DIGITALIS – PURPURIA

- டிஜிடாலிஸ் பர்போர்பியர்

நரி நகம்.

மிக சிறிய அசைவு ஏற்பட்டாலும் இதய துடிப்பு குறைந்து விடுதல். இதயம் மெதுவாக குறைந்த எண்ணிக்கையுடன் விட்டு, விட்டு துடிக்கும். இதயம் வீங்கியிருக்கம். உடன் மூச்சு திணறும், சீக்கிரமாக நாம் இதய வியாதியில் இறந்திடுவோமா என்ற பயம். கிரு, கிருப்பும் தோன்றிவிடும். அப்பொழுது 40 துடிப்பு கூட இருக்கும். இதே 40 – ல் பலமான டப்பு, டப்பு சத்தம் கேட்டால் ஒற்றை நாடிக்கு KALMIA. மெதுவாக 40 துடித்தால் DIGITALIS இது தான் மருந்தின் வித்தியாசம். இதயம் நின்று விடுமோ என்று பயந்தால் இது தான் மருந்து. பயப்படாவிட்டால் KALMIA மன வேலை, உடல் வேலை, நோய், பயம் எதுவோ துடிப்பு குறைந்தால் இது தான் மருந்து. காமாலையிலும் மெதுவாக தான் நாடி துடிக்கும். சாம்பல் மாதிரி மலம். மூத்திரம் தடைப்பட்டு உடல் வீக்கம் ஏற்படும். குறைந்த நாடி தான், அப்பவும் துடிக்கும். விந்து சுரப்பி வீங்கி விடும். அதனால் அடிக்கடி சிறுநீர் போகும். உடலுறவிலோ, செக்ஸ் நினைவிலோ அது போன்ற கனவிலோ, விந்து நாத சக்தி வீணாகாது, ஆனால் தானாகவே கசியும். ஆரம்ப கால மேக வெட்டை. நிமிர்ந்து உட்கார்ந்தால,; சிறிது அசைந்தால,; வேலை செய்தால், பேசினால், காரி துப்பினால் கூட இப்படி மிகச்சிறிய அசைவு கூட இதயத்துடிப்பு குறைந்து போக காரணமாகி விடும். இதனை தொடாந்து உறவாக பல பாகங்களை குறிப்பிட்டு சுமார் 100 மருந்துகள் வரை தெளிவாக மற்றும் சுருக்கமாக சிஸ்டமேடிக் மெட்டிரியா மெடிக்கா ஆசிரியர் கைலாஷ் நாராயணன் மத்தூர் பார்த்து கொள்ளவும். அவசியம் அந்த நூலை பார்க்கவும். அந்த தொகுப்பு கையாண்ட விதம் தேனை விட இனிப்பாக உள்ளது.

DIOSCOREA

- டையஸ்கோரியர்

சர்க்கரை வள்ளி கிழங்கு செடியின் சருகு.

இம் மருந்து எல்லா வலிகளுக்கும் பொருந்தும் என்றாலும் அடிவயிற்றில் வெட்டுவது போல மிக, மிக கடுமையான வலிகளுக்கு மருந்துகளின் வரிசையில் முதலில் வருகிறது. மலக் காற்று நிரம்பி உப்பிசத்தால் வலிக்கும். சிறிதும் குனிய முடியாது. அதனால் வயிற்றை நிமிர்த்திக்கொண்டு எக்கி, எக்கி வாந்தி எடுப்பார். குமட்டுவார். கஷ்டத்தில நிமிர்ந்து உட்காருதல், நடத்தல், நிற்பதில் வலி தணியும், சிறுநீரகத்தில் கல் அதனால் வலி. அப்ப காரி, காரி எச்சி துப்புவார். வலதுபுற இடுப்பு நரம்பில் வலி. இதய நரம்பில் வலி. மலக் காற்று போனால் சுகம். இது ஆண்களுக்கு பொருந்தும். தூக்கத்தில் விந்து வேகமாக பீச்சி அடித்து விடும். இதனால் உரிய நேரத்தில் பயன்பட மாட்டார். குனிந்தாலும், டீ குடித்தாலும், நடந்த பிறகு, இரவு 2 மணிக்கு, அதிகாலை நேரம். மேலே கண்டவைகளினால் தொல்லைகள் அதிகம் ஆகும். நடந்தால், திறந்த வெளிக் காற்றில் பிரயாணம் செய்தால், சவாரி செய்தால், அழுத்தி விட்டால், நிமிர்ந்தால், சுகமாக இருக்கிறது. வலியும் குறைகிறது என்பார். இம் மருந்தின் விசேஷ குறி என்னவென்றால் வயிற்றை அப்படியே நிமிர்த்தி வில் மாதிரி பின்புறம் வளைந்தால் வலி தணிந்து போய்விடும். (இதே இடத்தில் எதிராக முன்புறம் குனிந்து வயிற்றை அழுத்தினால் சுகம் என்றால் COLOCY.) வலியாகப்பட்டது திடீர்ன்னு வரும். பயங்கரமாகவும் இருக்கும். மனகுறி, எனக்கு எல்லாமே கெட்ட பெயர் வர மாதிரியே இருக்குது என்பார். மற்ற மருந்துகளை போலவே இம் மருந்தும் ஆணுக்கும், பெண்ணுக்கும், அங்குள்ள உறுப்புகளிலும், மற்ற முக்கிய உறுப்புகளிலும், மிக, மிக கடுமையாக திடீர் என்று வலி ஏற்படுகிறது என்பார்கள். இதன் விசேஷ குறி என்னவென்றால் வலியுள்ள பகுதியை நிமிர்த்தி பிடிப்பார்கள். சுகத்துக்காக வயிற்றை நிமிர்த்தி பின்புறம் ஸ்டைலாகவும், பெண் மார்பை நிமிர்த்தி பின்புறமாக முதுகை வளைத்து போஸ் தரும் பெண்கள், நடிகைகள், பைத்தியத்துக்கும் இது பொருந்தும். வியாதியின் போதும் இப்படி செய்தால் பொருந்தும். இதை மத்தூரில் பார்த்து கொள்ளனும்.

DIPHERINUM

- டிப்தேரினம்

டிப்தேறிய கட்டி

டிப்தேறிய நோய் என்பது தமிழில் தொண்டை அடைப்பான் என்று பெயர். இது குழந்தைகளையே தாக்கி மூச்சு திணறி மரணத்தை ஏற்படுத்தி விடும். வாயைப் பார்த்தால் (உள்ளே) வெள்ளை நிறத்தில் பாலாடை மாதிரி ஜவ்வு படுதா போட்ட மாதிரி தொண்டையில் இருக்கும். இதனால் தான் குழந்தை மூச்சு திணறி இறந்து விடுகிறது. இந்த வியாதி பயங்கரமான வகையை சார்ந்தது. இதன் தோற்றம் எப்படி இருக்கும் என்றால் புத்தி மந்தமாகவும், முட்டாள் தனமாகவும், கேணம் பிடித்த மாதிரி பேசும், பார்க்கும், அப்போது மூச்சு விட திணறும் போது மூச்சு காற்று நாற்றம் வீசும். உடம்பு சூடு ஏறும், இறங்கும். ஒரு கட்டுப்பாட்டில் இருக்காது. உடம்பு ஆங்காங்கே குளிர்ந்து காணப்படும். (வட்ட, வட்டமாக குளிர்ந்து காணப்படும்.) அதே போல் ஆங்காங்கே இளைப்பு (அ) பார்வை மங்கி, மந்தமாக, பரிதாபமாக மரணப்பாதையின் வாயில் செல்வதும். சிசுவானது எந்த நேரமும் மரணம் நேரலாம் என்ற நிலையில் அப்படியே செயல் இழந்து படுத்து கிடக்கும். பக்க வாதம் இருக்கும் போதும் இந் நோய் தோன்றலாம். இந் நிலையானது திடீர்ன்னு கொள்ளை நோயாக கூட பரவலாம். கொள்ளை நோய் தோன்றிருக்கும் காலங்களில் சற்று கவனமாகப் பார்த்தால் எந்த வகை கொள்ளை நோயாக இருந்தாலும் தக்க மருந்தை தேர்வு செய்து தர முடியும். கொள்ளை நோயில் இறக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையை பெரும் பகுதியை குறைக்க முடியும். இதனுடைய அதிகரிப்பு எதனால், என்றால் குளிர்ச்சியின் போதும், படுத்திருக்கும் போதும், பால் குடித்தாலும், தொண்டைக்கு வேலை தரும் போதும், தொல்லைகள் அதிகமாகி இரத்தம் கெட்டு போயிடும். இது எதனாலும் தணிவும், சுகமும் இருக்காது. ஆகவே இதன் அவசரத்தையும், ஆபத்தையும் உணர்ந்து கொள்ளனும். ஆகவே மத்தூர் குறிப்பில் இதனுடன் என்ன, என்ன நோய் வரும். அதற்கு தக்க மருந்துகள் என்னென்ன என்பதை மிக நுட்பமாக எழுதி வைத்துள்ளார். அதனைப் பார்த்து கொள்ளனும்.

DROSERA – ROTUNDIFOLIA

– டிரோசிரியா ரோட்டன்டிப்பாலியா

சூரிய காந்தி சருகு.

குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும், மிக, மிக கடுமையான கக்குவான், இரும்பல், இழப்பும், இசிவும், பயங்கரமாக இருக்கும். மறுகுறி பாய்ந்து விட்டால் மூன்று மாதங்கள் கூட நீடிக்கும். கக்குவானுக்கு பிறகு தோன்றும் சின்னம்மை, பலவகை சரும நோய்கள், காச நோய், கண்நோய், தொண்டை நோய், குரல் கம்மி விடுதல் ஆங்காங்கே உள்ள கோளங்கள் வீங்கி கல் மாதிரி, எலும்பு சிதைவு ஏற்பட்டு, T.B. ஆகவும் மாறலாம். இரும்பும் போது, தொண்டையில் குறு, குறுத்த உணர்ச்சி, குதிரை கனைக்கிற மாதிரி இரும்பல் சத்தம் வரும், தொண்டையில் ஆடை போர்த்திய மாதிரி (பார்த்தால்) தெரியும். காக்கை வலிப்பும் தொற்றும். கை, கால் உதறும் போது வலிப்புகாரனாட்டம் உதறுவார். இந்த காலத்தில் பல குழந்தைகள் இறந்து விடுகின்றன. நாம் இந்த மருந்தை கொடுத்தால் அதன் கொடுமையான வேகத்தையும், மரணத்தையும் தடுத்து விடுலாம். ஆனாலும் கக்குவான் இரும்பலின் காலக்கெடு ஒன்றை மாதம் (1 ½ ) இருந்தே தீரும். இந்த அற்புதமான ஹோமியோபதி மருத்துவத்தில் மருந்து கொடுத்தாலும், கூட வேகத்தையும், மரணத்தையும் தவிர்க்கலாம். அதன் காலக்கெடு என்ற இயற்கை நியமங்களை மாற்ற இயலாது. அதாவது வேகமாகவும், விரைவாகவும் மரணம் வரும். மூளை காய்ச்சலுக்கு இங்கிலிஸ் மருத்துவத்தில் மருந்து கொடுத்தால், மூளை காய்ச்சல் குணமாகும். பிறகு மனம் மந்தப்பட்டு முட்டாள் (அ) கேணமும் பிடித்து விடும். ஹோமியோபதி முறைப்படி இந்நிலையில் கொடுத்தால், கொஞ்ச நேரம் ஜன்னி இழுக்கும். பிறகு கை, கால், செயல் அற்று போய்விடும். இப்பொழுது மூளைக்காய்ச்சல் சுத்தமாக சரியாகிவிடும். பிறகு சரும நோய்கள் தோன்றி பிறகு, படி, படியாக சில நாட்களில் இதுவும் குணமாகிவிடும் இது தான் இயற்கை நியதி. குறிப்பு:- அவர்கள் அவசரப்பட்டால் அவர்களை நாம் அனுப்பி விடனும். அவர்கள் அலோபதி மருத்துவத்துக்கு சென்று மரணம் அடைந்து விட்டால், அவர்கள் நமக்கு உறவினரோ, நெருங்கிய நண்பரோ, என்றால் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டு நமது கடனை முடித்து கொள்ளனும். இப்படி நமக்கு உபதேசம் செய்து நமது கடனை தீர்த்து கொள்ளனும். அந்த ஆன்மாவுக்கு நாம் இப்பொழுது வேற எதுவும் செய்ய முடியாது என்று Dr. HANNIMAN.கூறுகிறார். அதிகரிப்பு - பாடினால், குடிச்சால், சிரிச்சால், தரையில் படுத்தால் தொல்லைங்க என்பார்கள். கஷ்டமும் ஆகிவிடும். நடந்தால், அசைந்தால், திறந்தவெளி காற்றில் இருந்தால், சொறிந்தால் சுகம் என்பார்.

DULCAMARA

- டல்கமரர்

இனிப்பும், கசப்பும் கலந்த கலவை.

இவர்களுக்கு குளிர்காலத்தின் துவக்கத்தின் போதே மூட்டு வலி, பேதி, சளிபிடிப்பு என்று பல தொல்லைகள் கூறுவார்கள். அதே போல் வெய்யில் கால துவக்கத்தின் போதும், சூடு பிடிச்சிகிடுச்சி, கண் வலிக்குது, வயிற்றால போகுது என்று கூறுவார்கள். எனக்கு பாருங்க எந்த பருவம் ஆரம்பித்தாலும், தொல்லைதாங்க என்பார். ஏசி தியேட்டர் உள்ளே போனாலும் தொல்லைங்க, வெய்யிலில் போனாலும் மேலே கண்ட நோய்களை கூறி இதனால் இந்த நோய் வந்து விட்டது என்பார். கோபமே இல்லாமல் கசா, முசான்னு பேசுவார்கள். அருகில் பெண்கள், பெரியவர்கள் இருக்கிறார்களே என்று கூட பார்க்காமல், வெட்கம் இல்லாமல் கொச்சை, கொச்சையாக, பேசினால் HYOS.) நள்ளிரவில் தூக்கம் கெடுவதால் கவலை. மாலை நேரத்தில் ஜிலு, ஜிலுப்பு காற்றினால் தூக்கம் கெட்டாலும் கவலை, பொறாமை, இந்த மாதிரி எதுவும் இல்லாமல் கற்பனையாக அழுவார். கற்பனையாக மூட்டை பூச்சி, எறும்பு போன்றவற்றை தேடுவார்கள். குளிர்காலத்தில் தொண்டை வறட்சிக்கு ARS, BRY. கொடுத்து சரியாகா விட்டால் இது ஒன்று தான் பெரிய மருந்து. பேசும் போதும், எழுதும் போதும் வார்த்தைகளை சிந்திப்பார். கசா, முசான்னு பேசுவார். உடன் கோபம் இருக்கும்.

ECHINACEA - ANGUSTIFOLIA

– எக்னீஸா அங்கஸ்ட்போலியா

செடி வகை.

விஷ பூச்சிகடிகள் நண்டுவாக்கிளி, தேள், பூரான் போன்ற விஷ கடிகளுக்கும், உணவு பொருளில் எலி பாஷனம், மற்ற பூச்சி கொல்லி மருந்துகள் போன்ற நஞ்சு தன்மை உடலில் ஏறிவிட்டால் இந்த மருந்தின் தாய் திரவத்தை வெண்ணீரில் 10 சொட்டுகள் கலந்து அடிக்கடி கொடுத்து கொண்டே வரணும். அப்படி செய்தால் விஷம் முழுமையாக நீங்கி விடும். நீங்கும் வரை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். (இது நாய்கடிகளின் விஷம், நாக பாம்புகளின் விஷம், வீரியன் பாம்புக்கடிகளுக்கு பாம்பு வகைகளின் கடி விஷத்திற்கும். பெரிய விஷத்திற்கெல்லாம் இது பொருந்தாது.) இதே போல் தற்கொலை செய்து கொள்ள விரும்பி விஷம் குடித்தவர்களுக்கு இது பொருந்தாது. சிறு விஷகடிகளுக்கு பொருந்தும். பெரிய விஷங்களுக்கு தக்க குறி பார்த்து மருந்து தரணும். தற்கொலை செய்து கொள்ள குடித்த மருந்தை முதலில் வாந்தியாகவோ, பேதியாகவோ எடுத்த பிறகு குறியை பார்த்து மருந்து தரணும். குறி தெரியவில்லை என்றால் அது வரை மட்டும் இதை பத்து நிமிஷத்துக்கு, ஐந்து நிமிஷத்துக்கு ஒரு முறை நோயின் தீவிரத்துக்கு தக்கவாறு 10 மில்லி வெண்ணீரில் 10 சொட்டு இந்த மருந்தை விட்டு குறி தெரியும் வரை கொடுத்து கொண்டே இருக்கணும். தூக்கு போட்டு பாதியில் இறக்கி விட்டால் (உயிரும் போகாது, ஆரோக்கியம் இல்லாத ஒரு மயக்க நிலைக்கு) CARB-V, CUPER, LACH, NUX-V, SPONG. இம் மருந்தின் குறிகள் தோன்றலாம். தக்க மருந்து கொடுத்தால் அவர்களை காப்பாற்றி விடலாம்.

EUPATORIUM – PERFOLIATUM

– இப்படோரியம் பெர்போலியம்

எலும்பு மூட்டு.

இவர்களுக்கு தோன்றும் வாத வலியானது (அ) எந்த வலியானாலும் எப்படி இருக்கும் என்றால், கை, கால், மூட்டு எல்லாம் கழண்டு போகிற மாதிரி வலிக்குது என்பார். அவ்வளவு வலிங்க (துணி கூட அங்கு பட முடியலிங்க என்றால் ARN. மூட்டில் வைத்து நசுக்கினால் (அ) ஏறி மிதித்தால் நன்றாக இருக்கிறது என்றால் BRY.) வலியுள்ள மூட்டை இப்படியும், அப்படியும் முறுக்கி கொண்டும், நெட்டு எடுத்து கிட்டே இருந்தால் சுகம் என்றால் RHUST. இந்த வலினால் மனசு இருப்பு கொள்ளவில்லை டென்ஷன் என்றால் ARS.. இது எலும்பு இரணம் மாதிரி வலி. வலி திடீர்ன்னு வருது, திடீர்ன்னு மறையுது. குறிப்பிட்ட நேரமானால் வலி வருது, அடிப்பட்டு நசுக்கிய மாதிரி வலி, நெஞ்சு, பின் மண்டை, எலும்பு, நுரையீரல், வயிறு போன்ற பகுதிகளில் தாக்கும். ஆனால் இதன் முக்கிய ஒரே குறி எலும்பு மூட்டே கழண்டு போகிற மாதிரி வலிக்குது என்பார். கையோ, காலோ, இடுப்போ, எந்த மூட்டாக இருந்தாலும் இப்படி சொன்னால் இது தான் ஒரே மருந்து.

EUPHORBIUM

- இப்போரியம்

வனத்தில் விளையும் விஷத்தன்மையுள்ள பெரிய வகை கற்றாழை.

இவர்கள் சகிப்பு தன்மை உள்ளவர்கள். வாழ்க்கையில் ஓயாமல் கவலை, கஷ்டம், நஷ்டம், ஏமாற்றம், இழப்பு இவைகளை இடைவிடாமல் தாங்கி, தாங்கி சித்ரவதைப்பட்டு, பட்டு உடல் உறுப்புகளில் நோய் (அ) வலிகளை சகிக்க முடியாத அளவு தாங்கி, தாங்கி முடிவாக சகிப்புதன்மையே புற்று நோயாக மாறிவிடும். அப்படி சகித்து கொண்ட பிறகு தோன்றும் புற்றுக்கு இது ஒன்றே தான் மருந்து. கோமாவில் படுத்திருக்கும் போது முட்டாள் தனமாக உளறுவார்கள். கண் விழிக்குள் பிப்பு எடுக்கும். மிக உணர்ச்சியாகி விடுவார்கள். கடிக்கிற மாதிரி, அறுக்கிற மாதிரி, வெட்டற மாதிரி, குத்துகிற மாதிரி இப்படி எல்லா விதமான வலிகளும் மனதிலும், உடலிலும் தோன்றும். சித்திரவதையும், சகிப்பு தன்மையும் தான் அதற்கு காரணம்.

EUPHRASIA OFF

– இப்போரேசியா ஆப்

கண் கரு விழி.

