Dr.S.M.

முன்னுரை:-
சின்ன ஒரு 10 வயதுள்ளவர்கள் கூட ஆர்கனானை புரிந்து கொள்கிற மாதிரி நாம் எழுதியிருக்கிறோம். இது ஒரு கூட்டு முயற்சி தான். இதில் என்னுடைய தனி முயற்சி இருந்திருக்கலாம். சில ஆண்டுகளாக ஆனாலும் இது கூட்டு முயற்சியில் தான் நடைபெற வேண்டும் என்பது இறைவனுடைய சித்தம். அதை உணர்ந்து கொண்டு நான், அதை நாம் எல்லாம் சேர்ந்து செய்வதற்கு முயற்சி செய்கிறோம். இப்பொழுது நாமும் அதே மாதிரி தொழில் செய்ய வேண்டும் என்ற அவசரத்திலும், அவசியத்திலும் மற்றும் உங்களுக்கு எல்லாம் முழுவதுமாக தமிழாக்கம் செய்து கொடுத்து கொண்டிருக்க நேரம் இல்லை. இந்த தத்துவம் இப்பொழுது அவசியம் இல்லை என்ற காரணத்திற்காக தான் சுமார் ஒரு 4 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆர்கனான் ஆப் மெடிசனை தொழிலுக்காக, மற்றவர்கள் எல்லாம் எழுதியது தொழில் செய்வதற்கு ரொம்ப சிரமம், முடியவில்லை தெரியவில்லை என்பதற்காக தான் நாம் எழுதினோம். இருப்பினும் முன்பு தமிழாக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை குறித்து, அவர்களை வணங்கி, வாழ்த்தி அக் காலக்கட்டத்தில் அதை செய்யதார்களே என்று மகிழ்ந்தும், பாராட்டியும், வணங்கியும் அதே பணியை தொடர்கிறோம். இருப்பினும் நம் முன்னுரைகள் எல்லாம் இருக்கிறது. முன்னுரைகள் எல்லாம் மிக சிறப்பு. அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தியாகமும், அன்பும் உங்களுக்கு அங்கே தான் வரும். அதன் அடிப்படையில் இந்த ஆர்கனான் ஆப் மெடிசன் என்ற நூல் 6 பதிப்புகளாக எழுதப்பட்டுள்ளது. (6th Edition) என்கிற வரைக்கும். இந்த 6 வது பதிப்பை எழுதும் போது ஹானிமேன் அவர்களுக்கு 87 வயதாகி விடுகிறது. 88 வது வயதில் அவர் இந்த பஞ்ச பூத உடலை விட்டு விலகினார். நான் இப்பொழுது தான் இந்த உலகத்தை விட்டு போய் விடுவேன் என்று 10 நாட்களுக்கு முன்னாடியே சொல்லி விட்டு, எல்லோருக்கும் பதில் சொல்லி விட்டு விலகி விடுகிறார். அப்புறம் இந்த நூல் அவர்கள் மனைவி மேடம் மிலானி என்பவர் இந்த குறிப்புகளை (Notes) கொடுக்கவில்லை. 6 வது பதிப்பின் குறிப்புகளை பெருஞ்செல்வம் கேட்டதனால், அப்படியே நிறுத்தி விட்டார்கள். அந்த காலத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த கென்ட், பாரிங்டன், போயினிங்ஹாசன், ஹெரிங்ஸ், கால்வின்னர் போன்ற அறிஞர்கள் எல்லாம் பக்கமாக இருந்தார்கள். போயினிங்ஹாசன் என்பவர் நண்பரே. ஏன் என்றால் எழுபது ஆண்டுகள் அந்த குறிப்பு பிரெஞ்சு அரசாங்க பெட்டகத்தில் பாதுகாப்பாக இருந்தது. அதற்கு முன்னதாக மேடம் மிலானியிடமும், அவர் மகளிடமும் இருந்தது. மகளும் நிறைய பொருள் கேட்கவும் அதை யாரும் வாங்கி, குறிப்பிட்ட அறிஞர்கள் கூட வெளியிடவில்லை. அதற்கு என்ன காரணம் என்று பார்தோமேயானால், 5 வது பதிப்பு வரைக்குமே, முழுமையாக வந்து விட்டது. 6 வது பதிப்பில் ஒரு பெரிய விஷயம் இருக்க முடியாது என்று உணர்ந்து தான் அவர்கள் விட்டிருக்க வேண்டும். அது போல தான் 6 வது பதிப்பை வாங்கி வில்லியம் போரிக் என்பவர் வெளியிட்டார். உள்ளது உள்ளவாறே அப்படியே மொழி பெயர்த்து ப்ரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றினார். அப்படி பார்க்கும் போது அந்த நூலில் 5 க்கும் 6க்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அதாவது மருந்துகளில் மில்லிஸ் மில் ஸ்கேல் (Millis mil scall) என்று சொல்கிறார். அது ஒரு புதுமை. அதுவும் கூட தற்கால மனிதர்களுக்கு அவ்வளவு நுட்பம் தேவையில்லை. அதனால் அந்த மருந்துகளை கையாள்வதற்கு, அவ்வளவு உழைப்பு அவசியமில்லை. கொஞ்சம் முன் பின் இருந்தால் கூட பரவாயில்லை என்கிற மாதிரி அதில் இருக்கிறது. மற்றும் சில விஷயங்கள் எல்லாம் ஒரு 98 பங்கு அப்படியே தான் இருக்கிறது. 