PALLADIUM

- பல்லாடியம்

ஓர் உலோகத்திலிருந்து செய்யப்படுபவை.

பெண்களின் சினைப்பைகளுக்கு பயன்படும் மருந்துகளில் இதுவும் ஒன்று. இவர்கள் குழப்பமான மனநிலையுடையவர்களாகவே இருப்பார்கள். எல்லாமே குழப்பமாகவே இருக்கும். இவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களும் குழப்பமான மனநிலையுடையவர்களாக இருப்பார்கள். குறிப்பாக இவர்கள் அம்மா, தங்கைகளுக்கும், சினைப்பை முட்டையில் கோளாறுகள் இருக்கும். இது நாள்பட்டதாக பரம்பரையாக வரும். இதனால் உடலின் மற்ற பகுதிகளையும் அழித்துக் கொண்டே வரும். முதுகில் இருக்கும் மோட்டார் எனப்படும் நரம்பு பலஹீனமாகிவிடும். இதனால் சின்ன வேலை செய்தால் கூட பலஹீனமாகிவிடும். வெறுப்பும் ஏற்படும். அழுகை வரும், ஆதரவு இல்லையே என்ற எண்ணமிருக்கும். சாப்பிடும் போது பலம் வரும். உடனேயே ஆணவமும் (கர்வமும்) வந்திடும். நான் தான் பெரிய பலசாலி என்ற எண்ணம், நண்பர்கள் கிடைத்து விட்டால் பயங்கரமாக சிரிப்பார்கள். அடிக்கடி திக்கு, திக்குனு விழுவார்கள். பிறர் மனம் பாதிக்கும் படி வெடுக், வெடுக்கென பேசுவார்கள். அதனால் இவர்களை நண்பர்கள் விரும்ப மாட்டார்கள். மேல் உறுப்புகளில் வலி அதிகமாகும். தலையில் இழுப்பது போல, முதுகிலிருந்து மேலே இழுப்பது போல் உணர்வு, மண்டை நரம்பெல்லாம் இழுக்கும். மாலை நேரத்தில் தலையில் வலி ஏற்பட்டு காதுக்கு செல்லும். பிறகு அடுத்தக் காது வரை பரவும். உடன் எரிச்சல், புளியேப்பம் வருது என்றும், இது போன்ற குழப்பம் மிகுந்த நோய்களையே கூறுவார்கள்.

வயிற்றில், தொப்புளில் துப்பாக்கி குண்டு பட்டது போல் வலி. இந்த வலியானது இரைப்பைக்கு போகும். வயிற்றினுள் உறுத்துவது போலிருக்கும். இரணமாட்டம் எரிச்சல் பல விதமான வலிகள் அடிவயிற்றில் காணப்படும். அடி வயிறு வீங்கியும் இருக்கும். ஏராளமான மலக்காற்று பிரியும்.

கர்ப்பபை தொங்கி முறுக்கிக் கொள்ளும். முன்புறம் இருக்க வேண்டியது முறுக்கி, பின்புறம் சென்றுவிடும். அதில் பலவிதமான வலிகள் தொல்லைகள் ஏற்படும்.

வலது புறம் வலி ஏற்படும். வலது புற முதுகும், பகுதியிலும் வலி ஏற்படும். காரணம் கருப்பை முறுக்கி வலது புற முதுகில் குத்தும். மாதவிலக்கு காலத்தில் பைத்தியம் பிடித்தது போல இருக்கும். அப்போது கர்பப்பையில் வெட்டுவது போல வலியிருக்கும். மலம் கழிந்தால் சரியாகிவிடும். வலது புற சினைப்iயில் வலியும், வீக்கமும் இருக்கும். யோனிப்பகுதிக்கு மேலுள்ள கூடக எலும்பில் எரியிர மாதிரி, சுடுவது போல வலியிருக்கும். கர்ப்பபை தொங்கி விடுவது தான் இதன் முக்கிய குறி. அப்போது அடி வயிற்றை நீவினால் சுகமாக இருக்கும். ஆனால் உடனே வலியும் ஏற்படும். மார்பைச் சுற்றிலும் வலி ஏற்படும். ஒரு பக்க மார்பிலிருந்து மற்றொரு மார்புக்கு வலி வரும். மாதவிடாய் காலத்தில் போக்கும் உடனே வெள்ளையும் படும். வெள்ளைப்படுவது தெளிவாகவேத் தெரியும். பால் கொடுக்கும் தாய்க்கும், மாதவிலக்கு ஏற்படும். வலது புற மார்பு காம்பில் வலி தெரியும். இவைகள் தொடர்ந்து மாறி, மாறி வந்தால், மார்பு வலி, கர்பப்பையில் வலி வந்தால், முதுகு வலி, இடுப்பு வலி வந்தால் அடிவயிறு வலி எனவும் வரும். இந்த மாதிரி வலி ஏற்கனவே எனக்கு வந்திருக்கிறது என்றும் சொல்வார்கள்.

கைக் கால்களில் நைவுக் காயம், கல்லால் அடித்தது போல் வலி இருக்கும். களைப்பும் இருக்கும். மூட்டுகளிலும், நரம்பு இழுத்துப் பிடித்துக்கும். அடிப்பட்டது போல் வலி, பாரம் களைப்பு இருக்கும். குறிப்பாக கால் பெருவிரல், மூட்டில் இது போன்ற வலி இருக்கும். வலது புற தோளில் வாத வலி ஏற்படும். உடல் முழுவதும் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும். உறவான மருந்து. (கலந்து வேலை செய்தல்) PLAT. ஒப்பிட்டு பார்க்கும் மருந்து:- ARG, HELON, LIL, APIS.

மருந்தின் வீரியம் - 6, 30 சிறந்தது.

PETROLEUM

- பெட்ரோலியம்

பெட்ரோலியத்தில் இருந்து செய்யப்பட்டது. (மூலபொருள்).

பெட்ரோல், மண்ணென்ணை, குரூடு ஆயில் போன்ற இவைகளை பயன்படுத்தும், இது சம்பந்தமாக வேலை செய்யும் தொழிளார்களுக்கு, ஏற்படும் விளைவுகளை முறிக்க பயன்படும். கார், கப்பல், விமானம் போன்றவற்றில் பிரயாணம் செய்யும் காலங்களிலும், இடி, மின்னல் காலத்திலும், மன வேலை அதிகம் செய்தாலும், வெறுப்பு ஏற்பட்ட பின்பும், முட்டைகோஸ் சாப்பிடுவதாலும், மேலே கண்ட காரணங்களால் நோய், வலி, கஷ்டம் ஏற்படும். ஈரம் இல்லாத பருவ காலத்திலும், தலையணை, உயரமாக வைத்து படுத்தாலும் சுகம். இருட்டில் சுகமாக இருக்கும். வெளிச்சம் என்றால் தொல்லை, ஈர பருவ காலத்திலும், வெய்யில் துவங்கும் போதும், சரும நோய்கள். சின்ன காயம் பட்டாலும் சீழ் பிடித்து விடும். பசியினால் வயிறு வலிக்கும். சூடு என்றால் மயக்கம் தோன்றி வாந்தியில் முடியும்.

PHOSPHORUS

- பாஸ்பரஸ்

பாஸ்பரஸ்.

இம் மருந்துக்குரியவர்கள் கூறுவார்கள். என் உடம்பில் என்ன இருக்குது என்று தெரிந்துக் கொள்ள ஸ்கேன், இரத்த பரிசோதனை, எக்ஸ்ரே எடுக்கலாமா என்று கேட்பார்கள். தனிமை பயம், குடும்பத்தில் கட்டுபட்டிருக்கிறேன் என்று மனைவியோ. கணவனோ கூறினால் இது தான் மருந்து. பேசும் போது கேள்வி கேட்டால் பதிலை தாமதமாக கூறுவார். உடனே கூறமாட்டார். நான் பச்சையாக சொல்லறேன், உண்மையை வெளிப்படையாக சொல்கிறேன், என் இரகசியத்தை கூறுகிறேன், என் மனதை திறந்து பேசுகிறேன் என்றால், இவர்கள் கருப்பாக இருந்தாலும் ஆடையை குறைத்துக் கொள்வதும், மேக்கப் செய்வதுமாகவே இருப்பார்கள். கருப்பாக இருந்தால் கூட தான் அழகி என்ற எண்ணம் இருக்கும்.கால் மேல் கால் போட்டுக் கொண்டு அடிக்கடி ஆடைகளை சரி செய்வதும் பிறரை வசீகரிப்பதற்காக, பிறர் பார்கட்டும் என்பதற்காகவும், இரவல் நகை, துணி மணி, மேக்கப், பந்தா மாதிரியே தான் செய்கை செய்வார். கம்பீரம், தாயத்தைக் கட்டியதும், பாடம் போட்டுக் கொள்ள மற்றும் மற்றவர்களுக்கு பாடம் போட விரும்புவார்கள். பிறருக்கு ஆசிர்வாதம் செய்வதும், பிறரிடம் ஆசிர்வாதம் வாங்குவதும், அன்பு காட்டினால் அவரும் அதிக அன்பு செலுத்துவார். இடி, மின்னல் பயத்துக்கு ஒரே மருந்து. PLAT – – னாக் காரர்கள் அன்பு செலுத்தினால் திரும்ப செலுத்த மாட்டார்கள். ஆணவக்காரர்கள். ஆனால் PHOS போலவே மேக்கப்பும் இருக்கும். குளிர் காய்ச்சல், மற்ற நோயின் போதும், ஐஸ்வாட்டர் சாப்பிட்டால் சுகம் என்றால். டாக்டரிடமே நான் வேலைக்கு போகலாமா என்றுக் கேட்டால். வேறொருவர் நல்ல செயலை செய்தால் அவருக்கு நன்றி கூறுவார். மின் அதிர்ச்சி, மின்னல் அதிர்ச்சி, ஷேக் அடித்த மாதிரி வலி, பளிர்னு வந்திட்டு போகுதுங்க என்று கூறினால், ஊசி குத்திய பிறகு இரத்தம் உறைய செய்யவும், குணப்படுத்துவதற்கு நல்ல மருந்து. தனியாக. மறைவாக இரகசியமாக பேச வேண்டும் என்பார்கள். தொண்டையில் சளி அப்பும். அடிக்கடி கனைத்து கொண்டால் நல்லாயிருக்கிறது என்பார்கள். இருப்பினும் ஐஸ்கிரிம் விரும்பி சாப்பிடுவார்கள். வயிற்று வலி, தலைவலி, பிற நோய்களின் போது கூட ஐஸ்வாட்டர் குடிக்கலாமா என்பார். குடித்தால் வயிற்று வலி விட்டு போகுதுங்க என்பார். சூடாக குடித்தால் வயிற்று வலி அதிகம் ஆகிறது என்றால் FL-AC, PULS.

PHYTOLACA - DECANDRA

- பைடோலகா டெக்கன்ரர்

சணல் மரத்தின் வேர்.

கோளங்களில் மின்னல் மின்னுகிற மாதிரி வலி, கரண்ட் ஷேக் அடிக்கிற மாதிரி வலி இங்கும், அங்கும் ஓடுதுங்க என்பார். வலியில், கஷ்டத்தில் பல்லை கடித்து கொண்டு இருக்கிறேன் என்பார். பல்லை கடித்தால் நல்லாயிருக்குது என்பார். கஷ்டம் வந்திட்டால் பல்லை இருக்கி கடித்து கொள் வேன் என்பார். கொடுமைகளை கண்டு பல்லை கடித்து கொண்டு இருக்கிறேன் என்பார். இரவில் சிறியவரோ, பெரியவரோ, பல்லை நற, நற என்று கடிப்பார்கள். அரைப்பார்கள். இதுவே இம் மருந்தின் முக்கிய அடையாளம். கடுமையான வலி, அதனால் மயக்கமே வந்துவிடும். மாதவிலக்கின் போது மிகுந்த கஷ்டத்தினால் அழுவார். மாராப்பு சீலை விலகுவது கூட தெரியாது. மாராப்பு சீலையை சரி செய்து கொண்டு அழுதால் PULS. சீலை விலகினாலும் கண்டுக்கொள்ள மாட்டார் HYOS. எவரையும் மதிக்க மாட்டார். விலகிய சீலையை சரி செய்ய மாட்டார் PLAT. வலது புறம் இருந்து இடது புறம் வரை பரவும். டான்சில் வலி, காமத்தையும், மாதவிலக்கையும் மறைப்பார் CON. வேலைக்கு போக மாட்டார் SULPH மாதிரி. ஊசி குத்துகிற மாதிரி வலி LED-PAL சில சமயம் குழப்பமாக இருக்கும் BRY-ah என்று, அப்போது GRAPH இதை கொடுத்தால் அடையாளம் காட்டி கொடுத்து விடும். தன் பெயர் கூட மறதி. குற்றம் செய்தது போல் எண்ணம் ஏற்படும்.

பாரிச நோயின் போது எப்படி இருப்பார் என்றால் வலி புண் மாதிரியும், மின்னல் மின்னுவது போலவும், ஏற்படும். உடலின் மேல் பகுதி எலும்பு, சதையில் முண்டு, முடிச்சிக்கு இது. கோளங்களில் முண்டு முடிச்சியா CON.. மாராப்பு சீலையை விலக்கி இருந்தாலும் சரி செய்யமாட்டார். திறந்து காண்பிக்க விருப்பம். வேலை செய்ய வெறுப்பு. சாப்பிட வெறுப்பு. கடுமையான வலி தாங்க முடியாது, மயங்கி விழுவார். தொண்டை வறட்சி, எச்சில் அடிக்கடி முழுங்குவார். BRY, PHYTOLOCA.ஊசியில் குத்துவது போல வலி LED-PAL. ஒடற மாதிரி, மின்னல் கரண்ட் ஷேக் அடிப்பது போல் வலி PHYTO.

PICRICUM - ACIDUM

- பிக்ரியம் ஆசிடம்

பிக்ரிக் என்ற ரஸாயனம்.

இவர்கள் சோகை பிடித்த மாதிரியும், முகத்தைப் பார்த்தால் எலுமிச்சை பழம் மாதிரியும் (நிறம்)இருக்கும். ஆனால் என் இரத்தம் சூடாக ஒடுதுங்க என்பார். அதற்கு பச்ச தண்ணீரில் குளிப்பதும், குளிர்ந்த காற்றில் இருப்பதும் சுகம் என்பார். மூளைக்கு அதிக வேலை கொடுப்பதும், மூளையை போட்டு கசக்குவதும், அதிக சிந்தனை செய்வதும், குழப்பமும், கோபமும் ஏற்படும். மூளை அதிர்ச்சி ஏற்பட்டு கிரு, கிருப்பில் முடியும். பின்பு சிறிதளவு உடல் வேலை செய்தாலும், அறிவு மங்கி போய் விடும். மூளையில் சக்தியே இருக்காது என்று கென்ட் அவர்கள் கூறுகிறார். சிறுநீரில் பாஸ்பேட், யூரிக் ஆஸிட் உற்பத்தி ஆகிவிடும். சிறுநீர் பை பலஹீனப்பட்டு விடும். வியாபாரிகளுக்கும், கந்து கடைக்காரர்களுக்கும் இது பொருந்தும். பார்த்துக்கனும்.

PLANTAGO – MAJOR

- பிலான்டக்கோ மேஜர்

வாழைப்பழத் தோலிலிருந்து வீரியப்படுத்தப்பட்டவை.

இந்த மருந்து பல் வலிக்கும், பல் சொத்தைக்கும் பயன்படும் மருந்துகளில் இது முக்கிய மருந்து. பல் வலியின் போது, காது வலியும் ஏற்படும். பல் எவுறு கரைந்து கொண்டே வரும். கண் வலி, கண் முட்டையின் நடுவில் இழுப்பது போல் வலி எற்படும். பல் வலி நடு காது வரை வலிக்கும். பல் வலியினால் கண்ணின் நடு முட்டையில் சுளீர், சுளீர் என வலி ஏற்பட்டு மற்றயிடங்களுக்கு எல்லாம் பரவும். விரும்பி சாப்பிடும் பொருளின் மீதே வெறுப்பு ஏற்படும் மனநிலையுடையவர்கள். உதாரணமாக வாசனை புகையிலை, வாசனை சிகரெட் போன்றவற்றில் நிக்கோட்டின் என்ற வாசனைப் பொருள் கலக்கிறார்கள். இந்த நிக்கோட்டினை சாப்பிட்டு, சாப்பிட்டு வெறுப்பு ஏற்பட்டுவிடும். இந்தியாவில் ஹோமியோபதி முறையில் தயாரிக்கப்படும் பல் பொடிகளில் இந்த மருந்தைப் பயன்படுத்துகிறார்கள்.

காலை, ஏழு மணியிலிருந்து மதியம் இரண்டு மணி வரை தலை தளர்ச்சியாக இருக்கும். இது முறை வைத்து வரும் (அ) காலை ஏழு மணிக்கே ஆரம்பித்து உடனே விட்டு விடும். (அ) மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பித்து உடனே விட்டு விடும். கண்ணில் கிழிப்பது போல வலி, தலை முழுவதும் பரவி முகத்துக்கு வந்திடும். காதில் சுளீர்னு வலி ஏற்படும். காது விரைப்பாக இருக்கும். ஏதோ சப்தம் கேட்கும். காது நரம்பெல்லாம் வலிக்கும். உடனே தொண்டை, தலை, காது, பல்லுக்கு என மாறி, மாறி வலிச்சிக்கிட்டே இருக்கும். தண்ணியாட்டம் மஞ்சள் நிறமான சளி தீடீரென வரும்.

பல்வலி ஏற்படும் உணர்ச்சி அதிகமாகி இரணமாட்டம் ஆகிவிடும். பல் எவுறு கண்ணமெல்லாம், வீங்கிவிடும். எச்சில் ஒழுகும். பல் நீண்ட மாதிரி, உணர்வு காற்று கூட பட முடியாது. ஆனால் சாப்பிட்டால் வலி எதுவும் தெரியாது.

மலச்சிக்கல், பேதி என மாறி, மாறி ஏற்படும். மலம் கழியும் போது முக்க முடியாது. காரணம் மூலத்தொல்லையும், இருக்கும். மலம் வரும் போதே பாதியிலே நின்று விடும். பேதி மரக்கலரில் தண்ணியாட்டம் வரும்.

சிறுநீர் ஏராளமாக கொட்டும். சிறுநீர் கழிவதேக் கூட தெரியாது. பல் வலியின் காரணமாக உடன் ; RHUS-T, BELL, AROM, CAUST.

சருமம் பிப்பாகவும், எரிச்சலாகவும் இருக்கும். தடிப்பு, தடிப்பாகவும், மினு, மினுனும் இருக்கும். நகச் சுத்தியும் வரும். உடன் (AGAR, TAMUS.) உறவு மருந்துகள் :- KALM, CHAM, PULS.மருந்து வீரியம்:- தாய் திரவகத்திலிருந்து குறைந்த வீரியம் வரைத் தரலாம்.

PLATINUM – METALLICUM

- ப்ளாட்டினம் மெடாலிக்கம்

தங்கத்தை விட 10 பங்கு விலையுர்ந்த ஒரு உலோகம்.

இம் மருந்துக்குரியவர்கள், சிறு பொருட்களை வைத்து கொண்டும் படிப்பு, அழகு பொருட்கள், குறைவாக இருந்தாலும் கூட நம்மிடம் எல்லாமே இருக்குது. நாம் தான் உயர்ந்தவர் என்ற ஆணவம், தற்பெருமை பேசுபவர். பிறரை கேலியும், கிண்டலும், இழிவுபடுத்தியும் பேசுவார்கள்;. இவர்களுக்கு பிறர் குறைகள் மட்டும் தான் தெரியும். அதை வைத்து இழிவு படுத்துவார். அவள் கூறுவாள் எனக்கு தகுந்த கணவன் இல்லைங்க என்பாள், இவன் குண்டாக இருக்கிறான், கருப்பாக இருக்கிறான், இப்படி நிறைவை கூட குறைவாக சொல்லி திட்டுவாள். நான் எங்கேயோ, பெரியயிடத்தில் பிறக்க வேண்டியவள், பிச்சக்கார கூட்டத்தில் பிறந்து விட்டேன் என்பாள். என் பிள்ளைகள் பாருங்க, தலையும், அதுங்க உடம்பும், இந்த தௌ;ளவாரி நாயிங்க, என் வயித்தில் பிறக்க வேண்டியவர் இல்லை, திருடன்களாக வந்து பிறந்து விட்டது என்பாள். சாமியார் என்றாலும் கூட ஆணவ தோரணை தெரியும். பூசாரி என்றாலும் கூட அவர் அதிகாரம் தெரியும். பிச்சைக்காரர் என்றாலும் தான், தான் உயர்வு என்று நினைப்பார். காந்தியை கூட சொட்டையன் என்றும், துண்டு கட்டியவன் என்று கேலி செய்வதும், யாராக இருந்தாலும் இழிவுப்படுத்துவதும், தான், தான் உயர்வு என்ற ஆணவ பேச்சும், செயலும் இருக்கும். செக்ஸ் விருப்பம் மிக, மிக அதிகம். ஆனால் இவர்களை தொட்டவுடன் மயங்கி போய் விடுவார்கள். பிறகு மயக்கம் தெளிந்தவுடன் துணைவணை கொச்சை, கொச்சையாக திட்டுவதும் உதைப்பதும் இவர்கள் செய்வார்கள்;, செக்ஸ் விருப்பத்தை தணிக்க முடியாததால், பேச்சும் பெருமையும் இப்படியே தான் இருக்கும் இவரை அடையாளம் கண்டு கொள்ளவும். வலி மரத்து போவதும், ஜில்லிப்பு தட்டுவதும் மாறி மாறி ஏற்படும். இடுப்பு பகுதி, மானி கட்டி போட்ட மாதிரி உணர்வு.

PLUMBUM – METALLICUM

- பிலம்பம் மெட்டாலிக்கம்

அசுத்தமான ஈயத்தின் ஒரு பகுதி.

வயிறு வலியினால் வாந்தியும், அதில் மலமே வரும். பித்த வாந்தி வந்தால் HYDROST/ NUX. முறுக்கி வலித்தால் COLOC. நிறைய வாந்தி ஒரு பங்கு தண்ணீர் குடித்தால் இரண்டு பங்கு வந்திடும் PHOS.இரத்த வாந்தி வந்தால் IPEC,HAMA. மேலே கண்ட வாந்தி வந்தால் PLUM. எகிர் கரைந்து வீங்கி விடும். வருத்தத்தில் நீண்ட நாள் துன்பப்படுதல், திறந்த வெளிக்காற்றில் இருப்பதாலும், கொஞ்சம் அசைந்தாலும் கஷ்டம், நசுக்கி, அழுத்தி தேய்ப்பதாலும், இரண்டாக வில் போல் வளைந்தாலும் சுகம்.

PODOPHYLLUM - PELYATUM

- போடோபில்லம் பெட்யாட்டம்

வெய்யில் காலத்தில் மட்டுமே விளையும் ஆப்பிள்.

