முன்னுரை

Dr.S. மாதவன் R.H.M.P.
சேலம்
அன்புடையீர், வணக்கம்.
 • ஒரு செயலை செய்யும் முன்பு ஏன் செய்கிறோம், எப்படி செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்ற சிந்தனையை தூண்டியவர் சாக்ரட்டிஸ்.
 • ஆசையே அழிவுக்கு காரணம் என்கிறார் புத்தர்.
 • யூதர்கள் குலத்திலேயே தோன்றி புரட்சி செய்து புதிய மதம் அன்பு, இரக்கம் என்று கிருத்துவத்தை படைத்த இயேசு.
 • சண்டை போட்டுக் கொண்டிருந்த விரோதிகளை, சகோதரர்களாக மாற்றினார்கள் நபிகள் (இஸ்லாம்).
 • பசியையும் பிணியையும் நீக்கினால் தான் மனிதனின் உயர்ந்த பண்பு என்றார் வள்ளலார்.
 • உலகத்தில் ஒரே மதம் வேண்டும், ஒரே சாதி வேண்டும், ஒரே ஆட்சி வேண்டும், ஒரே கடவுள் வேண்டும், ஒரே மாதிரியான சம நேர்நீதி வேண்டும், அதற்கு மனதை வளப்படுத்துங்கள் என்றார் வேதாத்திரி மகரிஷி.
இப்படி நம் நாட்டில் வாழ்ந்த ஞானிகள், யோகிகள் வாழ்ந்த பூமி இது, மற்றும் பெரியார், காந்தியார், காமராஜர், அண்ணா, லெனின், கார்பச்சேவ், அப்துல்கலாம் போன்ற சமுதாய தொண்டர்கள் வாழ்ந்த நாடு இது. மேலும் ஹோமியோபதி மருத்துவ மாமேதை டாக்டர். சாமுவேல் ஹானிமேன் வாழ்ந்த பூமி இது. ஆகவே நாங்கள் எட்டு நூல்களை மேலே கண்டவர்களின் உழைப்பிற்க்காகவும், நல்ல தியாகத்திற்காகவும் H.K.S.V. கல்விக் குழு உலக மக்களுக்கு இதை படைக்கிறது.

எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அன்பளிப்பாக, அன்போடும், பணிவோடும் இதை படைக்கிறது. இதில் குற்றம் குறை இருந்தால் அறிஞர்கள் பொறுத்து எனக்கு வழிகாட்டவும்.

BY:- அன்புடன் Dr.S. மாதவன்.

குறிப்பு:-

இந்த நூலில் எட்டு நூல்கள் உள்ளன. இதை அனைத்தையும் மூன்று (அ) நான்கு தடவை படிக்க வேண்டும். முன்னுரைகளையும், பின்குறிப்பையும் கட்டாயம் படிக்க வேண்டும். ஒரு வீட்டுக்கு ஒருவர் இதை படித்து தன் குடும்பத்துக்கு மட்டுமே மருந்துகளை கடையில் வாங்கி சாப்பிட்டுக் கொள்ளலாம். முடியாத பட்சத்தில் மருத்துவரை அணுகிக் கொள்ளலாம்.

(1). MATERIA MEDICA-மருந்துகளை பற்றிய குணப்பாடம்.

(2). ORGANAN OF MEDICINE- நோய் என்பது என்ன, எதற்கு வைத்தியம் செய்ய வேண்டும். மருந்தை எவ்வளவு, எப்படி கொடுக்க வேண்டும் என்பது பற்றிய நூல்.

(3) CHRONIC DISEASE - - அதில் இயற்கையாக நோய் எப்படி தோன்றுகிறது என்றும், இதில் 97 நோயாளிகளின் குறிப்பு கூறப்பட்டுள்ளது.

(4). ஹோமியோபதி மருத்துவத்துக்கு தேவையான மிக நுட்பமான உடற்கூறு சாஸ்திரத்தை இந்நூலில் விளக்கப்படும்.

(5). உறுப்புக்கு சென்று அங்கு மேலே கண்ட குறிகளை REPERTORY-ல் எவ்வாறு குறிகளாக தேர்வு செய்வது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. (4). ஹோமியோபதி மருத்துவத்துக்கு தேவையான மிக நுட்பமான உடற்கூறு சாஸ்திரத்தை இந்நூலில் விளக்கப்படும்.

(6). உடல் உறுப்புக்கு தொற்றிய எல்லா நோயையும், மனம் மற்றும் பொது என்ற அமைப்புக்குள் குறிகளை தேடிக் கொடுத்தாலே உறுப்புகளில் உள்ள நோய் போய் விடும் என்ற அமைப்பு இதில் தரப்பட்டுள்ளது.

(7). உலகிலேயே மிகச்சிறந்த சுருக்கமாகவும் விளக்கமாகவும், சர்க்கரை வியாதி பற்றி கூறப்படுகிறது.