5வது பதிப்பில் உள்ளது தான். பெரிய வித்தியாசமில்லை. அதனால் தான் கென்ட், நாஸ் போன்ற அறிஞர்கள் எல்லாம் அவ்வளவு பணத்தை கொடுத்து, வாங்கி வெளியிடவில்லை (என்று நான் நினைக்கிறேன்) என்ற கருத்து வெளிபடுகிறது. அப்பொழுது நமது நாட்டில் வாழந்த வள்ளலார் அவர்களும் 6 திருமறைகளை எழுதி வைத்திருக்கிறார். அதாவது அருட்பாக்கள் என்று சொல்லி, அருளை தருகின்ற பாக்கள் “அருட்பா” என்று சொல்லி 5 திருத்தம் செய்து, 6வது திருத்தத்தில் தான் முழுமையாக முடிக்கிறார். ஆனால் ஒரு பெரிய மலை கோயில் இருக்கு என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு 100 படிகளை கொண்ட கோயில் என்றால், முதலில் ஒரு பத்து படியில் கீழே ஒரு தங்கும் கூடம் அமைத்திருப்பார்கள். அப்பொழுது இராமலிங்க வள்ளலார் எழுதிய 5 திருமறைகள் எல்லாமே இந்த 10 படிக்குள்ளே தான் அடக்கம். 6வது திருமறையில் மட்டும் மீண்டும் தொண்ணு}று படிகளை தாண்டி அந்த சிலையை போய் பார்க்கிற மாதிரி. அவ்வளவு வித்தியாசம். ஆனால் இவர் ஹானிமேன் எழுதியது எவ்வளவு என்றால், 5 வரையிலுமே 98 படி கீழே இருந்து மேலே போய் சிலையையும் பார்த்தாச்சு. கும்பிட்டாச்சு. அதன் பிறகு அந்த இடத்தில் சுற்றியிலும் கூட்டி விட்டு, தளம் கொஞ்சம் சரியில்லை என்றால் கொஞ்சம் தளத்திற்கு மேல் சிமெண்டை பூசுகிற மாதிரி தான். அவ்வளவு தான் ஆறாவது பதிப்பிற்கும், அந்த 5-வது பதிப்பிற்கும் உள்ள வித்தியாசம். ஆனால் ஒரு சிலர் ஆறாவது பதிப்பில் என்ன எழுதியிருப்பாங்க என்று ஆவலோட தானே எதிர் பார்த்திருப்பாங்க. சிறந்த கென்ட், ஹெரிங்ஸ் போன்ற ஞானிகள் எல்லாம் ஞானத்தாலேயே உணர்ந்திருப்பார்கள். அதனால் அதை வாங்கவில்லை, என்று தெரிகிறது. இப்படி தான் ஆர்கனான் இருக்கும் என்று கண்டுபிடித்திருப்பார்கள் என்று தெரிகிறது. பின்னாடி அதை பார்த்ததற்கும் அப்படி தான் இருந்தது. பிறகு போல்டன் நகரத்தில் இருந்து கிராக் என்பவர் ப்ரெஞ்சுக்கு சென்று 6-வது நூலை வாங்கி வெளியிடுவதற்காக 11 ஆண்டுகள் அவருக்கு போல்டன் நகரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. போல்டன் நகரத்தில் M.B.B.S., M.D., படித்த டாக்டர்களோட இவரும் M.D., படித்தவர். இவரை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்றால், இவர் அன்புள்ளம் கொண்டவர், மிகத் திறமையானவர், தியாக மனப்பான்மை கொண்டவர். இவரை தான் அனுப்ப வேண்டும் என்று சொல்லி இந்த குழு இவரை தேர்வு செய்து அனுப்பியது. அதே மாதிரி சான்பிரான்ஸிஸ்கோவில் (அமெரிக்கா) உள்ள தொண்டு நிறுவனம் வில்லியம் போரிக் என்பவரை தேர்வு செய்து அனுப்புகிறது. அவரும் மிகப்பெரிய உயர்ந்தவருக்கு குடும்ப வைத்தியர். அதாவது விக்டோரியா மகாராணியாருக்கே குடும்ப டாக்டர். அவரும் M.D.,டாக்டர். இவரும் 4,5 மொழிகளை கற்றவர் தான். இருவரும் ஒரே நாளில் போய் சேர்ந்து, முதலில் வில்லியம் போரிக் அவர்களிடம் இந்த அரசாங்க குறிப்புகளை கொடுத்து விடுகிறார்கள். கிராக் அவர்கள் ஏமாந்து விடுகிறார்கள். இருந்தாலும் கூட ஆர்கனான் ஆப் மெடிசனுக்கு ஆங்கிலத்தில் இவர் புகழாரம் சூட்டுகிறார். யார் என்றால் கிராக் என்பவர் தான். இவர் போல்டன் நகரத்திலிருந்து சென்றவர் கிராக் M.D., வில்லியம் போரிக் என்பவர்; சான்பிராஸிஸ்கோவிலிருந்து சென்றவர். அந்த புகழாரத்தில் கிராக் அவர்கள் ஹானிமேன் கூட இருந்தவர் மாதிரியே புகழாரத்தை சூடுகிறார். அப்படியே அற்புதமானது. இந்த பணிக்கு என்னை புகழாரம் செய்வதற்காகவே இறைவன் என்னை படைத்திருக்கிறார். என்னை தேர்வு செய்திருக்கிறார். இதற்காகவாவது நான் எத்தனையோ பிறவி பெற்ற தவம் தான் காரணம் என்று மிகப் பெருமையோடு சொல்கிறார். அதைப் படிக்கும் போது நம் கண்களில் நீர் துளிர்கிறது. அதில் அப்படி என்ன சொல்கிறார் என்றால், 6ம் வகுப்பு படிக்கும் போது, ஹானிமேன் மாணவனாக இருக்கும் போது என்ன மனசுல தோன்றியிருக்கும் என்பதை அப்படியே வந்து படம் பிடித்து காட்டுகிறார். 