குறிப்பிட்டக் காலத்தில் பயன்படும் மருந்து. கருப்பை மாதவிலக்கில் நிறைய போய்,போய் கருப்பையே தொங்கி போய் விடும். அதே போல மலம் அடிக்கடி கழிந்தோ, முக்கி, முக்கியே, ஆஸனவாய் பிதுங்கி விடும். சில குழந்தைகளையோ, பெரியவர்களையோ மலம் கழியும் போது பார்த்தால் பம்பரம் மாதிரி ஆஸனவாய் பிதுங்கி இருக்கும். கழுவி கொண்டு ஆஸனத்தை உள்ளே தள்ளி விடுவார்கள். பெண் கூறுவாள் மலம் கழியும் போது பெரிய பந்து மாதிரி முக்கும் போது, யோனிக்கு உள்ளே வந்து முட்டுதுங்க என்பாள். எழுந்தவுடன் சரியாக போய் விடும். இது கருப்பை தொங்கி விடுவது தான் காரணம். ஆஸனவாய் பிதுங்கி பாவடை நாடா (அ) டேப் மாதிரி பட்டையாக மலம் வரும். இதற்கு அடையாளம் சிறுவன் மலம் கழியும் போது எழுந்து வரமாட்டான். ஆஸனத்தை பார்த்தால் பிதுங்கியிருக்கும். CROTON-TIG ல் வயிறு அலசல் இருக்கும். ALOSE –ல் மலம் தெரியாமல் வந்து விடும். தண்ணீர் வலையிலிருந்து வருவது போன்ற கொடக், கொடக் சப்தம் PODO. ஈரல் சம்பந்தப்பட்ட வயிற்று வலி வயிறை தடவுவார்கள். சிறுநீர்பையில் கல் அடைத்துக்கும், அப்போது கீழே விழுந்து உருளுவதும், தடவுவதுமாக இருப்பார்கள். பல்லை இறுக்கி கடிப்பார்கள். இப்போது கல் சிறிது நகரும், சுகமும் கிடைக்கும். அழுத்தி பிடித்தால் மருந்து வேறு. இதய நோய் இருக்குது வந்திடும். அதனால் இறந்திடுவோம் என்றும். நாளங்கள், கருப்பை, ஓவரி, ஆஸனவாய் யோனி போன்றவை தளர்ந்து போகும். பலஹீனத்தால், நான்கு நாள் மலச்சிக்கலும், நான்கு நாள் பேதியும் காணப்படும். எர்ணியாவுக்கும், யோனி பிதுக்கத்துக்கும் நல்ல மருந்து. தலை:- கிரு, கிருப்பு ஏற்பட்டு குப்புறவோ, (அ) சைடுயில் இருபுறங்களிலும் சாய்ந்து விடுவார். முகம் சூடாகவும், வாய் கசக்குது என்று சொல்லுவார். மயக்கத்தில் பாதி கண் திறந்து இருக்கும். இப்படி காலை நேரத்தில் நேரும். இரவில் பல்லை அரைப்பதும், வாய் சீழ் நாற்றம் அடிக்கும்.

POTHOS - FOETIDUS

- போத்ஸ் போட்பிடஸ்

அழுகிய மேலை நாட்டு முட்டை கோஸ்.

இது ஆஸ்துமாவிக்கு முக்கிய மருந்தாகும். தூசு, துப்புபட்ட பிறகு தாங்க ஆஸ்துமா இழுக்குது என்பார்கள். நெல்லு அடிக்கிற இடத்தில், நெல்லு மிஷினில், நூல் ஆலை, சிமெண்ட் பேக்டரியில், ஒட்டடை அடிப்பவர்கள், அடிச்சி பெருக்கிய பிறகு, இது போல ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி இழுக்குதுங்க என்றுச் சொன்னால் இது தான் முக்கிய மருந்து. இழுத்து, இழுத்து முதுகு எல்லாம் வலிக்குதுங்க என்பார். மனக்குறி பெரிதாக எதுவும் இல்லை. ஆஸ்துமாவைப் பற்றியும் அதன் கொடுமையை பற்றியே கூறுவார்கள். சிறுவருக்கு இழுத்து, இழுத்து அடிவயிறே முறுக்கி விரைப்பு தட்டி விடும். பேசி கொண்டு இருக்கும் போது நினைப்பு எங்கியோ போய்விடும். எரிச்சல், தலைவலி குறிப்பிட்ட இடத்தில் தலைவலி, இழுக்கற மாதிரி இருக்கும். திறந்த வெளியில் சுகம் PLUS. முதுகு தண்டு வளைந்து சிவந்து இருக்கும், ஓயாமல் மூச்சு சத்தம், அதனால் தொண்டையும் நெஞ்சும் வலிக்கும். மூச்சு, இழுக்கவும், விடவும் கஷ்டம், இழுக்கவே முடியலைங்க என்பார். வாயை திறந்து இப்படி சுவாசிக்க வேண்டி வருவதால் நாக்கு மறுத்துப் போச்சி என்பார். இதனால் எகிறும், பற்களும் மறுத்து போய் விடும். மலம் போனதும் (ஆஸ்துமா) தணிந்து கஷ்டம் போய் விட்டது என்பார். தூசு ஒவ்வாமைக்கு இது முக்கிய மருந்து.

PSORINUM

- சோரினம்

குஷ்ட ரோகி சொறிந்த செதில்கள்.

இதில் ஸோராவுக்கு பயன்படும் முக்கிய மருந்து, இதுவும் ஸ்ல்ப்பரும் (SULPHER) ரும். ஸோராவுக்கு நெருங்கி வரும். இந்த நோயியிலிருந்து நான் தப்புவேனா என்ற பயம். எதிலும் தன் நம்பிக்கை இல்லாதவர். வேலைக்கோ, வியாபாரம்செய்யவோ போகவே மாட்டார். வெய்யில் காலத்திலும் கூட கம்பளி போர்வை, போர்த்திக் கொண்டு இருப்பார், இது முக்கிய குறி. சகிக்க முடியாத நாற்றத்துடன் ஏராளமான வியர்வை. ஏராளமான (நாற்றம் இல்லாத வியர்வை (VERAT.) கொஞ்சம் வியர்வை BELL. தொன்றல் காற்று கூட வெறுப்பு PSOR. சுகம் என்றால் SULP.உடன் போர்த்தி படுப்பார்கள். குடும்பம் மற்றும் தொழிலினால் மனச்சோர்வு, தொழிலே மறந்து விடும். மலம் கழிய மிகவும் முக்குவார். மாதவிலக்கு ஒரு மணி நேரம் (அ) அரை நாள் மட்டும் இருக்கும். கிராமத்தில் சொல்வார்கள். கண்ணில் கண்டதோடு சரிங்க என்பார்கள். இவரது வியர்வை நாற்றம் குளித்தால் போய்விடும் SULP. (நாற்றம் போகாது PSOR.) சரும நோயில் சருமத்தின் அடியில் முட்டை அழுகிய மாதிரி வாடை. ( இதில் புளு வைத்தால் MEZ.) சின்ன காரணத்துக்கும், இரும்பலும், சளியும் பிடிக்கும் TUB, PSOR. பசியில் தலைவலி IOD. காய்ச்சல் விட்ட பிறகு கூட பலஹீனம். மறு குறி பாய்ந்து விபரிதம் ஏற்பட்டால் PYROG. இந்த மருந்து வேலை செய்யாவிட்டால் (OP.) ஆஸ்துமாவில் நிமிர்ந்து படுத்தால் இது. கழிவுப் பொருட்கள் எல்லாம் அழுகிய பிணம் நாற்றம் அடிக்கும். சிரங்கு கொப்பளம். திறந்த வெளியில் சுகம். குப்புறபடுத்தால் (அல்லா கும்பிடுவது போல் படுத்தால்) MED. குளிரின் போதும் போர்வைக்குள் இருப்பார். வியர்வை உள்ளே இருக்கும். நாற்றம், தன்னம்பிக்கை இல்லை. காலை 5 லிருந்து மாலை 5 வரை தொல்லை.

PULSATILLA – NIGRICANS

- பல்ஸ்சாட்டிலா

அதிக காற்றில் விளையும் உள்ள மலர்.

இவர் மிகுந்த அன்புள்ளம் கொண்டவர், இரக்க குணம் உள்ளவர். நல்ல காரியங்களுக்காக, தன் முழு பொருளையும் கூட தியாகம் செய்து விடுவார். கஞ்சதனமும் மாறி, மாறி வரும். செய்த செயலுக்கு நன்றி கூறும் போது ஆனந்த கண்ணீர் வடிப்பார். இவரது கஷ்டத்திற்கு யாராவது ஆறுதல் சொன்னால் அமைதி அடைவார். சிறு பொருளை வைத்துக் கொண்டு சிக்கனமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தால், சிறுமியோ, பெண்களையோ பார்க்கலாம். எந்த ஒரு செயலுக்கும், டக்குன்னு கண்ணீர் விடுவார். ஒரு சொல் இவர்களை சொன்னால் கோபத்தினால் மாலை, மாலையாக கண்ணீர் விடுவார். சிறுமி என்றால் ஒரு பென்சில் கேட்டு அப்புறம் வாங்கி தருகிறேன் என்று சொன்னாலும் கூட மாலை, மாலையாக கண்ணீர் விடும். எழுதும் போது பென்சில் எழுதவில்லை என்றாலும், உடனே அழுகை வந்திடும். குளிரில், வெய்யிலில், சந்தோஷத்தில் அழுகை. கோபத்தினால், கவலையினால் அழுகை, இப்படி எந்த ஒரு நிகழ்ச்சிக்கு பிறகு, அதாவது கவலை, கோபம், சந்தோஷம், வறுமை, அவமானம் இதற்கு பிறகு அழுகை வந்தாலும், ஆனந்த கண்ணீர் என்றாலும், இது தான் மருந்து. ஈரத்தில் இவர்களுக்கு தொல்லை. மாதவிலக்கு 2,0 3,0 4,035, 25 – நாள் இப்படி மாறி மாறி, முன்ன பின்ன வந்தால் இது தான். ஆனால் குளிர் காற்று சுகம். மலம், சிறுநீர், மாதவிலக்கு அடுத்தடுத்து கலர், கலராக மாறி, மாறி வந்தாலும் இது தான் மருந்து. ஆணோ, பெண்ணோ, கடவுளுக்கும், பெரியவர்களுக்கும், மதிப்பு கொடுத்து நடப்பவர்.ஆன்மா கெடக் கூடாது என்பதற்க்காக உடல் உறவை புறக்கணித்து விடுவார். ஆன்மா தான் பெரிது அது பாதுகாக்க வேண்டும் என்;பார்கள். அதனால் பெண்களை வெறுப்பார்கள். பெண்கள் தன் படுக்கை அறையில் வேறு ஒருவர் (ஆண்) நிர்வாணமாக படுத்திருப்பதாக தெரிவதால் ஆண்களையே வெறுப்பார்கள். ஜில்லுன்னு காற்று வேண்டும்; என்பார். ஜில்லுனு குடிக்க விரும்பினால் PHOS. முதலில் எழும் போது முட்டியில் வலி, காற்று வேண்டாம் என்றால் RHUS.. காற்று விருப்பம் என்றால் PULS. நன்றி கூறும் போது அப்படியே உருகி போவார். வயிற்றை நசுக்கி, நசுக்கி விட்டால் வலி தணியும் COLOC.அம்மாவுடனேயே இருந்துக் கொண்டு வேடிக்கை பார்க்கவும், ஊரைச் சுற்றும் குழந்தைகள். நடக்கும் போது நல்லாயிருக்கும். உட்காரும் போது கஷ்டம். கவலையை பற்றியே பேசுதல், நான்கு மருத்து உள்ளது.

PYROGENIUM

- பைரோஜினியம்

அழுகிய மிருகத்தின் சீழ் புண்.

அழுகிய சீழ் புண்கள், அது பிண நாற்றம் அடிக்கும். அருகில் யாரும் இருக்கவே முடியாது. இது பிரசவம், டை்பாயிடு, அறுவை சிகிச்சைக்கு பிறகும், மறுகுறி பாய்ந்த நிலைக்கு பிறகும், மாட்டுக்கு கால் குழம்பில் அம்மை விஷமித்து, பிறகு நெருக்க முடியாத அளவுக்கு நாற்றம் அடிக்கும். (மலம், சிறுநீர், வியர்வை, எச்சில் போன்ற கழிவு பொரட்கள் பிண நாற்றம் அடித்தால் BAP.) முதுகு பிளவறை, ராஜபிளவை பெரியதொரு கட்டிகள் தோன்றி, பழுக்காத, ஆறாத, பிணம் நாற்றம் அடிக்கும். செப்டிக் நிலைமைக்கு இதை கொடுத்தால் உயிரை காப்பாற்றும். செப்டிக் காய்ச்சல் ஏற்பட்டால் இது தான் மருந்து. அழுகிய மாதிரி வாய் துர்நாற்றம், பேதி, வாந்தி வருதல், படுக்கை உறுத்தல், சீழ் என்ற தொல்லைகளுக்கும் நாற்றத்துக்கும்,செப்டிக்நிலைக்கும் PYROGIN, ARN, BAPT போன்ற மருந்துகளும் வரும். படுக்கை உறுத்துது என்றால் ARN. பயமாக குடிபோதையில் இருக்கிற மாதிரி மந்தம் என்றால் BAPT. பல மடங்கு பேசுவாள், வேகமாக பேசுவான் PYRO கனவில், மயக்கத்தில், பக்கத்தில் யாரோ நிற்பது போன்ற எண்ணம், அதனால் தன் கை, கால் வேறு என்று நினைத்தால். காரணமின்றி அழுகை குழப்பத்தால், குழந்தை மாதிரி பெரியவர்கள் அழுதால் ACID – NIT. நாம் பணக்காரர்கள் என்ற நினைப்பும், இவர்களுக்கு வியர்வை MERC-C. மாதிரி வரும். வியர்வை இருக்காது. அப்பிக்கிட்டு இருக்கும். காய்ச்சல் இருக்கும் போது துடிப்பு இருக்காது. சில சமயம் துடிப்பு இருக்கும். அதற்கு தகுந்த காய்ச்சல் இருக்காது. சிறிய அசைவு என்றாலும் கண்ணை மூடினாலும் நோய் குறைவு. நடந்தால் தணிவு RHUS, ARN, PULS, K-I.) தூங்கும் போது கனவு கண்டு எழுவார். செப்டிக் இருந்தால் மட்டும் தான் இம் மருந்து. RATHANA:- - வலியினால், நோயினால் (அ) ஏதோ ஒரு உடல் மன கஸ்டம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள எண்ணம் வந்தால் ஒரே மருந்து இது தான்.

RHEUM

- ரெஹ்கம்

சளி உற்பத்தி செய்யும் ஜவ்வு.

பேதியின் போது சிறுநீர், பல் முளைக்கும் போது தோன்றும் பேதியானது மிகவும் புளித்த நாற்றமாக வீசும். மற்ற நேரத்தில் புளிப்பு நாற்றம் வீசினால் வேறு. வாங்கும் பொருளை திருப்பி தர மாட்டேன் என்றும், குழந்தைகள் விளையாடும் போது பார்த்தால் முக்கும் முணகும். மலம் கழிக்கும் முன்பு சிறுவர் கத்தினால் இது முக்கிய மருந்து. பல் முளைக்கும் போது கோபம் CHAM. முரட்டு தனத்துடன் கோபம் என்றால் RHEUM. இரவு நேரத்தில் போர்வை எடுத்து விட்டாலும், நடந்த பின்பும், மலம் கழியும் முன்பும், சில சமயம் நின்று கொண்டிருக்கும் போதும், துன்பம் ஏற்படும். வெது வெதுப்பான வற்றிலும், போர்த்தி, கொண்டிருப்பதாலும், வளைந்து படுத்திருப்பதாலும், சுகம். முக்கிய மனகுறி என்னவென்றால் யாரிடமும் எந்த பொருளை வாங்கினாலும் திருப்பி தர மாட்டார்.

RHODODENDRON

- ரோடோடென்ரான்

பனியில் மட்டும் விளையும் ரோஜா.

இது ஆண்களுக்கு மிக முக்கிய மருந்து. மனக்குறி எதிரில் உள்ள பொருள் எதுவாக இருந்தாலும், பற்றி எரிகிற மாதிரி இருக்குது என்பார். ஒளி வட்ட வட்டமாக தெரிந்தால் இங்கு VERAT – VIRIDE. இரண்டு, இரண்டாக தெரிந்தால் இம்மருந்து. பல வட்டங்கள் தெரிந்தாலும் இது தான். ஆண்களின் விதை வலி, வீக்கம், மிக பெரியதாக வீங்கி கொண்டே போகும். அதற்கு இது தான் முக்கிய மருந்து. ஒரு பெரிய தேங்காய் அளவு கூட வீங்கி போய் விடும். அப்பொழுது இந்த மருந்து கொடுத்தால் சரியாகி விடும். (இதுக்கு மனக்குறி முக்கியம். எம் மருந்துக்கும் மன குறி முக்கியம்.) விதை வீக்கத்தில் தோல்வி அடைந்தால் SPONG. பொருந்தும். தன் உடம்பே நெருப்பில் எரிகிற மாதிரி தெரிந்தாலும், இடி, மின்னல் வர போகிறது என்பது முன் கூட்டியே தெரிந்து கொண்டாலும் இத தான் மருந்து. பயம் என்றால் PHOS.. தலைவலியின் போது வேலை செய்தால் வலி தணியும் SEP.மற்றும் சிறு மூட்டுக்கள், சதை நார்கள் மற்றும் விதை நரம்புகள் இங்கு எல்லாம் நன்கு வேலை செய்யும். எல்லா விதமான வாத நோய்களுக்கும் பொருந்தும். ஆனால் மனகுறி பார்த்துக் கொள்ளனும். இவன் ஒரு சோம்பேறி, எதிலும் ஒத்து போக மாட்டான்.

RHODIUM

- ரோடியம்

உலோகத்தையும், இரசாயத்தையும் பிரித்தெடுத்து வீரியப்படுத்தப்பட்டவை.

(இதை நிருபித்தவர் MALFARIAN. 200 வீரியத்தில்) முன் மண்டையில் கிழிப்பது போல, ஷேக் அடிப்பது போல் நரம்பில் வலி ஏற்பட்டு தலை முழுக்க பரவும், அதிகமான பிறகு காது, மூக்கு, பல் என எல்லா இடங்களில் வலி ஏற்படும். கழுத்து தள்ர்ந்து தலையே தொங்கியது போல் ஆகிவிடும். அந்த இடத்தில் ஜில்லிப்பு தட்டிவிடும். உதடு வறட்சி, இனிப்பு சாப்பிட்டால் குமட்டல், தலைவலியின் போது மந்தம். இடது புறம், வாதத் தொல்லைகள் கீழ் நோக்கி இறங்கும். புஜம், தோள்பட்டைகளில், கழுத்து இறுக்கி பிடித்துக்கும். உள்ளங்கை, முகப்பகுதியில் பிப்பு, மலம் கழியும் போது ஆஸன வாய் தளர்ச்சி, அப்போது வயிறு இழுத்து பிடித்துக்கும். மஞ்சள் நிறமான கெட்டியான சளி நெஞ்சில் அப்பிருப்பது போல எண்ணமிருக்கும். களைப்பாகவும் இருக்கும்.

RHUS – TOXICODENDRON

- ரக்ஸ் டக்ஸிகோடென்ரான்

இரத்தம் குடிக்கும் ஒரு வகை விஷ (செடியின்) கொடி.

இம் மருந்துக் குரியவர்கள் கூறுவார்கள். படுத்து விட்டு எழுந்து நடக்க முடியலைங்க, நாலு ஸ்டெப் நடந்தால் தாங்க, பிறகு இயல்பாக நடக்க முடியுது என்பார்கள். தாய்மார்கள் கூறுவார்கள் மார்பு எல்லாம் வலிங்க, குழந்தை பால் குடிக்கும் போது நாலு சப்பு, சப்பினால் பிறகு வலி குறைவுங்க, கூட்டத்தில் பேச கூட முதலில் தயங்குவார்கள். பிறகு மெல்ல, மெல்ல பேசிய பிறகு, இயல்பாக பேசுவார்கள். நடக்கும் போதும் கூட முதலில் நடக்க முடியலை என்று கூறி, பிறகு கொஞ்சம் நடக்க, நடக்க சரியாகிவிடும். என்பார்கள். இவர்கள் மூட நம்பிக்கை கொண்டவர்கள். கனவில் தண்ணி எடுத்தேன், கஷ்டப்பட்டு வேலை செய்தேன், இப்ப உடம்பு வலிக்குது எனபார். எளவு வீட்டில், தீட்டு சோறு சாப்பிட்ட பிறகு தாங்க வயிற்று வலி, வயித்தாலை போகுது, உடம்பே சரியில்லை என்றும், தண்ணி தாண்டி விட்டேன். அதனால் கால் வலி, கால் வீங்கி விட்டது என்பார். இப்படி உண்மைக்கு பொருந்தாத வார்த்தைகளையே பேசுவார். டீ கடையில் பேசி கொண்;டார்கள் ரோட்டில் பணம் கொட்டிக் கிடக்குதுன்னு, உடனே எடுக்க வந்து விட்டேன் என்றும், வட்டி கடையில் நின்று கொண்டிருந்தேன் யாரோ ஒருத்;தர் ஜாமின் கையெழுத்து போட சொன்னார்கள், போட்டேன் என்றும், இப்படி மூட நம்பிக்கையுள்ள முட்டாள்களுக்கு இதுவே பெரிய மருந்து. மூட நம்பிக்கையில் சந்தேகப்பட்டால் இது தான் மருந்து. இதற்கு முட்டாள் மருந்து என்ற பெயரும் உண்டு. உடம்பு வலி மற்ற நோயின் போது வேலை மேலேயே கவனமாக இருந்தால், உடம்பு வலி மற்ற நோயின் போது வேலை மேலேயே, கவனமாக இருந்தால் உடம்பு நல்லாயிருக்குது என்பார்கள். வலி உள்ள பகுதியை புரட்டிக் கொண்டு, உருட்டிக் கொண்டு, அசைத்துக் கொண்டே இருத்தால் சுகம் என்பார்கள். குளிர் காற்று, குளிர் காலம் ஒத்துக்காது. தொல்லை ARS. மாதிரி. சூடான அறையில் இருந்தாலும் சுகம் என்பார். போர்வை போர்த்தினாலும் சுகம் ARS. ஆனால் ARS.-க்காரர்கள் மன அமைதியின்றி அங்கும், இங்கும் அலைவார்கள். ஆனால் இவர்கள்(RHUS)உருட்டிக் கொண்டு இருப்பார்கள், பேசும் போதே மூட நம்பிக்கை தெரியும். கண் முட்டையே பிதுங்கிற மாதிரி வலி என்றால் PULS.

RICINUS COMMUNIS BOFAREIRA

- ரிசினஸ் கம்மோஸ் பொப்வரியர்

விளக்கெண்ணையிலிருந்து வீரியப்படுத்தப்பட்டவை.

இம் மருந்துக்குரியவர்கள் வயிறு உப்பிசத்தைப் பற்றியே கூறுபவர்களுக்கும், (வாயு தொல்லை) மலக் காற்று அடிக்கடி பிரிவதை கூறுபவர்களுக்கும் இந்த மருந்து. பால் குறைவாக உள்ள தாய்மார்களுக்கு இதை கொடுத்தால் பால் அதிகமாகச் சுரக்கும். முக்கியமாக இம் மருந்தின் குறிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். வாந்தியும், குமட்டலும் ரொம்ப நேரம் ஏற்படுவதால் களைப்பு தட்டி விடுவார்கள்.

