Dr.S. Hahnemann
Dr. William Boericke

அருள்நிதி S. ஜீவமணி B.Sc., அறங்காவலர், அம்மாப்பேட்டை அறிவுத் திருக்கோயில்.

அணிந்துரை.
ஹோமியோபதியின் தந்தை Dr. சாமுவேல் ஹானிமென், ஹோமியோபதியின் சிறப்பை உலகிற்கு பறை சாற்றிய அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி, மேலும் இம்மருத்துவத்தின் சிறப்புணர்ந்த அறிஞர் பெருமக்கள் அனைவரையும் வணங்கி அணிந்துரையை தொடங்குகிறேன். இயற்கை பேராற்றல் அவ்வப்போது இயல்பூக்கமாக தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது. சீரமைத்துக் கொள்கிறது. இயற்கை என்ற இறைவனே பஞ்சபூதங்களாகி, ஓரறிவு உயிரனமாகி, ஆறரிவு பெற்ற உயர்ந்த உயிரினமான மனிதகுலமாக தன் அறிவு முழுமையை, நோக்கிய பயணத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்த பயணத்தை தெளிவுபடுத்தி, ஊக்கப்படுத்துவதற்காக, ஆங்காங்கே அந்தந்த காலகட்டத்தில் மகான்கள் வந்தார்கள். வருகிறார்கள், வருவார்கள் என்றார் சுவாமி விவேகானந்தர். இந்த வகையில் தோன்றிய மகான்கள் Dr. சாமுவெல் ஹானிமென், இராமலிங்க வள்ளலார் மற்றும் வேதாத்திரி மகரிஷி போன்றவர்கள். முழுமையை நோக்கிய பயணத்திலிருந்து மகான்கள் தோன்றுவது போல் பல மருத்துவ துறைகளின் வளர்ச்சிப் பயணத்தில் தோன்றிய மகத்தான மருத்துவம் தான் ஹோமியோபதி மருத்துவம்.

இம் மருத்துவம் மனித குலத்திற்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிரினத்திற்கும் ஒரு சிறந்த மருத்துவமாக செயல்படுகிறது. அது எப்படி சிறப்பு என்றால், உயிருக்கு சிகிச்சை என்பது, இம் மருத்துவத்தின் சிறப்பு. அதனால் எல்லா உயிர் (இனம்) மருந்து பெற முடிகிறது. உலகில் பல மருத்துவ முறைகள், நடைமுறையில் இருந்தாலும் ஞானிகளாலும், அறிஞர்களாலும் சிறந்த மருத்துவம் என சொல்லப்படுவது ஹோமியோபதி மட்டுமே. ஹோமியோபதியில் Organon of Medicine என்ற நூல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நூல். 291 தத்துவங்களை தாங்கிய பொக்கிஷமாகும். ஹோமியோபதியை பற்றி அறிந்து கொள்ள ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்த புத்தகம் ஓர் அரிய புத்தகமாகும். இறை தத்துவங்களோடு ஓர் உண்மையான மருத்துவரின் தொண்டு எவ்வாறு இருக்க வேண்டும் என்றும், நோய் என்ற விஷம் எவ்வாறு உயிராற்றலை தாக்குகிறது என்றும், அது எந்த வகையில் முழுமையாக குணமாக்கி மனிதனை நலமாக்க வேண்டும் என்பது பற்றியும் மிகத் தெளிவாக சொல்லக்கூடிய நூலாகும். உடன் நீர் மருத்துவம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. முற்றும் உணர்ந்த தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி கூறிய ஜீவ சமாதி பற்றியும் கூறப்பட்டுள்ளது.