(8). Dr. சேகல் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட ஹோமியோபதியை (ROH), அதில் விரைவாக நோய்களை தணிக்கும் சுருக்கமான குறி விளக்க சொல் ஆங்கிலத்திலும் தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் அந்தந்த குறிக்கு தக்க மருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:-  8 வது நூலின் பின் குறிப்பில் மருந்தை எப்போது தருவது? எங்கே கிடைக்கும், எங்கே தயாரிக்கப்படுகிறது, குறிப்பிட்ட நூல்கள் எங்கு கிடைக்கும்? வீரியத்தை எப்படி நாம் தேர்வு செய்வது, போன்ற விவரங்கள் பின் குறிப்பாக கொடுக்கப்படும். அதை 8 வது நூலின் பின் குறிப்பில் பார்த்துக் கொள்ளலாம். இதை பயன்படுத்திக் கொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு. இது உலகில் உள்ள அனைவருக்கும் பொது சொத்தாகும். எங்கள் இணையதள முகவா www.hksv homeopathy edu trust.com. அதில் பார்த்துக் கொள்ளவும். மருந்துகளை எங்கு வாங்குவது, எப்படி பக்குவபடுத்தி, பாதுகாப்பது, மருந்துகளை எப்படி செய்வது, எப்;போது மருந்துகளை கொடுப்பது, உடலில் உள்ள நோய் குறிகளை விட்டு விட்டு மனக் குறிகளை வைத்து உடல் நோய்களை எப்படி போக்குவது என்ற தத்துவத்தை விளக்கத்தோடு, இன்னும் மற்ற சந்தேகங்களும் இந்நூலின் கடைசியாக விளக்கப்படும்.

BY:- அன்புடன், H.K.S.V. கல்விக்குழு.


உலகிலே மனிதனுக்கோ மற்ற உயிரினங்களுக்கோ ஏற்படுகின்ற நோயை போக்குவதற்கு, பல மருத்துவ முறைகள் உள்ளன. உலகில் ஆயிரம் மருத்துவ முறைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆப்பிரிக்காவில் மட்டும் 400 மருத்துவ முறைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதனை எல்லாம் தொகுத்து 32 மருத்துவ முறைகளே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதில் 5 முறைகளே பிரதானமாக உலகில் காணப்படுகிறது. 1.சித்த மருத்துவம். சித்தர் என்ற ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. நோயை கண்டறியும் அடிப்படை யாதெனில் வாதம், பித்தம், சிலோத்துமம், இதில் சரிவிகிதத்தில் உடலில் இருக்க வேண்டும். அதற்கு கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, இனிப்பு, கார்ப்பு, புளிப்பு போன்ற அறுசுவைகளை கொண்டு அவைகளை தாவரம் மற்றும் உலோகம், அலோகம், இராசாயனம் போன்றவற்றிலிருந்து எடுத்து, அந்த அடிப்படையான மூன்று ஏற்றதாழ்வு மாற்றங்களை சமன்படுத்துவதாக எடுக்கப்படுகின்ற முயற்சியும், மருந்துகளும் போன்ற விசயங்களை விளக்குவது சித்த மருத்துவம் எனப்படுகிறது. திருவள்ளுவரும் இந்த இடத்தில், நோயை பற்றி கூறும் போது

வாதம் பித்தம் சிலோத்துமம் மிகினும்
குறையினும் நோய் செய்யும்
என்று கூறுகிறார். அதே வள்ளுவர், நோயை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்று கூறும் போது,
நோய் நாடி நோய் முதல் நாடி அதை
தணிக்க வாய்நாடி வாய்ப்ப செயல்
என்கிறார்.