பின் மண்டையில் வலி ஏற்பட்டு மயக்கம் ஏற்படும். இரத்த தேக்கம் காணப்படும். காதில் வண்டு கத்துவது போன்ற சப்தம் கேட்கும். முகம் வெழுத்துக் காணப்படும். வாய் உதறலும் (நடுக்கலும்) காணப்படும். பசியே இருக்காது. ஏராளமான தாகமும் இருக்கும். நிறைய தண்ணீர் குடிப்பார். வயிறு எரிச்சல், வயிறு புளிப்பு தட்டி நெஞ்சு கரிச்சலும், வயிறு எரிச்சலுமிருக்கும். உடன் குமட்டல், எக்கசக்கமான அளவு வாந்தி எடுத்தல், தொப்புளில் வலி ஏற்படும். வாய் வறட்சி. மலக்குடலில் உள்ள குடல்கள் இழுத்துப்பிடித்து போன்ற வலி. பேதி போக வேண்டும் என்ற எண்ணமிருக்கும். (பேதி போனால் அரிசி கழுவின தண்ணி மாதிரியே போகும் வேறு எதுவும் இருக்காது. மலம் கழியும் போது வயிறு இழுத்துப் பிடிக்கும். வயிற்றில் கட, முடனு சப்தமும் கேட்கும். உடல் ஜில்லிப்பு, மலம் அதிகமாக வரும் அப்ப வலியிருக்காது, பிறகு ஆஸன வாயில் வலி ஏற்படும். மலம் பச்சையாகவும், சீதமாகவும், சளியாட்டமும், இரத்தம் கலந்தும் வரும். காய்ச்சல் உடல் இளைத்துக் கொண்டே வரும். அதனால் கேனம் பிடித்தது போலவே இருப்பார்கள்.

உறவான மருந்துகள்:- வெயில் காலத்தில் ஏற்படும் தொல்லையுடன் வாந்தியும் இருந்தால்:- RESORCIN. தசைகளில் இழுத்துப் பிடித்து இருந்தால்:- CHOLOSTERRAPINA, ARS, VERAT. மருந்தின் வீரியம்:-3x. திரவத்தின் வீரியத்;தை, பாலில் கலந்து தாய்க்கு கொடுத்தால், பால் சுரக்காத பெண்களுக்கு இந்த மருந்தை பாலில் ஐந்து சொட்டுகள் விட்டு நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை தரலாம். பால் சுரக்கும் வரை.

RUMEX CISPUS

- ருமக்ஸ் சிஸ்பஸ்

மஞ்சள் நிறமுள்ள பூண்டு.

இதுவும் N-S போல ஈரம் பருவ கால மருந்து. தானாக உணர்வின்றி மலம் SULPH. மாதிரி. மழை, குளிர் காலத்தில் அதிகமாக சளி பிடிக்கும். அப்படியே ஒழுகும். கட்டி கட்டியாகவும் வரும். அதிகப்படியான சளிக்கு ஒரே மருந்து இது தான். கணைத்துக் கொண்டும், காரிக்கொண்டும் இருப்பார்கள். தொண்டை, நெஞ்சு, எரிச்சல் அதையே நினைத்து அதிக கஷ்டம் BRY. அல்ல, RUMEX. காற்று தேவை இல்லை. BRY காற்று தேவை. NUX மாதிரி இருக்கும். போர்வையை உடல் முழுவதும் போர்த்திக்குவார். NUX-V கையை மட்டும் வெளியே வைப்பார். HEP-SUL.குளிர் காற்றை உள்ளே (மூச்சை) இழுக்க முடியாது. அதிக உணர்ச்சி. இவர்கள் வாயை மூடிக் கொண்டு மூச்சு இழுப்பார்கள். இதே இடத்தில் நெற்றியைத் தவிர மற்றயிடத்தை போர்த்திக் கொண்டால் ARS. சளி பிடித்த காலத்தில் சளி, பேதியும், மாறி, மாறி வந்தால் இது தான். தொண்டையில் ஒரு மாதிரி சளி கணைத்துக் கொண்டேயிருப்பார். இதே இடத்தில் கணைத்தால் PHOS. காரி, காரி துப்பினால் RUMEX. கணைக்க காரித் துப்ப, இரண்டுக்குமே சத்து இல்லாமல் பலஹீனமாக இருந்தால் CAUST. பச்சையாக, மஞ்சளான சளி என்றால் N-S. நாரு மாதிரி சளி என்றால் RUMEX. பேசும் போது வாயை மூடிக் கொள்வார்கள். எதைப் பற்றியும் கவனிக்காமல் அசால்டாக கண்டுக் கொள்ள மாட்டார்கள். (சோமனாமேனிய) தூக்கத்தில் நடப்பார்கள், கார் கூட ஓட்டுவார்கள். ஆபிஸிலிருந்து வந்து ஆடையை கழற்றியவுடன் அப்ப வெளிக்காற்று படும் பாருங்க அப்ப தான் அரிப்புங்க என்பார். தொண்டையில் சளி அப்பிக்கிட்டு இருக்கும். அது நார், நாராக வரும். மனைவி கூறுவாள், வருகிறார், போகிறார் எதையும் கண்டுக்க மாட்டுகிறார் குடும்பத்தை என்பாள். புறக்கணிப்பு. சளி பிடித்த காலத்தில் காரா எலும்பு வலி, மாலையில் எதுவும் செய்யமுடியாது.

RUTA GRAVEOLENS

- ருட்டா க்ராவெலென்ஸ்

ஓடுவந்தலையின் கசப்பு பகுதி.

எலும்பில் அடிப்பட்டு விட்டதுங்க என்றாலும், எலும்பில் அடிப்பட்ட மாதிரி வலிக்குதுங்க என்றாலும், எலும்பைச் சொல்லி, எலும்பைப் பற்றியே புகார் சொல்லி அது வலிக்குதுங்க என்று சொன்னால் இது தான் மருந்து. பொதுவாக அடிபடுவதற்கும், பிளவுக்கும், சிராய்ப்புக்கும் வேறு, வேறு மருந்தாகும். எலும்பு அடிக்கு முக்கிய மருந்து இது தான். எலும்பில் அடிப்பட்ட மாதிரி வலிக்குதுங்க என்று பொய்யாக சொன்னாலும் இது தான் மருந்து. எலும்பில் அடிப்பட்டு நைவுக்காயம் மாதிரி இருக்குதுங்க என்றாலும் இது தான் மருந்து. எழுத்தாளர், டைலர் போன்றவர்கள் கண்களைப் பயன்படுத்தி வேலை செய்து ஏற்படும் கண் தொல்லைகளுக்கு இது தான் மருந்து.

SABADILLA

- சபடில்லர்

மேலை நாட்டு ஒரு வகை தாவர விதை.

கர்ப காலத்தில் ஏராளமான மலக்காற்று பிரியும். உடன் (PODO). (சிறுவர்க்கு வயிற்றில் பூச்சி தொல்லை அதிகமாக ஏற்படும் SPIGIA, CINA, SPIGI.) உதறல், வலிப்பு நடுங்கும் அளவு இருக்கும். வேகமாக மூச்சு வாங்கும் தொல்லையினால் ஏராளமான கண்ணீர் வடியும். குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் வந்திருக்கும் வலியானது கண்ணே சிவந்து வீங்கி போகும். டான்சில் வீங்கி தொங்கர மாதிரி உணர்வு தெரியும். டிப்திரியா என்ற தொண்டை அடைப்பான் நோய் மரண கட்ட நோயாகும். இந்த நோயில் தொண்டையில் அதிக சூடு இருக்கும். அப்ப கூட சூடாக சோறு ஊட்டினால் நன்கு முழுங்கும். தொண்டை அடைப்புக்கு LACH. LAC-C. மாலை 4 வடி 8 வரை தொல்லை LYC. குறிப்பு:- இதய வியாதியில் கொஞ்சம், கொஞ்சமாக சுடு தண்ணீர் குடித்தால் ARS.தொண்டை அடைப்பான், நோயில் சூடாக சாப்பிட்டாலும், குடித்தாலும் சுகம் என்றால் SABAD. காமாலை மற்ற நோயில் கொதிக்கும் சுடுநீர் குடிச்சால் சுகம் என்றாலும், துணியில், டம்ளாரை பிடித்து குடித்தாலும் CHELL. எச்சில் கூட விழுங்க முடியலை, சோறு முழுங்க முடியும் என்பார் LACH.

SABAL SERRULATA

- சபல் செர்லோட்டர்

ஷா பால்மிட்டா.

ஆண்களின் சிறுநீர் பாதையில் நன்கு வேலை செய்யும் ஹோமியோபதி மருந்து. இல்லற சக்தி குறைவாக இருந்தால் அதை சரி செய்யும். சினைப் பையில் ஏற்படும் தொல்லைகளுக்கு இந்த மருந்து பொருந்தும். விந்து சுரபிகளில், ஜவ்வுகளில் நன்றாக வேலை செய்யும். விந்து சுரபியில் உள்ள வேக்காடு, வீக்கம் இது போன்ற பல தொல்லைகளுக்கு இந்த மருந்து பொருந்தும். நன்றாக வேலை செய்து பலம் தரும். பெண்களின் மார்புக்கு கீழே உள்ள சுரபிகளில் ஏற்படும் தொல்லைகளுக்கும் இது பொருந்தும். தூங்கப் போகும் போது பயம். சோம்பேறித் தனமாகவே இருப்பார்கள். குழப்பமாகவே இருப்பார்கள். எதன் மீதும் விருப்பமிருக்காது. எதற்கெடுத்தாலும் கோபப்படும் பெண்கள். தலை சுத்தலுடன் தலைவலியும் இருக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட தலைவலி இருக்கு என்று நோயாளியே கூறுவார். வலி சிறிது, சிறிதாக நகர்ந்து மூக்கிற்கும், நடு நெற்றிக்கும் வரும். காரமாக எதுக்களிக்கும். பால் விரும்பி சாப்பிடுவார்கள் (உடன் ; RHUS-T, APIS.)சிறுநீர்:- வெளியேறும் பகுதியில் சிறு, சிறு கொப்பளங்கள் காணப்படும். நாட்பட்ட (கனேரியா) மேக வெட்டை நோய்க் காணப்படும். ரொம்ப கஷ்டத்துடன் சிறுநீர் வெளியேறும். சிறுநீர் வித்தியாசமாக தெரியும். விந்துச் சுரபிகளினுள் கட்டியும், வீக்கமும் இருக்கும்.

ஆண்களின் விந்துச் சுரபிகளில் பலத் தொல்லைகள் இருக்கும். பெருத்துக் காணப்படும். தண்ணி மாதிரி வடிவதால் சத்தெல்லாம் வீணாகி விடும். இல்லறத்தில் ஈடுபடவே முடியாது. ஆரம்பிக்கும் போதே எல்லாமே கொட்டி விடும். விரைப்பு தன்மையே இல்லாமல் ஜில்லிட்டு விடும்.

சினைப்பை வீங்கி பெருத்து விடும். மார்பகங்கெல்லாம் உலர்ந்து சுருங்கி விடும்(IOD, K-IOD.) நரம்புக் கோளாறுகள் உள்ள இளம் பெண்கள். இதனால் எந்த உணர்வும் இல்லாமல் மந்தமாக கிடப்பார்கள்.

அதிகப்படியான சளி வரும். காரி, காரி துப்பிக் கொண்டு இருப்பார்கள். நாள்பட்ட நுரையீரல் சம்மந்தமான நோயிருக்கும். (STANN, HEP.)

ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியவை :- PHOS-AC, STIGMATA MAYDIS, SANTAL. APIS. விந்து சுரபிகளின் தொல்லைகள் உள்ள குறிகளுக்கு FERR-PIC. THUJA, PICRIC-AC. விந்துச் சுரபிகள் வீங்கிக் கொள்ளுதல், உடன் மூத்திரப்பை, மூத்திரப்யையில் வேக்காடு POPULUS-TREMUL. மருந்தின் வீரியம்:- தாய் திராவகம் 10 வீரியம் வரை சிறந்தது. 3 வது வீரியத்தில் அடிக்கடி கொடுப்பது நல்லது. நல்ல பசுமையான பழங்களுடன் சேர்த்து தாய் திராவகம் செய்தால் (அதிக சக்தி வாய்ந்தாக இருக்கும்.) நல்ல பலனைத் தரும்.

SABINA

- ஷபினர்

காரகம்.

மிகவும் கடுமையான மூட்டு வலியினால், மூன்றாவது மாதத்தில் கருச் சிதைவு ஏற்படும். பெண் உறுப்பு மேல் மேட்டு பகுதி, முதுகு சேக்ரல் பகுதியிலும், தாங்க முடியாத வலியோடு கருச்சிதைவு ஏற்பட்டால் F-P மாதவிலக்கில் சிவப்பு, வெள்ளை கட்டி என்று அப்படியே கொட்டும். ஏழு மாத கருவு கூட சிதைந்து விடும். இரத்த போக்கு கொட்டும் AMB-G.காலத்துக்கு முன்னதாகவும், ஏராளமாகவும் போகும். களைப்புக்கு ளுநுஊ. அதிகம் உள்ள மாதவிலக்கு. கருப்பை சம்பந்தப்பட்ட வலி சித்திரவதை செய்வது போலவே இருக்கும். வலி தாங்க முடியாமல் அழுவார்கள் THUJA. மாதவிலக்கின் போது உடன் மூட்டு வலி என்று சொன்னால் இது தான் முக்கிய மருந்து. நொங்கு மாதிரியும், தீட்டு கொட்டுது என்பார்.

SALIX – NIGRA

- சலிக்ஸ் நைக்ரர்

கருப்பு நிற அரளியிலிருந்து எடுக்கப்படுபவை.

ஆண், பெண் ஆகிய இருபாலரின் இயற்கையான இயக்கங்கள் எல்லாமே மாறியிருக்கும். நரம்பு பலஹீனத்தால் பைத்தியம் பிடித்ததுப் போல் இருப்பார்கள். எப்போதும் காமத்தைப் பற்றியே சிந்தித்து, சிந்தித்து வெறி பிடித்து விடுவார்கள். ஆனால் ஈடுபட முடியாது. எண்ணம் மட்டும்அளவுக்கு அதிகமாக இருக்கும். இதனால் நரம்பு (மண்டலம்) முழுவதும் பலஹீனமாகி விடும். நவீன முறையில் சிற்றின்பத்தை அனுபவிக்க விரும்புவார்கள். இப்படி உறுப்புகளை தேய்த்து, தேய்த்து கனேரியா நோய் (சீக்கு நோய்) ஏற்பட்டு விடும். மானி விரைப்பு ஏற்படும் போது தாங்க முடியாத அளவு வலி ஏற்படும். அப்போதும் மானியைத் தேய்த்து, தேய்த்து, கசக்கி, கசக்கி(MASTURABATION) இன்பமடைவார்கள். இதனால் விதை நரம்பெல்லாம் தடித்து விடும். முகம் சிவந்து வீங்கியிருக்கும். முக்கியமாக நுனி மட்டும் இப்படிக் காணப்படும். கண் இரத்த மாட்டமும் இருக்கும். மற்றும் தொட்டாலும், அசைந்தாலும் இரணமாட்டம் வலி ஏற்படும். முடியின் வேர்களில் அடிப்பட்டது போன்ற வலி ஏற்படும். (உடம்பில் என்றால் ARNICA).. மாதவிலக்கிற்கு முன்னதாகவும், மாதவிடாயின் போதும் நரம்புத் தொல்லைகளிலிருக்கும். கருப்பையில் வலி ஏற்படும். மாதவிடாய் தாருமாறாக வரும். சினைப்பையின் நரம்புகள் ரொம்ப தாக்கப்பட்டு வேக்காடு அடைந்திருக்கும். இடை, இடையில் போக்கு ஏற்படும். சிறுநீர் கழியும் போது தீட்டு வரும். கருப்பையின் மிருதுவானத்ததன்மை மாறி மலடியாகிவிடுவார்கள்.

சிறிது அசைந்தாலும் ஆணின் மானிப்பகுதியில் கடுமையான வலி ஏற்படும். சேக்ரல் இடுப்பெலும்பின் இடைப்பகுதியில் வலி ஏற்படும். டக்குனு எழ முடியலை என்று கூறுவார்கள்.

உறவு மருந்துகள்:- YOHIMBIN, CANTH.

மருந்தின் வீரியம்:- தாய் திராவகத்தை 30 சொட்டு விட்டுத் தரலாம். இருபாலருக்கும் மலட்டுத்; தன்மைக்கு இது முக்கிய மருந்து. SABAL-SURULOT Q இதை தந்தால் நல்ல பலனளிக்கும். (குறிப்பு:- அதாவது ஒரு ஆணுக்கு உயிர் அணு (SPERM) குறைவு என்று கூறி குழந்தை பிறக்காது என்றனர். ;. S-S, S-N – Q தந்து கருத்தரித்தது. பெண்ணுக்கும் அப்படியே செய்து பலன்.

SAMBUCUS

- சம்புகாஸ்

மரத்தில் வரும் மல்லிகை பூ.

சளி இருக்காது, அப்போது கூட மூச்சு விட இழுக்க திணருது என்பார். சளியிருந்து இப்படி திணறினால் SULPH. நள்ளிரவில் இதய நோயாளிகாரர்களுக்கு இப்படி திணறினால் LOBELIA. SPIGELIA.. மூச்சி வெளியே விட முடியலீங்க என்பார். அதற்கு ஒரே மருந்து SAMBUCUS.முக்கி, முக்கி மூச்சு இழுப்பார். இரவு கஷ்டம். இரவு பயமும், கவலையும் இருக்கும். இது ஆஸ்துமாவில் பொருந்தும், குறியை பார்த்துக்கொள்ளனும். குழப்பமும், பயமும் என்றால் ARS, ALOE, SAMBU தான். வாழ்க்கையில் பொருளில் வெறுப்பு என்பார். ஆனால் விடா பிடியும், வாதமும் இருக்கும். சுவற்றில் டி.வி. உருவம் மாதிரி தெரியுது என்பார். வியர்வைக்கு பிறகு குழப்பம். திக், திக்குனு விழுவார்கள். பிறகு மயக்கமே வந்து விடும். தூக்கத்தில் திக்குனு விழுந்தால் CHIN. காய்ச்சலின் போதும், தூக்கத்திலும் தேம்பி தேம்பி அழுவார். குடித்து விட்டு ஆர்பாட்டம் செய்வார். ஏழு மருந்தில் இதுவும் ஒன்று. வெளியே வரும்; மூச்சுக்காற்று அடைப்பு, அதனால் குழந்;;தைக் கூட நெஞ்சைத் தூக்கி, தூக்கி, இறக்கி இப்படி மூச்சு விடும், இழுக்கும். பென்ஸ்;(BENS);;; லாரி மாதிரி புஷ், புஷ்னு மூச்சுக் காற்று விடுவார்கள். வறண்ட சளி, வறட்சி, படபடப்பு, மூக்கடைப்பு இருக்கும். தூங்கும் போது வறண்ட காய்ச்சல், எழுந்தால் வியர்வை, காலை நான்கு மணிக்கு மூக்கடைப்பு, மூச்சுத்திணறல், சிரித்த மாதிரியே இருப்பார்கள். அசால்டாகவும் இருப்பார்கள். காலையில் குழப்பம் பிறகு தெளிவு. கண்ணை மூடினால் பேய், பிணம் தெரியுது என்பார். தூங்கினால் வியர்வை CHINA.

SANGUNARIA

- சாங்குனேரியர்

இரத்த நாளத்தையே அறைத்தது.

நம்முடைய நோய் குணமாகி விடும் என்று டாக்டரையும், மருந்தையும் 100ு நம்புவார்கள். நம்பாதவர்கள் HYOS. (100ு சந்தேகம் படுபவர் LACH). பருவ காலத்தில் முறை வைத்து தொல்லைகள் தாக்கும்;. தலைவலி கண்ணே வெடிக்கிற மாதிரி வலிக்கும். அழுத்தி விட்டால் தணியும். பின் மண்டையில் வலி ஆரம்பித்து மேலே ஏறி இடது கண் குழியில் முடியும். இரவில் கக்குவான், மற்ற இரும்பல்கள் எல்லாம் அதிகமாகும். வாதவலிகள் தோன்றும். இளம் பெண்ணுக்கு ஏராளமான முகப்பருக்கள் தோன்றும். இவர்கள் நேர்மையானவர்கள், உண்மையாகவும,; நேர்மையாகவும்; இருப்பார்கள். மன வேலையும்;, உடல் வேலையும், கடுமையாகவும் செய்வார்கள். அதனால் உடல் எல்லாம் வலிக்கும். தேய்த்து விட்டால் சரியாகி விடும், என்பார். தலை வலி மட்டும் வெடிக்கிற மாதிரி வலிக்கும். (வெயில் ஒளிப்பட்டு அதனால் வெடிக்கிற மாதிரி தலை வலித்தால் GLONI). ஆகவே வெயில் பட்டு வெடிக்கிற மாதிரியா, வெயில் படாமல் வெடிக்கிற மாதிரியா என்று பார்த்து தேர்வு செய்ய வேண்டும். நம்பிக்கையோடு செயல்படும் மனிதர்கள். வாயில் சர்க்கரை போட்ட மாதிரி அவ்வளவு இனிப்பாக வாயில் ருசி தெரியுது என்பார். அதே மாதிரி சர்க்கரை (இனிப்பை) போட்டால் கசப்பாக ருசி தெரியுது என்பார் இரண்டு குறிக்கும் ஒரே மருந்து இது தான்.

SANICULLA

- சானிகுல்லர்

கடல் பாசி என்ற தாவரம்.

இவர் ஒரு நிலையில் இருக்க மாட்டார். தன் தொழிலை மாற்றிக் கொண்டேயிருப்பார். சிறுநீர், மலம் கழியும் போது வீறிட்டு அழுவும் குழந்தைகள், பெரியவர்களும் கூட இப்படி கத்துவார்கள், பேச தாமதம் ஆகும் குழந்தைகள். புதியதாக ஏதாவது செய்யலாம் என்றால் பயம். அலை பாயும் மனம். இதை செய்யலாமா? அதை செய்யலாமா? எதை செய்யலாம் என்று தவிக்கும் மனம். முடிவு இரண்டில் ஒன்று எடுக்க முடியாவிட்டால் ANAC.இருட்டில் இருக்க சிறுவர்களுக்கு வெறுப்பாக இருக்கும். பெரியவர்களுக்கு இரவு வெளிச்சத்தில் யாரோ வருவது, போவது போல இருக்கும். ஆனால் திருடர்களை பற்றி காலையில் பேசுவார்கள். சவாரி செய்ய வெறுப்பு அடைவார்கள். ஆண்களுக்கு மலம் கழிய முக்கும் போது விந்து கழிந்து விடும். பெண்ணை திருப்தி படுத்த முடியவில்லை என்றும் குழப்பம் இருந்து கொண்டே இருக்கும்.

SARSAPARILLA

- சரஸபரில்லர்

வாடாமல்லி பூ.

இம்மருந்து அடக்கப்பட்ட சைகோஸிஸ் வியாதியும் அதனால் உடல் மிக, மிக இளைப்பதற்கும், சருமத்தில் தடிப்பு, கட்டிகளுக்கும் இது தான்; மருந்து. சிறுவர்களுக்கு கூட சருமத்தை பார்த்தால் கிழவர் மாதிரி சுருக்கத்துடன் அசிங்கமாக இருக்கும். சிபிலிஸ் வியாதியில் பாதரசத்தை கொடுத்து அடக்கிய பிறகு பெருத்து தொங்கும் வயிறு, இவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கும் இது. சிறுநீர் மணல் போல் சிறு, சிறு கற்கள் தோன்றும். இப்படிப்பட்டவர்களுக்கும், பெரியவர்களுக்கும் விந்து வெளியேறும் போது பொருக்க முடியாத வலிகள் தோன்றும். ஆண்கள் கையில்;;;; கசக்கி விந்தை வெளியே எடுத்தாலும் கனவில் வெளியேறினாலும், பெண்ணுடன் உடலுறவு கொண்டு விந்து வெளியேறிய பிறகும், எப்படி விந்து வெளியேறினாலும் பொருக்க முடியாத வலியும், கஷ்டமும் இருக்கும். வேதனை ஏற்படும்.