10 ம் வகுப்பு படிக்கும் போது எலிகளை அறுத்து அந்த உடற்கூறுகளை சோதித்து, அது எப்படியிருக்கும் என்பதையும், 12ம் வகுப்பு படிக்கும் போது அதை எப்படி மிகைப்படுத்தி இருப்பார். இராசாயனத்தை அவர் எப்படி படித்து இருப்பார். ஒரு இராசாயனத்துடன், இன்னொரு இராசாயனத்தை எப்படி பொருத்தி பார்த்து இருப்பார். தாவரவியல், விலங்கியலில், தாவரங்களின் வித்தியாசம், தன்மைகள் என்ன என்பதையும், விலங்கியலில் உயிரினங்களின் வித்தியாசம் என்ன என்பதை எப்படி அவர் சிந்தித்து இருக்கணும் என்பதை அப்படியே அவர் விவரிக்கிறார். அதன் பிறகு மருத்துவராகிய பின்பு ஹானிமேன் எழுதிய “Lessar Writing” என்ற நூலை 26, 27 வயதில் ஹானிமேன் அந்த நூலை எழுதுகிறார். அதில் ஆங்கில மருந்துகள் ஒரு சிலதை கண்டுபிடித்து உலகிற்கு வழங்கினார். அலோபதி மருத்துவத்திலும், ஹானிமென் அவர்களது மருந்துகளின் கண்டுபிடிப்புகள் இருக்கிறது. அதில் “Veneral Disease” ஆண் பெண் சீக்குக்கு கண்டுபிடித்து இருக்கிறார். அது புண்ணை ஆற்றி விடுகிறது. பிறகு “Skin Disease” - தோல் வியாதிக்கு மருந்து கண்டுபிடித்து இருக்கிறார். இப்படி ஒரு 1,0 17 மருந்துகளை கண்டுபிடித்து வைத்து இருக்கிறார். இவை இன்னும் அலோபதி மருத்துவ உலகத்தில் இருக்கிறது. எப்படி அவர் அதை கண்டுபிடித்து இருக்கணும் என்பதையும், அதன் பிறகு அதை எப்படி ஒதுக்கி தள்ளினார் என்பதையும் கூறுகிறார். அதன் பிறகு கொண்டு வந்து மெல்ல மெல்ல கடைசியில் அது எதுக்கு என்றால் இந்த உயிரின் ஆற்றலுக்கு தான் நாம் மருத்துவம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை சொல்லி, அதற்கு முன்னதாக 32 மருத்துவ முறைகள் இருக்கிறது. சித்தா, ஆயுர்வேதா, யுனானி, அலோபதி இன்னும் அக்கு பிரஷர், அக்கு பஞ்சர் போன்றவற்றில் உள்ள வித்தியாசங்களையும் சொல்லி, சொல்லி கடைசியில் மெஸ்மெரிசம் என்ற அமைப்புக்கு கீழ், அந்த ஆற்றல்களையும் உள்ளடக்கி அதன் பிறகு மருந்தாக கொடுக்க வேண்டும் என்று சொன்னார். மருந்துகளில் உள்ள பண்புகளை மெட்டிரியா மெடிக்கா ப்யூரா(Meteria Medica Pura)என்ற நூலில் கூறுகிறார். நோயின் பண்பை பற்றி கிரானிக் டிஸிஸ் என்ற நூலில் கூறுகிறார். நோய்க்கு தக்க மருந்தை எப்படி தேர்வு செய்து தர வேண்டும் என்பதை ஆர்கனான் ஆப் மெடிசன் என்ற நூலில் கூறுகிறார். நம் நாட்டில் வாழ்ந்த திருமூலர் பசு, பதி, பாசம் என்று சொன்ன அந்த பசு தான் இறைவன் என்றும், ஆதிசங்கரர் சொல்கின்ற அத்வைதம் என்பது தான், அந்த உயிர் சக்தியை கடவுள் என்றும், இப்படி ஒரு சில ஞானிகள் சொல்லக்கூடிய பசு, பதி, பாசம், அத்வைதம், துவைதம், விசுஸ்டாத்வைதம், மகாவிஷ்ணு, சிவம், கர்த்தர், அல்லா என்று இப்படி பல கோணங்களில் ஆன்மீகவாதிகளும், ஞானிகளும், மகான்களும் உலகில் சொல்லியதை தான் வேதாத்திரி மகரிஷி நம் உடலுக்குள்ளேயே இறைவன் உண்டு என்றும், அந்த ஆற்றல் இருக்கிறது என்றும் சொல்கிறார். வான்காந்தம் நிலையாக இருக்கக்கூடியது. அது உடலாக மாறி எல்லை கட்டிய பின்பு, உடலுக்குள் இருந்து வேலை செய்யும் போது அதையே தான் ஜீவகாந்தம் என்று சொல்கிறார். முதலில் அந்த வான்காந்தத்தை தான் நச்சு தன்மை தாக்கும் என்று சொல்கிறார். அதை தான் ஹானிமேன் மியாசம் என்று சொல்கிறார். வேதாத்திரி மகரிஷி வந்த பிறகு தெளிவு ஆகிவிட்டது. மனிதனுக்கு மியாசம் எப்படி உற்பத்தி ஆனது? அப்படி என்றால் அவன் செய்த பாவம் என்று சொல்கிறார். அப்பொழுது இரண்டு தத்துவமும் தான் அந்த பாவம். உயிர் கண்களுக்கும் கருவிகளுக்கும் தெரியாது. அந்த உயிரை பாதுகாக்கும் சக்தியை “Vital Force” வான்காந்தம் என்கிறார். அந்த வான்காந்தத்தை தான் மியாசம் முதலில் தாக்குகிறது. அங்கு தான் வியாதி தொற்றுகிறது. வியாதிக்கும் சரி, உயிர்ப்பு சக்திக்கும் சரி உருவம் இல்லை. அப்பொழுது உருவமில்லாததை கண்டுபிடிக்க முடியாதே* அதை எப்படி கண்டுபிடிக்கிறது என்றால் அது குறிகளின் மூலம் தான் தாக்குண்டதை உயிர்ப்பு சக்தி காட்டும். அதற்கு வேற வழி இல்லையே. இதை தான் பாவம் என்று வேதாத்திரி மகரிஷி கூறுகிhர். இதன் விளக்கத்ததை அவர் எழுதிய நூல்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதே மாதிரி ஹானிமேன் 12 மியாசத்தை மூன்றின் அடிப்படையில் சொல்கிறார். அதன் பிறகு 4*3ழூ12 வந்து விடுகிறது. அடுத்து வந்த அறிஞர்கள் அதிலிருந்து விவரிக்கின்றனர். இப்பொழுது 21 மியாசம் வரை வந்து விட்டது. இதை “Philosophy” என்ற கேசட்டில் இருக்கிறது. அதை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இப்பொழுது