இம் மருந்தும் மற்ற மருந்துகளை போலவே ஆண், பெண் உறுப்புகளிலும், கண், காது, மூக்கு, தலை, வயிறு என்று எங்கும் தாக்குகிறது. பக்கவாதம், கக்குவான், இரும்பல், இடைகால மாதவிலக்கு, கண்வேக்காடு, விந்து நாத சுரபியில் தொல்லை, கண்ணுக்கள்ளே புண், எரிச்சல் கொப்பளங்கள், அம்மைக்குப் பின்பு கண் தொல்லை, மூக்குப்புற்று, என்னமோ குத்திக்கிட்டே இருக்குது என்பார்கள். ஆனால் இதன் முக்கிய விசேஷ குறி என்னவென்றால் கண்ணை தாக்கி, கண்ணீர் வடியும். இது காய்ச்சல், டைபாய்டு, மலேரியா, வெய்யிலில் போன பிறகும், மெட்ராஸ் ஐ என்று சொல்லியப் பிறகும், இப்படி எந்த ஒரு அடையாளத்;தைச் சொல்லியப் பிறகு கண்ணிலிருந்து பச்ச தண்ணியாட்டம் ஜில்லுன்னு, பொள, பொளன்னு கொட்டுது, சல, சலன்னு வடியுதுங்க என்றால் உடன் மூக்கில் சளி காரமாக பச்ச தண்ணியாட்டம் இருக்குது என்பார். இது ஒன்று தான் இந்த மருந்தின் முக்கிய குறி. (இதே மாதிரி கண்ணில் வரும் தண்ணி காரமாகவும், மூக்கில் வரும் தண்ணி ஜில்லுன்னு வந்தால் ALL – CEPA. இது தான் ஒரே மருந்து.) ஜிலு, ஜிலுப்பு கண்ணிலா? மூக்கிலா? தெரிந்து கொண்டால் போதும். அதிகரிப்பு, தொல்லை:- கீழே விழுந்து குத்துபட்டுட்டேன், மூக்கிலும், கண்ணிலும் ஒழுகுது. காலையில் கதவுகிட்டே நின்னா, படுக்கையில் இருந்தால், வெது வெதுப்பில் இருந்தால், ஈரம் பட்டால், வறண்டக் காற்று தொட்டால்(HEP. மாதிரி) மேலே கண்ட காரணங்களால் தணிவு (சுகம்):- இரவில் தரையில் படுத்துக் கொண்டாலும் சுகம்.

FERRUM - METALICUM

- ப்பெர்ரம் மெட்டாலிக்கம்

இரும்பு.

கையிலோ, காதிலோ, இரும்பை தொட்டாலோ, பட்டாலோ தொல்லை. மிகவும் மெலிந்து வெளுத்து சோகை பிடித்த மாதிரி இருப்பார்கள். இதற்கு காரணம் பிராணவாயு இரத்தத்தில சேராதது தான். அதனால் மிகவும் பலஹீனம் ஆகிவிடுவார்கள். பேப்பரை கசக்கினால், ஆடையை கிழிக்கும் சத்தம், உரசல் சத்தம் இப்படி மிக சிறிய சத்தத்தை கூட தாங்க முடியாது. பாதிப்பும் ஏற்படும். தட்ப வெப்ப மாறுதல் போன்றவைகளினாலும் எரிச்சல் அடைவார். மாத விலக்கிற்க்கு முன்னதாக காதில் ரிங்கார சத்தம் கேட்குது என்றும், தலையில் தண்ணி கொட்டுகிற மாதிரி இருக்குது. பின்பு அது கிறு, கிறுப்பில் முடியுது என்பார். பல் வலியின் போது ஐஸ் தண்ணி பல்லில் பட்டால் வலி நின்று விடுகிறது, என்பார். இது இம் மருந்தின் முக்கிய குறி. இப்படி இதயம், நுரையீரல், கருப்பை, ஆண், பெண் தன்மையிலும் தோன்றும், குறைபாடுகள் எல்லாமே பிராணவாயு இரத்தத்தில் சேராத காரணத்தினாலும், சோகை பிடித்த வரலாறு உள்ளவர்களுக்கு இம் மருந்து பொருந்தும். அதிகாலை நான்கு மணிக்கு குளிரும். ஆனாலும் உள்ளங்கை, உள்ளங்கால் சூடாக சுத்த சிவப்பாக இருக்கும். உடன் ஏராளமான வியர்வையும் இருக்கும். இது இம்மருந்தின் முக்கிய குறி. குறிப்பு:- தரையில் தேய்க்கர சப்தம், கல்லு உரையர சத்தம், இப்படி எந்த சத்தத்தையும், உரசலையும் தாங்க மாட்டார்கள். அவ்வளவு உணர்ச்சி மிக்கவர்கள். பல் கூச்சம் ஏற்படும். இன்றைக்கும் இரத்த குறைவுக்கு, சோகைக்கு சத்து ஊசி இரத்த ஊசி, குளுகோஸ் ஏத்து என்பது எல்லாம் இதில் அடங்கி விடும். சிறிய தடை என்றாலும் கோபம் வரும். புளிப்பும், முட்டையும் விரும்பி சாப்பிடுவார்கள். வாந்தியும், பேதியும், குபுக், குபுக்குனு வரும். வாந்தி புளிப்பாகவும், கசப்பாகவும் இருக்கும். குழந்தைகளுக்கு அடிக்கடி பேதி ஏற்படும். கொய்னா மருந்தை அடிக்கடி சாப்பிட்டு சக்தியை இழந்தவர்கள், ஆஸ்துமா வியாதியின் போது நடக்க விரும்புதல், ஆனால் நடந்தால் எல்லா வலியும் வந்து விடும். இது நள்ளிரவில் இப்படி ஏற்படும். வாத வலியானது இடது தோள்பட்டையில் துவங்கி மணிக்கட்டில் இறங்கி விடும். மீதி விளக்கத்தை மத்தூரில் பார்த்து கொள்ளவும்.

FERRUM - PHOSPHORICUM

- ப்பெர்ரம் பாஸ்பாரிக்கம்

இரும்பும் பாஸ்பரசும் கலவை.

காய்ச்சலின் போது, உடம்பு நெருப்பாட்டம் சுடும். இரத்த மாட்டம் நிறமும் இருக்கும். நெருப்பாட்டம் கலரும் இருக்கும். BELL லடோனாவா? இதன் குறியா என்று பார்க்கனும். மெதுவாக வருவதும், இறங்குவதும் FERR-PHOS. திடீர் என்று வருவதும், திடீர் என்று இறங்கும் காய்ச்சல் BELL. இது தான் வேறு பாடு குறிகள். பார்த்து கொள்ளனும். சுத்த இரத்த வாந்திக்கு IP. வை பார்கனும். சுத்தமான இரத்தம் காரி துப்புவார். F.P.. துப்பினால் இது. வாந்தி என்றால் IP. இது தான் வித்தியாசம் பார்த்து கொள்ளனும். கருப்பை கூட தொங்கும். குளிர் காற்றிலும், தேக உழைப்பிலும், ஓய்வின் போதும், நிற்பதாலும், மாலை 4 மணியிலிருந்து காலை 6 வரை இரவில் தொல்லைகள். அழுத்துவதாலும், மெதுவாக நடப்பதாலும், மெதுவாக எழுந்திருப்பதாலும் போன்ற காரணங்களால் சுகம். (குறையும்.) குறிப்பு:- மத்தூரில் இம் மருந்தைப் பற்றி பல குறிகளையும், அவைகளுக்கு தக்க மருந்துகளையும் பார்த்துக் கொள்ளவும்.

FLOURICUM - ACIDUM

- ப்ளோரிக்கம் அசிடம்

ப்ளோரிக் என்ற கார(க)ம்.

சிபிலிஸ் நோயுள்ள பெற்றோருக்கு பிறந்து பாதரசம் அதிகமாக சாப்பிட்டதால் அசுத்த இரத்த குழாய் கெட்டு இளம் வயதிலேயே கிழவர் மாதிரி ஆகிவிடுவார். ஆபத்து கட்டத்துக்கே போய்விடுவார். சிறிது சூடு, குளிர்ச்சி, குளிர்க்காற்று பட்டாலும் அதிக தொல்லை தரும். பழைய தழும்பு பெருத்தோ, கல் மாதிரியோ ஆகும். முண்டும், முடிச்சியும் ஆக மாறிவிடும். (அ) தழும்பு ஆறாமல் வாய் திறந்தே இருக்கும். உடன் CAUST, GRAPH.மச்சம் கூட தட்டம் மாதிரி பெரிதாகி புற்றாக மாறி விடும். நீண்ட நாட்களாக புண் ஆறாது. ஆதனால் படுக்கை புண்ணாக மாறி ஏராளமான கழிவுகள் வெளியேறும். சூட்டினாலும், கஷ்டமும், குளிர்ச்சினால் சுகமும் ஏற்படும். மின்னல் மாதிரி மூட்டில் வலிக்குது என்பார். பல், கண், முகம் போன்ற பகுதியில் சீக்கிரம் சொத்தை விழுந்து விடும். படுக்கை சூடே தாங்க முடியாது. இரு பருவமும் தொல்லை MERC, ANT-C. பார்த்து கொள்ளனும். என் உடம்பு சூட்டு உடம்புங்க, சூடான இரத்தம் ஓடுதுங்க என்பார்கள். இரத்தக் குழாய்களில் முண்டு முடிச்சி இருக்கும். அசுத்த இரத்தக் குழாயில் பொட்டுக் கல்லையாட்டம் சின்ன, சின்ன கட்டி இருக்கும். இவர்கள் சைக்கோஸிஸ் வகையைச் சார்ந்தவர்கள். இவர்களுக்கு மருவு பெரிதாக இருக்கும். அதில் மயிரும் (முடியும்) இருக்கும் இது முக்கிய குறி. பொருக்க முடியாத வாடையும் வரும். நகம் உருண்டு தொங்கியிருக்கும். காதிலிருந்து காரமான தண்ணி வடியும், பொருக்க முடியாத நாற்றமும் இருக்கும். சூட்டுல, சூடான அறையில் இருந்தால், சூடாக சாப்பிட்டால், சிறுநீர் கழிய தாமதமானால் தொல்லை, ஒயின்ஸ் சாப்பிட்ட பிறகு தொல்லை, தலைவலி, சிறுநீர் கழிந்த பிறகும், சாப்பிட்டால் ஜிலு, ஜிலுன்னு திறந்த வெளி காற்றில் இருந்தாலும், பச்ச தண்ணீரில் குளித்தாலும், வியாதி தணிந்து விடுகிறது. (அ) சுகமாக இருக்குது என்பார்.

GAMBOGIA

- காம்போஜியம்

குடல் பகுதி.

இதன் முக்கிய குறி என்னவென்றால் மலம் கழிக்க உட்கார்ந்த பிறகு கொஞ்ச நேரம் கழித்து முக்கிய பிறகு மலம் சர்ன்னு பீச்சியடிக்கும். இது அடிக்கடி தேவைப்படாத மருந்து தான். உட்கார்ந்தவுடன் (அ) குனியும் போதே பீச்சியடித்தால் CROT-T. மருந்தாகும். நாம் பொறுமையாக உற்று கேட்டால் எந்த மருந்துக்குரியவர் நோயாளி என்று தெரிந்து விடும். மருந்து மாறிவிட்டால் வேலை செய்யாது. மலம் அவசரம், வேகம், பேதி பீச்சியடிக்கும். சர்ருன்னு CROT –TIG. மலம் உட்கார்ந்த பின்பு மெதுவாக முக்கிய பிறகு பேதியில் சர்ன்னு பீச்சியடித்தால் GAMB. இவ்வளவு தான் வேகமா? அது மெதுவாகவா? இது தான் வேறுபாடு ஆகும். இம் மருந்து பெரும்பாலும் வயதானவர்களுக்கு பயன்படும். பேதி தண்ணி மாதிரி அடிக்குது என்றும், வாயு தொல்லை, உப்பிசம் காற்று பிரியுது என்ற தொல்லைகளும், தலை கணமாயிருக்குது என்ற தொல்லைகளும், தலை கணமாகயிருக்குது, கண் பார்க்க முடியலை விரைச்சுகிச்சு என்ற தொல்லைகளையே பெரும்பாலும் கூறுவார்கள். பல் ஓரங்களில் ரொம்ப உறுத்துது, என்றும், எரிச்சல், அறுப்பது போலவும் இருக்கும். அப்போது தொண்டை, நாக்கு வறண்டு விடும். சாப்பிட்டவுடன் வயிறு வலி, மலம் கழிந்தப் பிறகு காற்றுப் பிரியுது. வயிறு உள்ளையே உறுளுது என்று கூறுவார்கள். சீத கடுப்பில் இப்படி ஏற்படும். சேக்ரலில் திடீரென வலி ஏற்பட்டாலும் மேலே கண்ட தொல்லைகள் ஏற்படும். உறவு மருந்துகள்் ALOSE – PODO kw;Wk; PULS, CROTON – TIG.

GELSEMIUM – SEMPERVIRENS

- ஜெல்சிமியம் செம்ப்ர்வைன்ஸ்

மஞ்சள் நிறமுள்ள மல்லிகை பூ.

மெத்தைப் படி, இராட்டினம், மலை ஏறும் போது பயம். அம்மாவை கட்டிப்பிடித்து கொள்ளும் சிறுவர்கள். உடம்பு கணமாக இருக்குது அதனால் படுக்கிறேன் என்பார். கடந்த காலத்தில் செல்வ செழிப்பும், மகிழ்ச்சியையும் நோயின் போது (இப்ப) கூறி கொண்டிருந்தால் உடன் COFF. எதிரில்; உள்ள பொருளோ, மனிதர்களோ இரண்டு, இரண்டாக தெரிந்தாலும் இது. இதயதுடிப்பு 3 வது, 5வது துடிப்பில் நின்று, நின்று துடிக்கும். சிறுநீர் போனால் சுகமாக இருக்குது என்பார். ஆனால் எழுந்திருக்கவே முடியாது. அதிக கூச்சத்தினாலும், பயத்தினாலும் விழுந்தே கிடப்பார். பெரியவர் முன்னாடி பேசுவதற்கு நடுங்கினாலும், கூச்சத்தினாலும், பயத்தினாலும் விழுந்தே கிடப்பார். பெரியவர் முன்னாடி பேசுவதற்கு நடுங்கினாலும், கூட்டத்தில் பேச எழுந்து நின்றதும் நடுக்கல் வந்துவிடும். குளிருக்கு, குப்பைகளை போட்டு எரித்து குளிர் காய்வார். இதய வியாதியின் போது மட்டும் அசைந்தால் சுகம். (இங்கு கஷ்டம் என்றால் DIG ஆகும்.) உடம்பு கரைந்தால் IOD. நிமிர்ந்து உட்கார்ந்தால் வயிறு வலி அதிகம் என்பார். பிறர் சண்டையை இவர் பார்த்தால் இவரது கை, கால், நடுக்கல் எடுத்து விடும். சோம்பல் வெளியில் எங்கும் போக முடியலை என்பார்கள். சிறுநீர் கழிக்க ஓடுவார். ஓடிய பிறகு கழிப்பார். இதயம் நின்று போகும் என்று பயந்தால் LOBIELIA. இரும்பு வலைக்குள் வைத்து நசுக்குவது போல் இருந்தால் CACT, LACH. உடம்பு வலியினால் படுக்கிறேன் என்றால் BRY. மரமாட்டம் இருக்குது அதனால் படுக்கிறேன் என்றால் N-M. சூடு வேணும் அதனால் அடுப்பையே கட்டிப் பிடித்துக் கொண்டால் N-M, GELS, BELL.. தலையை ஆட்டி பதில் சொன்னால் LYC, PULS, SULPH.குளிரில் தலையை முழுக்க, முழுக்க ஆட்டினால் GELS. ஊருக்கு போக எண்ணும் போதே பயத்தில் மலம் கழிய பாத்ரூம் போயிட்டு போயிட்டு வருவார்கள். தன்னை யாரோ இழுப்பது போல் எண்ணம். குறிப்பு:- உடம்பு கணத்தினால் அசையாமல் படுத்தே இருப்பார். இது தான் முக்கிய குறி. இருதய வியாதின் போது மட்டும் அசைந்து கொண்டே இருப்பார். இது தான் இம் மருந்தின் (இருதய வியாதின்) முக்கிய குறி.

GLONINE

– க்லோனைன்

வெடிமருந்து.

இம் மருந்தின் முக்கிய குறி வெடிப்பது போல் இருக்கும். சிறு மூளையே அப்படியே வெடிக்கிற மாதிரி வலிக்குது என்பார். சூரிய வெளிச்சம் நெற்றியில் பட்டவுடன் பயங்கரமாகவும், வெடிப்பது போல வலிக்குது என்பார். எந்த தொல்லைகளையும் வெடிப்பது போல இருப்பதாகவே கூறுவார்கள். ஒருவருக்கு வலிப்பு வருவதற்கு முன்பு பார்க்கும் உருவமெல்லாம் பாதி, பாதியாக தெரிவது போல இருக்குது என்றார். அதற்கு இந்த மருந்தைக் கொடுத்தவுடன் வலிப்பு குறைந்து விட்டது. எதிரில் உள்ள பொருட்கள், மனிதர்கள் பாதி இருட்டும், பாதி வெளிச்சமும், தெரியும். பயங்கரத்துக்கும், கடுமைக்கும், பார்க்கும் பொருள் பாதி, பாதியாக தெரிந்தால் இது தான் மருந்து, இரண்டு, இரண்டாக தெரிந்தால் GELS. ம் ஆகும். சூரிய வெப்பம் அதிகமானால் தலைவலி வந்தால் KALMIA, N-M, PHOS, SANG, SPIGI, STANN. ஓத்தடம் கொடுத்தால் வயிற்று வலி சரியா போகுதுங்க என்றால் NUX.. இந்த மருந்து மூளையையும், நரம்பையும் இதயத்தையும் மிக அதிகமாக தாக்கும். சூரிய வெளிச்சம், கேஸ் லைட் வெளிச்சம் பட்டால் கூட தலைவலி பயங்கராமாக வந்திடுச்சுங்க என்பார்கள் LACH, N-C, GLONE. சூட்டினால் தலைவலி ஏற்படும். எதனாலும் தணிவு ஏற்படாது. குறிப்பு:- நடுக்கலின் போது, வயதானப் பின்பு தளர்ச்சியின் போது முன்புறம் தலையை ஆமா, ஆமா என்று சொல்வது போல் ஆட்டினால் இது தான் மருந்து. (இதே இடத்தில் தலையை இல்லை, இல்லை என்று ஆட்டினால் LYC.

GLYCERINUM

– க்ளைசோரினம்

எண்ணெய்களிலும், கொழுப்பு, உப்பு - இனிப்பு.

இதை பல நிலைகளில் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக சினிமாத் துறையில் கண்ணீர் வருவதற்காக இதைப் பயன்படுத்துகிறார்கள். இந்த மருந்து நீடித்து, ஆழ்ந்து வேலை செய்யக்கூடிய மருந்து. இது புதிய திசுக்களை உற்பத்தி செய்யும். அதனால் உடல் இளைப்பிற்கு இது நல்ல மருந்து. மனம் மற்றும் உடல்களில் நன்றாக வேலை செய்யும். மனமும், உடலும் இளைத்துள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு இது நல்ல மருந்து. உடல் இளைத்ததையே திரும்ப, திரும்ப கூறுவார்கள். முதல் நிலையில் இந்த குறி தெரியாது. 2 வது நிலையில் நன்குத் தெரியும். இவர்கள் பொதுவாக உடல் இளைப்பைத் தான் கூறுவார்கள் என்று Dr.W.M.B. GRIG கூறுகிறார். தலை நிரம்பி இருப்பது போலவும். மனம் எங்கும் அலைவது போலவும், குழப்பமாகவும் இருப்பார்கள். இவர்கள் பலவிதமான வலிகளைப் பற்றிக் கூறுவார்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இப்படி ஏற்படும். குறிப்பாக மாதவிலக்கிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த வலிகளைப் பற்றி சொன்னால் இது தான் முக்கிய மருந்து. பின் மண்டையில் நிரம்பிய மாதிரி இருக்கும். மூக்கடைப்பு, தும்மல், மூக்கில் ஏதோ உறுத்திக் கொண்டிருக்கும். தண்ணி மாதிரி ஒழுகும். புழு ஊறுவது போன்ற அதிகமான உணர்;வு. சளி சீதலமாட்டம் வரும். சளி ஜவ்வு மாதிரி கெட்டியாகி விடும். மூக்கின் உள்ளுறுப்பு இருக்கி பிடித்த மாதிரி இருக்கும். மார்பு:- மார்பில் எக்கி, எக்கி இரும்பல் வரும். இதனால் பலஹீனம். இவர்களது மார்பு ஏதோ நிரம்பி மேலே தூக்கிக் கொண்டிருக்கும். மற்றும் இம்புலின்சியா, நிமோனியா நோயாளிகளுக்கு இப்படி இருக்கும். நுரையீரல் குழல் மற்றும் பையின் மீது மூடியுள்ள தோளில் ஏற்படும் தொல்லைகள். வயிறு :- இரைப்பையிலிருந்து சிறுகுடல் வரை ஏதோ எரிந்து கொண்டும் போகும். அடிக்கடி சிறுநீர் நிறையப் போகும். அந்த அளவுக்கு சிறுநீர் உற்பத்தியாகும். விசேஷமான குறியாக அதிக இனிப்பை விரும்புவார்கள். சர்க்கரை வியாதியும் இருக்கும். பெண்:- நீண்ட நாட்களாக ஏராளமாக கொட்டிக் கொண்டேயிருக்கும் மாதவிலக்கு. இதனால் கர்ப்பபை இறங்கியது போலவும், பாரமாகவும் இருக்கும். இவர்களுக்கு ரொம்பக் களைப்பாகவும் இருக்கும். இந்த நேரத்தில் கைக்கால்களில் வாத நோய் ஏற்பட்டது போல இருக்கும். இது திரும்ப திரும்ப வரும். இவர்களது பாதம் ரொம்ப வலியாக இருக்கும். தொட்டால் சூடாக இருக்கும். பெருத்தது போன்ற உணர்வும் இருக்கும். உறவு மருந்துகள்:- CALC-C, GELS, LACTIC-ACID. குறைந்த வீரியம் நல்லது.