SELENIUM

- செலினியம்

விந்து (நல்ல மனிதர்).

இது ஆண்களுக்கு முக்கியமாக பயன்படும் மருந்து. விந்து கசிந்து கொண்டே இருக்கும். மலம் கழிய உட்காரும் போகும், குனியும் போதும் முக்கும் போதும், சிறுநீர் கழிக்க முக்கும் போதும் விந்து சொட்டு, சொட்டாக கசியும். சிறுநீர் விட்ட பின்;பு (அ) முன்பு நுனியில் கஞ்சி தண்ணி மாதிரி இரண்டு சொட்டு இருக்குதுங்க என்பார். அது பசையாட்டம் இருக்கும். இப்படி ஏற்பட என்ன காரணம் என்றால் வாழ்க்கையில் நடந்த கடுமையான நோய், டைபாயிடு, மலேரியா, காமாலை, T.B., போன்ற கடுமையான நோய்களுக்கு பிறகும், இப்படி பல நோய்க்கு பிறகும், டீ நிறைய குடித்த பிறகும், செயற்கையாக உறுப்பை கசக்கிய பிறகும், இந்நிலை ஏற்பட்டிருக்கலாம். ஈடுபட விருப்பம் நிறைய இருக்கும். ஆனால் விந்து சக்தியே ஸ்டாக் (இருப்பு) சேராது. மானி சிறுத்து சுருங்கி, ஜில்லிட்டு, விரைப்பு தட்டாது. மீறி பெண்ணை தொட்டவுடன் கொஞ்சம், நஞ்சம் இருப்பதும் விந்து சக்;தி வெளியே கொட்;டி விடும். அதனால் மரண களைப்பு ஏற்படும்;;;. அதனால் எவ்வளவு முயற்சி செய்தாலும் உள்ளே ஒரு இஞ்சிக் கூட போகாது. வெயில் காலம் எலுமிச்சை பழச்சாறு, மது வகைகள், டீ அதிகம் குடித்த பிறகு இந் நிலை கூட வரலாம். (பெண்ணை நினைத்தவுடனேயே சக்தி கொட்டி விடும். அதனால் உயிர் போகிற மாதிரி வலிக்குது என்பார். ACETIC-ACID). விந்து போன பிறகு பலஹுனதால் மானி தளர்ந்து விட்டால் AGNUS-C, CALAD, SELIN. மலம் கழியும் போது குபுக்ன்னு கொட்டி விடும் ALOE, CALC, SANI, SEP, STICTA.

SEPIA

- செப்பியர்

10 கை உடைய நீல விஷத்தை கக்கும் ஒரு வகை பெரிய கடல் மீன் (பெண்).

இது பெண்களுக்கு உரிய மருந்து. வேலை மீது வெறுப்பு, கணவன் மீது,குழந்தைகள் மீது, குறிப்பிட்ட நபர் மீது, எல்லாமே வெறுப்பு தான். இவர்களுக்கு மனைவி என்றாள் கணவனை செக்ஸ்க்காக வெறுப்பாள். செக்ஸ் கொஞ்சம் கூட பிடிக்காது. கணவன் மனைவியை இந்த காரணத்துக்காக தான் வெறுப்பான். இதனால் பெண் கால் மேல் கால் போட்டு உட்காருவாள். கருப்பை நழுவி விடுமோனு பயம். பிறரை வசீகரிக்க கால் போட்டால் PHOS. ஆணவத்தோடு போட்டால் PLAT. நாம் பார்க்கும் போது ஆண் முறைப்பு, வேறு ஏதோ நடவடிக்கை எடுத்தால் ANT-C. கோபப்பட்டால் N-M, STAPHY. திட்டினால் STRAM. ஆபத்து வந்திடுமோனு பயந்தால் BELL. சிறு குலுக்கல் ஏற்பட்டால் வயிற்று வலி MURAX. அடி வயிற்றை கையை கொடுத்து மலக்குடலை தூக்கி பிடித்தால் ஆருசுAஓ. இப்படி உன்னிப்பாக கவனித்தால் மருந்தினுள் இருக்கும் வேறுபாடுகள், நமக்கு நன்கு தெரிந்து விடும்.

SILICA

- சிலிக்கர்

கருங்கல் தூள்.

இம் மருந்துக்குரியவர்கள் சீழ் புண்ணை தொட விடுவார். ஆனால் ஊசி போட்டு கொள்ள பயம். டாக்டரை, நர்ஸை, பார்த்தால் கத்தும் சிறுவர்கள், குழந்தைகள். புண்ணில் சீழ் வந்தால் தொட விடாதவர் HEP. புண் அழுகினால் PYROG மாட்டுக்கு வரும் அம்மைக்கும் இதுவே முக்கிய மருந்து. மலம், சிறுநீர், வியர்வை, கழிவுகள் எல்லாம் உடன் பிண வாடை அடித்தால் BAPTISIA. காப்பி குடித்தால் தான் தலை வலி விடும் என்றால் CANN-I, CHINA, GLONE, HYOS. குளிர்ச்சிப்பட்டால் தலை வலி என்றால் SULPH, ACON, BELL, BRY, CHINA, CALC, CINA, KAL-ARS, K-P, NUX, PULS. டாக்டரை, நர்ஸை, ஆசிரியரை பார்த்ததும் பயந்தால் SILICEA.. பார்க்காமல் நினைத்தே பயந்தால் STRAM. ஊசி போட்டு விடுவார்களோனு பயந்தால் இது. கத்தி வெச்சிடுவாங்களோனு, கருப்பை, டான்சில், பல், இப்படி எடுத்து விடுவாங்களோனு, எதிர்ப்பார்த்து பயந்தால் CALC-C.. ஏதோ நம்மை செய்ய போறாங்க என்று பயந்தால் STRAM. காச நோய், எலும்பில் சொத்தை விழுதல், வலிப்பு, நடக்க தாமதமாகும், குழந்தைகள். உச்சி குழி மூட தாமதமானால் உயிர் சக்தி தடை படுதல். மேலே கண்ட எல்லாவற்றுக்கும் இது தான் மருந்து.

குறிப்பு:- 6x (அ) 6 வீரியத்தில் கொடுத்தால் கட்டி கரைந்து சீழ் வந்து விடும். உயர் வீரியம் 200 ம் அதற்கு மேலும் கொடுத்தால்கட்டி உள்ளே இழுத்து விடும். HEP-SULPH - ம் இதே போல் தான். ஆனால் மருந்து குறியிருக்கனும். இது பயம். HEP கோபம். இந்த வித்தியாசம் தான்.

SPIGELIA - ANTHELMIA

- ஸ்பைஜுலியா அன்தெல்மியர்

பல நிறமுடைய ஒரு வகை செடியின் வேர்.

இம் மருந்துக்குரியவர்கள் இதய வியாதியினால் மரண பயம் என்றால், கூர்மையான ஆயுதம் கண்டால் பயமும், தலை வலியும், இதய வியாதியின் போது வெந்நீர் கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிட்டால், கூராண ஈட்டி, வேல், Nளாயுதம் ஆகியவற்றை கண்டால் பயம் இருப்பு கொள்ளாது. மனம் பதை, பதைக்கும். இருதய வியாதியின் போது நாக்கு சிறுத்துக்கிச்சி, பல்லில் மாட்டிக்கிச்சி என்றால் இது தான் மருந்து. மற்ற நேரங்களில் நாக்கு மாட்டிக்கிச்சி என்றால் HYOS. மற்ற நேரங்களில் சிறிது, சிறிதாக சுடுநீர் குடித்தால் சுகம் என்றால் ARS.அதிக சிந்தனை செய்த பிறகு தலை வலி, கண்ணில் ஊசி குத்தற மாதிரி தலை வலி என்பார்.

குறிப்பு:- ஒரு இதய வியாதிக்காரர் கூரான தேங்காய் உறிக்கிற கடப்பாறை கூரைப் பார்த்தால் பயங்க, ஏன் என்றால் கூர் தான் இதன் முக்கிய குறி. சிறுவர்கள் விளையாடும் போது விலக்கமார் குச்சி, வேறு எது வானாலும் கூராக வைத்து விளையாடுவதைப் பார்த்தால் இவர்கள் டென்ஷன் ஆகி விடுவார்கள்.

SPONGIA - TOSTA

- ஸ்பாஜியா டோஸ்டர்

வறுக்கப்பட்ட கடல் பஞ்சு என்ற உயிரினம்.

இம் மருந்துக்குரியவர்கள் மரம் அறுக்கர மாதிரி மூச்சி, எளப்பு, ஆஸ்துமாவில் வேற எந்த நுரையீரல் சுவாசம் இப்படி என்றால் இது தான் மருந்து. T.B யிலும் இப்படி வறட்டு சுவாச கோச செயல்கள், இருமல் இப்படி இரவில் வறட்சி மர்,மர் சப்தம் மூச்சி இரவில் யாரோ கழுத்தை நசுக்கற மாதிரி மூச்சி திணறி எழுந்தால் இது. இதே மாதிரி இதய வியாதிக்காரர் இரவில் துள்ளி எழுந்தால் LOBIELIA.. இம் மருந்துக்கு தலையணை (அ) பஞ்சை மூக்கில் (அ) நெஞ்சில் வைத்து சுவாச கோசத்தை தடை அழுத்துகிற மாதிரி செய்வது போல உணர்வு இருக்கும். மரம் அறுக்கும் மர பட்டறைகளில் மரம் அறுப்பது போல மூச்சி சப்தம் (மர்,மர், என்று சப்தம்) வந்தால் இது தான் மருந்து. ஆகவே சளி பிடித்துகிச்சிங்க, நுரையீரல் வறட்சிக்கு இந்த மருந்து கொடுத்து சரியாக வில்லை என்றால், இரும்புதுங்கஎன்று எதையோ நம்மிடம் கூறலாம். குழந்தையை பார்த்தால் கூட நெஞ்சிக்கிட்டே பார்த்தால் மூச்சி சப்தம் சளியோடு கல,கல வென கேட்கும் அதற்கு மருந்து வேறு. கரட்டு முரட்டு என்றும், புர்,புர் என்றும் இப்படி பல வகையில் கேட்கும் ஆனால் இம் மருந்து மர், மர்னு (அ) சர்,சர்னு மரம் அறுக்கற மாதிரி வரும்.

STANNUM - METALLICUM

- ஸ்டன்னம் மெட்டாலிக்கம்

துரு பிடிச்ச தகரம்.

இது பிரதானமாக(அதிகமாக) முகுளத்தையும், சுவாச கோச மண்டலத்தையும் தாக்கும். சுவாச பைகள் பலஹுனம் அடைந்து காச நோய் ஏற்பட்டு விடும். பேசினால் உடனே தொண்டையும், நெஞ்சும், பலஹூனம் அடைந்திடும். படிப்படியாக வலி வருவதும், போவதுமாகயிருக்கும். வருத்தமும், கவலையும் iதரியமும் இல்லாத மாதிரியிருக்கும் நபருக்கு இது பொருந்தும். நெற்றியில், உச்சியிலும் வலி, சளியும், இரும்பலும், விடாமல் இருக்கும். காதுக்கு கீழ் சுற்றிலும் வெளியே புண். குமட்டலோடு சளி இருக்கும். சமையல் வாசனைப்பட்டால் குமட்டும். சாப்பிட்டால் கசக்கும். பட்டினி கிடந்தால் பராவயில்லை என்பார். ரொம்ப அழுத்தினால் வயிறு வலி குறைவு. கருப்பை பலஹூனத்தால் முன்னாடியே மாத விலக்கு ஏற்பட்டு இரத்த போக்கு கொட்டும். இதனால் கருப்பை தொங்கி விடும். வேகமான இரும்பலும், கணைத்து, கணைத்து சளியை துப்புவார். மாலையில் வறண்ட இரும்பல், சிரிக்கும் போதும், பாடும் போதும், பேசும் போதும் கஷ்டம். குரல் முதல் நெஞ்சு வரை எரியும். பச்சை நிறமான இனிப்பான சளியை துப்புவார். நள்ளிரவில் குட்டையான சுவாசமும், குறைந்த சளியும் இருக்கும். காச நோயாளிக்கு சளி மற்றும் அவருடைய T.B காய்ச்சலுக்கு இது நல்ல மருந்து. துருப்பு பிடித்த மாதிரி இரும்பலில் சளியை காரி துப்புவார். இந்த மருந்து துரு பிடித்த தகரத்திலிருந்து செய்வதால் அதே குணம் இருக்கலாம். பார்த்துக்கணும். T.B க்கு, T.B காரர்களுக்கு , காய்ச்சலுக்கும் சளி இரும்பலுக்கும் இந்த அடையாளம் இருக்குதாணு பார்த்துக் கொள்ளணும்.

SOLANUM TUBROSUM AEGROTANS

- சோலோனியம் டர்ரோசியம் இக்ரோட்டன்ஸ்

அழுகிய உருளை கிழங்கை வீரியப்படுத்தியது.

இந்த மருந்து பெரும்பாலும் பெண்களுக்கு பயன்படும். மாயமான தோற்றங்கள், கற்பனையான பொய் எண்ணங்கள் இரவில் தோன்றும். பார்க்கும் பொருள் மறைந்து இருப்பது போலவும், வௌ;வேறான தோற்றமும் இருக்கும். (இதுவும் மற்ற மருந்துகளைப் போல மனதிலும், உடலில் எப்படி வேலை செய்யும் என்பதைப் பற்றி (என்சைக்லோ பேடியா ENCYCLOPEDIA – என்ற புத்தகத்தின் 9 வது பிரிவு புத்தகத்தில் 66-ம் பக்கத்தில் உள்ளதை பார்த்துக் கொள்ளவும்) இதன் முக்கியமான குறிகளை மட்டும் இப்போது பார்ப்போம்.

இவர்களுக்கு கனவுகள் விசித்திரமாக வரும். பெண் கூறுவாள் முதல் நாள் வந்த கனவுகளே மாறி, மாறி வருதுங்க என்பாள். இரண்டாவது நாள் கனவில் பெண்கள் தெரிவார்கள், அவர்கள் திடீரென மிருகங்களாக மாறிவிடுவார்கள். மூன்றாவது நாள் கனவில் உயரமான கோபுரங்கள் கீழே விழுந்து தரை மட்டமாகி விடும். நாலு, ஐந்து நாள் கழித்து கனவு ஏற்படும் போது பெரிய கட்டிடங்கள் கீழே விழும் போது (நில நடுக்கம் போல) அவற்றின் கடக்கால்கள் தெரியும். இப்படி கட்டிடங்கள் விழுவதால் அவர்களுக்கு குழப்பம் ஏற்படும். பின்பு முதல் நாள் வந்த கனவு வரும். அதாவது வித்தைக் காரர்கள் (சர்க்கஸ்காரர்கள்) வந்து வித்தைகள் செய்துக் காட்டுவார்கள். தீடீரென அவர்கள் கண்கள் நீல நிறமாகி விடும். இது போன்று முதல் நாள், நான்காவது, எட்டாவது நாள் வந்த கனவுகள் திரும்ப, திரும்ப வரும். மூன்றாவது நாளில் ஆற்றிலோ, குளத்திலோ நீச்சல் அடிப்பது போல கனவு இருக்கும். திடீரென ஆற்றில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றிவிடும். பிறகு வரும் கனவில் சினிமா நடிகர்கள் நடிப்பது போன்ற கனவு. 24 வது நாள் கனவில் பொருள்கள் பச்சை, மஞ்சள், கருப்பு இது போன்ற கலர், கலராக பக்கு, பக்குனு வரும். 25 வது நாள் கனவில் எல்லாமே நெருப்புப் பற்றி எரிவது போல கனவு. 26 மற்றும் 34 வது நாள் கனவில் எல்லாம் பொருள்களும் நாசம் (சேதம்) அடைவது போல வரும். மற்றும் ஒரு பெரிய நகரமே நெருப்பு பிடித்து எரிந்து சாம்பலாகிவிடும். 13வது நாள் கனவு போலவே வரும். (எல்லோரும் சண்டைப் போட்டுக் கொண்டு வெட்டிக் கொண்டு சாவது போல கனவு). தண்ணீர் இருக்கும் குளமெல்லாம் இரத்தமாக மாறிவிடும். பெண்களுக்கு ஏற்படும் கனவில் மனிதர்கள் எல்லாம் பச்சை நிறமாகவும், பசியால் மூடியது போலவும் எல்லாம் பச்சை நிறமாகவும், நீருக்குள் வாழ்வது போலவும் இருக்கும். இந்த மனிதர்கள் (அடுத்த நாள் கனவில்) நாயாக மாறி விடுவார்கள்.

STAPHISAGRIA

- ஸ்டாப்பிசாகரியர்

வறண்ட ஏரியில் விளையும் கோரை புல்.

இம் மருந்துக்குரியவர்கள் கவலை, நோய், மனக் கஷ்டத்தின் போது அவரையே திட்டிக் கொள்வார். எதிரியையும் திட்டினாலும், வாய் விட்டு, திட்டுதலும், கோபத்தில் எல்லோரையும் எடுத்தெரிந்து பேசுவதும், உடனே பயங்கரமாக முன் கோபத்தால் பேசுதல், திட்டுதல், கையில் கிடைக்கும் பொருளை தூக்கி எறிதல். (அடித்தல், குழந்தையை கூட தூக்கி எறிதல் கோபத்தில், வெறி பிடித்து எறிந்தால், அறைந்தால் LYSS.)

கோபத்தில் பெண்கள் சயைல் குண்டா, சொம்பு, தட்டை தூக்கி எறிவாள். கடுமையான கோபம், தூக்கி எறிதல், என்பதே. எதையும், கையில் உள்ளதை எறிதல். இதை விட முக்கியமாக வெறியே பிடித்து எறிதல். (குழந்தைகள், பிள்ளைகள் என்று கூட பார்க்காமல் தூக்கி எறிந்தால் LYSS.)

STICTA PULMONARIA

- ஸ்டிக்டா பல்மோனரியர்

இம் மருந்துக்குரியவர்கள் இரவில், பகலில், தலையை கீழே வெச்சால் இருமல் படுக்க விடாது. முக்கிய மருந்து. கீழே தலையை சாய்க்க விட மாட்டேங்குதுங்க என்ற ஒரே குறிக்கு இதை தரலாம். வேறு நோயும் தணியும். அது தானே ஹோமியேபதி தத்துவம். (Dr. nrfy அதை மிகவும் எளிமை படுத்தி விட்டார். மகிழ்ச்சி, அவருக்கு மிகவும் நன்றி.) தண்ணி மாதிரி ஒழுகும். சளியோடு அடைப்பும், நுரையீரல் சம்மந்தப்பட்ட நோயுடன், அதாவது கழுத்து அப்படியே பிடிச்சிகிச்சி என்று வாத நோய் குறிகளும் தோன்றும். சளி வந்துகிட்டே இருக்குது. அதனால் மந்தமாக இருக்குது என்பார். மனம் காற்றில் மிதந்து கொண்டிருக்கிற மாதிரி ஒரு எண்ணம் இருக்குது என்பார். இது முக்கிய குறி. சளி பிடிச்ச பிறகு தலைவலி என்பார். கண் விழி எரிச்சல். மூக்கடைப்பும், வேக்காடும் (NUX) வறண்ட பொருக்குகள், பால் குறைவாக சுரக்கும். உடன் RICINUS பார்க்கவும். நுரை, நுரையாக பேதி, புளிச்ச நாற்றத்துடன் சிறுநீர்பை வலி. தொண்டை வறட்சியாக மூச்சு இழுக்க கஷ்டம். கால் இழுக்கிற மாதிரி. கால் காற்றில் பறக்கிற மாதிரி இருக்கிறது என்பார்.

STRAMONIUM

- ஸ்டமோனியம்

ஊமத்தங்காய் (இந்தியா).

இம்மருந்துக்குரியவர்களுக்கு அடிபட்டு விடுவோமோ என்ற பயம். ஊமைக்கட்டி என்றால், மனைவி விவாகரத்து (டைவஸ்) ஆன பிறகும், வீடு விற்ற பிறகும், பதவி போன பிறகும், குழந்தை இழப்பு, இது போன்ற, கிடைக்காது என்று தெரிந்த பிறகும் இழந்த பொருளை, நபர்களை மறக்காமல் இருந்தால், பள்ளி கூடத்தில் (போனால்) அடிப்பார்களோன்னு பயம். சிறு பிள்ளைகள் என்றால் டீச்சர் மாணவர்களை அடித்து விடுவார்களோ என்று பயந்து பள்ளி கூடத்துக்கு கூட போக மாட்டார்கள். இருட்டில் பயம். ஏதாவது ஒன்றை விடாப்பிடியாகவே பிடித்து இருப்பார்கள். கணவனோ, மனைவியே விவாகரத்து (டைவஸ்) ஆன பிறகும் அவர்களை விடாமல் இழுத்து பிடித்து கொண்டே (இருப்பார்கள்) விரும்புவார்கள். திக்கு வாய்க்கு நல்ல மருந்து. வாயை விகாரமாக அப்படி ஆட்டி, ஆட்டி அதன் பிறகு பேசுவார்கள். தன் நோயை தெரிந்துக் கொள்ள விரும்புவார்கள். குறுகலான சந்து, பாதை ஆகியவற்றில் தொல்லை. சேகல் முறையில் கூற வேண்டும் என்றால், ஒரு நோயாளி அவர் கிளினிக்கு வந்து பார்த்து விட்டு திரும்பி போனாராம். ஏன் என்று கேட்டதற்கு இங்கு இவ்வளவு கூட்டம் இருக்குது. இதுல என்னை எங்கு கவனிக்கப் போறாரு, அவருக்கு எங்க டைம் இருக்கும் என்று கூறினாராம். எப்போதும், அம்மாவை கட்டி பிடித்து கொண்டே, அம்மாவுடனேயே இருக்கும் குழந்தைகள். தாக்கப்பட்டிடுவோமா, அடிபட்டு விடுவோமோ என்று எதிர் பார்;த்து பயந்தால், அடிபட்டிடும், காயம் பட்டிடும் என்று பயந்து பதுங்கினால், பயந்தால் இது தான் மருந்து. (உதாரணம் 3 வருடம் முன்பு பாம்பை பார்த்து பயந்திருப்போம். ஆனால் நிகழ்ச்சி போகாவிட்டால் OP.)) தாய் சொல்லுவாள் ஒண்ணுக்கு கூட இந்த பிள்ளை போக மாட்டேங்குதுங்க என்பார். எப்பவுமே அம்மாவை கட்டிப்பிடித்து கொண்டே இருக்கும் குழந்தை. இருட்டில் பயம், பள, பளப்பிலும் பயம், திக்குனு பயம், ஓடர தண்ணீரை கண்டால் பயம். பிடித்து கடிக்க விரும்பும் பைத்தியம். தனிமையில் பயம். எல்லாம் பயத்தின் அடிப்படை தான், துணியை கிழிக்கும் பைத்தியங்கள், சந்தேகத்தின் அடிப்படை என்றால் HYOS. இருட்டில், நாய், பூனை துரத்துவது போல் பயம். தானாகவே பேசிக் கொண்டு போகும் பைத்தியம். மனதில் அமைதியின்மை. பிறரை தொல்லைப்படுத்துவார். தாடை மட்டும் ஆடும் வலிப்பு. பெரிய கட்டி, புற்றில் வீக்கம் வலியிருக்காது.

