MAGNESIA – CARBONICA

- மாங்கனீசா கார்போனிக்கர்

ஹானிமேனால் மாங்கனீசை சுட்ட கரி. வீரியம் செய்யப்பட்டவை.

இம் மருந்துக்குரியவர்கள் உடல் தேரவே, தேராது. தாய்க் கூறுவாள் எவ்வளவு தீனி, உணவு, கறி, டானிக் சாப்பிட்டாலும் தேரவே மாட்டிங்கிறான் என்பாள். வெளுத்த மாதிரி இருப்பார்கள். நரம்பு சுண்டி, தசை, சருமம், தளர்ந்து சோர்வுடன் இருப்பார்கள். காய்ச்சலில் போர்த்திக் கொள்ளுவார்கள் TUBER. மாதிரி. உயிர் சக்தியை இழந்த பிறகு தோன்றும் வியாதிகள் CHINA. மாதிரி. நடந்தால் சுகம் என்பார். RHUS –T மாதிரி. குனிந்தால் சுகம் என்பார். சளிக்கு பிறகு தொல்லையும், இடது புறம் தொல்லை என்பார். மாதவிலக்கிற்கு முன்பும், கர்பக்காலத்திலும் பல் வலி, கறி தின்பார்கள் CHIN. மாதிரி. பச்சை நிறத்தில் மண் மாதிரி மலம் பாதி வரும், பாதி உள்ளே போகும். களி மண் மாதிரி மலம் கழிவதும், வெறுப்பு, சந்தோஷம், கோபம் பிறகு வெறுப்பு, திண்பண்டம் திருடும் திருடன், அதாவது பணம் திருடினால் ALUM. போன்ற மருந்துகள். ஆனால் இவன் திண்பண்டத்தை மட்டும் திருடி திண்பான் உடன் M-C. பல் ஈரே கரையும். அதனால் பழம் கூட சாப்பிட முடியாது. கழிவு பொருட்கள் புளித்த நாற்றம், உடன் காரத்தன்மை பல் வேர் கெடும் THUJA.. மாதிரி. ஆனால் M-C யில் பல் ஈரே கரையும். அதனால் பழம் கூடம் சாப்பிட முடியாது. மாலையில் படுத்தால் எல்லா நோயும் சுகம். வெளியே போனால் வண்டி மோதிவிடுமோ, கெட்டது நடந்து விடுமோ என்ற பயம். எவ்வளவு நேரம் தூங்கினாலும் களைப்பே போகாது, தூங்கி எழுந்து உட்கார்ந்து கொண்டுச் சொல்வார், திரும்ப படுத்து கொள்ளலாம் என்று இருக்குது என்பார். BRY, CON, HEP, OP, SULPH. தான் அனாதை என்ற எண்ணத்தால் எர்ணியா ஏற்பட்டாலும், அனாதை விடுதியில் இருக்கும் குழந்தைகளுக்கு இம் மருந்து கொடுத்து, அவர்கள் மனநிலை எவ்வளவோ மாற்றம் அடைந்தது என்று கூறுகிறார் Dr. KENT. பல் டாக்டரிடம் போக பயம் STRAM, CALC. கால் ஜில்லிப்பும், உடம்பு சூடும். கவலைக்கு முக்கிய மருந்து. ARS – ஐ விட இது வெறுப்பு அதிகம். ஜெயிலில், அனாதை விடுதியில் கணவனை பிரிந்து, இருக்கும் போது ஏக்கமும், வெறுப்பும்.

MAGNESIA – MURIATICA

- மாங்கனீசா முரியாட்டிக்கா

மாங்கனீஸில் உள்ள உப்பு.

இவர்களுக்கு கல்லீரல் நடுங்கும் அளவுக்கு பயம் ஏற்படும். மரண பயம், நோயை பற்றியும் மரண பயம். படுத்திருக்கும் போது எதிர்;காலத்தை பற்றியும் ஏற்படும். அதை சொல்லும் போது பயத்தில் ஈரல், குலை எல்லாம் நடுங்குதுங்க என்பார். மற்றும் கல்லீரல் தொல்லையும் இருக்கும். எனக்கு ஒன்னுக்கு நின்னு, நின்னு வருதுங்க என்பார். மலக்குடலில் இவர்களுக்கு இரணம், அதனால் மலம் சீராக வராமல் ஆஸனத்தில் வந்து தங்கும். முக்கி, முக்கி, முக்கி ஒரு பெரிய உருண்டையாகி விடும். ஆஸன வாய் அடைத்துக் கொள்வதால் தன் விரல்களில் மலத்தை கிள்ளி, கிள்ளி எடுப்பார்கள். இது அவர்களுக்கு அவமானமாக இருக்கும். இதை தவிர வேறு வழி இல்லையே அவர்களுக்கு. சிறுவர்கள் என்றால் விரலை ஆஸன வாயிலே வைத்துக்கொண்டே இருப்பார்கள். தாய் கூறுவாள், பிள்ளைக்கு பசியே இல்லை. அதனால் நீண்ட நேரம் ஆனாலும் கூட ஒரு வாய் சாப்பிட மாட்டிங்குதுங்க என்று கூறுவாள். அதற்கு முக்கிய மருந்து. கடல் காற்று ஒத்துக் கொள்ளாது. நீண்ட நாள் அஜீரணத்திற்கு என்றால் M.M., திடீரென அஜீரணமென்றால் NUX -V.மாத விலக்கானது குபுக், குபுக்கெனபடுது என்பார். பேதி மிக நாற்றமுள்ள பேதி. (தான் உயர்வு என்று எண்ணும் காலத்தில் இப்படி பேதி தோன்றும்.) நன்கு யோசித்து வேலை செய்யும் போது கொழ, கொழன்னு அழுகிய முட்டை மாதிரி நாற்றம் உள்ள பேதி ஏற்படும். கல்லீரல் தொல்லையால், காமாலைக்கும், இம் மருந்து பொருந்தும். உடைந்த பல்லில் உணவு சிக்கிக் கொண்டு பல் வலிக்குதுங்க என்பார். அதற்கு இது நல்ல மருந்து. உடன் STAPH. தலைவலியின் போது வெளிக்காற்றில் இருந்தால் சுகம். நெற்றிக்கு மட்டும் காற்றுபட்டால் சுகம் ARS. இடுப்பு நரம்பு வலி. நரம்பு வலிகளைப் பற்றி கூறுவார். உடம்பு முழுக்க குளிர்க் காற்றுபட்டால் சுகம்.

MAGNESIA – PHOSPHORICA

- மாங்கனீசா பாஸ்பாரிக்கா

மாங்கனீசும், பாஸ்பரசும் கலவை.

இம் மருந்துக்குரியவர்கள், வலிகளைப் பற்றியே புகார் சொல்வார்கள். ஏகப்பட்ட வலிங்க, எல்லா வலியும் முறுக்குவது போலவும், வெட்டுவது போலவும், குத்துவது போலவும், மெல்லுவது, கடிப்பது போலவும், இப்படி பலவிதமான வலிகளை சொல்லி விட்டு, எந்த வலியாக இருந்தாலும், சூடாக (சுடுநீர்) குடித்தால் வலிக்கு நல்லாயிருதுங்க, வலி குறைகிறதுங்க என்றால் இது தான் மருந்து. ARS – யை பார்த்துக் கொள்ளனும். சூடான கைகளைக் கொண்டு அழுத்திப் பிடித்தால் சுகம் என்றால் M-P. இதே மாதிரி சூடு இல்லாத கையோ, கட்டையோ, வைத்து அழுத்தி பிடித்து சுகம் என்றால் COLOCINTH. ஒன்பது விதமான வலிக்கும் இதுவே மருந்து. வலியினால் கூச்சல் போடுவார்கள். அடிக்கடி சுடுநீர் குடித்துக்கொண்டு இருப்பதால் மந்தம், சோர்வு, அசதி, கஷ்டம் இருக்கும். ARS மாதிரி வலிக்கு சுடுநீர் சாப்பிட்டால் வலி தணிவு என்றால் இது நல்ல மருந்து. துப்பாக்கி சுட்டு குண்டு மேலே ஏற மாதிரி அவ்வளவு வலிங்க என்பார். அழுத்தினால், தணிவு, நடந்தால் கஷ்டம், இதே இடத்தில் நடந்தால் சுகம் என்றால் COLOC. மாதவிலக்கின் போது எல்லா வலியும் வந்து விடும். வலியினால் தன் நோயைப் பற்றியே பேசுவார். வேறு யார் எதை சொன்னாலும் காதில் வாங்க மாட்டார். வலியின் கொடுமை தாங்க முடியாமல், தானே பேசிக் கொண்டு போவார், வருவார். வேலை செய்த பிறகு வலிப்பு ஏற்பட்டாலும், இரவில் சிறுநீர் தானாகவே போனால், நரம்பு முறிக்கிற மாதிரி என்றாலும், வயிறு உப்பிசம் ஆகி பின்னாடி கட்டிய மாதிரி உணர்வு இருந்தால் M-P.. வேலை செய்த பின்பு நரம்பு சுளுக்கு.

MAGNESIA - SULPHRICA

- மாங்னீசா சல்ப்ரிக்கா

மாங்கனீசும், கந்தகமும் கலவை.

ஆங்கில முறையில் பேதிக்கு தரும் மருந்தை ஹோமியோபதி முறையில் வீரியப்படுத்தி தரப்படுகிறது. இம் மருந்துக்குரியவர்களுக்கு இனம் தெரியாத பயம் வரும். அதனால் தூக்கம் சிறிது கூட வராது. முன்பு பார்த்தது ஈரல், கொழை நடுங்கும் அளவு பயம். இவர்களுக்கு காரணமே தெரியாது. ஒரே குழப்பங்க என்னான்னு தெரியலைங்க என்றும், காரணமே தெரியாத பயத்துக்கும், இரவில் தூக்கம் வரலை என்பார். உடன் பயம். கேட்டால் காரணம் எதுவும் தெரியலைங்க என்பார். சிறுநீர் கழந்ததும் சிறுநீர் பாதையில் வலி, எரிச்சல், சிறுநீரில் பச்சை நிறங்களில் சிவப்பு நிற படிவுயிருக்கும். தீட்டு மாதிரி வெள்ளைபடும். அவ்வளவு அளவு, வெள்ளை மற்றும் இடைக்கால போக்கு கறுப்பும், கட்டியுமாக போகும். தங்கி, தங்கி போகும். நான்கு நாள் போகும். நிற்கும். பிறகு மீண்டும் வரும். தங்கு தீட்டுக்கு இது தான் மருந்து. வலியானது முதுகில், வந்து பந்து முட்டுவது போன்ற பொய்யான உணர்ச்சி. இதை K-C. உடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். கருப்பையில் பந்து முட்டுவது போல உணர்ச்சி ஏற்பட்டால், இது தான் மருந்து. பிரசவ காலத்தில் பந்து போன்ற, அதாவது குழந்தை வந்து முட்டினால் K-C. மற்ற காலங்களில் குழந்தை, பந்து முட்டுவது போன்ற பொய்யான உணர்வு ஏற்பட்டால் M-S. தீட்டுக்கு முன்பு அடிப்பட்ட மாதிரி வலி. ARN. மாதிரி. இதே இடத்தில் நரம்பில் வலி ஏற்பட்டால் M-M. விரல்களின் நடுவில் பூச்சி ஊறுவது போன்ற பொய்யான உணர்வு. கடல் காற்று ஒத்துக் கொள்ளாமை, நீண்ட நேரம் அஜீரணம். பல் முளைக்கும் போது அழுகிய முட்டை மாதிரி பேதி.

MAGNETIS – POLIAMBO(THE MAGNET)

- மாக்னிடிஸ் போலுசாட்டிக்ஸ் (இது காந்தம்)

பூமியின் மையப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட காந்தம்.

இவர்களது மனநிலை ஒரு நிலையிலேயே இருக்காது. உதாரணமாக காலையில் வியாபார விஷயமாக பேசியதை மற்ற நேரங்களிலும், வியாபாரிகளிடம் தன்னை பற்றியே பேசுவது போல தெரியும். உடம்பும், மனமும், பர, பரப்பாகவே இருக்கும். உடம்;பு, சூடாக இருப்பது போல் உணர்வும், குளிர்ச்சியும், முகத்தில் வியர்வையும் இருக்கும். திடீர்ன்னு கீழே விழுந்து, விடுவார். என் உடம்பு பொணத்தை புதைத்த மாதிரி பொதஞ்சி கிடக்கிறது என்று கூறுவார்கள். இந்த பரபரப்பினால் பேசும் போது சரியாக வார்த்தை கோர்வை வராமல் உளறுவார்கள். காரணம் ஞாபக மறதி தான். ஆண்கள் வேகமாக வருவதும், போவதும், வேகமாக கண்களை உருட்டி, உருட்டி பார்ப்பதும் இருக்கும். ஞாபக மறதியின் காரணமாக பேச்சும், பார்வையும் வித்தியாசமாக இருக்கும். ஞாபக மறதியின் காரணமாக பேச்சும், பார்வையும் வித்தியாசமாக இருக்கும். தபால் எழுதினால், எழுத்துகளை, வார்த்தையே விட்டு விடுவார்கள். பொருட்களை எண்ணும் போதும், படபடப்பு. தன்னுடைய வேலைகளை சுறு, சுறுப்பாக செய்வார். அதனால் ஏகப்பட்டட தவறுகள் செய்து விடுவார்கள். குறிப்பிட்ட நேரத்தில் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாமல், போய்விடும். தன்னை சுற்றி நிறைய பொருட்கள் இருப்பதாகவும், அது பறப்பதாகவும் ஒன்றுக் கூட எடுக்க முடியலை என்றுக் கூறுவார்கள். ஆண்கள் பயங்கர வேகத்தால் கோபம் ஏற்பட்டு பிறகு அவருக்கு தலை இரணம் போல் வலியும், மண்டைக்குள்ளே கிள்ளுவது போல் வலியும் இருக்கும். ஆண்களுக்கு மாலையில் படுக்கும் போது மயக்கம் ஏற்படும். திடீரென தலை உதறுவது போலவும், புட்டுகிட்டு போவது போலவும் இருக்கும். நடக்கும் போது கீழே விழுந்திடுவோமோனு எண்ணம். ஆனால் அப்ப கிரு, கிருப்பு இருக்காது. நடக்கும் போது எதிரே உள்ள பொருட்கள் வித்தியாசமாக தெரிவதால் என்னவென்று சொல்லாமல் நிலை குழம்பி விடுவார்கள். தலை முழுவதும் “உஸ்” என்ற சப்தம் கேட்கும். பின் மண்டை காந்தம் இழுப்பது போல் பின்பக்கம் இழுக்கும். இழுத்து தொடையில் கட்டி வெச்ச மாதிரி இருக்கும். கால்களையும், மார்பையும் இழுக்கும். தலை முழுவதும், போதை பொருள் (OPIUM). சாப்பிட்ட மாதிரி குழப்பமாவே இருக்கும். அப்போது ஞாபக சக்தி குறைந்து எந்த ஞாபகமும் வராது. தலைவலியின் போது மந்தமாகவும், ஜில்லுனு போர்வையில் போர்த்தி விட்டது போலவும், இருக்கும். பின் மண்டையில் ஏற்படும் வலியானது பரவி கன்னம் பகுதி வரை வந்து அதன் குழி எலும்புகளில், அழுத்தம் ஏற்படும். இந்த பாதிப்பு மூளை வரைச் சென்று இவர்களது மனமும் மந்தமாகி விடும். தலையின் உச்சியிலுள்ள நரம்புகளில் மந்தமான வலி ஏற்பட்டு உடல் முழுவதும் கீழே பரவும். முகத்தில் ஜில்லென்றக் கையைக் கொண்டு அழுத்திப் பிடிப்பார்கள். உடன் சூடாகவும், இருக்கும். சித்ரவதை செய்வது போன்ற வலி, எரிச்சல், கிள்ளுவது போன்ற உணர்வு முகத்தின் தசைகளில் ஏற்படும். மாலை நேரங்களில் ஒவ்வொரு நாளும் காலை முகத்தில் வியர்வை மகிழ்ச்சியாக இருக்கும். சமயங்களிலும், மற்ற நேரங்களிலும், கருவிழி சுத்தும். சந்தோஷம் ஏற்பட்டும் இவர்களும் சுத்துவார்கள். இவர்கள் கண் முன்பு துப்பாக்கி வெடித்து குண்டு போவது போலவும், நெருப்பு எரியிர மாதிரியும், கடிகாரத்தின் பெண்டுலம் ஆடுவது போலவும் தெரியும். இவர்களது கண் துடிப்பு, கண்ணாடி உடைவது போன்ற சப்தம் கேட்குது என்பார். மாலை நேரங்களில் இப்படி கேட்கும். கண் இமை, விழிக்கோலங்கள் பிப்பு ஏற்படும். மேல் இமை வறட்சியாகவும், கீழ் இமை தீடீர், தீடீரென வேகமாக இழுக்கும். காதுப் பகுதியில் இனிமையான விசில் சப்தம் கேட்கும். நாடித்துடிப்பு வருவதும், போவதும், நன்றாக் தெரியும் இவருக்கு காதில் “உஸ்” என்ற சப்தம் கேட்கும். கரண்ட் ஷேக் அடிப்பது போல் இருக்கும். கனமான சப்தம் காதில் கேட்கும். அது காதிலிருந்து, மூக்கிற்கும் வரும். கற்பனையாக ஒரு வாசனை தெரியும். பிறகு அந்த வாசனை தெரியும். பிறகு அந்த வாசம் இல்லை என்று கூறி, இது வேற வாசம் என்று கற்பனையாக கூறுவார்கள். ஒரு பொருள் இந்த மாதிரியான வாசனையாகத்தான் இருக்கும் என்று முன் கூட்டியே கூறுவார்கள். நெஞ்சுக்குள்ள ஏதோ துணி வைத்து அடைத்த மாதிரி அடைப்பு இருக்குது என்பார்கள். பல் மற்றும் தாடைப்பகுதியில் உலோக வாடை ஏற்படும். மற்றும் நாக்கின் ஒரு பக்கம் மட்டும் உலோக வாடையின் சுவை இருக்கும். தாடை பகுதியில் கிழிப்பது போன்ற வலியும், உதறலும் ஏற்படும். இது கண் குழி வரைப் பரவும். அந்த இடத்தில் (கண் எலும்பில்) கிழிப்பது போல, குடையற மாதிரி, கிள்ற மாதிரி இப்படி பலவிதமான வலிகளும், எரிச்சலுடனும் ஏற்படும். முக எலும்பிலும், கிழிப்பது போன்ற வலி ஏற்படும். இது குறிப்பாக மாலை நேரங்களில் பல் எல்லாம் ஆடுது என்று சொல்லுவார்கள். அப்போதும் குளிர்ச்சியான நீரையே குடிப்பார்கள். பல் வலி அதிகமாகி காது மந்தமாகி விடும். எகிரு (வீங்கி விடும்). பெருத்து விடும். பயங்கரமான வலி இருக்கும். தொடவே விடமாட்டார்கள். சொத்தைப் பற்களில் தொடர்ச்சியான வலியிருந்து கொண்டே இருக்கும். கீழ் பற்களில் வேர்களில் வலி அது ஓட்டைப் போட்டுக் கொண்டே போவது போலவும், இரணமாட்டமும் இருக்கும். அந்த வலி தாடைப்பகுதியில் ஷேக் அடிப்பது போல் இருக்கும். இது நெருப்பு மாதிரி பரவி பல் பகுதிக்கு செல்லும். எச்சில் சுரபிகள் பெருத்து அதில் வலி ஏற்படும். தினமும், காலையில் வெளிக் காற்றுப்பட்டால் இது போல ஏற்படும். தினமும் மாலையில் உதடு வீக்கம், வாயில் பயங்கர வாடை வரும். சீழ் நாற்றம் மாதிரி. சளி தொண்டையிலே அப்பிக் கொள்ளும். நாக்கில் எரிச்சல் மற்றும் வலியும் ஏற்படும். சாப்பிடும் போது அதிகமான பசி இருக்கும். முக்கியமாக மாலை நேரங்களில் இப்படி இருக்கும். ஆண்களுக்கு அதிகமான பசி இருக்கும். முக்கியமாக மாலை நேரங்களில் இப்படி இருக்கும். ஆண்களுக்கு அதிகமான பசி இருக்கும். ஆனால் சாப்பிட்டால் சுவையே தெரியாது. புகையிலை, பால், பீர் சாப்பிட விரும்பும் ஆண்களுக்கு சாப்பிட்டுக் கொண்டே இருக்கனும். எவ்வளவு சாப்பிட்டாலும் திருப்தியே இருக்காது. புகையிலை போட வெறுப்பாக இருக்கும். இருந்தாலும் விரும்புவார்கள். எதாவது கெட்ட வாடை வயிற்றிலிருந்து வந்து கொண்டே இருக்கும். ஊசிப்போன மாதிரி புளியேப்பம் வரும். தொப்புள் பகுதிக்கு மேலுள்ள வயிறு கல்லாட்டமும், உப்பிக்கிட்டும் இருக்கும். அசைவே இருக்காது. இழுத்துப் பிடித்த மாதிரியும், தெறிப்பது போல வலியும், அதிகமான மலக்காற்று பிரியும், அடி வயிற்றில் ஏதோ உருளுது, சில நேரங்களில் தெரிப்பது போன்ற வலியும் இருக்கும். பேதியின் போது பட, படனு சப்தத்துடன் மலக் காற்று வெளியேறிடும். காத்து வெடிப்பது போல் பயங்கர சப்தத்துடன் வெளியேறுவதால் ஆஸன வாயில் வலி ஏற்படும். விடியற்காலையில் வயிறு உப்பிசமாகி சீழ் நாற்றத்துடன் காற்று பிரிவதால், தூக்கத்தை கெடுத்துடுதுங்க என்பார்கள். காற்று சூடாகவும், மலக்காற்றைக் கிழித்துக் கொண்டு வெளியேறுவதால், ஒரு மயக்க நிலையே ஏற்படும். மேல், கீழ் வயிறு இழுத்து பிடித்து வலி ஏற்படும். தொப்புளைச் சுற்றி அரிப்பு, பேதியின் போது கடுமையான வயிறு வலி. மலச்சிக்கல் காரர்களின் மலக்குடல் பகுதியில், கடுமையாக இழுத்துப் பிடிக்கும். மூலத்தில் கடுமையான வலியும் ஏற்படும். மலம் கழிந்த பிறகு மேலும் அரிப்பும், இரண மாட்டம் வலியும், மலக்குடல் பிடிப்பும் இருக்கும். உட்காரும் போதும், நடக்கும் போதும் மூலம் தரையில் முட்டும். உடன் பிப்பும், எரிச்சலும், மலம் கழிந்தப் பிறகு (மயக்க நிலை பார்வை மங்கியதுப் போல) மலம் கழிவதற்கு முன்பே மூலம் வெளியேறிடும். சிறுநீர் பையில் எரிச்சல். முக்கியமாக சிறுநீர் பையின் கழுத்துப் பகுதியில் எரிச்சல் ஏற்படும். கொஞ்ச நேரத்திலே சிறுநீர் வரும்.