GRAPHITES

– க்ரா்பைட்ஸ்

கருப்பு ஈயமும் வாழைப்பழ தோலும் கலந்த கலவை.

திராட்சை பழம் போல வரிசையாக தொடர்ந்து மலம் புளுக்கை, புளுக்கையாக இருக்கும். அதாவது உத்(த)ராட்ச மாலையாட்டம் இருக்கும். அதன் மேல் சளி பூசி இருக்கும். அல்சர் வலியில், சாப்பிட்டால் வலி தணிந்து போகும். வயிறு எரிச்சல் வந்தாலும் சாப்பிட்டால் தணிந்து போய்விடும். இதனால் அடிக்கடி சாப்பிட வேண்டியது வரும். இதனால் குண்டாகி விடுவார்கள். அரிப்பு எடுக்கும். சொறிந்த பிறகு அங்கு பிசின் மாதிரி ஒரு சொட்டு நீர் இருக்கும். கட்டியை அறுத்து எடுத்த பின்பு அந்த இடத்தில் வலி என்பார். பால் குடித்தால் வயிற்று வலி தணிந்து விடும். உடன் CHEL. வாந்தி எடுத் பின்பு வலி என்றால் ARS, SEP. குண்டாக இருப்பார். நான் இளைத்து போய் விட்டேன் என்றால் இது தான் மருந்து. தழும்பில் வலி தோன்றி, எரிச்சல் தோன்றி புற்றாக மாறி விடும். பழைய நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வரும். வராவிட்டால் N-M. பச்சை பால்குடித்தால் வயிறு எரிச்சல் தணிவு. மூல நோய்காரர்களுக்கு ஆசனத்தில் கீரிஸ் தடவிய மாதிரி இருக்குது என்பார். கழிவு பொருள்கள் கடுமையான நாற்றம். பஸ் ஸ்டாண்டு, சந்தை இது போன்ற அதிகமான சத்தம் வரும் பகுதியில் நன்றாக காது கேட்கும். ஆனால் அமைதியான இடங்களில் காது கேட்காது. இசை கேட்டால் இவர்களுக்கு தொல்லை. IOD –ம்; இளைத்த உடம்பு. GRAPH பெருத்த உடம்பு. பழைய கஷ்டங்களை பேசுவார். N-M, GRAPH. தற்போது பேசுவதை உடனே மறப்பார் GRAPH. மந்தம், மாமிசம் பிடிக்காது. சொறிந்தால் தேன் போல, விளக்கெண்ணை போல் ஒரு சொட்டு மட்டும் வரும். கை விரல்களில் சொத்தை, முறிந்து போகும். அழுகியும் போகும். இதற்கு GRAPH. புற்று நோய் மருந்துகள் :- 1.) CONIUM – மாத விலக்கிற்கு முன்பு மார்பு கெட்டியாகி விடுதல். 2.) CARB-ANI – உடலில் காணப்படும் கட்டிகள் நீல நிறமாகி விடும். 3.) CALC – FL –– குடு – எலும்புகளில் அதிகமான வளர்ச்சி, அடிப்பட்ட இடம் பச்சை நிறம் என்றாலும். 4.) IODIUM எல்லா சுரபிகளும் முரடு தட்டி விடும். பெண் மார்பு சுருங்கி விடும். 5.) GRAPH -- மந்தம் மற்றும் பெருத்த உடம்பு, புற்று பழையக் காயங்களில் ஏற்படும் தொல்லைகள். 6.) PHYT கோளங்களில் (சுரபிகளில்) மின்னல் மாதிரி வலி. நகம் சொத்தை விழுதல். நொருங்கி போதல். இக்குறியை வைத்து தேர்வு செய்யலாம். தபால் எழுதினால் கூட அதனால்(BRAIN STAIN)ஏற்பட்டால், ஒற்றைத் தலைவலி ஏற்படும். ஆஸன வாயில் வெடிப்பு, வெடிப்பாக வெள்ளம் போல் காணப்படும். ACID – NIT.தேவைப்படும்.

GRINDELIA

– ROBUSTA

க்ரைண்டிலியா ரோபஸ்டர்

இதய நோய், நுரையீரல் சம்பந்தப்பட்ட எல்லா நோய்களுக்கும், இந்த மருந்தின் குறி என்னவென்றால் நள்ளிரவில் மூச்சு திணறுது என்பார். படுக்க விடலைங்க என்பார். வறண்ட இரும்பலினால் படுக்க விடலை என்றால் STICTA. வறட்சி இரும்பல் என்றாலும், மரம் அறுக்கிற மாதிரி மூச்சு சத்தம் கேட்குதுங்க என்றாலும் SPONG. யாரோ கழுத்தை பிடித்து நசுக்கிற மாதிரி இருக்குதுங்க என்றாலும் இதுதான், பஞ்சு (அ) தலையயை வைத்து நெஞ்சில் அழுத்தி மூச்சு அடைக்குது (அ) திணறுது என்றால், இங்கு மருந்து SPONG. கண்ணை உருட்டினாலும், திருப்பினாலும் வலி, பார்வை நரம்பில் வேக்காடு, குழ, குழன்னு பீழை வரும். தொடர்ந்து (நீடித்து) வருகின்ற ஆஸ்துமா, மூச்சு சம்பந்தப்பட்ட தொல்லைகள், படுத்து கொண்டால் மூச்சு அடைக்குதுங்க என்று சொல்லுகின்ற முக்கிய மருந்துகளில் இதுவும் ஒன்று. கல்லீரல், சருமம், தலை இங்கெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று சொன்னாலும், சுவாச கோசத்தையே முக்கியமாக தாக்கும். உறவு மருந்தாக ் TART-EMET, ERIODICTYON, LACH, SANGUINAR.

GUAIACUM

- க்வாய்கம்

பெரிய மர வகையின் கோந்து.

ஆழ்ந்து வேலை செய்யக் கூடிய மருந்து. அந்த அளவிற்கு சரியான குறிகளும் தெரியணும். பரம்பரை, பரம்பரையாக வரும் மூட்டு வியாதிகள், வாத வியாதிகளும், இது தேகவாகின் அடிப்படையில் வரும். இது பந்து கிண்ண மூட்டில் நன்கு வேலை செய்யும். பரம்பரையான காச நோய், வாத நோய்க்கு நல்ல மருந்து. நடந்தால், அசைந்தால், வேலைச் செய்தால் கஷ்டம், அதிகமான பேதி சளி மாதிரி வரும். சளியும் இருக்கும். நுரையீரல் தொல்லைகளும் இருக்கும். தசை, மூட்டுகளில் வீக்கம். வாத நோய் பற்றியேக் கூறுவார்கள் என்று KENT அவர்கள் கூறுகிறார். இவர்களுக்கு டான்சில் நோய் இருக்கும். சுடு தண்ணீர் குடித்தால் தொல்லைகள் ஏற்படும். இது முக்கியக் குறி. தொண்டையில் பயங்கரமான எரிச்சலும், அதிகமான தொல்லைகளும் இருக்கும். நாம் பார்த்தால் தொண்டையில் சீழ் பிடித்தது தெரியும். வெது, வெதுப்பான அறையில் இருக்கும் போது, அசைந்தால் வாத வலிகள், இடுப்பு சேக்ரலில் வந்து பிடிச்சுக்கும். காச நோய் மற்றும் T.B. நோய், எச்சில் காரித்துப்பினால் பயங்கரமான வாடை வரும். நோய் அதிகமாகி களைப்பில் முடியும். உடம்பு ரொம்ப எளச்சிடும். இது காச நோயின் கடைசி (இறுதி) கட்டம். காச நோய், வாதநோயும், மூட்டு நோயும் கலந்த நிலைக்கு இந்த மருந்து. இரவில் ரொம்ப வியர்வை. நுரையீரல் பைகள் உப்பி விடும். கனமான இரும்பல், காய்ச்சல், மூட்டுகள் வீங்கியிருக்கும். சிபிலிஸ் வியாதியின் இரண்டாவது நிலையில் தோன்றும் மியாசத்திற்காக MER-C. அதிகமாக சாப்பிட்டதனால் தொண்டையில் இரணமாட்டம் புண், தொண்டையை இறுக்கி பிடிச்சுக்கும். நுரையீரல் உறுப்புகள் பலஹீனமாகி மூச்சு வாங்கல் ஏற்படும். மாலை ஆறு மணியிலிருந்து விடியற்காலை நான்கு மணி வரை தொல்லை இருக்கும். ஈரக்காற்று தொல்லை. ஆனால் ஜில்லுன்னு குளிர்ச்சியான பொருளால் ஒத்தடம் கொடுத்தால் சுகம். ஆப்பிள் பழம் சாப்பிட்டால் சுகம்.

HAMAMELIS - VIRGINICA

- ஹமாமெலிஸ் வர்ஜினியர்

பழுப்பு நிறமான ஒரு வகை காட்டுச்செடி.

இம்மருந்தில் மனக்குறிகள் அதிகமான அளவு இல்லை. அசுத்த இரத்தக்குழாயில் (அதாவது மற்ற உடல் உறுப்புகளிலிருந்து இதயத்திற்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் (சிரை) இது உடலின் மேலாகவே காணப்படும்) காயம் ஏற்பட்டு இரத்தம் வெளியேறும் குறிப்பாக மூக்கில் குபுக் குபுக்கென இரத்தம் வரும் (சில்லி மூக்கு உடைந்தால்) இதனால் தலைவலி விட்டு விடும். இரத்த கொதிப்பு அதிகமாயிருக்கும் எதாவது ஒரு வழியில் இரத்தம் வெளியேறிவிட்டால் இரத்தக் கொதிப்பு (B.P) குறைந்திடும், இந்தயிடத்தில் MILLEFOLIUM மருந்தையும் பார்க்கனும். எதாவது பகுதியில் அடிப்பட்டு இரத்தத் தேக்கம் ஏற்;பட்டால் இது நல்ல மருந்து. அசுத்த இரத்தக் குழாயில் அடிப்பட்டு ஓயாமல் இரும்பல் ஏற்படும், மூல வியாதிக்கு இது நல்ல மருந்து. மலம் கழிய முக்கும் போது இரத்தமா ஊத்துதுங்க என்று சொல்வார்கள், உடன் HYDRASTIS. ரொம்ப நாட்களுக்கு முன்பு அடிப்பட்டு இரத்தத் தேக்கம் ஏற்பட்டிருக்கும் அதுக்கும், அதிலிருந்து இப்ப இரத்தம் வடியுதுங்க என்று சொன்னால் உடன் ARN, BELLIS-PER, N-S, CONIUM. தசைகளில் வாத வலியும் இரணமாட்டம் இழுக்குதுங்க என்று சொல்லி அதில் இரத்தம் வடியுதுங்க என்றால் இது. நசிவு காயம் என்றால் ARN. பல் விலக்கினால் இரத்தம் வடியுதுங்க, வருதுங்க என்று சொன்னால் BOVISTA, HAMAMELIS, IP, MILLE-FOLIUM.அடிப்பட்டு இரத்தம் வந்தாலும் HAMAMELIS, ARN, MILLE-F.கு. உள் உறுப்புகள் அடிப்பட்டது போன்ற வலியும் இரணமாட்டம் எரிச்சல் என்றாலும் ARN, HAMA,CALEN,LED. மாதவிலக்கின் போது அதிகமான இரத்தம் வந்தால் படுத்தே கிடப்பார்கள், அப்போது மூலத்திலும் இரத்தம் வந்தால் இதற்கு HAMA, HYDR நல்ல மருந்துகள.; எனக்கு அதிகமான இரத்தம் போயிடிச்சிங்க அதனால் ரொம்ப அசந்து போயிடுறேங்க என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தினால் CARB-V, CHIN, HAMA மருந்துகளாகும். மூலத்துல வேகமாக அதிகமாக இரத்தம் போகுதுங்க என்றாலும் HAMAME, CALEN, ARN. பார்க்கனும். நுரையீரல், சிறுநீரகம், குடல்களில் இருந்து கருப்பு இரத்தம் நிறைய வடியுதுங்க என்று சொன்னால் இதுவும், AMMON-CARB- வும் மற்ற மருந்துகளையும் பார்த்துக்கனும். AMM-C மனக்குறி இருக்கும் HAMAME- மனகுறி இருக்காது. வெது,வெதுப்பான காலம், ஈரமான காலங்களிலும் தொல்லை.

HELLEBORUS-NIGERA

- ஹெல்லிபோரஸ் நைக்ரர்

அந்த நதியின் பனியில் மட்டுமே விளையும் ரோஜா பூ.

ஜன்னி, மூளைக் காய்ச்சல், டைபாய்டு மன நோய் பாதிப்புஇ காக்கை வலிப்பு செப்டிக் காய்ச்சல் அரைப்பைத்தியம் போன்ற ஆபத்தான கட்டங்களில் தலையணையில் படுத்துயிருக்கும் போது தலையை இப்படியும்இ அப்படியும் இப்படியும் கடுமையாக உருட்டி கொண்டேயிருப்பார் இது தான் முக்கிய குறி. இந்த மருந்தை கொடுத்தால் ஆபத்து கட்டம் நீங்கி அப்போதைய குறியை காட்டும். தலையணை இல்லாமல் தலையை வேகமாக உருட்டுவதும் உண்டு உடன் NUX. SPONG பார்த்து கொள்ளனும். தலையை ஆட்டும் போது தலை மட்டும் Nடாக இருக்கும், மற்ற உறுப்புகளெல்லாம் ஜில்லுன்னு இருக்கும். உணவை ஸ்பூனில் கொடுத்தால் ஸ்பூனை கடித்து கொள்வார். மூக்கினுள் விரலை விட்டு குடைந்து கொண்டேயிருப்பார்கள். இது மூன்றும் இம் மருந்தின் முக்கிய குறிகளாகும். சிறுநீர் சிவப்பாகவும், கருப்பாகவும் இருக்கும். கொஞ்சம் தான் சிறுநீர் போகும். இவரது சிறுநீரை பிடித்து பார்த்தால் முட்டையின் வெள்ளைக்கரு போலவே இருக்கும் இதற்;கு பெயர் அல்புமென் (ALBUMEN). இதன் படிவங்கள் காணப்படும். மூளை சம்மந்தப்பட்ட நோய்களிருக்கும் CHAM. HYOS மாதிரி. இவர்களது உடம்பு வீங்கியிருக்கும், சருமம் தடித்து இருக்கும் உடன் காய்ச்சல், மலேரியா காய்ச்சலின் போது மூத்திரக்காய் சம்மந்தப்பட்ட நோய்களைக் கூறுவார்கள். சருமத்தில் அரிப்பும்;, வீக்கமும் இருக்கும். சிபிலிஸ் போல இவர்களது தொல்லைகள் மாலை 4 TO 8 வரை LYC மாதிரி தொல்லை. குளிர்ச்சினால் பல் வலி. சரும நோயோ மற்ற நோய்யின் போது அதை அடக்கியப் பிறகு உடம்பு பெருத்து விடும். விரைப்பாக எழுந்து நடந்தால் சுகம். ஆனால் நடக்க முடியாது.

HELONIAS- DIOICA

- ஹெல்லோனிஸ் டையோகர்

ஒருவகை புற்களின் பிசின் மாதிரியான வேர்.

இம் மருந்துக்குரிய பெண்கள் சுறு, சுறுப்பில்லாமல் மந்தமாக லேசாக உடல் உழைப்பை தரும் பெண்கள். கடினமான வேலை செய்து விட்டால் கருப்பை போன்ற ஏதோ ஓர் உறுப்பு பலஹீனத்தால் கீழே இறங்கி விடும். (அ) மேலே சுருங்கி விடும். உடம்பும், மனசும் பலஹீனமாகவே இருக்கும். வெறுப்பூட்டுகின்ற அளவு தசைவலி மற்றும் எரிச்சல் இருப்பதால், தூக்கம் வருவதில்லை.

பின் மண்டை எல்லாம் நல்லாயிருக்கும், ஆனால் நோயின் போது அவர்களுக்கு சிந்திக்கவே முடியாது. உடன் CALC-PHOS, OXAL-AC.. எப்போதும் மனம் அமைதியற்று இருப்பதால் அங்கேயும், இங்கேயும் போய் கொண்டே இருப்பார்கள். இவர்களை யாராவது குறை சொன்னால் எரிச்சல் அடைவார்கள். எதையும், புரிந்து கொள்ளவு[ம், யோசனை செய்யும் சக்தியும் மிக குறைவு. பொருத்து கொள்ளவும் மாட்டார்கள். ANAC. மாதிரி. மனம் ஆழமாக சிந்தித்து மந்தம் ஆகிவிடுவார். அதனால் இவர்களுக்கு அடிப்படையாகவே வருத்தம் இருக்கும். சர்க்கரை வியாதியஸ்தர்களின் ஆரம்ப நிலையில் சிறுநீர் அதிகமாகவும், சுத்தமாக சர்க்கரை கலந்த மாதிரி போகும். உதடு வறண்டும், விரைத்தும் காணப்படும். அதிகமான தாகம் ஏற்படும். மனம் எரிச்சலோடு அமைதியின்றி உடம்பு இளைத்தும் காணப்படுவார்கள். சர்க்கரை வியாதி திடீர் வகையாகவும், நாட்பட்டதாகவும், சிறுநீர் போகும் போது அல்புமென் (முட்டை சத்து) காணப்படும். கருத்தரிக்கும் பெண்களுக்கு அல்புமென் (முட்டை சத்து) போவதால் ரொம்ப பலஹீனமாகவும், சோம்பேறி தனமாகவும், உற்சாகம் இன்றியும் இருப்பார்கள். காரணமின்றி வெறுப்படைவார்கள். இம்மருந்துக்குரிய பெண்களுக்கு கருப்பை வலிமையில்லாததால், மாதவிலக்கின் ஆரம்பத்திலிருந்து மிகவும் அதிகமாக போகும். அதனால் நோயாளி பலஹீனமாகவும், தளர்ந்தும் போய் இருப்பார்கள். இடைக்கால போக்கில் தான் வழக்கத்தை விட அதிகமாக போக்கு போகும். மார்பு வீங்கி, காம்பு வலியும், பல் வலியும் ஒரே நேரத்தில் ஏற்படும். உடன் CONIUM, LAC-C. இரத்தம் உறைந்து கட்டி, கட்டியாக கருப்பாக குபுக்குனு நாற்றத்துடன் வெளியேறும். அடிவயிற்று எலும்பு கனமாக இருப்பது போன்ற உணர்வு இருப்பதால் கவலைப்படுவார்கள். உடன் (LAPPA).. கருப்பை நகர்வது போன்ற உணர்வு அவர்களுக்கு இருப்பதால், வருத்தப்பட்டு கொண்டே இருப்பார்கள். உடன் LYSS. இவர்களுக்கு கெட்ட நிகழ்ச்சியின் காரணமாக கருசிதைவும், கரு உற்பத்தியும் தடைபடும். உறவு மருந்துகளை ஒப்பிட்டு பார்க்கக் கூடியது. ALET, FER, LIL, PHOS- AC.