SULPHUR

- சல்பர்

கந்தகம்.

இம் மருந்துக்குரியவர்கள் சரும நோயாளி. காலையில் தூங்கி எழுந்தவுடன் மலம் கழிவார். அழுக்கு உடையையே அணிந்துக் கொண்டிருப்பார். தலை வார மாட்டான், குளிக்க மாட்டான். ஒருவன் முன்னே சென்ற பிறகு அவரைப் பற்றி மற்றவர்களிடம் கேலி செய்வான். அதாவது முன்னே விட்டு, பின்னாடி கேலி செய்பவன். ஒரு ரூபாய், பத்து ரூபாய் கிடைத்தால் கூட நானே ராஜா, என்று கூறுவதும், எவன் கிட்டேயும் அடிமையாக வேலை செய்யமாட்டேன் என்றும், நான் ராஜா மாதிரி என்பான். பையன் ஊதாரித்தனமாக இருந்தால் கூட கவலைப்படாமல் நானே ராஜா என்று கூறிக் கொள்வான். தொழிலை புறக்கணிப்பான் BELL, NUX, SULPH. மாதிரி காலையில் எழுந்ததும் சுறு, சுறுப்பும், வேலைக்கு போக எண்ணமில்லை RHOD.

செருப்பை கழட்டி விட்டு ஜில்லுனு தரையில் காலை வைப்பான், படுக்கும் போது கூட ஜில்லுனு இருக்க வேண்டும் என்பதற்காக போர்வை கால் பகுதியில் மட்டும் போர்த்த மாட்டான். காலில் ஜில்லுனு காற்று படட்டும் என்பதற்காக, காலையில் தூங்கி எழுந்தவுடன் மலம் கழிவார். உடம்பு கரையுதுங்க, காத்தாட்டம் ஆகுதுங்க, பொசுக்குனு இருக்குதுங்க, சக்கையாட்டம் ஆகுதுங்க, சுண்டுதுங்க நாளுக்கு நாள் உடம்பு எளச்சிக்கிட்டே வருதுங்க என்று இப்படி நிகழ்காலத்தில் கூறினால் இது. (இப்படி கடந்த காலத்தில் கூறினால் THUJA.) சளியுடன் மூச்சு, விட கஷ்டம். மூச்சு திணறல் என்றால், இரும்பி, இரும்பியே தொல்லைங்க என்றால். அதிகாலையில் சளி, காலை 11 மணிக்கு என்றால் இது முக்கிய குறி. ஸோராவை எதிர்க்கும் மருந்தில் இதை அரசன் என்பார்கள். ஸோரா தடுப்பதால் கொடுத்த மருந்து வேலை செய்யாது. அப்போது இதை கொடுத்தால் தான் வேலை செய்யும்.

SULPHURICUM – ACIDUM

- சல்ப்பூரிக்கம் ஆசிடம்

கந்தக ரஸம் (காரகம்).

இம் மருந்துக்குரியவர்கள் தவறாமல், வெயில் காலத்தில் பெண்களுக்கு தோன்றும் தொல்லைகள். கட்டாயத்துக்காக கேள்வி கேட்பதும், பதில் சொல்வதும். மிகுந்த பர பரப்பும், அதனால் சுறு, சுறுப்பாக இருப்பார் ARG-N. வலியானது மெதுவாக அதிகரித்து டக்குனு மறைந்து விடும். (மெதுவாக இறங்கினால் PULS.) வயதானவர்கள் கண்ணாடி போட்டு இரணம் ஏற்பட்டு விட்டால். குழந்தைகளின் நாற்றமுள்ள கழிவுகள் MAG-C, HEP-S, RHEUM. மூளையே கழுவி விட்ட மாதிரி இருக்குது என்பார். இரத்தம் வடியும் அளவு வாய்ப்புண், நாள்பட்ட இருதய எரிச்சல், குத்துக் காயம், நைவு காயம் ஏற்பட்ட பிறகு சருமம் ஆறாமல் இருந்தால், நெருப்பு சுட்டப்புண் வடுவில் மீண்டும் இரத்தம் வடிந்தால் (அ) நீல நிறமாகி வலி இருக்கும். பிறப்பு உறுப்பு யோனி உதட்டில் நீல நிறம், சிவப்பு நிறம் ஆகி இரத்தம் வடியும். மூலத்தில் கருப்பு நிறமான இரத்தம் வரும். குடியை மறக்கவும் முடியாது, அதனால் நிறுத்தவும் முடியாது என்ற குடிகாரர்களுக்கு, அவர்களுக்கு தகுந்த மனகுறிக்கு மருந்து கொடுத்தும், குறி தவறி விட்டால் இந்த மருந்தின் தாய் திரவம் ஒரு பங்கும், மூன்று பங்கு சாராயத்தில் கலந்து கொடுத்ததில் ஒரு மாதத்தில் பரம்பரை குடிகாரர்களே மறந்து விட்டார்கள் என்று டாக்டர் ஹெரிங் கூறுகிறார். (அமெரிக்கா) தற்போது ஜெர்மளியில் இதே மாதிரி தருகிறார்கள். ஹெரிங் பிறகு நூறு ஆண்டுகள் ஆகி விட்டதால் தற்போது WISBADAM. தாய் திரவத்தை தருகிறார்கள். ஆனால் மனகுறியை பார்த்து மருந்து கொடுத்தால் மற்ற தொல்லையும் போய் விடும். வயிற்றுக்குள்ளே காற்று உருளுது. வெளியே வரமாட்டீங்குது என்பார்கள். ஒரே மருந்து இது தான்.

SYMPYTUM OFFICINALE

- சிம்பைடம் ஆ்ப்சினல்

எலும்பின் சக்தியை அரைத்து.

எலும்பு முறிவு, எலும்பு விரிசல், பிளவுக்கு இது நல்ல மருந்து. உடல் பகுதியில் எலும்பு முறிந்து விட்டால் எலும்பை முறிந்ததை கட்டு போட்டு இதை தரணும். தந்தால் எலும்பு கூடி விடும். கட்டு போட்டுகிட்டு நம்மிடம் வந்தாலும் இதை கொடுத்தால் இரண்டு நாளில் எலும்பு கூடி விடும். இதை எக்ஸ்ரே எடுத்து பார்த்து தெரிந்து கொள்ளலாம். எலும்பு முறிவுக்கும்,எலும்பு முறிந்த மாதிரி வலி என்றாலும் இது தான் மருந்து.

SYPHILINUM

- சிபிலினம்

ஆண், பெண் சீக்கு புண் விந்து சீழ் கிருமி அறைத்தது.

இரவு தொல்லை, சிபிலிஸ் வியாதி தீராத வாந்தி, சளி, பேதி, சீழ் போன்று எங்கும் வடிந்தாலும் இது தான். சிபிலிஸ் நோயில் அடிப்பட்ட பின்பு தோன்றும் எல்லா நோய்க்கும் இது தான் அடிப்படை மருந்து. தொல்லைகள், கழிவுகள் அவருக்கு பிறக்கும் பிள்ளைகள் உடம்பு கரைத்து தேய்ந்து இருப்பார்கள். வறண்டு, சதை குறைந்து இருக்கும். இன்று பால் வினை நோய் எய்ட்ஸ் என்பதில் பெரும்பாலும் இந்த குறி வரும். இதை தந்தால் சுகமாகும். புற்று நோய்க்கு MED. முக்கிய மருந்து. அடிப்பட்டவர்களுக்கு (பால் வினை நோயில் வரும் ஆண் குறி தான் முக்கியம். ஆண், பெண் உறுப்பில் கசிவு வெள்ளை நிறத்திலும், அங்கு சீழ் பிடிப்பதும், புண் ஆவதும் பெரும்பாலும், வெள்ளைபாடும் காணப்படும். வேலைக்கு போகாதவரை கேட்டால் மனம் விட்டு போச்சி என்பான். பரம்பரை குடிகாரன். உணவு மீது வெறுப்பு. விடிய காலைக்கு மேல் தூக்கம் வரும். பற்கள் ரம்பம் போலவும், மஞ்சள் நிற பல்லாகவும் இருக்கும் LYC. இதே இடம் சிபிலிஸ் வியாதிக்கு MERC – SOL மருந்தும் வேலை செய்யும் குறியை வைத்து தரணும். அதாவது சருமத்தை தாக்கினாலும், ஸோரா மனதை தாக்கினாலும், LATIN. ஸோரா தான் உறுப்பு கரைத்து கொண்டே போனால் சிபிலிஸ். கட்டி தட்டினால் அது சைக்கோஸிஸ் பார்த்து கொள்ளவும். தலையில் T எழுத்து போட்ட மாதிரி தலை வலி ஏற்படும்;. வலது புறம் படுத்து இரும்பல் ஏற்பட்டால் MERC-SOL, SYPHY.இடது புறம் படுத்து இரும்பல் ஏற்பட்டால் PHOS. மாலை ஆறு மணி முதல் காலை ஆறு மணி வரை எல்லா தொல்லையும் வரும். அதனால் மாலையில் பயம். காலையில் இரவு பயம் வேலைக்கு போகனும்மே தூக்கம் இல்லையே என்று கவலை. நண்பர் பெயர் கூட மறந்து விடுவார். அவ்வளவு ஞாபக மறதி. இன்றைய உலக வியாதிகள் பிரிவுகளிலும் பல இதற்குள் அடக்கம் (எய்ட்ஸ் வகைகள்) இரவில் தொல்லை.

TABACUM

- டம்பகம்

புகையிலை.

இம் மருந்துக்குரியவர்கள் புகையிலை விருப்பம.; பொடி விருப்பம், பொடியை விட முடியலை என்றாலும், அதனால் ஏற்படும் பல விதமான தொல்லைகளுக்கும், நோய் எதுவாக இருந்தாலும் இது தான் கொடுக்கனும். பிறகு விஷம் முறிந்து விடும். பிறகும் விட முடிய வில்லை என்றால் அது மமதை இப்போது PLAT. ஆனால் சிகரட், பீடி, சுருட்டு விட முடியாது என்றால் ஆணவம், பெருமிதம் என்றால் PLAT. முடியலைங்க என்றால் இங்கு (CALADIUM) புகை விருப்பம், ஆணுக்கு மானி தளர்வு ஆகிவிடும், கலாடியம், புகையிலை, பொடி போன்ற தன் பின் விளைவாக நோய் சொன்னால் TABACUM. புகையிலையினால் செய்த புகை பிடிக்கும் எந்த பொருளினாலும் தொல்லை ஏற்பட்டால் ஏற்பட்டால் CALA.பான்ப்ராக், மானிக்சந்த், கலைமான், சரிதா இது போன்ற பொருளில் என்ன விஷம் என்று தெரிந்து தக்க மருந்து கொடுக்க வேண்டும். ஆகவே புகையா, புகையிலையா, புகை பொருள் விருப்பமா? மானி தளர்வா பார்த்துகனும். இவைகள் தான் குறியாகும். தவறினால் தோல்வி தான் ஏற்படும்.

TARENDULA HISPANICA

- ட்ரான்டுல்லா ஹிஸ்பனிகர்

சிலந்தி.

இம் மருந்துக் குரியவர்கள் ஏமாந்த போது அடித்து விட்டு ஓடி விடும் சிறுவர்கள். குணம் அப்படியே நிலைத்திருக்கும். (பழுக்காத சப்போட்டா காய்க்கு இந்த மருந்து தரப்பட்டது. மறுநாளே எல்லாம் பழுத்து கொட்டி விட்டது. இது தான் இதற்கு உதாரணம்.) முரட்டு தனமாக திடீரென்று தாக்கும் கணம். ஏமாந்த போது சிறுவரை இவன் அடித்து விட்டு ஓடி விடும் சிறுவன். நாம் சிறுவர்கள் விளையாடும் போது பார்த்தால் தெரியும். இவன் விளையாடாமல் ஒரு ஓரமாக கூட உட்காந்திருப்பான். திடீரென்று எழுந்து ஏமாந்து (அ) எங்கோ பார்க்கும் சிறுவனை அப்படியே முதுகுபக்கம் கூட குத்தி விட்டு ஓடி விடும் சிறுவர். தன் இயல்பு செயல்பாடுகள் நின்று இருக்கும். இது திடீரென்று விழித்து, எழுந்து முரட்டு தனமாக மாறிவிடும். ஆகவே இவன் பிறரை முரட்டுதனமாக, ஏமாந்த நேரத்தில் தாக்குபவன். ஆகவே இவன் பிறரை முதுகு பக்கம் தாக்குபவன் ஏமாந்த போது தாக்குபவன். திடீரென்று மற்றவரின் செய்திகளை மறைந்து டக்குனு கெடுதி செய்திடுவான். சிவப்பு கலரை மிகவும் விரும்புவார்கள் இது முக்கிய குறி.

TECRIUM

- டெக்ரியம்

பூனையின் தொடை.

இதன் முக்கிய குறி என்னவென்றால் பெரியவர்களோ, சிறுவர்களோ, மூக்கில் விரலை வைத்து நோண்டுவார்கள். உதட்டு தோலை உரித்து, உரித்து எடுப்பார்கள். ஆஸன வாய் கடுமையாக அரிக்கும் (அ) புழுக்கள் கூட ஏற்படலாம். எது எப்படி இருந்தாலும் விரலை விட்டு நோண்டி கொண்டேயிருப்பார்கள். அதை தேய்த்து, தேய்த்து புண்ணாகும் வரை விட மாட்டார்கள். புண்ணாகி விடும். இவன் சாப்பிடும் போது உணவு பொருளில் ஏதாவது குளையிருக்கிறதா என்று விரலில் கிண்டி கொண்டே இருப்பான். குறிப்பாக மதிய சாப்பாட்டில் இந்த குறையைக் (குறி) காணலாம். மனப்பாதிப்பால் மதிய சாப்பாட்டிற்கு பிறகு தொல்லை அதிகம். திறந்த வெளியில் உடற்பயிற்சி செய்ய விருப்பம். துயரமான செய்தியைக் கேட்டால் இவனுக்கு பர, பரப்பு ஏற்பட்டு விடும். ஆனால் கண் எதிரில் எத்தனை பேர் செத்தாலும் பர, பரப்பு இல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். இது தான் முக்கிய குறி. காய்ச்சலில் வழ, வழனு பேசுவார்கள். தாயத்து கட்டிக்கொள்ள, கட்டி விட விருப்பம். கோயிலுக்கு போவான். ஆனால் மத நம்பிக்கை இருந்தால் BRY, PHOS. தனக்கு பிடிக்காததை, தன்னை பற்றி நல்லதுக்கு பேசினால் கூட இவனுக்கு தொல்லை அதிகமாகி விடும்.

THEA

- த்யர்

இந்திய இலங்கை டீ.

இம் மருந்துக்குரியவர்கள் டீ அதிகம் சாப்பிடுவார்கள். பழக்கம் விட முடியலை என்றாலும் அதே ஞாபகம். சாப்பாடு கூட வேண்டாம் டீ போதும் என்ற பைத்தியங்கள், டீ குடிச்சா தான் வேலை செய்ய முடியும், அப்ப தான் தூக்கம் வராது என்பார்கள். இங்கும் இது ஆணவமா(அ) மமதையா என்று பார்க்கனும் PLAT. டீயில் சிக்கி விட்டாலோ, அடிமையாகி விட்டாலோ, நோய் பல வந்து விட்டால் கஷ்டம் என்றால் இது தான். (இதே போல் காப்பி தான் குடிப்பேன் என்பார் அவர்களுக்கு இயற்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். அவர்களுக்கு தோன்றும் தொல்லைகளுக்கும், முறிக்கவும், குணத்தை மாற்றவும் COFF தரனும்.) (வீரியம் COFFIA தந்து முறிக்கனும். அதனால் ஏற்படும் அல்சர், காமாலை என்று பல விதமான கஸ்டங்களை தக்க மேலே கண்ட மருந்துகளை தரனும்.) ஆகவே டீ, காப்பி, சிகரட் குடித்தால் தான் என் உடம்பு நன்றாக இருக்கிறது என்றால் ஆணவம். இதற்கு குறி பார்த்து கொடுக்கனும். இதை குடித்து தான் என் உடம்பு கெட்டு போகிறது என்று கெஞ்சிய மாதிரி சொன்னால் இந்த மருந்து. iதரியமாக கூறினால் HYOS, LACH. கடுமையான குற்றம் சுமத்தினால் HEP, STAPH.

TEREBINTHINA

- டெர்பணைடினர்

டெர்பண்ட் ஆயில் வீரியப்படுத்தப்பட்டவை.

இம் மருந்து சரியான குறிக்கு தகுந்த ஹோமியோபதி மருந்து கொடுத்து வேலை செய்ய வில்லை என்றால் இதைத் தரலாம். அப்போது இது வேலை செய்யும். சீதமும், இரத்தமும் போகும். சிறுநீர் அதிகமாக போகும். சிறுநீர் புறவழி, விந்துச்சுரபிகள் சிறுநீர் பாதைகளில் புண்கள், ஏற்பட்டு கருப்பு நிறத்தில் இரத்தம் வரும். சீழ் வாடையும் வரும். சிறுநீர் சொட்டு, சொட்டாகத்தான் வரும். அதனால் முக்குவார்கள். இறுதியில் மயக்கம் தான் வரும். நெகச் சுத்தி ஏற்பட்டு கை விரல் அழுகி விடும். தலையைச் சுற்றிலும் இருக்கி கட்டியது போல மந்தமான வலி (CARB-AC). உடன் மயக்கம், பார்ப்பவை எல்லாம் இவருக்கு சுத்தும், தூரமாகத் தெரியும். மனதை ஒருமை படுத்த முடியாது. மூக்குப் பகுதியில் சூடும், குளிரும், இரணம் போன்ற வலியும் ஏற்படும். சீதகடுப்பு, மூக்கின் வலியாக வந்து விடும். (சில்லி மூக்கு அல்ல.) மூக்கில் மாதவிலக்கு வந்தால் AMM-C.

கண்களின் நரம்புகளை இழுத்துப் பிடிப்பது போல வலி, அதுவும் வலது புற கண்ணில் வலி அதிகமாக இருக்கும்;. இந்த வலி தலை வரை செல்லும். கண் மங்கி போதைக் காரர்கள் போல் இருப்பார்கள். அவர்கள் பேசும் பேச்சே அவர் காதில் கேட்பது போலவே இருக்குது என்பார்கள். காதில் ராகம் பாடுவது போலவும், கடலின் அலை அடிப்பது போலவும் இருக்கும். அதிகமான வலி. காது நோயில் இது தெரியும்.

நாக்கு வறட்சியாகவும், சிவந்து இரணமாட்டம்; ஆயிடும். மினு, மினுக்கும் படியிருக்கும். நாக்கின் நுனியில் எரிச்சல். முக்கியமாக முளைப்புகளும், காணப்படும். (ARG-N, BELL, K-BI, NUX-M) மூச்சு ஜில்லிப்பாக இருக்கும்.(அசிங்கமான) நாற்றமுள்ள வாடை அடிக்கும். மூச்சு திணறல் தொண்டையில் ஏற்படுவது போன்ற உணர்வு. குமட்டலும், வாந்தியும், மேல் வயிற்றுப் பகுதியில் சூடு இருக்கும்.

அடிவயிறு நீண்டு இருக்கும். பேதி ஏற்படும். மலம் தண்ணியாகவும், பச்சையாகவும், கடுமையான நாற்றத்துடனும், இரத்தம் கலந்தும் வரும். காற்று பிரிவதற்கு முன்பு வலி ஏற்படும். மலம் கழிந்தப் பிறகு வலி குறைந்து விடும். மூலத்தைச் சுற்றியுள்ள குடல்களில் இப்படி ஏற்படும். புளுக்கள் இருக்கும். இடுப்புக் கூடக எலும்பில் வலி ஏற்படும். இந்த வலி கிரு, கிருப்பில் முடியும். ஒவ்வொரு முறையும் மலம் கழியும் போது மயக்கம் (கிரு,கிருப்பு) ஏற்படும். உடன் மூலத் தொல்லைகளும், குடல்களில் (குழிப்புண்கள்) அல்சர் புண்கள் காணப்படும்.

சிறுநீர் இரத்தம் கலந்து கெட்டியாக வரும். பயங்கரமான வாடை, சிறுநீர் புற வழியில் வலியும், வீக்கமும் இருக்கும். எந்த ஒரு திடீர் நோய் ஏற்பட்டாலும், சிறுநீர்பை வேக்காடைந்து விடும். மானி விதைகளெல்லாம் இழுத்துப் பிடித்துக் கொள்ளும். பெண்களுக்கு சிறுநீர் வரும் பகுதிகளெல்லாம் கடுமையான எரிச்சலிருக்கும். உதடுப்பகுதிகள் எல்லாம் மாறி, மாறி வீங்கும். இடைக்கால மாதவிலக்கு ஏற்படும். கருப்பையில் எரிச்சலும் இருக்கும். மூச்சுக் காற்று மாறி, மாறி வரும். மூச்சு விடத் தொல்லையாகவே இருக்கும். நுரையீரல்கள் நீண்டு விட்ட மாதிரி உணர்வு. காரித் துப்பினால் எச்சிலும், சளியிலும் இரத்தம் வரும்.

இதய துடிப்பு வேகமாகவும், சிறிய நாடியாக விட்டு, விட்டுத் துடிக்கும். திருகுவது போல் வலி ஏற்படும். ஆபத்துக் கட்டத்தைப் போல் இருக்கும். முதுகுப்பகுதியில் சிறுநீர்ப் பையின் பகுதியில் நெருப்பாட்டம் எரிச்சல். வலது சிறுநீர்ப்பையில் இழுக்கும் படியான வலி ஏற்பட்டு இடுப்பு வரை பரவும்.சருமத்தில் முகப்பரு போன்ற கொப்பளங்கள் ஏற்படும். அக்கி கொப்பளம் ஏற்படும். பிப்பு, கடலைப் பருப்பாட்டம், மண்ணாட்டம் கொப்பளங்கள் ஏற்படும். படைகள், தடிப்பு ஏற்படும். உடன் வீக்கம், இது போன்ற ஏராளமான சரும நோய்களும், அதிகமான பிப்பும் இருக்கும். சொறிந்தால் வலி ஏற்படும். தசைகளில் எல்லாம் தொடர்ச்சியான வலி ஏற்படும்.

காய்ச்சலின் போது உடம்பு சூடு, அதிகப்படியான தாகம். நாக்கு வறண்டு விடும். அதிகமாக, ஜில்லுணு தண்ணியும் குடிப்பார்கள். (அப்போது BRY,SULPH போன்ற மருந்துகள் கொடுத்து வேலை செய்யவில்லை என்றால் இதைத் தரலாம்.) அதிகப்படியான வியர்வை மிக குளிர்ச்சியாக வரும். டைபாயிடு, மூளைக் காய்ச்சல், மூல நோய் போன்ற நோய்களின் போது ஏற்படும். முட்டாள் போல உளருவார்கள். மயக்கம் வந்தது போல் அப்படியே, படுத்துக் கிடப்பார்கள். உறவான மருந்துகள்:- ALUMEN, SECALE, CANTH, NIT-AC, TEREBEN. (மழைக்காலங்களில் ஏற்படும் இரும்பல் இது. நாட்பட்டதாக இருக்கும். தொண்டைக் குழல்கள் வேக்காடு அடைந்திடும். தளர்ந்து விடும். குரல் வளையை இருக்கி பிடித்தது போன்ற உணர்விருக்கும்.) பொது மேடைகளில் பேசக் கூடியவர்களுக்கும், சொற்பொழிவாளர்களுக்கும், பாட்டு பாடுபவர்களுக்கும் ஏற்படக்கூடிய தொண்டைக் கம்மலுக்கும், சிறுநீரில் சின்ன, சின்ன கட்டிகள் வருது என்பார்கள். சிற்றின்பத்தின் போது (உடலுறவில்) மானியை தேய்த்து, தேய்த்து இரத்தம் வரும். அப்போது முகம் கழுவுவார்கள். அப்போது தொல்லைகள் மேலும் அதிகமாகும். இதையே(TEREBINTH). முறிக்கும் மருந்து PHOS. மருந்து வீரியம்:- முதல் வீரியத்திலிருந்து 6 வது வீரியம் வரை தரலாம்.