ஆண் உறுப்பில்:- மானியின் உள் பகுதியில் எரிச்சலும், உடனே விந்தும் பீச்சியடிக்கும். அதிகாலையிலேயே செக்ஸ் எண்ணங்கள் தோன்றி விந்து வெளியேறிவிடும். இரவிலும், விந்து பீச்சியடித்துக் கொண்டு வெளியேறும். காலையில் படுக்கையில் படுத்திருக்கும் போது பயங்கரமாக செக்ஸ் விருப்பம் ஏற்படும். அதிகமான செக்ஸ் எண்ணம் ஏற்பட்ட பின் எழுச்சியே இல்லாமல் அப்படியே இருக்கும். இதற்கு காரணம் சுரபிகள் வேலை செய்யாததே. மானி வீங்கி விடும். நகர்ந்தாலும் அந்த எண்ணம் ஏற்பட்டாலும் லேசாக வலி ஏற்படும். பிப்பும் ஏற்படும். சொறிந்தால் சித்;ரவதை செய்வது போன்ற வலி. மாதவிடாய் சிறிது வந்ததும், நிற்கும் பிறகு அடுத்த நாள் வரும். (அ) ஆரம்பித்த நாளே நின்று தொடர்ந்து பத்து நாள் போகும்.

குரல் வளையில்:- இரவில் இரும்பும் போது வலிப்பு ஏற்படும். அதனால் நடக்க முடியலை என்று கூறும் ஆண்களுக்கு இது. இரும்பலின் போது வலிப்பு வந்தது போல இழுப்பார்கள். காலை, மாலை நேரங்களில் தொண்டையில் உள்ள சளியை கணைத்து, கணைத்து எடுப்பார்கள். பயங்கரமாக இரும்பல் ஏற்படும். அதனால் சளி துப்பும் போது கடைசியாக இரத்தமும் வரும். நடு இரவிலும், நடக்கும் போதும், ஆஸ்துமா தொல்லை. அந்த நேரத்தில் தொண்டையில் சளி ஏற்படும். அதை இரும்பி, இரும்பி வெளியேற்றுவார்கள். இரும்பலினால், வலிப்பு ஏற்படும். உடன் மார்பு பகுதியில் “ஷாக்” அடிக்கிற மாதிரியும், கவலைக்கிடமான சுவாசமும் காணப்படும். மார்பில் குரக்களை பிடிப்பது போன்ற வலி. வயிறு மற்றும் குடல்களில் கிழிப்பது போன்ற வலியும், தோள்பட்டையில் அடிப்பது போல் வலியும், இருக்கும். காலையில், நகரும் போதும், நடக்கும் போதும், கழுத்து (செர்விக்கல்) பகுதியிலும், முதுகு எலும்புகளிலும், கடுமையான வலியிருக்கும். கழுத்து, சதை எல்லாம், இழுத்து பிடித்து வலி ஏற்படும். ஓய்விலும், உட்காரும் போதும், நிற்கும் போதும், கழுத்தும், முதுகும் வலிக்கும். பின் முதுகெலும்பில் எரிகிற மாதிரி இருக்கும். முதுகு தசைகளில் இழுத்துப் பிடிக்கும் ஒரு வகை வலியும், முதுகில் ஒரு சில பகுதியில் உயிர் துடிப்பது போன்ற ஒர் உணர்வும் இருக்கும். காலையில் படுத்திருக்கும் போது, இடுப்பு பட்டை எலும்பில் வலி, காலை நேரங்களில் குமிந்திருக்கும் போது, நீண்ட நேரம், இது போன்ற வலி ஏற்படுதல், முதுகின் சில பகுதியில் உதறுவது போல, ஷேக் அடிப்பது போன்ற பல வலிகள் ஏற்படுதல், மூச்சு விடும் போது அப்படியே பிடித்துக் கொள்ளுதல் இருக்கும்.

கைகளில்:- குளிர்ச்சியான பகுதியில் இருக்கும் போது, புஜங்களின் தசைகளில் கிழிப்பதுப் போல் வலியும், நடுக்கமும் இருக்கும். தோள்பட்டையின் மேல் பகுதியில் ஷேக் அடிப்பது போல் ஏற்பட்டு கை, புஜம், உடம்பு என் உடல் முழுவதும் பரவி நடுக்கம் ஏற்படும். புஜங்களின் மூட்டுகளிலும், தலையில் ஷேக் அடிப்பது போல ஏற்படும். உடன் சின்ன சுத்தியை வைத்து லேசாக அடிப்பது போலவும் இருக்கும். புஜங்களிலும், கை விரல்களிலும், பட, படவென அடித்தும் கொள்ளும். புஜத்தின் வலி முழங்கை வரை பரவி வலிக்கும். உடன் நடுக்கமும் நரம்பும் இழுத்துப் பிடிப்பும் இருக்கும். பகல் நேரங்களில் கை ஜில்லித்து விடும். ஷேக் அடிப்பது போல வலி ஏற்பட்டு மற்ற இடங்களை நோக்கி பாயும்.

கால் மிதிகளில்:- நடக்கும் போது கெண்டை மற்றும் பாதப்பகுதியில் கெண்டைப் பிடிப்பு இடுப்பிலிருந்து பாதம் வரை இழுத்துப் பிடித்து அப்பகுதியில் எரிச்சல் ஏற்படும். வலது காலில் பயங்கரமான ஷாக் அடிப்பது போல் வலி ஏற்படும். மற்றும் கால் இளைச்சு போச்சுங்க என்றும் கூறுவார்கள். வலது கழுத்து, கன்னம் வரை இந்த வலி பரவும். வலது புற கைக் கால்களில் நெருப்பாட்டமே எரிச்சலும், கணுக்கால் மூட்டுகளில் கிள்ளவது போல் வலியும், கால் ஆணி போல வலியும் இருக்கும். இவர்களுக்கு தூக்கம் ஆழ்ந்திருக்காது. கண் விழித்துக் கொண்டே இருப்பார்கள். (கோமாநிலை மாதிரி). தூங்குவார்கள். அதிகாலையிலேயே தூக்கம் விழிப்பு (அ) அதிக நேரமாகியும் தூங்குவார்கள். வெறுப்பு, பயப்படுவது போன்ற கனவுகள், தூக்கம் ஆரம்பிக்கும் போது தலைவலி, உடன் மூளை எல்லாம் இரணமாட்டம் இருக்கும். அவர்களுக்கு காம மிக்க கனவுகள் வரும். அப்போது அவரை அறியாமலேயே விந்து வெளியேறிவிடும். இவர்களது சருமத்தில், ஏதோ கடித்த மாதிரி இருக்கும். சருமத்தில் பல வகையான கட்டிகள் தோன்றும். புறப்பாடுகள் அதிகமாக ஏற்படும். கை, கால் சட்டத்திற்கு கீழ் அதிகமாக கொப்புளம் ஏற்பட்டு வலி ஏற்படும். பொதுவான குறிகள் மந்தமானவர்கள். மருத்த பகுதியில் வலி இருக்கும். இடுப்பின் மேல், கீழ், முன், பின் பகுதியில் ஷேக் அடிப்பது போல வலி. இதய துடிப்பு அதிகமாகி மூச்சு திணறல், வலிப்பு ஏற்படும். குத்து, குத்து காயம் ஏற்பட்டால், மயங்கிய நிலையில் இருப்பார்கள். அதிக (நேரம்) நாட்கள் இருக்கும் மயங்கிய நிலை.

MAGENTIS POLUSARTICUS

- மாக்னடிஸ் போலுசாட்டிக்ஸ்

பூமியின் வடதுருவ பகுதியில் எடுக்கப்பட்ட காந்தம்.

இம் மருந்துக்காரர்கள் வெளி உறுப்புகளின் கஷ்டத்தையே கூறுவார்கள். அழுவும் மன நிலை உடன் குளிர்ந்த உடம்பு மற்றும் பாதம் ரொம்ப குளிர்ந்தும் காணப்படும். மாலை நேரங்களில் துக்கமாக இருப்பார்கள். எதற்கெடுத்தாலும், அழும் ஆண்களுக்கு எதிர்மறையாகவே நினைப்பார்கள். கண் இரணம் ஆன மாதிரி ஓர் உணர்வு. வலியற்ற மனோபாவம் சில நேரங்களில் உணர்ச்சி வயப்படுபவரும், கற்பனையான மன நிலை உடையவர்கள். எப்போதும், தன்னுடைய வேலையைப் பற்றியே பேசுவார்கள். எழுதும், போதும் அடிக்கடி தப்பு தப்பாக எழுதும் ஆண்கள். இவர்கள் iதரியமான, வேகமான. திடமான மனநிலையுடையவர்கள். அமைதியான, எதையும் ஒழுங்கு படுத்தும் மனநிலை உள்ளவர்கள். கவனமற்றவர்கள் (உஷாரற்றவர்கள்) வேகமாகத்தான் இருப்பார்கள். பெண்கள் மயங்கிய நிலையிலேயே இருப்பார்கள். மயக்கமாக இருக்குது தலையை இப்படி, அப்படி கூட அசைக்க முடியலை என்பார்கள். குடிச்ச மாதிரி இருக்குதுங்க காற்றோட்டமா இருந்தா சுகங்க என்பார்கள். ஞாபக மறதி, ஆனால் உஷாராக இருக்கும் ஆண்கள். மேலே கூறிய மயக்க நிலை பெண்களுக்கும் காணப்படும். தலைவலி மூளையில் ஊமைக் காயம் போல, நைவுக்காயம் போல வலி மற்றும் முன் மண்டை நெற்றிப் பொட்டில் இது போன்ற வலி. மண்டையில் அதிக கணம் வைத்து அழுத்துவது போன்ற உணர்வு. மேலும் மண்டையில் ஒரு பகுதி வலியாகவும், ஒரு பகுதி அழுத்துவது போலவும் இருக்கும். தலைவலியின் போது நெற்றிப் பொட்டின் அடிப்பகுதியில் அழுத்தம் ஏற்படும். மதியம் முழுவதும் பயங்கரமான தலைவலி, தலையில் இரத்தம் வேகமாக பாயும், அதனால் கன்னம் பகுதி வரை இந்த இரத்த ஓட்டம் தெரியும், வலதுபுற நெற்றிப் பொட்டில் குடைவது, இழுப்பது போன்ற வலி, இது கீழ் நோக்கி வந்து கன்ன எலும்பு வரை வரும். இடது பொட்டின் மேல் பகுதியில் தொடர்ச்சியான வலி இருக்கும். தலை முழுவதும் அழுத்துவது, கிழிப்பது போல உணர்வு ஏற்பட்டு, இடது காதில் வந்து அந்த உணர்வு முடியும். கண்களை அசைத்தால் குளிர்ச்சியாக இருக்கும். சில நேரங்களில் கண்களிலிருந்து குளிர்ந்த காற்று போல வரும். கண் பிதுக்கம், உற்றுப் பார்த்தால் தெரியும். கண்களின் இரு மூலைப் பகுதிக்கு உள்ளேயும், கண் புருவத்தின் வெளிப்பகுதியிலும், கரு விழியின் ஓரப்பகுதியிலும் அரிப்பு ஏற்படும், காலையில் நடக்கும் போது, கண்ணின் இமைப்பகுதியில் வறட்சியாகவும், அதிக வலியாகவும் இருப்பது போன்ற உணர்வு. இமைப்பகுதியில் இழுத்துப் பிடிப்பது போலவும், உதறுவது போலவும் இருக்கும். அப்போது அதிகமான கண்ணீர் வரும். இமைப் பகுதியில் தினமும் காலையில் அதிகமான கண்ணீர் பெருகும். சூரிய ஒளிபட்டவுடன் அளவுக்கு அதிகமான கண்ணீர் வரும். (அதிகமான கண் தொல்லை.) தாங்க முடியாத அளவுக்கு தொல்லை. வலது கண்ணை அதிகமாக பயன்படுத்தியதால் எரியுதுங்க, அதனால் கண் சிவப்பாகி தண்ணியாட்டம் ஊத்துதுங்க (வலது கண்ணில் பலமற்ற தன்மையும் உடன் காந்த தொடர்பும் ஏற்படும். கால்மணி நேரம்.) மூன்று அல்லது நான்கு நிமிடம் கண்கள் ஜல்லித்து பலமற்று விடுதல். (கண்களில் காந்த அலைத் தொடர்பு இரண்டு நிமிடம் ஏற்படுவதால்.) கண் பார்வை (திருப்ப) அசைக்க முடியலை. உடன் கொஞ்ச, கொஞ்சமாக தண்ணீர் வந்துக் கொண்டே இருக்கும். கண் முன்னாடி ஏதோ ஓட்டை இருப்பது போல் உணர்விருக்கும். இரண்டு கண்ணிலும ஏதோ ஊறுதுங்க என்பார். கண்ணை பலமாக இழுத்து பிடிப்பது போல ஏற்பட்டு இது மேல் புறமாக கன்னம், காது, மேல் தாடை எலும்பு வரை பரவும். (கால்களில் காந்த அலை நேரடியாக படுவதால் தான்.) ஒரு காதில் அழகாக மணி அடிக்கும் சத்தம் கேட்கும், உடனே அடுத்த காதுக்கு சென்று விடும். காதில் “உஸ்” என்ற சப்தமும், இழுத்துப் பிடிக்கும் உணர்வும் ஏற்படும். ஒரு பக்கம் மட்டும் மணியோசை கேட்குது என்றும், கூறுவார்கள். ஆழமான செவிட்டுத்தன்மை, ஏதோ பஞ்சு வெச்சு அடைத்த மாதிரி இருக்கும் வலது காதில். காது சூடாக இருப்பது போல உணர்வு.

மூக்கு:- நோய் பிடித்த மூக்காகவே இருக்கும். மூக்கில் மாயமாக ஏதோ ஒரு வாடை அடிக்குது என்பார். (அறையில்) அழுகிய முட்டை வாடையும், நல்ல சுண்ணாம்பு வாடையும், தூசு வாசமும், கற்பனையாக அடிக்குது என்பார். மூக்கிலிருந்து அதிகமாக இரத்தம் வெளியேறும், மதியம் ஆக, ஆக அதிகமாகும். மற்றும் அழுத்தமும், தொடர்ச்சியான வலியும் இருக்கும் நெற்றியில். மூக்கு சூடாகி நுனி கன்னம் சிவந்து விடுதல், முகத்தில் இருக்கி பிடிக்கும். வலியானது டான்சில் போய் உட்கார்ந்து விடும். முகத்தில், கன்னத்தில் இழுத்து பிடிக்கும் படியான வலி.

பல்லும் தாடை எலும்பும் :- தொடர்ச்சியான வலியும், இழுத்துப் பிடிக்கும் வலி ஏற்பட்டு அது உச்சிக்கும், கீழேயும் செல்லும். பின் தாடை எலும்பின் மையத்தில் வந்து நிற்கும். தசை சுறுங்கி விரியும். கீழ் தாடையில் தெரிப்பது போன்ற வலி. பல்லுக்கு அடியில் தானியம் ஒட்டிக்கிட்டு இழுக்குது அப்ப வலிஇ நடந்தால்இ படுத்தால் வலி அதிகமாகுது. இந்த வலி பரவி கண்ணுக்கு போகும். எகிறு வேக்காடாகி வீங்கி விடுதல். இதனால் பல் வலி அதிகமாகுதல். வெளிக்காற்று புகையுள்ள அறையில் வலி மேலும் அதிகமாகும். பல் எவுறு வீங்கி எரிச்சல் எடுத்தல். உடன் கன்னம் சிவந்து வீங்கி விடுதல். இது திறந்த வெளிக் காற்றில் சுகமாகி, ரூமுக்குள் சென்றால் அதிகமாகிவிடுகிறது. பல்லில் தொடர்ச்சியான வலி ஏற்படுவதால் ஒரு பக்க முகம் மட்டும் வீங்கி விடுகிறது. தாடையில் தேள் கொட்டுவது போல் கிச்சு, கிச்சு செய்வது போல தெரிப்பது போல பல வலிகள் ஏற்படும். சாப்பிட்டப் பிறகும், வெது வெதுப்பான அறையில் இருந்தால் பல் வலி ரொம்ப அதிகமாகுதல். எவுறு மருத்து விடும். ஆனால் பல் வலி இருக்கும். அதாவது சூடுபட்டால் உடனே கன்னம் சிவந்து விடும். எவுறு வீங்கி இருக்கும். அப்போது நாக்கை லேசாக தொட்டாலே பயங்கரமான வலி. பல்வலி எவுறுகளில் இரணமாட்டமும், வெட்டும் படியான வலி இது. அதிகமாகி வாயின் முன் பகுதிக்கு வந்து விடும். வாயின் இடது ஓரத்தில் இரணமாட்டம் வலி. அப்பொழுது அசைந்தால் குழிப்புண் வடிவத்தில் வலி ஏற்படும். தாடை எலும்பில் ரிங்காரம் போல் வலி ஏற்பட்டு பல் வரை செல்லும். சாப்பிடும் போது இந்த வலி பல்லுக்கும் வரும். காலை நேரம் சாப்பாடு புளிச்சு போனது போல் தெரியும். இரவு உணவை பேராசையுடன் சாப்பிடுதல். பாதரஸம் போன்ற புளியேப்பம் வருதல், வயிற்றின் குழிப்பகுதியில் இழுக்கும் படியான வலி ஏற்பட்டு வலது மார்பு வரை பரவும்.