Dr. கிராக் அவர்களின் புகழாரம் அதி அற்புதமானது. அவர் உடலுக்குள்ளேயே புகுந்து பேசுகிறார். இது உண்மையா? பொய்யா? ஆதாரம் என்ன என்பதற்கு வேதாத்தரி மகரிஷியினுடைய கடைசி நாளில் சொல்கிறார். நான் எழுதவில்லை. பேனாவை பிடித்தால் யாரோ வந்து எழுதுகிறார்கள். அது தான் உண்மை. என்னுடைய எழுத்தை பாருங்க அது என்னுடைய எழுத்தே அல்ல என்று சொல்லி, எழுதி ஒரு தடவை காட்டினார். தன்னுடைய 85 வது பிறந்த நாளில் அப்படி எழுதி காட்டினார். அதை நான் வாங்கி பார்த்தேன். அப்படி தான் இருந்தது. அதே மாதிரியான கையெழுத்து தான் வள்ளலாரின் எழுத்தும் இருந்தது. வள்ளலார் என்னுள் இருந்தார் என்பதற்கு அவருடைய எழுத்து மாதிரியே தான் இருந்தது. ஆகவே இதை விட மிஞ்சிய ஒன்றை தான் Dr. கிராக் சொல்கிறார். ஹானிமேன் அவர்கள் வாழ்நாளில் என்ன என்ன நினைத்தாரோ, சொன்னாரோ அப்படியே அவர் சுருக்கமாக ஆர்கனான் ஆப் மெடிசன் புகழாரத்தில் சொல்கிறார். அதை படிக்கும் போது உடல் எல்லாம் சிலிர்க்கிறது. எனக்குள் இராமலிங்க சுவாமிகள் இருந்து கொண்டு எழுதுகிறார் என்று வேதாத்திரி மகரிஷி சொல்லியது போலவே இது இருக்கிறது. இதை அவர் சொல்லவில்லை. இதை அப்படியே சொல்லும் போது நம் உடல் எல்லாம் சிலிர்கிறது. அவர் இந்த இறைவனை புகழ்வதும், தன்னை இதற்கு தான் பிறக்க வைத்து இருக்கிறார் என்று மனம் உருகியதையும், கண்ணீர் விடுவதையும் பார்த்தால் நமக்கு கண்ணீர் வந்தே தீரும். அவ்வளவு சிறப்பு அதில் இருக்கிறது. ஆர்கனான் ஆப் மெடிசன் 6வது பதிப்பின் புகழாரத்தை படித்து பாருங்கள், இந்த விஷயத்திற்கு மேலே இன்னும் பல விஷயம் இருக்கிறது. நான் சுருக்கமாக முடித்து விட்டேன். அதே மாதிரி வில்லியம் போரிக் யார்? என்ன? எப்படி என்பதை ஆர்கனான் ஆப் மெடிசனின் முன்னுரையில் சொல்கிறார். நீங்கள் அதையும் படித்து தமிழாக்கம் பண்ணி பார்க்கவும். அதையும் நீங்கள் படித்து விரிவாக்கத்தை தெரிந்து கொள்ளவும். மற்றும் 32 வகை மருத்துவத்தில் உள்ள குறைபாடுகளை பற்றி கிரானிக் டிஸிஸ் என்ற நூலில் ஹானிமேன் சொல்கிறார். அதில் உள்ள முகவுரையில் படித்து தெரிந்து கொள்ளவும். மற்றும் ஆங்கிலத்தில் உள்ளதை நீங்கள் கற்று கொள்ள வேண்டும். தமிழில் அதன் சாரம்சம் இருக்கிறது என்பதை நாம் இப்பொழுது சொல்கிறோம். H.K.S.V. கல்விக்குழுவின் மூலமாக உலகத்தாருக்கு சொல்கிறோம். நீங்கள் அடுத்தது எந்த நூல்களை தமிழக்கம் பண்ணி பார்த்தால் ரொம்ப அற்புதமான வள்ளலார் பாடல் போல,

“தேனாய் தீம்பழம்பாய் சுவை சேர் கரும்பாய்,
அமுதம் தானாய், அன்பருளே இனிக்கின்ற
தனிப்பொருளே* வானாய் கால் அனலாய்,
புனலாய் அதில் வாழ் புவியாய் ஆனாய்
தந்தனையே அருளாய் அமுதந்தனையே*

மருந்து நிருபணம் செய்யும் போது பல பேர் இறந்து விட்டார்கள். அவர்கள் எல்லாம் தியாக செம்மல்கள். அந்த தியாக செம்மல்களை எல்லாம் நினைவு கூர்ந்து அவர்கள் ஆன்மாவுக்கு நாம் இப்பொழுது மகிழ்ச்சி கொண்டு வாழ்த்து தெரிவிக்கின்றோம். அடுத்து தலைசிறந்த மருத்துவர்களான நாஸ், பாரிங்டன், கிளார்க், கென்ட், போயினிங்ஹாசன் போன்ற பல அறிஞர்களும், ஆன்மீகத்தில் சிறந்த வியாசர், வேதாத்திரி மகரிஷி போன்ற ஞானிகளும், தமிழகத்தில் ஆங்காங்கே உண்மையான ஹோமியோபதி மருத்துவத்தை மனித நேயத்தோடு செய்து கொண்டும், ஆன்மீகத்தை கற்று செய்து கொண்டு இருக்கிற பல அறிஞர் பெருமக்களின் உழைப்பிற்கும், அவர்களின் பெருமைகளைப்போற்றி நாம் நன்றி கூறுவோம். இந்த நன்றியை அவர்களுடைய உழைப்பை கண்டு நாம் வணங்குகிறோம். மற்றும் கல்வி அறிவே இல்லாமல் ஆங்காங்கே உழைப்பு உழைத்து, இந்த உலகில் உணவையும், பல தொழில்கள் செய்து உலகையும் உருவாக்கி கொண்டு இருக்கின்ற அவர்களது உழைப்பை எதை கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாத அளவுக்கு உழைப்பாளிகள் உழைத்து கொண்டே இருக்கிறார்கள். இப்பொழுது நாம் அனைவரும் படித்து இருக்கிறோம். படிப்புக்கு தக்கவாறு பொருளையும், புகழையும் எடுத்துக் கொள்கிறோம். படித்தவர்களின் பலம், வளம் சொல்லி கொள்கிறோம். கேட்டு கொள்கிறோம். பாராட்டி கொள்கிறோம். ஆனால் இந்த உலகத்தில் எங்கு