விளக்கம்:- உடலில் உள்ள நோயை தெரிந்து கொள்ள வேண்டும். (நோய் நாடி) அது தோன்றிய காரணங்கள் எப்போது? எப்படி? எதனால் ? எது முதலில் தோன்றி பின்பு வளர்ந்தது ( நோய் முதல் நாடி) மருந்துகளை கண்டு பிடித்து தக்க அளவும், உரிய நேரத்தில், உணவும், பத்தியமும், போன்ற விசயங்களில் ஏற்படுகின்ற குளறுபடிகளை நோயாளிகளை கேட்டு தெரிந்து தக்க உபாயங்களை சொல்லி சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார், ( வாய் நாடி வாய்ப்ப செயல்) ஆயுர்வேத மருத்துவமும் இதே போலவே பழங்களுக்கு அதிக இடம் கொடுக்கிறது. அமாவாசை, மதியம், போன்ற வானிலைக்கு முதலிடம் கொடுத்து, பத்தியம், தியானம் போன்றவைகளை வைத்து சிகிச்சை செய்கிறது. யுனானி வைத்தியமும், மேலே கண்டதுடன் கடுமையான பட்டினி போடுதல், வருடத்திற்கு ஒரு முறை அதை நோன்பாக வைத்து, வானிலை கிரகங்களுக்கு ஏற்ப மருந்துகளை அளிக்கிறது. அலோபதி மருத்துவமும், இராசாயனம், காரகங்கள் போன்றவற்றிற்கு முதலிடம் கொடுத்து, தற்சாந்தியாக வீக்கத்தை, புண்ணை ஆற்றும் படியாகவும் நோய் கிருமிகளை கொன்று உடல் உறுப்புகளை பாதுகாக்கும் படியாக செய்யப்படுகிறது. ஆனால் அதே மருத்துவ துறையில் உயர்பட்டமும் ஆங்கில மருந்துகளையும் உற்பத்தி செய்து வழங்கிய டாக்டர் சாமுவெல் ஹானிமேன் அவர்கள் இறுதி நாளில் கடைசி கண்டுபிடிப்புகளை பற்றி அவர் என்ன கூறுகிறார் என்றால், இராசாயனத்தை மாற்ற எதிர் வகையான மருந்துகளை தரத் தேவையில்லை. வானிலை, விரதம், பத்தியம் இவைகளோடு மருந்துகளை அளிக்க தேவையில்லை. உடலில் ஒரு தடைக்கு ஏற்ப அதையே நோய் பெயராக வைத்து கொண்டு, அதற்கு தக்க கார, இரசாயன வகை மருந்துகளை செய்து கொடுத்து, அங்கு உற்பத்தியான கிருமிகளை கொனறு; மருந்தை கொடுத்து விட்டால், இரசாயன மாற்றம் மாறி இயல்பு நிலைக்கு வந்துவிடும், என்ற ஒரு கருத்தும் சரியானது அல்ல.ஏன்னென்றால் ஒவ்வொரு மனிதனுக்கும் பல்லாயிர கணக்கான பிறவி தொடர்பு உண்டு. அவன் செய்த பாவங்கள் அவ்வப்போது மேலே எழும். அது மியாசம் குறிகளாக காட்டும். அந்த குறிகளை போக்கிவிட்டால் நோய் போய் விடும். வேறொன்றும் நாம் பார்க்க தேவையில்லை. உதாரணம் டைபாய்டு, மலேரியா. நிமோனியா என்ற ஆயிரம் பெயர்கள் நமக்கு அவசியம் இல்லை. வாதம், பித்தம், சிலோத்துமம், தோசம் அவசியமில்லை. அவைகளுக்கு கொடுக்கின்ற மருந்துகள் எல்லாமே சரியானது அல்ல. உதாரணம் நோய் என்றால் என்ன? குறி. அதாவது அடையாளம். அதை போக்கினால் போதும் எல்லாம் போய்விடும் என்கிறார் Dr. சாமுவேல் ஹானிமேன் அவர்கள்.Dr. S.M.. முன்னுரை:-

மெட்டீரியா மெடிகா என்றால் என்ன?. மருந்துகளை பற்றிய குணப்பாடம் என்பது தான் அதன் அர்த்தம். ஹானிமேன் அவர்கள் நோய் எப்படி தோன்றி அது தானாகவே தணிகிறது என்று அவர் கூறியுள்ளதைப் பார்ப்போம். மீண்டும் ஞாபகப் படுத்தியும் பார்ப்போம். ஒவ்வொரு பொருள்களிலும் கெடுதி செய்யும் தன்மையும், நன்மை செய்யும் தன்மைப் பொருள்களும் மாயாமாக உள்ளது என்று கூறினார் அல்லவா? மற்றும் ஆரோக்கியமான மனம் உடல் நிலையில் உள்ளவர்களுக்கு ஏதோ ஒரு மருந்து பொருளை நிரூபணத்திற்காக கொஞ்சம், கொஞ்சமாக கொடுத்துக் கொண்டே வந்தால், உடலிலும், மனதிலும் என்னென்ன மாற்றம் என்று குறித்துக் கொண்டே வர வேண்டும். பல நாடுகளிலும், பல மனிதர்க்கு பல காலங்களில், கொடுத்துப் பார்த்ததில் ஒரே மாதிரியான அடையாளங்களை மட்டுமே தோன்றிய தொகுப்பை தான் என்ஸைக்ளோ போடியா ஆஃப் ப்யூர் மெட்டிரியா மெடிக்கா எனப்படுகிறது. அந்த புத்தகம் 12 பகுதிகளாக உள்ளது. அதில் உள்ளதை அப்படியே தொகுத்து டாக்டர் T.F. ALLEN என்பவர் இந்த மனித சமுதாயத்திற்கு தொகுத்து வழங்கி விட்டார். இப்போது குறிகள் அதிகமாக வந்து விட்டால் அதே மருந்தை ஹோமியோபதி முறைப்படி வீரியப்படுத்திகொடுத்தால் அந்த குறைபாடுகள் நீங்கி ஆரோக்கியம் வந்து விடும். பரம்பரை விஷ பாவ பதிவுகளின் காரணமாக நோய் தோன்றுகிறது. ஆகவே அவற்றில் இருக்கும் குறியை நீக்கினால் நோய் போய் விடும். இது தான் ஹோமியோபதியின் சித்தாந்தம் (அடிப்படை). ஆகவே நாம் நமக்கோ, பிறருக்கோ நோயை போக்க வேண்டும் என்றால் உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ளும், வெளியேயும் உள்ள கஷ்டங்களை முழுவதும் ஒன்றை விடாமல் எழுதிக் கொள்ள வேண்டும். மனம் உணர்ச்சி, உள்ளிருக்கும் கவலை, பயம், கற்பனை, உளரல் போன்றவற்றை துல்லியமாக எழுதிக் கொள்ள வேண்டும். இது தான் நோயின் உருவம் ஆகும். (Drug Ficture) அதில் நான்கு வகை குறிகள் உள்ளதா? அதில் அபூர்வ, குறி. விசேஷச குறிகள் உள்ளதை கோடு வரைந்து குறிக்க வேண்டும். இந்த மெட்டீரியா மெடிக்கா நூலில் அபூர்வ குறி, விசேஷக் குறிகளுக்கு முதலிடம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது. ஆகவே நாம் துல்லியமாக மன குறிகளை, பொது குறிகளை, விசேஷ குறிகளை பிடித்துக் கொண்டால் இந்;த மெட்டீரியா மெடிக்காவில் பெரும்பாலும் விசேஷ மற்றும் அபூர்வ குறிகளையும் பெரும்பகுதி அனுபவத்தில் கண்ட குறிகளை எடுத்து எழுதப்பட்டுள்ளது. மருந்து தேர்வு செய்வது சுலபம். தவறிப்போனால் எல்லாமே தவறிவிடும் அல்லவா? அதனால் நமக்கு பயன் கிடைக்காது.