Organon of medicine 6 வது பதிப்பு உலகிற்கு வெளிவந்த விதம் பற்றியும், ஹோமியோபதி மருத்துவத்தில் தொண்டாற்றி தங்கள், வாழ்க்கையை அர்பணித்துக் கொண்ட அறிஞர்களின் சிறப்புகளை படித்துணரும் போது இந்த மருத்துவத்தின் பால் ஏற்படும் ஈர்ப்பு மேலும் நம்மை வலுப்படுத்துகிறது. இராமலிங்க வள்ளலாரின் 6வது திருமறையின் அருட்பாக்களோடு ஹானிமென் Organon of medicine 6வது பதிப்பை ஒப்பிடுவது ஞானிகளின் ஒற்றுமையை உணர்த்துகிறது. அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் காந்த தத்துவத்தோடு ஹோமியோபதி தத்துவத்தை இந்நூல் ஆசிரியர் விளக்கியிருப்பது இம்மருத்துவத்தை முழுமையாகவும், எளிமையாகவும் புரிந்து கொள்ள உதவுகிறது. பல மருத்துவத்துறை மற்றும் ஆன்மீக தெளிவும் பெற்று சிறந்த ஞானத்தை பெற்ற வேதாத்திரி மகரிஷி அவர்கள் இம்மருத்துவம் உயிரில் உள்ள நோய் பதிவுகளை முழுமையாக நீக்கி அனைத்து உறுப்புகளின் இயக்கங்களையும் ஒருங்கே சீர் செய்கிறது. (கருமையத்தில் உள்ள நோய் பதிவுகளை) என்றுரைப்பது இம்மருத்துவத்திற்கு கிடைத்த மிகப்பெறும் சான்றாகும். Dr. S. மாதவன் அவர்கள் இந்நூலில் ஹோமியோபதி மருத்துவத்தை ஓர் ஆன்மிக மருத்துவ நூலாகவே சான்றுகளோடு (வேதாத்திரி மகரிஷி அடிக்கடி கூறுவார். ஆன்மீகத்தையும், விஞ்ஞானத்தையும் இணைக்க வேண்டும் என்பார்). அதற்கொப்ப நமக்கு உணர்த்தியிருக்கிறார். வாழ்வின் நோக்கம் தன்னை உணர்ந்து ஆன்மாவில் உள்ள கலங்கங்களை போக்கி, தூய்மை பெறுவதே. இந்த உயர்ந்த பிறவின் நோக்கத்திற்கு, துணையாக இருக்கக்கூடிய ஒரே மருத்துவம் ஹோமியோபதி மருத்துவம் தான்.

இந்நூலை முழுமையாக படிக்கும் போது, மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு மகத்தான மருத்துவம் இது என்பது விளங்குகிறது. உண்மையை வெளிப்படையாக சொல்ல துணிவு வேண்டும் என்று இந்த நூலின் மூல ஆசிரியர், அவர் இறக்கும் தருவாயில் கூறினார். நான் இறந்த பிறகு எனது கல்லறையில் இரு வாசகங்களை எழுதுங்கள் என்கிறார். 1. மனிதனாக என்னை இறைவன் படைத்தான். நான் மனிதனாகவே வாழ்ந்து விட்டேன். 2. இந்த உலகில் உண்மையை பேசி அதன்படி வாழ்வதற்கு மிகுந்த தைரியம் வேண்டும் என்றார். இந்நூல் முழுவதையும் படித்து முடிக்கும் போது, அந்த தைரியத்தை இந்நூல் நமக்கு கொடுக்கிறது. “அஞ்சுவதேன் துணிந்துரைப்போம் அறிவே தான் தெய்வம்” என்றார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். “அஞ்சுவதேன் துணிந்துரைப்போம் ஹோமியோபதி ஒன்றே சிறந்த மருத்துவம்” என்று சொல்ல துணிவை கொடுத்திருக்கிறது.

பிரபஞ்சம் முழுவதும் இயக்கக்கூடிய ஆற்றல் காந்த ஆற்றல், நம் உடலையும் இயக்கக்கூடிய ஆற்றல் காந்த ஆற்றல் தான். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பார்கள். இரண்டுக்கும் உள்ள ஒற்றுமையை காண்போம். பிரபஞ்சம் முழுவதும் நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் என்ற பஞ்சபூதத்தால் ஆனது. நம் உடலும், கெட்டிப்பொருளாக உடல், இரத்தம், வெப்பம், மூச்சுக்காற்று, உயிர் என்ற பஞ்சபூதத்தால் ஆனது. பிரபஞ்சம் என்னும் பெருவெளி முழுவதும் நட்சத்திரங்களையும், கோள்களையும் சீராக சுழலவிட்டு பேரியக்கமாக இயக்கிக் கொண்டிருப்பது, ஈர்ப்பு ஆற்றலும் விலக்கும் ஆற்றலுமாக செயல்படக்கூடிய அழுத்தம் என்னும் காந்த ஆற்றலே. இதை தான் வெளியில் வான்காந்தம் என்று அழைக்கிறோம். இதை தான் உடலுக்குள் இயங்கும் போது (எல்லை கட்டியது தான் இயங்கும் போது உடலில்) ஜீவகாந்தம் எனப்படும். அழுத்தம் என்னும் ஈர்ப்பு ஆற்றலே திணிவு பெற்று திரும்பும் போது அதுவே தான் விலக்கும் ஆற்றலாகவும் (கொள்ளும் சக்தி, தள்ளும் சக்தி) செயல்படுகிறது. எனவே பேரியக்க மண்டலத்தை ஓர் இயக்கமாக இயக்குவது, வான் காந்த ஆற்றலே. இதை மகரிஷி அவர்கள்,