ஒற்றைக்குறி:- இளைப்பும்;, ஏதோ ஒரு உறுப்பு தொங்கி, தளர்ந்தும் இவர்களிடம் அதிகமாக இருந்தால் ALET. உண்ணும் உணவு உடலில் ஒட்டாமலும் போகும். இவர்களுக்கு ஏதோ ஒரு உறுப்பு பலஹீனத்தால் கீழே இறங்கி விடும்.

HEPER–SULPH

- ஹீப்பர்சல்ப்

சுண்ணாம்பு சத்தும் கந்தக சத்தும் கலவை.

இவன் மிகவும் பயங்கரமான கோபக்காரன். வீட்டுக்கு நெருப்பு வைப்பேன் என்று மிரட்டுவான், துப்பாக்கி, கத்தி கிடைத்தால், பழி வாங்க நினைப்பான் கொலை செய்யவும் நினைப்பான். இவனை ஒரு சின்ன வார்த்தை கூட தப்பாக கூறினாலும், தாங்காமல் கொலை செய்து விடுவான். பணத்துக்காக எதையும் செய்யும் துரோகி. ஆண்களை மிரட்டி ஏமாற்றி பணம் பறிக்கும் விபச்சாரி. தொண்டையில் சிதாம்பு குத்தி இருந்தால் இதை கொடுத்தால் வெளியே வந்து விடும். மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுவான். முகம், கை, இங்கெல்லாம் சிறிது கருப்பாக இருந்தாலும் அசிங்கமாக இருக்குது என்பான். சீக்கிரம் குணம் ஆகவில்லை என்றால், டாக்டரையே ஏண்டா லேட்டாகுது போடா, வாடான்னு பேசுவான். (அ) பேசுவாள். இவர்களுக்கு தோன்றியுள்ள சீழ் கொப்புளத்தை தொட விடமட்டார். அதன் மீது காற்றுப்பட்டால் கூட வலிக்குது என்பார். அவ்வளவு உணர்ச்சி மிக்கவர். சிறுநீர் தேங்கி, தேங்கி வருது என்பார். அது எண்ணெய் கவிச்சை மாதிரி இருக்குது என்றும் கூறுவார். மூக்கை மட்டும் விட்டு, விட்டு போர்த்திக் கொள்வான். தொண்டையில் சிதாம்பு குத்திய மாதிரி உணர்ச்சியும், பயங்கர கோபக்காரன், ஒரு சின்ன சொல் சொன்னாலும் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவரை மன்னிக்கவே மாட்டான். மறக்கவும் மாட்டான் கொலை செய்ய போவான். கொலையும் செய்து விடுவான். கோபத்தை தணிக்க ஜீரணம் ஆகாதப் பொருளான சாம்பல், மண், செங்கல், சாக்பீஸ், நிலக்கரி, அடுப்பு கரி, போன்றவற்றை நறுக், நறுக் என்று தின்பான். (கோபம் இல்லாத போது பழக்கமாக தின்றால் ACID - NITE.) தலைவலியின் போது தலையணையின்றி படுத்தால் சுகம். உடன் NUX, SPONG (புகை பிடிச்சால் தான் எனக்கு மலம் வரும். சுருட்டு குடித்தால எனக்கு சிந்தனை வரும், டீ குடித்தால் தான் எனக்கு சுறு, சுறுப்பு வரும் வாங்கி கொண்டு வாங்க என்று அதிகாரத்தோடு (ஆணவத்தோடு) கேட்டால் மருந்து இங்கு PLAT.) இவர் முன் கோபக்காரர் ஒரு சின்ன தப்பைக் கூட தாங்காமல், அக்கம், பக்கம் உள்ளவர்களிடம் சண்டைப் போட்டுக் கொண்டு அடிக்கடி வீட்டை (குடி)யை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். கக்குவான் இரும்பலின் போது தொடர்ந்து தொல்லை ஏற்படும்.

HYDRASTIS – CANADENSIS

- ஹைராஸ்டிஸ் காடென்சிஸ்

தங்க நிறமுள்ள நீர் நாய்.

இவர்கள் துப்பும் சளியானது, பிசின் மாதிரியும், நார் மாதிரியும் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். இவர்களுக்கு தோன்றும் வெள்ளைபாடும், பிசின் மாதிரியும், நூல் மாதிரியும் மஞ்சள் நிறத்தோடு நீண்டும் இருக்கும். இதே மாதிரி கழிவு வெள்ளையாக இருந்தால்(KALI – BI) நாக்பை; பார்த்தால் மஞ்சள் நிற பல் பதிவு தெரியும். இதே மாதிரி பல் மஞ்சள் இல்லாமல் தண்ணி மாதிரி ஈரமாகவும், தாகமாகவும் இருந்தால் MERC-SOL. மார்பு காம்பில் பலவித வலி தோன்றி புற்றாக மாறி விடும். பால் கொடுக்கும் தாய்க்கு நாக்கில் பல் பதிவு தெரியும். புளிப்பாக இருக்குதுங்க என்பார். நாக்கைப் பார்த்தால் மஞ்சள் நிறமாக இருக்கும். இதன் முக்கிய குறி சளியானது பிசின் மாதிரியும், நார் மாதிரியும் மஞ்சள் நிறத்தோடு இருக்கும். காமாலை, புற்று நோய், காச நோய் போன்ற நோய்களில் ஏற்படும் வலிகளுக்கும், கருப்பையில் ஏற்படும் வலிகளுக்கும் இம் மருந்து பயன்படும். தொண்டையிலும், நெஞ்சிலும், சளி காரமாகவும் வரும். வெள்ளைபாடு பசையாகவும், கம்பியாட்டம் இருக்குது அறுபடலை என்பார்கள். சளியும் அறுபடாமல் வரும். சிந்தனைக்குப் பிறகு இப்படி வரும். மார்பு காம்பு பிளந்து இது மாதிரி வரும். நாக்கிலும், ஆஸன வாயிலும் மஞ்சள் நிறமான நாறு மாதிரி வரும். மூலத்திலும் இரத்தம் வரும். வயிறு காலியாக இருப்பது போலவே இருக்கும் சாப்பிட்டால் சரியாகிவிடும். இதில் நாறு மாதிரி வருவது தான் முக்கியம். உடன் K-BI, LYSS, MYRICA.. வாயு மற்றும் கல்லீரல் தொல்லையும் இருக்கும். இரவு நேரத்தில் வயிறு காலியாகயிருந்தால், வறண்டக் காற்றில், குளிர்காற்றில், மற்றவர்கள் இவர்களை தொட்டால், துணிப் பட்டால் தொல்லை. (நசுக்கினாலும், ஓய்விலும் சுகம்.)

HYOSCYAMUS – NIGER

- ஹையசமஸ் நைகரர்

பொட்டல் காட்டில் தனியாக விளையும் ஒரு வித விஷ தாவரம்.

இவர்கள் ஒரு சந்தேக பேர் வழி. நம்மை பூச்சி கடித்திருக்குமோ என்று சந்தேகம். அதனால் பூச்சிளை கொள்ளுவார். எதிரி நமக்கு சூனியம் வைத்து இருப்பார்களோ என்று சந்தேகம். காதில் மணியோசை கேட்கிற மாதிரியும், காக்கை வலிப்பில் தாடை மட்டும் வேகமாக ஆடுது என்பார். மகிழ்ச்சியுடன் இருக்கும் கணவன், மனைவி கூட கணவனோ, மனைவியோ நமக்கு துரோகம் செய்து கொண்டுயிருப்பார்களோ என்று சந்தேகம். தன்னை யாராவது உற்று பார்த்தால் நம்மை அவர்கள் பிறரிடம் தப்பாக பேசிக் கொண்டு இருப்பார்களோ என்று சந்தேகப்பட்டு அவர்களிடம் சண்டைக்கு போகும் பைத்தியங்கள். இவர்கள் கோபக்காரர்கள், பெண்களோ, பெரியவர்களளோ இருந்தாலும் வெட்கம் இல்லாமல் கொச்சை, கொச்சையாக பேசுவார்கள். வெட்கம் இல்லாமல் நடந்து கொள்வார்கள். சண்டை வந்து விட்டால், சண்டையில் எவ்வளவு பெரிய மனிதர் என்றாலும், கொச்சை கொச்சையாக பேசுவார்கள்;. அதே மாதிரி ஆணாக இருந்தால் சண்டை வந்து விட்டால், இளம் பெண்ணிடம் கூட வேஷ்டியை தூக்கி பிறப்பு உறுப்பை காட்டி வந்து கட்டி பிடி டீ என்று கூறுவான். இதற்கு சந்தேகம் தான் காரணம். டாக்டரிடம் வந்து மருந்து வாங்கும் போது இவர் படித்தவர்தானா, நன்றாக மருந்து தருவாரா என்று உதவியாளரிடம் கேட்டு தெரிந்து கொள்வார். மற்ற நோயாளிகளிடம் எவ்வளவு நாள் நீங்கள் மருந்து சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டு தெரிந்து கொள்வார். மருந்து வாங்காமல் கூட திரும்பியும் போய் விடுவார். அதற்கு பயமும். சந்தேகமும்தான் காரணம். நாக்கு சிறுத்து விட்டது, பல்லில் மாட்டிக்கிட்டது என்பார். ஆணோ, பெண்ணோ உறுப்பு மிக உணர்ச்சி மிக்கது. கை மோதினால், துணி பட்டாலும் கூட உணர்ச்சி தூண்ட பட்டு உயிர் சக்தி கசிந்து விடும். அதனால் இரவில், தனிமையில் ஆடையில்லாமல் படுத்து கொள்வார். குறிப்பிட்ட வயதுக்கு மேலே போனால் உணர்ச்சி மிகவும் மங்கி போய் விடும். உறுப்புகள் வெளியே காட்டி கொண்டு இருக்க விருப்பமாக இருப்பார். பெண் என்றாலும் கூட மாராப்பு சீலையை எடுத்து விட்டு, விட்டு வெட்கபடாமல் இருப்பார். இருட்டில் பாம்பு, புழு, பூச்சி இருக்குமோன்னு சந்தேகத்ததால் பயம். எறும்பைப் பார்த்தாலும் நசுக்கி கொண்டேயிருப்பார். கடித்து விடுமோன்னு சந்தேகம். அதனால் எறும்பை கொன்று கொண்டேயிருப்பார். உறுப்புகளின் மீது காற்று பட்டால் கூட உயிர் சக்தி கசிந்து விடும் MURAX.குறிப்பு:- ஒரு குரங்கு நண்டையோ, தேளையோ பார்த்து விட்டால் ஓடி போய் கையில் எடுத்து கொள்ளும். எடுத்து கையில இருக்கி பிடித்து கொண்டு விட்டால், நம்மை கடித்து விடுமோ என்று சந்தேகப்பட்டு கத்தி, கத்தியே செத்து விடும் குரங்கு. இதற்கு சந்தேகம் தான் காரணம்.

HYPERICUM – PERFORATUM

- ஹைப்பரிகம் பெர்ப்போரேட்டம்

சாராய ஊரலின் திப்பி.

லேசான நரம்பு வெட்டுக்கும், முதுகு தண்டின் கீழ்வால் பகுதியில் அடிபட்டு விட்டாலும், விரல் நரம்பு வெட்டுக்கும், நய்வு காயத்துக்கும், உதடு வெடிப்புக்கும் இது. யோனி, மானி, ஆஸன வாய்க்கும் பொருந்தும். நோயின் காரணமாகவோ. நரம்பு துண்டாகி விட்டாலும், பிளவு ஏற்பட்டு விட்;டாலும். இந் நிலைக்கு இந்த மருந்து பொருந்தும். ஆழமான வெட்டுக்கும், கொடுவாள் வெட்டுக்கும், கோடாரி, கல்லு, ஈட்டி போன்ற ஆழமான வெட்டுக்கு BEL- PER. இதே மாதிரி எலும்பில் பிளவு (அ) வெட்டு என்றால் SYMPHYTOM. பொதுவாக அடிப்பட்டு விட்டால் STAPHY.இம் மருந்து பொருந்தும். குத்துபட்டு நோய் ஏற்பட்டால் LED. தாருமாறான லேசான சிராய்ப்புகளுக்கு CALEND. மூளைப் பகுதியில் அடியோ. குத்தோப்பட்டால் N-S. ஏதாவது ஒரு நோயின் போது பின்பக்கமாக சாய்ந்தால் CIC. முதுகு தண்டுவடப் பகுதியில் அடிப்பட்டால் HYPER.எந்த நோயிலும் முன் பக்கமாக சாய்ந்தால் CUPR. நரம்பில் அடியோ, லேசான வெட்டோ பட்டால் தான் இது.

IGNATIA-AMARA

- இக்னேட்டியா

அமரர் காட்டில் விளையும் ஒரு வகை அவரை செடி.

ஏக்கத்துக்கு முக்கிய மருந்துகளில் இதுவும் ஒன்று. தன் குற்றம் தெரியாது. ஆனால் மற்றவர்கள் குற்றத்தை கூறுவான். அடிப்பட்டு வீக்கம் ஏற்பட்டிருக்கும். வீக்கத்தை தவிர மற்ற இடத்தில் வலி இருக்கும். இவர்கள், வலியுள்ள பாகத்தை அழுத்தி பிடிப்பார்கள் BRY மாதிரி. காய்ச்சலில் தண்ணீர் குடிக்க மாட்டார்கள் IGN. தண்ணீர் குடிப்பார் BRY. காய்ச்சலில் கஞ்சுக்கு பதிலாக கறி, புரோட்டா, முட்டை போன்றவற்றை சாப்பிடுவான். குளிர் காய்ச்சலில் பச்ச தண்ணீர் குடிப்பான். இப்படி எதிர்மறை செய்தாலும், சாப்பிட்டாலும் நோய் சரியாகும் (தணியும்) என்று கூறுவார். குளிருக்கு போர்த்த மாட்டான். காய்ச்சலில் போர்த்திக் கொள்வான். கட்டியில் வலியிருக்கும். காமம் மிகுதியானவர்கள். உறவினர், நண்பர். விருப்பமான பொருள் இழப்பினால் பித்து பிடித்து நடந்து கொண்டேயிருப்பார். ஏதோ ஒன்றை இழந்து விட்டோம் என்ற ஏக்கம் இருந்து கொண்டேயிருக்கும், உடன் N-M, K-BR, ACHID-PHOS. துயரம், ஏக்கத்திற்கு பிறகு தலைவலி PHOS-AC, N-M, PULS, STAPHY. பயந்த பிறகு வயிறு வலி CARB-V.குளிரில் முகம் சிவக்கும், காய்ச்சலில் முகம் சிவக்காது. நீண்ட நாள் துன்பத்தில் அடிப்பட்டு அப்படியே இருக்கும் மனம். உடன் மகிழ்ச்சியும் மாறி, மாறி வரும். பிறர் தவறு செய்தால் அவரை வெறுப்பார். இவர் தவறை கண்டித்தால் உடனே வலிப்பு கூட வந்து விடும். (இதை சிறுவர், மாணவர்களிடத்தில் காணலாம்).

INDIGO

- இண்டிகோ

சாயம் இறக்க பயன்படும் ஒரு வித இந்திய வனத்தில் விளையும் அவுரி செடி.

நெற்றியில் கட்டிப் போட்டது போலயிருக்கும். இரவில் முட்டாள் தனமாக கத்துவார்கள். இரவில் ஆஸன வாயை சொறிவார்கள். குறிப்பாக குழந்தைகளிடம் காணலாம். சிறுநீர் கழிந்து கொண்டேயிருக்க ஆசை, நடமாடிக் கொண்டும், நாம்பி விட்டுக் கொண்டிருந்தாலும் சுகமாக இருக்கும். ஒப்பிட்டு பார்த்தால் CUPR.. மருந்து வரும். காக்கை வலிப்புக்காக நாட்டு மருந்து அதிகமாக கொடுத்திருந்தால் அதை முறிக்க இம் மருந்து பயன்படும். அளவுக்கு அதிகமான வருத்தம் தோன்றி பின்பு காக்கை வலிப்பில் முடியும். எதையும் சுறு, சுறுப்பாக ஊக்கத்துடன் செய்வார். அதன் பின்பு நரம்பு மண்டலம் பலஹீனம் அடைந்து காக்கை வலிப்பில் வந்து முடியும். உடன் CED, GOLON, KALI-PERMANG.. மயக்கம், தலைவலி, குமட்டல் இருக்கும். பசி குறைவு, வாயிலிருந்து, தலைக்கும், வாய்க்கும் செம்பு (அ) வேறு உலோக சுவை. அதாவது கழும்பு சுவை மாதிரி அடிக்கடி எது களிக்குது என்பார். தலையில நிறைய மயிர் இருக்குதுங்க என்பார். இது முக்கிய குறி. இரவு நேரத்தில் மலக்குடலில் ஒரு வித குறு, குறுத்த உணர்ச்சித் தோன்றி நமச்சல் மிக கடுமையாக இருக்கும். ஒரு விரலை முழுதாக ஆஸன வாயில் விட்டு குடைவார்கள். அப்போதும் நமச்சல் குறையாது. திருப்தி ஏற்படாமல் அரை பைத்தியம் ஆகி விடுவார், இப்படி மன அழுத்தம் காரணமாக படுத்து இருக்கும் போதும், நிற்கும் போதும், வெப்ப அறையில் கூட கொடுமைகள் தோன்றி முடிவில் காக்கை வலிப்பில் போய் முடிந்து விடும்.

INSULIN

- இன்சுலின்

இக்காலத்தில் சர்க்கரை வியாதிக்கென இம் மருந்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு இது பயன்படும். உடலில் உள்ள (பாங்கரியாஸ்) கணையம் என்ற சுரபி உடலுக்கு இன்சுலீன் என்ற திரவத்தை வெளியிடுகிறது. சக்கரை நோயளிகளுக்கு இதிலிருந்து சுரக்கின்ற நீர் (இன்சுலீன்) குறைவதால் சர்க்கரை (SUGAR) நோய் ஏற்படுகிறது. அதனால் INSULIN. என்ற மருந்தை அதிகமாக பயன்படுத்துவதால் அந்த மருந்தை முறிப்பதற்காக ஹோமியோபதியில் இந்த மருந்து பயன்படுகிறது. இன்சுலீனை அதிகமாகப் பயன்படுத்துவதால் இதயம், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை கெட்டு விடுகின்றன. மேலும் குடல்களில் புண் ஏற்படுதல், அரிப்பு ஏற்படுதல், பசி அதிகமாகுதல் மற்றும் குறைதல், மூட்டு வலிகள் இது போன்றவைகளை ஏற்படுத்தும். இதை முறிக்க INSULIN –ஐ மூன்று வீரியத்திலிருந்து முப்பது வீரியம் வரை தினம் மூன்று வேளைக் கூட தரலாம். நோயின் அளவைப் பொருத்தே வீரியமும் அளவும் பயன்படுத்த வேண்டும்.

INDIUM

- இண்டியம்

இண்டோஷன் என்ற உலோகத்திலிருந்து வீரியப்படுத்தப்பட்டவை.

ஒற்றைத் தலைவலிக்கு நல்ல மருந்து. விந்து பீச்சியடித்தப் பிறகு முதுகு (தண்டுவடத்தில்) வலி ஏற்படும் போதும், சிந்தனைச் செய்தால் தலைவலி, உடனே மலமும் கழிவார்கள். தலை வெடிப்பது போல் வலி. அப்ப மலம் கழிவார்கள். நெற்றியில், பின் மண்டையில் வலி ஏற்பட்டும், பலஹீனமாகி தூங்கி விடுவார்கள். ஆண்களுக்கு எப்போதும் செக்ஸ் பற்றியே நினைப்பு இருப்பதால் விந்து சக்தி வெளியேறிக் கொண்டே இருக்கும். காலை 11 மணிக்கு ஓயாமல் தும்பல் வரும். வாயின் ஓரத்தில் வெடிப்பும் அதில் இரணமான மாதிரி வலியும் வரும் (CONDUR) முகத்தில் அதிகமான வலி ஏற்படும். முகப் பருக்களில் சீழ் வெளியேறும், நின்றுக் கொண்டுதான் சிறுநீர் கழிக்க முடியும். அதில் அதிகமான தாங்க முடியாத அளவு நாற்றம் இருக்கும். சிறிதளவு தான் வரும். ஆனால் பீச்சியடிக்கும். விதைக் கொட்டையில் வலி இருப்பது போல, சிறு நாக்கு பெருத்து தடித்து இரணமாகும். அதன் மீது லேசாக எதாவது மோதினால் கூட பயங்கர வலி ஏற்படும். குரல் வலையை இழுத்துப் பிடித்தது போல இருக்கும். அதனால் கரகரப்பான குரல், பேச கஷ்டம், மாலை நேரத்தில் கழுத்து, தோள்பட்டை விரைத்துக் காணப்படும். குறிப்பாக இடது தோள்பட்டையில் விரைத்துக் காணப்படும். கால்களை ஒய்வின்றி ஆட்டுவதால் கால்கள் சோர்ந்து விடுதல், கால் விரல்களில் மட்டும் அரிப்பு (AGAR.)