அடிவயிறு:- அடி வயிற்றுப் பகுதியின் மேல், உள் பகுதியில் உள்ள நரம்புகளில் இழுத்துப் பிடிப்பது போல வலி. தினமும் காலை நேரங்களில் இது ஓர் உணர்;ச்சி தான். இரவு உணவுக்குப் பிறகு வயிற்றில் கடுமையான வலி மற்றும் மலக்காற்று. அடி வயிற்றின் மேற் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும், கூரான பொருளால் அழுத்தம் ஏற்படுவது போல் இருத்தல். பிறகு அடிவயிற்றில் திடீரென வெடிப்பது போல இருக்கும். அசையாமல் உட்கார்ந்திருக்கும் போது (சுலபமாக) தானாகவே காற்றுப் பிரியும். தினமும் காலையிலும், நடந்த உடனேயும் வயிற்றில் கடுமையான திருகு வலியும், வயிறும் உப்பி விடும். வயிறு உப்பிசத்தின் போது அடிவயிற்றின் மேல், கீழ் பகுதியில் வலிக்கும். அடி வயிறு முழுவதும் இழுத்துப் பிடித்து பயங்கரமாக வலிக்கும். அசைந்தாலும், ஓய்வில் இருந்தாலும், வயிறு தொல்லைகளாகவே இருக்கும். வயிறு உப்பிசத்தின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க அடிவயிற்றில் சல, சலவென சப்தம் கேட்கும். இதுவும் ஓர் உணர்வு தான். இது மேலே எழும்பி வயிற்றின் குழிப்பகுதியிலிருந்து ஏப்பமாக வெளி வரும். ஓய்வாக இருக்கும் போது அடி வயிறு சுத்தும். இது நாளுக்கு நாள் அதிகரிக்கும். குடல் பிதுக்கம் அடிக்கடி பிதுங்கி பயமுறுத்தும். அப்பொழுது முக்கியமாக இரும்பிக் கொண்டிருப்பது, நடக்கும் போது அடிவயிறு புண்ணாட்டம் வலியும், வளையம் மாதிரியும் இருக்கும். அடி வயிற்றின் வெளிப்புறத்தில் துளையிடுவது போல வலி ஏற்படும். குடல் பிதுக்கமும் இருக்கும். தொடை இடுக்கிலும், தொடை சந்திலும் எர்னியா பிதுக்கமிருக்கும்.

மலம்:- மலம் கழியும் போது பெரும்பாலும், அடிவயிற்றில் இழுப்பது போல வலி இது காலை நேரங்களில் காணப்படும். மலத்தின் மீது சீதம் (சளி) தடவியது போல இருக்கும். மலக்குடலில் தேள் கொட்டுவது போலவும், கிச்சு, கிச்சு செய்வது போலவும் வலி இருக்கும். இரவு நேரம் ஆனாலே தானாக விந்து கசிந்து விடும். மார்பு பகுதியில் வறட்சியாக இருக்கும். அதனால் வறட்டு இரும்பல் ஏற்படும். முக்கியமாக இரவு நேரத்தில் வெது, வெதுப்பான படுக்கையிலிருந்து எழும் போது இப்படி ஏற்படும். படுத்திருக்கும்; போது இரும்பல் ஏற்பட்டு வலிப்புக் கூட வரும். ஆழ்ந்த தூக்கத்தில் நடு இரவில் இரும்பல், மூச்சுத் திணறல், வலிப்பு ஏற்படும். இதயப் பகுதியில் திடீரென அழுத்தம் ஏற்படும். வெளிக்காற்;றில் நடக்கும் போது மார்புப் பகுதியில் சூடான காற்றுபடுவது போன்ற உணர்வு, இது மேலே ஒன்று முன் தொண்டை வரை பரவும். அசைந்தாலே முதுகு எலும்புகளில், இழுப்பது போன்ற வலி ஏற்படும். நடு எலும்புத்தண்டில் நைவு காயம் மாதிரி வலி, அப்போது குமிந்தால் முதுகே பின்னாடி போவது போல் உள்ளது என்பார். தோள்பட்டை எலும்பில் உதறல் இருக்கும். இரண்டு தோள்பட்டை எலும்பில் தண்ணீர் மெதுவாக ஓடுவது போன்ற உணர்விருக்கும். இடுப்பு பட்டை எலும்பிலும் நைவுகாயம் மாதிரி வலிக்கும். அசைந்தாலும் ஓய்வில் இருந்தாலும் வலிக்கும், தொட்டால் வலி தெரியாது.

கைகளில்:- புஜங்களில் இழுத்துப் பிடிப்பது போன்ற வலி இது தூங்கப் போகும் வரை இருக்கும். கைகள் முழுவதும் ஜில்லிப்பு, காந்த சக்தி மாதிரி இருப்பதாக பெண்கள் கூறுவார்கள். காந்தமாட்டம் இழுக்குது என்பார்கள். முன்பக்க தோள்பட்டை, புஜங்களில் உடைப்பது போன்ற வலி, முக்கியமாக முன் புஜ எலும்பு முழுவதும் வலி ஏற்படும். வெளிக்காற்றில் நடக்கும் போது வலி தோள்பட்டையில் புண்ணாட்டம் வலி ஏற்படும். இரவில் படுக்கையில் படுத்திருக்கும் போது வலது கணுக்கால் மற்றும் கை மணிக்கட்டு எலும்புகள் கெட்டியாக இழுத்துப் பிடித்துக்;கும். சிறு விரல், கை எலும்புகளின் நடுவில், முதுகுப் பகுதியில் பிப்பு, அதிகமாக வலி மற்றும் எரிச்சல் மேலும் அந்தப் பகுதியில் லேசாக தொட்டாலும் தாங்க முடியாத அளவு வலி ஏற்படும்.

கால்கள்:- முழங்காலிருந்து கணுக்கால் மூட்டுவரை வெளிப்புறம் கிழிப்பது போலவும், அழுத்துவது போன்ற வலியும், கால்களில் பயங்கரமான அசதி நடக்கும் போது ஏற்படும். நடக்கும் போது தடை ஏற்பட்டாலும் வலிக்கும். உட்கார்ந்த பிறகும், எழுந்து நடக்கும் போதும் நரம்புகள் இழுத்துப் பிடித்துக் கொள்ளுதல், கால்களின் ஓரங்களில் நைவு காயம் போல வலிக்கும், இதற்கு முன்பு இப்படி வலியே இருந்ததில்லை. இப்ப தாங்க முடியாத அளவு வலி வருது என்பார்கள். சிறு விரலில் கூட அழுத்தம் பயங்கரமாக ஏற்படும். கெண்டை காலில், பாத எலும்பு மூட்டுகளில் பெரு விரலில், ஊசியில் குத்துவது போல் வலி. வலது பாதப் பகுதியில் இழுத்து பயங்கர வலி ஏற்படுது என்பார்கள்.

பகலில் தான் தூக்கம் வருது, இரவில் சோம்பலாகவும், நிறைய கனவுகளும் ஏற்படுகிறது என்பார்கள். பெண் கூறுவாள் பார்த்த ஆட்களே கனவில் திரும்ப, திரும்ப வருது என்பாள், முதலில் பார்த்த ஆளே அடுத்த நாளும் வாராங்க என்பாள், அதனால் ஆழ்ந்த தூக்கமில்லை என்பாள். தூங்கும் போதும், ஓய்வாக இருக்கும் போதும் உயரமாக படுத்திருப்பது போலவும், வெது, வெதுப்பாக இருப்பது போலவும் உணர்விருக்கும். காய்ச்சலின் போது உடல் முழுவதும் குளிர்ச்சியாகவும், மிகவும் ஜில்லிப்பாகவும், ஐஸ் மாதிரியும் இருக்கும். இதனால் பெண்கள் துணியை லு}சாகப் போட்டுக் கொள்வார்கள். குளிர்ச்சிக்குப் போனால் உடனே தொல்லை. இதனால் பெண்களுக்கு தண்ணி மாதிரி பேதியாகும். அழுத்தினால் சுகம். உடல் முழுவதும் குளிரால் ஆடும். வடக்கு திசையை நோக்கி இழுக்கும். ஜில்லென்ற வியர்வையும் வரும். கன்னம் சூடாகி விடும். ஆனால் உடம்புக்குள் சூடாகவே இருக்கும். வலது புறம் படுத்தால் கஷ்டம்.

சருமம்:- சருமம் இழுத்துப் பிடித்து வலி.

பொதுகுறிகள்:- பல பகுதியில் தொடர்ச்சியாக ஊசியில் தைப்பது போல வலி இருக்கும். மற்றும் பயங்கரமான வலியும், தசைக்குள் பாய்வது போன்ற வலியும், நைவுக் காயம் போல வலியும், ஒரு பக்கம் இயல்பாகவும், மற்றொரு பக்கம் சுமையாகவும் இருக்கும். உடல் முழுவதும் நடுங்கும், விசேஷமாக கால் பாதம் நடுங்கும். பாதிக்கப்பட்ட பகுதியைத் தொட்டால் காந்தத்தை தொட்டது போல் விசுக்குனு இழுக்கும். நரம்பெல்லாம் நடுங்கும், கைக் கால்களில் உதறல் ஏற்படும். அடிவயிற்றில் இழுப்பு இருக்கும். மனம் கவலையாகவும், தனிமையாகவும் இருப்பது போல இருக்கும். நரம்புகளில் பயங்கரமான பலஹீனம் இருக்கும். குளிர்ச்சியாக இருப்பது போன்ற உணர்வும், அந்த பகுதியை தொட்டால் காந்தம் இழுப்பது போல இழுக்கும். எலும்பின் வெளிப்பகுதியிலும், எலும்புக்குள்ளும் இழுத்து பிடிக்கும். காய்ச்சலின் போது சவம் மாதிரி கிடப்பது போல உணர்வு. (ஆனால் மேற்புறம் சில்லென்றும் சூடாகவும் இருக்கும்.) வெளிக்காற்றில் போகும் போது கைக் கால்களில் வலுவற்ற தன்மையாகவும், பயங்கரமான வலியாகவும், ஊமைக்காயமாட்டமும், வலியும் ஏற்படும்.

MAGNETIS POLUS ASTRALIS

- மாகனடிக் போலஸ் ஆஸ்திரேலியர்

பூமியின் தென் துருவ பகுதியின் காந்தம்.

இவர்களது மனநிலை:-

எப்போதும் சந்தோஷமாகவே இருக்க விரும்பும் மனநிலை. ஆண்களுக்கு குறைவான உயிர்சக்தியே இருக்கும். தனிமையில் இருக்க விரும்புதல், ஏதாவது ஆராய்ச்சி செய்துக் கொண்டே இருத்தல், அதிலும் கடந்த கால துன்பங்களை மணிக்கணக்கில் ஆராய்வார்கள். உடனே அவர்களை அறியாமலே அழுகை வரும். தன்னைப் பற்றி நினைக்கும் போதே சக்தியை இழந்து விடுதல், ரொம்பவும் கோழைத் தனமானவர்கள். வேலை செய்யும் போது மனம் வெறுப்பாகவே இருக்கும், இதனால் வெறுப்புடனே பேசுவார்கள். தனிமையைத் தான் விரும்புவார்கள். நண்பர்களோ, அதிக கூட்டமோ இருந்தால் பிடிக்காது. ஒரு சின்ன விஷயத்துக்காகவும், மிருகத்தனமான கோபம் வரும், நடுக்கலும் ஏற்படும். அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவார்கள். இவர்களிடம் பணிவே இருக்காது. மிருகத்தனமாகவும், இரப்பாக பேசுவதும், செயலும் இருக்கும். சுயநலவாதிகள். சின்ன தடை ஏற்பட்டாலும், விட்டுக் கொடுக்காமல் மேலே கண்டது போல கோபப்படும் ஆண்களுக்கு. எல்லாமே வேகமாக நடப்பது போல கற்பனை. கலங்கிய மனநிலை அதனால் நிலையான சிந்தனை இருக்காது. பார்க்கும் பொருள் எல்லாம் கரெக்டாக இருக்கனும். புருவத்தை தூக்கிதான் பார்ப்பார்கள். பலவகையான நிகழ்ச்சிகளை நினைத்துக் கொண்டு அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். சராயம் குடித்தது போல மயக்கம் இருக்கும். படுக்காமல் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். தலையில் இரத்தம் சூடாக பாய்வது போல இருக்கும். தலை ரொம்ப பாரமாக இருக்கும். கவ்வி பிடிச்சுகிச்சி என்பார்கள். மூளையில் ஏதோ ஒரு புழு ஊறுவது போலவும், மூளை மறுத்தது போலவும் இருக்கும். இடது மூளையில் கிழிப்பது போல வலி எரிச்சிகிட்டே குத்துது என்பார்கள். பின் மண்டைப் பகுதியில் மாறி, மாறி வலி வரும். பின் மண்டையில் பயங்கரமான வலி, ஒரு மணி நேரம் வெளிக்காற்றில் இருந்தால் குறையுது என்பார்கள். தலைப்பகுதியிலும், கண் புருவப் பகுதியிலும் உள்ள நரம்புகள் இழுத்துப் பிடிக்கும். மண்டை ஓடு முன் நெற்றியில் வறட்சியாக இருப்பது போல உணர்வு. முகத்தில் குளிர்க்காற்று பட்டு மேல் நோக்கி போகுது. (ஓய்வில் இப்படி இருக்கும்) என்பார்கள். அடிக்கடி கண்ணில் தண்ணி வரும். புருவத்தில் அதிகமான வலியும், வறட்சியும் இருக்கும். முக்கியமாக ஏதாவது ஒன்றை பார்த்தால் இப்படி ஏற்படும். அதிகமாக இந்த தொல்லைகள், பகலிலும் மாலையிலும் காணப்படும். பார்க்கும் பொருட்கள் டிம்மாக தெரியும். இரண்டு, இரண்டாக தெரியும். கண்ணுக்கு சக்தி பத்தலை என்பார்கள். அப்பொழுது கழுத்து பின் பகுதியை தொடவே முடியாது.

காது:- காதில் கிழிப்பது போல வலி ஏற்பட்டு அடுத்த காது வரை பரவும். மேலும் இந்த வலி பரவி காதினுள்ளே சென்று வலிக்கும். காதில் கர்ஜனை செய்வது போல சப்தம். இந்த கர்ஜனை மேல் நோக்கி காது வரை செல்வது போன்ற உணர்வு காது மற்றும் மூக்கில் சப்தம் கேட்கும். தினமும் காலையில் காதில் ‘உஸ்’ என்ற சப்தம் கற்பனையாக கேட்பது போன்ற உணர்விருக்கும். நெற்றி பகுதியில் கனமாக ஏதோ இருப்பது போல உணர்விருக்கும். ஆண்களுக்கு வெளி காதெல்லாம் வேக்காடு அடைந்து விடும். காதில்; நைவு தைப்பது, இறுக்குவது போல வலி. வளையம் சுத்தர மாதிரி சப்தம் கேட்கும்.

பல்:- மாலை நேரங்களில் சூடாக எது குடித்தாலும் பல் வலி ஏற்படும். மேல் தாடை கண்ணில் கிழிப்பது போல வலியும், பல் முழுவதும் மந்தமான வலியும் இருக்கும்.

நாக்கு:- நாக்கு முழுவதும் வீங்கியது போல உணர்வு.பேசும் போது வாயிலுள்ள நரம்புகள் எல்லாம் Nடாக இருக்கும். முன் தொண்டைப் பகுதியில் நெருப்பாட்டம் எரிச்சல் சூடாக இருக்கும். முன்தொண்டைப் பகுதியில் நெருப்பாட்டம் எரிச்சல். குரல் வளையில் சிறிய தூசி நெறிப்பது போலவும், சூடாக இருப்பது போல இருக்கும். பால் சாப்பிட வெறுப்பு காலையில் எழுந்தவுடன் எதையும் சாப்பிடாமல் வெறுப்பாக உட்கார்ந்து இருப்பார்கள். தினமும் காலையில் எழுந்து நடந்த பின்பு வாந்தி எடுப்பது போன்ற மனநிலை இருக்கும். முன் பக்கம் குமியும் போது குமட்டல். அதனால் வலிப்பு ஏற்படும்.

அடிவயிற்றில் காற்று சுத்திக்கிட்டே, உருண்டுகிட்டே இருக்கும். இரவில் வயிறு உப்பி அடிவயிற்றில் கடுமையாக வலிக்கும். இவர்களது மலக்காற்று நாற்றத்துடனும், நாற்றம் இல்லாமலும் மாறி, மாறி வருது, உள்ளே ஏதாவது சப்தம் கேட்டுக் கொண்டேவும், கிழிப்பது போலவும், இரணமாட்டமும் இருக்கும். அடிக்கடி காற்றுப் பிரியும் ஆனால் வலி குறையாது. நடக்கும் போது வயிறு இழுத்துப் பிடித்துக்கும். அதிகாலையில் உட்கார்ந்திருக்கும் போது மேல் வயிறுப் பகுதியில் வலி தோன்றும். மாலை நேரத்தில் வயிறு நீண்டு விடும். காற்று நிறைய பீச்சியடித்து கொண்டு வரும். அடி வயிறு வளையம் போட்ட மாதிரி பெருசா வட்டமா இருக்குது. எர்ணியா உற்பத்தி ஆகுது அசைந்தால் இரும்பல் வரும்.

அடிக்கடி மலம் கழிய ஆசை உடன் இரும்பல். ஆனால் பெண்களுக்கு அடிக்கடி மலம் வரும். ஆனால் போக விருப்பம் இருக்காது. ஆஸனவாய் மற்றும் மலக்குடலில் இறுக்கம் ஏற்படும். காத்தோடு சேர்ந்து மலமும் கொஞ்சம், கொஞ்சமாக வரும்.

சிறுநீர் :- மானி அடிக்கடி தளர்ந்;திடும். சிறுநீர் அதிகமாக தொடர்ந்து போகும். சிறுநீர் பாதையில் ஆசிட் இருப்பது போலவும், நைவு காயம் ஏற்பட்டது போலவும், சிறுநீர் விடும் போது வலி ஏற்படும். தினமும் அதிகாலையில் ஆண் உணர்ச்சி நரம்புகளில் இழுத்துப் பிடித்து வலி ஏற்படும். விதை கொட்டைகளை கையில் தாங்கி பிடிக்கணும் போலிருக்கும். விதைக்கொட்டை எல்லாம் பெருசா மாட்டுக்கு இருக்குற மாதிரி எனக்கு இருக்குதுங்க என்பார்கள், மற்றும் தொட முடியாத அளவுக்கு வலியும் இருக்குது என்பார்கள். உணர்ச்சி நரம்புகளில் எல்லாம் நடுக்கலும், நரம்புகளில் மெதுவாக இழுத்துக்கொண்டே வருவது போன்ற வலியும், விந்து நரம்புகளில் நைவு காயம் ஏற்பட்ட மாதிரி வலி இது இரவில் அதிகம் மின்னல், மின்னுவது, தெரிப்பது, இழுப்பது, இது போல விந்து நரம்புகளில் பல வித வலிகள் ஏற்படும். மானி சதையெல்லாம் விரைத்து வலி ஏற்பட்டு முதுகில் போய் நிற்க்கும். மானித்திண்டில் மானியின் அருகில் பருப்பாட்டம் சிறு சிறு கட்டிகள் அதனால் மானி இருப்பது போல உணர்வே தெரியாது. மானி எல்லாம் சிவந்து விரைப்பாக இருக்கும். வலி இருக்காது. விந்து சுரபி எல்லாம் வீங்கி விந்தே வெளி வராமல் இருக்கும். பெண் மீது விரும்பி ஈடுபடுவார். பாதியில் விருப்பம் இருக்கும் போதே விந்து வெளியேறுவதற்குள் மானி வெளியே வந்திடும். இதை மானியின் பக்க வாதம், இழுத்து கொள்வது எனலாம். மாதவிலக்கு சரியான நாட்களில் வராது அசைந்தால் வரும். ஒவ்வொரு முறை போக்கு போகும் போது அடிவயிற்றில் வெட்டுவது போல வலி. ஹானிமேன் கூறுவது இம்மருந்துக்குறியப் பெண்கள் தென் துருவத்தால் தாக்கப்படுவாள் அதனால் ஒரே மாதிரியான குறியை கூறுவாள். இவர்களின் கருப்பை அடிக்கடி பாதிக்கப்படும். வட துருவ காந்தத்தினால் மாதவிலக்கு சில நாளே இருக்கும். நான்கு மணி நேரம் இருக்கும். பின்பு நின்று விடும். தென்திசையால் தாக்கப்படும் போது லேசான சிவப்பு நிறமாகவும், தண்ணியாட்டமும் மாதவிடாய் படும். வயிற்றின் குழிப்பகுதியிலிருந்து சுவாசம் வெளி வரும். அதுவும் குட்டை, குட்டையாக தான் வெளி வரும். இருதயத்தில் அதிகமான துடிப்பு தெரியும். முதுகுப்பகுதியில் கடிப்பது போல கடுமையான வலி ஏற்படும்.