“அழுத்தம் என்னும் உந்து ஆற்றல் ஒன்றைக் கொண்டே
அணுமுதலாய் அண்டகோடி அனைத்துமாக்கி” - என்ற கவிமூலம் விளக்குகிறார். காந்த ஆற்றலுக்கு உந்து ஆற்றல் (அ) இயக்க ஆற்றல் என்ற பெரும் உண்டு.

நம் உடலிலும், ஈர்ப்பு ஆற்றலும், விலக்கு ஆற்றலும் மட்டுமே செயல்படும் பரம இரகசியம் இது தான். வெளியிலும் நமக்கு இந்த ஈர்ப்பு ஆற்றல் என்ன செய்யுது? உணவில் குளிர், வெப்பம், காற்று, நீர் சிறிது அதிகம் சேர்ந்துவிட்டால் உடனே ஜீவகாந்தம், வாந்தி, பேதி, தும்மல் போன்றவற்றை ஏற்படுத்தி தன்னை சுத்தப்படுத்திக்கொள்கிறது. பின் நம் உடலியக்கத்திற்கு தேவையானவற்றை பசி, தாகம் என்ற உணர்வின் மூலமாக, உணவையும் மூச்சுக்காற்றாக, பிராணவாயு போன்றவற்றை ஈர்த்து கொள்கிறது. நமக்கு விலக்கும் ஆற்றல் செய்வது, மலம், சிறுநீர், வியர்வை போன்ற கழிவுப் பொருட்களை வெளியேற்றும் சக்தியாகவும், சுவாசத்தில் கரியமில வாயுவை வெளியேற்றும் சக்தியாகவும் செயல்படுகிறது. சளி, இருமல் இப்படியாக வெளியேற்றி தன்னை சரி செய்து கொள்கிறது. வராத நோய்க்கு தடுப்பு மருந்து கொடுத்தால் என்ன ஆவது அந்த ஜீவகாந்தம்? ஒரு ஆராய்ச்சி மையத்தின் அரசாங்க அறிக்கை என்னவென்றால், கக்குவான் இரும்பல் தோன்றி இறந்தவர்களை பற்றி ஆய்வு செய்து பார்த்த போது, தடுப்பு ஊசி போட்டவர்கள் தான் 90 % இறந்தவர்கள் என்று தெரிய வந்தது என்று அறிக்கை கூறுகிறது. தடுப்பு மருந்தினால் யாருக்கு லாபம், யாருக்கு சாபம், என்று ஆய்வு கூறியுள்ளது. மேலும், தேவையில்லாத (ஒவ்வாத) உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொண்டு விட்டால் அதை அதிகப்படியான வயிற்றுப் போக்கு, பேதி மூலமாக வெளியேற்றும் சக்தியாகவும், இதுவே தான் செயல்படுகிறது. உடல் உறுப்பில் கட்டி கொப்புளம், புண்ணாகவும், மலேரியா, காமாலை, புற்று, போன்ற உறுப்பு தடையாக, பேதி, வாந்தி, மாதவிலக்கு, வெள்ளைபாடு, மலேரியா, டைபாய்டு காய்ச்சல், ஏற்படுத்தி அந்த உறுப்பில் உள்ள கழிவையும், இந்த ஜீவகாந்தம் (உயிர்) தான் வெளியேற்றுகிறது.

