமோ அல்லது அதன் ஒரு பகுதியோ தனக்கு தெரிந்ததுதான் என்று முன்கூட்டியே அபிப்பிராயம் கொள்ளாமல் இருக்க வேண்டும்

. எல்லாச்சமயங்களிலும் நோயின் எல்லா விவரங்களையும் கவனமாய்ச் சோதித்தறிய வேண்டும். உண்மையான குற்றமில்லாத முறையில் வைத்தியத் தொழில் புரிய ஆவல் உள்ளோரின் விருப்பம் நிறைவேற இதுவே வழி. ஊன்றிக் கவனித்தால் உலகில் கொள்ளை நோயாகத் தோன்றும் ஒவ்வொரு நோயும் பல விஷயஙகளில் அதற்கு முன்னதாகத் தோன்றிய எந்தப் கொள்ளை நோயுடனும் சிறிதளவு கூட ஒற்றுமையுள்ளதாக இல்லை. தொற்றும் குணமுள்ள ஒரு வகைப் பொருளால் (கிருமிகளால்) உற்பத்தி செய்யப்படும் பெரியம்மை, சின்னம்மை முதலிய பெருவாரி நோய்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு.