ABROTANUM

– அப்ரோடனம்

தென் ஐரோப்பாவில் விளையக்கூடிய ஒரு வகை மர இலைகள்.

இது இளம்பிள்ளை வாதத்திற்கு முக்கிய மருந்து. இடுப்புக்கு கீழே தொழ தொழத்து போய்விடும். ஆனால் கைகள் இரண்டும் பெருத்தும் வலிமையாகவும் இருக்கும். இதனால் மாடி படிகட்டுகளில் கூட கைகளின் பலத்தை கொண்டு ஏறுவான். இறங்குவான், கைகளை கொண்டு நன்கு வேலை செய்பவனுக்கும், மூன்று சக்கர வண்டிகாரனுக்கும் பொருந்தும். இரு கால்களும் மெலிந்து இருக்கும். இதே மாதிரி கழுத்து இளைத்தும் தொழ தொழத்து போனால் PHOS, N-M, SAMBU. தலையில் எதுவும் பட முடியாது. உள்ளே ஏதோ உடையற மாதிரி இருக்கிறது, கிள்ளுகிற மாதிரி இருக்கிறது, மூளை நஞ்சு போன மாதிரி இருக்கிறது என்று இப்படி எல்லாம் சொல்வாகள்;. அதிகமான கவலையுடன் முனகல். பெண் ஏதோ ஒரு சமயம் மட்டும் முரட்டுதனமாக நடந்து கொள்ளுவாள். பயமும், ஒழுக்கமும் இருக்காது. அதனால் வாய்க்கு வந்த படி பேசுவார். இது பெரும்பாலும் சிறுவரின் வாத நோய்க்கு பொருந்தும். எல்லா தொல்லைகளும் சிறுவரையே தாக்கும். கண்ணை சுற்றி நீல வளையம், பார்வை மந்தம், மூக்கில் வறட்சியும், இரத்த கசிவும், சிறுவர்க்கே வரும். சிறுவரின் முகம் கிழவர் மாதிரி இருக்கும், எச்சி, சளி மாதிரியும், கார ருசியுடன் இருக்கும். பசி வந்து விட்டால் வயிற்றை கிள்ளுகிறது என்பார். அடி வயிறு தளர்ந்தும், தொங்கியும் இருக்கும். மலக்குடலில் பல விதமான புழுக்கள் அடிக்கடி பேதி ஏற்படும். அப்போதும் ஆஸன வாயும் பிதுங்கி விடும். பேதியின் போது ஆஸனம் பிதுங்கினால் (மூலம்) இது நல்ல மருந்து. சிறுவனுக்கு ஏற்படும் விதை வீக்கம், பெண்ணுக்கு இடது சினைப்பை பெருத்து விடும், பிரசவத்திற்க்கு பிறகு இரத்தம் கசிந்து கொண்டே இருக்கும். ஈர காற்று பட்ட பின்பு நுரையீரல் வறண்டு போய் விடும். அமைதியற்ற தூக்கமும், கனவில் மட்டும் பயம். ஏற்படும். அதிகமான காய்ச்சல், T.B.,நோயாளியின் காய்ச்சல், இதுவும் சிறுவர்க்கே ஏற்படும். குறிப்பு:- இது பொரும்பாலும் சிறுவர்களையும், குழந்தைகளையும் தாக்கும் தன்மையுடையது. கீழ் வாதம், கால்கள் நடுங்குதல், இளைப்பும், உடல் பலமின்மையும், கைகள் பெருத்தும், பலத்துடனும் இருக்கும். பயம் இருக்காது. சுறு சுறுப்பாக இருப்பார். இடுப்புக்கு மேலே பலம். கீழே மந்தம். சில சமயம் மலசிக்கல்களும், பேதியும் ஏற்படும். ஆனால் எல்லா தொல்லையும் சிறுவரையே தாக்கும். இது தான் இந்த மருந்தின் முக்கிய குறிகள்.

ABSINTHIUM

– அபிஸிந்தியம்

ஐரோப்பாவில் விளையக்கூடிய விஷ செடியின் கொழுந்து இலையும், மலரும் சேர்ந்து அரைத்த சாறு.

காக்கை வலிப்புக்கு முக்கிய மருந்து. நினைப்பு தெரிந்தால் CAUST., நினைவு தெரியலை என்றால் ABSI., வலிப்புக்கு முன் கொலை வெறி BELL, CUPR, CICUTA. இது மூன்றும் வேலை செய்யாத போது ABSI. மெனோபாஸ் சீக்கிரம் வந்திடும். கணவன் மீது வெறுப்பு SEP. மனைவி மீது வெறுப்பு ACID-FL.,குழந்தை மீது வெறுப்பு ABSI.,குறிப்பிட்டவர் மீது வெறுப்பு N-C., காரணமே இல்லாமல் மனைவி மீது வெறுப்பு ANAC, ABROT, ABSI., மூன்றுமே பொருந்தும். உயரமாக தலையை தூக்கி பிடித்து தணிந்தால் N-M., அதிகமானால் ABSI.இரக்கமின்றி கொலை செய்வான். ஒழுக்கம் குறைவு. பெரியவர்களையும் பெயர் சொல்லி கூப்பிடுவான். காரணமின்றி வெறுப்பு. அம்மா மீது வெறுப்பு THUJA. காய்ச்சலில் மயங்கி பின் பக்கம் சாய்வார். தலை கீழே சாய்ந்து பிடித்தால் தணிவு. தலையணை வைத்தால் அதிகமாகும். வலிப்புக்கு முன் நடுக்கம். பயங்கரமான ஷேஷ்டை செய்தல், முட்டாள் மாதிரி;, பயங்கரமாக பார்த்தல், மாயமாக காதில் ஏதோ ஓசை கேட்டல், மாயமாக ஏதோ தெரிதல், பிறகு எதுவும் இல்லை என்று கூறுவார். டக்குனு ஞாபகம் போய்விடும். தலை:- பெண் கூறுவாள், தலையே மேல் புறமாக ஏறி முதுகு பக்கம் போகிற மாதிரி ஒரு குழப்பம் என்பாள். மூளை, தண்டுவடம், ஆகியவற்றில் ஒரு வேக்காடு. கண்:- விழி கணமாகி நமச்சல் ஏற்படும். பார்வை நரம்புகளில் ஊசியில் குத்துவது போல வலி. காது:- ஒலி நரம்புகளில் மந்தம். முகம்:- வலிப்பின் போது முகம் பனிமுட்டம் மாதிரி அதிக இரத்தம் முகத்தில் பாய்ந்தது போல சிவந்து இருக்கும். இது காக்கை வலிப்பின் போது தோன்றும் முக்கிய குறியாகும். வாய்:- காக்கை வலிப்பின் போது தாடை விரைப்பாக (இருக்கி பிடித்தது போல) இருக்கும். அப்போது நாக்கை கடித்து கொள்வார். நாக்கு தடித்து விடும். நாக்கு வெளியே பிதுங்கி பேசவே முடியாது. நாம் பார்த்தால் தொண்டை கொதி நீரில் வெந்தது போல இருக்கும். வயிறு:- பசியே இருக்காது, உணவு மீது விருப்பம் இல்லாமல் போய் விடும். சிறிது சாப்பிட்டாலும், வயிறு உப்பி, குளிர்ந்து, தொங்கி நீண்டு விடும். ஏப்பமும், குமட்டலும் மற்றும் வாந்தியும் ஏற்படும்;. கல்லீரல் பகுதியை தொட்டு காட்டி ஏதோ உறுத்துவது போலவும், ஏதோ இருப்பது போலவும் கூறுவார். அடிவயிறு:- கல்லீரல் பெருத்து விட்டது என்பார். மண்ணீரலில் வலி, மலேரியாவுக்கு பிறகு தான் இந்த தொல்லை என்று கூறுவார்கள். வயிறு உப்பிசம் ஏற்பட்டு காற்று பிரியவில்லை என்பார்கள். சிறுநீரகம்:- சிறுநீர் குதிரை மூத்திரம் மாதிரி கொழ, கொழன்னும் கடுமையான நாற்றத்துடன், அதிக நேரம் சிறுநீர் கழிந்து கொண்டே இருப்பார். பெண்உறுப்பு:- வலது சின்னைப்பையில் வலி. மந்தமான நிறத்தில் மாதவிலக்கும், காலத்துக்கு முன்னதாகவே போக்கும் ஏற்படும். மெனோபாஸ் சீக்கிரம் வந்து விடும். நுரையீரல்:- ஈரல் பற்றிய புகார்களையே கூறுவார்கள். உடன் இரும்பல். இதயம் சம்பந்தமான தொல்லைகளும் இருக்கும். பொதுக்குறிகள்:- பாதம் சில்லிட்டு விடும். காக்கை வலிப்பில் விழுந்தே கிடப்பார். நினைவே சிறிதும் இருக்காது. பல்லை அரைத்தல், வலிப்பில் குதிரையாட்டம் காலை உதைப்பார். பக்கவாதம் மாதிரி இழுக்கும்.

ACID – MURIATICUM

- ஆசிட் முரியாட்டிக்கம்

மூரியாடிக் ஆசிட்டின் கலவை.

மிக மிக அதிகமான மந்தம். களைப்பு, கை, கால் அப்படியே இருக்கும். தாடை தொங்கிக் கொண்டு வாயை கூட மூடாமல் அப்படியே கிடப்பான். கை, கால் கீழே இறங்குவதும், சறுக்குவதும் கூடத் தெரியாது. அவ்வளவு களைப்பு. எச்சில் கூட கூட்டி முழுங்க முடியாது. அவ்வளவு பலஹீனம். பலஹீனத்துக்கு பெரிய மருந்து இது தான். டைபாய்டு, மூளைக்காய்ச்சல் போன்ற பெரிய நோய்களிலும், கவலை, பயம், ஏமாற்றம் அடைந்த பின்பு இது போன்ற நோய்களுக்கு பிறகு ஏற்படும் மரண களைப்புக்கு இதுவே மருந்து. இந்த நிலையில் இருந்தால் இது பொருந்தும். மெட்டீரியா மெடிகாவிலேயே பெரிய மரண களைப்புக்கு இது தான் மருந்து. ஆகவே நாம் நோயாளியைப் பார்க்கும் போது மிக, மிக சோர்வாக பேசுகிறாரா? பார்க்கிறாரா? படுத்து இருக்கும் தோற்றம் அப்படியா இருக்கிறது என்று நாம் கவனித்தாலே மருந்து ஞாபகம் வந்து விடும். கண்ணில் அதிகமான பிப்பும், உறுத்துவது போன்ற வலியும். திரும்பினால் துப்பாக்கில் சுட்டது போல வலியும் ஏற்படும். கண்:- வீங்கி சிவந்து இருக்கும். காதில் அழுத்தற மாதிரி, இழுக்கற மாதிரி வலியுடன் கொப்புளம் இருக்கும். காதில் ஏதோ சப்தம் கேட்கும். மூக்கு:- புண் ஏற்பட்டு அதில் தேள் கொட்டுவது போன்ற வலி ஏற்படும். மூக்கடைப்புடன் சளி ஒழுகும். கெட்டியான மஞ்சள் நிற சளி. மூக்கில் இரத்தம் வருதல். தும்பும் போது மூக்கில் கிச்சு, கிச்சு செய்வது போல இருக்கும். முகம்:- சிவந்து இருக்கும். கன்னம் சூடாகவும், எரிச்சலாகவும் இருக்கும். தாகம் இருக்காது. முகப்பரு அதிகமாக ஏற்படும். இவைகள் வெய்யில் காலத்தில் ஏற்படும். தலை:- உச்சியில் கொப்புளம் ஏற்படும். உதடு வீங்கி பெருத்து தோல் உறிந்து காணப்படும். அதில் தாங்க முடியாத அளவு வலி ஏற்பட்டு இரணம் மாதிரி இருக்கும். பற்கள் உறுத்துவது போல இருக்கும். ஈறு வீங்கி இரத்தம் வடியும். வாய்:- வறண்டு இருக்கும். நாக்கிலும் பக்கவாதம் வந்து எச்சில் ஒழுகும். நாக்கு தூக்க முடியாது. அதனால் பேச்சு வராது. நாக்கில் தோல் உறிந்து காணப்படும். நாக்கில் வெள்ளை வட்டம் காணப்படும். தொண்டை வறண்டு இரணமாகி இருக்கும். வெள்ளை வெள்ளையாக தோல் உறியும். நெஞ்செல்லாம் சளி அப்பியிருக்கும். சிறு நாக்கும், டான்சிலும் வீங்கி விடும். ஏரளமான எச்சில் ஒழுகும். பசியில்;:- நாக்கில் ஊசி போன மாதிரி சுவை தெரியும். மற்றும் அழுகி போன முட்டை போலவும், காரமாகவும் சுவை தெரியும். பித்த கசப்பும், இனிப்பும,; பீர் குடித்த மாதிரி தெரியும். அதிகமாக தாகம் இருக்கும். கறி சாப்பிட்ட பிறகு இப்படி எல்லாம் வந்து விட்டது என்பார். விக்கலும், வாந்தியும் வரும். வெறும் வயிற்றில் கூட பித்த வாந்தி வரும். சாப்பிட்ட பின்பும் பித்த வாந்தி வரும். சிறுநீரகம்:- சிறுநீர் பையின் பலஹீனத்தால் அடிக்கடி சிறுநீர் வரும். சீறுநீர் வரும் போது உயிர் போற மாதிரி வலி. தானாகவே சிறுநீர் சொட்டு சொட்டாக ஒழுகும். ஆண் உறுப்பு் மானித் திண்டில் உப்பி ரணம் ஆகி தோல் உறியும். விதை பகுதி கடுமையான பிப்பு ஏற்படும் அப்போது உணர்வுகளை அடக்கினாலோ, சொறிந்தாலோ சரியாகி விடும். ஆசை இருக்கும் ஆனால், ஈடுபட முடியாது. உறுப்பு தளர்ந்து இருக்கும். பெண் உறுப்பு:- பெண் உறுப்பை தேய்த்து, தேய்த்து கீழே இறங்கின மாதிரி இருக்கும். இவர்கள் இப்படி தேய்பதியிலேயே பைத்தியம் ஆகிவிடுவார்கள். மாத விலக்கின் போது இந்த இடம் புண்ணாகி விடும். சீழ் பிடித்தது போல் நிறைய தண்ணி ஒழுகும். அதனால் உறுப்பு பலஹீனம் ஆகி துணிக்கூட பட முடியாது மற்றும் உட்கார முடியாது. நுரையீரல்:- மூச்சி இழுத்து, இழுத்து அந்த இடம் இரணம் ஆகி குதிரை இழுக்கும் மூச்சு மாதிரி சப்தம் கேட்கும். இரும்பி, இரும்பி சளியை சோப்பு நுரையாட்டம் கக்குவார்கள். மேலும் கீழும் மூச்சு வாங்கும். அப்பொழுது ஈட்டில் குத்துவது போலயிருக்கும். மூச்சு இழுப்பதை பார்த்தால் பயங்கரமாக இருக்கும். ஒரு பக்கத்து மார்பு இழுத்து கட்டியது போல இருக்கும். மூச்சு இழுக்கும் போது பயங்கரமான வலி ஏற்படும். நெஞ்சு எலும்புக்குள்ளே ஏதோ வைத்து அழுத்துகிற மாதிரி மந்தமான ஓர் உணர்வு இருக்கும். இதயம் மற்றும் துடிப்பு:- இதயத்தையும் நெஞ்சி எலும்பையும் வைத்து தைத்த மாதிரியிருக்கும். இது எப்போது என்றால் ஒரு பேச்சி பேசினாலும், ஆழ்ந்து மூச்சி இழுத்து விட்டாலும், சிறிது அசைந்தாலும், பயங்கரமாகயிருக்கும், அவருக்கு துடிப்பானது சப்தம் மொதுவாக கேட்க்;கும். ஆனால் அடிக்கடி துடிக்கும். குட்டை, குட்டையான சின்ன துடிப்பு, அப்போது இருதய பகுதி முழுவதையும் துப்பாக்கியில் வைத்து சுடுகிற மாதிரியிருக்கும். இரவு நேரத்தில் கரண்டு சேக் அடிக்கிற மாதிரி இருதயம் அடிக்கிறது என்பார். இப்படி இருதயத்தை பற்றிய பயங்கரத்தையே கூறுவார். இப்படி அவருடைய முகத்தை பார்க்கும் பொழுது வெளிப்படையாக தெரியும். முதுகு;- சுறுக்கு, சுறுக்குனு முதுகு வலிக்கும். வில்லாட்டம் உடம்பை இரண்டாக வளைப்பார்கள். இப்படி உடம்பை அப்படியே வருத்திக் கொண்டு இருப்பார்கள். துப்பாக்கியில் சுடுவது போல வலியிருக்கும் அப்போது தோள்பட்டையை கொண்டு குனிந்து, சிறுநீர் பையை அழுத்தி பிடிப்பார். அவ்வளவு கொடுமையாக இருக்கும். கை பற்றி:- பலஹீனத்தால் பக்கவாதம் தோள்பட்டையை வைத்து முறுக்கிற மாதிரியும் வலி. விசேஷமாக கை விரல்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் கிழிக்கிற மாதிரி வலி என்பார். கைகளிலும், விரல்களிலும், உள்ளங்கையிலும் கிச்சு, கிச்சு செய்கிற மாதிரி உணர்வும், பிப்பும், ஈட்டியில் குத்துகிற மாதிரி இருக்கிறது என்பார். கைகளின் பின்பக்கமும். விரல்களின் பின் பக்கமும், சொரிந்த பின்பு செதில்களாக உதிரும். எழுத்து வேலை செய்த பிறகு பெரு விரல் சுளுக்கிவிட்டது என்பார். இப்படி சொரிந்த பிறகும், வேலை செய்த பிறகும், எரிச்சலோடு உள்ளங்கையும், விரல்களும் வீங்கியிருக்கும், அப்போது கையைப் பார்த்தால் சவத்தின் (இறந்தவர்களின்) கை போல இருக்கும். கால்கள் பற்றி:- தொடைக்குள்ளே சுளுக்கு விழுந்து இழுக்கிற மாதிரியிருக்கும். தொடை இரண்டையும் இருக்கி பிடித்த மாதிரி இருக்கும். ஆனாலும் பலஹீனம் மாதிரியிருக்கும். தொடையில் வட்ட, வட்டமாக பிப்பு எடுக்கும். சொரிந்தால் சுகமாக இருக்கும். பிறகு வீங்கி விடும். கெண்டைக் காலும், குதிகால் நரம்பும் நடக்கும் போது இழுத்து பிடித்த மாதிரியிருக்கும். குதிங்கால் நரம்பு இரவிலும், பகலிலும், நடக்கும் போதும், தூங்கும் போதும், ஈட்டியில் குத்துகிற மாதிரி வலியும், சீழ் பிடித்த மாதிரி வலியும், கெண்டைக்கால்களில் குழிப்புண்களில் ஏற்படும் வலியும், அதில் எரிச்சலும் இருக்கும். பாதத்தை தொட்டுப் பார்த்தால் ஐஸ் மாதிரியிருக்குது என்பார்கள். கட்டை விரல் மட்டும் எரியுது என்பார்கள். அப்போது வீக்கத்தோடு அந்த பகுதி சிவந்து காணப்படும். குறிபபு்:- பொதுவாக இந்த மருந்து மனதாலும், உடலாலும், பல விதமான அடி தடிகளுக்கு பிறகும், உள்புறமோ, வெளி புறமோ, பல வித விஷ தாக்குதலுக்கு பிறகும், டைபாயிடு, மலேரியா, மூளைக்காய்ச்சல், போன்ற பல விதமான கடுமையான நோய்களுக்கு பிறகும், புற்று நோய், எய்ட்ஸ் போன்ற பலவித பயங்கரமான நோய்களுக்கும், மரண களைப்புக்கு பிறகும் ஏற்படும் களைப்புக்கும் ஒரே மருந்து இது தான்.

ACID – NITRICUM

–ஆசிட் நைட்ரிக்கம்

தங்கத்தையே கரைக்கும் குணமுள்ள இராஜ திராவகத்தின் கலவை.

தொண்டையில் குச்சி, சிதாம்பு குத்தியது போல் எண்ணம் இருககும். தனக்கு கீழ், மேல் உள்ளவர் தப்பு சொல்லி (செய்து) விட்டால், அவரை மன்னிக்க மாட்டார்கள்;. நீங்கள் மருந்து கொடுத்த பின்பு எல்லா தொல்லையும் அதிகமாகி விட்டது. என்று குற்றம் சாட்டுபவர் உடன் OPIUM, ACID – NIT. (தொண்டையில் சிதாம்பே குத்தி விட்டால் HEP.)வண்டி சப்தம் கூட தாங்க மாட்டார். ஆனால் இவர்கள் சவாரி செய்தால் சுகம். காது:- செவிடுக்கு கூட காது கேட்கும். சிறுநீர் போனால் ஐஸ் மாதிரியிருக்குது என்பார். பூந்தசைகளில் காளிபிளவர் போன்று மரு இருக்கும். தொட்டால் தானாகவே இரத்தம் வரும். பொருள்கள் மாயமாக சிறுத்தும், பெருத்தும் காணப்படும். வாய், நாக்கு, யோனி இங்கெல்லாம் கத்தியில் அறுத்த மாதிரி புண் இருக்கும். மாமிசம், ரொட்டி சாப்பிட பிடிக்காது. உப்பும், கொழுப்பும் ஒரே நேரத்தில் சாப்பிட விருப்பம். உடன் ACID – NIT, SULPH ஆகியிருக்கிறது. சிதாம்பு குத்திக்கொண்டு இருக்கிற மாதிரி இருக்கிறது என்றால்; ARG-N, HEP, ACID-NIT. அதிக காரம், சாம்பல், பென்சில், சிலேட்டு, மண், உப்பு, நெய், எண்ணெய், கொழுப்பு, மண், சாக்பீஸ், இப்படி ஜீரணம் ஆகாத பொருட்களை சாப்பிட விருப்பம். ஆனால் ஆனால் அதை சாப்பிட்டால் பேதியாகும். மிகச் சிறிய வண்டி சப்தம் கூட தாங்க மாட்டார். சிபிலிஸ் நோயில், மருவில் கை பட்டதும் இரத்தம் வடியும் THUJA. சரியான மருந்து கொடுத்து அது புரூவிங் ஆனால் இதை கொடுத்து பின்பு உரிய மருந்து கொடுத்தால் வேலை செய்யும். சரியாகும். குளிர்ச்சிக்கு பிறகு சளி பிடித்து கொண்டது, சளி கெட்ட நாற்றம் வீசுகிறது என்றால் இது. பாதத்தில் பித்த வெடிப்பு, கத்தியில் அறுத்த மாதிரி இருந்தால், இரத்தம் வடிந்தாலும் இது தான் மருந்து. உடன் கோபமும், இந்த வியாதியில் இறந்து விடுவேன் என்ற பயமும், இந்த பழைய நோயில் இருந்து தப்பித்து விட்டேன் என்ற பேச்சும் இருக்கும். யாரையும் மன்னிக்காத மனம். சிறிய விசயத்துக்கு கூட மன்னிக்க மாட்டார். மனம் சமாதானமே அடையாது. யோனி, மானி, ஆசன வாய் போன்ற இடங்களில் சைகோஸிஸ் (கட்டிகள்) தோன்றும் போது, முதலில் நீர் மாதிரி பின்பு திரவம், பச்சை நிற இரத்தம், மஞ்சள் நிறம், இப்படி கழிவுகள் வடிந்து பின்பு கள்ள சதை வளர்ச்சி காளிபிளவர் மாதிரி மிருதுவாக தோன்றும். குதிரை மூத்திரம் மாதிரி நிறத்துடனும், நாற்றமாகவும், காரமாகவும் எரிச்சலோடும் போகும். எலிப் பொறியில் சிக்கிக் கொண்டு இருப்பது போல் எண்ணம் இருக்கும்.

ACID – PHOSPHORICUM

–ஆசிட் பாஸ்பரிக்கம்

பாஸ்பரத்தின் கார திராவகம்.

சக்தி இழந்து விடுதல், காம உணர்வு அதிகம். அதனால் விந்து சக்தி குறைவு, நீண்ட நாட்களாக காம எண்ணத்தால் ஏமாற்றம். காதல் தோல்வி, அதைப் பற்றி மறக்க முடியாமல் ஏக்கம். வேகமாக வளரும் முட்டாள், சிறுவர்கள் பால் கலந்த இரத்தம் மாதிரி சிறுநீர் போவார்கள். கால் நடுக்கம், மந்தம், அதிகமாக தூங்குதல், சூடான பானம் குடித்தல் தலைவலி விட்டுபோகும். SATROP, ARS, PULS, N-M, ING, K-BRO பார்த்துக்கொள்ளனும். கண்ணை சுற்றிலும் நீல நிறமாக வியாதி பிடித்த மாதிரி இருப்பார். (கண் உருண்டை மட்டும் அழகாகவும், நீல நிறமாகவும் இருந்தால்; PULS.) கேட்ட கேள்விக்கு மிகவும் மந்தமாக யோசித்து பதில் சொல்லும் முட்டாள் சிறுவர்கள். பின் மண்டை, நெற்றி ஆகியவற்றுக்கு ஒரு பட்டி போட்ட மாதிரி இருக்கிறது என்றும், மிக சிறிய அசைவும், மிக சிறிய சப்தமும், குறிப்பாக இசையும் கேட்டால் வலி அதிகமாகிவிடுகிறது என்பார். நீண்ட நாட்களாக காதல் தோல்வி, ஏக்கம், ஏமாற்றம் இருக்கும். (இதே மாதிரி இசையிலும், அசைவிலும் சுகம் என்றால் BRY, GELS, SIL.) கண்களை அதிகமாக பயன்படுத்திய பிறகு தோன்றும் தலைவலி பள்ளி மாணவிகளுக்கு தோன்றும் தலைவலிக்கு இது முக்கிய மருந்து. கிழிக்கிற மாதிரி, அறுக்கிற மாதிரி, வெட்டுகிற மாதிரி இருக்குது என்பார். இவர்களுக்கு தோன்றும் பேதியானது தண்ணியாட்டம் வலியில்லாமல் மஞ்சள் நிறத்தில் போகும். ஆனால் அப்போது தானாகவே காற்று காரமாக பிரியும். பலஹீனத்தினால் நமக்கு காலரா இருக்குமா என்று பயம் தோன்றும். பெண் செக்ஸ்க்காக பிறப்பு உறுப்பை தேய்த்து, தேய்த்து உறுப்பும், மனமும் பலஹீனம் அடைந்து, ஏக்கம் அடைந்து, பின்பு உண்மையான உடலுறவுக்கு தகுதி அற்று போய்விடுவாள். உடன் UST.மார்பு பலஹீனத்தால் மெலிந்து, சிறுத்து உயிர்சக்தி குறைந்து காச நோயாகி முட்டாள் ஆகிவிடுவார்கள்.

ACONITE – NAPE

– அக்கோநைட் நேப்

மத்திய ஆசியாவில் விளையக்கூடிய கருடகிழங்கு.

மரண பயத்திற்கு முக்கிய மருந்து இது. சிறுநீர் போனால் வலி. அதனால் பயம். வலியின் போதும், பேதியின் போதும், மற்ற நோயின் போதும், வேகமான நோயின் போதும் மரண பயம், மரண பயத்திற்க்கு காரணம் சொன்னால் ACON. குறிப்பிட்ட நேரத்தைக் கூறி எனக்கு நேரம் நெருங்கி விட்டது. நான் செத்து விடுவேன் என்று பயத்துடன் கூறினாலும், எண்ணெய் கவிச்சை மாதிரி சிறுநீர் இரவு இரண்டு (2) மணி அளவில் வரும், காய்ச்சலின் போது பச்சத் தண்ணீர் சொம்பு, சொம்பாக சாப்பிடுவார். மற்ற நேரம் இப்படி சாப்பிட்டால் BRY, SULPH, VERAT.. தொண்டை ஈரம்பட்டால் போதும் என்பார்; ARS. குளிர் நீர் நிறைய குடித்தால் PHOS.வேகம், தாகம், தவிர்ப்பு, மரண பயம், ரோட்டில் போகும் போதும், சாவு வீட்டுக்கு போகும் போதும், சவத்தை (இறந்தவர்களை) பார்க்கும் போதும், விபத்தை பார்க்கும் போதும், ரோட்டை தாண்டும் போதும், ஊசி போடும் போதும், ஊசி போட்ட பிறகும், பக்க வாதம், எய்ட்ஸ், புற்று நோய், ப்ரஸ்சர், வலிப்பு நோய், போன்ற எந்த நிலையாக இருந்தாலும், அதில் வேகமும் மற்றும் மரண பயம் இருந்தால் முதல் மற்றும் முழுமையான மருந்து இதுவே. அப்போது இதை கொடுத்தால் சில வினாடிகளில் நோய் பரந்து ஓடி விடும். மரணத்தைப் பற்றி பேசினாலும், தன் உடம்பு டக்குனு கெட்டு போச்சி என்று நினைத்தாலும், கூறினாலும், டாக்டரியிடம் வந்து எய்ட்ஸ் நோயாக இருந்தாலும் கூட, உடனே இதை துரத்தி விடுங்க என்று பணிவாக பேசினாலும், மருந்து சாப்பிட்டால் உடனே நன்றாகி விடும் என்று நம்பினாலும் இது தான் மருந்து. காய்ச்சலின் போது பச்சத் தண்ணீரை குடம் குடமாக குடிக்க வேண்டும் என்பார். அப்போது தண்ணீரை தவிர மற்ற எந்த ஒரு பொருளும் வேண்டாம் கசக்குது என்பார்.

AESCULUS – HIPPOCASTANUM

- அஸ்குலஸ் ஹிப்போகாஸ்டனம்

பெண் குதிரையின் மார்பு காம்பு.

ஆசனவாயில் (மூலத்தில்) ஊசி, சிதாம்பு, கத்தி குத்தி இரணம் மாதிரி நரம்பு தடித்து விடும். பல வித வலி அதனால் குனிய நிமிர கஷ்டம். மற்ற பூந்தசைகளிலும் காணலாம். நெற்றி, கழுத்து, போன்ற இடங்களிலும் துடிப்பு LAC-C, PULS. காலையில் குழப்பமும், ஒருமைபடுத்த முடியாத மனநிலையும், வலியில் தப்பித்துக் கொள்ள விருப்பம், ஆசன வாயில் நமச்சல், கணம், வறட்சி, வலி, எரிச்சல், இரணம், அதனால் மன குழப்பம், ஆஸனம் தனியாகி பம்பரம் மாதிரி கணம் என்பார்கள். ஒரு குடத்திலிருந்து இன்னொரு குடத்திற்கு தண்ணீர் மாற்றுகிற மாதிரி சப்தம் வயிற்றில் கேட்கும். ஆஸ்துமாவுடன் பேதி ACID NIT. அரிசி கழுவின மாதிரி பேதி VERAT.நுரையீரல், கல்லீரல், மூக்கு உள்பகுதி, வயிறு, யோனி, மானி, ஆஸனவாய் போன்ற மென்மையான பகுதியில் குச்சியில் குத்துகிற மாதிரி குத்துது என்பார்கள். ஆஸன வாய் தடித்து போச்சி என்பார்கள். தனிமையில் இருக்கும் போது குழப்பமாகவும், ஏதோ பரி கொடுத்த மாதிரியும், தொலைத்த மாதிரியும் இருக்குது என்பார். கோபம், கவலை, வருத்தம் வந்து விட்டால், கடுமையான குழப்பம் ஆகிவிடும். அப்போது நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை என்பார். உடன் COFF, MEZ, AESC. அதாவது மறுத்து போன மாதிரி, வீங்கின மாதிரி, வறண்ட மாதிரி, சுறு, சுறுன்னு ஓடற மாதிரி பூந்தசைகளில் இப்படி வலிக்குது என்பார். வெட்டிய உறுப்பில் வலி ALLIUM CEPA.

AETHUSA - CYNAPIUM

- ஏதுஸா சைனாப்பியம்

ஐரோப்பா குளத்தில் விளையும் பாசி இனம்.

பல் முளைக்கும் காலத்தில் குடித்தப் பாலை தயிர் போல கட்டிக் கட்டியாக வாந்தி எடுக்கும் நிலையின் போது இம்மருந்து தரலாம். அதனால் சோர்வு அடைந்து தன் தாயை கூட அடையாளம் (மரணக் களைப்பு) கண்டுக் கொள்ள முடியாது. பாலைக் குடிக்க, சகிக்க முடியாத வெறுப்பு. (கண்கள்) கருவிழி கீழ் நோக்கி சுற்றும். மேலே சுற்றினால் CIC., இதய வியாதியில் வேகமாகவும், மெலிதான நாடித்துடிப்பும் இருக்கும். பால் வாசனையை சகிக்க முடியாது, மீறி குடிக்க வைத்தால் தயிர் போல கட்டிக் கட்டியாக வாந்தி எடுக்கும். குழந்தைகள் அதிகமாக பேதி போய் களைப்பு இல்லை என்றால் OP., சாப்பிட்ட பிறகு தலைவலி, மாத விலக்கின் போது சிடு சிடுப்பும், எரிச்சலும் வந்தால். வீட்டு மூலையில் எலிகள் ஓடற மாதிரி என்றால் PHOS. பெஞ்சுக்கு அடியில் எலி ஓடுது என்றால் PHOS. எருமைப்பால், பசும்பால் சேரலை என்றால் AETH. தாய் பால் வேண்டாம் என்றால் BORAX. இப்;படி பால் வகை எதுவோ வெறுப்பு (அ) தொல்லை என்று பார்க்கவும். பால் வகையில் எது, எது சேரலை என்று பார்த்துக் கொள்ளனும். மனமானது அமைதியில்லாமலும், கவலையுடனும் எலி, பூனை, நாய், இது போன்றவைகள் வருது என்று பினாத்தும். (அ) உளறும். தாய் அப்படி எதுவும் இல்லை என்றுக் கூறுவாள். ஆனாலும் குழந்தை மூளை மந்தத்தினால் எதையும் ஏற்றுக் கொள்ளாது. கடுமையான மரண களைப்பினால் தன் தாயா, மற்றவரா, என்று கூட அதுக்கு (குழந்தைக்கு) அடையாளம் கண்டு கொள்ள முடியாது. அடுத்த நேரமே எரிச்சலோடு முன் கோபப்பட்டு கத்தும். தூக்கத்தில் வலிப்பு மாதிரி சேஷ்ட்டை செய்தல். தூங்கினால் எழமாட்டோம் என்ற எண்ணம். ஆனால் தூங்கினால் அப்படி தெரியாது. தூங்கி எழுந்தவுடன் தூங்க வில்லை என்பான் IGN. தூங்கினால் இறந்திடுவோம் NUX. சாப்பிட்டவுடன் சிடுசிடுப்பும், எரிச்சலும் ஏற்படும் மாதவிலக்கு காலத்தில் வெளியே போனால் சுகம்.

AGARICUS- MUSCARIUS

– அகாரிகஸ் மஸ்காரிஸ்

வறண்ட நிலத்தில் விளையும் ஒரு வகை காளான்.

ஜிலு, ஜிலுன்னு ஐஸ் ஊசி ஏறுகிற மாதிரி விரு, விருன்னு மேலே ஏறும். விஷக்கடிகள் எது கடித்தாலும் மேலே ஏறி கீழே இறங்குது என்றால் இது. மேலே ஏறுது என்றால் KALMIA. அதிக கவலை, பயம், ஏக்கம், நோய், குரக்களைக்குப் பிறகு இந்தக் கட்டம் வரலாம். மற்றும் செல்லமான நாய், பூனைக் கடித்தாலும், பூனை நாய், பசு போன்றவற்றின் மீது மிகவும் அன்புக்கொண்டவர்களுக்கும் இது தான் மருந்து. தத்துவஞானி கிருஷ்ணமூர்த்திக்கு எடுத்த குறி ANIMAL LOVES. இது தான் மருந்து. இந்த மருந்தைக் கொடுத்து சுகம். (கருப்பை எடுத்த பின்பு வெள்ளை படுது என்றால் ALLIUM CEPA. அதாவது ஒரு நோயாளி கூறினார். காலை எடுத்த பின்பு அந்த காலில் வலிக்குது என்றார். இதை கொடுத்து சுகம்.) அதனால் அவர் கூறுவதை நம்பி மருந்தை தேடு கிடைக்கும். அது தான் ஹோமியோபதியாகும். ஜிலு, ஜிலுன்னு ஐஸ்ஸில் செய்த ஊசி மாதிரி குத்திக்கிட்டு மேலே ஏறுது, பிறகு கீழே இறங்குது இப்படி வலியானது ஜிலு, ஜிலுனு மேலே ஏறுவதும், கீழே இறங்குவதும் என்றால் ஒரே மருந்து இது தான். இப்படி தேகத்தில் எந்த பகுதியிலாவது, கண், காது, மூக்கு, நரம்பு, எலும்பு, கருப்பை, இப்படி எங்கு வேண்டுமானாலும் இப்படி கூறி இம்மருந்தின் குறி வந்தால் ஒரே மருந்து இது தான்.

AGNUS CASTUS

– அக்னஸ்காக்டஸ்

அரசங்குச்சியிலிருந்து எடுக்கப்பட்டவை.

இவர்கள் நினநீர் சம்பந்தப்பட்ட தேகஅமைப்பு உடையவர்கள். சுய நினைவு இழந்துவிடுவார்கள். சூயாசிக்கும் சக்தி குறைவாக இருக்கும். இவர்களால் ஒரு நிகழ்ச்சியை கூட ஞாபகப்படுத்த முடியாது. ஒன்றை இரண்டு தடவை படித்த பின்பு தான் அறிந்து கொள்ளும் சக்தியுடையவர். LYC, PH-AC, SEP. நீண்ட நாட்களாக மூக்கு குழியில் இரணம் ஏற்பட்டிருக்கும். திருமணம் ஆகாத ஆண்களுக்கு சிறுநீர் புறவழியில் பால் போன்ற திரவம் கசிந்து, கசிந்து நரம்பு பலஹீனமாகிவிடும். வயதுக்கு முந்திய கிழத் தோற்றம் காணப்படும். வருத்தம், மனத் தாக்குதலினால் பித்து பிடித்தது போல் காணப்படுவார்கள். இளைஞர்கள் தகாத முறையில் பாலியியல் உணர்வை உபயோகித்தால் மானி தளர்ந்து தொங்கி விடும். முழுவதும் பலம் குறைந்து தளர்ந்து தொங்கும். இதனால் ஆண் உறுப்புகள் ஜில்லிட்டு போய்விடும். இதனால் செக்ஸ் விருப்பமும், பலமும் இருக்காது. முழுமையாக ஆண் தன்மையே இழந்து விடுவார்கள் CALAD, SEL. ஆண் தன்மை இழந்த உடனே வெள்ளை மேக வெட்டை தோன்றும். இதற்க்கு தகாத மருந்தை கொடுத்து அடக்கப்பட்ட பிறகு இல்லற விருப்பமும், மானி விரைப்பும் கூட இருக்காது. இதனால் பெண்களுக்கு வெள்ளைபாடு கோடு போட்டது போல் கால் வரை வலிந்து கொண்டே மஞ்சள் நிற கோடு போல் ஏற்படும். இதனால் பெண்ணின் உணர்ச்சி உறுப்பு மிகவும் தளர்ந்து விடும். இதனால் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியே நின்று போய்விடும். இதனால் பெண்களுக்கு கடுமையான வருத்தம் ஏற்படும். மூக்கில் கடல் மீன் கவிச்சையும், கஸ்தூரி வாசமும் கற்பனையாக வீசும். நடந்து கொண்டிருக்கும் போது மூக்கில் தோலுறியும். உறவுகள்:- CALAD மற்றும் SELENIUM, AGNUS இதனுடன் தொடர்ந்து வேலை செய்யும் மருந்துகளாகும். ஆண், பெண் உறுப்பு தளர்ந்து, பலவீனமடைந்து அதை சார்ந்த இயக்கமே மலடு தட்டி போய்விடும். பின்குறிப்பு:- ஆண்:- மானி மிகவும் சிறுத்து போய் விடும். ஜில்லிட்டு போய்விடும். விரைப்பே இருக்காது. எழுச்சியும் இருக்காது. விருப்பமும் இருக்காது. அலி என்றால் இதே மாதிரி தான். ஆனால் ஆண் மீது தான் விருப்பம் இருக்கும். (அலி) . பெண்:- யோனி சதை மெலிந்து கருப்பை சிறுத்தும், விருப்பமும் இருக்காது. மலடாகி இருப்பார்கள் . ஆண்:- விந்தே கசிந்தால் SELINIUM.. விந்து மாதிரி நீர் கசிந்தால் AGNUS CACTUS. உறுப்பை கையில் தேய்ச்சி, தேய்ச்சி விந்து கசிந்தால் ANAC, N-M, LYC,. இன்னும் சில மருந்துகள் உள்ளன. பெண்:-உணர்ச்சி வெறுப்பு, கருப்பை கீழே இறங்கிய மாதிரி உணர்ச்சி SEP. கருப்பை கீழே இறங்கி போய் விட்டால் PODOPILLUM மலம்; கழிய முக்கும் போது கருப்பை பிதுங்கினால் உடன் கோபமும் இருந்தால் NUX. செக்ஸ் உணர்ச்சி மிக, மிக அதிகம், ஆனால் ஈடுபட முடியாது உடன் மயக்கம் வந்திடும் PLAT.துணி கூட அங்கு பட முடியாது. மீறி பட்டால் மிக, மிக உணர்ச்சியின் காரணமாக நாதம் கசிந்து விடும். உடன் கடுமையான மலச்சிக்கல் இருந்தால் ACID-MUR தேய்ச்சி, தேய்ச்சி நாதம் கசிந்து கொண்டே இருந்தால் ORICANUM.

ALLIUM CEPA

- அல்லியம் சீபர் வெங்காயம்

கருப்பை எடுத்த பின்பு கருப்பையில் வலி. கால் எடுத்த பின்பு எடுத்த காலில் வலி (அ) புண் என்றால் ஒரே மருந்து இது தான். மற்றும் சளி பிடித்த போதோ, கண்நோயின் போதோ, வேறு எந்த காரணத்தினாலும், கண்ணில் நீர் வடியுது என்பார்கள். கண்ணில் வருகிற தண்ணி காரமாகவும், மூக்கில் வருகிற தண்ணீர் ஜிலு, ஜிலுன்னு வருது என்பார்கள். அதாவது வெங்காயம் உறித்தால் கண்ணில் தண்ணி காரமா வருதே அப்படி வருது என்பார். இதே மாதிரி மற்றொருவர் சொல்வார், கண்ணில் வருகிற தண்ணி ஜிலு, ஜிலுன்னும் மூக்கில் வருகிற தண்ணி (சளி) காரமா இருக்குதுங்க என்றால் EUPHARESIA. இதே இடத்தில் பெண்ணுக்கு சிறுத்த யோனி இல்லறத்தில் ஈடுபட முடியாத நிலைக்கு ALLIAM SAT. தந்தால் அந்த குறை நீங்கி விடும். குறிப்பு:- திருமணம் ஆன பெண்ணை கணவன் விட்டு விட்டான் சண்டை. ஏன் என்று கேட்டதற்கு வயதுக்கு வராமல் பெண்னை திருமணம் செய்து கொடுத்திட்டாங்க என்று குற்றம் சாட்டினால் காரணம் அது வல்ல. சிறுத்த யோனி தான் காரணம். ALL-SAT. தந்து குறை நீங்கியது.

ALOE – SOCOTRINA

- ஆலோ சகோட்ரினர் ஆலோ

(நீர் வாழை) செடியின் கோந்து.

இது முக்கியமாக ஆஸனவாயில் வேலை செய்யும் நல்ல மருந்து. அதாவது மலம் ஆனது தண்ணியாட்டமோ, பேதியாட்டமோ, போனால் இந்த குறி மேலோங்கி நிற்கும். காற்று பிரியும் போது மலம் கொஞ்சம் ஒழிகிவிடும். கேட்டால் காற்று தாங்க பிரிகிறது என்பார்கள். மலம் வந்தது தெரியலை என்பார்கள். காற்று பிரியும் போது மலம் வருவது தெரியாவிட்டால் இது தான் ஒரே மருந்து. இது சிறுவர்களிடமும், நோயாளிகளிடமும், வயதானவர்களிடமும் தெரியும். (காலையில் எழுந்தவுடன் மலம் கழிய அவசரமாக ஓடினால் SULPHUR. காற்றோடு மலமும் பீச்சுன்னு அடித்தால் PODO. மலம் மட்டும் பீச்சுன்னு அடித்தால் CROTON - TIG. மாவு கரைத்த மாதிரி புளுக்கை, புளுக்கையா மலம் வரும் அது கூட தெரியாது APIS. வயிறை அழுத்திப்பிடித்துக் கொண்டு ஓடினால் COLOCYNTH. குழந்தைகள், சிறுவர்கள், மற்றும் வயதானவர்கள் நோயாளிகள் அனைவருக்கும் நோய் தாக்கிய பின்பு இப்படி மலக்காற்று விடும் போது அதனுடன்மலமும் வந்து விட்டால் மலம் வருவது தெரியாவிட்டால் இது தான் மருந்து ALOE. தனக்கு காற்றுடன் மலம் வந்து விட்டால் அதை எண்ணி எண்ணி அறிவே மலுங்கி விடும்.

ALUMINA

- அலுமினர் அலுமினியம்.

வண்டியிலிருந்து கீழே விழுந்து சாவேன் என்றால் ALUM, ARS.. சிறிது அழுக்கு என்றாலும், முடியில் வெள்ளை முடி இருந்தால் அதை வெட்டுவதும், டை அடிப்பதும் போன்றவற்றை (மெதுவாக) பொறுமையாக செய்வார்கள். பிறர் பொருளை திருடுவார்கள். தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்கள், கத்தியைப் பார்த்தால் தற்கொலை விருப்பம் வரும். ஆனால் இரத்தத்தைப்பார்த்தால் மயங்கி கீழே விழுந்து விடுவார்கள். மூக்கு நுனியில் வெடிப்பு, தெரிந்தவரை பார்த்தால் மயங்கி கீழே விழுந்து விடுவார்கள். தெரிந்தவரை பார்த்தால் கூட எங்கோ பார்த்த மாதிரி இருக்கும். காலம் மெதுவாக போவது போல இருக்கும். எனக்கு பைத்தியம் பிடிப்பது உறுதி என்பார்கள். பெயிண்ட் அடிப்பவர்களுக்கு தொல்லை என்றால், மலம் கொஞ்சம் வந்தவுடன் பெட்டக்ஸை தட்டி விடுவார் ALUM. (இதே போல் தினமும் செய்தால் TARENT.).) எப்போதும் படுத்துக் கொண்டேயிருக்க விருப்பம். 12 மருந்துகளில் இது முக்கிய மருந்து. பாதத்திற்கு அடியில் ஏதோ சானியோ, மலமோ, ஒட்டடையோ ஏதோ மென்மையான பொருள் அப்பிக் கொண்டு இருக்கிற மாதிரி ஓர் உணர்வு இருக்குதுங்க என்பார்கள். கால் மெதுமெதுவென இருக்கிறது என்பார்கள் மலம் ஒரு பெரிய உருண்டையாக களிமண் போல பிசு, பிசுன்னு, ஆஸனவாயில் அப்பிக் கொண்டு வரும். கந்தல் துணி, காகிதம், ஸ்ராங்கான காப்பி, டீ, அரிசி, சாம்பல், துண்டு காகிதம் போன்றவற்றை சாப்பிட விருப்பம். உப்பும், உருளைகிழங்கும் சாப்பிட்டால் தொல்லை தருகிறது என்பார்கள். நீண்ட நாட்களாக வெள்ளைப்பாடு. அதாவது மாதவிலக்கு முடிந்த பின்பு, வெள்ளைப்பாடு தோன்றி அடுத்த மாதம் வரை வெள்ளைபடுது என்பார்கள். வெள்ளைபாடு குதிங்கால் வரை பால் போல வரும் அந்தயிடம் புண்ணாகிவிடும். வயிற்றில் இருந்து ஏதோ ஒரு பந்து மாதிரி மேலே வருவது போல மாயமாக வயிற்றில் தெரியும், கத்தி, துப்பாக்கி பார்த்தவுடன் தற்கொலை செய்து கொள்ள விருப்பம். தலைவலி எனக்கொரு மாதிரி வருதுங்க என்பார்கள். நானா பேசிகிறேன், ஆத்தா, முனி, பேய் பேசுகிறது என்பார்கள். வண்டியில் போகும் போதும், நடந்து போகும் போதும், பின்னாடி ஏதாவது வந்து இடித்து விடுமோன்னு பயம் இருக்கும்;. அரிசி, சுண்ணாம்பு, களிமண் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும், விருப்பமும் இவர்களுக்கு இருக்கும். மிகுந்த குழப்பம் மிக்கவர்கள். அன்று பார்த்தது அவரா என்று குழம்பி விடுவார்கள். ஓயாது ஏதோ ஒரு துக்கம் ஏற்படுவது போன்ற எண்ணம் இருக்கும். ஏதோ ஒரு குரல் எழுப்புவதும் அதைப் பற்றி கவலைப்படுவதும் துக்கப்படுவதுமாக இருப்பார். பொய்யான தோற்றம் ஏற்படுவது போல் ஏற்படும். நெருப்பு பந்தம் மேலே ஏறுவது போல் தோற்றம். உருள்வது போல் இப்படி ஒரு பொய்யான தோற்றம். அவசரம் பட்டு பட்டு ஞாபகசக்தி முழுவதும் இழந்து விடுவார்கள். இதனால் தன் பெயரை கூட மறப்பார்கள். இதை எண்ணி, எண்ணி தன் தலையே வேறொருவர் தலை போல் காணப்படும். இதனால் தனக்கு பைத்தியம் பிடிக்கும் என்ற எண்ணம் வரும். இதனால் தனக்கு ஏற்படும் வலி சிறு நேரம் கழித்து தான் தெரியும். நரம்பு மண்டலம் செயலிழந்து விடும். மலம் கழிவது கூட தெரியாது. அதனால் படுக்கையில் மலம் கழிந்து விடுவோமா என்ற பயம் இருக்கும். உணர்ச்சி இழப்பின் காரணமாக மலம் முக்கி கழிவார்கள். பாட்டில் பால் குடிப்பவர்களுக்கும், வயதானவர்களுக்கு இப்படி ஏற்படும். ரொம்ப நாள் நெஞ்சுகரிப்புக்கு இதுவே மருந்து. நெஞ்சு அடைப்பது போல் எண்ணம் இருக்கும். இதற்கு உணவு ஒட்டிக் கொள்வது தான் காரணம்.

AMMONIUM – CARBONICUM

- அம்மோனியம் கார்போனிக்கம்

காரமான, நாற்றமான உப்பு (குதிரையின் மலம்).

இம் மருந்து பெரும்பாலும் பெண்களுக்கு பொருந்தும். தங்கள் விஷயங்களை மூடி மறைக்கும் இயல்புடைய பெண்கள். அடிக்கடி அழுகின்ற குணம் உடைய பெண்கள். மாத விலக்கு யோனியில் வருவதற்கு பதிலாக, வாய், மூக்கு, ஆஸன வாய் போன்ற உறுப்புகளில் இவர்களுக்கு கருப்பு நிறமான கட்டி, கட்டியான, கடுமையான நாற்றத்துடன், காரத்தன்மை வாய்ந்த இரத்தம் கொட்டும். இவர்கள் தானாகவே பேசிக்கொண்டும் (அ) பினாத்திக்கொண்டும் போவார்கள், வருவார்கள். மூக்கடைப்பு ஏற்படும், நள்ளிரவில் ஏற்பட்டு படுக்கையில் துள்ளி எழுவார்கள். தலைவலியானது தலை சிதறுவது போலவும், பயங்கரமாகவும், பட்டு, பட்டுன்னு அடிக்குது என்பார்கள். வெடிக்கிற மாதிரி என்றால் GLONE. அழுத்தி பிடித்தாலும் சூடான அறையில் இருந்தாலும் கொஞ்சம் நல்லாயிருக்குது என்பார்கள். காலையில் எழுந்தவுடன் முகம் கழுவும் போது மூக்கில் கைப்பட்டவுடன் தானாகவே இரத்தம் கொட, கொடன்னு இரத்தம் கொட்டும். இப்படி எங்கு கொட்டினாலும் ஒரே மருந்து இது தான். சில்லி மூக்கு உடைப்புக்கு நல்ல மருந்து. மூக்கு, வாய், டான்சில் யோனி போன்ற பகுதிகளில் தோல் உறிந்து, உறிந்து புண்கள் சுருண்டு கொண்டே வரும். நக சுற்றுக்கு நல்ல மருந்து. உடம்பில் மக்காசோளம் போல மருவு உருண்டை, உருண்டையாக இருந்தால் இது நல்ல மருந்து. பூச்சிக்கடி, தேனீ, தேள் போன்றவைகள் கொட்டிய பிறகு அங்கு கருப்பு நிற இரத்தம் கட்டிக் கொண்டால் இதுதான் மருந்து. சளி, பேதி, எச்சில், வெள்ளைபாடு, தீட்டு போன்றவைகள் மிகுந்த காரத்தன்மையுடையது. ஆனால் பெண் கூறுவாள் தீட்டு, வெள்ளைபாடு, தொடையில் பட்டால் புண்ணாகுது, தோல் உறியுது என்பாள். நுரையீரல் கணத்திற்கு இது நல்ல மருந்து. டாக்டர் கென்ட் குறிப்பில் பார்த்துக்கொள்ளவும். இரவு நேரத்தில் சளி, சூடான அறையில் இருந்தால் சுகம் என்பார்கள். அடிப்பட்ட பிறகும் பயந்ததிலிருந்தும் கருப்பு நிறமான இரத்தம் உறையாமல் வந்து கொண்டேயிருந்தாலும், மாத விலக்கு சட்டி கழுவிய தண்ணியாட்டம் வந்து கொண்டேயிருக்கிறது என்றாலும் இதுதான் மருந்து. இதன் குணம் கருப்பு நிற இரத்தம், மற்றும் கட்டி, கட்டியாக, உடன் கழிவு பொருட்கள் காரத்தன்மையும், பட்டயிடதத்தில் புண்ணாக்கி தோல் உறிய செய்யும். இதே மாதிரி சுத்த சிவப்பு என்றால் IPECAC.

AMMONIUM – MURIATICUM

- அம்மோனியம் முரியாட்டிக்கம்

அம்மோனியத்தின் உப்பு மட்டும்.

இது விசேஷமாக, குண்டான சதை கால்கள் தொழ, தொழுத்தும், பாதம் மட்டும் மிக, மிக மெலிதாக இருக்கும். மூலத்தில் வலி ஏற்படும். மூலத்தில் வரும் நீர், காரமாகவும், இரணம் போலவும், குத்துவது போலவும், வலிக்கும். இவர்கள் மலம் கழியும் போது ஒரு பெரிய பந்து மாதிரி மலம் உள்ளே உருண்டு கொண்டே இருக்கும். வெளியே வராது. மிகவும் சிரமப்பட்டு கழிந்த பிறகும் ஒரு மணி நேரம் ஆன பிறகும் போகலை என்பார்கள். கோழி முட்டையின் வெள்ளை கரு போல வெள்ளை படுது என்பார்கள். அப்ப வயிற்றை கவ்வி பிடிக்குது என்பார்கள். நடக்கும் போது தொடையும், தொடையும் ஒரஞ்சி இரத்தம் வடியுது, புண்ணாகி விடுதுங்க என்பார்கள். மலக்காற்று பெரிய சப்தத்துடன் நிறைய போகுது என்பார்கள். மனம் மிகுந்த வருத்தம், அப்படியே வெறுப்போடு, வேதனையோடு, துன்பத்தோடு ஸ்தம்பித்து போய் பித்து பிடித்து உட்கார்ந்து விடுவார். இவ்வளவுக்கும் கண்ணீர் வராது. ஆனால் மனம் அழுது கொண்டேயிருக்கும். பிறரோடு இவர்கள் உரையாடும் போது மிகுந்த எச்சரிக்கையோடு நடந்து கொள்வார். எரிச்சலோடு இருப்பார். உடன் கோபப்படுவார். ஒரு குறிப்பிட்ட நபரையோ, பொருளையோ, கடுமையாக வெறுப்பார்கள். அப்படி வெறுப்பதிலிருந்து தன்னை மாற்றி கொள்ள இயலாது. காலத்துக்கு முன்னதாக மாதவிலக்கு, அப்படியே கொட்டும். அடிவயிற்று வலியானது முதுகு பக்கம் இழுக்கும். மாதவிலக்கு குபுக், குபுக்குன்னு படும். இவர்களுக்கு மாதவிலக்கு இரவு நேரம், (அ) தூங்கும் போது தான் தோன்றும். மலம் கழிய, சிறுநீர் கழிய முக்கும் போது மாதவிலக்கு குபுக், குபுக்குன்னு படும். அதே மாதிரி வெள்ளைபாடும் குபுக், குபுக்குன்னு வலியோடு படும். அப்போது யோனி உதடுகளை சுற்றிலும் கிள்ளுவது போல வலி ஏற்படும். இதே மாதிரி உருண்டை மலத்தை வெளியேற்றிய பிறகும் கிள்ளுவது போல ஆஸனத்தில் வலிக்கும்.

AMYLENUM – NITROSUM

- அமிலினம் நைட்ரோஸம்

அமில் என்ற திராவகமும், இராஜ திராவகமும் கலந்த கலவை.

இது பெரும்பாலும் இளம்பெண்களுக்கு தற்காலத்தில் முக்கியமாக தேவைப்படும் மருந்துகளில் இதுவும் ஒன்று. அடிக்கடி மாதவிலக்கை தள்ளி போக செய்ய வேண்டும் என்பதற்காக மாதவிலக்கை நிறுத்த மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட்டதாலும், கருப்பையின் இயக்கங்கள் மழுங்கி வலியில்லாமல் போய்விடும். இந்த வலியானது இருதயத்திற்கு சென்று நாடிதுடிப்பை அதிகப்படுத்தி அதனால் இதயம் பலஹீனப்பட்டு பின்பு மெதுவாக துடிக்கும். மேலும், உள் உறுப்புகளை வெட்டி எடுத்த பின்பும் இந்த நிலை வரலாம். முகத்தில் இரத்தம் தேங்கி கொண்டால் BELL,GLON. இவர்களுக்கு பிராணவாயு பற்றாக்குறை ஏற்படும். அதனால் இரவு படுத்திருக்கும்போது திக்குன்னு எழுந்து திறந்த வெளி காற்றுக்கு ஓடுவார்கள். இவரது ஒற்றை தலைவலியானது கீழே இறங்கி, காலர் எலும்பு வரை பரவி நிற்கும். இதய துடிப்பானது இவர்களுக்கு கூக்குரல் போடுவது போல துடிக்கும். முகம், வயிறு, மார்பு, முதுகு போன்ற உடல் பகுதிகளில் வியர்வை கொட்டும். எதிர்பார்ப்பு நமக்கு யாராவது உதவி செய்ய மாட்டார்களா, பாத்ரூமுக்கு நம்மை பிடித்து கொண்டு போகமாட்டார்களா என்றும், இதுபோன்ற உதவிகளை எதிர்பார்ப்பார்கள். பெண்ணுக்கு இல்லற நினைப்பு வந்தவுடன் வாய்ப்பு கிடைக்கும் வரை தாங்கமாட்டாள். காமம் மிகுதியாகி விரல்களை கொண்டோ, வேறு எதையாவது கொண்டோ, உதடுகளை தேய்த்து, தேய்த்து இன்பத்தைப் பெற்று கொள்ளுவாள். இப்படி அடிக்கடி செய்வதால் ஜீவ சக்தி நீர் செலவழிந்து உண்மையான உடலுறவு கொள்ள முடியாது, நோயாளியும் ஆகி விடுவார். குறிப்பு :- இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம் விமானிகள் போர்காலத்தில் போர் நேரத்தில் மாதவிலக்கு தோற்றினால் வேலை பாதிக்குமே, அப்போது மாதவிலக்கை நிறுத்தலாம் என்று கண்டுபிடிக்கபட்டது தான் இப்போது இருக்கும் ஹலோபதி மருந்துகள். ஆனால் இப்போது இருக்கும் பெண்கள் ஊருக்கு போவதற்கும், கோவில், விரதம், பண்டிகை, திருமணம், எங்க வீட்டுகாரர், மகன், ஐயப்பன் மலைக்கு போகிறார்கள் சமையல் செய்ய வேண்டும். அதனால் மாத்திரை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு, அதன் பின் தோன்றும் இருதய வியாதிகளுக்கு இதுதான் மருந்து. சித்தாவிலும் இதே போல கருப்பையை கெடுத்துக்கொண்ட பிறகு ஏற்படும் இருதய வியாதிகளுக்கு இது தான் மருந்து. ஆகவே நாம் பொருளாதாரம், நாடு பிடிக்கும் ஆசை, உயர்ந்த பதவி, மேல் பதவி பிடிக்க வேண்டும் என்பதற்க்காக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசைக்காக நாசமடைகிறோம் என்பதை உணர வேண்டும்.

ANACARDIUM - ORIENTALE

- அனகார்டியம் ஓரியண்டேல்

சலவை தொழிலாளிகள் குறிக்கு பயன்படுத்தும் கொட்டை

இம் மருந்து அரை பைத்தியங்களுக்கு தேவைப்படும் மருந்தாகும். இந்த பைத்தியத்தின் மனம் எப்படியிருக்கும் என்றால், வயிறு நிறைய கல்யாண வீட்டு பந்தியில் சாப்பிடுவார்கள். பிறகு கை கழுவிக்கொண்டு அடுத்த பந்தியில் மற்றவர்கள் உட்கார்ந்து சாப்பிடும் போது இவரும் உட்கார்ந்து சாப்பிடுவார்கள். முன்பு சாப்பிட்ட அளவே சாப்பிடுவார்கள். இவ்வளவு விரைவான பசிக்கு இது ஒன்றே மருந்து. இதனால் சாப்பிட்டு கை கழுவியதும், உடனே ஜீரணம் ஆகிவிடும். அடுத்த வேலை சாப்பிடும் வரை பசியோடு தான் இருப்பார்கள். இதனால் பசியின் வேதனையும், கொடுமையும், அகோர பசியும் ஏற்பட்டு விடுவதால் உண்மையை பொய் என்று சொல்லி பொய் சத்தியம் செய்வதும், உணவு கிடைக்கவில்லை என்பதால் பொறாமை உணர்வும் வரும். சாபம் வைக்கும் குணமும், கணவன், பிள்ளைகளை கூட நாசமாக போ என்று மண்ணை வாரி தூற்றுவதும், நெட்டி முறிப்பதும் இவர்கள் செய்வார்கள். நள்ளிரவில் மூச்சி திணறி எழுவார்கள். ANAC, GRANT, LACH. உறுப்புகளில் கருப்பு நிற இரத்தம் வடியும். இரட்டை, இரட்டை எண்ணமாக தோன்றும். அதாவது ஒருவரை பார்த்து பேசலாமா? வேண்டாமா, நல்லவர்களா, கெட்டவர்களாக இருப்பார்களா? இந்த வேலை செய்யலாமா, அந்த வேலை செய்யலாமா, என்று இரட்டை இரட்டையாக எண்ணம் தோன்றும். பெண் கடைக்கு போனால் இரண்டு சேலை எடுத்துக் கொண்டு (அ) இரண்டு நகையை எடுத்துக்கொண்டு, இரண்டு பொருள்களை எடுத்துக்கொண்டு, இதை எடுப்பதா, அதை எடுப்பதா என்று ஒரு முடிவு எடுக்க முடியாமல் போராடிக் கொண்டு இருக்கும் பெண்கள் இவர்களே. இதே போல இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய முடியாத ஆண்களோ பெண்களோ இவர்களே. இந்த மருந்தைக் கொடுத்தால் ஒரு முடிவு எடுப்பார்கள். தலைவலியோ, வயிற்று வலியோ,எந்த நோயாக இருந்தாலும் சாப்பிட்டால் சரியாகிவிடும். உடன் KALI- BR, SEP, THUJ, CALC-P. என்னிடம் இரண்டு சாமி இருக்குது, மூன்று சாமி இருக்குது என்றும், ஒரு தோல் பட்டையில் தேவதை உட்கார்ந்து இருக்கிறது என்றும், அடுத்த தோல் பட்டையில் இராட்சஸி உட்கார்ந்து இருக்கிறது என்றும் கூறுவார்கள். பொய்யோ, பிடிவாதமோ, தான் சொன்னது இல்லை என்றாலும், இருக்கிறது என்றாலும் அதையே சாதிப்பார். உருளைக் கட்டையை எடுத்து, தொடையில் அடித்த மாதிரி இருக்கிறதுங்க என்பார்கள். பேசி கொண்டு இருக்கும் போது பாதியை மறந்து விடுவார்கள். ஞாபக மறதிக்கு இது தான் பெரிய மருந்து. மலவாய் சுருங்கி அடைத்து விடும். கொஞ்சம் மலம் வந்து பின்பு அடைத்து கொண்டால் இங்கு ALOE-S, NUX-V. துன்பத்திலும், சாவு வீட்டிலும் கூட இவர் சிரித்து கொண்டே இருப்பார்கள். கொலை செய்த விட்டு கூட அசால்ட்டாக இருப்பார்கள். மற்றொரு வேடிக்கை என்னவென்றால் கொலையோ, மற்ற கோரமான செயல்களையோ, செய்து விட்டு அங்கு உள்ளவர்களிடம் இந்த கொடுமையை யார் செய்தது என்று விசாரிப்பார்கள். அதற்கு காரணம் அவரிடம் உள்ள இரண்டு வித எண்ணம் தான். அதற்கு அடிப்படை காரணம் பசி ஒன்று தான். எல்லா துன்பங்களுக்கும் பசியே மூல காரணம்.

ANTHRACINUM

- ஆந்ராக்சினம்

ஆந்ராக்சின் தொற்று விஷ கிருமிகளிலிருந்து அரைத்து செய்யப்படும்.

கால்நடைகளுக்கு ஏற்படும் சீல் புண்கள், இராஜப்பிளவை, எரிச்சல்களுக்கு ARS, SIL. இதை கொடுத்து குணமாகவில்லை என்றால் இதுதான் மருந்து. கால்நடைகளுக்கு இரண்டு இஞ்சி அளவு புண், சொத்தை, அழுகல், உடன் பயங்கரமான எரிச்சலோடு கருப்பு நிறமான இரத்தம் வடியும். ஆழமான பிளவைக்கும், பெரிய எரிச்சலுக்கும் இதுதான் மருந்து . எரிச்சல் தாங்க முடியாமல் இறந்து விடுவோம் என்ற பயமும், இந்த எரிச்சலுக்கு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றும். மனிதர்களுக்கு பெரும்பாலும் முதுகு பகுதியில் ஒரு பெரிய இட்லி அளவு கட்டி தோன்றும். பின்பு அது பிளந்து இம்மருந்தின் அடையாளங்களை தோற்றுவிக்கும். தற்காலத்தில் (2002, 2003) அமெரிக்காவில் தொற்று நோயாக இந்த ஆந்தராக்ஸ் என்ற கிருமி தோன்றி இது போல பலரைக்கொன்றுவிட்டது. ஆகவே அப்போது இந்த நோயுள்ளவர்களுக்கு மருந்தாகவும், நோயில்லாதவர்களுக்கு தடுப்பு மருந்தாகவும் கொடுத்திருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் என்று எண்ணி பார்ப்போம். நிணநீர் கோளங்களில் கூட இப்படி ஏற்படும். குறிப்பு :- இந்த மருந்தின் குணம் பயங்கரமாக கடிக்க விருப்பம். எரிச்சல் தாங்க முடியாமல் கதறுவார்கள். அதனால் தான் அமெரிக்காவே இதைக் கண்டு கலங்கி விட்டது. இது புற்று நோய், எய்ட்ஸ் நோய், சர்க்கரை நோய், அடிதடி காயங்களுக்கு பிறகு இப்படி குறி தோன்றினால் இது தான் மருந்து. மாதேஸ்வரன் மலையில் வாழந்த சித்தர் ஒரு மன்னனின் முதுகு பிளவறைக்கு இது தேவைப்பட்டிருக்குமா? (அ) பைரோஜினயம் என்ற மருந்து தேவைப்பட்டிருக்குமா? எப்படியோ மன்னனை குணப்படுத்தியதால் அந்த மருத்துவரை இறைவன் என்று வணங்கினார்கள். மகரிஷி அனைவரையும் இறைவன் என்கிறார்.

ANT – CRUDUM

– ஆன்ட் க்ருடம்

கருப்பு கந்தகமும், நீலக் கல்லும் கலந்த கலவை.

மிக, மிக உணர்ச்சி மிக்க, அதிக கோபம் உள்ள முதல் மருந்து இதுவே. குழந்தைகளிடம் இது வெளிப்படையாக காணப்படும். தாய் இடுப்பில் இருக்கும் குழந்தையை நாம் உற்றுப் பார்த்தாலே உறும்பும், கத்தும் (அ) அழும். (அ) கோபத்தினால் தலை குனிந்து கொள்ளும். கால் ஆனி, நாக்கில் தடித்த, வெள்ளை நிறமான படிவும், பால் ஆடை மாதிரி படிவும் காணப்படும், (நாக்கு மினு, மினுன்னு இருந்தால் ARS.) காதல் நோய் மருந்து TRILLUM. விவாகரத்து செய்து பின்பும் அவரையே விரும்பினால், நினைத்துக் கொண்டிருந்தால் (கற்பனை காதல்) STRAM. தாழ்ந்தவனை விரும்பினால் N-M. இலட்சிய மனைவி வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு இது. நடு வயதில் எல்லாமே எதிராக மாறிவிடும். தண்ணீரில் விழுந்து சாவேன். கொழுப்பு, புளிப்பு, விருப்பம். மற்றும் தொல்லை. 5 நாள் பேதியும் கட்டி கட்டியாக போகும். அடுத்தது ஐந்து நாள் மலச்சிக்கல், மூட்டு வலியும் மாறி, மாறி வரும், (அடுத்த மறு நாளே இப்படி மாறினால் PULS.) நாக்கு தடித்து வெண்மையாக இருந்தால் இந்த மருந்து. நாக்கு மினு, மினுன்னு இருந்தால் ARS. கை, கால்களில் ஆணி அறுத்து கொண்டே இருப்பார்கள். குளிர்ச்சியும், வெய்யிலும், புளிப்பும் இவர்களுக்கு ஒத்துக்காது. (தான் தான் உயர்வு என்றால் PLAT.) முரட்டுதனம், முட்டாள் தனம், கர்வமான எண்ணம். சிடு சிடுப்பும், கோபமும், குளிர் வெப்பமும் தொல்லை. குறிப்பு:- காவல் நாயின் கண்களை உற்று பார்த்தால் உறும்புவது தெரியும். அதுக்கு இது தரலாம். கடுமையான வெயிலில், ஆற்றில் குளித்தேன் தலைவலி வந்து விட்டது. SEX முரட்டுதனமாக இவரை தொட்டால் பிடிக்காது. அதிக சூடு, குளிர்ச்சி பிடிக்காது. தண்ணீர் கேட்டால் தாமதமாக கொண்டு வருவார். அப்பா என்ன செத்தா போகிறார் என்பார். ஒரு தலை காதல்.

ANTIMONIUM – TART

- ஆண்டிமோனியம் டார்ட்

நீலக் கல்லும், பழக்கூழும்.

ஆஸ்துமாவுக்கு இது முக்கிய மருந்து. நுரையீரல்களில் உள்ள காற்று அறைகளில் காற்றுக்கு பதிலாக சளி நிரம்பியிருக்கும். அதனால் சுவாசம் தடைப்பட்டு கர், கர்ன்னு சத்தம். கொய்கொய்ன்னு சத்தம் கேட்கும், சளி அங்கு அப்பி கொண்டு இருக்குதுங்க, மூச்சு கெஸ், கெஸ்ன்னு எளப்பு மாதிரி எடுக்கிறது என்பார். நெஞ்சை நிமிர்த்து கொண்டு சுவாசிப்பார். இதை ஏங்கல் நோய் என்பார். தொண்டையில் சளி கெட்டியாக அப்பி கொண்டு இருப்பதால் கரட்டு, கரட்டுன்னு சளி சத்தம் கேட்கும். பொதுவாக இவர்களுக்கு சளி கெட்டியாக உறைந்து விடுவதால் தொண்டையில் சளி அப்பிக் கொண்டு இருக்குதுங்க, காரினாலும் வரமாட்டிங்குதுங்க, இரும்பினாலும் வரமாட்டிங்குதுங்க, எனக்கு நிமோனியா நோயுங்க, ஆஸ்துமா நோயுங்க என்று பல புகார்களை சொல்லி, சளி அப்பிக் கொண்டது என்றால் இது தான் ஒரே மருந்து. வயதானவர்களுக்கு மரணக்கட்டதின் போது கிராமத்தில் சேத்துமாம் கட்டிக்கிச்சி, இனி பிழைக்காது என்பார்கள். அதற்கு காரணம் சளி கெட்டியாகி சுவாசத்தை தடை செய்யவது தான். அப்போது இதை கொடுத்ததால் சளியை இளக்கி கரைத்து தண்ணியாட்டம் ஊற்றி போய்விடும். பிறகு ஏது நோய். சேத்துமாம், ஆஸ்துமா, நிமோனியா, புளுரஷி என்ற பெயர்கள் எல்லாம் எதற்க்கு இப்போது, பெயர் தேவையில்லை அல்லவா. குறிப்பு:- ஆகவே தான் டாக்டர் சாமுவேல் ஹானிமேன் அவர்கள் நோயின் பெயர்கள் எல்லாம் கற்பனை, லேப் டெஸ்ட்டு என்பது எல்லாம் பித்தலாட்டம், அதை பார்த்து மருந்து தருகிறேன் என்பது ஏமாற்று வேலை என்கிறார்.

APIS – MELLIFICA

- அபிஸ் மெல்லிபிகர்

தேனீ கொடுக்கின் விஷம்.

தேனீயின் கொடுக்கின் விஷம். விஷபூச்சிகள் கடித்த இடத்தில் மட்டும் மய, மயன்னு, விரு, விருன்னு இருக்கும், உடன் படுத்தே கிடப்பார். கண் மேல் இமை, வீக்கம். இது சுரப்பு நோயின் போதும்;, காமாலை போன்ற நோயின் போதும் தெரியும். நோயாளி கூறுவார் கண் வலிக்குதுங்க, இமையை அழுத்துகிறதுங்க என்பார்கள். (கண் முழியை உருட்ட முடியலை என்றால் OP.) கண்ணில் மை போட்ட மாதிரி பிசு, பிசுன்னு இருக்கிறது என்றால் ARG-N. குறிப்பு:- இப்படி வார்த்தையின் பதத்தை மிக, மிக முக்கியமாக கண்டு உரிய மருந்தை தர வேண்டும். கடித்த இடத்தில் வலி மேலே ஏறினால் LED. கடித்த இடத்தில் இருந்து வலி கீழே இறங்கினால் KALMIA. கடித்த இடத்தில் சுடு தண்ணி ஒத்தடம் கொடுத்தால் ARS. பச்ச தண்ணி பட்டால் CALC. பேட்டரி செல் மூலம் சைக்கிள் டைனமோ மூலம் கிடைக்கும் குறைந்த மின் சக்தியை பாய்ச்சினால் நல்லாயிருக்குதுங்க என்றால் PHOS..

ARGENTUM - NITRICUM

– அர்ஜன்டம் நைட்ரிகம்

வெள்ளியும், எரிகார திராவகமும் கலந்த கலவை.

1. குடித்த தண்ணீர் அவ்வளவும் சிறுநீராக வந்துடுதுங்க என்பார்கள். 2. ஏரிகரை மேலே நின்று கொண்டு காற்று வாங்கினால் சுகம். 3. உட்கார்ந்து இருக்கும் போது இதயம் நின்று போய்விடுமோன்னு பயம். 4. தூங்கி கொண்டு இருப்பவரை எழுப்பி தன் கஷ்டத்தை சொல்வார். 5. மாதவிலக்கின் போது ஏப்பம் வரும். 6. சர்க்கரை சாப்பிட்டால் தான் மலக்காற்று, மலமும் வரும் என்பார். 7, (மலை மீது) உயரத்திலிருந்து, தண்ணீரில் கிணற்றில் குதித்து சாவேன் என்பார். இவை ஏழும் இம் மருந்தின் தனி தன்மை வாய்ந்த குறிகள்;. மாலையில் கைப்படாமல் மூக்கில் இரத்தம், வந்தால், இனிப்பு விருப்பம், சர்க்கரையை அள்ளி, அள்ளி சாப்பிடுவதும், இனிப்பு சாப்பிட்ட பிறகு தொல்லை என்றாலும். மலை மேலே ஏற பயம் என்றால் இதுதான் மருந்து. இறங்க பயம் என்றால் BORAX. தலைவலியின் போது தலையை இருக்கி கட்டினால் சுகம் ARG-MET, CALC, HEP, MAG-M, PULS, BRY. வயிறு வலி சிறுக, சிறுக வந்து அதிகமாகி கொண்டே வந்து பிறகு டக்குனு மறையும் MILL-F.ஐஸ்கீரிம் சாப்பிட்டு வயிறு வலி ARS. தலையே வெடிக்கிற மாதிரி வலி என்றால் ஒரே மருந்து GLONE தான். காக்கா வலிப்பில் கண்ணீல் மை போட்ட மாதிரி இருக்குது என்பார்கள். இது இளம் விதவை பெண்களுக்கு இடைக்காலத்தில் மாதவிலக்கு தோன்றி, தோன்றி பெண் தன்மையே போய்விடும். மலடு ஆகிவிடுவார்கள். குளிர் நேரத்தின் போதும் போர்த்த மாட்டார். காரணம் இவருக்கு குளிர் காற்று விருப்பம்.

ARNICA – MONTANA

- ஆர்னிக்கா மொண்டானர்

ஒரு விஷமுள்ள தாவரம்.

அடிப்பட்டதும் தர வேண்டிய முதல் மருந்து. ஆனால் குறி இருக்கணும். அதாவது அடிப்பட்ட பிறகு தாங்க வலி, அப்ப அடிப்பட்ட பிறகு தாங்க இந்த கஷ்டங்கள். அடிப்பட்ட மாதிரி வலிக்குது. அடிப்பட்ட இடத்தில் மோத முடியலை. காற்று கூட பட முடியலைங்க வலிக்குதுங்க என்று கூறுவார்கள். (அழுத்தினால் சுகம் BRY..) உருட்டினால் சுகம் என்றால் RHUS-T. சிவப்பு இரத்தம் வடிந்தால் IPEC. மூலத்தில் சிவப்பு இரத்தம் வடிந்தால் HAMMAMELIS. அடிப்பட்ட வரலாற்றையே கூறுவார். ஏதோ ஒரு நோயைச் சொல்லி அடிச்சி போட்ட மாதிரி வலிக்குது என்பார். பிறப்பு உறுப்பு, கண்கள், மூக்கு உட்பகுதி போன்ற இடத்தில் இருக்கும் மென்மையான நரம்புகள் அடிப்பட்டு விட்டால் STAPH. நரம்பில் வெட்டுப்பட்டு விட்டால் HYPER. சதையில் ஆழமாக வெட்டுப்பட்டு விட்டால் BELLIS - PER. . மண்டையில் அடிபட்டு விட்டால் RUTA.எலும்பு விரிசல் (அ) பிளவு ஏற்பட்டு விட்டால் SYMPH. ஆகவே, நமக்கு காமாலையோ, எய்ட்ஸ்ஸோ, எந்த நோயாக இருந்தாலும் கவலையில்லை, நமக்கு குறி தான் முக்கியம். நரம்பில் அடிப்பட்டு நய்வு (நசுங்கி) ஏற்பட்டால் HYPER.

ARSENICUM - ALBUM

- ஆர்சனிக்கம் ஆல்பம்

வெள்ளை பாஷனம்

விஷம் குடித்து சாவேன் என்பார். ARS, BELL.. சுடு தண்ணீரை நாக்கு நனையும் அளவு கொஞ்சம், கொஞ்சமாக குடிப்பார். சிறிது அழுக்கு என்றாலும் உடனே சுத்தம் செய்வதும், வெள்ளை முடி ஒன்று இருந்தாலும் கூட அதை கத்தரிப்பதும், டை (DYE) அடித்து அதை சரி செய்வார். தலை வலியிருக்கும், வெளிக்காற்றுப்பட்டவுடன் (நெற்றியில்) வலி தணிந்து விடும். நோயின் போது வெந்நீர் சாப்பிட்டால் நோய் தணிவு என்றாலும், தனக்கு கீழ் உள்ளவர்கள் தவறு செய்தால் இவன் மன்னிப்பான். மன்னிக்காதவன் NUX. வலிக்காக இங்கும், அங்கும் மனம் அமைதியின்றி படுத்துக் கொண்டும், அசைந்துக் கொண்டும் இருந்து சுடுநீர் கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிடுவார்கள். சாப்பாட்டை தட்டில் பார்த்தாலே வெறுப்பு. பயத்துக்கு காரணமே தெரியலை என்பார்கள். கவலையுடன் இருப்பார். குளிரின் போது நெற்றியை தவிர மற்ற பகுதியை போர்த்திக் கொள்வார். (தலைவலியின் போது கதறி, கதறி அழுதால் COLOCY.) முடி வெட்டிய பிறகு தலைவலி என்றால் இங்கு BELL, SEP. . சாப்பிடும் போதே வயிறு வலி என்றால் என்றால் BRY, CALC-P. கறி, கொழுப்பு, எண்ணெய் பண்டம் சாப்பிட்டு வயிற்று வலி என்றால் CAUST, PULS. சூடாக குடித்து வயிறு வலி தணிந்தது என்றால் BRY, GRAPH, NUX-V, RHUS-T, ARS. தான் தவறு செய்தது போல் எண்ணம் ஏற்படும்.

ARUM TRIPELE

- அவுரம் ட்ரிபெலி

மஞ்சள்.

இம் மருந்துகாரர்கள் மச மசன்னு மந்தமா, கேனம் பிடித்த மாதிரி இருப்பார்கள். எதையும் யாரையும் கண்டுக்காமல் நகத்தை கடித்துக் கொண்டும், தோலை உறித்துக் கொண்டும், உதடு காய்ந்தும் இருக்கும். அதனால் உதட்டு தோலை உறித்து கொண்டும். அடிக்கடி நாக்கினால் எச்சி தடவி கொண்டும் இருப்பார்கள். இதே போல ஆவேசமாகவும், வேகமாகவும் பேசி, பேசி, தொண்டை கம்மி விடும். நம்மிடம் வந்து ஆசிரியர்களோ, ஏலக்கடைக்காரர்களோ, மேடை பேச்சாளர்களோ, மத பாதிரியார்களோ வந்து தொண்டை கம்மி விட்டது என்றால் இது தான் மருந்து. அதனுடன் மற்றதும் போய்விடும். மலேரியா, டைப்பாயிடு, மூளைக்காய்ச்சல் போன்ற கடுமையான நோயில் மனம் மந்தமாகி கேனமாட்டம் படுத்தப் படுக்கையாக இருக்கும் போது உதடு வெடித்து உலர்ந்து இருக்கும் போது, நாக்கால் உதட்டை எச்சில் தடவி, தடவி ஈரப்படுத்துவதும், உதட்டு தோலை ஆரஞ்சுப் பழ உள் தோலை உறிப்பது போல் உறிப்பதும் இதன் முக்கிய குறி. கத்தி, கத்தி பேசுவதும் முக்கிய குறியாகும். கல்யாண வீட்டில், எலவு வீட்டில், கத்தி, கத்தி பேசி தொண்டை மங்கி விட்டால் ஒரே மருந்து இது தான்.

ASAFOETIDA

– அஸபோடியர்

பெருங்காயம்.

இம் மருந்துகாரர்கள் கற்பனைக்காரர். பக்கத்தில் இருப்பவர்கள் நமக்கு தீங்கு செய்கிறார்கள் என்று கற்பனையாக எண்ணி சண்டைக்கு போவதும், புறம் சொல்வதும் அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தால் அவர்கள் நமக்கு நல்லது செய்கிறார்கள் என்று கற்பனையாக நினைத்துக்கொண்டு உதவி செய்ய போவார்கள். கற்பனையாக பயப்படுவதும், கவலைப்படுவதும், நமக்கு நல்லது செய்து இருப்பார்கள் என்று தூக்கி வைத்து பேசுவதும். பக்கவாதம் வந்திடுமோ, இருதய நோய் வந்திடுமோ என்று கற்பனையாக நினைப்பார்கள். இறுதியில் கிறு, கிறுப்பில் முடியும். ஏதாவது காரணத்தைச் சொல்லி எனக்கு கிறு, கிறுப்பில் பேச முடியாது என்றாலும், யாராவது பேசினால் இவர்கள் தான் பேசுவார்கள். அவர்களை இவர்கள் பேச விடமாட்டார்கள். ஆனாலும் இவர்கள் பேசி, பேசியே கிறு, கிறுப்பில் (மயக்கத்தில்) போய் முடிந்து விடும். பிறரைப் பற்றியே குறை சொல்லி, சொல்லி, ஓயாது பேசி, பேசி மயக்கத்தில் முடியும், அரை பைத்தியம் ஆகி விடுவார்கள். இதயத்தில் ஏற்படும் தொல்லைகளுக்கும், இதுவே மருந்து. குறிப்பாக அடி வயிற்றைப் பற்றியே கூறுவார்கள். மலக் காற்றினால் வயிறு உப்பி விடும். வயிறு இழுத்து பிடித்துக் கொள்ளும். நீண்டு விடும். அப்படியும் காற்றுப் பிரிந்தால் தாங்க முடியாத நாற்றம் வீசும். இப்படி மலக்காற்றைப் பற்றியே பேசி, பேசி அரைப் பைத்தியம் ஆகிவிடுவார்கள். வயிறு வெடித்து போகிற மாதிரி, ஓடற மாதிரி, காற்று மாதிரி, கெட்டியாக இருக்கிற மாதிரி, மேல் வயிறு தண்ணில மிதக்கிற மாதிரி, மலக்காற்று மற்றும் வாய் ஊசி போன நாற்றம் அடிக்கும். தண்ணியாட்டம் பேதி, வயிறு இழுத்து பிடிக்குது, கண்ணை கட்டுகிறது. அப்போது கவலையாக, ஏக்கமாக, கஷ்டமாக இருக்கும். பாதரசம் சாப்பிட்ட பிறகு தாங்க இப்படி தொல்லை என்பார்கள் எலும்பு சொத்தை ஆகி விட்டதுங்க என்பார்கள்.

ASARUM – EUROPAEUM

- அஸரம் ஐரோப்பியம்

ஐரோப்பா விஷ மர வேர்.

இம்மருந்துக்காரர்கள் மிக, மிக உணர்ச்சி மிக்கவர்கள் . எல்லாவற்றையும் விட மிக, மிக உணர்ச்சிகாரர்கள், மிதப்பது போலவும், பறப்பது போலவும், காற்று போலவும், ஒளி தேகம் ஆகி விட்டது என்றும், வள்ளலார் மாதிரியும்; கூறுவார்கள். வள்ளலார் மாதிரி பிறர்க்கு வழிகாட்டுவார்கள். எந்த நோயிலும் இவர்களுக்கு இந்த குறி காணப்பட்டால் இது தான் மருந்து. ஆனால் ஞானிகளுக்கும் பொருந்துமா? என்பது சிந்தனைக்குரியது. ஆனால் இவர்கள் தனிமையில் இருப்பார்கள், போதையில் இருப்பவர் மாதிரியும், மந்தமாக இருக்க விரும்புவார்கள். ஆனால் பேப்பரை கசக்குவது, துணி உரசும் சத்தம் கேட்டால் கூட தாங்க முடியாது. அவ்வளவு உணர்ச்சி மிக்கவர்கள். வெளிச்சத்திற்கு இந்த மருந்து. இருட்டு, வெற்றிடம் போன்றவற்றில் இருக்க விரும்பினால் ARG - N. மகரிஷிகள், வேதாத்திரி போன்ற ஞானிகளுக்கு பொருந்துமா? என்பது சிந்தனைக்குரியது. சத்தம் தாங்க மாட்டார் ACID - NITE. கண் மட்டும் இருட்டு என்றால் ARG – N. கர்ப காலத்தில் குமட்டி வாந்தி வந்தால், கண் ஆப்ரேஷனுக்கு பிறகு இருட்டு கட்டினால் இது. குடி, போதை மிக விருப்பம். ஹோமியோபதியில் சென்ஸிட்டிவ்க்கு 17 மருந்துகள் உள்ளது. அதில் இதுவும் ஒன்று. புகை மீது விருப்பம். கொட்டாவி விட்டு கொண்டே இருப்பார்.

AURUM - METALLICM

- அவுரம் மெட்டாலிக்கம்

தங்கம்.

கத்தி, துப்பாக்கி கிடைத்தால் தற்கொலையே செய்து கொள்வார்கள். தற்கொலை செய்வதில் விருப்பம் என்றாலும், கனவிலும் இதே மாதிரி வரும். தானகவே சிரிப்பு, காரணமின்றியும், பேசும் போதும் சிரிப்பு வரும் உடன் BELL பொருந்தும். தலையில் குளிர்க்காற்றுப்பட்டால், தலைவலி BELL, CALC, CARB-V, LED, NUX-V, SILICA, SEP. மன குழப்பத்துடன் தலைவலி இருந்தால் GLON. தலைவலிக்கு சூடாக ஒத்தடம் கொடுத்தால் தணிவு ARG-N, BRY, GELS, K-C, M-P, STICTA. சிரித்து கொண்டே விடாமல் கேள்வி கேட்டால் இது. சிரித்து கொண்டே உடலை சோதிக்கலாமா? தெரிந்து கொள்ளலாமா என்று கேள்வி கேட்டால் BELL. எந்த ஒரு நோய்க்கு பிறகும், மனக் கஷ்டத்திற்கு பிறகும் தற்கொலை செய்து கொள்ள விரும்பினால் இம் மருந்து.

BACILLINUM – T.B.

- பேச்சிலினம்

நோயாளியின் நுரையீரல்.

இவர்கள் கோபமாகவே இருப்பார்கள். யாரிடமும் பேசாமல் மௌனமாகவே இருப்பார்கள். மற்றும் சுறு, சுறுப்பானவர்கள். எளிதில் கோபப்படுதல். எதற்கெடுத்தாலும் எரிச்சல் அடைதல், சிடு, சிடுப்பானவர்கள். தன்னை தாழ்த்த பட்டு விட்டது போல் எண்ணமும், மன சோர்வும், அனால் பித்து பிடித்தது போல் இருப்பார்கள். கோப்படுதல், பின் அதை நினைத்து வருந்துதல், வருத்தத்தை வெளிப்படுத்தும் போது ஊளையிடுதல், எதற்க்கெடுத்தாலும், பயந்து கொள்ளும் மனநிலை, விசேஷமான குறியாக வெறுப்பும் இருக்கும், கடுமையான தலைவலியின் போது ஒரே எண்ணம் திரும்ப, திரும்ப வரும். ஓய்வில் (அ) அமைதியாக இருக்கும் போது தலையை இழுத்து பிடிப்பது போல இருக்கும். தலையை ஆட்டினால் தொல்லைகள் அதிகமாகும். அவனுக்கு பயங்கரமான தலைவலி, மற்றும் தலையை ஒரு இரும்பு வளையத்தால் இருக்கி கட்டடியது போல் இருக்கும். தலை நடுக்கம், முதுகு எலும்பில் ஈரம் படுவது போல் ஓர் உணர்வு இருக்கும். சுத்தமாகவே தூக்கமின்மை, மூளைச் சவ்வுகளில் வேக்காடு, தலைப்பகுதியில் படர் தாமரை மற்றும் குறிப்பிட்டப் பகுதியில் முடிக் கொட்டுதல், கண் இமைப்பகுதியில் சிரங்கு, கொப்புளம் தோன்றும். முகத்தில் ஒரு வகை புண் ஏற்படும். வலி இருக்காது, ஆனால் சீக்கிரமாக குணமாகாது. முகப்பருக்கள் தோன்றும். பல வாரங்கள் ஆனாலும் அப்படியே இருக்கும். பற்களில் இடைவிடாத வலி. முக்கியமாக எந்த சத்தம் கேட்டாலும் கீழ் வெட்டும் பற்களில் வலி. அப்போது பற்களில் அதிகமான உணர்ச்சி அதிகரித்தல். (அ) கீழ் உதடு பிதுங்கி விடுதல், காற்று பட்டாலும் ரொம்ப உணாச்சி வயப்படுதல், தூக்கத்தில் பற்களை அரைத்தல், சத்து குறையுள்ள பற்கள் வளரும். மேல் தொண்டையில் கிச்சு, கிச்சு செய்வது போல் இருக்கும் இரும்பலின் போது தொண்டையை இழுத்து பிடிக்கும். வயிறு அஜீரணமாகி காற்று பிரியும், உடன் வலது விலா எலும்பு பகுதி அடி பகுதியில் வலி ஏற்படும், இரவில் மட்டும் காய்ச்சல், உடல் மெலிவு, அடிவயிற்றை சுற்றிலும் வலி, நிம்மதியின்மை, இரண்டு தொடை இடுக்கிலும் உள்ள சுரப்பிகள் பெருத்து விடுதல் மற்றும் கடினமாகி விடுதல், தூக்கத்தில் கத்துதல், நாக்கு சிவந்து இருக்கும், அப்பன்டிஸிஸ் பகுதியில் வீக்கம். இது குழந்தை பருவ (PRIMARY COMPLEX) நோய்களில் ஒன்று. தூக்கத்தில் பேசுதல். சாப்பாட்டின் மீது விருப்பம் குறைதல். கைகள் நீல நிறமாகி விடுதல், எல்லா இடங்களிலும் உள்ள சுரப்பிகள் கடினமாகி விடுவது நன்றாகவே தெரியும். மண்ணீரல் பகுதியின் வெளிபுறத்தில் வீங்கி விடும், அளவுக்கு அதிகமாக இனிப்புகளை சாப்பிட விரும்புதல், நாள்பட்ட பேதி, காலையில் சாப்பிடுவதற்கு முன் பேதி மற்றும் குமட்டல், குடல்களில் அதிகமான இரத்த ஓட்டம் பாய்தல். மலச்சிக்கலாகவே இருத்தல், அதிகமாக காற்று பிரிதல், உடன் பயங்கரமான நாற்றம். மூல வியாதியின் போது மூலத்தை கூரானப் பொருளால் குத்த விரும்புதல், சிறுநீர் அளவுக்கு அதிகமாக வருதல், சிறுநீர் வெளுத்தது போலவும், வெள்ளை நிறமாகவும், வண்டலாகவும் வரும். குறிப்பாக இரவு நேரங்களில் இது போன்ற சிறுநீர் வெளியேறும். சிறிதளவு தொந்தரவு ஏற்பட்டாலும் மூச்சு வாங்குதல், மூச்சு விட கஷ்டமாகிவிடும், ரொம்ப வறட்டு இருமல், இதில் நோயாளியே நடுங்கி விடுவார். ரொம்ப நேரம் தூங்கி கொண்டு இருத்தல். அதனால் கண் விழிக்கவே முடியாது (ஆண்களுக்கு திடீரென இரும்பல். அப்போது குரல் வளையை கூரான பொருளால் குத்துவது போல் இருக்கும். காலையில் படுக்கையிலிருந்து எழும் போது ஒரு சில இரும்பல். இரவில் நடக்கும் போது இரும்பல் (ஆண்களுக்கு). இரும்பும் போது சளி வெளி வருதல், தண்ணியாட்டம் சளியும் தானாக வெளி வரும். பிறகு கெட்டியான சளியும் வெளி வரும். இவ்வாறு சளி வந்த பிறகு அவர்கள் பேசினால் சுத்தமான் மணியோசை போல் பேச்சு வரும். சுவாசிக்கும் போது இடது தோள்பட்டை எலும்பில் வலி. படுத்தால் வலி அதிகரித்தல். வெது, வெதுப்பில் சுகம். கழுத்து பகுதியில் உள்ள சுரபிகள் பெருத்து விடுதல் மற்றும் மிருதுவாகிவிடும். நடந்து கொண்டிருந்தால் இடது மூட்டில் வலி, வலியை தாங்கி கொண்டு விடா முயற்சியுடன் சிறிது தூரம் நடந்தாலும் வலி. கால் மூட்டுகள் கெட்டு வீங்கி விடும். அதிகமான உடல் சோர்வு, தொந்தரவு செய்யாமல் இருந்தால் சுகம். நாள் முழுவதும் சோம்பேறித்தனமாக தூங்கி கொண்டிருத்தல், இரவில் தூக்கமின்மை, அதிகமான கனவுகள், காய்ச்சல் உடல் முழுவதும் பரவும்;. (நாம் ஒரு வேளை மருந்து கொடுத்தால் மேலும் காய்ச்சல் அதிகமாக பரவும்.) கொஞ்சம் வியர்வை வரும். தாங்க முடியாத அளவு தலைவலி ஏற்படும்.