கைகளில்:- இடது புஜத்தில் ஒரு சிறு பாம்பு ஊர்ந்து செல்வது போல இருக்கும். அது கீழே இறங்கி வரும், இவர்களது கைகளில் திடீரென வலி தோன்றும். உடன் உதறலும் இருக்கும். இது கீழ் நோக்கி இறங்கும். விரல்களில் உதறலும் ஏற்படும். அப்போது தொட்டால் காந்தத்தை தொடுவது போல இருக்கும். காந்தம் மாதிரி வலியோ, உணர்வோ இருக்குதுங்க என்று நோயாளிகள் காந்தம் என்ற வார்த்தையை பயன்படுத்தினால்;; மூன்று மருந்தையும் பார்த்துக் கொள்ளனும். காந்தம் நேரடியாக படுவதால் விரல்களில் அடிப்பது போல வலி இருக்கும்.

கால்கள்் தொடைகளில் அழுத்தம் ஏற்படும் அது மிகவும் கஷ்டமாக இருக்கும். கால்களில் உள்ள தசைகள் எல்லாம் இழுத்துப் பிடித்துக் கொள்ளும். வலது புற தொடை மட்டும் ஜில்லுனு இருக்கும். தொட்டால் ஜில்லிப்பு தெரியும். அழுத்தி விட்டால் கால் வலி அதிகமாகி விடும். மூட்டு ஜாயிண்டில் கொர்க், கொர்க் என சப்தம் கேட்கும். மெதுவாக நடந்தால் கெண்டைக் காலில் பிப்பு. பெருவிரல் நகத்தில் இரணமாட்டம் வலி ஏற்படும். கால் சதை எல்லாம் தொங்கி இருக்கும். தொட்டால் வலி ( காந்தம் மாதிரியே ) கிள்ளுவது போலவும் வலி ஏற்படும். பெருவிரல் நகத்தில் செருப்பு பட்டால் ஏதே தானியம் குத்துவது போன்ற உணர்வு.

தூக்கம் :- நடு ஜாமத்தில் தூக்கம் வராததால் கோட்டு வாய் விட்டுக் கொண்டே இருப்பார்கள் சில சமயம் நடு ஜாமம் வரை தூங்காமல் கூட இருப்பார்கள். படுக்கையில் படுக்க விருப்பம் இருக்காது. படுத்தாலும் திரும்பி, திரும்பி படுப்பார்கள். நெருப்பு எறிகிற மாதிரி கனவே வரும், சண்டைப் போடுவது போல, திருடர்கள் ஒருவரை ஒருவர் வெட்டி கொள்வது போலவும் கனவுகள் வரும். இதயத் துடிப்பு மார்பு[ப் பகுதியிலே நன்றாகத் தெரியும்.

காய்ச்சல் ் மாலை நேரங்களில் கழுத்தைச் சுற்றிலும் ஜில்லிப்பு. ஜில்லிப்பான அறையில் இருக்கும் போது கெண்டையிலிருந்து மூட்டுக்கு Nடு பரவி வரும். மேலும் பரவி தலையில் போய் முடியும். ஆனால் இவர்கள் எண்ணமோ உடல் முழுவதும் குளிர்ந்தது போல இருக்கும். தாகமே இருக்காது. சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து குளிர் வரும். உடல் முழுவதும் குளிர்ந்தது போல இருக்கும். தாகமே இருக்காது. சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து குளிர் வரும். உடல் முழுவதும் குளிர்ச்சியாக இருப்பது போன்ற உணர்விருக்கும். ஆனால் நாம் தொட்டுப் பார்த்தால் Nடாக இருக்கும். குளிர்ச்சியில் இருக்கும் போது கூட உடம்பு சூடு அப்பக்கூட போர்த்தியே படுப்பார்கள், வியர்வையும் இருக்கும். வாய் ரொம்ப வறட்சியாக இருக்கும். வறட்சியை இவர்களும் விரும்புவார்கள். தண்ணித் தாகம் இருக்காது. நுரையீரல் பகுதியில் நடுக்கல் ஏற்படும். காதினுள், கோழி முடி உறுத்துவது போன்ற உணர்விருக்கும். முக்கியமாக முதுகுப் பகுதியில் சூடாக இருக்குதுணு சொல்வார்கள்.

உடலின் குறிப்பிட்ட பகுதியில், முதுகுப் பகுதியில் அரிப்பு மாலை நேரங்களில் ஏற்படும். மாலையில் படுத்திருக்கும் போது அரிப்பு, தேள் கொட்டுவது போல, கிழிப்பது போல வலி இருக்கும், அதனால் அங்கேயும், இங்கேயும் அலைவார்கள். கைக் கால்;களில் நைவு காயம் ஏற்பட்டது போல வலி, கல்லின் மேலே படுத்திருப்பது போன்ற உணர்வு. மூட்டுகளெல்லாம் இழுத்து பிடித்துக்கும். உடம்பு முழுவதும் மின்னல் மின்னுவது போல் மின்னும். உடம்பு கனமாகவும், சோர்வாகவும் இருக்கும். பக்கவாதம் வந்திடுமோனு கவலை முகம், உடம்பு எல்லாம் சூடாகி விடும். உடன் உடம்பு முழுவதும் உதறும். குளிர் மாதிரி.

MALANDRINUM

- மாலான்டியம்

கிரேக்க நாட்டின் குதிரையிலிருந்து எடுக்கப்பட்டவை.

மனநிலை குழப்பமாகவும், களைப்பாக இருக்கும். மூளை பலஹீனம் என்பார். மனசுக்கு வேலை அதிகமாக இருந்தால், படபடப்பு, மனதை ஒரு நிலை படுத்த முடியலை என்பார்கள். புதிய வேலையை செய்ய முடியாது. எனக்கு தெரியாது என்று கூறிவிடுவார்கள். தினமும் செய்ய முடியாது, எனக்கு தெரியாது என்று கூறிவிடுவார்கள். தினமும் செய்யக்கூடிய சாதாரண வேலையை கூட செய்ய முடியலை என்பார்கள். பல விதமான பலஹுனம் இருக்குதுனு சொல்வார்கள். ஞாபகமே வைத்துக் கொள்ள முடியாது, மூளை ரொம்ப பலஹுனமுடையவர்கள். இதனால் எதைப் படித்தாலும் வேற மாதிரியாக தெரியும். இடது புறத்திலிருந்து, வலது புறத்திற்கு சுளிர், சுளிர் என வலி பரவும், இதனால் குழப்பமாயிடுது ஒண்ணுமே முடியலை, மனக் கஷ்டம் ஏற்படுது, களைப்புத் தட்டிப் போயிடுது. யோசனை செய்ய முடியலை எண்ணம் அலைபாயுது, மூளை செத்த மாதிரி இருக்குது அதனால் யோசிக்க முடியலை என்று இவ்வளவு கஷ்டத்தையும் கூறுவார்கள். பித்துப் பிடித்த மாதிரி களப்பை பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள்.

தலை் தலையில் கொப்பளங்கள் தொப்பி போட்டது போல ஏற்பட்டு வெடித்து, வெடித்து வரும். இந்த தொல்லையின் போது காலையில் எழும் போது தலை உருண்டையாட்டமும், அரிசி போல ஆவது போல் உணர்விருக்கும். தலையில் நிறைய பொடுகு வரும். நான்கு வாரத்துக்கு ஒரு முறை தலையில் சீழ் கொப்பளம் வரும். கழுத்தைச் சுற்றியிலும் குருணை, குருணையாக இருக்கும் அது கழுத்தைச் சுற்றியிலும் பரவி காது வரை வரும். புண்ணில் ஏற்படும் பொருக்கல் (பொக்கு) கெட்டியாக நீல நிறமாகவும், வெள்ளையாகவும், சிவப்பாகவும், செதில், செதிலாகவும்;, உரியும், உடன் பிப்பும் இருக்கும். இது மாலை நேரங்களில் காணப்படும். பொருக்கல் காதைச் சுற்றிலும் வெள்ளை, சிவப்பு நிறங்களில் உறியும். முதுகு யோனிப் பகுதியிலும் பொருக்கல் வரும். முன், பின் தலைகளில் வலி ஏற்படும். பலவகையான வலிகளும், ஜில்லிப்பும் இருக்கும். சாப்பிடும் போது பித்த வாந்தி உடன் முன் தலை வலி, களைப்பும் இருக்கும். நடு மண்டையில் புரு, புருனு ஊருவது போல இருக்கும், இது முதுகு வரை பரவும். எலும்பில் பயங்கரமான வலி இருக்கும். உடன் ஜில்லிப்பு, பித்த வாந்தி இருக்கும். பேதியின் நிறையத் தொல்லைகள் ஏற்படும். தலை ரொம்ப பாரமாக இருக்கும். தலைவலியும், முதுகு வலியும், கழுத்து நரம்பு பிடிப்பு, பசியே இருக்காது. மலச்சிக்கல், ரொம்ப அசதியும் இருக்கும். இந்த தொல்லை எல்லாம் அம்மை தடுப்பூசி போட்ட பிறகு தான் என்பார்கள். நெற்றியில் புறப்பாடுகள் தோன்றும். உடன் அரிப்பிருக்கும். முகத்தில் நிறைய படைகள் தோன்றும். அதிக கொப்பளம் ஏற்பட்டு அதனின் உள் பகுதியில் அரிப்பு ஏற்படும். அதிலிருந்து பிசின் மாதிரி, தேன் மாதிரி மஞ்சள் நிறமாக வரும். மேல் உதட்டிலும் மஞ்சள் நிறத்தில் தேன் மாதிரி வரும்.

காதில் பச்சையில் கலந்த மஞ்சள் நிறத்தில் சீழ் வெளியேறும். மேலும் இரத்தமும் கலந்து வரும். நாக்கின் மேல் மஞ்சள் நிற படிவு காணப்படும். ஆதலால் நடுவில் சிவப்பு நிறத்தில் கோடு கிழித்தது போல இருக்கும். மேலும் நடு நாக்கில் பெரிய பிளவை இருக்கும். வீங்கியும் இருக்கும். மூச்சுக் காற்றில் வாடை அடிக்கும். இடது புற நாக்கின் ஓரத்தில் அழுகியப் புண் போல் இருக்கும். (CANKER எனப்படும் சிபிலிஸ் நோயினால்) இதனால் நாக்கு முழுவதும் புண்ணாகி இரணமாட்டமும் இருக்கும் பேச முடியாது. இதனால் முட்டாள் ஆகிவிடுவார்கள். இந்த குறிகளுக்கு MALANDRINUM 30 1 வேளை கொடுத்தால் புண்ணு குணமாகி, முட்டாள் தனமும் குணமாகி விடும் என்று H.S. TAYLOR கூறுகிறார். தொண்டையின் இடது புறம் இரணமாகவும் வீங்கியும் காணப்படும். இடது டான்சில் வீங்கி இருக்கும். மஞ்சள் நிறமான குழிப்புண் உடன் வெட்டி விட்டது நன்றாக தெரியும். பல நாட்கள் ஆனாலும், இந்த புண்கள் இருக்கும். இருக்கிப் பிடிப்பது போல, தானியம் உறுத்துவது போல், வறட்சியாக இருப்பது போல் பல உணர்வுகளிலிருக்கும். எச்சிலைத் துப்பிக் கொண்டேயிருப்பார்கள். இதனால் பைத்தியம் மாதிரி ஆகிவிடுவார்கள். தொண்டை வீங்கியிருக்கும். ஆனால் வலியிருக்காது. இடதுபுற டான்சில் பெருத்து வேக்காடு அடைந்திருக்கும். தொண்டையில் எந்த நோய்குறிகளோ, வலியோ ஏற்பட்டால் அது இடது புறம் ஆரம்பித்து, கடைசியில் வலது புறத்தில் முடியும். தொண்டை அல்சர் புண் மாதிரியும், இரணமாட்டமும் இருக்கும். இது மேலும் பரவி குரல் வளை வரை செல்லும். தாகமே இருக்காது. தண்ணிக் குடித்தால் குமட்டல் ஏற்படும்.

எவுறு வீங்கி அதில் அல்சர் புண் காணப்படும். பற்களின் பதிவுகள் காணப்படும். தொட்டாலோ, பிரஸ்பட்டாலோ உடனே இரத்தம் வெளியேறும். ரொம்ப திக்காக மரக்கலரில் தசைகளுடன் இரத்தமும், சீழும் வெளியேறும். இது அல்சர் எற்பட்ட எவுரில் இருந்து வரும். பற்களில் ஊத்தையிருக்கும்.

சாப்பிட்டப் பிறகு குமட்டல், பித்த வாந்தி வரும். வெறும் வயிற்றில் மயக்கம் எற்படும். வயிற்றில் இருக்கக்கூடிய எல்லா உறுப்பும் எங்கியோ போனது போன்ற உணர்வு. நடுக்கல் இருக்கும். சாப்பிட்டால் குறைவு. சாப்பிட்டுக் கொண்டே இருக்கவும் விரும்புவார்கள். தொப்புளைச் சுற்றிலும் வலி ஏற்படும். பேதி இரத்தமாக, மஞ்சள் நிறமாக, சளியாட்டம், லேசாக சீதம் கலந்த மாதிரியும் பேதி ஏற்படும். ரொம்ப மாறி, மாறி வரும். அதுவும் காலை நேரங்களில் ரொம்ப அதிகமான தொல்லைக் காணப்படும். பேதி காரமாகவும் வரும். குழந்தைகளாக இருந்தால் கத்தும், தூங்காமல் இருபத்து நான்கு மணி நேரமும் தூக்கி வைத்துக் கொள்ளச் சொல்லும் குழந்தைகள், மலம் கருப்பாகவும், லேசாகவும், செத்துப் போன பொணம் மாதிரி பொண நாற்றம் அடிக்கும். காரமாக, மஞ்சள் நிறமாகவும், மிகவும் உணர்ச்சி வயப்படக்கூடிய அளவுக்கு பேதி வரும், அப்போது ஆஸன வாயும், மலக்குடலும் நெருப்பாட்டம் எரியும். கருப்பான மரக்கலரிலும், அழுக்கான, நாற்றத்துடன் அடிக்கடி ஏற்படும் பேதி, அப்போது அடிவயிற்றில் வலி வரும். பேதி மரக் கலரில் வந்தால் வயிறு வலி இருக்காது. கருப்பு நிறமாக, அழுக்கு பிடித்த, வாடையில் ஏற்படும் பேதி. உடன் குமட்டல், சோம்பேறித்தனமும் ஏற்படும். கருப்பான அழுக்கு நாற்றமுடைய பேதி உடன் உடலில் ஏற்படும். அழுகைக்கும், அதிகமான களைப்பும் இருக்கும். குடல்களின் இயலாமையால் மலம் கழிய விருப்பம் இருக்காது. எனிமா கொடுத்தப் பிறகு மலம் வெளியேறும். அப்போது மலக்குடலில் இரணமாட்டமும், நைவுக் காயம் மாதிரியும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மலக்குடலில் இந்த உணர்வு ஏற்படும். இதனால் மலம் கழிய பயம் ஏற்படும்.

நடக்கும் போது சிறுநீர்ப் பையில் அளவுக்கு அதிகமான உணர்ச்சி ஏற்படும். பித்தப் பையில் உறுத்தல் ஏற்பட்டவுடன் சிறுநீர் கழிய ஓடுவார்கள். எப்போதும் மானியை கையில் பிடித்திருக்கும் குழந்தைகள்.

பெண்களின் பிறப்புறுப்பின் உதடுகளில் முரடு தட்டி வீங்கி யோனியையே மூடிக் கொள்ளும். பொருக்கல், மஞ்சள், இளஞ்சிவப்பு, கருப்பு, மரக்கலரில் பல நிறமாக உதிறும்.

முதுகு :- முதுகின் உட்புறங்களில் வலி ஏற்படும். வலியானது அடிப்பது போல இருக்கும். சேக்ரலின் உட்புறப் பகுதியில் வலி ஏற்படும். இடுப்பு பட்டை எலும்பு, தோள்பட்டை எலும்பின் கீழ் பகுதியில் வலி இருக்கும். அதுவும் இடது புறத்தில் தான் அதிக வலி வரும். (இந்த தொல்லைக்கு Dr. B. அவர்கள் 200 1 வேளை கொடுத்தால் போதும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.)

கைகளில்:- உள்ளங்கை மற்றும் விரல்களில் அழுத்தம் ஏற்படும். புஜங்களின் முன் பகுதிகளில் உள்ள கெட்டிப் பகுதியில் கொப்பளங்கள் ஏற்படும்.

கால்கள் :- இரண்டுத் தொடைகளும் பூ இதழ்கள் உறையர மாதிரி இருக்குது. கால் மூட்டுள் பெருத்து விடுதல், கணுக்காலில் அசதி, ஒரு அடிக்கூட எடுத்து வைக்க முடியாத அளவுக்கு பாரமாகி விடுதல். பாதத்தில் அதிகமான வியர்வை வரும். அழுகிற பொணம் மாதிரி நாற்றம் வரும். நடக்கும் போது பாதத்தின் மேல் பகுதி எலும்புகளில் இரணமாட்டம் வலி. உள்ளங்காலில் நிறைய வியர்வை வரும். தோலும், உரியும், நெருப்பாட்டமிருக்கும். பாதத்தில் ஏற்படும் காக்கா கொப்பளங்களுக்கு இது நல்ல மருந்து. செருப்புக் கூட போட முடியாது. கொஞ்ச தூரம் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. பாதத்தில் ஆழமான புண் எற்பட்டு நெருப்பாட்டம், இரணமாட்டம் வலி அதன் மீது பச்சத்தண்ணீர் ஊற்றினால் சுகம். எல்லா மூட்டுகளும், இரணமாகி விடும். எல்லா விரல்களிலும், கைகளிலும், கால் பாதங்களிலும் இரணமாட்டம் வலி ஏற்பட்டு அந்த உறுப்புகளைச் சுற்றி பரவும்.

தோல்:- முகம், மண்டைத் தோல்களில் கரப்பான் படை ஏற்படும். அதில் எரிச்சல், கொட்டுவது போன்ற வலி, அரிப்பு எற்படும். புஜப்பகுதிகளில் புறப்பாடுகள் தோன்றும். அம்மைத் தடுப்பு மருந்து கொடுத்தப் பின்பு சருமத்தில் வறட்சி, சொர, சொரப்பு மற்றும் அழகற்ற (தோல்கள்) சருமம் வருடக் கணக்கில் இருக்கும். இந்த குறிக்கு இது நல்ல மருந்து. வறட்சியான, சொர, சொரப்பான உள்ளங்காலில் கெட்டித் தன்மையும், குளிர்ச்சியில் தொல்லை அதிகமாகும். ஏதாவது சோப்பு போட்டு (கை, கால்களை ) கழுவினாலும், தொல்லை ஏற்படும். எண்ணெய் வடியும் சருமம், சருமத்தில் தோன்றும் புறப்பாடுகள் மற்றும் தலைமுடி எண்ணெய் பசையுடன் காணப்படும். கொப்பளங்கள் கொஞ்சம், கொஞ்சமாக வரும். ஆனால் விரைவில் (ஆறவே ஆறாது.) குணமாகாது. அப்படி குணமானாலும், வேறு புண்கள் ஏற்பட்டு விடும். கை, புஜம் மற்றும் கால் மூட்டில் புறப்பாடுகள் தோன்றும். சொறிந்தால் அதிலிருந்து சிவப்பு நிறங்களில் பொருக்கல் வரும். வெது, வெதுப்பு பட்டால் பிப்பு அதிகமாகும்.