இவ்வாறு உந்து ஆற்றல் என்னும் ஜீவகாந்த ஆற்றலே, உடலை எல்லா வகையிலும் நிர்வாகம் செய்கிறது. உடலையும் இயக்கிக் கொண்டு நோய் எதிர்ப்பாற்றலாகவும், மேலும் புதிரான மனித மனமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உடல் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கும் காந்தத்தின் திணவு பெற்ற மையம் தான் கருமையம். மனிதனின் கருமையம் என்பது, இறைநிலையில் இருந்து முதல் உயிரினத்தில் தோன்றி மனிதன் வரையில் வந்த பரிணாமப் பயணத்தில், தொடர்ந்து மறை பொருளாக வந்த காந்த களம் ஆகும். இந்த பரிணாம பயணத்தில் மனிதன் வரையில் பெற்ற மாற்றங்கள், உடல் வரையில் பேதப்படுகின்றன (வித்தியாசப்படுகின்றன). ஆனால் அந்த ஜீவன் (ஜீவகாந்த கருமையம்) எத்தனை உருவங்கள் மாறினாலும், பிறகு பிறவிகள் தொடர்ந்தாலும் அவற்றின் அனுபவங்களின் தன்மைகள் அனைத்தும் அலை வடிவில் சுருங்கிக் கருமையத்தில் தர மேன்மையாக அமைத்துள்ளன.

எனவே ஒவ்வொரு மனிதனிடமும் அமைந்துள்ள கருமையத்தில் உலகில் வாழ்கின்ற அனைத்து தாவரங்கள், விலங்கினங்கள், பறப்பன என எல்லா ஜீவ இனங்களின் குணங்களும், அவனிடத்தில் அமைந்திருக்கிறது. இது போல் நம் மூதாதையர்களின் குணங்களும், நோய்களும் கூட நம் கருமையத்தில் அடங்கியுள்ளன. இதில் ஏதோ ஒன்று சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தூண்டப்பெற்று விரிவடையும் போது ஜீவகாந்தத்தில் ஏற்படும் (தடை) DIS+EASY எனப்படுகிறது. ஒவ்வாமை தான் நோயாக தோன்றுகிறது. எனவே முதலில் பாதிக்கப்படுவது ஜீவகாந்தமே. ஜீவ காந்த அமைப்பில் ஏற்பட்டிருக்கும் குழப்பமே நோய்க்கு காரணமாகிறது. அதை சரி செய்யாமல் போகும் போது, அது உடல் உறுப்புகளில் உருவங்கொண்டு பெரிய நோயாக மாறுகிறது. உதாரணம் ஜீவகாந்தத்தை தடை செய்வது எது? மியாசம் என்ற பாவப்பதிவுகள் என்கிறார் Dr. ஹானிமென், 3 கர்மங்கள் என்கிறார் வேதாத்திரி மகரிஷி.

அப்போது அலோபதி மருத்துவர்கள் ஸ்கேன் மற்றும் எக்ஸ:-ரே கருவிகள் மூலம் உடல் உறுப்புகளில் உருவங்கொண்ட நோயை கண்டு நீக்கினாலும், உறுப்பை அறுத்து எடுத்தாலும் கூட ஜீவகாந்தத்தில் ஏற்பட்ட குழப்பத்தை சரி செய்யாததால், மீண்டும், மீண்டும் மற்ற உறுப்புகளுக்கு நோய் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருக்கிறது. ஹோமியோபதி எனும் காந்த மருத்துவத்தில் ஒத்தது, ஒத்ததை குணப்படுத்தும் என்ற நியதிபடியே அது எந்த இரசாயனம் அல்லது ஜீவ இனத்தின் தன்மைகள் என்றுணர்ந்து அதே போன்ற இரசாயனம், அல்லது ஜீவ இனத்தின் காந்த ஆற்றலை வீரியபடுத்தி செலுத்தி, மருந்தை தக்க வீரியத்தில் தரும் போது, உடனடியாக ஜீவகாந்தம், அவரின் பதிவு நீக்க அது சரிசெய்யபட்டு அது உடலை விட்டு விலகுகிறது.

காந்த ஆற்றலை, உந்து ஆற்றல் எனவும் அழைக்கலாம். உடலை நிர்வாகம் செய்கின்ற உந்து ஆற்றல் பாதிக்கும் போது, அதை சரிசெய்ய மருவி உந்தக்கூடிய ஆற்றலாக ஹோமியோபதி செயல்படுகிறது. மருவி வந்த மகளை மருமகள் என்று அழைப்பது போல், மருவி உந்தக்கூடிய ஆற்றலை மருந்து என்று சொல்கிறோம். எனவே மருந்து என்ற சொல்லே காந்த மருத்துவமான ஹோமியோபதியை மட்டுமே குறிக்கிறது. ஹோமியோபதி மருந்து அலைவடிவில் செயல்பட்டு நோயை குணப்படுத்துவதால், எவ்வாறு நோயை குணப்படுத்துகின்றன என்று கண்களாலும், நுணுக்கமான, விஞ்ஞானக் கருவிகளாலும் கண்டுபிடிக்க முடியாது. நோய் குணமானதை வைத்து மட்டுமே உணர முடியும்.