BAPTISIA–TINCTORIA

- பாப்டிசியா டின்க்டோரினர்

அவுரிச் செடி.

விஷக்காய்ச்சல் போன்றவற்றில் 3,0 20 நாட்கள் காய்ச்சலுக்கு பிறகு மறுகுறி பாய்ஞ்சிடுச்சுங்க முறை வெச்சு, வெச்சி, காய்ச்சல் வருதுங்க என்பார்கள். கழிவுகள் எல்லாம் பிண நாற்றம் அடிக்குதுங்க என்பார். காய்ச்சலில் படுத்திருக்கும் போது இவரது கை, கால்கள் துண்டு, துண்டாக கிடப்பது போன்று உணர்வு இருக்கும். மாயத்தில் இப்படி இருக்கும். அப்படியே என் கையும், காலும் துண்டாகி கிடக்கிற மாதிரி இருக்குது என்பார்கள். இவர்களது மலம் பிண நாற்றம் அடிக்கும். பிணத்தை புதைப்பது போல இவர்களது மலத்தையும் தூரமாக எடுத்து சென்று குழித்தோன்றி புதைப்பார்கள். இவர்கள் காய்ச்சலில் படுத்திருக்கும் போது மருத்துவரோ, உறவினர்களோ, அருகில் நெருங்க முடியாது. காரணம் பிண நாற்றம் வீசும். நோயாளியை பார்க்க செல்பவர்கள் (வரும் போது) வெளியே வரும் போது குமட்டிக் கொண்டு தான் வருவார்கள். அறுவை சிகிச்சைக்கு பின், அபார்ஷனுக்கு பிறகு, செப்டிக் காய்ச்சலுக்கு பின், அந்த இடங்களில் செப்டிக் ஆன பிறகு கை, கால்கள் துண்டு, துண்டாக இருக்குது என்றால் PYROGIN.உடல் உறுப்புகளில் அழுகாமல் துண்டு, துண்டாக கிடப்பது போல் இருந்தால் தான்; BAPT. காலை உணவுக்கு பின் மந்தம். . (DULLNESS) கால் மூட்டு எல்லாம் கழண்டு போகிற மாதிரி வலி என்றால் EUP- PER. குறிப்பு:- வள்ளலார் ஒய்வு எடுக்கும் போது இப்படி கிடக்குமாம். ஆனால் இது பார்த்தவர் கூறியது. அவரே கூறியிருந்தால் இம் மருந்து. இருப்பினும் ஞானியின் நிலையை எப்படி அறிவது? எப்படி கணிப்பது? நமது அறிவுக்கு அப்பால் பட்ட விசயம் ஆச்சே.

BARYTA - CARB

- பாரிட்டா கார்ப்

பேரியத்தை சுட்ட கரி.

கூச்ச சுபாவம் உடையவர்கள். பெரியவர்கள், ஜனங்கள் இருக்கும் கூட்டம், புதியவர்கள் முன்பு பேச கூச்சப்படுவார்கள். பெண்களிடத்தில் இது அதிகமாக காணப்படும். குழந்தைகள் கூட கூச்சத்திற்க்காக ஓடிப்போய் ஒழிந்துக் கொள்வார்கள். முகத்தை மறைத்துக் கொள்ள விரும்பினால், அதாவது தன்னை அழித்துக் கொள்ள விரும்பினால் AUR. குழந்தையின் தலை, கழுத்து, வயிறு வெளுத்து இருக்கும். கை, கால் குச்சி மாதிரி சூம்பி காணப்படும். தனிமையில் இருக்கும் போது நினைவு இழத்தல், காய்ச்சலுக்கு பிறகு கிழத்தோற்றம் என்றால் இது. தலை வலி வரலையே என்று நினைத்தால் வரும். வேறு நினைப்பில் இருந்தால் வராது. மண்டைத் தோலுக்கு அடியில் சீல் பிடித்து புளு வைத்தால் MEZ.. அசுத்தமாகவும், அழுக்குப் பிடித்தவர்களுக்கும் B-C. தன்னுடைய குழப்பம் பிறருக்கு தெரிந்திடுமோன்னு பயம். காக்கை வலிப்பின் போது நினைவு தெரியும். இவர்களால்து கற்கவும், நடக்கவும், பேசவும், விளையாடவும் முடியாது. இவர்களால் புதியதாக எதையும் கேட்கவே முடியாது. மிகுந்த கூச்சத்தினால் மனதில் பதியவே, பதியாது. காக்கை வலிப்பின் போது இழுப்பு நுரை வருவது நன்றாக தெரியும். மூளையே ஆடுவது போல இருக்கும். உடலும், மனமும் வளர்ச்சியின்றி குழந்தை தனமாக இருக்கும் பெரியவர்கள். குள்ளர்களுக்கும் இது பொருந்தும். B-C.சுருக்குமாக சொன்னால் கூச்சம், பயந்தாங்கோழித்தனம். பெரியவர்கள் கூட பொம்மையை வைத்து விளையாடும் குணம் கொண்டவர்கள். தலையில் குளிர்க்காற்றுப்பட்டால் சுகம் ARS. உயரம், பல் முளைப்பது, குழந்தை வளர்ச்சியின்மை, இது போன்று எல்லாமே தாமதம் தான். படித்தது எல்லாமே மறக்கும். என்னை யாரோ கவனித்துக் கொண்டு இருக்கிறாங்க என்று பினாத்துதல், தனிமையில் இருக்கும் போது நினைவை இழந்து விடுதல். இரண்டு பேர் ஏதாவது பேசினால் நம்மைப் பற்றி தான் பேசுகிறார்கள் என்ற சந்தேகம். தனக்கு யாரும் உதவிக்கு இல்லையே என்று அழுவார்கள். வீட்டு கவலையினாலே எளைச்சுட்டேன் என்றால் B-C.

BARYTA - MURIATICA

- பாரிடா முரியடிகம்

பேரியத்தினுடைய சுண்ணாம்பு சத்து.

காக்கை வலிப்பின் போது வயிற்றிலிருந்து கரண்ட் சேக் அடிப்பது போன்ற உணர்வு ஏற்படும். கரண்ட் சாக் மாதிரி என்பதற்கு வேற மருந்து வரும். ஆனால் காக்கை வலிப்பின் போது மட்டும் வயிற்றிலிருந்து சேக் அடிப்பது போல இருந்தால் B-M. நாடி துடிப்பு இவர்களுக்கு அதிகம் .அதாவது 120 வரை கூட துடிக்கும். மேல் நாடுகளில் துடிப்பு அதிகமாக இருப்பதற்கு இம் மருந்தை தருகிறார்கள். ஆனால் அது தவறான முறை. இவர்களது கோளம் பெருத்துக் காணப்படும். இதே மாதிரி கோளம் கல்லாட்டம் காணப்பட்டால் மருந்து B-C, ARS, BELL. இவர்களுக்கு காம எண்ணம் மிகுதி அதிலும் பெண்களுக்கு அதிகமாக காம எண்ணம் இருக்கும். ஆண்களுடன் உறவு கொள்ள முடியலையே என்று எண்ணி கொடுமைக்காரியாக மாறி, இரக்கமற்றவர்களாக மாறி விடுவார்கள். அதன் பின்பு பேய் பிடித்தவள் போன்று காணப்படுவாள். ஆசையை தீர்த்துக் கொள்ள முடியாததால் இப்படி ஆகிவிடுகிறார்கள். மற்றும் மனிதர்களால் நமக்கு கெடுதி வருமா என்று எண்ணி பயந்து கொண்டு இருப்பார்கள். மற்றும் பயமும் குனியும் போது மூளை ஆடுவது போன்ற உணர்வு தெரியும். மற்றும் சாப்பிட்ட பிறகு அசதி ஏற்படும். உடம்பு கணம் என்றால் BELL, GELS.இதே இடத்தில் வலி என்றால் BRY. முறிக்கினால் சுகம் என்றால் RHUS-T.இருப்பு கொள்ளாமல் இங்கும், அங்கும் அசைந்துக் கொண்டிருந்தால் ARS.அப்போது கோபம் ஏற்பட்டால் CHAM. கூச்சமிருந்தால் B-C.வாய்ப்புண்ணின் போது எச்சில் கூடப் பட முடியாது அவ்வளவு புண் என்றால் HEP-S. சீல் வந்து விட்டால் SIL. தலையில் குளிர்க்காற்று பட்டால் சுகம் ARS, B-C, B-M.

BELLADONNA

- பெல்லாடொன்னர்

இரவில் கருகிடும் (அ) நிறமாறிடும் ஒரு தாவரம்.

நரம்பு சுளுக்கு வீக்கம் ஏற்பட்டு அந்த இடம் சிவப்பாக இருக்கும்,; காலை மடக்கி அடி வயிற்றில் அழுத்தினால் கஷ்டம், வலி என்றால், வேகமான காய்ச்சலின் போது உடல் உறுப்பு சிவப்பாக இருக்கும். பேசும் போது சிரிப்பு AUR, BELL. இருட்டில் இருக்க சுகம் என்றால் BELL, BRY, LAC-C. FL-AC, SIL. காய்ச்சல், வலி மற்ற நோயின் போதும் அப்பகுதி சிவப்பாக இருக்கும். பேய் உருவம் தெரியுது என்பார்கள். பயம் இருக்காது. ஆனால் உடன் முரட்டுத்தனம். பார்க்கும் நபர்கள் 2,2 ஆக தெரிந்தால் VERAT- VIRIDE. சிறுவர்கள், சிறுமிகள், பெரியவர்கள் தன்னை மறைந்து கொள்ள விரும்பினால், பதுங்கினால், பெரியவர்களோ, சிறுவர்களோ வாயில் உள்ள உணவு மற்றும் எச்சிலை துப்புவார்கள், பிறர் பொருளை மறைத்து வைப்பார்கள், சூரிய ஒளி பட்டவுடன் சிவப்பு என்றால், குளிர் காய்ச்சலின் போது நெற்றி நரம்பு புடைத்து சிவப்பாக இருக்கும். பேய் முகம் தெரியுது என்பார்கள். பயம் இல்லை என்றால் இது. வெறி பிடித்தது போல பற்களை நர நரனு கடிப்பார்கள். திடீரென ஒளிந்து கொள்ளலாம் (அ) ஓடிப் போயிடலாம் என்று நினைப்பார்கள். தலை வலியின் போது கண்ணை மூடினால் ACON, BRY, COCC, CHEL, SEP, SIL, SPIGE, SULPH. வலி திடீர்ன்னு வந்து போகுது என்பார்கள். இதே இடத்தில் அசைந்தால் வயிற்று வலி என்றால் BRY,CALC, CAUST, IGN, CHELI.இவர்கள் வேகமாகவே இருப்பர்கள் ACON போலவே. ஆனால் ACON.-ல் பயம் இருக்கும். BELL- ல் முரட்டுத்தனம் இருக்கும். இது தான் வித்தியாசம். தலையில் ஏதோ பாரம் வைத்த மாதிரி குடம் வெச்ச மாதிரி பாரமாகவே இருக்கிறது என்று பெண்கள் கூறுவார்கள். இவர்களுக்கு திடீரென்று தோன்றிய வேகத்தில் குறையும். திடீரென்று முகம் சிவப்பாக மாறிவிடும். நோய் வாய் பட்ட இடங்களில் கூட அவ்விடத்தில் சிவப்பு நிறமாக மாறிவிடும். இவர்களது மனநிலை எப்படி என்றால் தேவதை முகம் தெரியுதுங்க என்பார். அதுவும் கருப்பு நிற தேவதை முகம் என்பார்கள். கருப்பு நிற தேவதை முகம் என்றால் மட்டும் BELL. தேவதை முகம் தெரியுது என்றால் வேறு மருந்து வரும். இவர்கள் மற்றவர்கள் பொருளை எடுத்து ஒழித்து வைப்பார்கள். ஆனால் திருடிக் கொண்டு ஓட மாட்டார்கள். அப்பன்டீஸ்க்கு (குடல் வால்வுக்கு) இது நல்ல மருந்து. காரணம் கூம்பு வடிவத்தில் உள்ளதால் அதில் வலி வருவதால் இது நல்ல மருந்து இவர்களுக்கு சூடு தேவை. அதற்க்காக அடுப்பையே கட்டிப் பிடித்துக் கொள்வார்கள். மேலும் இவர்கள் பார்க்கும் உருவம் மாயத்தால் தலை கீழாக தெரியும். ஆபத்தான வியாதியில் கூட இவர்கள் பயப்படாமல் சும்மா இரசம் வெச்சு குடிச்சா சரியாகிவிடும்ங்க என்று ஈஸியாக கூறும் மன இயல்பு கொண்டவர்கள். குரட்டை சப்தம் கேட்டல் பயம். தான் ஒரு வாத்து போல எண்ணம்.

BELLIS - PERENNIS

- பெல்லிஸ் பெரினியஸ்

வெள்ளை செவ்வந்தி பூ.

ஆழமான வெட்டுக்கும், காயத்துக்கும் இது. நரம்பு வெட்டுக்கும் HYPER. சதை சிராய்ப்புக்கு CALEN. எலும்பு முறிவுக்கு SYMPYTUM.ஊமை அடிப்பட்டால் ARNICA. எலும்பு அடிக்கு RUTA கோடாரி வெட்டி, அப்பன்டீஸ் அறுவை சிகிச்சை போன்ற ஆழமான வெட்டுக்கு கூட BELLIS - PER தான். HYPER, STAPH. கொடுத்து பெயிலர் ஆனால் இது தான் மருந்து. மென்மையான நரம்புகளில் ( மானி, பொறி, நாக்கு அடிப்பட்டால் STAPH.) திருமணம் ஆன பெண் முதல் இரவில் மென்மையான நரம்பு அறுந்து விடும். அப்போது இதை கொடுத்தால் சுகம் தரும். ஆனால் குறி இருக்க வேண்டும்.

BERBERIS - VULGARIS

- பெர்பெரிஸ் வல்காரிஸ்

சொத்து கொழாய் பழம்.

திடீரென வலி தோன்றி உள்ள உறுப்பில் எல்லா திசைக்கும் பரவும். ரேடியேடிங் PAIN போல பரவும். இப்படி பரவும் வலிக்கு இது ஒரே மருந்து. முட்டியிலும், இடுப்பிலும் அழுத்தினால் சுகம். உடன் “கொர்க்” “கொர்க்” என்று சத்தம் வந்தால் BERB-V. சத்தமில்லை என்றால் BRY.வாதம், மூட்டு வலி சிறுநீரில் கற்கள் இருக்கும், தொல்லைத் தருகிறது என்பதற்கு இம் மருந்து தந்தால் குணமாகும். இல்லையெனில் ஆகாது. இடுப்பில் இருந்து அடிவயிற்றில் வலி. அதிலிருந்து சிறுநீர் பைக்கு வலி பரவும் இது போன்று பரவும் வலிக்கு ARS கொடுத்து குணமாக வில்லை என்றால் இது. சிறு நீரில் மற்ற உறுப்புகளில் இருக்கும் கற்களை கரைப்பதற்க்காக கொடுக்கிறார்கள். அது தவறான முறை தக்க குறிகளுடன் தான் இம் மருந்தை பயன்படுத்த வேண்டும். (ரேடியnடிங் என்றால் எல்லா பகுதிக்கும் பரவும் வலி என்பது பொருள்.) இடது கிட்னியில் வலி தோன்றி உடல் முழுவதும் பிளாடர், யூரிதர், தொடை, வயிறு என்று ரேடியேடிங் போல பரவும். வயிறு பகுதியில் வலி (சமுட்டியில் அடிப்பது போல) தோன்றி பரவும். முழங்கால் வரை கூட பரவும். அழுத்தினால் சுகம். மலக்காற்று வெளியேறினால் சுகம். சேகல் கூறுகையில் :- இந்த நிலையில் நாம் மேலே கண்டவற்றை விட அப்போது காணப்படும் மனப்பத பதைப்பு (RESTLESSNESS) மாறி, மாறி தொல்லை ஏற்படும். அதைப் பார்த்தால் போதும் என்கிறார். நான்(Dr.S.M.)கூறுகையில் இதை வைத்து பார்த்ததில் ARS கொடுத்து 2 நாளில் கல் வந்து விட்டது. மற்றொருவருக்கு BELL. கொடுத்து சுகம். குறிப்பு:- நமக்கு தத்துவம் அதாவது விஷேசமாக இம் மருந்தில் மட்டுமே காணப்படும் விசேஷ குறி தான் முக்கியம். இந்த குறியை வைத்து மருந்து தந்தால் அதுவே எல்லாவற்றையும் சரி செய்து விடும்.

BORAX

- போரிக்

ஆசிட்டின் உப்பு.

மாடி படி கட்டு, மலை பாதை, ராட்டினம் இவற்றிலிருந்து இறங்கும் போது பயம். கீழே பார்க்க பயப்படுவார்கள். அதனால் குழந்தை தாயை இருக்கி கட்டி பிடிக்கும். அடம் பண்ணி கட்டி பிடிச்சால் STRAM இறங்கும் போது பயம் என்றால் ஒரே மருந்து இது. தலையில சாமி ஜடை, சிக்கு விழுபவர்களுக்கும் இதுவேதான் மருந்து. முரட்டு மயிர், சீப்பு இறங்காத சிக்கு, முரட்டு சுருட்டை முடிக்கும் இம் மருந்தே. தொட்டால், கதவு மோதினால் விக்கல் வரும். இது பெரும்பாலும் சிறுவர், குழந்தைகளுக்கான மருந்து. குழந்தையை தரையில் போட்டால் ஏற்படும் தொல்லைகளுக்கு இதே மருந்து. கீழே இறங்க பயம். கீழே இறங்குவது போன்ற மாயம். மாதவிலக்கு தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கும். நோய்த் தொற்றிக் கொள்ளுமோனு பயம். கீழே விழுந்திடுவோம் என்ற பயத்துக்கு 5 மருந்து. சிறிய சத்தம், தும்பல் சத்தம் கூட தாங்க முடியாது. பெரிய சத்தத்தால் தொல்லை ஏற்படாது. வேலை மீது விருப்பமின்மை, மலம் கழியும் முன்பு கூச்சல் போட்டால் இது. முனகினால் PULS. பேசுவதில் தாமதம். பேசினால் தொல்லைகள். ஊற்சாகமும். சோர்வும் மாறி, மாறி வரும். மலம் கழிந்தால் உடல் வலிகள் எல்லாமே சுகம். வயிற்றை அழுத்தினால் ஏப்பம் வரும். மலக்காற்று பிரிந்தால் சுகமாக இருக்குது என்பார்கள். வியாபாரியோ. செல்வந்தரோ உடலைப் பற்றிச் சொல்லும் போது கொஞ்சம், கொஞ்சமாக இறங்கிக்கொண்டே வருகிறேன் என்றால் இது. இளைச்சிக்கிட்டே வருகிறேன் என்றால் SULPH. இளைச்சிட்டேன் என்றால் THUJ. வேலைக்கு போனால் நஷ்டம் ஆகிவிடுமோ என்று பயந்தால் PSOR. வேலை செய்ய அசால்ட்டு (அ) புறக்கணித்தால் SULPH. கடமைக்காக வேலை செய்தால் CALC-C. வேலை செய்ய வெறுப்புங்க என்றால் SEP. எப்போதும் வேலைப் பற்றியே சிந்தனையாகவேயிருந்தால் BRY மாத விலக்கு தொடர்ந்து போய் கொண்டே இருக்கும். குறிப்பு:- தாயை கட்டி பிடிக்கும் மிருகங்கள், குரங்கு, கங்காரு போன்றவற்றுக்கு இது பொருந்துமா?

BROMIUM

– ப்ரோமியம்

உப்பிலிருந்து பிரித்த திரவம் - ஒரு வித உப்பு.

இவர்கள் நல்ல நடத்தையுள்ளவர்கள். கருவிழி இலேசான நீல நிறமாகயிருக்கும். வெளிர் மஞ்சள் நிறமுள்ள கூந்தல் காணப்படும். லேசான புருவம், பலஹீனமான சருமம். சிவந்த கன்னம், காணப்படும். பெண்களுக்கு கழுத்தில் வீக்க முண்டாக்கும் ஒரு வகை (கண்டமாலை) காணப்படும். குள்ளமான குறுங்கழுத்து உடைய பெண்கள் முகத்தில் மெல்லிய உணர்ச்சி ஏற்படும் B-C, BOR, CAMPH. காற்று விரும்புதல், மூக்க துவாரம் அசைவது போல் ஒரு பொய்யான உணர்ச்சி ANT-T, LYC. கப்பலோட்டி, கடலோரமுள்ள மக்கள் ஆஸ்துமாவினால் துன்பபடுதல். அவர்களுக்கு கல் போன்ற கடினமான கண்டமாலை உருவாகும். (அ) காசநோய், நிணநீர் சுரபிகள் வீக்கமடைந்து காணப்படும். தாடை எலும்பு கீழே உள்ள தொண்டை வீக்கமடைதல், தைராய்டு, எச்சில் சுரப்பி, விதைப்பை மற்றும் தொண்டை சுரப்பி பாதிக்கும். இது ஒரு கொடிய தொற்று நோய் மற்றும் தொண்டை அடைப்பான் ஆகும். இது முதலில் முன் தொண்டை சவ்வை தாக்கி, அதிலிருந்து கழுத்;தை தாண்டியுள்ள, மூச்சுக்குழல், நுரையீரல் ஆகியவை தாக்கும். தொண்டைச் சவ்வு பெரியதாக காணப்படும். மார்வு வலி ஏற்படும். சவ்வு மற்றும் தொண்டையை பாதிக்கும் ஓரு வகை தொற்று நோய். இது காற்று குழல் சம்பந்தமான ஓர் அடைப்பான் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் டிப்திரியா என்னும் தொண்டை அடைப்பானுக்கு இது முக்கிய மருந்து. சளி சப்தம். இரும்பலினால் அதிக சோர்வடைதல் HEP. சப்தத்துடன் வயிற்றப் போக்கு ஏற்படுதல். இரும்பல் ஏற்படுதல். சளி அப்பிக் கொண்டிருக்கும். வெளியே வராது ANT-T. மூச்சு திணறல் பயங்கரமாக ஏற்படும். நுரையீரலில் சளி காணப்படும். உட்புறச் சவ்வில் இரணம் ஏற்படும். ANT-T. உடன் AESECU, CROT-T, CAMB. பார்த்துக் கொள்ளவும். சளியினால் மூச்சு திணறலும், காற்று குழல் சம்பந்தப்பட்;ட நோயுடன் உடன் SULPH.நுரையீரல் உட்புறச் சவ்வில் இரணம். ANT-T, இவரது பண்பு யாதெனில் உடற்பயிற்சி செய்து உடலை பக்குவமாக வைத்திருப்பார்கள். இதயம் பெருத்தும் காணப்படும். கருப்பையில் காற்று உற்பத்தி ஆகும். அதனால் காற்று யோனியில் மலக்காற்று மாதிரி காற்று பிரிந்து கொண்டே இருக்கும். அதிகமான வாந்தி, அடி வயிற்றில் வாயுச் சேர்க்கை. யோனி சவ்விலிருந்து, வலியுள்ள மாத விடாய் ஏற்படும். LYC, LAC-C.சளி இருப்பது போலவே உணர்வு ஏற்படும். எப்போது மூச்சு இழுத்துக் கொண்டேயிருத்தல். RHUS, SULPH. – – தணிவு. CARBO - VEG. அதிகரிப்பு. ஹெரிங்ஸ் கூறுவது :- இந் நோயாளியின் கருவிழி முன்பு நீல நிறமாக இருந்து, இப்போது கருவிழி கருப்பாக காணப்படும். இதற்கு உயர்ந்த முதன்மையான மருந்து BROM. மற்றும் IOD. ஆகும். தொண்டை சம்பந்தபட்ட நோய்களின் முக்கிய மருந்துகளில் இதுவும் ஒன்று.

BRYONIA – ALBA

- ப்ரையோனியா ஆல்பர்

பயங்கர விஷமுள்ள, வெள்ளை பூ பூக்கும் ஒரு தாவரம்.

தலைவலியின் போது அழுத்தி பிடித்தால் சுகம் BRY, SULPH. காலை முதல் மாலை வரை தலை வலிச்சால் N-M, K-BICH. ஊசி குத்துவது போல வலி BRY, SULPH. வேலையை புறக்கணித்தால் SULPH. வேலை செய்ய விருப்பம் என்றால் BRY. உடன் தாகம், நேரம் கழித்து சாப்பிட்டாலும் மற்றும் குழந்தை என்றால், சிறுவர் என்றாலும், பெரியவர்களிடம் என்ன சாப்பிடுவது என்று இனம் தெரியாமல் கேட்கும். (அதாவது பிஸ்கட் கேட்கும். கொடுத்தால் இது வல்ல ரெஸ்க் (ஆடைட (Mill Bar), சாக்லேட் கேட்கும் கொடுத்தால் இதுவல்ல இட்லி என்று சொல்லும், இப்படி தான் இனம் தெரியாமல் கேட்கும்). கூலியின் போது நிமிர்ந்து படுத்தால் சுகம், நஷ்டம் ஆகிவிடுமோன்னு வியாபாரம் செய்ய வெளியே போக மாட்டார் PSOR. இம் மருந்து காரர்களுக்கு தாகம் எடுக்கும். இவர்கள் சொம்பு, சொம்பாக தண்ணீர் குடிப்பார்கள் இதுவே. காய்ச்சல் நேரத்தில் இப்படி குடிச்சால் ACON. இடையில் சாப்பிட்டால் தான் BRY.இதே இடத்தில் சிறிது, சிறிதாக நாக்கு நணையும் அளவு தண்ணி (சுடு தண்ணி) குடித்தால் ARS. இவர்கள் தங்கள் வேலையை பற்றியே பேசுவார்கள். மாணவர்கள் என்றால் படிக்கணும், பள்ளிக்கு போகணும் என்றும், பெண்கள் என்றால் வீட்டு வேலை செய்யஹம் என்றும் தன் வேலையைப் பற்றியே கூறினால் இது தான் மருந்து. மற்றும் இவர்கள் வலி உள்ள பகுதியை அழுத்திப் படுப்பார்கள். (அ) அழுத்துவார்கள். அப்படி அழுத்தம் கொடுத்தால் பரவாயில்லை என்பார்கள். அழுத்தி படுத்திருக்கும் போது எழ மாட்டமார்கள், எழுப்பவும் கூடாது. ஆனால் உடல் கணத்தினால் எழு முடியலை என்றால் GELS. இதே போல் தான் வாழ்க்கையிலும், வேலையிலும், செல்வாக்கிலும் இனம் தெரியாது மற்றும் புரியாது. இவர்கள் மற்றவர்களுக்கு தொல்லை தர மாட்டார், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்கள். தொல்லை தர வேண்டும் என்ற எண்ணமும் இருக்காது BRY. (மறு குறி பாய்ந்திடுமோ என்று நினைத்து கஷ்டப்பட்டாலும், கற்பனை ஏற்பட்டாலும், சிறிது கூட காற்றுப்படக்கூடாது. வெயில் காலத்தில் கூட போர்வையை போர்த்திப் படுப்பார்கள். எத்தனை முறை குளித்தாலும் உடல் நாற்றம் போகாது. அதற்கு முதல் மருந்து PSOR). மாணவர்கள் என்றால் படிப்பை பற்றியே படுக்கும் போது கூட கனவு காண்பார்கள். குப்புறப்படுத்தால் சுகம் MEDDORIN. தொண்டை சளி நிறைய இருக்குது. காற்றில் இருந்தால் சுகம் என்றால் BRY. தலை வலியினால் நகர முடியலிங்க என்றால் CALC, NUX, PHOS, SEP. SELINIUM, SULPH. தலை வலி இருட்டில் இருந்தால் சுகம் என்றால் BELL, FL-AC, SANG, SIL, LAC-D.குறிப்பு:- வேலை மேலே ஞாபகமும், பேச்சும், தாகம், நிறைய, தண்ணீ குடிப்பார். வலிக்கு அழுத்தி (அ) மிதித்து விட்டால் சுகம்.

BUFO

- புப்போ

ஆண் தேரையின் விதைப்பகுதியை அரைத்தது.