THUJA OCCIDENTALIS

- தூஜா ஆக்சிடென்டாலிஸ்

ஜெர்மனியில் அதிகம் விளையும் விஷ மரத்தின் தழை.

இம் மருந்து மேக வெட்டையை, அதாவது வெண்குஷ்டம், தற்போது உள்ள எய்ட்ஸ் போன்ற நோய்களை எதிர்க்கும் மருந்து ஆகும். இதை ஹோமியோபதி முறையில் ஸைகோஸிஸ் மியாச மருந்து என்பார். கை எல்லாம் சூம்பி போச்சு, கரையான் மாதிரி அரிச்சி இருக்குது கண்ணாடியாட்டம் இருக்குது. அரிச்சிடுச்சி என்று கடந்த காலத்தில் கூறினால் இது. இதையே நிகழ்காலத்தில் கூறினால் SULPH. நான் ஏன் பிறந்தேன்? எதற்காக பிறந்தேன்? என்ன பேசினேன்? வயிற்றில் ஏதோ கத்துது. தவளையாட்டம், பாம்பாட்டம் கத்துது என்றால். தன்னைத் தொடக்கூடாது என்று கூறுவார்கள். இதனால் பெண்கள் கூட செக்ஸை வெறுப்பாள். அதனால் தன்னை தொடக்கூடாது என்பாள். தொடக்கூடாது என்று வெறுத்தால் THUJ. இதே இடத்தில் வலி, உணர்வு, தாங்க முடியாது. அதனால் வெறுத்தால் PLAT. செக்ஸ் தவறு பாவம், அதை செய்யக்கூடாது என்று நினைத்தால் PULS. மூன்றுக்குமே வெறுப்பு தான். வித்தியாசங்களை கண்டுபிடித்து மருந்து கொடுக்க வேண்டும். இந்த காரணத்தினால் எதிர் குணத்தின் மீது வெறுப்பு. காய்ச்சலில் கெட்ட எண்ணங்கள் தோன்றி, மற்ற நேரங்களில் மறதியில் முடியும். டீ விருப்பம், பாயிஸன், பாம்பு, தேள் கடி போன்ற விஷங்களுக்கு இது நல்ல முறிவு மருந்து ஆகும். அம்மா மீது வெறுப்புக்கும், வெங்காயத்தின் மீது வெறுப்புக்கும் இது நல்ல மருந்து. உப்பு மீது வெறுப்பு என்றாலும் இது தான். மற்றும் N-M. தண்ணீர் குடிக்கும் போது கட, கட வென்று குடிப்பது, தொண்டையிலும், தாடையிலும் நேராக உணவை விழுங்குவதும் தூக்கத்தில் வியர்வை, பல் வேரில் சொத்தை ஏற்பட்டால், பச்சை நிறமான சளி, வெள்ளைப்பாடு ஏகப்பட்ட கவிச்சை (நாற்றம்) அடிக்கும். சிறுநீர் விட்டு எழுந்த பின்பு மீண்டும் சிறுநீர் வந்தால், என்னைத் தொடக்கூடாது, மேலே மோதக்கூடாது என்பார். கை, கால், மனம் நொருங்குவது போல இருக்குது என்பார். நான் வேற என் உடம்பு வேற, இந்த உடம்பு ஒத்து வரமாட்டிங்குதுங்க என்பார். உடலையும், ஆன்மாவையும் தனிமைப்படுத்தி பேசினாலும். உப்பு குறைவாக சாப்பிட்டாலும், அதிகமாக சாப்பிட்டாலும் இது தான் மருந்து N-M. ஆடையில்லாமல், திறந்த பகுதியில் வியர்வை என்றால் இது. உடம்பு பொசுக்குணு ஆயிடுச்சுங்க என்றால், பல் வேரிலும் சொத்தை, வெள்ளைபாடு பச்சை நிறம், எலும்பு சொத்தை, கடவாய் பல்லில் சொத்தைக்கும், மருவுக்கும் நல்ல மருந்து. கள்ள சதை, கழலை கட்டி, முண்டு, முடிச்சிக்கு குறி இருந்தால் பொருந்தும். வயிற்றில் ஏதோ ஒரு ஜீவன் இருக்குது, நான் பிள்ளை தாச்சியாட்டம் என் வயிறு இருக்குதுங்க என்பாள். வயிற்றில் கருவு உள்ளே இருக்கிற மாதிரி, உருளுவது மாதிரி இருக்குதுங்க என்பார். மனம் நொருங்கி போச்சுங்க என்று ஏதோ, ஒரு கஷ்டத்தை சொல்லி மேலே கண்டதை சொல்லுவார். விட்டு போச்சி என்றால் EUPT-PER. இப்படி நிகழ்காலத்தில் சொன்னால் SULPH. தான் இறக்கும் தருணத்தில் இருக்கிறேன் என்பார். வலி ஏற்பட்டால் உயிரே போகிற மாதிரியுள்ளது என்பார். உயரமான இடத்திற்கு போனால் கீழே விழுவேன் என்று பயம். ஆண்களுடன் ஒத்து போக மாட்டார். குழப்பமான வார்த்தையால் ஒன்றும் புரியாது. தன்னை தானே குறை கூறுதல் விமர்சித்தல் முகம் எண்ணெய் பசை தடவியது போல் தோன்றுதல், தொடை வியர்த்தல் மன உலைச்சல் இரவில் சாப்பிட்டால், இசை கேட்டால் அழுகை வரும். கண் மூடியதும் வியர்வை CAR-ANI. மலம் உருண்டையாக உள்ளே வரும் வெளியே போகும். வெள்ளைபாடு சளி மாதிரி பச்சையாகவும் போகும். வியர்வை, வெள்ளைபாடு பால் போல் வெள்ளையாகவும,; பச்சையாகவும் ஏற்படும்.

THLASPI BURSA PASTORIS CAPSELLA

- தலசிபுர்ஸா பெஸ்டோரிஸ் காப்சல்லர்

பூ இலையோடு பறித்து செய்தவை. (மரம்).

இம் மருந்து சிறுநீரிலும் மற்ற உறுப்புகளில் இருந்தும் இரத்தப் போக்கு ஏற்படும். அதற்கு உண்டான மருந்து இது. சிறுநீரில் (அல்புமினியுரியா) ALBUMINURIA என்ற முட்டை சத்து சேர்ந்து வந்திடும். அப்போது சிறுநீர் எண்ணெய் கலந்த மாதிரி இருக்கும். சிறுநீர் செல்லும் பாதை நரம்புகளில் நாள்பட்ட பலஹுனமிருக்கும். அப்பகுதியில் சிறு, சிறு கட்டிகளும் கச கசா மாதிரி இருக்கும். அதனால் சிறுநீர் வரும் போது இரத்தமும் வரும். சிறுநீர் புற வழியில் வேக்காடு ஏற்படும். சிறுநீர் கழியும் போது இழுக்கும் படியான வலி ஏற்பட்டு கட்டிகள் கீழே சொத்து,சொத்துனு விழும். சிறுநீரை பிடித்து பார்த்தால் மோரில் வெண்ணெய் மிதப்பது போல கட்டிகள் இருக்கும். சிறுநீர் பையிலிருந்து சிறுநீர் துவாரம் வரையுள்ள குழாய்களில் தான் இம் மருந்துக்குரியவர்களுக்கு நோயிருக்கும். (அதுவும் நெருப்பில் சுட்ட காயங்கள் போல் இருக்கும் BURNET.)

URTICA, CROC, TRILL, MILLEFOL.

கண்களும், முகமும் உப்பியிருக்கும். உடனே மூக்கில் இரத்தம் ஊத்தும். (சில்லி மூக்கு) மயக்கம் வரும். எழுந்து நின்றவுடன் தலைவலி வரும். மாலை நேரங்களில் நெற்றி வலி. தலைப்பகுதியில் தோலுறிதல். காது சந்திலும் தோல் உரியும். நாக்கின் மீது ஏதோ வெள்ளை நிறத்தில் தடவியது போலிருக்கம். வாயிலும், உதட்டிலும் வெடிப்பிருக்கும். வலது கண்ணில் கூரான பொருளைக் கொண்டு குத்துவது போன்ற வலியும், இழுத்து பிடிப்பதும் ஏற்படும். இந்த வலி மேல் நோக்கி செல்லும். மூக்கில் ஆப்ரேசன் செய்யும் போது (செய்த பிறகு) அந்த இடத்தில் இரத்தம் வந்தால் அதை நிறுத்த இந்த மருந்தைத் தரலாம். முக்கியமாக மூக்கில் இரத்தப் போக்கு அதிகமாக வெளியேறும்.

விந்துக் குழாய்கள் தடித்து அடிப்பட்டது போல வலிக்கும். நடக்கும் போதும், சவாரி செய்யும் போதும் வலி ஏற்படும். இடைபட்ட போக்கு ஏராளமாக போகும். இரத்தமாக ஊத்தும். அதிகமான சிறுநீர் வெளியேறும். உடன் கடுமையான திருகும் படியான வயிறு வலி. ஒவ்வொரு முறையும், மாறி, மாறி இரத்தம் வரும். இது முக்கியம். மாதவிலக்கிற்கு முன்பும், பின்பும், வெள்ளைபாடு அது இரத்தம் கலந்த மாதிரியும் வரும். கருப்பு நிறமான இரத்தமும் வரும். நாற்றம் தாங்க முடியாத அளவுக்கு இருக்கும். கருப்பையில் இரணமாட்டம் வலி ஏற்படும். பிறப்பு உறுப்பு வாயிலும் வலி ஏற்படும். மாதவிடாய் ஆரம்பத்தில் லேசான இரத்தப் போக்கும் 3இ4 கழித்து நிற்கும் நேரத்தில் லேசான போக்கும் இருக்கும்.

அடிக்கடி சிறுநீர் கழிக்க விருப்பம். சிறுநீர் அதிகமாகவும் வரும். அது பாஸ்பேட் வாடை அடிக்கும். சிறுநீரில் பாஸ்பேட் கற்கள் காணப்படும். இது நாள்பட்டதாக இருக்கும். மூத்திரக் காயில் திருகு போன்ற வலி. சிறுநீரில் அதிகப்படியான காரம் இருக்கும். சிறுநீரின் படிவு செங்கல் தூள் போல இருக்கும். சிறுநீர் (போக) கழிக்க ஓடுவார்கள். ஆனால் கொஞ்சமாகத்தான் வரும். வெள்ளிக் கம்பி (சிலாக்) போட்டவர்களுக்கு அதன் பின் ஏற்படும் தொல்லைகளுக்கு இது பயன்படும்.

உறவு:- URTICA, CROC, TRILL, MILLEFOL.

TUBERCULINUM

- டியூபர்குலினம்

T.B. நோயாளியின் கோழையின் (சளி) கிருமி.

கோச் என்பவர் 200 ஆண்டுகளுக்கு முன்பு இதைக் கண்டறிந்தார். இம் மருந்துக்குரியவர்கள் தீராத சளி, விடாத இருமல், ஆஸ்துமா, T.B. நோயாளி, கறி விருப்பம். உடம்பு நாளுக்கு நாள் இளைப்பு எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு இளைத்துக் கொண்டே போகுது என்பார்கள். உடம்பு, எலும்பும் தோலுமாகவும், காய்ந்த மாதிரியும் காணப்படும். இது PRIMARY COMPLEX என்று கூறும் சிறுவர், நுரையீரல் நோய்க்கு இது தரணும். மனக்குறிக்கும், சளிக்கும், தக்க மருந்து தந்து வேலை செய்யவில்லை என்றால் இது தரணும். இது தான் கடைசி மருந்து. இதில் குணம் ஆகவில்லை என்றால் மரணம் தான். இதற்கு மனகுறி ஊர் சொத்தை தின்பவர். வெளியே போனால் நானும் வரேன்னு அடம் பிடிக்கும் சிறுவர்கள். புதிய இடம் பார்க்க விருப்பம். கட்டிய வீட்டை, மனைவியை, பார்க்கும் மருத்துவரை, இப்படி எல்லாவற்றையும் மாற்றி, மாற்றி புதுமையை தேடும் மனம். டாக்டரிடம் வரும் போது எல்லாம் ஒவ்வொரு முறையும், புது, புது குறியை காட்டி கொண்டே இருக்கும். யார் மீதும், எதன் மீதும் நம்பிக்கை இருக்காது. எந்த குறியாக இருந்தாலும் கடைசியில் இரும்பலில் போய் முடிந்தால் இது தான் மருந்து. நீடித்து இருக்கும் இரும்பலுக்கு ஒரே குறி இது தான். ஐஸ், பச்ச தண்ணீர், பச்சை பால், வயிறு எரிச்சலுக்கு குடிக்க விருப்பம். உடன் GRAPH, PETRI, MEZ.. தாயை மிரட்டும் சிறுவர், சிறுமி. தலை, பின் கழுத்து, மார்பு என்று இளைப்பு மேலிருந்து கீழே இளைத்து கொண்டே வரும் இளைப்பு LYC. சண்டையினால் இடம் மாற்றினால் மருந்து HEP-SUL. அருகில் உள்ளவர்கள் எதிரிகள் என்று நினைத்துக் கொண்டு வீட்டை மாற்றினால் MERC-S. வலி ஆனது இடம் மாறிக் கொண்டே இருக்கும். PULS. உடன் வலி வேகமாக இடம் மாறினால் BELL. எதிர்காலத்தை எண்ணி (கவலைப்பட்டால்) பயப்பட்டால் CALC. ஏரிக் கரையில் நடக்கும் போது சுகம் ARG-N. மாதிரி. மாலை 4 லிருந்து 12 வரை காய்ச்சல், இரும்பலுக்கும் ஒரே மருந்து இது தான். மனிதரையே. பொருளையோ, தூக்கி எறிந்து பேசுவார்கள் STAPH. இரும்பலில் முடிந்தால் ஒரே மருந்து இது தான். குளிர் காய விருப்பம். ARS. மாதிரி. சோகம் பிடித்த மாதிரி வெளுத்து காண்பார்.

குறிப்பு:- ஒரு சிறுமி கூறினால், அம்மாவைப் பார்த்து என் மேலே குறையும், தப்பு சொன்னியா வா, வா உன்னை கொன்னு விடுகிறேன.; என்றாள். இந்த ஒரு குறியை வைத்து மருந்து கொடுத்து மற்ற நோயும் குணம் ஆகி விட்டது.

இவர்கள் புது, புது நோயை சொல்லிக் கொண்டு இருப்பார்கள். ஒவ்வொரு முறையும் வரும் போதும், இப்படி தான் மாற்றி, மாற்றி குறியை நமக்கு காட்டும். தலை வலிக்கு MERC-SOL கொடுத்தால், BELL குறியை காட்டும். இப்பொழுது BELL கொடுக்க வேண்டுமா? MERC-SOL கொடுக்க வேண்டுமா? என அறிய TUBER கொடுத்தால் சரியான குறியை காண்பிக்கும். நம்மிடம் வரும் போது BELL SYMTOMPS இருக்கும். மருந்து கொடுத்தும் குறையும், அடுத்து CHRONIC விழித்து ஜில்லிப்பு காற்று இப்பொழுது விருப்பம் என்று கையில் அட்டையை வைத்து விசுறுவார். ARG-NIT தேவைப்படும். ஏரிக் கரையில் நடந்தால் சுகம் ARG – NIT. இந்த இடத்தில் ARG – NIT. கொடுத்தால் குணமாகுமா என்றால் குணமாகும். குணமாகவில்லை என்றால் TUBER இடை மருந்தாக தர வேண்டும். நம்பிக்கை இருக்காது. தாகம் ஏற்பட்டால் வியர்வை வந்திடும். வெயிலில் போய் வந்தால் சளி. காய்ச்சல் பிடித்தால் கூட இரும்பலில் முடியும். வாரம் ஒரு முறை, மாதம் ஒரு முறை வைத்து தலை வலி வரும். தலைவலியின் போது தலை பொட்டில் வலி. இடைவிடாது ஏதோ ஒரு நினைப்பு ஏற்பட்டு, அதனால் தூக்கம் தடைபட்டு உடல் இளைத்து விடுவார். பொருட்களை உடைத்தல் தூக்கி எறிதல், அதே போல் மனிதரையும் தூக்கி எறிந்து பேசுதல், திட்டுதல் 11 மணிக்கு பசி SULPH மாதிரி. தலையில் இருந்து வியர்வை CALC. மாதிரி. CALC தலையை போர்த்துவார். இவர் தலையைக்கு விசுறுவார். இரவில் பசியும், சில நேரம் பசியின்மையும் ஏற்படும். கறி விரும்பி சாப்பிடுவார். சில நேரம் விருப்பமின்மை. மாதவிலக்கு நிற்கும் காலத்தில் இரும்பல் ஏற்படும். நாய் பயம் BELL, STRAM, TUBER. நடக்க நடக்க சுகம். RHUS-T மாதிரி. RHUST குளிர்ச்சி வெறுப்பு. இது குளிர்ச்சி சுகம். குளரிர்காலம் தணிவு. RUMEX மாதிரி. அடுப்பு சூடு சுகம். ARS மாதிரி. தலை பெருத்து, வயிறு பெருத்து ட்ரம் மாதிரி இருக்கும். CALC- P. இலேசான காற்றுப்பட்டாலும், திடீரென காரணமில்லாமல் சளி பிடித்தால் இது. ACON மாதிரி வரும்.

URANIUM NIT

- யுரேனியம் நட்

யூரேனியம் குண்டு செய்ய தேவையான ஒரு வகை வெடி மருந்து.

இவர்கள் இயல்பாகவே மிகவும் பொறுமைசாலி. அதனால் இவருடைய மன குறி தெளிவாக தெரியாது. அதனால் உடல் குறியை பார்த்து மருந்து கொடுக்க வேண்டும். பிறகு கிடைக்கும் போது மனகுறியை பார்த்து கொள்ளலாம். இவரது உடல் குறி என்ன வென்றால் அடிக்கடி ஒண்ணுக்கு போகுதுங்க, விடியறத்துக்குள்ள ஆறு, ஏழு தடவை போகுதுங்க என்பார்கள். இதன் குறி இவ்வளவு தான். இதற்கு இது தான் பெரிய மருந்து. கொடுத்தால் குணமாகும். ஆனால் இது நிரந்தரமானது அல்ல.பிறகு மனகுறியும், மற்ற விஷசே குறியும் பார்த்து கொடுக்க வேண்டும்.

URITCA URENS

- அர்டிக்கா யுரேன்ஸ்

கள்ளி மரத்தின் பெரிய முள்.

இம் மருந்து ஆழமான தீக்காயம் அதாவது, தற்கொலை செய்வதற்காக, சீமெண்ணை ஊற்றி எரித்து, நெருப்பு வைத்து கொண்டவர்கள், தலைவருக்காக தீக்குளிக்கும் தொண்டர்கள், பெரிய நெருப்பு எறிகின்ற இடத்தில் சிக்கி கொண்டவர்கள், அதன் பிறகு உயிர் பிழைத்து கொண்டால் மிக பெரிய தீப்புண்களுக்கு இது தான் பெரிய மருந்து. தீ காயங்களுக்கு CANTH. கொடுத்து சரியாகாவிட்டால்,இதுகொடுத்தால் சரியாகிவிடும். அனுபவ குறிப்பு:- கடலு}ர் அரசு மருத்துவமiயில் தீக்குளித்து பிழைத்து கொண்ட ஒரு பெண், ஒன்றரை மாதமாக படுத்திருந்தார். பல பிரிவு மருத்துவர்கள் போராடியும், புண் சிறிதும் ஆறவில்லை. இந்த மருந்தை கொடுத்து ஏழு நாளில் புண் காய்ந்தே விட்டது. உள் உறுப்பு முழுவதும் குணம்.

VARIOLINUM

- வரிலோனியம்

பெரியம்மையின் சீழ் கிருமிகள்.

இம் மருந்து பெரியம்மை தோன்றி உள்ளவர்களுக்கு இதை தந்தால் குணமாகும். அது கொள்ளை நோயாக பரவும் காலத்தில் இக் குறிகள் தோன்றும். அப்போது இதை கொடுத்தால் அம்மை மூலமாக காட்டியுள்ள அவரின் விஷம் போய் விடும். அந்த நோய் தோன்ற காரணமான விஷமும் போய் விடும். போய் விட்டால் பிறகு ஏது விஷம்?. அம்மையை தடுத்தால் தானே வேறு பக்கம் விஷம் வரும். மனக்குறி நமக்கு அம்மை நோய் வந்து விடுமோ என்று அதிக பயம், கண் வலி பயங்கரமாக இருக்கும். கண் வீங்கி போய் விடும். சிலருக்கு பூ கண்ணில் விழுந்து பார்வை மங்கி விடும். வேறு சிலருக்கு கண் ரசம் கெட்டு பார்வை போய் விடும். (அ) கண் விழி உடைந்து போய் விடும். தொண்டை சுத்தமாக அடைத்து விடும். அதனால் சுவாசிக்க கஷ்டம். பிசின் மாதிரி சளி அதனால் இரும்பி, இரும்பி இரத்ததையே துப்புவார். வலது புற தொண்டையில் கட்டி மாதிரி இருக்குது என்பார். அது தெறிக்கும் வலி முதுகு வரை பரவுது. அந்த வலி கெண்டைக் கால் வரைக்கும் பரவுதுங்கஎன்பார் வலி. அதனால் அமைதியாக படுக்கவும், இருக்கவும், முடியலை என்பார். குறிப்பாக மணிக்கட்டு, அடி வயிறு, முதுகு, இப்படி வலி மாறி, மாறி வரும். நெருப்பு மாதிரியே உட்காய்ச்சல்; அடிக்குதுங்க என்பார். ஏராளமான நாற்றம் உள்ள வியர்வை, இருப்பினும் வறண்டு போன சூடான சருமம். இதனுடன் பல உறவு மருந்துகள் உள்ளது. அதன், அதன் குணத்தையும், மேலும் இம் மருந்தின் விளக்கத்தையும் 666 வது பக்கம் வில்லியம் போரிக் புத்தகத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

VERATRUM ALBUM

- வெரட்ரம் ஆல்பம்

முழாம் பழம்.