குறிப்பு:- மெட்டீரியா மெடிக்காவை பற்றி கூறும் போது ஒரு பொருளை ஆரோக்கிமான ஒருவரிடம் சிறிது, சிறிதாக கொடுத்துக் கொண்டே வந்தால் அது தீங்கு செய்யும். அதே குறிகளுக்கு அதே பொருளை எடுத்து ஹோமியோபதி முறையில் வீரியம் செய்து கொடுத்தால் நன்மை உண்டாக்கும் என்பது தான் ஹோமியோபதி மருந்தின் அடிப்படைத் தத்துவம் நமது பூமியில் திடப்பொருளும், திரவ பொருளும், மற்றும் உயிரின உடல்களும் வாழ்கின்றன. அதில் ஒரறிவு தொடு உணர்ச்சியை மட்டுமே கொண்டுள்ள தாவரங்கள் மற்றும் அமீபா போன்ற ஓரறிவு உயிரினங்கள் உண்டு, உறங்கி, இனப் பெருக்கம் செய்து வாழ்கின்றன. உடன் வாயை பெற்ற இரண்டாவது அறிவு புழுவினங்கள் தொடுவதும், விழுங்குவதுமாக இருந்து உறங்கி இனவிருத்தி செய்து வாழ்கின்றன. 3வது அறிவு பெற்ற எறும்பு, வண்டு போன்றவைகள் தொட்டு, விழுங்கி, முகர்ந்து மேலேக் கண்ட பயனை செய்கிறது. 4வது அறிவு பார்வையை பெற்ற பாம்பு, பல்லி போன்ற 4 அறிவு உயிரினங்களும் இதே தான் செய்கிறது. காதைப் பெற்று 5 வது அறிவை பெற்று விட்ட உயிரினங்களும் உண்டு, உறங்கி இனவிருத்தி செய்து தான் வாழ்கின்றது. அதன் தேவைக்கு ஏற்ப உடலைப்பு பெற்று உள்ளது. அவைகளை பற்றி இன்ப, துன்ப நோய்களை பற்றி தாவரவியல், விலங்கியல் போன்றவைகளை பற்றிய பாடங்களில் விளக்கங்கள் உள்ளன. 6 வது அறிவான சிந்திக்கும் ஆற்றல் களை பெற்ற மனிதன் உலகெங்கும், வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் உலகம் முழுவதும் ஒரே மாதிரியான சீதேஷ்ணம் மற்றும் காற்றும் இல்லை. ஆகவே மற்ற உயிரினங்களின் எண்ணிக்கையும் கூடும் குறைவும், உணவு பொருள்களில் எண்ணிக்கை கூடும், குறைவும் காணப்படுவதைப் போலவே மனிதர்களின் தோற்றத்திலும், அறிவிலும் செயல்பாடுகளிலும் சிறிது வித்தியாசம் காணப்படுகிறது. உதாரணம் ஆப்பிரிக்காவில் வெயில் மிகுதி, காற்றும், குளிரும், குளிர்ச்சியும் அதிகம் தேவைப்படும். உணவும், அதே போல் தேவைப்படும். வட துருவத்தில் வாழும் மனிதர்களுக்கு பனிக்கட்டியில் வீடு கட்டி வாழுகின்ற எக்ஷிமோக்களுக்கு வெப்பமும், வறண்ட காற்றும் தேவைப்படும். இது இயல்பு. ஆசிய கண்டத்தில், இந்தியாவின் தென்னாட்டில் வாழுகின்ற மக்களுக்கு ஒரு வகை உணவு பொருட்கள் தேவைப்படும். அந்த நிலை மீறினால், மாறினால்; நோய் தோன்றும். இந்த மாற்றத்தை சரி செய்வதை தான் மருத்துவம் என்கிறோம்;. அதை எப்படி செய்யப்படுகிறது என்ற உதாரணங்களைப் பார்ப்போம். அதாவது மேலும் ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். நமது அன்றாட சமையலுக்கு உதவும் உப்பு, மிளகாய், வெங்காயம் இது மனித உடலில் பரம்பரை, பரம்பரையாக கலந்து விட்டது. ஆகவே இவை அளவாக எடுத்துகொள்வதால் தீமை செய்யாமல், உணவாக மாறுகிறது அல்லவா? சரி அது எப்படி நோயாகவும் மருந்தாகவும் மாறுகிறது என்பதை இனி பார்ப்போம்.

