Dr.S. Hahnemann
Dr.T.F.Allen

அணிந்துரை

பேராசிரியர் பெருமாள்
அறங்காவலர்
நாமக்கல் அறிவுத்திருக்கோவில்

வணக்கம், இந்த ஹோமியோபதி மருத்துவத்தின் மீது நன்றி உடையவனாகவும், மகிழ்ச்சி உடையவனாகவும், மனம் மகிழ்ந்து இந்த புகழாரத்தை எழுத தொடங்குகிறேன். முதலில் அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். சுமார் 35 ஆண்டுகளாக வேதாத்திரி மகரிஷி அவர்களோடு தொடர்பு கொண்டு, நாமக்கல் அறிவுத் திருக்கோயிலை கட்டுவதற்கு உதவி குழுவில் இருந்து எனது கடமையை செய்தேன். இந்த சிறப்புக்கு மகரிஷி அவர்களே காரணம். எனக்கு இரத்த கொதிப்பும், (BLOOD PRESSURE) சர்க்கரை வியாதியும் அதிகமாகி விட்டது.

இந்த காலக்கட்டத்தில் தான் ஹோமியோபதி துண்டு பிரசுரங்களை படிக்க நேர்ந்தது. மேலும் வேதாத்திரி மகரிஷி அவர்களோடு நெருங்கி பழகிக் கொண்டிருந்த திண்டுக்கல் பொறியாளர் திரு. ஜெயகோபால் அவர்களோடு இணைந்து அவர் எனக்கு மருந்து கொடுத்தார். அதன் பயனாக நல்ல உடல் ஆரோக்கியமும் கிடைத்தது. இதனை தெரிந்துக் கொண்ட நான் திரு. ஜெயகோபால் அவர்களோடு நான் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மிகுந்த ஹோமியோபதியில் தேர்ச்சி பெற்றவர். மனித நேயம் மிக்கவர். மனவளக்கலையிலும் தேர்ச்சி பெற்றதோடு இல்லாமல் மகரிஷியோடு நெருங்கி பழகுவார். எனக்கு அவர் மருந்துகளையும், ஹோமியோபதி பற்றிய துண்டு பிரசுரங்களையும் அவ்வப்போது கொடுப்பார். மருந்து பெட்டிகளையும், கையாளுகின்ற நூல்களையும் கொடுத்து இருக்கிறார். மேலும் திண்டுக்கல்லில், நான் சென்று பார்த்த போது மனித நேயமிக்க, சில ஹோமியோபதி மருத்துவர்களையும், வல்லுனர்களையும் பார்க்க முடிந்தது.

திண்டுக்கலில் புதியதாக ஒரு தெரு ஒன்று ஏற்படுத்தி அது ஹானிமென் தெரு என்று வைக்கப்பட்டுள்ளது. இது ஹோமியோபதி மருத்துவ தந்தையின் பெயராகும். அவர் எழுதிய ஆர்கனான் ஆப் மெடிசன் என்ற நூலை, பத்து ஆண்டுகளுக்கு முன்பே படித்து புரிந்து கொள்ள நேர்ந்தது. அதன் பிறகு சில ஹோமியோபதி மருத்துவ நண்பர்களும், நல்ல பிரசுரங்களின் புத்தகங்களும், நான் படிக்க நேர்ந்தது. உண்மை ஹோமியோபதியை என்னால் காணவும் அதன் தத்துவங்களை புரிந்து கொள்ளவும் என்னால் காண முடிந்தது. வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஹோமியோபதி மருத்துவ உயர்வையும், சிறப்பையும் பேசி வருவதால், அனுபவத்தின் வாயிலாகவே அதன் செயல்பாடுகளை கண்டதால் மகிழ்ச்சியில் முழ்கிக் கொண்டே இருந்தேன்.