IODIUM

- ஐயோடியம்

ஐயோடியம் என்ற காரகம்.

இவர் பார்க்கிறத்துக்கு குச்சி மாதிரி, தப்பை மாதிரியிருப்பார். நல்ல சுறு, சுறுப்பாக இருப்பார். அதிக பசி நிறைய சாப்பிடுவார், அடிக்கடியும் சாப்பிடுவார். குறிப்பாக பெண்கள் என்றால் உடம்பு, நெருப்பாட்டம் இருக்கும், எனக்கு சூட்டு உடம்பு என்பாள், வயிறு நிறைய சாப்பிடுவாள். ஒரு ஏப்பம் விட்டதும் அவ்வளவும் காலியாகி விடும். அடுத்த வேளை சாப்பிடும் வரை பசியாகவே யிருக்கும். சுரபிகள் வீங்கி கல் போல இருக்கும். மார்பு மட்டும் சுண்டி சுருங்கி வாழைக்காய், மாதிரி தொங்கி விடும். இது முக்கிய குறி. உடல் சூட்டின் காரணமாக குறிப்பாக மார்பு, ஆஸனவாய், பிறப்பு உறுப்பு எல்லாம் மிக, மிக காரமாக இருக்கும். கழிவுகள் அது பட்ட இடமெல்லாம் புண்ணாகிவிடும். இதயம் டையிட்டா பிடிச்சிகிச்சி என்பார். இரு புறம் வச்சி நசுக்குது என்றால் LILI-T. கையில் பிடிச்சி நசுக்கற மாதிரி இருக்குது என்றால் CACT-G. இவர்களுக்கு பசி அதிகமானால் எல்லாத் தொல்லையும் வந்து விடும். இந்த நிலைமைக்கு ANAC, IOD, M-C, MURAX. இது தான் பசிக்கு முக்கிய மருந்துகள். இளைப்புக்கு முக்கிய மருந்துகளின் வரிசையில் ABRO, IOD, N-M, PHOS. இதன் விளக்கத்தை தகுந்த புத்தகத்தில் பார்த்துக் கொள்ளவும். இவர்களுக்கு தோன்றும். வெள்ளைபாடும், மாதவிலக்கும், சளியும், எச்சிலும், தொடையில் மற்றும் எங்குப் பட்டாலும் புண்ணாகி விடும். இந்த கார எச்சியானது பல எகிறில் படுவதால் எகிறில் புண்ணாகி எகிறே கரைந்து விடும். சூட்டை விரும்புவார்கள். சூட்டு உடம்புக்காரர்கள். ஈரத் துணியை வைத்து உடல் பகுதியை துடைப்பார். எப்போதும் சாப்பிடுவார்கள். அதிலும் மாமிசம் என்றால் ஒரு பிடி பிடிப்பார்கள். எந்த நேரத்திலும் எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவார். ஏப்பம் விட்டதும் எல்லாமே ஜீரணமாகி விடும். இதனால் உடம்பில் ஒட்டாமல் மெலிந்து போய் விடுவார்கள். ஏதாவது சிந்தனை செய்து கொண்டே, சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். கதையில் வரும் பூதம் மாதிரி. இவர்களின் கழிவுப் பொருட்கள், காரத் தன்மை வாய்ந்ததால் மூக்கு, ஆஸனவாயில் புண்ணாக இருக்கும். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பதற்கு IOD. ஓர் உதாரணம். ஒரு பீடிக்காக கொலையே செய்வார் HEP-S. பசிக்காக கொலையே செய்தால் IOD.

IPECACUANHA

- இப்பிக்கா

உனர்இபிகாக் என்ற மேலை நாட்டு மரத்தின் வேர்.

வாந்திக்கு முக்கிய மருந்து இது. பலவிதமான வாந்தி எடுப்பார்கள். வாந்திக்கு என்று சில மருந்துகள் இருக்கிறது. ஆனால் இம் மருந்தின் குணம் என்னவென்றால் வாந்தி எடுத்துவிட்டு வாயை கழுவிக் கொண்டு சாப்பிடுவார்கள். நாக்கை பார்த்தால் சுத்தமாகவே இருக்கும். குளிர் காய்ச்சலின் போது சொல்வார். வெய்யிலில் நின்றால் குளிர் அதிகமாகி விட்டது என்பார். இது தான் இந்த நோயின் முக்கிய குறி. இவர்களுக்கு பல்லில் வரும் இரத்தமோ, காயத்தில் இருந்து வரும் இரத்தமோ. மாதவிலக்கின் ரத்தமோ, மானி, ஆசனவாய், யோனியிலிருந்து வரும் இரத்தமோ இப்படி உடலில் எங்கிருந்து இரத்தம் வந்தாலும் அது சுத்த சிவப்பாக தண்ணி மாதிரி நிறைய போகுது என்பார். தீட்டு சுத்த இரத்தமா தண்ணியாட்டம் ஊற்றுகிறது என்று பெண் கூறுவாள். குமட்டலுக்கும், வாந்திக்கும் COLCH, COCC. மருந்தாகும். ஆனால் இது வாந்திக்கு மட்டும் தான் இந்த மருந்து. கர்ப கால வாந்திக்கும் இது பொருந்தும். அதிகமாக குணைன் மருந்து கொடுத்து, கெடுக்கப்பட்ட பின்பும், கக்குவான் இரும்பலில் இழுப்பு அதிகமாகி, வாந்தியானது சுத்த இரத்தமாக எடுப்பார். இப்படி மூக்கிலும் வரும். வெளியேறும்; இரத்தமானது சுத்த சிவப்பு இரத்தமாக வரும். இது முக்கிய குறி. திறந்த வெளிக் காற்றில் வியாதி தணிந்து போய் விடுகிறது என்பார். குறிப்பு் உறவாக, முறிவாக வலியின் போது இரத்தப் போக்கின் போது, இப்படி பல நிலைகளை கூறி தக்க மருந்துகளை தெளிவான, சுருக்கமான, விளக்கங்களை மத்தூரில் பார்த்துக் கொள்ளவும்.

IRIS VERSICOLOR

- ஐரிஸ் வெர்ஸிகலர்

நீல நிறமுள்ள ஒரு வகை நீரில் வாழும் செடி.

இம் மருந்து பித்தப்பையில், கணையத்தில், உமிழ்நீர் (எச்சில்) சுரபியில், போன்ற சுரபிகளில் வேலை செய்யக்கூடியவை. நெற்றியில் வலியுடன் குமட்டல் . வலது புற பொட்டில் (விசேஷமாக) தொல்லை ஏற்படும். பயங்கரமான தலைவலி. அதனால் ஓய்வு எடுக்கனும் என்பார்கள். காதில் கர்ஜனை செய்வது போன்ற சப்தமும், (சில்லு) வண்டு கத்துவது போல சப்தமும் கேட்கும். காதைக் குடைந்துக் கொண்டேயிருப்பார்கள். ரொம்ப ஆழமான மயக்கத்தால் விழுந்துவிடுவார்கள். சொத்தைப் பல் வலியினாலும் மயக்கம் வரும். நரம்பு சம்பந்தப்பட்ட குளிர் தானாக வரும். எரிச்சல், வயிறு முழுவதும் எரியும், எரிச்சலினால் வாந்தி வரும், உடன் இரத்தம், பித்தமும் வரும். இவர்கள் பல் துலக்கினால் கூட பித்த வாந்தி வரும். உடன் MERC, IP, K-I பார்த்துக் கொள்ளனும். குழந்தைகளின் வேகமான இளைப்புக்கு இதுதான் மருந்து. எல்லா வாந்திக்கும் HYDROS, IP. பொருந்தும். பித்த வாந்தி என்றால் மட்டும் இது பொருந்தும்.

JALAPA – EXOGONIUM PURGA

- ஐலபா எக்ஸோ கோனியம் புர்கா

ஜெலபா என்ற தாவரத்தின் பூ இலை.

தண்ணியாட்டம் பேதி, காற்றுப் பிரியும் போது குமட்டல். வயிறை இறுக்கி கவ்விப் பிடிக்குதுங்க என்பார்கள். பேதி சேறு மாதிரி போகும். மேல் வயிற்றில் வலது புறம் நீண்டு விடும். நாக்கில் உள்ள சுரபிகளில் அறுப்பது போல் வலி. முகம் முழுவதும் நீல நிறமாகவும், ஆஸனவாய் எரிச்சலாகவும் இருக்கும். முகம் கிருஷ்ணன் வேடம் போட்டது போல நீல நிறமாகயிருக்கும், ஜில்லுன்னு இருக்கும், காலில் தெறிப்பது போல் வலி கட்டை விரலிலும், நக கண் பகுதியிலும், உள்ளங்கையிலும், மூட்டுகளிலும் வலியும், எரிச்சலும் இருக்கும். குழந்தைகள் காலை நேரங்களில் நன்றாகவே இருப்பார்கள். இரவில் மட்டும் பயத்தினால் வீரிட்டுக் கத்துதல் மற்றும் ஓய்வில்லாமல் நோயால் கஷ்டப்படுதல். இரவில் ஓயாமல் கத்தும் குழந்தைகளுக்கு இது முக்கிய மருந்து.

KALI – ARSENICOSUM

- காலி ஆர்சனிக்கம்

பொட்டாசியம் ஆர்சனிக்கம் இரண்டையும் கலவை செய்தது.

இம் மருந்தின் முக்கிய குறி அரிப்பு தான். இவர்களுக்கு இரவில் ஆடையை கழற்றும் போதே அரிப்பு உண்டாகும். இதே மாதிரி RUMEX க்கும், இந்த இரண்டு மருந்துக்கும் ஒரே குறி தான். மற்ற வித்தியாசங்களைப் பார்த்து மருந்தை பிரித்துக் கொள்ளனும். நாக்கு, கண் பிதுங்கிற மாதிரியும், பெரிதாக இருக்குது என்றும் மருத்து போச்சி என்றும் கூறுவார். மாயமாக தெரியுது என்றும் கூறுவார். கழிவுப் பொருள் அதிக தூ]நாற்றத்துடன் வெளியே வரும். படர் தாமரையில் துர்நாற்றமும், மணல் மாதிரி செதில்கள் நிறைய உதிரும். மற்றும் படர் தாமரை வளர்ந்து கொண்டே வரும். (இதை குணப்படுத்துவது கஷ்டம்.) இவர்களுக்கு CALC மாதிரி எதிர்பார்ப்பும், பயமும் இருக்கும். மற்றும் கூட்டத்திலும், தனியாக போகவும் பயப்படுவார்கள். இரவு நேரத்திலும், குளிரிலும் தொல்லை. மலம் கழியும் போதும், மாதவிலக்கின் போதும் கவலை ஏற்படும். இவரது கண்கள், தோல்கள், மஞ்சள் நிறமாக காணப்படும். கருவிழி சாம்பல் நிறமாக இருக்கும். காமாலை முற்றியும் மஞ்சலாக மாறும். இவருக்கு மரணமோ, முற்றிய நிலையோ வந்தால், மஞ்ச காமாலையில் முடியும். நாள்பட்ட சரும நோய்க்கும், சரும புற்றுக்கும் இதுவே மருந்து. வறண்ட சருமத்துக்கும், செதில், செதிலாக விழுவதற்க்கும் இது தான் மருந்து. வலது புறமாக, அதாவது வலது கை, கன்னம், கால் என வரும். மணல் போன்ற கொப்புளம் ஏற்பட்டு படர்தாமரை ஏற்படும். அதில் இருந்து மீண்டும் கொப்புளம் ஏற்பட்டு உடைந்து பெரிதாகிக் கொண்டே போகும். இதை குணப்படுத்துவது கஷ்டம் தான். தனிமையில் மரண பயம் ARS. மலம் கழியினுமேனு கவலை. இப்படி காய்ச்சல், சிறுநீர் விடும் போதும், மாதவிலக்கிலும் கவலை, அதனால் மன அமைதியின்மை காணப்படும். சரும புற்றில் சருமம் காய்ந்து சுருங்கி எலும்பும், தோலுமாக இருப்பார்கள், சொறிய, சொறிய விருப்பம். பிறகு வறண்ட கொப்புளம் செதில், செதிலாகவும் வரும். காய்ச்சலுக்கு முன், பின் இப்படி தோன்றும். தாங்க முடியாத அளவு பலஹீனம்.

KALI-BICHROMICUM

- காலி பைக்ரோமியம்

பொட்டாசியத்தின் ஒரு பிரிவு.

இது ஓர் எளிமையான அதிகப்படியாக தேவைப்படும் மருந்து ஆகும். ஜனங்கள் மீது சந்தேகம், பயம் அதனால் வெறுப்பு, சந்தேகத்தாலும், பயத்தாலும் வெறுப்பு தோன்றினால் இது தான் மருந்து. மற்றும் இவர்களுக்கு கடுமையானது என்னவென்றால் இவர்களுக்கு தோன்றும் கழிவுப்பொருள்கள் எல்லாம் சளி, சீழ், மாதவிலக்கு போன்றவை அப்படியே கோந்து மாதிரி, நாரு மாதிரி வரும். இது தான் இம் மருந்தின் உடல் ரிதியான முக்கிய குறி. ஒரு குறிப்பிட்ட இடத்தை தொட்டு காட்டி ஒரு இஞ்சுக்கு மட்டும் வலி என்றால், கொஞ்சம் அகலமாக வலி, வலியற்ற தன்மை என்று மாறி, மாறி வந்தால் PULS. இவர்கள் துப்பும், கோழை சளியானது, பிசின் மாதிரி தரையில் அப்பிக் கொள்ளும். தண்ணீர் ஊற்றினாலும் போகாது, தேய்த்து எடுக்க வேண்டும். இரும்பி கோழையை துப்பியதும், தரைக்கும், வாய்க்கும் ஒரு நூல் போல நீண்டு இருக்கும். இதே மாதிரி வாந்தியில், எச்சில், மூக்கு சளியில் வெள்ளைப்பாட்டில், கழிவுகள் விழுந்த பிறகும் நூல் மாதிரி நீண்டுஇருக்கும். அது வெள்ளை நூல் மாதிரி இருக்கும். (இதே இடத்தில் மஞ்சள் நூல் மாதிரி இருந்தால் HYDRO.) மன குறியும், சொல்லுவார். எனக்கு இந்த நோய், துன்பம் வலி நீடித்து இருக்குதுங்க என்னை விடவே மாட்டிங்குதுங்க, சித்தரவதை செய்கிற மாதிரி இருக்குதுங்க என்பார். வெறும் கறியே சாப்பிடுவார். பின்பு வயிற்றுவலி என்பார் FERR.

சிறு நாக்கின் அடியில் ஏதோ ஓர் உரோமம் இருப்பது பேன்ற உணர்வும், உள் நாக்கு பை போன்று பெருத்து படுத்திருப்பது போல இருக்கும். மூக்கு அடைப்பின் போது சளி கட்டி, கட்டியாக குண்டு மாதிரி வந்தால் சுகம். எனக்கு மருந்து வைத்து விடுவார்களோ, கொன்று விடுவார்களோ, என்று மனித குலத்தின் மீது வெறுப்பு, தப்பு செய்த மாதிரி எண்ணம். ஆழமான குழிப்புண், விரல் தொடும் அளவு மட்டும் மருத்து போச்சிங்க என்பார். இது குஷ்ட நோயில் இதை பார்த்து கொள்ளவும். மூட்டுக்கு, மூட்டு அரை இஞ்சி அளவு தாவும் வலி. அகலமாக இங்கு தாவினால் BELL, PULS.மூட்டுவலியும், சீதபேதியும், மாறி, மாறி தோன்றும். T.B. சளியானது இரத்த வாசம் அடிக்குதுங்க, சளி துப்பினால் சாம்பல் கலர் இருக்கும் என்றால் இது தான் மருந்து. தலைவலிக்கு முன் கண் மங்கள், தலைவலி அதிகமானால் பார்வை தெரியும்.

KALI - BROMATUM

- காலி புரோமாட்டம்

பொட்டாஸியத்தின் இது ஒரு பிரிவு.

இம் மருந்துக்குரியவர்கள் எதையும் யோசிக்காத மனம். காரணம் யோசிக்க முடியாத அளவு பலஹீனம். அவ்வளவு ஞாபக மறதி. வாழ்க்கையிலும், நோயிலும் இனி மேல் என்னால் தாங்க முடியாதுங்க, தாக்கு பிடிக்க முடியாது என்று கூறினாலும் K-BR.. இந்த மருந்தை கொடுத்த பிறகு ஞாபகமும், நோய், வலி தாங்க முடியலை என்ற உணர்வும் சரியாகி விடும். பிறகு நாம் வேற குறியை பார்த்து மருந்து தரலாம். இதனுடன் ஏக்கம் இருந்தால் IGN. பொருந்தும். என்னைக் கடவுள் தண்டித்து விட்டார் என்றாலும், என் உடம்பில் கடவுள் இருக்குது, என் நாக்கில் ஆத்தா குடியிருக்கிறாள், ஆத்தா என் கூட பேசுகிறாள் என்றாலும் K-BR. பகலில் கூட எனக்கு கடவுள் தெரியுது என்று கூறுவார் HEP-SUL பொருந்தும். எனக்கு தலைவலி நான் என்ன செய்ய முடியும் என்றாலும், மிகப் பெரிய சோகம் ஏக்கம் IGN, N-M. ஏக்கம், ஏக்கத்தில் அப்படியே ஸ்தம்பித்து உட்கார்ந்துக் கொள்வார். பேசிக் கொண்டிருக்கும் போது பாதியிலேயே மறதி. பொய்யுணர்ச்சி, எதிர்பார்ப்பு, பயம், ஏதேனும் நடந்திடுமோ என்று பயம் CALC - மாதிரி. மனப்பிரம்மை, பித்து, பேய் பிடித்தவர்களுக்கு நல்ல மருந்து. விதிப்படி, சட்டப்படி தான் நடக்கும் என்ற வார்த்தையை பயன்படுத்துவார் K-BR. கையை சும்மா வைத்திருக்காமல் அதையும், இதையும் கில்லிப் போட்டுக் கொண்டேயிருப்பார்கள். கை, வயிறு, கால் இப்படி உடம்பு குண்டு என்பார்கள். தன்னை திருடன் என்று சொல்வார்கள். (DELU- - மாயம்). மிகுந்த காமம், நெருங்கிய உறவினர் இழப்பினால், பித்து பிடித்து போய் விடும், காமவெறி தீர்த்து கொள்ள முடியவில்லையென்றால் அப்படியே ஸ்தம்பித்து போய்விடுவாள். காமத்தில் இவர்கள் உறவு கொண்டாலும், திருப்தியே ஏற்படாது. அதனால் பேய் பிடித்து விட்டது என்று கூறுவார்களே அவர்கள் இவர்கள் தான், தன்னை திருப்தி படுத்தாத ஆண் இனத்தையே வெறுப்பார்கள். அதை வெளியே சொல்ல மாட்டார்கள். ஆனால் வெறுப்பானது இருக்கும். என்னிடம் காளி பிடித்து இருக்குது, காட்டேறி பிடித்து இருக்குது, துஷ்ட தேவதை பிடித்து இருக்குது என்பார். அந்த உணர்வை, தீர்த்து கொள்வதற்க சாமி ஆடுவதும், தலையில் குடம், குடம்மாக தண்ணியை ஊற்றி கொள்வதும், எலும்பிச்சை பழம், கற்பூரம் சாப்பிடுதல், எனக்கு காவு கொடுங்கடா, கும்புடுங்கடா என்று எல்லோரையும் பேசுவார்கள். சாமி சொல்லுபவர், குறி சொல்லுபவர்கள் இவர்கள் தான். ஆனால் இம் மருந்தின் குறியை பார்த்துக் கொள்ளனும். இழப்புக்கு இது தான் பெரிய மருந்து. அமாவாசை;கு முதல் நாள், பௌர்ணமிக்கு முதல் நாள் தோன்றும் காக்கை வலிப்புக்கும், மற்ற தொல்லைகளை அந்த காலத்தில் கூறினால் இது தான் மருந்து. ஆண் தன்மையே இருக்காது.

KALI - CARBONICUM

- காலி கார்போனிக்கம்

பொட்டாஸியத்தின் சுண்ணாம்பு சத்து.