உதாரணம்:- மனிதனிடம் உள்ள பாவ பதிவுகள் பிதுங்கும் போது பல்லாயிரக்கணக்கில் வெளியேறுகிறது. அதிலிருந்து ஒன்றோ இரண்டோ பிதுங்கினால் உடல் மற்றும் மன இயக்கத்தை தடை செய்கிறது. இதை தான் ஆங்கிலத்தில் DIS+EASY என்றுக் கூறப்படுகிறது. இப்போது உப்பு, காரங்களை பற்றியே உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.

1.) உப்பை அதிகமாக சேர்த்துக் கொள்ள விரும்புவான், இந்த விருப்பம் தான் அவனுக்கு பரம்பரை நோய். பாவம் என்பதும் MIASM ஆகும். அதிகமான உப்பை உடலுறுப்பு தாங்காது அல்லவா?. ஆகவே அவன் அதிகம் தண்ணீர் குடிப்பான். குடித்தும் திருப்தி அடைய மாட்டான். இதை தான் ஹோமியோபதியில் குறி (நோய்) என்கிறோம். இந்த குறியை தான் போக்க வேண்டும் என்கிறார். மேலும் உப்பு தின்பவன் உடலும் கெடும் அல்லவா?. இப்படி தான் 31 மருத்துவமும் உடல் நோயை பார்க்கிறது. ஆனால் ஹோமியோபதியில் மட்டும் மனநோயை அதாவது குறியை போக்கு என்கிறது. ஆகவே மனதிலேயே குறியை போக்கி விட்டால் பின்பு உடலில் நோய் எப்படி தோன்றும்? இதை தான் நோயின் முதல் நாடி என்று திருக்குறள் கூறுகிறது. ஆகவே உப்பை தின்றவனுக்கு தாகம் மட்டுமா? அல்ல. ஏக்கமும் வந்து விடும். அதே மருவி இல்லறத்திலும் ஆண் அல்லது பெண் திருப்தி அடையாமல் சமுதாய கட்டுப்பாட்டை மீறி பிறரை அணுகி தன் இல்லற தாகத்தை தீர்த்து குற்றவாளிகளாகவும், அல்லது ஏக்கம் மிகுந்து பித்து பிடித்தவராகவும், பைத்தியமாகவும் ஆகின்றனர். இப்போது உப்பையே வீரியப்படுத்தி கொடுத்தால் நேட்ரமூர் (NAT- MUR).. என்ற மருந்தாக மாற்றி மருந்தை தகுந்தவருக்கு, தகுந்த வீரியத்தில் கொடுத்தால் உடனே விருப்பமும். தாகமும், மோகமும், வேகமும் தணிந்து அதன் பிறகு உடல் நோய்களும் நீ]ங்கி விடும். இது தான் ஹோமியோபதியின் தத்துவம். இதே போல் மற்றொரு உதாரணத்தை பார்ப்போம்.

2.) வெங்காயத்தை அரியும் போதோ, மூக்கில் ஜில்லுனும், கண்ணில் காரமான நீரும் வரும். வெங்காயத்தை வீரியப்படுத்தி அல்லியம் சிபா (ALLIUM-CEPA).. என்ற மருந்தை கொடுத்தால் பாவ பதிவும் நீங்கி,கண்களில் காரமான நீர் ஒழுகுபவர்களுக்கு இதை கொடுத்தால் அந்த நீரும் நின்று விடும் அப்போது முளைத்த பாவ பதிவு ஒன்றும் நீங்கி விடும்.