இம் மருந்து மரணக் கட்டத்திற்கு முக்கியமாக தேவைப்படும் மருந்து. குளிர்ந்த வியர்வை முகம் கருஞ்சிவப்பு. குளிரின் போது பினாத்துதல் (உளறுதல்.) பின்பு மரணக் கட்டத்திற்கு போய்விடுவார். செக்ஸ் உணர்வு குறைவு. ஆனால் பிரசவத்திற்கு பிறகு செக்ஸ் உணர்வுஅதிகமாகி விடும் . கொச்சையாக பேசுவார். ஒழுக்கம் குறைவு. கடவுளிடமும், டாக்டரையும் மிரட்டுவான். இரவு முழுவதும் தூங்காத பைத்தியம். உடம்பு ஜில்லிட்டு, தலையில் ஐஸ் கட்டி வைத்த மாதிரி தலையே ஜில்லிட்டு இருக்கும். முகத்தில் முத்து, முத்தாக. உடம்பு பூராவும் வியர்வை தெரியும். இது காலராவில் தெரியும். வாந்தி, பேதி எப்படி என்றால் ஒரு டம்ளர் தண்ணி குடித்தால் இரண்டு டம்ளார்வாந்தி, பேதிவரும்;. CAMP - க்கு பேதி, வாந்தி குறைவு உடனே மரணம் வரும். VERAT – தாமதமாக மரணம் வரும். அதிக வியர்வை, பாசாங்கு, நடிப்பு, ஜாலாக்கு, தும்பல், இருமி காட்டுதல், நொண்டி மாதிரி நடித்து காட்டுதல், வயிறு வலி என்று கத்தி காட்டுதல், தட்டிக்காட்டுதல், தற்புகழ்ச்சி, என் சொந்த அம்மா, சொந்த தம்பி, சொந்த அக்கா, என்று யாரைப் பார்த்தாலும் உறவு வைத்து பேசுவதும், ஊதாரியாக செலவும் செய்வான். வீட்டுக்கு ஒரு ரூபாய் கூட தர மாட்டான். தெரு தெரியாமல் குழம்பி போவான். அவர்களுக்கு தேவை படுபவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள் யாராக இருந்தாலும் குழைவான். பிடிக்காதவர்களிடம் குற்றம் கண்டுப்பிடிப்பான். குருடன், செவிடன், கை, கால் வராதவன், கர்பிணி போன்று பிரசவம் நடப்பது போன்று பாசாங்கு வேலை செய்பவர்களுக்கும், கனவில் திருடன் வந்த மாதிரி இருந்தால் VERAT. இதனால் திருடன் வந்த மாதிரி இருக்குது என்று வீட்டை சந்தேகத்துடன் தேடினாள் N-M. முகம் நீல நிறம் CARB-V. வருத்தம், கவலை இருக்கும்.

VERAT – VIRIDE

- வெரட் விரிட்

அமெரிக்க விஷச் செடியின் வெள்ளை நிற பூ.

இம் மருந்துக்குரியவர்கள், இவர்கள் பார்க்கும் பொருள்கள் எல்லாம் பெரிய நெருப்பு பந்தாட்டம் இருக்குதுங்க, நெருப்பு வளையமாட்டம் இருக்குதுங்க, வீடு, மரம், மற்ற பொருள் எல்லாம் வட்ட வட்டமாக தெரியுதுங்க என்பார். சில சமயம் உடலுக்குள்ளே கூட வட்ட, வட்டமாக தெரியுதுங்க என்பார். வெளியே மட்டும் இது உள்ளே மட்டும் வட்டம் என்றால் மருந்து வேறு. ஓடும் ஆறு, குளம், நீர்வீழ்ச்சி போன்ற எல்லா நீரும் கனவிலோ, இப்படி (மாயமாக) இரத்தமாக தெரிந்தால் SOLOINUM -T-AE

ZINCUM – METTALICUM

- ஜின்கம் மெட்டாலிக்கம்

துத்தநாகம் என்ற உலோகம்.

உட்கார்ந்து இருக்கும் போது முழங்கால் கீழ் தானாகவே காலை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள். மமதையில் (ஆணவத்தில இப்படி ஆட்டினால் PLAT.) ஆனால் இவருக்கு மூளையில் ஏற்பட்ட பக்க வாதம் தான் இப்படி ஆட்ட காரணம் ஆகும். இவர்கள் தொழிலாளியை வெறுப்பார்கள். காலையில் சிரிப்பு. மாலையில் வருத்தம். பல் வலியினால் வலிப்பு. வெளுத்த முகம். உடம்பு பகுதியில் சூடு இருக்காது. கண்ணை உருட்டிக் கொண்டும், பற்களை நகத்தில் நோண்டிக் கொண்டும் இருப்பார்கள். ஆண், பெண் உறுப்புகளிலோ, புறப்பாடுகளை அடக்கிய பிறகும், இயற்கையாக வெள்ளைப்பாடு, மாதவிலக்கை நிறுத்திய பிறகும், மூளை, முதுகு தண்டும், தாக்கப்பட்டு தலைவலிக்கு பிறகு வலிப்பு தோன்றி விடும். தடுப்பு மருந்துகளை கொடுத்து மேலே கண்ட கஷ்டங்களை தடுத்த பிறகு, மூளையில் பக்க வாதம் ஏற்பட்டு கால்களை தானாக ஆட்டிக் கொண்டிருப்பார். இது முக்கிய குறி. இது மமதை (ஆணவம்) அல்ல. மமதையில் ஆட்டுவது ஸோரா விஷம். இது தடுக்கப்பட்ட மருந்தினாலும், நோயினாலும் இப்படி பலஹீனம் ஆகி விடுவார். இதுவும் ஒரு வகை பக்க வாதமே.

VARIOLINUM

- வரிலினம்

குறிப்பு:- இந்த மருந்து பெரியம்மை உடைந்த கொப்பளத்தினுள் இருக்கும் சீழை எடுத்து வீரியப்படுத்தி இம் மருந்து செய்யப்படுகிறது. தற்காலத்தில உலகில் பெரியம்மையே இல்லை என்ற உலக சுகாதார கழகம் அறிவித்து விட்டது. சட்ட பூர்வமாக பெரியம்மையே இல்லை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இயற்கை என்பது அவனிடம் உள்ள கழிவுப் பொருளை, அவன் ஆன்மாவில் பல பிறவிகளாக சேர்ந்தது தான் வியாதியும், தேகவாகுமாகும். அவனிடம் உள்ள கழிவுப் பொருட்கள் வெளியேறி தானே ஆகனும். அதற்கு ஒரு பெயர் வேண்டுமல்லவா, அதன் அடையாளம் தான் வியாதி என்பது, ஆகவே அடையாளம் போனால் வியாதி போய்விடுமா? போகாது. அவர்களிடம் உற்பத்தியான கழிவு ஏதோ ஒரு வகையில் வெளியே வந்து தானே தீரனும். அதை போய் தடுத்தால் மற்றொரு புறம் வந்து தானே தீரும். தற்போது குழந்தைகளுக்கு பன்னிரெண்டு (12) வகையில் தடுப்பு மருந்து என்ற பெயரில் தடுக்கிறார்கள். ஆனால் இதனுடைய விபரிதம் எதிர்காலத்தில் என்ன ஆகும் என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். எந்த ஒரு கழிவுப் பொருளை தடுத்தாலும், அது வேறு ஒன்றாக மாறிவிடும். அல்லவாடூ. ஆகவே தடுக்கப்பட்டது, ஒடுக்கப்பட்டது, நகர்த்தப்பட்டது, மறைக்கப்பட்டது அறுத்து எடுக்கப்பட்டது. (உறுப்புகளை அறுவை சிகிச்சை) செய்யப்பட்டது என்பது தான், அலோபதி மருத்துவ உலகின் வார்த்தைகள் ஆகும். இதை சிந்தித்து பாருங்கள் குணப்படுத்தப்பட்டது என்ற வார்த்தையே அதில் இல்லை. குணப்படுத்திக் கொள்ள தயாராக இருப்பவர்களின் எண்ணிக்கையும் மிக குறைவு. உடனே நோயை மறைத்து கொள்ள வேண்டும். என்று விரும்புவார்கள். எண்ணிக்கை மிக, மிக அதிகம். ஒரு, தலைவலி மாத்திரையில் துவங்கி நோய்களை இப்படி மறைத்து பின்பு நோய் மலர்ந்து அதனை தடுக்க 12 வகை மருந்துகளை கொடுத்து பின்பு அந்த தடுப்பு மருந்தின், விஷமும் சேர்ந்து கொண்டு அடுத்த தலை முறையினருக்கு அதுவே விஸ்பரூபமாக மலர்ந்து, புற்று, எய்;ட்ஸ், எபாபட்டிஸ் தோன்றி இறுதியில் கொன்று விடுகிறது. ஆனால் மூல விஷம் ஒன்று தான். அது தான் ஆன்மாவை தாக்கி, உடலையும், தாக்கி அழிக்கிறது. ஹோமியோபதி தத்துவம் தான் மூல விஷத்தை பார்க்கிறது. அதை அறிந்து, அளந்து, குறிகளை தெரிந்து, தக்க மருந்து தந்து மாற்றுவது தான் ஹோமியோபதி தத்துவம். அதை உண்மையாக கடைப்பிடிப்பவர் தான் ஹோமியோபதி மருத்துவர்.

ADRENALIN

- அட்ரனேலின்

அடர்னாலின் சுரப்பியை அரைக்கப்பட்டது.

இது மனிதர்களின் சிறுநீரகத்தின் மேல் உள்ள ஒரு சுரப்பி. அதிலில் இருந்து எடுக்கப்பட்டது தான் இது.

இதன் முக்கிய குறி என்னவென்றால்,மனம்,தலை, கண்கள். இப்படி கூறப்படுகிறது. குறிப்பாக தலைவலிகளை பற்றி தான் அதிகமாக கூறப்படுகிறது. மூளை நரம்பு பலஹீனத்தினால் சோர்வாக உள்ளது என்ற சொல்வார்கள். அதனால் மன வேலைகள் எதுவும் செய்ய முடியவில்லை என்று சொல்லுவார்கள். சோம்பலாக உள்ளது என்பார். வேலைகளை பார்த்தால் வெறுப்பாக உள்ளது என்பார். தலைவலியானது இடது பக்கம் தோன்றி வலது பக்கம் முடியும். காலை தூங்கி எழுந்தவுடன் ஒன்னுமே முடியலிங்க என்றும் சொல்வார். கண்ணில் வேலை செய்தாலும் கூட தலைவலி வந்து விடுதுங்க என்பார்.

கண் எலும்பு குழிக்குள் வலி துவங்கி விழியில் வந்து தங்குகிறது. அதனால் கண் வேக்காடு ஏற்பட்டு, அதனால் கண்ணை நன்றாக திறந்து பொருட்களை பார்க்க முடியவில்லை என்பார். பல விதமான வலிகள் வரும். இடது கண்ணிலும், நெற்றிலும் வரும் வலியானது அழுத்துகிற மாதிரி இருக்குது என்று சொல்வார்கள். காதுக்குள்ளேயும் வலி வந்து விடுகிறது என்பார். திறந்த வெளி காற்றில் இருந்தால் கொஞ்சம் சுமாராக உள்ளது என்பார். ஆனால் இரவில் தூங்கி எழுந்தால் வலி முழுவதும், குறைந்து விடுகிறது என்பார். ஒரு சிலர் சொல்வார்கள். மதியம் மூன்று மணிக்கு தலைவலி, காற்றில் நடந்தாவோ, சாப்பிட்டாலோ. கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால், கொஞ்சம் சுமார் என்பார்கள். ஆனால் அப்பொழுது கூட வலி இருந்து கொண்டே தான் இருக்கிறது என்பார்கள். மண்டை மூளைக்குள் தான் தலைவலி உற்பத்தி ஆகி தலை வலிக்கிறது என்று சொல்வார்கள். இரண்டு பொறியிலும், துப்பாக்கியில் சுடுகிற மாதிரி அவ்வளவு வலி என்பார்கள். ஒரு சிலர் காலை பதினொரு (11) மணி வரைக்கும் கூட வலிக்கிறது என்பார். மற்றும் சிலர் மூன்று மணி வரைக்கும் கூட வலிக்கிறது என்பார். அதிகமான திறந்த வெளிக் காற்றில் போனாலும் கூட வலி என்பார்கள். காற்று இல்லாத இடத்துக்கு போனாலும் அதிக வலி என்பார். மண்டைக்குள் கடுமையான வலி இருக்கிறது என்பார். மண்டையை தேய்த்து விட்டால் சுகம் என்பார். காலை பதினொரு மணி முதல் மாலை ஏழு மணி வரை ஒரே மாதிரியாகவே வலிக்கின்றது என்பார்கள்;. அதிகாலையில் 3 லிருந்து 6 வரை மந்தமாக இருக்கிறது என்பார். கண்ணுக்கு சிறிது வேலை கொடுத்தாலும் கண் வேக்காடு என்பார். இப்படி கண்களையும், மூக்கையும், தலைவலியைப் பற்றியுமே கூறுவார்கள். மற்றும் வாய், மார்பு, வயிறு, மலக்குடல், கை, கால்கள், நரம்பு, நுரையீரல், முதுகு, காய்ச்சல் என்று பல பகுதிகள் விரிவாக உள்ளன. அதை ALLEN KEY NOTES –– ல் இன்னும் விளக்கம் வேண்டும் என்றால் 309ம் பக்கம் பார்த்து கொள்ளவும்.

CHOLESTERINUM

- கோலஸ்ரேலியம்

இது கொழுப்பில் இருந்து எடுத்து வீரியம் செய்யப்பட்து.

இதை Dr.பர்னட், ஸ்வான் ஆகியவர்கள்;ஆராய்ச்சி செய்தார்கள்.

இவர்களின் ஆராய்ச்சியில் கூறுவது கொழுப்பு பொருட்கள் திவலைகளாக கல்லீரலில் படிந்து கொள்வதால் தொல்லைகள் சில ஏற்படுத்துகின்றன. அப்போது கல்லீரல் நோய்களாக நமக்கு காட்டுகிறது. அக்குறிகளுக்கு தக்கமருந்துகளாக NUX–V, CHINA, CRAI-M.இவைகளை தரப்பட்டது மற்றும் கல்லீரலில், கற்கள் தோன்றுவதற்கு கொழுப்பு தான் காரணம் ஆகிறது. குறிகளுக்க தக்க மருந்துகள் கொடுக்கப்பட்ட போதும், அது தாமதம் ஆனாலோ மருந்து வேலை செய்யவில்லை என்றாலோ, இந்த மருந்தை இடை மருந்தாக கொடுக்கப்பட்ட போது, அம் மருந்துகள் நன்றாக வேலை செய்தது மற்றம் முழுப் பயனை அழித்தது என்று அவர்கள் கூறுகிறார்கள். அதன் பிறகு பல மருத்துவர்கள் சோதனை செய்கையில் பித்தப்பை கற்களை கரைக்க இது நல்ல மருந்தாக இருந்தது. கொழுப்பு வகை (அ) பெருத்த உடல் தேகவாகு உள்ளவருக்கு இதை கொடுத்து சோதித்து பார்த்தோம் என்று கூறுகிறார்கள். இந்த குறிப்புகளை 1908 யில் வெளி வந்த மெகசினில்(MAGAZINE)பதிவாகி உள்ளது. அதன் பின்பு Dr. கிளார்க் என்பவர் அம் மருந்தை எடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்து நோயாளிக்கு கொடுத்து பார்த்து விட்டு சொல்கிறார். இரத்ததிலும், மூளையிலும், நரம்புகளிலும் கூட சிறு, சிறு கொழுப்பு புள்ளிகள் மாதிரி உள்ளவர்களுக்கு தோன்றும் கல்லீரல் தொல்லை, பித்தப் பையில் கற்கள், சிறுநீரில் கற்கள் தோன்றுவதற்கு காரணமாக இதுவே இருந்தது. இம் மருந்து கொடுத்தவுடன் நல்ல பலன் கிடைத்தது. இம் மருந்து பெருத்த உடல் வாகு உள்ளவர்களுக்கு மட்டும் அல்ல. அனைவருக்கும் பொருந்தியது என்று அனுபவத்தில் கூறுகிறேன் என்றும், கழலை கட்டி தோன்றுவதற்கு , இந்த கொழுப்பு காரணமாக உள்ளது என்று கூறுகிறார்.

கருத்தரிக்கும் தாய் மார்களுக்கு இதை கொடுத்தால் குழந்தை கொழுத்த வகை இல்லாமல் சீரான குழந்தையாக பிறக்கும். கொழுத்த வகை குழந்தைகளுக்கு கொடுத்தால், சீரான குழந்தையாக மாறிவிடும். மயக்க மருந்து கொடுக்கப்பட்டவர்களுக்கு பின்பு கொழுப்பு பொருட்கள் சரியாக கரையாது. அப்பொழுது இதைக் கொடுத்தால் கொழுப்பை சீர்படுத்தி, மயக்க மருந்தையும் முறித்து விடும். தற்போது ஆங்கில வகை மருத்துவர்கள் எடுத்தற்கு எல்லாம் தூக்க வகை மருந்துகளை தருகிறார்கள். அது பல கோளாருகளை ஏற்படுத்துகிறது. அது ஈதற் என்ற இரசாயனத்தில இருந்து செய்யப்படுகிறது. அது உடலில் சேர, சேர புற்று நோயை உருவாக்கி வைத்து விடும். மற்றும் கல்லீரல் புற்றுக்கு இது முக்கியமாக பயன்படுகிறது. தற்போது ஹலோபதி மருத்துவத்தில் பாலி கிளினிக்கில் பல வகையான மருந்து கொடுத்து கல்லீரலை கெடுத்து இனி காப்பாற்ற முடியாது என்றும் இது ஹெபேடிடிஸ் (HEPATITIS) என்பது கல்லீரல் நோய். அதாவது ஆஸ்பத்திரியினால் வந்த நோய் என்று கூறி கை விடப்பட்ட பிறகு இதை கொடுத்தல் குணப்படுத்தலாம். அல்லது மரணத்தை தள்ளி வைக்கலாம். என்று பர்னட், ஸ்வான் என்றவர்கள் அனுபவத்தின் வாயிலாக எழுதிய நூலில் உள்ளது. அதாவது ஆபத்தை தடுக்கவும், குணப்படுத்தவும் இதை இடை மருந்தாக கொடுத்தால் கூட நல்ல பலன் அளிக்கும். என்று கூறப்படுகிறது. அதாவது கொழுத்த தேகம் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. கல்லீரல் பகுதியில் வலி என்று சொன்னால் கொழுப்பு திவலைகள் தான் காரணமாக இருக்க முடியும். ஆகவே இதை ஒரு வேளை, இரண்டு வேளை கொடுத்து விட்டால் அப்போதே தெரியும்.

அனுபவம் கேஸ்:- ஒரு நோயாளி கல்லீரல் பகுதியில் வலிக்குது. நீர் இறங்கற மாதிரி இருக்குது என்று மார்க் போட்ட மாதிரி தொட்டு காட்டினார். நான் எல்லா குறியும் விட்டு, விட்டு கல்லீரல் பகுதி தான் என்று நினைத்து ஒரு வேளை கொடுத்தேன். நல்ல பலன். அடுத்த நோயாளி வலது புறம் கல்லீரல் அழுத்தினால் அதிக வலி என்றார். இதை கொடுத்து தணிவு, மூன்றாவது நோயாளி பித்த வாந்தி எடுத்து, எடுத்து உடல் மஞ்சளாக போய் விட்டது. மஞ்சக் காமாலை முற்றி விட்டது என்றார். இதை கொடுத்து தணிவு, ஆகவே குனியும் போது கல்லீரல் வலி பித்தம் இப்படி கல்லீரல் பற்றியே புகார்; சொன்னால் இந்த கொடுத்து தணிவு.

CHLOROMYCETIN

- க்ளோரோமைசிட்டின்

ஆங்கில மருத்துவ முறையில் டைபாய்டு காய்ச்சல், விஷக் காய்ச்சல், பித்தவாத காய்ச்சல் (மூளைக் காய்ச்சல்) போன்றவற்றிக்கு இது மருந்து. (டைபாய்டு காய்ச்சல் என்பது குடல்களில் புண்களை ஏற்படுத்துவது, கழிவுகள் அதிக நாற்றத்துடன் காய்ச்சல் 21 நாட்களுக்கு இருக்கும்.) டைபாய்டு காய்ச்சல், மேலேக் கண்ட காய்ச்சலுக்கு ஹலோபதி மருத்துவ உலகில் இதுவே மிகப் பெரிய மருந்தாகும். இது போன்ற நோய்களில் இந்த மருந்தைப் பயன்படுத்தாத ஹலோபதி மருத்துவர்களே கிடையாது. எனவே நோயாளிகள் நம்மிடம் வந்து டைபாய்டு நோய்க்குப் பிறகு மேலும் அதிகத் தொல்லை என்றுக் கூறினால் அது குளோரோமைசிடினால் தான் தோன்றியவை என்பது நினைவுக்கு வர வேண்டும். அப்போது இதை ஹோமியோபதி மருந்தைத் தந்தால் முழுவதும் குணமாக்கலாம்.

ELECTRICTAS

- எலக்ரிக்டல்ஸ்

சுத்த வெளியில் சுத்துகிற கோடிக்கணக்கான அணுக்களில் அதன் மையப் பகுதியில் உள்ளதை இனிப்பு (சர்க்கரை) உருண்டையில் (பிடித்து) ஏற்றி வீரியம் செய்கிறார்கள்.

BIDLIOT – என்பவர் முதலில் இதை பரிசோதனை செய்து மருந்து தந்ததில் நல்ல வெற்றிக் கிடைத்தது அதன் பிறகு (ஜார்) JAHR (கிளார்க்) CLARKE போன்ற மிகச் சிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கும், இந்த மருந்தை ஆராய்ச்சி செய்து மிகவும் பயன்பட்டதாக கூறகின்றனர்.

மின்சாரம், கரண்ட்டால் பாதிக்கப்ட்டவர்களுக்கு இதுப் பயன்படும். மின்சக்தியை ஏற்றுக் கொள்கிற உடல் நிலை உள்ளவர்களுக்கும் இது பயன்படும் என்றும் சுறுக்கமாக கூறுகிறார்கள். உதாரணம் டி.வி, கம்யூட்டர் ஒளிக்கு பிறகு ஏற்படும் தொல்லைகளுக்கு இது பொருந்தும்.

இந்த மருந்தின் பண்புகள்:-

மென்மையான நரம்புகளில் ஏற்படும் கூச்சம், கவலை, பயம், பித்துப் பிடித்து பாடிக் கொண்டே போகுதல், கத்துதல், இழுப்பு, இது போன்ற நரம்பு மண்டலங்களில் ஏற்படும் தொல்லைகளுக்கு இது. நரம்புத் தொல்லை ஏற்படுவதற்கு காரணம் மின்சக்தியின் பின் விளைவாகும். அதாவது (கரண்ட்) லைட் வெளிச்சத்தில் அதிக நேரம் இருந்து, இருந்து, மின்சார சம்பந்தப்பட்ட வெளிச்சமே வேண்டாம் என்றதொரு உணர்வும், சகிப்புத் தன்மையும், ஏற்பட்டு விடும். இடி, மின்னல், மின்னும் போது பரபரப்பாகி விடுவார்கள். மின்னல் வெளிச்சத்தைப் பார்த்தால் நரம்பு பலஹீனமாகி கீழே விழுந்து சுய நினைவை இழந்தவர்களுக்கு இதை கொடுத்தால் நல்ல மாற்றம் கிடைக்கும். மின், மின்னல் அதிர்ச்சிக்கு நல்ல மருந்து (PHOS) மற்றும் உடம்பு முழுவதும் கணம், பாரம், பக்கவாதத்தால் ஒரு பகுதி தூக்க முடியலை என்பார்கள். உடம்பு குண்டாகவும், பாரமாகவும் இருப்பது போன்ற ஓர் உணர்வு. மின்சாரத்தால் பாதிக்கப்பட்டப் பின் குளிர்ச்சியைத் தாங்க முடியலை என்பார்கள். நெஞ்சினுள் ஏதோ இருக்குது, குழந்தைகளுக்கு வைக்கக் கூடிய கரண்ட,; லைட்; வெளிச்சத்திற்கு பிறகு ஏற்படக்கூடிய தொல்லைகளுக்கும், லைட் வெளிச்சதத்தினால் வளர்ந்த கோழியை சாப்பிட்டப் பிறகு ஏற்படும் தொல்லைகளுக்கும் இது நல்ல மருந்து.