இம் மருந்து பெண்களுக்கு தேவைப்படும். குறிப்பாக 3,0 40 வயது வாக்கில் கருப்பை, மிருதுவான தன்மையை இழந்து, ரப்பாக மாறிவிடும். அப்பொழுது அவர்கள் கூறுவார்கள் இடுப்பு வலிக்குதுங்க, இடுப்பு வலி வெட்ற மாதிரி வலிக்குதுங்க என்பார்கள். இப்படி இடுப்பு வலியை பற்றியே புகார் கூறுவார்கள். பூப்பு வராத பெண்ணுக்கு கருப்பை சிலருக்கு வளைந்து விடும். அப்பொழுது இதை கொடுத்தால் கருப்பை நேராக வந்து பூப்பு ஏற்பட்டு விடும். நடுக்கல் GELS மாதிரி, தொடை வலியிருக்கும். PACTIA – RUSHIA,மாதிரி. கருப்பையில் பொய் வலி இருக்கும். பிரசவத்தின் போது இடுப்பு வலி விட்டு, விட்டு வரும். PULS மாதிரி. K-C, PULS, ACTIA இவைகள் பிரசவத்திற்கு முக்கிய மருந்தாகும். 100க்கு 70ு சுக பிரசவம் ஏற்பட இதுவே போதும். சாப்பிட்ட உணவு மீது கோபம். உடன் இருப்பவரிடம் சண்டை போடுவார்கள். தனிமையில் பயம். இரவு இரண்டு மணியிலிருந்து நான்கு மணி வரை தொல்லை. போர்த்தி கொள்ளனும். ஆனால் துணி மேலே மோதக் கூடாது என்பார்கள். ஒரு வடை சாப்பிட்டு தண்ணி குடித்தாலும் கூட வயிறு உப்பிசம் என்று கூறுவார். கற்பனை செய்து பயந்து கொள்வார். வலி உள்ள பகுதியை அழுத்திப் படுத்தால் தொல்லை. சுகம் என்றால் BRY. பசியினால் சாப்பாட்டின் மீது கோபம். பசி வந்தால் தாங்க முடியாது. கோபமாகவே இருக்குது என்பார்கள். உட்கார, படுக்க விருப்பம். ஈஸி சேரில் பாதி சாய்ந்திருந்தால் சுகம். சாப்பிட்ட பிறகு வயிறு காலி என்றும், சில சமயம் உடம்பே காலி என்றும் கூறுவார்கள். SEX- ல் பலம் இல்லை. மற்றும் விருப்பம் இருக்கும். K-P ல்; பலம் இருக்கும். ஆனால் விருப்பம் இருக்காது. பிரசவ வலியானது தொடைக்கு போனாலும், தலை திருப்பா விட்டாலும் ACTIA - RAS. வலியானது இடுப்புக்கு மையப்பகுதி (சேக்ரல்)க்கு போனால் K-C. வலி மேல் வயிற்றுக்கு போய் விட்டாலும், முதுகுக்கு போய்விட்டாலும் PULS இதே மாதிரி வலியோடு நடுக்கல் ஏற்பட்டால் K-C.குறிப்பு :- செவிலியே பெண்கள் முக்கு, முக்கு என்றுச் சொல்லுவார்கள். அந்த ஒரு வார்த்தையை நாம் வெளியில் இருந்து கேட்டுக்கொண்டு அப்போது GELS கொடுத்தால் உடனே சுக பிரசவம் ஆகும். இப்பொழுதே இறந்து விடுவேன் என்று சொன்னாலும், அப்படி பேசி கொண்டிருந்தாலும் ACON. இந்த பிரசவத்தினால் நான் இறந்திடுவோனோ, பிண்டம் தங்கி கொள்ளுமா, இடுப்பு முதலில் வந்திடுமோ என்று எதிர்பார்த்து பயந்தால் CALC. யோனிக்கு வலி வந்ததும், பிரசவம் ஆக தாமதம் ஆனால் OP பிறப்பு உறுப்பு வலிக்கு, எரிச்சலுக்கு, சுடு தண்ணி வைத்து கழுவி கொண்டிருந்தால் சுகம் என்றால் ARS. . இதே இடத்தில் வலிக்கு ஜில்லுன்னு பச்ச தண்ணீரில் உட்கார்ந்து கொண்டிருப்பது (அ) ஐஸ் தண்ணி அல்லது ஜில்லுன்னு தண்ணீரில் கழுவி கொண்டேயிருந்தால் சுகம் PHOS. இப்பொழுது கூட இந்த வேலை செய்யணும், அந்த வேலை செய்யணும், வேலை நின்னு போச்சே என்று வேலையைப் பற்றியே பேசினால் BRY.இந்த தொந்தரவுக்கு அவன் தான் (கணவன்) காரணம், அப்பா, அம்மா தான் ஒழுங்காயிருந்த என்னைக்கெடுத்து விட்டார்கள் என்றால் PLAT.வெறிபிடித்து போனால் நாய் மாதிரி LYSS. தண்ணீரை கண்டாலும் இவர்களுக்கு பயம். அதிக தண்ணீரை கண்டால் பயம் STRA.. ஈரம் பட்டால் தொல்லை LYSS. வெறுப்பு SEP.

KALI – IODIUM

- காலி ஐயோடியம்

காரகமும், பொட்டாஸியத்தின் கலவையும்.

இம் மருந்தை நம் மருத்துவ முறையிலோ, ஆங்கில மருத்துவ முறையிலோ MERC-CURIES - - ஐ வீரியத்தை அதிகமாக பயன்படுத்தி ஏற்படும் தொல்லைக்கு இது முறிவு. HEP-SUL சூட்டை விரும்புவார்கள். இவர்கள் குளிர்ச்சியை விரும்புவார்கள். இவர்கள் குடும்பத்தோடு ஒட்டி வாழாதவர்கள். தனியாக திறந்த வெளியில் இருக்க விரும்புவார்கள். சளிக்கு மட்டும் எதிர் குணம், அதாவது திறந்த வெளியில் இருக்கும் போது கஷ்டம். மூட்டு அசைந்தால் சுகம் RHUS-TOX மாதிரி. சூட்டில் சுகம் என்றால் RHUS-T, சூட்டினால் தொல்லை அதிகமானால் K-I. கழிவுகள் பச்சை நிறமாகவும், மஞ்சள் நிறமாகவும் இருக்கும். உடன் நாற்றமும் இருக்கும். உடம்பில், தலையில், முண்டு, முடிச்சி இருக்கும். கொலை வெறி பிடித்தவர்கள். சிபிலிஸ் (சீக்கு) பிடித்த பெண்ணுக்கு வலியில்லாமல் சீழ் தன்மை வெளியேறும். கோளத்தில் வெடிப்பும், அப்போது உப்பு கரிச்ச மாதிரி நொறை, நொறையா சளி வருது என்றும் கூறுவார்கள். நடந்தால் சுகம் என்பார்கள்.

KALI- MURIATICUM

- காலி முரியாட்டிக்கம்

பொட்டாஸியத்தில் உள்ள உப்பு.

இம் மருந்துக் காரர்களுக்கு ஆண் தன்மை குறைவு. பட்டினி கிடக்க விரும்புதல், எப்போதும் மனச்சோர்வு, செக்ஸில் பலமுண்டு. ஆனால் இவர்களுக்கு விருப்பமில்லை. வெள்ளைபாடு சளி, பால்நிறமாக வெளியேறும். மஞ்சள் நுரைபோல் வெள்ளைபாடு. இவர்களுக்கு மூட்டு வலியிருக்கும். கோபமே இருக்காது. இடுப்பிலிருந்து பாதம் வரை மின்னல், மின்னுவது போல மேல் நோக்கி வலி. மந்தம், கவலை, பயம் இது தான் இதனுடைய முக்கிய குறி. கோளத்தில் மின்னல் போல் வலி என்றால் ; PHYT.. கொழுப்பு, புளிப்பு சாப்பிட்டு ஜீரணம் ஆகவில்லை என்பார். இங்கு K-C குறிகள் உள்ளதா பார்த்துகனும். காரணம் இதில் K-C குறிகள் நிறைய இருக்குது. ஆகவே பார்த்துக் கொள்ள வேண்டும். தனிமை பயம் யாராவது இருந்தால் அமைதியாக இருப்பார். இதே இடத்தில் உடன் இருப்பவரை தொல்லைப்படுத்தினால் K-C சாதுவான, கோபமே வராத குழந்தைகளுக்கு, தான் அழகில்லை என்ற எண்ணம், புரிந்து கொள்வதில் தாமதம், அதிக உணர்ச்சி வசப்படுதல், தீடீர் என்று தோன்றும் சின்னம்மை, பெரியம்மை போன்ற அம்மை வகைகள், தொண்டை அடைப்பான், வாத நோய், இடுப்பு மூட்டில் வலி, மூட்டுகளெல்லாம் வீங்கி போய் விடுதல், சுளுக்கு விழுதல், நடக்க முடியாமல் போய் விடுல், சரும நோய் களிம்பு தடவி குணமான பிறகு தோன்றும் காக்கை வலிப்பு, நெருப்பில் சுட்ட மாதிரி தோன்றும் கொப்புளம், கொழுப்பு போன்ற ஜீரணமாகாத உணவு வகைகளை சாப்பிடுவார்கள். நாக்கைப் பார்த்தால், பாலாடை மாதிரி தடித்த, மினு, மினுப்பான சளி ஒட்டி கொண்டு இருக்கும். அதை காரி, காரி துப்புவார். ஆனால் அது வராமல் ஒட்டிக் கொண்டேயிருக்கும். பச்ச தண்ணி குடித்தால் தொல்லை என்றும் கூறுவார். சுகம் என்றும் கூறுவார். திடீர் என்று தோன்றும். மேலே கண்ட நோய்களுக்கு இது பொருந்தும். டாக்டர், எழுத்தாளர், மன போராட்டங்களுக்கு பிறகு நரம்பு பலஹீனம் ஏற்படும்.

KALI - PHOSPHORICUM

- காலி பாஸ்பாரிக்கம்

பொட்டாஸியத்தின் பாஸ்பரஸ் காரகத்தின் கலவை.

இவர்கள் மிக, மிக நரம்பு பலஹீனப் பட்டவர்கள். அதனால் கெட்ட செய்தி கேட்ட பின்போ, கவலை பட்ட பின்போ, பயந்த பின்போ, உடல், மன, உழைப்புக்கு பின்போ எப்படியாவது நரம்பு பலஹீனம் வந்து விட்டாலும், மாதவிலக்கில் தொல்லைகள் ஏற்பட்டு, ஏற்பட்டு மனமே வெறுமையாகிவிடும். (Emptyness). அதனால் தன் கணவனையும், குழந்தைகளையும் கூட இவர்களுக்கு பிடிக்காது என்று கென்ட் கூறுகிறார். சிந்தனை செய்ய முடியாது. மீறி செய்தால் பைத்தியமே பிடித்த மாதிரி இருக்குதுங்க என்பார். உணவுப் பொருளைப் பிடிக்காது, பார்த்தாலே வெறுப்பு என்று சொல்லிக் கொண்டே சாப்பிடுவார். சாப்பிட்டால் வலியும் தணிந்து விடும். உணவை பார்த்தாலே வெறுப்பு, சாப்பிடவும் முடியாது ARS. தட்டில் உள்ள வாசனைனால் குமட்டல் COLC. பக்கத்து வீட்டு உணவுப் பொருளின் வாசனையினால் குமட்டல் COCC. நரம்பு வலிக்கு மருந்து தாங்க என்றாலும், நரம்பு தள்ர்ச்சின்னு டாக்டர் சொன்னாங்க அதுக்கும் மருந்து தாங்க என்று சொன்னாலும் இது தான் மருந்து. சூரியன் வரும்போது தலைவலியும் கூடவே வந்து விடும். மறையும் போது தலைவலியும் போய்விடும். உடன் ; N-M, SPIGI, SANG. இவர்களுக்கு கழிவுகள் அழுகிய வாடை மாதிரி இருக்கும். இது உதடுகளிலும், பெண் உறுப்பு உதட்டிலும், ஆண் மானி திண்டின் மேல் உள்ள தோலை நீக்கி பார்த்தால் உள்ளே தோன்றும் அழுகிய வாடையோடு கூடிய புற்று நோய்க்கு இது சிறந்த மருந்து. (எபிதிலீமா என்ற சரும புற்று நோய்).

KALI - SULPHURICUM

- காலி சல்ப்பரிக்கம்

பொட்டாஸியமும், கந்தகமும் கலந்த கலவை.

இம் மருந்துக்குரியவர்களுக்கு இடம் மாறும் வலி, கழிவுப்பொருட்கள் எல்லாம் மாறி, மாறி வரும். PULS மாதிரியிருக்கும். கோபம், பிறகு, எரிச்சல், வெறுப்பு இருக்கும். PULS க்கு அழுகை, சோகம் இருக்கும். ஆனால் K-S. க்கு கோபம் எரிச்சல் வெறுப்பு இருக்கும். ஆஸ்துமாவின் போது வெளியே வேடிக்கை பார்க்க போனால் நல்லாயிருக்கும் என்று சொல்லி வெளியே செல்வார், சுகம் PULS, K-S. ஆனால் K-P வெளியே போனால் தொல்லை (LINKS) குறிப்பு தெரிந்து கொள்ள இடை மருந்தாக பயன்படுகிறது. கிரானிக் மருந்துகளில் இதுவும் ஒன்று. மூளை சோர்வு. சோகத்ததால் உடம்பே மாறிவிடும். PULS, K-S ஒப்பிடும் போது K-S க்கு மாலையில் காய்ச்சல், கழிவுப் பொருட்கள் மஞ்சளாகவும், பசுமை கலந்த மஞ்சளாகவும் இருக்கும். PULS க்கு கஞ்சத்தனம், அழுகையும் சோகமும் இருக்கும். K-S க்கு கோபமும், எரிச்சலும் இருக்கும். ஆறுதல் சொன்னால் கோபம் அதிகம். மூளை சோர்வினால் சிந்திக்கவே முடியாது. சுத்தமாக சிந்திக்க முடியலை என்றால் K-P. கனவில் கூட பூதம், பேய், விபத்து, நோய் வர மாதிரி பயம் என்றால் K-S. இதே மாதிரி நினைவில் தோன்றினால் K-P வெளியே போனால் கஷ்டம். நடந்தால் சுகம். ஆனால் மிக மெதுவாக நடந்தால் சுகம் என்றால் F-P, K-P, PULS. கனவில் நோய் ஏற்படுவது போலவும், விபத்து நோய் தோன்றுவது போல ஏற்படும். சூடான அறையில் கஷ்டம். ஆஸ்துமா நோயாளிக்கு கூட வெளியில் போனால் சுகம்.

KALMIA

- கால்மியர்

மலையில் விளையும் ஒரு வகை புதர் வகை நறுமண மலர்.

இதய வியாதிக்கு பயன்படும் மருந்துகளில் இதுவும் ஒன்று. இதில்14 குறி தான் முக்கியம். சோகம், பர, பரப்பு, எறிந்து விழுதல், பயம், நடுங்குதல், இவை எல்லாம் இதய வியாதியில் காணப்படும். இவர் பிடிவாதாமாக தான் பேசுவார், தான் பேசுவதும், மற்றவர்கள் பேசுவதும், பிடிக்காது இவருக்கு. இதயம் கெட்டுவிடும். தீயது நடக்க போகுது என்று பயப்படுவார்கள். தூக்கத்தில் வேலை செய்பவர்கள். உடல் பகுதியில் சுடுவது போல வலி. தோள்பட்டையிலிருந்து இடுப்புக்கும், பின் மண்டையில் இருந்து கை வலது கால், இடது கால், இடுப்பிலிருந்து குதி வரை இப்படி வலிகள் எல்லாமே கீழே இறங்குது என்பார்கள். இது முக்கிய குறி. இப்படி வலி கீழே இறங்குவதும், குத்துவதும் போன்ற வலிகள் ஏற்படும். காலை முதல் மாலை மூன்று மணி வரை வலியிருக்கும். மோடத்தில் வலி இருக்காது. வெயிலில் தான் வலி. இதன் முக்கிய குறி மேலிருந்து கீழே இறங்குதல். இதே இடத்தில் கீழிருந்து மேலே ஏறினாள் LED. மோட காலத்திலும், வெய்யில் காலத்திலும் வலினால் மயக்கமே வரும் HEP-S. எந்த வலியானாலும் இதயத்தில் வந்து முடியும். நெட்டு (சொடக்) போட்டாலும் கூட இதயத்தை போய் தாக்கும். இதனால் இதய நரம்பு பெருத்து வீங்கி 140 வரைக் கூட துடிப்பு துடிக்கும். அதிக துடிப்புக்கும், மிக குறைவான துடிப்புக்கும் இதுவே மருந்து. உடன் LIL-T, SPIG சமமாக வரும். பார்க்கனும். அசைவினால் அதிகம். படுத்துக் கொண்டால் சுகம். நகர முடியாது. ஓய்வில் சுகம். வலி வயிற்றிலிருந்து மேலே வரும். இதயத்திலிருந்து கை, தோள்பட்டைக்கு வலி போகும். (PECULIAR). சிபிலிஸ் கண்டிஷன் மாதிரி இரவில் வலி அதிகமாகும். நரம்பு (பாதைகளின்) வலிகளுக்கு, இதய துடிப்பு குறைவு. அதிகத்திற்கு இது போன்றவைகளுக்கு இது நல்ல மருந்து. இதய துடிப்பு சில சமயம் 40க்கு கீழேயும், 140 க்க மேலேயும் காணப்படும். உடன் LIL- T, SPIG.

KREOSOTUM

- க்ரியோசோட்டம்

கடற்கரையில் மட்டும் விளையும் ஒரு வகை மரகட்டை ரஸம்.

இம் மருந்தின் முக்கிய குறி என்னவென்றால் காயம், தழும்பு, அழுகும் புண். புண்ணில், புற்றில், சொத்தை விழுந்த இடம் என்று பல், வாய், பிறப்பு உறுப்பு, ஆண், பெண் உறுப்பு, ஆஸனம், மூக்கு எங்கும் இரத்தம் வடியலாம். அது கருப்பு நிறமாக இருக்கும். குறிப்பாக பெண்ணுக்குத் தோன்றும் வெள்ளைப்பாடும், மாதவிலக்கும் கூட தார் எண்ணை மாதிரி போகுதுங்க என்பார்கள். மற்றும் இவரது பற்களை பார்த்தால் நல்ல உயர்ந்த பற்பசையிலும் நல்ல பிரஷ் கொண்டு பல்லை விலக்கி கொண்டே இருப்பவர்களாகவே இருப்பார்கள். ஆனால் பல்லை பார்த்தால் சந்தில் கருப்பு படிவு காணப்படும் (அ) ஊத்தை கருப்பாகவே இருக்கும். அதாவது அடுப்பு கரியில் பல்லை விளக்கிய பின்பு எச்சில் துப்பியதும் பாருங்கள். பல சந்தில் கருப்பு இருக்குமே அப்படி இருக்கும். இவர்களுக்கு இந்த ஒரு குறியை வைத்து இம் மருந்தை தந்து விட்டால் போதும். மற்ற நோய்கள் தணிந்து (அ) மாறிக் கொண்டு வரும். வெற்றிலை, பாக்கு போட்ட மாதிரி பல் சந்தில் சிவப்பு படிந்தால், பல்லில் சொத்தை விழுந்து கூட கருப்பு தெரியும், கருப்பு தான் இதன் குறி. முற்றிய சர்க்கரை வியாதி, குஷ்ட நோயில் பாதத்தில் சொத்தை விழும். அதற்கு இது சிறந்த மருந்து. இம் மருந்துக்குரிய சிறுவர்கள், வயதானவர்கள் போல் காய்ந்துக் காணப்படுவார்கள். கட்டி கட்டியாக சரும நோய் அதில் செதில்கள் உதிரும். கோபமாகவே இருக்கும் குழந்தைகள் முகம் வெளுத்தும், உடல் மீது புளித்த நாற்றமும் அடிக்கும். சிறு வயது பெண்கள் உயரமாக வளர்ந்திருப்பார்கள் மற்றும் வயதானவர்கள் போல தோற்றமளிப்பார்கள். படுத்துக் கொண்டால் மாதவிலக்கு நின்று விடும். எழுந்து நடந்துக் கொண்டிருந்தால் தான் மாத விலக்கு வரும். மாத விலக்கும் இரத்தம் எப்போதும் காரத்தன்மையும், பெண் மாத விலக்கின் வெள்ளைப்பாட்டுக்காக போடப்பட்ட (துணியில்) ஜட்டியில் துவைத்த பின்பு அங்கு கருப்பு என்றால் இது தான் மருந்து. அடிப்பட்ட இடத்தில் கருப்பு இரத்தம் வந்தால் இது நல்ல மருந்து. ஜில்லுன்னு சாப்பிட்டால் வயிற்றில் புற்று நோயே வந்து விடும். ஜிலு, ஜிலுப்பான காற்றிலோ, தண்ணிலோ ஈரப்பருவத்தில் தொல்லை. நிற்கும் போதும் மாதவிலக்கு வரும். பல் வியாதிகள் இருக்கும். வயிற்றில் புற்று நோய் இருக்கும் போது சூடாக சாப்பிட்டால் சுகம். குளிர்ச்சி தொல்லை உட்கார்ந்தால் வெள்ளைபாடு நின்ற விடும். வெது வெதுப்பாகவும், தும்பிக் கொண்டே இருந்தாலும் சுகம்.