தூக்கத்தில் ஓய்வற்று அப்படி இப்படி என பெரண்டு, பெரண்டு படுப்பார்கள். சண்டைப் போடுவது போல் கனவுகள் வருவதால் தொல்லையாக இருக்கும். அம்மைத் தடுப்பூசி போட்டப் பிறகு தான் அதிக கெடுதியான தொல்லைகள் ஏற்படும். ஆனால் அம்மைத் தடுப்பூசி போட்டுக் கொண்டேயிருந்தால் நல்லாயிருக்கும். பல வகையான சரும நோயாளிகளுக்கு இது பயன்படும். அம்மைத் தடுப்பூசிக்குப் பிறகு ஏற்படும் தொல்லைகளுக்கும் இது நல்ல மருந்து. உடம்பின் கீழ் பகுதியில் பாதி பகுதி கெட்டுவிடும். அதில் சீழ் கொப்பளங்கள் வந்து வெடித்து பரவி அதிலிருந்து மீண்டும் கொப்புளம் வரும். குறைந்த அளவு நாடித்துடிப்பு. ஏதாவது சரும நோய் தோன்றிக் கொண்டேதான் இருக்கும் என்று பர்னட் அவர்கள் கூறுகிறார். பெரியம்மை, சின்னம்மை என அம்மைகள் அடிக்கடி தோன்றினால் கூட இது மாதிரி சருமத் தொல்லைகள் ஏற்படும். அப்போது கூட இது மாதிரி சருமத்த தொல்லைகள் ஏற்படும். அப்போது உடம்பு ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கும் என (கிளர்க்) CLARK கூறுகிறார். கரப்பான் படையில் இருந்து சீழ் வடியுது, அதில் எரிச்சல் உட்புறமாக ஏற்படுவதும், அதிகமான வாடையும் அடிக்கும். இரவில் குளிக்கும் போது பொருக்கல் அதிகமாக வரும். குளிர்காற்றுப் பட்டால் சுகமாக இருக்கும் என்று THOMPSON கூறுகிறார். மற்றும் தலை, முதுகுப் பகுதியில் புறப்பாடுகள் தோன்றி அது பெட்டெக்ஸ் வரைப் பரவும். மேலும் யோனி வரை கூட பரவும். பரவி யோனி உதடுகளில் புறப்பாடு ஏற்பட்டு அதிக தொல்லைகளை ஏற்படுத்தும். புறப்பாடு கை வரை கூட பரவும். கம்பு அளவு சிறு, சிறு (அக்கி) கொப்பளங்கள் வரும். இதை குணப்படுத்த முடியலைங்க ரொம்ப நாளாக அப்படியே இருக்குது என்பார்கள். அம்மையின் அழுக்குதான் இதற்கு காரணம். அது சிறிய அளவு இருந்தால் கூட தொல்லைகளைத் தரும். கால் பகுதியில் சிவப்பு நிறமாக காட்டும். காட்டாமல் உட்புறத்தில் இருந்துக் கொண்டுக் கூட தீங்கு செய்யலாம். எனவே பெரியம்மை ஏற்பட்டிருந்தாலோ, அதுக்கு ஊசி போட்டு அமுக்கியிருந்தால் அதன் பிறகு ஏற்படும் அனைத்து தொல்லைகளுக்கும் இதுவே மருந்து.

MALARIA – OFFICINALIS

- மலேரியா ஆப்சினல்

ரொம்ப முட்டாள் தனமானவர்கள். தூங்கிக் கொண்டே இருப்பார்கள். மனநிலைமையும் உற்சாகமில்லாமல் மந்தமாகவே இருக்கும். தலையின் மீது ஏதோ மோதுவது போலவும், மோதியவுடன் தலை வெடிப்பது போலவும், இருக்கும். தன்னை சுற்றியுள்ள பொருள்கள், சுத்துவது போன்ற உணர்வும் இருக்கும், (தலை சுற்றல் (அ) மயக்கம்) தூங்கும் போது கிரு, கிருப்பு ஏற்படும். படுக்கையிலிருந்து எழுந்து நடக்கும் போது தலைச் சுற்றல் ஏற்பட்டு அதே இடத்தில் விழுந்து விடுவார்கள். முன் தலை நெற்றில் பொட்டுப் பகுதியில் மந்தமான, தொடர்ச்சியான வலி இருக்கும். திடீர், திடீரென, அடிக்கடி தலைவலி வரும். முக்கியமாக நெற்றியில் இப்படி ஏற்படும். தலை முழுவதும் பட, படவென அடித்துக் கொண்டு வலி ஏற்படும். மயக்கமும் அப்போது குழப்பம் ஏற்படுவது போல் உணர்விருக்கும். நெற்றியில் தலை வலி ஆரம்பித்து தலை முழுவதும் பரவி வலிக்கும்.

கண்:- கண்களில் தெரிக்கும் படியான (தொடர்ச்சியான) வலி ஏற்பட்டு அது வலது கண்ணுக்குள் சென்று வலிக்கும். கண் பாரமாகவும், தூக்கமான நிலையில் இருப்பது போல உணர்விருக்கும். கண் பலஹீனமாவும், பார்வை மங்கலாகவும், இருக்கும். படிப்பதை எல்லாம் வித்தியாசமாகத் தெரியும். கண்ணில் நெருப்பாட்டமும், நிலக்கரி எரிவது போல் எரியும். வலது புற காதின் வெளிப்புறத்தில் இழுத்துப் பிடிப்பது போல் வலி.

மூக்கின் வேர்ப்பகுதியில் அதிக மனத்தாக்கல் ஏற்படும். வலியினால், அதிகமான காய்ச்சலின் போது குளிரை விரும்புவார். மூக்கு மற்றும் அதன் மேல் பகுதியில் அளவுக்கு அதிகமான வலி இருப்பது போன்ற உணர்வு.

வலது கன்னம், கன்ன எலும்புகளில் அரிப்பு. மற்றும் முகம் கை, கால் எலும்புகளிலும் அரிப்பு ஏற்படுதல்) அப்போது அந்தப் பகுதியை லேசாக பட்டு, பட்டென, அடித்தாலும், சொறிந்துக்கொண்டாலும், சுகமாக இருக்கும். முகம் முழுவதும் லேசான சூடு பீரிட்டு பாயும். மேலும் அது உடல் முழுவதும் பரவும்.

பற்கள்:- இடது மேல் பற்களில் வலி. நாக்கின் மேல் புறத்தில் அங்கங்க என புள்ளியாட்டமும் இருக்கும். அதில் மிளகு சுவைத் தெரியும். அளவுக்கு அதிகமான எச்சில் வரும். நாக்கு வீங்கியிருக்கும். நாக்கின் மேலே, லேசாக மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் ஏதோ தடவியது போல இருக்கும். (கசப்பு சுவை, வாய் வறட்சி மற்றும் நாக்கு வெள்ளை நிறமாக இருக்கும்.) நாக்கு வெள்ளையாகவும் அதன் நடுவில் மரக்கலரில் வெட்டும் காணப்படும். நாக்கு வெள்ளை நிறமாகவும், தடிப்பாகவும் இருக்கும். வாய் ரொம்ப வறட்சியாக இருப்பது போல் அவர்களுக்கு தெரியும். ஆனால் உண்மையில் வாயில் ஈரம் இருக்கும். குளிர்ச்சியான பானம் சாப்பிட விருப்பம். வேறு எதையும் சாப்பிட முடியாது. மீறி சாப்பிட்டால் வாந்தி வரும். புளிப்பான வாந்தியும், ஏற்படும். தாகம் அப்பொழுது குளிர்ச்சியான நீரை சாப்பிட பேராவல். பசியே எடுக்காது. சாப்பாட்டின் மீது வெறுப்பு, உடல் நலம் குன்றி காணப்படுவார்கள். அதிகமான தண்ணீர் சாப்பிட விரும்புவார்கள். பிறகு மனநிலை மாறி உருளைக் கிழங்கு, ஆப்பிள், மாட்டு இறைச்சியை விரும்பி, சாப்பிடுவார்கள். கசப்பான கெட்ட சுவை வாயில் தெரியும். உடன் குமட்டலும் இருக்கும். நாக்கின் வேர்களில் வறட்சி, அழுக்கு பிடித்தது போல இருக்கும். நாக்கின் உள் வளைவுகளில் இருக்கி பிடித்தது போல இருக்கும்.

பெரும்பாலும் இரவில் பசி எடுக்காது. சாப்பாடு வேகும் நாற்றம் பிடிக்காது. ஆனால் விழாக்களில் சாப்பிட விருப்பமிருக்கும். விழாக்களில் (DINNER) ரில் சாப்பிட்டால் உடல் நிலை சுகமாக இருக்கும். அடிக்கடி எதுக்களித்தல், ஏற்படும். இதனால் அதிக தொல்லையாக இருக்கும். ஆனால் சுவை எதுவும் தெரியாது. குமட்டல், சளி போன்ற பொருள்கள் வாய்க்கு வந்து, வந்து போகும்.

அடி வயிறு சூடாக இருப்பது போன்ற உணர்வு, அடிவயிற்று வலியிலிருந்து மீளவே முடியாத அளவுக்கு வலி இருந்துகிட்டே இருக்கும். கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகங்களில் தொல்லைகள் ஏற்படும். (மூச்சு விடும் போது கல்லீரல் வலி ஏற்படாது. படுத்தால் வலி அதிகமாகும். அதிக அழுத்தம் கொடுத்தால் நல்லாயிருக்கும்.) (கல்லீரலில் கிச்சு, கிச்சு செய்வதுப் போல் இழுத்து பிடிப்பது போல வலி இருக்கும்.) (கல்லீரல், தோள்பட்டையில் அடிப்பகுதியில் இழுத்துப்பிடிப்பது போல் வலி.) (அடிவயிற்றில் மீள முடியாத அளவு வலியும், பாரமும், மலச்சிக்கலும் இருக்கும்.) வலியுடன் பேதி கழிவார்கள். குடல்கள் பலஹீனமாகிவிடும். கல்லீரல் பகுதியில் இருந்துக் கொண்டே இருக்கும். சிறுநீர், கழிந்தப் பிறகு வலி நின்று விடும். வலது தோள்பட்டையின் கீழ்ப் பகுதியில் தொடர்ச்சியான, தெறிப்பது போன்ற வலி. கல்லீரலில் பகுதியில் இழுத்து பிடிப்பதுடன் இரணமாட்டம் இருப்பது போன்ற உணர்வு. அழுத்தினாலோ, அழுத்தி கீழே படுத்தாலோ வலி அதிகமாகி விடும்.

காலை நேரங்களில் பேதி ஆகுதல், மலம் லேசாகவும், மஞ்சள் நிறமாகவும், அழுக்காகவும் வெளியேறும்.

லேசான சுவாசம், நாம் பார்த்தாலே தெரியும், சோர்ந்து போய் காணப்படுவார்கள். ஆனால் ஆழ்ந்து சுவாசிக்க விரும்புவார்கள். மலேரியா, காச நோய் ஏற்பட காரணமாக இருக்கும், இடங்களில் இவர்கள் இருப்பார்கள்;. அதனால் தான் இந்தத் தொல்லைகள் ஏற்படுது. மலேரியா நோய் விரைவில் ஒட்டிக் கொள்ளக்கூடிய தேகவாகு உள்ளவர்களாக இருப்பார்கள். மார்பு, அடிவயிறு களைப்பாக இருப்பது போன்ற உணர்வு. அரை நிமிடத்திற்கு ஒரு முறை இரும்பல் ஏற்படும். படுக்கையில் உட்கார்ந்துக் கொண்டு பேசும் போதும், திரும்பினாலும், இரும்பல் மேலும் அதிகமாகும். வெடி, வெடிப்பது போன்ற இரும்பல் சப்தம் பேசும் போது ஆழ்ந்த சுவாசம் வரும். நரம்பு துடிப்பும் தெரியும்.

கழுத்து பலஹீனம் ஆனது போன்ற உணர்வு. அசைவு ஏற்பட்டால் தலையின் மேற்பகுதியில் தொடர்ச்சியான வலி ஏற்படும். (LUMBAR). கீழ் முதுகுப் பகுதியில் பலஹீனமும் தெரிக்கும் படியான வலியும் இருக்கும். (கை, கால் மூட்டுகளில் வாத வலியாட்டம் வலி, நொண்டியான மாதிரி இருக்குதுனும் சொல்வார்கள்.) கை, கால், தோள்பட்டை வலி, கழுத்து இழுத்துப் பிடித்துக்கும். உறுப்புகள் எல்லாம் எனக்கு உதவ மாட்டிங்குதுனு சொல்வார்கள். வலது தோள்பட்டையில் தொடர்ச்சியான வலி.

கல்லீரல் இழுத்துப் பிடித்துக்கும். அடிக்கடி ஈரல் தொல்லைகளே ஏற்படும். முதுகு, கீழ் முதுகு பகுதியில் சுடுவது போல வலி. தூங்கி எழுந்ததும் படுக்க தோன்றும். இடுப்பு பகுதியை அழுத்தி படுத்துக் கொள்வார்கள். அப்போது சுகம் என்பார்கள். நடந்த பிறகு தொல்லைகள் அதிகம்.

கைகளில் குளிர்ச்சி ஏற்பட்டு அது உடல் முழுவதும், கால் வரை பரவும், கீழ் வாதம் ஏற்படும். கை மூட்டுகளில் மறுத்தும், குளிர்ந்தும் காணப்படும். இரண்டு முழங்கைகளிலும் தொடர்ச்சியான வலி. மணிக்கட்டில், கைகளில் அசதியும், தெரிக்கும் படியான வலி இருப்பது போன்ற உணர்வும், புஜம் அசதியாகி விடுதல், கைகளில் அரை பக்க வாதம் வந்திடும், ஆனால் இந்த கைகளை வைத்து வேலை செய்ய முடியும் என்னால் என்றுக் கூறுவார்கள். கைகளில் அரைபக்க வாதம் வந்ததால் சரியாக உபயோக படுத்த முடியாது என்றுக் கூறுவார்கள். காலை நேரம் ஆரம்பிக்கும் போதே கை ரொம்ப ஜில்லிப்பு, இரவில் கையும், காலும் ரொம்ப ஜில்லித்து விடும்.

கால்கள்:- கால்கள் மேல் இடுப்பு எலும்புகளில் வலி, கால் மூட்டுப் பகுதியில் தெரிக்கும் படியான வலி. அசதி ஏற்பட்டு அது கீழ்க்கால் வரை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டு செல்லும். வயதானவர்களுக்கு இது போல் ஏற்படும். இடது பாதத்தில் தெரிக்கும் படியான வலியிருக்கும். ஒய்வின்றி நடந்துக் கொண்டேயிருப்பார்கள். ஏதோ சொறிந்து விடுவது போல உணர்விருக்கும். பாத மூட்டுகள் குளிர்ந்தது போல உணர்விருக்கும் மேலும் மருத்து விடும். வலது மூட்டில் அதிகமா வலியும், பலஹுனமும் ஏற்படும். முட்டியை வளைத்தாலும், எழுந்து நடக்கும் போது வலி ரொம்ப அதிகமாகும். பொதுவானக் குறி ரொம்ப அசதிதான். கொஞ்சம் தூரம் தான் நடக்க முடியும், முக்கியமாக பெல்விஸ், சேக்ரல் பகுதியில், மேல் தொடையில் நடக்கும் போது வலி ஏற்படும். உட்கார்ந்து, படுத்துக் கொண்டால் வலி சுகம். உடம்பை கட்டிப் போட்ட மாதிரி இருக்குதுங்கனு சொல்வார்கள். டைபாய்டு காய்ச்சல் போலவும் பாதி பக்கவாதம் வந்த மாதிரியும் இருப்பார்கள். வாத நோயும் இருக்கும். வாத பக்கவாதமும் உடன் இளைத்தலும் காணப்படும். ரொம்ப சோர்வாக இருப்பது போன்ற உணர்வு ஒய்;;;;வின்மை கொஞ்சம் கூட நகர முடியாது. இந்த பலஹுனம் ரொம்ப நாளாகவே இருந்ததாக இருக்கும். உடன் பசியே இருக்காது. ரொம்ப மிக மிக அதிகமான அசதி. கண்டிப்பாக இவர்கள் வெளிக்காற்றுக்காக கதவு, ஜன்னல்களை திறந்து வைத்து விடுவார்கள். இவைகளை மூடிவிட்டால் தொல்லை அதிகமாகிவிடும். தலை மற்றும் வயிறு ரொம்ப குளிர்;ச்சியாக இருக்கும். அப்போதும் பெண்கள் குளிர்காற்றை விரும்புவார்கள். (தோல்) சருமம், கண்கள் மற்றும் முகம் ரொம்ப மஞ்சளாகி விடுதல். எல்லா சருமமும் வறண்டு விடுதல், உடல் முழுவதும் வியர்வை ஏற்படுதல்.

தூக்கம் இல்லாமல் படுத்துக் கிடப்பார்கள். மந்தமாக சோம்பலாகவே இருப்பார்கள். நேரமாகவே படுப்பார்கள். ஆனால் தூக்கம் வராது. கோட்டுவாய் வந்து கொண்டே இருக்கும். ஊஞ்சலில் படுத்துக்கொண்டு ஆடிக் கொண்டே இருப்பார்கள். எல்லா நேரமும் தூங்க விரும்புவார்கள். ஆனால் தூக்கமே வராது இதனால் சோம்பலாகவே இருப்பார்கள். அதனால் தெளிவு இல்லாமல் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது.

காய்ச்சலின் போது காலிலிருந்து உடம்பு முழுவதும் காய்ச்சல் பரவும். குளிர்ச்சியும் காலிலிருந்தே மேலே ஏறும். எப்பவும் காய்ச்சல் இருப்பது போன்ற உணர்வு திட்டு, திட்டாக காய்ச்சலும், குளிரும் மலேரியா காய்ச்சலில் இருக்கக் கூடிய பல குறிகளைக் கூறுவார்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய்ச்சல், மந்தம் பலஹுனம், சோம்பல் இருக்கும். ஈர பருவக்காலங்களில் உடம்பு ஜில்லுணு இருக்கும். துப்பாக்கியில் சுடுவது போல வலியும், இது எல்லா தசைகளிலும் வலிக்கும். எலும்பில் தொடர்ச்சியான வலி, இரவு நேரத்தில் அதிகமான காய்ச்சல், காலையில் மேலும் காய்ச்சல் அதிகமாகி விடும். தினமும் மதியத்தில் உடம்பு ஜில்லிப்பு. இடுப்புக்கு கீழே ஐஸ் மாதிரி ஜில்லிப்பு. லேசாக வியர்வை ஏற்பட்டாலும், உடனே காய்ச்சல் அதிகமாகிவிடும். தினமும் மத்தியானத்தில் உடம்பு ஜில்லிப்பு, இடும்புக்கு கீழே ஐஸ் மாதிரி ஜில்லிப்பு. லேசாக வியர்வை ஏற்பட்டாலும், உடனே காய்ச்சல் ரொம்ப அதிகமாகிவிடும். உடல் முழுவதும் தொடர்ச்சியான வலி. புஜத்திலும், கால்களிலும் முக்கியமாக இது போன்ற வலி. சிறிது அசைவு ஏற்பட்டாலும் அதிகமான வியர்வை இது திடீர், திடீரென ஏற்படும். உடல் ஜில்லிப்பு பின்பு இரண்டு நாட்கள் சூடு என மாறி மாறி வரும். இரவில் அளவுக்கு அதிகமான வியர்வை. வியர்வை அதிகமாக வருவதால் உடல் ஜில்லிப்பு ஏற்படும்.