சென்ற வருடம் அம்மாப்பேட்டை அறிவுத் திருக்கோயிலுக்கு தற்செயலாக மாலை நேர தவத்தில் சிந்தனை விருந்து ஆற்றினேன். அப்போது ஹோமியோபதி மருத்துவத்தின் பெருமைகளையும், மகரிஷி அவர்களின் கருத்துகளை மட்டுமே நிரூபித்து காட்டி பேசினேன். எனக்கு இருந்த சர்க்கரையின் அளவு, காலில் புண், மற்றவர்களுக்கு ஆறாது என்பார். ஆனால் எனது காலில் புண் ஏற்பட்டு பரி பூரண குணம் என்று காட்டினேன். கூட்டம் கலைந்தவுடன், அங்குள்ள உறுப்பினர்களை பேராசிரியர், துணை தலைவர் விவேகானந்தம் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது Dr. S. மாதவன் என்று அவர் அறிமுகம் செய்து வைத்தார். உடனே அவர் என்னுடன் பல காலம் நெருங்கி பழகிய மாதிரி அவர் கைகளை பிடித்து கைக்குழுக்கி மனம் பூரித்து மகிழ்ந்தேன். பிறகு ஒரு நாள் எனது வீட்டுக்கு Dr. S. மாதவன் அவர்கள் வந்து ஹோமியோபதியில் 8 நூல்களை எழுதி INTERNET - ல் தமிழில் உலக மக்கள் அனைவருக்கும் இலவசமாக அன்பளிப்பாக அளிக்க இருக்கிறோம். நாங்கள் ஒரு குழு அமைத்து, ஆராய்ச்சி செய்து நூல்களை எழுத விரும்புகிறோம். அதில் முதல் நூலுக்கு மதிப்புரை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எனக்கு அதற்கு தகுதி இருக்கிறதா என்று கேட்டேன், தற்போது நான் செந்தில் தாஸிடம் மருந்து பெற்று கொள்வதில் மருந்துகளை சாப்பிடும் போது ஆச்சரியமான மருந்தின் விந்தையைக் கண்டு கொண்டிருக்கிறேன் என்றேன். அவர் உங்களால் எழுதி தர முடியும், தாருங்கள் எனக் கேட்டார். எனது உள்ளத்தின் பூரிப்பை வெளிப்படுத்த இறைவன் கொடுத்த வாய்ப்பு என்று எண்ணி, அவர் கொடுத்த 230 மருந்துகளின் முக்கிய குறிகளையும், நான்கு வித குறிகளையும் தெளிவாக புரிந்துக் கொள்ளவும், பயன்படும் அளவுக்கு இருந்தது. அது பழக்கத்திற்கு மட்டுமே அதிகமாக தேவைப்படும் மருந்துகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

நான் ஏற்கனவே ஹோமியோபதி நூல்களை ஓரளவு கற்றுள்ளதால், இந்த மெட்டீரியா மெடிக்காவை படித்தவுடன் மேலும் உள்ளம் பூரிப்பு ஏற்பட்டது. ஆகவே 2 ஆவது நூலுக்கு அணிந்துரையை பார்த்து மேலும் மகிழச்சியும், மற்ற 6 நூல்களுக்கு புகழாரம் சூட்டியவர்கள், எவரும் சலித்தவர் அல்ல என்பது உணர்ந்து மகிழ்ந்தேன். இந்த நூலுக்கு என்னடைய கருத்து யாதெனில் இந்த ஹோமியோபதி மருந்து எதில் செய்யப்படுகிறது என்று எனக்கு சரியாக தெரியாது. ஆனால் இந்த நூலாசிரியர் ஒவ்வொரு மருந்துகளின் மூலப்பொருள் எது என்று எழுதப்பட்டிருந்தது. அது தாவரம், இலை, கட்டை, வேர், விதை, பூ, சாறு, விலங்குகள், மீன், நண்டு, பாம்புகள், மாட்டிரைச்சி, நாய்ப்பால், பூனைபால், பசும்பால், காரகங்கள், உலோகம், அலோகம் ஆகியவைகளிலிருந்து எடுக்கப்பட்டது என்று தெளிவாக புரிந்து கொண்டேன்.

இந்த மருந்துகள் எப்படி செய்யப்படுகிறது என்பதை பற்றி ஐந்தாவது நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள பேராசிரியர் நவரத்தினம் அம்மையார் அவர்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். மகிழ்ச்சி * நன்றி * எனது குருவாகிய வேதாத்திரி மகரிஷி அவர்களை வணங்கி, ஹோமியோபதி மருத்துவர்களையும், அவரது சகாக்களையும், திண்டுக்கல் ஹானிமென் தெரு மற்றும் அவரது மருத்துவ குலம், தொண்டுள்ளம் படைத்த அவர்களையும் இணைந்து, மகிழ்ந்து, இதை எழுதுவதற்கு, வாய்ப்பளித்த, Dr. S. மாதவன் அவர்களுக்கும், அவரது குழுவிற்கும், எல்லாம் வல்ல அருட்பேராற்றலுக்கும், நன்றிக் கூறி உரையை முடிக்கிறேன்.
இப்படிக்கு