இதனால் ஹோமியோபதி மருத்துவ முறை விஞ்ஞான பூர்வமற்றது என்று மற்ற துறை மருத்துவர்கள் தவறாக நினைத்து விடுகிறார்கள். (அறியாமையே இதற்கு காரணம் ஹோமியோபதி மருத்துவம் Dr. சாமுவெல் ஹானிமென், அவர்களின் தெய்வீக உயர்ந்த அறிவில் தோன்றிய சிறந்த மருத்துவமாகும். விஞ்ஞானம் மேலும் வளர்ந்து, எப்பொழுது காந்த தத்துவத்தை முழுமையாக புரிந்து கொள்ளப்படுமோ, அப்பொழுது ஹோமியோபதி ஒன்றே அனைவராலும், விரும்பப்படும் மருத்துவ முறையாக திகழும் என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள். (மகாத்மா காந்தி, இராமகிருஷ்ண பரமஹம்சர், இரவிந்தரநாத் தாகூர், விவேகானந்தர், போன்ற பெரியவர்கள் போற்றுவதும் இதுவே.)

அந்த காலம் மிக விரைவில் வர வேண்டும் என்றும், உலக சமுதாய மக்கள் அனைவரும் மருத்துவத்தில் விழிப்புணர்வு பெற்று, உலகமே ஒரே குடும்பம், அது நம் குடும்பம், அது நல்ல சமுதாயமாக உருவாக வேண்டும் என்ற ஓர் உயரிய நோக்கத்தில் தொண்டாற்றி வருபவர் தான் Dr. S. மாதவன் அவர்களும், அவர்களுடைய H.K.S.V. கல்விக்குழு க்ஷ ஆராய்ச்சி மையமும் ஆகும். இவர்களுடைய இந்த சமுதாய தொண்டு ஓர் உயர்ந்த தொண்டாகும். ஏனெனில் நம் வருங்கால சந்ததியை ஓர் ஆரோக்கியமான சமுதாயமாக, உருவாக்க உண்மையான ஹோமியோபதி மருத்துவத்துறையால் மட்டுமே முடியும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. இவர்களுடைய சிறந்த தொண்டில் விளைந்த, அரிய முத்து தான் இந்நூல். இந்நூலிற்கு, மதிப்புரை வரைய வாய்ப்பளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கும், நூல் ஆசிரியர் Dr. S. மாதவன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
அன்புடன்,
அருள்நிதி. S. ஜீவமணி B.Sc.,
அறங்காவலர், அம்மாப்பேட்டை அறிவுத்திருக்கோயில்,
31.12.2007.