பல நாட்களாக இருக்கும் மூல வியாதி அதன் மேல் பகுதியில் இரத்தமும் வரும். வலி இருக்காது. ஆனால் ரொம்ப வெறுப்பாக இருப்பார்கள்;. பேதி தினமும் நான்கு, ஐந்து முறை போகும். லேசாகவும், இரத்தத்துடனும், சளியுடனும், சீதமும் கலந்து போகும். மலம் வருவது போன்ற உணர்விருக்காது. கைகளில் அசதி ஏற்படும். பின்பு சிறிது சிறிதாக இந்த களைப்பு கால்களுக்கு பரவும். முதுகு பகுதியில் உள்ள தசைகளில் மந்தமான வலி, இதே வலி இடுப்பெலும்பு சதைகளிலும் காணப்படும். ஆனால் வலி விரைவில் குறையவே குறையாது, அசதியும் இருக்கும். இடது தொடை நரம்பில் வாதம் மந்தமான தொடர்ச்சியான வலி இது தொடை வரை பரவும். கால் மூட்டுகளில், தொண்டையில் நெருப்பு எரிவது போன்ற உணர்வு. ஆனால் வெளிப்புறம் வியர்வையிருக்கும், படுத்துக் கொண்டால் குறைந்து விடும். வலது இடுப்பில் மந்தமான வலி உடன் இரணமாட்டமும் வலி. அழுத்தினால் தசைகளில் தளர்ச்சி (அசதி) மற்றும் தொடை நரம்புகளிலும், இடுப்பிலும் வலி ஏற்படும். விலா எலும்புகளுக்கு கீழ் உள்ள பகுதியில் சுடுவது போல வலி. இந்த வலி அதிகரித்து கீழ்ப்புறமாக இடது கால் வரை பரவும். தோள்பட்டை எல்லாம் கனமாக இருப்பது போன்ற உணர்வு. கைகள் மற்றும் பாதத்தில் எரிச்சல், கைகள் மற்றும் புஜங்களில் தொடர்ச்சியான வலி. இரவில் உடல் முழுவதும் உள்ள நரம்புகள் ஒய்வின்றி நடுங்குதல். காலையில் அதிகமாகி விடுதல். ஒய்வில்;; திரும்பி, திரும்பி படுப்பது போல கற்பனையான எண்ணமிருக்கும். விலா எலும்புக்கு கீழே உள்ள பகுதியில் மந்தமாக இருத்தல், அப்பகுதியில் மூன்று நாட்களுக்கு பட, படவென அடித்துக்கொள்ளும். வலி உள்ள பகுதியை அழுத்திப் படுத்தால் சிறிது சுகம் கிடைக்கும்.MANGANUM

- மாங்கனம்

மாங்கனிசின் புகை ரஸம்.

காது வலி தோன்றி பின்பு மற்ற உறுப்புகளுக்கு பரவும். அடிவயிற்றில் வெட்டும் வலியின் போது வாயில் ஜல வாய் ஊற்று மாதிரி ஊற்றும். இவர்கள் வயதுக்கு வருவதற்கு மிகவும் கால தாமதம் ஆகியிருக்கும். இவர்களது குரல் வளை கரஇ கரப்பான உரத்த குரலாக இருக்கும். குரல் வளையில் தோன்றுகின்ற வறட்சி தான் காரணம். கணையத்தில் தோன்றும் குழிப்புண்கள் அதன் பிறகு சர்க்கரை வியாதி தோன்றி விடுதல். இவர்களுக்கு மாதவிலக்கு Nடாக வரும். குறிப்பாக மாதவிலக்கு நிற்கும் பருவ காலத்தில் சதை மாதிரி கட்டி கட்டியாக மாதவிலக்கு போகும். அப்போது அது சுடு தண்ணியாட்டம் கொட்டுதுங்க, கறியை அறிஞ்ச மாதிரி இருக்குதுங்க என்றால் இது தான்; மருந்து. இதை மாதவிலக்கு நிற்கும் காலத்தில் சொல்வார்கள். இது இம் மருந்தின் முக்கிய குறி. குளிர்ச்சியான எந்த பொருளும் பல்லின் மீது பட்டாலும் வலி கடுமையாகி விடும். சோகை பிடித்த மாதிரி உள்ள பெண்கள் கூறுவார்கள் எனக்கு பாதியில் மாதவிலக்கு மிகவும் வலியோடு ஏற்படுகிறது என்பார்கள். பித்தப்பை கெட்டு பித்த கற்கள் உற்பத்தியாகி அங்கு வலி தோன்றும் இது முக்கியம். மற்ற வாதவலிஇ சரும வியாதிஇ ஆண்இ பெண் உறுப்பில் புண் என்றும் இப்படி பலஇபல பொது குறிகள் இருக்கிறது. இதை மத்தூரில் பார்த்து கொள்ளனும்.

MEDORRHINUM

- மெடோர்ரினம்

சீக்கு வாங்கி அந்த சீழை எடுத்து அதையே வீரியப்படுத்தபட்டது.

இது சீக்கு வாங்கி அங்கு சீழ் வடிந்து நின்ற பிறகு கள்ள சதை வளரும்;. ஸைகோஸிஸ் விஷத்துக்கு இது முக்கிய மருந்து. கிராமத்தில் சொல்வார்கள் திருமணம் ஆன பெண்களுக்கு Nடு பிடித்து விட்டது என்றால் மாப்பிள்ளை முன்னதாகவே தீய பெண்ணிடம் போய் சீக்கு வாங்கி விட்டான் என்பார்கள். (STAPH) இதை கொடுத்தால் சரியாகி விடும். எவ்வளவு மருந்து கொடுத்தும், ஒரு குழந்தைக்கு பேதி நிற்கவில்லை, தாய் முன்னதாகவே இதில் அடிப்பட்டவள் என்று செய்தி தெரிந்து இம் மருந்து கொடுத்து சுகமானது. உலகிலேயே மிக பெரிய ஞாபக மறதிக்கு இது தான் மருந்து. மாதவிலக்கு (இரத்தகரை) ஜட்டியில் பட்டதை எவ்வளவு துவைத்தாலும் கரையே போகாது. இவர்கள் கழிவுகள் எல்லாம் அழுகிய மீன் கவிச்சை மாதிரி அடிக்கும். ஆஸ்துமாவில் அல்லா கும்பிடுவது போல படுத்திருப்பார்கள். அதிகம் பெண்களையே பாதிக்கும். காலையில் வேலைக்கு போகணும் என்று பரபரப்பும், மனதில் செக்ஸ் விருப்பமே இருக்காது, குளிர் காற்றுக்காக பெண்கள் உறுப்புகளை தூங்கும் போது திறந்து வைப்பார்கள். பெண்ணுக்கு வெள்ளைப்பாடு வடிந்து அதை நிறுத்திய பின்பு மூட்டுகளிலும், முதுகு தண்டிலும் வலி தோன்றும், அடுத்து பக்கவாதமும் வந்திடும், மூட்டு வியாதிக்கு சரியான மருந்து கொடுத்தால் திரும்ப வெள்ளைப்பாடு தோன்றும். அப்போது இம் மருந்தின் குறியை பார்த்துக் கொடுத்தால், இரண்டும் குணமாகிவிடும். கோலி குண்டு மாதிரி கெட்டியான கட்டிகளுக்கும், கருப்பையில் தோன்றும் கட்டிகளுக்கும், சினைப்பையே கோலிக்குண்டு மாதிரி உருண்டு கட்டியாகி விடும். இது மாதிரி கல்லு மாதிரி கட்டி, வால் மாதிரி கட்டி, பல விதமான கட்டிகள், குணப்படுத்த முடியாத கட்டிகள், ஆபத்தை விளைவிக்கும் புற்று நோய் கட்டிகள், மார்பு, யோனி, மானி, விதைப்பை இப்படி உடலில் எல்லா பாகங்களிலும், ஏற்படும் கட்டிகளிலும் இதுவே பெரியதும், ஆபத்துமானதும் ஆகும். கண், காது, மூக்கு, தொண்டை, மானயின் உட்புறமு;, யோனியின் உட்புறமு;, உதடுகள், போன்ற மென்மையான பூந்தசைகளில் கூட கடுகு மாதிரி, மிளகு மாதிரி, சோளம் மாதிரி கெட்டியான சிறு கட்டிகளுக்கும், சருமத்தின் மீது இதே மாதிரி கட்டிகளும், மருவும், முண்டும், முடிச்சுக்கு இதுவே சிறந்த மருந்து. ஆனால் ஆண், பெண் சீக்கு வாங்கிய வரலாறு முன்பே இருக்க வேண்டும். (அ) சீக்கு வாங்கிய பெற்றோருக்கு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கு இது தான் முக்கிய மருந்து. ஸைக்கோஸிக்கு இது தான் அரசன். காது சீழ் மரக்கலர். காய்ச்சலுக்கு பிறகு உடம்பு, ஆஸ்துமா நோயின் போது கை விரித்து படுத்தால் சுகம். கனேரியா மறைக்கப்பட்ட அடிப்பட்ட பிறகு ஏற்படும் தொல்லைக்கு இது மருந்து. இவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு கண் நோய் காணப்படும். பெண்களுக்கு கருப்பை, சிறுநீர் கட்டி கல் உற்பத்தியாகும் இதற்கு சிறந்த மருந்து. சீக்கிரம் நேரம்; போதாத மாதிரி இருக்கும். இதற்கு காரணம் இவர்கள் வேலையை பர பரப்பாக செய்வது தான் காரணம். ஞாபக மறதியில் கூப்பிட்ட வரை கூட மறந்து விடுவார். கலந்துரையாடலில் சேர பயம். தன் பெயர் கூட மறக்கும். டாக்டரிடம் நோயாளி விசியத்தைக் கூறும் போது மறைப்பார். நோயாளி சொல்லும் போதே அழுவார். நினைத்தாலே நோய் ஏற்படும். குற்றம் செய்தது போல் எண்ணம். ஒரு நபரை பார்க்க, சந்திக்க பட, படப்பு, தலையை மெல்லிய கை கொண்டு தடவுதல் போல் எண்ணம். வேலை செய்தால் பைத்தியம், பிடிப்பது போல் எண்ணம். மன வேலையில் இப்படி கழிவுப் பொருட்கள் அழுகிய மீன் வாடை அடிக்கும். மிகுந்த காற்று விருப்பம். உடம்பு ஐஸ் மாதிரியிருக்கும். மாதவிலக்கு ஜட்டியில் கரை போகவே போகாது. உடம்பு திறந்த வெளியில் காற்று படும் படி வைத்தால் இது தான் மருந்து. உடம்பு குளிராக இருக்கும். ஆனால் சூடாக இருக்கிறேன், சூட்டு உடம்பு என்பாள். வீக்கம், என்றால் வலி அதிகம். அசைவில் நடப்பதால் சுகம் RHUS-TOX. மாதிரி. அல்லா கும்பிடுவது போல் படுத்தால் சுகம். அகோரபசி. உற்சாகமான, சுவைப்பான, புளிப்பான பானம் விருப்பம். எல்லாமே மாயமாக தெரியுது. PHOS மாதிரி. எதோ பின்னால் வருவது போல் ரூம் (அறை) ஓரத்தில் மூளையில் அழுக்கு பூச்சி இருப்பது போல் அழுக்கான முகம் தெரியுது என்பார். மனிதரை புழு, புச்சி இருப்பது போல் எண்ணுதல். இரவு, பகல், தொல்லை.

MENTHOL

- மென்த்தோல்

கற்பூர தையலத்தை வீரியபடுத்தப்பட்டவை.

இது பெரும்பாலும் குரல் வலையை, சளி சவ்வுகளை, முதுகு தண்டுவட நரம்புகளை தாக்கும். நரம்பு வலிகளுக்கு இது நல்ல மருந்து. திடீர்ன்னு ஏற்படும் நோய் வகைகளுக்கு இது பயன்படும் என்று Dr. கிரிக்கெஸ் M.D., கூறுகிறார். விஷேசமாக பெண்களின் பிறப்பு உறுப்புகளில் ஏற்படும் அரிப்புக்கு இது நல்ல மருந்து. முன் மண்டையில் தலைவலி அதிகமாகி சைனஸ் பகுதியில் வந்து முடியும். வலி இறங்கிக் கொண்டே வந்து கண் முட்டையில் வந்து இறங்கும். கண் முட்டையே கழண்டு வர மாதிரி இருக்கும். இடது புற கண் குழியில் மட்டும் வலி. மின்னல், மின்னுவது போல் வலி. மூக்கில் சளி பிடித்தது போல சொட்டு, சொட்டாக ஒழுகும். குளிர்ந்த மாதிரி இருக்கும். மூச்சு ஆழ்ந்து சுவாசிப்பார்கள். அப்போது மூச்சுக் குழாய் ஜில்லுனு இருக்கும். மூச்சுப் பாதை இழுப்பது போலவும், கிச்சு, கிச்சு செய்வது போலவும், மந்தமாகி நெஞ்சுக்கு வந்து நெஞ்செல்லாம் இது பரவும். புகைப்பட்டால் சின்ன, சின்ன இரும்பல் வரும். ஆஸ்துமா தொல்லையும், நுரையீரல் வேக்காட்டினால் தலைவலியும் இவர்களுக்கு ஏற்படும்.

கை, கால், கழுத்து எலும்புகளில், இடுப்பு எலும்புகளில், தசை, பகுதிகளில் இரணம் போல் வலி எடுக்கும். உறவு KALI – BICH, SPIGEL.MERCURIUS – CORROSNUS

- மெர்குரிஸ் கோர்ரோஸ்னஸ்

பாதரஸத்தின் ஒரு படிவம்.

வயிற்று கடுப்பில் இம் மருந்தின் குணம் அதிக இரத்தம் போகும். குறிப்பாக ஆண்களுக்கு மானி திண்டில் வட்டமான புண் ஏற்பட்டு திண்டே கரைந்து காரமான சீழ் வடியும். இதனால் சிறுநீரகம் கெட்டு விடும். மலம் கழிய உட்கார்ந்தால் முக்கிக் கொண்டே இருப்பார்கள். மலம் வராது. (வந்து விட்டால் NUX.) இதே மாதிரி முக்கி கொண்டு இருப்பார். சீதம் அதிகமாக வரும் MER - SOL. கடுமையான வெட்டுவது போல வலியோடு துண்டு, துண்டாக மலம் வரும். சிறுநீர் பாதையினுள் எரிச்சலோடு சிறது அளவே சிறுநீர் வரும். சொட்டு, சொட்டாக சிறுநீர் வரும் போது, இரத்தமும், தாங்க முடியாத வலியும், சிறுநீரில் செங்கல் தூள் மாதிரி படிவும் காணப்படும். விந்து சுரபி வீங்கி பாதை அடைத்து கொடுமையே செய்யும். இரவில் அதிக தொல்லை தரும். குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கானது மலம் பச்சை பில்லு மாதிரி நிறமும், தோற்றமும் இருக்கும். ஆஸன வாய் எரிச்சலோடு, அவிச்ச முட்டையை சீவி விட்ட மாதிரி நிறைய மலம் கொட்டும்.

MERCURIUS – SOLUBILIS

- மெர்குரிஸ் செல்லுபிலிஸ்

பாதரஸம்.

இது முக்கியமான சிபிலிஸ் மருந்து. அதனால் மருந்துக்குரியவர்களுக்கு, எல்லா குணங்களும் நோய்களும் இதில் அடங்கும். இவர்களது மனநிலை எல்லோரும் நமக்கு எதிரி அக்கம், பக்கம் உள்ளவர்கள், உறவினர்கள் எல்லோருமே நமக்கு எதிரி என்று நினைப்பார்கள். மற்றவர்கள் நம்மை கொன்று விடுவார்கள் என்ற எண்ணமும், நாம் மற்றவரை கொல்ல வேண்டும் என்ற விருப்பமும், மழை, வெய்யில், இரவு, பகல், போன்றவை எல்லாமே தொல்லை, இரண்டு காலமும் தொல்லை ஏற்பட்டால் முக்கிய மருந்து. காது சீழ் மஞ்சள் நிறத்தில், பச்சை நிறம் கலந்த மாதிரி இருக்கும். இது தான் காதுக்கும், கனேரியாவுக்கும் உள்ள வித்தியாசம். இவருக்கு கொட்டுவது போலவே வலி APIS மாதிரி. மஞ்சள் நிற சீழ் ஆரம்ப புற்று உடன் துர்நாற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையிலோ, நோயிலோ, வலியிலோ, அப்படியே நரக வேதனையில் இருக்கிறேன் என்றால் இது. இவர்களுக்கு தாகம் நிறைய எடுக்கும். எச்சில் ஒழுகும் அளவு ஈரம் இருக்கும். அப்பவும் தண்ணீர் சொம்பு, சொம்பாக குடிப்பார்கள். மலம் கழிய உட்கார்ந்தும் சீத பேதியில் எழுந்திருக்கவே மாட்டார். காரணம் வர்ற மாதிரியே இருக்கும். முக்கி கொண்டே இருப்பார். ஆனால் (மலம் சிறிது கழிவான், எழுந்து வந்து விடுவான், திரும்ப போய் உட்கார்ந்து சிறிது கழிந்து விட்டு வந்து விடுவான் NUX.) உடம்பு கரையான் அரிக்கிற மாதிரி அரிச்சிடிச்சி என்றால் MERC - SOL. இங்கு கரைஞ்சி விட்டது என்றால் THUJA. நாக்கு வீங்கி பிளந்து இருக்கும். பற்களின் பதிவுகள் இருக்கும். தற்கொலை விசியத்தில் சொல்வார். பட்டினி கிடந்து சாவேன் என்று சொல்வார்கள்.

MEZIRIUM

- மெஜுரியம்

இஸ்லாமிய காட்டில் விளையும் ஒரு வகை மர கொட்டை முத்து.

இம் மருந்து கால் குதிரை முக எலும்பில் வலி ஏற்படும், கருப்பும் தட்டும். தலையில் மூடு சீழ் பிடித்து பிறகு புளு வைத்தால், மற்ற பகுதியிலும் சீழ் பிடித்து புளு வைத்தாலும் PHOS, GRAPH, PSOR, SYPH, PEPR. எதன் மீதும் விருப்பம் இல்லாமல் இருப்பார்கள். உடலில் உயிர் இல்லாதது போன்று இருப்பார்கள். எதிலும் கவர்ச்சி, நிதி இல்லை என்பார்கள். மூளை கல்லாட்டம் இருக்குது. நெருப்பு அப்படியே தலைக்கு ஏறுவது போல் மாயம். உடம்பு குபு, குபுனு எரியுதுங்க என்பார்கள். பணம் தேiவாயன அளவு இருந்தாலும், வறுமையாக இருப்பது போன்ற மாயம். தொழில் சரியில்லை, வருமானம் பற்றலை என்றால் CHEL, MEZ, MED.) திடீர்ன்னு கோபம், கொஞ்ச நேரம் கழித்து வருத்தம். உடனே வருத்தம். கோபத்திற்கு பிறகு SULP, HOLAND, MEZ. காய்ச்சலில் எதைப் பார்த்தாலும் குறைச் சொல்வார். ஆனால் பிறர் சொல்வது இவர் காதில் விழாது. குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பார். உடன் BERB-V. புத்தகத்தை எடுத்து வைத்தால் குழப்பத்தால் படிக்க முடியாது. தன் மீதே அதிருப்தி. நான் சரியில்லை, என் உடம்பு அசிங்கம் என்றும், படிக்கும் போது வித்தியாசமாக இருக்குது என்பார். ஜன்னல் கிட்ட உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பார். (ஜன்னல் பார்வை). பெரியவர்கள் மனதை புண்படுத்துவது போன்று பேசுவார்கள். இதே இடத்தில் அமைதியில்லை என்றால் ARS. மாலையில் சுகம் என்றால் ஒரே மருந்து இது தான். குழந்தைகள் தன் முடியோ, பிறர் முடியையோ பிடித்துக் கொள்ளும். நாக்கில் வலி, எரிச்சல், சாப்பிட்ட பிறகு சுகம். ஆழமான வெடிப்பு இது தான் மருந்து. நாக்கோ, மற்ற பகுதியிலோ, அடியில் சீழ் பிடித்து மேலே பாலாடை போன்ற படிவு இருந்தால், பிறர் மாதிரி நடிப்பது செய்கை காட்டுவது உடன் LYC, PLAT, VER.பிறர் போல நடந்து காட்டினாலும், ஏழு மருந்தில் இதுவும் ஒன்று. உடம்பில் எந்த பகுதியிலும் புளு வைத்தால் MEZ, GRAPH, PHOS-ACID.

