குறிப்பு

ஆகவே தான் நமது நாட்டில் கங்கை, காவிரி போன்ற புனித நதிகளிலும் மற்றும், குற்றாலம், பாபநாசம், சிவசமுத்திரம், ஒகேனக்கல், கொல்லிமலை, மங்கி பால்ஸ் போன்ற இயற்கை மூலிகை கலந்து ஏறி ஓடிவரும் நீர் வீழ்ச்சிகளில் குளிப்பது, ஆற்றுப்படுகை, ஏரி, ஆறுகளில் ஓடும் நதிகளில் நீராடும் பழக்கம் இதை தீர்த்த யாத்திரை என்று கூறுவார்கள். (நீராடுவதற்காக பிரயாணம் செய்தல் என்று பொருள்) இப்படி ஏரி நீர்படுகை போன்ற நீர் நிலைகளிலும் ஊர் ஊராக போய் நீராடுவதை புனித நீராடல் என்று கூறுவார்கள். (இயல்பாக) ஓடும் நதி நீரில் குளிப்பதை ஓரு பண்டிகையாக வைத்துள்ளனர். அப்போது கூட மனதிற்கு மகிழ்ச்சியும், உடல் மாறுபட்டு Nழ்நிலை பருவ மாறுதல், நீரின் மிதமான மாறுபட்ட தன்மையினால் மனச் சுமைகள் குறைந்து மனம் துன்பத்தை மறந்து லேசாகி தெம்பு பெறுகிறது. இதற்காகதான் நமது முன்னோர்கள் இப்படி குளியலுக்காகவே பயணத்தை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இயல்பானதுதான் சிறப்பு. அளவானது. ஒழுக்கம் மட்டுமல்ல மருந்தும் என்று ஹானிமேன் கூறிய பின்பு அதன் மகத்துவம் தெரிகிறது. ஆடம்பரத்திற்காகவும், மருத்துவ முறை சொல்லி, தன் வாழ்க்கைக்காக, தொழிலுக்காக ஒரு மருத்துவ முறை உருவாக்க கூடாது என்று Dr.ஹானிமேன் விளக்கியிருக்கிறார். அதனை சார்ந்தவர்கள் படோடோபமாக மிகைப்படுத்தி கவர்ச்சியாக்கி, வியாபாரமாக்கி, மக்களை கவர்ந்து பணம் சம்பாதிக்க எடுத்து கொண்ட முயற்சி தான் தீமை செய்கிறது என்று கூறியும், அவைகளை பற்றி தவறு என்று உதாரணங்கரோடு விளக்கியிருக்கிறார். இப்போது தான் நமக்கு தெளிவாக தெரிகிறது. அலோபதி மருத்துவ முறையை மட்டும் எதிர்க்க வில்லை, எல்லா முறையில் உள்ள குறைபாடுகளை எதிர்த்தும், உயிர்ப்பு சக்தியின் பாதிப்பு பற்றி கூறுகிறார். ஏஐகூAடு குடீசுஊநு என்று சொல்லி சொல்லி நமக்கு இந்த நூலில் கூறுகிறார். ஹானிமென் அவர்கள் கடைசியாக கூறினார். கடவுள் என்னை மனிதனாக பிறக்க வைத்தார். நான் உண்மை பேசி வாழ்ந்தேன் என்று, ஆனால் அவர் பட்ட கஷ்டம் நினைக்கும் போதே நமது குலையெல்லாம் நடுங்குகிறது. ஒரு மனிதனால் இப்படியும் போராட முடியுமா என்று சந்தேகம் வருகிறது. வேதாத்திரி மகரிஷி இதே இடத்தில் வான்காந்தம் என்று கூறி, எல்லா பாவமும் கருமையத்திலும், அது உடலை விட்ட பின்பு விண்ணிலும், பிற உடலை எடுத்து அதன் பதிவை செயல்படுத்துகிறது என்று கூறுகிறார். இறைவனின் அங்கமும், அம்சமும் உன்னிடம் உண்டு என்று ஒரு பாடலின் வரியில், அவனில் தான் நீ, உன்னில் அவன், அவன் யார்? நீ யார்? பிரிவே இல்லை. நீயும் இறைவனும் ஒன்றே தான். ஆனால் அவனை அறிந்தால் நீ பெரியோன் அறிந்தவர் தான் ஹானிமேன். அவனை மறந்தால் நீ குற்றவாளி, பாவிகள், கொலையாளி என்பதும் புரிகிறது. நம்மோடு வாழ்ந்த வேதாத்திரி மகரிஷி காட்டிய மனவளக்கலை, மற்ற நூல்கள் மற்றும் ஹானிமேனின் மெட்டிரியா மெடிக்கா, ஆர்கனான் ஆப் மெடிசன், கிரானிக் டிஸிஸ், மியாசம் என்று கண்டுபிடித்து கூறுகிறார். தான்பட்ட அவமானம், நாடு கடத்தல் போன்ற கஷ்டங்களை