இம் மருந்து சருமம், நரம்பு நிணநீர் கோளங்களை தாக்க வல்லது. வாத நோய் குறிகளையும் தோற்றுவிக்கும். மதுவை அதிகமாக குடித்துக் கொண்டே எப்பவும் போதையுடன் இருக்க விரும்புதல். அதன் பிறகு ஆண் தன்மை இழந்து விடுதல். எப்பப் பார்த்தாலும் சினுங்கி கொண்டே இருக்கும் சிறுவர்கள், அதன் பிறகு காக்கை வலிப்பு தோன்றி விடுதல் அது தூங்கும் போது இழுப்பு இழுக்கும். விரல்களில் குத்து பட்டு பின்பு வலியானது மேலே ஒடற மாதிரி இருக்கும். மனம் எப்ப பார்த்தாலும் கவலையும், வருத்தமுடன் அமைதி இல்லாமல் இருப்பதும், எதையாவது கடிக்கலாமா என்ற எண்ணம் தோன்றும். நாம் வீட்டிலே நோயாளி ஆக படுத்து விடுவோமோ என்ற எண்ணம். முணு, முணுத்து கொண்டும், தானாக பேசிக் கொண்டிருக்கவும் விரும்புதல். மூளை மறுத்து போன மாதிரியும், தலை உச்சியின் மேலே சுடு தண்ணீர் ஊற்றுகிற மாதிரி எண்ணம். கண்ணிலும், காதிலும் சிறு, சிறு கொப்புளம் இருக்கும். அதனால் சின்ன சத்தம், இசையை கூட கேட்க முடியாது. சரியாக பார்க்கவும் முடியாது. இதயம் தண்ணீரில் மிதக்கிற மாதிரி இருக்குது என்பார்கள். முன்னதாகவே மாதவிலக்கு தோன்றி கட்டி கட்டியாக கொட்டும். மற்ற நேரங்களிலும் தீட்டும், வெள்ளiயும் கலந்து பட்டு கிட்டே இருக்கும். முடிவில் காக்கை வலிப்பில் முடியும். ஆண் தன்மை இழந்து விடுதல், அதற்கு காரணம் தானகவே விந்து கொட்டிவிடுதலும், பெண்ணிடம் நெருங்கும் போதே விந்து குபுக்ன்னு கொட்டிவிடும். பெண்ணிடம் ஈடுபட்டு கொண்டிருக்கும் ஆரம்பத்தின் போதே டக்குன்னு, மானி விரைப்பு குறைந்து சுருங்கி விடும். அதனால் கையில் பிடித்து உருட்டி, நசுக்கி, உறுப்புகளை இம்சை செய்வார். இதனால் இவருக்கு பெண்ணே கிடைக்க மாட்டார். தவறாக உறுப்பை இம்சைபடுத்துவார். HYOS, ZINC.

CACTUS-GRANDIFLORUS

- காக்டஸ் க்ராண்டிப்ளோரஸ்

இலவ மர சிவப்பு பூ (பஞ்சு).

இந்த மருந்துக்காரர்கள் தன் வியாதி குணமாகுமா (அ) ஆகாதா, இதனால் நாம் இறந்து விடுவோமா என்ற பயம். இரும்பு வளைக்குள் இதயத்தை வெச்சி நசுக்குவது போன்ற வலி, மற்ற உடல் உறுப்புகளிலும் இதே போல் நசுக்குவது போன்ற வலி இருந்தால் இதை பார்க்கவும். இரும்பு கை கொண்டு அப்படியே நசுக்கிற மாதிரி வலிங்க என்றால் இது தான் மருந்து. இது சில சமயம் கருப்பை, ஈரல், குடல் என்று எந்த ஒரு உள் உறுப்பிலும் கையில் நாம்பி வெச்சி பிசையர மாதிரி வலி என்றாலும், வலைக்குள்ளே வெச்சி நசுக்கிற மாதிரி வலி என்றால் இது தான் மருந்து, இவர்களுக்கு மலமானது கெட்டியாகவும், கருப்பாகவும் வரும். அதிகாலையில் இவர்களுக்கு பேதி தோன்றும். அப்போது கூட ஆஸன வாய் பெருத்து கடுமையான வலியிருக்கும். இவர்களுக்கு ஓர் உணர்ச்சி, ஆஸன வாய் பெருத்து பந்தாட்டம் கனமா இருக்குதுங்க என்பார். மலேரியா காய்ச்சல், இருதய நோயில் முடியும். மூல வியாதியும், இருதய நோயில் போய் முடியும்.

CALADIUM - SEGUINUM

- காலாடியம் ஸோக்னியம்

அமெரிக்காவில் விளையும் ஒரு வித கஞ்சா செடி -(போதை தரும் தாவம்).

இந்த மருந்துக்காரர்கள் புகை பிடிக்க வேண்டும் என்ற எண்;ணம் இருக்கும். புகையிலையில் செய்யப்பட்ட சுருட்டு, சிகரெட், பீடி போன்றவற்றை குடித்து கொண்டே இருக்க விருப்பம். எப்போது பார்த்தாலும், ஓயாமல் குடித்துக் கொண்டே இருப்பார். அதனால் இவருக்கு கல்லீரல், நுரையீரல் போன்ற உறுப்புகளின் எல்லா பகுதிகளும் தொல்லைகளும், நோய்களும் இருக்கும், புகையிலை, புகை விஷம் பரவியதை முறிக்கவும், குணப்படுத்தவும், விருப்பத்தை நிறுத்தவும் இம் மருந்து பயன்படும். மானி தளர்ந்தும், பெருத்தும், ஜில்லிட்டும் காணப்படும். இல்லறத்தில் ஈடுபட இயலாது. பெண் யோனி தடித்து இருப்பதால் தேய்த்துக் கொண்டேயிருக்க விருப்பம். இவர்களுக்கு ஏற்படும் வியர்வை இனிப்பு சுவையுள்ள வியர்வை. அது ஈ முய்க்கும் அளவுக்கு இனிப்பு வியர்வை. (சர்க்கரை வியாதிகாரர்களின் சிறுநீரில் தான் ஈ மொய்க்கும்.) ஆனால் இவர்களுக்கு வியர்வையிலே ஈ மொய்க்கும். அந்த அளவு, இனிப்பு வியர்வை. மானி பெருத்து, வீங்கி, சிவந்து இருந்தாலும் எழுச்சியிருக்காது. அதனால் ஈடுபட இயலாது. பெண் உதடுகளை கர்ப்ப காலத்தில் தேய்த்துக் கொண்டேயிருந்தால் AMBR, KREOS. உணர்வுகளை சிறிது நேரம் கூட கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் HYTR.

CALCAREA- CARBONICA

- கல்கேரியா கார்பானிகர்

கிளிஞ்சல் சுட்ட கறி

இவர்கள் எதிர்பார்த்துப் பயப்படுவார்கள். அதாவது வறுமை வரப்போகுது, காய்ச்சல் வரப்போகுது, இரும்பல் வரப்போகுது என்று எதிர்பார்த்துப் பயப்படுவார்கள். செல்வம், வறுமை இப்படி எதிர்பார்த்து பயந்தால் CALC. மரணம் வருவதை கண்டு பயந்தால் மருந்து வேறு. அதாவது தன் வியாதி பற்றி போட்டா, ஸ்கேன் எடுக்கலாமா என்று கேட்பார்கள், யோசிக்கும் போது எரிச்சல் என்றால் ஒரே மருந்து இது தான். பிறரது விபத்தைக் கேட்டால் மனம் உருகி போய்விடுவார். பிறர் குற்றம் (தவறு) செய்தால் அதனைக் கண்டு வேதனைப்படுவார். குளிர் தாங்க மாட்டார். நிணநீர் கட்டி, கழளைக் கட்டி காணப்படும். மலை, மாடி படிக்கட்டு ஏறுவதற்க்கு பயம் என்றால் CALC. இதே இடத்தில் கீழே இறங்க பயம் என்றால் BORAX. மலைக்கு போக உயரத்தை பார்க்கவே பயம் என்றால் ARG-N. கடமைக்காக வேலைக்கு போகணும் என்றாலும், வலியுள்ள பகுதியை ஜில்லென்ற கையில் அழுத்தி விட்டாலும், ஒத்தடம் கொடுத்ததாலும் சுகம் என்றால் இது. ஏதோ நமக்கு தீங்கு நடக்கப்போகுது என்று முன் கூட்டியே கூறினால், நான் வேலைக்கு போகனும் மருந்து கொடுங்க என்றால் BRY, CALC, CANTH. (பொறுப்புக்காக வேலைக்கு போக வேண்டும் என்றால் BRY. கடமைக்காக வேலைக்கு போக வேண்டும் என்றால் CALC. மருத்துவரையே அதிகாரத்துடன் மிரட்டி மருந்து கேட்டால் CANTH.) உடல் உறுப்பில் துப்பாக்கி குண்டு அடிப்பட்டு இந்த மருந்தை தந்தால் குண்டின் மீது ஒரு வளையம் போட்டு சாகும் வரை பாதுகாக்கும். விரதம் இருந்து சாப்பிட தாமதம் ஆனதால் தலைவலி என்றால் இது. குடிகாரர்களுக்கு ஏற்படும் வயிறு வலிக்கு CARBO-V, LACH. NUX-V, SUL-AC, SULPH. விரதம் இருந்தால் வயிறு வலி என்றால் BELL, COCC, IGN, LACH. GRAPH. PETR.. ஆண்:- இல்லறத்தில் ஈடுபடும் போது சீக்கிரமாக விந்து பீச்சி அடித்து விடும். ஆனாலும் ஆசை அதிகமாகிவிடும். இப்படி ஈடுபட்ட பின்பு மிகவும் பலஹீனமாக இருக்கும். அதனால் பெண் மீது எரிச்சல் ஏற்படும். பெண்:- மாதவிலக்கு முன்னதாக தலைவலியும், அடிவயிற்று வலியும், ஜிலு, ஜிலுன்னு வெள்ளைபாடும் ஏற்படும். மாதவிலக்கு ஏற்படும் போது கருப்பையில் (தொப்புள் கீழே மூன்று இஞ்சிக்கு கீழே வலிக்கும்.) மாத விலக்கானது காலத்திற்கு முன்னதாகவும், அதிக நாட்களோடு நிறைய போகும். இதனால் கிறு, கிறுப்பும், பல்வலியும், பாதம் ஜில்லிட்டும் போய் விடும். இந்த நேரத்தில் சிறிது அசைவு ஏற்பட்டாலும், சிறு பெண்களுக்கு காம உணர்வு மிக அதிகமாக பால் மாதிரி வடியும். எரிச்சலோடு பிறப்பு உறுப்பில் நமச்சல் ஏற்படும். மார்பு சூடாகி வீங்கி போய்விடும். மாதவிலக்கு முன்னதாக மார்பு பெருத்து விடும். பால் கொடுக்கும் தாய்க்கு பால் வற்றி போய்விடும். கழுத்தை சுற்றிலும் நிணநீர் கட்டிகள் தோன்றும். பிறப்பு உறுப்பை சுற்றி ஏராளமான வியர்வை வரும். அதை துடைத்து, துடைத்து மலடியாகி விடுவார். குறிப்பு:- பிரசவம் எப்படி ஆகுமோ என்று பயந்தால் இதை கொடுத்தால் சுக பிரசவம் ஆகும்.

CALCRE- FLUORATA

- கல்கேரியா ப்ளோரிடர்

கால்சியம் புளோரிக் ஆசிட்.

இம்மருந்து புற்று நோய் மருந்து வகையை சார்ந்ததாகும். விரல் மூட்டு மற்றும் மூட்டுகளில் எல்லாம் உருண்டையாட்டம், பந்தாட்டம் கட்டி முருடு தட்டி இருந்தால், மார்பு எலும்பு நொருங்கி போனாலும், எலும்பு வளர்ச்சிக்கும், நொருங்கி போனாலும் இதுவே மருந்து. சிலருக்கு மூட்டு பந்தாட்டம் இருக்கும். அதற்கு நல்ல மருந்து. கழுத்து மற்ற பகுதியில் எலும்பு வளர்ந்ததாக ஸ்கேனில் கூறப்பட்டால் இது தான் மருந்து. ஒரு T.B. நோயாளிக்கு மார்பு எலும்பு நொருங்கி சீழ் பிடித்து விட்டது என்றார். வாயில் எச்சி துப்பும் போது சீழ் உள்ளே கோழி எலும்பாட்டம் வந்தது என்று எடுத்து காட்டினார். இது மார்பு எலும்பு நொருங்கியது தான், காது குறுத்தெழும்பில் அரிசி மாதிரி கட்டியிருக்கும். அதுவும் குறுத்தெழும்பு வளர்ச்சி தான். அடிப்பட்ட எலும்பில் பச்சை நிறம் என்றால் இது. (நீல நிறம் என்றால் CARB-AN.) சிவப்பாக இருந்தால் BELL. அடிப்பட்ட இடத்தில் கரு நிறம் கட்டி கொண்டிருந்தால் AM-C. எலும்பில் அடிபட்டோ, புற்று நோயிலோ முண்டு, முடிச்சி போன்ற கள்ள சதை வளர்ச்சிக்கும், எலும்பு அழுகலுக்கும் இதுவே மருந்து. மூக்கு திண்டு, வேறு எங்கேயாவது குறுத்தெழும்பு வளர்ந்து விட்டது என்றாலும், வெட்டிய எலும்பு வளர்ந்து விட்டது என்றாலும் இது ஒன்றே மருந்து. இரத்தம், பணம், பொருள் குறைவு என்பார். வாங்கிய கடனை கொடுக்க மனம் வராது NUX-V. வறுமையில் இருப்பது போல் எண்ணம். ஆண்:- விதைக்கொட்டை எலும்பு மூட்டு மாதிரியிருக்குது என்பார். மனம்:- நிறைய செல்வம் இருக்கும். இருந்தாலும் கொடுப்பதற்க்கு மனம் வராது. தேவை, தேவை என்று அலைந்து கொண்டேயிருப்பார். கஞ்சத் தனம் தான்.

CALCAREA – PHOSPHORICA

- கல்கேரியாபாஸ்பாரிகா

கால்சியமும், பாஸ்பேட்டும்.

மிக வேகமாக வளரும் சிறுவர்கள். சதைக்கு பதிலாக எலும்பு வளரும். ரெட்டை, ரெட்டையாக பல் முளைக்கும். பெரிய சத்தத்துடன் மலக்காற்றுடன் பேதியாகும். கொஞ்சம் நேரம் கூட நிற்க முடியாது, ரிக்கட்ஸ் நோய் அதனால் முதுகு தண்டு, கழுத்து, எலும்பு, பற்கள் போன்றவை தாறுமாறகவும், எலும்பு வளர்ச்சி குச்சி மாதிரியும், உயரமாகவும், வேகமாகவும் வளரும். இளைஞர்கள் காதல் தோல்வியின் போதும், நோயின் போதும், வருத்தத்திலும், கவலையிலும் (விசனம்), குளிர்காற்று, பருவம் மாறுதல் போன்ற காலங்களிலும், மாணவிகளின் தலைவலிக்கும் இது போன்ற தொல்லைகளுக்கும் இது பொருந்தும். ஒவ்வொரு முறை சாப்பிட்டதும் வயிற்று வலி என்பார்கள். எலும்பு பலம் இல்லாத காரணத்தினால் தான் ரிக்கட்ஸ் நோய் தோன்றுகிறது. இளைஞர்களுக்கு கூன் விழுவதற்கும் இது தான் காரணம். பெண்:- மாதவிலக்கு சீக்கிரமாக, அதிகமாக, சிவப்பாக, கொழ, கொழன்னு போகும். இதேயிடத்தில் இளம் பெண் (அதாவது) மாணவி மாதிரி உள்ள பெண்களுக்கு தாமதம் ஆகவும், கருப்பாகவும் இரத்த போக்கும் இருக்கும். ஏதோ சில நேரம் மட்டும் முதலில் சிகப்பும், மறுபடியும் கருப்பாகவும் போகும். ஆனால் முதுகு வலி மிக பயங்கரமாகயிருக்கும். குழந்தை பால் குடித்து கொண்டிருக்கும் நேரத்தில் தாங்க முடியாத காம உணர்வு இருக்கும். அரை பைத்தியம் ஆகி விடுவார். முறையற்ற வழியில் தேய்த்து இன்பம் பெற்று கொள்ளுவதால் கருப்பை பலஹீனம் ஆகிவிடும். (உறுப்பு மட்டும் பலஹீனமாகி விட்டால் PLAT.) அதிக நாட்களாக பால் கொடுத்து கொண்டிருக்கும் தாயிக்கு, முட்டையின் வெள்ளை கரு மாதிரி வெள்ளைப்படும். காலையில் தாய் பால் கொடுக்கும் போது உப்பு கரிக்கும் பால். அதனால் குழந்தை பால் குடிக்காது. அதனால் பெண் மெலிந்து, இளைத்து, முதுகு வளைந்து காணப்படுவார். குறிபபு:- வேகமான எலும்பு வளர்ச்சி, உயரம், முதுகு தண்டு கூன் விழுதல், இளைஞர்களுடைய வேகமான வளர்ச்சிக்கு ACID- PHOS. இதுவும் இதே இடத்தில் பொருந்தி வருகிறது பார்த்து கொள்ளவும். ACID - PHOS ஸில், மாதவிலக்கு முன்னதாக தோன்றி ஏராளமாக கொட்டும், வயிறு ஈரலில் வலிக்கும். மாதவிலக்கு பிறகு மஞ்சளாட்டம் வெள்ளை படும். குறைந்த பால் சுரக்கும்.

CALCAREA- SULPHURICA

- கல்கேரியா சல்ப்யூரிகர்

கால்சியமும் கந்தகமும்.

வறண்ட, வட்டமான படைகள், செதில்களாக உதிறும். காதில் மஞ்சள் நிறத்துடன் சீழ் வரும். மூக்கில் குழ, குழப்பான சளி நிறைய இருக்கும். முக பருவில் பெரிய கொப்புளமாக தோன்றி சீழ் நாள்பட்டிருக்கும், உடன் மூக்கில் சளியும் இருக்கும். ஆஸன வாய் சுற்றி வலியில்லாமல் சீழ் கட்டிகள் மட்டும் தோன்றும். தாங்க முடியாத, நாள்பட்ட தலைவலி, இது முறை வைத்து தோன்றும். அப்போது குமட்டலும், கிரு, கிருப்பும் ஏற்படும். அதனால் எச்சில் சுரப்பி வீங்கி விடும். சரியாக தேர்வு செய்து மற்ற மருந்துகள் வேலை செய்யாத போது இதை கொடுத்தால் நன்கு வேலை செய்யும். இது குறுகிய கால மருந்து. ஆனால் காச நோய் காய்ச்சலுக்கு (அ) காச நோய்காரர்களுக்கு சீழ் கட்டி தோன்றினால் அப்போது இது நன்கு வேலை செய்யும். சளி சவ்விலும், கண் இமை படலங்களிலும், விஷம் மிகுந்த டான்சில் நோய்களிலும் இது நன்கு வேலை செய்யும். கடின உழைப்பு, சூடு உள்ள அறை, வெப்பத்தில் போர்வை போர்த்திய பிறகு நோய்கள் தோன்றிவிடும். குளிர்ச்சியிலும், குளிர்ந்த வெளி காற்றிலும் சுகமாக இருக்கிறது என்பார். பெண்:- லேட்டாக மாத விலக்கு பட்டுகிட்டே இருக்கிறது, தலைவலியும், பலஹீனமும் இருந்து கொண்டே இருக்கிறது என்பார்.

CALENDULA - OFF

- காலன்டுல்லா ஆப்

தங்க நிறமுள்ள மலர்களை தரும் தாவரம் (அதன் சாறு தங்க நிறமுள்ள சாறு தருபவை). அடி, தடி காயத்தில் சிராய்ப்பு மட்டும் இருந்து இரத்தம் வடிந்தால் மேல் தோல் மட்டும் உறிந்து விட்ட காயத்திற்கு மேல் பூச்சு போட நல்ல மருந்து ஆகும். கண்ணிலோ, காதிலோ எங்கு அடிப்பட்டு லேசான தோல் உறிவு மாதிரி காயம் என்றால் இது. உள்ளுக்கு வீரியத்தில் தந்தால் புண்ணை ஆற்றும். இதற்கு மன குறி என்று பெரிதாக இல்லை. காயம் பட்டு தோல் உறிஞ்ச மாதிரி சிராய்ப்பு ஏற்பட்ட மாதிரி இருக்குது என்றும், மூக்கு, வாய், பிறப்பு உறுப்புகள், ஆஸனம் என்று எங்கும் இப்படி சொன்னாலும் இது தந்தால் புண்ணை ஆற்றி விடும். வீரியத்தில் மட்டும் தான் உள்ளுக்கு தர வேண்டும். அடிப்பட்டு தோன்றிய புண் காயத்துக்கு மட்டும் தான் இது. தாய் திரவம் பூச வேண்டும். சருமம்:- அடி, தடிப்பட்டு காயங்கள் சருமத்தின் மீது தாறுமாறாக சருமம் கிழிந்து சிராய்ப்பு தோன்றினால் இது மருந்து. மற்றும் சருமத்தின் மீது தோன்றுகின்ற புண்களோ, கொப்பளமோ, அம்மையோ, எந்த ஒரு புறப்பாடுகளும், சிராய்ச்ச மாதிரியே தோற்றம் இருந்தால் இது தான் மருந்து.

CAMPHORA – OFFICINARM

- கம்போரா ஆப்பிசினரம்

கற்பூரம்.

திடீர்ன்னு வேகமான குரூர எண்ணம் தோன்றி விடும். சாவதற்கு மருந்து குடித்தவர்களுக்கும், திடீர் என தானே அந்த எண்ணம் வரும். அதேபோன்ற இந்த மருந்தும் அவ்வளவு சீக்கிரமாக வேலை செய்யும். கிராமத்தில் கூட விஷங் குடித்தவர்களுக்கு கற்பூரம் தருவார்கள். உளரல், ஊழையிடுதல், அழுதல், பைத்தியக்காரத்தனமாக மேலே ஏறுதல், இறங்குதல், காலாராவிற்கு இது முக்கிய மருந்து. பைத்தியகாரதனமான வேலையை செய்வார்கள். அரிசி கழுவின மாதிரி பேதி 2 முறை தான் போகும். உடன் வாந்தி வந்து சில நிமிடங்களில் நெற்றியில் வியர்வை, நெற்றி ஐஸ் மாதிரி இருக்கும். நெற்றியை நாம் தொட்டால் நமது கை ஐஸ் மாதிரி ஆகிவிடும். நமது கை இயல்பு நிலைக்கு வருவதற்க்குள் அவர்கள் வெளுத்து மரண களைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து விடுவார். நமக்கு வியர்வை வருதேன்னு நினைத்தால் குறைந்து விடும். போர்த்திக் கொண்டே படுப்பார். மரணக் கட்டம் நெருங்கும் போது துணியை எல்லாம் கழற்றி விடுவார். இந்நிலையிலிருந்து 10 நிமிடத்திற்க்குள் மரணம் வந்துவிடும். குழந்தை என்றால் தூக்கச் சொல்லி வீர், வீர் என்று கத்தும். தாயின் சீலையை வெறிப்பிடித்து கிழிக்கும். பேதி கழிந்து கொண்டே வாயில் நுரை, நுரையாக தள்ளி, மரணம் வந்து விடும். நுரை, நுரையாக தள்ளும் போது இந்த மருந்தை மூக்கில் வைத்தால் இரண்டு முறை சுவாசிக்கும் போதே நல்லாகிவிடும்;. வேகமான மரணக் கட்டத்துக்கு இவைகள் CAMPH, CUPER, CARB-V, VERAT. ஆகிய நான்கு மருந்துகள் 100க்கு மேற்பட்ட வேகமான காலரா நோய்களை குணப்படுத்தியதாக வரலாறு உண்டு. கண்ணை மூடிக்கொண்டு பேசுவார். இது இம்மருந்தின் குறி. புருவீங் குறிப்பு:- ஹானிமேன் காலத்தில் அவர் பிரான்ஸில் இருந்த போது அமெரிக்காவில் விஷ பேதி தாக்கி 1000 கணக்கில் மரணம் அடைந்தார்கள், அப்போது அதன் குறிகளை அறிந்து பிரான்ஸிலிருந்தே ஹோமியோபதி டாக்டர்களுக்கு மூன்று மருந்துகளை தெரிவித்தார் CAMPH, CARB-V, VERAT. இந்த மருந்து கொடுத்து 85% வெற்றி பெற்று விட்டது. வேகமாக பேதி தோன்றி மரண கட்டம் விரைவில வந்தால் இதுவே முதல் மருந்து. ஹோமியோபதி மருந்துகளையும் இது முறித்து விடும். ஆகவே இம் மருந்துகளை தனியாக வைக்க வேண்டும். கெட்ட எண்ணம், வெட்டி விடுவேன். தன்னைப் பற்றி பயம். ஓடி போக விருப்பம். பேதியில் நினைவு ஏற்பட்டால் CROTON TIG. இயலாமை, பேதியில் நினைவு இல்லாமை இது. அழ நினைப்பார் கண்ணீர் வராது. வாழ்க்கையில் அழுது கொண்டே இருக்கிறேன். உயர பறப்பது போல் எண்ணம். தீடீர் அதிர்ச்சியில் மயங்கி விழுதல். குறைந்த வியர்வை பேதி. மரணம். தண்ணீர் பாதி 2 முறை ஏற்பட்டு உடம்பு ஐஸ் மாதிரி ஜில்லித்து போய் விடும். மரண கட்டத்திற்கு வந்து விடுவார். வாந்தி, பேதி ஏற்படும். ஆனால் போர்த்த மாட்டார். மரணம் விரைவில் ஏற்படும்.

CANNABIS – INDICA

- கன்னாப்பிஸ் இண்டிகர்

கஞ்சா

எல்லா பொருள்களும், காட்சிகளும், மாயமாக தெரியுது என்பார். நான் தான் கடவுள், கிருஷ்ணன், முருகன், காளி என்பான். சக்கரவர்த்தி, பெரிய ஆபிஸர் என்று தன்னையே பெரிய ஆளாக சொல்லுவான், நினைத்து கொண்டும் இருப்பான் இது. (நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்றால் COFF.) இதற்கு எதிராக முனியப்பன், பேய் பிடித்திருக்குது நான் சவமாட்டம் இருக்கிறேன். மூன்று லோகத்திலும் இருக்கிறேன் என்பார். எனக்கு சூனியம் வைத்திட்டாங்க என்றால் LACH. சந்தேகப்பட்டு என்னை யாரோ கூப்பிடுவது போல காதில் விழுது என்றாலும், (கொடுத்த மருந்து சரிதானா என்று மருந்து மேல் சந்தேக பட்டாலும், டாக்டர் படிச்சவர் தானா என்று டாக்டர் மேல் சந்தேகபட்டாலும், இப்படி சந்தேகத்துக்கு HYOS.) யாரோ எனக்கு சூனியம் வைத்து இருப்பார்களோ, யாராவது எனக்கு மருந்து வைத்து இருப்பார்களோ, தண்ணி தாண்டிய பிறகு தான், நமக்கு கால் வலி வந்திருக்குமோ சந்தேகப்பட்டால் HYOS.) யாராவது எனக்கு மருந்து வைத்து இருப்பார்களோ. தண்ணி, தாண்டிய பிறகு தான் நமக்கு கால் வலி வந்திருக்குமோ சந்தேகப்பட்டால் HYOS.) தீட்டு சோறு, எழவு சோறு சாப்பிட்ட பிறகு தான் நோய் வந்து விட்டது, தண்ணி தாண்டிய பிறகும், எலும்மிச்சை பழத்தை மிதித்த பிறகும் தான் எனக்கு கால் வலி வந்தது என்றால் RHUS.) காதில் மணியோசை மாதிரியும், யாரோ கூப்பிடுகிற மாதிரி, பேசுகிற மாதிரியும் ஒரு கிலோ மீட்டர் தூரம், 10 கிலோ மீட்டர் மாதிரி தெரியும். ஒரு மணி நேரம் போவது, ஒரு நாள் போகிற மாதிரி இருக்கிறது. இப்படி புதுமையான, தாமதமான, மாயமான எண்ணங்களையே கூறுவார். (நரகத்தில் இருக்கிற மாதிரி என்றால் MERC. சொர்க்கத்தில் இருக்கிற மாதிரி என்றால் COFF.)

CANNABIS – SATIVA

- கன்னாப்பிஸ் சாடிவர்

வெள்ளை பூண்டு.

ஆண்களின் சிறுநீர் புறத்தினுள் (பாதையில்) பட்டாணி பருப்பு மாதிரி ஒரு சொட்டு தண்ணி உருண்டு கிட்டு வருது, சிறுநீர் விட்ட பிறகும், இல்லறத்தில் ஈடுபட்ட பிறகும், உறுப்பின் நடு பகுதியல் விந்தோ, நீரோ, ஒரு சொட்டும் உருண்டு கிட்டு வருகிறது என்பார். பெண் சீக்கில் அடிபட்ட பிறகு துணி மேலே பட முடியலையீங்க என்பார். கேட்டால் விந்து ஒரு சொட்டு மட்டும் தங்கி கிட்டு உருண்டு கிட்டே இருக்கிறது என்பார். அதனால் துணியோ, தொடையோ, மோத முடியலை. எடப்பி, எடப்பி நடக்கிறேன் உறுப்பு மோதாமல் இருக்க அப்படி நடக்கிறேன் என்பார். ஓடும் தண்ணீரை கண்டால் பயம். (அதிகமான் தண்ணி, நீர்வீழ்ச்சி, தண்ணீரில் எழுப்பும் ஒளி (அ) பள, பளப்பு பார்த்தால் பயம் என்றால் LYSS. STRAM.)ஆண், பெண் இருபாலருக்கும் வயிற்றுக்குள்ளே உறுப்பைச் சொல்லியும், வயிறு, இதயம், கருப்பை, ஈரல், மூளை இப்படி ஏதோ ஒரு உறுப்புக்குள்ளே ஒரு சொட்டு உருண்டுக்கிட்டே இருக்கிறது என்றால் ஒரே மருந்து இது தான்.

CANTHARIS

– காந்தாரிஸ்

ஆப்பிரிக்காவில் உள்ள நெருப்பு மாதிரி விஷத்தை கக்கும் ஒரு வித பெரிய ஈ.

சிறுநீர் போனால் வலி, கஷ்டம், நெருப்பு மாதிரி எரிச்சல் என்றாலும் வடசட்டி, தோசைக்கல் போன்ற நெருப்பாகவே (மாறிய) பொருளைத் தொட்டு ஏற்படும் (BERNET.) புண்களுக்கும், நான் வேலைக்கு போகணும் மருந்து கொடுங்க என்று அதிகாரத்துடன் கேட்டால், பெண்கள் பெரியவர்களிடம், எறிந்து, எறிந்து திட்டி பேசினால், காமம் மிகுதியானவர்கள், நெருப்பு மாதிரி வலியோ, எரிச்சலோ தாங்கவே முடியாத அளவு வலி, எரிச்சல் என்றாலும், மரியாதை தெரியாதவன், பெரியவர்கள், காந்தியை கூட வாடா, போடா என்று கூறுவார்கள். கடவுளை கூட ஏண்டா முருகா, ஏண்டா கிருஷ்ணா, எனக்கு இவ்வளவு கஷ்டத்தை தரையே நீ நல்லாயிருப்பா? என்று திட்டினாலும், சிறுநீர் போனால் நெருப்பாட்டம் சொட்டு மூத்திரம் என்றால் இ]து. இதே இடத்தில் கொதி நீர் மாதிரி போனால் CAUST.

CAPSICUM

- காப்சிகம்

மிளகாய்

மிளகாய் காரம் மாதிரி எரிச்சலுங்க இது. மலம் கழிந்ததும், சிறுநீர் கழிந்ததும், கண், வாய் இப்படி எங்கும் வரலாம் மிளகாய் காரம் மாதிரி. (ஆனால் சுண்ணாம்பு வேகற மாதிரி எரிச்சல் என்றால் CAUST.)எரிச்சலுக்கு ஜில்லுன்னு குடிச்சா தேவலை, விருப்பம் என்றால் PHOS. சூடாக குடிச்சால் பரவாயில்லை என்றாலும், சுடு நீரில் குளித்தாலும். ஒத்தடம் கொடுத்தாலும் பரவாயில்லை என்றாலும் ARS. நெருப்பு மாதிரி எரிச்சல் என்றால் CANTH. இப்படி எரிச்சல் என்றால் மிளகாய் காரம் மாதிரி எரிச்சலா? நெருப்பு மாதிரி எரிச்சலா? என்று கேட்கனும். (CAUSTICUM காரர் சுண்ணாம்பு, கூழ், சோறு வேகற மாதிரி எரிச்சல் என்பார்.) அதாவது நெருப்பு எரிச்சலை கூறும் போது கூறுவார். எந்த இடத்தில், தேகத்தில் என்பது முக்கியம் இல்லை. அது BURNET? (OR) SCARLET? பார்த்து கொள்ள வேண்டும். கொதிக்கும்; திரவம் பட்டால் ஸ்கேர்லட். நெருப்பு கட்டி, தோசைக்கல், வடச்சட்டி இப்படி நெருப்பாக மாறிபடுவது எல்லாம் பர்னட்.