MILLEFOLIUM

- மிலி்போலியம்

ஏரோ என்ற தாவரத்திலிருந்து எடுக்கப்படுபவை.

பல வகையான மூல நோய் உள்ளவர்களுக்கு இது நல்ல மருந்து. அதுவும் மூலத்திலிருந்து சுத்த இரத்தம் வரணும். மூலத்துடன் எர்ணியா இருக்கணும். சின்னம்மைக்கு பிறகும் இப்படி ஏற்படலாம். தொப்புளில் அதிகப்படியான வலி, மூல ஆப்ரேஷன், சிறுநீர் கல் எடுத்தப் பிறகு ஏற்படும் தொல்லைக்கு இது நல்ல மருந்து. இதனால் (ஆப்ரேஷனால்) இவர்களது வளர்ச்சி குறைந்து விடும். சினைப்பை வீங்கி விடும். உயர்ந்த வெப்பநிலை இருக்கும். மூலத் தொல்லைகளையேத் தான் கூறுவார்கள். சிறிது அசைந்தாலும் கிரு, கிருப்பு. ஞாபக மறதி அதிகம். தலையில் அதிக இரத்தம் இருப்பதால், தலை நிரம்பியிருப்பது போன்ற உணர்வு. மாத விலக்கு அடக்கியதால், காக்கா வலிப்பு வரும். வலி விசுக், விசுக்கென இருக்கும். பளீர், பளீர் என தோன்றி மறையும்.

மூக்கில் இரத்தம் வரும். (உடன் ERECHT மருந்து). விசுக், விசுக் கென்ற வலி கண்களின் வேர்களிலிருந்து மூக்குக்கு வந்திருச்சு என்பார்கள். மூலத்தைச் சுற்றியுள்ள குடல்களில் வலி. மூலத்தைச் சுற்றிலும் இரத்தம் கசியும், சிறுநீரில் இரத்தம் வரும். உடன் (SEBEC-AUR.)

மாதவிடாய் குறித்த காலத்தில் ஏராளமாக, மூல நோய் மாதிரியே சுத்த சிவப்பு இரத்தம் ஏராளமாக ஊத்தும். வலி பலவகையாக இருக்கும். கர்பக்காலத்திலும் வலி ஏற்பட்டு இரத்தம் வரும். காச நோயாளியைப் போல இரும்பிக் கொண்டேயிருப்பார். இரும்பித் தும்பும் போதும், கடைசியில் இரத்தம் வரும். சுத்த இரத்தத்தைத் கூட காரி, காரி துப்புவார்கள். உடன் (IP.) மாதவிலக்கு அடக்கியப் பிறகு, மூல வியாதி பயங்கரமாகவும், நெஞ்சு பட, படப்பு இருக்கும். அதிக நாடிதுடிப்பு ஏற்படும். மூல வியாதியை அடக்கியப் பிறகு ஏற்படும் தொல்லைக்கு நல்ல மருந்து மற்றும் சுத்த இரத்தம் அதிகமாக கொட்டும்.

உறவு மருந்துகள்: IPECA, ERECHT, GERAN, HAMAM.

MOSCHUS

- மஸ்கஸ்

கஸ்தூரி.

இந்த மருந்தின் முக்கியமான குறி. பித்து பிடித்து விடுதல், குளிர்ச்சியிலும், காற்றிலும் தொல்லை. நரம்பு தளர்ச்சியினால் மயங்கியே விழுந்திடுவார்.

மனம் :- கட்டுபாடு இல்லாமல் ஏராளமாக பேசுவார்கள். கவலை மிகுதியினால் பட, படப்பு, திக்கு, திக்குனு விழுவார்கள். காமவெறி பிடித்து விடும்.

தலை:- மூக்குத் தண்டில் வலியும், உச்சி வலியும் இருக்கும். சிறிது அசைவு ஏற்பட்டாலும், மயங்கி விழுந்து விடுவார்கள். சிறிது உயரம் போனாலும் மயங்கி விழுந்து விடுவார். ஏதேனும் பழைய செய்தியைக் காதில் கேட்டால், தலை உச்சியில் தட்ற மாதிரி இருக்கும்.

வயிறு:- பச்சையான காப்பி டிக்கேஷனை அப்படியே குடிப்பார்கள். உணவு சாப்பிட வெறுப்பு. எந்த உணவு சாப்பிட்டாலும் ஒரே மாதிரி தான் இருக்கும். வயிறு சம்மந்தப்பட்ட தொல்லை, வந்தாலே நெஞ்சுக்குள்ளே தளர்ந்து போச்சி என்பார்கள். சாப்பிடும் போது மயக்கம் ஏற்பட்டு சாய்ந்து விடுவார்கள். அடிவயிறு நீண்டு விடும். இழுத்து, இழுத்து விக்கல் வரும். உடன் HYDROCY – AC, SUL-AC, IGN, CAJAF.

ஆண்:- இவர்களுக்கு அளவுக்கு அதிகமான செக்ஸ், விருப்பங்கள் இருக்கும். அதனால் விந்து பீச்சியடித்துக் கொண்டேயிருக்கும். பின்பு ஆண் தன்மையை இழந்து சக்கரை வியாதிகாரராகி விடுவார்கள் COCA. ஈடுபட்ட பின்பு வாந்தி ஏற்படும்.

பெண்:- மாதவிலக்கு முன்னதாகவும், மிக ஏராளமானதாகவும் போகும். இதனால் களைப்பு தட்டி கிரு, கிருப்பு ஏற்படும். . NUX-M, VERAT-A.இல்லற விருப்பம் சித்ரவதை செய்வதுப் போலிருக்கும். பிறப்பு உறுப்பை நசுக்கி. நசுக்கி உறுப்பே மாறி விடும். மாதவிலக்கு காலங்களில் இது அதிகமாக காணப்படும்.

சிறுநீரகம்:- ஏராளமான சிறுநீர் போய் சக்கரை வியாதிக்காராகி விடுவார்கள்.

சுவாசகோசம்:- நெஞ்சை இறுக்கி பிடிப்பது போல் இருக்கும். அதனால் ஆழ்ந்து சுவாசிப்பார்கள். திடீரென குரல் வளையை பிடிச்சு நசுக்குவது போலிருக்கும். அதனால் சுவாசிக்க கஷ்டமாக இருக்கும். பைத்தியம் பிடித்த மாதிரி ஆஸ்துமாவில் இழுத்து, இழுத்து சுவாசிப்பார். நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு நல்ல மருந்து. நுரையீரல் பக்கவாதத்தினால் இப்படி ஷேஸ்டை செய்வார். ஆஸ்துமா வியாதியின் போது கவலையும், பயமும் ஏற்பட்டு சளி சவ்வரிசி உருண்டையாட்டம் காரி, காரி நிறைய துப்புவார்.

இதயம்:- பட, படப்பும், இருதய நடுக்கமும், பலஹீனமான நாடிதுடிப்பும் ஏற்பட்டு கேணம் பிடித்து மயங்கி விழுந்து விடுவார்.

திறந்த வெளிக் காற்றில் இவருக்கு சுகமாக இருக்கும். ஆனால் குளிர்ச்சியா இருந்தால் கஷ்டம். ஆனால் அதிக குளிர்ச்சியாக இருந்தால் சுகம் என்பார். தேய்த்து கொண்டே இருக்க விரும்புவார்கள். அதனால் கேணம் பிடித்த மாதிரி இருப்பார்கள்.

உறவு மருந்துகள்:- NUX-M, ASAF, VALER, SUMBUL, IGN, CASTRO.

MURAX

- மூரக்ஸ்

ஒரு வகை நாட்டில் வாழும் கடல் மீன்.

கர்பகாலத்தில் கவலை, மன அசதினால் படுத்தே இருக்க விருப்பம். எவ்வளவு சாப்பிட்டாலும், வயிறு காலியாகவே இருக்கும். ஏழு நாள் ஆனாலும் மலமே போகாது. இது தான் இம் மருந்தின் முக்கிய குறி. பால் மாதிரி சிறுநீரும், சேக்ரலில் வலியும் இருக்கும். வெள்ளை அதிகம் போனால் சுகம் என்பார். வலது ஓவரில், இடது மார்பில் வலியும், கருப்பை தளர்ந்து விடும் SEP, LIL-T, க்கு காம விருப்பம் அதிகம். உடன் இருதய வியாதியிருக்கும். காமம் குறைவு SEP. இப்படி தான் பிரித்து பார்த்துக்கணும். பிப்பு இருந்தால் SULPH. செக்ஸ் உறுப்பு பகுதியில் துணிபட்டாலோ. வியர்வை பட்டாலும் கூட காம எண்ணம் அதிகமாகி வெறி பிடித்து விடும். மெனோபாஸ் நேரங்களில் இந்த மருந்து குணம் எப்படி என்றால் காம எண்ணம் மிக, மிக அதிகமாக இருக்கும். கட்டி, கட்டியாக மாதவிலக்கும், ஒழுங்கு அற்றதாகவும் இருக்கும். கர்பபையில் புண் மாதிரி வலிக்கும். இரவில் தாகமும், பசியும், சிறுநீரும் போகும். இது சக்கரை வியாதிகாரர்களுக்கு பொருந்தலாம். கருப்பை யோனியில் வந்திடுமோனு தொடையை இருக்கி பிடிப்பார். SEP. யாவும் இதே மாதிரி இருக்கி பிடிப்பார். ஆனால் செக்ஸ் அதிக விருப்பம். MURAX. யாரிடமும் பேச மாட்டார். கோபமாகவே இருந்தால் CHAM, MURAX, URA, கருப்பை கனமாக இருக்குதுன்னு அடிவயிற்றில் கையை கொடுத்து. தாங்கி பிடித்தால் LACH. இரவில் தாகம், சிறுநீர், பசி. இது சக்கரை வியாதிகாரர்களுக்கு பொருந்தும்.

MYRISTICA – SEBIFERA

- மைரீஸிடிகா செபிப்பேரர்

உடல்களில் வேக்காட்டினால் (சூட்டினால்) திசுக்கல் அப்படியே நின்று கட்டியாகி விடும். அதற்கு இந்த மருந்தை தந்தால் அந்த கட்டிகளை உடைத்து எடுத்து விடும். வேக்காடு அடைந்த சருமத்திற்கும் பரோடிக்ட் கிளாண்ட், மூலம், கொடி பவுத்திரத்திற்கு (வௌ;வேறான இரு உறுப்புகள் இயற்கைக்கு மாறாக அமைந்த ஒரு குழாயினால் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டிருத்தல்.) சருமத்தில் ஏற்படும் ராஜப்பிளவைக்கு இது நல்ல மருந்து. விரல் நுனியில் ஏற்படும் சீழ்கட்டிக்கு நல்ல மருந்து. விரல்களில் நகத்தில் வலியும் வீக்கமும். உடன் அதன் எலும்பில் வலி. புற்று நோயின் முதல் நிலை, செப்டிக் ஏற்பட்டால் அதை வெட்டி எடுக்க இம் மருந்து பயன்படும். கை, கால் நீட்டிக் கொள்ளுதல், மடக்கவே முடியாது. தொண்டையில் செம்பு சுவையும், எரிச்சலும் தெரியும். நாக்கில் வெள்ளை நிறப்படிவு உடன் பிளவை அடைப்பால் அசுத்த இரத்தக்குழாயில் எற்படும் வேக்காடு, சீழ் புண்கள் கொப்பளங்களுக்கு, இதை கொடுத்தால் அவற்றை எல்லாம் வெளியே தள்ளி குணமாக்கி விடும். காது கொப்பளத்திற்கும், மூல பௌத்திரத்திற்கும் இதைக் கொடுத்தால் கட்டியை உடைத்து வெளியே தள்ளிவிடும். SILICA, HEP-SUL -ரை விட அதிகமான சக்தி வாய்ந்த மருந்து. மற்றும் அதை விட அதிகமாகவும் தேவைப்படலாம்.

NAJA TRIPUDIANS

- நாஜா ரிப்பூரியன்ஸ்

இராஜ நாகம் இறந்த பின்பு உற்பத்தியாகும் கிருமிகள்.

இருதய வியாதியில் இறந்திடுவோமுனு பயம். தன்னை யாரும் மதிக்கலையே என்ற எண்ணம் (DELUSION) சின்ன விசயத்தையும் பெரியதாக எடுத்துக் கொண்டு அழுவார்கள். கெட்டதையயே தான் பார்ப்பார்கள். நல்லதே தெரியாது. இவர்களுக்கு மந்தமாகவே இருப்பார்கள். இதய வியாதி அதிகமாகும் போது வீங்கியிருக்கும் போது, ஊசியில் குத்துவது போன்ற வலி. இதே இடத்தில் வீங்காமல் ஊசியில் குத்துவது போல் வலியிருந்தால் SPIG. தலையில் திடீரென மின்னல் மாதிரி வலி தோன்றி மயங்கி விழுந்தால் இது நல்ல மருந்து. இருதய வியாதியில் எந்தக் குறியும் தெரியலை என்றால் NAJA. கொடுத்தாலும் சரியாகும் என்கிறார். J.T.K.ஆஸ்துமாவில் ஐந்து வகைகள் உள்ளது. கார்டியாக் வகை ஆஸ்துமாவில் போது இருதயம் மர், மர் வென்று சப்தம் கேட்கும். சத்தத்திற்கு காரணம் இதயம் பெருத்து சரியாக பம்ப் செய்ய முடியாததால் திணறும். அதனால் சப்தம். உள்ளங்கை ஜில்லிட்டு மூச்சு வாங்கும். உடல் நீல நிறமும் காணப்படும். கடமை எல்லாம் மறந்திடுச்சி என்பார். பாம்பு கடித்த பிறகு கழுத்து இறுக்கி பிடித்த மாதிரி இருக்குது என்றால் ஒரே மருந்து. சாரப் பாம்பு, நாகப் பாம்பு வேற வேற இனம். இதை கணவன் மனைவி என்று கூறுவது தப்பு. NAJA காரர்களுக்கு பாம்பு கடித்தால் கமா, போட்ட மாதிரி இருக்கும். நரம்பில் செலுத்துவதால், நாகப்பாம்பு கடித்தால் இதயத்தில், நுரையீரலில் கணம். மூளைக்கும் போய் பிறகு மரணம், வேகம் வரும். நாகப்பாம்பு விஷத்தினால் மரணம் வரும். 6x – ல் கொடுத்தால் பொருந்தலாம். எனக்கு ராசி இல்லை, நான் தோல்வியின் மறு உருவம் என்பார் SULPH. மாதிரி. கோடாளியால் வெட்டிக்கிட்டு தற்கொலை செய்து கொள்வேன். எனக்கு அதிஷ்டம் இல்லாததால் என்பான். மழை கண்டால் பயம். தலையில் காயம் பட்டு விட்டது. இடம் எல்லாம் அடிப்பட்டுவிட்டது.

NATRUM – CARBONICUM

- நேட்ரம் கார்போனிகம்

சுட்ட உப்பு கரி.

ஆண் விந்து அனுவை அதிகரிக்க, மிகுதியான உடல் உறவுக்கு பிறகு ஆண் மலட்டுக்கு இது நல்ல மருந்து. குழந்தையை உற்பத்தி செய்யாதளவுக்கு உயிர் அணுக்கள் குறைந்து விடும். வெய்யில் காலமும், வெய்யில் பட்டாலும் தலை வலி வந்து விடும். தலையை வெய்யிலில் காட்ட முடியலைங்க என்று சொல்வார்கள். தலை வெடிக்கிற மாதிரி என்றால் GLON. இயாலாமையால் செக்ஸில் இருந்து நழுவிக் கொள்வார். பதட்டத்தினால் தொல்லையும், மறதியும், இசைக் கேட்டால் தொல்லையும், பயமும், உறவினர் மீது வெறுப்பு, லாட்டரி சீட்டு, குதிரை பந்தயம், சீட்டாட்டம் இப்படி குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க விருப்பம். அதிகமான லைட் வெளிச்சம், கேஸ் லைட் வெளிச்சம், வெல்டிங் செய்த பிறகு தொல்லை என்பார். உணர்ச்சி வயப்பட்ட பின்பு வெள்ளைபாடு காரமாகவும், வரும். காலை 10 வடி 11 வரை உடல் வெழ, வெழப்பு தொல்லை. SULPH. பார்த்துக்கனும் இங்கு. சேராத பொருளை சாப்பிட்டால் சிந்தனை வரலை, தொல்லை என்றால் இது. ஆண் மலட்டுத்தன்மைக்கு 80 ு இம் மருந்து பொருந்தும். மாவு பண்டங்கள் சாப்பிட்டு வயிற்றாலை (பேதி) போனால். SUN SHOKE. (சூரிய ஒளி) தலைவலிக்கு இது.

NATRUM - MUR

- நேட்ரம் முர்

சாப்பிடும் நமது உப்பு.

இம் மருந்து அடிக்கடி தேவைப்படும் முக்கிய மருந்துகளில் ஒன்று. ஏக்கம் மிகுதியாக இவர்களுக்கு இருக்கும். காமம் மிகுதி, உறவினர் (அ) விருப்பமான பொருள் இழப்பினால் ஏக்கம் மிகுதி, பித்து பிடித்த மாதிரி இருப்பார். உப்பை விரும்பி சாப்பிடுவார்கள் இது முக்கிய குறி. கால் மரமாட்டம் மருத்து இருக்குது, உடம்பு மரமாட்டம், கல்லாட்டம் இருக்குது என்றாலும், உப்பு, இனிப்பு, செக்ஸ் போன்றவைகள் அதிக விருப்பம் என்றால் இந்த மருந்து பயன்படும். நிகழ்காலத்தில் (தற்போது) மகிழ்ச்சியாக இருந்தாலும் கடந்த காலத்தில் இருந்த பசி, பட்டினி, வறுமை போன்ற துன்பங்களையே கூறுவார்கள். தூங்கி எழுந்தவுடன் தலைவலி. கவலை என்றால். நோயின் போதும், கவலையின் போதும், மேலும், மேலும்,அதிகமாக தொல்லை என்றாலும், தேம்பி, தேம்பி அழுவார். அப்போது சமாதனப்படுத்தினால் தேம்புவார் (அ) கோபப்படுவார். சமாதானப்படுத்துபவரை திட்டினால் STAPH சமாதானம் அடைந்தால் PULS. கோபமாக இருந்தால் CHAM. கோபத்தின் போது சிறுமியின் முகத்தைப் பார்த்தாலே உறுமும் ANT-C. குளிர்காய்ச்சலின் போது முகம் சிவக்கும். சூடும் குளிரும், மாறி, மாறி வரும். நூறு சுத்திகளை தலையில் லேசாக தட்டுவது போல இருக்கும். பெண் காமத்தை சரி படுத்தி கொள்ள முடியாமல் ஏங்கி பித்து பிடித்த மாதிரி ஆகிவிடுவாள். அப்படியே ஸ்தம்பித்து விட்டால் KALI - BROM.எவ்வளவு உயர்வு பெண் என்றாலும், மிக, மிக தாழந்தவனோடும் உடல் உறவு கொள்வாள். ஏக்கத்துக்கு இதுவும் ஏழு மருந்தில் ஒரு மருந்து.

NATRUM - PHOSPHORICUM

- நேட்ரம் பாஸ்பாரிக்கம்

பாஸ்பேட்டும், உப்பும் கலந்த கலவை.