பார்த்தாலும் அவர்கள் கடுமையான உழைப்பாளிகள், அடிமைகள் இப்படி எல்லாம் இருந்தும் இருக்கிறார்கள், இருந்து கொண்டும் இருக்கிறார்கள். அவர்களின் உழைப்பின் காரணமாக தான் இன்று உலகமே உயர்ந்தது என்றும் சொல்லுகிறார்கள். மற்றும் மஹா தாஜ்மஹாலை கட்டும் போது 12,000 கழுதைகள் எவ்வளவோ கஷ்டப்பட்டு கற்களை சுமந்து இருக்கணும். இது போல அதற்கு எல்லாம் ஈடு செய்து நம்மை போல படித்தவர்கள் உழைக்க முடியுமா என்றால் முடியாது. ஆகவே இந்த ஹோமியோபதி மருத்துவத்தில் தான் பிணியில் வாழ்பவர்கள், வறுமை கோட்டிற்கு கீழே இருப்பவர்கள், வியாதியில், உபாதையில் கஷ்டப்படும் உயிரினங்கள் எதுவாக இருந்தாலும், யாராக இருந்தாலும் தியாகத்தோடு நாம் மருந்து கொடுக்க முடியும். மற்ற முறைகள் இருந்தாலும் கூட இது அறிந்து கொள்வது மிக சுலபம். மருந்துகள் எளிமையாகவும, முழுமையாகவும் சக்தியை கொடுக்கக்கூடியதாக இது அமையப்பட்டுள்ளது. ஆகவே இதை படிப்பவர்கள் அன்பு உள்ளத்தோடும், இரக்கத்தோடும், தியாகத்தோடும், உழைப்பிற்காக மட்டுமல்லாமல், எளிய வாழ்க்கை நடத்துவதற்காக சிறிதளவு பணத்தை வாங்கி கொண்டு செய்யலாம். எங்களுடைய H.K.S.V. கல்விக்குழுவின் நோக்கமும் அடிப்படையும் இது தான். எங்களுடைய உழைப்பும் இது தான். வறுமையில், பிணியில் வாடுகின்ற உயிரினங்கள் யாராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் மருந்து கொடுக்க வேண்டும். முதலிடம் ரொம்ப கடுமையாக உழைக்கின்றவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். உயிரினங்கள் எல்லாம் உழைக்கிறது. அவைகள் எல்லாம் பாதிக்கப்பட்டால் படித்தவர்கள், தெரிந்தவர்கள் இதை செய்ய வேண்டும் என்பது தான் H.K.S.V. கல்விக்குழுவின் நோக்கம். அதற்காக தான் என்னுடைய உழைப்பையும், நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து இந்த பொது நோக்கத்திற்காக அர்பணித்து இருக்கிறேன். இதை பயன்படுத்துபவர்கள், இதை படிப்பவர்கள் முதலில் கீழ் மட்டத்தில் உள்ளவர்களை தான் பார்க்க வேண்டும். இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த காந்தியும் அதை தான் சொல்கிறார். கீழ் மட்டத்தில் உள்ளவர்களுக்காக தான் சுதந்திரம் வாங்கினார். ஆனால் அச் சுதந்திரம் முழுமையாக போய் சேருகிறதா? ஆப்பிரிக்காவில் உள்ள மண்டேலா 30 வருடம் ஜெயிலில் இருந்ததற்க்கு காரணமும் இந்த மாதிரிதான் சில கோட்பாடுகள். ஹானிமேன் அவர்கள் 11 ஆண்டுகள் ஊர் ஊராக போனார். அதற்கு காரணம் என்ன என்று பார்த்தால் எல்லோருக்கும் பிணியில் வாழ்பவர்க்கும் ஹோமியோபதி மருந்து சேர வேண்டும் என்பது தான். வேதாத்திரி மகரிஷியினுடைய விருப்பமும் ஹோமியோபதி மருத்துவம் உண்மையான மருத்துவம். இது உலகில் முதன்மையாக வர வேண்டும் என்பது தான். அப்படி வந்து விட்டால் உலகில் நிறைய சிக்கல்கள் தானாகவே தீர்ந்து போகும் என்கிறார். படிப்புக்கு, பட்டத்திற்கு, உலக மக்களில் மேம்பட்டவர்கள், கீழ்குடி என்பது எல்லாம் கிடையாது. பிணியில் இருப்பவர்க்கு கொடுக்க வேண்டும். மற்றும் படிப்போ, தனது அடிப்படை உரிமையை கூட கேட்கவே, தெரியாதவர்கள் கூட பிணியில் வாடிக்கொண்டு கடுமையான உழைப்பாளிகள் இருக்கிறார்கள். மற்றும் வீட்டில் இருக்கிற பல பெண்மணிகள் கூட கணவனை, குழந்தைகளை குடும்பத்தை கட்டிக் காக்க அரும்பாடு படும் தியாகிகள் கூட இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் இது போய் சேர வேண்டும். H.K.S.V. கல்விக்குழுவின் விருப்பம் என்னவென்றால் ஒரு குடும்பத்தில் ஒருவராவது படித்து, தெரிந்து தன் குடும்பத்திற்கு மட்டுமாவது மருத்துவம் செய்து பலன் அடைய வேண்டும் என்பது தான். வேறு எந்த ஒரு மிகச்சிறிய பிரதிபலனையும் எதிர்ப்பார்க்கவில்லை. முழுக்க முழுக்க தொண்டுக்காக அர்பணிக்கப்பட்டதே எங்கள் H.K.S.V. கல்விக்குழுவின் நோக்கமாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றும் கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்தால் இறைவன் நமக்கு கொடுப்பார் என்று ஞானிகள் சொல்வார்கள். அதன்படி நாம் செய்வோம் என்று எங்கள் குழு கேட்டுக் கொள்கிறது.