LACHESIS

- லாச்சஸ்

கட்டு வீரியன் பாம்பின் விஷம்.

சந்தேகத்துக்கு உலகில் பெரிய மருந்து இது தான். என் மாமியார், கொழுந்தியாங்க எனக்கு தீங்கு செய்யறாங்க என்று கண்டிப்பாக ஒருவரைக் கூறி உறுதியாக சந்தேகப்பட்டு (இதை) கூறினால் இது. உலகில் உள்ளவற்றின் மீதும், தன் மீதும், தன் மகள், மனைவி மீதும், இது போன்று எல்லாவற்றின் மீதும் எல்லாப் பொருட்களின் மீதும் சந்தேகப்படும் நபர் சொல்லுவார்கள், என் மாமியா (அ) கணவன் (அ) உறவினர்கள் என்று ஒரு நபரை குறிப்பிட்டு அவர்கள்தான் எனக்க மருந்து வெச்சிட்டாங்க, சூனியம் வெச்சிட்டாங்க, என்னுடைய நோய்கள் எல்லாம் அவர்கள் சாபம் வைத்து தான் வந்தது, என்று இப்படி ஒரு நபரை உறுதியாக சந்தேகப்பட்டு சொன்னால் இது தான் மருந்து. மற்றும் கனவில் கூட வந்து கற்பழிச்சிகிட்டே இருக்கிறாங்க என்று குறிப்பிட்ட நபரை கூறினால் இது. (இதே மாதிரி இப்படியிருக்குமா, அப்படி இருக்குமானு சந்தேகப்பட்டால் HYOS.) செக்ஸ் வெறுப்பு கனவில் யாரோ கற்பழிக்கிற மாதிரி என்றால் ஒரே மருந்து SEP. இடது பொறியில் ஒற்றை தலைவலியானது இரும்பு ஆணி வைத்து அடித்து குடைகிற மாதிரி வலிக்குதுங்க என்பார். (இதே மாதிரி வலது பொறியில் மர ஆணி வைத்து குடைகிற மாதிரி என்றால் LYC.) இடது தலைவலியானது பரவி கண், தோள்பட்டை, தொண்டை வரை இடது புறமாக பரவும். தண்ணி முழுங்க முடியல, எச்சி கூட முழுங்க முடியலீங்க என்பார். ஆனால் சோறுப் போன்ற கெட்டிப் பொருள் இவர்களால் முழுங்க முடியும் இது தான் முக்கிய குறி. தொண்டையில் ஏதோ அடைக்குதுங்க என்பார். மேலே உள்ள குறிகள் இருந்தால் இது தான் மருந்து. மாதவிலக்கு நிற்கும் காலத்தில் இடது தொடைவலி என்றாலும், இடது புற பகுதி, இடது கால் என்றாலும் இது தான் மருந்து. (இதே மாதிரி வலது புறத்தில தொல்லை என்றால் மருந்து LYC.) இவர்களுடைய நாக்கைப் பார்த்தால் நீண்டும், நடுங்கிக் கொண்டும் இருக்கும். வெட்டி, வெட்டி பேசுவார்கள். கிராமத்தில் சொல்லுவார்கள் பாம்பு கொத்தற மாதிரி பார்க்கிறாள், கொத்தற மாதிரி பேசறாள் என்பார்கள். அது உண்மை தான். இது கட்டுவீரியன் பாம்பு விஷம், அப்படி தானே இருக்கும்.

LAC - CANIUM

- லாக் கானியம்

நாயின் பால்.

டிப்திரியா, வாதநோய், வாயின் ஓரத்தில் புண் போன்ற நோய்களுக்கு இம் மருந்து பயன்படும். திடீரென அதிகமாக புண் ஏற்படும். அதனால் வலியோ, காய்ச்சலோ ஏற்படாது. மந்தமாக இருப்பார்கள். குழந்தைகளுக்கு கொடுக்க பால் பத்தலை என்பார்கள். அரிப்பு ஏற்படும். ரொம்ப பலஹீனம். பால் கொடுத்தப் பிறகு மார்பைக் கூட மூட முடியாமல் பலஹீனமாக இருப்பார்கள். காய்ந்து போனவர்கள் போல தோற்றமளிப்பார்கள். இது இம்மருந்தின் முக்கிய குணம். ரொம்ப ஞாபக மறதி, அதனால் எழுதும் போது, வியாதினால் இவர்களுக்கு சிந்தனையே வராது. அப்படி கஷ்டப்பட்டு சிந்தித்தாலும் கோர்வையாக சிந்திக்க முடியாது. இதனால் வெறி பிடித்தது போல இருப்பார்கள். கண்களுக்கு முன் மாயமாக பாம்பு மேய்வது போல இருக்கும். காற்றில் தலை பறப்பது போல இருக்கும் உடன் STICTA. ஒரு பக்கம் தலை வலியிருக்கும். டக்குனு அடுத்த பக்கத்திற்கு மாறி விடும். உடனே குமட்டலும் ஏற்படும். அப்போது பார்க்கும் பொருள்கள் நீல நிறமாக தெரியும். வாந்தியும் கூட எடுப்பார்கள். உயரமான இடத்திற்கு போனால் தலைவலி ஏற்பட்டு வாந்தி எடுப்பார்கள். பின் மண்டையில துப்பாக்கியில் சுட்டது போன்ற வலி ஏற்படும். அந்த வலியானது பரவி முன் மண்டை, அதாவது நெற்றிக்கு வந்து விடும். பாதி மூளை மட்டும் வலிப்பது போல உணர்வு இருக்கும். காதினுள் ஏதோ ஒரு (சப்தம்) கேட்டுக்கொண்டே இருக்கும். ஒரு மூக்கில் தண்ணியாட்டம் சளி, ஒரு மூக்கு இயல்பாக இருக்குது, ஒரு மூக்கு அடைப்பு, மூக்கு இயல்பாக இருக்குது, இப்படி மாறி, மாறி வரும். மூக்கின் நுனியில் வெடிப்பிருக்கும். மூக்கெல்லாம் இரண மாட்டம் இருக்கும். இரத்தமும் சளியும் கலந்து வரும். அதிகமாக சிந்துவதால். நாக்கின் மீது ஏதோ சிவப்பாக தடவியது போல இருக்கும். இந்த நேரத்தில் ஏராளமான ஜல வாய் ஒழுகும். டித்தேரியாவில் கூட எச்சிலைக் கூட முழுங்க முடியாமல் ஒழுகும். அப்போது தாடையில் பிளவு வந்து விடும். சாப்பிடவும் முடியாது, விழுங்கவும் முடியாது உடன் (ACID –N). உணவு, இனிப்பு சாப்பிடும் போது ஊசிப் போன மாதிரி, சீழ் மாதிரி , சுவை தெரியும். தொண்டை வீங்கி வலி ஏற்பட்டு காது வரை போகும். இரும்பி, இரும்பி மாதவிலக்கே வரும். பல்வலி, டான்சில் வலி, காது வலி என நோய்கள் மாறி, மாறி வரும், அப்போது முனவிக் கொண்டே படுத்திருப்பார்கள். பெண்களுக்கு முன்னதாகவே மாத விலக்கு ஏற்பட்டு விடும். (CALC, CON, PULS.) மாதிரி. இடது தொடை நரம்பில் இழுப்பு, வாத வலி மாதிரி வரும். தூக்கத்தில் பாம்பு கனவுகள் வரும். குளிர்ச்சியானப் பொருள் விருப்பம்.

LAC - DEFLORATUM

- லாக் டெப்லோராடம்

ஆடை எடுக்கப்பட்ட மாட்டுப் பாலில் இருந்து வீரியப்படுத்தியது.

இம் மருந்து காரர்களுக்கு சிறுநீர் ஏராளமாக போகும். சாப்பிட்ட சத்தெல்லாம அதிலேயே போய் விடும். தலைவலி பரவிக் கொண்டே இருக்கும். நெற்றிலும், பின் மண்டையிலும் காலையில் எழுந்தவுடன் வலி ஏற்படும். வலி உட்புறமாகவும் வலிக்கும். அதே சமயம் வாந்தியும் வரும். கண் பார்வை மங்கும், மலச்சிக்கலும் இருக்கும். மலம் கழியும்போது ரொம்ப கஷ்டம். அதனால் கத்துவார்கள். படுத்துக்கிடந்தாலும், கொஞ்சம் மாதவிலக்கு பட்டாலும் ரொம்ப அசதி. அடிவயிறு, ஆஸன வாயை அழுத்தினால் சுகம். தலைவலிக்கு பத்து போட்டுக் கொண்டால் சுகம். மலம் உருண்டையாக, பெரியதாக கல்லாட்டம் வரும். வரும் போது ஆஸன வாயை கிழித்து கொண்டு வரும். குழந்தைகளுக்கு ஏற்படும் பேதியின் போது உடம்பு முழுவதும் புளிப்பு நாற்றம் வீசும்.

LAC – FELINUM

- லாக் ப்லினம்

பூனைப்பால்.

இம் மருந்துகாரர்கள் உயிர்சக்தி குறைந்தது போல அப்படியே கை, கால்கள் போட்டதை போட்டவர்களாகவே கிடப்பார்கள். ஆனால் கைக் கால்கள் விரைத்துக் காணப்படும். இவர்களது மனநிலை எப்படி என்றால் எந்த ஓர் இடத்திலும், மூலை ஓரங்களிலே அமருவார்கள். பெஞ்சில், கட்டிலில், சுவரின் மூலைப் பகுதியிலேயே அமருவார்கள். குறிப்பாக பெண்களிடம் இது காணப்படும். கண்கள் சுழன்றுக் கொண்டே இருக்கும். பெண்கள் என்றால் தன் எதிரியை பார்த்துக் கொண்டேயிருப்பாள். பிறகு உடனே கண்ணை மூடிக் கொள்வாள். புருவம், கண், எலும்பிலும், நெற்றியிலும் மந்தமான வலி இருக்கும். உச்சியில் தீடீரென வலி, தலைவலியின் போது சிறிது அசைந்தாலும், சவாரி செய்தாலும், வலி அதிகமாகும். பஸ்ஸில் போனதால் தலைவலி அதிகம் என்றால் இதைப் பார்க்கலாம். தலைவலி விட மாட்டிங்குதுங்க, கழுத்து நரம்பு, தண்டு வடத்தில் எல்லாம் வலி என்பார்கள். மண்ணீரல் தொல்லையினால் அப்பகுதியிலும் வலி. நெற்றியை அழுத்திப்பிடிப்பார்கள். (அ) தரையில் வைத்து அழுத்துவார்கள். பாரமான பொருளால் நெற்றிக்கு முட்டு கொடுப்பார்கள். அப்போது தலையும், கண்ணும் வலி. தாடை, வாயின் உட்புறத்தில் வலி. மூளையில் புளு நெண்டுவது போல் இருக்கும். தலையின் உச்சியினுள் வலிக்கும். இவர்களது தலைவலியானது கண் எலும்பினுள்ளிருந்து மேல் நோக்கி நெற்றி, மூளை, என தலை முழுவதும் பிராயணம் செய்து உச்சிக்கு வந்து வலி கொடுமைப் படுத்துது என்பார்கள். இரவில் நெற்றி பொட்டிலும் கண்ணிலும் வலி. கண்ணின் நடு முட்டையில் கூர்மையான பொருளால் சுளீர் என குத்துவது போன்ற வலியும், எரிச்சலும் விட்டு, விட்டு வரும். இதனால் கண்ணீர் அதிகமாக வரும். கீழ் இமையில் பாரம். அதனால் தடித்து விடும். கண்ணைச் சுற்றிலும் இடிப்பது போல வலிக்கும். கண் எலும்பின் வலி காரணமாக முதுகு எலும்பிலும் வலி ஏற்படும். படிக்கும் போது எழுத்துக்கள் ஓடுவது போன்ற ஓர் உணர்வும், மீறி படித்தால் கண் மந்தம் மற்றும் கண்ணில் தெறிப்பது போன்ற வலி, மீறி மேலும் முயற்சி செய்தால் துப்பாக்கில் சுட்டது போல வலி ஏற்படும். இதில் குழம்பி விடுவார்கள். கண் வலியினால் திடீரென குளிர் ஏற்படும். LAC – FELINUM . இம்மருந்தைப் பொருத்தவரை கண்களிலிருந்து பெரும்பாலான நோய்கள் ஏற்படும். (காரணம் பூனை கண் கூர்மையாக பார்க்கும் அல்லவா?) மலம் இரவு இரண்டு மணிக்கு தான் போகும். பூனையைப் போலவே நீளமாக வரும் மலம். பெண்களுக்கு மாதவிடாயின் இரத்தப்போக்கு மூன்று நாளும், நான்காவது நாள் வெள்ளைபாடாகவும் ஏற்படும். நுரையீரல் வறட்சி, கை மணிக்கட்டிலும், விரல்களிலும் வலி, கால் வலி, கால் வலியிருக்கும். பாதத்தை தொட்டால் ஜில்லிப்பாக இருக்கும். மந்தமான தூக்கமும், தூங்கிக் கொண்டே இருக்க விருப்பம் இருக்கும். காய்ச்சலின் போது சூடும், குளிரும் மாறி, மாறி வரும். பொதுவாக இம்மருந்தின் குணம் ரொம்ப அதிகமான கண் வலி தான். மற்றும் பயத்தில் அப்படியே விரைத்துக் கிடப்பார்கள். குடிகாரர்களிடம் கூட இதைப் பார்க்கலாம்.

LAC - VACCINUM

- லாக் வக்சினம்

பசுவின் பால்.

இம் மருந்துகாரர்கள், நரம்பு பலஹீனத்தால் தன்னால், எதுவும் செய்ய முடியவில்லையே, சக்தி குறைவாக இருக்கிறது என்ற எண்ணம். இதனால் தாழ்வு மனப்பான்மை. இவர்களுக்கு எந்த வார்த்தையைக் கேட்டாலும், அது கெட்ட செய்தியாகவே கேட்கும். குழப்பமான மனநிலை உள்ளவர். அதனால் அதிக நேரம் யோசித்தப் பிறகு ஒரு செயலை செய்வார்கள். எந்த ஒரு செய்திiயும், சொல்லவும் முடியாது, மற்றும் எழுதவும் முடியாது. காரணம் அந்த தாழ்வு மனப்பான்மைத் தான். இது பெரும்பாலும், பெண்களிடம் காணப்படும். தலை பாரத்தினால் கிரு, கிருப்பாக இருக்குது என்று கூறி, குப்புற படுத்திருக்கும் பெண்களுக்கு இது. வலது கண் மந்தமாக இருப்பதாகவும் உடனே இடது கண் ரொம்ப டல்லாக இருப்பதாகவும் கூறுவார்கள். காதை ஏதோ கடிச்சிகிட்டு இருப்பது போலவும், ஏதோ காதின் மீது மூடியிருப்பதாகவும், பெண்கள் கூறுவார்கள். காதடைப்பும் இருக்கும், பக்கத்திலே, யாரோ பேசுவது போலவும் இருக்கும். வாய் மஞ்சள் நிறமாக இருக்கும். அழுக்கு பிடித்ததுப் போல் நாக்கின் மீது ஏதோ திரை போட்ட மாதிரி வட்ட வட்டமாக இருக்குது என்றும், புளிப்பு சுவை தெரியுது என்றும் கூறுவார்கள். வாயின் இரு ஓரங்களிலும் ஆசிட் போல் காரமாகவும், மஞ்சள் நிறமாகவும், ஒழுகும் இதை அடிக்கடி துணியைக் கொண்டுத் துடைப்பார்கள். நாக்கின் மீது வட்ட, வட்டமாக இருக்கும். அதில் இரணமாட்டம் வலியும், வெள்ளை நிறமான குழிப்புண்ணும் இருக்கும். நாக்கு வீங்கி அதில் தோல் உறிவது போன்ற உணர்வும் இருக்கும். நாக்கின் மீது சீதம், பசை தடவியது போல இருக்கும். அதில் இருந்து நாராட்டம் வரும், இந்த இடத்தில் புண் இருக்காது. மூச்சுக் காற்று, சீழ் நாற்றத்துடன் வரும்.

புளிச்சிப் போன வாடையும் இருக்கும். உள் கன்னம் பகுதியிலும், டான்சில் பகுதியிலும் விழுங்கும் போது வலி. குரல் வளையை அடைத்த மாதிரி ஓர் உணர்வு. மாலையில் தாகம். விருப்பத்தினால் மூன்று கிளாஸ் தண்ணீர் குடிக்கிறேன் என்று கூறுவார்கள். தாகம் ஏற்படும் போது குளிர்ச்சியான நீரை அளவாக சாப்பிடுவார்கள். வயிறு வீங்கியும், உப்பியும் இருக்கும். காலை 10.30 மணி வரைக்கும். அப்போது, வாயில் புளிப்பு சுவைத் தெரியும். உடன் குமட்டல் ஒரு மணி நேரம் வாந்தி வர மாதிரியே இருக்கும். ஆனால் வராது. எதுக் கழிப்பும் இருக்கும். வலி பரவிக் கிட்டே வந்து தொப்புளுக்கு மேலே ஒரு இஞ்சில் வலியிருக்கும். மலக் காற்று தொல்லை இருந்து கொண்டே இருக்கும். இதனால் சித்ரவதை செய்வது போல் இருக்கும். சாப்பாடோ, பாலோ சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு, இப்படி சித்ரவதை செய்வது போல இருக்கும். வயிறு உப்பிக் கொண்டு பொர, பொரணு சப்தம் கேட்கும். இவர்களது மலம் பெரிய உருண்டையாக இருக்கும். அறுந்து விழாது. மலத்தின் மீது வரி, வரியாக இருக்கும். ரொம்ப முக்கனும். மலக் காற்று அதிக சப்தத்துடன், அதிக நேரம் விட்டால் தான் வயிறு நல்லாயிருக்கும். வெள்ளைப்பாடு தண்ணியாட்டம், வெள்ளை நிறத்தில் வரும். சேக்ரல் பகுதியில் வலி இருக்கும். மாத விலக்கின் போது ஒரு டம்ளர் தண்ணீர் சாப்பிட்டாலும், மாதவிடாய் அடுத்த மாதம் வரை வராது என்று கூறுவார்கள். திடீரென மாதவிலக்கு நின்று விடும். அதனால் அடி வயிற்றை தூக்கி பிடித்துக் கொள்வார்கள். குளிர்ச்சியான கையால் அழுத்திப் பிடிப்பார்கள். கர்பக் காலத்தில ஏற்படும். குமட்டலின் போது, பால் குடித்தால் சுகம். குமட்டல் குறையும். தொண்டை குரல் வளையில் ஏதோ பந்தாட்டம் அடைச்சிருக்கு, அதனால் சுவாசிக்க முடியலை என்றுக் கூறுவார்கள். கால் பகுதியில் ஈட்டியில் குத்துவது போல வலியும், சலீர், சலீர் என ஓடுவது போலவும் வலி. இடுப்பு மூட்டுகளில் வலி இருக்காது. சின்ன, சின்ன வாத வலிகள் ஏற்படும். இவர்களது சருமத்தில் பட்டை, பட்டையாகவும் அதில் கீரிஸ் தடவியது போலவும் இருக்கும். வாயின் ஓரத்தில் புண் ஏற்பட்டு முருடு தட்டி விடும். அதை பேத்து, பேத்து எடுப்பார்கள். வெண்ணெய் தடவியது போலவும் இருக்கும். இவர்களுக்கு வலியானது மார்பு, அடிவயிறு, இடுப்பு மற்றும் முழங்காலில் ஏற்படும். ஒரே நேரத்தில் வலது மற்றும் இடது பகுதியில் வலி ஏற்படும்.

LACTICUM – ACIDUM

- லாக்டிக்கம் அசிடம்

லாக்டிக் ஆசிட்.