மஞ்சள் நிறமாக பசை மாதிரி, நாக்கின் பின்புறமும், அன் நாக்கிலும் இருக்கும். தங்க கலர் மாதிரி இருக்கும். புளிச்ச ஏப்பம், புளிச்ச வாந்தி, பச்சை கலரில் பேதியும் இருக்கும். பெண் உறுப்பில் காரமான நீர் கசிந்து, கசிந்து மலடி ஆகிவிடுவாள். ஆண்களுக்கு கடுமையான விருப்பம் இருக்கும். ஆனால் பலம் இருக்காது. தண்ணீர் மாதிரி விந்து கசியும். தலை வலியின் போது புளிச்ச தண்ணீர் மாதிரி வாந்தியில் வரும். வாயில் சூடாகவும், எரிச்சலோடும் ஆவி வரும். நாள்பட்ட காயங்களில புளிச்ச நாற்றம் அடிக்கும். வாயில் புளிப்பு தெரியும். அல்சரின் போது வாந்தி புளித்த சுவை தெரியும். மலக்காற்று கூட புளிப்பாக வீசுது என்பார். ஆண், பெண் இருவருக்கும் சரி இல்லற விருப்பம் நிறைய இருக்கும். ஆனால் குறைவாகத் தான் ஈடுபட முடியும். காரணம் பலம் இருக்காது. விந்துவும் சரி, நாதமும் சரி நீத்து போய் தண்ணியாட்டம் மாறி புளிப்பாக ஆகிவிடும். ஆகவே இவர்களது வெளிப்பாடு எல்லாம் புளிப்பாகவே இருக்கும். இவர்களுக்கு மூக்கு சளியானது கெட்டியாகவும், மஞ்சள் நிறத்துடனும், நாற்றத்துடனும் இருக்கும். சருமம்:- உடலில் பல பகுதிகளில் அரிப்பும், மஞ்சள் நிறமான தடிப்பும் காணப்படும். விசேஷமாக பகல் நேரத்தில் பாதம் ஐஸ் மாதிரி குளிர்ந்து இருக்கும். இரவில் எரியும். இவர்களுக்கு தோற்றும் வாத நோயானது முழங்கால் மூட்டில் மட்டுமே ஏற்படும்.

NATRUM –SULPHRICUM

- நேட்ரம் சல்ப்ரிக்கம்

காந்தமும், உப்பும் கலந்த கலவை.

மண்டை, பொடனி, மூளை பகுதியில் அடிப்பட்ட பிறகு, அறுவை சிகிச்சைக்கு பின்பு மண்டையில் ஆழமான குத்து ஏற்பட்ட பிறகு ஏற்படும் பொதுவான அடிக்கு ARNICA. லேசான குத்துக்கு LED. ஏரியில் வீடு கட்டிக்கொண்டு வசிப்பவர்கள், நெல் வயல், சதுப்பு நிலப் பகுதியில், ஈரமான பகுதியில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் தொல்லைகளுக்கு இது. என் மனைவி குழந்தைகள், கணவன், குடும்பத்திலிருந்தும், பதவியிலிருந்தும் போயிடுவேங்க, ஆனால் உறவினர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும், சமுதாயத்துக்காகவும் கட்டு, பட்டு இருக்கிறேன் என்பார்கள். மாலை 4 வடி 7 வரை ஆஸ்துமா தொல்லை. கனேரியாவில் காலை 4 வடி 7 வரை வயிறு தொல்லைகள். மஞ்சள், பச்சை நிற வாந்தியும் ஏற்படும். சளியானது நாராட்டம் பச்சை நிறத்தில் வரும். இதேயிடத்தில் நாராட்டம் மஞ்சளாக வந்தால் HYD. இதே வெள்ளை நிறத்தில் நாராட்டம் வந்தால் K-BICH.

பெண்:- மாத விலக்கானது மூக்கில் வரும். காரமாகவும், எரிச்சலோடும் கொட்டும். இவர்களுக்கு வெள்ளையானது மஞ்சளும், பச்சையும் கலந்த மாதிரி இருக்கும். குழந்தையானது சிறு தவறு செய்யும், அப்போது திட்டினால் கூட மனம் நொந்து போகும். அவ்வளவு உணர்ச்சி மிக்கவர்கள்.

மனநிலை :- இசைக் கேட்டால் இவர்களுக்கு வருத்தம் ஏற்படும். பித்து, பிடித்து போய் விடும். முறை வைத்து வரும் மன நோய் (பைத்திய குணம்) எப்பவும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருக்கும். பாருங்க மருந்து வைத்து இருக்கிறேன், என் பையன், பொண்ணுக்கு கல்யாணம் ஆகற வரைக்கும் மருந்து குடிக்காம கட்டு பட்டு இருக்கிறேன் என்பார்கள். கோபம், தற்கொலை முயற்சி.

குறிப்பு:- ஒரு சாராயம் விற்கும் பெரியம்மா சொன்னாங்க. என் இடுப்பு பையிலே தாங்க அரளிக்காய் வைச்சி இருக்கிறேங்க, என் உடம்பில இருக்கிற நோயும், குடும்ப கஷ்டமும் தாங்க முடியலை, என் பையன் வேலைக்கு வந்து விட்டால் மருந்தை சாப்பிட்டு செத்து விடுவேங்க. அது வரை கட்டுபட்டு இருக்கிறேன் என்றார். இதை கொடுத்தவுடன் நோய் குணம் ஆகி விட்டது. படுக்கும் போது வயிற்றை அழுத்திப் படுத்தால் கூட ஈரல் பகுதி நகர்வது ஆடுவது, போலிருக்கும்.

NUX – MOSCHATA

- நக்ஸ் மோச்சடர்

ஜாதிக்காய்.

மிக, மிக உணர்ச்சி மிக்கவர்கள். அதாவது அதிகமாக சிரிப்பது, அதிகமாக வருத்தப்படுதல், கத்துதல், சோம்பலும், பரபரப்பாக நடப்பதும். இப்படி மன வேகத்தால் இதயம் நின்று போய் விடுதல். கிரு, கிருப்பு ஏற்பட்டு மயங்கி விடுதல். குறிப்பாக திடீர்ன்னு தாக்கும் வகையானதாகும். பெண்ணை அதிகம் தாக்கும். திறந்த வெளியில் நடந்தால் மயக்கம் வருது, கொஞ்சம் சாப்பிட்டாலும் உடனே தூக்கம் வந்து விடுகிறது என்பார்கள். தலையே இரண்டாக இருப்பதாக ஓர் உணர்வு. கண் பார்வை மந்தமா இருக்குது, மூக்கு வறட்சியும், கொஞ்சம் கூட வாசனை தாங்க முடியலை, வாய் வறட்சி, நாக்கு வேரில் ஊரல் ஆனால் தாக மிருக்காது. வயிற்றில் பக்கவாதம். எவ்வளவு தூங்கினாலும் மந்தமாக இருக்குது என்பார். வாசனை, தொடுதல் சப்தம் தாங்க முடியாது. மன நோயாளி ஆவார் IGN. மந்தம் படுத்து தூங்கி கொண்டேயிருப்பார்கள், மந்தம், பலஹீனத்தால் ஞாபக மறதி ANT –T, OP. நான் அதிகம் தூங்குகிறேன் (அதிகம் என்பது பற்றியே தான் புகார் வரும்.) கடுமையான நாக்கு வறட்சிக்கு APIS, LACH. தொண்டையில் மிக, மிக வறட்சி (படுக்கை புண்கள்) BAP. PYRO. முட்டாள், கிரு, கிருப்பு, வெய்யில் கால பேதி, பிரயாணம், பிறகு முதுகு வலி. மிக சிறிய உழைப்பும், கிரு, கிருப்பில் முடியும். வெள்ளை நிறமாக மாத விலக்கு பருவ காலத்தில் மட்டும் (வெய்யில், குளிர்) தோன்றும் நோய்கள். அதிகம் சாப்பிட்டதால் தலைவலி PULS, COFFIA.

NUX - VOMICA

- நக்ஸ் வாமிகர்

எட்டிக்காய்.

இம்மருந்துக்குரியவர்களது மனநிலை தனக்கு கீழ் வேலை செய்பவர்கள் சரியா வேலை செய்யணும், வெச்ச பொருள், வெச்ச இடத்தில் இருக்கணும். சேர் கொஞ்சம் கோணையாக இருந்தால் கூட எட்டி உதைப்பான். எதாவது தவறாக எழுந்திருந்தால் அந்தப் பேப்ரைக் கசக்கி தூக்கி எறிந்து விடுவார். இதே மாதிரி இருந்தால் ARS. தாங்கிக் கொள்வான். இவ்வளவு மோசம் கிடையாது. எந்த வேலையையும், எவ்வளவு நேரம் செய்தாலும், இவர்களுக்கு திருப்தியே கிடையாது. சாவேன் என்று மெரட்டிக் கூறுவார்கள். பூ, பத்தி, சென்ட், வெளிக்காற்று, பேன் காற்று போன்றவைகளையும், வாசனையும் இவர்களால் தாங்க முடியாது. சிறிது கூட சேராது தொல்லை தரும். சிறுநீர் மலம் போன்றவை தான் தொல்லைத் தரும். மலம் பாதியிலேயே நின்று விடும். மலக்குடலில் பாதியிலே நின்று விடும். இதனால் தான் மலம் வருது என்ற உணர்வு. அதனால் மலம் அடிக்கடி போவான். பாதியில் நிற்பதால். மலம், பேதி, சீதக்கட்டு கழிந்தால் சுகம் என்பார்கள். மாத விலக்கு நீடித்தும், இடைவெளி குறைவாகவும் இருக்கும். நிம்மதி தேடுவான். இவ்வளவு வேலையும் செய்யதப் பிறகு, போலிசில் பிடித்துக் கொள்வார்களோ என்று அதிக உணர்ச்சி வசப்பட்டால், அனைவரிடமும், இவன் வேலை வாங்குவான். ஆனால் இவன் செய்ய மாட்டான். மற்றவரை அமைதியாக இருக்க சொல்வான். ஆனால் இவன் கத்திக் கொண்டே இருப்பான். காப்பி சாப்பிட்டால் தொல்லை. எனக்கு நிம்மதி வேண்டும் என்பான். மற்றவர் தப்பு செய்தால் பொருத்து கொள்ள மாட்டான். அதிகாரம் செய்யும் ஆபிஸர், உத்தரவு போட்டு பேசுவான். சேராத உணவு, சித்த மருந்துகள், மற்ற மருந்துகள் சாப்பிட்டு வயிறு கோளாறு ஏற்பட்டால் அதை முறிக்கப் பயன்படும். குளிரின் போது கையை சுருட்டி போர்வைக்குள் வைப்பார். (வயிறு வலினால் வாந்தியில் மலமே வந்து விடும். PLB என்ற மருந்தும் பொருந்தும்.) பிறர் சிறிய தப்பு செய்தாலும் பொருக்க மாட்டான். (மன்னிக்கவே மாட்டான் ACID – NITE) கேள்வி கேட்டால் பயம், உணர்ச்சி வசப்பட்டு கூறுவார்.

OCIMUM – CANUIM

- ஓசிமம் கானாப்பியம்

பிரேஷ் நாட்டில் விளையும் சத்து மிக்க ஒரு தாவரம்.

இது முக்கியமாக சிறுநீரகம், சிறுநீர்பை, சிறுநீர் பாதைகளில் தோன்றும் தொல்லைகளுக்கு பொருந்தும். எப்படி என்றால் இவர்களுக்கு சிறுநீரில் உப்பு அதிகமாகிவிடும். பின்பு சிறுநீர் போனால், சிவப்பு நிறத்தில் மணல் மாதிரி சிறுநீரில் வந்து விடும். அதை ஒரு பாட்டிலில ;பிடித்து பார்த்தால் இப்படி சிறுநீரில் மணல் மாதிரி படிவங்கள் காணப்படும். இதற்கு இதுவே முக்கிய மருந்து. தொடையிடுக்கில் உள்ள கோளம் திடீர்ன்னு வீங்கி போயிடும். நெறி கட்டிகிச்சி என்பார்கள். வலது தொடையில் இப்படி வீங்கும். நினைநீர் கோளத்துக்கும், சிறுநீர் குழாய் பாதை வீங்கி தொல்லை தரும்.

சிறுநீரகம்:- குறிப்பாக இது சிறுநீரக தொல்லைக்கு பொருந்தும். அதாவது கட்டி எடுத்த பிறகும், காரமான சிறுநீரும், பல விதமான வலியும், சிறுநீரில் அதிகம், இரத்தம் வந்தாலும் பல விதமான வலிகளுக்கும் முக்கிய காரணம் இதுவே.

ஆண்:- இடது புற விதைக் கொட்டை வீங்கி சூடாக இருக்கும்.

பெண்:- பெண் பிறப்பு உறுப்பு, உதடு வீங்கி பெருத்து இருக்கும். மேட்டு பகுதியில் கத்தியில் அறுப்பது போன்ற வலி. மார்பு பெரியதாகவும், கனமாகவும் இருக்குது என்றும், காம்பு மேல் கை பட்டாலும் வலிக்குது என்பாள். பிறப்பு, உறுப்பை சொறிந்து, சொறிந்து உறுப்பே தொங்கி போய்விடும்.

சிறுநீர்:- சிறுநீரில் தட்ட பயிர் மாதிரி கற்களும், வெண்ணெய் மாதிரி திவளைகளும், தயிர் மாதிரியும், கோந்து மாதிரியும், இரத்த மாதிரியும், சிறுநீரில் இருக்கும். சிறுநீர் காரமாகவும் இருக்கும்.

OLEUM – SANTALIA

- ஓலியம் சான்டலியர்

சந்தன எண்ணை.

இம் மருந்து சிறுநீரக பாதையிலும், செக்ஸ் உறுப்பிலும், விசேஷமாக வேலை செய்யும். அதனால் விசேஷமாக கனேரியாவுக்கு இது சுத்தம் செய்ய உதவும். இவர்களுக்கு மிகவும் கடுமையான இருமல் ஏற்படும். அதற்கு ஒரு மிளகு அளவு சர்க்கரையை வாயில் போட்டால் போதும். உடனே எக்கி, எக்கி இருமி கொண்டிருப்பது உடனே தணிந்து விடும். சிறிது, சிறிது தான் கோழை வரும்.

ஆண்:- விரைப்பு தட்டும் போது மானி கடுமையாக வீங்கி வலிக்கும். அப்போது மஞ்சள் நிறமான சளி மாதிரி திரவம் கசியும். பெரினியம் (ஆஸன வாய்க்கும், மானிக்கும் இடைப்பட்ட பகுதி) உள்ளே கடுமையான வலியிருக்கும்.

சிறுநீர்:- அடிக்கடியும், எரிச்சல் வெட்ற மாதிரி வலியும், வீங்கியும், வாய் சிவந்தும், சிறுநீர் மெதுவாகவும், சன்னமாகவும் வரும். சிறுநீரகம் வரை வலி பரவும். கருப்பையே ஒரு பந்தாட்டம் உருண்டு யோனி புற வாயில் தெரியும். அப்போது நிற்க கஸ்டமும், ஒரு திரவம் கெட்டியாக நிறைய கசியும். நாட்பட்ட கட்டி தெரியும் அதற்கு இது நல்ல மருந்து.

OOPHORINUM

- உப்போர்பியம்

சினைப்பை முட்டையின் கட்டியில்.

குறிப்பாக பெண்ணின் சினப்பையில் தோன்றிய கட்டிக்கு இது முக்கிய மருந்து. கடுமையான வியாதினால் துன்பப்பட்டு பிறகு கருப்பையை விட சினைப்பை கெட்டியாகி அங்கு கட்டி, தட்டி விடும். இதை ஸ்கேனில் பார்த்தால் தெரியும். இதை கொடுத்தால் கட்டி கரைந்து (கருமுட்டை) ஓவம் செல்ல வழி விடும். இதனால் செக்ஸ் விருப்பம். குறைந்து இல்லறத்துக்கு பலஹீனம் ஏற்பட்டு அங்கு சொத்தை விழுந்த மாதிரி என்பார். குறைந்த வீரியம் போதும்.

ORIGANUM

-

ஓரிகானம்;இனிப்பு சுவையுள்ள தாவரம்.

இம் மருந்து பெண்ணின் நரம்பு மண்டலத்தையே தாக்கி விட்டு இவர்களுக்கு எப்போதும் காம உணர்ச்சி இருக்கும். பெண் உறுப்பின் வாயில் விரலை விட்டோ, (அ) ஏதாவது பொருட்களை வைத்தோ தேய்த்து, தேய்த்து சிற்றின்பம் அடைவாள். ஆசை வந்து விட்டாள் வேகமாக மறைவிடத்துக்கு ஓடுவாள். தேய்த்து கொள்ள. ஆகவே இப்படி செய்வதற்கு இதுவே பெரிய மருந்து. (மார்பை தானே கசக்கி, கசக்கி இன்பம் அடைந்தால் BUFO மருந்தாகும்.)

பெண்:- காமம் மிகுதியால் தேய்ப்பதில் பைத்தியமாகி விடுவாள். அதனால் மிகவும் களைப்பு. இதே மாதிரி காம மிகுதியினால் கனவில் கூட பிறப்பு உறுப்பை தேய்த்து, தேய்த்து இன்பம் அடைவது போல் கனவு. அதனால் பகலில் களைப்பு. தேய்ப்பதில் இவர்களை பைத்தியம் என்றே சொல்லலாம். செக்ஸ் விருப்பம் அதிகம் உள்ள மருந்துகள் CANTH, HYOS, PLAT, VALER.

OPIUM

- ஓபியம்

அபினி - இஸ்லாமிய நாட்டில் விளையும் காப்பி மாதிரி.

இம் மருந்துக்குரியவர்கள் தனது வேலையை மறந்து விட்ட பிறகு பயன்படும் மருந்து. அதாவது சிறுநீர், மலம், படிப்பு, மருந்து, சாப்பிட இப்படி தனது வேலையை செய்ய மறப்பவர்களுக்கு இது. இதை பச்சையாக கொடுத்தால் போதைக்கு பயன்படும். இதே நமது முறையில் வீரியமாக்கியதால் போதை மயக்க நிலையை தெளிய வைக்க பயன்படும். திடீர் பயம். கவலை ஏற்பட்ட பிறகு ஸ்தம்பித்துப் போவுதல், மிக நெருங்கியவர்கள், இறப்பு செய்தியைக் கேட்டவுடன் பர பரப்பினாலோ, பயத்தினாலோ அப்படியே ஸ்தம்பித்து போய் விடுவார். சிரிப்பு, அழுகை, பேச்சு இல்லாமல் அப்படியே நின்று விடுவார்கள். ஹோமியோபதி மருந்து வேலை செய்யவில்லை என்றால் இது தான் மருந்து.மருந்து வேலை தூண்டி விடும். நான்கு வருடம் முன்பு பயந்தேன்க. அந்த பயம் போயிடுச்சு, ஆனால் அந்த நினைப்பு இன்னும், இருக்குதுங்க என்றால். நீங்க மருந்து கொடுத்தீங்க இன்னும், எதுவும் மாற்றமில்லை என்றாலும், வயதானவர்களுக்கு (வைட்டல் போர்ஸ்) ஜீவ சக்தி குறைந்தாலும், இயற்கையிலேயே ஜீவ சக்தி குறைந்தவர்களுக்கும், நோயினால் ஜீவ சக்தி குறைந்தாலும், மருந்து வேலை செய்யவில்லை என்றால் இம் மருந்து. முனி பிடிச்சிருக்குது என்றாலும், நான் எல்லா டாக்டரையும் பார்த்துட்டேங்க என்றாலும், இம் மருந்து கொடுத்தால் ஜீவ சக்தியை அதிகரிக்கும் குறியும் காட்டும். வீக்கத்தில் கூட வலி யிருக்காது. மருந்து சாப்பிடறேன். அப்படியே இருக்குதே எதுவும் மாற்றமில்லை என்றால் இதை (OP) தந்தால் தக்க குறியை காட்டும். மலம் வருவதும், காற்று பிரிவது இரண்டுமே தெரியாது. என்றால். இனிப்பு சாப்பிட்டால் தொல்லை வரும்னு தெரியுதுங்க, தெரிந்தே தப்பு செய்திட்டேன் என்று தன் மீதே பழி போட்டுக் கொண்டால், என்னை ஏதோ பிடித்துக்கிட்டு இருக்குது, என் வாழ்க்கையிலும் ஏதோ பிடித்திருக்குது என்று புலம்பினால் ஆகிய அனைத்துக்கும் இது பொருந்தும்.