மருத்துவ நூல்களிலேயே மிகச்சிறந்த ஹோமியோபதி முறையில் மிக பெரிய பொக்கிஷமான தன் வாழ்நாளில் பெரும்பகுதி செலவழித்தும், அவமானங்கள்பட்டும், அரும்பாடுபட்டும், சத்தியத்தின் உண்மை நழுவாது ஆர்கனான் ஆப் மெடிசன் ஆறாவது பதிப்பு என்ற மாபெரும் மருத்துவ பொக்கிஷத்தை இந்த உலகிற்கு அன்பளிப்பாக வழங்கிய டாக்டர். சாமுவேல் ஹானிமேன் அவர்களுக்கு வணக்கமும், நன்றியும். அதை பிரஞ்சிலிருந்து அப்படியே ஆங்கிலத்துக்கு மாற்றிய தியாகி வில்லியம் போரிக் அவர்களுக்கு வணக்கமும், நன்றியும். அதை முதலில் தமிழிலில் எழுதிய டாக்டர் S.V.S. அவர்களுக்கும் நன்றியும், வணக்கமும். நல்ல ஆன்மீகத்தை பரப்பிவந்த வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கும் நன்றியும், வணக்கமும்.

ஹோமியோபதி மருத்துவத்தை பற்றி வேதாத்திரி மகாஷி கூறுவதாவது:-

வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஹோமியோபதி மருத்துவத்திற்குள்ள உயிர் மற்றும் உயிர்ப்பு சக்தியை பற்றிய பல காலம் ஆராய்ச்சி செய்து எளிமையாக அறிந்து கொள்ளும் படி செய்து விட்டார். தெளிந்த உண்மை ஞானிகளையும் அடையாளம் கண்டு கொள்ள ஆதாரங்களையும், வழங்கி விட்டார். நமது உடலில் உள்ள உயிரை ஜீவ காந்தம் என்றும், அதை பாதுகாக்கும் சக்தியை வான் காந்தம் என்கிறார். பசு, பதி, பாசம் என்று திருமூலர் கூறுவதும், அத்வைதம், துவைதம், விஸிஷ்டாத் அத்வைதம் என்று ஆதிசங்கர் கூறுவதும் இதுவே. சிவம், சக்தி என்று சைவம் கூறுவதும், இறப்பும் நானே, இயக்கமும் நானே என்று வைணவம் கூறுவதும், பரமபிதாவின் மகன் நான் என்று கிருஸ்தவம் கூறுவதும், எங்கும் நிறைந்திருக்கும் இறைவன், அதை சொல்ல வந்த தூதன் நான் என்று நபிகள் கூறுவதும், உயிர் SPRITUAL FORES என்றும், அதை தோற்றுவித்து பாதுகாத்து இயக்கும் சக்தி VITAL FORES என்று டாக்டர். ஹானிமேன் கூறுவதும் ஏறத்தாள ஒன்றான கருத்தை, இவர் அதே பொருளை ஜீவகாந்தம், வான்காந்தம் என்று கூறி விட்டார். மேலும் அவர் கூறும் போது அவர் கூறிய கருத்தை மறுக்கவும் முடியாமல் அதை மறுத்தால் மேலொரு தக்க உதாரணங்களை காட்ட முடியாதவாறு கூறிவிட்டார். அதன் சுருக்கத்தை பார்ப்போம்.

சுத்தவெளியில் இருந்து வெளியேறி சுழன்று அணு முறையே பஞ்ச பூதங்களாகி உயிர்களாகி ஓர் அறிவு முதல் ஆறாவது அறிவு பெற்ற மனிதனாகி வாழுகின்ற போது, உடலில் உள்ள இயக்கம் ஆற்றலை ஜீவ காந்தம் என்றும், அதே போன்ற மற்றொரு பேராற்றலை வான்காந்தம் என்றும் கூறுகிறார். ஜீவகாந்தம் என்பது உடல் பகுதியில் எங்கும் சுழன்று கொண்டிருக்கும் ஓர் ஆற்றல் உடலில் உள்ள ஐந்து வித உறுப்புகளின் மூலம் உலகை தெரிந்து கொள்கிறது. மற்றும் அதற்கு உள்ள ஒரு பெரிய 5 வித கருவிகளின் மூலம் பெற்ற இன்பம், துன்பம் எண்ணங்களை உடலின் மைய பகுதியின் கருமையம் என்ற ஒரு பெட்டகம் உண்டு. அதில் இந்த நிகழ்ச்சிகளை எண்ணங்களை பதித்து கொள்கிறது. பின்பு தேவைப்படும் போது வெளியேறி எண்ணங்களாகவும், ஐம் பொறிகளின் மூலம் உணர்ந்து கொள்கிறது. இதில் எவ்வளவு பதியும் என்றால், எவ்வளவு வேண்டும் என்றாலும் பதியும். உதாரணம், அதாவது தினம் 50 பதிவு பதிகிறது என்று வைத்துக் கொள்வோம். உதாரணம் மாதத்திற்கு 450 வருடத்திற்கு 5400 மனிதன் வாழ்வு, நூறு வருடத்திற்கு வாழ்ந்தாலும் 5,4,, பதிவு ஆகிறது. இதற்கு முன்னதாக பிறந்த பதிவு 5,4,, ஆக பல்லாயிரக்கணக்கான பிறவிகள் பிறந்து உள்ளோம். அவ்வளவு மொத்த பதிவுகளும், இந்த கருமையத்தில் தான் பதிகிறது. மேலும் மனிதன் அதற்கு முன் மனிதனுக்கு முன்நோக்கி சென்றால், மிருகஙகள் பதிவு நான்கு அறிவு எடுத்த பல பிறவிகளின் மொத்த பதிவுகளும், மூன்றாவது அறிவில் எடுத்த பல பிறவிகளின் மொத்த பதிவுகளும், இரண்டாவது அறிவில் எடுத்த பல பிறவிகளின் மொத்த பதிவுகளும், ஓர் அறிவில் எடுத்த பல பிறவிகளின் மொத்த பதிவுகளும் உள்ளன. இவைகளை கூட்டிப்பார்த்தால் எண்ணில் அடங்காத பல, பல கோடிக்கணக்கான பதிவுகளும், இவைகளில் அடங்கும் அல்லவா* நமக்கு ஒரு சந்தேகம் வரலாம். இத்தனை பதிவும் இதில் அடங்குமா கணம் ஆகாதா? பெருக்காதா? என்று. இது நிழல், விண் என்ற பொருளில் பதிகிறது. கணமும் ஆகாது. பெருக்காது. எவ்வளவு வேண்டும் என்றாலும் பதியும். இது கண்களுக்கும், கருவிகளுக்கும் தெரியாது. பிறருக்கு காட்டவும் முடியாது. இது பெரிய பரம ரகசியம் ஆகும்.