இம் மருந்துக் காரர்களுக்கு காலை எழுந்ததும், நோய், நீரிழிவு நோய், வாத நோய் போன்ற நோய்கள் ஏற்படும். மார்;பு, T.B, குரல், சம்மந்தப்பட்ட நோயை கூறுவார்கள். தொண்டை புண்ணாயிடுச்சு, குரல் வளை புண்ணாயிடுச்சு என்றுக் கூறுவார்கள். இது எல்லாம் காலையில் ஏற்படும். நாக்கு வறட்சி அதில் படம் வரைந்தது போன்ற கோடுகள் இருக்கும். தாகம் அதிகமான பசி, வாய்ப்புண், அதிகமாக எச்சில் ஒழுகும். சாப்பிட்டவை எதுக்களிக்கும். குமட்டலும், வாந்தியும் காலையில் வரும். சோகைப் பிடித்த பெண்களுக்கு இது நல்ல மருந்து. எதுக்களிப்பது காரமாகவும், சூடாகவும் இருக்கும். குமட்டிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் சாப்பிடுவார்கள். (IP – க்கில் வாந்தி எடுத்துக் கொண்டே சாப்பிடுவார்கள்.) ஏப்பம் எரிச்சலுடன் வரும். சளி துப்பினால் வராது. அப்பிக் கொள்ளும். இதை பீடி, சிகரெட், சுருட்டு, சாப்பிடுபவர்களிடம் காணலாம். அவர்களுக்கு இது நல்ல மருந்து. தொண்டை பந்து போல் பெருசாகயிருக்கும். தொண்டைக்குழி சிறுத்தும், சிறு நாக்கு சுண்டி சின்னதாக இருக்கும். பெண்களுக்கு பால் சுரபி அதிகமாக சுரப்பதால் வலி ஏற்படும், பெருத்தும் காணப்படும். தொட்டுப்பார்த்தால் கல்லாட்டம் இருக்கும். (அதாவது தாய்மார்களுக்கு.) கைக்கால்களில் வாதவலி. தோள்பட்டையில் வலி ஆரம்பித்து கணுக்கை வரை வரும். முழங்காலில் வலி ஏற்பட்டு பலஹீனம் உடம்பு முழுவதும் நடுக்கம். நடக்கும் போது பாதம் மூட்டு எலும்பு எல்லாம் ஜில்லுனுயிருக்கும். சிறுநீர் நிறைய அடிக்கடி போகும்.

உறவு மருந்துகள்: LITHIA, PHOS-AC, SARC-AC.

LATHYRUSUVDIYA

- லாதிரிஸ்சுவடியர்

கோழிக் குஞ்சும், பட்டாணியும் சேர்ந்தது (சந்தேகம்).

கீழ் பக்கவாதம் அதாவது காலை தாக்கும் பக்க வாதத்திற்கு இது நல்ல மருந்து. இந்த நோயில் நரம்பு திண்டு மற்றும் உள்ளுருப்புகளைத் தாக்கும். இவர்களுக்கு அதிகமான வலி இருக்கும். உள் பக்கமாக இழுப்பது போன்ற வலியிருக்கும். நரம்பு சத்து குறைவாக இருக்கும். (பெரி பெரி ) இது பெரும்பாலும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தான் இந்த பக்கவாதம் தாக்கும். இதற்கு தான் இளம் பிள்ளை வாதம் என்று பெயர். இடுப்புக்கு கீழே வாதம் காணப்படும். நுரையீரல் சம்மந்தமான நோய்கள் தாக்கும். இந்த பக்க வாதத்தினால் நரம்பு சம்மந்தமான பல தொல்லைகள் வரும். Dr.S.V.D.செல்லம் அவர்;கள் இளம் பிள்ளை வாதம் உள்ள குழந்தைகளுக்கு குறி மருந்தும் இடையில் இம் மருந்தும் தருவார். கொடுத்தே ஆகனும் என்றும் கூறுவார். இளம் பிள்ளை வாத தடுப்பு மருந்தாக தற்காலத்தில் ஊசி போடுகிறார்கள் அதற்;கு பதிலாக இம் மருந்தை தரலாம். மனம் மந்தமாகவே இருக்கும். மேல் வயிற்றிலும் மந்தமாக இருக்கும். இதையே அடிக்கடி பைத்தியம் மாதிரி சொல்லி கொண்டிருப்பார்;. நின்று கொண்டிருக்கும் போது திடீர்ன்னு கண்ணை கட்டி மயக்கம் வந்திடுந்துங்க என்பார். நரம்பு பலஹீனம் தான் அதற்கு காரணம், வாயில் எரிச்சல், நாக்கில் கிச்சு, கிச்சு செய்வது போலவும், நாக்கில் ஊறுவது போலவும், மருத்து போய்யும் இருக்கும். உதடு வெந்தது போல இருக்கும். கைக் கால்கள் நுனியில் மருத்து போய் இருக்கும், உடன் நடுக்கலும், பிறகு கால்கள் உதறும். ரொம்ப தளர்ந்தும் அப்படியே இருக்கும். கெண்டைக் கால் Nப்பிய மாதிரியிருக்கும், அதனால் நடக்க முடியாது. குழந்தைகளுக்கு குளிர்ச்சிபட்டால் தொல்லை, ஆனால் பாதமும் ஜில்லுனு ஆகிவிடும். சப்பளங் கால் போட்டு கூட உட்கார முடியாது குழந்தைகளால். அங்கங்கு வட்டமாக மருத்தும், இழுக்கும். இந்த குறிகள் பக்க வாதத்தில் நன்றாகத் தெரியும். இடுப்புக்கு கீழே கெட்டியான தசைகள் தளர்ந்தும், இளைத்தும் காணப்படும். (இளம் பிள்ளை வாதத்தில் இதைப் பார்க்கலாம். ) கால்கள் நீலநிறமாகவும், சில இடங்களில் பெருத்தும் காணப்படும். உட்கார்ந்திருக்கும் போது முழங்கால் மூட்டு பெருவிரல் போன்றவை தரையில் மோதாமல் மேலே தூக்கிக்கிட்டு இருக்கும். குதிங்கால் கூட தரையில் மோதாது. இவர்கள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால் வளைந்த மாதிரி (பெண்டாக) உட்கார்ந்திருப்பார்கள். பித்தப்பை தளர்ச்சியினால் அடிக்கடி சிறுநீர் தானாகவே கசியும். உடலுக்குள்ளே ஜில்லுனு இருக்கும்.

உறவு மருந்துகள் :- SECALE, OXYTROP.

LEDUM - PALUSTRE

- லேடம் பல்ஸ்ட்ரி

சதுப்பு சேற்றில் விளையும் ஒரு வகை டீ.

ஊசிகுத்து, ஈட்டிகுத்து, கைகுத்து இது போன்ற குத்து காயத்துக்கும், தேள், பாம்பு கொத்திருச்சு என்றாலும், விஷக்கடிகள் கடித்து, நெறிமேலே ஏறுவரு போல இருக்குது என்றாலும், ஓங்கி கையில் குத்திய பிறகு தான் கஷ்டம் என்றாலும், ARN, அல்லது LED,தான். வாத வலிகளுக்கும் கால், பாதம், வாதத்தால் நடக்க முடியாது. வலி மேலே நெறி ஏற மாதிரி வலி. விஷப்பூச்சி, தேள், பூரான், பாம்பு போன்றவை கடித்து நெறி மேலே ஏறினால் இது தான் மருந்து. கீழே இறங்கினால் KALMIA.ஜிலுனு ஏறி, இறங்கினால் AGAR.. அந்த இடத்தில் மய, மயனு வலி என்றால் APIS. டைலரின் ஊசி குத்துக்கும், இது தான் மருந்து. ஆகவே எந்த நோயாகயிருந்தாலும், எந்த வலியாக இருந்தாலும், வலி நெறி ஏற மாதிரி மேலே ஏறுது, மய, மயன்னு மேலே வலி ஏறுது என்றாலும், வலி மேலே ஏறுது என்றாலும் இதுதான் மருந்து.

LILIUM – TIGRINUM

- லில்லியம் டிக்ரினம்

புலி மாதிரி நிறமுள்ள அல்லி மலர்.

ஒரே நேரத்தில் மூன்று, நான்கு வேலை செய்வான். பர, பரப்பினால் இதயத்துடிப்பு 120 முதல் 150 வரை இருக்கும். பல வேலை செய்வதால் குறிப்பிட்ட வயதுக்கு மேல் இதயம் தேய்ந்து விடும். வலி வந்தால் தாங்க முடியாது. எவ்வளவு நாள் வேண்டுமானாலும் எனது நோய்க்கு மருந்து சாப்பிடுகிறேன் என்று கூறுவார். உடன் BRY, CALC.தொழிலும், சரி தனது நோய்லும் சரி நாம் தேற மாட்டோம் என்று எண்ணுவார். நமக்கு உள் உறுப்பு கெட்டு இருக்குமோ. என்று எண்ணி, எண்ணி, அரை பைத்தியம் ஆகிவிடுவார். துறவியோ, சாமியாரோ, தவம் செய்யும் போது காம எண்ணம் மேலோங்கி நிற்கும். அப்போது தன்னையும் மீறி தப்பு செய்து விடுவோமா என்று பயப்படுவார்வார்கள். மனதை அடக்கியதால் பேசும் போதும் நினைக்கும் போது நிகழ்ச்சி மறந்து விடும். ஆனால் மற்ற நேரத்தில் ஞாபகம் வந்து விடும். ஒரே நேரத்தில் ஞாபகம் வந்து விடும். ஒரே நேரத்தில், இரண்டு உலகத்தில் இருப்பது போல் மாயமான ஓர் எண்ணம். காமத்தை அடக்க முடியாமல் தப்பு செய்யும் சாமியார்கள் இவர்களே. தான் போட்டுச்செல்லும் செருப்பு கழண்டு போவதே தெரியாது. இந்த மாதிரி உள்ளவர்களுக்கு இம் மருந்து பொருந்தும். உதாரணம் :- ஒருவர் ஒரு காலில் மட்டும் இரப்பர் செருப்பு அணிந்து கொண்டு கிளினிக் வந்தார். என்னப்பா ஒரு காலில் செருப்பு இல்லையே என்று கேட்டதற்கு, அட ஆமாங்க செருப்பு கழண்டதே எனக்கு தெரியலை என்றார். இது குஷ்ட நோயாளிக்கு பொருந்துமா? தற்கொலை விருப்பம்.

அரை பைத்தியம். இவர்களுக்கு தற்கொலை செய்து கொள்ள விருப்பம். இதய நோய், தொழில் தேற மாட்டோம் என்ற எண்ணம். அவசரம், பயம், தப்பு செய்திடுவோமோனு பயம். கவலையை தேடி பிடித்து பயப்படுதல். வலி தாங்க முடியாது. சினிமா, தமாஷ் பார்க்க விருப்பம். நோய் குறைவு. காமம் மிகுதி, மறதியில் பொருளை மறந்து விடுதல். சூடு, குளிர்ச்சி தெரியாது. இரண்டு உருவமாக தெரியுது. வழக்கமானது தெரியாது. மனதில் அமைதியின்மை. இதயம் கட்டி இழுப்பது போல் ஓர் எண்ணம்.

LOBELIA – INFLATA

- லோப்பிலியா இன்ப்லாப்டர்

இந்தியாவில் விளையும் புகையிலை.

புகையிலை, புகைக்கும் பொருட்களுக்கும் பிறகு மூச்சு திணறல் அதனால் குமட்டல், வாத நோயினால் தலைவலி. அப்படியே போதை (அ) போதை மாதிரி விழுந்து கிடப்பார். குளிர்ந்த வியர்வை முகத்தில் கொட்டும். அப்போது சிறிது அசைவு ஏற்பட்டாலும், மூச்சு திணறல், நெஞ்சு வலியும் இருக்கும். பிரசவ வலிக்கு பின்பு இதயம் நின்று இருப்பது போல் தெரியும். புகையிலை விஷம் ஏறிய பின்பு தோன்றும். மயக்கம் கிரு, கிருப்பு வேறு எந்த நிலையிலாவது மேலே கண்ட குறியோடு, கிறு, கிறுப்பு தோன்றினால் இது தான் மருந்து. இது பெரும்பாலும் பெண்களையே தாக்கும். பழுப்பு நிறமான தலைமுடியும், நீல நிற கண்களும், மிதமான சதைப்பிடிப்பும், அழகான தோற்றம் உடைய பெண்களுக்கு இது பொருந்தும். இரத்தம் எல்லாம் உறைந்து நெஞ்சில் வந்து தேங்கி இருப்பது போல ஓர் உணர்வு. அப்போது வேகமாக நடந்தால் இரத்தம் கரைந்து விடுதுங்க என்பார். எப்படி பார்த்தாலும், இருதயத்தில் நோய் தாக்கி தான் நமக்கு கஷ்டம் கொடுக்குது என்ற எண்ணம். முக்கியமாக சேக்ரல் பகுதியில் மோதவோ, அழுத்தவோ, உட்காரும் போது துணி அழுந்துவதை கூட அவர்களால் தாங்க முடியாது என்று, உணர்ச்சி வசப்படுவார். இதனால் எதன் மீதாவது, மோதுவது, உட்காருவது, உறசுவது, துணி இருக்கி கட்டுவதை கூட தவிப்பார். மிக சிறிய மோதலும், குளிர்ச்சியும் கூட இவர்களுக்கு பிடிக்காது. நெஞ்சுவலியின் போது வேகமாக நடந்தால் சுகம் என்பார்.

LYCOPODIUM - CLAVATUM

- லைக்கோபோடியம் க்லாவாடம்

அழுகிய காளை மாட்டின் தோல்.

சாப்பிட்டு நான்கு மணி நேரம் ஆன பின்பும் கூட கூறுவார். எனக்கு வயிறு மந்தமாகவே இருக்குதுங்க என்பார். அதே நேரம் சாப்பிட, சாப்பிட பசிக்குதுங்க என்றும் கூறுவார். இப்படி ஒரு மாறுபட்ட குறியும் இம் மருந்தில் இருக்குது. பார்த்து கொள்ள வேண்டும். தனக்கு மேல் உள்ள அதிகாரி, தப்பு செய்தாலும் அவரை வணங்குவார். தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளை காரணமே இல்லாமல் திட்டுவார். வயற்றில் என்னமோ உருளுது என்பார். இடி மின்னலின் போது மகிழ்ச்சி LYC. (அப்போது நடனமே ஆடினால் SEP.)) (பயப்பட்டால் PHOS.) வலது பொறியில் மர ஆணி வெச்சி குடையர மாதிரி வலி என்பார். வலது புறத்தலைவலியானது தோள்பட்டை கண் வரை பரவுவது என்பார். மாலை நான்கு முதல் எட்டு மணி வரையும், வலது புர எல்லாவிதமான தொல்லைகளுக்கும் இது முக்கிய மருந்தாகும். இதே மாதிரி (இடது புறம் என்றால் LACH.) (சாப்பிட தாமதம் ஆனால் தோன்றும் தலைவலிக்கு SANG, SULPH.)நன்றாக மூச்சு இழுத்து விடுவதால் சுகம். உடன் ARS, PULS. (பழம் சாப்பிட்டு வயிறு வலி BORAX.) சிரித்தால் வயிறு வலி LYC. (பாரம், தூக்கிய பிறகு வயிறு வலி BORAX, NUX.) வயிறு பெரியதாக இருக்கும் ஆனால் சுகம் என்பார்கள். தாம் சொல்வதை பிறர் கேட்க வேண்டும் என்பார். ஆனால் இவர் பிறர் சொல்வதை கேட்க மாட்டார். (PLAT காரர் தன் பிள்ளை இறந்தால் கூட கௌரவத்தை விடமாட்டார்,) பரிட்சையில் தேறுவோமோ என்ற பயம், உடனே சரியாகி விடும். குழந்தை சொல்லும் என்னை தொடாதே என்று. வெளியே போனால் சுகம். புலம்பிக் கொண்டே இருப்பார். பயம், மூச்சு நிற்கும் அளவுக்கு பயம். Upper Right, Lower Left இது. கரைட்டான பேர்வழி. இவர் பிறரை கேள்வி கேட்பார். ஆனால் இவரை கேள்வி கேட்க கூடாது. PLAT, LYC. தன் கருத்தை கூற முதலில் தயக்கம். பிறகு போக, போக இயல்பாக கூறுவார். முதலில் தேறுவோமா என்ற பயம். பிறகு எழுத, எழுத பயம் குறைந்து விடும். தனிமையில் எதிர்பார்ப்பு பயம். இவர்களுக்கு யாரோ ஒருவர் பக்கத்தில் இருக்கனும். ஆனால் அவர் தொட்டால், பேசினால் இவர்களுக்கு பிடிக்காது. இரவில் பயம். வாயு பிரிந்தால் எல்லாம் சுகம். வெளியே போக சுகம். தன் பிள்ளை வீட்டுக்காரர் மீது கோபம். யாரும் உதவியில்லை என்ற எண்ணம்.

LYSSIN

- லைசின்

வெறி நாயின் உமிழ்நீர்.

இவர்களுக்கு தண்ணீரைப் பார்த்தால் மிகவும் பயம். ஆறு, ஏரி, நீர்வீழ்ச்சி போன்ற நீர்களைக் கண்டு பயம். வெறி பிடித்த மாதிரி பயம். (இதே இடத்தில் தண்ணீரின் பளபளப்பை கண்டு பயந்தால் STRAM.) இவர்கள் தண்ணி கூட எடுக்க மாட்டார்கள். கேட்டால் சீலையில் தண்ணிபட்டால் வெறி வந்துடுங்க என்பார். (தண்ணி எடுக்க வெறுப்பு என்றால் SEP.)கண்ணாடி பளபளப்பை பார்த்தால் வலிப்பு வந்து விடும். கணவன் சும்மா பேசினாலும், வேறு யாராவது பேசிக்கொண்டிருந்தாலும், தன்னையே குற்றம் சொன்னாலும், அவர்களை அடித்து நொறுக்கி விடலாமான்னு வெறி வந்து விடும். இடுப்பில் இருக்கும் குழந்தை அழுதால் காலை இரண்டை பிடித்து பாறை மேலே அடித்து நொறுக்கி விடலாமான்னு வெறி வந்துடுதுங்க என்பார். வீட்டில் இருக்கும் பொருள் எல்லாம் வேறு யாருடையது மாதிரி தெரியும். கெட்ட செய்தி வரப்போகுது என்று எப்பவும் எதிர்பார்த்து கொண்டே இருப்பார்கள். வெளியே போனால் விபத்து வந்து விடும் என்று போக மாட்டார். சின்ன கோபம் வந்தால் கூட அவர்களை அடித்து நொறுக்கலாமா? என்ற எண்ணம் வரும். பயங்கரமாக கோபம் வருது என்று பெண் கூறுவாள். அப்போது என்னமா செய்து என்று கேட்டால் அடித்து நொறுக்கி தூள், தூள் ஆக்கி விடலாம் என்று வெறி வருதுங்க என்றும், கடித்து கொதறி விடலாமா என்றும் இருக்குதுங்க என்பாள். கணவனோ, மனைவியோ வெறிதனமாக திட்டிக் கொண்டால் இது தான் மருந்து. எதிரியை வெட்ட வெறி வந்தால் HEP. தன்னையே வெட்டிக் கொள்ள வெறி வந்தால் ALUM. மனைவி சொல்வாள். என் கணவனுக்கு கோபம் வந்தால் வெறி நாயாட்டம் இருக்கிறாங்க, கணவர் சொல்வார், இவளுக்கு கோபம் வந்து விட்டால் வெறி நாயாட்டம் குழைக்கிறா என்று சொல்லுவார். வெறி, வெறி என்ற சொல் வந்து விட்டால் இது தான் மருந்து. ஆட்டுக்கறி சேராவிட்டாலும் ஒரே மருந்து இது தான். சண்டையில் வெறி பிடித்த மாதிரி நடந்து கொள்ளுவார். அரசு மருத்துவமனையில் நாய் கடிக்கு, தொப்புளைச்; சுற்றி ஊசி போடுவார்கள். ஆனால் அந்த மருந்தே பின்பு தொல்லை தரும். அந்த தொல்லையை முறிக்கவும், நாய் கடித்தால் அந்த விஷத்தை முறிக்கவும், இது பயன்படுகிறது. குறிப்பு:- அலோபதி மருத்துவத்தில் நாயின் இரத்தத்தின் சீரத்தை எடுத்து ஊசி மருந்துகளாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதை அரசு மருத்துவமனைகளில் போடப்படுகிறது. இருப்பினும் அதில் பின் விளைவுகள் வருகிறது. இதில் பின் விளைவு இல்லாமல் குணப்படுத்தி விடும். குளிக்க பயம்.