3.) மிளகாய் அதிகமாக தின்றால் நாக்கு முதல் ஆஸனவாய் வரை மூக்கு முதல் முகம் எல்லாம் எரியும். அதே மிளகாய் வீரிய படுத்தி CAPSICUM என்ற மருந்தை கொடுத்தால், மிளகாய் மாதிரி எரிச்சல் நீங்கி அந்த வகை பாவ பதிவும் போய்விடும். இது தான் ஹோமியோபதியின் தத்துவம். இதை மனதில் மறக்காமல் வைத்து கொள்ள வேண்டும். அதாவது எது நோயை உருவாக்கியதோ அதுவே நோயை நீக்கிவிடும் என்பது தான் ஹோமியோபதியின் அடிப்படை தத்துவம். இப்படி தான் உலகிலுள்ள ஏலக்காய் முதல் எட்டிக்காய் வரையும், உருளைக் கிழங்கு முதல் ஊமத்தங்காய் வரையும், பசும்பால் முதல் நாய் பாலிலும், நாயின் எச்சில் வரையிலும், அழுகிய எருதின் சதை முதல் பாம்பின் விசம் வரை, சொரி, செதில்கள் முதல் சீக்கு, சிபிலிஸ் சீழ் வரை கக்குவான் இரும்பல் முதல் கோளை வரை அதைக்கொண்டே மருந்தாக்கி வைக்கப்பட்டுள்ளது. வெளி நாடுகளில் இருந்து வரும் சாறுகள். கொட்டைகள் வந்து சேர்வதற்குள் அதன் பசுமையே போய்விடும் என்பதற்காக அதனை பிழிந்து, சாறாக்கி அந்த சாற்றின் அளவுக்கு தூய சாராயத்தை கலந்து விடுவார்கள். அது தேவைப்படும் பொழுது ஹோமியோபதி முறைப்படி வீரியமாக்கி வைத்துக் கொண்டால் தான் ஹோமியோபதி மருந்து. இல்லை என்றால் அது தாய் திரவமாகும். (Q) உதாரணம் தாகம் அதிகம் எடுக்கும். வேலை மேலே ஞாபகம் இருந்தால் BRY. ஆகும். தாகம் அதிகம் எடுக்கும். வேலையை புறக்கணிப்பான். படுத்திருப்பான் SULPH ஆகும். தாகம் இருக்கும். ஐஸ் தண்ணீர் குடிப்பான் PHOS.. ஆகும். தாகம் எடுக்கும் கொஞ்சம், கொஞ்சமாக சுடு தண்ணீர் குடிப்பான் ARS. ஆகும். தாகம் நிறைய சொம்பு, சொம்பாக பச்சை தண்ணீர்குடிப்பான். பயம் இருந்தால் ACON. ஏக்கம் இருந்தால் NAT- MUR. வேலை மேல் எண்ணம் BRY. சோம்பேறி SULPH. இவை தான் அபூர்வ குறிகள். தனித் தனியாக பார்த்து தெரிந்து கொள்ளனும்.