இதையே உயிர் என்றும், ஆன்மா என்றும் ஜீவகாந்த பதிவு என்றும் தெளிவாக நமக்கு மகரிஷி கூறுகிறார். இந்த பதிவானது உடலிருந்து விலகி பதிவை அனுபவித்து கழித்து கொள்வதற்காக தகுந்த தாய், தந்தையரின் விந்து நாத குழம்பில் போய் சேர்ந்து, கருவாக மலர்ந்து வளர்ந்து, குழந்தையாக பிறந்து அதற்கு விந்து நாதம் உற்பத்தி ஆகும். வயது பருவத்தில் அது அதற்கு முன் செய்த பாவமும், புண்ணியமும் பெற்ற சாபமும், நன்மையும் ஒருமித்த குணப்பண்பாக வரிசையாக வெளியேறுகிறது. ஏன் சாபம் பெற்றது என்றால், பிற உயிரை அடித்து சாப்பிட்டு செய்த பாவமே சாபமாக பதிந்துள்ளது. இந்த பெட்டகத்தில் அவ்வளவும் இதிலும் இருக்கிறது அல்லவா? ஆகவே தான் இன்று மனிதன் பஞ்சமகா பாதகங்களைச் செய்வதும், மேலும் சாபத்தைப் பெற்று கொள்ளுவதுமாக இருக்கிறது. இனி பாவங்களை செய்து சாபம் பெறாமல் இருக்கவும், மனவளக்கலை என்ற மன்றம் அமைத்து பல செய்திகளைப் போதிக்கிறார். இந்த பதிவின் சாபங்களை தான் ஹானிமேன் அவர்கள் மியாசம் என்கிறார். இது தொடர்ந்து ஆன்மாவில் ஒட்டிக் கொண்டு வருபவை என்று பொருள். இந்த உயிரைப் பாதுகாக்கும் சக்தியை உயிர்ப்பு சக்தி என்றும், வான்காந்தம் என்றும் கூறப்படுகிறது. மனித உடலில் நோயும், வாழ்வும், சாவும் கருமையத்தின் சுமை இயக்க இடையூறுகளைப் பொறுத்தே அமைகிறது. கருமையத்திலிருந்து எழுகின்ற பதிவுகள் ஒவ்வொன்றாக வெளியேறும் பதிவுகளைப் பொறுத்தே அமையும். கோடிக்கணக்கான பதிவுகளை அவ்வளவு சீக்கிரம் அழித்து விட முடியுமா? என்று எண்ணிப்பாருங்கள். இறைவெளி என்பது பேரண்டத்தைக் கடந்துள்ள சுத்த வெளியை குறிக்கும் ஒரு சொல் வள்ளலார் இங்கு பாடுகிறார். இறைவனிடம் கேட்ட விண்ணப்பத்தில் உடல் கடந்து, உயிரையும் கடந்து, அண்டம் கடந்து, கோடன கோடி அண்டங்களையும் கடந்து சுத்த வெளியில் இருக்கும் சுகம் வேண்டும் என்கிறார். நாம் மருத்துவ ரிதியில் பார்ப்போம். வான்காந்தத்தின் ஒரு பகுதி தானே ஜீவகாந்தம். ஜீவ காந்தத்திலுள்ள பதிவை நீக்கி விட்டால், பிறகு வான்காந்தம் (இறைவன்) தானே அது. ஆதனால் தான் வள்ளலார் அவர்கள் உயிரையும் இங்கேயே விட்டு, விட்டு சுத்த வெளிக்குச் சென்று இறைவனிடம் சேர வேண்டும். கலந்து விட வேண்டும் என்று மறைமுகமாக கேட்கிறார்.

1. திருவள்ளுவர்:-
பிறவிப்பெருங்கடல் நீந்துவார் நீத்தார்
நீந்தாதார் இறைவனடி சேராதாரே.

வாழ்க்கையை தெரிந்து அனுபவித்து மகிழ்ந்து அமைதி பெற வேண்டும் என்று மனம் வந்து விட்டால் பிறகு பிறவி தேவையில்லை என்கிறார். தெளிவு பெறாதவர் பிறவி கடலில் தவித்து கொண்டே இருக்க வேண்டியது தான் என்கிறார்.

2. ஒளவையார்:-
இனி எனக்கு பிறவி வேண்டாம் (கருமைய சுமை) மீண்டும் பிறந்தால் ஐயனே உனை மறவாமை வேண்டும். நான் தொண்டு செய்து பழுத்த நிலைக்கு வந்து விட்டேன். எனக்கு அமைதியை தா. (மரணம்) அதாவது இன்னும் எனது கருமையத்தில் பதிவு இருந்து மீண்டும் நான் பிறக்க வேண்டி வந்தால, என்னை நீ பிறக்க வைத்தால் உன்னை சிவம் (அமைதியை) மறக்காமல் இருக்க வேண்டும். அமைதியை வரமாக தா என்கிறார்.

3. பட்டினத்தாரும் கடைசியில் இறைவனிடம் கேட்கிறார். வீடுபேறு (மோட்சம்) நான் இதுவரை பிறந்த பிறப்பை ஞானத்தால் அறிந்தேன். கடலின் கரை, மணலை கூட எண்ணி விடலாம், ஆனால் எனது பிறப்பின் எண்ணிக்கையை எண்ண முடியவில்லை. அத்தனை பிறப்பு பிறந்து விட்டேன். கருப்பையில் அத்தனை முறை பிறக்க வைத்து விட்டாய். கருப்பைகள் என்னை சுமந்து சுமந்து கஷ்டப்பட்டது. பாவம் கருப்பைகள். அதற்கு என்னால் துன்பம் இனிமேல் கூடாது. அதற்காகவாவது இனிமேல் மோட்சம் (அமைதி) தா என்று பாடுகிறார்.