பெருமாள்
அறங்காவலர்
நாமக்கல் அறிவுத் திருக்கோயில்

இந்நூலாசிரியர் Dr. S. மாதவன் அவர்களது பின் குறிப்பு:-

நான் சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமியோபதி கவுன்சிலில் 1975 டிசம்பர் அரசு கவுன்சில் தேர்வில் எழுதி தேர்ச்சி பெற்று கவுன்சில் பதிவும் பெற்றேன். ஆனாலும் ஒன்றும் புரியவில்லை. நெய்வேலியைச் சேர்ந்த S.V.D.செல்லம் அவர்களை, தென்னாற்காடு மாவட்ட சங்க கூட்டத்தில், சங்கராபுரத்தில் கூட்டம் நடத்துவார். ஆர்வம் மிக்க கேள்விகளுக்கு அற்புதமான மருத்துவமான ஹோமியோபதி பற்றி விளக்குவார். Dr. ஹானிமென், Dr. நாஸ், Dr. கென்ட், Dr. போயினிங்ஹாசன், Dr. ஹெலன், Dr. கிளார்க், Dr. வில்லியம் போரிக், Dr. போகர் ஆகிய தலை சிறந்த மருத்துவர்கள் யார் என்று அவர்களுக்கு அடிப்படை என்ன என்று இந்த மருத்துவத்தின் மீது இருந்த விருப்பு, வெறுப்பு போன்றவற்றின் வரலாற்றுகளை சொல்லி Dr. செல்லம் அவர்கள் விளக்குவார். உளுந்தூர்பேட்டை சங்கத்தின் விஷேசங்களில் ஹேஷாத்திரி, இன்னும் சில நண்பர்கள் உண்மை ஹோமியோபதி பற்றி விளக்குவார்கள். மற்றும் நடேசனார், கள்ளக்குறிச்சி கூட்டத்திலும், தேகவாகு, சாமுத்திரிகா லட்சணப்படி மருந்து தேர்வு செய்தல் மற்றும் மியாசம் அதற்குண்டான நோசோடு மருந்துகளை, உதாரணங்களோடு விளக்குவார். மற்றும் அரூரை சேர்ந்த Dr. கோவிந்த செட்டி அவர்கள் போயினிங் ஹாசனை பற்றி, புத்தகத்தின் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை தமிழாக்கம் செய்து, அதன் விசயங்களையும், நீதிபதியாக இருந்த போயினிங்ஹாசன் அவர் எப்படி ஹோமியோபதி மருத்துவர் ஆனார், ஹானிமெனுக்கு முக்கிய சீடராகி, முதன் முதலில் ஹோமியோபதி உலகிற்கு பெரிய ரெப்ரட்டரியை எழுதி தந்தது வரை அவரை பற்றி விளக்கி கூறுவார்.

Dr. கைலாஷ் நாராயணன் எழுதிய 4 நூல்களை தமிழாக்கம் செய்து அவருக்கே உரித்த அழகான சொற்களில் Dr. சுந்தரம் விரியூர் என்பவர் விளக்குவார். Dr. சுப்புராயர் அவர்கள் எப்படி கேஸ் டேக்கிங் எடுப்பது என்பது பற்றியும், தகுந்த மருந்தை எப்படி தேர்வு செய்வது என்பது பற்றியும், பொட்டன்சினுடைய வேகத்தை பற்றியும், மனித ஆன்மாவிலுள்ள வேகத்தையும், மருந்திலுள்ள வேகத்தையும் எப்படி கண்டு பொருத்த வேண்டும் என்று விளக்குவார். மற்றும் டாக்டர் பாக் அவர்கள் கண்டுபிடித்த மலர் மருத்துவம், சூரிய வெப்பத்தில் மலர்களை போட்டு எப்படி வீரியமாகிறது என்பதை நேரிடையாக செய்து காட்டுவார். கென்ட் அவர்கள் எழுதிய நான்கு நூல்களை பற்றி ஆசிரியர் சுந்தரம் (மதுரை) அவர்கள் விளக்கி கூறுவார். கெய்டு சிம்டம்ஸ் என்ற ஒன்பது நூல்களையும், அதன் டைரியையும் சேலம் Dr. இராஜமாணிக்கம் அவர்கள் தமிழில் அற்புதமாக விளக்கி கூறுவார். பெரிய குளத்தை சேர்ந்த வாமன மகாதேவன் அவர்கள், ஹெரிங்ஸ் க்யூர் இன் லாவை நிரூபித்து எனக்கு காட்டியது, மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு நிகழச்சியாகும்.

