மெட்டிரியா மெடிக்காவின் பின் குறிப்பு.

குறிப்பு:-
அலோபதி மருத்துவத்தில் ஸ்டெராய்டு(STEROIDS)என்ற 17 வகை மருந்துகள் உள்ளன. அவைகளை சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு தகுந்த ஒன்றை கொடுத்தால் உடனே வியாதி மாயமாய் மறைந்து விடும். உடனே நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் இது ஆபத்து. எப்படி என்றால் (அதாவது உதாரணம் ஆர்மோனை தாக்கி இது வேலை செய்கிறது.) நாம் உண்ணுகின்ற உணவு ஜீரணத்தின் முடிவில் ஏழு தாதுக்களாக மாறி 13 நாளாமிளாச்சுரபிகளின் மூலம் இயக்க உறுப்புகளுக்கு சுரப்பு நீரை தருகிறது. அது எல்லாவற்றையும், விட பலம் வாய்ந்தது அந்த நீரின் சக்தியை ஆர்மோன் என்கிறோம். அதனை தாக்கி தக்க வியாதியை அப்போதைக்கு தணிக்கிறது. பின்பு அதே வியாதிக்கு ஆங்கில மருந்து கூட வேலை செய்யாது. ஆகவே இப்போது ஹார்மோன் மருந்து தான் தர வேண்டி வரும். பின்பு இதுவே வேலை செய்யாத கட்டம் வரும். அப்போது குறிக்கு தக்க ஹோமியோபதி மருந்தோ. வேறு மருத்துவ முறை மருந்துகளோ கொடுத்தாலும் வேலை செய்யாது. இப்போது என்ன செய்வது? (ஏன் உண்மையான ஹோமியோபதி மருந்து வேலை செய்யாது என்றால் குறிகளின் மூலம் தானே ஹோமியோபதி மருந்தை கண்டுபிடிக்க முடியும். ஆனால் தப்பு, தப்பான குறிகளையே காட்டும்.) எப்படி மருந்துகளை நிர்ணயம் செய்ய முடியும்.

இருப்பினும், ஒரு வழி உள்ளது. டாக்டர் ராம் லால் பட்டேல் அவரது ஆராய்ச்சியில் கண்டுபிடித்ததை நாம் பின்பற்றினால் பலன் கிடைக்கும். சம்பந்தப்பட்ட நோயாளி நம்மிடம் வருகிறார். இப்போது ஸ்ரொய்டு கொடுமை மீறிய நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், என்ன ஸ்டெராய்டு மருந்து உபயோகித்தாரோ அதையே கடையில் நாம் வாங்கி ஒரு பங்கு அந்த மருந்தையும், 9 பங்கு லாக்டோஸ் பவுடரையும் போட்டு 50 முறை நன்கு அரைக்கனும். பின்பு அரைத்த கலவையிலிருந்து ஒரு பங்கு எடுத்து மீண்டும் 9 பங்கு லாக்டோஸ் பவுடர் போட்டு நன்கு 50 முறை அரைக்க வேண்டும். இதை 2x என்பார். மீண்டும் ஒரு பங்கு கலவைக்கு 9 பங்கு லாக்டோஸ் பவுடர் போட்டு முன்பு போலவே அரைக்க வேண்டும். இதை3x என்பார். இப்படியே 6x வரை அரைத்து அதில் ஒரு குண்டு பொட்டுகடலை அளவு, தினமும் கொடுத்தால் ஒரு சில வேளைகளில் மருந்து முறிந்து விடும். பின்பு ஹலோபதி மருந்து கொடுத்தாலும், வேலை செய்யும். இப்போது நோயின் உண்மையான குறிகளை காட்டும். இப்போது ஹோமியோபதியில் சிகிச்சை செய்வது மிகவும் சுலபம் மற்றும் நல்ல பலன் கிடைக்கும். உதாரணம் டெரோமைசின், பென்சிலின், பெனிட்டியூர் போன்ற மருந்துகளை கூட இப்படி செய்து தக்க பாதிப்புகளுக்கு தந்தால் முறிவு ஏற்பட்டு விடும். பிறகு நீங்கள் குறிக்கு உரிய மருந்து கொடுத்தால் சரியான பலன் கிடைக்கும் என்று கூறுகிறார். மேலும் கரண்டு தருவது, வெயிட் வைப்பது, எக்ஸ்ரே, ஸ்கேன் முறிவுக்கு தக்கபடி என்ன செய்ய வேண்டும் என்று நோசோடு மருந்துகளை முன் பக்கங்களில் பார்த்து தெரிந்து கொள்ளனும்.