எல்லாம் தாங்கி கொண்டது எது என்றால் நம்முள் இருக்கும் இறைவனே தான் என்பதை நமக்கு தெளிவாக எடுத்துக்காட்டிய, மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறிய அளவு என்ற தத்துவத்தில் இருக்கும் அர்த்தம் இதன் மூலம் புரிகிறது. இதை எடுத்துக் காட்டிய மகான் வேதாத்திரி மகரிஷியை வணங்குவோம். அவரும் மற்ற ஞானிகள் கூறிய அறிவுரையை வைத்து நம்மை ஏமாற்ற நினைப்போரிடம் அயரா விழிப்பு நிலையில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வதே நமது முதல் தொண்டாகும். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

ஜீவசமாதி ஜீவ சமாதி என்பது உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியின், இறுதியான மனிதனின் உடலிலும், மனதிலும் முழுமைப்பேறை குறிக்கும் ஒரு நிலை. இதை பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறிய செய்திகளை மிக, மிக சுருக்கி சிறிதளவு பார்ப்போம். விஞ்ஞானமும், மெய்ஞானமும் கலந்த கருத்தின் படி பார்க்கும் போது, இறைவன் என்ற சுத்த வெளியானது பேரண்டத்தை சூழ்ந்து அழுத்தி கொண்டு சும்மா இருக்கிறது. அதில் சிறிது பிதுங்கி பேராண்டத்துக்குள் வரும் போது சூழ்ந்து அழுத்தத்தின் காரணமாக அது சுழன்று முதல் பூதம் (விண்) என்று பெயர் எடுக்கிறது. இதனோடு மற்ற 4 பூதங்கள்,2. காற்று, 3. நெருப்பு, 4.நீர், 5. கெட்டிப்பொருள் அதன் விகிதாசாரத்திற்கு ஏற்ப உருண்டையாகி அணுக்கள் கூடி, கோள்கள் ஆகி, நச்சத்திரங்கள் ஆகி விடுகிறது. நச்சத்திரத்தை தான் சூரியன் என்கிறோம். ஒரு சூரியனுக்கு சில (அ) பல கோள்கள் இருக்கலாம். இதனை ஒரு சூரிய குடும்பம் என்கிறோம். இது போல கோடிக்கணக்கான சூரியன்கள் சேர்ந்ததை பால்வெளி பாதை என்றும், கோடிக்கணக்கான பால்வெளி பாதைகள் சக்தி களத்தில் உள்ளன. இவை அனைத்தும் வெட்ட வெளியில், பந்து போல் சுழன்று கொண்டே இருக்கின்றன. நாம் இருக்கும் கிரகத்துக்கு பெயர் பூமி. 9 கோடி மைலுக்கு அப்பால் இருப்பது நமது சூரியன். நமது சூரியனையும், 9 கோள்கள் சுற்றி வருகின்றன. நாம் வாழும் பூமியில் பஞ்ச பூதங்கள் சரி விகிதாசாரத்தில் இருப்பதால், இங்கு உயிரினங்கள் தோன்றுகின்றன. முதலில் தாவரங்கள் தோன்றியது. இதை ஓர் அறிவு உயிரினம் எனலாம். அறிவு என்பது அறிந்து கொள்வது ஆகும். இது தொடு உணர்வு (அழுத்தம்) அதை அறிந்து கொள்ளும் உயிரினமாகும். இது போலவே பிற வகை அறிந்து கொள்ளுகின்ற ஓர் அறிவை மட்டுமே பெற்ற உயிரினம் எல்லாமே ஓர் அறிவு பெற்றவை எனப்படும். கால வளர்ச்சியில் அதன் விருப்பத்துக்கும் தேவைக்கும் ஏற்ப 2 அறிவை பெறுகிறது. உதாரணம் :- மண்புழுவை சொல்லலாம். சுவையும், தொடு உணர்ச்சி உள்ளதால் இதனை 2 அறிவு உயிரினம் எனப்படுகிறது. இதே போல் உடன் சுவாசிக்கும் வாசனையை அறிந்து கொள்ளும். 3 வது அறிவை பெற்ற இனமாக மாறுகிறது. உதாரணம் :- வண்டுகளையும், மற்றவைகளையும் சொல்லலாம். அடுத்து 4 வது அறிவு கண்கள் பெற்ற பாம்பு, போன்ற ஊர்வன வகைகளை சொல்லலாம். அடுத்து 5-வது அறிவாக கேட்கும் அறிவை பெற்ற ஆடு, மாடு, கோழி போன்றவைகளையும் சொல்