தற்காலத்தில் ROH என்ற புதிய அமைப்பை உருவாக்கிய Dr. சேகல் அவர்கள் எழுதிய புத்தகத்தை முதலில் தமிழில் எழுதி விளக்கியும், விவரித்தும், பல மாணவர்களை உருவாக்கி தந்தவர் ஆத்தூரை சேர்ந்த Dr. S.P. விக்டர் ஆவார். மற்றும் மாதாந்திர கூட்டத்தில் பல முக்கிய குறிப்புகளையும் சொல்வார். தமிழகத்தில் டுட்டோரியல், நடத்தியவர்கள், கும்பகோணத்தில் மூர்த்தி, திருவாரூரில் சீனிவாசன், சென்னையில் சுப்ரமணியன், நெல்லிக்குப்பத்தில் V.J. ராவ் ஆகியவர்கள் பல தொண்டுகள் செய்துள்ளனர். ஹோமியோபதி பொருத்த மட்டில் நான் கண்டுள்ள அனைவருமே தொண்டர்களாகவும், அன்புள்ளம் கொண்டவர்களாகவும் இருந்து அவர்களது உழைப்பை இலவசமாகவே கொடுத்துள்ளார்கள். அதற்கு எப்படி நாம் நன்றி செய்ய போகிறோம் என்ற மனத்தூண்டலில் கடன் + மை = கடமை. ஆது மேலோங்கவே அதனை சரிகட்ட அருட்பேராற்றல் எனக்கு தந்த உத்தரவு தான் இந்த H.K.S.V. கல்விக் குழு.

தற்போது பேராசிரியர் பெருமாள் ஐயா அவர்கள், திண்டுக்கல்லில் உண்மை ஹோமியோபதி மருத்துவத்தின் தொண்டையும், சிறப்பையும், அமைப்பையும் குறிப்பாக ஜெயகோபால் அவர்கள் மகரிஷி அவர்களோடு செய்து கொண்டிருந்த உறவையும், அவருக்கு கிடைத்த பதினைந்து லட்ச ரூபாய் நிலுவை தொகையை அவர் அதற்கு செலவழித்த விதத்தையும், APPROCH கல்விக்குழு தேர்ந்து எடுத்த மருந்து விளக்கத்தை நோய்க்குறி, தக்க மருந்து, அதன் குணம் பற்றி செய்திகள், அந்த நோயாளிகள் பற்றிய குறிப்புகளையும், இதே போல் R.O.H. நோயாளிகளின் குறிகள், குறிப்புகளை DELUSION, FEAR, GESTURE, HIDE போன்ற முக்கிய விதத்தில் எழுதப்பட்ட முக்கிய குறிகள், விளக்கங்களையும், சில நோயாளிகள் பற்றியும், ஆங்கில நூலாசிரியர் இராஜன், சங்கரன், ஹெரிங், T.F. ஹெலன், சர்க்காரியா, ராஜேந்திரன், Dr. மித்ரா, Dr. இராபர்ட், Dr. ஓசோ, வேதாத்திரி மகரிஷி போன்றோரின் ஆங்கில நூல்களை படித்து அதை தமிழாக்கம் செய்து தியானம் பற்றி கூறும் போது அணுவை பற்றியும், வண்டிச் சக்கரத்தை பற்றி கூறிய Dr. மித்ரா தியானத்துக்கு மகரிஷியுடன் ஓஷோவையும், வேளாண்மையில் ஹோமியோபதி மருத்துவத்தின் பங்கு, அதன் பயன்பாடு ஒவ்வொன்றை பற்றியும், ஒவ்வொன்றையும் துண்டு பிரசுரங்கள் செய்து, முதிர்ந்த ஆன்மீகமான மனவளக்கலைக்கும், உயர்ந்த மருத்துமான ஹோமியோபதிக்கும், அரும் தொண்டாற்றி வரும் ஜெயகோபால் அவர்களையும், இதுவரை நான் கண்ட உண்மை ஹோமியோபதி தியாக செம்மல்களையும், ஹானிமென், வேதாத்திரி மகரிஷி போன்ற ஞானிகளையும், வணங்கி திண்டுக்கல் ஹோமியோபதி மனவளக்கலை அறிஞர், தாமோதரன் தம்பதியர்களையும், எனக்கு மனதளவில் திண்டுக்கலின் புகழை காட்டிய இந்நூலுக்கு புகழாரம் எழுதிய பேராசிரியர் பெருமாள், அவர்களுக்கு மனதார நன்றிக் கூறி எடுத்த இந்த முயற்சியை மகிழ்ந்து, வணங்கி நான் பெற்ற இந்த இன்பத்தை அப்படியே அருட்பேராற்றலில் கலந்து விடுகிறேன். எனக்கு வாய்ப்பளித்த இந்த அருட்பேராற்றலை வணங்கி எனது கடன்; + மை = கடமையை நிறைவு செய்கிறேன்.
நன்றி.