CARBO – ANIMALIS

கார்போ அனிமாலிஸ்

மிருக எலும்பை சுட்ட கறி.

இதுவும் புற்று நோய் சம்பந்தப்பட்ட மருந்தாகும். இதுவும் கழலை, கட்டி, புற்று வகையாகும். தனிமை விருப்பம். இரவில் தூங்கும் போது கனவில பேய் துரத்துங்க என்பார். வெளிக் காற்றும் பட்டால் அந்த உறுப்பில் பூகம்பம் வெடிப்பது போன்ற ஒரு வலி, இவர்களுக்கு ஏற்படும். இது அக்கியூட்டாக இருந்தால் BELL. கிரானிக்காக இருந்தால் CARB- AN.இது புற்றாக மாறிவிடும். இது சிவப்பாக இருக்கும். கிரானிக்காக இருந்தால் நீல நிறமாக இருக்கும். ஆகவே BELL லா, CARB- AN லா என்று தெரிந்து கொள்ளனும். பசி அதிகமாகயிருக்கும். சிறிது சாப்பிடுவார், பின்பு நிறுத்தி விடுவார். மீண்டும் சாப்பிடுவார். இப்படி விட்டு, விட்டு சாப்பிடுவார். இதனால் வயிறு காலியாகவே இருக்கும். அடிக்கடி பசி எடுக்கும். மாதவிலக்கின் போது கடுமையான தலைவலியாக இருக்கும். கடுமையான தலைவலியின் காரணமாக கருப்பையே இறங்குவது போல இருக்கும். கடுமையான தலைவலிக்கு பிறகு கருப்பை இறங்கிடுச்சுங்க என்றால் இது தான் மருந்து. கெண்டை நரம்பில் நீல நிறமாக மாறி அதில் கட்டி, முடிச்சு ஏற்பட்டு ஊசியில குத்துவது போல இருந்தால். சுரபியில் ஊசியில குத்துவது போல இருந்தால் CARB-AN. எலும்பில் வலி இருந்தால் CALC-F. உதட்டில் ஊதா நிறம் இருந்தால் CARB-V. பச்சை நிறம் என்றால் CALC-F. ஆறாத புண்கள் மற்றும் அந்த இடத்தில நீல நிறமாக இருந்தால் இது தான் மருந்து. அடிபட்ட பிறகு, விபத்துக்கு பிறகோ, அடிப்பட்ட இடத்தில் நீல நிறம் இருந்தால் இது தான் மருந்து. இது தான் ஆரம்ப புற்றாகும். புற்று முற்றி விட்டால் எந்த மருந்தும், மருத்துவமும் பலனழிக்காது. மரணம் தான் அவர்களுக்கு. பசியினால் பெண்கள், குழந்தைக்கு பால் கொடுக்கக் கூட வெறுப்பார்கள். ஆண், பெண் காம உறுப்பு நுனியில் கட்டிகள், வயிறு காலியாக இருக்கும் போது பால் தர வெறுப்பு என்றால் CARB- AN.. மாத விலக்கின் போது பால் தர வெறுப்பு என்றால் PHYT, CON போன்ற மருந்துகளில் கழலை, கட்டி வரிசையில் தான் இதுவும் வருகிறது. வித்தியாசத்தை பார்த்துக் கொள்ளனும். மின்னல் மாதிரி வலி என்றால் PHYT. குளிர் காற்று பின் மண்டையில் பட்டு நாளடைவில் T.B. நோயாக மாறிவிடும். கெண்டையில் நரம்பு நீல நிறம் தடித்து காணப்படும்.

CARBO-VEGTABILIS

- கார்போ வெஜிடாபிலிஸ்

காய்கறிகளை சுட்ட கறி.

மூச்சுத் திணறல் ஏற்படும் போது உதடு நீலம் பூத்து இருத்தல், இது காலராவின் போது மூச்சு திணறல் ஏற்படும். திணறல் குறைவாக இருந்தாலும் பிராணவாயு உடலுக்கு சேராமல் உதடு மற்ற முகப்பகுதிகள் நீலம் பூரித்து விடும். உடம்பு ஜில்லிட்டு போய் விடும். உடன் CAMPH, VERAT. வாயு பண்டம் சாப்பிட்டு வயிறு இழுத்து பிடித்தால் இது. இரத்தத்தில் பிராண வாயு சேராத நிலையினால் தான் இப்படி நீலம் பூத்து விடுகிறது. உதடு கன்னத்திலும் உள்ளங்கை நகத்திலும், தெளிவாக தெரியும். வியர்வை இருக்கும். இவர்களுக்கு எவ்வளவு காற்று இருந்தாலும் பத்தாது, காற்றுப் பசிக்காரர்கள். கெட்டுப்போன உணவைத்தின்று வயிறு உப்பிசம் மற்றும் அழுகி போன பழஙகள், சொத்தையான காய்கறிகள், ஊசி போன உணவுப் பொருட்கள் சாப்பிட்டு வயிறு கெட்டு உப்பிசம் ஏற்பட்டால் இது தான் மருந்து, அதாவது அடிதடி காயம், நீண்ட நாள் நோயில் படுத்திருப்பது, டைபாயிடு, மலேரியா, பாம்பு, தேள் போன் கடிகள், தீடீர்ன்னு தோன்ற கூடிய எந்த வகை நிலையாக இருந்தாலும், பிராண வாயு இரத்தத்தில் சேராமல் விரைவில் மரணம் ஏற்படும். இந்நிலையில உதடு, கைவிரல் நகத்தில், கன்னத்தில் நீலம் தெளிவாக தெரியும். இதை கொடுத்தால் மரணத்திலிருந்து மீட்கலாம். மூச்சு திணறி மரணம் ஏற்படும் அதை தடுக்கலாம்.

CARCINOCIN

- கார்சினோசினர்

புற்று நோய் கட்டியிலிருந்து செய்யப்பட்டது.

தற்காலத்தில் சிபிலிஸ், சைகோஸிஸ், சோரா ஆகிய இந்த மூன்று விஷமும் கலந்து கலப்பு நோய்களாக தோன்றி விடுகிறது. தனி, தனியாக இருந்த விஷங்கள் ஒன்று சேர்ந்து விட்ட இந்த நிலைக்கு பேர் தான், புற்று என் கூறப்படுகிறது. இந்த கலவைகள் தான் புற்று கட்டியாகயும், கழலை கட்டியாகவும் மாறிவிடுகிறது. இந்த கள்ளதனமான சதை வளர்ச்சியை தான் புற்று என்கிறோம். இது பெண்களுக்கு மார்பு, கருப்பையிலும், ஆணுக்கு மானி, விதை பை பகுதிகளிலும் தோன்றும். மேலும் ஆங்கில வகை மருத்துவத்தில் கூறுகின்ற எல்லா வகை புற்றுக்கும் இதுவே அடிப்படையாகும். அலோபதியில் இதற்கு மருந்தும், அறுவை சிகிச்சையும், முழு பலனை அளிக்க முடியாமல் போய்விடுகிறது. ஹோமியோபதி முறைப்படி உண்மையாக மருந்து கொடுத்தால் ஒவ்வொரு பதிவுகளாக வெளியேறி கட்டி கரைந்து போய்விடும். இப்போது நோயாளி, போன நோய் எல்லாம் வந்து விட்டது என்று கவலைப்பட்டாலும், கோபப்பட்டாலும், திட்டினாலும் பொருத்துக் கொள்ள தான் வேண்டும். நாம் அவசரப்பட்டாலும், நோயாளி அவசரப்பட்டாலும், அவருக்கு (நோயாளிக்கு) விரைவில் மரணம் தான். அது பொய் மரணத்தில் தான் முடியும். அதாவது வள்ளலார், காந்தியார் கூறும் பொய் மரணம்.

CAULOPHYLLUM - THA

- காலோபில்லம் த்ஹர்

அமெரிக்காவில் விளையக்கூடிய ஒருவகை தாவரம்.

அபார்சன் போதும், கற்ப காலத்தின் போது கரு கலைந்திடுமோனு பயம். பிரசவத்தைப் பற்றியே பயம். எதிர்பார்த்து பயந்து பாதி மன நோயாளி ஆகிவிடுவார். தான் கருவுற்ற மாதிரி நினைப்பு, மூன்றாவது மாதம் கரு கலைந்தாலும், அபார்சன்செய்த பிறகு மிகுந்த களைப்பு. ஏழு மாதத்திற்கு மேல் அடிவயிற்றில சுருக், சுருக்கென மங்குத்து (பொய் வலி.) வலிக்குது என்பார். பிரசவ வலி மாதிரி வலிக்குதுங்க என்றாலும், இது தான் மருந்து. பொய் வலியானது பிறப்பு உறுப்பில் இருந்து இடுப்புக்கு போய் விடும். உண்மை வலி என்பது இடுப்பிலிருந்து யோனிக்கு வரணும். இதை தான் கிராமத்தில் பிண்டம் வாயில் மாட்டி விட்டது என்பார். அப்ப அடிக்கடி முக்குவார்கள். மலம் தான போகும். பிரசவம் ஆகாது. உண்மை நிலை என்னவென்றால் கருப்பை விரியாது, ஆனால் யோனி மட்டும் விரிந்து இருக்கும். K-C யும் பார்த்துக் கொள்ளனும். கற்ப காலத்தில் கால், கை, வீங்கி விடும். மூட்டு வீங்கி விடும். கற்ப காலத்தில் நெற்றில் கருப்பு பட்டை போட்ட மாதிரி இருக்கும். இந்த ஓர் அடையாளத்தை வைத்து இதைக் கொடுத்தால் சிசரியனை தடுத்து விடலாம். கர்ப காலத்தில் மாதவிலக்கு, கை, கால், மூட்டுகளில் வலி ஏற்பட்டால், அபார்ஷனுக்கு பிறகு ஏற்படும் களைப்பு, இரவு 3 மணிக்கு அமைதியின்மை, சிறு மூட்டுகளில் வலி இழுக்கற மாதிரி, மெல்லற மாதிரி, வீங்கி போன மாதிரி இப்படி விரல் மூட்டிலும் காணப்படும். மணிக்கட்டில் வெட்ற மாதிரி வலிக்கும். இடைக்கால மாதவிலக்கின் போதும் கூட இப்படி ஊசி குத்தற மாதிரியும், பிற உறுப்புகளுக்கு தாவும். படுத்துக் கொண்டால் இப்படி வலி தாவும். கருப்பை சுண்டி விடுவதால் மாத விலக்கு மற்றும் வெள்ளைப்பாடு உற்பத்தியாகும். இதயத்தை வயிறு இழுப்பது போல இருக்கும். அதனால் மூச்சை இழுத்து, இழுத்து விடுவார்கள்.

CAUSTICUM

– காஸ்டிகம்

இது ஒரு இரசாயனம், எரிக்கும் குணமுள்ள இரசம்.

கொதி தண்ணி, கொதி எண்ணெய் போன்ற திரவம் பட்டு நெருப்பு காயங்கள் ஏற்பட்டால், தொண்டை சளியை கணைக்கவும், காரித்துப்பவும் முடியலை, பலஹீனம். குரல் கம்மினால் CAUST. மூச்சு இழுத்தால் வயிறு வலி சுகம் BRY, CHEL. அடிக்கடி கொஞ்சம், கொஞ்சமாக சிறுநீர் போயிட்டு வரேன் என்றாலும், கர்பிணிகள் (அ) பிரசவ காலத்தில் அடிக்கடி பாத்ரூம் போவார். (அ) இரும்பும் போது கொஞ்சம் ஒண்ணுக்கு வந்திடுது என்று பெண்கள் கூறினால் இது தான் மருந்து. ஆண் கூறும் போது சொட்டு, சொட்டாக ஒண்ணுக்கு போகுதுங்க என்பார். (ஆணுக்கும், பெண்ணுக்கும் சிறுநீர் பாதை வேறு அல்லவாடூ) கருப்பையிலோ, நெஞ்சிலோ, வேறு எந்த உறுப்பிலாவது எரிச்சலுங்க என்று சொல்லி சுண்ணாம்பு வேகற மாதிரி, கூழ் கொதிக்கற மாதிரி, கம்மஞ்சோறு புழுங்கிற மாதிரி, இப்படி புழுங்கிற மாதிரி, வேகற மாதிரி எரிச்சலுங்க என்று சொன்னால் இது தான் மருந்து. தொண்டை சளி ஏற்பட்டு உடல் முழுக்க பரவும். தொண்டை வலிக்கு சுடு தண்ணி குடித்தால் சுகம் என்றால் ARS. CAUST.மாலை 5 முதல் 8 வரை தொல்லை. நாக்கு இருபுறமும் வெள்ளை நடுவில் சிகப்பு. தீவிரவாதி கப்பலை, விமானத்தை, பாலங்களை உடைத்து மனிதர்களை கொள்ளுவான். மகன், தாய் ;(அ) தந்தையை கொலை செய்வான். தனது தீய எண்ணங்களை பற்றியே சிந்தனை, ்பேன் மற்றும் தென்னை மரத்தடியில் தூங்க மாட்டார்கள.; காரணம் தென்னை மட்டையோ, ்பேன் ரக்கையோ மேலே விழுந்து விடுமோன்னு பயம். மலம் கழியும் போது உயிரே போகுது என்பார். நிறை மாத கர்ப்பிணிக்கு ஏற்படூம் சொட்டூ மூத்திரத்துக்கு இது நல்ல மருந்து. பெண்:- பிரசவமானது இவர்களுக்கு மெதுவாக (அ) மந்தமாக ஏற்படூம். மாதவிலக்கானது பகலில் போகும் இரவில் நின்று போய் விடூம். திரும்ப பகலில் போகும் (CYCL.PULS)வெள்ளைப்பாடானது இரவில் தான் போகும். அதனால் ஏகப்பட்ட அசதி (N-M), மாதவிலக்கு தோன்றுவதற்க்கு தாமதமும் மாதவிலக்;கானது தள்ளி, தள்ளிப் போகும் (CON, GRAPH, PULS.) தொண்டையில் சளி ஏற்பட்டு உடல் முழுவதும் பரவும் . பச்ச தண்ணீர் சாப்பிட்டு சரியாகி விடும். தொண்டை எரிச்சல் சளி விழுங்க முடியாது சாப்பிட்டு விடுவார். இதனால் காசநோய் ஏற்படும். கண் இமை வீக்கம் சிறுநீர் அடக்கிய பிறகு ஏற்படும் தொல்லைக்கு இது தான் மருந்து. கோபம், எதிர்பார்ப்பு, காதல் தோல்வி. இதன் பின் விளைவாக தொல்லை ஏற்பட்டால் இது தான் மருந்து. இரவு, பகல் எப்போதும் கவலையில் முழ்கி விடுதல். காதலிப்பான். திருமணம் செய்ய மறுப்பான். மாலையில் இருட்டு பயம். எதிர்பார்ப்பு பயம். மலம் கழிய வேண்டும் என்ற அதை களைப்பு. CAUST கேள்வி கேட்டால் பதில் கூறும் போது மூச்சடைக்கும் அளவு கூறுதல், மேலும் பதில் கூறும் போது திக்கல், திணறல்.

CEANOTHUS

– சியோனஸ்தஸ்

அமெரிக்கா ஜெர்சி நாட்டில் விளையும் உயர்ரக டீ.

இவர்களை பார்த்தால் மண்ணீரல் நோயினால் தாக்கப்பட்டு மலேரியா காய்ச்சல் ஏற்பட்டு அதிலிருந்து மீள முடியாதவர்களாக இருப்பார்கள். இதற்கு முன்பு பார்த்த மருந்துகளில் கல்லீரல் தாக்கப்பட்டு சரும நோயோ, காமாலையோ ஏற்பட்டதோடு உடன் மலேரியா காய்ச்சல் ஏற்பட்டதை பார்த்தோம். இந்த மருந்து மண்ணீரல் (SPLEEN) தாக்கப்பட்டு தோன்றும் மலேரியா காய்ச்சல். இது காமாலையை சார்ந்ததாக இருக்காது. இந்த மருந்து தேவைபடுபவர்கள் பொதுவாக சோகை பிடித்த மாதிரி இருப்பார்கள் அவர்களுக்கு இது பொருந்தும். மற்றும் கல்லீரல் சம்பந்தபட்ட நோய்களும் கூட தோன்றலாம். மண்ணீரலின் வேலை கழிவை வெளியேற்றுவது. அந்த வேலையை அது செய்யமுடியாமல் போய், அதனால் மண்ணீரல் வீங்கி இதன் கழிவானது நுரையீரல் வரைக்கும்; போய் அதுவும் கெட்டு அது சம்பந்தப்பட்ட நோயும் ஏற்படும். இவர்களுடைய இரத்தம் அளவு குறைவாக இருப்பதினால் தங்கி, தங்கி ஓடற மாதிரி தெரியும். இதனால் இரத்த சோகையிருக்கும். இவர்களுக்கு இது திடீர்ன்னு ஏற்படும் வகையை சார்ந்தது இரத்;த அளவு குறைந்ததனால் தோன்றும் மலேரியா காய்ச்சல். மண்ணீரல் என்பது இரத்தத்தின் உடைந்த செல்களை அரைக்கின்ற ஓர் உறுப்பு. உடைந்த செல்களின் அழுக்கினால் சரியாக வேலை செய்யாத காரணத்தினால் தான் மலேரியா காய்ச்சல் தோன்றுகிறது. இரத்தம் குறைவின் காரணமாக குழ, குழப்பு தட்டி, கட்டி தட்டி விடுகிறது. வயிறு:- இடது புற மேல் வயிறு வீங்கி இருக்கும். அதற்கு காரணம் மண்ணீரல் வீக்கம் தான். தொட்டு சொல்லுவாங்க இங்கு வெட்டற மாதிரி வலிக்குது என்று. இதனால் சிகப்பு அணுக்கள் குறைந்து விடுவதால் வெள்ளை அணுக்கள் அதிகமாகிவிடும். விகிதாசாரத்தில் சிகப்பு அணுக்கள் குறைந்து விடுவதால் பயங்கரமான மூச்சடைப்பு ஏற்படும். பெண்:- மாத விலக்கு ஏராளமாக போயும், வெள்ளைப்பாடு நிறைய போயும் இந்நிலை ஏற்படும். இதனால் இடது புறம் படுக்க முடியலை வலிக்குதுங்க என்பார். பின்பு கல்லீரலையும் தாக்கும். மலக்குடல்:- பேதியில் கூட முக்கி, முக்கி மலம் கழிவார். ஆதனால் ஆஸன வாய் மலக்குடல் பிதுங்கிற மாதிரியிருக்கும். பிதுங்கியும் விடும். சிறுநீர்:- சிறுநீர் உறுப்பு கெட்டு அவசரமாக ஒண்ணுக்கு வரும். அதனால் வேகமாக ஓடுவார்கள். சிறுநீரை பார்த்தால் பச்சை நிறமாகவும், விட்ட இடத்தில் நுரையாகவும், பித்தமே கொட்டிவிட்ட மாதிரி நிறமும் இருக்கும். இனிப்பாவும் இருக்கும், அங்கு ஈ, எறும்பும் முய்க்கும். இது சக்கரை வியாதி காரர்களுக்கு பொருந்தலாம். உறவு:- மூத்திர காய் வியாதிகளை அதாவது, மூத்திரத்தை அடக்குவதற்க்கு என்று பலவித மருந்துகளை சாப்பிட்ட பின்பும், சந்தர்ப்பத்தின் காரணமாக மூத்திரத்தை அடக்கி, அடக்கிய பின் தோன்றும் உறுப்புகளின் பலஹீனம,; குளிர் காய்ச்சலுக்கு பிறகு இரத்தம் கெட்டு மண்ணீரல் பாதிக்கப்படும். மண்ணீரல் வீங்கி கெட்டியாகி விடும். இதன் பிறகு இப்படி வரும் குளிர்காய்ச்லுக்கு இது மருந்து. மண்ணீரலிலும், இரத்த தேக்கத்தினால் கல் தோன்றிவிடும். பித்தக்கல், சிறுநீர் கல் மாதிரி இதிலும் தோன்றிவிடும். இதனால் கல்லீரலும், மற்ற உறுப்புகளும், நாளமில்லா சுரப்பிகளும் கூட பாதிக்கப்படும். எல்லா நோய்களுக்கும், இந்த அசுத்தமே காரணம். டான்சில், சளி, தொண்டையடைப்பான் நோய்களுக்கும் இதை 3x வீரியத்தில் கொடுக்கலாம். பூண்டு அதிகம் சாப்பிட்டவர்களுக்கும் இது பொருந்தும். உறவு:- BER-V, MIAST, CED, AGAR. இந்த நான்கு மருந்தே போதும். சிறுநீர், மண்ணீரல் தொல்லைகளுக்கு நகரவும், இடது பக்கம் படுக்கவும் கஷ்டம்.

CEDRON

– செட்ரோன்

சாரை பாம்பின் விதை பகுதியை எடுத்து மருந்தாக செய்யப்பட்டது.

பூச்சிகடிகளுக்கு நல்ல மருந்து. உடல் உறவுக்கு பிறகு உடல் வறட்சிக்கு நல்ல மருந்து. இவர்கள் நண்பர்களை கண்டு பயப்படுவார்கள. வெயிலுக்கு போயிட்டு வந்த பிறகு தலைவலி. மாத விலக்கிற்கு முன்பும், பின்பும் வெள்ளைபாடு. மாலை கருக்கலில் பயம். எப்போதும் பயம் ARS. படுக்கையில் பயம் என்றால் ARS, AGAR, CALC. எல்லா கஷ்டங்களும், நோய்களும், முறை வைத்து வருடம், மாதம், பருவம், நாள், மணி, என்று முறை குணத்திற்கு CHINA. அதை விட இதுவே முறை குணத்திற்கு பெரிய மருந்து. சொல்வார்கள் எனக்கு தலைவலி, காய்ச்சல், வயிறுவலி, சொரி, சிரங்கு, காமாலை, டைபாயிடு, மலேரியா, நிமோனியா இது போன்ற நோய் கஷ்டங்களை சொல்லி பருவ காலம், இரவு, பகல் என்று குறிப்பிட்ட நிமிஷத்தில் ஒரு நிமிஷமோ, சில வினாடிகளோ தவறாமல், புள்ளிப் போட்ட மாதிரி, குண்டு போட்ட மாதிரி என்று குறிப்பிட்ட நேரத்தில் வருது என்று சொன்னால் இது ஒன்று தான் மருந்து. உடன் CHINAவையும் பார்த்து கொள்ள வேண்டும். மாதவிலக்குக்கு முன் வெள்ளைபடுதல். கறுப்பு பார்த்தால் பயம் STARM. மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறோமேனு பயம். பக்கவாதம் வருமோனு பயம் CAL-F, CALEND., SAMBU. கண் முன்பு நெருப்பு எரியற மாதிரியென்றால் CAPS. ஏதோ நமக்கு அழிவு வரப்போகுதுனு பயம் ஏற்பட்டால் இது தான் மருந்து.

CHAMOMILLA

- சாமோமில்லர்

ஜெர்மனியில் விளைகின்ற ஒரு வகை தாவரம்.

வலிக்கு பிறகு கோபம் வந்தாலும், கவலை மற்ற நோயின் போது கோபப்பட்டாலும், கோபத்தின் போது எதையும் தாங்க மாட்டார். இதனால் எதையும் நம்ப மாட்டார். உடன் எப்பவும் கோபமாக இருப்பார். பல் முளைக்கும் போது கோபப்பட்டால் இது. அப்பொழுது முரட்டுதனம். கழிவுகள், புளிப்பு வாடையுடன் வந்தால் RHEUM. கோபம் வந்தால் தலைவலியும் வந்து விடும் BRY, LYC, NUX-V, N-M, PETR, PHOS, PLAT, STAPH.வாசனை இருந்தால் தூக்கம் வராது. ஒரு கன்னம் சிவப்பும், சூடும், ஒரு கன்னம் வெளுத்தும், குளிர்ந்தும் இருக்கும். தாடை இருக்கி பிடித்த மாதிரி பல் வலியும், சுடுநீரோ, காப்பி போன்ற பானம் குடித்த பின்பும், இரவிலும் பல் வலி ஏற்படும். கோபப்பட்டு, கோபப்பட்டு குழந்தைக்கு முக தசை தொங்கி போய் விடும். பெண் பிரசவ வலியின் போது முக்கினால் கருப்பு நிறத்தில் கட்டி கட்டியாக தீட்டு மாதிரி கொட்டும். அப்ப பிரசவ வலியானது மேலே போய்விடும் GELS. சித்தரவதை செய்யற மாதிரி இருக்குது என்று உடன் கோபத்துடன் சொன்னால் CAUL, CAUS, GELS, HYOS. PULS. தாயின் மார்பு காம்பு வீங்கி புண்ணாகியிருக்கும், துணி கூட பட முடியாது. குழந்தையின் மார்பு காம்பும் இப்படியே இருக்கும். இதனால் கோபமாகவே இருப்பார். இவர்களுக்கு மஞ்சள் நிறமான வெள்ளைபாடு, அது பட்டயிடத்தில் புண்ணாகும் படியான காரமான வெள்ளைபாடு படும். குறிப்பு:- சந்தேகத்துடன் எதையும் நம்பா விட்டால் இங்கு HYOS, LACH வரும். கோபத்தினால் நம்ப மாட்டார். உடன் கோபத்தின் போது சிரிக்கவும், ரசிக்கவும், சிந்திக்கவும், தாங்கவும், பொருத்துக்கவும் முடியாமல் உம்முன்னு முகத்தை வைத்திருக்கும் குழந்தைகளுக்கும், இப்படி எதையும் செய்யமாட்டார். என்றால் இது தான் மருந்து. மண்ணீரல் தொல்லைக்கு நல்ல மருந்து. பார்த்துக் கொள்ளவும்;.

CHELIDONIUM – MAJUS

– செலிடோனியம் மாஜஸ்

ஒரு வகை அமெரிக்காவில் உள்ள மஞ்சள் நிற தாவரம்.

இம் மருந்து மஞ்ச காமாலையின் போது மிகவும் பயன்படும். வலது புற மார்பு எலும்பின் உள்புறம் (ஈரல்) பகுதி, முன்புறமும், அதே நேருக்கு பின்புறமும் ஏதோ முட்டிக்கொண்டு (அ) ஈரல் முட்டிக்கொண்டு வலிக்குது என்பார். கொதிக்க, கொதிக்க சுடுநீர், டீ, காபி போன்றவற்றை டம்ளரில் துணியை பிடித்துக்கொண்டு குடிப்பார். இதே ARSகாரர் சூடாக குடிப்பார். முகம் கண், நாக்கு, மலம், சிறுநீர், கண்ணீர், எச்சில், வெள்ளைபாடு எல்லாமே மஞ்சள் நிறைந்த தங்க கலராகவேயிருக்கும். இதனால் தன் கடமை விட்டு போச்சே, மறந்து விட்டேன் என்பார். இவருக்கு ஈரல் வலியானது விலா எலுமபில் 4 லிருந்து 9 வது விலா எலும்பு முன்புறமும், பின்புறமும் வலி தோன்றும். முன்புறம் வளைந்தால் வயிற்று வலி தணிவு COCC, VERAT-ALB, VERAT-V ஏப்பம் விட்டால் வயிறு வலி சரியாகி விடும். B-C, BRY, COCC, CALC, CARB-V, LYC, DIOS-C, GRAPH. மாலை 4 மணி முதல் 8 மணி வரை வயிறு வலி வந்தால் LYC. வரும். இல்லை என்றால் மற்ற குறிகளை பார்த்து CHEL (OR) LYC என்று தேர்வு செய்ய வேண்டும். நாக்கு, கண், சிறுநீர் தங்கம், மாதிரி மின்னும்.

CHELONE

- செலோன்

பாம்பு தலை.

இது கல்லீரல் சம்பந்தப்பட்ட தொல்லைகளுக்கு பயன்படும். கல்லீரலில் ஏற்படும் வலியானது இடது புறம் பரவி, பின்பு கீழே இறங்கி விடும் என்பார். இவர்களுக்கு பயங்கரமான குளிர் காய்ச்சல் ஏற்படும். அப்படியே குளிர் எல்லா உறுப்புகளுக்கும் பரவும். பின்பு சருமத்தில் வந்து நின்று போய்விடும். குளிரின் போது மூச்சடைப்பு ஏற்படும். ஈரலில் அடைப்பு ஏற்பட்டு காமாலையில் முடிந்து விடும். ஈரல் கிண்ணமாட்டம் வட்டமாக ஆகிவிடும். சருமத்தின் மீது பலயிடங்களில் எதிரிகள் வந்து தாக்குதல் நடத்துகிற மாதிரியும், கூட்டம், கூட்டமாக வந்து என்னை தாக்கிற மாதிரியும் இருக்குது என்பார்.

CHENOPODI GLAUCI APHIS

- செனோபோடி க்லவ்சி அப்பிஸ்

ஜெரு சேலத்தில் உள்ள ஒரு கெட்டியான மரத்தின் இலை தண்டை வீரியப்படூத்தபட்டவை இந்த மருந்து.

இது பெரிய திட்டம் போடூபவர்களுக்கும், பிளான் போடூபவர்களுக்கும், கூடவே கஷ்டமான வாழ்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று கூறுபவர்களுக்கும். என் வாழ்க்கையில் குத்துப்பட்டூ கொண்டிருக்கிறேன் என்று சொல்வார்கள். தலை பகுதியில்; சோகம், விசுக்குன்னு தெரிக்கிற மாதிரி கஷ்டமாக இருக்கிறது என்பார்கள். மூளையை பார்த்தால் இங்கும் அங்கும் ஒடற மாதிரி இருக்குது என்பார். மூக்கு:- தண்ணி மாதிரி ஓழுகி கொண்டே இருக்குது என்றும், அது காரமாகவும், எரிச்சலாகவும், உறுத்துகிற மாதிரியிருக்குது என்பார். மூக்கெல்லாம் குடைகிறது என்பார். இப்ப காதில் சத்தம் கேட்கிறது, காது அடைக்கிறது என்பார். முகம்:- மஞ்சள் நிறமாக இருக்கும் . வலது கன்னம் உள் நோக்கி இழுக்கும். இதனால் கண்ணு தண்ணி நிறைய வரும். உடன் கண் வலியும் வரும். சுடூ தண்ணி குளிக்க விரும்புவார்கள். ஆனால் இவர்களுக்கு Nடாக வேர்க்கும். (CHAM.) பல்:- வலி வந்து விட்டால் அப்படியே பரவி கொண்டு போய் காதுகுள்ளே போய் பின்பு மேலே உச்சிக்கு போய் பின்பு தாடைக்கு இறங்கி தாடை எலும்பில் தங்கி விடூம். உடன்(PLANTAGO). வயிறு:- பசி சரியாக எடுக்காது ஆனாலும் ரொட்டியும் , கறியும் , கெட்டி பொருளை சாப்பிட விருப்பம் இருக்கும், அப்போது நாக்கை பார்த்தால் கசகசா மாதிரி நிறைய கொப்புளம் இருக்கும் , அப்படியே நாக்கில் சளி தடவி விட்ட மாதிரியிருக்கும். அடிவயிறு:- வெட்டற மாதிரி வலியும், மலம் கழியும் முன்னதாக உள்ளே உருளுகிற மாதிரியும் இருக்கும். மலம் கொட்டி விடுமோ என்று பயந்து அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு ஓடுவார்கள். மலம் பெரிய பந்தாட்டம் வரும். அதிகாலையில் பேதி ஏற்படும் அப்ப கூட ஆசன வாயில் எரிச்சலும், வலியும் ஏற்படும். அப்படியே முக்கியிருக்கும் போது மலக்குடல் போய் சிறுநீர் பையில் அழுந்தும். சிறுநீர்:- காம எண்ணங்கள் எப்பவும் இருக்கும். அதனால் விந்து சுரப்பிகளும் பாதிக்கபட்டு சிறுநீர் உட்புற உறுப்புகள் பாதிக்கபட்டு சிறுநீர் அடிக்கடி சொட்டு, சொட்டாக போகும். ஆனால் அவர்களை கேட்டால் ஏராளமாக போகுது என்பார்கள். சிறுநீர் விட்ட இடத்தில் இதுவும் நுரைத்து கொண்டிருக்கும். முதுகு:-[ பூராவும் வலிக்கும், தண்டில் வலிக்குது என்றும் சொல்வார்கள். இடது கீழ் பக்கம் வலிக்கும் அது உள்ளே புகுந்து நெஞ்சுகுள்ளே வந்து வேகமாக வந்து தங்கி கொள்ளும். காய்ச்சல்; காய்ச்சலின் போது உடம்பு நடுங்கும். உள்ளங்கை எரியும் சூடான வியர்வை படூக்கையே நனைந்து விடூம். உறவு மருந்துகள்:- CAMPH, N-S, NUX-V.