பேதி என்பது பொதுக்குறி. அதிகமாக மலம் கழியும் என்ற ஓர் அடையாளம். அதற்கு முன்பு கூறப்பட்ட மருத்துவ முறைகளில் மருந்தோ, உணவோ, பத்தியமோ, கொடுத்து தடுக்கப்படுக்கிறது. ஆனால் ஹோமியோபதியில் இதை விட பெரிய குறி, தனித்தன்மை வாய்ந்தது. இதை விட பெரிய குறி விஷேச தன்மை வாய்ந்தது. அபூர்வ குறி இப்படி பார்த்துக் கொண்டு தான் போகனும். உதாரணம் கூற வேண்டும் என்றால் ஒரு யானையை குறிப்பிட வேண்டும். அதற்கு 4 கால்கள் இருக்கிறது. பொதுவாக சொன்னால் இது நான்கு கால்கள் உள்ள மிருகம் - (பொதுக்குறி இது). தொன்னை, தொன்னையா கால்கள் இருந்தால் இது விஷேசக் குறி. ஏனென்றால் யானைக்கு தான் தொன்னை, தொன்னையாக இருக்கும். யானைக்கு தும்பிக்கை இருக்கும். இது தனிதன்மை வாய்ந்தக் குறி. யானைக்கு மட்டும் தான் தும்பிக்கை இருக்கும். ஆண் யானைக்கு மட்டும் தான் தந்தம் இருக்கும். பாருங்கள், 4 கால்கள் உள்ள மிருகம் பொதுக்குறி. தொன்னை கால்கள் என்றால் விஷேசக் குறி. இச் செய்தி 4 கால்களுடைய மிருகத்திலிருந்து வேறுபடுகிறது. தும்பிக்கையிருக்கும் இது தனித் தன்மை வாய்ந்த குறி. இதில் ஆண் யானைக்கு மட்டும் தான் தந்தம் இருக்குது. அதிலும், அபூர்வ குறி என்பது தந்தம் மாதிரி. இது ஆண்யானைக்கு மட்டும் தான் இருக்கும். இப்படி தான் ஒவ்வொரு நோயிலும் நான்கு வித குறிகள் இருக்கும். அதை தான் பிடித்துக் கொள்ள வேண்டும் என்கிறார். (இந்த உடலை இயக்குவது உயிர். அந்த உயிரை வெளிப்படையாக காட்டுவது மனம்.) ஆகவே மனதிலிருந்து தோன்றுகின்ற குறிகளில் அபூர்வ குறியை பிடித்து கொள்ள வேண்டும். யானையை உதாரணம் காட்டியது போல. ஒவ்வொரு மனிதனிடமும் ஓர் அபூர்வ குறி இருக்கும். அதை பிடித்துக் கொள் என்கிறார். உடன் விசேஷமும், தனித்தன்மை குறியை மதிப்பீட்டில் சேர்த்துக் கொள்ளவும். மற்றும் உடல் முழுக்க தாக்குகின்ற பொதுக் குறியை GENERAL SYMPTOMES எனவும், முன்பு கூறப்பட்ட நான்கு வகை குறிகளை அதில் தேடிப் பிடித்து, மொத்தமான குறிகளை மதிப்பீட்டு (TOTALITY OF SYMTOMS) மேலோங்கி வரும் அந்த ஒரு மருந்தை மட்டும் கொடுக்க வேண்டும். இதில் கிடைக்கவில்லை என்றால், உடல் குறியை தேடி பிடிக்க வேண்டும். அதில் கூட இந்த நான்கு குறிகள் இருக்க வேண்டும். முக்கியமாக அபூர்வகுறி இருக்க வேண்டும். இக்குறிக்கு தக்க மருந்து கொடுத்தாலே எல்லா நோயும் போய்விடும். முன்பு நாம் பார்த்தோம். பேதியில் பேதி என்பது பொதுக்குறி. பீச்சாங்குழலில் அடிப்பது போல் பேதி. அது ஓர் அபூர்வ குறி. இந்த குறிக்கு CROTEN –TIG என்ற மருந்தை தர வேண்டும். வயிற்றில் கட, முட வென சப்தம் கேட்கும். காலோடு வழியும் AESCULUS.காற்றுடன் மலம் வந்தால் ALOES. இது போல் சீதபேதியில் பார்ப்போம். இதுவும் மலம் கழிவது தான். கழிவுகள் மூக்கில் வந்தால் சளி. நெஞ்சில் இருந்து வந்தால் அது கோழை. ஆசனவாயில் இருந்து வந்தால் சீதம். சீத கடுப்பு என்றால் சீதம் வரும். வயிற்றை கடித்து, கடித்து வருவதால் அது வயிற்று கடுப்பு என்பகிறோம். இந்த சீத கடுப்புக்கு மற்ற எல்லா வைத்திய முறையிலும் மருந்து தரப்படுகிறது. ஆனால் ஹோமியோபதியில் நோயின் குறியை பார்க்கப்படுகிறது. இதில் 4 குறிகள் உள்ளது அல்லவா? இங்கு இதை தான் பாக்கனும். எங்கும் இதை தான் பார்க்கனும். இது தான் உண்மையான ஹோமியோபதி மருத்துவத்தின் தத்துவம் ஆகும். இந்த தத்துவத்தை மறக்கவே கூடாது. இதை உலகில் யாராக, எவராக இருந்தாலும் முறை மாறினாலும், மீறினாலும் சத்தியம் அவர்களை குற்றவாளி ஆக்கிவிடும். மேலும் இப்போது அபூர்வ குறியையும், அதற்கு ஒத்த மருந்தையும், பார்ப்போம். சீத கடுப்பு, என்பது பொதுக்குறி. அதிலிருந்து தேடி சென்றால், தனித் தன்மையும், விசேஷக்குறியும், அபூர்வகுறியும் காணப்படும். இப்போது அபூர்வகுறியையும் அதற்கு ஒத்த மருந்தையும் பார்ப்போம். மலம் கழிய போய் உட்காருவான். மலம் கழிந்தவுடன் எழுந்து வருவார். பிறகு கொஞ்ச நேரம் கழித்து உட்கார்ந்து விட்டு எழுந்து வருவார். இது NUX குறி. ஒருவர் மலம் கழிக்க உட்காருவார். மலம் வந்தவுடன், சீதகடுப்பு அதிகமாகி விடும். உடன் எழுந்து வரமாட்டார். இது MERC-SOL சீதம் குறைவு, இரத்தம் அதிகம் MERC –COR. ஒருவர் ஆஸன வாயை சுடுநீரில் கழுவுவதும், சுடுநீர் குடித்துக் கொண்டிருப்பார். இது ARS குறி. ஒருவருக்கு மிளகாய் காரம் மாதிரி எரிச்சல், மலம் கழியும் போது CAPS. நெருப்பு கட்டி இறங்குவது போல எரிச்சல் என்றால் CANTH. இந்த அடையாளத்தை தான் ஹானிமேன் அபூர்வக்குறி நோய் என்கிறார்.

