நன்றியுரை:-

உலகில் அடிக்கடி பயன்படுகின்ற மாதிரி அவர்களில் அனுபவத்தில் கண்டதை அப்படியே தொகுத்து எழுதி வைத்துள்ளனர். அவைகளை எடுத்து எனது, அனுபவத்தையும் சேர்த்து வெற்றியடைந்த மருந்துகளின் முக்கிய குறிகளை திரும்ப, திரும்ப வந்த முக்கிய குறிகள் தந்த மருந்துகளை எடுத்து தொகுக்கப்பட்டுள்ளது. நான் அனுபத்திற்கு எடுத்துக் கொண்ட நூல்கள்
 1. ENSYCLOPOTIA PURE METIRIYA MEDICA தொகுத்தது T.F. ALLEN M.D.
 2. முக்கிய குறிகளை கூறும் மெட்டீரியா மெடிக்கா Dr. சாமுவெல் ஹானிமேன்.
 3. SENEPOTIC OF THE MEDIRIA MEDICA – Dr. BOGAR.
 4. ALLEN CHARACTOR STICK KEY NOTES.
 5. Dr. ALLEN M.D..
 6. CHARACTOR STICK OF THE MEDIRIA MEDICA – Dr. BOWNINING HAUSEN..
 7. PRACTICAL THERAPETIC – Dr. DEWAY M.D..
 8. LESSER WRITING – Dr. J.T. KENT M.D.
 9. POCKET MANNUWEL MEDIRIA MEDICA – Dr. WILLIAM BORICKE M.D..
 10. CLINICAL THERAPECTIOS –Dr. TEMPLES HOYNE A.M.M.D..
 11. SYSTEMETIC OF MEDTIRIA MEDICA – Dr. K.N. MATHUR
போன்ற பிற ஆங்கில நூல்களின் ஹோமியோபதி கலை களஞ்சியங்களில் இருந்தும் எடுக்கப்பட்டுள்ளது. எனது தேவைக்கும், சந்தர்ப்பத்துக்கும், எனது சிற்றறிவுக்கும் எட்டிய அளவு எடுத்து தொகுத்து, பகுத்து பயன்படுத்தியதன் தொகுப்பு தான் இது. மற்றும் நெய்வேலியில் வாழ்ந்த எனது குருநாதர் Dr. S.V.D. செல்லம் அவர்களுடைய தெளிந்த சிறந்த ஹோமியோவில் அவர் பெற்ற 50 வருட அனுபவத்தில் எனக்கு அவர் கூறியதை கேட்டும் மற்றும் Dr இராஜமாணிக்கம் அவர் பெற்ற 40 வருட அனுபவங்களையும், 50 வருடங்களாக நல்ல ஹோமியோபதி ஆற்றலை பெற்ற Dr நடேசனார், தெய்வத்திரு Dr சுப்புராயர் திறமை மிக்க 40 வருட புலமையையும் ஹோமியோபதியின் அனுபவத்தையும் பெற்றவர், நல்ல 45 வருட அனுபவத்தை பெற்ற Dr. S.P.. விக்டர், இன்னும் சில மேலே கண்ட ஹோமியோபதி அனுபவங்களில் இருந்தும், வாய்வழியாக அவர்கள் கூறிய அனுபவங்களையு[ம், கேட்டும் பார்த்தும் என்னிடம் வந்த நோயாளிகளுக்கு நூலாசிரியர்கள் உபதேசம் செய்த அறிஞர் பெருமக்கள் என்னுடைய செய்திகளையும், கேட்டு நோயாளிக்கு மருந்து கொடுத்து நான் பெற்ற அனுபவத்தின் வாயிலாக வெற்றிக் கண்ட குறி மற்றும் மருந்துகளை தொகுக்கப்பட்டு இருக்கிறேன். மேலே கண்ட அறிஞர்களுடைய படைப்புகள் ஆற்றல்கள் அளப்பறியது.

மருந்துகளை பயன்படுத்தி வெற்றியடையும் போது நான் அடைந்த மகிழ்ச்சி பேரின்பம் போன்றது. இந்த இன்பத்திற்கும், மேலே கண்ட அறிஞர்களின் அறிவை பயன்படுத்தி செயல்படுத்தும் போது பேரின்பமாக இருந்தது. அந்த அறிஞர்களின் தியாகத்திற்கு எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவு கடுகளவாவது தொண்டு செய்ய வேண்டும் என்று இதை எழுதியிருக்கிறேன். மற்றும் இது என்னுடைய தனி முயற்சியல்ல H.K.S.V. உறுப்பினர்களின் கூட்டு முயற்சியே. இதை நாங்கள் தொண்டாகவே செய்கிறோம். இதனை பயன்படுத்துவோர் மனநிறைவு பயனும், மகிழ்ச்சியும் அடைந்தால் அதை மேலே கண்ட அனைவருக்குமே அர்பணம். இதில் குறை இருந்தால் பொறுத்து எனக்கு அறிஞர்கள் என்னை வழி நடத்த வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
- BY.Dr. S.M.