CHENOPODIUM - ANTHELMINTICUM

– செனோபோடியம் அன்தெல்மின்டிகம்

ஜெருசேலத்தில் உள்ள கெட்டியான மரத்தின் பட்டை.

சூதக எலும்பில் வலி ஏற்படுதல், மூளையில் உள்ள மென்மையான நரம்புகள் வெடித்து மயங்கி விழுந்து விடுதல், வலது புற மூளை அமைப்பில் உள்ள நுரையீரலின் மென்மையான நரம்புகளில் தடை ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டு, ஆழ்ந்து சுவாசிப்பார்கள். தீடீர் என மயங்கி விழுந்து விடுவார். ஆபத்து கால மருந்துகளில் இதுவும் ஒன்று. மூளைக்கு மேல் உள்ள சவ்வில் ஏற்படும் தொல்லைகளுக்கும் (மூளைக்காய்ச்சல்) இதுவே மருந்து. செவி நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு (NAT- SALICYL.) செனபோடியம் எண்ணெய் குடித்த, உபயோகப்படுத்திய பிறகு வரும் தொல்லைகளுக்கு இது, இவர்களுக்கு கொக்கி புழு மற்றும் நாடா புழு தொல்லைகளும் இருக்கும். காது:- மந்தமாகி அடைப்பு ஏற்படும். காது நன்றாக கேட்கும். கனமான சத்தமும் கேட்கும். தன் காது சத்தத்தை பிறரோடு ஒப்பிட்டு பார்ப்பார்கள். பிறர் பேசும் போது கனமாக பேசுங்க என்று இவர்கள் சொல்லுவார்கள். வண்டு கத்துகிற மாதிரி சத்தம் கேட்கிறது. குரல் மங்கி போச்சி, எனக்கு சரியாக குரல் பேச வரவில்லை. டான்சில் வீங்கி போச்சி, இந்த காது, தொண்டை தொல்லையினால் மயங்கி போய்விடுவார். முதுகு:- சட்டத்தில் ஊசியில் குத்துகிற மாதிரி இருக்கும். வலது புற தோள்பட்டையில் அகலமாக வலி பரவி தண்டுகுள்ளே போய் அப்படியே நெஞ்சுக்குள்ளே வலி வந்து இறங்கி விடும். சிறுநீர்:- மஞ்சள் நிறத்தில் நிறைய போகும் சிறுநீரைப் பிடித்து பார்த்தால் நுரையாட்டம் மேலே இருக்கும். சிறுநீர் கழிந்த பிறகு பாதையில் எரிச்சல். சிறுநீரை பிடித்துப் பார்த்தால் (பாட்டிலில்) அடியில் படிவம் மஞ்சள் நிறமாக காணப்படும். உறவு:- ஒப்பிட்டு பார்க்க வேண்டிய மருந்து OP, CHIN, CHEL. புழு, மஞ்சள், மயக்கம் இது தான் முக்கியம்.

CHENSHIRIC-CONTRORIC

- சென்ஸிரிக் கோன்ட்ராரிக்

தாழம்புவில் உள்ள சிறு நாகத்தின் விஷத்திலிருந்து வீரியபடுத்தப்பட்டவை . பிரேசில் நாட்டில் உள்ள தாழம்புவில் மட்டும் இம்மருந்து எடுக்கப்படுகிறது.

தீடீர் பயத்தால் மரணம் அடைந்து விடுவோமா என்ற எண்ணம். . ACON,ARN, ARS. மற்றும் இந்த மருந்தும் இருதய வியாதியில் தீடீர்ன்னு திக்குன்னு தோன்றும் மரண பயத்திற்க்கு ACON போல இந்த மருந்தும் வேலை செய்யும். படூக்கையை விட்டூ யாரோ துரத்துவது போன்ற உணர்வு ஏற்படூம். மற்றும் மனஅமைதியும் காணப்படூம். லேசாக நடந்தால சுகம். கனவிலும் இதயம் மற்ற இரத்தகுழாய்கள் வெடிப்பது போன்ற இருதய வியாதி பற்றியிருக்கும். இருதயம் (பெரிதாக) வீங்கி மார்பு முழுவதும் இருப்பது போன்றும், இருதயம் கட்டாகி வயிற்றில் இருப்பது போன்ற உணர்வுயிருக்கும். இதய துடிப்பானது இடது தோள்பட்டையில் கேட்கும். ARS மாதிரி மூச்சி திணறலும் மன அமைதியின்மையும் காணப்படும். ஆடையை தளர்த்தி விடூவார்கள் LACH மாதிரி ஆனால் LACH க்கு தண்ணி தாகமே இருக்காது, இந்த மருந்துகாரர்களுக்கு சிறிது அளவு தாகம் இருக்கும். இரவில் கண்ட கனவும் காலை வரை கூட நினைவில் இருக்கும். OP மாதிரி செக்ஸில் அதிக விருப்பம். மார்பு, இதயம் பெரிதாவது போலவும், கீழே இறங்குவது போலவும், வெடிப்பது போலவும் உணர்வுயிருக்கும் ARS. ARG-N, LACH சும் பொருந்தலாம். இதன் முக்கிய குறி மார்பு விரிந்து கொண்டே பெருத்துக் கொண்டே போகும்.

CHINA – OFFICINALIS

– சைனா அ்பிசினாலிஸ்

கொய்னா மரப்பட்டையின் சாறு.

குளிர் காய்ச்சலின் போது தொல்லை வரும். என தெரிந்தே பச்ச தண்ணி சாப்பிட்டேன் என்றாலும், குளிர் காய்ச்சலின் போது சுடுநீர் விருப்பம் இல்லாமல் சாப்பிடுகிறேன் என்றால் நிமிடம் தவறாமல் ஒரே நேரத்தில் தாக்கினால் CEDRON. சுடுநீரை விரும்பி சாப்பிட்டால் ARS. ஐஸ் வாட்டர் குடித்தால் சுகம் என்றால் PHOS. அசைவு கொடுத்தால் வயிறு வலி தணிவு என்றாலும் CHINA தான் மருந்து. குளிர் காய்ச்சலின் போதும், மற்ற வகை காய்ச்சலின் போதும், சரும நோயோ, வலிப்பு வகைகளோ, வேறு எந்த வகை தொல்லையாக இருந்தாலும், முறை வைத்து அதாவது அமாவாசை, பாட்டிம்மை, பௌணர்மி, வெய்யில் காலம், மழை காலம் என்று குறிப்பிட்ட காலத்தில் தோன்றும் முறை குணத்திற்கு இது முக்கிய மருந்து. மற்றும் குளிரின் போது பச்ச தண்ணீரை தான் குடிப்பார். குளிர் காய்ச்சலின் போதும், இரவு நேரத்திலும் போர்த்த மாட்டார். குளிக்கும் போது எனக்கு காய்ச்சல் வர போகுது என்று சொல்லி கொண்டே குளிப்பார். நான் அவதிபட போகிறேன், அவஸ்தை பட போகிறேன் என்று சொல்லி கொண்டே தப்பு செய்வார். உதடும், முகமும் சிவப்பு நிறமாக இருக்கும், காய்ச்சலின் போது வியர்வை இருக்கும். போர்வையை எடுக்க மாட்டமார். இது விசேஷமான குறி. இதே இடத்தில் சுடுநீர் குடித்தால் ARS. (அல்சரின் போது கஞ்சி குடித்தால் வயிறு வலிக்குது, ரொட்டி, கறி போன்ற கெட்டியான பொருளை தின்றால் சுகம் என்றால் IGN. காமாலையும் மலேரியாவும் கலந்த ஒரு நிலை. மாத விலக்கு அதிகமாக சென்று பால் அதிகமாக குழந்தைக்கு கொடுத்தது, விந்து சக்தி அதிகம், வெள்ளைபாடு அதிகம், இப்படி (உயிர் சக்தி) அதிகம் போன பிறகு மனம் மந்தமும், சோம்பலும், நீடித்த கவலையும், கலைப்புக்கு இது நல்ல மருந்து. ஒரு நாள் பசிக்கும். மறுநாள் பசிக்காது. ஒரு நாள் காய்ச்சல, மறு நாள் காய்ச்சல் இருக்காது, இப்படி அடுத்த, நாள் முறை வைத்து வரும் தொல்லைகளுக்கு, நோய்களுக்கு இது தான் மருந்து.

CHININUM ARSENICOSUM

- சினினமம் ஆர்சனிகம்

வெள்ளை பாஷணமும் கொய்னா பட்டையும் கலந்து வீரியபடுத்த பட்டவை.

இவர்கள் மரணக்களைப்பில் படுத்து இருப்பார்கள். ஹோமியோபதியில் மருந்தை தவறாக கொடுத்தால் அதை வெளியேற்ற இந்த மருந்து பயன்படுகிறது மற்றும் இந்த நேரத்தில் டானிக் மாதிரி இது நல்ல மருந்து. வலி மருந்து, நரம்புக்கு, ஆஸ்துமாவுக்கு, இது போன்ற நோய்களுக்காக அதிகமாக பலவகை மருந்து சாப்பிட்ட பிறகு ஏற்படும் மரண களைப்புக்கு இது நல்ல மருந்து. சரும பகுதி அழுத்துவது போன்ற உணர்வு, வெய்யிலில் குப்புற படுத்துயிருப்பார்கள், சூரிய ஒளி (அதாவது வெய்யில்) முதுகு தண்டில் படுவதற்காக, தலை முழுவதும் ஏதோ நிரம்பிய மாதிரி மரண களைப்பில் அப்படியே படுத்து கிடப்பார்கள். ரொம்ப கவலையுடன் இருப்பார்கள் ரொம்ப எரிச்சல் படுவார்கள். மயக்கம் எதை பார்த்தாலும் வெறுப்பாகவே இருக்கும். தலைவலியின் போது அழுத்துகிற மாதிரி இருக்கும். தொண்டையில், பொறியில், பின் மண்டையில் வலி ஓடி தலைக்கு வந்து விடும். (அங்கு வந்து உட்கார்ந்துகிச்சி என்றும் சொல்வார்.) கண்கள்:- பார்வை நரம்புகளில் வலி ஏற்பட்டு கண் எலும்பு குழியில் இழுப்பது போல, தெரிப்பது போல வலி, சுடான கண்ணீரும் வரும். மின்னல், மின்னுகிற மாதிரியும் வலியிருக்கும். பிறகு கண்ணில் தண்ணியா ஊத்தும். வாய்:- கொஞ்சம் கூட பசியே இருக்காது. நாக்கு மொத்தமாகவும், கோடாரியில் வெட்டிய மாதிரி வெடிப்பு இருக்கும். நாக்கின் மீது மஞ்சள் நிறமான சளி போர்த்திய மாதிரி இருக்கும். வாய் கசக்கும். வயிறு:- ஜீரண நீர் குறைந்து கொண்டே வரும். வயிற்றின் மேல் பகுதிகளில் எரிச்சல் மாறி, மாறி வரும். (LROBINIA, ARG-NIT, OREX-TANNATE) தாகம் அதிகமாகயிருக்கும், அதனால் தண்ணி இன்னும் வேண்டும் என்று குடித்து கொண்டேயிருப்பார்கள். அதுவே தொந்தரவாக இருக்குது என்று கூறுவார். இவர்களுக்கு நரம்பு தளர்ச்சினால் பசியே இருக்காது. மலம் :- முட்டை உடைத்து ஊத்தின மாதிரி பேதி. இதயம் :- துடிப்பு நின்னு, நின்னு போகிற மாதிரி உணர்வு. அப்படி நிற்பதால் மூச்சு திணறல் ஏற்படும். அதனால் அடிக்கடி மூச்சு இழுத்து, இழுத்து விடுவார்கள். இதனால் திறந்த வெளி (வெளி) காற்றில் இருப்பார்கள். மாடி படிகட்டு ஏறும் போது குட்டை, குட்டையாக மூச்சு வாங்குவார். மூச்சு திணறலினால் இரத்த ஓட்டம் பலஹீனமாகவும், நாடி துடிப்பு மென்மையாகவும் இருக்கும். இந்த மாதிரி இதய தொல்லையினால் சின்ன, சின்ன தொல்லைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இதய வால்வுகளும், நரம்புகளும் பலஹீனமாக இருக்கும். துக்கம்:- நரம்பு பலஹீனத்தால் தூக்கமே இருக்காது. இந்த மருந்தை ஒரு முறை குறைந்த வீரியத்தில் கொடுத்தால் போதும் என்கிறார். வில்லியம் போரிக். கை, கால்களில்:- கை, தோள்பட்டை, கால்கள், பாதம், கால் மூட்டுகள், ஜில்லுன்னு ஆகி விடும். அசதியும் இருக்கும். கால் மூட்டுகளில் கிழிப்பது போன்ற வலியிருக்கும். காய்ச்சல்:- தொடர்ந்து உடல் பலஹீனமாகவே இருப்பதால் காய்ச்சல் ஏற்படும். உறவாக வரும் மருந்துகள்:- ஒப்பிட்டு பார்க்கவும் CHININUM உடன் FERRCITRICUM. ரொம்ப அசதியினால் வெளுத்து போய்விடுவாங்க, உடன் மூச்சு வாங்கும். இதற்கு CHININ-MUR. நரம்பு பலஹீனத்தால் கண்ணை சுற்றிலும் வலி உடன் குளிர்ந்து விடும். கண் பகுதி மட்டும். புகையிலை, சாராயம் குடித்து, கண்களை அதிகமாக பயன்படுத்திய பிறகு ஒய்வு இல்லாமல் அப்படியே படுத்து கிடப்பார். இதற்கு CENOTHERA. அதிகமான பேதி போன பிறகு ஏற்படும் நரம்பு தொல்லைகளுக்கு பிறகு அப்படியே படுத்து கிடப்பார். இந்த தொல்லைகளுக்கு பிறகு குழம்பி விட்டால் மருந்து MAROZAMIA – SPIRALIS.

CHININUM SULPHURICUM

– சினினம் சல்பூரிக்கம்

கொய்னாவும், கந்தகமும்.

ஒரு வேளை இம் மருந்தை உயர் வீரியத்தில் கொடுத்தால் அடக்கப்பட்ட மலேரியா வெளியே வந்து விடும். முதுகு பக்கம் குளிரும், இழுப்பும் நுரையீரலில் மேலே உள்ள பையில் மலேரியா அதை பற்றி சொல்லி கொண்டுயிருந்தால் இது வழிகாட்டும். திடீர்ன்னு வரும்;. வாத நோய், இடுப்பு மூட்டு பசையில் நோய், பிறப்பு உறுப்பின் உதட்டில், ஆஸன வாய் போன்ற சளி சவ்வில் தொல்லை. நீண்ட நாட்களாக மூத்திரக் காயில் வேக்காடு. திடீர்ன்னு பார்வை மந்தமாகிவிடும். பலஹீனத்தினால் ஓயாது விக்கல். இரத்தம்:- ஏதோ ஒரு வியாதியின் காரணமாக திடீர்ன்னு வேகமாக ஓடும், சிவப்பு செல்கள் எல்லாம் குறைந்து கொண்டே வரும். அசுத்த இரத்தம் வெளியேறாமல் உப்பு ஏற்பட்டு விடும். சளி சவ்விலும் வெள்ளை அணுக்கள் அதிகம் ஏற்பட்டு விடும். தலை:- நெற்றில் தோன்றி உச்சியில் முடியும் வலி. மதியம் அதிகமாகி விடும். கிறு, கிறுப்பும், பட, படப்பும் கடுமையாக இருக்கும். இடது புறம் வலிக்கும். இது மலேரியாவின் குறியாகும். இது கடுமையாகி ரோட்டில் நடக்கும் போது மயங்கி விழுந்து விடுவார்கள். எழுந்து நின்றாலும், கீழே பொத்து, பொத்துன்னு விழுந்து விடுவார்கள். காதுகள்:- காதுகளில் பயங்கரமாக சத்தம் கேட்கும். அதாவது வண்டு கத்துவது போலவும், உறும்புவது போலவும், கர்ஜனை செய்வது போலவும், இப்படி காதுகளில் ஆழமாக சத்தங்கள் கேட்கும். முகம்:- முகத்தை பார்தால் கண்ணை சுற்றி வளையம் கட்டியும், கண் உள்ளே போயிருக்கும். அப்பொழுது கிழத்தோற்றம் காணப்படும். அப்பொழுது முகத்தை தேய்த்து, தேய்த்து பிறகு கூட திருப்தியே இருக்காது. தண்டுவடம்:- அதிக உணர்ச்சியோடு, தோள்பட்டையில் அழுத்துற மாதிரி வலியிருக்கும். கடைசி கழுத்து எலும்பு வரை வந்து தலையும், கழுத்தும் வலிக்கும். சிறுநீர்:- சிறுநீர் இரத்தம், சளி மாதிரியும், அழுக்கு மாதிரியும், எண்ணெய் பசை மாதிரியும், சாக்பீஸ் மாதிரியும், சிறுநீரை பாட்டிலில் பிடித்து வைத்து பார்த்தால், அடியில் வீழ் படிவுகள் காணப்படும். மற்றும் யூரியா மாதிரி உருண்டைகளும், கோழிமுட்டை வெள்ளை கரு மாதிரி பசையாகவும், பாஸ்பரஸ் மாதிரியும், சிறுநீர் உப்பு மாதிரியும், நாற்றமும் இருக்கும். தேக வெப்பம் சரியாக இருக்காது. முட்டை வெள்ளை கரு மாதிரி கொட்டி கொண்டே இருக்கும். சருமம்:- சொறி, சிரங்கு, தடிப்பு, அரிப்பு, சருமபடை, கம்பரிசியாட்டம் சிறிய கொப்புளம், பிறப்பு உறுப்பில் பருக்கள், அதிக உணர்ச்சி மிக்க பொறுக்க முடியாத சரும தொல்லைகள். காய்ச்சல்:- பல விதமான வீக்கம், வலிகளோடு மதியம் மூன்று மணிக்கு குளிர் காய்ச்சல் தோன்றும். சூடான அறையில் இருந்தாலும் கூட பட, படப்பும், வருத்தமும் இருக்கும். உறவு:- CHIN, ARS. இப்படி பல மருந்துகளை நிலைமைக்கு தக்கவாறு கொடுத்து கொள்ளணும். முறிவாக்- N-M, LACH, ARS, PULS. குறிப்பு:- காமாலையும், சரும வியாதியும் கலந்து விட்டால் இது. இப்ப குளிர்காய்ச்சல் மேலோங்கி நிற்கும். சரும உணர்ச்சியும், அதிக நடுக்கமும் இருக்கும். (காமாலையும், குளிர்காய்ச்சலும் கலந்து, நடுக்கலோடு இதே மாதிரி தோன்றும். சரும நோய் இருக்காது, அதற்கு பதிலாக மிகுந்த களைப்பு இருக்கும். CHI-ARS.)

CHLOROFORMIUM

- குலேரேப்போர்னியம்

மயக்க மருந்தை வீரியபடுத்தபட்டவை.

அறுவை சிகிச்சையின் போது குறிப்பிட்ட பகுதியில் உணர்வு தெரியாமல் இருப்பதற்க்காக இது தரப்படுகிறது. இப்படி உணர்வு தெரியாமல் இருக்க பயன்படுத்திய பிறகு அப்பகுதி தளர்ந்து விடும். நாடி பலஹீனமாகவும், அதிகமாகவும் துடிக்கும். சுவாசம் மெதுவாகயிருக்கும் திடீர் என அதிகமாகவும,; மூச்சு வாங்கும் வலிப்பு வந்த மாதிரி. மூத்திர காய்கள் கெட்டு சிறுநீர் உற்பத்தி செய்ய முடியாமல் அப்பகுதியில் வலி ஏற்படும், வாயு உற்பத்தி அதிகமாகும். DR.D.MACFARLAN என்பவர் மேலே கண்ட குறிகளுக்கு இம் மருந்தை கொடுத்து நோயாளிகளின் கஷ்டத்தை போக்கியதாக கூறுகிறார். வலது கால் மூட்டில் பலஹீனம் ஏற்படும். காற்று நிறைய தேவை அதனால் அதிகமாக மூச்சு இழுத்து, இழுத்து விடுவார்கள். அவர்கள் முகம் மற்றும் மார்பு பகுதியில் நன்றாகவே தெரியும் மற்றும் அப்பகுதியில் வீக்கமும் இருக்கும். முகம் மட்டும் கருப்பாகயிருக்கும். தொண்டையும், உதடும், வறட்சியாகயிருக்கும். இரவு நேரத்தில் வறட்டு இரும்பல் ஏற்படும். சாப்பிட்ட சாப்பாடு மீண்டும் வாய்க்கு வரும், அது ஊசி போன மாதிரியும், புளிச்ச மாதிரியும் வாய்க்கு வந்து கொண்டிருக்கும். மலக் காற்று பிரியும் இது இறைப்பை சம்பந்தப்பட்ட நோய் குறிகளே காட்டும். இதயத்தை சுற்றிலும் பிடித்து (அ)நசுக்கி விடுகிற மாதிரி வலி. வலது புற மார்பு பகுதியில் ஊசியில் குத்தற மாதிரி வலி அதனால் மூச்சு இழுத்து, இழுத்து விடுவார்கள்;. இது முக்கிய குறி. சில நேரங்களில் துடிப்பு அதிகமாகவும், குட்டை, குட்டையான சுவாசமும் இருக்கும். தலை:- தலை பகுதியில் பயங்கரமான தொல்லைகள் தாக்கி கொண்டேயிருக்கும். அதனால் இவர்கள் உளறி கொண்டேயிருப்பார்கள். அப்படியே தலையை தோள்பட்டையின் மீது போட்டு கிடப்பார்கள். கண்கள் திறந்த நிலையிலேயே இருக்கும். கண்ணை மூடினாலும் திக்கு, திக்குன்னு விழித்து பார்ப்பார்கள் பயத்தினால். கருவிழி, ஆடி, சுத்தும். வலிப்புகாரர்கள் மாதிரி, முக தசைகள் ஆடும். பின்பு கை, காலும் ஆடும். இவைகள் எல்லாமே ஆப்ரேஷனுக்காக தரப்படும் மயக்க மருந்தின் பின் விளைவுகள் தான் இவ்வளவும். உறவு:- ஈதர் கொடுத்து நுரையீரல் ஆபேரஷனுக்கு பிறகு, மூத்திரகாயிகளின் ஆபரேஷனுக்கு பிறகு, இருதய வால்வு ஆபரேஷனுக்கு பிறகு, தங்கியிருக்கும் மயக்க மருந்தை முறிக்க குறைந்த வீரியத்தில் தரலாம் என்று நிரூபணம் Dr. BIER உயர் வீரியமும் பொருந்தலாம் என்று கூறுகிறார். மற்றும் PHOS ம் பொருந்தும் பார்த்து கொள்ளனும். இடுப்புக்கு கீழே போடுகிற மருந்து, விலை குறைவு என்றும், உடல் முழுவதும் மயக்கம் அடைவது அதிகம் என்றும், ஹலோபதியில் கூறுகிறார்கள். அதனால் மருந்தின் பக்க விளைவு எப்படி இருக்கும்?

CICUTA – VIR

. சிக்கூடா விர்

நீரில் வாழ்கின்ற விஷ செடி.

இது குறிப்பாக பெண்களின் காக்கை வலிப்புக்கும், பல் முளைக்கும் போதும், மலக்குடலில் புழு, பூச்சி இருக்கும் போதும், சிறுவர்களுக்கு ஏற்படும் வலிப்புக்கும், பயங்கரமாக ஏற்பட்டு நினைவு இழந்து “ஊ” ன்னு கத்திக் கொண்டு பின்புறம் சாய்ந்து விடுவார்கள். பெண்ணின் பிறப்பு உறுப்பின் உதட்டில் ஏற்படும் வலிப்பின் காரணமாக குறைந்த மாதத்திலேயே கருவானது (அந்த குழந்தை) இறந்தே தான் பிறக்கும், சிறுவருக்கு தொண்டை அடைப்பின் போது வலிப்பு, பற்களை அரைத்து, அரைத்து எகிரே சுண்டிப் போய்விடும். சிறுவர்களுக்கு சரியாக பசி எடுக்காது. ஆனால் சாக்பீஸ், அடுப்புகரி தின்னும் சிறுவர்கள் உடன் ALUM, PSOR.முள்ளந்தண்டில், தலையில அடிப்பட்ட பிறகு இப்படி தோன்றலாம். ஆனால் இதன் முக்கிற குறி பயங்கர சத்தத்துடன் பின்புறம் சாய்ந்து விடுவது. ஏந்த நோயோ, கஷ்டமோ அதன் பிறகு பின்புறம் இழுக்கிற மாதிரி இருக்குது என்றால் இது ஒரே மருந்து, எய்ட்ஸ் நோயில் கூட இப்படி கூறினால் இதை கொடுத்தால் சரியாகி விடும். காக்கை வலிப்பிலோ. நொடிப்பிலோ,

CIMICIFUGA (OR) ACTIA-RACIMOSA

- சிமிசிபியூகா(அ) ஆக்டியா ரசிமேஸர்

கருநாகப் பாம்பின் அடி பகுதி.

பிரசவ காலத்தில் கவலை, பயம், சோகம், உடன் தன்னை ஏதோ சூழ்ந்து கொண்டிருப்பது போல் இருப்பார். மற்றும்; இருண்ட மேகம் போன்றும் எலிப்பொறியில் சிக்கிட்டு இருப்பது போன்றும், ஏதோ ஒன்றில் சிக்கி கிட்ட மாதிரி இருக்குது என்பார். மற்றும் மெனோபாஸ் காலத்தில் ஆடு, மாடு, புலி போன்று கனவில் தெரியும். மாதவிலக்கு நிற்கும் காலத்தில். பிரசவ காலத்தில் தொல்லை வருவது போலவே இருக்கும். தனக்கு பைத்தியம் பிடித்து விடுமோ என்று பயமிருக்கும். எதற்கெடுத்தாலும் சந்தேகம் HYOS மாதிரி. தன்னை சுற்றி எதிரிகள் சூழ்ந்து இருப்பது போல ஒரு சந்தேகம். அதனால் தனிமையில் இருக்க பயப்படுவார்கள். தனது கை உடம்பில் ஒட்டி இருப்பது போன்றும், உடம்பை கட்டிப் போட்டது போன்றும் இவர்களுக்கு உணர்வு இருக்கும். குளிர் காலத்தில் காற்று தலையில படட்டும் என்று விடுவார் ARS மாதிரி. பிரசவ வலியின் போது தலையில் (நெற்றியில்) குளிர் காற்று பட வேண்டும் என்று கூறுவார் CIMIC. அதிக உணர்ச்சி மிக்கவர்கள். அதனால் மார்பும், கருப்பையும், மாறி, மாறி வலிக்குது என்பார்கள். இதனால் பைத்தியம் பிடித்த மாதிரி இருக்குது என்பார்கள். கிழிக்கிற மாதிரி வலி என்பார். ஆனால் வலி இருக்காது (அசைந்தால் இதயம் நிற்பது போன்ற உயர்வு DIG.) ) ஆனால் நடுங்குகிற மாதிரியும், அப்படியே ஆடிக் கொண்டிருந்தால் சுகம். இதயம் என்றால் GELS. பிரசவ காலத்தில் யோனி விரியாமலும் நடுங்கும். சிறிது சப்தம் கேட்டாலும் வலி இருக்கும் CIMIC, CAUL, PULS.இந்த குறி தெரிந்து அப்பொழுது மருந்து கொடுத்தால் சுக பிரசவம் ஏற்படும். வலி எத்தனை நாளாக இருக்குது, எப்படி இருக்குது, தலை குறுக்காக திரும்பி விட்டதா என்றும் எப்படி இருந்தாலும் நமக்கு கவலையில்லை. குறிப்பு:- 10 மணி நேரம் பிரசவம் ஆகாமல் இருந்த ஒரு பெண் முக்கி கொண்டே இருந்த குறியை வைத்து இதை கொடுத்த ஏழாவது நிமிஷமே குழந்தை பிறந்தது.

CINA

- சினா

புழுக்களின் முட்டை.

சிறுவர், பெரியவர், ஆஸன வாயில் நாக்கு பூச்சி, புழுக்கள் தொல்லை என்றாலும், சிறுவர்கள் சூத்திலும், மூக்கிலும் விரலை விட்டு நோன்டுவார்கள். குடையுது என்று விரலை விட்டு குடைந்து கொண்டிருக்கும் சிறுவர்கள். குடையுது என்றும் கூறுவார்கள். மாலை நான்கு மணிக்கு குடைந்தால் LYC.. இரவில் மட்டும் குடைந்தால் SYPHIL, SULPH.நாக்கு பூச்சி இருக்குது என்பார்; SANDROBIRE. மிக, மிக, முன் கோபம் தாங்கவே முடியாத நிலையில் உள்ளவர்கள், இதை நாம் குழந்தைகளிடம் பார்க்கலாம்;. குழந்தையை பார்த்து கண்ணு, பாப்பா, ஹாய் என்று சொன்னாலே உரும்பும். தொட்டால் கோபம் CHAM.. இது பார்த்தாலே உரும்பும் கோபப்படும். கோபத்துக்கு ஒரே மருந்து இது தான். குறிப்பு:- (ஒரு காட்டில் வளர்க்கப்பட்ட நாய் யாரை பார்த்தும் குலைக்கலை, ஆனால் அதன் முகத்தை பார்த்தவுடன் உர் என்று செய்தது. அதற்கு இது பொருந்தும் டேய் ராமு என்ற பின்பு உரும்பினால் CHAM. இவ்வளவு தான் வேறுபாடுகள் தேவையான மருந்தை எடுக்க வேண்டும்.) குழந்தை தோள் மீது உயரமாக தூக்கி வைத்து கொள்ள சொல்லும். விரும்பும். ஆனால் இடுப்பில் வைக்கச் சொல்லாது, கொஞ்சுவதும் இதற்கு பிடிக்காது. இரும்பிய உடனே இதற்கு உடனே கோபம் வரும். பல் முளைக்கும் போது கூட இந்த கணம் வரும். காய்ச்சலுக்குப் பிறகு இதன் குணங்கள் (மாறும்). கெட்டுப் போயிடும். காலையில் எழும் போது மாதவிலக்கு ஏற்படும். குழந்தைகளுக்கு உயரமான இடத்தில் தூக்கி வைத்தால் சுகம். தொட்டிலை கூட உயரமாக வைத்து தான் ஆட்ட வேண்டும். வேகமாக ஆட்டினால் தான் சுகம் என்றால், CHAM.ஆபத்து ஏற்பட்டிடுமோ என்ற பயம், மாலையில் தனியா நடக்கும் போது காத்து பிடிச்சுக்குமோனு பயம். பிறரது குற்றத்தையே கண்டுபிடித்து குற்றம் சொல்லிக்கிட்டே இருப்பார்கள். பிறரை புகழ்ந்து பாராட்டி பேச பிடிக்காது. இவர்களை சமாதானப்படுத்தவோ, அடக்கவோ முடியாது, எதாவது குற்றத்தை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். தனக்கு தரும் உதவியை புறக்கணித்தல், கேப்ரஸில் (CAPRASIS MIND.) நிறை வேறாத போது பிறகு ஏங்குதல், தேம்புதல், அகோரப் பசி நிறைய சாப்பிட்டும் உடல் தேராது, குணமும் கெட்டு விடும். பெரியவர்களுக்கு, என்றாலும் மேலே கூறிய குறிகள் பொருந்தும்.

