வெளியீட்டார் குறிப்பு:-

அன்னைக்கு வணக்கம். தந்தைக்கு வணக்கம். சாமுவெல் ஹானிமேன் மற்றும் மருத்துவ அறிஞர் பெருமக்களும் உண்மை ஆன்மீக வாதிகளுக்கும் வணக்கம். இதை போராட்டங்களுக்கு இடையில் முழு மூச்சோடு எழுதி தந்த P. மகேஸ்வரிக்கு நன்றியும், வணக்கமும். ஆங்கில மொழிபெயர்ப்பு குறிப்புகளை எழுதி பிரதி எடுத்த S.M. வாசுதேவனுக்கு நன்றி மற்றும் வணக்கம். முதலில் சரிபார்ப்பதில் உதவி செய்த J.M. யுவராஜ;, D.M.அருணா ஆகியோருக்கு நன்றியும் வணக்கமும். இந்த மெட்டீரியா மெடிக்கா என்ற நூலை கம்யூட்டரில் அச்சிட்டவர்கள் ஆ.பால்ராஐ;, ம,வ. ஆசிரியர். P. ஜெயசுதா, அவர்களுக்கு நன்றியும் வணக்கமும். இதற்கு கம்யூட்டரில் உதவி செய்த P.தேன்மொழி B.sc., P. சுகன்யா, P.கிருத்திகாஇ அவர்களுக்கு நன்றியும், வணக்கமும். Dr. சாமுவெல் ஹானிமெனுக்கு காணிக்கை ஆக்கியும், வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கும், பெற்றோர்களின், நினைவுக்கும் இதை படைத்து உலக சமுதாயத்தினருக்கு இந்த முயற்சியை முழு மனதுடன் படைக்கிறேன். இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள உரிமை உண்டு. உலகில் தனி மனிதர் எவருக்கும் இது சொந்தமில்லை. குற்றம், குறை இருப்பின் அறிஞர்கள் சுட்டிக் காட்டவும்.

இப்படிக்கு,
வேதாத்திரி மகரிஷி என்ற உலக சமுதாய தொண்டருக்கும் தொண்டன் நான்.
Dr.S.மாதவன்; R.H.M.P. (B)பதிவு
தமிழ்நாடு அரசு ஹோமியோபதி மெடிக்கல் கவுன்சில்.
D.M. உலக ஹோமியோபதி காங்கிரஸ் கிளை,
கல்கத்தா, 1989 டிசம்பர்.