மேலே கண்ட மருந்துகளை பச்சையாக கொடுத்தால் நோய் உண்டு பண்ணும். அதுவே POTENCY செய்து கொடுத்தால், அதுவே நோய்க்கு அமிர்தமாகும். இது தான் ஹோமியோபதி தத்துவம.; மற்றும் ஓர் உதாரணம் பார்ப்போம்.

அதாவது ஒரு பெரிய மருத்துவமனையில் வாத நோயாளி தங்கியுள்ள ஒரு அறைக்கு செல்வோம். இங்கு வாத நோயாளிகள் உள்ள இடம் அல்லவா? வாதம் என்பது பொதுக்குறியாகும். இங்கு தனித்தன்மை விஷேசக் குறி எப்படி வருகிறது என்பதை பார்ப்போம். இங்குள்ள அனைவரும் வாத நோயாளி.
 • முதல் படுக்கையில் உள்ள நோயாளியை பார்ப்போம். அவர் வாத வலியினால் படுத்து இருக்கிறார். அவனருகில் சிறுவன் ஒருவன் போகிறான். என் பக்கம் வராதே என்று துரத்துகிறான். காரணம் என்ன? மேலே மோதக்கூடாது என்பது தான் காரணம். மோதக்கூடாது என்ற குறியுள்ள மருந்து ARN.
 • மற்ற இரண்டாவது படுக்கை வாத நோயாளி வலியோடு படுத்து இருக்கிறார். இவர் அந்த சிறுவனை கூப்பிட்டு கால் மேல் மிதிக்கச் சொல்கிறார். வலிக்கு மிதமாக இருக்குது. இதற்குண்டான மருந்து BRY.
 • துணியை விலக்கி விட்டு கொண்டு காற்று படும் படி விசிறிக் கொண்டு இருக்கிறார். வலி இதமாக(குறைவாக) இருக்கிறது PULS.
 • காலின் மேல் துணி போட்டு மறைத்துக் கொண்டு இருக்கிறார். காரணம் வலிக்கு காற்றுக் கூட பட முடியவுல்லை என்று சொல்வார்கள் HEP-SULPH.
 • இவர் துணியை விலக்கி எரியுது என்று கூறி ஜில்லிப்பு தண்ணீரில் ஒத்தடம் கொடுக்கிறார் PHOS.
 • ஒருவர் சுடுநீர் ஒத்தடம் கொடுக்கிறார் ARS.
இவ்வாறு டைப்பாயிடு, டைப்பஸ், மலேரியா, மாதவிலக்கு பிரச்சனைகள், ஆண், பெண் SEX. பிரச்சனை நோய் என்று சொல்வதெல்லாம் பொதுக்குறி. ஆகவே மருத்துவ பெயரில் நோயின் பெயர்களையெல்லாம் வைத்து இருக்கிறார்கள். உதாரணம்:- வாத நோயாளி வார்டில் அனைவருக்கும், வாத நோய்க்கு மட்டும் தான் அலோபதி மருத்துவ முறையிலும், மற்ற மருத்துவ முறையிலும் மருந்து தருவார்கள் அல்லவா? ஆனால் ஹானிமேன் கூறுவது இந்த தனித்தன்மை வாய்ந்த குறிகளை நீக்க வேண்டும்என்கிறார். இது மலேரியாவா? வாத நோயா? என்று பார்க்கக் கூடாது. இப்படி தான் எல்லா அடையாளங்களையும், குறியை பார்க்கனும். நாம் நம்மிடமுள்ள நோயாளியின் CASE RECORD - பார்த்தால், 4 குறிகளும் தெரியும். இதில் அபூர்வ குறியை எடுத்து பார்க்கனும். இதில் எப்படி மருந்தை தருவது? எவ்வளவு மருந்தை தருவது? என்பதை பற்றி அடுத்ததில் பார்ப்போம். இதில் நோயின் அபூர்வ குறி, மருந்தின் அபூர்வ குறியை மட்டும் பார்ப்போம். மருந்து எப்படி தரணும்? எப்போது தரணும்? ஏன் தரணும் என்பதை அடுத்த நூலில் பார்ப்போம். இப்போது 4 குறிகளும், பெரும்பாலும் அனுபவத்தில் கண்டவைகளையே, இந்நூலில் கொடுக்கப்பட்டது. அதை பற்றி இப்போது இந்த நூலில் பார்ப்போம்.