COCCULUS – INDICUS

- கோக்குலஸ் இண்டிகாஸ்

இந்திய கிளிஞ்சல்.

இம் மருந்துக்குரியவர்களை நாம் கிள்ளினால் கூட சிறிது நேரம் கழித்து தான் அவர்களுக்கு அந்த உணர்வு ஏற்படும். அவ்வளவு மந்தம். இடுப்புக்கு கீழ் பிப்பு, வாதம், உணர்வு அற்ற தன்மைக்கு நல்ல மருந்து COCC மற்றும் ABROT. தாடை அப்படியே பிடிச்சிகிச்சி, வாய் மூட முடியலை, திறக்க முடியலை என்று கூறுவார்கள். இவர்களுக்கு தூக்கம் கெட்டால் தொல்லை, இந்த நோய், அந்த நோய் எல்லாமே தூக்கம் கெட்ட பின்பு தாங்க வந்தது என்பார்கள். ஆனாலும் பிறருக்கு உதவி செய்ய தூக்கம் கெட்டு கூட வேலை செய்யும் தியாக மனப்பான்மை கொண்டவர். சாராயம் குடிப்பது, தாஸிடம் செல்வது போன்றவை தப்புனு தெரியுதுங்க. ஆனால் விட முடியலைங்க என்பார்கள். அடுத்த வீட்டில் உள்ள குழம்பு வாசத்தை கண்டு குமட்டல் எற்பட்டால் இது. தட்டில் உள்ளதை பார்த்து குமட்டல் எற்பட்டால் COLCH. சாப்பாடு உணவு பொருள்கள் மீது வெறுப்பு என்றால் ARS.சினிமா T.V. பார்த்து தூக்கம் கெட்டால் NUX-V. பிறருக்காக அக்கறை எடுத்து இரவு, பகலாக உழைப்பவர், அதனால் தூக்கம் கெட்டால் இவருக்கு தொல்லை ஏற்படும். நாம் சொல்லும் சொல் மூளைக்கு போகாது, காதிலும், கருத்திலும் ஏறாது ஆன்மாவையும் உடம்பையும் தனிமைப் படுத்தி என்னால் வர முடியாது என்று கூறி குறிப்பிட்ட இடம் மறுத்து போச்சி என்றால். பையனுக்கு உடம்பு கெட்டு கணவனோ, மனைவியோ, குழந்தைகளோ நோய்வாய்பட்டிருந்தால் அவர்களை இரவு முழுக்க கண்விழித்து பார்த்துக்கிட்டேன். அதன் பிறகு தாங்க இந்த நோய் என்று கூறுவார்கள்.

COFFEA – CRUDA

– காப்பியா குருடா

காப்பிக்கொட்டை.

இது பெரும்பாலும் பெண்களுக்கு, ரொம்ப மகிழ்ச்சியான நேரம், இன்பமான கனவு, காதல் மகிழ்ச்சியில் இப்படி மகிழ்ச்சியில் ஆடிப் போன பிறகு, தலைவலி ஏற்பட்டால் (மகிழ்ச்சியால்) சந்தோஷத்தால் பயமும், சந்தேகமும், மாறி, மாறி வருதல். வலியின் போது சந்தோஷமும், கவலையும் மாறி, மாறி வந்தால், உடலுறவு தான் விரும்பியவர்களுடன் கனவிலும், நினைவிலும். தேவர்களுடன் சொர்க்கத்தில் நான் இருப்பது போலவும், தனது இடம், பொருள், கிடைத்த வாழ்க்கை கணவன், குழந்தைகள் இப்படி எல்லாம் இன்பம், இனபம், சொர்கம் என்று மனதில் எண்ணி மகிழ்ந்து உருகி போய்விடுவார். பட்டினி கூட சுகம். குடிகார கணவன் கூட இன்பமானவனாக தெரியும். மகிழச்சியில் அடிக்கடி காப்பி குடிப்பார். காப்பி முறிவுக்கும், காப்பி விருப்பத்தை தணிக்கவும் இதுவே மருந்து. நரக வேதனை என்றால் இங்கு MERC. சொர்க்க மகிழ்ச்சி என்றால் COFFEA. சிரிப்பு , மகிழ்ச்சிக்கு பிறகு தலைவலி, பூ, அகர்பத்தி, சென்ட் வாசனை தாங்க முடியாது AUR, BELL, COLCH, IGN, NUX, SIL, LYC, PHOS. மகிழ்ச்சியை தாங்க முடியாது என்று கூறி, மேலே கண்ட வாசனையும் தாங்க முடியலை என்று கூறிவிட்டால் இது தான் மருந்து.

COLCHICUM-ACTUMNALE

- கோல்ச்சிகம் ஆக்டம்நல்

கோல்ச்சிகம் குங்கும பூ செடி இலை.

தட்டில் உள்ள குழம்பு வாசம் பட்டு குமட்டல் ஏற்பட்டாலும், பஸ் குலுங்கி குமட்டினாலும் இது. (உணவு பார்த்தாலே வெறுப்பு என்றாலும் ARS.) இது கற்பகாலங்களில் குமட்டுது, அசிங்கத்தை பார்த்தால் குமட்டுது, பிறர் வாந்தியை பார்த்தால் குமட்டுது, கக்கூஸ் வாடை, குப்பை, கூலம் போன் வாடையைப் பார்த்தால் குமட்டுது, ஏதோ ஒரு நோயோ, மனக்குறியோ சொல்லி குமட்டல் என்றால் இது தான் மருந்து. வண்டிகளின் பெட்ரோல் புகை பட்டு குமட்டினால் AMM- C. வாந்தியே வந்து விட்டால் IP. ஏதோ பாருங்க குமட்டுது பின்பு தான் தலைவலி, இடுப்பு வலி, காய்ச்சல் என்பார். எப்படியோ குமட்டல் என்றால் இது தான் மருந்து. அவரை பார்த்தா, நினைச்சா, பேச்சை எடுத்தா. நோயிலே வேறு எந்த நிகழ்ச்சி நிலைகளில் குமட்டினாலும், குமட்டுது என்றாலும் (வாந்தி அல்ல) இது தான் மருந்து. டைபாயிடு காய்ச்சலோ. மூட்டு வாத நோயோ, தோன்றி அதன் பிறகு இதய்ம் கெட்டு பிறகு சர்க்கரை வியாதி ஏற்பட்டால் இது பொருந்தும். வாசனையோ, நாற்றமோ. தூங்க முடியலை என்று சொல்லி, மூட்டு வலியை சொன்னால் இது பொருந்தும். குளிர் பருவம், வெய்யில் காலம், அசைந்தால் கனமான வாடை, நாற்றம், சூரிய உதயம், மறைவுகளில் மேற்கண்ட தொல்லைகளை கூறினால் இது. அதே நேரம் சூடாக போர்த்திக் கொள்ளுதல். சூடான அறை. உடலை முறுக்கினால் சுகம் என்றால் இது. குறிப்பு:- வாசனையோ நாற்றமோ. தாங்க முடியாமல் பிறகு, பெரிய மூட்டு வாத நோய், இருதய நோய், சர்க்கரை வியாதி தோன்றிவிடுதல். மிளகாயை முகர்ந்தால் கூட குமட்டுது என்பார்கள்.

COLOCYNTHIS

கோலோஸிந்த்

வரி குமட்டிக்காய்.

கடுமையான தாங்க முடியாத வயிறு வலி. அப்படியே முன்புறம் வில்லு மாதிரி இரண்டாக வளைந்து, குனிந்து வயிற்றை அழுத்திப் பிடிப்பார் (அ) பெரிய கட்டை, கெட்டியான பொருளை அல்லது கைகளை கோர்த்து கடுமையாக அழுத்தி பிடிப்பார். வலி தாள முடியாமல் துடி. துடித்து துள்ளி போவார். ஆதனால் தற்கொலை விருப்பம். வலி தாள முடியாது என்ற காரணம் தான். கோபத்திற்கு பிறகு வயிறு வலி STAPH. உருளை கிழங்கு சாப்பிட்தும் வயிறு வலி ALUM, CALC, CHEL. இவரை இழிவுபடுத்தியப் பிறகும் இந்நிலை வரலாம். இவர் பிறரை திட்டுவார். இழிவுப்படுத்துவார். இவரை இழிவு படுத்தினால் இப்படி வரும். எதை சொன்னாலும் தவறாகவே எடுத்துக் கொள்வார். மரியாதை தெரியாதவன், எதன் மீதும் நம்பிக்கை இல்லாதவன். யார் எதை சொன்னாலும் காதில் வாங்க மாட்டான், ஆனால் இவன் பேசுவான், ஓயாது. இவன் பிறரை இழவுபடுத்தி, கேலி செய்தும், திட்டியும் பேசுவான். வேகமான வலிக்கு மின்னல் மாதிரி, அடித்து பொறட்டர மாதிரி, கிழிக்கிற மாதிரி இப்படி வலிகளுக்கு இது பொருந்தும். நரம்புகளிலும் வலி ஏற்படும். இம்மருந்துக்கு இடது புறத் தொல்லைகள் ஏற்படும். இதனால் கோபம். இவைகள் எல்லாமே இவரை இழிவு படுத்திய பிறகு தோன்றலாம். இவர் எல்லாரையும், இழிவுப்படுத்துவார். ஆனால் இவரை இழிவுபடுத்தினால் இவர் தாங்க மாட்டார். எதை சொன்னாலும் தப்பாகவே எடுத்துக் கொள்வார். தமாஷ்சுக்கு கூட சொல்ல முடியாது. கேள்வி கேட்டால் கோபப்படுவார் எரிச்சலினால். OP, ARS, CALC, COLOC, ALOE0S, CHAM, HEP, IGN. கோபத்தின் போது அமைதியின்மை ACON, DIG, COLOC, KC, LYC. தனிமையில் வெறுப்பு LYCO. கோபத்தின் போது தனிமை வெறுப்பு என்றால் COLOC. கோபத்தின் போது கண்ணா, பின்னானு திட்டுதல், தூக்கி எரிவார். பிறரை குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பார். கடமை உணர்வே இருக்காது. குற்றம் பிறர் மீது காணும் பெண்கள், வயிறை மடிச்சு, ஒடிச்சு பேசுவார்கள், பெரியவர்களை மரியாதையின்றி பேசுவார்கள். கடவுள் மீதும், எதன் மீதும் நம்பிக்கை இல்லாதவர். மரியாதை இல்லாதவன். வலியின் போது கவலை இருந்தால் MAG-P. தன்னுடைய பேச்சே தான் கேலி செய்தால் பிடிக்காது. பீத்திக் கொள்ளுதல். குறிப்பு:- அதிர்ச்சி, கஷ்டம், கவலையினால் ஈரல் கெட்டு போய்விடும். மங்கி வரும். திகில், பயம், கோபம் இருந்தால் இருதயம் கெட்டு போய்விடும்.

CONIUM – MACULATUM

- கோனியம் மாகுலேட்டம்

இது விஷச்செடி சாற்றிலிருந்து வீரியம் செய்யப்பட்டவை. அக்காலத்தின மேதை சாக்ரடீஸை கொன்றது இந்த விஷ செடி தான்.

இம் மருந்து பெண்களுக்கு அதிகமாக பொருந்தும். மாதவிலக்கிற்கு முன்பு மார்பில் ஊசி குத்துவது போன்ற உணர்ச்சி இருக்கும். இதுவும் புற்றுநோய் மருந்து. ஆண்களுக்கு விதைக் கொட்டை வீங்கி விடூம். சாமியார், திருமணம் ஆகாதவர்கள் தனிமையாக இருக்க விரும்புவார்கள். மதர்கள், பாதிரியார்கள் போன்ற கல்யாணமே செய்யாமல் காமத்தை மறைப்பவர்களுக்கு, மார்பு கணத்தினால் அதை தூக்கி கொண்டூ நடப்பவர்களுக்கும், பால் கொடூக்கவில்லை என்றால் அது கட்டியாகி புற்றுநோய் ஏற்பட்டாலும், மேலும் மார்பு கல்லாட்டம் இருக்குது அசைய மாட்டிங்குது என்பதற்க்கும், படூத்திருக்கும் போது திரும்பி படூக்க மாட்டார், திரும்பி படூத்தால் தொல்லை. அதனால் அசையாமல் படூப்பார். நடக்கும் போது யாராவது கூப்பிட்டால் திரும்பினால் உடனே தொல்லை ஏற்படூம். X-nu/ இரத்தப் பரிசோதனை எடூக்க வெறுப்பு என்றாலும், தலை வலியின் போது மூன்று தலையணை வைத்தால் சுகம் என்றால் ARS, PHOS, P.A, SPIG, சாப்பிட்டூ 2 (அ) 3 மணிநேரம் கழித்து வயிறு வலிங்க என்றால் ANAC, NUX-V, PULS, N-M, தன்னையே மறைத்தால் BELL.உடலை உயிரை மாய்த்து கொள்ள (தற்கொலை) செய்து கொள்ள நினைப்பவர்களுக்கு AUR-MET. காமத்தை மறைத்தால் CON-இது தான். தன்;னை மறைப்பவர், தனது ரகசியம், நோய் வெளியே பிறருக்கு தெரிந்து போயிடூமோ, தனது மனதிலிருக்கும் செக்ஸ் விருப்பம், கட்டூப்பாடூம், விடாபடியான கொள்கை வெளியே தெரிந்திடூமோ என்பதற்கு தான் இவர் X-RAY இரத்த பரிசோதனை, ஸ்கேன் வேண்டாம் என்பார். அடிப்பட்டூ சீல் ஏற்படாமல் கல்லாட்டம் கட்டி ஏற்பட்டாலும் இது தான் மருந்து. நண்பர்கள் வெறுப்பு LYC வரும். உறவினர்களை துறத்த விரும்புவர்களுக்கும், நெஞ்சில் சில பகுதியில் வறட்சி. நாட்பட்டவைக்கு இது. திடீர் வகைக்கு BELL, HYOS, STRAM.. குழந்தைகளும், பெரியவர்களும், எத்தனை துணி போட்டாலும் பிடிக்கவில்லை என்று வேற, வேற போடுவார்கள் எதையாவது தின்று கொண்டேயிருப்பார்கள். தனிமையில் விருப்பம.; ஒரு நாள் தீட்டு, மறு நாள் கொஞ்சம் தான் என்பார். அப்படியே உட்காந்திருப்பார், மாத விலக்கில் முகம் சிவந்திருக்கும். உப்பு, பால், சமுதாயத்தையும் வெறுப்பார். கண் அசைச்சால் தொல்லைங்க என்பார். மறுத்து போச்சி என்றும், வலிகள் எல்லாம் மேலே ஏறுது என்பார். ஆண், பெண், செக்ஸ் உறுப்புகளில் வீங்கி கல்லு மாதிரி கெட்டியாகி புற்றில் முடியும். புற்றில் இரண்டுவகை. கல்லு மாதிரியாகி விட்டால் குணப்படுத்துவது கஷ்டம். மற்றொரு முறை பெருத்து நின்று விடும். (MALIGNANT) என்று சொல்லி குணப்படுத்த முடியாது என்று, சொல்லும் எல்லா எல்லா புற்றுக்கும் இதுவே நல்ல மருந்து. தன் வருமானத்தில் பெரும் பகுதியை துணிக்காக செலவிடுவார். மணி கணக்கில் கூட ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பார்.

CRATAEGUS – OXYAEANTHA

- க்ராட்டகஸ் ஆக்ஸியாந்தா

குண்டு பேரிக்காய்.

இந்த மருந்து காரர்கள் இதய நோயாளிகள். சிறிது வேலை செய்தாலும், இதயம் மர, மரவென சத்தம் கேட்கும், உடன் நகம் நீலம் பூரித்தும் இருக்கும். ஆனால் விரல்கள் மட்டும் சிவப்பாக இருக்கும் இது தான் இம் மருந்தின் முக்கிய குறி. (மூச்சு மர, மரவென சத்தம் கேட்டால் SPONG.) உடம்பு ஜில்லிட்டு இருக்கும், பலமில்லை என்பார். இது இதய துடிப்பு ஒழுங்கற்று தாறு மாறாக காணப்படும். இதை 3ஒ யில் 6ஒ க்குள் கொடுத்தால் இது இதயத்துக்கு ஒரு நல்ல டானிக் மாதிரி வேலை செய்யும். இதே இடத்தில் நகம் நீலம் பூரித்தால் CARB-V பார்க்கவும். இதயம் மட்டும் மர, மர, சத்தமா? மூச்சா என்று பார்த்து கொள்ளனும். உடம்பு ஜில்லிட்டவுடன் மற்ற மருந்துகளை பார்க்கவும். டாக்டர்கள் இதய வால்வு தேய்ந்து போச்சி என்றால் இது அப்போது முக்கிய இடம் வகிக்கும் பார்த்துக் கொள்ள வேண்டும். உறவு:- CAR-V, CAMPH, ARS, VERAT- ALB, CUPPURAM.. பார்த்துக் கொள்ளவும். மிக வேகமாக துடிப்பும் லேசான சத்தம் கேட்கும். இருதயத்துக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த குழாயில் வலி, இதனால் மூச்சு திணறலும், இதைப் பற்றிய கவலையும், இதைப் பற்றியே அரைப் பைத்தியம் மாதிரி பேசிக் கொண்டிருப்பார். இதயம் வீக்கம் ஏற்பட்டு வேகமாக ஓடி நின்று விடும். உழைப்பு, உடலுறவு, வெப்ப அறை, சுத்தமான காற்று, மன அமைதியுடன் ஓய்வு எடுத்தால் சுகம் (அ) தணிந்து விடும். குறிப்பு:- இருதய நரம்புகளை பலம் பெற செய்யும் இதனை 3ஒ வீரியத்தில் உபயோகப்படுத்தலாம். அடிக்கடி, தினமும் கூட தர வேண்டி வரும். தரலாம்.

CROTALUS – HORRIYA

- க்ரோட்டலஸ் ஹரியர்

இதுவும் ஒரு வகை பாம்பு விஷத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

காலரா, வாந்தி, பேதி, நிமோனியா, பேதி போன்ற தொற்று நோய் பரவியது போல இம்மருந்துக்குரிய நோய் கருப்பு நிற வாந்தியும், பேதியும் தொற்று நோயாக பரவியது அப்போது இம் மருந்து கொடுத்து குணம். இவர்களுக்கு DELUSIONS உடம்புமும், உடன் ஒரு பக்கம் செத்த மாதிரியும், மற்றும் இன்னொரு பக்கம் உயிர் இருப்பது போன்ற உணர்வும் இருக்கும். இரு பக்கம் உணர்வும் மற்றும் ஒரு பக்கம் உணர்வற்ற தன்மையும், உடன் அரைகுறையான வாழ்கைங்க என்றும், ஒவ்வொரு நாளும், நான் செத்தும், சாகாமலும் இருக்கிறேன் என்பார்கள். மற்றும் பாதி செத்து, பாதி உயிரோடு இருக்கிறேன் என்று கூறுவார்கள் One Side Cold, One Side Heat, One Side Cool, One Side Numbness, One side Normal. (ஒரு பக்கம் குளிர்ச்சி, சூடு, மருத்தல்) என்பது இல்லை. தன்னை சுற்றி எதிரிகள் இருப்பது போன்ற எண்ணமும். தன்னை யாரோ முன்னாடி பிடித்து கீழே தள்ளுவது போல எண்ணம் இருக்கும். ஒருவரைப் பற்றி கூறும் போது ஒரு பங்குக்கு ஒன்பது பங்கு கண், காது, மூக்கு வைத்த மாதிரி கூறுவார். இது ஒரு வகை. மற்றொரு வகை எதையும் கூறாமல் அமைதியாக இருப்பார். காலையில் எழுந்தவுடன் பக்தி பரவசம். ஊருக்கு போகணும் என்று உற்சாகத்துடன் எழுவார். படிப்பு தவறிவிடுமோ, பேச்சு தவறி விடுமோ என்றும் மற்ற ஏதாவது தவறிவிடுமோன்னு பயத்துடன் நினைப்பார்கள். மற்றும் ஒன்று பேசிக் கொண்டிருக்கும் போது இன்னொரு பேச்சை தொடர்பில்லாமல் பேசுவார்கள். மேலே குதித்து சாவேன் என்றும், மாடி வீடு மற்றும் மலை மேலிருந்து குதித்து சாவேன் என்றும் கூறுவார்கள். ஏதாவது கேள்வி கேட்டால் உடனே அழுது விடுவார்கள். மற்றும் இவர்களுக்கு இரத்த ஓட்டம் சரியாக ஓடாததால் உடல் மேல் தோற்றத்தில் பச்சை, மஞ்சள், சிவப்பு, கருப்பு, போன்று கலர், கலராக இவர்களுக்கு இருக்கும், கட்டி, கட்டியாக இருந்தால் இதற்கு வேறு மருந்து, மேலும் கலர் கலராவும் இரத்தம் வடியிம். உடன் ANTHRXIN, LACH, ARS, CORTALUS-HOR கலர், கலராகவும் சுத்த சிவப்பான, பள பளப்பாகவும் இருப்பார்கள். வாந்தியும், பேதியும் பச்சை, மஞ்சள், கருப்பாக வரும். கெட்டு போன கல்லீரல் அதனால் ஏற்படும் காமாலைக்கும் இது. மாறி, மாறி தான் வரும். இதன் குணம் தலைவலி, வெயிலில் வருத்தமாகவே இருப்பார்கள்.

CROTON – TIGLIM

- க்ரோட்டன் டிக்லியம்

விஷ விதையிலிருந்து.

எந்த வகையான பேதி, உணவு விஷம், காலரா விஷம் குடித்தது, எதற்கும் பொருந்தும். மலம் கழிய உட்காரும் போதே மலக்குடலில் பீச்சியது போல பீச்சியடிக்கும் இத முக்கிய குறி. இது பேதியில் தெளிவாக தெரியும். குனியும் போதே பீச்சாங்குழலில் அடிப்பது போல பேதி பீச்சியடிக்கும். வேகம், அவசரம். இதே மாதிரி உட்கார்ந்த பிறகு முக்கினால் பின்பு பீச்சியடித்தால் (GAMB)ஆகவே பீச்சியடிப்பது தான் குறி. ஆனால் அது எப்பொழுது என்பது தான் மிக முக்கியம். உட்கார்ந்து முக்கிய பிறகா, உட்காரும் போதேவா. என்பதை தான் உன்னிப்பாக கேட்டு (அ) பார்த்து முடிவு செய்யனும். பிறகு மருந்தை தேர்வு செய்யனும். குழந்தைகளுக்கு குறிப்பாக இப்படி பேதி தோன்றும். மணல் மாதிரியும், தட்டை பயிர் மாதிரியும் பருக்கள் தோன்றும். அதற்குள்ளே பிப்பு. ஆனால் சொரிய முடியவில்லை என்பார். அதனால் அதன் மேல லேசாக தேய்த்தால் சுகமாக இருக்கிறது என்பார். தலையில் ஏதோ ஒன்று மோதினால் போதும். இரும்பல் வந்திடும். இரும்பல் இழு, இழுன்னு இழுக்குது என்பார். பிறகு சரும நோயும், பேதியும் தோன்றும் இது தான் முக்கியம். வெய்யில் காலத்தில் சரும நோயுடன் தோன்றும் பேதிக்கு இது நல்ல மருந்து.

CUPPUM – METALLICUM

- குப்புரம் மெட்டாலிக்கம்

செம்பு என்ற உலோகம்.

காலராவில், காயத்தில், மயக்கத்தில் எங்கு எப்ப குரக்களை பிடிச்சாலும் இது தான் மருந்து. மிளகாய் அறைச்சேன் குரக்களை பிடிக்குது, பஸ்ஸில் கம்பியை பிடிச்சேன் அப்படியே கையை பிடிச்சிகிச்சி, பேசினேன் தாடை வாய் பிடிச்சிகிச்சி என்பார். கால் விரல் குரக்களை மற்றும் இடுப்பு, கழுத்து பிடிச்சி கிச்சி என்பார். காக்கை வலிப்பில் முழுங்காலில் இழுப்பு தோன்றி பந்து மாதிரி ஆகிவிடும் என்பார். நரம்புகள் சுருண்டு பந்து மாதிரி ஆயிடுச்சு என்பார். அந்த மாதிரியே ஆகிவிடும். மன உழைப்பு அதிகமாகி தூக்கமின்மை ஏற்படும். உடன் COCC-IND, NUX-V,பார்க்கவும். இசிவு (இழுப்பு) குரக்களைக்கு நல்ல மருந்து. உமிழ் நீர் நிறைய சுரந்து செம்பு உலோக வாடை போன்ற வாசம் வந்தால், தண்ணி குடிக்கும் போது கொடக், கொடக்கென குடிப்பார்கள். நாக்கு வெளியே வந்தால் LACH. குரக்களை ஏற்பட்டிருந்தால் முக்கிய மருந்து CUPPURAM. தலையில் இருந்து கால் வரை வளையும் வலிப்பின் போது மற்றும் காலராவின் போது இது. வலிப்பில் பின் பக்கமாக இழுத்தால் CICUTA. ஒருவர் காக்கை வலிப்பில் “ஊ” என் சத்தம் போட்டு ( “ஊ” என சத்தத்துடன்) பின்புறம் விழுந்தார். அதே போல் விரல்களை முன்புறம் குறக்களை பிடித்தால் CUPR. பின்புறம் வளைந்தால் CICUTA. வயிற்று வலியின் போது சேலையை இருக்கி கட்டினால் சுகம் என்றால் N-M. இது காலரா, சர்க்கரை வியாதி, இதய நோய் போன்ற முற்றிய வேறு எந்த கட்டத்திலும் இது தோன்றலாம். வியாதி எதுவாக, இருந்தாலும் நரம்பு குறக்களை என்பதை வைத்து மற்றும் மற்ற குறி முக்கியமானதாக இருந்தால் இது தான் மருந்து. அனுபவ குறிப்பு:- குண்டான ஒரு பெண் காலரா பேதியில் முன்புறம் வில் மாதிரி வளைந்து நெற்றியில் கால் பெரு விரல் மோதியது. அப்ப படுத்திருக்கும் போது இதை கொடுத்து ஒரு நிமிடத்தில் சுகம். ஜனங்களை பார்க்க பயமும், வெளிச்சத்தின் மீது விருப்பமும் இருக்கும் சிறுவர்கள். தன்னிடம் யாரும் நெருங்க கூடாது என்று குழந்தைகள் நினைக்கும். இது பயத்தில், இதே கோபத்தில் இந்த குறி இருந்தால் CINA. உயிர் போற மாதிரி வலி, நான் பெரியவன், நான் தலைவன், நான் சர்வதிகாரி என்ற எண்ணமும், உத்தரவு போடும் மனிதர்கள், இராணுவ அதிகாரி, கட்டளை யிடுவோர் ARN, PHOS, LYC உடன் வரும். ஒரு பேச்சு பேசி விட்டு வாயை மூடிக்கொள்வார். தப்பா பேசியிருவோமோ என்ற பயம். குறக்களை, இழுப்பு, இசிவு இவைகளுக்கு இது முக்கிய மருந்து, மாதவிலக்கின் போது வலிப்பு வந்திடுமோனு பயம். வலிப்பின் போது கையை நீட்டினால், தொல்லை அதிகமானால் NUX-V. இழுத்து கொள்ளுதல், கக்குவான், இரும்பல், வலிப்பு, சுருங்கி விடுதல், மூச்சு திணறல், ஆஸ்துமா, காக்கை வலிப்பு, கிரு கிருப்பு, பித்து, உதறல், அரை பைத்தியம், திடீர்ன்னு கண்ணு மங்கி போயிடும். சொத்தை விழுதல், ஒற்றை தலைவலி, பக்கவாதம், ஒரு பகுதி தாக்கம், பாரிசவாதம் (சரவாங்கி) சர்க்கரை நோய் கெட்ட செய்தி கேட்டு திகில், அடக்கப்பட்ட மன உணர்ச்சி, அடக்கப்பட்ட மாத விலக்கு, வெள்ளைபாடு, பாதத்தில் வியர்வை வராமல் வாக்ஸ், பூட்ஸ் போட்டு தடுத்து விடுதல். இரும்பி, இரும்பி களைத்து மூச்சு திணறல் ஏற்பட்டால் இது தான் MEDICINE.

CYCLAMEN – EUROPAEUM

- சைக்லோமென் யூரோப்பியம்

வெள்ளை பெண் பன்றி நெய்யில் செய்த ரொட்டி.

சோகை பிடித்த சருமத்தில் கட்டிகள், பாதியில் மாதவிலக்கு தோன்றுது என்று சொல்லுகின்ற, இரத்த கொதிப்புக்கு இங்கிலிஸ்(English)மருந்து சாப்பிட்டு இருதய வியாதி மறைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு, இவர்கள் தனியாக இருக்க விரும்புவார்கள். பித்து, பிடித்த மாதிரி மச, மசணு இருப்பார்கள். தனிமையில் உட்கார்ந்து அழுவார்கள். இந்த உலகத்திலே நாம் தான் தனிமை என்று நினைக்கும் பெண்கள், பன் (பிரெட்), வெண்ணெய், கீரிம், பச்சை உள்ள உணவு வகைகள், ஆட்டுக்கறி, பன்றிக்கறி, கன்றுக்குட்டி கறி இவைகளை சாப்பிட வெறுப்பு, வருத்தத்தை உள்ளே அடிக்கிக் கொண்டு இருப்பார். இவர்களுடைய செயல்பாடு கெட்டதை செய்ய பயங்கரமாக விரும்புவார்கள். கர்ப்பக் காலத்தில் விக்கல், கண் தொல்லைகள், விருந்து சாப்பிடும் போது கண் பார்வை மங்கி விடும். கண் முன்னாடி கருப்பாக பறக்கற மாதிரி, மின்னுவது போல, நட்சத்திரம் மாதிரி, ஈ பறக்கற மாதிரி தெரியும். உடன் தலைவலி பார்வையில் பல விதமான மங்களுக்கும், குறைந்த மாதவிலக்கும், நண்பர்களின் மீது வெறுப்புக்கும், உள்ளுர வருத்தத்துக்கும் இதுவே நல்ல மருந்து, உழைப்பிற்கு பிறகும், காப்பி, பன்றி, வெண்ணெய் அதிகாலை, இரவு படுக்கை, மேலே கண்டதை சாப்பிட்டப் பிறகும், உட்கார்ந்திருந்தால், நின்று கொண்டிருந்தால், அதிக சூடு, ஆகவே மேலே கண்டவைகளினால் தொல்லை ஏற்படுதல், திறந்த வெளிக்காற்றுபட்டவுடன், மூக்கில் ஒழுகுதல், நடக்கும் போது பாதத்தில் வலிக்குறைதல், வலி உள்ள பாகத்ததை தேய்த்து விடுதல், தலைவலியின் போது பச்சத் தண்ணீரில் நெற்றியைக் கழுவினால் சுகம்.