EDITION & PUBLISHIED,
Dr. S. MADHAVAN,
Tamil Nadu Government Homoeopathy Medical Council Regd.,
International Homoeopathy Medical Congress, Calcutta,
D.M.1989-90
H.K.S.V. Educational Trust & Research centre,
Dr.Seghal Homeopathy Clinic,
74/31, GovindhaRaj Street,
Ammapet (Post), Pincode-636 003.
Salem (Dist).,
TamilNadu, India.
Place:-Salem-3. Date:- 01.08.2007.

மூலநூல் ஆசிரியர்ஹானிமேன் அவர்களது கருத்து இந்நூலின் ஆங்கில முகவுரையிலும், க்ரானிக் டிஸிஸ் என்ற மற்றொரு நூலிலும் , நூல் ஆசிரியர் கூறுவதாவது:- இயற்கை மருத்துவத்தின் குறைப்பாடுகள், அக்குபிரஸர், அக்குபஞ்சரில் உள்ள குறைபாடுகளை அனுபவத்தின் வாயிலாக அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆதாரங்களை காட்டுகிறார். மூல வியாதிக்கு தொடையில் சூடு போடுதல், வயிற்று வலிக்கு ஒரு கோப்பையின் உள்ளே காகிதங்களை போட்டு எரித்து வயிற்றில் அப்படியே ஒட்டி விடுவதையும், அசுத்த ரத்த குழாய்கள் புடைத்து கொண்டால் அறுத்து இரத்தத்தை வெளியேற்றுவதையும், அட்டையை கடிக்க வைத்து இரத்தத்தை குடிக்க செய்வதும், உடலில் கட்டி ஏற்பட்டு விட்டால் பெரிய கல்லை வைத்து கசக்கி விடுதலும், கழுத்து வலிக்கு கணம் வைப்பதும. மன ஏக்கம் உள்ள பெண்ணுக்கு குளிரின் போது ஐஸ் தண்ணீரை ஊற்றுவதையும், சித்தபிரமை பிடித்த பெண் தலை தூக்க முடியாமல் தலையை சுழற்றினால் எருக்கம் குச்சியில் அடிப்பதும், சாம்பலை அள்ளி , அள்ளி வீசுவதும், பூசுவதும், (பேய் ) என்று பைத்தியம் பிடித்தவர்கள் திட்டினால் கை, கால்களில் சங்கிலி போட்டு கட்டி விடுவதும், மன ஏக்கத்தினால் திட்டுவதால் அவர்களை மரத்தில் கட்டி போட்டு சவுக்கில் கை ஓயும் வரை (அ) மயக்கம் அடையும் வரை அடிப்பதும், மன வியாதியின் காரணமாக தூக்கம் வராத போது தூக்க மாத்திரை தொடர்ந்து கொடுப்பது, வலிக்கு அடிப்படை காரணம் தெரியாமல் போதை மாத்திரைகளை கொடுத்து வலி தெரியாமல் இருக்க செய்வதும் சத்து குறைந்து விட்டால் என்ன காரணம் என்று பார்க்காமல் சத்து ஊசி , மருந்து, மாத்திரை குளுக்கோஸ் ஏற்றுவதும் உடலின் ஒட்டு மொத்த பாதிப்பை காட்ட உடல் உறுப்பில் அல்லது சருமத்தில் கட்டியோ புற்றோ, கழலையோ, மருவோ வந்து விட்டால் அந்த இயற்கையின் அறிவிப்பை அலட்சியம் செய்வதும், உடல் முழுவதும் பரவியிருக்கும் உயிர்ப்பு சக்தி பாதித்து, பின்பு உயிர் என்ற மனம் பாதித்து, பிறகு தான் உடல் உறுப்பில் தனது பாதிப்பை காட்டுகிறது. அது டான்சில், அப்பன்டீஸ், சைனஸ், கருப்பை குடல், ஈரல், பாங்கீரியா, இரத்த அணுக்கள, எலும்பு போன்ற பகுதிகளில் அதன் தாக்கத்தை விம்ம வைத்து (அ) சுருங்க வைத்து (அ) சொத்தை விழுதல், அழுகுதல் போல் உயிர் மற்றும் உயிர்ப்பு சக்தியை அங்கு காட்டுகிறது. ஆனால் இப்போது பாதித்த உறுப்புக்கு பரிகாரம் செய்யாமல் உறுப்பையே வெட்டி எடுப்பதையும், அதையே அறுத்து எடுத்து விடுவதும், அவைகள் எல்லாம் தவறு என்று தக்க உதாரணங்களையும், ஆதாரங்களையும் காட்டி மேலே கண்டவற்றில் உள்ள குறைபாடுகளை கடுமையாக எதிர்க்கிறதோடு, அதை எப்படி அணுக வேண்டும் என்றும,; அதை எப்படி குணம் செய்ய வேண்டும் என்றும் தெளிவாக கூறுகிறார். மேற்கண்ட விவரங்களை பற்றி அந்த ஆங்கில நூலை படித்து தெரிந்து கொள்ளவும். உதாரணம் சருமத்தில் கட்டியோ, புற்றோ, கலவையோ, மருவோ வந்து விட்டால,; அது இயற்கையின் அறிவிப்பு. அந்த இயற்கையின் அறிவிப்பை அலட்சியம் செய்து விட்டு அதையே அறுத்து எடுத்து விடுவது, அப்படி செய்வது தவறு என்று தக்க உதாரணங்களையும், ஆதாரங்களையும் காட்டி மேலே கண்டவற்றில் உள்ள குறைபாடுகளை கடுமையாக எதிர்க்கிறதோடு அதை எப்படி செய்ய வேண்டும் என்றும் தெளிவாக கூறுகிறார். விவரங்களை அந்தந்த நூல்களில் பார்த்து கொள்ளவும்.