முறிக்க கூடிய மருந்து PHOS என்று கிளார்க் கூறுகிறார்.

ஒப்பிட்டு பார்க்கக் கூடிய மருந்துகள்:-

THE, X-RAY, PSOR, TUB -- இந்த மருந்துகள் உள்ளே இருக்கக் கூடிய அதிகமான காந்தத்தை வெளியே தள்ளிவிடும்.

ELECTRICITY

- எலக்ரிசிட்டி

இவர்களது மன நிலை:-

அழுதுக் கொண்டேயிருத்தல், முட்டாள் தனம், பயந்தவர்களாகவே இருத்தல், கூச்சம், நரம்பு பலஹீனத்தால் கத்திக் கொண்டே பயந்து கொண்டே இருப்பார்கள், கவலையைப் பற்றியே புலம்பிக் கொண்டிருப்பார்கள். மின்னல் - இடி இடிக்கும் (காலத்தில்) போது பயம். வருத்தமாக இருக்கும். முக்கியமாக நெஞ்சுக்குள்ளே நரம்பு கோளாறு ஏற்படுதுன்னு சொல்வார்கள். (ELECTRICTAS - காரர்களுக்கு மின்னல், இடி, கரண்ட் உடம்பில் ஏறி தொல்லைகள் வரும். இடி, மின்னல், புயல் கேட்டாலும் அந்தக் காலத்திலும் பயம் ஏற்படும். இடி, புயலின் போது மனநிலை பித்து, பிடித்து விடும். வெறி பிடித்து விடுவார்கள். அப்போது எல்லா நோயும் வந்திடுச்சு என்பார்கள். மனோசக்தி எல்லாமே விழுந்திடும். மந்தமாகி விடுவார்கள். மின்னலுக்கு முன்பும், அப்போதும், உடலை (வதைப்பது) சித்ரவதை செய்வது போல் இருக்கும். ஞாபக சக்தியே கொஞ்சம் கூட இருக்காது. மனதை ஒரு நிலை படுத்தவே முடியாது. உணர்வே இருக்காது. தலையெல்லாம் ரொம்ப மந்தமாவே இருக்கும். திக்குனு விழுவார்கள். தலைச் சுற்றலும் காணப்படும். முக்கியமாக குனியும் போது தலைச்சுற்றலும், திக்குனு விழுதலும் காணப்படும்.

தலைவலி, நெற்றியில் அழுத்துவது போன்ற உணர்வும், இந்த வலியின் அழுத்தம் மேலேயும், கீழேயும் இறங்கும். கழுத்து, பின் கழுத்து, நெற்றி பகுதியில் கிழிப்பது போல் வலி. தலை நரம்புகள் கடுமையாக இழுத்துப் பிடித்து கடுமையான வலி ஏற்படும். பிடரிப் பகுதியில் இரணமாட்டம் வலி. பின் மண்டையில் எல்லாவிதமான தொல்லைகளும் இருக்கும். நடு தலையின் முன் பகுதியில் கர்ஜனை செய்வது போன்ற உணர்வு.

அதிகமான (ஒளி) வெளிச்சத்தைக் கொண்டு செய்யப்படும் சிசிச்சைக்கு, பிறகு ஏற்படும் தொல்லைகளுக்கு இது நல்ல மருந்து மற்றும் குறைவான மாதத்திலேயே பிறந்த குழந்தைகளை அதிகமான விளக்கு பொருத்தப்பட்ட. ஒளி உள்ள (இன்குலேட்டர்) கூடையில் வைத்த பிறகு ஏற்படும். தொல்லைகளுக்கு இது நல்ல மருந்து. பெண்களுக்கு அதிகமான போக்குச் சென்றதால் கர்பப்பை ஒரு மிருதுவான தன்மையை இழக்கும் போது மின் அதிரிச்சிக் கொடுப்பார்கள். (ELECTRIC BOX.) என்பார்கள். அதற்கும், மூளை சக்தியை அதிகரிக்க தலைக்கு ஷாக் கொடுத்த பிறகு ஏற்படும். அனைத்து தொல்லைகளுக்கும் இது பொருந்தும். மேலும் விளக்கம் தேவை என்றால் ; ALLEN KEY NOTES – ல் 315-ம் பக்கத்தில் பார்த்துக் கொள்ளவும். கண்ணை அதிகமாக பயன்படுத்தியப் பிறகு ஏற்படும். கண் எரிச்சலுக்கு நல்ல மருந்து.PENCILIN

- பென்சிலின்

ஓரு வகை காளான்.

60, 70 வருடங்களாக பென்சிலின் என்ற ஆங்கில மருந்தும், நம் எல்லோருடைய உடம்பிலும் இருக்குது. தற்சமயம் சிலருக்கு இந்த மருந்து சேர்வதில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்கும், பென்சிலின் ஊசி போட்டு, போட்டுதாங்க எனக்கு மற்றத் தொல்லைகள் என்ற கூறுபவர்களுக்கும் இதுவே மருந்து (பென்சிலின் என்பது ஒரு வகை காளானிலிருந்து எடுக்கப்படும் சத்துப் பொருளாகும்.) நமது ஹோமியோ முறையில் வீரியமாக கொடுத்தால் இந்த மருந்தை முறித்து விடும்.

PENIDURE

- பெனிட்யூ

இதுவும் ஆங்கில மருந்துகளில் ஒன்று. இதை ஆங்கில மருத்துவர்கள் ஆண், பெண்களுக்கு, ஏற்படக்கூடிய சீக்கு (எய்ட்ஸ்) நோய்களுக்காக பயன்படுத்துகிறார்கள். அதாவது ஆண், பெண் அவரவர் உறவுக் கொள்ளும் உறுப்புகளில் புண்களோ. கட்டிகளோ, எரிச்சலோ, இது போன்ற மோசமான நிலை ஏற்படும் அதை தான் சீக்கு (எய்ட்ஸ்) என்று கூறுவார்கள். நல்ல உடல் நிலை உள்ளவர்களுக்கும் அந்த சீக்கு நோய் ஏற்பட்டு விடும். இதை சோதனை செய்தால் ரிப்போட்டில் V.D. (VENEREAL DISEASE) சீக்கு நோய் எய்ட்ஸ் என்றுக் கூறுவார்கள். இந்த நோய்களுக்கு பென்சிலின், டெரோமைசின், டெட்ரோசைக்கிளின் போன்ற மருந்துகள் தருவார்கள். அப்படித் தந்து குணமாகாத போது தான் கடைசியாக இதை B-12 தருவார்கள். இதை அதிமாகப் பயன்படுத்தினால், மரணத்திலோ, இரத்த வாந்தியிலோ, சிறுநீரில் இரத்தமோ இது போன்று உறுப்புகள் எல்லாம் கெட்டு மரணத்தில்; விட்டு விடும். அவ்வளவு காரமான மருந்து. இந்த நிலைக்கு நமது மருத்துவ முறையில் வீரியப்படுத்திக் கொடுத்தால் அதன் பக்க விளைவுகளையும், அதன் காரத்தன்மையும், போக்கி (எய்ட்ஸ்) நோய்க்கு ஏற்ற மருந்துக்கு (THUJ, SYPH, MED, MERC.) உண்டான குறியைக் காட்டும். அதை தந்தால் எய்ட்ஸ் நோயை குணம் செய்யலாம்.

குறிப்பு:- ஹோமியோபதி தத்துவமே விஷத்திற்க விஷமே மருந்து. (SIMILIA SIMILIBUS CURENTER) என்பது தான். ஒருவர் உடம்பில் என்ன விஷம் இருக்கிறதோ, அந்த விஷத்திற்குண்டான மருந்தை கொடுத்தால் நோய் நீங்கும். இவ்வாறு தான் டாக்டர் கெண்ட் அவர்கள் ஒரு பெண்ணுக்கு அதிகமான போக்கு போய்க் கொண்டே இருந்தது தக்க குறி தெரிந்து மருந்து தந்தும் பலனில்லை. பின் அவர்களது மாதவிடாய்ப் போக்கையே வீரியப்படுத்திக் கொடுத்தால் உடனே போக்கும் நின்று விட்டது இது போன்ற பல மருந்துகளை தனது“LESSER WRITING ” என்ற நூலில் எழுதியுள்ளார்.

THYROIDIN

- தைரோடின்

செம்மறி ஆட்டுக் குட்டியின் தைராய்டு சுரபியிலிருந்து எடுக்கப்பட்டது.

இம் மருந்துக்குரியவர்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். கோபமாவே இருப்பார்கள். உடன் வருத்தமும் இருக்கும். உடனே இந்த மனநிலை மாறி ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பார்கள். பினாத்தல் இருக்கும். ஹலோபதி மருத்துவ முறையில் தைராக்சின் என தரப்படும் மருந்தின் முறிவுக்கு இது நல்ல மருந்து. திடீரென பைத்தியம், சித்த பிரம்பை பிடித்தது போல இருப்பார்கள். உடம்பும், மனமும், தைராய்டு உள்ள பகுதியிலும், பெருத்தும். உருவம் மாறி இருக்கும். இது போன்ற குறிகள் தோன்றுவதற்கு முன் மூன்று வருடமாக இந்த நோய் உள்ளே இருந்து நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே வந்து திடீரெனத் தாக்கும். அதுவும், ரொம்ப கடுமையாக தாக்காமல் லேசாக தான் விட்டு, விட்டு தாக்கும். இரவில் பயமாகவே இருக்கும். அதைப்பற்றியே சிந்தித்து கொண்டிருப்பார்கள். நோயின் போதுக் கூட எடுத்தெறிந்து பேசுவார்கள். பணிவே இருக்காது.

இது போல் தைராய்டு சுரபிகளால் ஏற்படும் நோய்களுக்கு இது நல்ல மருந்து. இது பற்றி மேலும் விளக்கம் தேவை என்றால் ALLEN KEY NOTES ல் 352 பக்கம் பார்த்துக் கொள்ளவும்.

USTILAGO

- உஸ்டிலகேர்

ரொம்ப கெட்டப் பழக்கம் உள்ளவர்கள். இதனால் உயிர் சக்தி இழந்து விடுவார்கள். அதனால் தாழ்வு மனப்பான்மை. கத்துதல். மானியில் தோலுறிதல், அதிகமான செக்ஸ் எண்ணங்களாலும், அதையே நீவிக் கொண்டும் இருப்பார்கள். அதனால் இரவில் நீவிக் கொண்டும், இருப்பார்கள். அதனால் இரவில் தூங்கும் போதும், ஓய்விலும் விந்து தானாகவே வெளியேறிவிடும். பித்துப் பிடித்து கிடப்பார்கள். மயக்கத்தினால் வெது, வெதுப்பான அறையில் படுத்துக் கிடப்பார்கள். ஏதாவது வெறுப்பு இருந்துக் கொண்டே இருக்கும். கட்டுப்பாடு இல்லாததால் உடல் இயக்கம் முழுவதும், மாயமாகஇருக்கும். அதிகமான உறுத்தல், பரபரப்பு. மூளை ரொம்ப பலஹீனமாகி விடும்.

தலைவலி, மயக்கம், பருவக் காலங்களில் மாறி, மாறி ஏற்படும். அடிக்கடி ஏராளமான தாறு, மாறான மாதவிடாய், தலை முழுவதும் நரம்பு, சம்மந்தப்பட்டத் தொல்லைகள் காணப்படும். தலையிலும், உடல் பகுதியிலும் இரத்தம் தேங்கியது போல, வெடிப்பது இது போல் பல உணர்வுகளிருக்கும். அழுத்துவது போன்ற தலைவலி. நடக்கும் போது மேலும் அதிகமாகும். உடன் பலஹீனமும் காணப்படும். இதனால் சிறுநீர் பகுதியும், கர்பப்பை பகுதியும் ரொம்ப தாக்கப்படும். நெற்றிப் பகுதியில் வலி ஏற்படும். நடந்தால் மேலும் அதிகமாகும். தலைவலியினால் தலை முடி முழுவதும், கொட்டி விடும். விரல் நகமும் வழுவில்லாமல் விழுந்திடும். நெற்றிப் பொட்டுப் பகுதியிலும், வலி ஏற்படும்.

கண் நரம்புகள் இழுத்துப்பிடிக்கும். கண்ணில் தண்ணிர் வரும். எதையும் பார்க்க முடியாது. தெறிக்கும் படியான வலி ஏற்படும். மூக்கு திடீரென பயங்கரமாக அடைத்துக் கொள்ளும். அழுத்தினால் உடனே குறைந்து விடும். முகம், மண்டைத் தோளில் எரிச்சலுடன் இழுத்துப் பிடிக்கும், படியான வலித் தோன்றும். சில நேரங்களில் பல் ஆடும். முன் வெட்டும், இரண்டு பற்களில் தொடர்ச்சியான வலி ஏற்படும். வாயில் அதிகப்படியான எச்சில் ஊறுதல், உடன் திக்கான, கசப்பான எச்சிலும் வரும். காலையில் வாயில் செம்பு வாடையில் வரும். வயிற்றியிலிருந்து சளி வரும். உடன் எரிச்சலாக வரும். பசியே எடுக்காமலும் இருக்கும். அதிகமான ஆசையும் இருக்கும். இரவில் தாகம் ஏற்படும். சாப்பிட முடியாமல் இருப்பார். பின் சாப்பிட, சாப்பிட பசி எடுத்து நிறைய சாப்பிடுவார்கள்.

புளியேப்பம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். வயிற்றில் வெட்டுவது போல வலி. மேல் வயிற்றுப் பகுதியில், விரல்களின் மூட்டுப் பகுதியில் இழுத்துப் பிடிக்கும் படியான வலி. குமட்டல் ஏற்படும். வாந்தி எடுத்தால் குறைந்து விடும். வயிற்றிலுள்ள அசுத்த இரத்தக் குழாய்களில் இருந்து வெளியாகும் இரத்த போக்கு. வயிறு ரொம்ப அசதியாகவும். காலியாகி எல்லா உறுப்பும் இல்லாத போன்ற உணர்விருக்கும், காலை பதினொறு (11) மணிக்கு இப்படியிருந்தால் SULPH.வயிறு நீண்டது போலிருக்கும். வயிற்றுப் பகுதியில் இழுத்துப் பிடிக்கும் படியான வலி. ரொம்ப சங்கடமான நிலை ஏற்படும். வயிற்றில் ஏற்படும் எரிச்சல் தோள்பட்டை வரை போகும். நெஞ்சுக்குழியில் எரிச்சல், வயிறு எரிச்சல், வலி 3 –நிமிடம் இருக்கும். மாலை ஆறு மணிக்கு அடிவயிற்றுப் பகுதியில் இடுப்பெலும்பு முழுவதிலும், வெட்டுவது போன்ற வலி, இரவு எட்டு மணிக்கு மலம் அதிக வலியுடன் வெளியேறும். அப்போது வலி மேலும் அதிகமாகும். பிறகு சில நேரம் கழித்து அடிவயிறு முழுவதும் வலி ஏற்படும். வலது ஈரல் பகுதியில் வலி ஏற்படும். இந்த வலி தொப்புள் வரை வரும். மலம் கழிந்து பிறகு தொப்புள் வலி குறையும். நடக்கும் போது இடது இடுக்கில் வலி ஏற்படும். மதியம் அடிவயிறு பகுதியைச் சுற்றிலும் வலி. அப்பகுதி வறண்டு விடும்.

மலம் லேசான கலரில் பேதியாக போகும். சிறுநீர் பையில் இழுத்துப் பிடிக்கும். அதன் நரம்புகளில் சிறுநீர் விடும் வரை கஸ்டம்.

விந்துச் சுரபிகளில் வீக்கம் ஏற்படும். கைப்பட்டவுடன், விந்து வெளியேறிவிடும. பெண்களைப் பார்த்தாலே பீச்சியடித்து விடும். அதனால் அவமானத்தால் புத்தி பேதலித்து கத்துவார்கள். ஆனால் ஏகப்பட்ட ஆசைகள் இருக்கும். கட்டுப்படுத்தவே முடியாது. சித்ரவதையினால் தன்னையே சாவடித்துக் கொள்ள நினைப்பார்கள. வேலை செய்யவே முடியாது. மானி, விதைக் கொட்டைகள் தளர்ந்துக் காணப்படும். காலை நான்கு மணிக்கு திடீரென விரைப்புத் தட்டி விந்து தானாக வெளியேறிவிடும். சிறுநீர், மலம் கழியும் போது வெளியேறினால் SELINIUM. வெள்ளைப் பாட்டிற்கு பதிலாக மஞ்சள் நிறமான நாற்றத்துடன் கழிவுகள் வெளியேறும். இது போன்ற இன்னும் பல விளக்கங்கள் ALLEN KEY NOTES – ல் 351-ம் பக்கத்தில் பார்த்துக் கொள்ளவும்.VACCININUM

- வக்சினினம்

அம்மை விஷ கிருமிகள்.

ஆலோபதியில் அம்மையின் தடுப்பு மருந்துக்காக, கிருமிகளை வளர்த்து உபயோகிக்கும் போது சிலருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுகிறது. அம்மையின் முறிவுக்காக வளர்க்கப்படும் கிருமிகளிலிருந்து வீரியப்படுத்துபவை. பெரியம்மை நோய் தோன்றி செப்டிக ஆனால் வாரியோலின், மாலண்ட்ரியம், வாக்சினம் (இது). இது மூன்றுமே அதனதன் குறிகளுக்கு ஏற்றவாறுத் தரலாம்.

அம்மை ஊசிகள் குத்தியிருந்தால், அதன் விஷம் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உடலிலே இருக்கும் என ஹானிமேன், பர்னட் போன்றவர்கள் கூறுகிறார்கள்.

இந்நோய் பற்றி Dr. ஹானிமேன் கூறுவது:-

சைக்கோஸிஸ் நரம்புகள் இரண்டும் இணைந்து தான் உடற்பகுதியில் புறப்பாடுகளாக வருகிறது. அதனாலும் குளிரும், அஜீரணமும் ஏற்படுகிறது. இதனால் தான் மலக் காற்று அதிக நாற்றத்துடனும் அதிக நேரமும் வருகிறது. இந்நோய் பற்றி Dr. கிளர்க் கூறுவது. நீண்டு, நீண்டு, இழுத்து, இழுத்து, கக்குவான் இரும்பல் இரும்புபவர்களுக்கும்,இழுப்புக்கும் இந்த தடுப்பு மருந்து தான் காரணம் என்றுக் கூறுகிறார்கள். அதற்கு இம் மருந்து தந்தால் அம்மை விசம் முறிந்து குணம் ஏற்படும்.

எதற்கெடுத்தாலும் அழும் குணம், ரொம்ப பலஹீனமானவர்களாக இருப்பார்கள். எப்போதும் நோய் பிடித்தது போன்றே இருப்பார்கள். சுறு, சுறுப்பே இல்லாமல் மந்தமாக இருப்பார்கள். தூங்கும் போதுக் கூட ஓய்விருக்காது. நரம்புத் தளர்ச்சிக் காணப்படும். நோயைப் பற்றிய சிந்தனையிலேயே எப்போதும் இருப்பார்கள். சின்னம்மை நோய் வந்திடுமோனு பயமிருக்கும்.

நெற்றிப் பகுதியில் மட்டும் வலி. இந்த வலியானது இரண்டு நரம்புகளின் மூலம் காது, உச்சந்தலை வரைச் சென்று வலிக்கும். வலது பொட்டில் தைப்பது போன்ற வலி ஏற்படும். தலை முழுவதும் கடுமையான, தாங்க முடியாத அளவு வலி.

சருமம் சூடாகவும், வறட்சியாகவும் இருக்கும். பருப்பு போன்ற கொப்பளங்கள் இருக்கும். அதில் கட்டிகள் காணப்படும். அம்மைக் கொப்பளங்கள் போலவே இருக்கும். இது போன்ற அம்மைக் கொப்பளங்கள் காண இது தான் மருந்து. ஒப்பிட்டு பார்க்கும் உறவு மருந்துகள்:- VARIYOLIN, MALAND, THUJ. (இவை எல்லாம் சக்தி வாய்ந்த மருந்துகள், மறு குறி பாய்ந்தாலும், இதையே தரலாம். வீரியம் 200க்கு மேல் தான் தரணும்.)

X-RAYகதிர் இயக்கத்தை தடுக்கும் மருந்து.

தற் காலத்தில எடுக்கப்படும் ஸ்கேன் X- RAY ரிப்போர்ட்டுகள் எக்ஸ்-ரே எடுப்பது எப்படி என்றால்:- ஒரு சிறிய குடுவைக்குள் அதிகமான ஒளியைக் (1000 ஓல்ட்டேஜ;) கொண்டு நம் உடலின் உட்புறத்தில் காணப்படும் எலும்புகள் எந்த, எந்த நிலையில் உள்ளது, என்பதை X - ரே கதிர்கள் பிக்சரை அவித்து விட்டு எந்த நிலையில் எலும்பு உள்ளது என்பதைக் காட்டும். இதன் பின் ஏற்படும் X - ரே கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இது நல்ல மருந்து.

கல்யாண விழாவில் எடுக்கக் கூடிய, போட்டோக்கள், வீடியோக்கள் போன்ற அதிகமான, மின் சாதன கதிர்களால் தாக்கப்படுபவர்களுக்கு ஏற்படும் வியாதிகளுக்கு இந்த மருந்து.

ELECTRICTAS, ELECTRICITY, X- RAY - சுAலு மூன்றும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மின் ஒளியைப் பயன்படுத்தி ஏற்படும் தொல்லைகளுக்கு இது. மின் வெப்பத்தைப் பயன்படுத்தினால் ; ELECTRICITY. மின் சத்தத்தை (மின்னல்) கேட்டு பயந்தால் ELECTRICTAS.

எழுதுவது, பேசுவது, எல்லாமே தப்பாகத் தான் இருக்கும். மாதவிலக்கு ஏராளமாகக் கொட்டும். தூங்கிக் கொண்டேயிருப்பார்கள். தலை வலித்துக் கொண்டே இருக்கும். மேலும் தலைவலி அதிகமாகிக் கொண்டே போகும். காலை நேரங்களில் மனம் மந்தமாகவே இருக்கும். எதையும் சிந்திக்க முடியாது. தலைவலி ஒரே மையத்திலேயே வந்து நிற்கும். இதயம் நின்னு, நின்னு துடிக்கும். மண்டை முழுவதும் ஏதோ நிறைந்த மாதிரி, இறுக்குவது போல, தெரிப்பது போல் வலி தொடக்கூட விட மாட்டார். (காரணம் உடலில் அதிக அளவு கரண்ட் ஒளி இருப்பதாலே) காற்றோட்டமாக தரையில் படுத்திருந்தால் சுகமாயிருக்கும் SULPH. X- RAY பற்றி மேலும் விளக்கம் தேவை என்றால் ALLEN KEY NOTES - ல் 369 –ம் பக்கத்தில் பார்த்துக் கொள்ளவும்.