நூலாசிரியரின் பின்குறிப்பு :-
அண்டத்தில் உள்ள சக்தியே அணுவிலும் உள்ளது. அதில் நீயூட்ரான், புரோட்டன், எலகட்ரானை தவிர ஓர் அணுவிற்குள், பத்தாயிரம் பரப்பில் சுமார் 5 பங்கு தவிர, மற்றது எல்லாமே வெற்றிடம். இதை விஞ்ஞானம் VACCANT என்று ஒதுக்கி விட்டது. ஆனால் ஆன்மீகமோ, இந்த வெற்றிடத்தை தான் பரமாணு, சிவம், பிரம்மம், மகாவிஷ்ணு என்கிறது. விஞ்ஞானத்தை பாருங்கள். நாம் இருக்கும் பூமி, சூரியனை நெருங்க துடிக்கிறது. ஆனால் சூரியனின் கதிர்களோ, அதை தள்ளுகிறது. இதை தான் தள்ளும் சக்தி என்றும், அந்த பூமியை விலகி ஓடி விடாமல் இருப்பதை கொள்ளும் சக்தி என்று அழைக்கின்றோம். கொள்வது எது? சூழ்ந்து இருக்கும் காந்த பெருவெளி. ஆகவே சூரியனை விலகி ஓடாமல் தாங்கி பிடிப்பது கொள்ளும் சக்தி என்கிற வான்காந்தம். சிவம், ஆதி, இறைவன் இப்படி பல பெயர்களில் அவைகளைக் கூறலாம். ஆனால் தள்ளுகின்ற வேகத்தில் பூமி இடர்கிறது. இடரி, சுத்தவெளி தாங்கி அடுத்து சூரியனை நெருங்குகிறது. அப்போதும் தள்ளுகிறது. இப்படி இடறி, இடறி தன்னைத்தானே ஒரு நாளைக்கு ஒரு சுற்றும், அதிர்வில் ஒரு வருடத்திற்கு ஒரு சுற்றும் சுற்றுகிறது. இதனால் தான் சுற்றுவட்ட பாதை ஏற்படுகிறது. இதே போல தான் மற்ற 8 கோள்களும், அதன் தள்ளும் வேகத்திற்கு தக்க தூரத்திற்கும், கணத்திற்கும் அதன் சுற்று வட்ட பாதை காலம் வித்தியாசபடுகிறது. இதே போல் நட்சத்திரம் ஒவ்வொன்றும் சூரியனே. அதற்கு அதனை சுற்றி கோள்களும், இப்படி பேரண்டம் முழுக்க கோடான கோடி சூரியன்கள் சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால் கொள்ளும் சக்தி, தள்ளும் சக்தி இரண்டு மட்டுமே அடிப்படையானது. எந்த ஞானியும், யோகியும் மதமும், மருத்துவமும் கூறுவதன் அடிப்படை இந்த இரண்டு ஆற்றல் தான் ஆகும். நமது உடம்பிலும் ஏற்றுக் கொள்ளும் சக்தியை உணவு, நீர், காற்று போன்றவற்றை ஏற்றுக் கொள்ளும் சக்தியாகவும், வெளியேற்றும் சக்தி, மலம், சிறுநீர், வியர்வை போன்ற (கழிவு) பொருளை தள்ளும் சக்தி என்கிறார். ஆகவே நோய் என்பதெல்லாம் சரியாக தள்ளப்படாத ஒரு நீர், மண் போன்ற உடல் வரை உள்ள பொருள் தான்.

அப்பொழுது சுத்த வெளி என்ற ஜீவகாந்தத்தை தூண்டும் போது, அது கட்டி, கொப்பளம், என்று உறுப்பில் நோய் ஏற்படுத்தி அங்குள்ள கழிவு பொருளை தானாகவே தள்ளி விடுகிறது. (மேலும் விளக்கம் பெற 3வது நூலை பார்த்துக் கொள்ளவும்) ஆகவே ஜீவ காந்தம் என்ற சுத்தவெளிக்கு மறு உந்துதலாக செயல்படுவது ஹோமியோபதி மருந்து ஒன்றே. மற்ற 31 வகை மருத்துவமும் இந்த ஜீவகாந்த சக்திக்கு முக்கிய இடமும், முழு இடமும் தரவில்லை. ஆகவே ஹோமியோபதி மட்டுமே இந்த ஜீவ காந்தத்தை ஊக்கப்படுத்தி உதவி செய்கிறது. உடலை நிர்வாகம் செய்வது இந்த ஜீவகாந்த சக்தி தான். பதிவுகளால் (மியாசம் (அ) பாவபதிவு) அது பட்ட மந்தத்தை ஊக்கப்படுத்துவது ஹோமியோபதி மருந்து. ஜீவகாந்தத்தை எப்போதும், எக்கருவியை கொண்டும், யாராலும் காட்ட முடியாது. அதே போல் உண்மையான ஹோமியோபதி மருந்தை எப்போதும் யாராலும் நிருபித்து காட்ட இயலாது. அது உடலில் வேலை செய்யும் செயலை வைத்து தான், உணர முடியும். இது போன்ற விசயங்களை அணிந்துரையில், விளக்கமாக கூறியிருக்கிறார், வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவார், விஞ்ஞானத்தையும், மெய்ஞானத்தையும் இணைக்க வேண்டும் என்று, அந்த செயலுக்கு ஒப்ப ஜீவமணி அவர்கள், பேரண்டத்தையும், அண்டத்தையும், பிண்டத்தையும் அதை சாப்பிடுவதை கொள்ளும் சக்தியாகவும், அது வெளியேற்றுவதை தள்ளும் சக்தியாகவும் இரண்டு சக்திகளை பற்றி கூறியிருப்பது ஓர் அதி அற்புதமான ஆராய்ச்சி சிந்தனையாக உள்ளது. அதற்காக அவரை நான் வாழ்த்தி, வணங்கி மகிழ்கிறேன்.

இப்படிக்கு,
அன்புடன்,
Dr. S. மாதவன்.